Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

IR-Pulamaippiththan combo songs

4 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Oct 07, 2021 6:40 pm

https://www.youtube.com/watch?v=D6qsAlnP5pYரஜினியின் நண்பர் / மூன்று முடிச்சு மனசாட்சி / மூன்றாம் பிறையில் சற்றுநேர வில்லன் - இப்படிப்பட்ட அடையாளங்கள் உள்ள கே.நட்ராஜ் இயக்கிய மூன்று படங்களுக்கு ராசா இசை.

அன்புள்ள ரஜினிகாந்த், செல்வி, வள்ளி. அவற்றுள் வள்ளியில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் புலவர்.

பல்லவியும் முதல் சரணமும் மிகச்சிறப்பாக இருக்கின்றன! இயற்கை வர்ணனை, வியப்பு, மகிழ்ச்சி எல்லாமே பொங்கி வருகின்றன.

இயக்குநரின் ஆர்வக்கோளாறு என்று நினைக்கிறேன் - சட்டென்று வானிலை மாறுவது போல இரண்டாம் சரணம் முற்றிலும் மாறிக் கேனத்தனமாக இருக்கிறது. ("என்னய்யா இது" Shocked என்று முகம் சுளிக்க வைக்கும் விதத்தில்).

"இளமனது - பல கனவு" என்ற மிகச்சிறப்பான பாடலை நாய்க்குட்டிகளின் டூயட்டாக மாற்றிய இயக்குநர் இப்படியெல்லாம் கொடுமை செய்வது வியப்பல்லவே!

குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா
மாமலையோரம் அருவிகள் நாட்டியமாடும்
இது போலே இன்பம் ஏது?

ஓங்கி நிற்கும் வானையே தாங்கி நிற்கும் மூங்கிலே
பூங்குழலை ஊதினாய் ராகம் என்ன பாடினாய்?
ஆற்றங்கரை மேட்டிலே தென்றல் சொல்லும் பாட்டிலே
தென்பொதிகைக் காட்டிலே தேனிறைக்கும் பூக்களே
இயற்கையில் ஏதோ ஏதோ அதிசயம் அம்மம்மா
படைத்தது யாரோ யாரோ எனக்கதை சொல்லம்மா

மாமனல்ல மாமி நீ மையல் தரும் ரூபிணி
நாட்டியத்தில் பத்மினி ஆடிக் கொஞ்சம் காமி நீ
முன்னழகு மோகினி முத்தம் ஓன்னு தாடி நீ
வஞ்சி உந்தன் தாவணி நெஞ்சில் இல்லை பாரு நீ
இடுப்புக்கு மேலே மேலே பறக்குது பாவாடை
அடிக்கடி கீழே கீழே நழுவுது மேலாடை


காணொளி இங்கே இருக்கிறது - அதிலும் இரண்டாம் சரணம் பெருங்கொடுமை!

https://www.youtube.com/watch?v=GxUBKiwQWR8&t=300s

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Oct 07, 2021 10:27 pm

"காய்ச்சாத பால்" - இந்தப்பயன்பாடு மவுனம் சம்மதம் படத்தின் நிலாப்பாட்டுக்கு முன்னமேயே புலவர் செய்திருக்கிறார்.

அதை இன்று கண்டுகொண்டேன் Laughing

மான் கண்டேன் மான் கண்டேன் என்ற 1985 ராஜரிஷி இசைக்கோர்ப்பில்  உள்ள பாடலில் இப்படி வருகிறது :
"காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம் காமத்துப்பால் உண்ண ஏங்கும்".  அன்னம் பால் குடிக்குமா என்ற கேள்விக்கு அறிவியல் என்ன மறுமொழி சொல்கிறது தெரியவில்லை. (அதிலும் நீர் கலந்த பாலில் நீரை விட்டு விட்டுப் பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றெல்லாம் சொல்லுவார்கள் - யார் அதை ஆய்வு செய்து நிறுவியது என்று தெரியவில்லை).

இந்தப்பாடலில் வழக்கம் போலச்செவ்வியல் இசை தூக்கல். இப்படிப்பட்ட பாடல் என்றவுடனேயே ராசா புலவரை அழைத்திருக்க வழியுண்டு. அவ்விதத்தில், இன்னொரு சிறப்பான பாட்டு!

https://www.youtube.com/watch?v=PBmNaeQHSMoமான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
நான் கண்டேன் நான் கண்டேன் நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்
புள்ளி மானா மானிட மானே?
பள்ளி மானாய் வந்தவள் நானே!


ஆடை கட்டும் ரோஜாவே கண்ணில் அம்பு வீசாதே!
கூந்தல் என்ன நாக சர்ப்பமோ?
என்னை ஆளும் ராஜாவே உன்னில் என்னில் மூடாதே!
அங்கம் உந்தன் தங்க வாகனம்
கூந்தலில் நீ பாய் விரி - கூடலில் நீ ஆதரி
காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம் காமத்துப்பால் உண்ண ஏங்கும்
கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்


தேனில் ஊறும் தீவுக்குள் நாகலிங்கப் பூவுக்குள்
மோக வண்டு பாட வந்தது
தான தந்த சந்தத்தில் காதல் தந்த சொந்தத்தில்
போகம் என்னும் ராகம் வந்தது
பூமியில் ஓர் வானவில் - ஆடிடும் உன் தோள்களில்
வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை பெண் என்று நான் இன்று பார்த்தேன்
கந்தர்வ லோகத்தை நாம் காணும் நாள் இந்த நாள் என்று பார்த்தேன்

https://www.youtube.com/watch?v=5Z5UfPVRg88


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 08, 2021 7:27 pm

மேலுள்ள பதிவில் கண்டது போல "காய்ச்சாத பால்" என்ற பயன்பாடு எல்லோருக்கும் பரவலாகத் தெரிய வந்தது நிலாவுக்குச் சொன்ன போது தான்.
(இதைப் பலமுறை பகடி செய்து நண்பர்களோடு சேர்ந்து சிரித்திருக்கிறேன்).

கல்யாணத்தேன் நிலா பாடல் ராசா-புலமைப்பித்தன் கூட்டணியில் வந்த மிகப்பெரும் ஹிட்களில் ஒன்று என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

லா-லா என்று கேள்விகளால் நிறைத்துச் சிறப்பாகவே எழுதியிருக்கிறார், சிறப்பாகப்பாடியிருக்கிறார்கள், இனிய மெட்டு -இசை இப்படி எல்லாம் இருந்தும் அந்த ஒரே ஒரு "காய்ச்சாத பால்" என்ற பயன்பாட்டினால் காமெடியாகப் பலராலும் பகடி செய்யப்படும் பாடல்.

அருமையான காணொளி - அழகனும் அழகியும் சிறப்பான தோற்றத்தில் வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=nUccDfcPIgsகல்யாணத்தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?

தென்பாண்டிக்கூடலா? தேவாரப்பாடலா?
தீராத ஊடலா? தேன் சிந்தும் கூடலா?
என் அன்புக் காதலா, எந்நாளும் கூடலா?
பேரின்பம் மெய்யிலா? நீ தீண்டும் கையிலா?
பார்ப்போமே ஆவலா வா வா நிலா!

உன் தேகம் தேக்கிலா? தேன் உந்தன் வாக்கிலா?
உன் பார்வை தூண்டிலா? நான் கைதிக்கூண்டிலா?
சங்கீதம் பாட்டிலா? நீ பேசும் பேச்சிலா?
என் ஜீவன் என்னிலா? உன் பார்வை தன்னிலா?
தேனூறும் வேர்ப்ப‌லா உன் சொல்லிலா?

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Sun Oct 10, 2021 5:29 am

https://www.youtube.com/watch?v=9Igjw9z0doQஇந்தப்பாடலை அந்தக்காலத்தில் வண்டிகளில் கேட்டிருக்கிறேன் என்றாலும் உற்றுக் கவனித்ததில்லை.

நேற்றும் இன்றும் பலமுறை கேட்டுச் சுவைத்துக்கொண்டிருக்கிறேன். இதற்குப்பின் வந்த "பொன்னுமணி" படப்பாடல் இதே வடிவிலானது என்று இப்போது புரிகிறது.

அவ்விதத்தில் இது ஒரு "முன்னோடிப்பாடல்" Smile

என்ன ஒரு அழகான துள்ளல் மெட்டு! இப்படி விரைவாக ஓடிச்செல்லும் மெட்டுக்கேற்ப மிக அழகாக அருவி கொட்டுவது போல் சொற்கள் சிறப்பாக விழுகின்றன! கூடவே உவமைகள் / உருவகங்கள் என்று அள்ளி வீசியிருக்கிறார் புலவர்!

மாங்குயிலே பூங்குயிலே போல இங்கு மாங்குருவி தெம்மாங்கில் துள்ளுகிறது!

சிறப்பு!

மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப்பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி
மணமேளம் காதில் கேட்குதா?
மனசோடு தேனை வார்க்குதா?
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப்பாடுதையா
மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா

பூங்காத்து வீசுது அனலப்பூசுது பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில் தாலாட்டு பாடிக்கொஞ்சம் கொஞ்சலாமா
சேலை கட்டும் நந்தவனம் நீயா? செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா?
கண்ணுக்குள்ளே காதல் எனும் தீயா? சின்ன இடை தேய்வதென்ன நோயா?
கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா நோய் முழுக்கத் தீர்ந்து விடும் வாம்மா!

கல்யாண மாப்பிளே எனை நீ பாக்கல கண் மூடி நாணத்திலே நிக்கலாமா?
ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம் உன்னோட கன்னத்திலே வைக்கலாமா?
அந்தியிலே சந்தனத்தப் பூச ஆசைகளைக் கண்களிலே பேச
சேலையிலே நீ விசிறி வீச காலையிலே பார்த்த கண்ணு கூச
என்ன சுகமோ? எப்ப வருமோ? என்னென்னவோ பண்ணுதையா ஆச!


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Oct 11, 2021 3:58 am

டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தியின் ஊக்கப்படுத்தும் கட்டுரைகள் / இயக்கம் இவற்றை உள்படுத்திய திரைப்படம் உன்னால் முடியும் தம்பி,

இது குறித்த அவரது நேர்காணல் ஒன்றை ராசா-பாலு இழையில் குறிப்பிட்டிருந்தேன். அங்கே புலமைப்பித்தன் குறித்தும் பேசியிருக்கிறார். (உண்மை நிலை இப்படியிருக்க சில வலைத்தளங்கள் இந்தப்பாடல் வைரமுத்து எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பதைக் காண்கையில் எரிச்சல் வருகிறது.)

https://www.hubtamil.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=805884&viewfull=1#post805884


கே: ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற பெயரில் உங்களை கௌரவிக்கும் விதமாக கே.
பாலசந்தர் திரைப்படம் எடுத்தது குறித்து…

ப: பாலசந்தர் என் நீண்ட நாள் நண்பர். என் எழுத்தின் மீதும், காரியங்கள் மீதும் மதிப்புடையவர். அந்த மதிப்பினால் நான் எவற்றுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தேனோ அவற்றை மையமாக வைத்து அந்தத் திரைப்படத்தை எடுத்திருந்தார். கதாநாயகனுக்குக் கூட என் பெயர்தான். எனக்கு அது குறித்துக் கடிதம் எழுதியிருந்தார். இதெல்லாம் எதற்கு என்று அவரிடம் நான் சொன்னேன். எல்லாம் உங்கள் மீது கொண்ட அன்பினால்தான் என்றார். அதிலும் புலமைப்பித்தன் ரொம்ப அற்புதமாக பாடல்களை எழுதியிருந்தார். “உன்னால் முடியும் தம்பி, தம்பி; உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…” என்று. நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் உணர வேண்டும். அதுதான் முக்கியம். நம் இதயத்துள் கடவுள் இருக்கிறார். அவரைப் பார்க்க முடியும், பேச முடியும், உணர முடியும். அவர் நம்முள் இருப்பதை நாம் உணர வேண்டும். அந்தக் காலத்தில் அதற்கான பயிற்சி முறைகள், வேதம், தியானம் என்று எல்லாம் இருந்தது. அதையெல்லாம் உணராமல், சும்மா உன்னால் முடியும், முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் ஒன்றும் பயனில்லை. ராமகிருஷ்ண மடத்துக்கு எதிரே “அண்ணா” என்று ஒருவர் இருந்தார். மிகுந்த கெட்டிக்காரர். புத்திசாலி. தமிழ், சம்ஸ்கிருத இரண்டிலும் பெரிய புலமை மிக்கவர். எதுகுறித்துக் கேட்டாலும் விளக்கம் சொல்லும் அளவுக்கு திறமைசாலி. அவரது நூல்களையெல்லாம் வாங்கிப் படித்தால் பலவிஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம் என்று புலமைப்பித்தனிடம் சொன்னேன். ´


சிறப்பான பாடல் - தனியொருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னது போன்றே இங்கும் சில வரிகள் வருகின்றன (பள்ளி - கல்லூரி இல்லையென்றால் அந்த ஊரைக் கொளுத்திடுவோம்).


https://www.youtube.com/watch?v=xc9wBTJpr74உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிப்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யார் என்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் காசிலே தான்டா கட்சிக்கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம்நாடு திருந்தச்செய்யணும்

கல்லூரி பள்ளி இல்லாத ஊரைக் கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

IsaiRasigan and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Oct 11, 2021 4:47 pm

அறச்சீற்றப்பாடல்.

"இது நாடா, இல்லை வெறும் காடா?" - காட்டமான சினம் இங்கே வெளிப்படுகிறது - முழுப்பல்லவியுமே இப்படி ஆற்றாமையாக இருப்பதைக்காணலாம்.

என்றாலும், அது முழு எதிர்மறையாகப் போகாமல் நம்பிக்கையோடு செல்வது புத்துணர்வு தருகிறது.

சரணங்களில் இதே போன்ற ஆற்றாமை தொடர்கிறது என்றாலும், எப்படியாவது ஒரு நல்ல எதிர்காலம் வந்துவிடும் என்ற நேர்மறையான மனநிலை அங்கங்கே எட்டிப்பார்ப்பதைக் காணலாம். அதாவது, "முயன்றால், மனசு வைத்தால், மாற்றங்கள் வர முடியும்" என்ற ஒரு கருத்து உள்ளே பொதிந்து இருக்கிறது.

அவ்விதத்தில் பார்த்தால் "நம்பிக்கைப்பாட்டு" என்றும் சொல்லலாம்!

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கே மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்துச் சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல
இது நாடா இல்ல வெறும் காடா?
இதைக் கேக்க யாரும் இல்ல தோழா

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

ஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும் நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா? ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?


https://www.youtube.com/watch?v=Kyv_1k1SMu8


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Oct 11, 2021 5:53 pm

இன்னுமொரு சிறப்பான பாடல் இதே இசைக்கோர்ப்பில் - புலவர் எழுதியது, டைட்டில் பாடலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது!

"நாடு முழுதும் தீயாப்போனா வீடு மட்டும் ஏது?" - என்று பொட்டில் அடித்தது போன்று கேள்வி கேட்கிறார். மனசாட்சி உள்ள எல்லோரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி!

தீயன நடக்கையில் கேள்வி கேட்காமல் விலகிப்போவது, உதவி கேட்டுக்குரல் ஒலிக்கையில் காது கேளாமல் கடந்து செல்வது - இப்படித்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எல்லோரும் தங்களைத்தாங்களே ஆய்வு செய்து கொள்ளத்தூண்டும் சிறப்பான பாடல்.

பெரிய அளவிலான இசை அலங்கரிப்புகள் செய்யாமல் எளிமையாக விட்டிருக்கிறார் ராசா - கேட்போர் பாடல் வரிகளை உற்று நோக்கட்டும் என்பதற்காக என்று நினைக்கிறேன்!

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வ என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா? மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேட்கவுமில்லை

அம்மா பசி என்றொரு கூக்குரல் அதுதான் இனி தேசிய பாஷை
கட்சிக்கொடிகள் ஏறுது அங்கே கஞ்சிப் பானை தெருவில் இங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தர்மம் செஞ்ச பூமி

தேசமிது செஞ்சது உனக்கு ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
"நமக்கென்ன போடாப்போ"ன்னு நழுவுறே நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப்போனா வீடு மட்டும் ஏது?


https://www.youtube.com/watch?v=LEghA2RcK6c


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Oct 11, 2021 6:49 pm

இந்தப்பாடல் படத்தில் இருந்ததா, அப்படியானால் என்ன சூழல் என்றெல்லாம் நினைவில்லை.

காணொளி ஒன்றும் காணாததால் ஒருவேளை காட்சியில் இல்லையோ என்று தோன்றுகிறது. பிலஹரி ராகப்பாடல் என்பதால் ஜெமினி பாடுவதாக ஒருவேளை திரையில் இருந்திருக்கலாம் - எனக்குச் சரியாக நினைவில்லை (அவரது திரைப்பெயர் - பிலஹரி மார்த்தாண்டம் என்று நினைவு).

மீண்டும் ராசா செவ்வியல் இசைப்பாடலுக்குப் புலவர் புலமைப்பித்தனை அழைத்துச் சிறப்பித்திருக்கிறார் Smile

"இசைத்தமிழ் நிரந்தரம் - எனக்கது வரந்தரும்" - அழகு!

https://www.youtube.com/watch?v=FpOUrNf1RGk(பிலஹரி) நீ ஒன்று தானா என் சங்கீதம்?
குருவி தோளில் இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாணில் இல்லை

போகப்போகப் போகும் வானம்
பாடப்பாட நீளும் ராகம்
சமுத்திரத்தை மூடப் பந்தல் போடவா?
எனக்குள் எல்லாம் என்னும் எண்ணம் ஆகுமா?
இசைக்கு நீ அடக்கமா? உனக்கது அடங்குமா?

இசைக்குள் கிடந்து மயங்கும் சக்ரவாகம்
மனதில் நெருப்பை வளர்க்கும் ராக யாகம்
நானும் நீயும் தந்ததல்ல யாரைப்பார்த்தும் வந்ததல்ல நீயின்றி நான் உண்டு
பூதம் ஐந்து நாதம் கோடி நானும் அந்த வானம்பாடி
பறந்து நிற்கும் அந்த வானம் போன்றது
இறந்த பின்னும் என்னை வாழ வைப்பது
இசைத்தமிழ் நிரந்தரம் எனக்கது வரம் தரும்


Last edited by app_engine on Mon Oct 11, 2021 6:59 pm; edited 1 time in total

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Mon Oct 11, 2021 6:54 pm

indha paatai padathil partha nyabagam app.

sevai seidhu vittu,(oru road Accident endru nyabagam) thamadhamaga vandha  Kamalai thittiya Bilahari Marthandathai, edhirthu indha paatai kamal paduvar.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Oct 11, 2021 7:57 pm

Usha wrote:indha paatai padathil partha nyabagam app.

sevai seidhu vittu,(oru road Accident endru nyabagam) thamadhamaga vandha  Kamalai thittiya Bilahari Marthandathai, edhirthu indha paatai kamal paduvar.

அது இன்னொரு பாட்டு - இதோ அடுத்து வருகிறது Smile

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Oct 11, 2021 7:58 pm

https://www.youtube.com/watch?v=jWBoNvoCmD8தாசேட்டனின் கணீர்க்குரலில் இன்னொரு பாட்டு இந்த இசைக்கோர்ப்பில் - இதுவும் செவ்வியல் வடிவிலானது. முதல் இரண்டு வரிகளும் மேடைக்கச்சேரியில் பாடுவது போன்று திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது - அந்த அளவுக்கு மரபியல் முறைப்படியான பாடல் என்று கொள்ளலாம்.

சில வரிகளே உள்ளன என்பதால் புலவர் கூடுதல் மெனக்கெட்டிருக்க வழியில்லை - வேலையெல்லாம் ராசாவுக்கும் பாடகருக்கும் தான் இங்கே Smile

மானிட சேவை துரோகமா? கலைவாணி நீயே சொல்!
வீதியில் நின்று தவிக்கும் பராரியைப் பார்ப்பதும் பாவமா?

வீதி வீணைகளில் தந்தி சிந்தும் இசை மனமுருகும்
நாத வீணையில் தினம் கேட்டுக்கேட்டு நான் அழுதேன்

மேகம் தீயாகி நிலாவும் எரியும் மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும் சருகாகி வெந்து தணல் மேவும்


https://www.youtube.com/watch?v=0gCyzsG8VkEapp_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Mon Oct 11, 2021 8:03 pm

amam app. thappa solliten.

padam youtube ipo dhan kedachadhu. neenga sonna paatu epo enga varudhunu theriyalai.

https://www.youtube.com/watch?v=QKD8Nd0R2G0

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Oct 12, 2021 1:35 am

https://www.youtube.com/watch?v=AfVQbkZN-o0மழை வருது மழை வருது போன்றே இன்னொரு ஐந்தடி சுழற்சியின் அமைந்த "கண்டச்சாப்பு" (அல்லது கண்ட நடையில் அமைந்த) பாடல்!

இதுவும் மென்மையான ஒன்றே - காதல் பாட்டு (ஆங்காரமான பாட்டு அல்ல - அதாவது அழகு மலராட போன்ற சூளுரை / பொங்கல் எல்லாம் இல்லை). அதற்காக உணர்ச்சிக்குவியல் அல்ல என்று சொல்லிவிடவும் முடியாது. 

சற்றே விரைவான விதத்தில் தான் வருகிறது - அதாவது காமஉணர்ச்சிக்குவியலுடன். இத்தகைய மெட்டுக்குத் தக்கதாக சொற்கள் - அதுவும் சூழலுக்குப் பொருத்தமாகவும், கவர்ச்சியாகவும் இடுவது  எளிதான செயல் அல்ல. புலவர் இங்கே சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று பாராட்டலாம்!

இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப்பதிக்க மின்னட்டும் வண்ணங்களே
மெத்தைப்பழக்கம் வித்தைப்பழக்கம் தத்தைக்கிளிக்கு முத்தப்பதக்கம் 
சொர்க்கத்தை எட்டித்தொடு


மை வைத்த கண்ணுக்குள் பொய் வைத்த பெண்ணுக்குள் 
கை வைத்து சொர்க்கத்தை யார் வைத்தது?
பொன் வைத்த மஞ்சத்தில் பூ வைத்த நெஞ்சத்தில் 
கண் வைத்து நெஞ்சத்தை யார் தைத்தது?
தந்தச்சிலை அந்தப்புரம் அந்திக்கலை சொல்லித்தரும்
கட்டில் கதை கற்றுத்தரும் இன்பச்சுவை கொட்டித்தரும்
எங்கெங்கு கண் வைக்க எங்கெங்கு கை வைக்க நீ கொஞ்சம் சொல்லிக்கொடு
கை ரெண்டில் கை வைத்து கண்ணுக்குள் கண் வைத்து இன்பத்தை அள்ளிக்கொடு
அந்தக்கணத்தில் தங்கக்குடத்தில் கை ரேகை ஒட்டட்டும் கண் பார்வை சொட்டட்டும்


மோகத்தின் சந்தத்தில் முத்தத்தின் சத்தத்தில்
சாமத்தில் காமத்தை அர்ச்சிக்கலாம்
இன்பத்தின் வெள்ளத்தில் நின்றாடும் உள்ளத்தில் 
எப்போதும் நீ என்னை ரட்சிக்கலாம்
அன்னக்கொடி என்னைத்தொடு அத்திப்பழம் எச்சில் படும்
கற்றைக்குழல் மெத்தை இடும் பட்டுத்துகில் சற்றே விடும்
உன் காதல் மங்கைக்குள் ஓடாத கங்கைக்குள் தேன் வெள்ளம் ஒடட்டுமே
செவ்வந்திப் பொட்டாட பொன்வண்டு ஒத்தாட மேளங்கள் கொட்டட்டுமே..
அந்திச்சபைக்குள் இன்பச்சிறைக்குள் கைதாக்கி வைத்துக்கொள் வண்டாகி மீட்டுக்கொள்

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Oct 12, 2021 5:42 pm

பல்லவியைக் கேட்டால் "உண்மையிலேயே இது 80களில் வந்த பாடல் தானா, ராசாவா இப்படி ஒரு 'பழசு போலத்தோன்றும்' மெட்டுப்போட்டார்"  என்றெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்பிருக்கிறது. இனிமையாக இருக்கிறது என்றாலும் ராசாவின் தனித்துவம் இல்லையே என்று எண்ணவைக்கும் பல்லவி.

ஆனால் சரணத்தில் - குறிப்பாக அதன் கடைசி ரெண்டு வரிகளில் "என்ன நெனச்சீங்க" என்று நம்மை ஏளனம் செய்வது போன்ற கூர்மையுடன் அடித்து விளையாடுகிறார். தோனி கடைசி ஓவரில் அடிப்பது போன்ற ஆட்டம். 

அதற்கேற்ற விதத்தில் புலவரும் விளையாடுகிறார் - விறுவிறுவென்று செல்லும் இந்த இரண்டு வரிகளும் இந்தப்பாடலை எங்கோ கொண்டு சென்று விடுகின்றன!

பருவ வயலில் ஒரு அமுதப்பாசனம் இரவு விடிய ஒரு வருஷம் ஆகணும்
இருவர் கூடலாம் ஒருவர் ஆகலாம் மதன வேதம் தினமும் ஓதலாம்

எனது விழியில் ஒரு கனவு பூத்தது எனது இதயம் உன்னை எழுதிப்பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும் இணையும் கோலம் எதிரில் வந்தது

பாடல் படத்தில் இடம் பெற்றதா தெரியவில்லை. காணொளி ஒன்றும் இல்லை - பாட்டு மட்டும் வலையில் இருக்கிறது. 

மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ?
இதயம் எங்கும் தேன் மழைச்சாரல் எனக்குள் வீசாதோ?

வீசும் காற்றே நீ மெல்ல வீசு மலரின் தேகம் தாங்காது
பேசும் கண்ணே நீ மெல்லப்பேசு ஊரார் கேட்டால் ஆகாது
இதயம் எங்கும் பன்னீரின் ஓடை இங்கும் அங்கும் பாய்கின்றது
பருவ வயலில் ஒரு அமுதப்பாசனம் இரவு விடிய ஒரு வருஷம் ஆகணும்
இருவர் கூடலாம் ஒருவர் ஆகலாம் மதன வேதம் தினமும் ஓதலாம்

கூந்தல் வந்து பாய் போடும் நேரம் கோடைத்தென்றல் பூத்தூவும்
ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம் உள்ளம் எங்கே கண் மூடும்
கனலும் கள்ளும் ஒன்றான போது கண்ணே பெண்மை உண்டானது
எனது விழியில் ஒரு கனவு பூத்தது எனது இதயம் உன்னை எழுதிப்பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும் இணையும் கோலம் எதிரில் வந்தது

https://www.youtube.com/watch?v=56vyP9IhHcc


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Tue Oct 12, 2021 6:10 pm

indha padathil paatin oli tharam miga sumar ragam.

Sravanan sterio audio konjam nanraga irukum.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Oct 12, 2021 9:52 pm

மலரே நலமா?

https://www.youtube.com/watch?v=F-FAQ1Uo4Vgபேருந்துகளில் செல்லுகையில் இந்தப்பாடல் அவ்வப்போது கேட்டிருக்கிறேனே அல்லாமல் என்னிடம் இந்த ஒலிப்பேழையோ (அல்லது பதிவு செய்ததோ) இருந்ததாக நினைவில்லை. அதனாலோ என்னமோ அந்த முதல் வரிக்கப்பால் என்ன என்பது நினைவில் இருக்கவில்லை.

கிட்டத்தட்டப் புதிதாகக் கேட்பது போல் இருந்தது இந்தப்பாடலை இன்று உற்றுக்கேட்ட போது!

எக்கச்சக்கமான குறும்புடன் புலவர் இந்தப்பாடலை எழுதியிருக்கிறார் - பள்ளியறைப்பாடல் / காமம் தூக்கல் என்பவை சொல்லத்தேவையில்லை. சிலேடையும் / உருவகங்களும் வயதுக்கு வந்தவர்களுக்குப் புரியும் என்றாலும் அறியா வயதினர் வானொலியில் கேட்டால் அவர்களுக்குப் பெரிதும் விளங்கியிருக்காது அக்காலத்தில் Smile

மலரே நலமா? மடிமேல் விழவா?
விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
அரச இலையில் உரசும் நிலையில் சரசம் எத்தனையோ!
இதழ் அமுதசுரபி வழியவழிய வழங்கும் முத்திரையோ!

தென்பாண்டி முத்துக்கள் முப்பது சிப்பியில் வைப்பது இதழ்
அம்மாடி எத்தனை முத்திரை நித்தமும் வைப்பது அதில்
கோடி கொடுத்திட வேணுமடி ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி
ஆடை இரவினிலே கலைந்தது ஆசை இடையினிலே அலைந்தது
போதை மனதினிலே எழுந்தது பூவை விழி அதிலே சிவந்தது
சிவந்த கண்ணில் காதல் தீப ஒளியிலே கலைவிழா

வெண்மேகம் பந்தலை இட்டது முத்துக்கள் கொட்டுது அதோ
பெண்தேகம் பஞ்சணை இட்டது நெஞ்சினைத்தொட்டது இதோ
சிந்தும் மழையினில் நீ குளிக்க சேலைக்குடையினை நீ பிடிக்க
சொர்க்கக்கதவுகளோ திறந்தன சோதிக்கருவிழிகள் சிவந்தன
காதல் கனவுகளோ பலித்தன கன்னக்கனிச்சுளைகள் இனித்தன
நயன பாஷை பேசிப்பேசி இளமைகள் இணைந்தன


காட்சிப்படுத்தலில் அப்படியொன்றும் வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையில் இல்லை - பொதுவான காதல் காட்சிகள் மட்டுமே - சென்சாருக்கு அஞ்சிச்செய்த படமாக்கல் என்று நினைக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=NVanlW-ZBW8app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Oct 13, 2021 4:25 am

https://www.youtube.com/watch?v=VI_55PrWb2sமிகச்சிறப்பான தாள இசையுடன் ஜானகி - பாலு பாடிய வெற்றிப்பாடல் "தேவ மல்லிகைப்பூவே:" (நடிகன் என்ற திரைப்படத்துக்கான இசைக்கோர்ப்பு).

விரைவாக ஓடும் மெட்டுக்கேற்ப - அதுவும் பொருத்தமாகவும், அழகாகவும் - பாடல் வரிகள் எழுதும் கலையில் புலவர் சிறந்தவர் என்று இதற்கு முன்னமேயே நிறையப்பாடல்களில் பார்த்து விட்டோம்.

இந்தப்பாட்டு இன்னுமொரு தெளிவு Smile

தேவ மல்லிகைப்பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே
பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ்ப்பாட்டே
நீ காதல் சித்திரமா? என் கண்ணில் சொப்பனமா?
இது மோக மந்திரமா? எனை ஏய்க்கும் தந்திரமா?
அடி மானே மானே ஆசைத்தேனே வா என் விழிகளின் வழியே

தென்றல் ஒருபுறம் மின்னல் ஒருபுறம் பெண்ணில் தெரிகிறதே
திங்கள் ஒருபுறம் வெயில் ஒருபுறம் கண்ணில் வருகிறதே
அள்ளும் ஒருபுறம் துள்ளும் ஒருபுறம் இன்பம் வழிகிறதே
அச்சம் ஒருபுறம் வெட்கம் ஒருபுறம் நெஞ்சில் எழுகிறதே
ஆடைகட்டி ஆடவந்த வானவில்லே
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே
காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே
இனி நானும் நீயும் நாளும் கூட
இம் மானின் மானின் ஆசைத்தேனே வா என் விழிகளின் வழியே

அள்ளிக்கொடு கதை சொல்லிக்கொடு என அன்னக்கிளி வருமே
அந்திக்கலையது சிந்தைக்கினியது ஆசைப்படி வருமே
எட்டிப்பிடி எனைக்கட்டிப்பிடியென அஞ்சும் இடை வருமே
எங்கும் பிடி சுகம் பொங்கும்படியெனக் கொஞ்சும் கிளி வருமே
காமன் அம்பைக் கண்ணிரண்டில் பூட்டுகின்றாய்
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்
வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்
என் ராஜா சூடும் ரோஜாப்வோ
அடி மானே மானே ஆசைத்தேனே வா என் விழிகளின் வழியே


https://www.youtube.com/watch?v=igEoIOVgPAEapp_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Oct 14, 2021 10:43 pm

கொஞ்சும் தமிழில் கவிதை எழுதியிருக்கிறார் புலவர்.

இருவிழியின் வழியே நீயா வந்து போனது?
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது?

சிறப்பு!

என்றாலும் அதைத்தொடர்ந்து பெண்ணுடல் குறித்துப்பாடுவது "ராத்திரியில் பூத்திருக்கும்" பாட்டில் இருந்த அதே வரம்பு மீறலுக்குச் செல்வதையும் பார்க்கிறோம்.

மொத்தத்தில் விறுவிறுப்பான மெட்டுக்கு வழக்கம்போலக் காதலும் காமமும் பொங்கும் பாடல் வரிகள்!

https://www.youtube.com/watch?v=OD3HZqfgS_cஇரு விழியின் வழியே நீயா வந்து போனது?
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது?
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது?

தொட்டில் இடும் இரு தேமாங்கனி என் தோளில் ஆட வேண்டுமே
கட்டில் இடும் உன் காமன் கிளி மலர் மாலை சூட வேண்டுமே
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு தேதி ஒன்று பார்க்கிறேன்
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும் சேதி சொல்லப்போகிறேன்
கார் கால மேகம் வரும் கல்யாண ராகம் தரும்
பாடட்டும் நாதஸ்வரம் பார்க்கட்டும் நாளும் சுகம்
விடிகாலையும் இளமாலையும் இடைவேளையின்றி இன்ப தரிசனம்

உன் மேனியும் நிலைக்கண்ணாடியும் ரசம் பூச என்ன காரணம்?
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம் இதைக் கேட்பதென்ன நாடகம்?
எங்கே எங்கே ஒரே தரம் என்னை உன்னில் பார்க்கிறேன்
இதோ இதோ ஒரே சுகம் நானும் இன்று பார்க்கிறேன்
தென்பாண்டி முத்துக்களா? நீ சிந்தும் முத்தங்களா?
நோகாமல் கொஞ்சம் கொடு உன் மார்பில் மஞ்சம் இடு
இருதோள்களில் ஒரு வானவில் அது பூமி தேடி வந்த அதிசயம்


https://www.youtube.com/watch?v=HrIIuKK8tjU


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 15, 2021 1:20 am

பழைய காலத்துப் பார்வதி  / தேவதாஸ் போன்ற மேற்கோள்கள் என்னைப்பொறுத்தவரை சற்றே எரிச்சலூட்டுபவை. 

அதனால் மிக அழகிய மெட்டு என்றாலும் இந்தப்பாட்டின் பல்லவி மேல் அவ்வளவு பிடிப்பு எனக்கு இருந்ததில்லை.

என்றாலும், சரணத்தில் புலவர் புகுந்து விளையாடியிருக்கிறார். ஓடை போன்று ஓடும் மெட்டுக்கு இசைவான சொற்கள், அழகான உவமைகள் மற்றும் ஓசை நயம் என்று சிறப்பான சரணங்கள் எழுதிப் புலவர் தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டார் Smile

https://www.youtube.com/watch?v=NMQ6Op4kaoUஅடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி
தேடி வந்த தேவதாசைக் காண ஓடி வா
அடி பார்வதி என் பார்வதி
பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா?
பாடும் பாடல் அங்கே கேட்காதா?


(ஒரு வான்மதி உன் பார்வதி காதலி எனைக்காதலி 
தேவன் எந்தன் தேவதாசைக் காண ஏங்கினேன்
என் தேவதாஸ் என் தேவதாஸ்
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே 
பாரு நானும் உன்னைப்பார்த்தேனே)


சின்ன ரோஜா இதழ் அது கன்னம் நான் என்றது
பாடும் புல்லாங்குழல் உன் பாஷை நான் என்று கூறும்
கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்
தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்
தேன் தர வேண்டும் நீ வரவேண்டும் 
கண்வாசல் பார்த்தாடு வா 


கோடைக்காலங்களில் குளிர்க்காற்று நீயாகிறாய்
வாடைநேரங்களில் ஒரு போர்வை நீயாக வந்தாய்
கண்கள் நாலும் பேசும் நேரம் 
நானும் நீயும் ஊமை ஆனோம்
மைவிழி ஆசை கைவளையோசை
என்னென்று நான் சொல்லவா

https://www.youtube.com/watch?v=vfpMR0Xw330


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 15, 2021 6:42 pm

https://www.youtube.com/watch?v=tu38bMSRBegபாடல் வரிகளை உற்றுநோக்காமல் கேட்டால் இது ஏதோ பக்திப்பாடல் அல்லது வழிபாட்டுப்பாடல் என்று தோன்றலாம். (தமிழ் தெரியாத வேறு மொழிக்காரர்கள் கேட்டால் கண்டிப்பாக வழிபாட்டுப்பாடல் என்று தான் நம்புவார்கள்).

ஆனால் உண்மையில் இது அப்பட்டமான காமத்துப்பால் வகைப்பாடல் Smile

புலவரின் வரிகளில் நிறைந்திருக்கும் காமத்தை ராசாவின் இசை முற்றிலும் நிறம் மாற்றியிருக்கிறது (இயக்குநரின் விருப்பம் அப்படியாக இருந்திருக்க வேண்டும்).

மந்திரம் இது மந்திரம் தினந்தோறும் மனமோதும்
ஆவி நீ எழில் தேவி நீ இதைக்கேட்டு வர வேண்டும்


காமனின் பூஜைக்குப் பூரண கும்பம்
தாங்கிய செவ்வாழை நாட்டிய கம்பம்
உன் முகம் தேயாத சந்திர பிம்பம்
பார்த்தவர் நெஞ்செல்லாம் ஆசையில் வெம்பும்
ஆலிலை ஓரத்தில் மேகலை ஆடும்
ஆனந்த சொர்க்கத்தை என் விழி தேடும்
சாயலில் மயிலே தேனிசைக்குயிலே
மாலையிலடிக்கும் மஞ்சளின் வெயிலே
அழகின் அழகே அன்பே நீ வா


ஆடைகள் இல்லாமல் தனிமையில் இருந்தாய்
கூந்தலில் ஏன் உந்தனழகினை மறைத்தாய்?
கார் குழல் மேலாடை போர்த்திய பெண்ணே
சீருடை நான் தானே பாரடி கண்ணே
பூமியில் மேவாது வந்தது பாதம்
பூமகள் நீ காட்டும் ஜாடைகள் போதும்
நீ எனை அணைப்பாய் தீயையும் அணைப்பாய்
மன்மத மலரே தேனினில் நனைப்பாய்
சிவக்கும் விழியோ காமன் தீபம்

காட்சிப்படுத்தல் மலையாளப்படங்களை நினைவு படுத்துகிறது. 

அங்கே கூடுதல் காமமோ முகம் சுளிக்கவைக்கும் காட்சிகளோ இல்லை என்பது இன்னொரு வேடிக்கை!

https://www.youtube.com/watch?v=oq1T16Mq2b0


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 15, 2021 7:34 pm

https://www.youtube.com/watch?v=Vb8oA5M7NQIஇந்த ராக்காயி கோயில் படப்பாடலைக் குறித்து உமா ரமணன் இழையில் எழுதும் போதே "அவ்வளவு சிறப்பு இல்லாத பாடல் வரிகள்" என்று சொல்லியிருக்கிறேன். இன்று மீண்டும் கேட்ட போதும் பெரிய மதிப்பு ஒன்றும் தோன்றவில்லை.

எக்கச்சக்க மசாலாப் பாடல்களில் எழுதியிருக்கும் அதே காமம் பொதிந்த சொற்றொடர்கள்.

என்றாலும் பாடல் பரவலாக அறியப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. நல்ல ஒலித்தரத்தில் கேட்டால் இசைக்கோர்ப்பு நான் முன்பு திட்டிய அளவுக்கு அவ்வளவு மோசமில்லை என்று தோன்றுகிறது Smile

உந்தனின் பாடல் என்னை எங்கோ கொண்டு செல்ல
உள்ளத்தின் ஆசை தன்னை இன்னும் என்ன சொல்ல
ராத்திரி தூக்கம் வருமோ? கண்களை மூட விடுமோ?
காற்றிலும் இந்தக்கொதிப்போ? காதலில் வந்த தவிப்போ?


பூவிதழின் தாழ் திறந்து வண்டு வந்து கள்ளருந்திப் பாடும்
பூமி எது வானம் எது என்று சொல்லி அங்கும் இங்கும் தேடும்
இன்பத்தின் வேதனை ஏதோ மானே மானே
என்னென்று பார்த்திட வந்தேன் நானே நானே
நித்திரை போனது உன்னால் தானே தானே
நித்தமும் நெஞ்சினில் ஊறும் தேனே தேனே
காதலெனும் போதையிலே காலங்கள் தானேதடி?


ஆசையிலே பேசையிலே சொர்க்கம் இந்த மண்ணில் வர வேண்டும்
ஆலிலையின் வாசலிலே அந்திமழை சிந்தி விழ வேண்டும்
உந்தனின் பார்வையில் ஏதோ மாயம் மாயம்
உந்தனின் பார்வையில் எங்கும் காயம் காயம்
நெஞ்சினில் ஆயிரம் மின்னல் ஓடும் ஓடும்
கண்களும் ஆனந்த நீரில் ஆடும் ஆடும்
மார்கழியின் ராத்திரியில் மன்மத ஆராதனை

https://www.youtube.com/watch?v=YB1WVigDzsg


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Fri Oct 15, 2021 8:33 pm

மந்திரம் இது பாட்டை கேட்ட புதிதில் ஏதோ பக்தி பாடலின வரிகள் என்றே நானும் நினைத்து இருக்கிறேன்.

உந்தனின் பாடல் பாட்டு கேட்க சாதாரணமாகத் தோண்றும். ராஜாவின் தண்மையில் மாற்றம் வந்த காலம்.சின்ன சின்ன இடை இசை.
ஒலித்தரம் சரியில்லாத பாட்டு.நல்ல ஒலித்தரத்தில் கேட்டால நல்ல பாட்டுதான்.

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.இந்த பாட்டு கார்த்திக் ராஜாவா.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 15, 2021 9:05 pm

தேன் போன்ற இனிமையான பாடல் - குறிப்பாகச் சரணத்துக்கான மெட்டு ராசா அப்படியே பல பூக்களில் சேகரித்து எடுத்த மதுவை வேதிமாற்றம் செய்து தேனீ கொடுப்பது போன்ற இனிப்போ இனிப்பு!

அது சற்றும் குறையாமல் ஜானகி பாடிச்சிறப்பித்திருக்கிறார்.

தன் பங்குக்கு மிகவும் இனிமையாகப் புலவரும் பாடல் வரிகளை அளித்திருக்கிறார். 

கொஞ்சமும் ஆராயாமல் அப்படியே சுவைத்து உள்வாங்கத்தக்க இனிப்பு!

https://www.youtube.com/watch?v=doCjSkKv7_Iகண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு
பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு
என்ன இது என்ன இது புதுப்புது மயக்கம்


கண்ணிலே போதை ஏற்றினாய்
நெஞ்சிலே காதல் ஊற்றினாய்
பெண்மையின் வீணையை மீட்டினாய்
ஆசையின் தூண்டிலில் மாட்டினாய்
ஏனிந்த மயக்கம் ஏனிந்தக்குழப்பம்
ஏனென்று தான் இன்று என் மனம் தவிக்கும்


ஆசையைச்சொல்ல ஏங்கினேன்
வார்த்தையை எங்கும் தேடினேன்
வானமும் பூமியும் என் வசம்
மங்கையின் ஜீவனோ உன் வசம்
ஏனிந்த மயக்கம் ஏனிந்தக்குழப்பம்
ஏனென்று தான் இன்று என் மனம் தவிக்கும்

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 15, 2021 9:09 pm

Usha wrote:
எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.இந்த பாட்டு கார்த்திக் ராஜாவா.

சரியான ஐயம் தான் - "insiders" யாராச்சும் சொன்னால் தான் தெரியும்!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Fri Oct 15, 2021 9:20 pm

கார்த்திக் ராஜா Style....ஒரு இணைப்புஇருக்காது.எந்த இடை இசையும் ஒரு இணைப்பு இல்லாமல் துண்டு துண்டாக இருக்கும்.உந்தனின் பாட்டைக் கேட்டால் அப்படி இருக்கும்.


Last edited by Usha on Fri Oct 15, 2021 9:25 pm; edited 1 time in total

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 4 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum