Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

IR-Pulamaippiththan combo songs

4 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 16, 2021 10:06 pm

புலவரின் மறைவுக்கு இரங்கல் எழுதிய கட்டுரைகள் கீச்சுக்கள் செய்திகள் போன்றவற்றில் இந்தச்சிறப்பான பாடலை யாரும் குறிப்பிட்டிருந்தார்களா என்று தெரியவில்லை.

தமிழ்த்திரையில் பானுப்பிரியா முதன்முதல் தோன்றிய மெல்லப்பேசுங்கள் படப்பாடல். இந்தப்படத்தைத் தயாரித்தவர் பாரதிராஜா. இயக்கம் சந்தானபாரதி - பி.வாசு இரட்டையர். தீபன் - உமா ரமணன் இணைந்து பாடி மிகவும் புகழ் பெற்ற இரண்டாவது பாடல். (முதலில் வந்தது பூங்கதவே தாழ் திறவாய் என்று பலருக்கும் தெரியும்).

எளிமையான வரிகள் என்றாலும் மிகச்சிறப்பான உவமைகள் / உருவங்கங்கள் மற்றும் விவரிப்புகள் கொண்டு சிறப்பித்திருக்கிறார் புலவர்! காணொளி காணாவிட்டாலும் ஒரு இனிய இல்லத்துக்குள் நடக்கும் அன்பான உரையாடலை இந்த வரிகளே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன!

சிறப்பு!

செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக்கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
காதல் மணம் காண்போம்
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்

அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம்
என்றென்றும் எங்களின் கைகளில்


https://www.youtube.com/watch?v=U2_p6_BoYHI


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Sep 17, 2021 9:56 pm

புதிய நூற்றாண்டில் வந்த ராசா இசைத்தொகுப்புகளில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று "காசி".

மலையாளப்பட இயக்குனர் அங்கே வெற்றி பெற்ற தனது படத்தைத் தமிழில் விக்ரம் நடிக்க மீளுருவம் செய்தார். நாயகன் பார்வையற்ற பாடகன் என்பதால் இசைக்கு முதலிடம். சிறப்பான ஆறு பாட்டுக்கள் ராசா தந்தார் - எல்லாமே ஹரிஹரன் குரலில்.

அவற்றுள் இரண்டு புலவர் எழுதியவை. இரண்டுமே எனக்கு மிகப்பிடித்தவை!

வண்டியில் எக்கச்சக்க முறை இவை வந்த காலத்தில் ஒலித்திருக்கின்றன. என்றாலும் இந்த இசைத்தொகுப்பின் பாடல்கள் கேட்டால் மனச்சோர்வு வருமென்ற அச்சம் இருப்பதால் அண்மைக்காலங்களில் வேண்டிக்கேட்பதில்லை.

இந்த இழைக்காக இரண்டு பாடல்களையும் இன்று மீண்டும் ஒலிக்கவிட்டுப் பாடல் வரிகளின் மீது அக்கறையோடு கேட்கிறேன் Smile

மிகச்சிறப்பு!

https://www.youtube.com/watch?v=WI16dMXXhb0



https://www.youtube.com/watch?v=P1P4JUlXTB8



மானுத்தோலு கொண்டு மஞ்சக்கடம்பு கொண்டு மனுசன் கண்டு தந்த கொட்டுமேளம்
காட்டுல நாட்டுல பாட்டுல மங்களச்சேதி சொல்ல வரும் கொட்டுமேளம்
இந்த மேளத்துச் சத்தத்தைக் கேட்ட மனசுக துள்ளாதோ?
தினம் துக்கத்தில் வாடுற ஏழைக்கு இன்பத்தத் தானாத்தேனா ஊத்தாதோ?

சின்னஞ்சிறுசுக கண்ணாளம்  கட்டிக்க வேணுமம்மா நல்ல கொட்டுமேளம்
வண்ண மொளப்பாரி தன்னச் சுமந்திட்டுப் போகையிலும் வேணும் கொட்டுமேளம்
எந்தெந்தக்கூட்டணி ஓட்டுக்குப் போனாலும் தாளம் போடும் இந்தக் கொட்டுமேளம்
நாலுபேர் தோள்களில் போகிற ஆளுக்கும் கொட்டணும் கொட்டணும் கொட்டுமேளம்
சாதி வேதம் மேளம் பாக்காது ஊரு பேரு தாளம் பாக்காது
தட்டத்தட்டத் தாளமும் நிக்கும் வாழ்க்கையோடு ஒட்டியே நிக்கும்

கொட்டுச்சத்தம் கேட்டுக் கூட்டங்கூடி வந்தா மேளத்துக்கு அங்க வேலை உண்டு
கூட்டம் கலைஞ்சதும் ஆட்டம் முடிஞ்சதும் வீட்டுக்குள்ளே ஒரு மூலை உண்டு
கூட்டிக்கழிச்சு நான் பாக்கிற வேளையில் நானும் இங்கே ஒரு கொட்டுமேளம்
பாட்டுப்படிக்கிறேன் கூட்டம் ரசிக்குது அந்தச்சந்தோஷமும் கொஞ்ச நேரம்
கால் நகத்தில் கண்கள் இருக்கு நான் நடக்கப் பாதை இருக்கு
ஞானக்கண்ணு உள்ள இருக்கு நம்பிக்க தான் சொந்தம் எனக்கு


கீழே உள்ளது போன்ற முகத்தில் அறையும் கருத்துக்களும், இப்படிப்பட்டோருக்கு நம்மால் ஓரளவுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதே என்ற குற்ற உணர்வும் தான் நம்மை எளிதில் மனச்சோர்வில் தள்ளிவிட வல்லது:

கூட்டிக்கழிச்சு நான் பாக்கிற வேளையில் நானும் இங்கே ஒரு கொட்டுமேளம்
பாட்டுப்படிக்கிறேன் கூட்டம் ரசிக்குது அந்தச்சந்தோஷமும் கொஞ்ச நேரம்


Sad
Sad

https://www.youtube.com/watch?v=ADBYByu9uLo



ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும் ஸ்வர்ணக்குயிலே
ஆடும் நெஞ்சில் ஆடும் சின்னக்கண்ணம்மா கண்ணம்மா
ஆடி வெள்ளம் போலப் பொங்கிப் பாடலாமா?
கூடு கட்டி நெஞ்சில் வாழும் பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சிக்கொஞ்சிக் கொஞ்சம் வந்து பேசலாமா?
உன்னைத்தானே பாட்டில் வெச்சேன் நெஞ்சுக்குள்ள பூட்டி வெச்சேன்

வெள்ளிக்கொலுசு ரெண்டு துள்ளிக்குலுங்க உந்தன் காலடியின் ஓச மட்டும் கேக்கும்
நெஞ்சில் வரைஞ்சு வெச்ச உந்தன் அழகைக்கண்ணில் பாத்திருக்க ஆசை எல்லாம் தீரும்
வானின் வடிவம் என்ன மண்ணின் வனப்பும் என்ன நீ கொடுத்த கண்ணைக் கொண்டு பார்ப்பேன்
காடு மலைகள் எங்கும் ஓடிக்குதிச்சு வந்து ஓய்வெடுக்க உன் மடியைக்கேட்பேன்
என் வானிலே நான் பார்க்கும் பொன் வசந்தகாலம்
நீ தானம்மா நான் பாடும் என் உயிரின் ராகம்
கண்மணியின் பாவை எனக் கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னைத் தானே பாட்டில் வெச்சேன் நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்

கண்கள் இரண்டு அதில் ஒன்ன எனக்குத் தந்த உன் கடன எப்படி நான் தீர்ப்பேன்
ரெண்டு குரல் இருந்தா ஒன்ன உனக்குத் தந்து நானும் உன்னைப் பாடச்சொல்லிக் கேட்பேன்
வெள்ளி நிலவில் கூட உள்ள களங்கம் பத்தி ஊரு சொல்லக் கேட்டதுண்டு மானே
கள்ளம் கபடம் ஏதும் இல்லாக் குழந்தை என்று துள்ளி வந்த கொல்லி மலைத் தேனே
நேற்று வரைக்கும் நான் பார்த்த கற்பனைகள் யாவும்
உண்மை எனவே நான் காணக் கண்ணில் வந்த ஒளியே
கண்மணியின் பாவை எனக் கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னைத் தானே பாட்டில் வெச்சேன் நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்


Last edited by app_engine on Sat Sep 18, 2021 8:08 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Sat Sep 18, 2021 7:58 pm

Rajavin sandhosha padalgal epadi manadhuku nimmadhiyaga irukiradho, adhe alavirku soga padalgal manadhai migavum thaakum.

Rajavin soga padalgal kaetka manadhil dhairiyam vendum. enaku andha dhairiyam kidaiyadhu. apadi paatai kaetka nerndhalum,
andha kadhaa paathirathin sogathaiyae manam muzhudhum niraindhu irukum.vaazhkai mel oru bayame varum enaku.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Sep 20, 2021 8:21 pm

திருக்குறளில் அங்கங்கே "பொது மகளிர்" குறித்து வருவதுண்டு. வரைவின் மகளிர் என்று ஒரு முழு அதிகாரம் இருக்கிறது (911-920).
https://ilayaraja.forumms.net/t118p950-1-948#24092

அப்படிப்பட்ட இருவர் பாடும் பாட்டு - மும்பை சூழலில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்தது போன்ற உணர்வில் இசையும் பாட்டும் வேண்டும் என்று இயக்குனர் (அல்லது கமல்) விரும்பியிருக்கிறார்.

ராசா அதற்கு ஐம்பதுகளில் வந்த பாடல்கள் போன்ற இசைக்கோர்ப்பும் மெட்டும் கொடுத்திருக்கிறார். 
(மெனக்கெட்டு ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி ஆகியோரைப் பாட வைத்திருக்கிறார்கள்).

புலமைப்பித்தன் வரிகள் பொதுமகளிரின் மனநிலையைக் கற்பனை செய்து எழுதியதா அல்லது அவர்களிடம் நேர்காணல் நடத்தி எழுதியதா என்று தெரியவில்லை.  

கற்பனைக்குப் பஞ்சமில்லை. (எடுத்துக்காட்டாக உறக்கமின்றிச் செலவழிக்கும் "வைகுண்ட ஏகாதசி"யை இந்த மகளிரின் முழு இரவு "சேவை"க்கு ஒப்பிடுவது - இது போல இன்னும் பல உவமைகள்).

https://www.youtube.com/watch?v=yw3EFXI3mPM



நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளிப்பருகும் கம்பரசம் நான்


எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
வந்தது எல்லாம் போவது தானே? சந்திரன் கூடத் தேய்வது தானே?
காயம் என்றால் தேகம் தானே? உண்மை இங்கே கண்டேன் நானே
காலம் நேரம் போகும் வா!


கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது?
அலை கரையைக்கடந்து எப்பொழுது ஏறியது?
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்? யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்!
மீட்டும் கையில் நானோர் வீணை, வானில் வைரம் மின்னும் வேளை
காலம் நேரம் போகும் வா!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Sep 20, 2021 11:18 pm

திரையில் இந்தப்பாட்டை முதன்முறை பார்த்தபோது என்னை மிகவும் கவர்ந்தது ஒளிப்பதிவு தான் (பிசி ஸ்ரீராம் - மிகச்சிறப்பாக இருக்கும்! தகுதியான படைப்புகளுக்கும் சிலநேரங்களில் விருதுகள் கிடைப்பதுண்டு - அப்படிப்பட்ட ஒன்று அவருக்குக்கிடைத்தது என்பது என் கருத்து).

70 / 80-களில் வந்த இந்திப்பாடல்கள் போன்ற இசை வடிவம் (உயர் அலைவரிசை வயலின் கீச்சுக்கள் எல்லாம் அப்படியே மும்பை ஒலி) - எனக்கு ஓரளவுக்கு ஒவ்வாமை என்றாலும் மெட்டின் தனித்தன்மை ராசா இசை என்று அடையாளம் காட்டும்.  

ஏகப்பட்ட எம்ஜிஆர் பாடல்களுக்கு வரிகள் எழுதிய புலவருக்கு இந்தப்பாட்டெல்லாம் கடினமே இல்லை ("தண்ணி பட்ட பாடு") - சரசரவென்று எழுதித் தள்ளி இருப்பார் என்று நினைக்கிறேன். 

"நீர் நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது" - இப்படிப்பட்ட நாயக விவரிப்புகள் அவருக்குப் புதிதல்லவே. 

இந்தப்படம் வந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்திருந்தால், சில மாதங்களில் (எம்ஜிஆர் மறைந்த பின்) ஒருவேளை கமல் முதல்வர் இருக்கைக்குப் போட்டி போட்டிருந்திருக்கலாம் Wink 

முப்பதாண்டுகளுக்குப்பின் தற்போது செய்யும் முயற்சியெல்லாம் வேண்டியிருந்திருக்காது! Laughing

https://www.youtube.com/watch?v=cWVeWTu0Ppw



அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம் 
எங்களுக்கும் காலம் வந்ததெனப் பாடும் பெருநாளாம் 
இடி கொட்டும் மேளம் அது கொட்டும் நேரம் எங்க தெரு எங்கும் தேரோடும்
தேரோடும் திருநாளாகும் நாள்தோறும் இங்கு ஊர்கோலம்


நீர் நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
மாடங்கள் கலைக்கூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையின் வேர்கள் நாங்களே
தியாகம் என்னும் ஜோதியின் தீபம் நாங்களே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்


பால் குடங்கள் தேன் குடங்கள் நூறு வந்தது
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
பூவாரம் இனிச் சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களியாட்டங்கள் என்னென்ன இனிக் காட்டுங்கள்
வீடுதோறும் மங்களம் இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Sep 20, 2021 11:48 pm

ரகுபதி ராகவ ராஜாராம் பாடலின் மெட்டை மனதில் கொண்டு (ஒரு வேளை அதே ராகத்தில்) இசையமைத்ததாக ராசா சொன்னதும் புலவர் அதற்கேற்ற வண்ணம் (அதாவது பெண்ணுடல் குறித்த விவரங்களைத் தவிர்த்து) எழுதியதாக மனோ நேர்காணலில் இந்தப்பாடலைக் குறித்துச் சொல்லி இருந்தார்.

மிக அழகான கவிதை விளைந்ததில் நம்மெல்லோருக்கும் மகிழ்ச்சி!

 சிறப்பான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்தப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை :

- கடற்கரைக்காற்றே வழியை விடு! 
- மணல்வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே!

இன்று கண்ட வேறொரு காணொளியில் ராசா கவிஞர் வாலியிடம் "துப்பார்க்குத் துப்பாய" குறளைச்சொல்லி அதற்கேற்ற மெட்டைப்பாடிக்காட்டியதும் அவர் (ஷேக்ஸ்பியர் கவிதை வரிகளைத் தமிழில்) அழகாக மெட்டுக்கேற்ப "மல்லிகைக்கு என்ன பெயர் வைத்தாலும் மணம் சிறப்பாகத்தானே இருக்கும்" எழுதின கதையைச் சொன்னார்.  
(பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லி வாசம்)

இப்படி சூழலுக்கேற்ற அழகியல் கொண்டு வருவதில் வாலி போன்றே புலவர் புலமைப்பித்தன் யாருக்கும் சளைத்தவர் அல்ல!

நீ ஒரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்


வானம்பாடிப்பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனும் ஒரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்!


பூவைச்சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூடத் தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக்காற்றே வழியை விடு! தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே!
தினமும் பயணம் தொடரட்டுமே!

https://www.youtube.com/watch?v=P7DhhNgdShc


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  BC Tue Sep 21, 2021 1:32 am

app_engine wrote:
https://www.youtube.com/watch?v=cWVeWTu0Ppw


MOST underrated song in the fantastic, timeless album.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 21, 2021 8:29 pm

படத்தின் காட்சிக்கேற்பத்தான் திரைப்பாடல்கள் எழுதப்படுகின்றன. அவ்வாறாக, பாடலாசிரியர் சூழலுக்கு மட்டுமே (பொதுவாக) எழுத முடியும். தமிழில் சொற்களுக்குப்பஞ்சமில்லை என்றாலும், வாய்க்கு வந்ததை எல்லாம் சூழலுக்குப் பொருந்தாமல் சொல்ல முடியாது அல்லவா?

போதாக்குறைக்கு ராசா போன்ற இசையைப்பாளர்கள் மெட்டையும் (பொதுவாக) முன்னமே உருவாக்கி விடுவார்கள். (சொல்லப்போனால் சில நேரங்களில் பல்லவி முதல் வரியையும் அவரே கொடுப்பதுண்டு என்று கேள்வி. ஒப்பீட்டளவில், இசையமைப்பாளருக்குத் தடைகள் குறைவு. மெட்டு மட்டுமல்ல, இடையிசைகளில் மனம்போலக் கற்பனைகளை அவிழ்த்து விடமுடியும்.)

இவ்வாறாகக் கடினமான வரையறைகளுக்குள் எழுதப்பட்டாலும், பல திரைப்பாடல்கள் காவிய அளவுக்குச் சிறப்பு அடைந்தவை என்பது மொழியின் வளத்துக்கும் கவிகளின் திறனுக்கும் சான்றுகள். (தமிழ் ஒரு இசை மொழி என்பதும் பழங்கவிதைகளும் கடினமான இலக்கணத்துக்கு உட்பட்டு ஓசை / இசை நயத்தோடு எழுதப்பட்டன என்பதும் அறிந்ததே).

அப்படிப்பட்ட ஒரு பாடல் இது!

சூழலுக்கு அவ்வளவு சிறப்பாகப் பொருந்தி வரும் மூன்று வெவ்வேறு பல்லவி வரிகளைக் கவிஞர் எழுதியிருப்பார். தெம்மாங்கு மெட்டில் அவற்றைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு மெய் சிலிர்க்கும்!

வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன?
பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ?


கள்ள மனம் முள்ளுத்தச்சுக் கண்ணீரில் மூழ்குதடி!
வெக்கத்திலே நான் அழுக துக்கத்திலே நீ அழுக
கரைசேரும் காலம் இப்போ!


செங்கரும்ப நான் மறந்து வேலி முள்ள ஏன் கடிச்சேன்?
பூவுக்குள்ளும் நாகம் உண்டு சாமிக்குந்தான் வீடு ரெண்டு!
கள்ளையும் பாலா நீ நினைச்சே, முள்ளையும் பூவா நீ முடிச்ச!
போனதெல்லாம் போகட்டுங்க யாருமிங்கே ராமனில்லே


வெள்ளை மனம் உள்ள மச்சான் விளையாடி ஓஞ்சு வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
எந்நாளும் சேர்ந்திருப்பேன்


கூடுவிட்டுப் போனகிளி ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா
ஜோடி வந்து சேர்ந்த கிளி கோடி சுகம் காணுதம்மா
சிப்பியப்போல நானிருந்து சிந்திய தேனச் சேத்து வச்சேன்
எங்குணத்தில் பையன் வந்தால் இன்னும் கொஞ்சம் தொல்லையடி

https://www.youtube.com/watch?v=gsjyqF8j7BA


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 21, 2021 9:02 pm

https://www.youtube.com/watch?v=dUqVwkXsJCo



ஒருவரது பெரும் வெற்றி எப்படியெல்லாம் அமைப்பை அசைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இளையராஜா.

மிகவும் ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவரது மாபெரும் வெற்றியின் விளைவு - ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே அவரது பெயரில் திரைப்படம் எடுக்குமளவுக்குப் போனது. 

இதற்கான சான்று இப்போது இந்த இசைத்தட்டும் பாட்டுக்களும் Smile 

படம் வெளியிடப்படாததால் இந்தப்பாடல்களைத் தேநீர்க்கடைகள், இசைத்தட்டுக்கடைகள் தவிர்த்து இலங்கை வானொலியில் மட்டுமே அக்காலத்தில் கேட்டோம். இப்போது வலையில் வேண்டும்போதெல்லாம் கேட்கத் தொழில்நுட்பம் உதவுகிறது.

இந்தப்பாடலிலும்  தலைவனுக்கென்று ஒரு பல்லவி - தலைவிக்கு வேறொன்று கவிஞர் எழுதி இருக்கிறார். சிறப்பான கருவியிசை கொண்டு ராசா சிறப்பித்த பாட்டு!

மாலைச்செவ்வானம் உன் கோலம் தானோ?
வானம் அது நாளும் எழுதும் ஓவியம் உன்னெழில் ஆகுமோ?


நாளை பூமாலை என் தோளில் ஆடும்
அன்பும் தமிழ்ப்பண்பும் தலைவன் உன்னிடம் என்னையே தந்தது


வைகை என்னும் நதிக்கரையில் 
மங்கை காதல் நீராடுவாள்
இங்கும் ஆசை நதிக் கரையில் 
என்றும் உன்னை நான் தேடுவேன்
நதி நீயே கடல் நானே
மன்மத சங்கமம் இங்கே


தேவன் வாழும் ஆலயங்கள் 
தேடிப்போவாள் கண்ணாளனை
நானும் வந்தேன் திருக்கோயில் 
நாளும் காதல் ஆராதனை
மணி ஓசை இதழ் ஓசை
மங்கலக் காவிய நாதம்


Last edited by app_engine on Wed Sep 22, 2021 5:51 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 21, 2021 11:41 pm

ராசா குரலில் வந்த மற்றொரு புலமைப்பித்தன் பாடலுக்கு வேறொரு விந்தையான பின்னணி உண்டு.

சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா என்ற படத்தில் இந்த ஒரு பாட்டு மட்டும் ராசா இசை. மற்ற பாடல்களும் பின்னணியும் எல்லாம் சங்கர் கணேஷ். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. 

அதாவது, ராசாவின் ஒரு பாடலை மட்டும் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தினார்களா அல்லது ராசா முதலில் தொடங்கி அதற்குப்பின் நேரமின்மையால் மற்றவர்கள் இசையமைத்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. 

வேறொரு விந்தை இந்தச் சிறப்பான மெட்டின் பயன்பாடு இந்த ஒரு பாட்டோடு நிற்கவில்லை என்பது. (மலையாள ஒளங்களின் தும்பி வா உட்பட இந்த மெட்டு நிறையப்பாடல்கள் தந்திருக்கிறது).

கவிதை என்று பார்த்தால் இது "நீ ஒரு காதல் சங்கீதம்" பாடலுக்கு நேர் எதிர். அதாவது, முழுவதுமே கிட்டத்தட்ட "அங்கம்" பற்றிய கவிதை. எல்லோருக்கும் புரியும் வரிகள் என்பதால் கூடுதல் விளக்கம் தேவையில்லை Smile Embarassed 

(தமிழ்ச்)சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது?
சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது?


கையென்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ?
கால் என்றே செவ்வாழை இணைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ?
மை கொஞ்சம் பொய் கொஞ்சம் 
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ்ச்சங்கத்தில்


அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா கொஞ்சத்தான்
கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் மூவாத உயர் தமிழ்ச்சங்கத்தில்


ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது?
நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும் மெய் தொட்டும்
சாமத்தில் தூங்காத விழியின் சந்திப்பில் என்னென்ன நயம்!

https://www.youtube.com/watch?v=X_vTebE4fFY



https://www.youtube.com/watch?v=GJKky4yWNLQ


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha, IsaiRasigan and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 22, 2021 6:22 pm

செவ்வியல் இசைப்பாடல்கள் நிறைய ராசா இசையில் புலமைப்பித்தன் எழுதி இருக்கிறார். கவிஞரது மறைவு குறித்து எழுதிய பலரும் கோவில் புறா பாடல்களை நினைவுகூர்ந்தார்கள். 

என்றாலும் பாலநாகம்மா பாடல்கள் குறித்து யாரும் சொன்னார்களா தெரியவில்லை. வாணி குரலில் வந்த ஒரு இனிமையான பாடலை இப்போது கேட்போம் 

https://www.youtube.com/watch?v=78LAfNstn3Y



சங்கீதம் என் தேகம் அன்றோ?
சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும்
ஆலிலை மேல் ஒரு நூலிடை மேகலை ஆட
இசை ஏழாக யாழாக மீட்டும் போது!


ஆகாய கங்கைக்கும் தீராத தாகம்
நான் சென்று நீராடத் தானாகத் தீரும்
பூங்காற்றும் தீண்டாமல் பெருமூச்சு வாங்கும்
பொன்மேனி தழுவாமல் அது எங்கு தூங்கும்?
இதழ் செம்பவளம் அதில் கம்பரசம்
இவள் சாதனைகள் சுக வேதனைகள்
அமுத மழையில் நனைந்து விளைந்த கொடி நான்
அமர கவிதை நயமும் லயமும் வழங்கிடும்


ஜாதிமல்லிப் பூப்போலே அந்தி மாலை பூப்பவள்
வாழைப்பூவில் தேனைத் தந்து மோகதாகம் தீர்ப்பவள்
கவிவாணர்களும் புவி வேந்தர்களும்
மன ஆசையிலே விழி வாசலிலே
தினம் ஏங்கிடுவார் எனை அடி பணிவார்
இது பொய்யுரையோ வெறும் புகழுரையோ
இவள் இனிய இளமை ஒரு அழகின் உவமை
சிறு இடையும் நடையும் இயலும் இசையும் என வரும்

இனிமை கொஞ்சும் இசை - கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனத்தக்க குரல் வளம். சிறப்பான பாடல்.

மிகச்சிறப்பான கவிதை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வழியில்லை - படத்தில் என்ன சூழல் என்று தெரியவில்லை.

என்றாலும் பாடல் வரிகளின் அடிப்படையில் ஒரு வேளை "பொது மகளிர்" இடத்தில் நடக்கும் நடனப்பாடல் என்று தோன்றுகிறது. 

இது போன்ற சூழலுக்கான பாடல்கள் ராசா நூற்றுக்கணக்கில் செய்திருக்கிறார் - இது அவற்றுள்ளும் செவ்வியல் வரைமுறைப்படி  வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 22, 2021 6:53 pm

அந்தப்படத்தில் இன்னொரு பாட்டும் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார். அதே போன்ற இன்னொரு செவ்வியல் நடனப்பாடல்.

திரையில் ஆடுபவரும் பாடலைப்பாடுபவரும் அந்தப்பாடலைப்போன்றே (மஞ்சு பார்கவி / வாணி ஜெயராம்).

பாடலின் சூழல் தெளிவாக இருக்கிறது - தவத்தில் உள்ள முனிவரை மயக்கப் பெண்ணை அனுப்பி வேலை செய்கிறான் ஒருவன். (விசுவாமித்திரர் - மேனகை கதை போன்ற அதே சூழல், அவர்களே தானா தெரியாது).

கடினமான மெட்டு என்றாலும் கவிஞர் அருமையாகவும் பொருத்தமாகவும் எழுதி இருக்கிறார். (ஒரு வேளை எழுதிய பாடலுக்கு ராசா இசையமைத்தாரா தெரியாது).

https://www.youtube.com/watch?v=Vsr-btRUuIM



மன்மத ராகங்களே சபை மன்னவர் கேளுங்களேன்
வானகத்தாரகை இறங்கி வந்தேன்
வாள்விழி மேனகை மயங்கி நின்றேன்
மாலையில் மையலில் இளமனம் இசைத்தது


விழிகள் இரண்டும் துயிலவில்லை 
விரக தாபம் தணியவில்லை
இனியும் தாங்க வலிமை இல்லை 
அருள் தரும் திருவுளம் அடைக்கலம் கொடுக்குமோ? உயிரை உருக்கிடும்


இயற்கை தந்த உறவுகளை இளமை தந்த கனவுகளை
தடுக்க என்ன உரிமைகளோ? தவத்தில் என்ன பெருமைகளோ?
மழை முகில் தணல் பொழிய விழிகளில் புனல் வடிய
நிலவென்னும் துகில் அவிழ கலவியில் மனம் நெகிழ
பருவ மேனி விரக வேள்வி புரியும் போது பதவி ஏது?
செவ்வரி ஓடிய கண்களில் அஞ்சனம் கரைந்திட
சேயிழை கைகளில் மேவிய கைவளை கழன்றிட
மலரணையினில் மதன் கணையினில் உடல் விழுந்தது அதில் எழுந்தது

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 22, 2021 10:26 pm

மரபிசைக்கென்று எழுதிய அந்த இரண்டு பாடல்களைத் தொடர்ந்து நம் நாட்டுப்புற இசையில் அமைந்த ஒரு பாடலுக்குச் செல்லுவோம். அருமையான தெம்மாங்கு மெட்டு - ஆனால், துள்ளல் பாடல் அல்ல. மென்மையான, ஓரளவுக்குத் துன்பியல் பாடல்.

அதை மென்மையான உணர்வுகளுடனும், பழைய நினைவுக்கிளறல்களோடும் இணைத்து இந்தப்பாடலில் கொடுத்திருக்கிறார்.

ஜானகி குரலில் அதைக்கேட்டால் நாம் அந்தக்காட்டுக்குச் சென்று அந்தக்காலத்து மக்களோடு ஒன்றி விடுவோம்!

ஒரு நாள் ஒரு பொழுது ஒன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன?
அட வாய்யா, மடியில சாஞ்சு
என் ராசா ஒரு முற தூங்கு!

தாளமலக் காட்டிலே தந்தனத்தோம் பாட்டிலே
தொட்டு வெளையாண்டதும் தோளில் வந்து சாஞ்சதும்
வானம் அறியும் மேகம் அறியும் துள்ளி ஓடும் மானும் அறியும்
ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா?
ஐயா, அது என்ன பொய்யா?

நந்தவனம் தீஞ்சதா? காவேரி தான் காஞ்சதா?
நம்ம சொந்தம் போனதா? கட்டுக்கத ஆனதா?
பாயில் படுத்த காதல் மனசு நோயில் துடிச்ச தாயின் மனசு
ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன்
ராசா ஒரு முற தூங்கு

https://www.youtube.com/watch?v=EYeaRTnlIT8



இந்தப்பாடலின் தனிக்காணொளி கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும், திரைப்படம் இருக்கிறது. காட்சியைக் கண்டே ஆகவேண்டும் என்போர் கீழ்க்கண்ட இணைப்புக்குச் செல்லலாம். (நேரடியாகப் பாடலுக்கு)

https://www.youtube.com/watch?v=i3zIoh_t5Tc&t=6830s

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Thu Sep 23, 2021 3:42 pm

pulamaipitthan.. mudhal paatu.. Rajavirku.. endha paatu app?

Ilaiyaravin isaiyodu... miga periya payanam seidhu irukar. ethanai vidham.. padal varigal. unmaiyil miga periya Kavinyan dhan.

Ilaiyarajavin Rasigai. (endha peyar vandhu therindha podhu. manadhil enaku ennam. Naan dhan endru. Very Happy )

maalai chevvanam..... indha paatu padiyadhu.. Swarnalatha endru oruvar. Kalki pathirikaiyil ivarin pugaipadam parthu iruken. idhu veru Swarnalatha. Senior.

Rajavin isaiyil.. 80s kaalam. sila padigigal. kural ellam Jency or Shailaja madhiiryae irukum. yen endru theiryavillai.


Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 23, 2021 4:39 pm

Usha wrote:pulamaipitthan.. mudhal paatu.. Rajavirku.. endha paatu app?

Per release dates (as seen in Anbu sir's spreadsheet), songs of deepam were the first (all songs in that album by Pulavar). Movie released in Jan 1977.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 23, 2021 6:25 pm

தீபம் இசைக்கோர்ப்பில் புலவர் எழுதிய இரண்டு காதல் டூயட் பாடல்களை முன்னமேயே இந்த இழையில் பதிந்திருந்தேன். (பூவிழி வாசலில் யாரடி வந்தது / அந்தப்புரத்தில் ஒரு மகராணி).

வேறு இரு டி எம் எஸ் பாடல்களும் அந்த இசைத்தட்டில் /படத்தில் உண்டு. சொல்லப்போனால், வந்த காலத்தில் அந்தப்பாடல்களும் எங்கும் ஒலித்தன.

இலங்கை வானொலியில் இந்தப்பாட்டைப் பலமுறை நான் கேட்டிருக்கிறேன் - பாடலின் கருத்துக்கள் ஒவ்வாதவை என்றாலும் சொற்களின் அமைப்பும் நயமும் என்னை அப்போதே கவர்ந்திருக்கின்றன. (புலமைப்பித்தன் எழுதியது என்றெல்லாம் அப்போது தெரியாது). 

அதே போல, இடையிசைகளும் அதற்கு முன் வந்த சிவாஜி பாடல்கள் போல அல்லாமல் வேறுபட்டு இருந்தன என்பதையும் உணர்ந்திருக்கிறேன். (கொஞ்ச நாளைக்குப்பின் தான் இளையராஜா என்று தெரியும்).

அந்தப்பாட்டு இப்போது இங்கே:

ராஜா யுவராஜா நாள் தோறும் ஒரு ரோஜா
சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா


நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும் பழக்கம் எனதல்லவா?
நேரம் ஒரு ராகம் சுக பாவம் அதில் நாளும் மிதக்கும் மனதல்லவா?
தினம் ஒரு திருமணம் நடக்கலாம் சுகம் அதில் உலகினை மறக்கலாம்
என் தேவை பெண் பாவை கண் ஜாடை


தங்கம் அது தங்கம் உடல் எங்கும் அதைக் கண்டால் கடத்தும் நினைவு வரும்
தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால் எதிரில் சொர்க்கம் வரும்
அடிக்கடி வலது கண் துடிக்குது புதுப்புது வரவுகள் இருக்குது
எந்நாளும் என் மோகம் உன் யோகம்


ஒன்றா அது ரெண்டா அது சொன்னால் ஒரு கோடி ரசித்துச்சுவைப்பவன் நான்
உன் போல் ஒரு பெண்பால் விழி முன்னால் வரக் கண்டால் மயக்கிப் பிடிப்பவன் நான்
நடிப்பிலே எவரையும் மயக்குவேன் அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
என் ராசி பெண் ராசி நீ வா வா

https://www.youtube.com/watch?v=McsBBIf2dIw


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Thu Sep 23, 2021 7:03 pm

raja yuvaraja.... paatin interludes.. andha style.. adhuvum Sivajikaga.. ithanai kattathukul Pulamaipitthan kavidhai. ivaruku unmaiyil sadhanai dhan idhu.

indha paatu. Radiovil thadai seidha paatu. nam kaalathu thappana paatu. adhanal radiovil kaeka mudiyadhu. cinemavil dhan kaeka mudiyum.
Cylone radio. ingae thadai seidha paatai ellam angae kaeka mudiyum. apadi kaeta paatu idhu. indha Raja acharyam dhan. Sivaji padam. Raja music endru.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 23, 2021 7:24 pm

https://www.youtube.com/watch?v=uwbc6Guc25A



70-களில் வந்த நடிகர் திலகப்படங்களில் குறைந்தது ஒரு பாட்டாவது உணர்ச்சி மேலீட்டில் சவுந்தர்ராஜன் பொங்கியெழுவதாக இருக்கவேண்டும் என்ற விதிப்படி அமைந்த பாடல். 

புதியவர் என்பதால் ராசாவாலும் இதைத் தவிர்த்திருக்க வழியில்லை. 

சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும் இசையமைத்துக்கொடுத்த பாடல் என்றாலும் இடையிசைகளில் இனிமையைத் தூவியிருக்கிறார்.

அது போன்றே, தேவைக்கேற்பச் சொற்களையும் கருத்துக்களையும் புலவரும் தெளித்து விட்டிருக்கிறார். 

"கண்ணுக்கு இமை முள்ளாகி வரும்போது" - சற்றே வேறுபட்ட சொல்லாடல், முதல் முறை இப்படிப்பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ("மலருக்குத் தென்றல் பகையானால்" என்பது போன்ற பயன்பாடு)  

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே
பேசாதே


நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் 
இங்கே போராட்டமா?
நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம்? 
புயல் என்ற காற்றில் ஏற்றி வைத்தாய்


கண்ணுக்கு இமையெல்லாம் முள்ளாகி வரும்போது 
கண்ணை யார் காப்பது?
என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான் 
கண்ணீரில் என்னை ஆட்டி வைத்தான்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 23, 2021 9:32 pm

மரபிசை மற்றும் மரபு நடனம் - சிறப்பான இந்தப்பாடலுக்கு ஓரளவுக்கு நல்ல காட்சிப்படுத்தல் அமைந்திருப்பது அரிதான ஒன்றே.

"காற்றோடு குழலின் நாதமே" - சின்னக்குயிலின் சிறப்பான குரலில் நம்மை மயக்கும் பாடல்!

இதை எழுதியவர் புலமைப்பித்தன் என்பதை அவரது மறைவுக்குப்பின்னரே கண்டு போற்றுகிறேன் என்பதை நினைத்தால் சிறிய குற்றவுணர்வு வருகிறது.   

முன்னரே சொன்னது போன்று, இத்தகைய செவ்வியல் இசைப்படி அமைந்த பல பாடல்களுக்கும் வரிகள் எழுத ராசா இவரை அழைத்திருக்கிறார் என்பது இலக்கியச் சுவையுடன் எழுதும் திறன் கொண்டவர் என்ற நம்பிக்கையால் தானே? 

அப்படிப்பட்ட பாடல்களில் கொஞ்சும் தமிழில் எழுதிச் சிறப்பிப்பதில் புலவர் சோடை போனதே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்! சொற்களுடைய கொட்டல் என்று மட்டுமல்ல, பொருளும் செறிவாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

https://www.youtube.com/watch?v=eqT8r6_NK3E



காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம்
அவன் வரும் வழி பார்த்து 
வழி பார்த்துத்தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது


வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்
கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்
விண்மீன்கள் வானில் விளக்கேற்றும் நேரம்
கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும்
தந்தச்சிலைக்கு அந்திக்கலைக்கு
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில்


பாதங்கள் ஜதியில் ஆடும் தகதிமி தகவென்று
பாவங்கள் விழியில் ஆடும் தகதக தகவென்று
நயனமாடும் ஒரு நவரச நாடகம் நளினமாக இனி அரங்கேறும்


கார் கொண்ட மழை மேகம் நேர் கொண்டு போகும்
கையோடு உனை வந்து வரவேற்கவே
கணம் கூட இன்று யுகம் ஆனதென்ன?
மருந்தான நீயே நோயானதென்ன?
இந்தத் தவிப்பும் இந்தத் துடிப்பும் 
எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

IsaiRasigan and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 23, 2021 10:02 pm

நீண்ட நாட்களுக்குப்பின் கேட்கிறேன் என்பதால் இந்தப்பாட்டின் சரணமெட்டு நினைவில் இல்லை. நாம் எதிர்பார்க்காத விதத்தில் மாற்றங்கள் அடிக்கடி மெட்டில் தருபவர் ராசா என்பது தெரிந்ததே - அதை மீண்டும் ஒருமுறை உணரும் வாய்ப்பு இந்தப்பாட்டைக் கேட்கும் பொழுது ஏற்படுகிறது - என்னென்ன திருப்பங்கள் அங்கே!

இவற்றுக்கெல்லாம் பொருத்தமாக மற்றும் கோர்வையான விதத்தில் வரிகள் எழுதுவது (அதுவும் குறைந்த கால அளவுக்குள்) சிறப்பான கவிஞர்களுக்கே எளிதான ஒன்றல்ல. 

புலவர் பலமுறை அப்படிப்பட்ட சூழலில் தேறியிருக்கிறார் என்பதற்கு இந்தப்பாட்டும் ஒரு சான்று.

ஆயிரம் வாசல் இதயம் என்ற இந்தத்திரைப்படத்தையெல்லாம் இன்றும் நினைவு படுத்திக்கொண்டிருப்பவை இப்படிப்பட்ட இறவாப்பாடல்கள் தான்!

மகாராணி உனைத்தேடி (எனைத்தேடி) வரும் நேரமே 
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான் 
அந்தக் காமன் விடுவான் கணை இவள் விழி


பைங்கிளி இவள் மொழி தமிழ் தமிழ் பைந்தமிழ்
பாடிடும் அதன் சுகம் தரும் தரும் செவ்விதழ்
வழங்கும் தினம் மயங்கும் அதில் உலகை மறக்கலாம்
கை வந்து தொட்டது மெல்ல காமத்துப்பாலுரை சொல்ல
இளமை பயிலும் தினம்


மார்கழி பனித்துளி பூவிதழ் சேருமோ 
பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ
சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே
தென்பாண்டி முத்துக்கள் போலே என்னென்ன கோலங்கள் மேலே
ரசிக்கும் கவிதை மனம்

https://www.youtube.com/watch?v=ZhGLhZmkTM8


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  BC Fri Sep 24, 2021 1:34 am

app_engine wrote:மரபிசை மற்றும் மரபு நடனம் - சிறப்பான இந்தப்பாடலுக்கு ஓரளவுக்கு நல்ல காட்சிப்படுத்தல் அமைந்திருப்பது அரிதான ஒன்றே.

"காற்றோடு குழலின் நாதமே" - சின்னக்குயிலின் சிறப்பான குரலில் நம்மை மயக்கும் பாடல்!

A "Quarantined" song.  Very difficult to sing.  One of the most underrated songs of KSC.  These reality show kids should try such songs to prove their mettle.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Sep 24, 2021 5:40 am

மேற்சொன்ன பாடலைப்போன்றே வெளிவந்த காலத்தில் வெளிவந்த காலத்தில் வானொலியில் அடிக்கடி ஒலித்த இன்னொரு ஜெயச்சந்திரன் பாடல். இந்தப்படமும் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது. ("சொன்னது நீ தானா?" என்ற புகழ்பெற்ற சுசிலா பாடலின் முதல் வரியைப் படத்துக்குத் தலைப்பாக வைத்து விட்டார்கள்).

வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது - மிகச்சிறப்பான தாலாட்டுப்பாடல். கேட்கும்போதே மனது மென்மையாகிப்போகும். அதற்கேற்ற மெட்டு, குரல் என்று பலவிதங்களிலும் சிறப்பு!

வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா


விழியோ கார்த்திகை தீபம் ஒளி நான் வா வா என்றது
உனக்கா என்னிடம் கோபம்? அதுதான் ஏன் ஏன் வந்தது?
அடிக்கும்போது மிருகமடா அணைக்கும்போது மனிதனடா
தெய்வம் நீயடா, மனத்தேரில் ஏறி வா ராஜா!


உனக்கேன் வாய்மொழி ஒன்று அதுதான் நான் தான் அல்லவோ?
மடிமேல் தூங்கடா வந்து மனத்தால் தாய் நான் அல்லவோ?
விரலில் என்ன அபிநயமோ? விழியில் என்ன கவி நயமோ?
அன்பின் தீபமே, இன்னும் ஆண்டு நூறு நீ வாழ்க!

https://www.youtube.com/watch?v=67IbDHCIAXc



தமிழ் வீணை - என்ன ஒரு அழகான உருவகம்!

இசைத்தமிழ் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Sep 24, 2021 7:58 pm

மனோவோடான நேர்காணலில் புலவர் இந்தப்பாடல் குறித்துப் பேசி இருக்கிறார். அவரது மறைவைத்தொடர்ந்து பலரும் இதைப்புகழ்ந்து எழுதியும் இருக்கிறார்கள். என் பங்குக்குப் பல ஆண்டுகளுக்கு முன் ராசா-பாலு இழையில் இதைக்குறித்து ஒரு சிறிய குறிப்பு எழுதி இருக்கிறேன். 

https://www.hubtamil.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=695207&viewfull=1#post695207

என்றாலும், அப்போது கூடுதல் எழுதாமல் விட்டதற்குக்காரணம் அங்கே இட்டிருந்த தூள் இணையத்தள இணைப்பும் அங்கே நடந்த விவரமான உரையாடல்களும். கொடுமை என்னவென்றால் அந்த தூள் தளம் இப்போது இல்லை Sad

இன்று மீண்டும் இந்தப்பாடலை பலமுறை கேட்டேன் - கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்.

என்ன இனிமை! பாடல் வரிகளும் மெட்டும் நகமும் சதையும் போல அவ்வளவு அழகாக ஒன்றிப்போவது இந்தப்பாடலின் சிறப்பு! 

ராசா தாளத்திலும் இடையிசையிலும் இன்னும் கூடுதல் சிறப்புச் செய்திருக்கிறார். இரண்டாவது சரணத்துக்கு முன்னால் வரும் இடையிசையில்  தந்திக்கருவிகளின் தனியொலிப்பு - மெய் சிலிர்க்க வைக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இசை!

பாடலின் கருத்து என்று எடுத்துக்கொண்டால் இப்படிச்சொல்லலாம்: "கலிங்கத்துப்பரணியின் கடை திறப்பும் வள்ளுவரின் காமத்துப்பாலும் எப்படி இருக்கும் என்பதற்குப்  புலவர் இங்கே ஒரு எடுத்துக்காட்டுத் தருகிறார்" Smile

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை
போதை தரும் நாதசுரம் பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ?
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபிநயம்


பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே?
மேகலை வாட்டியது அதை மேனியில் காட்டியது
சிறு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல்
குறி போடல் சுவை தேடல் கவி பாடல் புது வித அனுபவமே
அறிமுகம் அனுபவம்.அது சுகம் அழகன் மடியில் எனது உலகம்


மாலை வரும் வரும் மாலை தரும் தரும் மாவிலை பின்னிய தோரணங்கள்
மங்கல வாத்தியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்
ஒரு வானம் கரு மேகம் மழை போலும் மலர் தூவும்
மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள் 
முதல் முதல் இரவென வருவது மகிழ மனது நெகிழ வருக


தந்தோம் தனம்தனம் தந்தோம் தனம்தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன?
அது என்ன நூதனமோ? உங்கள் ஆசையின் சாதனமோ?
மனம் தந்தும் தனம் தந்தும் இதழ் சிந்தும் ரசம் தந்தும்
தரும் இன்பம் பல தந்தும் வரும் சொந்தம் இவள் தரும் சீதனமோ?
பலவித சுகங்களின் தரிசனம் விழியும் மனமும் உருக வருக

https://www.youtube.com/watch?v=fnEUG56OEGU


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

IsaiRasigan and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  BC Sat Sep 25, 2021 1:52 am

app_engine wrote:மேற்சொன்ன பாடலைப்போன்றே வெளிவந்த காலத்தில் வெளிவந்த காலத்தில் வானொலியில் அடிக்கடி ஒலித்த இன்னொரு ஜெயச்சந்திரன் பாடல். இந்தப்படமும் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது. ("சொன்னது நீ தானா?" என்ற புகழ்பெற்ற சுசிலா பாடலின் முதல் வரியைப் படத்துக்குத் தலைப்பாக வைத்து விட்டார்கள்).

வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது - மிகச்சிறப்பான தாலாட்டுப்பாடல். கேட்கும்போதே மனது மென்மையாகிப்போகும். அதற்கேற்ற மெட்டு, குரல் என்று பலவிதங்களிலும் சிறப்பு!

RARE (beautiful) song.  Thanks for the reminder.  It is a mystery why and how channels play only certain songs and leave out the rest.  It is a driving factor for the popularity of a song, because that determines the reach among the audience where again the song undergoes another stage of sifting.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

app_engine likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Sep 27, 2021 7:26 pm

பாரதிராசாவின் படுதோல்விப்படங்களில் ஒன்று "வாலிபமே வா வா".

காதல் ஓவியம் படம் தோல்வியுற்றதால் "உங்களுக்கு இது தானே தேவை, எடுத்துக்குங்க" என்று எரிச்சலுடன் மசாலாப்படம் எடுத்ததாகவும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எச்சரித்ததாகவும் ராசா ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.

எது எப்படி இருந்தாலும் இசையில் பஞ்சம் வைக்கவில்லை.

தேன் போல் இனிமை சொட்டும் இந்தப்பாடல் அந்தப்படத்தின் இசைக்கோர்ப்பிலிருந்து.

புலவரின் வரிகளும் அதே போன்ற இனிமை. கூடுதல் விளக்கங்கள் தேவையில்லை - மெட்டும் சொற்களும் "யார் கூடுதல் இனிமை" என்று போட்டி போடும் பாட்டு!

அழகே உன்னைக் கொஞ்சம் கண்கள் எழுத வா வா வா
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
உயிர் எழுதும் ஒரு கவிதை ராகம் சொல்ல வா வா வா

வானில் இன்று மேக ஊர்வலம் யாரைத் தேடிப்போகுமோ?
ஏழு வண்ண வானவில்லிலே மாலை யார்க்குச் சூட்டுமோ?
மலையின் அங்கம் எங்கும் பச்சை மரகதம்
இயற்கை அன்னை தந்த அன்பின் தரிசனம்
அழகை விழியில் அளப்போம் வா வா வா

தேனில் செய்த தேகம் தாங்குமோ தென்றல் வந்து தீண்டினால்?
வேலில் செய்த பார்வை தாங்குமோ என்னைப் பார்த்து வீசினால்?
அடியே நீயே எந்தன் கண்ணின் முகவரி
எனக்கும் காமன் தந்தான் உந்தன் முகவரி
எனக்கும் அவன் தான் கொடுத்தான் வா வா வா


https://www.youtube.com/watch?v=gpr_UKDTqxg


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 2 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum