Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Oct 16, 2017 7:13 pm

#1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு


பட்டினியால் ஒரு சிறுமி இறந்த செய்தியை இன்று காண நேர்ந்தது Sad

உணவுத்துறையில் நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாகப் பலரிடமும் (குறிப்பாக வெளிநாட்டவரிடம்) நாம் பீற்றிக்கொண்டிருக்கையில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது ஆழ்ந்த வருத்தம் தரும் ஒன்று.

திருக்குறளுக்கு வந்தால் இதோ அப்படிப்பட்ட துயரநிலையில் உள்ள ஒருவரது மனத்துடிப்பைப் பதிவு செய்கிறார் Sad

"நேற்று வந்து வாட்டிய வறுமை (குறிப்பாக - பட்டினிக்கொடுமை) இன்றும் வந்து கொல்லுமோ?" என்று அஞ்சி நடுங்கும் ஒருவரது மனக்குமுறல் தான் இந்தக்குறள்:

நெருநலும் கொன்றது போலும் நிரப்பு
வறுமை நேற்று வந்து என்னைக்கொன்றது போன்று

இன்றும் வருவது கொல்லோ?
இன்றும் வந்து துன்புறுத்துமோ?

விடாமல் துரத்தும் கொடுமை வறுமை. அதில் சிக்கிக்கொண்டவர் உண்மையில் சேற்றுக்குழியில் சிக்கியவர் போன்ற நிலையில் தம்மைக்காணுவர். உழைப்பதற்கு ஆயத்தமாய் இருந்தாலும் சூழல் அவர்களை வறுமைச்சிறையில் அடைத்து வைத்திருக்கும்.

தப்பிக்க முடியாத நிலையில், மனஉளைச்சல் ஆட்கொள்வது தவிர்க்க முடியாதது.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Oct 16, 2017 7:46 pm

#1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது


"நெருப்பினுள் துஞ்சல்" - உயர்வு நவிற்சி அணி Smile
யாராலும் இயலாத ஒன்று! (கருகிச்செத்துப்போவோம், ஐயமிருந்தால் கலிபோர்னியாவில் எரிந்து கொண்டிருக்கும் பகுதிகள் குறித்தும், அங்கே உயிர் இழந்தோர் குறித்தும் வரும் அச்சுறுத்தும் செய்திகள் காண்க!).

என்றாலும், இன்னொரு விதத்தில் பார்த்தால், வறுமையினால் வரும் உறக்கம் இல்லாத கொடிய நிலை நெருப்பில் துஞ்சுவதிலும் கெட்டது என்பது உண்மையே.

நெருப்பில் சில நொடிகளில் கருகிச்செத்து, உறங்கிப்போவோம். தொடரும் துன்பம் இல்லை. வறுமையோ தொடர்ந்து பின் வரும், உறங்க இயலாத கொடிய துன்பத்தைத்தரும்!

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்
ஒருவரால் நெருப்பினுள் கூட உறங்கி விட முடியும்! ஆனால்,

நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது
வறுமையில் உழலும் போது எவ்விதத்திலும் கண் அயர்ந்து (நிம்மதியாக) உறங்க முடியாது

நெருப்பு - நிரப்பு என்று ஓசை நயம் அணி சேர்க்கிறது.

பொருள் மிக நடைமுறையானது. வறுமை குறித்து யாராவது பெருங்கடன் தொல்லையில் உள்ளவர்களிடம் பேசிப்பாருங்கள். நாள் தோறும் மனதைத்துன்புறுத்தும், உறக்கம் வாராதிருக்கும் கொடுமை பற்றிப்புலம்புவார்கள்.

"குடும்பமாகத் தற்கொலை" என்றெல்லாம் செய்திகளில் காண்போர் : இவ்விதமான ஆழ்ந்த மனஉளைச்சல், உறக்கமின்மை போன்ற நிலைமைகளின் உச்சத்தில் எடுப்பதே அத்தகைய கொடும் முடிவுகள் Sad

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Oct 16, 2017 11:48 pm

#1050
துப்புரவில்லார் துவரத்துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று


துப்புரவு என்பதற்கு இரு விதமான பொருள்கள் உரையாசிரியர்களால் சொல்லப்படுகின்றன. அதன் அடிப்படையில் பொழிப்புரை மற்றும் விளக்கங்கள் சிறிய அளவில் வேறுபடுவதைக் காணலாம்.

ஒன்று - நுகர்வதற்காக பொருட்கள் (உணவுக்குத் துப்பு என்ற சொல் "துப்பாய துப்பாக்கி" என்று வருகிறது தானே?)

மற்றது - ஒழுங்கு / திறமை (அது இல்லாததால் வந்த வறுமை)

எப்படி எடுத்துக்கொண்டாலும், வள்ளுவர் இந்த நிலைக்குச் சொல்லும் தீர்வும் / திட்டும் கொஞ்சம் கொடுமை தான். அதாவது, "துறவறம் பூண்டு போ" என்கிறார். இல்லாவிடில், உன்னால் மற்றவருக்குச்சுமை என்றும் சொல்லுகிறார் Sad

ஏற்கனவே வறுமைக்கொடுமையில் உள்ளவனைத் திட்டுவதற்கு மிகவும் கல்நெஞ்சனாய் இருக்க வேண்டும்.

துப்புரவில்லார்
உணவிற்கே வழியில்லாமல் வறுமை நிலையை அடைந்தவர்
(அல்லது, ஒழுங்கும் திறனும் இல்லாமல் ஏழையாகிப் போனவர்கள்)

துவரத்துறவாமை
முற்றும் துறந்து வாழாமல் இருப்பது

உப்பிற்கும் காடிக்கும் கூற்று
உப்புக்கும், கஞ்சிக்கும் (உணவுக்கு) அழிவு தான்
(இப்படிப்பட்ட பிச்சைக்காரர் மற்றவரது சாப்பாட்டுக்கு எமனாக வருகிறார்கள்)

"கஞ்சிக்குத்தான் வழி இல்லையே, மற்றவருக்குச் சுமையாக - அவர்களது உணவுக்கு எமனாக - ஏன் வாழுகிறீர்கள்? எல்லாம் துறந்து காட்டுக்குப் போக வேண்டியது தானே? இல்லாவிடில் செத்துப்போக வேண்டியது தானே?" என்று திட்டுகிறார்.

ரொம்பக்கொடுமை Sad

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 17, 2017 4:30 pm

#1051
இரக்க இரத்தக்கார்க்காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று

(பொருட்பால், குடியியல், இரவு அதிகாரம்)

முன்பு ஈகை என்ற அதிகாரம் படித்திருக்கிறோம். இரவு / இரப்பு அதன் மறுபக்கம் Smile

வாங்குவதைப்பார்க்கிலும் கொடுப்பதில் மகிழ்ச்சி கூடுதல் என்றாலும் வாங்குவார் இல்லாவிடில் கொடுப்பாரும் இல்லை தானே?

ஒரு கணக்கில் சொல்லப்போனால் எல்லாமே நமக்குக்கொடுக்கப்பட்டது தான். (பிறக்கும்போது உடைபோலும் இல்லாமல் தானே வந்தோம் உலகுக்கு?)

"நாம் எல்லோரும் அன்றாடம் பெற்றுக்கொண்டிருக்கிறோம்" என்ற சரியான தாழ்மை எண்ணம் மனதில் வந்தால் "இரவு" என்பது இளக்காரமாக அல்லது இழிவாகத் தோன்றாது. அந்த மனநிலையில் இந்த அதிகாரத்தைப் படித்துப்பார்ப்போம். (அல்லாமல் "இலவசம் என்பது சோம்பேறிகளுக்கானது" என்ற மேட்டிமை மனநிலையில் அல்ல).

இரத்தக்கார்க்காணின் இரக்க
இரக்கத் தக்கவர்களைக் கண்டால் அவர்களிடம் இரக்கவும்
(கொடுக்கும் தகுதி / வாய்ப்பு உள்ளவர்களிடம் கேளுங்கள்)

கரப்பின் அவர்பழி, தம்பழி அன்று
கொடுக்க மறுத்தால், அவர்களது குற்றமேயொழிய நமது பழியன்று
(கரத்தல் = கொடாதிருத்தல், மறைத்து வைத்தல்)

"கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள்" என்பது பலரும் கேட்டிருக்கும் பழமொழி. (மலைச்சொற்பொழிவில் இயேசு சொன்னது).

கொடுக்கும் நிலையில் இருப்போரிடம் மற்றவர் கேட்பதும் அவர்கள் தந்து இன்புறுவதும் இயற்கை வழக்கம். வாழ்வில் எல்லோருக்கும் இருநிலைகளும் வருவது இயல்பு.

வேண்டும்போது கேட்போம், முடியும்போது கொடுப்போம். இவ்வாறாகப் பழியில்லா வாழ்வு வாழ முயல்வோம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 17, 2017 5:04 pm

#1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்


முன் குறளில் கண்ட அதே மனநிலையில் படித்தால் இந்தச்செய்யுள் நிறைவாகவே இருக்கும் Smile

அதாவது, "நாமெல்லாரும் நிறைய அளிப்புகள் பெற்றவர்களே" என்ற சரியான தாழ்மை மனநிலை.

எடுத்துக்காட்டாக, மக்களுக்கு நிறைய இலவசங்கள் தருவதாகப் பீற்றிக்கொள்ளும் அரசியல்வாதியும் வாக்குக்கேட்டுப் பிச்சை எடுப்பவர் தான் என்பதை மனதில் கொண்டால் "இரவு" என்பதை எவ்வித முகச்சுளிவும் இன்றிப் புரிந்து கொள்ளமுடியும் Wink

இரந்தவை துன்பம் உறாஅ வரின்
இரந்து கேட்பது துன்புறாமல் வருமானால்
(கேட்பவர் கொடுப்பவர் இருவருக்கும் துன்பமில்லாத சூழல்)

இன்பம் ஒருவற்கு இரத்தல்
இரத்தல் ஒருவருக்கு இன்பம் தருவது தான்

"விலையில்லா உணவு என்பதே கிடையாது" என்பது அமெரிக்கர்கள் அடிக்கடிப்பயன்படுத்தும் வழக்குச்சொல். பொருளியல் எண்ணம் மேலோங்கி நிற்கும் இத்தகைய உலகில் "எல்லாப்பொருளுக்குமே விலை கொடுத்தாக வேண்டும்" என்ற கருத்து இருப்பதில் வியப்பில்லை.

ஆனால், பொருளியல் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு ஆராய்பவன் "எல்லாமே இலவசம் தான்" என்ற முடிவுக்கும் வரலாம் Smile நான் முன்னமேயே சொன்னது போல, உயிர் முதல் எல்லாமே நமக்குக் "கொடுக்கப்பட்டது" தான்.

எப்படி எடுத்துக்கொண்டாலும், துன்பமின்றிக் கொடுப்பதும் பெறுவதும் இன்பம் தரும் செயல்களே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

"பெறுவது என்றாலே இழிவு" என்ற தவறான எண்ணம் நமக்குள் இருந்தால் அப்போது தான் மனதில் வருத்தம், குழப்பம் எல்லாம் வரும் என்பது தெளிவு Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 17, 2017 6:08 pm

#1053
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து


ஏர் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளும் இருக்கிறது என்று இன்று கற்றுக்கொண்டேன் Smile
(ஏஎர் என்று ஓசை நயத்துக்கு அளபெடை வேறு).

"இரப்பதில் இன்பம் இருக்கிறது" இன்று கடந்த குறளில் சொன்னவர் இங்கே "இரப்பதிலும் ஒரு அழகு இருக்கிறது" என்று சிறப்பிக்கிறார் Wink

இப்படியே போய்ப்போய் பின்வரும் குறள்களில் "இரந்து வாழ்வதே சிறந்து வாழ்வது" என்று வருமோ என்று தோன்றுகிறது Laughing

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
ஒளிவுமறைவு இல்லாத நெஞ்சம் உள்ளவரும், தனது கடமையை அறிந்தவருமானவர் முன்னால் நின்று

இரப்புமோர் ஏஎர் உடைத்து
இரப்பதிலும் ஒரு அழகு இருக்கிறது
(அப்படிப்பட்டவரிடம் வேண்டுகோள் விடுப்பது அழகான செயல்)

"பாத்திரம் அறிந்து பிச்சை போடு" என்று ஒரு பழமொழி கேட்டிருக்கிறோம். இங்கு அதன் மறுபக்கம்.

"தருபவரின் தன்மை அறிந்து பிச்சை கேள்" என்று இதை விளக்கலாம். தன்னிடமுள்ள நன்மைகளை மறைத்து வைக்காமல் பங்கிடும் நல்ல உள்ளத்தை அறிந்து அப்படிப்பட்டவர் முன் கையேந்துவோம்.

அது நமக்கு அழகு தருமேயன்றி இழிவல்ல!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 17, 2017 9:03 pm

#1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு


சென்ற குறள் படிக்கையில் நான் முன்னறிவித்த "இரந்து வாழ்தலே சிறந்த வாழ்வு" என்ற கருத்து, இந்தக்குறளில் கிட்டத்தட்ட வந்தே விட்டது Smile

அதாவது, சில சூழல்களில் "இரத்தல் = ஈதல்" என்று இப்போது சொல்லிவிட்டார் வள்ளுவர்!

ஒளித்து வைப்பது, உண்மையை மறைப்பது போன்ற ஈன எண்ணங்கள் இல்லாத பெரியோரிடம் இரப்பது மிக உயர்ந்த செயல் என்கிறார். எவ்வளவு உயர்ந்தது? ஈதலுக்குச்சமம் என்றே சொல்லி விட்டார்!

கொஞ்சம் உயர்வு நவிற்சி என்றாலும், மிக அழகான செய்யுள்!

கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு
ஒளிவு மறைவு செய்வதைக் கனவிலும் நினையாதோரிடம் சென்று

இரத்தலும் ஈதலே போலும்
இரப்பது என்பது ஈதல் போன்ற சிறப்புடையது

கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வாங்குவதில் கிடைப்பதை விடக்கூடுதல் என்று ஈகைக்குணம் உள்ளோர் உணர்ந்து அறிந்திருக்கிறார்கள். அதனால் தான் தன்னிடம் உள்ளதொன்றையும் மறைத்து வைக்காமல் மற்றவருக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்றால், அவர்களிடம் வந்து இரந்து பெற்றுக்கொள்ளுவோர் இருக்க வேண்டும் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் செய்யும் "இரவு" என்னும் பணி , சான்றோருக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதால் உயர்ந்த ஒன்று தானே? அதனால் ஈதலைப் போன்றே உயர்ந்தது என்று சொல்லுவது மிகை அல்லவே?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 18, 2017 4:37 pm

#1055
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள்வது


இரவு என்ற பொருளில் வந்தாலும் இந்தக்குறள் புகழ்வது ஈகை எனும் பண்பை. அதிலும், ஒளித்து வைக்காமல் கொடுக்கும் நல்லோரைப் போற்றும் வேலை இங்கு நடக்கிறது.

கரப்பிலார் வையகத்து உண்மையால்
மறைத்து வைக்காமல் கொடுப்பவர் வையகத்தில் உள்ளதால் தான்

கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது
(அவர்களுக்கு) முன்னால் நின்று இரப்பவர் தமது வேண்டுகோளை மேற்கொள்கிறார்கள்

அப்படியாகக் கள்ளமின்றி ஈவோர் இங்கே பாராட்டப்படுகிறார்கள்.

இப்படி நேரான பொருளைப்புரிந்து கொள்வதோடு, கொஞ்சம் தலைகீழான வழியிலும் எண்ணிப்பார்ப்போம். அதாவது, "மறைத்து வைக்காமல் கொடுப்பவரே உலகில் இல்லை" என்றால் என்ன ஆகும்? "கண்ணின்று இரப்பவர்" இருக்க மாட்டார்கள், களவாடுபவர்கள் மட்டுமே இருப்பார்கள் Smile

"இல்லையென்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்றால்" (மறைத்து வைத்தால்) என்ன நடக்கும்?

புரட்சி, கலவரம், களவு, கொள்ளை, கலகம் - இப்படிப்பட்ட விளைவுகள் இருக்குமேயொழிய அங்கே "கண்ணின்று இரப்பவர்" இருக்க மாட்டார்கள்.

தற்போது அரசுகள் பெரிய அளவில் "மறைத்து வைக்கும்" வேலையைச் செய்ய முயல்வது உலகெங்கும் நடந்து வருகிறது. அதாவது, ஏழைகளுக்குக்கொடுக்காமல் முதலாளிகளுக்கு மட்டும் சலுகை வழங்கும் தன்மை - உலகின் பல அரசுகளும் மேற்கொள்வதாகத் தென்படுகிறது. (பணக்காரர் - ஏழை இடைவெளி பேரளவில் கூடி வருவதாகச் சொல்லப்படுகிறது).

இவையெல்லாம் நல்லதுக்கில்லை என்பது தெளிவு!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 18, 2017 9:53 pm

#1056
கரப்பிடும்பையில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்


கரப்பு (பதுக்கி வைத்தல் / ஒளித்து மறைத்தல்) மற்றும் நிரப்பு (வறுமை / நல்குரவு / இல்லாமை) என்ற இரு சொற்கள் கொண்டு நெய்த அழகிய குறள்!

அருமையான, உவப்பான பொருளும் இருக்கிறது - ஆழ்ந்த பொதுவுடைமைக் கருத்து இங்கே!

கரப்பிடும்பையில்லாரைக் காணின்
ஒளித்து / மறைத்து வைக்கும் துன்ப நிலை இல்லாதவர்களைக்கண்டால்

நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்
வறுமைத்துன்பம் எல்லாம் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும்
(இங்கே சொல்லப்படும் வறுமைத்துன்பம் "இரவு" செய்பவருக்கு இருந்தது என்று நினைவில் கொள்வோம்.)

தமக்குள்ள பொருளை ஒளித்து வைக்காமல் கொடுக்கும் பண்புள்ளவர் இருக்கையில் அங்கே வறியோருக்கு ஒரு துன்பமும் இருக்காது என்பது எளிதாகப் புரிந்து கொள்ளத்தக்கதே.

இப்படிப்பட்ட அருளாளர் நிறைந்திருக்கும் ஊரில் வறுமைத்துன்பம் இல்லாமல் போகும் அல்லவா? கிடைப்பதை எல்லாம் ஒளிவுமறைவின்றி மற்றவருக்குப் பகிர்ந்து தரும் வள்ளல்கள் உள்ள நாட்டில் வறுமைக்கு என்ன வேலை?

பொதுவுடைமை என்பது இது தானே?

உள்ளதை எல்லோருக்கும் பங்கிடுவோம். "எனக்கு மட்டும்" என்று எதையும் ஒளித்து மறைத்து வைக்க மாட்டோம் Smile

இப்படிப்பட்ட கொள்கைகள், உயர்ந்த நிலை குறித்த செய்யுள்கள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்தாலும், இன்னும் நம் நடுவே "கரப்பு" மற்றும் "நிரப்பு" நிறைய இருப்பது ஆராயத்தக்கது அல்லவா? குறிப்பாக, நம் நாளில் தன்னலம் என்றுமில்லா அளவில் இருப்பதாகத் தோன்றவில்லையா?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Oct 19, 2017 8:06 pm

#1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து


இரப்பாரை எள்ளுவது என்பது சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் ஒன்று. சொல்லப்போனால், "பிச்சக்காரப்பய", "கடங்காரன்" என்பனவெல்லாம் வசைச்சொற்களாக மற்றவர்களையும் ஏசுவதற்குப் பயன்படுவது எப்போதும் காணும் ஒன்று. அந்த அளவுக்கு இரப்போர் மீதான இகழ்ச்சி பொதுவில் உள்ள ஒன்று.

இந்த அடிப்படையில் தான் அரசாங்கம் ஏழைகளுக்கென்று சலுகைகள் கொடுக்கும்போது பொருமுவது (இலவசம் கொடுத்தே சோம்பேறியாக்கீட்டாங்க, அரசுக்கு இதனால் தான் கடன் தொல்லை).

அதே நேரத்தில், நிறுவனங்களுக்கும் பெரும்பணக்காரர்களுக்கும் அதை விடக்கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படும்போது புகழ்வதும் (வளர்ச்சிக்காக வரிச்சலுகை, வேலைவாய்ப்புகள் பெருகும், ஆகா ஓகோ, இன்ன பிற) பொதுவெளியில் நிகழ்கிறது.

அற்பமான சில சலுகைகளை வாங்கிக்கொண்டு ஏழை மீண்டும் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறான் என்பதும், சலுகை வாங்கிய பணக்காரனோ மீண்டும் வங்கிகளை வஞ்சித்து வாராக்கடன் / தள்ளுபடி என்றெல்லாம் ஏய்த்து விட்டுப் பின் நிறுவனங்களைப்பூட்டுவதும் அடிக்கடி காண்பதே!

இரப்போரை இகழ்ந்து எள்ளாதிருக்க ஊக்குவிக்கும் செய்யுள் இது!

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின்
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் கொடுக்கும் பண்புள்ளோரைக்கண்டால்

மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து
(இரப்பவரின்) உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள் இன்பம் அடையும்


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Oct 20, 2017 6:39 pm

#1058
இரப்பாரை இல்லாயின் ஈரங்கண்மாஞாலம்
மரப்பாவை சென்றுவந்தற்று

இரப்பவர் (பெறுபவர்கள்) இல்லாத உலகு - அப்படி ஒன்று இருந்தால் அது வெறும் மரப்பாவைகளின் ஆட்டக்களம் போல இருக்கும் என்று சொல்லும் குறள்.

அதாவது, இரத்தலும் ஈதலும் அழகான, உயிரோட்டமுள்ள செயல்கள். அவை நடக்காமல் பிறகென்ன வாழ்க்கை என்று நடைமுறையைச்சிறப்பிக்கும் குறள்.

"வறியவர் இல்லாவிட்டால் உலகில் சுவையில்லை" என்று சொல்வதாக எடுத்துக்கொண்டால் எரிச்சல் வரும். (வேண்டுமென்றால் அப்படியும் குறை சொல்லலாம், ஆனால் அப்படி அவர் சொல்ல வருவதாகத் தெரியவில்லை. மு.க. உரையோ வேறு திசையில் சென்று "இரப்பவர் நெருங்கக்கூடாது என்போர் மரப்பாவை" என்கிறது. அப்படியும் பொருள் கொள்ளலாம் போலும்).

தங்கள் வறுமையின் விளைவாக மற்றவர்களிடம் சென்று இரப்பவர் இருப்பதைக் கண்டிப்பாக யாரும் விரும்ப மாட்டோம். ஆனால், பொதுவாகப்பார்த்தால் கேட்பவரும் கொடுப்பவரும் இல்லாத வாழ்க்கை சுவையற்றது என்பதில் ஐயமில்லை.

நாமெல்லாரும் பெற்றிருக்கிறோம், அன்றாடம் பெற்றுக்கொண்டும் இருக்கிறோம் - அதனால் பெறுதல் இழிவன்று. அவ்விதத்தில், இரப்பதும் தவறன்று.

இரப்பாரை இல்லாயின்
இரப்பவர் இல்லாமல் போனால்
(அல்லது, இரப்பவர்க்கு இல்லை என்று சொல்வார்களேயானால்)

ஈரங்கண்மாஞாலம்
ஈரம் உள்ள (குளிர்ந்த) இந்த மா உலகு

மரப்பாவை சென்றுவந்தற்று
மரப்பாவைகள் இயங்கும் இடம் போலவே (உயிரற்று, சுவையற்று) இருக்கும்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Oct 20, 2017 9:14 pm

#1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை


முன்னமேயே நாம் சொன்ன ஒரு கருத்து இந்தக்குறளில் - அதாவது, வாங்க ஆளில்லையென்றால் கொடுத்துப்புகழ் பெறுவது எப்படி?
(அல்லது, கொடுப்பதால் வரும் மகிழ்ச்சி எப்படி ஐயா கிடைக்கும்?)

இரந்துகோள் மேவார் இலாஅக்கடை
இரந்து பெற்றுக்கொள்வோர் இல்லாத நிலையில்

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம்
கொடுப்பவருக்கு எவ்வாறு புகழ் உண்டாகும்?

"தோற்றம்" என்ற சொல்லை இங்கே பயன்படுத்தி இருப்பது அழகு. "மற்றவர்க்கு முன் நாம் எப்படித்தோன்றுகிறோம்" - இவ்விதமாகப் "புகழ்" என்ற சொல்லை ஒரு கணக்கில் வரையறுக்கிறார்.

"ஐயா பெரிய வள்ளல்" என்று எல்லோரும் புகழும் வண்ணம் நமக்குத் "தோற்றம்" இருக்க வேண்டும் என்றால், நம் கையில் இருந்து வாங்கிக்கொள்ள ஆட்கள் வரிசையில் நிற்க வேண்டும் அல்லவா? நிறையக்கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்பினாலும் அதற்கான தேவை இல்லாத சூழலில் அது நடக்கப்போவதில்லை.

இல்லாமை கூடுதல் உள்ள பகுதிகளில் பொதுவாக இப்படிப்பட்ட நிலை வர வாய்ப்பில்லை. "இலவசமாகக் கிடைத்தால் இவன் நஞ்சையும் குடிப்பான்" என்ற நகைச்சுவை நினைவுக்கு வரலாம்.

ஆனால், எல்லோருக்கும் ஓரளவு தன்னிறைவு கிடைத்து விட்ட இடங்களில் கொடுப்பதை எல்லாம் வாங்கிக்கொள்ளக் கூட்டம் இருக்காது.

அங்கே "வள்ளல்" பட்டம் பெற வழியும் இல்லை. Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Oct 23, 2017 10:07 pm

#1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி


வறுமையில் தவிப்பதால் இன்னொருவரிடம் சென்று இரப்பவர், "இல்லை" என்ற விடை கிடைத்தால் சினம் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தும் குறள்.

அதாவது, நாம் யாரிடம் கேட்கிறோமோ அவரும் இல்லாமையால் துன்பப்படும் நிலையில் இருக்கலாம் அல்லவா? (அதாவது, நம்மைப்போன்றே இடும்பையில் இருக்கலாம் அல்லவா? "வேண்டுமென்றே மறைத்து வைக்கிறார்" என்றெல்லாம் குற்றம் சாட்டுவது அழகல்லவே? )

வேறு வகையில் சொன்னால், மற்றவர்கள் மீது சினம் கொள்வது இரப்பவர்க்கு அழகன்று.

இரப்பான் வெகுளாமை வேண்டும்
இரக்கும்பொழுது சினம் கொள்ளாதிருக்க வேண்டும்
(இல்லை என்று சொன்னால் பொறுத்துக்கொள்ள வேண்டும், வெகுளக்கூடாது)

நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி
வறுமை எனும் இடும்பை (யாருக்கும் வரும் என்பதற்குத்) தானே ஒரு சான்று தானே?

"மற்றவருடைய நிலையில் தன்னை வைத்துப்பார்த்தல்" என்ற நல்ல பண்பின் மறுபுறம் இது - "தன் நிலையில் மற்றவரை வைத்துப்பார்த்தல்" Smile

"நாம் இடும்பையில் உள்ளது போல அவருக்கும் என்ன இடும்பையோ, பாவம்" என்று மனதில் நினைத்துக்கொண்டு, சலிப்போ வெறுப்போ சினமோ கொள்ளாமல் நற்பண்போடு நடப்பது இரப்பவர்க்கு அழகு - என்று கற்றுக்கொடுக்கும் இந்தக்குறளை அதிகாரத்தின் இறுதியில் வைத்து அறிவு புகட்டுவது மிகப்பொருத்தம்!


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Oct 23, 2017 11:18 pm

#1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்

(பொருட்பால், குடியியல், இரவச்சம் அதிகாரம்)

இரப்பதிலும் சிறப்பு இருக்கிறது என்று ஒரு அதிகாரம் முழுக்கக்கூறினாலும், இரவாதிருப்பது என்னென்ன விதத்தில் மேம்பட்டது என்று சொல்ல இந்த அடுத்த அதிகாரம். Smile

இந்தக்குறளின் பொருள் நேரடியாகச் சென்ற அதிகாரத்துக்குத் தொடர்புடையது. முன்னர் நாம் கண்டபடி, ஒளித்து மறைக்காமல் மனமுவந்து ஈயும் பண்புடையோரிடம் இரப்பதுவே சிறப்பாகச் சொல்லப்பட்டது. அல்லாத வன்கண்ணர் / கருமி / கயவரிடம் சென்று இரப்பத்தைப்பற்றி அங்கே சிறப்பிக்கப்படவில்லை.

இந்தக்குறள் , அப்படிப்பட்ட நல்லோரிடமும் சென்று கையேந்தாமல் இருப்பது தான் உயர்ந்த பண்பு என்று சொல்கிறது.

கரவாது உவந்தீயும்
(தம்மிடம் உள்ள பொருளை) ஒளித்து மறைக்காமல் மனமுவந்து கொடுக்கின்ற

கண்ணன்னார் கண்ணும்
கண்ணைப் போன்ற(இரக்கம் மிகுந்த)வர்களிடத்திலும்

இரவாமை கோடி உறும்
இரவாமல் இருப்பது தான் கோடி மடங்கு சிறப்பானது!

மறைக்காமல் ஈவோரிடம் இரப்பதில் குழப்பமில்லை, நல்லது தான்.

என்றாலும் கையேந்தாமல் இருப்பது (வறுமையிலேயே வாழ்வது) கோடி மடங்கு உயர்ந்தது என்று சொல்லி "இன்னல் வந்தாலும் இரவாதிருத்தல் மேம்பட்ட பண்பு" என்று சொல்லி விடுகிறார்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 24, 2017 10:20 pm

#1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்


நாம் அன்றாடம் காணும் கொடுமைகளுக்கும் தீமைகளுக்கும் இந்த உலகப்படைத்த கடவுளைக் குற்றம் சாட்டுவது பலருடைய வழக்கம். குறிப்பாகப் புலவர்கள் / கவிகள் அன்றும் இன்றும் இவ்வாறாக எழுதியுள்ளனர் என்பது காணக்கிடைப்பதே.

அவ்விதமான ஒன்று வள்ளுவரிடமிருந்து இங்கே, இரவச்சம் என்ற பொருளுக்கு வேண்டி!

கந்துவெட்டிக்கொடுமையால் முழுக்குடும்பமும் ஆட்சியர் அலுவலக முன்னிலையில் தீக்குளித்ததாக ஒரு செய்தியை இன்று காண நேர்ந்தது. இப்படிப்பட்ட கொடுமைகள் கண்ணில் படுக்கையில் உணர்ச்சி மேலீட்டால் மக்கள் "கடவுளுக்குக்கண்ணில்லை" என்றெல்லாம் சில நேரம் சொல்வதைக்காணலாம்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
"இரந்து தான் உயிர் வாழ வேண்டும்" என்ற நிலை இங்கு இருந்தால்

உலகியற்றியான் பரந்து கெடுக
(அப்படிப்பட்ட இந்த) உலகை இயற்றியவன் (உருவாக்கியவன்) அலைந்து திரிந்து கெட்டழியட்டும்

"தனியொருவனுக்குணவில்லை எனில் ..." நினைவுக்கு வரலாம். மூலையில் தள்ளப்பட்டுக் கொடுமைப்படுத்தப்படும் சூழலில், வேறு வழியறியாது - கையறு நிலையில் - வரும் சினம் பொங்கும் சொற்கள் இவை.

பொதுவாக எல்லா உரையாசிரியர்களும் "உலகை இயற்றியான்" என்பதைப்படைப்பாளர் என்று சொல்கிறார்கள். வள்ளுவரும் அந்தக்கருத்திலேயே சொல்லி இருக்கலாம்.

என்றாலும், உலகு என்பதை ஆகுபெயராய் எடுத்துக்கொண்டு "மானிட சமுதாயம்" எனக்கொண்டால், சமுதாயத்தை இன்று உள்ள விதத்தில் கட்டமைத்திருக்கும் ஆட்சியாளர்களை இங்கே குறிப்பதாகவும் கொள்ளலாம்.

ஏற்றத்தாழ்வும் பட்டினிக்கொடுமையும் வரத்தக்க வண்ணம், இரந்து திரிவோரை உண்டாக்கும் இந்தச்சமுதாயத்தின் காவலர்கள் இன்றைய அவலநிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது இன்னும் கூடுதல் பொருத்தமாக இருக்கும்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 25, 2017 7:02 pm

#1063
இன்மை இடும்பை இரந்து தீர்வாமென்னும்
வன்மையின் வன்பாட்டதில்


வறுமை என்னும் துன்பம் யாருக்கும் வரலாம். அது சோம்பலால் மற்றும் சரியில்லாத திட்டமிடலால் தான் என்றில்லை. எதிர்பாராத சூழல்கள், விபத்துகள், உடல்நலக்குறைவுகள் - இப்படி எத்தனையோ கட்டுப்படுத்த முடியாத காரணங்களால் ஒரு குடி நொடித்துப்போகலாம்.

பொதுவாக நல்லறிவுள்ளோர் அப்படிப்பட்ட சூழலில் எப்படியெல்லாம் அதிலிருந்து மீளலாம் என்று ஆராய்வார்கள். மீண்டும் முயற்சி, கடின உழைப்பு, புதிய சூழலுக்கேற்ற திட்டமிடல் - இப்படிச் சில வழிகள் சிலருக்கு உதவலாம்.

என்றாலும், பொதுவாகப் பலருக்கும் மீட்சி என்பது மற்றவரின் உதவியின் வழியே தான் முடிகிறது. பெரும்பாலான இத்தைகைய உதவிகளை "இரத்தல்" என்று சொல்ல முடியாது. முன் செய்த உதவிக்கான கைம்மாறு, கடன், என்றோ மீண்டு வரும்போது நமக்கு உதவுவார் என்ற எதிர்பார்ப்பு - இப்படிப்பல அடிப்படைகளில் உதவிகள் செய்யப்படுவது வழக்கம். இப்படியெல்லாம் ஒன்றுமில்லாமலும் தானே முன்வந்து உதவுவதை ஒரு கடமையாகவே கருதி வாழும் வள்ளல்களும் உலகில் இருக்கிறார்கள்.

இவையல்லாமல், அரசு மற்றும் நிறுவனங்கள் வழியே பல திட்டங்களும் மீட்சிக்கென்று செயல்படுவது எப்போதும் உள்ளதே. ஊழல் மிகுந்த நம் நாட்களிலும் இவ்வித உதவிகள் வழியாகப் பலருக்கும் மீட்பு கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது என்பது உண்மை.

மேற்சொன்ன எதற்கும் வழியில்லாத இன்மையை ஒருவர் அடைந்து, இரக்கும் நிலைக்குத்தள்ளப்படுவது கொடுமையிலும் கொடுமை!

அப்படிப்பட்டோர் மனது என்ன பாடுபடும் என்பதற்கு முழுக்குடும்பமும் செய்யும் தற்கொலைகளை நினைவில் கொண்டு வந்தால் புரிந்து கொள்ளலாம் (அண்மையில் நடந்த கந்துவட்டித்தீக்குளிப்பு அவற்றிலேயே எண்ண முடியாத துயரம்) Sad .

அதைச்சொல்லும் திருக்குறள்.

இன்மை இடும்பை இரந்து தீர்வாம்
வறுமைக்கொடுமையைத் தீர்க்கப்பிச்சையெடுக்கலாம்

என்னும் வன்மையின் வன்பாட்டதில்
என்னும் கொடுமையை விட வன்மையான கொடுமை எதுவும் இல்லை

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 25, 2017 11:30 pm

#1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு


இடம் என்ற சொல் கொண்டு ஒரு சின்ன விளையாட்டு இங்கே.

இடமில்லாக்காலும் = வாழ "இடமில்லாத" (வழியே இல்லாத) நிலையிலும்
இடமெல்லாம் கொள்ளா = உள்ள இடம் எல்லாமும் (அதாவது, உலகமே) கொள்ளாத (அளவுக்குப்புகழ்)

மற்றபடி பொருள் எளிது, உயர்வு நவிற்சி அணி என்றும் கொள்ளலாம்.

இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு
(வறுமையால் வாழுவதற்கே) வழியில்லாத நிலையிலும் இரப்பதற்கு ஒத்துக்கொள்ளாத பண்பு

இடமெல்லாம் கொள்ளாத்தகைத்தே
எல்லா இடமும் கொள்ளாத அளவுக்கான மதிப்புக்குரியது
(இந்த உலகில் அடங்காத புகழ் / வையகமே இணையாகாது என்றெல்லாம் உயர்வு நவிற்சி)

பெரிய அளவிலான பேர், பெருமை, புகழ் வேண்டுமானால், இரவச்சம் கொள்ள வேண்டும் என்று சுருக்கம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Oct 26, 2017 6:29 pm

#1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியதில்


புற்கை = கஞ்சி, அடுபுற்கை = (அடுப்பில்) காய்ச்சிய / சமைத்த கஞ்சி

அது தெளிந்த நீர் போல எப்போது இருக்கும்? நெல்மணிகள் குறைவாக இடப்பட்டிருந்தால் தானே? (நிறையச்சோறு இருந்தால் கஞ்சி தெளிவாக எப்படி இருக்கும்?) வறுமையின் விளைவாகக் கஞ்சியில் இடுவதற்கு அரிசி (அல்லது அது போன்ற மணிகள்) மிகவும் குறைவு.

அதனால் கஞ்சி கிட்டத்தட்டத் தெளிந்த நீர் போல இருக்கிறது.

என்றாலும், தன் முயற்சியால் கிட்ட அதைக்குடிப்பதே இரந்து பெரும் உணவு உண்ணுவதை விடவும் சிறப்பு / சுவையானது என்கிறார்.

நெஞ்சைத்தொடும் குறள்!

அடுபுற்கை தெண்ணீர் ஆயினும்
காய்ச்சிய கஞ்சி தெளிந்த நீர் போன்றதே ஆயினும்
(மாவுப்பொருள் மிகக்குறைவென்றாலும்)

தாள்தந்தது உண்ணலின்
தனது முயற்சியால் பெறப்பட்ட அதை உண்ணுவதை விட

ஊங்கினியதில்
மேலான இனிமை (சுவை) வேறெதிலும் இல்லை
(பிச்சையெடுத்துக் கிடைத்த எந்த உணவிலும் அதைவிடச் சுவை இருக்காது)

தன் உழைப்பினால் குடிக்கும் எளிமையான கூழுக்கு இருக்கும் சுவை மற்றவரிடம் இரந்து பெரும் எப்படிப்பட்ட மேம்பட்ட உணவுக்கும் இருக்காது என்று புரிந்து கொள்ள வேண்டும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Oct 27, 2017 5:05 pm

#1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்ததில்


"தாகத்துக்குத்தண்ணீர்" என்று கேட்பதையே இரப்பது என்று இந்தக்குறளில் வள்ளுவர் சொல்லுவது கொஞ்சம் கூடுதல் என்று தோன்றலாம். இரவச்சத்தை ஊக்குவிக்கவே அப்படிச்சொல்லுகிறார் என்பதைப்புரிந்து கொள்ளலாம்.

ஆனால், "ஆவுக்கு (பசுவுக்கு) நீர் கொடுங்கள்" என்று குறிப்பாக ஒரு விலங்கைச் சுட்டுவது அன்றைய சமுதாயத்தில் இவ்விலங்குக்கு இருந்த சிறப்பு நிலையைக் குறிப்பிடுகிறதோ என்று தோன்றாமல் இல்லை. ஒரு வேளை இன்று இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் ஆவுக்கு இருக்கும் வழிபாட்டு நிலையை இது வெளிப்படுத்துகிறது என்றும் சிலர் சொல்ல வழியுண்டு Wink

எப்படி இருந்தாலும், "இரப்பு இகழத்தக்கது" என்று பொதுமக்களுக்குச் சுட்டிக்காட்ட இப்படிப்பட்ட சொல்லாடல்கள் புலவர்கள் கையாளும் ஒன்றே என்ற அளவில் இங்கே நிறுத்திக்கொள்வோம்.
(அல்லாமல் வள்ளுவர் ஆவினை வழிபட்டாரா என்றெல்லாம் நுழைய வேண்டியதில்லை).

ஆவிற்கு நீரென்று இரப்பினும்
பெண்மாட்டுக்குக் குடிக்க நீர் கொடுங்கள் என்று இரந்தாலும்
("பசுவுக்குத் தண்ணீர் வேண்டும்" என்று பிச்சை எடுத்தாலும்)

நாவிற்கு இரவின் இளிவந்ததில்
நாவிற்கு இரப்பதை விடவும் இகழத்தக்க வேறொன்றும் இல்லை

மற்றவர்களிடம் சென்று மாட்டுக்குத் தண்ணீர் கேட்பது கூட இழிவான இரத்தலே என்பது இந்தச்செயலை ஒருவர் எவ்வளவு வெறுக்க வேண்டும் என்று அழுத்திச்சொல்லுகிறது.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Oct 27, 2017 7:59 pm

#1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று


"கெஞ்சாதே என்று கெஞ்சுகிறேன்" Smile

அப்படியாக, இன்னுமொரு சொல் விளையாட்டு.

கருத்து ஏற்கனவே பலமுறை இந்த இரண்டு அதிகாரங்களில் கண்டு வருவது தான். "நான் உன்னை இரக்கிறேன்" என்று கூட்டுவது மட்டுமே இந்தக்குறளில் புதுமை!

இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று
"இரக்கப்போகிறீர்கள் என்றால் மறைத்து வைப்பவரிடம் சென்று இரக்க வேண்டாம்" என்று

இரப்பாரை எல்லாம் இரப்பன்
இரப்பவர் எல்லாரையும் நான் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்
(இரப்பவரிடம் நான் இரக்கிறேன்)

"எப்படியும் பிச்சை எடுத்துத்தான் வாழ்வது என்று முடிவு செய்து விட்டீர்கள் - நான் இனி என்னத்தைச்சொல்ல? என்றாலும், ஒளித்து மறைத்து ஏமாற்றும் ஆளிடம் போய்ப் பிச்சை எடுத்து இழிவு படாதீர்கள் - உங்களைக் கெஞ்சிக்கேட்டுக்கிறேன்" என்கிறார் வள்ளுவர் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Oct 30, 2017 11:38 pm

#1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்


மறைத்து வைப்பது எப்படி இரவுக்கு எதிரானது என்று மீண்டும் மீண்டும் இந்த இரண்டு அதிகாரங்களில் கண்டு வருகிறோம். அதே கருத்தில் இன்னுமொரு குறள்.

இங்கே உவமை நயத்துடன் சொல்லப்படுகிறது. அதாவது, வறுமையைக் கடல் என்கிறார். அதைக்கடப்பதற்கு, முயற்சி / கடின உழைப்பு போன்ற நல்ல தோணிகளைத் தேடாமல், இரவு என்ற பாதுகாப்பற்ற தோணியை ஒருவன் தெரிந்தெடுக்கிறான். இரவுக்கு எதிரான "மறைப்பு", பாறையாக இங்கே உருவகப்படுத்தப்படுகிறது. இரண்டு விதத்திலும் பொருத்தம். அதாவது, இரவு என்னும் தோணியை உடைக்கும் பாறை என்பது மட்டுமல்ல. பொதுவாக "ஒளிந்திருக்கும்" பாறைகள் தான் தோணிகளுக்குக் கூடுதல் அழிவு உண்டாக்கும் அல்லவா? அவ்விதத்திலும் "ஒளித்தல்" என்பது பொருத்தம் Smile

இரவென்னும் ஏமாப்பில் தோணி
இரவு எனப்படும் பாதுகாப்பற்ற தோணி

கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்
(பொருளை) மறைத்தல் என்னும் பாறை தாக்கும்போது உடைந்து நொறுங்கி விடும்

கொடுப்பதற்கான மனம் இல்லாத நிலை கூடினால் அங்கே வெளிப்படைத்தன்மை இருக்காது.

தமக்கு உள்ளதை எல்லாம் ஒளித்து மறைத்து வைக்கும் கடின மனத்தோர் மிகுந்த அந்நிலையில் இரவு என்னும் வழியை ஒருவர் தேர்ந்தெடுத்தால் ஏமாந்து தானே போவார்கள்?

வறுமையில் உழன்று துன்புறுவது தவிர மீட்சிக்கு வழியில்லை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 31, 2017 11:11 pm

#1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்


உணர்வு அடிப்படையிலான குறள் இது என்பதால் அறிவு அடிப்படையில் புரிந்து கொள்ள முயலக்கூடாது.

அதாவது, இரவச்சம் என்ற பொருளில் எழுதினாலும், இங்கே கரவுக்கெதிரான புலம்பல் மனநிலை தான் குறிப்பாக வெளிப்படுகிறது - ஒரு விதத்தில் பார்த்தால் அது இரவச்சம் தான். ('கரவு நிறைந்திருப்பதால் இரக்காதே' என்ற அறிவுரை) என்றாலும் அடிப்படையில் இரவுக்கு ஆதரவான ஒலி.

ஆகவே, ரொம்பக்குழப்பிக்கொள்ளாமல், நேரடியான பொழிப்புரை மட்டும் படித்து விட்டுக்கடக்கப் பார்க்கிறேன் Smile

இரவுள்ள உள்ளம் உருகும்
இரவு (என்னும் நிலையைக்)குறித்து எண்ணினால் உள்ளம் உருகிவிடும்
(இல்லாதோர் இரந்து திரியும் அவலநிலை குறித்து எண்ணும்போது உருகாத உள்ளம் கல் நெஞ்சு தானே?)

கரவுள்ள
(என்றாலும்) மறைத்து வைத்தலை நினைத்தால்

உள்ளதூஉம் இன்றிக் கெடும்
இப்போதுள்ள அந்த உள்ளம் இல்லாமலே போய் விடும்
(உருகுவதற்கும் வழியில்லை)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Nov 01, 2017 6:31 pm

#1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்


இரவச்சம் அதிகாரத்தின் இறுதிக்குறளிலும் ஈகை இல்லாமையையே கண்டிக்கிறார். (அதாவது, இரவைக்கண்டிப்பதற்கு மாறாக, இரப்பாரிடம் கரப்பாரைக் கண்டிக்கிறார்).

இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்
இரப்பவர்களிடம் மாறான சொல் ("இல்லை") வரும்போது அவரை விட்டுப்போகும் உயிர்

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ
மறைத்து வைப்பவர்களுக்கு மட்டும் எங்கே ஒளிந்து கொள்ள முடியும்?

கொஞ்சம் எளிமையாகச்சொன்னால் இப்படி :
பிச்சை கேட்பவருக்கு "இல்லை" என்ற சொல் கேட்டதுமே உயிர் போய் விடும்.
அவருக்குக் கொடுக்காமல் மறைப்பவருக்கு மட்டும் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும்?
("ஈகைப்பண்பு அற்ற கடின நெஞ்சத்தவர் பிணத்துக்குச் சமன்" என்று பொருள்).

ஆக, இங்கே மறைத்து வைப்பவருக்குத்தான் திட்டுSmile

மறைமுகமாக, இரக்கிறவர்களையும் "ஏனிந்த வேண்டாத வேலை? இல்லை என்ற சொல் கேட்டு உயிர் போகும் நிலை உங்களுக்குத் தேவையா? கரப்பவரிடம் சென்று இரப்பதேன்?" என்றும் அறிவுறுத்துகிறார்.

அப்படியாக, இரவச்சமும் இங்கே இருக்கத்தான் செய்கிறது. Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Nov 01, 2017 6:55 pm

#1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரியாங்கண்டதில்

(பொருட்பால், குடியியல், கயமை அதிகாரம்)

பொருட்பாலில் இறுதி அதிகாரத்துக்கு வந்தாகி விட்டது.

தீய பண்பான "கயமை" என்பதை இறுதியாக வைத்திருப்பது பொருத்தமானதே!

நேரடியான பொருள் கீழ்மை / சிறுமை. அதோடு, கொடுமை / வஞ்சகம் / வெறுப்புண்டாக்கும் தன்மை / களவு என்றெல்லாம் பல தீய தன்மைகளும் உள்ளடக்கும் ஒரு சொல்.

கயவர் என்று பொதுவாகக் கெட்டவர்களைக் குறிப்பிடுவது தமிழில் வழக்கம் தானே?

மக்களே போல்வர் கயவர்
கயவர் மக்களைப்போன்றே இருப்பர்
(நமது பிள்ளைகளுக்கும் கயவருக்கும் வேறுபாடு வெளியில் தெரியாது)

அவரன்ன ஒப்பாரியாங்கண்டதில்
அவர்களைப்போன்று ஒப்புமை செய்யத்தக்கவற்றை நான் கண்டதே இல்லை

அதாவது, மக்களும் கயவரும் இரட்டையரைப் போன்று வேறுபாடு காணக்கடினமான வகையில் இருப்பார்கள். உள்ளே உள்ள கயமைப்பண்புகளை மறைத்து நம் மக்கள் போன்றே வலம் வருவார்கள்,

"ஒப்பார் கண்டதே இல்லை"  என்பது சுவைக்காகச் செய்யப்படும் உயர்வு நவிற்சி எனலாம். அல்லது, எச்சரிக்கை தருவதற்காகச் சொல்லப்படுவது என்றும் கொள்ளலாம். ("போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்").

எவரையும் எளிதில் நம்பி விட வேண்டாம் - மேம்போக்காகப் பார்க்க வேண்டாம் என்று பொருள்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Nov 02, 2017 8:06 pm

#1072
நன்றறிவாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்


வஞ்சப்புகழ்ச்சி அணி என்று சொல்லத்தக்க குறள் Smile

அதாவது, கயவர் எதையும் குறித்துக் கவலைப்படாமல் வாழ்வதால், நல்லவரை விடவும் "கொடுத்து வைத்தவர்கள்" (செல்வம் உடையவர்கள்) என்கிறார். தனது குடி குறித்து ஒரு அக்கறையும் இல்லாமல் திரியும் ஒரு ஆளைக்குறித்துச் சில நாட்களுக்கு முன் என் நண்பரிடம் கிட்டத்தட்ட இதே கருத்தைச்சொல்லி நாங்கள் இருவரும் சிரித்தது நினைவுக்கு வருகிறது. ("மேலே வானம் - கீழே நிலம்" என்று ஒன்றுக்கும் கவலைப்படாமல் திரியும் அந்த ஆள் கொடுத்து வைத்தவன், உனக்கும் எனக்கும் தான் மனைவி / மக்கள் / நலம் என்றெல்லாம் அக்கறை).

நெஞ்சத்து அவலம் இலர்
தமது நெஞ்சத்தில் (நல்லது / கெட்டது என்றெல்லாம்) ஒரு கவலையும் இல்லாதிருப்பதால்

நன்றறிவாரிற் கயவர் திருவுடையர்
நன்மை அறிந்தவரை விடவும் கயவர் தான் செல்வந்தர்கள் (நிறைவுடையவர்கள்)

மேம்போக்காகப் பார்த்தால் கயவரைப் புகழ்வது போலத்தோன்றினாலும், உண்மையில் அப்படியல்ல!

"எந்த அக்கறையுமின்றி விலங்குகள் போல் வாழுபவர்" என்று இங்கே கயவரை இடித்துரைக்கவே செய்கிறார்.

அதனால், "நல்லவரை விடவும் திருவுடையார்" என்பது உண்மையில் எள்ளல் தானே அன்றிப்பொறாமை அல்ல Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 5 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum