Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

IR-Pulamaippiththan combo songs

4 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

IR-Pulamaippiththan combo songs - Page 8 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Mar 10, 2022 8:04 pm

கும்மிப்பாட்டு என்பதற்காக எப்போதும் எல்லோரும் பயன்படுத்தும் மெட்டையெல்லாம் ராசா இட்டு எளிதாக்க மாட்டார் Smile

தனது முத்திரை பதிக்கும் மாற்றங்களைச் செய்வார் என்பது பாடலின் தொடக்கத்தில் - என்றால் போகப்போக வேகம் கூட்டி வெப்பமேற்றி விடுகிறார்! 

மட்டுமல்ல, மாறி மாறிச்செல்லும் மெட்டும் தாளக்கருவிகளின் சீற்றமும் என்று மிகச்சிறப்பான பாடல். 

அதற்கேற்ப முறுக்கேற்றும் வகையில் புலவரும் வரிகளை எழுதி இருக்கிறார். முதல் முறை தான் கேட்கிறேன் என்றாலும் சட்டென்று வியக்க வைக்கும் பாட்டு!

https://www.youtube.com/watch?v=M6n8kXb_KMsபொன்னு வெளையிற பூமி இது இந்த பூமியக் காக்குற சாமி இது
அய்யனார வந்து பாடுங்கடி இங்கே ஆசையாக் கை கொட்டி ஆடுங்கடி
மண்ணில் இருக்குது வாசமடி நம்ம பாட்டுல எப்பவும் வீசுமடி
பாட்டு மணக்கட்டும் பாடுங்கடி வள பையக் குலுங்கட்டும் கும்மியடி


கும்மியடி பொண்ணு கும்மியடி வளை குலுங்கக் கை கொட்டிக் கும்மியடி
ஊருக்கு எல்லையில் கோயிலடி இங்கே உள்ளது அய்யனார் சாமியடி
காவல் இருக்கிற சாமி இது அதன் கையில் இருக்கிற பூமி இது
சாமிய முதலில் கும்பிடடி இந்த பூமியத் தெய்வமா நம்பிடடி
சண்ட சச்சரவு ஏதுக்கடி நம்ம சாதி சனத்தோட கூடிக்கடி
சாமி வரம் தரும் பாத்துக்கடி இதைத் தந்தனத்தோம் சொல்லிக் கும்மியடி


கை வளையல் பாட்டுக்கட்ட கால் சலங்கை தாளம் தட்டக் கணக்காக அடி எடுப்போம்
பாத்த சனம் இச்சுக்கொட்ட பாராட்டி மெச்சிக்கொள்ள எல்லோரும் கை புடிப்போம்
மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு நம்ம மனம் போல நன்ம தரும் ஒரு நாளு
ஒயிலாக வந்து நின்னு அசஞ்சாடு இந்த ஊரார்க்கு வாழ்த்துச் சொல்லி எச பாடு
மயிலாட்டம் ஆடயில மாப்பு வச்சுப் பாடயில மைனர் பையன் சுத்தி வளச்சான்
மாராப்புச் சேலையில மையல் வச்சு ஆசையில நைசாகக் கண்ணு அடிச்சான்
மாமான்னு சொல்லச் சொல்லிச்சிரிச்சான்டி ஒரு மல்லியப்பூச்செண்டு கட்டிக் கொடுத்தாண்டி
விட்டாக்கா இன்னும் கொஞ்சம் போவான்டி சின்ன வீட்டுக்கொரு ஆள் புடிக்கும் வேலாண்டி


ஆசானுக்கு வந்தனமொன்னு தந்தோம் தகதோம் 
இந்தத் தேசமெங்கும் ஜெயக்கொடி நாட்டிட வந்தோம் வருவோம் 
வீரர் குலம் வாழ்ந்த தெற்குச்சீமையடி வேங்கை எனப்பாயும் இந்தக் காளையடி
சாயல்குடி வீரர் குல மங்கையடி தாவி வந்து நான் நடத்திக் காட்டுறேன்டி
பொம்பளைக்கிந்த வம்பு எதுக்கு? காளைக்கு ரெண்டு கொம்பு இருக்கு
காளை அடக்கச் சேலை இருக்கு கொம்ப வளைக்கத் தெம்பு இருக்கு
ஜல்லிக்கட்டுக்காளை இங்க பாயுதடி கொம்பக்கொம்ப ஆட்டிக்கிட்டுச்சீறுதடி
சேலை இதன் வாசம் பட்டாச் சொக்குமடி சொன்னபடி கேட்டுக்கிட்டு நிக்குமடி


வேஷம் போட்டு வந்த காள அது ஆழம் பாக்குதடி ஆள
காத்தில் ஆடி வரும் சேல அதப்பாத்து ஆட்டுதடி வால
இன்னமும் துள்ளுது காள பாரடி காட்டுறேன் வேல
இது தவியாத்தவிக்கும் எருது அடி எதையோ நெனச்சு வருது
காளைக்கு ஏதடி மீச அதன் கண்ணுல எத்தனை ஆச
இது அழகா இருந்தா ரசிக்கும் அடி அசஞ்சா நடந்தா மயங்கும்
மாடும் இனி ஆடும் அத ஆட வெக்கட்டா? எம் பாட்டு ஒரு தாளம் அதப் பாட வெக்கட்டா?
காள புடிப்பேன் வால ஒடிப்பேன் கொம்ப வளைப்பேன் என்றும் ஜெயிப்பேன்
சாயல்குடி வீரர் குல மங்கையடி காளையது தானடங்கிப் போனதடி

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 8 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Mar 14, 2022 7:32 pm

மனதை உருக வைக்கும் இடையிசை இரண்டாம் சரணத்துக்கு முன் வருகிறது. அப்படியே அதைத்தொடர்ந்து தாசேட்டனின் குரலில் வரும் " அம்மா எனும் ஒரு சொல்லிலே ஏதோ ஒரு இசை கேட்குது" கண்களில் நீரை வரவழைத்து விட்டது!

அந்த ஒரு வரிக்காகவே இந்தப்பாட்டுக்கு "எல்லாக்காலத்துக்குமான சிறப்பு"ப்பட்டம் கொடுக்கலாம். (பிற வரிகள் மிகவும் சராசரி என்றாலும், இந்த இடம் மிகச்சிறப்பு!)

https://www.youtube.com/watch?v=2-UTJF74oHkஇறுகிக்கிடக்கும் பாறை நெலத்தில் நீரைத்தேடும் வேரு 
இந்தத்தாயைப்போல யாரு?
கடலும் நதியும் காஞ்சபொறகும் பாயுமிந்த ஆறு 
தாய்ப்பாசமின்னு பேரு
வயிற்றில் சுமந்த தாய் எங்கே எங்கே?
மனத்தில் சுமந்த தாய் இங்கே இங்கே!


பாசம் அது கலையாதது, வேசம் இட அறியாதது!
தாயென்பதே அது தானம்மா, யாரென்பது இதில் ஏனம்மா?
தென்னையையும் புள்ளையினு சொல்லிவச்ச பூமி இது 
புள்ளையிதை இல்லையின்னா தள்ளிவைக்கப்போகிறது?
தாயாகச் சேயாக இணைந்த மனசு நீங்காதே 


அம்மா எனும் ஒரு சொல்லிலே ஏதோ ஒரு இசை கேட்குது!
கண்ணே எனும் அவள் சொல்லிலே காயங்களும் குணமாகுது!
தாயின் சொல்லைப்போல ஒரு வேதமெங்கும் கேட்டதில்லே 
தாயின் அன்பைப்போல ஒரு தெய்வமெங்கும் பார்த்ததில்லே 
ஆராரோ ஆராரோ அவளுக்குவமை யாரிங்கே?

https://www.youtube.com/watch?v=FPoywoDsZ1w


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 8 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Mar 15, 2022 1:14 am

சூழல் பாட்டு - நகைச்சுவையும் கிண்டல் கேலியுமாகப் போகிறது.

தாளம் சிறப்பு - வேறொன்றும் சராசரிக்கு மேல் இல்லை Smile

https://www.youtube.com/watch?v=NqCsIajfcAsநாதஸ்வர வித்துவான் ஏத்திக்கிட்டாக் கத்துவான்
ரோட்டையும் இவன் பாக்க மாட்டான் 
எந்தப்பாட்டையும் நல்லா ஊத மாட்டான் 
தனித்தவுலு வித்துவான் தட்டுக்கெட்டுச் சுத்துவான் 
பாட்டுக்கா இவன் தாளம் போட்டான்? 
இவம்பாட்டுக்கு வெறும் தாளம் போட்டான்!
இவன் ஒத்தூதும் வேலைக்கும் ஆக மாட்டான் 
நல்லா ஊதச்சொன்னா வாயத்தான் ஊதுவான்டா 
நான் இல்லேன்னா நீ தனித்தவுலு தான்டா 
வெறும் தண்ணியில ஊறவச்ச அவுலு தான்டா


மதுர வீதியிலே நாதஸ்வரம் ஊதுனா அத நீ கொடைக்கானல் மேல நின்னு கேக்கலாம் 
திருநெல்வேலியிலே மேளத்த நான் வாசிச்சா திருச்செந்தூரெல்லாம் ஆடுறதப் பாக்கலாம் 
பாதித்தாளம் இங்கே பாதித்தாளம் - மீதித்தாளம் எப்போப் போடப்போறே?
தோடிராகம் இவன் ஊதி ஊதிக் காது போச்சு சுரம் மாறிப்போச்சு 
இழுத்துக்கட்டிக்க மத்தளத்த - அவுத்துக்கொட்டுற உன் சரக்க 
சுதிய விட்டுட்டு வாசிக்கிற தெளிஞ்ச பொறகு யோசிக்கிற 
குச்சிய நீ நீட்டுறியே நம்ம கிட்டக்காட்டுறியே டோய் டோய் டோய் டோய் டோய் மச்சான் 


உயிரே இல்லாமல் உடல் மட்டும் ஏது? சுதியே இல்லாத இசை எங்கும் ஏது?
உயிரில்லாத உடல் ஆடாதைய்யா, சுதியில்லாத பாட்டில் உயிர் ஏதைய்யா?
நாதமும் தாளமுமே பிரிந்தால் இசையில்லை பிழியிது கிழியிதெனும் பேச்சில் வரும் தொல்லை 
வீண் சண்டை வேடிக்கை கண்டு சிரியோவென ஊர் சிரிக்குது 


பாம்பும் கூடத்தான் கோபம் வந்தா ஊதுது படத்த எடுத்திட்டு ஆளுமேல சீறுது 
தவள கூடத்தான் தண்ணிக்குள்ள கத்துது அதில கூடத்தான் மேளச்சத்தம் கேக்குது 
கொம்புக்காரன் இவன் வம்புக்காரன் கோணப்பேச்சில் ரொம்பக்கெட்டிக்காரன் 
ஊது சாமி நல்லா ஒத்து ஊது தின்னு போட்டு இனி வேலை ஏது 
அடக்கி அடக்கி வாசிக்கணும், அளவு தெரிந்து பேசிக்கணும் 
தவுலுக்குச்சியப் போட்டுப்புட்டு செலம்பக்குச்சியில் ஆட்டங்கட்டு 
பிப்பிப்பின்னு ஊதச்சொன்னாப் பெப்பெப்பேன்னு நிப்பே மச்சான் போடா டோய் டோய் டோய் டோய்

https://masstamilandownload.com/tamil/1994/Puthupatti_Ponnuthaye_160kbps/Nadhasvara_Vidhvan-%5BMasstamilan.In%5D-.mp3

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 8 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Mar 15, 2022 10:05 pm

சூழல் பாடல் - ஒரு சில இந்திச் சொற்களையும் தாளித்து விட்டிருக்கிறார்கள்.

கேட்பதற்குப் பெரிய குழப்பமில்லை என்றாலும் மனதில் நிற்பது கடினம் 

இந்தப்பாட்டையெல்லாம் கேட்டுச் சொற்களைக் கண்டுபிடித்து எழுதுவது என்பது சற்றே எரிச்சலூட்டும் வேலை தான் - என்றாலும் ராசாவின் இசைக்கு இது கூடச்செய்யாவிட்டால் எப்படி?

https://www.youtube.com/watch?v=AuARkPMGRr0அட மேரி ப்யாரி ஹோய் ஜான்சி ராணி ஹோய் 
கத்திக்கத்திக் கத்தி வைப்போம் வாடி 
டக்கரு ஜாக்கி ஹோய் நிக்குது பாக்கி ஹோய் 
புத்தி சொல்லு பாட்டு ஒன்னு பாடி 
ஆதி நாளிலே ஆண்டதிந்தக் கத்தி தான் இப்ப ஆப்பரேஷனால் ஆட்டிவைக்கும் கத்தி தான் 
கத்தியில பொல்லாத பட்டாக்கத்தி கையில நீ தூக்காதே முட்டாப்புத்தி 


வடநாட்டு ஜோடி வந்து ஆட்டம் அழகா ஆடுது ஆசைத்தமிழில் பாடுது 
எதிர்வீட்டு ஜன்னல் பக்கம் கண்ணு எதையோ தேடுது என்ன நெனச்சோ வாடுது 
ஒய் வம்பு செய்ய வேணாங் கண்ணு வந்த வேல பாத்துக்கோ 
கொம்புத்தேனே மெல்ல வந்து கைய மேல போட்டுக்கோ 
நீ சிரிச்சா தில் கி ஜில்ஜில் ஆகுது - அட லட்க்கி கோ ரசகுல்லா தேடுது 
பாங்குராவ நல்லாத்தான் நீ ஆடுற டாங்கு டாங்கு கைத்தாளம் நீ போடுற 


ஒன்னத்தேடி நல்ல காலம் போலோ பண்ணுது பாத்துக்கோ பாட்ட ஒழுங்காக் கேட்டுக்கோ
சரியான ராஜயோகம் கூடி வருது கண்மணி ஓடி வருது அம்மணி
நீரும் நீரும் சேரும்போது யாரு வந்து கேப்பது?
நெஞ்சும் நெஞ்சும் கூடும்போது யாருக்கென்ன போனது?
ஒய் ஜல்தி ஜல்தி சரியாப்புரிஞ்சுக்கோ அரே அல்க்கிக்குல்க்கி ஆட்டம் பாத்துக்கோ 
கமல் போலே நல்லாத்தான் நீ ஆடுற தமிழ் மேலே நல்லாத்தான் நீ பாடுற

https://masstamilandownload.com/tamil/1994/Puthupatti_Ponnuthaye_160kbps/Marie_Pyarikoyi-%5BMasstamilan.In%5D-.mp3

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 8 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum