IR-Pulamaippiththan combo songs
4 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Re: IR-Pulamaippiththan combo songs
கண்களுக்குள் பாட்டை ராஜாவின் இசைக்காகவும், கவிதை வரிகளுக்காகவும் பாட்டைக் காதலிக்கலாம்.
Janaki mam ...பாடும் அழகிற்காகவும்...அதுவும்....அலைபோல் என்ற வார்த்தையை பாடும் அழகிற்க்காக.
Janaki mam ...பாடும் அழகிற்காகவும்...அதுவும்....அலைபோல் என்ற வார்த்தையை பாடும் அழகிற்க்காக.
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: IR-Pulamaippiththan combo songs
இந்தப்பாட்டு சிறுவயது நினைவுகளைச் சற்றே கிளறியதால் கொஞ்சம் கதை சொல்ல வேண்டியிருக்கிறது. (இந்த இசைக்கோர்ப்பின் பிற பாடல்கள் போல இது வந்த காலத்தில் அவ்வளவாக அறியப்படவில்லை. அதனால், அப்படிப்பட்ட "மலரும் நினைவுகள்" அல்ல. இது பாட்டின் பொருள் அடிப்படையில் நினைவுக்கு வந்த "சக்களத்தி" விவரங்கள்).
அப்பாவுக்கு மூன்று அக்காக்கள் (அதாவது, எனக்குப் பெரியத்தை, நடு அத்தை, சின்னத்தை என்று மூன்று அத்தைமார்).
அதில் மூத்த இருவருக்குக் குழந்தைப்பேறு இல்லை. அக்கால நாட்டுப்புற வழக்கப்படி அவர் இருவருக்கும் சக்களத்திகள் இருந்தனர். அவர்களுக்குள் வெறுப்பு, சண்டை, சாடைப்பேச்சு இவையெல்லாம் இருந்ததா இல்லையா என்றெல்லாம் அறிகிற வயது எனக்கு அக்காலத்தில் இல்லை.
பெரியத்தை கணவர் நான் ஐந்தாவது படிக்கையில் புற்றுநோயால் இறந்து போனார்.
மது / புகையிலை என்று எப்போதும் பயன்படுத்தியதன் விளைவு. அப்போது அவருக்கு இரண்டாம் மனைவி வழியே மூன்று குழந்தைகள்.
சினம், கண்டிப்பு, சீற்றம் - இவை தான் நம் அப்பா என்று நினைத்துக்கொண்டிருந்த நான் அவர் குலுங்கிக்குலுங்கி அழக்கூடிய மென்மை உணர்வு கொண்டவர் என்று கண்டு கொண்டது அந்த இறப்பு நாளில் தான். பிள்ளை இல்லாமல் சக்களத்தியோடு வாழ்ந்த அக்கா கைம்பெண் ஆவதைக்கண்டு அப்பா அப்படிப்பொங்கி அழுவதைக் கண்டு வியந்து, அதிர்ச்சியடைந்த அந்த நாள் எனக்கு மறக்க முடியாத ஒன்று!
இரண்டாம் மனைவி அத்தையின் ஒன்று விட்ட தங்கை முறை உறவுக்காரி தான் - அதிர்ந்து பேசாத பாவமான பெண். வீட்டு வேலைகள் மட்டும் செய்யும் மென்மையான பெண்.
என் பெரியத்தையோ பாரதிராஜா திரைப்படங்களில் வரும் காட்டமான பெண்மணி போன்றவர், ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு பழமொழி என்று அடித்து விளாசும் பெருங்குரல் பெண். எல்லோரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்தனர்.
அவராகக் குடும்பத்தின் தலைமைப்பொறுப்பை (கணவனின் இடத்தை) எடுத்துக்கொண்டு, நிலம் / வீடு எல்லாவற்றையும் பார்ப்பது மட்டுமில்லாமல் சக்களத்தி பிள்ளைகளை / பேரப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது என்று அவ்விதமான வாழ்க்கையை நடத்தினார். அதாவது, 40-க்கும் கூடுதல் ஆண்டுகள் அவ்விதம் வாழ்ந்தார் - இறக்கையில் கிட்டத்தட்ட 88 வயது என்று நினைக்கிறேன்.
இன்றைக்கு இது போதும், நடு அத்தையின் சக்களத்தி கதை இன்னொரு நாள் சொல்லலாம்!
சின்னச்சின்னப் பாத்தி கட்டி
சீரகச்சம்பா நாத்து வச்சேன்
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லாக்கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு
பாலாத்துலே மீன் புடிச்சேன்டி
பானச்சட்டியிலே அத மூடி வச்சேன்டி
ஆத்தா கண்ணாத்தா செல்லாத்தா
மீனு என்னாச்சு அதப் பூன தின்னாச்சு
வெள்ளிக்கண்ணு கொள்ளிக்கண்ணு வாலுமில்ல நாளுமில்ல.
ஆத்தோரமா ஊத்துத்தண்ணியிலே
ரோசா வச்சேண்டி இந்த ராசாக்கண்ணாட்டி
நானே பெண் மானே வச்சேனே
பூவக்கண்டாளாம் ஒரு பாவி வந்தாளாம்
கொத்துக்கொத்தா அள்ளி வச்சா நெஞ்சுக்குள்ள முள்ள வச்சா
கொய்யாப்பழம் வாங்கி வந்தேன்டி
நானும் திங்காமே நல்லா மூடி வைக்காமே
நானே என் மானே வச்சேனே
வேப்பங்கம்போடு அணில் பாத்த கையோடு
மெல்ல வந்து தின்னுப்புட்டு பல்லப்பல்லக் காட்டுதடி
https://www.youtube.com/watch?v=dDgzBXFc5Sk
https://www.youtube.com/watch?v=uoI_EpZpIXI

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
BC likes this post
Re: IR-Pulamaippiththan combo songs
வரைவின் / பொது மகளிருக்கு என்று திரைப்படங்களில் நூற்றுக்கணக்கில் பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இதுவும் அப்படிப்பட்ட ஒரு பாடல்.
சொற்கள் / பொருள் எல்லாம் நேரடியாக இருப்பதால் பெரிய விளக்கம் கொடுக்கவோ உரை எழுதவோ இப்படிப்பட்ட பாடல்களுக்குத் தேவை வந்ததில்லை.
எந்த ஒரு சராசரி ஆளும் புரிந்து கொள்ளத்தக்க சொற்றொடர்களே இவை. (அதாவது, வயதுக்கு வந்த ஆட்கள் )
ஒரு கணக்கில் பார்த்தால் "நான் சிரித்தால் தீபாவளி" பாடலின் அதே கருத்தில் அதற்குச் சில ஆண்டுகள் முன்னரே வந்த பாடல்
கல்லூரி மாணவரா? கல்யாணம் ஆனவரா?
என் வீட்டின் பள்ளியிலே எல்லோரும் மாணவரே
சொல்லாத பாடங்கள் சொல்வேனே நான்
தோளோடு பூமாலை சிந்தாதோ தேன்?
ரோஜாப்பூவின் வாசம் தேகம் எங்கும் வீசுமே
ராஜா என்னைப்பார்த்தால் உந்தன் கண்கள் கூசுமே
கண்ணுக்கு மை போடு கை மேலே கை போடு
மஞ்சத்தில் பூப்போடு மாப்பிள்ளே தாழ் போடு
அல்லிப்பூவைக் கிள்ளி எடு அங்கம் எங்கும் புள்ளி இடு
அந்திப்போரில் முந்தி விடு நெஞ்சில் காதல் தள்ளிக்கொடு
பொன்னோடம் வெந்நீரில் தள்ளாடும் வா
ஆற்றில் ஓடும் நீரில் இங்கு யாரும் நீந்தலாம்
ஆசை உள்ள யாரும் எந்தன் அன்பைக்கேட்கலாம்
நாணத்தை அச்சத்தை நான் விட்டு நாளாச்சு
நம்பித்தான் வந்தோர்க்குக் கொம்புத்தேன் நானாச்சே
காலம் இல்லை நேரம் இல்லை கண்ணில் நாளும் தூக்கம் இல்லை
தேசம் என்ன பார்ப்பதில்லை பாஷை என்ன கேட்பதில்லை
எப்போதும் உன் தேவை என் சேவை வா
https://www.youtube.com/watch?v=6NGNVWuIehY

app_engine wrote:https://www.youtube.com/watch?v=tu38bMSRBeg
பாடல் வரிகளை உற்றுநோக்காமல் கேட்டால் இது ஏதோ பக்திப்பாடல் அல்லது வழிபாட்டுப்பாடல் என்று தோன்றலாம். (தமிழ் தெரியாத வேறு மொழிக்காரர்கள் கேட்டால் கண்டிப்பாக வழிபாட்டுப்பாடல் என்று தான் நம்புவார்கள்).
Love is divine (:-P); adhayum thaandi punidhamaanadhu!
BC- Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05
Re: IR-Pulamaippiththan combo songs
gangai aatril nindru kondu. from Subashree.
kandipaga subashree solradhai kaetkanam. very nice.
Beautiful Starting. Really Great Performance.
singer. nalla padaranga. ana... kurailil... Happy version madhirii iruku. sogam kanom.
https://www.youtube.com/watch?v=zG3BwFrMss4
kandipaga subashree solradhai kaetkanam. very nice.
Beautiful Starting. Really Great Performance.
singer. nalla padaranga. ana... kurailil... Happy version madhirii iruku. sogam kanom.
https://www.youtube.com/watch?v=zG3BwFrMss4
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: IR-Pulamaippiththan combo songs
"சுகமான ராகங்கள்" என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். ஆனால் அதை உண்மையில் உணர வேண்டுமென்றால் இந்தப்பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் போதும்
என்ன ஒரு இனிமையான, சுகமான இசை! மெட்டும் கருவியிசைக்கோர்ப்பும் அப்படியே நம்மை மெல்ல மெல்லத் தடவி இன்பறுத்துகின்றன!
இசையின் செழுமை அவ்வளவு இதமாக இருப்பதால் பாடல் வரிகளில் அக்கறை வந்ததே இல்லை. இன்று வேறு வழியில்லாமல் புலவருக்கு வேண்டியும் இந்த இழையில் வரிகள் பிழையில்லாமல் வர வேண்டுமே என்பதற்காகவும் மட்டும் உற்று நோக்கினேன்,
கேட்டவுடனே மறந்து போகத்தக்க வழக்கமான திரைப்பாடல் வரிகள் - வேறொன்றுமில்லை
https://www.youtube.com/watch?v=KMn7i9ilWhQ
குளிக்கும் போதிலே மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
மேலாடை பாரம் ஆகுமே
தென்றலும் தீண்டினால் தேகம் நோகுமே
நீ பார்த்தால் நாணம் ஆகுமே
நெஞ்சிலும் கண்ணிலும் மின்னல் ஓடுமே
பாரிஜாதம் தேனில் ஊறுமே
பார்க்கப்பார்க்க போதை ஏறுமே
கண்கள் கூடக் காயம் பண்ணுமே
காதல் என்னும் தீயில் தள்ளுமே
கங்கை வெள்ளமே வா
ஆகாயம் மஞ்சள் பூசுமே
ஆசையின் பாஷையைக் கண்கள் பேசுமே
பூ மஞ்சம் நெஞ்சம் போடுமே
புன்னகை என்னிடம் வேலை தேடுமே
மோகம் என்னும் யாகம் செய்யுமே
முத்த மாரி எங்கும் பெய்யுமே
காற்று வந்து ராகம் பாடுமே
கட்டில் கூடத் தாளம் போடுமே
கேட்டுப்பார்க்கலாம் வா

அன்பு சாரின் எக்செல் கோப்பின் அடிப்படையில் கிட்டத்தட்ட 160 பாடல்கள் புலவர் புலமைப்பித்தன் ராசா இசையில் எழுதியிருக்கிறார்.
அவ்விதத்தில் இந்த இழையில் பாதிக்கிணறு தாண்டியிருக்கிறேன்.
பெரிய ஹிட் பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் வந்து விட்டன. இனியிருப்பவற்றிலும் சில சூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கலாம் - அல்லாதவை தான் இனிக்கூடுதல் வரும் என்று நினைக்கிறேன்.
எப்படியிருந்தாலும், இந்த இழையில் எல்லாப்பாடல்களையும் உட்படுத்தி விடுவது என்பதே நோக்கம்.
(இந்த இழையை முடிக்குமுன்னரே இன்னொரு வேலை வந்து விட்டது என்பது துயரமான நிலைமை - பிறைசூடன் இழைக்கும் இதே வேலை மிச்சம் இருக்கிறது).
அவ்விதத்தில் இந்த இழையில் பாதிக்கிணறு தாண்டியிருக்கிறேன்.
பெரிய ஹிட் பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் வந்து விட்டன. இனியிருப்பவற்றிலும் சில சூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கலாம் - அல்லாதவை தான் இனிக்கூடுதல் வரும் என்று நினைக்கிறேன்.
எப்படியிருந்தாலும், இந்த இழையில் எல்லாப்பாடல்களையும் உட்படுத்தி விடுவது என்பதே நோக்கம்.
(இந்த இழையை முடிக்குமுன்னரே இன்னொரு வேலை வந்து விட்டது என்பது துயரமான நிலைமை - பிறைசூடன் இழைக்கும் இதே வேலை மிச்சம் இருக்கிறது).
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
BC likes this post
Re: IR-Pulamaippiththan combo songs
சில சூழ்நிலைப்பாடல்கள் எழுதுவது எளிது - எடுத்துக்காட்டு "காதல் கனவு"ப் பாட்டுக்கள். தனது கற்பனை, இசையமைப்பாளரின் மெட்டு என்பவற்றுக்கு ஏற்ற விதத்தில் புலவர்கள் எழுதிக்கொட்டி விடலாம்.
கதையோடு அல்லது நிகழ்வுகளோடு ஒன்றி வரும் வேறு சூழல் பாடல்களுக்கு மேற்சொன்ன விதத்தில் மட்டும் எழுதித் தப்பித்துக்கொள்ள இயலாது. நிகழ்வுக்குப் பொருத்தமாகவும் வர வேண்டும். மெட்டுக்குள் அமைய வேண்டும். மேலும் சொல் நயம், ஓசை நயம், கருத்து வளம் எல்லாம் உட்படுத்த வேண்டும். இது எளிதான ஒன்றல்ல.
என்றாலும், இப்படிப்பட்ட வரம்புகளுக்குள்ளே எக்கச்சக்க உயர்ந்த பாடல்கள் தமிழ்த்திரைப் பாடலாசிரியர்கள் செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கணக்கு வழக்கில்லாமல் சராசரி மற்றும் குப்பைப்பாடல் வரிகளும் கொட்டப்பட்டிருக்கின்றன. (அவை வெற்றி பெற்றனவா இல்லையா என்பது கணக்கல்ல - இசைக்கோ, நடிகருக்கென்றோ, விளம்பரங்களாலோ, காட்சிப்படுத்தலாலோ சில பாட்டுக்கள் பரவலாம், பின்னால் மறக்கப்படலாம். நீண்டநாள் நிற்பவை தரமான பாடல் வரிகள் மட்டுமே).
வெற்றி பெற்ற ஒரு பாடல். (யூட்யூபிலும் மில்லியன் காட்சிகள்). ஆனால், சூழலுக்கு ஒத்துப்போனாலும் சிறப்போ தரமோ இருப்பதாக எனக்குத்தோன்றவில்லை.
என்றாலும் இங்கே தொகுக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=mg1ZhbUKUIM
அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னாக்கேளு
என்ன பாக்குற இப்பக்கல்யாணப்பந்தல் ஒண்ணு போடு
வண்ண வண்ணத்தோரணம் வாசலிலே ஆடணும்
மேலுங்கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது
ஊரில் எல்லோரும் என்னோட சொந்தம்
உள்ளபடி சொன்னா இது ஒன்னே என் செல்வம்
யாரா இருந்தாலும் நான் கேட்பேன் நியாயம்
நமக்கென்னா போடா என போனாத்தான் பாவம்
நல்லதுக்கு எப்போதும் இல்லேடா காலம்
முன்னவங்க சொன்னாங்க பொய் இல்லடா
உள்ளவங்க பின்னால வாலாட்டும் கூட்டம்
ஒங்க கத எங்கிட்ட செல்லாதுடா
இது தஞ்சாவூரு மேளம் அதத்தட்டுங்க கொஞ்சம் கேப்போம்
இந்த கல்யாணத்துல பாரு நல்ல கிச்சடி சம்பா சோறு
மாப்பிள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ
கண்ணுபடப்போகுது திருஷ்டி சுத்திப்போடுங்கோ
ஊரார் எல்லோரும் வாராங்க பாரு
வாசலுக்கு வந்து கொஞ்சம் பன்னீரத்தூவு
பொண்ணு மாப்புள்ள வந்தாச்சு இங்கே
கட்டி வச்ச மாலை அதைக் கொண்டாடா இங்கே
அய்யர் எங்க போனிங்கோ வாங்கோன்னா வாங்கோ
ஆடிக்கிட்டே வாரிங்க ஒய்யாரமா
வேட்டி கட்ட நேரமில்ல போங்கோன்னா போங்கோ
ஊருக்க்குள்ளே ஒன்னே தான் கல்யாணமா
இவ நாடாளும் ராசா இது நம்ம ஊரு ரோசா
அட வாயார நீங்க வந்து வாழ்த்துங்க வாங்க

முதலில் "போன பாட்டுப்போலத்தான் இதுவும்" என்று எழுதித்தள்ள நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு!
பல்லவி சற்றே ஏமாற்றம் தருவதால் இந்தப்பாட்டை இதற்கு முன்னர் உற்றுக்கேட்டதில்லை - இன்று பாடல் வரிகள் பிழை திருத்துவதற்கென்று சில முறைகள் கேட்க நேர்ந்தது.
சரணம் சிறப்பு - மெட்டமைப்பும் வேறுபட்ட விதத்தில் ராசா தந்திருக்கிறார் - அதாவது என் சிறுமூளை எதிர்பார்ப்பது போல அல்ல பாட்டின் ஓட்டம் வியப்புத்தரும் மாற்றங்கள் கொண்டு மிகவும் அழகு படுத்தியிருக்கிறார்.
அதற்கேற்றவண்ணம் புலவரும் சிறப்பாக வரிகள் எழுதியிருக்கிறார். ஒரு எடுத்துக்காட்டு :
தென்மதுரைத் தமிழ்ச்சந்தம் வாய் திறந்தா வந்து சிந்தும்
ஆக மொத்தத்தில் பாடலின் சிறப்பு மேலே சென்று விடுகிறது!
ஹையா ஹையா ஹோய் நான் அப்பன் ஆனேன்டோய் (இவ அம்மா ஆனாடோய்)
மாமா எங்கே டோய் ஒம்பொண்ணக் கொண்டாடோய்
யானை மேல குதிரை மேல பையன் வருவான்டோ
நைனாவாட்டம் ஸ்டைலா நின்னு விசிலும் அடிப்பான்டோ
ஒம் பொண்ணக்கண்டா கண்ணும் அடிப்பான்டோ
வானவில்லில் ஒரு தோரணங்கட்டு
இன்பச்சேதி சொல்லி வீதி எங்கும் மேளங்கொட்டாதோ?
ஒன்னாச்சேர்ந்து நின்னு பாட்டு சொல்லி தாளந்தட்டாதோ?
ஆசை நெஞ்சம் அதில் ஆயிரம் எண்ணம்
அடி ஆடி வெள்ளம் போல வந்து நீந்தச்சொல்லாதோ?
அதில் ஆட்டம் என்ன பாட்டம் என்ன சேர்ந்து கொள்ளாதோ?
தென்மதுரைத் தமிழ்ச்சந்தம் வாய் திறந்தா வந்து சிந்தும்
அந்தப் பாண்டி முத்துப்போல ஏன் புள்ள
யாரு புள்ள அவன் என்னுட புள்ள
பாடு படும் தோழருக்குத் தோள கொடுப்பான்
ஒரு பாதகத்த யாரும் செஞ்சா மோதி மிதிப்பான்
ஏழை என்ன அட எளியவர் என்ன
சம நீதி ஒன்னே நீதி என்னும் பாத வகுப்பான்
அவன் நாட்டில் உள்ள மேடு பள்ளம் யாவும் தகர்ப்பான்
நெஞ்சம் உண்டு வைரம் போலே பஞ்சம் என்ன இனி மேலே
அத சொல்லச்சொல்ல மீச துடிக்கும்
https://www.youtube.com/watch?v=c7fLQHerFAA
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
BC likes this post
Re: IR-Pulamaippiththan combo songs
வழக்கமான "மோகம்" தாகம்" போன்ற காமச்சொற்களைப் போட்டு நிரப்பிய பாடல் வரிகள் என்று ஏற்கனவே உமா ரமணன் இழையில் திட்டியிருந்த பாடல் தான் இந்த "மாமா மனசுக்குள்ள".
கள்ளுண்ட மயக்கச் சூழ்நிலைக்கும் பழங்குடி இசைக்கும் சேர்த்து இதைவிட மிகச்சிறப்பாக எழுதியிருக்கலாம். புலவர் தவறவிட்ட வாய்ப்பு இது என்றே கருதுகிறேன்.
அதே போல இப்படிப்பட்ட பாடல்கள் பாடுவதில் தான் சற்றும் பொருத்தமில்லை என்று உமா ரமணனும் உலகுக்கு அறிவித்த பாடல்.
ராசா சிறப்பாக இசையமைத்திருந்தும் இக்காரணங்களால் செல்ல வேண்டிய உயரத்துக்கு இந்தப்பாடல் போகவில்லை
https://www.youtube.com/watch?v=bZ3e8t-mPu8
மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல
ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல
குளுகுளு காத்து அடிக்குது பாத்து
அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து
மோகம் கள்ளுண்ட வண்டானது தேகம் எங்கெங்கும் நண்டூறுது
தாகம் தண்ணீரில் தீராதது நேரம் போனாலும் ஆறாதது
தள்ளாடி நிக்குறேன் தாங்கிப்புடி மெதுவா
உள்ளூறி நிக்குறேன் அள்ளிக்கொடு எதமா
தேனும் தினைமாவும் பசியாறத்தரவா?
பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது பாவை உன் கைகள் நாலானது
கால்கள் தானாகத்தள்ளாடுது காதல் தேனாக உள்ளூறுது
சொல்லாத கதையை இப்போ இங்கே சொல்லவா?
கில்லாடி எனைப்போல் எங்கே உண்டு சொல்லம்மா?
ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி
கள்ளுண்ட மயக்கச் சூழ்நிலைக்கும் பழங்குடி இசைக்கும் சேர்த்து இதைவிட மிகச்சிறப்பாக எழுதியிருக்கலாம். புலவர் தவறவிட்ட வாய்ப்பு இது என்றே கருதுகிறேன்.
அதே போல இப்படிப்பட்ட பாடல்கள் பாடுவதில் தான் சற்றும் பொருத்தமில்லை என்று உமா ரமணனும் உலகுக்கு அறிவித்த பாடல்.
ராசா சிறப்பாக இசையமைத்திருந்தும் இக்காரணங்களால் செல்ல வேண்டிய உயரத்துக்கு இந்தப்பாடல் போகவில்லை
https://www.youtube.com/watch?v=bZ3e8t-mPu8
மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல
ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல
குளுகுளு காத்து அடிக்குது பாத்து
அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து
மோகம் கள்ளுண்ட வண்டானது தேகம் எங்கெங்கும் நண்டூறுது
தாகம் தண்ணீரில் தீராதது நேரம் போனாலும் ஆறாதது
தள்ளாடி நிக்குறேன் தாங்கிப்புடி மெதுவா
உள்ளூறி நிக்குறேன் அள்ளிக்கொடு எதமா
தேனும் தினைமாவும் பசியாறத்தரவா?
பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது பாவை உன் கைகள் நாலானது
கால்கள் தானாகத்தள்ளாடுது காதல் தேனாக உள்ளூறுது
சொல்லாத கதையை இப்போ இங்கே சொல்லவா?
கில்லாடி எனைப்போல் எங்கே உண்டு சொல்லம்மா?
ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
BC likes this post
Re: IR-Pulamaippiththan combo songs
சொன்னது நீ தானா படத்திலிருந்து புலவர் எழுதிய "வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது" என்ற சிறப்பான பாடலைக் குறித்து முன்னமே பார்த்தோம். அந்த இசைக்கோர்ப்பில் இன்னொரு பாடலும் எழுதியிருக்கிறார் - இதன் காணொளி கண்டுபிடிக்க முடியவில்லை.
பாடலை இங்கே கேட்கலாம் - வாணி கணீரென்று தெளிவாகப் பாடியிருக்கிறார். (இவரது பாடல்களில் சொற்கள் தெளிவில்லாமல் இருந்ததே இல்லை - அவ்விதத்தில் டீச்சரம்மா மிகச்சிறப்பு!)
https://mio.to/album/Sonnathu+Nee+Thaana+%281978%29
சூழல் பாடல் - குழந்தையா கணவனா என்ற போராட்டத்தில் உள்ள பெண் பாடுகிறார் என்று புரிகிறது ("கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா என்றால் பதில் தான் என்ன? " என்ற வரியின் அடிப்படையில்).
மற்றபடி எளிமையான கதை சொல்லல் பாடல்.
ஏங்கும் தெய்வமங்கே தூங்கும் செல்வமிங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே?
தூண்டிலோ இரண்டு பக்கம், துடிக்கவோ மீனை வைத்தான்?
பாசமோ இரண்டு பக்கம், பதைக்கவோ நெஞ்சை வைத்தான்?
கண்ணீரின் வெள்ளம் ஒரு உள்ளம் அதிலே செல்லும்
எங்கே பயணம்? எங்கே முடியும்? அங்கே துணை தான் யாரோ?
தாலியும் நிலைக்க வேண்டும் தாய்மையும் வாழவேண்டும்
வேண்டிடும் இரண்டில் ஒன்று விலகினால் என்ன உண்டு
தாலாட்டும் பிள்ளை மனம் வெள்ளை அதுவா தொல்லை?
கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா என்றால் பதில் தான் என்ன?
பாடலை இங்கே கேட்கலாம் - வாணி கணீரென்று தெளிவாகப் பாடியிருக்கிறார். (இவரது பாடல்களில் சொற்கள் தெளிவில்லாமல் இருந்ததே இல்லை - அவ்விதத்தில் டீச்சரம்மா மிகச்சிறப்பு!)
https://mio.to/album/Sonnathu+Nee+Thaana+%281978%29
சூழல் பாடல் - குழந்தையா கணவனா என்ற போராட்டத்தில் உள்ள பெண் பாடுகிறார் என்று புரிகிறது ("கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா என்றால் பதில் தான் என்ன? " என்ற வரியின் அடிப்படையில்).
மற்றபடி எளிமையான கதை சொல்லல் பாடல்.
ஏங்கும் தெய்வமங்கே தூங்கும் செல்வமிங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே?
தூண்டிலோ இரண்டு பக்கம், துடிக்கவோ மீனை வைத்தான்?
பாசமோ இரண்டு பக்கம், பதைக்கவோ நெஞ்சை வைத்தான்?
கண்ணீரின் வெள்ளம் ஒரு உள்ளம் அதிலே செல்லும்
எங்கே பயணம்? எங்கே முடியும்? அங்கே துணை தான் யாரோ?
தாலியும் நிலைக்க வேண்டும் தாய்மையும் வாழவேண்டும்
வேண்டிடும் இரண்டில் ஒன்று விலகினால் என்ன உண்டு
தாலாட்டும் பிள்ளை மனம் வெள்ளை அதுவா தொல்லை?
கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா என்றால் பதில் தான் என்ன?
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: IR-Pulamaippiththan combo songs
கண்ணன் ஒரு கைக்குழந்தை படத்தில் இரண்டு பாடல்கள் புலவர் எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்று தவறுதலாகக் கவிஞர் கண்ணதாசனின் பெயரில் இருந்ததால் அந்த இழையில் முன்பு பதிந்திருந்தேன்.
அங்கிருந்து அதை இங்கே மாற்றும் வேலை இன்று
பாடல் வரிகளை வைத்துப்பார்த்தால் இது "வரைவின் மகளிர் / பொது மகளிர்" இல்லத்தில் நடப்பதாகத் தோன்றுகிறது. அங்கே முதன்முறையாகச் சென்று நாணிக்கோணி நிற்கும் ஆடவனை நோக்கி எழுதப்பட்ட வரிகள் என்று தோன்றுகிறது.
மெட்டுக்கு ஏற்ப அருமையான ஓசை நயத்துடன் சொற்கள் இருக்கின்றன! வாணி கணீரென்று பாடியிருக்கிறார் (பொது மகளிருக்கென்று திரைப்படங்களில் பொதுவாகச் சேர்க்கப்படும் "சிறப்பு அம்சங்கள்" ஒன்றும் இல்லை என்பதைச் சொல்லத்தேவையில்லை.)
https://www.youtube.com/watch?v=gp2jlboq7-U
கண்ணனருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும் இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள் உனக்கென்ன புரியலையா?
ஒரு மோகமந்திரம் பாட வந்தவன் பார்வை வேறெங்கே?
புது ராகமாளிகை போல வந்தவள் என்னைப்பார் இங்கே
இளம் பாவை என் மனம் உன்னிடம் இனித் தேவை மன்னவன் சம்மதம்
பெண் மேனியோ பொன் வீணையோ? என்னென்ன தான் சங்கீதமோ?
ஆனந்தராகம் இன்று பாடக்கூடாதோ?
ஒரு ஆணுக்கென்னடி நாணம் இப்படி? பார்த்துச்சொல்லாயோ?
இதில் அஞ்சும் பாவனை இன்னும் ஏனடி கேட்டுச்சொல்லாயோ
சிறு ஆடை தொட்டது மெல்லென, பெரும் ஆசை தொட்டது சில்லென
சூடாமணி நீ சூடலாம் தேமாங்கனி நீ தேடலாம்
அம்மாடி இன்னும் என்ன மௌனம் என்னோடு?
இரு கையில் ஆடவும் மையல் தேடவும் தூது வந்தேனே
மலர்க்கண்ணில் அஞ்சனம் சொல்லில் அஞ்சுகம் ஏந்தி நின்றேனே
ஒரு காவல் வேலியைத் தாண்டலாம் புது நாவல் மேனியைத் தீண்டலாம்
துள்ளும் விழி செந்தாமரை கிள்ளை மனம் வெண்தாமரை
சாமந்திப்பூவும் பூவை ஆகக்கூடாதோ?

Usha likes this post
Re: IR-Pulamaippiththan combo songs
மென்மையான மெட்டையும் அதற்கேற்ற அழகான காதல் வரிகளையும் ராசாவும் புலவரும் சேர்ந்து எழுதி விட்டு என்ன தோன்றியதோ கங்கை அமரனைப் போய்ப் பாடவைத்திருக்கிறார்கள்.
கொடுமைப்படுத்தியிருக்கிறார்.
போதாக்குறைக்கு வாணியும் "பாவமாகப்" பாடியிருக்கிறார்.
மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்
https://www.youtube.com/watch?v=rkcJdD4LhTA
விழியே, நலமா? உனை நான் கேட்கிறேன்
இமையே, சுகமா? உன்னை நான் கேட்கிறேன்
இடை நோயில் வாடுவதும் தோளைத்தேடுவதும் நான் பார்த்தேன்
இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்
தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்
உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி?
ஒரு முள்ளில்லாத இமை நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா
இனி நாளும் இன்ப சுகம் நானும் உந்தன் வசம் வா கண்ணே
வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே
இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா
அடடா தாகமோ? அதில் தான் தீருமோ?
இது வாடைக் காலமடி மோக தாகமடி நீ தந்தாய்
ஒரு ஆடை காற்றில் விழ ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்
அடியே கொடியே மடிமேல் என் சிம்மாசனம்
https://www.youtube.com/watch?v=Fwmvo9wXVpM
கொடுமைப்படுத்தியிருக்கிறார்.
போதாக்குறைக்கு வாணியும் "பாவமாகப்" பாடியிருக்கிறார்.
மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்
https://www.youtube.com/watch?v=rkcJdD4LhTA
விழியே, நலமா? உனை நான் கேட்கிறேன்
இமையே, சுகமா? உன்னை நான் கேட்கிறேன்
இடை நோயில் வாடுவதும் தோளைத்தேடுவதும் நான் பார்த்தேன்
இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்
தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்
உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி?
ஒரு முள்ளில்லாத இமை நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா
இனி நாளும் இன்ப சுகம் நானும் உந்தன் வசம் வா கண்ணே
வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே
இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா
அடடா தாகமோ? அதில் தான் தீருமோ?
இது வாடைக் காலமடி மோக தாகமடி நீ தந்தாய்
ஒரு ஆடை காற்றில் விழ ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்
அடியே கொடியே மடிமேல் என் சிம்மாசனம்
https://www.youtube.com/watch?v=Fwmvo9wXVpM
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: IR-Pulamaippiththan combo songs
கங்கை-வாணி கொடூரம் கொண்ட அப்படி ஒரு பாட்டோடு இந்த நாளை நிறைவு செய்ய மனதில்லாததால் இன்னொன்னு
இது ராசா-சித்ரா பாடிய மிகச்சிறப்பான தெம்மாங்கு! புலவரும் மெட்டோடு சேர்ந்து நீரோடை போல ஓடும் நாட்டுப்புறச்சொற்கள் கொண்டு அலங்கரித்திருக்கிறார்.
சற்றும் அலுக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கத்தக்க இனிய தெம்மாங்குப்பாடல்!
மாமரத்துக் குயிலு பூமஞ்சம் இடும் மயிலு
பாக்காமப் போகாதையா ஒன் வீராப்பு ஆகாதையா
நேத்துக்கொடுத்த முத்தம் நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு இன்னும் குடுயா
மை பூசும் கண்ணுக்குள்ளே பொய் பூசும் சின்னப்புள்ளே
மாராப்பு காத்தோடு ஆடும்
கல்யாணத்திட்டம் இட்டு கண்ணாலே வட்டம் இட்டு
கண்ணா உன் தோள் சேரத் தேடும்
முந்தானைப் பந்தல் இட்டு நான் தூங்கவா?
முன்னூறு முத்தம் ஒன்னா நான் வாங்கவா?
அள்ளிக்கொள்ள நானாச்சு நீயாச்சு வா
அங்கம் எங்கும் மோகத்தில் தீயாச்சு வா
அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா
மானுன்னா மானும் இல்லே மீனுன்னா மீனும் இல்லே
ராசாத்தி கண்ணென்ன கண்ணோ
நானுன்னா நானும் இல்ல நீயின்னா நீயும் இல்ல
நீ இன்றி நான் இங்கே உண்டோ
நீ போகும் பாதை எல்லாம் என் பாதை தான்
நீ பார்க்கும் பார்வை எல்லாம் என் பார்வை தான்
மெட்டிச்சத்தம் நான் கேட்கும் சங்கீதம் தான்
கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷம் தான்
சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்
https://www.youtube.com/watch?v=sRUtwtrUHDw

இந்தப்பாடலில் என்னமோ குழப்பம் இருக்கிறது.
இசைத்தட்டு உறை "எங்கெங்கு தொடுவது" என்று சொல்லி ஏசுதாஸ் / சுசிலா பெயர்களைக் காட்டுகிறது. ஆனால், வலையில் காணப்படும் பாடல் "என்னென்று சொல்வது" என்று தான் இருக்கிறது. மேலும் அது தாசேட்டனின் குரல் அல்ல. (ஜெயச்சந்திரன் அல்லது தீபன் சக்கரவர்த்தி என்று எனக்குத் தோன்றுகிறது).
ஒருவேளை முதலில் வெளியிடப்பட்ட பாடல் வரிகள் சென்சார் வெட்டினால் மாற்றி விட்டார்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்த "எங்கெங்கு தொடுவது" பாடல் யாரிடமாவது இருக்க வாய்ப்பிருக்கிறது.
மற்றபடி சராசரியான காதல் பாடல். புலவர் வழக்கம் போல மெட்டுக்கேற்ப "உறவில் ஆனந்தம், தேன் சிந்தும்" என்றெல்லாம் நிரப்பியிருக்கிறார்.பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடி
ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள்
அதை நீ மனம் போல் வழங்கலாம்
ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன்
அதில் நீ நெடுநாள் மயங்கலாம்
வாடை மாதம் வாலைக்கன்னம் கண்ணில் வந்ததென்ன?
தேவன் உன்னைப் பார்த்த கண்ணில் மாலை கட்ட வேண்டாமோ?
பூப்பந்தல் இதழில் தேன் சிந்தும் தினந்தினம்
இருக்கட்டும் எனக்கும் சந்தோஷம் வரும் வரும்
ஈரமேகம் காற்றில் ஆடும் இங்கும் அங்கும் ஓடும்
தூரதேசம் போகும் நேரம் பேசக் கொண்டு வாராதோ?
நாடெங்கும் நமது ராஜாங்கம் அமையலாம்
நாள்தோறும் உறவில் ஆனந்தம் அடையலாம்
https://mio.to/album/Kanna+Thorakkanum+Saami+%281985%29
https://www.youtube.com/watch?v=DH-FqVXSYcI
Last edited by app_engine on Tue Oct 26, 2021 7:28 pm; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
BC likes this post
Re: IR-Pulamaippiththan combo songs
மிகவும் வேறுபட்ட ஒரு பாடல் - இதை முன்பு கேட்ட நினைவில்லை, என்றாலும் அந்த அனுபல்லவி (இன்னாரு மவனே - மன்னாரு மவனே) எங்கோ கேட்ட நினைவு வரவும் செய்கிறது.
ஓமலிப்பு (ஊரார் கேலி பேசுவது) என்ற சொல் வேறு எந்தப்பாடலிலும் கேட்டதாக எனக்கு நினைவில்லை! அவ்விதத்தில் இது குறிப்பிடத்தக்க பாடல் தான்.
மட்டுமல்ல, பெண் ஆணுக்கு எதிராகச் சூளுரைக்கும் பாடல்களும் பொதுவாகத் திரைப்படங்களில் குறைவே. (நீட்டி முழக்கி வசனம் பேசுவதெல்லாம் நிறைய உண்டு - பாட்டு வடிவில் நிறைய இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.) அவ்விதத்திலும் இது ஒரு வேறுபட்ட பாடலே.
வேடிக்கை என்னவென்றால் "நீ சிகப்பு, நான் கருப்பு" என்று ஒரு பெண் ஆணைப்பார்த்துப் பாடுகிறாள். இதிலும் திரை இலக்கணம் மீறப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்று தான். (தமிழ்நாட்டின் சராசரிப்பெண் என்ன தோற்றம் என்பதைக்குறித்தெல்லாம் திரைப்பட உலகுக்கு அக்கறை இருந்ததில்லை - இறக்குமதி செய்தாவது வெளுத்த தோல் காட்ட வேண்டுமென்று தான் முனைப்படுவார்கள்).
பல விதங்களில் இது குறிப்பிடத்தக்க பாடல்.
https://www.youtube.com/watch?v=jO9bMDCmMo4
நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு
ஓமலிப்பு தீருமுன்னே ஓடிப்போவ ரங்கூனுக்கு
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே
சீமைக்குப் போற மச்சான் மூளைய எங்கே வச்சே?
பட்டணம் சுத்திச்சுத்திக் கெட்டதோ ஐயா புத்தி?
எங்கே நீ போனா என்ன அங்க நான் வாரேன் கண்ணா
மாமதுரைப்பக்கம் அட நம்மப் பத்தித் தானே பேச்சு
மார்கழி ஆகும் முன்னே மாலையிட்டாக் கெட்டா போச்சு?
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே
நீயுந்தான் பத்து மாசம் நானுந்தான் பத்து மாசம்
ஆனத நீயும் பாரு நான் அதுல தோத்தாக்கேளு
கொட்டுனாத் தான்யா தேளு உட்டுட்டா புள்ளப்பூச்சி
நீ இறைச்ச தண்ணி அதில் நீயே வந்து மாட்டிக்கிட்ட
பொண்ணுன்னா என்னயின்னு நானும் இப்ப காட்டப் போறேன்
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே
வேணுமின்னா தொட்டுக்கொள்ள ஊறுகா நானா ராசா
கிள்ளுற கீரையின்னு எண்ணின என்ன லேசா
உன்ன நான் விட்டு வச்சா பொண்ணு நான் இல்ல மச்சான்
வாடிப்பட்டிச் சந்தை ஒரு வண்டி கட்டி நானும் வாரேன்
மாப்பிள்ள மானம் எல்லாம் கூறு போட்டு விக்கப்போறேன்

kalyana thenila... paatu. Raja solrar. Pulamaipithan epadi kavidhai ezhudhi... paatin amaipaiyae matri... nichayam kaviyanarin thiramai dhan
idhu endru.
raja sonna amaipu..... tata tata ...
nila ula ipadi than varum. vaarthai illai. anal kavinyar
kalyana then nila...... indha uruvam vandhu vittadhu. pulavarin pulamayin thiramaiyil vandhadhu.
https://www.youtube.com/watch?v=HcIOg_rYimo
idhu endru.
raja sonna amaipu..... tata tata ...
nila ula ipadi than varum. vaarthai illai. anal kavinyar
kalyana then nila...... indha uruvam vandhu vittadhu. pulavarin pulamayin thiramaiyil vandhadhu.
https://www.youtube.com/watch?v=HcIOg_rYimo
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: IR-Pulamaippiththan combo songs
நல்லதம்பி என்ற ஏவிஎம் படத்தில் புலவர் இந்தப்பாட்டு எழுதியிருக்கிறார். திரையில் இடம் பெற்றதா தெரியவில்லை (காணொளி வலையில் கண்டுபிடிக்க முடியவில்லை).
ஓரளவுக்கு நல்ல ஒலித்தரத்தில் இந்த இணைப்பில் பாட்டு இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் "முக்கல் முனகல்" கேட்டவுடனேயே இதை எழுதியவர் வாலியாகத்தான் இருக்கும் என்று ஊகித்து அவர் பெயர் இட்டிருப்பது
https://www.youtube.com/watch?v=hTFSmMMKDxk
மற்றபடி பாடல்வரிகளில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றுமில்லை. (வெறும் காம வரிகள் -தாகமான ரோஜா தண்ணி ஊத்து ராஜா - இன்ன பிற)
இப்படிப்பட்ட பாடல் என்பதால் வழக்கம் போல ராசா சிறப்பான இசையை வழங்க ஜானகி - பாலு வெளுத்துக்கட்டி இருக்கிறார்கள்!
மாமா மாமா என்ன மெதுவா மெதுவாப் புடிச்சுக்கோ
யம்மா யம்மா பொண்ணப்புடிச்சாத் தவறு புரிஞ்சுக்கோ
ஓரக்கண்ணில் பாத்துக்கணும் காதல் பண்ணக்கத்துக்கணும்
கெட்ட கெட்ட வார்த்தை இது கன்னிப்பொண்ணு பேச்சா இது
வேணாம் வேணாம் தாங்காதம்மா ஒடம்பு.
ஒரு காதல் டூயட் பாடு இடுப்புல கையக் கொஞ்சம் போடு
இது கன்னிப்பொண்ணு தேகம் தொடுறது ரொம்ப ரொம்பப்பாவம்
பாவம் அல்ல யோகம் அது தோஷம் அல்ல தொட்டுப்பிடி
இங்கிலீஷு நான் படிச்சுப்பார்த்தேன் இப்பத்தானே இந்த பாஷ கேட்டேன்
ட்யூஷன் வெச்சுச் சொல்லித் தாரேன் ஆசை எல்லாம் அள்ளித் தாரேன்
எங்கே நீ சொல்லு ஐ லவ் யூ
இது தாகமான ரோஜா அடிக்கடி தண்ணி ஊத்து ராஜா
என்னப் பாத்த பார்வை போதும் பொசுக்குன்னு கண்ணுபட்டுப் போகும்
கண்ணும் படும் கையும் படும் கன்னத்துல கன்னம் படும்
நாடு மெச்சும் நல்ல தம்பி நானே ஊருக்குள்ள கேட்டுக்கடி மானே
நல்ல தம்பி தங்கக்கம்பி நானும் இப்போ உன்னை நம்பி
மன்மதலீலை பார்த்தேன்

app_engine wrote:
ஒருவேளை முதலில் வெளியிடப்பட்ட பாடல் வரிகள் சென்சார் வெட்டினால் மாற்றி விட்டார்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்த "எங்கெங்கு தொடுவது" பாடல் யாரிடமாவது இருக்க வாய்ப்பிருக்கிறது.
நினைத்தது போன்றே முதன்முதலில் வந்த இசைத்தட்டு அன்பு சாரிடம்
அந்த ஒரிஜினல் பாடலை அவரது தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து இன்று கேட்கும் வாய்ப்புக்கிட்டியது!
1. அதே மெட்டில் ஏசுதாஸ் / சுசிலா பாடியிருக்கிறார்கள். (இடையிசை / பின்னணி இசை ஆகியவை அதே தான்.)
2. சில பாடல் வரிகள் வேறு. பிற பாடல் வரிகள் அதே போன்று.
3. என்னென்ன மாற்றங்கள் என்று கீழே தந்திருக்கிறேன்.
(திரையில் உள்ள வரிகள் அடைப்புக்குறிக்குள்).
எங்கெங்கு தொடுவது எங்கெங்கு இடுவது முத்தங்கள் கூறடி
(என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடி)
ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள்
அதை நீ மனம் போல் வழங்கலாம்
ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன்
அதில் நீ நெடுநாள் மயங்கலாம்
வாசல்பக்கம் வாழைக்கம்பம் கட்டி வைத்ததென்ன?
(வாடை மாதம் வாலைக்கன்னம் கண்ணில் வந்ததென்ன?)
தேவலோக வாசல் அங்கே, பந்தல் கட்ட வேண்டாமோ?
(தேவன் உன்னைப் பார்த்த கண்ணில் மாலை கட்ட வேண்டாமோ?)
பூப்பந்தல் இடையில் தேன்சிந்தும் தினம் தினம்
(பூப்பந்தல் இதழில் தேன் சிந்தும் தினந்தினம்)
சிந்தட்டும் எனக்கும் சந்தோஷம் வரும் வரும்
(இருக்கட்டும் எனக்கும் சந்தோஷம் வரும் வரும்)
ஈரமேகம் காற்றில் ஆடும் இங்கும் அங்கும் ஓடும்
தூரதேசம் போகும் நேரம் தேர்கள் கொண்டு வாராதோ?
(தூரதேசம் போகும் நேரம் பேசக் கொண்டு வாராதோ?)
நாடெங்கும் நமது ராஜாங்கம் அமையலாம்
நாள்தோறும் உறவில் ஆனந்தம் வழியலாம்
(நாள்தோறும் உறவில் ஆனந்தம் அடையலாம்)
சிவப்பு எழுத்தில் உள்ளவை எல்லாம் சென்சாருக்கு அதிர்ச்சி தந்திருக்கலாம் - மாற்றச்சொல்லி விட்டார்கள் என்று தோன்றுகிறது
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: IR-Pulamaippiththan combo songs
இனிமையும் சிறிய துன்பமும் கலந்த அருமையான பாடல்.
மனதை வருடும் மெட்டு, மென்மையான இசைக்கோர்ப்பு என்று ராசா சிறப்பித்திருக்கிறார்!
இவற்றோடு சேர்ந்து பொருத்தமான கவிதை புலவரிடமிருந்து - "மின்மினிப்பூச்சிகள் தீபங்கள் ஆகி ராத்திரி வேளையில் பாதையைக்காட்டுமா?" என்று சிறப்பான உவமை போதாமை என்ற நிலையை அழகாகக் காட்டுகிறது.
எனது ராகம் மௌனராகம் கேட்க யாருமில்லை
எனது காயம் மனதின் காயம் மருந்து ஏதும் இல்லை
தீ மேலே பூமாலை, தண்ணீரா அதைக்காப்பாற்றும்?
என் வாழ்வே ஒரு போராட்டம்!
பெளர்ணமி நாளிலே தேய்பிறை ஆகினேன்
வைகறை வேளையில் அந்தியைப்பார்க்கிறேன்
மின்மினிப்பூச்சிகள் தீபங்கள் ஆகுமா?
ராத்திரி வேளையில் பாதையைக் காட்டுமா?
என் நினைவை நீ மறந்து வாழ்ந்தாகனும்
உன் நினைவை நான் சுமந்து போய்ச் சேரணும்
ஆன்மாவின் ராகம் கேட்கின்றதா?
கண்ணீரா எனைக்காப்பாற்றும்? என் வாழ்வே ஒரு போராட்டம்!
மாப்பிள்ள பொண்ணுமா ஊர்வலம் போகுது
என் இரு கண்ணிலே நீர்வலம் போடுது
உன்னையே நம்பி நான் வாழ்ந்தது பாவமா?
நான் படும் வேதனை நீ தந்த சாபமா?
என்னுயிரோ போன பின்னும் நான் வாழ்கிறேன்
ஏழையை நீ தேடி வரும் நாள் பார்க்கிறேன்
நான் பார்த்த சொர்க்கம் நீதானடி
என் துன்பம் மனம் தாங்காது என் கண்கள் இனி தூங்காது
எனது ராகம் மௌனராகம் கேட்க யாருமில்லை
எனது காயம் மனதின் காயம் மருந்து ஏதும் இல்லை
பாரேன்டி ராசாத்தி என் துன்பம் மனம் தாங்காது
என் கண்கள் இனித்தூங்காது
https://www.youtube.com/watch?v=DMjKdXDQ71I

கொஞ்சம் காட்டமான துன்பியல் பாட்டு.
குழந்தையை சிறைக்குள் வைத்துத் தொட்டிலாட்டும் அன்னையின் அவலநிலை சொல்லும் பாடல் என்பதால் புலவர் சொற்களைக் காரசாரமாக வீசுகிறார்! (மற்றும் அவளுக்கு அநீதி இழைக்கப்பட்ட சூழல் என்றும் புரிகிறது).
இவ்வளவு போதாதென்று ராசாவின் குரல் - தொண்டையை அடைத்துக்கொண்டு எல்லோரும் அரங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் உண்டாக்கிய சூழல் என்பது உறுதி.
(நான் இந்தப்படம் பார்த்ததில்லை).
ஆரிராரோ பாடும் உள்ளம் துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று கைதிக்கூண்டில் அசைய
என்ன பாவம் செய்தாளோ கொஞ்சம் கூறுங்கள் எண்ணிப்பார்த்து
ஏழை என்றே வந்தாளே அது தானா பாவம் என்றாச்சு
பிள்ளை பெறும் தாய்களுக்கோ கையில் வளை பூட்டுவார்
பேதை இந்தத் தாயிக்கென்ன கை விலங்கு பூட்டினார்
தர்மம் என்ன நீதி என்ன அர்த்தம் சொல்ல வாங்கடா
தெய்வம் என்ன கோயில் என்ன பூட்டி விட்டுப்போங்கடா
சிறையில் மனிதன் வெளியே எத்தனை மிருகம்
https://www.youtube.com/watch?v=IeeZfIV99TA

IsaiRasigan and BC like this post
Re: IR-Pulamaippiththan combo songs
திரிபுரசுந்தரி என்ற கருப்பு வெள்ளைப்படத்திலிருந்து "ஓடம் ஒன்று காற்றில் போனவழி" பாடலை முன்பு ஒரு பதிவில் பார்த்தோம்.
அதே இசைக்கோர்ப்பில் புலவர் இன்னொரு பாடலும் எழுதியிருக்கிறார். பள்ளியறைப்பாடல்களை அப்போதே புலவருக்குக் கொடுக்க ராசா தொடங்கியது இந்தப்பாட்டின் வரிகளைப்பார்க்கையில் தெரிகிறது.
இதிலும் சென்சார் அழுத்தத்தில் ஒரு வரி மாற்றப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இசைத்தட்டு வெர்ஷன் வலையில் எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை - யூட்யூபில் காணொளி இருப்பதால் திரைவடிவம் இருக்கிறது.
என்றாலும் பாடல்வரிகள் இரண்டு வலைத்தளங்களில் இட்டிருக்கிறார்கள் - அவற்றில் ஒரு பல்லவி வரி மாறுபட்டு இருக்கிறது, அதை அடைப்புக்குறிக்குள் இட்டிருக்கிறேன் - அது தான் இசைத்தட்டில் இருந்திருக்க வேண்டும். சென்சார் தூக்கச்சொல்லி இருப்பார்கள்.
ஆக, நம்ம புலவர் செய்த குறும்புகளுக்குக் கணக்கில்லை என்பது தெளிவு
https://www.youtube.com/watch?v=wEsYPMppt4w
கட்டழகு மாமா
ஒன்னத்தானே கட்டிக்கொள்ளலாமா?
கன்னிப்பெண்ணைத் தள்ளி வைக்கலாமா?
(கன்னித்தேனை விட்டு வைக்கலாமா?)
நல்ல நேரம் நெருங்குது மாமா
பச்சை வாழை இலை போடவா?
பக்கம் வந்து பரிமாறவா?
கட்டில் மீது மலர் தூவவா?
கண்ணால் மெல்லக் கதை பேசவா?
சித்தாடை கட்டி ஏய் சிங்காரக்குட்டி
மச்சானின் பொன்மார்பிலே மயங்கிடலாமா?
எங்கள் வீடு அரசாங்கமா?
எங்கும் தீப அலங்காரமா?
இங்கே நானும் மகராணியா?
என்னை ஆள மணவாளனா?
ஊரெல்லாம் நின்று பாராட்ட என்று
தேரேறிப்போகின்ற நாள் வந்தது மாமா
தொட்டால் போதும் மெதுவாகவே
தொட்டில் ஆடும் அழகாகவே
மச்சான் ராசி சுகராசி தான்
மங்கை நானும் மகராசி தான்
ஏழெட்டுப்பிள்ளை மேலோன்றுமில்லை
ஆராரோ ஆராரிரோ பாடணும் மாமா

indha paatu... S Janaki voice..Raja's interludes.... inimai. radiovil thadai seidha paatu endru ninaikiren.
cylone radiovildhan kaetu irukom endru ninaivu.
video parthen... seruppu kadai... carona ....
cylone radiovildhan kaetu irukom endru ninaivu.
video parthen... seruppu kadai... carona ....
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
app_engine likes this post
Re: IR-Pulamaippiththan combo songs
வெளிவராத படமான கவிதை மலருக்கான இசைக்கோர்ப்பில் புலவர் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். சுசிலா பாடிய அந்தப்பாட்டை இன்று தான் முதன்முதலாகக் கேட்கிறேன்.
(இந்த இசைக்கோர்ப்பின் "அலைகளே வா" என்ற இன்னொரு பாடல் சிறிது காலத்துக்கு முன் அறிமுகமானது - மேஸ்ட்ரோஸ் மியூசிக் ஆப் அதை அவ்வப்போது ஒலிபரப்பும், உமா ரமணன் இழையிலும் இட்டிருக்கிறோம். அந்தப்பாட்டு யூட்யூபிலும் இருக்கிறது. ஆனால் இந்த "நீரெல்லாம்" பாட்டை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை).
சராசரிப்பாட்டு - சிறப்பாக ஒன்றுமில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.
(அதாவது, மெட்டு, இசைக்கோர்ப்பு, பாடல் வரிகள் - எல்லாமே சராசரி).
https://mio.to/album/Kavithai+Malar+%281982%29
நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்தக்கண்ணீரம்மா
எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்
அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்
அது நானே நானே
முத்துக்கள் கேட்டேன் கண்ணீரைத்தந்தாய்
இல்லாத ஒன்றைக்கேட்டேன் உன்னிடம்
எண்ணங்கள் எல்லாம் ஏமாற்றமானால்
ஏக்கங்கள் தானே சொந்தம் நம்மிடம்
இது நான் போடும் அழகிய நீர்க்கோலம்
விடிமழை கார்காலம் கவலையின் ஊர்கோலம்
மறந்தது நீயா, இல்லை நானா, ராஜா நானா?
நான் கேட்ட வேஷம் காலங்கள் தோறும்
உன்னோடு வாழும் வாழ்க்கைப்பாத்திரம்
நீ தந்த வேஷம் கண்மூடும் நேரம்
காத்தோடு போகும் வார்த்தைப்பாத்திரம்
இதைக்கேட்பாயோ? ஒருமுறை பார்ப்பாயோ?
கரைகளில் சேர்ப்பாயோ? கவலையைத் தீர்ப்பாயோ?

அவ்வளவாக அறியப்படாத சில பாட்டுக்கள் இட்டாச்சு - சரி மிகப்பரவலாக அறியப்பட்ட ஒரு பாட்டைக் கேட்டு இன்றைய நாளைத் தூக்கலாக முடிப்போம்!
(அதாவது, யூட்யூபில் 1 கோடிக்காட்சிகள் என்றெல்லாம் வருகிறது)
மற்றபடி, பாடல் வரிகள் வழக்கம் போலத்தான் - பள்ளியறை வகை.
(கிட்ட வா / சொட்ட வா / சூடேறுது / மாராப்பு / வீராப்பு இன்ன பிற).
மக்கள் பாட்டைச் சுவைக்கிறார்களா அல்லது காட்சியையா என்று சொல்ல இயலவில்லை - இது போன்ற பாடல்கள் நிறைய வந்த 90-களில் இசையை விடக்காட்சிப்படுத்தல் / அதற்கான செலவுகள் போன்றவை தான் பாடல் பரவுகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாக ஆகிப்போன நிலை.
https://www.youtube.com/watch?v=FTiY93Cs-uI
மெதுவாத் தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே
கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னான்னு தான் தெரிஞ்சா அதச்சொல்லு
தாங்காது அய்யாக்கண்ணு சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
மஞ்சள் நாத்து நான் தட்டுப்பாக்கவா?
கொஞ்சம் ஆசையா தொட்டுப்பாக்கவா?
பாவாடையில் எதுக்கு சதுராட்டம்
காதல் சூட்டிலே மாமன் ஏங்குறே
சேலைக்காத்துல மூச்சு வாங்குறே
மாராப்புல விசிறி விசுறோணும்
நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன்?
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்?
மூடும் முந்தானைப் பந்தல் இது
ஆடு பந்தாடு அள்ளிக்கொடு
கிட்டக்கிட்டவா தேனைச்சொட்டவா
அள்ளிக்கட்டவா மேளம் கொட்டவா?
சூடேறுது எனக்கு ஒன்னு வேணும்
கன்னிப்பொண்ணிது ரொம்பச்சின்னது
நெஞ்சைப்பின்னுது வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்
போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
ரோசாப்பூவுக்கு மாராப்பென்ன?
கண்ணே உன்னோட வீராப்பென்ன?

Usha, IsaiRasigan and BC like this post
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» IR-Piraisoodan combo songs
» All 31 songs that Jency has sung for IR - #30 & #31 niRam mARAdha pookkaL short songs (all songs done)
» Kannada songs of Maestro IR / Fully compiled Kannada songs of Ilayaraja / Complete Collection of Ilayaraja's Kannada Songs / YouTube Playlist Kannada songs of Ilaiyaraaja
» IR songs with 5 beat cycle - kaNda chApu songs - தக-தகிட - #20 பல்லாண்டு பல்லாண்டு (divya pAsuram)
» Songs mistaken as IR songs

Permissions in this forum:
You cannot reply to topics in this forum