Rajini and Kamal appreciation thread.
+22
Drunkenmunk
vicks
crimson king
dilbert
HonestRaj
Michael AF
kid_glove
equanimus
Kaaling
Cinemarasigan
Hamid
V_S
sagi
Wizzy
Sakalakala Vallavar
CF
Bala (Karthik)
jaiganesh
plum
app_engine
2040
groucho070
26 posters
Page 15 of 15
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
Re: Rajini and Kamal appreciation thread.
VM v/s kabAli
கடந்த பல ஆண்டுகளாகவே வைரமுத்தின் பங்களிப்பு இல்லாமல் ரஜினி பட பாடல்கள் எதுவும் வெளியானதில்லை.. அதாவது இளையராஜா காலத்திற்கு பின்பு..
கபாலிதான் நீண்ட காலத்திற்குப் பிறகு வைரமுத்து பங்களிப்பு இல்லாமல் வந்திருக்கிற முதல் படம்..
இந்தப் புறக்கணிப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறவர் இல்லை வைரமுத்து என்பதை வைரமுத்தை அறிந்தவர்கள் அறிவார்கள்..
இந்த தவிர்ப்பு ஒரு எரிச்சலாக கோபமாக வன்மமாக வைரமுத்துவின் மனதில் இருந்து கொண்டேதான் இருந்திருக்கும்.. வைரமுத்து கபாலி தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியவராகக் கூட இருந்திருப்பார்.
அந்த நமச்சல்தான் படம் வெளியான மூன்றாம் நாளில் எந்த இங்கிதமும் இல்லாமல் இப்படியொரு வாக்கியத்தை அவரை பேச வைத்திருக்கிறது.
இரண்டாவதாக வைரமுத்து ஜாதிய சிந்தனை அற்றவர் என்றும் சொல்வதற்கில்லை. இளையராஜா வைரமுத்து பிரிவிலேயே ஜாதி முக்கிய காரணியாக இருந்திருக்கிறது..
வைரமுத்துவின் மூத்த மகன் ஜாதி விட்டு திருமணம் செய்த போது கூட அதை விரும்பாதவராக அவர் இருந்தார் என்கிற விதமான செய்திகள் உலாவத்தான் செய்தன. அவருடைய தனிப்பட்ட உரையாடல்கள் ஜாதிய வன்மம் கொண்டதாக இருப்பதாக பல தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன..
ஆக வைரமுத்துவின் இந்த கபாலி குறித்த ஸ்டேட்மென்ட் உள்நோக்கம் கொண்டது. அரசியல் கொண்டது. ஜாதிய வன்மம் கொண்டதே!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Rajini and Kamal appreciation thread.
VM jAmeen manu
This is stuff!
This is stuff!
கபாலி படம் தோல்வி என்று வைரமுத்து பேசியதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் விமர்சனம் கிளம்ப தான் பேசியதில் ‘வெற்றி’ என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது என்று வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Rajini and Kamal appreciation thread.
Gautami on Kamal's chevalier award
இந்த விருது அவருக்கு மட்டுமே சொந்தமானது. ஏதோ ஒரு துறையில் சாதனை புரிந்தமைக்காக செவாலியே விருதை உடனே தூக்கி கொடுத்துவிட மாட்டார்கள். நீண்டகாலமாக ஒரு மனிதர் முழுமுழுக்க தன் வாழ்நாளில் ஒவ்வொரு செயல்பாட்டிலும் கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்தவர்களை ஆராய்ந்து, கண்டுபிடிக்கிறார்கள். பிரான்சில் இருக்கும் விருது தேர்வுக் குழு, பலருடன் கலந்து ஆலோசித்து விருது பெறுபவரின் முழுத்தகுதி, திறமை அவர்கள் கலைத்துறையில் செய்த சாதனைகள் என்று பட்டியலிட்டு பார்த்து வியந்த பிறகே செவாலியே விருதை தருகிறார்கள்.
கமல்சார் கலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை இந்திய சினிமா பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பது கண்கூடான உண்மை. சினிமா துறையில் கமல்சார் நடிப்பில் மட்டுமல்ல, கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், தயாரிப்பு என்று அவர் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை. சினிமா தொழிலில் முழுக்க முழுக்க ஈடுபாட்டோடு இருக்கிறவர் அதனால்தான் செவாலியே விருது அவரைத்தேடி வந்து இருக்கிறது. கமல்சார் நடிப்பு திறமைப்பற்றி கமென்ட் செய்யும் அளவுக்கு நான் வளரவில்லை. அதுபற்றி கேட்டால் என்னால் பதில் சொல்லவே முடியாது.
எல்லோரும் சிவாஜிசார் வாங்கிய சிறந்த விருது செவாலியே என்று சொல்கிறர்கள். அது தவறு. உண்மையில் சிவாஜி சாருக்கு செவாலியே விருத தரப்பட்டதால், அந்த விருது தன் தகுதியை அடுத்தகட்டத்துக்கு உயர்த்திக் கொண்டது என்று சொல்வதுதான் சரியான, அப்பட்டமான உண்மை'
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Rajini and Kamal appreciation thread.
Even though this is not related to films, I cannot hide the appreciation for what Kamal did for TN when our state and society needs such a leading example. He is really on fire and the way he went on to support the silent young protesters in Marina, to expose the cunning moves/motives by the government and politicians to disrupt the calm protest, is a slap to all the thodai nadungi's out there who still hide behind government/politicians instead of coming out with the truth. What a shame! I really liked his answer when he said to one of the ruling party's question about leaving the country and choosing US (at the time of Viswaroopam's release). He clearly vented his frustration by saying, "I have been frustrated enough by your government". The only person in TN and only actor who had guts to say what he feels honestly. This should give moral boost all the youngsters who were protesting calmly for the past 6 days. Could not believe what I saw on several videos that the police (arrow behind the bow) were the real culprits to disrupt the peaceful proceedings. May be a clever (but dumb) strategy by the government (state/central) as they cannot accept any protest to be silently over.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Rajini and Kamal appreciation thread.
V_S wrote:Even though this is not related to films, I cannot hide the appreciation for what Kamal did for TN when our state and society needs such a leading example.
This is especially noteworthy at this time when there's no "film related" personality in the political power!
(For all the time KH had been active before, it was either mukA or MGR or JJ who were in power, with possible "soft corner" to TF, because of their personal connections. For the first time in decades, those in power have no such sentiments and are "total" politicians, in every cut-throat sense).
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Rajini and Kamal appreciation thread.
for kneecapping his career, entha puratchi/raising voice/questioning the system'lam eppo namakku thevaiya.
nice knowing you
nice knowing you
Wizzy- Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24
Re: Rajini and Kamal appreciation thread.
https://www.twitlonger.com/show/n_1squ6cf
app_engine in twitlonger wrote:கமல் + கிரேசி மோகன்
இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்த படங்கள் ஒரு டஜன் என்று நினைக்கிறேன் (வேறு இருந்தால் தெரிவியுங்கள்).
1. அபூர்வ சகோதரர்கள்
2. மைக்கேல் மதனகாமராஜன்
3. இந்திரன் சந்திரன் (தெலுங்கில் இருந்து டப்பிங் என்று நினைக்கிறேன்)
4. மகளிர் மட்டும் (கடைசியில் கமல் வருவார்)
5. சதிலீலாவதி
6. அவ்வை சண்முகி
7. காதலா காதலா
8. தெனாலி
9. பஞ்சதந்திரம்
10. பம்மல் கே சம்பந்தம்
12. வசூல்ராஜா எம்பிபிஎஸ்
இவை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன் என்ற அடிப்படையில் இப்போது சில கருத்துக்கள் :-)
(மற்றவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை, இது ஒரு கருத்து - அவ்வளவே).
- வசனங்களில் வரும் வார்த்தை விளையாட்டுக்கள் சில நேரங்களில் சுவையானவை தான், என்றாலும் பெரும்பாலும் குபீர் என்று சிரிப்பை வரவழைக்கும் தன்மை கொண்டவை என்று சொல்ல முடியவில்லை.
- பெரும்பாலும் "சூழ்நிலை" சார்ந்த நகைச்சுவை + அதன் விளைவாக வரும் சிரிப்புக்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது, என்றாலும் அதற்கும் முதல் பரிசு கொடுக்க முடியாது.
- முதல் பரிசு தரக்கத்தக்க அம்சம் - அதாவது, கண்டிப்பாகச் சிரிப்பு மற்றும் சுவை கூட்டியது - கமல் ஏதாவது "வேறு பட்ட மொழி" பேசிய பாத்திரங்களில் தான் என்பது இப்போது என் முடிவு.
- அதாவது, குறைந்தது மெட்ராஸ் பாஷையாவது பேசியிருக்க வேண்டும். (கூடாமல் பாலக்காடு, கொங்கு, இலங்கை, அக்ரஹாரம் என்று, பொதுவாகத் திரை மாந்தர்கள் பேசாத வேறு மொழி பேசித்தான், மேற்கண்ட படங்களில் பெரும்பாலும் கமல் மெருகேற்றிச் சிரிக்க வைத்திருக்கிறார்.)
- அபூர்வ சகோதரர்களில் சாதாரணத்தமிழ் பேசும் அப்பு சீரியஸ் பாத்திரம். சென்னைக்கொச்சை மொழி பேசும் ராஜா தான் சிரிக்க வைத்தார். மைக்கேல் / மதன் ரெண்டு பேரும் சீரியஸ். சென்னை மொழி ராஜன் மற்றும் பாலக்காட்டு மொழி காமன் தான் நகைச்சுவை மன்னர்கள். இவை இரண்டும் சாம்பிளுக்கு. மிச்சம் உள்ளதெல்லாம் நீங்களே ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.
- அதற்காகக் கமல் அப்படித்தான் நகைச்சுவை செய்வார் என்றில்லை. கிரேசி கூட்டணியில் அப்படிப்பட்ட வேற்று மொழி பேசியவை தான் சிறப்புப்பெற்றன என்று மட்டுமே சொல்லவேண்டியிருக்கிறது. (கிரேசி இல்லாத கவுண்டமணி கூட்டணியில் நம்மைச் சிரித்து வயிறு வலிக்கவைத்த சிங்காரவேலன் சாதாரண மொழி தான் பேசினார் என்பது சின்ன உதாரணம்).
- இரட்டை அர்த்த ஆபாசம் இல்லை என்றெல்லாம் தேவையில்லாமல் புகழத்தேவையில்லை. உண்மையில் பெரும்பாலான கமல் காமெடிகளே அடல்ட் வகை தான். அதிலே உள்ள மெயின் தீமே "இவன் காதலி அவனோடு" போன்ற வகையறா என்பதால் இதற்கு மேல் இன்னும் ஆபாசம் தேவையில்லை என்றிருந்திருக்கலாம்
- இப்படியெல்லாம் இருந்தாலும், இந்தக்கூட்டணி நம்மைப் பேரளவில் சிரிக்க வைத்தது என்பதில் ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.
- கிரேசி அருகில் இருந்தால் கமலுக்கே குஷி கூடுதலாக இருந்து சிறப்பாகச் செய்ய உந்துதல் கொடுத்திருக்கலாம். இதில் யார் பங்கு எவ்வளவு என்றெல்லாம் கணக்குப்போடாமல் இரண்டு பேருக்கும் வாழ்த்துச்சொல்லுவோம்!
- இந்தக்கூட்டணியில் எனக்கு இன்னும் கூடுதல் பிடித்தது சிங்கீதமும் உடன் இருந்தவை என்றும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். :-)
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
Similar topics
» BGM Sharing Thread - ILAYARAAJA BGM THREAD
» Anything about IR found on the net - Vol 2
» உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
» Best Kamal Haasan Film soundtrack(s)
» sabAsh nAidu - Trilingual Kamal Project
» Anything about IR found on the net - Vol 2
» உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
» Best Kamal Haasan Film soundtrack(s)
» sabAsh nAidu - Trilingual Kamal Project
Page 15 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum