Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 02, 2014 8:10 pm

#325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் 
கொல்லாமை சூழ்வான் தலை

இந்தக்குறளில் குறிப்பாகத் துறவிகளை இழுக்கிறார் வள்ளுவர் Smile

அவர்களைக் கொஞ்சம் ஏளனம் செய்வதாகவும் படுகிறது (நிலை அஞ்சி = இல்லற வாழ்வில் வரும் சிக்கல்களைப் பார்த்து நடுநடுங்கி Laughing )

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம்
(இல்வாழ்க்கை) நிலைக்கு அஞ்சித் துறவறம் பூண்டோர்களில் எல்லாம் 

கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை
கொலை செய்ய அஞ்சிக் கொல்லாமை எனும் நெறிப்படி வாழ்பவனே உயர்ந்தவன்

மணக்குடவர் இதில் இன்னுமொரு ஏளனமும் சேர்க்கிறார்.

அதாவது, இல்லற வாழ்வில் இருந்து கொண்டே கொல்லாமை நோற்பவன், இந்த விதத்தில் பார்த்தால், கொல்லாமை நோற்கும் துறவியையும் விட உயர்ந்தவன் என்று சுட்டுகிறார் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Dec 05, 2014 10:37 pm

#326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று


இந்தியத்தொன்மைகளில் உள்ள ஒரு நம்பிக்கையான "கூற்றுவன்" (உயிர்களை எடுக்கும் எமன்) இந்தக்குறளில் வருகிறான்.

அந்தச்சொல்லுக்கு விளக்கம் தெரிந்தால் குறளின் அடிப்படைப் பொருள் புரிதல் கடினமல்ல. என்றாலும், அதனுள்ளே இருக்கும் அவா அவ்வளவு வெளிப்படை அல்ல Smile (பின்னர் பார்ப்போம்)

கொல்லாமை மேற்கொண்டொழுகுவான்
கொல்லாமை எனும் ஒழுக்கத்தை மேற்கொண்டு வாழ்பவன்

வாழ்நாள்மேல்
ஆயுள் காலத்தின் மேல்

செல்லாது உயிருண்ணுங் கூற்று
உயிரை உண்ணும் கூற்றுவனின் ஆளுமை செல்லாது!

அதாவது, கொல்லாமை எனும் ஒழுங்கின்படி  வாழ்பவனை எமனால் கொல்லவே முடியாது என்று பொருள் Smile

"எப்படியாவது என்றென்றும் வாழ வேண்டும்" என்ற ஆவல் இதில் வெளிப்படுகிறது அல்லவா? 

(எந்த மனிதனும் ஒரு நாள் இறக்கிறான் என்பதே உண்மை. ஆனால், சாவாமை வேண்டும் என்ற அவா இங்கு உள்நிற்பது என் கண்ணுக்குப் படுகிறது)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 08, 2014 6:04 pm

#327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது 
இன்னுயிர் நீக்கும் வினை

இன்னுயிர் என்ற சொல்லினை மணக்குடவர் மட்டுமே "இனிய உயிர்" என்று அருமையாக அழைக்கிறார். மற்ற உரையாசிரியர்கள் (பரிமேலழகர், மு.வ., மு.க., சா.பா.) எல்லாம் ஏன் அதை விட்டார்கள் என்று புரியவில்லை.

பிறிது என்று வேறொரு சொல் இருப்பதால், இந்தச்சொல்லில் வரும் "இன்" என்பதை "இன்னொரு" என்று பொழிக்கத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.

தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை
பிறிதொன்றின் இனிமையான உயிரை நீக்கும் (கொடிய) செயலை 

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க
தன் உயிரே போவதாக இருந்தாலும் செய்யக்கூடாது!

தன்னுயிர் நீங்குவதை விரும்புவார் யாருமிலர். அதே உயரிய அளவு மதிப்பு மற்ற எல்லா உயிர்களுக்கும் தரவேண்டும் எனும் உயர்ந்த கொள்கை இதில் காணலாம்.

கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை : நமக்கு உயிர் தரும் வல்லமை இல்லை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 11, 2014 1:25 am

#328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் 
கொன்றாகும் ஆக்கங் கடை

கொலை செய்வதால் நன்மையான ஆக்கம் கிட்டும் என்றாலும் சான்றோர் அதை விரும்ப மாட்டார்கள் என்ற கருத்துள்ள குறள்!

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும்
பெரிய அளவில் நன்மையான ஆக்கம் தருவதாக இருந்தாலும்

கொன்றாகும் ஆக்கம் 
அத்தகைய ஆக்கம் உயிரைக் கொல்வதாலேயே வருகிறதென்றால்

சான்றோர்க்குக் கடை
சான்றோர் அதை இழிவானதாகவே கருதுவர்!
(அல்லது, சான்றோர் அதை வேண்டாம் என்றே ஒதுக்கி விடுவர்)

குறிப்பிடத்தக்க குறள் - ஒரு விதத்தில் "கடமையைச் செய்" என்ற கருத்துக்கு மாறானது என்றும் சொல்லலாம்!

"கொல்லுவதால் உடல் மட்டுமே அழியும், உள்ளே இருந்து என்னவோ ஒன்று ("ஆன்மா / ஆத்துமா") எங்கோ பிரிந்து வெளியே போய் வாழும் / பிறவி எடுக்கும்" என்றெல்லாம் இருந்த நம்பிக்கைகளுக்கும் இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 11, 2014 6:37 pm

#329
கொலைவினையராகிய மாக்கள் புலைவினையர் 
புன்மை தெரிவாரகத்து

மாக்கள் = (உணர்வற்ற) மக்கள் , பகுத்தறிவு இல்லாதவர்கள் 

புலை வினை = இழிவான செயல் (புலையர் என்பது இழிவான தொழில் செய்வோர் / கீழ் சாதியினர் என்ற பொருளில் வழங்குவதும் குறிப்பிடத்ததக்கது)

புன்மை என்ற சொல்லும் "இழிவு" என்று பொருள் படுவதே! 

புன்மை தெரிவாரகத்து
இழிவை அறிந்தவர்கள் நடுவில் ("இன்னின்னதெல்லாம் இழிந்த செயல்" என்று தெரிந்தவர்கள் உள்ள அவையில்)

கொலைவினையராகிய மாக்கள்
கொலைச்செயல் செய்யும் அறிவில்லாத மக்கள்

புலைவினையர் 
இழிவான செயல் செய்வோரே! (அல்லது, இழிவானவர்களாக எண்ணப்படுவர்!)


வேறு சில கூட்டங்களில் கொலை செய்வோரை வீரர் / சூரர் என்றெல்லாம் சொன்னாலும், உண்மையான அறிவுள்ளோர் கூட்டத்தில்  இத்தகையோர் இழிந்தோராகவே தீர்க்கப்படுவர் என்று பொருள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 16, 2014 9:55 pm

#330
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்


செயிர் / செயிர்ப்பு என்றால் சினம் / குற்றம் என்றே அகராதிகள் எல்லாம் சொல்லுகின்றன.

இருந்தாலும், இங்கு உரையாசிரியர்கள் எல்லாரும் "செயிர் உடம்பு" என்பதை "நோய் உள்ள உடம்பு" என்றே பெயர்ப்பது சற்று வியப்பாக உள்ளது.

இன்னொரு வியப்பு பல உரையாசிரியர்களும் "முற்பிறவி" என்ற கோட்பாட்டை இந்தக்குறளின் உரையில் கொண்டு வருவது தான் - நேரடியாகப் பார்த்தால் அவ்வாறு இல்லை எனலாம்.

செல்லா வாழ்க்கை என்பது வறுமை நிறைந்த வாழ்க்கை (செல்லாக்காசு நினைவுக்கு வருகிறது)!

செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்
குறை உள்ள உடலோடு வறுமையான தீய வாழ்க்கை நிலையில் இருப்பவர்கள்

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
(முன்பு) உடலில் இருந்து உயிர் நீக்கியவர்கள் (கொல்லும் செயல் புரிந்தவர்கள்) என்பர்!

கொலை செய்தவன் உடல் கெட்டு வறுமையும் தீமையுமான வாழ்வைப் பெறுவான்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 16, 2014 10:20 pm

கொல்லாமை அதிகாரத்தின் கடைசிக்குறள் படிக்கும் நேரத்தில் குழந்தைகள் கொல்லப்பட்ட செய்தி Sad

கொடுமையான வாழ்க்கை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Dec 19, 2014 7:19 pm

#331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை
(அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை அதிகாரம்)

கொல்லாமை அதிகாரத்திலிருந்து ஒரே தாவாகத் தாவி நிலையாமைக்கு வள்ளுவர் செல்லுவது விறுவிறுப்பான கதைத்திருப்பம் போன்ற ஒன்று Smile

துறவறவியல் என்ற கணக்கில் மிகவும் பொருத்தமான ஒரு அதிகாரம்!

குறிப்பிடத்தக்க ஒரு சொல்லாடல் "புல்லறிவு" Laughing

சுருங்கிய அறிவு என்றும் சொல்லலாம். அறியாமை என்றும் சொல்லலாம். 

பொதுவாகவே, புல் என்பது கீழானவற்றையே குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. (புல்லர் / புல்லறிவு). நல்ல கதிருக்கு எதிராக உவமைகளிலும் புல் வருவதை மொழிகளில் காண முடிகிறது. இந்தக்குறளிலும் அப்படியே!

நில்லாதவற்றை நிலையின என்றுணரும்
நிலைத்து நில்லாதவற்றை (எளிதில் அழியும் / காணாமல் போகும் / தீரும் தன்மையுள்ளவற்றை) "நிலையானவை" என்று எண்ணுகின்ற 

புல்லறிவாண்மை கடை
அறியாமை இழிவானது!

நிலையற்றவற்றை ஓடிப்பின் தொடர்வதற்கு எதிரான எச்சரிக்கைகளை இந்த அதிகாரத்தில் நாம் எதிர்பார்க்கலாம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 22, 2014 10:17 pm

#332
கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அது விளிந்தற்று

விளிதல் = இறத்தல் / அழிதல் / குறைதல் என்றெல்லாம் அகராதி சொல்லுகிறது. 

பொருட்செல்வத்தின் நிலையாமையை மிக அழகான உவமையுடன் வள்ளுவர் விளக்கும் குறள்.

இதிலொரு வேடிக்கை என்னவென்றால், ஒரு ஆள் இறப்பதையே அன்றாட மொழியில் "படம் விட்டு" என்று கேரளத்தில் பொதுமக்கள் சொல்வது இந்தக்குறளின் உவமைக்கு ஒத்தது என்பது தான்.

பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே
செல்வம் வந்து சேர்தல் கூத்தாடும் அவையில் வந்து கூட்டம் சேருதல் போல் தான்

போக்கும் அது விளிந்தற்று
இல்லாமல் போவதும் அதே போலத்தான்! (அதாவது, கூத்து முடிந்ததும் கூட்டம் இல்லாமல் போவது போன்றே)

சேருகிற வேகத்தில் இல்லாமலும் போகும் - பொருட்செல்வம் நிலையானதல்ல!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 23, 2014 7:53 pm

#333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
அற்குப ஆங்கே செயல்

அற்கு / அல்கு என்றால் "நிலையாக இருத்தல் / அழியாதிருத்தல்" என்று பொருளாம். 

அப்படியாக, "அற்கா" = நிலையற்ற, "அற்குப" = நிலையான!

மற்றபடி, பொருள் புரிதல் எளிது தான்.

அற்கா இயல்பிற்றுச் செல்வம்
(பொருட்) செல்வம் நிலையற்ற இயல்புடையதாகும்!

அது பெற்றால்
(ஆகவே) அதைப் பெற்றால் / அது கையில் கிடைத்தால் 

அற்குப ஆங்கே செயல்
உடனே நிலையானவற்றை (நன்மையான செயல்களை)ச் செய்து விடல் வேண்டும்!

"பொருள் நிலையற்றது என்றாலும் அதனால் நன்மையான அறங்களைச் செய்ய இயலும், காலம் தாழ்த்தாமல் அவற்றைச் செய்ய வேண்டும்" என்கிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Dec 31, 2014 11:22 pm

#334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின்

அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடுவோரை எள்ளி நகையாடுவார் முன்பு என்னோடு வேலை செய்த அஸ்ஸாம் நண்பர் - "வயதாகிக் கொண்டிருக்கிறதே என்று வருத்தமல்லவா பட வேண்டும்" என்பார் Smile
(எனக்கும் பி.நா. கொண்டாடும் பழக்கம் இல்லை என்பதால் நானும் கூடச்சேர்ந்து சிரிப்பதுண்டு!)

அவரது கருத்தில் உள்ள ஒரு குறள் - வாழ்வின் நிலையாமை காட்ட "நாள் என்பது வாளே" என்று அருமையான உவமையுடன் வருகிறார்!

நாளென ஒன்றுபோற் காட்டி
நாள் என்பது கால அளவுகோல் காட்டுவதோடு (அல்லது, "இந்த நாள் இனிய நாள்" என்பது போல் காட்டுவதோடு)

உயிர் ஈரும் வாளது
உயிரை (மெல்ல மெல்ல) அறுத்துக் கொண்டிருக்கும் வாளே என்பதை

உணர்வார்ப் பெறின்
உணர்வு பெற்றவர்கள் (அறிவுடையோர்) அறிவார்கள்!

நாட்கள் விரைவாய் ஓடி விட்டன என்று உணரும்போது வயதாகி விட்டிருக்கும். 

வாழ்வு நிலையாதது.

மொத்தத்தில், "நன்மை செய்வதில் தாமதம் கூடாது" என்று புரிந்து கொள்ளலாம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 05, 2015 10:47 pm

#335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை 
மேற்சென்று செய்யப்படும்

"இறப்பு எப்படி வரும்" என்று ஒரு சொல்லோவியம் எழுதிக்கொண்டு நிலையா வாழ்வு முடியுமுன் நன்மை செய்வதன் தேவையை வள்ளுவர் தருகிறார்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்
நாவடங்கி (பேச முடியாமல் போய்) விக்குள் (விக்கல்) மேல் வருவதற்கு முன்னமே 
(அதாவது, இறந்து போவதற்கு முன்னேயே)

நல்வினை மேற்சென்று செய்யப்படும்
நல்வினைகளை முனைந்து (அல்லது விரைந்து) செய்ய வேண்டும்!

இறக்கும் பொழுது ஒரு ஆளுக்கு நடக்கும் உடல் சார்ந்த நிகழ்வுகளை விவரிப்பதன் மூலம், அதன் தவிர்க்க இயலா நிலையை நம் மனதில் ஆழ்ந்து பதிகிறது இந்தக்குறள்!

கட்டாயம் ஒரு நாள் இறப்பு வரும். அதன் முன்பே நன்மைகள் செய்வதில் முனைப்பாக இருக்க வேண்டும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 07, 2015 12:37 am

#336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்து இவ்வுலகு

நெருநல் என்றால் "நேற்று" என்று பொருளாம்.

நேற்று இருந்தவன் இன்றில்லை - எளிமையாக நிலையாமையைச் சொல்லும் சொற்றொடர்.

மெல்லிய நகைச்சுவையுடன் இத்தகைய நிலையாமையை வள்ளுவர் "பெருமை" என்று சொல்லுகிறார்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
நேற்று (உயிரோடு) இருந்த ஒருவன் இன்று இல்லை (இறந்து விட்டான்) என்ற

பெருமை உடைத்து இவ்வுலகு
(நிலையாமையாகிய) பெருமை உடையதாகும் இந்த உலகு!

"நிலவுலகில் வாழ்வோருக்கு எதிர்பாராத நேரத்தில் இறப்பு வரும்" என்ற நடைமுறை உண்மையை எடுத்துச்சொல்லும் குறள் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 07, 2015 11:51 pm

#337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
கோடியும் அல்ல பல

இந்தக்குறள் யாரைப்பற்றிச் சொல்லுகிறது என்பதில் உரையாசிரியர்கள் மாறுபடுவதைக் காண முடிகிறது.

சிலர், "அறிவில்லாதவர்கள்" பற்றி இது சொல்லுகிறது என்கின்றனர். 

வேறு சிலர், பொதுவில் உலகத்தார் எல்லோரையும் பற்றிச் சொல்வதாகக் கொள்கிறார்கள்.

அந்தந்த அடிப்படையில், "வாழ்வது அறியார்"  பொழிப்புரை பெறுகிறது Smile

ஒருபொழுதும் வாழ்வது அறியார்
"ஒரு பொழுதாவது வாழ்வோமா" என்று அறியாதவர்கள் (நிலையில்லா இவ்வுலகில் வாழ்பவர்கள்)
அல்லது 
"ஒரு பொழுதாவது வாழ்வின் தன்மை குறித்துச் சிந்திக்காத அறிவிலிகள்"

கோடியும் அல்ல பல கருதுப
ஒரு கோடி அல்ல, பல கோடி குறித்து எண்ணிக்கொண்டிருப்பார்கள்!
(கனவு காண்பார்கள், மனக்கோட்டை கட்டுவார்கள், திட்டமிடுவார்கள்) 

"நேற்று இருந்தவன் இன்று காணவில்லை - என்ற நிலையா உலகில் ஏனப்பா கோடிகள் குறித்த கற்பனை?" என்கிறார் துறவறவியலுக்குப் பொருத்தமாக!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 08, 2015 10:38 pm

#338
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே 
உடம்பொடு உயிரிடை நட்பு

குடம்பை என்ற சொல்லுக்குக் "கூடு" என்றும் "முட்டை" என்றும் இரு பொருட்கள் அகராதியில் காண முடிகிறது.

இரண்டும் இங்கு பொருத்தமே. சொல்லப்போனால் முட்டை மிகப்பொருத்தம், ஏனென்றால் அதிலிருந்து வெளியே வந்த பறவை மீண்டும் உள்ளே செல்லப்போவதில்லை!

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
முட்டை (ஓடு) தனியாகக் கிடக்க, அதை விட்டு விட்டுப் பறவை பறந்து போய் விடுவது போல் தான்
('கூட்டை விட்டுப் பறவை சென்று விடுவது போல்' எனவும் பொழிப்புரை சொல்லலாம்)

உடம்பொடு உயிரிடை நட்பு
உடலோடு உயிருக்கு உள்ள நட்பும்! 
(அதாவது, நிலையானதல்ல!)

உடனே, உயிர் (ஆவி) என்றால் பறவை போல, எங்கோ செல்லும் / சுற்றித்திரியும் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை. 

அது வெறுமென ஒரு உவமை / உருவகம்! அவ்வளவே Smile 

முட்டைக்கும் பறவைக்கும் உள்ள உறவு சிறிது காலம் தான்! நம் வாழ்வும் அவ்வளவு சுருங்கியதே!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 09, 2015 6:05 pm

#339
உறங்குவது போலுஞ்சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு

நிலையாமையின் இயல்பை மட்டும் வள்ளுவர் சொல்லுகிறாரா அல்லது அதோடு சேர்த்து அவரது "மறுபிறவி" நம்பிக்கையையும் தருகிறாரா என்று குழப்பி விடும் குறள் Smile

மற்றபடி, நேரடியான பொருள் கொள்வது எளிதே!

உறங்குவது போலுஞ்சாக்காடு
சாவு என்பது உறங்குவது போன்றது

பிறப்பு உறங்கி விழிப்பது போலும்
(மேலும்) பிறப்பு என்பது உறங்கி விழிப்பது போன்றது.

என் சொந்த நம்பிக்கைப்படி, இறப்பு என்பது ஒரு விதத்தில் உறக்கத்துக்கு இணையானது தான். 

அதற்குப்பின் உணர்வோ, வேலையோ இல்லாத நிலை. 

இனி மேலும் இறந்த ஆள் நல்லதோ கெட்டதோ செய்ய முடியாத, இன்பமோ துன்பமோ உணராத ஒரு ஆழ்ந்த உறக்கம் Smile

ஆக, நம்மால் செய்ய இயலும் நன்மைகளை உடனே (சாவு வருமுன்) செய்வோம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 13, 2015 10:30 pm

#340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் 
துச்சில் இருந்த உயிர்க்கு

துச்சில் = துஞ்சு + இல் (ஒண்டக்கிடைத்த இடம் / உறங்கக்கிடைத்த இடம் / ஒதுக்கிடம் / தங்குமிடம்)

புக்கில் = புகு + இல் (வீடு / குடியிருக்கும் இடம்)

இந்த இரு சொற்களை வைத்து வள்ளுவர் விளையாடும் ஆட்டம்.

அதுவும் "உயிரோடு விளையாடு"கிறார் Smile

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு
உடம்பில் (தற்காலிகமாகத்) தங்கி இருந்த உயிருக்கு

புக்கில் அமைந்தின்று கொல்லோ
(என்றென்றும்) புகுந்திருக்க (வாழ) வீடு அமையவில்லையோ?

'உயிர் இருக்கிறது / உயிர் இல்லை' என்று சொல்லமுடியும்.

உயிர் எங்கிருந்து எப்படி (முதன் முதலில்) வந்தது, இறக்கும் போது எங்கே செல்கிறது என்று யாரால் உறுதியாகக் கூற முடியும்?

"உடலில் உயிர் இருத்தல்" நிலையற்றது என்று மட்டும் தற்போது சொல்லலாம் Smile 
(அதுவும் ஏன் என்று அறிவியலால் சொல்ல இயலாது) Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 14, 2015 7:28 pm

#341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்
(அறத்துப்பால், துறவறவியல், துறவு அதிகாரம்)

துறத்தல் = விட்டு விடுதல், நீங்குதல்

இந்த இயலுக்கு மிகவும் பொருத்தமான ஒரு அதிகாரம்.

என்னவெல்லாம் வருகின்றனவோ, பார்ப்போம் Smile

யாதனின் யாதனின் நீங்கியான்
என்னென்னவற்றில் இருந்தெல்லாம் (ஒருவன்) நீங்குகிறானோ 
(எவற்றை எல்லாம் ஒருவன் விட்டு விடுகிறானோ)

அதனின் அதனின் நோதல் இலன்
அவற்றில் இருந்தெல்லாம் அவனுக்குத் துன்பம் இல்லை!

"ஒரே தலை வலி" என்று சொல்லுபவரிடம், "தலையை நீக்கி விடலாமா?" என்று தீர்வு சொல்லும் சிரிப்பு நினைவுக்கு வருகிறது.

என்றாலும், பொதுவாகப் பார்த்தால் பொருள் மீது (கூடுதல்) பற்று உள்ளவர்களுக்கே அதன் மூலம் வரும் துன்பங்கள் (கூடுதல்) என்பது உண்மை!


Last edited by app_engine on Wed May 24, 2023 5:58 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 15, 2015 8:22 pm

#342
வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டு இயற்பால பல

கொஞ்சம் குழப்பமான குறள் தான் - "விலகிப்போனால் விரும்பி வரும்" என்பது போன்ற பொருளில் வருகிறதோ என்று தோன்றலாம்.

ஆனால் அப்படி அல்ல என்று விளக்கும் கட்டுரைகள் பல காண முடிகிறது.

என்றாலும், நாம் நேரடியான பொருள் மட்டும் பார்ப்போம்!

துறந்தபின் ஈண்டு இயற்பால பல
துறவு பூண்ட பின் இங்கு (இம்மையில்) இயல்பான பல நன்மைகள் உண்டு 

வேண்டின் உண்டாகத் துறக்க
(அத்தகைய நன்மைகள்) உண்டாக வேண்டுமென்றால், துறவு கொள்ளுங்கள்!

இங்கே துறவு என்பது பொருள் மற்றும் இல்லற உறவுகளை விலக்குவதைக் குறிக்கிறது எனக்கருதுகிறேன். 

அவற்றைத் துறந்தால் மட்டுமே வேறு பல நன்மைகளை வாழ்வில் காண முடியும் என்று வள்ளுவர் சொல்ல வருகிறாரோ?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 16, 2015 10:51 pm

#343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

துறவு என்பதற்கான வரையறை இந்தக்குறளில்.

அடல் = கொல்லுதல் 

"செயலற்றுப் போகச் செய்தல்" என்று இந்த இடத்தில் பொருள் கொள்ளலாம்.

மற்றபடி, எளிதான சொற்களும் பொருளுமே!

ஐந்தன் புலத்தை அடல் வேண்டும்
ஐந்து புலன்களையும் (காட்சி, கேள்வி, நுகர்வு, சுவை, தொடல்) செயல் இழக்கச் செய்ய வேண்டும்!
(சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்மை ஆட்கொள்ளல் கூடாது)

வேண்டியவெல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்
வேண்டியன (விரும்பியவை) எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக விட்டுவிட வேண்டும்!

விருப்புகள் ஒன்றும் கூடாது என்று சுருக்கம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 21, 2015 12:11 am

#344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை 
மயலாகும் மற்றும் பெயர்த்து

மயல் என்றால் மயக்கம் என்றும் பைத்தியம் என்றும் பொருள் காண்கிறோம்.

கொஞ்சநஞ்சம் உடைமை இருந்தாலும் துறவு நிலையிலிருந்து மயங்கி விழுந்து விடுவோம். ஆதலால், முற்றுமாகத் துறக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லும் குறள்.

"கொஞ்சம் புளித்த மாவு எல்லாவற்றையும் புளிக்க வைத்து விடும்" என்ற உவமைக்கு ஒப்பான செய்யுள்.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை
நோன்பிற்கு (அதாவது துறவறத்துக்கு) இயல்பு என்னவென்றால் ஒன்றும் இல்லாதிருத்தல்

உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து
உடைமை (அப்படி எதாவது இருத்தல்), மயங்கி மீண்டும் (துறவை விட்டு) வீழ வழியாகும்!

முற்றிலும் துறத்தலே சரியான வழி என்ற கருத்து எவ்வகையான துறவுக்கும் பொருந்தும்Smile

கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் புகைபிடித்தலை நிறுத்த நினைப்பவரை விட, ஒரேயடியாக முற்றிலும் நிறுத்துபவரே நல்ல வெற்றியடைவதை பலருடைய வாழ்வில் கண்டிருக்கிறேன்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 21, 2015 8:19 pm

#345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் 
உற்றார்க்கு உடம்பும் மிகை

வள்ளுவருக்கு மறுபிறவியில் உள்ள நம்பிக்கை இங்கு மீண்டும் வெளிப்படுவது போல் தெரிகிறது. 
("பிறப்பறுக்கல்" = "இன்னொரு பிறவி இல்லாத படி செய்தல்" என்று கொள்ளலாம்).

பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை
"பிறப்பினைத் துறந்து விடுதல்" எனும் நிலையில் உற்றிருப்பவர்களுக்கு உடம்பே மிகை (அதாவது, தேவையற்ற தொந்தரவு)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்
(அப்படி இருக்கும்போது) மற்ற தொடர்புகள் (பற்றுகள்) எதற்காக?

"உடலே மிகுதி" என்றிருக்க வேண்டிய துறவு நிலையில் அதற்கும் மேலே பற்றுகள் எதற்காக என்று கேட்கிறார் (அதாவது பொருட்கள், உயிரிகள் போன்றவற்றின் மீதான விருப்பங்கள்) 

சரியான கேள்வி தான் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 22, 2015 10:05 pm

#346
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு 
உயர்ந்த உலகம் புகும்

துறப்பதும் அகந்தையும் ஒன்றுக்கொன்று எதிரிகள் என்று சொல்லும் குறள்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
"நான், என்னுடையது" என்ற செருக்கு (பெருமை / மயக்கம்) இல்லாமல் துறக்கின்றவன் 

வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்
வானோர்க்கும் மேலான உயர்ந்த உலகில் புகுவான்!
(தேவர்களை விடவும் பெரும்புகழ் அடைவான்)

"வான்" என்பதே உயரத்தைக் குறிப்பிடும் சொல் என்ற கருத்தில் பார்க்கும் போது, "வானோர்க்கு உயர்ந்த உலகம்" உயர்வு நவிற்சி அணி என்று கொள்ளலாம் Smile

அவ்வளவு உயரம் அடைய வேண்டுமென்றால், சின்னச்சின்ன செருக்குகளைத் துறக்க வேண்டும் என்று சுருக்கம்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 23, 2015 8:52 pm

#347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் 
பற்றி விடாஅ தவர்க்கு

புத்தர் சொல்லிக்கொடுத்த முதல் கொள்கையாகப் பள்ளிக்காலத்தில் படித்தது:
"ஆசையே துன்பத்துக்குக் காரணம்".

அந்தக்கருத்தை சிலேடை மற்றும் அளபடை சேர்த்து வள்ளுவர் சொல்லும் குறள் Smile

பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு
பற்று (விருப்பம்) என்பதைப் பிடித்துக்கொண்டு விடாமல் இருப்பவர்களுக்கு 

பற்றி விடாஅ இடும்பைகள்
துன்பங்கள் விடாமல் பிடித்துக்கொள்ளும்!

பற்று என்ற சொல் விருப்பம் / ஆவல் / ஆசை என்ற பெயர்ச்சொல்லாகவும், "(இறுகப்)பிடித்துக்கொள்ளுதல்" என்ற வினைச்சொல்லாகவும் இங்கே சிலேடை நயத்தில் வருகிறது.

'விருப்பம் உள்ள வரை துன்பமும் தொடரும்' என்ற பொது உண்மை - குறிப்பாகப் பணம் / பொருள் மீதுள்ள தேடல் தரும் சிக்கல்கள் , 'அவை துறவிகளுக்கு வேண்டாமே' என்ற அறிவுரை - இந்தக்குறளில் தெளிவாகவே இருக்கிறது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 26, 2015 7:23 pm

#348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி 
வலைப்பட்டார் மற்றையவர்

"தீர" என்ற சொல் இங்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

"முற்றும்" என்ற பொருளில் அழகாக வரும் சொல்! ("தீர்ந்து போச்சு" என்று அன்றாடம் சொல் வழக்கில் பயன்படுத்தும் சொல் தான். என்றாலும், மலையாளிகள் போல் இந்தச்சொல்லை "முழுவதும்" என்ற பொருளில் நாம் அடிக்கடி பயன்படுத்துவதில்லை. "தீர்த்தும்" என்று இதே பொருளில் மலையாளத்தில் பயன்படுத்துவது அன்றாட வழக்கு).

தீரத் துறந்தார் தலைப்பட்டார் 
முற்றும் துறந்தவர்கள் உயர்ந்த நிலையை அடைந்திடுவார்கள் 

மற்றையவர் மயங்கி வலைப்பட்டார்
மற்றவர்களோ (அதாவது துறக்காதவர்கள்) நிலையிழந்து வலையில் சிக்கியவர்களே!

இங்கே வலை என்பதை ("மயங்கி" என்பதன் அடிப்படையில்)  அறியாமை என்று சில உரைகளும் (நம்பிக்கையின் அடிப்படையில்) "பிறவி" என்று வேறு சில உரைகளும் பெயர்க்கின்றன.

அவரவர்க்கு வேண்டிய விதத்தில் விளக்கிக் கொள்ளும் வாய்ப்பைத் தந்த வள்ளுவர் என்ன வலையை நினைத்தார் என்று எனக்குத் தெரியாது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 15 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum