Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

IR-Pulamaippiththan combo songs

4 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Dec 21, 2021 11:33 pm

நாயகனின் "அந்தி வரும் நேரம்" போன்றே ஒரு பாட்டு வேண்டும் என்று இயக்குநர் கேட்டார் போலிருக்கிறது. ராசா கிட்டத்தட்ட அதே வடிவம் மற்றும் கருவியிசைக்கோர்ப்பு எல்லாம் கொடுத்திருக்கிறார்.

அந்தப்பாடலை எழுதியதால் புலவரையே கூப்பிடச்சொன்னாரா தெரியவில்லை - என்றாலும் இது வேறு வகைப்பாடல். (முன்னது அருமையான கொண்டாட்டம் - இதுவோ பாலுறவுச் சீண்டல் / போட்டி என்று போகிறது).

இளசுகளை உசுப்பி விட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்!

https://www.youtube.com/watch?v=ENwY-fUvuxAமல்லுவேட்டிய மடிச்சுக்கட்டிட்டேன் ஆட வாடி மானே 
என்னை எதுத்து நீ ஜெயிக்கப்போறதப் பாக்கப்போறேன் நானே 
ஏ அதுக்குத்தான் நானாச்சு, கணக்குத்தான் போட்டாச்சு 
ஏதுக்கடி வீண் பேச்சு? சவுண்ட எறக்கு - சரக்கு முறுக்கு இருக்குது!
ஜலக்கு ஜலக்கு ஜல்  ஜலக்கு ஜலக்கு ஜல்  ஆடிப்பாக்கலாமா?


காங்கயத்துக்காள ஏ முட்ட வரும் ஆள அட மாட்டிக்கிடப் போறே யம்மா யம்மா
மூக்குக்கயிறு மாட்டி ஒரு வண்டியில பூட்டி ஓட்டட்டுமா நானும் சும்மா சும்மா?
தொட்டாப்போச்சு ஆத்தா கொம்பப்பாத்துக்கோ 
கொம்பப்பாத்துத்தான்யா வந்தேன் கேட்டுக்கோ 
எதுக்குடி பருவத்தின் வெறில கெடந்து அலையுற எதுக்கும் துணிஞ்சிட்ட 


வாழை வரும் நேரம் ஏ நானடிக்கும் மேளம் பாத்துக்கடி கண்ணு சுகம் சுகம் 
தாளம் தப்புத்தாளம் நீ தள்ளி நில்லு போதும் கிட்டவந்தாக் கோபம் வரும் வரும் 
உன்னப்போல ஆளு ரொம்பப்பாத்தவன் 
என்னப்போல ஆள இன்னும் பாக்கல 
ஏதுக்கடி எகிறிக்குதிக்கிற? முரண்டு பிடிக்கிற? திமிர அடக்குறேன்!

சற்றே நல்ல ஒலித்தரத்தில் முழுப்பாடலும் இங்கே கேட்கலாம்:

https://www.youtube.com/watch?v=xUPWJjV25aw


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Jan 04, 2022 7:49 pm

எளிமையும் இனிமையான ஒரு நல்ல காதல் பாட்டு - காத்திருக்க நேரமில்லை இசைத்தொகுப்பில் புலவர் எழுதிய இன்னொன்று.

"அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்" என்ற முதல் மரியாதைப்பாடலின் கற்பனையை இங்கே புலவர் எடுத்தாண்டிருக்கிறார், மற்றபடி எடுத்துச்சொல்லும்படியான புதிய சிறப்புக்கள் இல்லாவிட்டாலும் கேட்க இனிமையும் உறுத்தலில்லாமலும் செல்லும் மென்மையான பாடல்!

https://www.youtube.com/watch?v=s0ufQ_Hv3vUநிலவ நிலவ இப்போ நீ புடிக்கும் நேரம்
நிழலா உனக்குப்பின்னே நாங்களும் தான் வாரோம்

மஞ்சளா மஞ்சளா வானம் பூப்பூத்தது
நெஞ்சிலே நெஞ்சிலே காதல் தேனூத்துது

(நிலவ நிலவ இப்போ நான் புடிச்சுக்கொண்டேன்
நிழலா உனக்குப்பின்னே நான் தொடர்ந்து வந்தேன்

நிலவ நிலவ இப்போ நீ புடிச்ச நேரம்
நிழலா உனக்குப்பின்னே நான் தொடர்ந்து வாரேன்)

என் வாழ்க்கைப் பாதையில் நான் நடந்து போகையில் நீ தானே துணை எனக்கு
என் வான வீதியில் ராத்திரியின் வேளையில் நீ தானே ஒளி விளக்கு
உன்னால தான் துயர் போகின்றது உன்னால தான் உயிர் வாழ்கின்றது
என் வீதியில் தங்கத்தேர் வந்தது என் வாழ்க்கையில் புதுச்சீர் வந்தது
ஒரு காதலும் காவலும் நீ தரும் சீதனம்

ஆகாச தேவதை பூமியிலே வந்தது அம்மம்மா என்ன அழகு.
நீ பார்க்கும் பார்வையும் நெஞ்சுருகும் வார்த்தையும் கேட்டாலே துள்ளும் மனசு..
சேய் என்பதா உனைத் தாய் என்பதா நான் என்பதா எனை நீ என்பதா
கள்ளம் இல்லா ஒரு வெள்ளை மனம் கை சேர்ந்தது இந்தப் பிள்ளை மனம்
அடிக்கண்மணி உன் முகம் ஆயிரம் பௌர்ணமி

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Jan 07, 2022 12:50 am

சிறப்பான வரிகள் ஒரு புலவர் எழுதினாலும் அவை சரணத்தில் மட்டும் இருந்து விட்டுப் பல்லவி குப்பை என்றால் கண்டு கொள்ளப்பட மாட்டா.

அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த மச்சி-பச்சி பாடல்.

சரணங்கள் சிறப்பு / சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் மீதான சினம் அங்கே வெளிப்படுகிறது. ஆனால், அது வரையிலும் கேட்க யாருக்கும் பொறுமை இருக்காத அளவுக்குப் பல்லவி வரிகள் கொடுமையாக இருக்கின்றன.

காத்திருக்க நேரமில்லை இசைத்தொகுப்பில் இன்னுமொரு புலவர் பாட்டு.

ஹேய் மச்சி மச்சி அய்யரு கடை பஜ்ஜி மாமிக்குக்காமி சொஜ்ஜி
ஒருத்தன் கண்ணும் காணாம இப்பச்சுட்டது
அண்ணாத்த நாக்கு தானாகச் சப்புக்கொட்டுது

குடிசைக்குள்ள வெளக்கு இல்ல வீதி எங்கும் டியூப் லைட்டுடா
அந்தக் குழல்விளக்கு அலங்கரிப்பு ஏழை மக்கள் தந்ததுக்குடா
எடுத்துச்சொல்ல உருப்படியா ஒருத்தன் இல்ல யாருக்கென்ன கெட்டுப் போச்சுடா
இங்கே உழைக்கிறவன் பொழப்பு மட்டும் தட்டுக்கெட்டு நின்னு போச்சுடா
குருவிக்கிருக்கும் ஒரு கூடு உனக்கு இல்லையே சிறு வீடு
தெருவில் நிக்குது நம்ம நாடு வறுமை ஒன்னு தான் எல்லைக்கோடு
இருக்குறவன் தானாகத்தர மாட்டான் கொடுக்கும் வர சும்மா நான் விட மாட்டேன்
எடுத்து வந்து எல்லோர்க்கும் தர வேணும் அதுல வரும் இன்பத்தப் பெற வேணும்

அடிப்பவனை ஒடிப்பவங்க ஆண்மை உள்ள ஆம்பளைங்கடோய்
அட அடிபணிஞ்சு கெடப்பவங்க மீச வெச்ச பொம்பளைங்கடோய்
இது வரைக்கும் எளியவனை வலியவங்க ஆட்டி வெச்ச காலம் போச்சுடோய்
உழைக்கும் இந்தக்கரங்களிலே விலங்குகளைப் பூட்டி வெச்ச காலம் போச்சுடோய்
எனக்கு எஜமான் என்றும் நான் தான் எனக்குத் துணையே எந்தன் தோள்தான்
எனது உறவே இந்த ஊர் தான் தினமும் எனக்குத் திருநாள் தான்
இருக்கும் மட்டும் ஆனந்தப் பள்ளு பாடு இறக்கும் போதும் அஞ்சாமல் கண்ணை மூடு
உலகில் நாம கொண்டாந்ததென்ன போச்சு? சுதந்திரம் தான் நம்மோட உயிர் மூச்சு

https://www.youtube.com/watch?v=qX5dcH-bo64Last edited by app_engine on Sun Jan 16, 2022 6:35 pm; edited 1 time in total

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Jan 10, 2022 8:11 pm

சற்றே மாறுபட்ட பாடல் - ஒருத்தி சினத்தோடும் இன்னொருத்தி மென்மையாகவும் பாடுவது போன்றும் இதற்கிடையில் குழம்பிய மனதுடன் ஆண்குரல் பாடுவதாகவும் உள்ள சூழல்.

அதற்கேற்பப் புலவர் எழுதியிருக்கிறார். குழப்பமில்லை / பரவாயில்லை வகையிலான பாடல்.

ஆடவனின் மனக்குழப்பத்தை நன்றாக ஒலிக்கத் தேவையான கருவியிசை உதவுகிறது.

மொத்தத்தில், கேட்கத்தக்க பாட்டு!  

ஓ என் தேவ தேவியே ஓ என் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன காதல் உண்மையில்லை

கண்ணா இது அக்கினி அஸ்திரம் இன்னும் உனை வாட்டிடும் நிச்சயம்
கண்ணா உனைக்காக்கிறேன் சத்தியம் என்றும் உனைக்காப்பதே லட்சியம்
என்னை எண்ணியே உன்னுயிர் போகுதோ?
உன்னை எண்ணியே என்னுயிர் வாழுதோ?
நீ தொடும் நீரெல்லாம் திராவகம் ஆகணும்
பூவாய் மாறும் முள்ளும் இன்பம் துள்ளும்

வா வா இதோ காதலின் சன்னிதி வந்தால் வரும் நெஞ்சிலே நிம்மதி
கொஞ்சம் பொறு முள்முடி சூட்டுவேன் காலம் எல்லாம் உன்னை நான் வாட்டுவேன்
மாலை போடுவேன் மன்னவன் தோளிலே
தீயை மூட்டுவேன் உந்தனின் நெஞ்சிலே
தீயை நான் ஆற்றுவேன் தேனை நான் ஊற்றுவேன்
எந்தன் நெஞ்சம் எங்கும் வஞ்சம் வஞ்சம்

காணொளியில் ஒரு சரணம் மட்டும் இருக்கிறது:
https://www.youtube.com/watch?v=pTqpbxn_9lwமுழுப்பாடலும் கேட்க இந்தத்தொகுப்புக்குச் செல்லலாம்:
https://www.youtube.com/watch?v=HG4CMe9pY2o


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Jan 10, 2022 10:15 pm

அதே "கண்மணி" இசைத்தொகுப்பில் இன்னொரு காதல் பாடல் - கிளுகிளுப்பு வகைப்பாடல். புலவருக்கு இவ்வகைப்பாடல் எழுதுவது புதிதல்லவே - தழுவ நழுவ என்று வழக்கம் போல விளையாடி இருக்கிறார்.

இனிமையான மெட்டு மற்றும் இசைக்கோர்ப்பு இருப்பதால் பாடல் கேட்க சுகமாக இருக்கிறது Smile

https://www.youtube.com/watch?v=ujfjD4kFvEcஉடல் தழுவத்தழுவ நழுவிப் போகுதே
கைகள் நழுவநழுவத் தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே


ஆசை மணிக்குயிலே அந்தி மஞ்சள் வெயிலே 
என்ன நினைவோ கண்ணில் கனவோ
எந்தன் உயிர்க்குயிரே இன்பமணிச்சுடரே 
என்னைத் தரவோ உன்னைப் பெறவோ
காதல் என்னும் சிறையில் காலை வரும் வரையில் 
தூங்காமலே நாம் தூங்கலாம்
சின்னச்சின்ன விரல் நகங்கள் மெல்லமெல்லப் பட்ட இடங்கள் 
சிவந்த அழகை மகிழ்ந்து ரசிக்கலாம்


மேகங்களைத் தொடுப்பேன் மஞ்சமதில் அமைப்பேன் 
எந்தன் உயிரே எந்தன் உயிரே
வானவில்லைப் பிடிப்பேன் ஊஞ்சல் கட்டிக்கொடுப்பேன் 
கண்ணின் மணியே கண்ணின் மணியே
காற்றைக் கையில் பிடிப்போம் வானம் வரை நடப்போம் 
நாள்தோறுமே ஊர்கோலமே
வானவெளி தன்னைக்கடந்து இந்த உலகத்தை மறந்து 
உயிரில் கலந்து உறவில் இணையலாம்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Jan 19, 2022 1:43 am

ஒரு இனிமையான செவ்வியல் இசைப்பாடல் - அதே நேரத்தில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் காலை வாரிக்கொள்ளுவதும் நடக்கிறது.

பூரணம் விஸ்வநாதனின் பெயரையும் பாட்டில் புலவர் உட்படுத்தியிருக்கிறார்.

விளையாட்டாகப் போவதால் பாடலின் வரிகளில் அந்த அளவுக்கு மனம் உட்படவில்லை - என்றாலும் கேட்க நன்றாக இருக்கிறது!

https://www.youtube.com/watch?v=ZgYZOF6mGEkஎன்னோடு போட்டியிட்டு ஜெயிச்சவர் யாருமில்ல 
எனக்கு எதிர்ப்பாட்டுப் பாட இங்கு நெனச்சவர் யாருமில்ல 
பெயரிலே நான் பூரணம்  இசையிலே சம்பூரணம் 
சுரங்களின் ஆலாபனம் எனக்கது சாதாரணம்
இதோ நீ என்னோட சவாலை சமாளி 
குரலிலே மயங்கணும் எதிரிகள் அடங்கணும் 


உன்னோடு போட்டியிட்டு ஜெயிக்கவும் நானிருக்கேன்
இப்ப உன் பாட்டைப் பின்பாட்டா மடக்கவும் நானிருக்கேன்
பெயரிலே நீ பூரணம் இசையிலே நான் பூரணம் 
கிழட்டுக்குச் சங்கீதமா? இது என்ன சாரீரமா?
நிதானி நிதானி துள்ளாதே சதா நீ
குரலிலே உதறுது சுதியிலே நழுவுது


எட்டுக்கட்ட கிட்டப்பாவும் எட்டி நிக்க வேணும் இங்கே
மாட்டிக்கிட்ட சின்னப்பாப்பா தப்பி நீயும் போவதெங்கே?
தந்தி பேசும் தம்புரா - அந்து போச்சு தேவுடா
உச்சஸ்தாயில் பாடவா? மூச்சு நின்னு போகவா?
நடுக்கமா இருக்குதா? குளிர் ஜுரம் அடிக்குதா?
சவாலை சமாளி விடாதே சவாரி
சிவசிவ ஹரஹர குரலிது தர வர 
 
பாட்டுப்பாடும் பாட்டா பாட்டா, ராகம் சொல்லித் தா தா தாத்தா
ராகத்துக்குப் பேரா பேரா? சாரி சாரி காக்கா காக்கா 
காப்பி ராகம் எப்படி? கொண்டு வாங்க இப்படி
ஆதி தாளம் எப்படி? போட்டுக்கோணும் அப்படி 
தலையெல்லாம் நரைச்சது கலைகளால் வெளுத்தது 
நரம்புத்தளர்ச்சி, எதுக்கு முயற்சி?
தகஜுனு தகஜுனு எதிர்ப்பதை இனி விடு 


உன்னோட போட்டியிட்டு ஜெயிச்சவர் யாருமில்ல 
உனக்கு எதிர்ப்பாட்டுப் பாட இங்கு நெனச்சவர் யாருமில்ல
பெயரிலே நீ பூரணம் இசையிலே சம்பூரணம்
சுரங்களின் ஆலாபனம் உனக்கது சாதாரணம்
சவாலை ஒதுக்கு உன்னோடு எனக்கு
அனுபவம் பெரியது அது ரொம்ப இனியது 

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Jan 25, 2022 11:36 pm

வாசு குரலில் ஒரு சிறப்பான தெம்மாங்கு புலவர் எழுதி இருக்கிறார் - அதே தாலாட்டு இசைக்கோர்ப்பில்!

இனிமையான நாட்டுப்புறப்பாட்டு - கூடவே மெலிதான சமுதாயம் குறித்த கருத்தும் வந்து விழுகிறது,

அப்பாவியும் வெள்ளந்தியுமான ஒரு நாட்டுப்புற இளைஞனின் பாட்டில் "பண்ணைப்புர ராசா" தெரிகிறார் Smile


https://www.youtube.com/watch?v=pw17pI7DAp4பண்ணைப்புர ராசாவே கட்டின மெட்டிது ஆத்தா
பட்டணத்து ரோசாவே மயக்கம் வந்துரும் கேட்டா
இதில் மண்ணுக்குள்ள வாசம் இருக்கும்
அதச் சொல்லச்சொல்ல நேசம் பொறக்கும்

அழகா மல்லிகையில் வண்டு வந்து ஊதுது அது தான் நாதசுரம் கேட்டுக்கோ
தவளை தண்ணிக்குள்ள டொர்ர-டொக்கு போடுது தவிலுச்சத்தம் அது பாத்துக்கோ
சக்கரக்கட்டி குக்குறுக்கு சங்கதியெல்லாம் அங்கிருக்கு
மாமரம் எங்கும் கூடுகளாம் கூட்டுக்குக்கூடு ஜோடிகளாம்
பூம்பாற ரோடிது குழியும் மேடுமா - சர்க்காரு லேசுல சரியாப்போடுமா?
வம்புக்குப்போகுற வீணா வழியப்பாத்துட்டுப் போடா டேய்

படிக்கப் பள்ளிக்கூடம் போனதில்ல நானம்மா - படிச்சு என்ன கண்டோம் சொல்லம்மா?
எழுத்து வாசனையே கண்டறியா ஆளம்மா - மனசில வஞ்சம் இல்ல பாரம்மா
பள்ளிக்குப்போற பிள்ளையிலே பாதிக்குப்பாதி தொல்லைகளே
நல்லத யாரும் கத்துக்கலே ஞாயத்தைச் சொன்னா ஒத்துக்கலே
அம்மாடி இங்கிலீஷு வெளுத்து வாங்குது - நம்மோட பாஷ தான் தெருவில் ஏங்குது
எப்படிப்பாடுறேன் தாயி - சொல்லுங்க ஊருல போயி


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Jan 27, 2022 1:43 am

தாலாட்டு இசைக்கோர்ப்பில் இன்னுமொரு சின்னப்பாட்டு எழுதியிருக்கிறார் புலவர் - வேடிக்கையான சிறு பாடல், வயதான பெண்மணியைக் கேலி செய்வது போன்று உருவாக்கப் பட்டிருக்கிறது.

எண்ணிக்கைக்கு ஒன்று என்பதைத் தவிர இதில் பெரிதாக ஒன்றுமில்லை.

தனியாக இந்தப்பாட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கீழே உள்ள நேரக்குறியிட்ட இணைப்பில் அழுத்தினால் அந்தப்பாட்டுக்கு நேரடியாகச் செல்லலாம்!

https://www.youtube.com/watch?v=vjSrvQvwVSo&t=612s


ஆத்தா சொன்னதெப்படி நடக்கும் அப்படி ஊரு, நம்மட ஊரு, இந்த ஊரு
அதச் சுருக்குப்பையில இறுக்கிக் கட்டின பாரு, ஆத்தா பாரு, நல்லாப்பாரு

உம்முகத்தில் முழிச்சாத்தான் சூரியனே கெளம்பும், அந்தச்சூரியனே கெளம்பும்
இல்லாட்டி இருட்டுக்குள்ள போத்திக்கிட்டு உறங்கும், போத்திக்கிட்டு உறங்கும்
அத்தன அதிர்ஷ்டசாலி நீ அதிர்ஷ்டலட்சுமி பேத்தி

பாட்டி ஒன்னையிப்படிப் பெத்ததெப்படி ஆத்தா? எங்கே பெரியாத்தா
இந்தக்கெழட்டு முகத்தில் சுருக்கமெத்தன ஆத்தா , எங்க பெரியாத்தா
உம்முகத்தில் முழிச்சாக்காக் கஞ்சியெப்படிக் கெடைக்கும் ? கஞ்சியெப்படிக் கெடைக்கும்?
நீ குறுக்க வந்தாக்கா நல்லது எப்படி நடக்கும்? நல்லது எப்படி நடக்கும்?

அடடா ஜிங்குச்சிக்கிடி ஜிங்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்ன ஆச்சு?
அய்யய்யோ டங்குடக்கிடி டங்குவாரு போச்சு, டங்குவாரு போச்சு, டங்குவாரு போச்சு


படத்தின் எல்லாப்பாடல்களும் உள்ள காணொளி இங்கே:

https://www.youtube.com/watch?v=vjSrvQvwVSo


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Jan 28, 2022 2:13 am

பாட்டு என்னவோ சூழலுக்கு எழுதப்பட்டது தான் என்றாலும் இரட்டைப் பொருள் படும்படியாக (காமம் கலந்து) விளையாடியிருக்கிறார் புலவர்.

சுமாரான மெட்டும் கருவியிசையும் Sad

இந்த ஒலிப்பேழை வாங்கிய நினைவிருக்கிறது என்றாலும் ஓரிரு முறைகளுக்கு மேல் கேட்காமல் தூசி படியக்கிடந்தது என்பது தெளிவாக நினைவிருக்கிறது!

https://www.youtube.com/watch?v=NQvxTp6PwgUஅடி ஏ புள்ள என்னென்ன அங்கே இருக்கு
அத இப்போதே பாத்தாத்தான் தீரும் எனக்கு
அட நீ தேடும் எல்லாமே இங்கே இருக்கு
அட நீ வாய்யா நல்லாத்தான் நேரம் இருக்கு
அந்த ரகசியத்தக் கொஞ்சம் காட்டுறியா?
அந்த அதிசயத்த வந்து பாக்குறியா?

ஏமாத்தக்கூடாது எங்கிட்ட ஆகாது தனியாப் போனா நான் தான் விடுவேனா?
அடி என் திறம புரியாதா எதிலும் ஜெயிப்பேன் தெரியாதா?
வெட்டுப்புலி நீயா? உன் வீரம் என்ன வாய்யா
அள்ளி விடு பாட்ட அட அந்தியில வேட்ட
என்ன வெல்ல ஆளேது? நான் கைய வெச்சாத் தாங்காது
அத்த புள்ள ராசாத்தி என் வித்த என்ன பாரேன்டி
ஊருல நாட்டுல ஒன்னப்போல் ஆளில்ல மால தான் சூடுறேன் தோளுல

ஆறெல்லாம் நீரோடும் ஊரெல்லாம் தேரோடும் பதமா எதமா சுகமா நடமாடு
புதையல் எடுக்கும் நெனவோடு சரியா வழிய எட போடு ஆகா
வந்த சனம் பாக்க ஒன் பாட்டக் கொஞ்சம் கேக்க
இப்ப நல்ல நேரம் ஒன் எண்ணம் நெறவேறும்
குள்ள நரி காட்டோட சில கள்ள நரி நாட்டோட
சுத்துதடி ராசாத்தி இது எத்தன நாள் கேளேன்டி
காளியே சூலியே நீலியே ஓடி வா காட்டடி நல்லதோர் பாதையapp_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Feb 03, 2022 12:56 am

https://www.youtube.com/watch?v=90KxBz-dJsAசிறப்பான காதல் பாடல், நல்ல மெட்டு - சற்றே வேறுபட்ட கருவியிசை (இந்த ஆண்டுகளில் ராசா நிறைய "ஆராய்ச்சிகள்" நடத்தினார் - வழக்கம் போலத்தான், என்றாலும் தாளக்கருவிகளில் எலெக்ட்ரானிக் பயன்பாடுகள் சற்றே கூடின காலம் இது.)

புலவர் குறும்பாக எழுதியிருக்கிறார் - குறிப்பாகச் சரணங்கள் சிறப்பு!

மான்குட்டி நீ வாடி மீன்குட்டி போலே நீந்தி நீந்திச்செல்லடி
கண்ணுக்குக் கண்ணான கண்ணா நீ என்னைத் தாங்கித்தாங்கிக்கொள்ளு நீ
துள்ளும் வெள்ளம் போல் கொள்ளாத ஆசை
உள்ளம் எங்கெங்கும் கரை மீறிப்போச்சே

மெதுவா மெதுவாத் தென்பாண்டித்தேரு வருதே, இதுக்கா பொண்ணுன்னு பேரு?
அருகே அருகே இப்போது வானம் வருதே, அதுவா நீ தந்த பாசம்?
ஆத்தங்கரை நாணலுக்கு ஆடை கட்டி யாரு விட்டா?
ஆசைகளைக் கண்வழியா ஆரு இங்கு தூது விட்டா?
நடக்கும் நடையில் கொலுசும் சங்கீதம் பாடும்

மடலா மடலா செந்தாழம்பூவு மணமா மணமா நீ வந்து சூட்டு
அழகா அழகா ஆவாரம்பூவு அதுபோல் அதுபோல் நீ மஞ்சள் பூசு
நாதஸ்வர ஓசையிலே மாலை கொடு ஆசைப்படி
நீ சமைஞ்ச வேளையிலே ஓலை தந்த மாமனடி
எனை நான் தருவேன் பரிசம் நீ போட வாய்யா

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Feb 04, 2022 1:12 am

அருமையான கிடார் பின்னணியுடன் தென் பாண்டி நாட்டை வாழ்த்திப்பாடும் பாட்டு.

ராசா சுவைத்துப்பாடியிருக்கிறார் - அவருக்குப் புலவரின் வரிகள் பிடித்திருந்தன என்பது தெளிவு!

இடையிசை இந்தப்பாட்டிலும் இரு சரணங்களுக்கும் ஒன்றே (ஊருறங்கும் சாமத்திலே பாட்டைப்போன்று - ஒரே இசைக்கோர்ப்பில் இப்படி இரு பாடல்கள்).

https://www.youtube.com/watch?v=brGwKAGGWWoஅழகான நம் பாண்டி நாட்டினிலே
கள்ளழகர் வந்து இறங்கும் வைகை ஆற்றினிலே
புத்தாண்டு சித்திரையில் ஊர் கூடும்
நல்ல பௌர்ணமியில் மீனாட்சி சீர் பாடும்

சோமனுக்கு மாலையிட்ட மீனாளே
இங்கு சகலருக்கும் தாயாக ஆனாளே
நாம் விரும்பும் வாழ்வளிக்கத் தாய் இருக்கா
அந்தத்தாய் போலே நமைக்காக்க யார் இருக்கா?

நீர் வளமும் நில வளமும் பெருகி வரும்
தமிழ் நல்லிசையும் மெல்லிசையும் பொங்கி வரும்
சீர் மதுரை அம்மனவள் நிழலிருக்கு இதிலே
இங்கே யார் தயவும் யாருறவும் இங்கே எதுக்கு?
app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

panniapurathar and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Feb 07, 2022 5:49 pm

வெகு விரைவாகச் செல்லும் மெட்டு - மட்டுமல்ல அங்கங்கே திருப்பங்களும் நெளிவுகளும் வேறு.

இப்படிப்பட்ட ஒன்றுக்குப் பாட்டு எழுதுவது எளிதல்ல - அதோடு ஓரளவுக்கு ஒரே கருத்தமைப்பும் இருக்க வேண்டும் என்பதெல்லாம் திரைக்கவிஞர்களுக்குள்ள தடுப்புச்சுவர்கள்.

அதற்குள் நின்று கொண்டு ஓசை நயம் மற்றும் கவித்துவம் கொண்டு இங்கே புலவர் மிளிர்கிறார் என்று கண்டிப்பாகச் சொல்லலாம்!

சிறப்பு!

https://www.youtube.com/watch?v=jXTy0tqabgIசெம்பருத்திப் பூவுக்குச் சேலையென்ன செல்லம்மா?
நான் இருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா?
பூங்காத்து நெருப்பாச்சு அது உள்ளுக்குள்ள கொதிப்பாச்சு
குத்தாலக்குயிலே துணை நீதானம்மா (துணை நீதானய்யா)

செம்பருத்திப் பூவுக்குச் சேலை ஒன்னு தாரியா?
கை புடிச்சு அழகாக் கட்டி விட வாரியா?

வட்ட வட்ட நிலாவுக்குப் பொட்டு வச்சு
வஞ்சி வஞ்சி வந்தா நெஞ்சத்தொட்டு வச்சு
ஒத்துக்கிட்டா தப்பு என்ன?
கொஞ்சம் வெட்டி வெட்டிச் சிட்டு போகையிலே
வச்ச வச்ச கண்ண ஊரு வாங்கலையே
வசியம் பண்ணுது உம் மனசு மெல்ல வளைச்சுப்போடுது உன் சிரிப்பு
உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன்
பாய் விரிக்கும் பொழுது உன் நெனப்பு வருது என்னன்னு சொல்லுவேன் ராசா?

சின்னப் பட்டி தொட்டி எங்கும் உன் பேரைய்யா
நெத்திப் பொட்டு ஒண்ணு வச்சு நீ வாரியா
பச்சக்கிளி வச்சு விடு
வில்லு வில்லு வண்டி கட்டி வந்தா என்ன?
இந்தப்பொண்ணக் கட்டிக்கிட்டுப் போனா என்ன?
மயக்கும் கண்ணிலே தந்தி கொடு அவன் மனசு போல நீ முந்தி கொடு
சொன்னாலே மணக்கும் இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்
மஞ்சத்தாலி இருக்கு மால கூட இருக்கு மங்கள வாத்தியம் வேணும்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Feb 07, 2022 7:29 pm

மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
சின்னமணிக்கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ
மஞ்சள் வண்ண நிலவோ மனசில் எத்தனை கனவோ
அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி

நந்தன வனக்குயிலே நடக்கும் சித்திர மயிலே
சின்ன மணிக்கிளியே சிரிக்கும் நித்தில மணியே
அந்த நாள் மங்கள் நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி

தென்மதுரை வீரனுக்கு என்னுடைய மாமனுக்கு
தேக்குமர தேகமடி யம்மா யம்மா
மாமன் கொண்ட பெண் உனக்கு மை எழுதும் கண் எதுக்கு
என்னை வந்து கொல்லுதடி யம்மா யம்மா
ஆத்துல நான் குளிச்சேன் ஆசையா நீ புடிச்சே
தோளத்தான் நீ புடிச்சே சொர்க்கத்த நான் புடிச்சேன்
அடடா ஒரு அங்குலம் அங்குலமாக நீ ஆசையில் முத்தங்கள் போட
அதை என்னன்னு சொல்லுவேன் எப்படிச் சொல்லுவேன் நானே

கையளவு சின்ன இடை சொல்லிக்கொடு என்ன விலை
கேட்ட விலை நான் கொடுப்பேன் கண்ணே கண்ணே
ஆசை அது எவ்வளவு அள்ளிக்கொடு அவ்வளவு
உன் அளவும் என் அளவும் ஒன்னே ஒன்னே
விண்ணிலே வெண்ணிலவு வீட்டிலே பெண்ணிலவு
இன்று தான் நள்ளிரவு நான் சொல்லவா நல்வரவு
அடடா இது தண்ணீரில் தாமரை அல்ல இது பன்னீர்த்தாமரையம்மா
இந்தத் தாமரை மொட்டுகள் பூப்பதென்ன உனக்காக


https://www.youtube.com/watch?v=3NBoA0KPutsஇந்தப்பாட்டெல்லாம் வந்தபொழுது கேட்டிருக்கிறேனா இல்லையா என்றே நினைவில்லை.

இவையெல்லாம் ராசா-பாலு இழையில் இல்லை என்பதால் என் மனதில் பதியாமல் போனவை என்று கொள்ளலாம்.

அல்லது இது ராசா பாடல் என்று தெரியாமலே கேட்டிருக்கவும் வழியுண்டு. இது வந்த காலங்களில் ராசாவின் இசை விரைவாக ஒலிமாற்றங்கள் கண்டு கொண்டிருந்ததால் வந்த குழப்பமாகவும் இருக்கலாம்.

எப்படிப்பார்த்தாலும், தவற விட்ட பாடல். கேட்க இனிமையாகவும் துள்ளலாகவும் இருக்கிறது.

புலவரைப் பொறுத்தவரை இன்னொரு காமக்காதல் பாட்டு. வழக்கம் போல எளிதாக எழுதித் தள்ளியிருக்கிறார்.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Feb 10, 2022 1:08 am

வியட்நாம் காலனி - இந்த இசைக்கோர்ப்பில் சற்றே வேறுபட்ட விதத்தில் இசைக்கப்பட்டிருக்கும் பாட்டு.

குழுவினரின் (அல்லது பாடகர் பாடகியின் குரலே வேறு அலைவரிசையில் வரும்படியான) ஒத்திசை  / சேர்ந்திசை எல்லாம் கொண்டு அலங்கரிப்பட்டிருக்கும் காதல் பாட்டு. கருவியிசை மிகக்குறைவாக எழுதப்பட்டிருப்பதால் இது ராசா பாட்டா என்ற ஐயம் வரலாம். (இந்தப்படம் - இவர் இசை என்றெல்லாம் தெரியாமல் கேட்டால் நான் நம்பியிருக்க வழியில்லை).

பாடல் எழுதுவதற்குச் சற்றே கடினமான மெட்டு மற்றும் பாடல் அமைப்பு என்பதால் புலவர் சிறப்பாகவே தன் வேலையைச் செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்!

என்னவோ சொல்ல வந்தேன் நெஞ்சில் அது நின்னு போச்சு
சொல்லத்தான் ஓடி வந்தேன் சொல்ல மட்டும் வார்த்த வர்ல
ஏங்கும் கண்ணப்பாரு வாங்கும் மூச்சக்கேளு
எண்ணம் தெரிஞ்சு போச்சா எல்லாம் புரிஞ்சு போச்சா
மாமா மாமா மாமா ஒய் மாமா மாமா மாமா

வானமெங்கும் ஏறி நடப்போம்
மேகம் தன்னில் மேடை அமைப்போம்
மின்னலிலே மாலை தொடுப்போம்
சொல்லச்சொல்ல உள்ளம் துள்ள

சொல்ல வந்ததென்ன என்ன? நெஞ்சில் அது நின்னதென்ன?
யோசிச்சு நீ சொல்லு சொல்லு ஆச வச்ச சின்னப்பொண்ணே
ஏங்கும் கண்ணப்பாரு வாங்கும் மூச்சப்பாரு
எண்ணம் தெரிஞ்சு போச்சு எல்லாம் புரிஞ்சு போச்சு
ஏம்மா ஏம்மா ஏம்மா ஹோய் வாம்மா வாம்மா வாம்மா

சீவிச்சிங்காரம் செஞ்சு பொண்ணு ஊர்கோலம் வந்தா
பார்க்கும் எல்லோர்க்கும் ஆயுள் பாதி தேறாதம்மா
மாமன் பேச்சக்கேக்கும்போது தேகம் ஜில்லென்று ஆச்சு
மெல்ல உன்னைத்தீண்டும் காற்று நாளும் பாடும் காதல் பாட்டு
நீயணைக்கும் பக்கம் எங்கும் தீயணைஞ்சு போகும் போகும்
தீயணைச்ச மாமனுக்குத் தேனெடுத்து நீ கொடுத்து நன்றி சொல்ல வேணும் வேணும்

யாருமில்லாத தேசம் ஒன்று நாம் காண வேண்டும்
அங்கு நாம் வாழ வேண்டும் ஆயுள் தீராமலே
ஓடும் ஆறும் நீரும் எங்கும் நீயே வேண்டும்
வீசும் காற்றில் கூட உந்தன் காட்சி வேண்டும்
தொட்ட பக்கம் எங்கும் நீயே தட்டுப்பட வேண்டும் வேண்டும்
கட்டில் இட்டு மெத்தையிட்டுக் காதல் வித்தை கத்துக்கிட்டுக் கட்டிக்கொள்ள வேண்டும் வேண்டும்


https://www.youtube.com/watch?v=3FQ1q5hbZCQ


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Feb 10, 2022 1:30 am

அதே இசைக்கோர்ப்பில் இன்னொரு டூயட் காதல் பாட்டு - இது வழக்கம் போன்ற வடிவில், தெளிவாக "ராசா பாட்டு" என்று பறைசாற்றும் விதத்தில்.

மனோ - சுவர்ணலதா சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். அதாவது, போதுமான மென்மை மற்றும் காதலுடன். அல்லது, "அத்து மீறாமல்" Smile

புலவரும் அளவான காமத்துடன் எழுதியிருப்பது சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. பொதுவாக இப்படிப்பட்ட சூழலுக்கு இரு பொருள் (அல்லது காமப்பொருள் மட்டும்) வரத்தக்க விதத்தில் திரைப்பாடல் எழுதுவது தொன்று தொட்டே வழக்கம். அந்த அடிப்படையில் பார்த்தால் இது சற்றே வேறுபட்ட பாடல் தான்!

https://www.youtube.com/watch?v=C-65WKKvbq0மார்கழி மாசம் ரொம்பக் குளிரெடுக்காதா?
ராத்திரி நேரம் அந்தப் பசி எடுக்காதா?
ஊதக்காத்து கிள்ளுதையா ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா

பெண் பார்க்க வந்த பின்னே பேசாமப் போவதெங்கே கண்மணி எனக்கது புரியல
சொல்லாம வந்து நின்னேன் கண்ணால பேசச் சொன்னேன் ஏனின்னும் எனக்கது தெரியல
கண்டாங்கிச் சேலை ஒரு கல்யாண மாலை
கொண்டாங்க போதும் இனி வேறென்ன வேலை
நாயனம் ஊதோணும் ஊர்கோலம் போகோணும் மானே

உன்னோட ஏக்கத்திலே ஊர்பாதித் தூக்கத்திலே என்னவோ எனக்குள்ளே பேசுறேன்
என்னோட தேகத்திலே நீ போட்ட மோகத்திலே காதலின் கவிதை நான் பாடுறேன்
நீ பாடும் ராகம் என்றும் நெஞ்சோரம் கேட்கும்
தூங்காத கண்ணும் எந்தன் தோள் சேர்ந்து தூங்கும்
தோளிலே பொன்னூஞ்சல் நீ போட்டுத் தாலாட்டு வா வா

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Feb 11, 2022 9:35 pm

தொடரும் படத்தில் ஒரு "சூழல் பாடல்" எழுதியிருக்கிறார் புலவர்.

பழைய காலத்துப்படங்களின் இறுதிக்காட்சியில் பாடலும் உணர்வு வெள்ளங்களும் பொங்குவது போன்ற சூழல். ஒரு பெண்ணுக்குத் திருமணச்சூழல் - இன்னொருத்தி இறப்பு நெருங்கும் நேரம் என்று நாடகம் நிறைந்த காட்சிகள்.

படம் பார்த்தவர்களுக்குத்தான் கதை தெரியும் - மற்றபடி விறுவிறுப்பாகச் செல்கிறது பாட்டு Smile

https://www.youtube.com/watch?v=RY_7JR7KaZkகணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி
உயிரையும் கூடத் தருவாளந்த உத்தமி
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம் 
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்
அன்பை வளர்ப்பாள் தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்


தெய்வ வீணை இதை இங்கு வீதியினில் போட்டது விதி தானா?
தேடி வந்த துணை வேறு மாலையிடச் செய்தது விதி தானா?
என்ன ஜென்மமடி பெண்ணின் ஜென்மமிது? சொல்லடி சிவசக்தி!
எந்த நாளிலடி இந்த வேதனைகள் தீர்வது சிவசக்தி?
தொடக்கமெது முடிவும் எதுவோ எதுவும் இங்கு தெரியாது
நடப்பதென்ன கதையா? கனவா? அதுவும் இங்கு புரியாது
மாவிலைத் தோரணமாடுது அங்கொரு வாசலிலே
மங்கையினால் உயிராடுது இங்கொரு ஊசலிலே


நாயன ஓசையில் அங்கே ஓர் வாழ்த்தொலி கேக்குதம்மா
பேதையின் பாதையில் இங்கே ஓர் கானம் நெருங்குதம்மா
அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை ஆரம்பமாகுதம்மா
அந்திமத்தீயினில் ஓர் வாழ்க்கைப் பயணம் ஓய்ந்திடுமா
கணவனது வாழ்வுக்காக நொந்து நொந்து நூலானாள்
தன் தலையில் தீயைத்தாங்கும் மெழுகுவர்த்தி போலானாள்
வாழ்க்கையின் கணக்கினில் ஆண்டுகள் மாதங்களாகுதம்மா
மாதமும் தேய்ந்தொரு நாளென நொடியெனப் போகுதம்மா
விதி இதுவா? அவனெழுதும் கணக்கிதுவா?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Feb 14, 2022 9:36 pm

மேலே கண்ட அதே போன்ற இன்னொரு சூழல் பாடல் - சின்னத்துரை என்ற படத்தின் இசைக்கோர்ப்பில் புலவர் எழுதி இருக்கிறார்!

இதுவும் உணர்வுகளின் கொதிப்பிலும் குமுறலிலும் பாடப்படுவதாகக் காட்சியில் இருக்கிறது.

கதை தெரியாததால் என்ன சூழல் என்று புரியாவிட்டாலும் மெட்டும், உறுமி உள்ளிட்ட கருவியிசைகளும் உணர்வுப் பீறிடலுக்குப் போதுமான அளவு உதவுகின்றன - அதை அப்படியே கொண்டு செல்லும் வண்ணம் புலவரின் சொற்களும் இருக்கின்றன!

நீயே கதியம்மா என் தாயே துணையம்மா
நல்லவரை வாட்டுவதா? வேதனையில் ஆழ்த்துவதா?
நீதானே காவலடி, சோதனை போதுமடி!

தருமம் தழைக்க வந்த ராசாவும் வெறும் தரையில் கிடக்க விதியோ?
தினமும் துயரில் இங்கு தான் வாடிச் சுடும் கனலில் எரிய விதியோ?
அருமைத்தலைவன் உயிர் போகாமல் நீ அபயம் கொடுத்து விடம்மா
தலைவன் கருணை மனம் நோகாமல் அவர் துயரம் துடைத்து விடம்மா
காட்டு முகம் காட்டு மாகாளி கண்ணீர் இதை மாற்று கருமாரி
ஏற்று விழி தீபம் அதை ஏற்று போதும் அடி போதும் விளையாட்டு
சிவசக்தி சிவசக்தி என உன்னை அழைத்ததன் பொருள் என்னவோ?
படுத்தவன் எழுந்திட ஒரு சக்தி தர இன்னும் மனம் இல்லையோ? வரம் இல்லையோ?

கோயில் குன்றத்திலே அடி தீயை நீ மூட்டலாம்
ஏழை நெஞ்சத்திலே அடி நீ ஏன் தீ மூட்டினாய்
ஏழைக்கு ஆதாரம் அவர் தானம்மா, அஞ்சாத நெஞ்சுக்குத் துயர் ஏனம்மா?
என் ஆவி போனாலும் போகட்டுமே! என் ஜீவன் அவர் என்றும் வாழட்டுமே
தலைவன் பிழைக்க எனது உயிரைத்தரவா? தருமம் நிலைக்கத் தணலில் இறங்கி வரவா?
எனது உயிரை எடுப்பாய் இவரைப் பிழைக்க விடுவாய் ஆங்காரி ஓம்காரியே மாரி


https://www.youtube.com/watch?v=VOq5sLnPg30


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Feb 16, 2022 8:53 pm

முதல் முறையாகக் கேட்கிறேன் - செந்தூரம் என்ற படத்துக்காகப் புலவர் எழுதிய பாட்டு!

இப்படி ஒரு இனிமையான தெம்மாங்குப்பாட்டை இவ்வளவு நாள் கேட்காமல் எப்படி விட்டேன் என்று தோன்றுகிறது!

மிகச்சிறப்பு!  உன்னியும் பவாவும் பாடுவது சிறுவர்-சிறுமியர் பாடுவது போல இருந்தாலும் ஒரு புத்துணர்வு இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!

தென்றல் வீசுவது போன்ற இசையும் சொற்களும்!

https://www.youtube.com/watch?v=kc-iV1JpNeUஆலமரம் மேலமரும் பச்சப்பசுங்கிளியே
நித்தம் நித்தம் ஓன் நெனப்பில் நெஞ்சம் உறங்கலியே
காத்து மேல ஏறி மேகத்தயெல்லாம் தாண்டி
எங்கே போற சொல்லு ஓ நாங்களும் வாரோம் நில்லு
மேலே பறக்கும் நீயும் கொஞ்சம் கீழே பாத்துக்கோ
இல்ல கீழ இருக்கும் எங்களக் கொஞ்சம் மேலே கூட்டிக்கோ

ஊரு அழுக்குல நீங்க இந்த ஆத்தில் வெளுக்குறோம் நாங்க
நாங்க வெளுப்பது போல அந்த வானம் வெளுப்பது இல்ல
ஆத்துக்குள்ள சேறு இந்தச் சேத்தில் எங்க சோறு
பாடுபட்டா ஆச்சு அது இல்லையின்னாப் போச்சு
நாங்க நல்லா வாழும் நல்ல காலம் எப்போச் சேரும்
தூது சொல்லும் வாயில் நல்ல சேதி சொல்லம்மா

பஞ்சப்பரம்பரை நாங்க, நாம அஞ்சிக் கெடப்பது ஏங்க?
நாளை நமக்குள்ள காலம் அது நம்மை விட்டு எங்கே போகும்?
யாரை எங்கே கேட்டு இந்தக் காத்துச் சொல்லும் பாட்டு?
ராகம் வந்தாப் பாடு ஒரு தாளம் வந்தாப் போடு
ஊரை என்ன  கேக்க இதில் ஜாதி என்ன பாக்க
கங்கைத்தண்ணி வைகைத்தண்ணி எல்லாம் ஒன்னே தான்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Kr likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Kr Thu Feb 17, 2022 6:26 pm

app_engine wrote:முதல் முறையாகக் கேட்கிறேன் - செந்தூரம் என்ற படத்துக்காகப் புலவர் எழுதிய பாட்டு!

இப்படி ஒரு இனிமையான தெம்மாங்குப்பாட்டை இவ்வளவு நாள் கேட்காமல் எப்படி விட்டேன் என்று தோன்றுகிறது!

மிகச்சிறப்பு!  உன்னியும் பவாவும் பாடுவது சிறுவர்-சிறுமியர் பாடுவது போல இருந்தாலும் ஒரு புத்துணர்வு இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!

தென்றல் வீசுவது போன்ற இசையும் சொற்களும்!

https://www.youtube.com/watch?v=kc-iV1JpNeUஆலமரம் மேலமரும் பச்சப்பசுங்கிளியே
நித்தம் நித்தம் ஓன் நெனப்பில் நெஞ்சம் உறங்கலியே
காத்து மேல ஏறி மேகத்தயெல்லாம் தாண்டி
எங்கே போற சொல்லு ஓ நாங்களும் வாரோம் நில்லு
மேலே பறக்கும் நீயும் கொஞ்சம் கீழே பாத்துக்கோ
இல்ல கீழ இருக்கும் எங்களக் கொஞ்சம் மேலே கூட்டிக்கோ

ஊரு அழுக்குல நீங்க இந்த ஆத்தில் வெளுக்குறோம் நாங்க
நாங்க வெளுப்பது போல அந்த வானம் வெளுப்பது இல்ல
ஆத்துக்குள்ள சேறு இந்தச் சேத்தில் எங்க சோறு
பாடுபட்டா ஆச்சு அது இல்லையின்னாப் போச்சு
நாங்க நல்லா வாழும் நல்ல காலம் எப்போச் சேரும்
தூது சொல்லும் வாயில் நல்ல சேதி சொல்லம்மா

பஞ்சப்பரம்பரை நாங்க, நாம அஞ்சிக் கெடப்பது ஏங்க?
நாளை நமக்குள்ள காலம் அது நம்மை விட்டு எங்கே போகும்?
யாரை எங்கே கேட்டு இந்தக் காத்துச் சொல்லும் பாட்டு?
ராகம் வந்தாப் பாடு ஒரு தாளம் வந்தாப் போடு
ஊரை என்ன  கேக்க இதில் ஜாதி என்ன பாக்க
கங்கைத்தண்ணி வைகைத்தண்ணி எல்லாம் ஒன்னே தான்

In fact, I love all the songs in Senthuram - very under appreciated album.  There is another song "unnai kaaname" sung by IR and Director Sunderrajan.  I love this song - a favorite of mine

Kr

Posts : 76
Reputation : 0
Join date : 2013-08-26

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Feb 18, 2022 1:20 am

இன்னொரு சிறப்பான தெம்மாங்குப்பாட்டு அதே இசைக்கோர்ப்பில். இது ராசாவின் குரலில் என்பதால் நாட்டுப்புறப்பாட்டின் இனிமை கூடுகிறது. அதற்கேற்பச் சிறப்பான சொற்களும் கருவியிசையும் எல்லாம் சேர்ந்து பாட்டுக்குக் கூடுதல் மிளிர்ச்சி இருக்கிறது!

இதையும் இன்று தான் முதலாகக் கேட்கிறேன் என்பது சிறிய அளவில் வருத்தமளிக்கிறது.

கொண்டாடப்பட வேண்டிய இசைக்கோர்ப்பு இது என்பதில் ஐயமில்லை!

https://www.youtube.com/watch?v=8eSAQ6W9wHMஒன் பக்கத்தில ஒரு பூவ வச்சா அந்தப்பூவும் மயங்கிப்போகும்
கை பட்டு விட்டா ஒன்னத்தொட்டு விட்டா அதில் தேனும் வழிஞ்சு ஓடும்
உன் சிரிப்பிலே ஒரு சலங்கைச்சத்தம்
நான் இருப்பதே இனி ஒனக்கு மட்டும்
அந்த ஆவாரம்பூவும் ஒன்னப் பாத்து மயங்கிப்போச்சு

ஏழையிலும் ஏழையின்னு ஊருல சொன்னாங்க
கேனையிலும் கேனையின்னு கேலியும் செஞ்சாங்க
ஆயிரந்தான் சொல்லட்டுமே என்ன குறை எனக்கு?
நீ ஒருத்தி சொந்தமுன்னு இங்கிருக்க எனக்கு
காத்தோடு காத்தாக் கலந்தோமே ஆத்தா இது போதும் இது போதுமே
நீ முன் நடக்க நானும் பின் நடக்க இப்போப் பாதை தெரிஞ்சு போச்சு
என் கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் உந்தன் ஆச நெறஞ்சு போச்சு
அடி உன்னையும் என்னையும் ஒன்னுல ஒன்னெனச் சேந்து புடிக்கும் காத்து

எங்கிருந்தோ கொண்டு வந்து சொர்க்கத்த வச்சானே
சொர்க்கத்துக்குப் பக்கத்துல என்னையும் வச்சானே
அச்சுவெல்லக் கட்டியிலே கன்னத்தச் செஞ்சானே
ஆண்டவனே திங்கச்சொல்லி எங்கிட்டத் தந்தானே
ஆகாசம் மேல நீ கூட்டிப்போறே அம்மாடி தள்ளாடுது  
நான் அந்தரத்தில் இப்போத்தொங்குறனே உன்னத்தாவிப் பிடிக்கலாமா?
நான் அஞ்சுறனே உன்னக்கெஞ்சுறனே என்ன அள்ளியெடுக்க வாம்மா
அடி ஆத்துல மேட்டுல பாடுற பாட்டுல நாணல் அசைஞ்சு ஆடும்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Feb 21, 2022 7:22 pm

என்ன அழகான, இனிமையான பாடல்! சின்னக்குயிலின் குரலும் அப்படியே கொஞ்சுகிறது!

புலவரும் மிக அழகான, மென்மையான சொற்கள் கொண்டு இந்த மெட்டைச் சிறப்பித்திருக்கிறார். ராசா இந்தப்பாடலுக்கு இனிமையும் மென்மையும் கொண்ட கருவியிசை வேண்டும் என்று முனைப்போடு வடிவமைத்திருப்பதும் கேட்க முடிகிறது.

சிறு மருதாணிப்பூச்சு - இப்பேர்ப்பட்ட சிறப்பான ஒரு பாட்டை இத்தனை ஆண்டுகளாகக் கேட்காமல் விட்டது தான் ஒரே மனக்குறை!

மிகச்சிறப்பு - செந்தூரத்தில் புலவரின் இந்த மூன்றாவது பாடல்!

https://www.youtube.com/watch?v=vZYMtSF1OHAஒனக்கொருத்தி பொறந்திருப்பா 
தளதளன்னு வளந்திருப்பா 
தனியே இருக்கோம்னு கலங்காதே
துணையே கெடைக்கலேன்னு வருந்தாதே 
ஒரு நாளு திரு நாளு வரும் பாரு


சிறு மருதாணிப்பூச்சு வாய் மணக்கும் அவ பேச்சு 
இரு விழி வீசும் வீச்சு அது விரிந்தாலே போச்சு 
சொக்கவைக்கும் ரதியா சுத்திச்சுத்தி வரும் நிலவா 
ஊர்வசிக்கு உறவா ஒன்னத்தேடி அவ வருவா 
ஆத்தாடி அவ பாத்தாலே இந்த உலகம் மறந்து போகும் 


அன்பால் உனை நீராட்ட அள்ளிக்கொஞ்சிப் பாராட்ட ராணி மகாராணி வருவா 
மடிமேல் உன்னைத்தாலாட்ட மஞ்சத்துல சீராட்ட தேவி மகாதேவி வருவா 
ஒனக்கெனப் பொறந்தவ ஒறவெலாம் மறந்தவ தேடி வருவா
அழகுல சிறந்தவ அமுதமா இனிப்பவ கூடி வருவா
குறையேதும் இல்லாத அழகான மகராசா 
ஒன்னப்பாத்தா எந்தப்பொண்ணு வேணான்னு சொல்லுவா?


சொல்லால் சொல்ல ஆகாது சொந்தபந்தம் யார் ஏது தூது சொல்லும் பாட்டு இது
உள்ளுக்குள்ள தூங்காது ஒத்தச்சொல்லு தாங்காது நான் படிக்கும் ராகம் இது 
எனக்குந்தான் நடக்குமா? இதுவெலாம் கெடைக்குமா? கேட்டுச்சொல்லம்மா!
கனவெலாம் பலிக்குமா? கசக்குமா, இனிக்குமா? காதல் கண்ணம்மா!
உம்மேல என்மேல உண்டான அன்பால 
ஊருகோலம் போகும் நேரம் உண்டாகுமா?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Sat Feb 26, 2022 1:16 am

பாடல் வரிகளில் சினமும் ஏளனமும் சேர்ந்து வருவதாலோ என்னவோ ராசாவும் மிக எளிதான மெட்டு மற்றும் இசையமைப்புக் கொடுத்திருக்கிறார்,

வேண்டுமென்றால் இதே பாட்டைக் கடுஞ்சினத்துடன் பாடுவது போல ஆக்கி இருக்கலாம். ஏன் இப்படி விளையாட்டாகச் செய்திருக்கிறார்கள் என்று படம் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்,

தோழர் பாண்டியன் - தமிழ் மகனே!

https://www.youtube.com/watch?v=RFnjCI0Inh0தமிழ் மகனே, தமிழ் மகனே, ஏன் பிறந்தாய் தமிழ் மகனே?
ஏய்ச்சுப் பிழைப்பவனும் தமிழ் மகனே
ஏமாந்து போறவனும் தமிழ் மகனே
மேடைப் பேச்சைக் கேட்டுக்கேட்டு கையைத்தட்டி நின்ற காலம் போகட்டும் போகட்டும்
காசை வாங்கி ஓட்டுப் போட்டு கையைக் கட்டும் காலம் போதுமே போதுமே


நடிகர் நடிகையை தெய்வமாக்கியே பல்லக்கிலே தூக்கிப்போற தம்பியே தம்பியே
போலித்தலைவர்கள் காட்டும் பாதையை நம்பிக் கெட்டுப் போனாய் நெஞ்சம் வெம்பியே வெம்பியே
வெண்ணை வழியும் கோடம்பாக்கம் அண்ணன் இலையிலே
எண்ணையும் இல்லே ஆதம்பாக்கம் தம்பி தலையிலே
தமிழர்கள் என ஒரு இனம் உண்டாம் தனிப்பட அவர்க்கொரு குணம் உண்டாம்
கவிதை இனிக்குது உண்மை உதைக்குது தமிழன் வாழ்கவே


தமிழன் குழந்தைகள் தாயைத்தந்தையை மம்மி என்றும் டாடி என்றும் சொல்லுதே சொல்லுதே
தமிழன் வீட்டிலே டிவி காட்சியில் நானும் நீயும் பேசும் மொழி இல்லையே இல்லையே
கை வளையல் காதில் மாட்டும் காலம் ஆனதே
தாவணிகள் சல்வார் கமீஸ் ஆகிப் போனதே
தறி கெட்டுப் போனது சரி தானா? தலைமுறை இடைவெளி இதுதானா?
தமிழைத் தமிழனே பேசக்கூசுறான் தமிழ்த்தாய் வாழ்கவே

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Mar 03, 2022 10:18 pm

என்னென்ன பாடாப்படுத்துறான் - ஆண்டான் அடிமை 

அன்பு சார் இந்தப்பாட்டுப் புலவர் என்று குறிப்பிட்டிருந்தாலும் சோனி பாடலாசிரியர் பெயர் தாமரை என்று யூட்யூபில் இட்டிருப்பது ஒரு தலைவலி. (விக்கிப்பீடியாவும் அவ்வாறே சொல்கிறது). வலையில் கிட்டும் படங்களில் யார் யார் எந்தெந்தப்பாட்டு என்று இல்லை.

நல்ல வேளையாக ட்விட்டரில் பாலாஜி அவர்களும் தேவா அவர்களும் படம் அனுப்பி உறுதிப்படுத்தினார்கள்!

IR-Pulamaippiththan combo songs - Page 7 Fmu6ks10

IR-Pulamaippiththan combo songs - Page 7 Fmvfeh10

இன்னொரு தொல்லை பாடல் வரிகள் வேறு எங்கும் கிடைக்காதது! பல பாடல்களுக்கும் யாரவது வலையில் (தப்பும் தவறுமாகவாவது) இட்டிருப்பார்கள் - எடுத்துச் சரி செய்து விடலாம். 

இந்தப்பாட்டு கிட்டவில்லை!
 
பவதாரிணி / ஹரிணி இவர்கள் குரல் இனிமை தான் என்றாலும் சொற்கள் அங்கங்கே தெளிவில்லாமல் வருவதால் பாடல் வரிகளைக் கேட்டு எழுதியெடுப்பது பெரும் தலைவலி Sad

0.25 X  விரைவில் ஓட்டினால் கூடச் சில சொற்கள் தெளிவில்லாமல் தான் கேட்கின்றன. அவ்வளவு மட்டமாகப் பாடியிருக்கிறார் ராசகுமாரி (அது என்ன "மனசோசரோரகம்" என்று புரியவில்லை)

இனிமையான பாட்டு மற்றும் சிறப்பான கருவியிசைக்கோர்ப்பு!

என்னென்ன பாடாப் படுத்துறான் 
எங்கெங்கும் வந்து துரத்துறான் 
தன் கண்ணாலே எனைத்தின்னானே 
அவன் அங்கங்கே தொட்டானே ஆசைத்தீ வச்சானே 
அதனாலே தூக்கம் கெட்டுப்போச்சு 
அவன் மேல நெஞ்சம் ஒட்டிப்போச்சு


எந்தன் மனதுக்குள் உந்தன் அழகினைச் சித்திரம் தீட்டி வைத்தேன்
கண்களில் வாசலில் நீ வரும் வேளையில் கோலமும் போட்டு வைத்தேன் 
அந்திப்பொழுதினில் வந்த மயக்கத்தில் நான் கொஞ்சம் காய்ந்து கொண்டேன் 
காதோரம் உன் வார்த்தை தேனாகப்பாயாதோ?
கல்யாணப்பூமாலை உன் கைகள் ஆகாதோ?
கண் கதவு தெறந்திருக்கு மனசோசரோரகம் நீ வாழ ராசாவே


ஓலைக்குடிசைக்குள் ஏழை மனசுக்குள் எப்படித்தேடி வந்தான்?
அன்பை நினைக்கையில் இன்பம் எனக்கொரு ஆயிரம் கோடி தந்தான் 
ஜன்னல் கதவினைத் தென்றல் திறந்தது நீ வரும் சேதி சொல்ல 
கண்ணிலிருந்தொரு மின்னல் அடித்தது காதலின் பாதை சொல்ல 
காற்றோடு காற்றாக நீ என்னைத்தீண்டாதே 
கண்ணா என் நெஞ்சத்தில் மோகத்தைத் தூண்டாதே 
என் தவிப்பு மனக்கொதிப்பு தினமும் தினமும் உருகும் தாங்காது என் கண்ணா 

https://www.youtube.com/watch?v=gFGk-C_Bm3s


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Mar 07, 2022 10:36 pm

"ஒன்னா இருக்கக் கத்துக்கணும்" என்று ஒரு படத்தின் டைட்டில் பாடலைப் புலவர் எழுதி கங்கை அமரன் பாடியிருக்கிறார். ஒரே சரணம் உள்ள சின்னப்பாடல்.

முழுவதும் சமூகநீதிக்கருத்துக்கள் இட்டிருக்கிறார் புலவர். படத்தின் ஆகமொத்தக்கருத்து என்ன என்று தெரியவில்லை. என்றாலும், இந்தப்பாடல் வரிகள் சுவையானவை தான்!

மனுசனத் தெருத்தெருவாத் தேடுங்கடா சாமி
பகலுல வெளக்கு வச்சுப்பாருங்கடா சாமி
இங்க ஆளுக்கொரு சாதி அந்த சாதிக்கொரு நீதி
அது ஒன்ன ஒன்னு மோதி ரத்தம் ஆச்சு வீதி

பல்லாக்குத் தூக்குறவன் ஏறிக்கிட்டா என்னாகும்?
உல்லாசவாசிக்கெல்லாம் ஆத்திரந்தான் உண்டாகும்!
இங்கேயோ புதிய சித்தாந்தம் அங்கேயோ பழைய ராஜாங்கம்
ஆத்தோட பேரு வேற தண்ணியெல்லாம் ஒன்னே தான்
ஆகாச எல்லைக்குள்ள பூமியெல்லாம் ஒன்னே தான்
ஒன்னோட உள்ளங்கையில் மேடுபள்ளம் பாக்காதே
இத்தோட விட்டுப்புடு சாதிகள்லாம் கேக்காதே
எது மேலே எது கீழே அது மாறிப்போகும் நாளைக்கு


https://www.youtube.com/watch?v=2A2pqcalWrs


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Mar 07, 2022 11:47 pm

மிகச்சிறப்பான தெம்மாங்கு மெட்டு - தலையை ஆட்டாமல் அல்லது உடலை அசைக்காமல் இந்தப்பாட்டைக் கேட்பது கடினம்.

குறிப்பாக அந்த நீண்ட அனுபல்லவிப்பகுதி - அப்படியே பலாச்சுளையைத் தேனில் தோய்த்துக்கொடுப்பது போன்ற இனிமையோ இனிமை!

"அந்தி வரும் நேரம்" போன்ற அதே நடை மற்றும் தாளக்கட்டு என்பது புலவர் போன்றே இன்னொரு ஒற்றுமை Smile

சிறப்பான வரிகள் - சிறுவர் சிறுமியருக்குக் கல்வி வெளிச்சம் தரும் ஆசிரியர் பாடும் சூழல் என்பதால் மனதில் சட்டென்று ஒட்டிக்கொண்டு விட்டன!

வாழ்க!

இன்று தான் முதலில் கேட்கிறேன் என்றாலும் உடனே நெகிழச்செய்த பாட்டு!

நாளைத்தலைவனல்லவா? வாடா ஏழை உலகின் மன்னவா!
சின்னப்பிள்ளை உன்னை நம்பிச் சேதி சொல்லும் கண்ணை நம்பி அன்னை பூமி காத்திருக்குது
இன்று உள்ள தீமை யாவும் நாளை இங்கு மாறிப்போகும் என்று நெஞ்சம் பூத்திருக்குது

நீயும் புத்தன் ஆகலாம், காந்தி போல வாழலாம்
தேசம் உன்னை வாழ்த்தலாம், தெய்வம் என்று போற்றலாம்
உனக்குள் திறமை இருக்கு அது உனைப்போல் உறங்கிக்கிடக்கு
விழித்தால் அதுவும் விழிக்கும் தூங்கிக்கிடந்தால் உலகம் பழிக்கும்
ஊருக்காக நாட்டுக்காக வாழவேண்டும் வேண்டும்
உன்னை எண்ணிக்காலந்தோறும் நாடு பேச வேண்டும்
நாடு வேறு வீடு வேறு என்பது இல்லையடா

கோவில் இந்தப்பள்ளி தான் தெய்வம் தந்த கல்வி தான்
தீபம் கல்வி ஞானமே தேசமெங்கும் வேணுமே
பிறரின் நலத்தை விரும்பு நாளும் பெரியோர் தமை நீ வணங்கு
பகையும் பழியும் மறந்து தொண்டு புரிவாய் துணையாய் இருந்து
யாரு பூமி என்று பார்த்தா ஆற்று வெள்ளம் பாயும்?
யாரு வீடு என்று கேட்டா காற்று வந்து வீசும்?
ஆற்றைப்போல காற்றைப்போல நீயும் வாழ்ந்து விடு!


https://www.youtube.com/watch?v=mfvHP49yMOUapp_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 7 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum