Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

IR-Pulamaippiththan combo songs

4 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Sep 27, 2021 8:30 pm

எம்ஜிஆர் காலம் தொட்டுக்காதல் பாட்டுக்கள் சரளமாக எழுதி வந்தார் புலவர் என்ற அடிப்படையில் கமல் -ரஜினி மசாலாப்படங்கள் பலவற்றில் டூயட் பாட்டுக்கள் எழுத ராசா அழைத்திருக்கிறார். அப்படி வரும்போதெல்லாம் கிடைத்தவை சூப்பர் ஹிட் பாடல்கள்.

இதற்கு முன்னரே நிறைய அப்படிப்பட்ட பாடல்கள் இந்த இழையில் பார்த்திருக்கிறோம் - இன்னும் ஒன்று கணக்குக்கு.

நள்ளிரவில் இரண்டு கடிகார முட்களும் ஒன்று சேருவது போன்று உடலாலும் மனத்தாலும் ஒன்றிப்போகும் காதலன் காதலி குறித்த பாடல். அதனால் டிங் டாங் மணிச்சத்தம் பாடல் வரிகளிலும் இசையிலும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. அது சற்றே எரிச்சலைத் தந்தாலும் மற்றபடி இனிமையான பாடலும் வரிகளும்.

குறிப்பாக இந்தப்பாட்டுக்கு உருவாக்கப்பட்ட தாளக்கருவிகளின் அமைப்பு எனக்கு மிகமிகப்பிடித்த ஒன்று!

https://www.youtube.com/watch?v=KSPznXAUUOA



இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங் கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆடல் பாடல் டிங் டாங் அள்ளும் துள்ளும் டிங் டாங்

காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
வானமில்லா பூமி தன்னை யாரும் பார்த்ததில்லை
தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
உந்தன் கை வந்து தொட்ட பக்கம்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
அங்கும் இங்கும் டிங் டாங் ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்

காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும் போது வானை மண்ணில் பார்த்தேன்
நீயும் நானும் சேரும்போது கோடையும் மார்கழி
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
அங்கும் இங்கும் டிங் டாங் சொர்க்கம் தங்கும் டிங் டாங்
உந்தன் சேவை எந்தன் தேவை


பின்குறிப்பு : தங்கமகன், காக்கிச்சட்டை போன்றே இந்தப் "பணக்காரன்" படமும் சத்யா மூவிஸ். (எம்ஜிஆர் - ஆர் எம் வீரப்பன்)

https://www.youtube.com/watch?v=feKj-oiUkQA



app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Sep 27, 2021 11:58 pm

புலவர் மனோவுடனான தனது நேர்காணலில் விவரமாய்ப் பேசிய இன்னொரு பாடல் "உச்சி வகுந்தெடுத்து".

இதைக்குறித்துப் பலமுறை எழுதி இருக்கிறேன். மிகவும் உணர்ச்சிகரமான பாடல் - பாலுவின் ஆகச்சிறந்த பாடல்களுள் ஒன்று என்றே சொல்லத்தக்கது. உள்ளே பொதிந்திருக்கும் கருத்துக்கும் சூழலுக்கும் இவ்வளவு பொருத்தமாகக் கவிஞர் எழுதி இருப்பதைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

சொல்லப்போனால், இந்தப்படம் வந்த போது பாடல்களின் தாக்கம் அவ்வளவு தூக்கலாக இருந்ததால் சின்ன நகர்களில் கூடப் பல நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம்.

சிவகுமாரின் 100ஆவது படம் என்று விளம்பரம் செய்தார்கள் என்று நினைவு. பெரிய நடிகர்களான எம்ஜியார், சிவாஜி, கமல், ரஜினி ஆகியோருக்கு 100-ஆவது படம் வெற்றி பெறவில்லை என்று சொல்லுவார்கள். அது போல் இல்லாமல் அடுத்த படியில் நின்றிருந்த சிவகுமார் தப்பித்துக்கொண்டதற்குப் பாடல்கள் ஒரு பெருங்காரணம்! அதில் உச்சி வகுந்தெடுத்து முதலிடத்தில்!

கிட்டத்தட்ட இதே போன்ற இசையமைப்பில் உடனே சங்கர்-கணேஷ் ஒரு பாடல் வெளியிட்டார்கள் (பட்டு வண்ண ரோசாவாம்). அதுவும் பெரிய வெற்றி பெற்றது. எழுதியவர் புலமைப்பித்தன் தான் என்று நினைக்கிறேன்.

உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலப்பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

பட்டியில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல

வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக்கத அத்தனயும் கட்டுக்கத
அதச் சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்திப் பூவிழியே நம்பவில்ல!


https://www.youtube.com/watch?v=LV0m2OCk6Ao



app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 28, 2021 12:32 am

இசையும் பாட்டும் முற்காலங்களில் படைகளுக்கே வீரம் ஊட்டியிருக்கின்றன!

அதே போன்று பெரும் புரட்சிகளும் போராட்டங்களும் அவற்றுக்கென்று எழுதப்பட்ட / இசைக்கப்பட்ட பாடல்களால் கொதிநிலைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. (இந்தியாவின் விடுதலைப்போராட்டம் என்று சொன்னாலே அதில் ஊக்கமுண்டாக்கிய கவிஞர்கள் குறித்துப் பழமொழியினரும் நினைவு கொள்வார்கள்.)

திரையிசையில் ராசாவும் அவரோடு சேர்ந்த கவிஞர்களும் செய்த புரட்சிகளும் மேற்சொன்னவற்றுக்குத் தரத்தில் எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல.

மொத்தத் தமிழ் மக்கள் கூட்டத்தின் மீது அவை எப்படிப்பட்ட தாக்கம் உண்டாக்கின / வாழ்வியல் மாற்றங்கள் ஏதும் வருத்தினவா என்றால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. என்றாலும், தனிப்பட்ட ஆட்களுக்கு இவை கொடுத்திருக்கும் ஆறுதல்களுக்கும் ஊக்கங்களுக்கும் ஆயிரக்கணக்கில் சான்றுகள் இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு உணர்ச்சி வெள்ளப்பாடல் இது - ஒரு தாயின் சீற்றம்!

https://www.youtube.com/watch?v=pR44dGXvLX8



எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல
கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல
பிறப்பதும் இறப்பதும் நூறு முறை அல்ல

பாலூட்டும் அன்னை உனைத் தாலாட்டவில்லை
ஏன் என்று கேட்பாய் மகனே
லட்சிய அன்னைக்குத் தூக்கம் என்ன?
அன்னையின் ஏக்கம் என்ன?
தாயானது என் பாவமே தீயாகவோ என் கோபமே
அன்னையின் கண்களில் நித்திரை போனது
பிள்ளை உன் நெஞ்சினில் வஞ்சினம் பொங்கட்டுமே

தாயுள்ளம் அன்று இது பூகம்பம் என்று
ஊர் சொல்லும் காலம் வருமே
பிள்ளையை நான் இங்கு பெற்றதில்லை
வேங்கையைப் பெற்றவள் நான்
தன் மானமோ உன் நெஞ்சிலே என் மானமோ உன் கையிலே
மார்பிலும் தோளிலும் தாங்கிய அன்னையின்
மானத்தைக் காப்பவன் நானெனப் பொங்கி எழு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 28, 2021 9:29 pm

https://www.youtube.com/watch?v=9GYtHxFqKKM



நடனம் என்ற பெயரில் நிறைய வேடிக்கைகள் திரையில் பார்த்திருக்கிறோம் என்றாலும் சில குறிப்பிட்ட நடிகைகளின் நடனம் உடனடியாகச் சிரிப்பை வரவழைக்கும்.

அப்படிப்பட்ட ஒருவர் நகைச்சுவை செய்யும் காட்சிக்கு இப்படி ஒரு சிறப்பான தெம்மாங்குக் காதல் பாடலை ராசாவும் புலவரும் சேர்ந்து கொடுத்திருக்கிறார்கள்!

மண்மணம் வீசும் அருமையான பாடல் - வாசக்கருவேப்பிலை என்று சமையலறை மணத்தோடு தொடங்குகிறது. பாடல் வரிகளில் குறும்பு கொப்பளிப்பதைக் காணலாம். ("நன்றி கெட்ட சேலை" - இப்படி ஒரு பயன்பாடு வேறெங்கும் கேட்டதில்லை - அட அட!)

இடையிசைகள் "ராசா-நாட்டிசை-2.0" என்று நான் அவ்வப்போது சொல்லும் வகை. அதாவது, வந்த புதிதில் மேற்கத்தியச் செவ்வியல் மற்றும் நாட்டுப்புறத்தெம்மாங்கு கூட்டிக் கூடுதல் துள்ளலருவி வகையில் 70களில் ராசா கொடுத்த பாணியிலிருந்து மாறி "சற்றே மெல்ல, அமைதியான இனிமை" என்று கருவிச் சேர்ப்புகளை ஓரளவுக்கு மாற்றியது தான் #IR_Folk_V2  (தாளக்கருவிகளை மயப்படுத்தி / கிடார் கார்ட்ஸ் இனிமைக்குச் சேர்த்து என்று சில மென்மைப்படுத்தல்கள் - குழல் / சந்தூர் / வயலின் எல்லாம் வழக்கம் போல்) .

இனிப்புக்கு இசை - சிரிப்புக்குக் காட்சி!

வாசக்கருவேப்பிலையே என் மாமன் பெத்த மல்லிகையே
வாசக்கருவேப்பிலையே என் அத்தை பெத்த மன்னவனே
ஊதக்குளிருக்காத்து அது ஊசி குத்துற போது
ஒன்ன நெனச்சுத் தூக்கம் போச்சு போச்சு


நெலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா?
ஒலக அதிசயத்தில் இப்படி ஒன்னா?
நடந்தா தென்மதுரப் பாண்டியன் போல
நழுவுது பாத்ததுமே இடுப்புல சேல
நன்றி கெட்ட சேல அது வேணாம் விட்டுருடி
கண்ணே உந்தன் சேல இனி நாந்தான் கட்டிக்கடி
எட்டி நில்லு சாமி நீ தொட்டா ஒட்டிக்குவே 
தொட்டில் ஒன்னு போட ஒரு தோது பண்ணிக்குவே
இப்போதே அம்மாவா நீ ஆனா என் பாடு என்னாகும் வாம்மா


ஒடம்போ தங்கத்துல வார்த்தது போல
உதடோ முள் முருங்க பூத்தது போல
கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்
கண்டதும் எளசுக்கெல்லாம் வந்திடும் மோகம்
எந்தப்பொண்ணு கையும் என்ன இன்னும் தொட்டதில்ல
இன்றுமட்டும் கண்ணே நம்ம கற்பும் கெட்டதில்ல
கற்பு உள்ள ராசா நான் ஒன்ன மெச்சிக்கிறேன்
கட்டிக்கையா தாலி ஒன்ன நல்லா வச்சிக்கிறேன்
கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்
கையோடு கை சேர்த்துப் போவோம்

https://www.youtube.com/watch?v=cQpWNJSRwgc

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 28, 2021 11:35 pm

மேற்சொன்ன பாட்டில் நகைச்சுவை செய்தவரைப்போன்றே இன்னொரு நடிகை!

நடனம் என்று வரும்போதெல்லாம் நகைச்சுவை செய்த அம்மணி. அவர் திரையில் தோன்றிய ஒரு சூப்பர் ஹிட் பாடலை அடுத்துப்பார்ப்போம்.

இதுவும் சத்யா மூவீஸ் படம் என்று நினைவு. "ஒரு பாட்டாவது புலவர் எழுத வேண்டும்" என்ற வரைமுறை உள்ள தயாரிப்பு நிறுவனம் என்று நினைக்கிறேன். (எம்ஜியார் - ஆர் எம் வீரப்பன் - புலவரோடு அவர்களது நட்பு மற்றும் அரசியல் உறவு).

https://www.youtube.com/watch?v=tvveGSrNQCs



கூக்கூ என்று குயில் கூவாதோ? இன்ப மழை தூவாதோ?
இந்தக்குயில் எந்த ஊர்க்குயில்?
நெஞ்சைத்தொடும் இன்னிசைக்குயில்!


வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் ராஜாங்கமாகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும்
கல்யாணமா? 
தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்
பாய்ந்தோடும் நேரம் ஆனந்தமேளம்!


கூந்தல் பாய் போடு தோளில் கை போடு கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு என்னைத் தந்தேனே நானே
மேகங்களே! 
என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும்?
கல்யாண ராகம் எப்போது கேட்கும்?

மோசமான ஒலித்தரத்தில் இருக்கும் (அதாவது ஒரு காதில் மட்டும் பாட்டுக்கேட்கும்) இந்தக்காணொளிக்கு மில்லியன் காட்சிகள் என்பது வேடிக்கை தான்!
(ஒருவேளை நடனம் என்ற பெயரில் நடக்கும் நகைச்சுவைக்காக இருக்கலாம்)


https://www.youtube.com/watch?v=qN1rUb7Oes8


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 29, 2021 1:07 am

புலவர் மறைவையொட்டி எழுதிய பலரும் மிகவும் புகழ்ந்த இசைத்தொகுப்பு "கோயில் புறா". 

குறிப்பாக, "அமுதே தமிழே" பாடல் சிறப்புக்குறித்துப் பலரும் சொல்லியிருந்தார்கள்.

முன்னரே உமா ரமணன் பாடிய பாடல்களைப் பட்டியலிட்ட நேரத்தில் இந்தப்பாட்டுக்கான பதிவு முழுவதும் தமிழில் எழுதினேன் - புலவர் குறித்து அங்கே குறிப்பிட்டிருந்தேன். அதன் இணைப்பு இங்கே :

https://ilayaraja.forumms.net/t292-all-songs-by-uma-ramanan-under-ir-s-baton-78#24905

பாடல் வரிகளை மீண்டும் நினைவு கூர்வோம்:

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு


தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு


பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாயத் தமிழே நாளும் நீ பாடு

"எனதுயிரே" - தமிழை உயிர் எனக்கருதி வாழ்ந்தவர் புலவர் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சிறப்பான சான்று. 

குறிப்பாக இசைத்தமிழுக்காக வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்தவர் என்பதன் அடிப்படையில் நம் எல்லோருடைய போற்றுதலும் அவருக்கு உரியது.

இப்பாடல் ஒலிக்கும் காலமெல்லாம் புலவரின் புகழ் நீடூழி வாழும்!

https://www.youtube.com/watch?v=tQDC9XkSUZk


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha, IsaiRasigan and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 29, 2021 7:39 pm

உணர்ச்சிக்குவியலான காட்சிச்சூழல் / விறுவிறுப்பான மெட்டு - அதில் ஏகப்பட்ட வளைவு நெளிவுகள் திருப்பங்கள் - இப்படியெல்லாம் இருக்கும்போது சற்றும் திணறாமல் சரளமாகவும் பொருத்தமாகவும் பாடல் எழுதுவது அரிய திறமை!

அது வாய்க்கப்பட்டவர் புலவர் புலமைப்பித்தன் என்பதற்கான சான்று இந்தப்பாடல். 

மேலும், செவ்வியல் முறையிலான பாடல்களுக்கு ராசாவால் விரும்பப்பட்ட கவிஞர் என்பதற்கு நல்ல தெளிவும் கூட. (இந்தப்பாட்டு மட்டுமல்ல, இந்த முழு இசைத்தட்டும்).

https://www.youtube.com/watch?v=Acp2xiVjLKk



சங்கீதமே என் தெய்வமே
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
ஓடி வந்தேன் உன்னை நான் பாட


மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள் மனதினில் ஆயிரம் இன்பம்
பார்த்தது பொய்யாகப் பழங்கதை என்றாக எனக்கின்று ஏனிந்தத் துன்பம்?
அந்தத் தமிழிசை கேட்டு இள நெஞ்சில் எழுந்தது பாட்டு
அந்தக் கவிதைகள் எங்கே? என் ஆசைக் கனவுகள் எங்கே?
அது வருமோ சுகம் தருமோ? இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ?
இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது?
நிலவிலும் எனதுடல் அனுதினம் முழுவதும்
தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது - இனிய சங்கீதமே


ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல் தவித்தது பெண் மனம் ஒன்று
நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு கிடைத்தது நிம்மதி இன்று
வெள்ளம் தமிழிசை வெள்ளம் அதில் துள்ளும் உருகிய உள்ளம்
கல்லும் கனியென ஆகும் ஒரு முள்ளும் மலரென மாறும்
உனை மறவேன் தினம் வருவேன் 
இசை மழையினில் நனைவேன் கவி புனைவேன் இனி உலகினில் 
ஆனந்தலய நாதங்களுடன் நீ தந்த இசை பேரின்ப சுகம்
ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது
ஒன்றான உள்ளங்கள் என்றென்றும் சந்திக்க அழைக்கும் - சங்கீதமே

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 29, 2021 10:12 pm

IR-Pulamaippiththan combo songs - Page 3 Koyil_12

ஆல் இண்டியா ரேடியோ (அல்லது ஆகாச வாணி) என் பள்ளிக்காலத்தில் அன்றாடம் கொஞ்சமே கொஞ்ச நேரம் திரைப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். (அதாவது, காலையில் 30 நிமிடம் மட்டும். விளம்பரங்கள் இல்லாமல்). திருச்சி, கோவை வானொலி நிலையங்கள் எங்கள் ஊரில் கேட்க முடியும். அவற்றிலும் விவித்பாரதி கிடைக்காது.பெரும்பாலும் பழைய பாடல்கள் - கிழமைக்கு ஒரு நாள் புதுப்பாட்டுக்கள். இவை அல்லாமல் ஞாயிறு மதியமும் புதுப்பாட்டுக்கள் வரும்.

இந்த நிகழ்ச்சிகளில் படத்தின் பெயரும் பாடுவோரின் பெயர்களும் மட்டுமே அறிவிக்கப்படும். இசையமைப்பாளர்  / கவிஞர் யாரென்று சொல்ல மாட்டார்கள். பல பாடல்களை எழுதியவர் யாரென்று தெரியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். (விவித்பாரதியில் அறிவிப்பார்கள் - வலிமை குறைந்த சிக்னல் என்பதால் எங்கள் ஊரில் அந்த ஒலிபரப்பு கிடைக்காது).

இசையமைப்பாளருக்கே அந்த நிலை என்றால் கருவியிசைக்கலைஞர்கள் யார் யாரென்று அறிந்துகொள்ள வழியே இல்லை. முதலாவது அவர்கள் பெயர் இசைத்தட்டில் இருக்க வழியில்லை. அரிதாகச் சில இசைத்தட்டுக்களில் கலைஞர்களின் பெயர் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒன்று தான் கோயில் புறா. (தில்லானா மோகனாம்பாள் இசைத்தட்டிலும்  இருந்திருக்க வேண்டும். இதே எம்பிஎன் பொன்னுசாமி / எம்பிஎன் சேதுராமன் தான் அதிலும் நாயனம் இசைத்தவர்கள்).

வானொலியில் ஒவ்வொரு முறை இப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பும் போதும் நாதசுரம் இசைத்தவரது பெயரைப் பாடுவோர் பெயரைத்தொடர்ந்து அறிவிப்பது வழக்கம்.

என்றாலும், "வேதம் நீ" பாட்டில் அப்படி அறிவிக்கும்போதெல்லாம் எனக்கு வேடிக்கையாக இருக்கும். ஏனென்றால், ஆக மொத்தம் ஒரு சில நொடிகள் மட்டும் (அதுவும் இரண்டாவது இடையிசையில் நடுவில்) வரும் ஒரு கருவி வாசித்தவர் பெயரை நீட்டி முழக்கிச் சொல்லும் வானொலி, அதற்கு இசையமைத்தவர் மற்றும் பாடலை எழுதியவர் பெயரை ஏன் சொல்லாமல் இருட்டடிக்கிறார்கள் என்று எரிச்சலும் வந்ததுண்டு.

குறிப்பாக இந்தப்பாட்டில் குழலொலி கூடுதல் வரும். அதை இசைத்தவரை ஏன் விட்டு விட்டார்கள் என்ற கேள்வியும் மனதுக்குள் அப்போது வந்ததுண்டு! புலவர் குறித்த இந்த இழையில் அதைச்சொல்லியாச்சு!

இனி அந்த மிகச்சிறப்பான பாட்டைக்கேட்டு அதன் வரிகளை மெச்சுவோம்!

https://www.youtube.com/watch?v=BVxlt9-ajaQ



வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய்
இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப்பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய்
தண்டை ஒலி ஜதி தருமோ? கமல பாதம் சதிரிடுமோ?
மனமும் விடிவும் தினம் எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அடி உன் வடிவே
நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது இசைத்தமிழ் வடித்தது
ஒரு முறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்


Last edited by app_engine on Thu Sep 30, 2021 3:53 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

IsaiRasigan and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  BC Thu Sep 30, 2021 2:51 am

What an album (both music and lyrics)!  For a moment, looking at the image, I thought the director was Nambiar and was wondering "Whoa, he was a director too?!".  Never seen Pulamai Pithan that young.  IR, SJ and the ace lyricist would have received a National Award each in a Utopian world.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 30, 2021 8:11 pm

ஏவிஎம் குழுமம் கமலை வைத்துப்பல மசாலாக்கள் எண்பதுகளில் எடுத்தார்கள். ராசாவும் மிகச்சிறப்பான இசையை அவற்றுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

பொதுவாக வாலி தான் நிறையப்பாடல்கள் எழுதினார் என்று நினைவு. (தூங்காதே தம்பி தூங்காதே / சகல கலாவல்லவன் இவற்றில் எல்லாப்பாடல்களும் வாலி. உயர்ந்த உள்ளத்தில் வைரமுத்துவும் உண்டு).

பேர் சொல்லும் பிள்ளையில் மட்டும் ஒரு பாடல் தவிர்த்து எல்லாமே கங்கை அமரன். என்னை அவ்வளவாகக் கவராத இசைத்தொகுப்பு அது. நிறையக்கேட்டதுமில்லை Sad

அதில் ஒரே ஒரு பாடல் புலவர் எழுதி இருக்கிறார். "மீண்டும் கேட்க வேண்டும்"  என்று எனக்கு ஆர்வம் தூண்டாத அரிதான ராசா - கமல் பாடல் இது. 

பாடல் வரிகளும் வெறும் மசாலா தான் - என்றாலும் இன்று இந்தப்பாட்டைக் கேட்கையில் கருவியிசைக்கோர்ப்பில் ராசா மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. மற்றபடி இது தமிழ் நாடெங்கும் ஒலித்த ஹிட் பாடல் தான்.

அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
இது துள்ளும் பல உள்ளம் எனைப் பாராட்டும் 
அது போதும் எனை நாளும் அது தாலாட்டும் டும் டும் டும் டும்


ஆரத்தி கொண்டு வரவா? உன்னை திருஷ்டிசுத்திப் பொட்டு வைக்கவா?
தாவணி கட்டியிருந்தா எங்க அன்னை இன்னும் சின்னப்பொண்ணு தான்
தலை தான் முன்னால நரையாச்சு அதுவும் அம்மாடி அழகாச்சு
மெல்ல மெல்ல வந்து நில்லு எங்கப்பன் கண்ணு கொள்ளிக்கண்ணு
கண்ணுப்பட்டா என்ன பண்ண? வந்தது தொல்ல
முத்துமுத்துப் பல்லிருக்கு தித்திக்கிற சொல்லிருக்கு
மொத்தத்தில ஒன்னப்போல யாருமில்ல
ஒரு கல்லும் மண்ணும் என்னாகும்? உன் கைகள் பட்டால் ஒன்னாகும்
நீ வாழ்க இன்னும் பல்லாண்டு!


நானென்ன வந்த பிள்ளையா? என்றும் நன்றியுள்ள சொந்தப்பிள்ளை தான்
ஊருக்கு நல்ல பிள்ளை நான் என்றும் உங்களுக்குச் செல்லப்பிள்ளை தான்
கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என்னுள்ளம் மறைக்காது
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று சொல்லும் நெஞ்சம் உண்டு
கற்ற வித்தை கையில் உண்டு என்ன கொறச்ச?
அன்னை என்னும் தெய்வம் உண்டு தம்பி உண்டு தங்கை உண்டு
தந்தை என்னும் சொந்தம் உண்டு Take it easy-ப்பா.
இவை என்றும் உள்ள சொந்தங்கள் என் நெஞ்சில் உள்ள இன்பங்கள்
என் கண்ணில் இன்பக்கண்ணீரோ!


பாசத்தில் கட்டுப்படுவேன் அதில் என்னையே விட்டுத்தருவேன்
வாய்மையை என்றும் மதிப்பேன் பிறா் வாழ்ந்திட என்றும் உழைப்பேன்
எனக்குள் தூங்காது மனசாட்சி அதுதான் நான் நம்பும் அரசாட்சி
பாடும் போது தென்றல் நானே ஒடும் போது கங்கை நானே
துள்ளித்துள்ளி ஆடும் சின்னப்பிள்ளையும் நானே
ஞாயம் போல கோவில் இல்லை தா்மம் போல தெய்வம் இல்லை
தியாகம் போல செல்வம் இங்கு வேறெதும் இல்லை
இது காலக்கல்விக்கூடத்தில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்
எனை வாழச்செய்யும் வேதங்கள்!

https://www.youtube.com/watch?v=EXf2whAZOEA


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 30, 2021 8:45 pm

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு ராசா எப்படித் தோற்றமளித்தார் என்று இந்தப்பாட்டின் காணொளியில் பார்க்க முடியும். அவருக்கும் நடிகர் திலகத்துக்குமான உரையாடல் சற்றே நகைப்பை வரவழைக்கத்தக்கது.

https://www.youtube.com/watch?v=F1PAXbl8hiA



இனிமையான பாடல். 

புலவர் கற்பனைகளைச் சரணங்களில் சரளமாக அவிழ்த்து விட்டிருக்கிறார். காதல் பாட்டுக்கள் எழுத அவருக்குக் காசு கொடுக்கவே வேண்டி இருந்திருக்காது Wink

ஓ வானம்பாடி 
உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி 
இன்பம் கோடி காண ஏங்கினேன் நாளும் வாடினேன்


போகமே என் யோகமே என் காதல் ராகமே
கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே
பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே
பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே
மண்ணில் சொர்க்கம் வந்ததே
மார்பில் சாய்ந்து கொண்டதே
சிந்தாத முத்துக்கள் செவ்வாயில் சிந்தக்கண்டேன்


மன்னவன் கண் மூடினால் என் வானில் ராத்திரி
மங்கையே உன் பார்வை தான் என் வானில் வைகறை
இன்பம் என்னும் வேதனை இன்று பார்க்கிறேன்
நானும் கொஞ்சம் சோதனை போட்டுப் பார்க்கிறேன்
காற்று வந்து தீண்டுமோ?
கற்பு என்ன ஆகுமோ?
பூங்காற்றும் தீண்டாமல் நீ என்னைக் கட்டிக் கொள்வாய்

நல்ல ஒலித்தரத்தில் பாடலை இங்கே கேட்கலாம். (உரிமை மீறல் என்று இந்தக்காணொளி எதிர்காலத்தில் நீக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது)

https://www.youtube.com/watch?v=PNRZb_hwtAQ


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 30, 2021 9:32 pm

இன்னொரு இனிமையான பாலு-ஜானகி பாடல், 

"நீயென்ன மாயம் செய்தாய்! நீருக்குள் தீயை வைத்தாய்!" - அழகான கற்பனை Smile 

இதுவும் 80-களின் பிற்பகுதியில் வந்தது என்று நினைவு. 

அக்காலத்தில் வெற்றிகரமாக மலையாளத்தில் ஓடிய சில படங்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்து உண்டாக்கினார்கள். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்  இது (மலையாளத்தில் மம்மூட்டி - சுமலதா நடித்த நிறக்கூட்டு - மிகச்சிறப்பான "பூமானமே" என்ற எனக்குப்பிடித்த பாடல் அந்தப்படத்தில் உண்டு).

https://www.youtube.com/watch?v=a59YdPHhEJo



பாடல் வரிகளில் வழக்கம் போலக் காதலுள் புதைந்திருக்கும் காமம் இருக்கிறது. (இந்த இழைக்கு வருவோர் எல்லோரும் கிட்டத்தட்ட எளிதில் புரிந்து கொள்ளும் வயதினர் என்பதால் விளக்கத் தேவையில்லை). 

மற்றபடி இனிய மெட்டுக்கு ஏற்ற சிறப்பான ஓசை நயமுள்ள பாடல் வரிகள்!

(இந்தக்)கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா (கண்ணே) என்றென்றும்


வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரைச்சிந்தும் சொந்தம் என்னம்மா
நீயந்த வானம் இந்த பூமி இங்கு நானே
நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா
காலங்கள் செல்லச்செல்ல ஆயுள் நின்று போகும்
ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாழும்
நீலம்பூத்த கண்கள் ரெண்டும் உன்னை வைத்துக்கொள்ளட்டும்
நீயும் நானும் மாலை சூடும் காலம் எந்தக்காலம் 


பூவுக்குத் தாலி கட்டப்போகும் தென்றல் காற்று
போகட்டும் நீயும் நின்று வாழ்த்துச் சொல்லிப் போ
காதுக்குள் நாளை அந்த மேளச்சத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டித்தா
தாளத்தைத் தள்ளி வைத்து ராகம் எங்கு போகும்?
பாசத்தைத் தள்ளி வைத்து ஜீவன் எங்கு வாழும்?
பொன்னில் பாதி பூவில் பாதி பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்
காதல் வேதம் கண்ணில் ஓதும் கண்ணே கட்டிப்பொன்னே

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 30, 2021 11:07 pm

https://www.youtube.com/watch?v=ESt5I8Enw6I



புலவர் - ராசா கூட்டணி குறித்துப்பேசியோர் / பேசுவோர் எல்லோரும் மறக்காமல் குறிப்பிடும் பாட்டு "மழை வருது மழை வருது குடை கொண்டு வா".

மிக எளிய வரிகள் கொண்டு இயற்றப்பட்டிருக்கும் பாட்டுத்தான் என்றாலும் மெட்டுக்கு மிகப்பொருத்தமாக அமர்கிறது. இளங்காதலர்களின் நெருக்கத்தைக்கூட்டும் விதமான கவிதை என்பதால் எல்லோரையும் எளிதில் கவர்கிறது. (பெண்ணின் மாராப்பை மழைக்குக் குடையாக்கக் கேட்கிறான் பையன் - இயல்பாகவே எல்லோருக்குள்ளும் ஒரு இனம் புரியாத ஆவல் தொற்றிக்கொள்ளத்தான் செய்யும்).

கண்டநடை இழையில் இந்தப்பாட்டுக்குறித்து எழுதுகையில் குறிப்பிட்டது போன்றே இதன் சரணம் ராசாவின் அளவுகோலின் படி படு சுமார். என்றாலும், பல்லவிக்கு மீண்டும் வந்து சேரும் இடம் மிகச்சிறப்பு! இந்தத்தாளநடைக்கு எப்போதும் ஆங்காரம் தான் என்றிருந்த திரை மரபை ராசா பல பாடல்களில் ஏற்றும் சில பாடல்களில் உடைத்தும் இருக்கிறார். (இது மரபு மாற்றப்பாடல் என்பது சொல்லாமலே தெரியும்."தக-தகிட-தக-தகிட" என்ற ஐந்தடி சுழற்சியில் இப்படி ஒரு மெட்டு & பாட்டு ராசா செய்த அதிசயங்களுள் ஒன்று.)

"கண்ட கண்ட நடை தாளத்திலெல்லாம் எங்க மெல்லிசை மன்னர் இசையமைக்கத்தேவையில்லை" என்று வீம்பு பேசும் சில பழம்பாடல் விசிறிகள் நம்மிடம் வந்து "ராசா செருக்குப்பிடித்தவர்" என்று சொல்லும்போது முன்பெல்லாம் சட்டென்று சூடாவதுண்டு.

இப்போதெல்லாம் வெறுமென நகைத்து விட்டுக்கடந்து செல்வதை வழக்கமாக்கியாச்சு!

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

இரவுமில்லை பகலுமில்லை
இணைந்த கையில் பிரிவுமில்லை
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா

கடந்த காலம் மறந்து போவோம்
கரங்கள் சேர்த்து நடந்து போவோம்
உலகமெங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகமெங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டுப்பாடும்
இனிய ராகம் கேட்கும் வா


(பின் குறிப்பு - இதோடு இந்த இழையில் 50 பாடல்கள் ஆச்சு. எல்லாவற்றின் பாடல் வரிகளும் சரிபார்த்துப் பிழை திருத்தி இட்டிருப்பதால் வலையில் கிட்டும் ஆகச்சரியான பாடல் வரிகள் இங்கே தான் என்று அடித்துச் சொல்லலாம்)


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 01, 2021 6:25 pm

அண்ணன் - தங்கைப்பாசம் தமிழ்த்திரைப்படங்களில் தொன்று தொட்டுப் பாடல்களால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. "இது வரை வந்த தமிழ்த்திரைப்பாடல்களிலேயே மிகச்சிறந்தது" என்று பலராலும் மதிக்கப்படும் "மலர்ந்தும் மலராத பாதி மலர்" இவ்வகைப்பாடல் தான். (பாசமலர் - கண்ணதாசன் / விசுவநாதன்-ராமமூர்த்தி).

"ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு" பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல ரஜினி படங்களில் தங்கைப்பாசம் காட்சிகளில் மற்றும் பாடல்களில் இடம் பெறுவது வழக்காகவே ஆகி விட்டிருந்தது. (குறிப்பாக மசாலாக்களில்).

அப்படிப்பட்ட ஒரு பாடல் புலமைப்பித்தன் எழுத ராசா இசையில் "நான் சிகப்பு மனிதன்" படத்தில் இடம் பெற்றது. மிக இனிமையான மெட்டு, ஏழடி சுழற்சித் தாள நடை, பாலு உருக்கமான குரலில் பாடியிருப்பது என்று பல சிறப்புக்கள் இந்தப்பாடலுக்கு!

புலவரின் வரிகளும் மென்மையாகவும் சிறப்பாகவும் அமைய, இந்தப்பாடல் நீடூழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக,   "கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே"  என்ற அனுபல்லவி மிகச்சிறப்பு!

https://www.youtube.com/watch?v=ZYlRNTUxzaI



வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்.
விடிகாலை வெள்ளி மீனே என் வாழ்வே உன்னால் தானே
கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்துத்தொங்கல் கட்டித் தந்தேனே


ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்
உன் கண்ணில் கண்ணீர் வந்தால் எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும்
உன் கண்கள் இல்லாமல் என் கண்கள் பார்க்குமோ?
உன் கால்கள் இல்லாமல் என் கால்கள் போகுமோ?
என் வானம் விடிவதும் பகல் முடிவதும் உந்தன் பார்வையால்!


மன்னாதி மன்னன் எல்லாம் உன்னை வந்து பெண் பார்க்க
மையேந்தும் கண்ணே உந்தன் கண்ணோ மண் பார்க்க
கண்ணோரம் வெட்கம் வந்து நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட
காலாலே வண்ணக்கோலம் மண்ணில் நீ போட
செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே
சொன்னாலும் இனிக்குது நெஞ்சில் ஒலிக்குது இன்பராகமே

https://www.youtube.com/watch?v=H2sVn8iu1Z0



படச்சூழலுக்கேற்ப இரண்டாம் சரணம் மட்டும் சோகமாகவும் இசைக்கப்பட்டது. அதன் காணொளி இங்கே :

https://www.youtube.com/watch?v=IO4060EuD2Y



app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 01, 2021 7:40 pm

சிற்றன்னைக் கொடுமையால் வீட்டில் இருக்க முடியாமல் பள்ளி வயதின் ஒரு குறிப்பிடத்தக்க காலத்தை எட்டயபுரம் மன்னரின் அரண்மனையில் "வளர்ப்புப்பிள்ளை" என்ற நிலையில் எனது பாட்டனார் (அம்மாவின் அப்பா) கழிக்க நேர்ந்தது. 

அதன் பின்விளைவுகளை எனது பாட்டி (அம்மம்மா) பட நேர்ந்தது. இவர் செய்த மிகச்சிறந்த உணவை நாங்கள் எல்லோரும் சுவைக்கும் பொழுது தாத்தா  மட்டும் "this is God's punishment" என்று முனகுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். Laughing

மற்றபடி மிக நல்ல மனிதர்.

அரண்மனையில் அவர் வாழ்ந்த அந்தச் சிறு வயதில் சிலமுறை பாரதியாரைப் பார்த்திருக்கிறார். "பாரத சமுதாயம் வாழ்கவே / ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா" இவற்றையெல்லாம் எப்படி உரக்க பாரதி பாடினார் என்று செய்து காட்டியும் இருக்கிறார்.

இப்படியாக மிகச்சிறிய அளவில் எனக்கும் பாரதிக்கும் ஒரு உறவு இருக்கிறது Smile

பாரதி படத்துக்கு ராசா இசை என்பதைக்கேட்டவுடனே எல்லோருக்கும் இருந்த ஆவல் "என்னென்ன பாரதி பாடல் ராசா இசையில் கேட்போம்" என்பது தான். 

எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அந்த இசைக்கோர்ப்பில் புலமைப்பித்தன் பாடல் ஒன்று மு.மேத்தா பாடல் ஒன்று என்று வேறு கவிஞர்களின் பாடல்களையும் சேர்த்து ராசாவும் இயக்குநரும் "surprise" கொடுத்தார்கள். (ராசாவை அதற்காகத் திட்டியவர்களும் உண்டு என்பது வேறு).

புலவரின் பாடல் சிவனைக்குறித்தது. "சுப்பிரமணியன்" என்ற பெயர் மரபுப்படி சிவனின் மகனைக்குறிக்கும் என்பதால் இவ்வாறாக எழுதப்பட்டிருக்கலாம். பாரதியின் பாடலை எடுக்காமல் ஏன் புலவரைக்கொண்டு எழுதினார்கள் என்பது கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டிய கதை. (எப்போதாவது ராசாவோ அல்லது இயக்குநரோ  சொன்னால் தெரிந்து கொள்ளலாம்).

https://www.youtube.com/watch?v=criqoNe0T5M



எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேதநாதமாகி


வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்  தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி வகுத்திடத் துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத் தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத்தளைக்கு நெருப்பவன் ஒற்றைக்கணத்தில் அழிப்பவன்
நெற்றிப்பிறைக்குள் நெருப்பை வளர்த்து


தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதைக் கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன் திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப்படித்து முடித்த  ஒருத்தன்

https://www.youtube.com/watch?v=v-Djw4JN9ME


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Fri Oct 01, 2021 8:23 pm

Great lines.

சட்டம் அனைத்தும் வகுத்தவன் திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப்படித்து முடித்த ஒருத்தன்

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Fri Oct 01, 2021 8:30 pm

mazhai varudhu paatil.

oru chinna vaarthaiyai maatri pottu, porul kedamal... unmaiyil porul porundhumbadi irukum.

உலகமெங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகமெங்கும் அதற்கு சாட்சி

2vadhu murai,

nilavum vanum namadhu atshi
ulagam engum adharku satshi

miga azhagaga vaarthaiyai seidhu irupar indha paatil.. indha idathil.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Oct 01, 2021 8:39 pm

ஏற்கனவே உமா ரமணன் இழையில் ஆங்கிலத்தில் எழுதியதை இங்கே தமிழில் பெயர்க்கிறேன். (கூடுதல் சொல்லத் தேவையில்லை).

குறிப்பு : சோம்பேறித்தனத்தால் கூகிள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி அதன் பின் சிறு மாற்றங்கள் மட்டும் செய்திருக்கிறேன் Smile

என்ன ஒரு இனிமையான பாடல்! 

20+ ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தப் பாடல் மிகவும் புதுமையாகவும் புத்துணர்ச்சி தருவதாகவும் ஒலிக்கிறது!

அற்புதமான மெட்டு  ஆனால் மிகக் குறைந்த (குறைந்தபட்ச) கருவியிசை - பொதுவான ராசா பாட்டு போலல்லாமல். 
இடையிசைகளும் மிகச்சிறியவை - குறுகிய மற்றும் செயல்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் 
 
எனினும், அற்புதமான மெட்டு மற்றும் ஸ்வர்ணலதாவின் அருமையான குரலோடு பாடல் தலை சிறந்து விளங்குகிறது!
(உமா ரமணன் ஆதரவு என்ற நிலையில் மட்டும் & ஒரு அற்புதமான மெலடியை கெடுக்காததற்காகப் பாராட்டலாம்).

புலமைப்பித்தனின் பாடல் வரிகள் மிகவும் புத்துணர்ச்சியுடன் ஒலிக்கிறது!

மற்றும் எந்த விதத்திலும் இவை சில "அடித்த தடங்களில்" செல்லவில்லை. பாராட்டப்பட வேண்டிய ஒன்று!

அதாவது ராசாவும் கூட்டணியும் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கில் நாட்டுப்புறப்பாடல்களில் கூடுமான எல்லாம் (சொற்றொடர்கள் / கருப்பொருள்கள்) பயன்படுத்தித் தீர்த்த பின்னும் இதைத் தந்திருக்கிறார்!

நுட்பமான தொடுதலுடன் செய்யப்பட்ட சிறந்த வேலை!

ஊரடங்கும் சாமத்திலே நானுறங்கும் நேரத்திலே
காத்துப்போல வந்து தொட்டதாரு? காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு?
யாரு, அது யாரு, யாரு? இந்தத்தேரைக்கொண்டு போவதாரு?


நீ தந்த பட்டுச்சேலை கலையாமக் கட்டிப்பார்த்தேன் கண்ணாளப் பொண்ணப்போல
காலோட மிஞ்சிச்சத்தம் காதோரம் பாட்டுச்சொல்லும் என் மாமன் உன்னைப்போல
மாந்தோப்பில் அங்கே குயிலு தனியா ஏன் பாடுது?
தூங்காம இங்கே மனசு கிடந்து ஏன் வாடுது?
தூது சொல்லத் துணை யாரும் இல்லே


சுவரோரம் சாஞ்சிக்கிட்டு என்னோட நானே இங்கு தனியாகப் பேசுறேனே
பாய் கூட முள்ளாப்போச்சு தலகாணி கல்லாப்போச்சு தூங்காம வாடுறேனே
மாமன் உன் பேர மணலில் எழுதிக் கை நோகுது
கற்பூரமாட்டம் உருகி உருகி நாள் போகுது
மால கட்டு மணமேளம் கொட்டு

https://www.youtube.com/watch?v=FN4rBSuDchE


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Sat Oct 02, 2021 8:28 am

மூன்று பேர் பாடும் பாட்டு - மூன்று விதத்தில் பல்லவி வரிகள் வருகின்றன. கதையின் சூழலுக்கேற்ப அவற்றை அழகாகவும் பொருத்தமாகவும் புலவர் எழுதி இருக்கிறார்.

மல்லு வேட்டி மைனர் என்ற படத்தின் "சின்னமணி பொன்னுமணி" பாட்டின் பல்லவி இவ்வாறு சூழலுக்கேற்ப / பாத்திரங்களுக்கேற்ப மூன்று விதத்தில் வருவது அருமை.

சரணத்தின் வரிகளில் ஓரளவுக்குப் படத்தின் கதையும் சொல்லப்படுவதாகத் தோன்றுகிறது. இவ்விதத்தில் "பாட்டில் கதை சொல்லுதல்" தமிழ்ப்படங்களில் தொன்று தொட்டு இருந்து வரும் முறை தான். அதிலும் புலவர் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று காட்டுகிறார் இங்கே.

சின்னமணி பொன்னுமணி சிரிச்சாக்காக் கோயில் மணி

ஒன்னப் பெத்த ராசவுக்கு அவதான்டா (நீ தான்டா) கண்ணின் மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி
(பெத்தெடுத்த தாய் ஒருத்தி நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா /
பெத்தெடுத்த தாய் ஒருத்தி உன்னத் தத்தெடுத்தேன் நான் ஒருத்தி)
இந்த இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்
(அந்த இருவருக்கும் கேள்வி நான் ஒருத்தன் /
எங்க இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்)


எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது
வச்சதுக்குத் தண்டனைய அனுபவிச்சேன் இப்போது
நானாகப் போட்ட வித முளைச்சுதடா நேத்து
நீயேனும் திருந்தி நட என் கதயப் பார்த்து
பொய் மானப் புள்ளி மானுன்னு நம்பிக்கிட்டா
ஒரு முள்ளால இவ மாலயக் கட்டி வச்சா
இதைத் தோளில் தாங்கும் துயரம் நெஞ்சு பொறுக்கலடா


ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன்
உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல
தீ மேல கைய வச்சுச் சுட்டுக்கிட்ட பாவம்
உம் மேல கோபப்பட்டா அதில் என்னய்யா நியாயம்
பொன் மான நீ பொய்யின்னு சொல்லுறியே
என் அம்மானே என்ன சொல்லுல கொல்லுறியே
என் வாழ்வும் தாழ்வும் எனது மன்னவன் உன்னிடமே

https://www.youtube.com/watch?v=BvOHd6Ul_4Q


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Oct 05, 2021 5:37 pm

https://www.youtube.com/watch?v=EQXjCUhDPh8



வாத்தியார் வீட்டுப்பிள்ளை படத்தில் பாலு நாலு சிறப்பான பாடல்கள் பாடியிருந்தார் - அக்காலத்தில் வந்த பல ராசா இசைக்கோர்ப்புகளில் இருந்து சற்றே வேறுபட்ட ஒன்று இது. மென்மையான சோகம் இழையோடும் பாடல்கள் - அதே நேரத்தில் கூடுதல் அழுது வடிவதும் இல்லை (அல்லது உணர்ச்சித்தூக்கல் பொங்காதவை).

புலவர் எழுதிய இந்தப்பாடலின் வரிகள் எல்லாமே மகிழ்ச்சியானவை தான். (குங்குமத்துச் சிமிழே வா சங்கம் தந்த தமிழே வா - எவ்வளவு அழகு!). என்றாலும் முழுப்பாட்டும் கேட்கையில் மெலிதான துன்ப உணர்வு வரும் - ராசா என்னமோ உள்ளே வைத்திருக்கிறார். (ராகம் சாருகேசி என்று இது குறித்த ராசா-பாலு இழையில் பேசப்பட்டது, அதன் உணர்வோ என்னவோ).

"அண்ணன் விழிகள் கண்ணீர்" = ஆனந்தக்கண்ணீர், ஆனாலும் மெல்லிய துன்ப உணர்வு - இனம் புரியாத வகை!

மணமாலையும் மஞ்சளும் சூடி
புதுக்கோலத்தில் நீ வரும் நேரம்
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்!

தாழம்பூக்கைகளுக்குத் தங்கத்தில் செய்த காப்பு
வாழைப்பூக்கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு
உன் அண்ணன் போட வேண்டும் ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும்
சின்னஞ்சிறு கிளியே வா செம்பவளக்கொடியே வா
பிறை போல் நுதலில் அணியும் திலகம் நிலையாய் வாழட்டுமே

ஓராண்டு போன பின்பு உன் பிள்ளை ஓடி வந்து
தாய் மாமன் தோளில் நின்று பொன்னூஞ்சல் ஆடும் அன்று
ஏதேதோ காட்சி வந்து கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று நெஞ்சுக்குள் ஓடுதம்மா
குங்குமத்துச் சிமிழே வா சங்கம் தந்த தமிழே வா
கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த மலரே நீ வாழ்கவே

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Oct 05, 2021 6:18 pm

காதல் - காமம் கலந்த வரிகள், பெண் உடல் வர்ணிப்பு என்றால் புலவருக்கு ஊக்கம் பிறந்து விடும் அல்லவா? அப்படிப்பட்ட இன்னொரு பாடல்.

"குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்" - சிறப்பான கற்பனை!

இப்பாடல் குறித்து மனோவோடு நேர்காணலிலும் இருவரும் உரையாடுவார்கள்.

அங்கே சொல்லப்படுவது போன்றே சரணத்தின் மெட்டு மாறுபட்டதாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
(பல்லவி சுமாரான மெட்டு - சற்றே ஆர்வம் குறைக்கும், தொய்வான ஒன்று என்று கூடச் சொல்லலாம். போதாக்குறைக்கு மனோ அவர் அடிக்கடி செய்யும் "பிரார்த்தனை" வடிவில் பாடி இன்னும் ஆர்வம் குறைத்திருப்பார். இப்படியெல்லாம் இருந்தாலும் பாட்டு ஹிட் ஆகி விட்டது).

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்சேர்த்தேன் வா

உனது பாதம் அடடட இலவம் பஞ்சு
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத்தண்டிலே ராஜகோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா!

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை
வந்து ஆடச்சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச்செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல


https://www.youtube.com/watch?v=uB76kB4S8ps


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Tue Oct 05, 2021 6:41 pm

இந்த பாட்டு அரிதான ராகம்.எளிமை போல தோன்றும்.ஆனால் எளிமை அல்ல. அது தான் ராஜா .

இடையிசை .....chorus எல்லாம் அந்த ராகத்தின் அழகை எடுத்து காட்டுவது போல ஒரு விஷயம்.

மனோவின் குரல். ஒரு அப்பாவிதனம் இருக்கும். அதனால் பாட்டு அழகானதாக ஆனது.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

app_engine likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Oct 05, 2021 6:57 pm

ஊர்வசியின் தங்கை ரஞ்சனி நடித்த இந்தப்படம் வந்த காலத்தில் பார்த்திருக்கிறேன் - என்றாலும் கதையோ சூழலோ நினைவில் இல்லை. (அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளத்தக்க சிறப்பான படமல்ல என்பதனால்).

இந்த இசைக்கோர்ப்பு வெளிவந்த உடனேயே என் தஞ்சாவூர் நண்பன் (கல்லூரி / விடுதித்தோழன் - ராசா விசிறி) கேசட்டில் பதிவுசெய்து கொண்டு வந்து விட்டதால் படம் வருமுன்னரே பலமுறை கேட்டு இன்புற்று - பாடல்களுக்கென்று திரையரங்கு சென்று துன்பப்பட்ட படம்.

இப்படிப்பல ராசா இசைக்கோர்ப்புகள் எங்களை வாழக்கைப்பாடம் படிக்க வைத்தன Laughing

இந்த இசைக்கோர்ப்பில் வேறு மூன்று பாடல்கள் அக்காலத்தில் எங்கும் ஒலித்தவை (இளமனதினில் எழும் கனவினில் / பூந்தென்றல் காற்றே வா / வா மச்சி மச்சி). ஆனால், இந்தப்பாடல் அப்போதும் புகழ் பெறவில்லை. புதிய பாடகர் - அசோக் - அதனால் அவருக்குப் பெரும் வாய்ப்புகள் வரவில்லை - கிட்டத்தட்ட தீபன் சக்ரவர்த்தி போன்றே பாடுகிறார்.

புலவர் காரமான வரிகள் எழுதியிருக்கிறார் - சற்றே வியப்பாக இருக்கிறது. நான் படித்தவரை இவர் எம்ஜியாருக்கு நெருக்கமானவர் - என்றாலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் வந்த பாடலில் இப்படிக்காட்டமாக வரிகள் (அதுவும் வெறும் இருவருடைய துன்பச்சூழல் குறித்த பாட்டில்) ஏன் வீசியிருக்கிறார் என்று தெரியவில்லை Smile

"இந்தத் தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன - வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன"

என்ன தான் அரசியல் சார்பு நிலை இருந்தாலும் புலவரது உள்ளுக்குள் ஒரு அறச்சீற்றம் இருந்தது - இவ்வழியே வெளிவந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம்!

https://www.youtube.com/watch?v=4XX6sSv3pGY



காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர்க்கவிதை கேட்டு
இங்கு இன்பங்களோ கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி

மலர் ஆரங்களைத் தெருவோரங்களில்
இங்கு யார் போட்டது? அதை யார் கேட்பது?
வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை!
கொஞ்சம் கூறுங்கள் இவன் நெஞ்சில் ஏன் வேதனை?
ஆறாதோ நெஞ்சின் காயங்கள்?
எப்போது தெளிவாகும் நியாயங்கள்?

இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு உண்ணச்சோறும் இல்லை
இந்தத் தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன
யார் இங்கே ஒரு ஆதாரம்?
தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Oct 05, 2021 8:17 pm

சுகமான தெம்மாங்கு மெட்டு - குழந்தைத்தனமாகத் துள்ளும் ஜானகி குரல் - இப்படிச் சிறப்புக்கள் உள்ள பாட்டு.

புலவரும் அவர் பங்குக்கு எளிமையான நாட்டுப்புறப்பெண்ணுக்கு ஏற்ற வரிகளைக்கொண்டு குறும்பாகப் பாட்டு எழுதி இருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பிடித்த பாட்டு மற்றும் காணொளி என்று இதற்கு வந்திருக்கும் லட்சக்கணக்கான பார்வைகள் கொண்டு ஊகிக்கலாம்.

மற்றபடி ஒரு சராசரிப்பாடல் தான் Smile

https://www.youtube.com/watch?v=_U06aRv_kuI




ஏ மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா?
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா?
ஒரு தேக்குல செஞ்சது போல ஒன் தேகம் அம்மாடி!
ஓந்தோளுல சாஞ்சது போல ஒரு எண்ணம் ஆத்தாடி!

என் மார்பில நீ சாயணும் முந்தானையால் நான் மூடணும்
தாய் போல நான் தாலாட்டணும் கண் மூடியே நீ தூங்கணும்
நான் மட்டும் பாக்கத்தான் நீயும் நீயானே
நீ மட்டும் பாக்கத்தான் நானும் ஆளானேன்
மாமா ஓங்கால் பட்ட மண்ணெல்லாம் பொன்னாச்சு
ஒன்னோட நான் வந்தா நெஞ்செல்லாம் பூவாச்சு
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டாக் கேளைய்யா

தண்ணீரில நீராடினால் அங்கேயும் நீ போராடுற
எம் பாட்டுக்கு நான் பாடினால் பின்பாட்டு நீ ஏன் பாடுற
கண்ணாலே பாத்தாலே காயம் உண்டாகும்
கையாலே நீ தொட்டாத் தேகம் என்னாகும்
காத்தோடு நாத்தாக எம்மேல வீசாதே
ஆத்தாடி மாராப்பக் கையால வாங்காதே
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டாக் கேளைய்யா


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Oct 07, 2021 1:36 am

பாடல்கள் பரவுவதற்குப் பெரும்பாலும் வானொலி / விழாக்கள் ஆகியவற்றைச் சார்ந்திருந்த காலங்கள் மாறி - பேருந்து வண்டிகள், தேநீர்க்கடைகள், இசைத்தட்டிலிருந்து கேசட்டுக்குப் பதிவு செய்து கொடுக்கும் கடைகள் என்று புதுப்புது வழிகளில் தமிழகமெங்கும் பாடல்கள் பரவுதல் பெருகிக்கொண்டிருந்த காலம்.

அதாவது 80-களின் முற்பகுதி;  பாடல்கள் எங்கும் ஒலித்தாலும் நேரடியாக இசைத்தட்டு நிறுவனங்களுக்கு லட்சம் கோடி என்றெல்லாம் எண்களில் நேரடி விற்பனை நடக்காத காலமும் அது தான். (நாட்டில் கேசட் பிளேயர் தயாரிப்பு நிறுவனங்களே இன்னும் இல்லாத காலம் - கடத்தல் ஆட்களிடம் மட்டுமே கேசட் பிளேயர் வாங்க முடியும்).

அந்தச்சூழலில் பெரும் வெற்றி பெற்ற படங்களிலும் எல்லாப்பாடல்களும் ஒரே அளவுக்குப் பரவியிருந்ததில்லை.

அப்படிப்பட்ட ஒரு பாடல் - ஹிட் தான் என்றாலும் இதே படத்தில் வந்த "மெல்ல மெல்ல"  /  "காலம் மாறலாம்" ஆகிய பாடல்கள் அளவுக்கு இந்தப்பாட்டு எல்லா இடங்களிலும் ஒலிக்கவில்லை என்பது நான் கண்டது.

பாடலின் சூழல் / மெட்டு / வரிகள் இப்படிப்பல காரணங்கள் இருக்கலாம்.

அதே காலத்தில் மாதத்துக்கு ஒரு சில இசைக்கோர்ப்புகள் என்று ராசா வெளியிட்டுத்தள்ளிக்கொண்டிருந்த மிகச்சிறப்பான பாடல்கள் இன்னொரு குறிப்பிடத்தக்க காரணம்.

எப்படி இருந்தாலும் குறையொன்றும் சொல்ல முடியாத பாடல் / வரிகள்!

https://www.youtube.com/watch?v=Frrj9hl6D1A



அன்பிருக்கும் உள்ளங்களே என் அருமைச் செல்வங்களே
இன்பச்சுமை எந்தன் தோளிலே என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப்போடுங்கள்
பாட்டோடு தாளந்தட்டி ஆடுங்கள்

மாலையில் தென்றல் வரும் வாசலைக் கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விழும் வாசனைக்கோலம் இடும்
ஆகாயம் ஏவல் செய்யும் எங்கும் ஆனந்தச்சாரல் விழும்
பொன் நாளென்பது இந்நாள் வந்தது
என் வானத்திலும் பொன் மீன் வந்தது
என் கண்ணில் இன்ப ஈரம் என் நெஞ்சில் அன்புப் பாரம்
என் வீடெங்கும் நாள்தோறும் சந்தோஷ சங்கீதமே

கைகளும் தாழ்ந்ததில்லை கால்களும் சோர்ந்ததில்லை
யாசகம் கேட்டதில்லை பூமியைப் பார்த்ததில்லை
மானத்தில் மானானவன் தலை யாருக்கும் சாயாதவன்
என் ஆசைகளை என் தேவைகளை என் வேர்வைகளால் நான் தீர்க்கின்றவன்
என் நெஞ்சில் உண்டு தங்கம் என் கண்ணில் உண்டு வைரம்
என் ராஜாங்கம் என் வீடு இங்குண்டு சிம்மாசனம்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 3 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum