Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 25, 2017 5:04 pm

#908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகுபவர்


நன்னுதல் என்பதை நல்+நுதல் என்று பிரித்து, நல்ல (அழகிய) நெற்றியை உடையவள் என்று அகராதி பொருள் சொல்கிறது.  

அப்படிப்பட்ட பெண்ணை விரும்பி அவள் வழியில் செல்லுபவர்கள் நன்மையான செயல்களைச்செய்ய மாட்டார்கள் என்கிறார்.  ஆண்கள் இதற்குக் கைதட்டலாம். அழகான நெற்றி இல்லாத பெண்களும் ஒரு வேளை பாராட்டலாம். ஆனால், நல்ல நெற்றியும் அதோடு நல்ல பண்புகளும் கொண்ட பெண்கள் உலகில் இல்லவே இல்லையா? அவர்களிடம் இந்தக்குறள் குறித்த கருத்துக்கேட்டுப்பார்க்க வேண்டும் Wink

இதெல்லாம் ஒரு விதத்தில் "வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்" என்பது போன்ற முட்டாள் கவிதை என்று சொன்னால் சிலர் வெகுண்டு "சிறுபிள்ளைத்தனம்" என்று என்னைத்திட்டக்கூடும் Smile

நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர்
நல்ல நெற்றி உள்ள (அழகான) பெண்ணை விரும்பி அவள் வழியில் நடப்பவர்

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்
நண்பர்களின் துன்பம் நீக்க மாட்டார்கள், நன்மை ஒன்றும் செய்யவும் மாட்டார்கள்

புற அழகு உள்ள பெண்கள் கெட்டவர்கள் அல்லது முட்டாள்கள் என்ற கருத்து பலகாலமாகவே இருந்து வருவது தான்.

அது தவறு!  முதலாவது, அழகு என்பதே பார்ப்பவர் கண்களில் இருக்கிறது. இரண்டாவது, பலரும் அழகி என்று ஒத்துக்கொண்ட மற்றும் அறிவும் நற்பண்புகளும் நிரம்பிய பெண்கள் எனக்குத்தெரிந்தே ஏராளம் உளர்!

அது ஒரு புறம் இருக்க, அப்படி என்ன ஆண்கள் எல்லோரும் நன்மை மட்டுமே செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடக்கிறார்களா? என்னவோ அழகான பெண் குறுக்கிடுவதால் மட்டுமே அதை விட்டு விடுவது போன்று இங்கே படம் காட்டுவது என்ன விதமான சிந்தனை?

"ஆண் பெண்ணைக்கால் மேல் / பெண் நன்மைக்குத்தடை" என்ற கருத்து இங்கே இல்லை என்று சொல்வது முழுப்பூசணியை சோற்றில் மறைக்க முயல்வதே!

என்றாலும், மு.க. விளக்குவது போல அழகுக்காக மட்டும்  ஒருவர் பின்னால் சுற்றுவது முட்டாள்தனம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே  Smile

ஆனால், அப்படிப்பட்டோர் ஒரு நன்மையும் செய்ய மாட்டார்கள் என்று வள்ளுவர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 25, 2017 10:18 pm

#909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்


அறம் / பொருள் / பிற என்று சொல்லுவதால், மூன்றாவதை இன்பம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பெண் ஏவல் படி நடப்பவன் இம்மூன்றிலும் தோற்பான் என்பது இந்தக்குறளின் சுருக்கம். இங்கும் மனைவி என்று சொல்லவில்லை. ஆக, அவருக்கும் அல்லாதவருக்கும் பொருத்தலாம் Wink

பெண்ஏவல் செய்வார்கண்
பெண்ணின் ஏவல் படி செயல் செய்பவர்களிடத்தில்

அறவினையும்
அறச்செயல்களோ (நன்மையான செயல்கள்)

ஆன்ற பொருளும்
அமைந்த பொருளோ
(பொருள் ஈட்டும் திறன், அதில் வெற்றி)

பிறவினையும் இல்
(வேண்டிய) பிற செயல்களோ (குறிப்பாக இன்பம்) இருக்காது

அதாவது, பெண் ஏவல் செய்பவர்கள் வள்ளுவர் தன் பாடத்திட்டத்தில் வைத்திருக்கும் ஒன்றிலும் தேர்ச்சி பெற முடியாது என்கிறார்.

உண்மையிலேயே இந்த நூல், அதாவது திருக்குறள், ஆண்களுக்கு மட்டுமே எழுதினாரா, இல்லை பெண்களும் படிக்க வேண்டுமா என்ற ஐயம் உங்களுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை! Laughing

எப்படி இருந்தாலும், இந்தக்குறிப்பிட்ட அதிகாரத்தைப் படிக்காமல் இருப்பது அறிவுடை மகளிர் தம் குருதி அழுத்தத்தைக் கூட்டாமல் வைக்க உதவும் என்று எனக்குத்தோன்றுகிறது. Smile

என்றாலும், அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று (ஆணான) என்னால் எண்ண இயலாது. Embarassed

தலைகீழாக நடந்தாலும் வியப்பில்லை - பெண்களை அடிமை என்றே கருதும் பல அமைப்புகளுக்கு ஆதரவு தருவோரில் பெரும்பான்மை பெண்களே என்பது ஒரு வகை நகைமுரண், எ-டு : போலிச்சாமியார்கள்! Embarassed

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 25, 2017 10:32 pm

#910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்


ஆக மொத்தச்சுருக்கம் இறுதிக்குறளில் சேர்த்து வைத்திருக்கிறார்.

அதாவது, "எண்ணத்தில் திண்ணம் உள்ளோர் பெண்ணின் வழிச்செல்லும் பேதைமை கொள்ள மாட்டார்கள்" என்கிறார்.

அதையே திருப்பிப்படித்தால், பெண் / மனைவி சொல் கேட்டு நடப்பவன் எண்ணத்தில் திறமை இல்லாதவன் (கிட்டத்தட்ட மனப்பிறழ்வு) என்று சொல்கிறார். ஒரு பயனும் அற்ற "வீணாப்போனவன்" Smile

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு
நன்றாக எண்ணும் (சிந்தித்து ஆராயும்) மனத்திடம் உடையவர்களுக்கு

எஞ்ஞான்றும்
எந்தக்காலத்திலும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
பெண்ணைச்சேர்ந்து (அவள் சொல்லிய வழியில்) நடக்கும் பேதைமை இருக்காது!

வேடிக்கையாகச் சொன்னால் இப்படி :
மனைவிக்கு சில அடிகள் முன்னால் நடந்து "ஆண்" என்று தமிழ்ச்சமூகத்துக்கு முன் உங்களைக் காட்டிக்கொள்ளுங்கள் Smile (இல்லையேல் "பெண் வழிச்சேறும் பித்தன்" என்று மற்றவர்கள் நினைக்க வழியுண்டு Laughing )

அப்பாடா, ஒரு வழியாக உவப்பில்லாத இந்த அதிகாரம் முடிந்தது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 26, 2017 1:51 pm

#911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

(பொருட்பால், நட்பியல், வரைவின் மகளிர் அதிகாரம்)

வரைவு  என்றால் திருமணம். (இந்தச்சொல்லுக்கு "எல்லை" என்றும் பொருள் இருக்கிறது. திருமணம் என்பதும் ஒரு வரையறை / எல்லைக்குள் இருவரை நிறுத்தும் அமைப்பு என்பதால் மிகப்பொருத்தமான சொல்).

வரைவு இல்லாத மகளிர் = வரைவின் மகளிர்.  (திருமணம் செய்யாமலே உறவு கொள்வதெற்கென்று முற்காலங்கள் தொட்டு இன்று வரை "பொது மகளிர்" "விலை மகள்" என்றல்லாம் அழைக்கப்படும் பெண்களுக்கு திருக்குறள் இந்தப்பெயர் கொடுத்திருக்கிறது.)

அன்றும் இன்றும் உலகில் பொது மகளிர் என்னும் நிலையில் உள்ளோரில் ஒரு பெரும்பகுதி அவர்களது விருப்பமில்லாமலேயே இதற்குள் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நெஞ்சைப்பிழியும் ஒரு உண்மை / கொடுமை.

என்றாலும், இந்த அதிகாரம் அப்படிப்பட்டோரைக் குறித்ததல்ல.

தாமாகவே விரும்பி, வசதிக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் இதைத்தொழிலாகத் தேர்ந்தெடுப்போர்  குறித்தது என்று மனதில் கொண்டால் படிக்க முடியும்.

மட்டுமல்ல, மகளிர் என்று மட்டுப்படுத்தாமல், பாலியல் தொழிலாளி என்று எல்லாப்பாலாருக்குமாக எடுத்துக்கொண்டால் கருத்துக்களை ஏற்பது இன்னும் எளிதாக இருக்கும்.

இன்னும் இரண்டு புதுச்சொற்கள் இன்று கற்றது :

ஆய் = அழகு  Smile
தொடி  = வளைவு / வளையல்

ஆய்தொடியார் = அழகான வளையல் அணிந்த என்றோ அழகான வளைவுகள் கொண்ட என்றோ எடுத்துக்கொள்ளலாம். பல உரையாசிரியர்களும் இதைப் "பொது மகளிர்" என்று சொல்லி விடுவதைக்காணலாம்.

அன்பின் விழையார்
அன்பின் அடிப்படையில் விரும்பாமல்

பொருள்விழையும் ஆய்தொடியார்
(வெறும்) பொருளுக்காக (அல்லது பொருளை) விரும்பும் அழகான வளைக்கரங்கள் கொண்ட பெண்கள்

இன்சொல் இழுக்குத் தரும்
(பேசும்) இனிமையான சொற்கள் தீமையையே தரும்

பொருளுக்காக உறவு கொள்ள விரும்பும் பாலியல் தொழிலாளியின் இனிய பேச்சுக்கள் வாழ்க்கையில் இழுக்கு உண்டாக்கும்.

அழிவுக்கு வழிநடத்தும்.


Last edited by app_engine on Mon Sep 20, 2021 8:13 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 27, 2017 4:56 pm

#912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்


நள் என்ற பெயர்ச்சொல்லுக்கு "நடு" என்று பொருள். (நள்ளிரவு = நடு இரவு). அதுவே வினைச்சொல்லாய் வரும்போது (நள்ளுதல்) திருக்குறளின் இந்த இயலாகி விடுகிறது Smile

அதாவது, நட்பு.

பணத்துக்காக உறவாடும் பண்பற்ற பெண்களின் நட்பை விட்டுவிட வேண்டும் என்று அறிவுறுத்தும் செய்யுள்.

பெண்கள் பலவித வேலைகளுக்குச்சென்று (பல ஆண்களை விடக்கூடுதலாகவே) பொருளீட்டும் தற்காலத்தில், இதை இரு பாலாருக்கும் பொருத்திக்கொள்ளலாம்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும்
(கிடைக்கப்போகும்) பயனை ஆராய்ந்து அதற்கேற்ப இனிமையாகப்பேசும்

பண்பின் மகளிர்
பண்பு இல்லாத பெண்களின்

நயன்தூக்கி நள்ளா விடல்
நன்மை தீமையை ஆராய்ந்து, (அப்படிப்பட்டோருடன்) நட்புறவாடாமல் விட்டு விட வேண்டும்

பொதுவாகவே இது நல்ல அறிவுரை. என்றாலும் இங்கு குறிப்பிடப்படும் சூழல் பாலியல் உறவு.

அதாவது, பொருள் மட்டும் கருதி உடலளவில் ஓட்டுவதற்கு எதிரான எச்சரிப்பு.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 28, 2017 7:39 pm

#913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று


கொடுமையான ஒரு சூழலை உவமையாக்குவதன் வழியாக, "பாலியல் தொழிலாளியின் தழுவல் அருவறுக்கத்தக்கது" என்று சுட்டிக்காட்டுகிறார் வள்ளுவர்.

உவமை - அறிமுகம் இல்லாதவரின் பிணத்தைக் கட்டிப்பிடித்தல்!

பிணத்துக்கு உணர்வுகள் இல்லை. பாலியல் தொழிலாளியிடம் செல்லும் ஆள் அப்படிப்பட்டவர் என்று குத்துகிறார்.
(பாலியல் தொழிலாளி உடல் மட்டுமே தருவார், உணர்வன்று என்றும் எடுத்துக்கொள்ளலாம்)

மட்டுமல்ல, நெருக்கம் இல்லாதவரின் பிணத்தை ஒருவர் பொருள் ஆதாயத்துக்காக அல்லாமல் தொட வழியில்லை. பாலியல் தொழிலாளியின் உறவு அப்படிப்பட்டதே என்று சொல்லி, சம்மட்டியால் அடிப்பது போல் புரிய வைக்கிறார்.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்
பொருளுக்காக உறவு கொள்ளும் பெண்களின் பொய்மையான (போலியான, உணர்வற்ற)  தழுவல்

இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று
இருண்ட அறையில் அறிமுகம் இல்லாதவரின் பிணத்தைத் தழுவுதல் போன்றதே!

சவத்தோடு உடல் உறவு கொள்ள யாராவது விரும்புவார்களா? அப்படிப்பட்ட ஓவியத்தை இந்தச்செய்யுள் வடிப்பதில் வெற்றி பெறுகிறது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 28, 2017 10:48 pm

#914
பொருட்பொருளார் புன்னலந்தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவினவர்


பொருள் என்பதற்குள்ள இரு பொருள்கள் இங்கே வந்து அழகூட்டுகின்றன.

ஒன்று செல்வம். மற்றது "பொருட்படுத்துதல்" - அதாவது, மதிப்புள்ளதாக / விலைமதிப்பற்றதாகக் கருதுதல்.

அருட்பொருள் - அருள் என்பதைப்பொருட்படுத்துதல். அருளே முதன்மை எனல்.

பொருட்பொருள் - செல்வத்தை மட்டும் பொருட்படுத்துதல். பணமே வாழ்வில் முதல்.

அருட்பொருள் ஆயும் அறிவினவர்
அருளை முதன்மைப்படுத்தி ஆராயும் அறிவுடையோர்

பொருட்பொருளார் புன்னலந்தோயார்
பொருளை முதன்மைப்படுத்துவோரிடம் சிற்றின்பத்தில் திளைக்க மாட்டார்கள்
(புன்னலம் - புன்மை + நலம், புன்மை = இழிவு / தீமை / சிறுமை, தோய் - நனை / குளி / பொருந்து / நட்புறவாடு)

இழிவான பாலுறவில் ஈடுபட்டு வீணாய்ப்போனவர்கள் எண்ணற்றோர். பல திறமைசாலிகளும் இதில் அடக்கம்.

அருள் வழியில் செல்வோர் தவிர்க்க வேண்டியவற்றுள் ஒன்று!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 01, 2017 6:47 pm

#915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் 
மாண்ட அறிவினவர்

சென்ற குறளைப்போன்றே "புன்னலம் தோயார்" என்று இன்னொரு கூட்டத்தினரைக் குறிப்பிடும் குறள்.

சென்ற குறளில் அருட்பொருள் தேடினவர்கள். இந்தக்குறளில் மதிநலம் சிறந்தவர்கள். அவ்வளவே வேறுபாடு.

அதாவது, சிறப்பான மதி உள்ளோர் பாலியல் தொழிலாளிகளிடம் சென்று இன்பம் துய்க்க மாட்டார்கள் என்கிறார். அல்லது அதைச் சற்றே திருப்பி இப்படிப்புரிந்து கொள்ளலாம் : "ஒருவனுக்கு அறிவும் திறமைகளும் இருந்தாலும், பாலியல் ஒழுக்கம் இருந்தால் தான் சிறப்பான மதிநலம் உடையவன் எனலாம்" Smile

அவ்விதத்தில் அழகான குறள்!

மதிநலத்தின் மாண்ட அறிவினவர்
மதிநலத்தால் சிறப்பான அறிவை உடையோர் 
(தெளிந்த அறிவும் மூளையும் உடையவர்கள்)

பொதுநலத்தார் புன்னலம் தோயார்
பாலியல் தொழிலாளரின் இழிவான இன்பத்தில் நனைய மாட்டார்கள்

பாலியல் தொழில் "பொது நலம்" என்று இங்கே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  Laughing

"எனக்குத் தன்னலம் கிடையாது, பொது நலம் தான் " என்று யாராவது இனிமேல் சொல்வதைக்கேட்டால் சிரிப்பு வரும் Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 01, 2017 10:43 pm

#916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் 
புன்னலம் பாரிப்பார் தோள்

(தம்) நலம் என்ற சொல்லுக்கு இந்தக்குறளை மேற்கோள் காட்டி, அகராதி "புகழ்" என்று பொருள் சொல்கிறது.

தம்முடைய புகழை விரும்புவோர் சிற்றின்பத்தில் திளைத்து நடக்க மாட்டார்கள் என்று வலியுறுத்தும் செய்யுள்.

தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள்
தமது (அழகு மற்றும்) திறமைகளால்  செருக்குடன் இழிவான இன்பத்தைப்பரப்புவோரின் தோள்களில் 
(பாரித்தல் = பரப்புதல் என்ற பொருளில் இங்கே)

தந்நலம் பாரிப்பார் தோயார்
தமது புகழை விரும்புவோர் ஒட்டிச்சேர மாட்டார்கள்

இந்த அதிகாரம் முழுவதும் "தோய்த்தல்" என்ற சொல் மீண்டும் மீண்டும் வருவதைக்காண முடிகிறது. அதன் மூலம் வள்ளுவர் என்னவோ சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது.

நனைந்து / குளித்து / ஒட்டி / உறவாடி / பொருந்தி என்றெல்லாம் பொருள் படும் இந்தச்சொல்லில் எப்போதும் ஒரு உடல் அளவிலான தன்மை வெளிப்படையாகத் தெரிகிறது அல்லவா? 

அவ்வளவே!

மனதளவில் இங்கே ஒன்றுதல் என்பது (பாலியல் தொழிலாளியைப்பொறுத்த வரையில்) கிடையவே கிடையாது எனலாம். சதை மட்டுக்குமான இந்த இன்பத்தேடலில் ஒருவன் தனக்கு இருக்கும் (அல்லது வரவிருக்கும்) புகழை எல்லாம் அடகு வைத்து விடுகிறான் என்பதைச் சுட்டுவதற்கு இந்தச்சொல் மிகப்பொருத்தம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 01, 2017 11:27 pm

#917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்


தோயாரில் இருந்து தோய்வாருக்கு மாறுகிறது இந்தக்குறளில் Wink

அதாவது, எப்படிப்பட்ட கீழோர் சிற்றின்பத்தில் திளைப்பர் என்று சொல்லும் செய்யுள். "நிறைநெஞ்சம் இல்லவர்" என்று ஒரே போடாகப் போட்டுடைக்கிறார்.

நிறை என்பதற்குக் "கற்பு நிலை" என்று குறள் #57-ஐ சுட்டிக்காட்டி அகராதி விளக்குகிறது. இங்கும் அந்தப்பொருளே பொருத்தம்.

மற்ற பொருள்களில் பார்த்தாலும் இன்னும் ஆழம் கூடவே செய்யும்.

நிறை - நிலைத்திருத்தல் / உறுதி, அதாவது ஆட்டம் காணாமல் உறுதியாக நிற்கும் நெஞ்சம்.

நிறை - முழுமை, மனதில் முழுமையான ஒழுக்கம் / மணத்துணைக்கு முழுமையான அன்பு - அப்படிப்பட்ட நெஞ்சம் இருந்தால் பாலியல் தொழிலாளியின் உடலில் தோய நினைக்காது.

பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள்
மற்றவரின் பொருளை மட்டும் தம் நெஞ்சில் பேணி அதற்காக உறவாடுவாரின் தோளில்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார்
கற்பில் முழுமையான / உறுதியான நெஞ்சம் இல்லாதவர்களே ஒட்டிக்கொள்வார்கள் (தோய்வார்கள்)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 02, 2017 6:48 pm

#918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு


அணங்கு என்ற ஒரு புதிய சொல் இந்தக்குறளில். இதற்கு உரையாசிரியர்களும் அகராதியும் பேய் / மோகினி என்பதாகப் பொருள் சொல்கிறார்கள்.

அடிப்படையில் வருத்தம் / சாவு என்பதோடு தொடர்புடைய சொல். அதே நேரத்தில் தெய்வமகள் / பேய் என்றெல்லாமும் பொருள் காண்கிறோம்.

அப்படியாக, "மாய மகளிர்" (வஞ்சனை செய்யும் பாலியல் தொழிலாளி) பேயோடு ஒப்பிடப்படும் குறள்.

மாய மகளிர் முயக்கு
வஞ்சனை செய்யும் பாலியல் தொழிலாளரின் தழுவல்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
ஆராயும் அறிவு இல்லாதவர்க்கு மோகினியோடு (பேயோடு) உறவு போன்றதே

கதைகளில் வரும் மோகினிப்பேய் அவளது அழகால் முட்டாள்களைக் கவர்வது கொல்லுவதற்கே!

பாலியல் தொழிலாளிகளோடு உறவு கொண்டு நடக்கும் மூடனும் அழிவை / இறப்பை அடைவான் என்று புரிந்து கொள்ளலாம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 02, 2017 11:29 pm

#919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு


அளறு - நாம் முன்னமேயே வேறொரு குறளில் கண்ட சொல் தான் - நரகம். பாலியல் தொழிலாளியிடம் செல்வோர் நரகத்துக்குச் செல்வார்கள் என்று அறிவுறுத்தும் செய்யுள். (அது சரி, நரகம் என்றால் வெறும் சேறு மட்டுமா அல்லது வேறு எதுவுமா என்று வள்ளுவரிடம் தான் கேட்க வேண்டும்).

"நரகம் என்றால் நெருப்பு எரியும் இடம்" என்பது போன்ற நம்பிக்கைகள் பின்னால் தற்பொழுது கூடுதல் அலையாமல், "அழிவுக்கு வழி நடத்தும்" என்று மட்டும் புரிந்து கொண்டு கடப்போம் Smile

வரைவு என்பதை எல்லைகள் / வரம்புகள் / திருமணம் என்றெல்லாம் முன்னமேயே பார்த்து விட்டோம். மாணிழையார் என்பதை சிறந்த அணிகலம் அணிந்தவர்கள் என்று சில உரைகள் சொல்கின்றன. "மாண்போடு இழையார்" என்று "மாட்சிமையோடு சேராதவர்" என்றும் பொருள் சொல்கிறார்கள். இரண்டும் இங்கு பொருத்தமே.

வரைவிலா மாணிழையார் மென்தோள்
ஒழுக்க வரம்புகள் அற்ற, மாண்பு இல்லாத (அல்லது அணிகள் பொருந்திய) பாலியல் தொழிலாளரின் மென்மையான தோள்

புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு
உயர்வற்ற கீழ்மக்கள் மூழ்கிப்போகும் நரகம் தான்

ஒழுக்கமற்று உறவாடுவோர் தோளை அழிவுக்கு உருவகமாகச் சொல்கிறார்.

அதில் சாய்வோர் கீழோர் என்றும் சொல்லி அடிக்கிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 02, 2017 11:50 pm

#920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப்பட்டார் தொடர்பு

அதிகாரத்தின் இறுதிக்குறளில் அடுத்து வரும் இரண்டு அதிகாரங்களுக்கு (கள்ளுண்ணாமை / சூது) அடிக்கல் நாட்டும் வேலை செய்கிறார் Smile

பாலியல் ஒழுக்கக்கேடு, கள், சூதாட்டம் - இம்மூன்றின் வழி வீணாய்ப்போனவர்கள் ஏராளம் என்பதில் ஐயமில்லை. பொருட்செல்வம் மட்டுமல்ல, உடல் நலம் / உறவுகள் எல்லாம் அழிந்து ஒழிவதற்கு இவையெல்லாம் சில வழிகள்!

இங்கே மூன்றையும் பட்டியல் இடுவதைக்காண்கிறோம்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
இருமனம் கொண்ட பெண்டிரும் (பாலியல் தொழிலாளரும்), கள்ளும், சூதாட்டமும்

திருநீக்கப்பட்டார் தொடர்பு
( ஆகிய மூன்றோடும்) உறவாடுவோர் செல்வம் இழந்து அழிவர்

திரு என்பதை "திருமகள்" என்று உருவகப்படுத்தும் உரைகளையும் காண இயலும். அதாவது, திருமகளால் நீக்கப்பட்டவர்களே இந்த மூன்றோடும் உறவாடுவர் என்று சிலர் விளக்குகிறார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டுகள் காண நாம் வரலாறெல்லாம் படிக்க வேண்டியதில்லை. தெளிவு படுத்த நம்மைச்சுற்றிலும் கணக்கு வழக்கில்லாமல் ஆட்கள் உண்டு என்பது கொடுமையான உண்மை Sad

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 03, 2017 8:44 pm

#921
உட்கப்படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகுவார்

(பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை அதிகாரம்)

கள்ளுண்ணாமையை நட்பியலில் வள்ளுவரே வைத்தாரா இல்லை பிற்காலத்தில் இயல்களாகப் பிரித்த வேலை நடந்து அப்போது வைத்தார்களா தெரியாது.

(இயல் பிரிவினை வெவ்வேறு உரைகளில் வேறுபடுவது குறித்து முன்னமே கண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். இல்லையென்றால், இப்போது சொல்லியாகி விட்டது Smile )

எப்படி இருந்தாலும், மிகப்பொருத்தம். இரண்டு காரணங்கள் :

1. கள்ளுண்ணுதல் / உண்ணாமை நட்பின் மீது கொண்டிருக்கும் பாதிப்பு பெரிது / ஆழமானது

அதே போல,

2. கள்ளுண்ணுதல் / உண்ணாமை மீது நட்பு கொண்டிருக்கும் பாதிப்பும் மிகப்பெரிது. Laughing
(எனக்குத்தெரிந்து பலரும் இதில் ஆழ்வதற்கு "நண்பர்கள்" முதல் காரணம்).

எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார்
எப்போதும் கள் (குடி) மீது காதல் கொண்டு நடப்பவர்கள்

ஒளியிழப்பர்
புகழ் அற்றுப்போவார்கள்
(இகழப்படும் நிலை அடைவர்)

உட்கப்படாஅர்
(மேலும் மற்றவர்களால் , குறிப்பாகப்பகைவர்களால்) அஞ்சப்பட மாட்டார்கள்
(உட்குதல் = அஞ்சுதல்)

எப்போதும் போதையில் இருந்தால், "அடப்போய்யா, அந்தக்குடிகாரனுக்கு யாராவது அஞ்சுவார்களா? ஒரே தட்டில் விழுந்து விடுவான்" என்ற நிலையில் மதிப்போ அச்சமோ இல்லாத இகழ்ச்சியான நிலையில் இருப்பர்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 05, 2017 6:24 pm

#922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார்


போதை தரும் பொருட்கள் பல உண்டு - குடி உட்பட.

இவை மனிதனுக்கோ விலங்குகளுக்கோ ஏதோ பயனுக்காக உள்ளவையே. (அதாவது, தக்க அளவில் உட்கொள்ளப்பட்டால்). அதாவது, நஞ்சு உட்பட எல்லாவற்றுக்கும் நமக்குத் தெரியாவிட்டாலும், ஏதோ நோக்கம் / பயன் இருக்கிறது.

என்றாலும், அவற்றை மனமகிழ்ச்சிக்காக உட்கொள்ளும் போது தொல்லைகள் தொடங்குகின்றன. அதிலும் அளவுகள் எல்லை மீறுகையில் அல்லல்கள் / அவலங்கள் கூடுகின்றன.

சிறிய அளவிலான குடி சிலருக்கு மருத்துவ நன்மைகள் தருவதாகக்கூட அண்மைக்காலங்களில் சில புள்ளிவிவரங்கள் காட்டுவதாகச் சொல்வோருண்டு. என்றாலும், 99% பேர் குடிப்பது அதற்காக அல்ல என்பதும், போதை தரும் மகிழ்ச்சிக்காகவே என்பதும் வெளிப்படை.

இத்தகைய சூழலில், "குடிக்கிறவன் எல்லாம் செத்தா போகிறான், அமெரிக்காவில் குடிக்கவில்லையா, நம்மை விட சராசரி வாழ்நாள் அங்கே கூடுதல் தானே" என்றெல்லாம் வாதிடுவோருக்கு இங்கே வள்ளுவரின் மறுபடி.

"உணில்உண்க" - அதாவது, "உனக்கு வேண்டுமானால் குடிச்சுக்கோ" Smile

உண்ணற்க கள்ளை
கள்ளை உண்ணாதே
(குடிப்பழக்கம் கூடாது)

உணில்உண்க
"உண்டே ஆகவேண்டும்" என்றால் உண்க, (ஆனால் அப்போது)

சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார்
சான்றோரால் (நல்ல விதத்தில்) எண்ணப்படாதவர் ஆகி விடுவாய் (என்று நினைவில் கொள்!)

அவ்வளவே!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 30, 2017 11:11 pm

#923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக்களி

நல்ல பண்புகள் அறவே இல்லாத ஒருவனைக்கூட அவனது தாய் விட்டுக்கொடுக்காமல் இருப்பது நடைமுறை. அப்படிப்பட்ட பாசம் அது. கெட்டவன் என்று தெரிந்தாலும் "என்றாவது அவன் உருப்படுவான்" என்று நம்புவதை ஒரு போதும் அம்மா விடுவதில்லை.

ஆனால், அப்படிப்பட்ட பெற்றவளும் வெறுக்கும் நிலையைக் கள்ளுண்டவன் அடைகிறான். அவளாலேயே போதையில் உழலும் மகனைப் பொறுத்துக்கொள்ள இயலாது என்ற உண்மையை இந்தக்குறளில் படிக்கிறோம்.

அதோடு சான்றோர் எப்படி நோக்குவர் என்ற ஒப்புமையும். 

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்
பெற்ற தாயின் முகத்திலேயே (கள்ளுண்டவனைக் காணுகையில்) துன்பம் வரும் / பொறுத்துக்கொள்ள முடியாது என்றிருக்கையில் 

என்மற்றுச் சான்றோர் முகத்துக்களி
மற்ற சான்றோரின் முகத்தில் (அப்படிப்பட்டவன்) எப்படி மகிழ்ச்சி தர இயலும்?

அளவுக்கு மீறிக்கள்ளுண்டு உழலுமுன் கண்டிப்பாக ஒருவன் (அல்லது ஒருத்தி - இப்போதெல்லாம் பெண்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது கண்கூடு)  எண்ணவேண்டிய ஒன்று!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 31, 2017 11:54 pm

#924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் 
பேணாப் பெருங்குற்றத்தார்க்கு

கள்ளுண்டவருக்கு "வெட்கம்" எனும் பண்பே இருக்காது. 

மற்றவர்கள் அடித்தாலும் உதைத்தாலும் உணர்வே இல்லாமல் போகும் நிலையில் நாணம் எல்லாம் எங்கிருந்து வரும்? ஆடை அவிழ்ந்து வீதியில் கிடக்கும் நிலை உட்பட  என்னென்னவோ இழிவான நிலைகள் நாம் நாளும் காண்பதே Sad

நாணத்தை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, அவள் கள்ளுண்டோருக்கு "முதுகை"யே காட்டுவாள் என்று கவிதை சொல்லுகிறார் வள்ளுவர்!

கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு
கள் உண்ணும் விரும்பத்தகாத பெருங்குற்றம் இழைப்போருக்கு

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்
நாணம் எனப்படும் நல்லாள் முதுகைக்காட்டி (அதாவது, விட்டுவிட்டுப்) போய்விடுவாள்!

வீட்டுக்காரர் மற்றும் நாட்டுக்காரர் முன்பு வெட்கங்கெட்ட / இழிந்த / மதிப்பற்ற நிலை வேண்டுமானால் கள் மெத்தக்குடித்து மதி இழைப்போமாக!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 01, 2017 6:02 pm

#925
கையறியாமை உடைத்தே பொருள்கொடுத்து 
மெய்யறியாமை கொளல்

"காசு கொடுத்துத் துன்பம் வாங்குதல்" என்ற எள்ளல் இந்தக்குறளில் காண்கிறோம். Laughing

பொருள்கொடுத்து மெய்யறியாமை கொளல்
பொருள் கொடுத்துத் தன் உடலைத்தானே அறியாத நிலையைக்கொள்வது 
(அதாவது, பணம் கொடுத்துக் கள் வாங்கிக்குடித்து தன்னை மறந்த நிலைக்குச் செல்வது)

கையறியாமை உடைத்தே
செய்வது இன்னதென்று அறியாதோரிடம் உள்ள தன்மையாகும்

"அறிவு கெட்டவன் தான் காசு கொடுத்துத் தண்ணி அடிப்பான்" என்று பொதுமொழியில் புரிந்து கொள்ளலாம். 
("அப்படியென்றால் இலவசமாகக் கிடைத்தால் அடிக்கலாமா?" என்று கேட்பவர்களுக்கு : 
இந்த உலகில் இலவசம் என்று ஒன்றும் கிடையாது, இன்று இலவசமாகக் கிடைப்பதற்கு என்றோ விலை கொடுத்திருப்போம் அல்லது இனிமேல் கொடுப்போம்)

ஆக மொத்தம், கள்ளுண்டு தன் உடலையே அறியாத போதை நிலையை அடைபவன் அறிவில்லாத மூடன், செயல் திறனற்றவன், ஒன்றுக்கும் பயன்பட மாட்டான் என்றெல்லாம் திட்டுகிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat Jun 03, 2017 1:01 am

#926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 
நஞ்சுண்பார் கள்ளுண்பவர்

வள்ளுவர் இந்தக்குறளில் சொல்ல வந்த கருத்து என்னமோ "கள் = நஞ்சு" என்பது தான். 

ஆனால், அதற்கு அவர் பயன்படுத்திய உவமை தான் இன்று எல்லோருக்கும் நன்கு தெரிந்தது - "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்" Smile

பல சூழல்களிலும் கதைகளிலும் இந்தச்சொல்லாடல் பயன்படுவதை நாம் கேட்டிருக்கிறோம் / படித்திருக்கிறோம். (அதாவது, உறங்குபவன் = செத்தவன், பெரிய வேறுபாடு இல்லை).

மிக எளிமையான மொழிக்கருத்து இது. தமிழில் மட்டுமல்ல, பல மொழிகளிலும் நாடுகளிலும் இறந்து போய்விட்டார் என்பதை உறங்கினார் என்றே சொல்லுவதைக்காண முடியும். அதாவது, நீண்ட / என்றென்றுமான உறக்கம் தான் இறப்பு. அதிலிருந்து யாராவது எழும்பி / மீண்டு வர முடியுமா (அல்லது எழுப்ப முடியுமா) என்பது குறிப்பிடத்தக்க கேள்விகளில் ஒன்று. உலகில் உள்ள பல மதங்களும் / இறை நம்பிக்கைகளும் இது குறித்த விதவிதமான விளக்கங்கள் சொல்வது தெரிந்ததே Smile

மற்றபடி, குறளின் மையக்கருத்து கள்ளுண்பவன் நஞ்சுண்பவனே - விரைவில் செத்தழியும் வழியில் செல்கிறான்!

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்
உறங்குபவருக்கும் செத்தவர்களுக்கும் வேறுபாடு இல்லை 
(அந்நிலையில் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர மாட்டார்கள்)

எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்
(அது போல) கள்ளுண்பவர்கள் எப்போதுமே நஞ்சு உண்பவர்களே!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 05, 2017 5:39 pm

#927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் 
கள்ளொற்றிக் கண்சாய்பவர்

ஒற்று என்பதற்குள்ள இரு வேறு பொருள் கொண்டு சிறிய விளையாட்டு இந்தக்குறளில் காண்கிறோம். (அகராதி, அவற்றில் ஒன்றான "உய்த்துணர்தல்" என்பதற்கு இந்தக்குறளைத்தான் மேற்கோள் காட்டுகிறது).

ஒற்று - ஒளிந்து, ஒதுங்கி, யாரும் காணாமல் (ஒற்றர் என்ற சொல் இதிலிருந்து வருகிறது)
ஒற்றுதல் - ஆராய்தல் / உய்த்துணர்தல் 

மற்றபடி அடிப்படைப்பொருள் இதுவரை கண்டதே - கள் உண்பவனை ஊரார் எள்ளி நகையாடுவார்கள் / மதிக்க மாட்டார்கள்.

கள்ளொற்றிக் கண்சாய்பவர்
கள்ளை ஓளிவில் குடித்தாலும், அதனால் மயங்கி இருப்பவர்கள்

எஞ்ஞான்றும் உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர்
எப்போதும் உள்ளே உய்த்துணர்ந்து (அதாவது, போதை என்று கண்டுபிடித்து விடும்) உள்ளூர்க்காரர்களால் நகைத்து இகழப்படுவார்கள் 

கள்ளுக்கடைகள் நெடுஞ்சாலைகளில் கூடாது என்று அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. ஆக, ஊரிலிருந்து ஒளிந்து குடிப்பது எளிதல்ல. என்றாலும், அதற்கான முயற்சி குடிமக்கள் செய்யத்தான் செய்வர். 

என்றாலும், ஊருக்குள் வரும்போது அவர்களது மயங்கிய நிலை எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்து விடும் / மதிப்பற்ற இகழ்ச்சி நிலையில் தான் வாழுவர் என்பது வள்ளுவரின் வாக்கு. 
(ஊருக்குள் கள்ளுக்கடை வேண்டாம் என்று பெண்கள் போராடி வருவது அண்மையில் காணும் மற்றொரு குறிப்பிடத்தக்க செய்தி)!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 05, 2017 8:10 pm

#928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து 
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

பொய் சொல்லக்கூடாது.

அதிலும் குறிப்பாக, "நான் கள்ளுண்டதே இல்லை" என்ற முட்டாள் தனமான பொய்யைக் கள்ளுண்டவர்கள் ஒருபோதும் சொல்லக்கூடாது. எளிதில் குட்டு வெளுத்து விடும் Laughing

இந்த எளிய, தொடக்கப்பள்ளி அளவிலான அறிவுரை இந்தக்குறளில் பார்க்கிறோம்.

அழகு என்னவென்றால், "கள்ளுண்டவர் என்ற உண்மை மட்டுமல்ல வெளிப்படுவது - அதையும் தாண்டிய உண்மைகள் எல்லாம் நெஞ்சத்தில் இருந்து வெளியே வரும்" என்று எச்சரிக்கிறார்!

கண்டிப்பாக! 
(இதுபோன்ற எவ்வளவோ  "மறைத்து வைத்திருந்த உண்மைகள் வெளியில் வந்ததை" நேரில் கண்டவன் என்பதால் முழு நம்பிக்கையோடு இந்தக்குறளை விளக்க முடியும்!) Laughing

களித்தறியேன் என்பது கைவிடுக
"கள் குடிப்பதையே அறியேன்" என்று (பொய்) சொல்வதை விட்டு விடுங்கள்!
(மேற்கண்ட எச்சரிக்கை, கள்ளுண்பவர்களுக்கு மட்டுமே - அல்லாதவர்கள் இது குறித்து அச்சமோ கவலையோ கொள்ள வேண்டியதில்லை)

நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
நெஞ்சத்தில் ஒளித்து வைத்தவையெல்லாம் (போதை நிலையில் உளறுவதால்) வெளியே வந்து விடும்

அதாவது, கள்ளுண்டவன் என்பதை அவனை நுகர்ந்து பார்த்தெல்லாம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. 

அவனுடைய உண்மை விளம்பல்களே / உளறல்களே காட்டிக்கொடுத்து விடும்.

("கள்ளுண்டிருக்கிறானா இல்லையா என மனைவி கண்டுபிடிப்பதற்காகவே உதட்டு முத்தம் உண்டானது" என்றெல்லாம் ஒரு முட்டாள் கோட்பாடு உண்டு). 

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 07, 2017 11:54 pm

#929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ அற்று

இருளில் ஒரு ஆளைத்தேட தீப்பந்தம் பயன்படுத்தலாம். ஆனால், நீரில் மூழ்கியவனைத்தேடவும் அதே தீப்பந்தம் பயன்படுத்தலாமா? முட்டாள்தனம் இல்லையா?

இந்த அழகான உவமையுடன், "குடிகாரனுக்கு காரணம் காட்டிப்புரிய வைக்க முயலாதே" என்று அறிவுரை சொல்லும் குறள் Smile 

தான் பேசுவது என்னவென்றே உணராதவன், மற்றவர் பேசுவதற்குச் செவி கொடுக்க இயலுமா? (அதாவது காதில் விழுந்தாலும், புரிந்து உணர அத்தகையவனால் இயலாது! )

அந்நிலையில் அவன் என்ன சொன்னாலும், வாக்குக்கொடுத்தாலும் அதை நீரில் தான் எழுத வேண்டும் - மீண்டும் உணர்வு நிலை திரும்பையில் அவனுக்கு அவை நினைவில் கூட இருக்காது).

களித்தானைக் காரணம் காட்டுதல்
குடியில் மயங்கிக்கிடப்பவனுக்குக் காரணம் காட்டிப்புரிய வைப்பது

கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று
நீரின் உள்ளே மூழ்கிக்குளிப்பவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாகும்

துரீஇ - மரூஉ மொழி மற்றும் அளபெடை - துருவி  என்ற சொல் தான் இப்படி இருக்கிறது. (துருவுதல் = தேடுதல்)

இதில் உள்ளடக்கியிருக்கும் ஆழ்ந்த கருத்து : குடிகாரனுக்கு (மயங்கிய நிலையில்) நன்மை - தீமைகளைக் குறித்த அறிவு தெளிவாக இருக்காது. 

அந்நிலையில் அவன் கொடுமையான செயல்களைச்செய்யக்கூடும்! மற்றவர் சொல்லும் அறிவுரை காதில் ஏறாது.

மிக எச்சரிக்கையாக நோக்க வேண்டிய ஒன்று!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 08, 2017 8:38 pm

#930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் 
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு


தன்னுடைய பட்டறிவில் உணர்வதை விட மற்றவர்களைக் கண்டு படிப்பதே சிறந்த அறிவு Smile

என்றாலும், பல நேரங்களிலும் நாம் பட்டு உணர்ந்து தான் திருந்துகிறோம் என்பது நடைமுறை.

இங்கு குடிகாரர்களுக்கு வள்ளுவர் சொல்லும் அறிவுரை - மற்ற குடிகாரர் படும் கொடுமைகள், காண்பிக்கும் இழிநிலைகள் கண்டு எச்சரிக்கை அடையுங்கள் - என்பதே!

கள்ளுண்ணாப் போழ்திற்
(தான்) கள்ளுண்ணாமல் (முழு உணர்வுடன்) இருக்கும் பொழுதில் 

களித்தானைக் காணுங்கால்
கள் உண்டு (இழிநிலையில்) இருப்பவனைக்காணுகையில் 

உண்டதன் சோர்வு
குடிப்பதால் வரும் தீமைகளை

உள்ளான்கொல்
எண்ணிப்பார்க்க வேண்டாமா?
("ஏன் எண்ணுவதில்லை?" என்று எதிர்மறையில் கேட்கிறார்)

ஆக, இது கள்ளுண்ணும் பழக்கம் உள்ளோருக்கு மட்டுமல்ல, இதுவரைக்கும் குடிக்காதவர்களுக்கும் சேர்ந்த எச்சரிக்கை என்றே கொள்ளலாம்.

திரைப்படங்களும் விளம்பரங்களும் கூட்டாளிகளும் கள்ளுண்பதை அளவுக்கு மீறிப்புகழ்ந்து (மலையாளத்தில் எப்போதும் கேட்பது : "ஆண் ஆனெங்கில் குடிக்கணம்") அந்தப்பழக்கத்துக்குத்  தூண்டும்போது எண்ண வேண்டியது இதுவே : 
குடித்துக்கெட்டோரின் இழிநிலை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 08, 2017 10:10 pm

#931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

(பொருட்பால், நட்பியல், சூது அதிகாரம்)

பாலியல் ஒழுக்கக்கேடு, குடிவெறி - இந்த இரண்டு தீய பழக்கங்களைத் தொடர்ந்து வள்ளுவர் அடுத்த இழுக்கான செயலுக்கு வருகிறார் - சூது!

அதுவும் ஒரு மிக அழகான உவமையுடன்!

கேசினோ எனப்படும் சூதாட்ட நிலையங்கள் நான் இப்போது வாழும் ஊரில் கொழிக்கின்றன. தற்போது வேலை செய்யும் இடத்துக்கு எதிரேயே ஒரு மிகப்பெரிய  சூதாட்டமையம் இருக்கிறது. நான் இது வரை சூதாடியதில்லை என்றாலும், கூட வேலை செய்வோர் எல்லோருமே ஒரு முறையாவது இத்தகைய நிலையங்களுக்குச் சென்று முயன்றவர்கள். (அதில் சிக்கிக்கொண்டு உழலுவோரும் உண்டு)

இத்தகையோர் எல்லோரும் சொல்லுவது இது தான் - "அவ்வப்போது வெற்றி பெறுவது போலத்தோன்றினாலும், வெளியே வரும்போது கையில் உள்ளதை (அல்லது "செலவு" செய்யத்திட்டமிட்டதை) அங்கே விட்டுவிட்டுத்தான் வருவோம்! ".

அதாவது, வெற்றி பெறுவோரும் உடனே மகிழ்ந்து "கிட்டியது போதும்" எனக்கிளம்பி  வெளியேறுவதில்லை! சூது = பேராசை என்பதால், தொடர்ந்து விளையாடி முழுவதும் இழந்து விட்டுத்தான் செல்வது வழக்கம்.

அந்த நடைமுறையை மிக அழகான "தூண்டில் மீன்" உவமையுடன் வள்ளுவர் விளக்குகிறார்!

வேண்டற்க வென்றிடினும் சூதினை
வெற்றி கிடைத்தாலும் சூதினை "வேண்டாம்" என்று மறுத்து விடுங்கள்

வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
(அதில் கிடைக்கும்) வெற்றி என்பது தூண்டில் இரும்பில் (முள்ளில்) உள்ள இரையை மீன் விழுங்குவது போன்றதே!

தூண்டிலில் உள்ள இரையை மீன் சுவைக்கத்தொடங்கும்போது உணவுப்பொருள் கிடைத்த வெற்றி உணர்வு பெறக்கூடும். என்றாலும் அது இமைப்பொழுதே உண்டாகும்.

முள்ளில் சிக்கிய மீனின் இழப்பு அதன் உயிர் / வாழ்க்கை / எல்லாமே என்பது கடும் எச்சரிக்கையான உவமை.

சூது கவ்வினால் நம் வாழ்வும் பாழ் தான்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 20, 2017 11:07 pm

#932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு


ஆறு என்பது வழி / வாழ்க்கை வழி என்று பலமுறை முன்னமே கண்டது தான். சூதாடிகளுக்கு நன்மையான வாழ்க்கை வழி - ஆறு - உண்டாகாது என்று (நன்கு அறிந்த உண்மையை) அடித்துச்சொல்லும் குறள்.

அதையே, "உண்டாகுமோ" என்று கேள்வி முறையில் சொல்லி, நாமே அந்த முடிவுக்கு வர உதவுகிறார். ("அவன் உருப்படுவானா?" என்று கேட்கும் கேள்வியிலேயே தெரியும், உருப்பட மாட்டான் என்று Laughing ).

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்
ஒரு முறை வென்று (ஆனால்) நூறு முறை தோற்று இழக்கும் சூதாடுவோருக்கு

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு உண்டாங்கொல்
நன்மை பெற்று வாழும் வாழ்க்கை வழி உண்டாகுமோ?
(உண்டாகாது என்று பொருள்).

இங்கே "ஒன்றெய்தி" என்பது முன்னமே முந்திய குறளில் பார்த்தது தான்.

அதாவது, எப்போதாவது ஒரு முறை வெல்லுபவர்கள் தான் கூடுதல் ஈடுபாட்டோடு சூதாடுவார்கள். (அதை நடத்துபவர்களும் அவ்விதத்தில் சூழ்ச்சியோடு தான் வடிவமைப்பர். அல்லாவிடில், ஆர்வத்துடன் வந்து ஆட ஆள் கிடைக்காதே? முடிவில் வெற்றி கிடைக்க வழியே இல்லை என்றாலும் இருப்பது போல் காட்டினால் தானே மீன்கள் வந்து விழும்?)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 39 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum