Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 10, 2015 5:34 pm

#374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு

இந்தக்குறளில் தெளிவாகவே "இயற்கை" என்று வள்ளுவர் சொல்லுகிறார். 

அப்படியாக, "ஊழ் = சூழ்" இங்கே Smile

("அப்படின்னா 'ஊழல் = சூழல்'னும் சொல்லலாமா?" என்றெல்லாம் கேட்கக்கூடாது) Smile

உலகத்து இயற்கை இருவேறு
உலகத்தின் இயல்பு வேறு வேறான இரண்டு வகை

திருவேறு தெள்ளியராதலும் வேறு
(அதாவது) பொருட்செல்வம் நிறைந்தவர் ஆதல் வேறு, தெளிந்த அறிவுடையவர் ஆதல்  வேறு 

வேறு சொற்களில் சொன்னால், பணம் சேர்ந்தவர் ஆவதற்கும் அறிவு நிறைந்தவர் ஆவதற்கும் தம்மில் உறவொன்றும் இல்லை என்கிறார். (புத்தியுள்ள மனிதரெல்லாம்...)

அது சரி தான், இது ஏன் "ஊழ்" அதிகாரத்தில்? 

ரெண்டுமே வெவ்வேறு ஊழால் வருவது என்று சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 11, 2015 10:00 pm

#375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் 
நல்லவாம் செல்வம் செயற்கு

"பணம் மட்டும் உங்களுக்குச் சேர வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் என்ன முட்டாள்தனம் செய்தாலும் சேர்ந்தே தீரும். சேரக்கூடாது என்று முடிவெடுத்தாலோ, தலைகீழாய் நின்றாலும் நடவாது" என்று ஊழின் தவிர்க்க முடியாமை குறித்துச் சொல்லும் குறள் Smile


செல்வம் செயற்கு
பொருட்செல்வம் உண்டாக்குவதற்கு (பணக்காரனாய் ஆவதற்கு)

நல்லவை எல்லாஅந் தீயவாம்
(ஊழ் ஒப்பவில்லை என்றால்) நல்ல முயற்சிகளும் நற்பலன் தர மாட்டாது (தீய பலனே தரும்)

தீயவும் நல்லவாம்
(ஊழ் ஒப்பினாலோ) நல்லதற்ற முயற்சிகளும் பலன் தரும்!

ஆக, நீங்கள் விரும்புவதாலோ, திட்டமிட்டு நல்ல நல்ல வழிகளில் முயலுவதாலோ எல்லாம் செல்வம் சேர்த்து விட முடியாது. 

அதற்கான ஊழ் உங்களுக்கு இருந்தால் தான் சேரும். 

மட்டுமல்ல, ஊழ் இருந்தால் நீங்கள் எடுக்கும் முயற்சி உருப்படாத ஒன்று என்றாலும் செல்வம் குவியுமாம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 13, 2015 7:38 pm

#376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் 
சொரியினும் போகா தம

பரி என்பதற்குப் பாதுகாத்தல் என்று ஒரு பொருள் இருக்கிறதாம்.

பால் என்பது இங்கே "என் பால் / உன் பால்" (அதாவது என்னைச்சேர்ந்த / எனக்குரிய / உனக்குரிய) என்ற பயன்பாட்டில் வருகிறது.

இனி முழுக்குறளின் பொருள் காண்பது எளிதே Smile

பாலல்ல பரியினும் ஆகாவாம் 
(நமக்கு) உரியதல்லாத ஒன்றைப் பாதுகாக்க முயன்றாலும் நடக்காது 

தம 
(நேர் மாறாக) தமக்கு உரியவை (அதாவது, தம்முடையவை / தமக்கானவை / 'தமக்கே தமக்கு' என்று ஊழால் வரையறுக்கப்பட்டவை)  

உய்த்துச்சொரியினும் போகா
விட்டொழிக்க முயன்றாலும் போக மாட்டா

அதாவது, 
- உனக்கென்று ஊழ் வரையறுத்தது மட்டுமே நிற்கும். 
- அதைத் தூக்கி எறிந்தாலும் போகாது. 
- அல்லாததைப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முயன்றாலும் போயே போய் விடும்.

பூட்டு செய்வோர் எல்லாம் தம் தொழிலை நிறுத்தி விடலாம் Smile

திருடர் எல்லாம் "இது உனக்கானது அல்லவே" என்று சொல்லி வாதிடலாம் Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 16, 2015 6:44 pm

#377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

"பொருள் சேர்த்து வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க (அதாவது, துய்க்க) கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்ற பொது மொழியில் வரும் குறள்  Smile

இங்கே ஊழை "வகுத்தான் வகுத்த வகை" என்று அப்பட்டமாக "மேலே இருக்கும் ஒருவன் எழுதி வைத்தது" என்பது போல் சொல்வதைக்காணலாம். 

"இல்லை இல்லை, ஊழை ஒரு ஆளாக உருவகப்படுத்தினார்" என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

கோடி தொகுத்தார்க்கும்
கோடி கோடியாய் ஈட்டியவர்களுக்கும் 

வகுத்தான் வகுத்த வகையல்லால்
வகுத்தவன் / ஊழ் வரையறுத்தவை அல்லாமல் (அல்லது, ஊழ் தந்த அளவை விடக் கூடுதல் அளவில்)

துய்த்தல் அரிது
துய்க்க / அனுபவிக்க முடியாது!

பொருள் சேர்த்தாலும் அதைத்துய்ப்பதற்குக் "கொடுப்பினை" வேண்டும் என்கிறார் Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 17, 2015 6:49 pm

#378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால 
ஊட்டா கழியுமெனின்

படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிதல்லாத (சொல்லப்போனால் மிகக்கடினமான) ஒரு குறள்!

Embarassed

முதலில் அருஞ்சொற்பொருள், பின்னர் குறளின் பொருள் என்று முயல்வோம்...

துப்புரவு - இந்த இடத்தில் பொருத்தமான பொருள் "நுகர்வு" ;  அது இல்லார் என்றால் "நுகர்வு இல்லாதோர்".  அதாவது, வறியவர்கள் / ஏழைகள்!

"மன்" என்பது ஒழியிசைச்சொல்லாம். 

இங்கே தான் குழப்பம் வருகிறது. அதாவது, நேரடிப்பொருள் மட்டுமின்றி சூழலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது உண்டு என்று சுட்டிக்காட்டுவது.

அதாவது, "ஊழால்" என்று உணர்த்தவே இங்கு ஒழிவிசை உள்ளதாம். அது அப்படித்தானா என்று தெரியவில்லை.

இந்தக்குறள் சிக்கலானது என்று சொல்லும் ஒரு கட்டுரை காண நேர்ந்தது. அதிலுள்ள விளக்கம் நன்கு பொருந்துகிறது என நினைக்கிறேன் :

http://koodal1.blogspot.com/2009/06/blog-post_17.html


எட்டாவது குறள் சற்றுச் சிக்கலானது. உரையாசிரியர்களான பரிமேலழகர், பரிப்பெருமாள் ஆகியோரின் உரையும் பொருள் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுமாறு அமையவில்லை.
...
...
 ‘உறற்பால ஊட்டா கழியும்’ என்பதற்கு ஆகூழால் தோன்றும் செல்வ நுகர்ச்சி இல்லாத போது எனப் பொருள் கொள்வது குறளை அறியத் துணை புரிகின்றது. ‘துறவும் கூட ஊழின் பயனே’ எனக் கூறும் காலிங்கரின் கருத்து பொருத்தமாக உள்ளது.

உறற்பால = ஊழால் வந்து சேருவன 

ஊட்டா கழியுமெனின் = ஊட்டப்படுவன, நுகரப்படுவன, உணவு, இன்பம் (துன்பம் என்பது பரிமேலழகர் கருத்து) ஒழிந்தால் / இல்லையென்றால் 

உறற்பால ஊட்டா கழியுமெனின்
ஊழின் விளைவால் ஒருவருக்கு இன்பங்கள் இல்லா நிலை என்றால் 

துப்புரவில்லார் துறப்பார்மன்
(அத்தகைய) வறியவர் துறவிகள் ஆகி விடுவர் 

"பசிக்கு ஆண்டி, பஞ்சத்துக்கு ஆண்டி" என்ற பொது வழக்கைச் சொல்லும் குறள்  என்ற விளக்கம் எனக்குப் பொருத்தமாகவே படுகிறது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 18, 2015 4:41 pm

#379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் 
அல்லற் படுவதெவன்?

சொல்ல வரும் கருத்து புரிகிறது என்றாலும் எரிச்சல் ஊட்டும் குறள் Sad

அதாவது, "தீமைகளையும் மனம் தளராமல் எதிரிட வேண்டும்" என்ற அளவில் நல்ல கருத்து தான். 

ஆனால், இங்கே  கேள்வி கேட்கும் முறை நையாண்டி செய்வது போல இருப்பதால் சினம் வரவழைக்கிறது. மட்டுமல்ல, மனிதன் என்றால் உணர்வுகள் இருக்கவேண்டும் தானே என்ற எண்ணமும் வருகிறது.

பொருள் பார்ப்போம்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்
நல்லது நடக்கையில் "நல்லது, நல்லது" என்று (மகிழ்ச்சி) காண்பவர்கள் 

அன்றாங்கால் அல்லற் படுவதெவன்?
அல்லாதது நடக்கையில் அல்லற்படுவது ஏனோ?

நல்லது, கெட்டது இரண்டையும் ஒரே போல் காண வேண்டுமென்றால் ஒருவன் மரத்துப்போனவனாக (அல்லது இறந்து போனவனாக) இருந்தால் தானே முடியும்?

நமக்கு நிகழ்வன நம் மீது வேறுபட்ட விளைவுகளைக் கொடுக்காவிட்டால் நமக்கு மனநிலைக் குழப்பம் என்று தானே பொருள்?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 24, 2015 11:16 pm

#380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும்

ஊழ் அதிகாரம், ஊழ் இயல் மற்றும் அறத்துப்பாலின் இறுதிக்குறள் Smile

என்னவெல்லாம் / எப்படியெல்லாம் முயன்றாலும் ஊழில் இருந்து தப்ப இயலாது என்று அடித்துச்சொல்லும் செய்யுள். 

மற்றொன்று சூழினுந் தான் முந்துறும்
(ஊழில் இருந்து விலகிச்செல்லும்) மற்றொரு சுற்று வழியில் போனாலும் நம்மை முந்திக்கொண்டு வந்து அவ்வழியிலும் நிற்கும் 

ஊழிற் பெருவலி யாவுள
ஊழை விடவும் மிக வலிமையுடையது என்ன உள்ளது?

"யாவுள" என்ற வினா "விடையை எதிர்பார்க்காத கேள்விகள்" என்ற வகையில் வரும். 

அதாவது "ஒன்றுமே இல்லை" என்று சொல்ல வருகிறார். 

குறள் படிக்கும் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் குறள். 

அதாவது, ஏற்றுக்கொள்வதா / மறுப்பதா / வேறு விதத்தில் (இயற்கை நிலை என்றெல்லாம்) விளக்குவதா என்றெல்லாம் பலரும் இதைப்பற்றிக் கருத்து சொல்வதை நாம் காண முடியும்.

Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 25, 2015 8:27 pm

இது வரை படித்தவை / பதித்தவை பிடிஎஃப் வடிவில் இங்கே சேமித்துள்ளேன்:
http://www.mediafire.com/download/yzh3nxqhi3f0tio/kural_inbam.pdf
(அறத்துப்பாலின் 380 குறள்களும் பாமர மொழியில் படிக்க விரும்புவோருக்கான உதவி)

இதை உங்கள் கணினி போன்ற கருவிகளில் இறக்கவோ படிக்கவோ மற்றவர்களுடன் பகிரவோ ஒரு தடையும் இல்லை Smile

முழுவதும் பொது உடைமை!

Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  V_S Wed Mar 25, 2015 9:24 pm

What an effort ji!  applause Hats off! I need to spare time to read and understand. Thanks a lot for the enlightening thread and mighty share thumbsup

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 26, 2015 12:29 am

V_S wrote:What an effort ji!  applause Hats off! I need to spare time to read and understand. Thanks a lot for the enlightening thread and mighty share thumbsup

மிக்க நன்றி வி எஸ் ஜி Smile

நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ் படிப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி எனக்கு Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 31, 2015 12:36 am

#381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு
(பொருட்பால், அரசியல், இறைமாட்சி அதிகாரம்)

இங்கு இறை என்பது அரசு / வேந்தன் என்ற பொருளில் வருகிறது. மாட்சிமை = சிறப்பு. 

அதாவது, ஆளும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் / சிறப்புகள். அரசியலுக்கு அருமையான தொடக்கம் Smile

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
படை, குடிமக்கள், பொருள் வளம் ("கூழ்"), அமைச்சர்கள், நண்பர்கள், அரண் (பாதுகாவல்) ஆகிய இவை ஆறும்

உடையான் அரசருள் ஏறு
(சிறப்பாக) உடைய மன்னனே மன்னர்களுக்குள் காளை போல் (அல்லது அரிமா போல்) உயர்ந்தவன்!

ஏறு என்ற சொல்லுக்கு எருது / காளை   என்றும் வேறு பல விலங்குகளின் ஆண் என்றும் (அரிமா/ புலி / பன்றி) அகராதி பொருள் சொல்லுவதைக்காணலாம்.

பல உரைகளும் இங்கே ஏறு = அரிமா / சிங்கம் என்றே சொல்லுகின்றன. சிறுவயது முதலே "காட்டுக்கு அரசன் அரிமா" என்று சொல்லிக்கொடுத்து வளர்ப்பதால் அரசன் = அரிமா என்று எல்லோரும் பொருள் கொள்வது இயல்பே.

என்றாலும், பழந்தமிழர் மரபில் காளைக்கு இருந்த மதிப்பும் குறைவொன்றுமில்லை. "ஏறு தழுவுதல்" என்பது அன்றும் இன்றும் வீர விளையாட்டு Smile  வேறு பல செய்யுள்களில் இந்தச்சொல் எருது என்ற பொருளிலேயே உள்ளது என்றும் மனதில் கொள்ளலாம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 31, 2015 7:24 pm

#382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

இந்தக்குறளில் உள்ள குறிப்பிடத்தக்க சொல் "எஞ்சாமை" Smile

எஞ்சுதல் என்றால் மிச்சம் / மீதி என்று வரும். ("எல்லாம் போக எஞ்சி இருப்பது வெறும் அஞ்சு காசு")

ஆக, "எஞ்சி" என்றால் குறைவான ஒரு நிலை.  இதற்கு எதிர் மறையான "எஞ்சாமை" = முழுமை, நிறைவு!

வேந்தர்க் கியல்பு
(சிறப்பான) வேந்தர்க்கு இருக்க வேண்டியது 

அஞ்சாமை ஈகை அறிவூக்கம்
அஞ்சாமை (அச்சமின்மை), ஈகை (கொடுக்கும் தன்மை / வள்ளல்), அறிவு, ஊக்கம்

இந்நான்கும் எஞ்சாமை
(ஆகிய) இந்த நான்கு பண்புகளின் முழுமை / குறைவின்மை!

அருமையான வரையறை!

இவை நான்கும் ஒரு நல்ல மன்னனின் அடிப்படைப் பண்புகள் என்பதில் ஐயமில்லை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 01, 2015 11:37 pm

#383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனாள்பவர்க்கு

தூங்குதல் = உறக்கம் / சோர்வு என்றெல்லாம் வருகிறது. 

தூங்காமை = சோர்வில்லாமை என்று கொள்ளலாம்.
(உறக்கமே இல்லாமல் இருப்பது என்பதெல்லாம் உயர்வு நவிற்சி - நடைமுறையானது அல்ல)

மற்றபடி இந்தக்குறளுக்குப் பொருள் காண்பது கடினமல்ல!

நிலனாள்பவர்க்கு
நிலத்தை (நாட்டை) ஆள்பவருக்கு

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
சோர்வில்லாமை, கல்வி, துணிவு - இந்த மூன்றும் 

நீங்கா
நீங்காமல் இருக்க வேண்டும்!

வேந்தனுக்குள்ள பண்புகள், தகுதிகள் என்று ஒவ்வொரு குறளிலும் நிறைய அடுக்குகிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 03, 2015 7:49 pm

#384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 
மானம் உடைய தரசு

இழுக்கு என்ற சொல் நாள்தோறுமுள்ள பயன்பாட்டில் அவ்வளவாக இல்லை என்றாலும் பொருள் அறியாதவர் சிலரே Smile

குறைவு, பிழை, தீமை, பொல்லாங்கு, அழிவு என்று வேண்டாத, எதிர்மறையான பண்புகளின் ஒட்டுமொத்த வடிவம்!

அச்சொல் இருமுறை இந்தக்குறளில் காண்கிறோம்!
  
அறனிழுக்கா தல்லவை நீக்கி
அறத்தில் (நன்மையானவற்றில்) குறைவு படாமல் அல்லாதவற்றை நீக்கியும்

மறனிழுக்கா மானம் உடைய தரசு
மறத்தில் (வீரத்தில்) குறைவின்றியும் மானம் உடையவனாகவும் இருப்பவனே அரசன்!

ஆக, வீரம் மட்டுமின்றி அறமும் வேண்டும் அரசனுக்கு என்று வலியுறுத்தும் குறள்.

பல வரலாற்று நூல்களும் மன்னர்களின் போர் வெற்றிகள் குறித்துப் புகழ் பாடுவதும் அறத்தில் எப்படி இருந்தார்கள் என்பது குறித்து அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் (அல்லது அமைதி காத்து) இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 07, 2015 10:18 pm

#385
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு

பொருள் மேலாண்மையை எவ்வளவு அழகாகவும் சுருக்கமாகவும் சொல்லுகிறார் வள்ளுவர்!

அரசனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே (இல்லறம் நடத்துவோருக்கும்) மிக அழகாகப் பொருந்தும் அறிவுரை. 

மற்றும், "பொருள் சுழற்சி" குறித்த எளிய பாடம் Smile

இயற்றலும் ஈட்டலும்
(பொருள் உண்டாகும் வழி வகைகளை) இயற்றுவதும், (அதன் வழியாகப் பொருள்) ஈட்டுவதும் 

காத்தலும் காத்த வகுத்தலும்
(ஈட்டியதைக்) காத்தலும், காத்ததை (சேமித்த பொருளை) வேண்டிய விதத்தில் வகுத்தலும்
(வகுத்தல் = பிரித்தல், பிரித்து வழங்குதல், செலவழித்தல் என்றெல்லாம் சொல்லலாம்)

வல்ல தரசு
(ஆகிய இவற்றில் எல்லாம்) வல்லவனே அரசன்!

1. இயற்றல் (மூளைக்கு வேலை)
2. ஈட்டல் (உழைப்பு)
3. காத்தல் (கட்டுப்பாடு)

மேற்சொன்ன மூன்றும் இருந்தால் தான், 4. வகுத்தல் (இன்பம்) Smile

இல்லையேல் கடன் வாங்கி உழல வேண்டியது தான்!

அழகான பொருள் சுழற்சி!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 08, 2015 11:22 pm

#386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் 
மீக்கூறும் மன்னன் நிலம்

மீக்கூற்றம் என்பது இங்கே புதிய ஒரு சொல் Smile

மீதே (மேலே / உயர்வாக) + கூறுதல், அதாவது புகழ் / மேன்மை என்றெல்லாம் கொள்ளலாம்.

"நிலம் மீக்கூறும்" என்பதை ஒவ்வொரு உரையாசிரியரும் ஒவ்வொரு விதத்தில் விளக்குவது குறிப்பிடத்தக்கது. 
(சாலமன் பாப்பையா இங்கே வேடிக்கைப்பொருள் ஆகிறார் - ஆட்சிப்பரப்பு விரிவடைதல், அரசியல் கட்சிக்கு நிறையத் தொகுதிகள் கிடைத்தல் என்றெல்லாம் சொல்லுகிறார்). rotfl

மன்னன் காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மன்னன் காண்பதற்கு எளியவனும் கடுமையான சொற்களைப் பேசாதவனுமாக இருந்தால் 
(இங்கே 'காட்சிக்கு எளியவன்' என்பது 'பொதுவில் எளிமையானவன்' என்றோ, 'எளிதில் அவனைக் காண முடியும்' என்றோ எடுத்துக்கொள்ளலாம்)

நிலம் மீக்கூறும்
மக்கள் எல்லோரும் புகழ்வார்கள் (அல்லது, அப்படிப்பட்ட மன்னனின் நாடு உயர்வாய் விளங்கும்)

இங்கே நிலம் என்பது ஆகுபெயராக மக்கள் / நாடு என்று வருகிறது.

இங்கே புகழ்ச்சி மக்களிடம் இருந்து மன்னனுக்கு வரலாம். அல்லது அந்த நாட்டுக்கே வெளியில் இருந்து (உலகின் மற்ற எல்லாரிடமும் இருந்து) புகழ்ச்சி / உயர்வு வரலாம்.

இப்படி விதவிதமாய் விளக்குவதற்கென்றே சுருங்கச்சொல்லி வள்ளுவர் சிறக்கிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 09, 2015 11:35 pm

#387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் 
தான்கண்டனைத்திவ் வுலகு

அளித்தல் என்றால் கொடுப்பது என்று எல்லோருக்கும் தெரியும். (எடுத்துக்காட்டு : அன்பளிப்பு)

இந்தக்குறளில் "ஈத்தளிக்க" என்று வருகிறது. ஈதல் என்பதும் கொடுப்பது தானே?

அகராதிப்படி, அளித்தல் என்பதற்கு வேறு பொருளும் உள்ளது. "காத்தல்" Smile

அது இங்கு மிகப்பொருத்தம்!

அப்படியாக, "ஈத்தளித்தல்" = ஈகை செய்து காத்தல் Smile

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு
இனிமையான சொற்களோடு ஈந்து காக்க வல்லவர்க்கு 

தன்சொலால்
தன் சொற்படியும்

தான்கண்டனைத்திவ் வுலகு
தன் விருப்பப்படியும் இவ்வுலகு அமையும்!

வேறு விதத்தில் சொன்னால், நாட்டில் தான் விரும்பிய படியெல்லாம் நடக்க வேண்டுமென்றால், மன்னன் இன்சொல் பேசி, ஈகைப்பண்புடன் மக்களைக் காப்பவனாக இருத்தல் வேண்டும்!

அப்படிப்பட்ட மன்னன் விரும்பும்படியெல்லாம் நாட்டினர் நடப்பார்கள்! 
(இது நாட்டுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும், வீட்டுக்கும் பொருந்தும் என்று நான் சொல்லத்தேவையில்லை)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat Apr 11, 2015 12:50 am

#388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறையென்று வைக்கப்படும்

இங்கே "இறை" என்ற சொல் குழப்பம் உண்டாக்குவதைக் காணலாம். (அதாவது, உரையாசிரியர்கள் இடையில்).

மு.வ. மற்றும் மு.க இந்தச்சொல்லுக்குத் "தலைவன்" என்று பொருள் எழுதுகிறார்கள்.  அது ஏற்கத்தக்கதல்ல.

ஏற்கனவே "மன்னவன்" என்று சொல்லுகிறது. ஆக, ஏற்கனவே அவன் தலைவன் தான். "முறை செய்து காப்பாற்றுவதால்" மீண்டும் தலைவன் என்ற நிலை (மட்டும்) கிடைப்பதில் பொருளில்லை.

அதற்கும் மீதான ஒன்று, ஒரு மிக உயர்ந்த நிலையை அவன் அடைகிறான் என்பதையே "இறை" என்று சொல்ல வருகிறார்.

அல்லாமலும் இந்திய மற்றும் தமிழகத் தொன்மை மரபுகளில் பலரையும் (பலவற்றையும் கூட) இறைவனின் இடத்தில் வைப்பது புதிதொன்றும் இல்லையே? (அம்மா தெய்வம், அப்பா தெய்வம், ஆசிரியர் தெய்வம், கணவன் தெய்வம் போன்ற சொல் வழக்குகள் அரிதல்லவே?)

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்
நெறிமுறைகளின் படி நடந்து (மக்களைக்) காப்பாற்றும் மன்னவன் 
(நீதியாக ஆட்சி புரிந்து என்றும் சொல்லலாம்)

மக்கட்கு இறையென்று வைக்கப்படும்
மக்களுக்கு இறைவனாகவே கருதப்படுவான்!

"கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினார் மன்னர்" - உயர்வு நவிற்சி Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat Apr 11, 2015 10:56 pm

#389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் 
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

கைப்பு என்றால் கசப்பு. (இன்றும் மலையாளத்தில் அன்றாடம் பயன்படும் சொல்).

நாவுக்குத்தான் அறுசுவை என்றில்லை, தமிழில் காதுகளுக்கும் அவ்வண்ணம் பயன்படுத்துவது நாம் அறிந்ததே.

எடுத்துக்காட்டுகள்:
- தேன் வந்து பாயுது காதினிலே (இனிப்பு)
- சொற்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றின (கொதிப்பு / உறைப்பு)
- நேற்று இனித்த மொழி இன்று கசந்ததோ? (கசப்பு)

அப்படியாக, இங்கே "செவி கைப்பச்சொல்" என்பது, கேட்க விருப்பமில்லாத, கசப்பான, குத்திக்காட்டும், குறைகளைச் சொல்லும் பேச்சுகள் எனலாம். 

கவிகை என்பது இன்னொரு அழகான சொல், குடை என்று பொருள். (இங்கு 'அரசு' என்று பொருள்)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் 
காதுகளில் விழும் கசப்பான சொற்களைப் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய வேந்தனின் 
(தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளும் மனதுள்ள வேந்தன் என்று பொருள்)

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
குடையின் கீழ் / ஆட்சியின் கீழ் உலகம் தங்கும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Apr 12, 2015 11:42 pm

#390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் 
உடையானாம் வேந்தர்க் கொளி

இந்த அதிகாரத்தில் அடிக்கடி எண்ணிக்கைக் கணக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மன்னவனின் பண்புகள் என்று வரும்போது கணக்காக (கச்சிதமாக) இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறாரோ என்னமோ?

நான்காம் முறையாக எண் கணக்கு வருகிறது. (முதல் மூன்று குறள்கள் மற்றும் இந்தக்கடைசிக் குறள்).

இம்முறை பயன்படும் எண் நான்கு.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
கொடை (கொடுக்கும் தன்மை / ஈகை), அளி (அன்பு), செங்கோல் (செம்மை / நடுநிலைமை), குடியோம்பல் (மக்களைக் காத்தல்) என்ற இவை நான்கும் 

உடையானாம் வேந்தர்க் கொளி
கொண்டிருப்பதே வேந்தர்க்கு ஒளி (வெளிச்சம்) ஆகும்!

"வேந்தர்க்கொளி" என்பதை, வேந்தர்கள் நடுவில் விளக்கு போன்றவன் (மின்னுபவன் / மிளிர்பவன்) என்றும் உரை எழுதுகிறார்கள். 

எனக்கென்னமோ அப்படித்தோன்றவில்லை.

இங்கே அது "கண்ணுக்குப் பார்வை போல வேந்தர்க்கு இன்றியமையாத பண்புகள்" என்று கொள்வதே முறையாகப் படுகிறது. "இத்தகைய பண்புகள் இல்லாத வேந்தன், குருடன்" என்று வள்ளுவர் சொல்லுகிறாரோ?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 13, 2015 8:08 pm

#391
கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக
(பொருட்பால், அரசியல், கல்வி அதிகாரம்) 

புகழ் பெற்ற பல குறள்கள் உள்ள கல்வி அதிகாரம்!

தமிழ் படித்தவர்களில் இந்தக்குறள் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது!

'கசடு' என்றால் அழுக்கு, குற்றம், பிழை என்பன மட்டுமல்ல, ஐயம் என்றும் அகராதி பொருள் சொல்லுகிறது.

இந்தச்சொல் கேட்டதும் உடனே நமக்கு மனதில் வருவது பொரித்து முடித்த பின் எண்ணெயில் காணும் "கசடு". அதாவது, "உண்ண / உட்கொள்ளத்தகாத" என்று புரிந்து கொள்ளக் கடினமே இல்லை Smile

கற்பவை கசடறக்கற்க 
கற்பனவற்றைப் பிழையில்லாமல் கற்க 
(அல்லது, ஐயங்கள் இல்லாமல் Smile சொல்லப்போனால், ஐயங்கள் அகற்ற நமக்குக்கல்வி இன்றியமையாதது என்றும் பொருள் கொள்ளலாம்.)

கற்றபின் அதற்குத் தக நிற்க
கற்ற பின்னர், அவற்றுக்குத் தக்க விதத்தில் வாழ வேண்டும். 
(நிற்க = வாழ்க்கை நிலை)

மிக அழகாக, இரண்டே சொற்களில் "கற்க கசடற" என்று கல்வியின் நோக்கம் மற்றும் தன்மை இரண்டையும் அடித்து விளையாடும் வள்ளுவரின் ஆட்டம் - அட அட !

நோக்கம் : மன அழுக்கு, பிழை, ஐயம் எல்லாம் அறுத்தல் / நீக்குதல் 

தன்மை : பிழை இல்லாமல், சரியான விதத்தில் புரிந்து கொள்ளுதல். 

குழப்பம் கூடவே கூடாது! Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 16, 2015 11:27 pm

#392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

'எண் எழுத்து இகழேல்' என்பது ஆத்திசூடியில் 'எ' எழுத்துக்கு உள்ள கருத்து. 

ஔவையார் இதே கருத்தைத் தமது கொன்றை வேந்தன் நூலிலும் சொல்கிறார் "எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்" என்று Smile

அவருக்கு முன்னமே வள்ளுவர் குறளில் சொன்ன கருத்துத்தான் இது Smile

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
எண் எனப்படுவதும் (மற்றும்) எழுத்து எனப்படுவதும் 
(ஏனை என்பதற்கு "மற்றை / மற்றது" என்று அகராதி பொருள் தருகிறது)

இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு
இவை இரண்டும் வாழும் உயிர்களுக்கெல்லாம் கண் எனப்படும்! 
(கண் போல இன்றியமையாதவை)

சென்னையில் தன் வேலைக்காகச் சிறிது காலம் மட்டும் வாழ்ந்த ஒருவர் (ம.பி.க்காரர்) என்னிடம் "தமிழில் எண் என்பதே இல்லை, நான் திருக்குறள் எல்லாம் தேடினேன்" என்று ஏளனம் செய்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது இந்தக்குறள் தான் Smile

சூழ்நிலையின் விளைவாக அன்று அவர் என்னிடமிருந்து தப்பித்து விட்டார். என்றாலும், அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன், அவரிடம்  இந்தக்குறள் பற்றி சொற்பொழிய!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 17, 2015 8:58 pm

#393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு 
புண்ணுடையர் கல்லாதவர்

படிக்க அவ்வளவு உவப்பல்லாத குறள் - ஏனென்றால் அது மனதில் வரையும் ஓவியம் கோரமானது Sad

எதுகைக்காக எழுதினாரா அல்லது உண்மையிலேயே கல்லாதோரின் கண்களைப் பற்றி அப்படித்தான் வள்ளுவர் நினைத்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

எப்படி இருந்தாலும், பலருக்கும் நன்கு அறிமுகமான ஒரு திருக்குறள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர்
கற்றவர்கள் தான் கண் உள்ளவர்கள் 

முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்
கல்லாதவர்கள் முகத்தில் உள்ளது இரண்டும் புண்களே! 
(அவை கண்கள் அல்ல, காயங்கள் என்கிறார்)

என்றாலும், இங்கே கல்வி என்பது என்ன என்று சிந்திக்க வேண்டும்.

'வெறுமென நூல்களைப் படிப்பதற்கான தகுதியா?' என்றால் கண்டிப்பாக இல்லை என்றே விடை வரும்.

இங்கு "கற்றோர்" என்பது, "அறிவும் புரிதலும் அடைந்தோர்" என்று எடுத்துக்கொண்டோமென்றால், அதிர்ச்சி அடைய மாட்டோம். 

(அல்லாமல் , "கற்றோர் = கல்லூரிப்படிப்பு முடித்தவர்" என்று விளக்கினால், நம்முடைய முகத்தில் இருப்பது புண்களே Smile )

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 21, 2015 8:01 pm

#384
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் 
அனைத்தே புலவர் தொழில்

கல்வியில் குறிப்பிடத்தக்க பங்கு "கூடி உரையாடல்" என்பதற்கு உண்டு!

அறிவு, புரிந்து கொள்ளுதல் இவற்றை விரும்புவோர் தம்மில் கூடி வருதலும், கற்றவற்றைப் பகர்தலும் கற்பதற்கு இன்றியமையாத ஒன்று!

அதை வலியுறுத்தும் குறள்!

புலவர் தொழில்
புலமை உள்ளவர்களின் தொழில்
(புலவர் = ஞானி என்றும் பொருள் சொல்கிறார்கள்)

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே
மகிழ்வுடன் ஒன்றாகக் கூடுதலும், உள்ளன்போடு பிரிதலும் தான்!
(கூடும் போது அறிவு பகிர்தலும், மன நிறைவும் கிட்டும். பிரியும் போதும் "மீண்டும் எப்போது பார்ப்போம்" என்ற எண்ணத்துடன் அன்போடு பிரிவார்கள்)

'கல்விக்குக் கூட்டு மிகவும் தேவை' என்ற உண்மை மட்டுமல்ல, கூடிவரவுகள் எப்படி இனிமையாய் அமைய வேண்டும் என்றும் வள்ளுவர் பாடம் எடுக்கிறார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 22, 2015 9:20 pm

#395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் 
கடையரே கல்லாதவர்

'அறிவு பெற மற்றவரிடம் கேட்பதற்கு நாணம் கூடாது' என்று வலியுறுத்தும் குறள். 

'கற்றவர்கள் முன் கல்லாதவர் ஏழைகள்' என்ற பொருளும் உள்ளதாக உரைகள் விளக்குகின்றன.

இதற்கு அழகான உவமையைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர். 
(உடையார் முன் இல்லார் போல் - பணம் இருப்பவர் முன் ஏழை ஏக்கத்துடன் நிற்பது போல்)

ஏக்கறுதல் என்பதற்கு "இளைத்து இடைதல், ஆசையால் தாழ்ந்து நிற்றல், விரும்புதல்" என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.

உடையார்முன் இல்லார்போல்
செல்வம் மிகுந்தோர் முன் இல்லாதவர்கள் போல 

ஏக்கற்றுங் கற்றார்
(அறிவுடையோர் முன்) ஏக்கத்துடன் தாழ்ந்து நின்று (வேண்டி விரும்பி), கற்றுக்கொள்வோர்

கடையரே கல்லாதவர்
(உயர்ந்தவர்)! அவ்வாறு கல்லாதவரோ இழிந்தவர்

கற்றோர் முன் கல்லாதவர் இழிந்து நிற்கும் நிலை அன்றும் இன்றும் உள்ளது என்பது உண்மையே. ("இதுக்குத்தான்யா ஊர்ல ஒரு படிச்சவன் வேணும்ங்கறது" Laughing )

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 17 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum