குறள் இன்பம் - #1 - #948
+3
fring151
Usha
V_S
7 posters
Page 16 of 40
Page 16 of 40 • 1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40
Re: குறள் இன்பம் - #1 - #948
#349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப்படும்
கண்ணே என்பதற்கு "அந்தப்பொழுதே" என்று பொருள் சொல்கிறார்கள். (கண் என்ற சொல்லுக்குத் தமிழில் எத்தனை பொருட்கள் உள்ளன என்று பார்த்தால் தலை சுற்றுகிறது).
"பற்று" என்பதற்கு நாம் பொதுவாக "விருப்பம்" என்று மட்டுமே பொருள் கொண்டாலும், உரையாசிரியர்கள் "இருவகைப்பற்று" (அதாவது, விருப்பு / வெறுப்பு) என்று சொல்லுவது குறிப்பிடத்தக்கது
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்
பற்றுகளை அறுக்கும் பொழுது தான் (விருப்பு / வெறுப்பு இல்லாத துறவு நிலை அடையும் பொழுது தான்) பிறவியில் இருந்து விடுபட இயலும்
மற்று நிலையாமை காணப்படும்
இல்லா விட்டால், நிலையாமையில் ("எப்போது நீங்குமோ" என்று அஞ்சும் வாழ்வில் / பிறவியில்) தான் உழல வேண்டும்!
மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் சுழற்சியை வள்ளுவர் நம்புவதாகவே இந்தக்குறள் சுட்டுகிறது.
அதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், 'துறவு தான் தீர்வு' என்கிறார்.

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்று என்ற சொல்லை வைத்து வள்ளுவரின் சிலேடை விளையாட்டை (விருப்பம் / பிடித்துக்கொள்) நாம் முன்னமேயே பார்த்தோம்.
இந்தக்குறளில் அதோடு சொல் சிலம்பமும் ஆடுகிறார்
"பற்றற்றான்" என்று ஒரு ஆளையும் உள்ளே கொண்டு வருகிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை
"பற்று அற்றவன்" மீதுள்ள விருப்பத்தைப் பிடித்துக்கொள்க!
('ஒரு பற்றும் இல்லாதோரை விரும்பு' என்றும் 'இறைவனை விரும்பு' என்றும் அவரவர் நம்பிக்கை அடிப்படையில் "பற்றற்றவன்" என்ற சொல்லுக்கு விளக்கம் தருகிறார்கள்)
அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
அவ்வாறான பற்றுக்கொள்வது, பற்றுகளை விடுவதற்கே (அதாவது, துறவு நிலையை அடைவதற்கே)!
"விருப்பம் இல்லாமல் இருக்க, விருப்பப்படு" என்கிறார்
அதுவும், "ஏற்கனவே விருப்பம் இல்லாமல் இருப்பவனிடம்" என்றும் சொல்லித் திகைக்க வைக்கிறார்!

#351
பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
(அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல் அதிகாரம்)
மாண் = மாட்சிமை, சிறப்பு, நிறைவு
அவ்வாறாக, மாணாப் பிறப்பு = சிறப்பற்ற / இழிவான வாழ்வு
எது மேன்மை, எது சிறுமை என்றெல்லாம் உணராமலேயே வாழும் வாழ்வு கண்டிப்பாக இழிவானதே!
அந்தக்கருத்தை வலியுறுத்தும் குறள்!
பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும்
பொருள் அல்லாதவற்றைப் பொருளாகக் கருதும்
(இங்கே "மெய்ப்பொருள்" என்று உரையாசிரியர்கள் சொல்லுவதைக் காண முடிகிறது)
மருளானாம் மாணாப் பிறப்பு
மயக்க / குழப்ப நிலையில் இருப்பது இழிவான பிறப்பாகும்.
'துறவறவியல்' என்ற அடிப்படையில் பார்த்தால், எவை இன்றியமையாதவையோ அவற்றை விடுத்து, பணம் / பொருள் இவற்றைப் பெரிதாகக் கருதி வாழ்தல் இழிவு அல்லவா?
துறவறத்துக்கு அவையெல்லாம் விலைமதிப்பு உள்ளவை இல்லையே!

#352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சியவர்க்கு
என்ன ஒரு இனிமையான குறள்!
தொன்றுதொட்டு வழங்கி வரும் உவமை தான் (மெய்யறிவு = ஒளி / அறியாமை = இருள்) என்றாலும் அது வழங்கப்பட்டிருக்கும் தன்மை மிக உவப்பானது.
செய்யுள் / கவிதை என்பனவற்றின் அழகுணர்வைக் கண்டு இன்புற வைக்கும் குறள்! (நல்ல மெட்டில் பாட்டிசைக்க வாய்ப்புள்ள சுவையான பாடல் என்று தோன்றுகிறது)!
மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு
மயக்கம் / குழப்பம் நீங்கிய குற்றமில்லாத உணர்வு உள்ளோர்க்கு
(காட்சி என்பதை இங்கே புரிதல் / அறிதல் என்றும் சொல்லலாம்)
இருள்நீங்கி இன்பம் பயக்கும்
(அத்தகைய மெய்யுணர்வு,) அறியாமை இருளை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்!
சொற்களால் விளக்க இயலாத ஒரு உணர்வினை இந்தக்குறள் உருவாக்குகிறது.
யாராவது இதைப்பாட்டாகப் பாடி மெய் சிலிர்க்க வைக்க மாட்டார்களா என மனம் ஏங்குகிறது!

#353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து
நணி - முதல் முறையாக இந்தச்சொல் கேள்விப்படுகிறேன்.
அண்மை / அருகில் / கிட்டத்தில் / நெருக்கத்தில் என்றெல்லாம் கொள்ளலாம்.
நணி = நண்பன் என்றும் ஒரு பொருள் இருக்கிறது
சொல்லப்போனால், நண்பன் / நட்பு என்னும் சொற்களும் இந்தச்சொல்லும் பழந்தமிழில் உறவுகளாக இருந்திருக்க வேண்டும்
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
ஐயம் இல்லாத தெளிவு (மெய்யுணர்வு) அடைந்தவர்களுக்கு
வையத்தின் வானம் நணிய துடைத்து
(இந்த) வையகத்தை விட வானகமே நெருக்கமாய் இருக்கும்
துறவிகள் மெய்யுணர்வு அடைந்தால் இவ்வுலகை விட வானுலகுக்கே நெருக்கமாக உணருவார்கள் என்று சொல்லுகிறார்.
('வானளாவிய புகழ் அருகில் வந்து விடும்', 'வானளவு உயர ஊக்கம் கிட்டும்' என்றெல்லாம் "வானுலகு" நம்பிக்கை இல்லாத உரையாசிரியர்கள் விளக்குகிறார்கள்)

#354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு
'எய்து' என்றால் உடனே நமக்கு வேலும் அம்பும் தான் நினைவுக்கு வருகிறது. அவ்வாறாக, எய்தல் என்றால் எறிதல் என்று மட்டுமே மனதில் தோன்றுகிறது.
"பெரும்புகழ் எய்தினார்" போன்ற சொற்றொடர்களில் அப்படிப்பட்ட பயன்பாடில்லை. மாறாக, "அடைந்தார், எட்டிச்சேர்ந்தார்" என்று அங்கே பொருள். அத்தகைய விதத்தில் தான் 'எய்தி' என்ற சொல் இந்தக்குறளில் வருகிறது
அதே போல், பயம் என்றால் உடனடியாய் நினைவுக்கு வரும் பொருள் "அச்சம்". இங்கோ, பயன் (பயத்தல்) என்ற பொருளில் வருகிறது.
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு
மெய்யுணர்வு அடையாதவர்களுக்கு (உண்மையை அறிந்து தெளியாதவர்களுக்கு)
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
ஐந்து உணர்வுகளை அடக்குவதில் வெற்றி பெற்றிருந்தாலும் (ஐம்புலன்களை அடக்க முடிந்தாலும்) பயனில்லை!
ஐம்புலனடக்கம் என்பது உடல் அளவிலானதே.
அறிவில் உண்மைத் தெளிவில்லாமல் உடல் உணர்வுகளை மட்டும் அடக்கிக்கொண்டு "துறவி" என்று திரியக்கூடாது என்று பொருள்

#355
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
'எப்பொருள்' என்று தொடங்கி 'அறிவு' என்று முடியும் இன்னொரு குறள் எல்லோருக்கும் நல்ல அறிமுகம்
கிட்டத்தட்ட 75% அதே சொற்களுடன் உள்ள இன்னொரு குறள் தான் இது.
வெளித்தோற்றம் கொண்டு மதிப்பிட வேண்டாம் என்ற பொருளில்.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும்
எந்தப்பொருளையும், அது எந்தத் தன்மையோடு காணப்பட்டாலும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
அப்பொருளின் உண்மையான இயல்பைக் காண்பது தான் அறிவாகும்.
மெய்யுணர்தல் என்பதன் அடிப்படையான ஒன்று "உள்ளே என்ன உண்டு" என்ற உண்மையை உணர்தல்.

#356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்பப் பொருள் கொள்ளும் இன்னொரு குறள்
அதாவது "மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தல்" என்ற நம்பிக்கை உள்ளவர்கள் / இல்லாதவர்கள். (என் கணிப்புப்படி வள்ளுவர் முதல் கூட்டத்தில் உள்ளவர் தான்.)
"மெய்ப்பொருள் கண்டவர்கள் மீண்டும் பிறவி எடுக்காதிருக்க முயலுவர்" என்று முதல் கூட்டத்தாரும் "மீண்டும் இல்லற வாழ்வை விரும்ப மாட்டார்கள்" என்று மற்றவர்களும் விளக்கும் குறள்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்
கற்று இங்கு மெய்ப்பொருளைக் கண்டறிந்தவர்கள்
மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்
மீண்டும் இங்கு வாரா (வராத, வர வேண்டாத) வாழ்க்கை வழியையே விரும்புவார்கள்! (அதற்காக முயலுவார்கள்)
இங்கே வாரா = மீண்டும் பிறவாத (மறுபிறவி நம்பிக்கையாளர்கள்)
இங்கே வாரா = இல்லறவாழ்வுக்கு வராத (மறுபிறவி நம்பிக்கை இல்லாதோர்)

#357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
பிறப்பு / பிறவி எடுத்தல் என்ற சிந்தனை மீண்டும் இந்தக்குறளில் வருகிறது.
துறவு, மெய்யுணர்தல் என்பனவும் மீண்டும் பிறவி எடுக்காமலிருத்தலும் தொடர்புள்ளவை என்றே வள்ளுவர் கருதுகிறாரோ?
அருஞ்சொற்பொருள் :
ஓர்த்தல் = ஆராய்தல் (இது இன்று படித்தது, 'நினைத்தல்' என்ற பொருள் முன்னமேயே தெரியும்)
ஒருதலை = மாற்றுக்கருத்தில்லாமல் / ஐயமில்லாமல்
பேர்த்து(ம்) - மறுபடியும் / மீண்டும்
உள்ளது ஓர்த்துள்ளம் ஒருதலையா உணரின்
உண்மையை உள்ளத்தில் ஆராய்ந்து ஐயமின்றி உணர்ந்தால்
(மெய்யுணர்வு அடைந்தால்)
பேர்த்துள்ள பிறப்பு வேண்டா
மீண்டும் பிறக்க வேண்டியதில்லை
ஆக, மெய்யுணர்வு அடைதலும் பிறவிச் சுழற்சியில் இருந்து விடுதலும் தொடர்புள்ளவை என்று வள்ளுவர் கருதுவதாகவே எனக்குப்படுகிறது!

#358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
வெளிப்படையாகவே "பிறப்பு" நீங்கவேண்டும் என்று வள்ளுவர் சொல்லும் குறள்.
மு.க. அதற்கு வேறு விளக்கம் கொடுக்கிறார் ("மறுபிறவி என்னும் மூடநம்பிக்கை நீங்க வேண்டும்").
பிறப்பு என்பதையே பேதைமை என்கிறாரா அல்லது மறுபிறப்பு நம்பிக்கை தான் பேதைமை என்கிறாரா என்பது ஒரு புறம் இருக்க, அதற்கான தேவையைச் சொல்லுவதில் அவ்வளவு குழப்பம் இல்லா நிலையைக் காணலாம்.
அதாவது செம்மையான பொருளை / சிறப்பைக் காணுதல்!
பிறப்பென்னும் பேதைமை நீங்க
பிறப்பு எனப்படும் அறியாமை நீங்க
(அல்லது, மறுபிறப்பை உண்டாக்கும் அறியாமை நீங்க)
சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு
சிறப்பு எனும் செம்மையான பொருளை / நிலையை அடைவதே அறிவாகும்!
சிறப்பு என்பதை "மீண்டும் பிறவா நிலை / முக்தி" என்று மு.வ. உள்படப் பல உரைகளும் சொல்வதைக் காணலாம்.
அதே போல, அறிவு என்பதை மெய்யுணர்வு என்று சொல்லும் உரைகளையும் காணலாம்
ஆக மொத்தம், குழப்பமான குறள்

#359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
துப்பார்க்குத்துப்பாக்கி , பற்றற்றான் பற்று போன்ற சொல் விளையாட்டில் வள்ளுவர் இன்பம் காணும் இன்னொரு குறள்
சார் தரா சார் தரு - என்ன ஒரு முரண் விளையாட்டு அதே போல, "சார்பு உணர்ந்து சார்பு கெட" என்ற முரண் சொல்லாடலும் இனிமை!
(சார் / சார்பு = சேர்தல் / பற்று / சாயுமிடம் / தாங்குமிடம் / கூட்டுறவு - இப்படிப்பல பொருட்கள்.)
சார்புணர்ந்து
பின்னணி என்ன என்று உணர்ந்து (அல்லது எல்லாவற்றுக்கும் இது தான் பின்னணி என மெய்ப்பொருளைப் புரிந்து கொண்டு)
சார்பு கெடஒழுகின்
பற்று (சார்பு) இல்லாமல் வாழ்ந்தால்
சார்தரு நோய்
பற்றுகளால் வரும் துன்பம்
மற்றழித்துச் சார்தரா
மற்றவற்றை (ஒழுக்கங்களை / நன்மைகளை) அழித்துப் பற்றில் உழல வைக்காது!
துறவுக்கும் பற்றுக்கும் நடுவே நடப்பதைப் போர் போல உவமைப்படுத்துகிறார் வள்ளுவர்!
ஒன்று மற்றதை அழிக்க எப்போதும் முயன்று கொண்டிருக்கும்.
மெய்ப்பொருள் உணர்ந்தால், சார்பினை வென்று துறவொழுக்கம் நடத்த முடியும்!

#360
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
மெய்யுணர்வு என்பதற்கு இன்னுமொரு வரையறை சொல்லுகிறார் வள்ளுவர்.
அதாவது, என்ன பண்புகள் இருக்கக்கூடாது / எவற்றால் வரும் துன்பங்களைத் தவிர்த்தால் மெய்யுணர்வு அடையலாம் என்று சொல்ல வருகிறார்.
காமம் வெகுளி மயக்கம்
விருப்பம், சினம், அறியாமை
இவை மூன்றன் நாமம் கெட
இவை மூன்றின் பெயர் தெரியாதபடி அழித்தால்
(அதாவது, இந்த மூன்று குற்றங்களும் அறவே இல்லாமல் செய்தவர்கள்)
கெடும் நோய்
துன்பங்கள் அழிந்து போகும்!
துறவு என்பதில் குறிப்பிடத்தக்க பங்கு மெய்யுணர்வு அறிதலுக்கு உண்டு.
அந்த மட்டில், இத்தகைய தன்மைகள் இனியும் கொண்டிருந்தால் துன்பங்கள் வருமேயொழியத் துறவறம் நடக்காது
(ஒரு சின்ன ஐயம் - 'காமம் / நாமம்' தமிழா வடமொழியா? )

#361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து
(அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல் அதிகாரம்)
'அவா'வுக்கு எதுகையாகத் 'தவா' என்ற சொல் வருகிறது.
அதன் பொருள் என்ன?
தவுதல் என்றால் குறைதல் / குன்றுதல் என்று சொல்லி, தவா என்றால் குறையாமல் என்று விளக்குகிறார்கள். (இந்தக்குறள் அங்கே மேற்கோளாகவும் உள்ளது)
இனிமேல் பொருள் காண்பது எளிது
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும்
தவாஅப் பிறப்பீனும் வித்து
ஒழியாமல் (அழியாமல் / குன்றாமல்) பிறப்பைத்தரும் விதை
அவா என்ப
அவா (விருப்பம் / விழைவு / ஆசை) தான்!
புத்தர் கொள்கையின் இன்னொரு வடிவம் - "ஆசை தான் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் சுழற்சியில் தவிப்பதற்குக் காரணம்" என்கிறார் வள்ளுவர்!
அதாவது, துறவறம் வழியாக "அவா அறுத்தால்", பிறவியில் இருந்து மீளலாம் என்பது வள்ளுவர் நம்பிக்கை!

#362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
மற்றும் ஒரு சொற்சிலம்பாட்டம்
(வேண்டும் / வேண்டாம் வைத்து)
வேண்டாமை = "எனக்கு ஒன்றும் வேண்டாம்" என்று அவா அறுத்த நிலைமை
வேண்டுதல் அதற்கு எதிர்ச்சொல். ("இறைவனிடம் / மற்றவர்களிடம் கேட்பது / இரப்பது" என்ற பொருளும் இந்தச்சொல்லுக்கு உண்டு என்பதைக் கருத்தில் கொள்ளலாம்).
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை
ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் (விரும்பினால்) பிறவாமையை வேண்டுங்கள்!
(இனிமேலும் பிறவி எடுக்கக்கூடாது என்று விரும்புங்கள்)
மற்றது வேண்டாமை வேண்ட வரும்
அதுவோ (அதாவது, பிறவாமை) ஒன்றும் விரும்பாத நிலையை வேண்டினால் தான் வரும்!
அவா அறுத்தால் தான் பிறவிச் சுழற்சியில் இருந்து தப்ப முடியும் என்று சுருக்கம்.
துறவறத்தில் உள்ளவர்களுக்கு "அவா அறுத்தல்" மட்டுமே வேண்டிய ஒன்று!

#363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்
ஈண்டு = இங்கு / இந்த உலகில் (நிலத்தில்)
அப்படியாக, ஆண்டு = அங்கு / அந்த உலகில் (வானுலகில்)
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
'விருப்பம் இல்லாமை' (என்ற நிலை)க்கு ஒப்பான சிறந்த செல்வம் ஒன்றும் இங்கு (அதாவது, இவ்வுலகில்) இல்லை
ஆண்டும் அஃதொப்பது இல்
அங்கும் (அதாவது, வானுலகிலும்) அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை!
இந்த உலகை விட வானுலகு உயர்ந்தது / சிறந்தது என்ற பொதுக்கருத்து குறளில் நாம் முன்னமேயே பார்த்திருக்கிறோம்.
என்றாலும், அவா அறுத்தல் என்ற தன்மைக்கு இணையான ஒன்று இரு உலகிலுமே இல்லை என்று சொல்லி ஒரு வித உயர்வு நவிற்சியுடன் மெச்சுகிறார்!

#364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
தூஉய்மைக்கு அகராதி சொல்லும் பொருள் குறிப்பிடத்தக்கது : முத்தி (இந்தக்குறளை அங்கே மேற்கோளும் காட்டுகிறார்கள்).
தூய்மையும் தூஉய்மையும் ஒன்று தான். (அழுக்கு இல்லா நிலை, உள்ளேயும் புறத்தும் ; அல்லாமல், விடுதலை / முத்தி என்னும் பொருளும் சொல்லப்படுகிறது)
அளபெடை, இனிமைக்கோ அல்லது வெண்பா விதிகளுக்காகவோ சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதே போல் தான் வாஅய்மை என்பதும் - வாய்மை
தூஉய்மை என்பது அவாவின்மை
தூய்மை (மன அழுக்கில்லா நிலை / முத்தி) அவா இல்லாதிருப்பது தான்!
மற்றது வாஅய்மை வேண்ட வரும்
அத்தகைய நிலையோ (அவா அற்ற நிலை) வாய்மையை விரும்பினால் தான் வரும்!
விருப்பமே இருக்கக்கூடாதாம் - ஆனால் வாய்மையை விரும்ப வேண்டுமாம்.
குழப்பறீங்களே வள்ளுவர் ஐயா

#365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்
அற்ற என்ற சொல் கொண்டு வள்ளுவர் விளையாடும் குறள் :-)
அடிப்படையில் ஒரே பொருள் என்றாலும், சின்னச்சின்ன மாற்றங்கள் உள்ள சொற்கள். (அற்ற = இல்லாத, அற்ற = அறுத்த / ஒழித்த).
அற்றவர் என்பார் அவாஅற்றார்
அவா (ஆசை) இல்லாமல் ஒழித்தவர்களே (முற்றும்) துறந்தவர்கள்!
மற்றையார் அற்றாக அற்றது இலர்
மற்றவர்கள் (அதாவது, பலவற்றையும் -அல்லது வேறு எல்லாவற்றையும்- துறந்தவர்கள் என்று கொள்ளலாம்) முற்றும் துறந்தவர்கள் அல்லர்!
பொதுவான பார்வையில், துறவிகள் என்றால் பொருளுடைமைகள் மற்றும் மனைவி - மக்கள் என்பது போன்ற உறவுகளை எல்லாம் துறந்தவர்கள்.
ஆனால், அவை ஒன்றும் "அற்றாகத் துறந்தவர்கள்" என்ற நிலையைத் தராது!
"அவா அறுக்காமல் வேறு என்ன அறுத்தாலும் துறவி அல்ல" என்று மீண்டும் வலியுறுத்துகிறார்!

#366
அஞ்சுவதோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பதோரும் அவா
40ஆவது குறளில் "ஓரும்" என்பது வெறும் அசைச்சொல் அல்ல, ஆய்ந்தறிதல் என்று சில உரையாசிரியர்கள் விளக்கம் தருகிறார்கள் என்று முன்பு பார்த்திருக்கிறோம்.
ஆனால், இந்தக்குறளில் அது வெறும் அசைச்சொல்லாகவே தோன்றுகிறது.
மற்றபடி, இந்தக்குறளின் பொருள் எளிது, நேரடியானது.
ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா
அவா (ஆசை) தான் ஒருவனை வஞ்சிப்பது!
(வஞ்சனை செய்வது = ஏமாற்றுவது ; நல்லது நடக்கும் என்று நம்ப வைத்துத் தீமைக்குள் தள்ளுவது)
அஞ்சுவதோரும் அறனே
(ஆகையால், அப்படிப்பட்ட) ஆசையைக் கண்டு அஞ்சுவது நன்மையாகும்!
பலருக்கும் தெரிந்த மற்றும் குறிப்பிடத்தக்க ஒரு உண்மையை இந்தக்குறள் சொல்லுகிறது.
"அவா / ஆசை / இச்சை" என்பனவும் வஞ்சனையும் உறவுகள்
(பைபிளில் சொல்லப்படும் "முதல் பாவம் / குற்றம்", இவை இரண்டையும் உட்படுத்தும் ஒன்று! "ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்." )

#367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
அவா-தவா மீண்டும்
அப்படியாக, இந்த அதிகாரத்தில் முன்னமேயே பார்த்தபடி, தவா = குறைவில்லாமல் / குன்றாமல் / கெடாமல் / அழியாமல்!
அவாவினை ஆற்ற அறுப்பின்
ஆசையை அறவே ஒழித்து விட்டால்
தவாவினை
குறை இல்லாத செயல் (கேடற்ற நல்ல வினை)
தான் வேண்டுமாற்றான் வரும்
தான் விரும்பும்படியே வரும் / வாய்க்கும்!
வள்ளுவர் மறுபடியும் குழப்புகிறார்
அறவே அவாவை ஒழித்த பிற்பாடு, அது என்ன "வேண்டுமாற்றான்"?
ஆக, ஒன்று தெளிவாகவே புலனாகிறது.
அவாவை அறவே ஒழித்தல் நடக்கிற ஒன்றல்ல
"எத்தகைய அவா நல்லது, எது தீயது என்று தெரிந்து தவிருங்கள்" என்று தான் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

#368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
ஒரே எதுகை மூன்றாம் முறையாக இந்த அதிகாரத்தில் (அவா-தவா).
தவாஅ என்ற அளபடையும் மீண்டும்
பொருளும் அறவே புதிதென்று சொல்ல இயலாது (அவா இல்லாவிடில் துன்பமில்லை ; இருந்தாலோ குறைவில்லாமல் துயரம்).
என்றாலும், வள்ளுவர் வாய்மொழி படிக்கும் போது அப்படி ஒரு இனிமை ராசா பாட்டுக் கேட்கிறது போலவே
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம்
அவா இல்லாதவர்களுக்குத் துன்பமும் இல்லாமல் போகும்
அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்
(ஆனால்), அது - அதாவது, அவா- இருந்ததென்றால், துன்பம் குறையாமல் மேலும் மேலும் வரும்!

#369
இன்பம் இடையறாதீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங்கெடின்
இதற்கு முந்தைய குறளின் "மறுதலை"
அதாவது, அவா இல்லாவிடில் குறைவில்லா இன்பம்
அவாவென்னும் துன்பத்துள் துன்பங்கெடின்
துன்பங்களுக்குள்ளேயே (மாபெரும்) துன்பமாகிய அவா என்பதை அழித்தால்
இன்பம் இடையறாதீண்டும்
இன்பம் இடைவிடாமல் வந்து சேரும்!
அப்படியாக, கருத்தளவில் மீண்டும் குழப்பத்தில் நுழைகிறார் வள்ளுவர்.
அவாவே இருக்கக்கூடாது. அப்படியானால், எதற்கு "இன்ப விழைவு"?
"நிறைய இன்பம், அதுவும் இடைவிடாமல் வேண்டும்" என்று நினைப்பது அவா இல்லையா?
போகட்டும், எப்படியும் துறவிகளுக்கு எப்படிப்பட்ட இன்பம் வேண்டும் என்பது அவர்களுக்கே வெளிச்சம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை?

#370
ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
ஆர்தல் = நிறைதல், நிறைவடைதல்
அப்படியாக, ஆரா = தீரா / நிறைவடையாத ; ஆரா அவா = தீராத ஆசை
பேர்தல் - உடைதல் / கிழித்தல் என்பது நாம் அறிந்ததே ("பல்லப் பேத்துருவேன்" = பல்லை உடைப்பேன்)
ஆகவே, பேரா = உடையாத / நீங்காத / அழியாத
ஆரா இயற்கை அவா நீப்பின்
நிறைவே அடையாத இயல்புடைய ஆசையை நீக்கினால்
அந்நிலையே பேரா இயற்கை தரும்
அந்த நிலை அழிவில்லா இயல்பைத்தரும்!
துறவற இயலின் நிறைவாக வரும் இந்தக்குறளை "அழிவில்லா இயல்பு" (முடிவில்லா வாழ்வு என்றும் கொள்ளலாம்) பற்றிப் பேசி முடிக்கிறார்.
"பேரா இயற்கை" = "உடையாத இயல்பு", நல்ல ஒரு சொல் தொகை

#371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி
(அறத்துப்பால், ஊழியல், ஊழ் அதிகாரம்)
"ஒருவருக்கு என்ன நடக்கும் என்பது முன்னமேயே தீர்மானிக்கப்பட்டுவிட்டது"
"அவனவனுக்கு என்னென்ன தலையில் எழுதியிருக்கோ அது தான் நடக்கும்"
இப்படியெல்லாம் பொது மக்களால் புரிந்துகொள்ளப்படும், "விதி / தலைவிதி / தலைஎழுத்து" என்றெல்லாம் சொல்லப்படும் ஒன்று பழைய தமிழ் நூல்களில் "ஊழ்" என்று அழைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
(அதனால் வரும் நல்ல / தீய பலன்கள் 'ஊழ்வினை" என்றும் ).
'தலைவிதி' என்ற கோட்பாடை வள்ளுவர் நம்பினார் என்றே கொள்ள வேண்டும்.
என்றாலும், அத்தகைய நம்பிக்கை இல்லாத மு.க. 'ஊழ்' என்பதை 'இயற்கை' என்று பொருள் சொல்வதையும் வேடிக்கை பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்
('வள்ளுவர் பகுத்தறிவுக்குப் புறம்பாக எழுதவே மாட்டார்' என்பது மு.க.வின் மூட நம்பிக்கை, என்ன செய்ய?)
இந்தக்குறளில் "கைப்பொருள்" என்பது இரு சொற்றொடர்களுக்கும் நடுவில் இருந்து, இரண்டுக்கும் பொதுவாக நிற்கிறது. அது ஒரு செய்யுள் அழகு
கைப்பொருள் ஆகூழால் தோன்றும் அசைவின்மை
'கைப்பொருள் சேர வேண்டும்' என்ற விதி இருந்தால் அயராது உழைக்கும் நிலை தோன்றும்
கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி
'கைப்பொருள் போக வேண்டும்' என்ற விதி இருந்தால் சோம்பல் நிலை தோன்றும்
ஆக, ஒருவனுக்கு சுறுசுறுப்பு வருவதும், சோம்பேறித்தனம் வருவதும் 'அவனுக்குப் பொருள் சேர வேண்டுமா இல்லையா' என்ற தலையெழுத்தின் படித்தானாம்

#372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை
அருள் செல்வன், பிரபு ராம் ஆகியோரிடமிருந்து ட்விட்டர் மூலம் "அசீவர்" என்ற குழுவினர் குறித்தும் அவர்களது "ஊழ்" பற்றிய விளக்கமும் கற்கும் வாய்ப்புக் கிட்டியது.
வள்ளுவரின் ஊழ், இந்த அசீவக்குழுவினரின் நம்பிக்கை அடிப்படையில் இருந்தால், மு.க.வின் இயற்கை நிலை என்ற விளக்கமே அதற்கு மிகப்பொருந்தும்.
மேலும், ஊழும் ஊழ்வினையும் தம்மில் என்ன உறவு (அல்லது உறவில்லை) என்பதும் சிந்திக்கத்தக்க ஒன்று
இனிவரும் குறள்களில் ஊழ் என்பதை ஊழ் என்றே சொல்லுவோம் - 'விதி'யைத் தற்பொழுது மாற்றி வைப்போம்
மற்றபடி, சென்ற குறளில் கைப்பொருள் பற்றிச்சொன்னதை இந்தக்குறளில் அறிவுக்கும் சொல்லுகிறார்.
பேதைப்படுக்கும் இழவூழ் உற்றக்கடை
இழப்பதற்கான ஊழ் இருந்தால் (ஒருவனை) அறியாத பேதையாக்கும்
அறிவகற்றும் ஆகலூழ் உற்றக்கடை
ஆவதற்கான ஊழோ அறிவை விரிவாக்கும்!
ஒருவனது அறிவும் அறியாமையும் ஊழால் வருகிறது என்கிறார்.
ம்ம்ம்ம்...

#373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மையறிவே மிகும்
இங்கே ஊழுக்கு "உண்மை" என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
அதாவது, "உள்ளது" என்ற பொருளில். ("என்ன உள்ளதோ, அவ்வளவே! கூட்டவோ குறைக்கவோ முடியாது" என்ற கருத்தில் என்று தோன்றுகிறது).
நுண்ணிய நூல்பல கற்பினும்
நுண்மையான (அறிவு அடங்கிய) நூல் பல கற்றாலும்
மற்றுந்தன் உண்மையறிவே மிகும்
அதன் பின்னரும், ஒருவனுக்கு உள்ள அறிவு தான் (அதாவது ஊழ் வரையறுத்த அளவிலான அறிவு தான்) மீந்திருக்கும்!
"பிறகு எதற்கு அந்த நுண்ணிய நூல் எல்லாம் படிக்கணும்?" என்று வள்ளுவரிடம் கேள்வி கேட்கக்கூடாது
இங்கு என்ன தான் சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்!
("திருக்குறள் படித்து முடித்தாலும், எனக்கு ஏற்கனவே உள்ள அறிவு தான் இருக்கும் என்றால் எதற்குப்படிக்கணும்" என்று கேள்வி கேட்க மாட்டார்களா? ஒரு வேளை அப்படித்தான் என்றால், நூல் படித்தல் எல்லாமே வெறும் பொழுதுபோக்கு என்று வரும்)

Last edited by app_engine on Tue Mar 10, 2015 8:25 pm; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 16 of 40 • 1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40
Page 16 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum