Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 02, 2016 5:03 pm

#739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல 
நாட வளந்தரு நாடு

இயற்கையில் வளம் பெற்றிருக்கும் நாடுகளைப்புகழும் பாடல்.

அதோடு, "நாடு / நாடல்" என்ற சொற்கள் கொண்டுள்ள சிலம்பு விளையாட்டும் Smile

இதுவும் பள்ளிக்காலத்தில் படித்ததும் ஆயிரக்கணக்கான இடங்களில் மேற்கோளாகக் கண்டிருப்பதுமான குறள். அதனால் பொருள் நம்மில் பலருக்கும் அறிமுகம் ஆனது தான்.

நாட வளந்தரு நாடு நாடல்ல
(குடிகள்) வருந்தி முயல (அதன் விளைவாக) வளத்தைத் தரும் நாடு சிறந்த நாடல்ல

நாடா வளத்தன நாடென்ப
நாடாமலேயே (வருந்தி முயற்சி செய்யாமலேயே)  வளம் நிறைந்திருப்பது தான் சிறந்த நாடு என்பர் 

உழவுத்தொழில் முன்னணியில் இருந்த நாட்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீர்வளமும் நல்ல நிலமும் பருவநிலைகளும் அமைந்த இடங்களில் வருந்தி உழைக்காமல் வளம் பெற வழியுண்டு. 

அவையே வாழச்சிறந்த இடங்கள் என்று அன்று கருதப்பட்டன. ஆற்றுச்சமவெளிகளில் மனித உறைவிடங்கள் வளர்ந்தது வரலாறு. தொழிநுட்பம் மிக வளர்ந்த நம் நாளிலும் கூடுதல் மனிதர் வாழும் நகரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் மிகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீர் வளம் இல்லாத நாடுகளிலும்  வேறு இயற்கை வளங்கள் இருந்தால் அண்மைக்காலங்களில் பொருளியல் மேம்பாடு வந்திருப்பது நாம் கண்டதே. (மத்தியக்கிழக்கின் எண்ணெய் வளம் ஒரு எடுத்துக்காட்டு).

மானிட உழைப்பின் தேவையைக் குறைத்துச்சொல்லும் குறளாக இதை எண்ணிட வழியுண்டு. அப்படிப்பார்க்காமல், "இயற்கையைப் போற்றுதல்" என்ற கண்ணோட்டத்தில் இதைப்படிக்க வேண்டும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 02, 2016 7:18 pm

#740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே 
வேந்தமை வில்லாத நாடு

"ஒரு நாட்டுக்கு என்னவெல்லாம் வளங்கள் இருந்தாலும், ஆட்சி நல்லதல்ல என்றால் ஒரு பயனுமில்லை" என்று அதிகாரத்தை முடிப்பது சிறப்பு.

இயற்கை வளம் மிகக்குறைந்த இடங்களில் கூட வாழலாம் - ஆட்சி குழப்பமென்றால் வாழ்வு மிகக்கடினம். 

எடுத்துக்காட்டாக, விடுதலை இல்லாத நிலை.  அப்போது, உடல் & பொருள் தேவைகள் அளவுக்கும் கூடுதல் கிடைத்தாலும், மனதில் இன்பம் இருக்காது அல்லவா? கிளியைத் தங்கக்கூண்டில் அடைத்துக்கொஞ்சுவது போல்...

வேந்தமைவில்லாத நாடு
நல்ல வேந்தன் (ஆட்சி / அரசு) அமையாத நாடு

ஆங்கமைவெய்தியக் கண்ணும் பயமின்றே
போதுமான மற்ற எல்லாவற்றையும் அடைந்திருந்தாலும் பயனின்றி இருக்கும்

இந்தக்குறள் அதற்கு முந்தைய கால வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதில் ஐயமில்லை. 

வேடிக்கை என்னவென்றால், "வரலாறு தன்னையே மீண்டும் மீண்டும் நடத்தும்" என்ற உண்மையை நாம் இன்று வரை கண்டு வருகிறோம். (வேடிக்கை மட்டுமல்ல, வேதனையும் தான்)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 06, 2016 5:04 pm

#741
ஆற்றுபவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் 
போற்றுபவர்க்கும் பொருள்
(பொருட்பால், அரணியல், அரண்)

ஆற்று /போற்று என்று எதுகை ஓசை நயமுடன் பாடல் அமைந்திருக்கிறது.

"பொருள்" என்ற சொல், "பொருட்படும்" (சிறப்பாக உதவும்) என்ற பொருளில் இரு முறை வருவது அழகு. அதுவும் சேரும்போது ஓசை நயம் இசையாகவே இருக்கிறது. 

மற்றபடி, சொல்ல வரும் பொருள் மிக அடிப்படையான / எளிமையான ஒன்று. ஊரைப்பாதுகாக்கும் அரண் / கோட்டைக்கான வரையறை. (குறள் படிக்கையில், மனதில் அப்படியொரு கோட்டையின் படம் இருந்தால் நல்லது)

ஆற்றுபவர்க்கும் அரண்பொருள்
(போர்) செய்வோருக்கும் அரண் சிறப்பானது

அஞ்சித்தற் போற்றுபவர்க்கும் பொருள்
அஞ்சித் தம்மைக் காத்துக்கொள்ளுவோருக்கும் அது சிறப்பானது

நாட்டை / ஊரைத்தாக்க வரும் எதிரியை "எறியும்" பொருட்களால் தாக்க அரண் நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறது. அவ்விதத்தில், போர் புரியும் வீரருக்கு அது பெரும் உதவி. நேரே சென்று பொருதாமலேயே எதிரிக்குப் பேரளவில் இழப்பு உண்டாக்க உதவும்.

அஞ்சி உயிர் காக்க நினைப்போருக்கு அது பாதுகாப்பு என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை Smile

என்றாலும், எத்தனையோ கோட்டைகள் வீழ்ந்த வரலாறு இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 06, 2016 8:24 pm

#742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 
காடும் உடைய தரண்

அரண் என்றவுடனே நம் மனதில் வரும் சீனப்பெருங்சுவர் மற்றும் மலைக்கோட்டை போன்ற கோட்டைகளை இந்தக்குறளில் உடனே மாற்றுகிறார் (இடிக்கிறார் Laughing

ஒரு நாட்டுக்கு இயற்கையாக இருக்க வேண்டிய அரண்களைப் பட்டியலிடுகிறார்.

இவற்றுள் மணிநீர், அணி நிழற்காடு என்று நீருக்கும் காட்டுக்கும் கொஞ்சம் அழகுபடுத்தல் வேலை செய்கிறார்.

அது என்ன மணிநீர்?  மணியின் நிறத்தில் உள்ள நீர் என்கிறது அகராதி, இந்தக்குறளை மேற்கோள் காட்டிக்கொண்டு Smile நீல நிறம் (நீல மணி நினைவுக்கு வரலாம். சில உரையாசிரியர்கள் "தெளிவான" நிறம் என்றும் சொல்கிறார்கள்).

நிறைய நீர் இருக்கும் இடங்களில் தான் நீலநிறம் நன்கு புலப்படும். அப்படியாக, கடல் / பெரும் ஏரி போன்ற, எளிதில் கடந்து வர முடியாத நீர்நிலைகள் ஒரு நாட்டுக்கு அரண்.

அணிநிழற்காடு - அழகிய நிழல் உள்ள காடு - அடர்ந்த காடுகள் ஒரு நாட்டுக்கு அரண்.

மணிநீரும் மண்ணும் மலையும்
மணியின் நீலநிறத்திலான நீரும், நிலமும், மலையும்

அணிநிழற்காடும் உடைய தரண்
அழகிய (அடர்ந்த) நிழல் உள்ள காடும் - ஆகிய இவையெல்லாம் உள்ளதே அரண் ஆகும்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 07, 2016 6:41 pm

#743
உயர்வகலம் திண்மை அருமை இந்நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்


அரண் எப்படி இருக்க வேண்டும் என்ற "நூல் வரையறை" இந்தக்குறளில்.

வழக்கம் போல நான்கு பண்புகளின் பட்டியல். எண்ணி எண்ணிப்படிப்பது எப்போதுமே குறிப்பாக, சிறப்பாக இருக்கும் என்பதை என்றே வள்ளுவர் உணர்ந்திருந்தது அழகு.

எனக்கு மிகவும் பிடித்த படிப்பு முறை. சொற்பொழிவுகள் கேட்கும் போதும் இப்படி எண்ணி எண்ணிக்குறிப்பாகச் சொல்லுவார்களானால் ஒருமுகத்தோடு கேட்கவும், உட்கொள்ளவும் முடியும்.

1. உயரம் 2. அகலம் 3. திண்மை (உறுதி) 4. அருமை (அதாவது, இதைக் கடந்து செல்வது எளிதன்று /அரிது என்று பொருளாம்)

பகைவர் முற்றுகை மற்றும் தாக்குதல் குறித்து நம் மனக்கண்ணில் கொண்டு வர வேண்டுமானால், குறைந்தது ஒரு கோட்டைக்காவது சென்று பார்த்திருந்தால் நல்லது. (தற்காலங்களில் காணொளிகள் இதற்கு மாபெரும் மாற்றீடு என்றாலும், நேரில் கண்டு தொட்டு உணரும் அறிவு வேறு என்பது என் கருத்து)

உயர்வகலம் திண்மை அருமை
உயர்வு, அகலம், உறுதி மற்றும் கடக்க இயலாத அருமை

இந்நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்
இவை நான்கும் அமைந்திருப்பதே சிறந்த அரண் என்பது நூலோர் வரையறை

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 09, 2016 5:20 pm

#744
சிறுகாப்பிற் பேரிடத்ததாகி உறுபகை 
ஊக்கம் அழிப்பதரண்

"சிறுகாப்பில் பேரிடம்" என்ன ஒரு அழகான மொழி!

பெரிய பரப்பிலான இடத்தை சிறிய அளவினான காவலர்கள் கொண்டே பாதுகாக்க வல்லது தான் அரண். 

அரண் எவ்வளவு உறுதி என்றாலும், அதன் உள்ளே / வெளியே செல்ல வழியில்லை எனில் பயனில்லை.  அப்படிப்பட்ட வாயில்கள் தாம் பொதுவாகக் காவல் காக்க வேண்டிய இடங்கள். 

அத்தகைய இடங்களுக்கு அளவற்ற காவல் வேண்டி வந்தால், அரண் நல்லதல்ல என்கிறார். "சிறு காப்பில்" முழு இடமும் உள்ளடக்க வேண்டும். அதுவே சிறப்பு!

சிறுகாப்பிற் பேரிடத்ததாகி
சிறிய அளவிலான காவல் கொண்டே பெரும் பரப்பை உள்ளடக்க வல்லதும்

உறுபகை ஊக்கம் அழிப்பதரண்
(எதிர்த்து வரும்) கடும் பகையின் ஊக்கத்தை அழிக்க வல்லதும் தான் சிறந்த அரண் 

திறன் என்பது எப்போதுமே சிறிய அளவிலான முயற்சி கொண்டே பெரும் வெற்றி அடைவது. வள்ளுவர் அதை அவ்வப்போது முன்னெடுப்பதை பொருட்பாலில் காண்கிறோம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 09, 2016 10:03 pm

#745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்தாகி அகத்தார் 
நிலைக்கெளிதாம் நீரது அரண்

கூழ்த்தாகி = பலவகை உணவு உடையதாகி 
("கூழானாலும் குளித்துக்கட்டு" என்பதில் வரும் வெறும் கூழ் அல்ல)

மற்றபடி, எளிதான குறள் (அதாவது, அரண் என்றால் என்ன என்று மனக்கண்ணால் காண முடித்தவர்களுக்கு).

கொளற்கரிதாய்
(பகைவர்கள் வெற்றி) கொள்வதற்கு அரிதாகி 

கொண்டகூழ்த்தாகி
(போதுமான அளவில்) பலவகை உணவு உடையதாகி

அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்
(அவ்விதமாக) உள்ளே இருப்போர் நிலைத்திருக்க எளிதான விதத்தில் அமைந்திருப்பதே அரண்

முற்காலங்களில் பலரது உயிர் அரணால் காக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

போர்கள் அவ்வப்போது நடக்கும் நம் நாளிலும்,  காலத்துக்கேற்ற வண்ணம் "அரண்கள்" இருந்து கொண்டு தான் இருக்கின்றன. போர் இல்லாவிட்டாலும், வெளிநாட்டினர் வருவதைத்தடுக்க மேலை நாடுகளில் "அரண்கள்" பல வடிவில் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

(அமெரிக்கத்தேர்தலில் கூட இந்த ஆண்டு (2016) தெற்கேயுள்ள நாட்டில் இருந்து ஆட்கள் வராதிருக்க மதில் கட்ட வேண்டும் என்ற பொருளில் பேரளவில் பேச்சுக்கள் நடக்கும் விந்தையை நாம் காண முடியும். )

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 13, 2016 6:02 pm

#746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்


இரண்டு குழப்பங்கள் உள்ள குறள்.

1. நல்லாள் என்ற சொல். இதன் பொருள் நல்ல பெண் என்பதாகவே அகராதிகள் எல்லாம் பொதுவாகச் சொல்கின்றன. முற்காலப் பாடல்கள் எல்லாவற்றிலும் அந்தப்பொருளிலேயே வந்திருக்கிறது. இங்கு அது பொருத்தமா என்று புரியவில்லை. (இந்தச்சொல்லை "நல்லான் / நல்ல ஆள்" என்றெல்லாம் எடுத்துக்கொண்டு "நல்ல வீரர்கள்" என்று கிட்டத்தட்ட எல்லா உரைகளும் சொல்வதையும் காணலாம்.)

2. அரணின் சிறப்பு குறித்துப்பாடுகையில் ஆண் / பெண் / ஆட்கள் பற்றி ஏன் சொல்ல வேண்டும்?

இந்தக்குழப்பங்களை அப்படியே வைத்துக்கொண்டு நேரடியான பொருள் மட்டும் பார்த்து முடித்துக்கொள்வோம்.

உண்மையில் "நல்லாள்" என்பதற்கு அரண் வலிமையோடு பொருந்தும் வேறு ஏதாவது பொருள் இருந்திருக்கலாம். இப்போதைக்கு இணையத்தில் தேடி எனக்கு ஒன்றும் கிட்டவில்லை.

எல்லாப் பொருளும் உடைத்தாய்
(உள்ளே இருப்போரைக் காப்பதற்கு வேண்டிய) எல்லாப் பொருட்களும் உள்ளதாய்

இடத்துதவும்  நல்லாள் உடையது அரண்
(அவற்றோடு, வேண்டிய) இடத்தில் (அல்லது, பகை வருமிடத்து) உதவும் நல்லாள் (நல்ல பெண் / நல்ல வீரர் / உள்ள பொருட்களைப் பயன்படுத்த வல்லோர்) உடையது தான் அரண்


Last edited by app_engine on Wed Sep 14, 2016 6:47 am; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 13, 2016 11:02 pm

#747
முற்றியும் முற்றாதெறிந்தும் அறைப்படுத்தும் 
பற்றற்கரியது அரண்

"அறை" என்பதற்கு வஞ்சனை / சூழ்ச்சி என்றும் பொருள் சொல்கிறார்கள், அதுவே இந்தக்குறளில் பொருத்தமாக இருக்க முடியும்.

மற்றபடி, முற்றி / முற்றாது என்பது "முற்றுகை" (இடுதல் / இடாதிருத்தல்) என்று புரிந்து கொள்வது கடினமல்ல.

இப்படி என்னவெல்லாம் செய்தாலும் கைப்பற்ற முடியாத அளவுக்கு இருப்பதே நல்ல அரண் என்று சொல்ல வருகிறார். (இரும்புக்கோட்டை என்ற பயன்பாடு நினைவுக்கு வரலாம்).

முற்றியும் முற்றாதெறிந்தும்
முற்றுகை இட்டும் முற்றுகை இடாமல் தாக்கியும்

அறைப்படுத்தும்
சூழ்ச்சி வஞ்சனை முயற்சிகளாலும்

பற்றற்கரியது அரண்
கைப்பற்ற முடியாததே சிறந்த அரணாகும்

"வஞ்சனை" என்றவுடன் டிராய் நகர் குறித்த பழங்கதை நினைவுக்கு வரலாம். 
(தகர்க்க இயலாத கோட்டைக்குள் நுழைய, ஆட்களை உள்ளே மறைத்த ஒரு பெரிய  மரக்குதிரையைப் பயன்படுத்தியதாக இந்தக்கதையைப் படித்திருக்கலாம் Laughing )

அது ஒரு கற்பனைக்கதையாக இருந்தாலும், பல வலிமை வாய்ந்த கோட்டைகள் சூழ்ச்சிகள் வழியாக வெல்லப்பட்ட வேறு வரலாறுகள் நிறைய உள்ளன.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 14, 2016 7:18 pm

#748
முற்றாற்றி முற்றியவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்


படையெடுத்து வருபவர்களும் தற்காப்பு செய்பவர்களும் முடிவில் பெற விரும்புவது "வெற்றி" என்பது தெளிவு.

வெற்றி அடைய உதவாத அரண் கொண்டு பயனில்லை - இதைப் புரிந்து கொள்ளத்தூண்டும் குறள்.

முற்று / பற்று என்று எதுகையுள்ள சொற்கள் கொண்டு கொஞ்சம் விளையாட்டும் இருக்கிறது.

முற்றாற்றி முற்றியவர்  X பற்றாற்றிப் பற்றியவர் Smile

முற்றாற்றி முற்றியவரையும்
முற்றுகை இட்ட வலிமையுள்ளவரையும்
(படைத்திறனில் "முற்றியவர்" - முதிர்ந்தவர் - என்றும் கொள்ளலாம்)

பற்றியார் பற்றாற்றி
உள்ளே இருப்பவர்கள் (பற்றிக்கொண்டவர்கள்) விட்டு விடாமல் பற்றி

வெல்வது அரண்
வெற்றிபெறச் செய்வதே நல்ல அரண்

அதாவது, பாதுகாத்தல் என்பதற்கும் கூடுதலாக, வெற்றி பெற வழிவகைகளை ஏற்படுத்தித்தருவதே நல்ல அரண். (எடுத்துக்காட்டு - மறைவில் இருந்து கொண்டே வருவோர் மீது போர்க்கருவிகளை எய்து தாக்க ஏற்பாடுகள் உள்ள அரண்)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 15, 2016 6:28 pm

#749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து 
வீறெய்தி மாண்டதரண்

முன்னர் 665-ஆம் குறளில் கண்ட அதே சொல்லாடல் - "வீறெய்தி மாணுதல்" -  இதை மீண்டும் "தனிச்சிறப்பு" , "பெருமை" என்று உரையாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

முன்பு போன்றே, "வெற்றி" என்ற பொருளை நாம் எடுத்துக்கொள்வோம் Smile

அதாவது, "வெற்றி பெற்றுச் சிறப்படைவது"! போர் முனை என்ற சூழலும் நோக்குகையில் மிகப்பொருத்தம்! சென்ற குறளின் தொடர்ச்சியாகப்பார்த்தாலும் "வெற்றி" என்ற நடுப்பொருள் இங்கும் இருப்பதைக்காணலாம்!

முனைமுகம் - போரின் தொடக்கம், மாற்றலர் - பகைவர்  - இந்தச்சொற்களுக்கு அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டுவது குறிப்பிடத்தக்கது Smile

முனைமுகத்து மாற்றலர் சாய
போரின் முகத்தில் பகைவரை வீழ்த்தி

வினைமுகத்து வீறெய்தி
(அதன் உள்ளே இருப்போர்) செயல்படும் வகையால் வெற்றி அடைய

மாண்டதரண்
மாட்சிமை (சிறப்பு) பெறுவது அரணாகும்!

ஒரு நாட்டின் படைச்சிறப்பு சிறப்பு பலவற்றின் மேல் சார்ந்திருக்கிறது. - வீரர்களின் திறன், படைக்கலன், எண்ணிக்கை, தலைமை இப்படிப்பலதும். 

அந்தக்கூட்டத்தில், குறிப்பிடத்தக்க சிறப்பு உள்ளது அரண்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 15, 2016 8:36 pm

#750
எனைமாட்சித்தாகியக் கண்ணும் வினைமாட்சி 
இல்லார்கண் இல்லது அரண்

அரணியலின் கடைசிக்குறள் அரணை விட அதில் உள்ளோரின் திறன் பற்றிப்பேசுவது அழகு!
(வல்லவன் கையில் புல்லும் ஆயுதம் என்ற பழமொழி நினைவுக்கு வரலாம், இது அதன் தலைகீழ்).

எனைமாட்சித்தாகியக் கண்ணும்
என்னென்ன சிறப்புகளை உடையதாக இருப்பினும்

வினைமாட்சி இல்லார்கண்
செயல் திறமை இல்லாதவரிடம்

இல்லது அரண்
அரண் இல்லாதது போன்றதே

படைக்கருவிகள் போன்றே, அரணும் உயிரற்ற / அறிவற்ற ஒன்றே. அதை நல்ல நிலையில் வைத்திருக்கவும், தக்க விதத்தில் பயன்படுத்தி தம் மக்களைக் காத்தல் / பகைவரை அழித்தல் போன்றவற்றை நிகழ்த்தவும் நல்ல திறன் வாய்ந்த மாந்தர் தேவை.

அப்படிப்பட்டோர் இல்லாத பொழுது, அரண் எவ்வளவு அருமையாக அமைக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு இல்லாத நிலை தான்.

"தொங்கும் தோட்டம்" புகழ் நெபுகத்நெசர் மன்னனின் நகர் பாபிலோன்.  (தற்போதைய இராக் நாட்டில் பாழடைந்து கிடைக்கும் நிலையில்).

இந்தக்குறள் படிக்கையில், சிறந்த மதில்களும், பெரிய ஆறும் அரணாக இருந்த அந்த மாநகர் பாபிலோன் வீழ்ச்சி குறித்த வரலாறு நினைவுக்கு வரலாம். 

யூப்ரடீசு நதியின் தண்ணீரை வேறு பக்கமாகத் திருப்பி "நீர் அரணை"  பெர்சியாவின் (தற்போது ஈரான்) பொறியியல் வல்லுநர்கள் இல்லாமல் செய்தனர் என்கிறது வரலாறு Smile   மன்னனும் மக்களும் குடித்துக்கொண்டாட்டங்களில் மயங்கி நின்றதால் வாயில்களை ஒழுங்காக அடைக்காமல் இருந்ததாக ஒரு பதிவு சொல்கிறது Smile

அப்படியாக, மன்னன் சைரசிடம் இந்த அரசு "போர் நடக்காமலேயே தோற்றது" என்று  படிக்கையில், "அரண் இருந்தும் இல்லாத நிலை" நினைவுக்கு வருகிறது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 16, 2016 9:09 pm

#751
பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்லது இல்லை பொருள்
(பொருட்பால், கூழியல், பொருள் செயல்வகை அதிகாரம்)

பொருள் என்ற சொல்லுக்கு இருக்கும் பல பொருட்கள் கொண்டுள்ள விளையாட்டு இச்செய்யுள்.

மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கைப்பொருளும் இதனுள் அடங்கி இருக்கிறது Sad

பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருட்படுத்தும் அளவுக்கு (வேறு) ஒன்றும் இல்லாதவரை மதிக்கச்செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்
பொருட்செல்வம் (பணம் / பொருளுடைமை) போன்ற வேறொரு பொருளும் இல்லை

அறிவோ, நல்ல பண்புகளோ, அல்லது வேறு நல்ல திறமைகளோ இல்லாத ஒருவனுக்கு ஏதோ ஒரு வகையில் பணம் வந்துவிட்டது என்றால் மனித உலகில் அவனுக்கு எப்பேர்ப்பட்ட மதிப்பு தானே வரும் என்பது நாம் அறிந்ததே. 

சான்றோர் இப்படிப்பட்டவனை "பொருளல்லவன்" (மதிக்கவோ பொருட்படுத்தவோ தக்க ஒன்றுமற்றவன்) என்று கருதினாலும், உலகில் அவனைப் பொருட்படுத்தப் பெரும்பான்மையரும் ஓடி வருவர் என்பது நடைமுறை.

எதனால்? அவனிடம் உள்ள செல்வத்தால் தானே? உண்மையில் மக்கள் மதிப்பது அவனை அல்ல - அவனிடம் உள்ள பணத்தை! 
(அது அவன் கையில் உள்ள வரை தான் மதிப்பு என்பது வேறு).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 16, 2016 11:01 pm

#752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு

நடைமுறை உண்மைக்குறள், மீண்டும். 
(பொருளை சிறப்பிக்கும் பகுதி என்பதால் இப்படிப்பட்ட பாடல்கள் இனி நிறையப்படிக்க வேண்டி வரும் Embarassed )

"பணம் இல்லாதவன் பிணம்" என்ற மொழியைக் குறள் வெண்பாவில் சொல்கிறார். 

அப்போது நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் எங்கள் பள்ளியில் இந்தப்பழமொழியைச் சொல்லி உரையாற்றினார். அப்போது சொன்னது இன்று வரை மறக்க இயலாதது.

"ஒருவன் செத்த உடனேயே அவன் பெயரைச் சொல்லி அந்த உடலை அழைப்பது நின்று விடும்!  திரு.---- அவர்களை எடுத்துப்பாடையில் வை என்று சொல்ல மாட்டார்கள், பொணத்த (அல்லது நயம் கருதி, "உடலை") எடுத்து வை என்று தான் சொல்வார்கள் "  என்றார் Sad

இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்ற ஒன்று!

அதே அளவில் தான் பணம் இல்லாதவனுக்கு உலகில் கிட்டும் நிலை Sad

இல்லாரை எல்லாரும் எள்ளுவர்
பொருள் இல்லாதவர்களை எல்லோரும் எள்ளுவார்கள் (ஏளனம் செய்வார்கள்)

செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு
செல்வர்களையோ எல்லோரும் சிறப்புச் செய்வார்கள் (புகழ்ந்து மதிப்பார்கள்)

அதனால், நடைமுறை வாழ்வுக்குப் பொருள் தேவை என்கிறார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 19, 2016 4:47 pm

#753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் 
எண்ணிய தேயத்துச் சென்று

பலரும் மேற்கோள் காட்டும் ஒரு புகழ் பெற்ற சொற்றொடர் இங்கே : "பொருளென்னும் பொய்யா விளக்கம்" (பணம் எனப்படும் அணையாத விளக்கு) Smile

எனக்குத்தெரிந்து பொருள் அதிவிரைவில் அணைந்து போவதைத்தான் பார்த்திருக்கிறேன் Smile  சம்பளப்பணம் வருமுன்னே அதற்கான செலவுப்பட்டியல் காத்திருப்பது பலர் வீட்டிலும் நடப்பது. (சிலர் சம்பளம் வருமுன்னரே கடன் அட்டைகளில் செலவு செய்து விட்டு அதை எப்படி அடைப்பது என்று திட்டமிடுவதும் உண்டு Laughing )

என்றாலும், "ஒரு வேளை குறையாத பொருட்செல்வம் உண்டாயிருந்தால் எப்படி இருக்கும்" - என்று நினைத்துக்கொண்டு இந்தக்குறள் படிப்போமாக Smile

இக்குறளில் நாம் காணும் இன்னொன்று - "தேயம்" என்ற சொல். இதற்கு இடம் / நாடு / உடல் என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள். (தேசம் / தேகம்  போன்ற வடமொழிச்சொற்களின் தொடக்கம் இங்கேயிருந்து சென்றிருக்கலாம்).

பொருளென்னும் பொய்யா விளக்கம்
பொருள் எனப்படும் அணையாத விளக்கு

எண்ணிய தேயத்துச் சென்று இருளறுக்கும்
எண்ணிய இடத்துக்குச் சென்று (அங்குள்ள) இருளை நீக்கும்

"இருள்" என்பது பொருள் இல்லாத நிலை / இடுக்கண் / வறுமை என்று கொள்ளலாம். அப்படிப்பட்ட இடங்களில் பொருள் சென்றால் (அப்போதைய) துன்பம் நீங்கும் என்ற நடைமுறை உண்மையைச் சொல்கிறார்.

பேரிடர் எங்காவது உண்டாகையில் உலகெங்கும் இருந்து பொருளுதவி வருவது நினைவுக்கு வருகிறது. 

துன்ப இருளை நீக்க அப்படிப்பட்ட "பொய்யா விளக்கம்" தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 19, 2016 11:58 pm

#754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள்

நேரடியான எளிமையான பொருள் உள்ள குறள். 

சரியான வழியில் வரும் செல்வம் நன்மையும் இன்பமும் தரும் என்று சொல்கிறது.

மூன்று பால்களின் பெயர்களும் (அறம் / பொருள் / இன்பம்)  வரும் குறள் என்ற சிறப்பு இதற்கு இருப்பதைக்காணலாம் Smile

திறனறிந்து தீதின்றி வந்த பொருள்
திறமையின் விளைவாக எவ்விதத் தீமையும் செய்யாமல் வந்த பொருள்

அறன்ஈனும் இன்பமும் ஈனும்
அறத்தையும் (நன்மையான வாழ்க்கை வழி) இன்பத்தையும் தரும்

படிக்க நன்றாக இருக்கிறது என்றாலும் இன்றைய உலக நிலையில்  "திறனறிந்து தீதின்றி வரும் பொருள்" என்பது மிகக்கடினமான ஒன்று!

தொழிலிலோ அல்லது வணிகத்திலோ ஈடுபட்டவர்களுக்கு நன்றாகத்தெரியும். வேலைக்குச்சென்று சம்பளம் வாங்குகிறவர்களுக்கே "தீதின்றி" என்பது அவ்வளவு எளிதல்ல Sad குறிப்பாக, அரசுப்பணியில் உள்ளோருக்கு உள்ள அழுத்தங்கள் அளவற்றவை. 

என்றாலும். பேரளவில் தனி ஆள் தான் தான் உண்டாக்கும் பொருள் "தீதின்றி" வந்ததா இல்லையா என்று முடிவு செய்கிறார். தன்னளவில் உறுதியுடன் இருந்து திறனை நம்பி (அறிந்து) இருந்தால், பொருள் ஈட்டலாம். (பேரளவில் இல்லையென்றாலும் திறனுக்குத் தக்க அளவில் தீதின்றிச் சேர்ப்பது முடிந்த ஒன்றே - கடினம் என்றாலும்).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 20, 2016 8:14 pm

#755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் 
புல்லார் புரள விடல்

எளிதில் புரிந்து கொள்ளத்தக்க குறள் - என்றாலும், "புல்லார் புரள" என்பதன் நேரடிப்பொருள் சட்டென விளங்கவில்லை.

உரையாசிரியர்கள் "புறக்கணிக்க வேண்டும்" / "தீமையானது என நீக்க வேண்டும்" / "ஏற்காது விட்டுவிட வேண்டும்" என்கிறார்கள்.

புல்லார் = பகைவர். 
(புல் என்பதற்குப் புன்மை / தீமை என்ற பொருள் இருப்பதால், தீயோர் என்றும் வருமோ?). 

புரள என்பதற்குக் "கழிதல்" என்று சொல்லும் அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறது. அந்தப்பகுதி நன்கு புரிகிறது, புல்லார் மட்டும் தான் விளங்குவதற்குக் முதலில் கொஞ்சம் கடினம்.

தலைகீழாக எண்ணினால், "அன்பு / அருள் இல்லாமல் வந்த செல்வத்துக்கு நாம் பகைவர் -புல்லார்- ஆகி விட வேண்டும்" - இது நன்கு பொருந்துகிறது அல்லவா?

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
அருள், அன்பு போன்ற நற்பண்புகளோடு பொருந்தாமல் ஈட்டும் பொருள் ஆக்கத்தை 

புல்லார் புரள விடல்
எதிர்ப்பவர்களாக ஆகி, (ஏற்காமல்) கழித்து விடுவோம்

கொடுமையால் ஈட்டப்படும் செல்வம் நல்லதல்ல. 

நாம் அதற்கு எதிரிகளாக ஆவோம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 22, 2016 6:58 pm

#756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் 
தெறுபொருளும் வேந்தன் பொருள்

என்னவெல்லாம் வேந்தனுக்குச் சேர வேண்டிய பொருட்கள் என்று பட்டியல் இடும் குறள் Smile

1. உறு பொருள்
"உடையாரில்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள்" Smile  
மக்கள் இல்லாமலோ, எழுதி வைக்காமலோ ஒருத்தர் இறந்தால், அவருடைய பொருள் எல்லாம் அரசுக்குச்சேர்வது போல.

2. உல்கு பொருள் 
சுங்கம் / வரி

3. தன் ஒன்னார்த்தெறு பொருள்
மன்னனால் வெல்லப்பட்ட பகைவர்கள் தரும் பொருள்  - திறை / கப்பம்

உறுபொருளும் உல்கு பொருளும்
உடையார் இல்லாமல் இருக்கும் பொருள், வரி / சுங்கம் வழியாக வரும் பொருள்

தன் ஒன்னார்த் தெறுபொருளும்
தான் வென்ற பகைவர் திறையாகத் தரும் பொருள்

வேந்தன் பொருள்
(ஆகிய இவையெல்லாம்) வேந்தனுக்கு உரிய பொருட்களாகும்

நாட்டுக்குத் தலைவன் என்று ஒருவன் வந்த காலம் முதலே இவை உலகெங்கும் உள்ளவை தான்.  குறிப்பாக, முதலும் மூன்றும் - யாரும் உரிமை கொண்டாடாத பொருள்  மற்றும் பகைவரை வென்று கொள்ளையாடும் பொருள். 

அந்த இரண்டாவது வகை (வரி) கொஞ்ச நாள் கழித்து, அதாவது "பொருளியல்" தொடங்கிய பின் கண்டுபிடித்ததாக இருக்கலாம்  Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 22, 2016 11:23 pm

#757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் 
செல்வச் செவிலியால் உண்டு

அருளைக் குழந்தையாக உருவகப்படுத்தி, அன்பு அதைப்பெற்ற தாயாகவும் பொருள் வளர்ப்புத்தாயாகவும் இங்கே அடையாளப்படுத்தப் படுகின்றன Smile

செவிலி = வளர்ப்புத்தாய் 
(அழகான சொல், மருத்துவமனைகளில் சீருடை அணிந்து நோயாளிகளுக்கு அன்புடன் சேவை செய்யும் பெண்கள் தாய்க்குச் சமம் தானே? அவர்களுக்குச் செவிலியர் என்று அழகான பெயர், ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தது என்றாலும்)

சொற்சுவைக்கு அப்பால், இங்கே மீண்டும் நடைமுறை உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது.

பணம் இல்லாவிட்டால் அருள் காண்பிப்பது 90% நிலைமைகளில் நடைமுறையல்ல. 

எ-டு : பசியோடு வருபவனுக்கு "நன்றாக இரு, ஓய்வெடு, உன்னை நேசிக்கிறேன்" என்றெல்லாம் அன்போடு பேசுவது மட்டுமே ஆறுதல் தராது. அங்கே முதலில் காண்பிக்க வேண்டிய அருள் உணவு வழங்குதல்! அதற்குப் பொருள் என்ற செவிலி உடனடித்தேவை!

அருளென்னும் அன்பீன் குழவி
அன்பு பெற்ற அருள் என்னும் குழந்தை

பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு
பொருட்செல்வம் என்னும் செவிலித்தாயால் வளர்க்கப்படும் (அல்லது, நிலை பெற்றிருக்கும்)

முன்பு என்னோடு உடன் வேலை பார்த்த ஒருவர் சொன்ன இன்னொரு நடைமுறை உண்மை : "காசு செலவழிக்காமல் நண்பர்களாக / உறவினர்களாகத் தொடர்வது கடினம்".

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 23, 2016 8:19 pm

#758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 
உண்டாகச் செய்வான் வினை

கையில் பணம் வைத்துக்கொண்டு ஒரு செயல் செய்வதற்கும் அது இல்லாமல் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் குறள்.

செல்வச்செழிப்பில் பிறந்த நண்பர்கள் ஒரு கவலையுமின்றி வீட்டின் வடிவமைப்பு / அழகுபடுத்துதல் போன்றவை குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அப்படி இல்லாதவர்கள் அடிப்படையான அளவில் ஒரு வீடு கட்ட வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிடமும் கடனுக்காக அலைந்து திரிந்த பாடுகள் நினைவுக்கு வரலாம் Smile   

அதிலும் எல்.ஐ.சி. போன்ற பெரும் கட்டுப்பாடுகள் இடும் நிறுவனத்தில்,  மூன்று - நான்கு தவணைகளாகக் கடன் வாங்கியவர்களுக்கு இந்தக் குறள் சட்டெனப் பிடிபடும் Smile 
(ஏற்கனவே கட்டி முடித்த அளவு குறித்த பொறியாளரின் சான்றிதழ் அடிப்படையில், அதன் விழுக்காடாகத் தருவார்கள். அதாவது, நம் பங்கும் அதற்கு மேலேயும் முதலில் "கையில் இருந்து" அல்லது வேறு கடன் வாங்கிக் கட்டடம் குறிப்பிட்ட அளவு வந்த பின்னரே எல்.ஐ.சி. கடன் தொகை பெற முடியும்) 

"வெறுங்கையால் முழம் போடுவது" என்ற பழமொழியும் நினைவுக்கு வரலாம். 

தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை
தன் கையில் செல்வம் இருக்கையில் (அதைக்கொண்டு) ஒரு செயலைச் செய்வது 

குன்றேறி 
குன்றின் மீது ஏறி (அதாவது, பாதுகாப்பான / உயரமான இடத்தில் நின்று கொண்டு)

யானைப்போர் கண்டற்றால்
யானைகளின் போரை வேடிக்கை பார்ப்பது போன்றதாகும். 
(அச்சமும், துன்பமும் இல்லாமல் இருக்கலாம்)

நம் நாளின் மொழியில் சொன்னால், வீட்டில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எங்கோ நடக்கும் போரில் விமானம் பொழியும் குண்டு மழையைத் தொலைக்காட்சியில் காண்பது போன்ற நிலை Sad

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 26, 2016 8:25 pm

#759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் 
எஃகதனிற் கூரியதில்

எஃகம் என்றால் "வாள்" என்று பொருள் சொல்கிறது அகராதி.  

எஃகு என்றால் இரும்பின் உருக்கு வடிவம் என்று தெரியும். வாள் / கூர்மை என்றெல்லாமும் பொருள் சொல்கிறார்கள்.

நம் கையில் பொருள் இருந்தால் அது பகைவருக்கெதிரான கூரிய வாள் போல என்று உவமை சொல்லும் குறள்.

செய்க பொருளை
பொருளை ஈட்டுங்கள்

செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியதில்
(ஏனென்றால்) பகைவரின் செருக்கை அறுத்தெறிய அதைவிடக் கூரான வேறு வாள் இல்லை

பகையை அறுக்கும் என்று சொல்லாமல், பகைவரின் "செருக்கறுக்கும்" என்று சொல்வதை உன்னிப்பாக நோக்க வேண்டும் Wink

பொருள் நம்மிடத்தில் கூடக்கூட, நம் எதிரிகளின் இறுமாப்புக் குறையும். (ஒரு வேளை பகை கூடலாம்). 
நடைமுறை உண்மை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வழியில்லை.

மற்றபடி, அழகான மோனைச்சுவை கொண்ட செய்யுள்!
(செய் / செறுநர் / செருக்கு)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 26, 2016 9:22 pm

#760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் 
ஏனை இரண்டும் ஒருங்கு

ஒண்பொருள் - இதில் வரும் "ஒண் / ஒண்மை" குறிப்பிடத்தக்கது.

ஒளி என்ற சொல்லோடு தொடர்புடையது - ஒளிரும் / சிறப்பு மிக்க பொருள்.

அது என்ன அப்படிப் 'பளபளப்பான" பொருள்? 

"சலவை நோட்டு" என்று சொல்லுகிறாரா?  Laughing அழுக்கு / சுருங்கி / அப்படி / இப்படி இருந்தாலும் பணத்தின் மதிப்பு மாறுவதில்லையே Wink

இதில் என்னமோ உட்பொருள் வைத்திருக்கிறார் என்பது தெளிவு. 

"ஒண்"  பொருள் இருந்தால், அறமும் இன்பமும் எளிதாகக் கிடைக்கும் என்கிறார். ஆதலால், இது "நல்ல வழியில் வந்த பொருள்" என்று எடுத்துக்கொள்ளலாம் Smile 

காழ்த்தல் என்பது "அளவு கடந்து மிகுதியாக"  என்று பொருள் படும். ஆக, நல்வழியில் ஏராளமான பொருள் ஈட்டியவர்கள் நிலை என்ன என்று சொல்லும் செய்யுள்!

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு
சிறப்பான (வழியில்) அளவற்ற பொருளை ஈட்டியவர்களுக்கு

ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள்
மற்ற இரண்டும் (அறமும் இன்பமும்) ஒன்றாக எளிதில் அடையத்தக்க பொருட்களாகும்.

இங்கும் மூன்று பாற்களும் வருகின்றன. ஆனால், அவற்றின் பெயர்கள் நேரடியாக 754-ஆம் குறளில் உள்ளது போல இல்லை Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 28, 2016 6:59 pm

#761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை

(பொருட்பால், படையியல், படை மாட்சி)

மன்னர் காலங்களில் மட்டுமல்ல, இன்று வரையும் படை வலிமையில் சிறந்த நாடுகளே பொருளியலிலும் மற்றவற்றைக் கட்டுப்படுத்தும் நிலை இருக்கிறது.

ஐ.நா.அமைக்கப்பட்ட போது, மற்ற நாடுகள் மீது பொருளியல் தடைகள் எல்லாம் தரவல்ல "பாதுகாப்புக்குழு"வில் நிலையான உறுப்பினர்கள் ஐவரும் படை வலிமை / வெற்றி அடிப்படையில் தான் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே முற்காலங்களில் (குறிப்பாக தமிழ்ச்சங்க கால நூல்களில்) படை மாட்சிக்கு முதன்மை கொடுத்து நிறைய எழுதப்பட்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதற்குத் திருக்குறளும் விலக்கல்ல என்று காட்டும் இரண்டு அதிகாரங்கள் இந்த இயலில்.

அந்த விதத்தில், "மன்னனின் செல்வங்களுள் தலையானது படை" என்று சொல்லுவது புரிந்து கொள்ளத்தக்கதே.

வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை
வேந்தனின் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானது / முதன்மையானது
(வெறுக்கை = செல்வம்)

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை
எல்லா உறுப்புகளும் (நன்றாக) அமைந்து, துன்பங்களுக்கு அஞ்சாமல் வெல்லும் படை
(ஊறு = இடையூறு, துன்பம்)


Last edited by app_engine on Fri Jul 03, 2020 10:18 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 29, 2016 11:53 pm

#762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் 
தொல்படைக்கல்லால் அரிது

விதவிதமாக உரையாசிரியர்கள் விளக்கினாலும், அடிப்படைக்கருத்து ஒன்று தான்.

கடினமான நிலையிலும், ஆள் வலிமை குன்றினாலும், உறுதி குறையாமல் போராடும் படையே சிறந்தது Smile

மற்றபடி, "கடினமான நிலை" எப்படி வந்தது - மன்னனின் குழப்பமா, மக்களின் குழப்பமா, எதிரிகளின் திறமையா என்பதெல்லாம் உரை எழுதுவோரின் கற்பனை. 

அதே போல, "தொல்படை" என்பதை "மண்ணின் மைந்தர்" என்று போலும் விளக்கும் முயற்சியும் காணப்படுகிறது. தொன்மைச்சிறப்பு என்பது சரி தான் - ஆனால் குடிச்சிறப்பு என்றெல்லாம் எடுத்துக்கொள்ள இயலாது.

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண்
அழிவு வரும் இடத்திலும் துன்பத்துக்கு அஞ்சாத உறுதி

தொலைவிடத்துத் தொல்படைக்கல்லால் அரிது
தொய்வான நிலையிலும் (எண்ணிக்கை / வலிமை தொலைந்த நிலை) தொன்மைச்சிறப்பு உள்ள படைக்கு மட்டுமே உண்டு. அல்லாதவர்க்கு அரிது.

அது என்னமோ தெரியவில்லை, இங்கே என்ன பொருளில் படிக்கிறேனோ அதோடு சேர்ந்தவை செய்திகளில் முதன்மை பெறுவது வழக்கமாகி விட்டது Embarassed
(இன்றைய தலைப்புச்செய்தி இந்தியப்படையின் "அறுவை மருத்துவம் போன்ற தாக்குதல்" குறித்தது)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 30, 2016 7:58 pm

#763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்


"பாம்பென்றால் படையும் அஞ்சும்" என்ற பழமொழி கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்தக்குறளிலோ பாம்பு = படை Smile

அதாவது, மாட்சிமை வாய்ந்த படைக்குப் பாம்பை உவமை ஆக்குகிறார்.

மாறாக, "கோழைப்படையில் கோடி வீரர் ஒலித்தாலும் பயனில்லை" என்று எலியை உவமையாகச் சொல்லுகிறார்.

உவரி = கடல் (உப்பு நீர் என்று நேரடிப்பொருள், இங்கே நீருக்கு அல்ல முதன்மை, அலை ஓசைக்குத்தான்)

எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம்
எலி (போன்ற) பகைவர் கடல் (அலை ஓசை) போல ஒலி எழுப்பி என்ன (பயன்)?

நாகம் உயிர்ப்பக் கெடும்
(அந்த இரைச்சல்) நாகம் (போன்ற வீரம் மிக்க படை) விடும் மூச்சொலியிலேயே அடங்கிப்போகும்

இங்கே கடல் என்பது அளவில் மிகுதி என்றும் புரியத்தக்கது.
(எலிகள் பெருங்கூட்டமாக இருந்தாலும் நாகம் சீறினால் சிதறி ஓடுவன என்று பொருள்)

ஆகவே, எங்கள் படை எண்ணிக்கையில் மிகுதி, நிறைய ஒலி எழுப்ப வல்லவர்கள் என்றெல்லாம் சொல்லிப்பயனில்லை.

சீற்றம் மிகுந்த, வீரம் உள்ள படை அளவில் சிறிதென்றாலும் கோழைக்கூட்டத்தை விரட்டி அடிக்கும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 32 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum