குறள் இன்பம் - #1 - #948
+3
fring151
Usha
V_S
7 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
குறள் இன்பம் - #1 - #948
சில நாட்களாக ஒரு சிந்தனை -
"நாள் தோறும் ஒரு பாடல்" என்று எழுதுவது போல ஏன் நாள் தோறும் ஒரு குறள் குறித்து உரையாடக்கூடாது?
"புதிதொன்றுமில்லையே, காலம் காலமாக சின்னத்திரை, பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் நடப்பது தானே" என்று ஒரு சலிப்பு.
மறுபக்கத்தில், "எப்படியும் இழப்பு ஒன்றும் இல்லையே, ஐந்தோ பத்தோ மணித்துளிகள் தமிழ் படிக்க / எழுத / உரையாட ஒரு வாய்ப்பு தானே" என்றும் ஒரு எண்ணம்.
"எப்படியும் எத்தனையோ குப்பைகளைக் கிளறி நேரத்தைக் கழிக்கிறோம். இதனால் என்ன தீமை வரப்போகிறது?" என்று ஒரு ஆழ்மன ஓட்டம்.
அப்படியாக, இழை தொடங்கி விட்டேன்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறள் - படிக்க, புரிந்து கொள்ள, எழுத, உரையாட என்று!
இயன்ற அளவு அலுப்பில்லாமல் செய்ய முயல்கிறேன்

Last edited by app_engine on Tue Feb 16, 2021 5:33 pm; edited 255 times in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
முகவுரை:
திருக்குறள் குறித்த சில விவரங்களை மனதில் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.
அதாவது, கீழே உள்ள பொதுவான விவரங்கள்:
எழுதியவர் - திருவள்ளுவர்
காலம் - சங்க காலம் (கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 5ம் நூற்றாண்டுக்கும் இடையில்)
எந்தத் தொகுப்பில் உள்ள நூல் - பதினெண் கீழ்க்கணக்கு
குறள் என்பது - இரண்டடி உள்ள வெண்பா
எத்தனை குறள்கள் இந்த நூலில் - 1330
இவை எப்படிப்பிரிக்கப்பட்டுள்ளன? - 133 அதிகாரங்கள் (ஒன்றுக்குப் பத்துக்குறள் என்ற கணக்கில்)
வேறு என்ன வகைப்படுத்தல்? - 3 பாற்கள் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்) & 13 இயல்கள் (பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல், அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல், களவியல், கற்பியல்)
ஒரொரு பாலுக்கும் / இயலுக்கும் எவ்வளவு குறள்?
அறத்துப்பால் (மொத்தம் 380, 38 அதிகாரங்கள்)
பாயிரம் - 40, இல்லறவியல் - 200, துறவறவியல் - 130, ஊழியல் - 10
பொருட்பால் (மொத்தம் 700, 70 அதிகாரங்கள்)
அரசியல் - 250, அமைச்சியல் - 100, அரணியல் - 20, கூழியல் -10, படையியல் - 20, நட்பியல் - 170, குடியியல் -130
காமத்துப்பால் (250, 25 அதிகாரங்கள்)
களவியல் - 70, கற்பியல் -180

Last edited by app_engine on Thu Jul 20, 2017 12:15 am; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து அதிகாரம்)
கே.பாலச்சந்தரின் திரைத்தயாரிப்பு நிறுவனமான கவிதாலயம் ஆக்கிய படங்களில் தொடக்கத்தில் இந்தப்பாடல் ஒலிப்பது வழக்கம்
இளையராசாவின் குரலில் இந்தக்குறளை இங்கே கேட்கலாம்
(படம் - சிந்துபைரவி) :
அடிக்க வராதீங்க - திருக்குறள் என்றாலும் திரைப்படம், திரைப்பாடல் என்று கலப்பதெல்லாம் ஒரு விதமான தமிழ்ப்பண்பாடு தானுங்க
ராசா காலத்துக்கு முன்னால் சீர்காழி கோவிந்தராசனின் அற்புதக்குரலிலும் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது, சட்டென்று வலையில் தேடி எடுக்க இயலவில்லை.
சரி, இந்தக்குறளுக்கு என்ன பொருள்?
கடவுளை வாழ்த்த மொழியை உவமையாக்குகிறார் வள்ளுவர்!
அகர முதல எழுத்தெல்லாம் :
எல்லா எழுத்துகளுக்கும் முதல் (தொடக்கம்) "அ" என்ற எழுத்து.
ஆதி பகவன் முதற்றே உலகு :
(அது போல), உலகுக்கு முதல் (தொடக்கம்) முதற்கடவுள்!
வெறும் "கடவுள்" (பகவன் / பகவான்) என்று சொல்லாமல் ஆதிக்கடவுள் என்று சொல்ல என்ன காரணம் என்று தெளிவில்லை.
நாட்டில் நிறையக்கடவுள்கள் புழக்கத்தில் இருந்ததால் வேறுபடுத்திக்காட்ட அப்படிச்சொன்னாரா அல்லது வெண்பாவின் தளை சரியாக வருவதற்காக ஒரு சீர் கூட்டினாரா என்பது வள்ளுவருக்கே வெளிச்சம்!
எது எப்படியோ, உலகுக்கு ஒரு தொடக்கம் இருந்தது, ஒரு காரணர் இருந்தார் என்ற மட்டில் வள்ளுவர் தெளிவாக இருந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது!
(குறளோவியம் எழுதியவர் இதற்கு என்ன சொன்னார் என்று நான் தேடவில்லை, அவர் இறை மறுப்பாளர் என்பது தெரிந்ததே)!

Last edited by app_engine on Fri Jul 22, 2016 5:36 pm; edited 3 times in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
(அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து அதிகாரம்)
முதல் மற்றும் இரண்டாம் சொற்றொடர்களை இடம் மாற்றினால் தான் பொருள் தெளிவாய் நமக்குத்தென்படும்.
அதாவது, முதலில் "வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" ; அதற்கு அப்புறம், "கற்றதனால் ஆய பயனென்கொல்"!
இந்த "வாலறிவன்" கொஞ்சம் குழப்பமான சொல், அதனால் அதை ஒரு பெயர்ச்சொல்லாக, "திரு.வாலறிவன்" என்று வைத்துக்கொண்டு மிச்சத்தை முதலில் பார்த்து விடுவோம்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
= திரு. வாலறிவன் அவர்களது நல்ல காலடியைத் தொழ மாட்டார்கள் என்றால்
கற்றதனால் ஆய பயனென்கொல்?
= அவர்கள் கற்றதனால் / படித்ததனால் என்ன பயன்?
வாலறிவன்:
கடவுள் வாழ்த்து என்று தெளிவாக இருப்பதால், இது கடவுள் என்று பொருள் கொள்வது மிக எளிது. அதாவது எல்லாரையும் விடப் பெரிய அறிவாளி இறைவன் என்ற பொருளில்! பல தமிழ்-ஆங்கில சொல்லகராதிகளும் அப்படியே செய்வதை வலையில் பார்க்க முடியும்.
ஆனால், இறை மறுப்பாளர்கள் அப்படி ஒத்துக்கொள்ள மாட்டார்கள் அல்லவா? அவர்கள் இதை மனிதருக்குப் பொருத்தி - மூத்த அறிஞர் என்றெல்லாம் - பொருள் கொள்வதைக்காணலாம்
வாலறிவன் என்ற பெயரில் ட்விட்டர், ப்ளாக்கர் போன்ற இடங்களில் ஆட்களைக்காணலாம். "வால்" = வாலிபம், வலிமை என்றெல்லாம் விக்கிப்பீடியாவில் எழுதி இன்புறுகிறார்கள். தூய்மையான அறிவு வடிவானவன் என்று பெயர்ப்பவர்களும் உண்டு!
எனக்குத்தெரிஞ்ச வால் விலங்குகள், விமானம், பட்டம் இவற்றுக்கு உள்ளது மட்டும் தான் - மற்றும் குறும்பு பிடித்த பசங்களுக்கும்
ஆக, சொல்லின் பொருளைக்குறித்து அளவுக்கு மீறி அளவளாவாமல், இறைவன் என்று எளிதாய் முடித்து விடுகிறேன்
இறைவனின் திருவடிகளை வணங்கித்தொழாதவர்கள் கற்றதனால் ஆன பயன் தான் என்ன?

Last edited by app_engine on Thu Jul 25, 2013 2:56 am; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
வாலறிவன் - சொல்லின் பொருள், சென்னைப்பல்கலைக்கழக நிகண்டுவின் படி :
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.11:1:7693.tamillex

வாலறிவன் vāl-aṟivaṉ
, n. < வால்¹ +. God, as pure intelligence; கடவுள். வாலறிவ னற்றா டொழாஅ ரெனின் (குறள், 2).
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
App ji,
I am amazed by your energy and passion! Super thread and all the best. It should really be a learning experience for me, having learned only few kuRaL's in school. Thanks a lot for creating a thread for this.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: குறள் இன்பம் - #1 - #948
நன்றி வி_எஸ்_ஜி!
நானும் சில குறள்கள் தான் - அதுவும் பள்ளிக்காலத்தில் படித்ததோடு சரி.
தமிழ் மறை, உலகப்பொதுமறை என்றெல்லாம் சொல்லப்படும் இந்த நூலை இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கத்தான் இந்த முயற்சி
ஆனால் இந்த "உலகப்பொதுமறை" என்றெல்லாம் நாம் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம், பாலக்காட்டுக்கு அப்பால் உள்ள (90%) மலையாளிகளுக்கும் கூட "திருக்குறள்" என்றால் என்ன என்று தெரியாது.
அதாவது, சேர நாட்டினர் என்றாலும்.
இந்த அழகில் வேறு மாநிலங்கள், நாடுகள் குறித்தெல்லாம் சொல்ல ஒன்றுமே இல்லை என்பது தான் உண்மை நிலை.

#3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
(அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து அதிகாரம்)
குறிப்பு:
மூல நூலில் (அதாவது, சுவடிகளில்) உள்ளது போல அல்லாமல், சில சொற்களைப் பிரித்து இங்கே எழுதி வருகிறேன். அது போலவே, சீர் பிரிப்பதும் மூல வெண்பாவில் உள்ளது போல் அல்ல. எளிமைக்காக மற்றும் பொருள் புரிய வேண்டி இவ்வாறு செய்வதால் குழப்பம் ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் இது கடுமையான ஆராய்ச்சியாளர்களுக்கானது அல்லவே
வாலறிவான் மாதிரி இந்த 'மலர்மிசை ஏகினான்' பற்றியும் குழப்பம் இருப்பதால், முதலில் அதைப்பெயர்ச்சொல்லாக வைத்து விட்டு மற்ற பொருளைப்பார்த்து விடுவோம்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
திரு.மலர்மிசை ஏகினான் அவர்களது மாண்பு மிக்க காலடிகளைச் சேர்ந்தவர்கள் (அடைந்தவர்கள், அண்டியவர்கள்)
நிலமிசை நீடு வாழ்வார்
நிலத்தின் மீது நீண்டு வாழுவார்கள்
நீடூழி வாழ்தல் என்பது "நீண்ட ஆயுள்" என்றோ, "நிலைத்து நிற்கும் புகழ்" என்றோ அவரவரது நம்பிக்கை சார்ந்து பொருள் கொள்ளப்படலாம். அதில் குழப்பமில்லை.
ஆனால், மலர்மிசை ஏகினான்?
"மலர் மீது நடந்தவன்" என்பது நேரடி சொற்பொருள்!
சில உரைகள் "உள்ளம் எனும் மலர்" என்று உருவகப்படுத்தி, இறைவனை வழிபடுவோரின் மனதைக் குறிப்பிடுகின்றன.
வேறு சில வலைப்பதிவுகள் "அப்படியெல்லாம் சும்மா உருவகப்படுத்தக்கூடாது" என்று சொல்லி, இந்த மலர் என்பது "மலர்ந்த / விரிந்து பரந்த அண்டவெளி" என்று பொருள் கொள்கின்றன!
வள்ளுவர் மனதில் என்ன இருந்தது என்பது அவருக்கே வெளிச்சம். மீண்டும் நாம் இதை இறைவன் என்று சுருக்கி விடுவோம்
இறைவனின் மாண்பு மிக்க காலடிகளைச் சென்று சேர்ந்தவர்கள் நிலத்தில் நீடூழி வாழ்வார்கள்!

#4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

யாண்டும். இடும்பை - இந்த இரு சொற்கள் மட்டும் பழசு, மற்ற எல்லாம் இன்று வரை பேச்சு வழக்கிலும் உள்ளன. இவை இரண்டையும் அகராதியில் பார்த்தால் எளிதில் பொருள் கிடைத்து விடும்.
யாண்டும் = எப்போதும் / என்றும் ; இடும்பை = துன்பம்
நேரடியான பொருள் சொல்வது ஆதலினால் எளிது:

வேண்டும் / வேண்டாம் என்று வேறுபாடு இல்லாதவனின் திருவடி சேர்ந்தவர்களுக்கு
யாண்டும் இடும்பை இல
எப்போதும் / ஒருபோதும் துன்பம் இல்லை
ஆனால் இது நடைமுறையில் என்ன பொருள் படுகிறது என்று பகுப்பது எளிதல்ல
ஏன்?
மறை நூல்கள் / அவற்றின் விளக்கங்கள் எதில் பார்த்தாலும் இறைவனுக்கு இன்னின்னது பிடிக்கும், இதெல்லாம் பிடிக்காது - அதைச்செய், இதைச்செய்யாதே என்று "வேண்டுதல் / வேண்டாமை" இருப்பதை நாம் காண முடியும்.
இறை மறுப்பாளர் நோக்கில் பார்த்தாலும், 100% வேண்டுதல்-வேண்டாமை இல்லாத ஒரு ஆளையும் காண முடியாது.
அப்படியானால், வள்ளுவர் என்ன சும்மா விளையாட்டுக்கு எழுதினாரா? அதுவும் இறை வாழ்த்தில்?
என் கருத்துப்படி, இதை "ராசபார்வை" என்றே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. மனிதரில் நிறம், மொழி, நாடு, இனம் என்று ஒரு விதத்திலும் "இவங்க வேண்டப்பட்டவங்க / அவங்க வேண்டாதவங்க" என்று பாகுபாடு காட்டாத இறைவன் என்று எடுத்துக்கொள்ளுகிறேன்!
யாரையும் ஒதுக்காத இறைவனின் திருவடி சேர்ந்தவர்களுக்கு எப்போதும் துன்பமில்லை!

#5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இதுவும் ரெண்டாவது குறள் போலவே தான், சொல் தொடர்களை மாற்றிப்போட்டுத்தான் பொருள் கொள்ள வேண்டும்.
அதாவது, இப்படி :
இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு
இறைவனின் மெய்ப்பொருளை உணர்ந்து அவன் புகழை நாடி விரும்புவோருக்கு
இருள்சேர் இருவினையும் சேரா
அறியாமை இருளால் வரும் இரு வினைகளும் (நல்வினை, தீவினை) வருவதில்லை
இங்கே வள்ளுவர் நேரடியாகவே இறைவன் என்று சொல்லி விடுவதால், வேறு வழியில்லாமல் கலைஞரும் மாற்றமில்லாமல் பொருள் சொல்லி இருப்பது புன்முறுவல் உண்டாக்குகிறது
மற்றபடி இந்தப்பாடலின் தத்துவத்தில் எனக்கு உடன்பாடில்லை - அதாவது கடவுளை அண்டுவோருக்கு நல்வினை தீவினை ரெண்டும் கிடையாது - முற்றும் துறந்த ஆண்டியாகி விடுவார்கள் என்ற தொனியில் இது இருக்கிறது.
கடவுள் அன்பானவர், தீமையற்றவர், அன்பர்களிடம் நன்மை உணர்த்துபவர் என்ற நம்பிக்கைக்கு இது பொருத்தமற்றது அல்லவா?
என்றாலும், நமது கருத்தும் வள்ளுவர் கருத்தும் ஒத்துப்போக வேண்டும் என்று கட்டாயம் ஒன்றுமில்லையே

#6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்
சிறிது காலத்துக்கு முன் இதை சர்ச் சார்பாளர்கள் சிலர் "அவித்தான்" என்ற சொல்லை முன்கொண்டு இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்த முயன்றதையும், ஒரு திரைப்படம் எடுக்க முனைந்ததையும் செய்திகளில் காண நேர்ந்தது. அந்த முயற்சி, படம் / கிடம் எல்லாம் இப்போது என்ன ஆனது என்று தெரியாது
போகட்டும்! இதன் சொற்பொருள் என்ன என்று முதலில் பார்ப்போம்!
பொறிவாயில் ஐந்தவித்தான்
கண், மூக்கு, செவி, வாய், மெய் (அதாவது "தொடு உணர்வு", முழு உடலிலும் உள்ளது, குறிப்பாக சில உடல் பகுதிகளில் கூடுதல் உள்ளது) என்பவற்றிற்கு உட்படாதவன் (சதை உடல் இல்லாத இறைவன் என்றும் சொல்லலாம்)
பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்
பொய்மை இல்லாத அவனது ஒழுக்க நெறிமுறைகள் விடாது கடைப்பிடிப்பவர்
நீடு வாழ்வார்
நீடூழி (நெடு நாள் அல்லது நெடும்புகழ் - அவரவர் நம்பிக்கையைப்பொறுத்து) வாழ்வார்!
ஏற்கனவே இந்த "நீடு வாழ்வார்" மலர்மிசை ஏகினான் #3 குறளில் கண்டுள்ளோம். மீண்டும் மீண்டும் இந்த சொற்றொடர் வருவது எனக்கு வியப்பளிக்கவில்லை.
ஏன்?
எந்த சமயநூல் படிப்பவருக்கும் எளிதில் தெரிந்த ஒரு பொருள் தான் இது. ஒரு கணக்கில் பார்த்தால், இறைவனுக்கான மனிதனின் தேடலின் ஒரு முக்கிய நோக்கம் இறவாமை அல்லது இறந்த பின் ஏதோ, என்னவோ இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு.
உடல் இறந்தாலும் ஏதோ ஒன்று அதற்குப்பிறகும் வாழ்கிறது, அல்லது வேறு கோட்பாடுகள் - மீண்டும் தோன்றுதல் - வேறொரு உயிரியாகவோ அல்லது அதே ஆளாகவோ, வேறுலகு செல்லுதல், இறைவனோடு ஒன்றாதல் - இப்படியெல்லாம் விதம் விதமாக சமயங்களில் நாம் காண முடியும்.
சுருக்கமாகச்சொன்னால், மனிதனின் இறை நம்பிக்கையில் "நீடித்து வாழ்தல், முடிவில்லா வாழ்வு" குறிப்பிடத்தக்க ஒன்று! (நாம் யாரும் அவ்வளவு எளிதாக சாக விரும்பவதில்லை என்பது மிக எளிதாகக் காணத்தக்க உண்மை).
அதை வள்ளுவரும் மீண்டும் மீண்டும் இறைவாழ்த்தில் உட்படுத்துவதில் என்ன வியப்பு?

#7
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
இதற்குப்பொருள் கொள்வதில் குழப்பம் ஒன்றும் இல்லை - நேரடியாக எழுதி இருக்கிறார்!
தனக்குவமை இல்லாதான்
ஒப்பற்றவன் (இறைவனுக்கு ஈடு இணை யாரும் / எதுவும் இல்லை என்று கொள்ளலாம்)
தாள் சேர்ந்தார்க்கல்லால்
திருவடி சேர்ந்தவர்கள் அல்லாத மற்றோருக்கு
மனக்கவலை மாற்றல் அரிது
மனதிலிருந்து கவலைகளை நீக்க இயலாது (அல்லது நீக்குதல் மிகக்கடினம்)!
இந்த அதிகாரம் முழுவதும் உள்ள குறிப்பிடத்தக்க ஒன்றை இந்தக்குறளில் இன்னும் சிறப்பிக்கிறார் - இறைவன் எல்லோரையும், எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் என்பதே அது.
மீண்டும் மீண்டும் "அடி சேருதல், தாள் சேருதல்" என்று கூறுவதும் "தனக்கு உவமை இல்லாதவன்" என்பதும் பொருத்தமானவையே. அதாவது, இறைவனோடு ஒன்றுதல், கலத்தல் போன்ற கோட்பாடுகளுக்கு வள்ளுவத்தில் (குறைந்த பட்சம் கடவுள் வாழ்த்தில்) இடமில்லை என்று தோன்றுகிறது.
இறைவன் காலில் விழல், அண்டுதல், வழிபடல் என்ற சிந்தனைகள் மூலம் "மனிதராகிய நாம் அவனுக்குக்கீழ்" என்ற கருத்தில் வள்ளுவர் மிகத்தெளிவாக இருந்ததாகவே எனக்குப்படுகிறது.

#8
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அந்தணன் என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகராதி சொல்லும் பொருளைப்பாருங்கள்:
இதை டாக்டர் மு.வ. போன்று நாமும் கடவுள் என்று எளிமையாகப் பொருள் கொண்டு விடுவோமாக
அப்படியாக, இந்தக்குறளின் பொருள் :

அறத்தின் கடலாய் விளங்கும் இறைவன் அடி சேர்ந்தவர்கள் அல்லாத மற்றோருக்கு
பிறவாழி நீந்தல் அரிது
வாழ்வாகிய கடலில் நீச்சல் அடிக்க முடியாது.
இந்தக்குறளிலும் "தாள் சேர்தல்" வருவதில் நமக்கு வியப்பு வர வழியில்லை, ஏற்கனவே அதை மீண்டும் மீண்டும் படித்துப் பக்குவப்பட்டாகி விட்டது
"பிறவாழி" என்பதை சிலர் தம் நம்பிக்கையின் அடிப்படையில் "பிறவி, மறுபிறவி, ஏழ்பிறவி, பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபடல் - அதாவது நீந்திக்கடத்தல்" என்று பொருள் கொள்ளலாம்.
வள்ளுவர் என்ன பிறவாழி பற்றி எழுதினார் என்பது, வழக்கம் போல, அவருக்கே வெளிச்சம்

அந்தணன் antaṇaṉ
, n. < அம் + தண்-மை; or anta, `Vedānta' + அணவு- (திருமுரு. 94-6, உரை). 1. Gracious one; அழகிய தட்பமுடையான். (குறள், 30, உரை.) 2. [M. antaṇan.] Brāhman; பார்ப் பான். நூலே கரகம்... அந்தணர்க்குரிய (தொல். பொ. 625). 3. Sage, recluse; முனிவன். (பிங்.) 4. Brahmā; பிரமன். (பிங்.) 5. Jupiter; வியா ழன். (பரிபா. 11, 7.)
இதை டாக்டர் மு.வ. போன்று நாமும் கடவுள் என்று எளிமையாகப் பொருள் கொண்டு விடுவோமாக
அப்படியாக, இந்தக்குறளின் பொருள் :
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
அறத்தின் கடலாய் விளங்கும் இறைவன் அடி சேர்ந்தவர்கள் அல்லாத மற்றோருக்கு
பிறவாழி நீந்தல் அரிது
வாழ்வாகிய கடலில் நீச்சல் அடிக்க முடியாது.
இந்தக்குறளிலும் "தாள் சேர்தல்" வருவதில் நமக்கு வியப்பு வர வழியில்லை, ஏற்கனவே அதை மீண்டும் மீண்டும் படித்துப் பக்குவப்பட்டாகி விட்டது
"பிறவாழி" என்பதை சிலர் தம் நம்பிக்கையின் அடிப்படையில் "பிறவி, மறுபிறவி, ஏழ்பிறவி, பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபடல் - அதாவது நீந்திக்கடத்தல்" என்று பொருள் கொள்ளலாம்.
வள்ளுவர் என்ன பிறவாழி பற்றி எழுதினார் என்பது, வழக்கம் போல, அவருக்கே வெளிச்சம்
Last edited by app_engine on Wed Jul 31, 2013 4:54 pm; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
இதுவும் ரெண்டாம் குறள் போலவே திருப்பிப்போட்டுப் படிக்க வேண்டியது.
அதாவது, இப்படிப்பொருள் கொள்ள வேண்டும் :
எண்குணத்தான் தாளை வணங்காத் தலை
திரு.எண்குணத்தான் அவர்களது திருவடியை வணங்காதவரின் தலை
கோளில் பொறியின் குணமிலவே
செயல்படாத உடல் உறுப்பு போலத்தான் (எ-டு. கேட்காத காது)
அதாவது இறைவன் திருவடி வணங்காதோருக்குத் தலை இருந்தும் பயனில்லை என்கிறார்.
நல்லது, இப்போது நமது கவனம் "எண்குணத்தான்" என்ற சொல்லின் மீது
இங்கே குறிப்பிடப்படும் இறைவனின் "எண்" குணங்கள் யாவை?
விக்கிப்பீடியாவில் பல விளக்கங்களையும் தொகுத்து விட்டு, அவர்களும் ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள்
(நாம் "எண்ணும்" குணம் தான் இறைவனின் குணம் என்று, அதாவது நாமே இறைவனுக்கு குணம் கொடுத்துக்கலாமாம்! யாருப்பா அது எழுதினது?)
எளிமை என்று புலவர் குழந்தை சொல்லி இருக்கும் விளக்கம் எனக்குப்பிடித்திருக்கிறது.
என்றாலும், இறைவனின் என்ன குணங்களை வள்ளுவர் நினைத்து எழுதினார் என்பது அவருக்கே வெளிச்சம்!

app,
http://kuralamutham.blogspot.in/2009/06/9.html
idhil. en gunathan ku vilakkam iruku................ Iraivanin enn gunangal.
இறைவனின் எண் குணங்கள்: 1. தன்வயத்தன் ஆதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை அறிவு, உணர்வினன் ஆதல் 4.முற்றும் உணர்தல் 5. இயல்பாகவே பாசங்கள் நீங்குதல் 6. பேரருள் உடைமை 7.முடிவிலா ஆற்றல் உடைமை 8.வரம்பு இல் இன்பம் உடைமை.

Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: குறள் இன்பம் - #1 - #948
உஷாக்கா,
சுட்டிக்கு நன்றி
விக்கிப்பீடியாவிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பரிமேலழகர் உரையிலிருந்து தான் இந்த எட்டு. அவர் தம் சைவ நம்பிக்கையின் அடிப்படையில் எல்லாக்குறள்களுக்கும் உரை எழுதி இருப்பதாகச் சொல்லுவோருமுண்டு
சுட்டிக்கு நன்றி
விக்கிப்பீடியாவிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பரிமேலழகர் உரையிலிருந்து தான் இந்த எட்டு. அவர் தம் சைவ நம்பிக்கையின் அடிப்படையில் எல்லாக்குறள்களுக்கும் உரை எழுதி இருப்பதாகச் சொல்லுவோருமுண்டு
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
மேலும், அந்த வலைப்பதிவில் பார்த்தால் சமண நம்பிக்கையின் குணங்கள் இப்படி இருக்கிறது :
வள்ளுவர் சைவரா, பௌத்தரா, சமணரா, இறை மறுப்பாளரா என்றெல்லாம் அங்கங்கே உரையாடல்களை நாம் காண முடியும்.
பொதுவாக, அவைகளுக்குள் எல்லாம் போகாமல் பொருள் காண முயல்கிறேன்
சமண மதத்திலும் கடவுளை எண்குணத்தான் என்கிறார்கள். அவை:
1. முற்றுமுணர்தல் (எல்லையற்ற ஞானம்)2. முடிவிலா ஆற்றல் 3. எல்லையற்ற பார்வை 4. எல்லையற்ற ஒழுங்கு 5. அழியா இயல்பு 6. சார்பின்மை 7.பற்றின்மை 8.அருவத்தன்மை (உருவிலி)
வள்ளுவர் சைவரா, பௌத்தரா, சமணரா, இறை மறுப்பாளரா என்றெல்லாம் அங்கங்கே உரையாடல்களை நாம் காண முடியும்.
பொதுவாக, அவைகளுக்குள் எல்லாம் போகாமல் பொருள் காண முயல்கிறேன்
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
கடவுள் வாழ்த்தின் கடைசிப்பாடல். கிட்டத்தட்ட எட்டாம் பாட்டின் அதே பொருள். "அறவாழி அந்தணன்" இடத்தில் "இறைவன்" - அவ்வளவே
பாடலின் வடிவம் மற்றவற்றில் இருந்து சற்று மாறியது. முதல் பகுதியில் நாமாகவே "சேருபவர்" என்று கூட்டிக்கொண்டு பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.
அப்படியாக,
பிறவிப்பெருங்கடல் நீந்துவர்
இறைவன் திருவடி சேர்வோர் வாழ்வாகிய கடலில் நீந்துவர்!
நீந்தார் இறைவனடி சேராதோர்
அப்படி சேராதவர்கள் நீந்த இயலாது!
இந்தக்குறளில் "ஆழி" மாறி எளிதான சொல் "பெருங்கடல்" என்று வந்திருக்கிறது.
ஆனால் இதிலும் அதே "பிறவி" தான்.
அதை வாழ்வு என்றோ, "மீண்டும் மீண்டும் பிறக்கும் சுழற்சி" என்றோ அவரவர் நம்பிக்கை வைத்து வள்ளுவரைக் கூட்டு சேர்த்துக்கலாம்

#11
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
(அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு அதிகாரம்)
இந்த அதிகாரம் முழுவதுமே, "வான்" என்று சொல்லப்படுவதை "மழை" என்று வைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த அடிப்படையில், முதல் குறளின் பொருள் நேரடியாகவே எளிதில் உணர முடிகிறது :
வானின்று உலகம் வழங்கி வருதலால்
மழை தக்க காலத்துப் பெய்வதால் தான் உலகம் வாழ்கிறது, அதனால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று
மழை அமிழ்தம் என்று உணரத்தக்கது!
சரி, இந்த அமிழ்தம் என்றால் என்ன?
சென்னைப்பல்கலைக்கழக நிகண்டு சொல்லுகிறது "உணவு" என்று
கூட்டத்தில், மணிமேகலையை மேற்கோளாகவும் சொல்லுகிறார்கள். (காயசண்டிகையின் பசியை அடக்கும் அமிழ்த / அமுத சுரபி என்ற பாத்திரம் குறித்த கதையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.)
மழை = உணவு = அமிழ்தம் = அமுதம் = சாப்பாடு

#12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
ஐந்து முறை வரும் ஒரு சொல்லுக்கு என்ன பொருள் என்று அறிந்தால், இந்தக்குறளுக்கு எளிதில் பொருள் கண்டு விட முடியும்.
அந்தச்சொல் "துப்பு"
உமிழ்நீரையோ அல்லது சளியையோ வாய் வழியே "உமிழ்ந்து", தூ தூ என்று வெளியேற்றுவது தான் நமக்குத்தெரிந்த ஒரு "துப்பு"
இன்னொரு துப்பு சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. நிறுவனங்களின் வேலையோடு சேர்ந்தது. (துப்பு அறிதல் = குற்றத்தோடு சேர்ந்த ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தல்)
மேற்கண்ட குறளில் உள்ள துப்பு இவை இரண்டும் அல்ல என்பதை உணர்தல் கடினமல்ல. "மழை = துப்பு ஆயது" என்பதாலும் அதன் சிறப்பு குறித்த குறள் என்பதாலும், இந்தத்துப்பு வேறு ஒன்று என்பது வெளிப்படை.
துப்புக்கெட்டவன் என்று சொல்லும்போது அதற்கு அறிவு என்ற பொருளும், துப்புரவு என்று சொல்லும்போது தூய்மை என்ற பொருளும் உள்ளன என்பது இன்னொரு வேடிக்கை.
ஆனால், இங்கு பொருந்துவது "உணவு" என்ற பொருளில் தான்.
துப்பார் = உணவு உண்போர்
துப்பாய = உணவாகிய
துப்பாக்கி = உணவு உண்டாக்கி
மழை துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி
மழை சாப்பிடுவோருக்கு வேண்டிய சாப்பாடு ஆக்கிக்கொடுப்பதோடு
துப்பார்க்குத் துப்பாய தூஉம்
சாப்பிடுவோர்க்குத் தானும் சாப்பாடாக ஆகி விடுகிறது
மழை, உண்ணுவோருக்கு உரிய பொருட்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஒரு உணவாகி விடுகிறது!

App sir,
I am amazed by your enthusiasm and motivation in keeping so many informative threads active- IR-VM, this and others. I am a keen reader of this thread and request you to keep writing and continuing to enlighten Tamil paamarans like myself. Fabulous work so far . I knew the Thuppaaku thupaaya kural was about rain, but never bothered to find out the actual meaning. Now it is clear as daylight!
Regarding the second kural, any idea about the etymology of Vaal in Vaalarivaan? I am slightly skeptical about the translation of Vaal as God.
P.S: Sorry for typing in English. I have never tried typing in Tamil on the internet and besides my tamil writing is pretty mediocre!

fring151- Posts : 1094
Reputation : 7
Join date : 2013-04-22
Re: குறள் இன்பம் - #1 - #948
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ஃப்ரிங்151
வாலறிவன் - நான் அங்கே குறிப்பிட்டுள்ள படியே பலரும் பல விதத்திலும் ஆய்வு செய்திருக்கிறார்கள்!
சென்னைப்பல்கலைக்கழக அகராதியை நீங்களே பாருங்கள் :
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.3243.0.80.tamillex
மற்றபடி தமிழில் தட்ட எனக்கும் முதலில் எளிதாக இல்லை. புதிய பலகையெல்லாம் படிக்க முயலவில்லை.
கூகிள் "உள்ளீட்டுக்கருவி" ஆங்கிலத்தில் தட்டியால் தமிழில் தருகிறது - அதைப் பயன்படுத்திப் பழகி விட்டேன் இப்போது
http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/
ilayaraja, ilaiyaraajaa, ilaiyaraja, ilaiyaraaja, iLaiyaraja, iLaiyaRaja - எப்படித்தட்டினாலும் இளையராஜா என்றே வரும் - ரொம்ப வசதி
வாலறிவன் - நான் அங்கே குறிப்பிட்டுள்ள படியே பலரும் பல விதத்திலும் ஆய்வு செய்திருக்கிறார்கள்!
சென்னைப்பல்கலைக்கழக அகராதியை நீங்களே பாருங்கள் :
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.3243.0.80.tamillex
மற்றபடி தமிழில் தட்ட எனக்கும் முதலில் எளிதாக இல்லை. புதிய பலகையெல்லாம் படிக்க முயலவில்லை.
கூகிள் "உள்ளீட்டுக்கருவி" ஆங்கிலத்தில் தட்டியால் தமிழில் தருகிறது - அதைப் பயன்படுத்திப் பழகி விட்டேன் இப்போது
http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/
ilayaraja, ilaiyaraajaa, ilaiyaraja, ilaiyaraaja, iLaiyaraja, iLaiyaRaja - எப்படித்தட்டினாலும் இளையராஜா என்றே வரும் - ரொம்ப வசதி
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
எல்லோருக்கும் ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும்:
இந்த இழையின் நோக்கம் குறளை அறிய, புரிய மற்றவர்க்கு உதவுதல் என்பதே அல்ல. (அப்படி ஒரு சில பொழுது நேரிட்டால், அது தற்செயலே அன்றி வேறில்லை)
கொஞ்ச நாட்களாக திரைப்பாடல்களின் வரிகள் மீது அத்துமீறி கவனம் செலுத்தி வருகிறேன் - தெரிந்தோ, தெரியாமலோ ராசா மீதுள்ள பாசத்தால் கங்கை அமரன், வைரமுத்து போன்றோரின் வரிகளை அலசிக்கொண்டு இருக்கிறேன்.
விளைவாக, எனக்குள்ளே இன்னும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கும் தமிழும் மெல்லச்சாகுமோ என்ற ஒரு சின்ன அச்சம்.
அதைப்பிடித்து நிறுத்தி, வாழவைக்கத்தான் குறள் படிக்கும் முயற்சி
(கூட்டத்தில் சிலர் இல்லையென்றால் அதுவும் நடக்காது என்பதால், இந்த இழை - ட்விட்டர் இங்கெல்லாம் பகிர்வு...கூட்டமாய்ப்படிக்கிற உணர்வுக்காக!)
இது தான் உண்மை
ஆதலினால், எனக்கு நன்றி சொல்லாதீர்கள் - ஊக்கம் தரக் கூட்டுச்சேர்வதற்கு உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்

#13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
இது ஒரு எச்சரிக்கை / எதிர்மறைக்குறள்
அதாவது, மழை பெய்யாமல் போனால் என்ன நேரிடும் என்கிற ஒரு முன் அறிவிப்பு!
விண்இன்று பொய்ப்பின்
மழை பெய்யாமல் போய் விட்டால்
விரிநீர் வியனுலகத்து
பரந்த கடலால் சூழப்பட்ட இந்த விரிந்த உலகில்
பசி உள்நின்று உடற்றும்
பசி உள்ளே நிலைத்து நின்று, உயிர்களை வாட்டும்!
தமிழகம் என்றுமே வானம் பார்த்த பூமி தான் என்பதை வள்ளுவர் சொல்லாமல் சொல்கிறார். இந்த அளவுக்கு மழையின்மை குறித்த கவலை ஒரு வேளை கங்கைப்புறத்தில் வாழும் மக்களுக்கு இருக்குமோ தெரியாது.
ஆனால், மழை இல்லாவிட்டால் உயிர்கள் வாடும் என்பது உலகம் முழுதும் காணும் உண்மை தான்! கடல் நீர் நிறைய இருந்தாலும் பலனில்லை என்ற குறிப்பும் இந்தக்குறளில் உள்ளடங்கி இருக்கிறது!
பனிப்பொழிவோ உயிர் ஆறுகளோ இல்லாத தமிழகத்தில் அது கூடுதல் உண்மை என்பது நாம் பலமுறை உணர்ந்ததே வறட்சி உயிர்களை எவ்வளவு வாட்டும் என்பதை நேரடியாகக் கண்டு அறியாதோர் தமிழகத்தில் வெகு சிலரே!

#14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
வரிகளை இடம் மாற்றித்தான் பொருள் கொள்ள வேண்டும். அதாவது,
புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால்
மழை (புயல்) என்னும் வருவாய் (வாரி) வளம் குன்றி விட்டால்
உழவர் ஏரின் உழாஅர்
உழவர்கள் ஏரால் உழ முடியாது. (உழவுத்தொழில் நின்று போய் விடும்)
இதுவும் ஒரு எதிர்மறை (எச்சரிக்கை) வடிவிலான குறளே!
மழையை வருமானம் என்று சொல்லி அழகு படுத்துகிறார்.
அது ஒரு இயற்கை நிகழ்வு, நம்மால் கட்டுப்படுத்த முடியாதது என்றாலும், ஒட்டு மொத்த மனித இனம் செய்யும் சில செயல்கள் (காடு அழிப்பு, மரம் வளர்த்தல் / வெட்டல் போன்றன) மழை மீது சிறிது பாதிப்பு உண்டாக்கத்தான் செய்கின்றன!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum