ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
+9
SenthilVinu
groucho070
jaiganesh
plum
rajeshkrv
Admin
sagi
V_S
app_engine
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
I was silently reading your wonderful posts. Waiting for you to complete your writing about this song. Very well done App sir: Definitely a new feeling reading in our mother tongue, always special! You have glorified the song and P Susheela amma! The way you normally write about the song (from SPB-IR thread) is one post per song, but this one seems like 'anu-anuva-rasithu-ezhuthara-style', I like it very much.
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
மிக்க நன்றி வி எஸ்ஜி!
தினமும் ஒரு பாட்டுக்கு ஒரு பதிவு என்ற முறையில் 400க்கும் அதிகமான பதிவுகள் இளைய-பாலு இழையில் (படு வேகத்தில்) செய்து அலுத்து விட்டது.
ஆற அமர சுவைப்பது என்று முடிவு செய்தே இந்த இழையில் இறங்கினேன்
அடுத்த ஐந்தாவது பாடலும் ஒரு சுசீலா-யேசுதாஸ் டூயட் பாடலே...

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
To me, early IR had a very song resemblance to MSV. badrakali.kannan_oru_kaikuzhandhai falls into this category in my book. Anyway, P Susheela is my favorite female voice and later Chitra. PS's voice has a pristine clarity to it. As app mentions, there is a gentle, dignified sweetness to it, as well. Always majestic. Nice writing, app. Looking forward to more.
(you probably inherited the music gene from your mom. Looks like math and music are very genetic)

kiru- Posts : 551
Reputation : 3
Join date : 2012-10-31
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
நன்றி, கிரு!
அடுத்த பாடலில் கொஞ்சம் ராசாவின் இசைப்பதிவு(ஒலிப்பதிவு)க் குழப்பங்கள் பற்றிய என் கருத்துகள் இருக்கும், நீங்கள் அதன் மீதான ஆய்வுகள் தூவுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!
அடுத்த பாடலில் கொஞ்சம் ராசாவின் இசைப்பதிவு(ஒலிப்பதிவு)க் குழப்பங்கள் பற்றிய என் கருத்துகள் இருக்கும், நீங்கள் அதன் மீதான ஆய்வுகள் தூவுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
70-களிலேயே இந்தியத்திரைப்படங்களில் ஸ்டீரியோ ஒலிப்பதிவு வந்துவிட்டது என்பது நாம் அறிந்ததே. (ஷோலே தொடக்கம் என நினைக்கிறேன்). என்றாலும் அதன் முதிர்ச்சி மேலை நாட்டு இசைப்பதிவுகளின் அளவில் இல்லை என்பது ஒரு இனிப்பில்லாத உண்மை. ஹெட்போனில் பாட்டுக்கேட்பதற்கு முன் இதை உணர்ந்ததில்லை.
இளையராஜா 'ப்ரியா'வில் இந்ததொழில்நுட்பத்தைக் கையாண்டபோது எல்லோரும் அதை 'ஆஹா, ஓஹோ' என்று புகழ்ந்ததும் நம் நினைவில் பசுமையாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வருவித்த ஒலிக்கருவிகளை பேருந்துகளில் பொருத்தும் காலத்தில் வந்த அந்தப்பாடல்கள் கேட்க அவ்வளவு இனிமையாக இருந்தன. தமிழ்நாட்டில் அக்காலத்தில் வாக்மேன் அவ்வளவாக நான் கண்டதில்லை. அப்படியாக, ஒலிப்பதிவு பற்றி நிறையப்பேர் பேசுவதும் எழுதுவதும் செய்த போதும், உண்மையில் கேட்டு / அனுபவித்து "அப்படித்தானா / இல்லையா" என்று அறிந்து மெச்சியோர் (அல்லது மெச்சாதோர்) மிகக்குறைவே
இளைய-பாலு இழையில் நான் எழுதியது போல, கல்லூரிக்குச்சென்றபின் மேற்கத்திய பாப் இசை மீது ஒரு திடீர்ப்பிரியம் வந்த காலக்கட்டம் ஒன்று இருந்தது. (த்ரில்லர் ஆல்பம் உலகையே கலக்கிய காலக்கட்டம்). அதற்கான பல காரணிகளில் ஒன்று, காதில் ஒலிப்பானை மாட்டிக்கொண்டு பாட்டுக்கேட்கும் புத்தம் புது அனுபவம்! விளைவு? எனக்கு உயிராய் இருந்த சில ராசா பாடல்கள் கூட, சிறிது காலத்துக்குக் கேட்க விருப்பமில்லாமல் போனது.
அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் நமது அடுத்த பாடல்! இந்தப்பாடல், பேருந்துகளிலும், தேநீர்க்கடைகளிலும் கேட்டுக்கேட்டு அனுபவித்த, அவ்வளவு இனிமையானதாக என் கணக்கில் இருந்த ஒன்று, ஹெட்போனில் தாங்க முடியாமல் போனது காரணம்? நமது இசை / ஒலிப்பதிவில் இன்னும் முதிர்ச்சி எட்டாமை எனலாம். இந்த ஒரே அம்சத்தின் மீது அப்போது மனம் ஒருமுகப்பட்டதால், இந்தப்பாடல்கள் வாக்மேனில் கேட்கும்போது தலைவலிக்குக்கூட ஆளாயிருக்கிறேன்!
என் இப்போதைய கருத்துப்படி, அந்தக்காலத்தின் தேவைக்கேற்ப - அதாவது பாடல் பேருந்துகளிலும், தேநீர்க்கடைகளிலும், விழாக்களிலும் இன்னும் வானொலியிலும் அற்புதமாக ஒலித்தால் போதும் என்ற சிந்தனையில் - ராசாவும் கூட்டாளிகளும் பதிவு செய்திருக்க வேண்டும்.
பாடலைப்பற்றி இன்னொரு நாள் விவரமாகப்பேசலாம்.
படம் இளமைக்காலங்கள் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிவிடுகிறேன்.
ஹெட்போனில் கேட்டுவிட்டு வாருங்கள், பின்னர் பேசலாம்!
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR1084'&lang=en

காரணம்? நமது இசை / ஒலிப்பதிவில் இன்னும் முதிர்ச்சி எட்டாமை எனலாம். இந்த ஒரே அம்சத்தின் மீது அப்போது மனம் ஒருமுகப்பட்டதால், இந்தப்பாடல்கள் வாக்மேனில் கேட்கும்போது தலைவலிக்குக்கூட ஆளாயிருக்கிறேன்
Interesting - 90s-la ungaLoda collegedays-la-ninga irundha mAdhiri pala pEru vandhadhu uNmai illaiyA? (They became the majority as opposed to the minority that you were in your college days).
My initial antipathy to Rahman was ppl like this who argued mostly along the lines of theLivu in olippadhivu. OraLavukku ppl like Shashi in tfmpage were the ones(only ones ever I have seen) talking about musical elements of Rahman. adhukku munnaiyum pinnaiyum I am seeing only hacks with no love for music but just end-result kEkka theLivA irukku types.
In hub, we do have ppl saying things like "rules break paNNittAruppA". Sadly, they dont have the articulation or perhaps knowledge to sy what rule, what is the background of that rule, who all applied the rule fastidiously and how he broke it. Only claims without backup logic or evidences.
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
pAda vandhadhOr ganam surely? I can understand if it gives you headache in headphone. Recording - especially that tharathaththa chrous - can be irritating even when the volume is up on normal speakers.
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
ப்ளம்,
ஒரு சின்ன தன்னிலை விளக்கம் - என்னுடைய குழப்பம் பொதுவாக 'ஒலிப்பதிவு' என்ற பொருளில் அல்ல.
சொல்லப்போனால், 'பாட வந்ததோ கானம்' பேருந்துகளில் மற்றும் தேநீர்க்கடைகளில் எல்லாம் உரத்த ஒலியில் கேட்கும்போது கூட எனக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஒரு குழப்பமும் இல்லை.
அதாவது, இந்தத் தெளிவு / அலைவரிசைகளின் உள்ளடக்கம் / ஒலி அளவுகளின் பொதுவான சமநிலை, இப்படிப்பட்டவற்றில் நான் அப்போது குறை காணும் அளவுக்கு வளரவில்லை! அவை அல்லவா 90-களின் இளைஞர்களின் குற்றச்சாட்டு?
என்னுடைய ஒரே துன்பம் இடது மற்றும் வலது காதுகளுக்கான "சுகமில்லாத ஒரு பாகப்பிரிவினை".
எடுத்துக்காட்டாக, இந்தப்பாடல் முழுதும் ட்ரம்ஸ் ஒலி ஒரு காதில் மட்டும் தான் வரும்!
பேருந்தில் கேட்கையில் இது பிரச்னை இல்லை. ஹெட்போனில்? அதுவும் இந்த 'பாகப்பிரிவினை'க்கு "நிர்ப்பந்தமான முதன்மை" கொடுத்து ஒரு இளைஞன் கேட்கையில்?
அவனுக்குத் தலைவலி வரும் தானே?
மெல்லத்திறந்தது கதவு, எங்க ஊரு பாட்டுக்காரன், புன்னகை மன்னன் போன்ற, 80-களின் பின் பகுதியில் வந்த இசைத்தொகுப்புகளிலேயே இந்தக்குறை சரி செய்யப்பட்டு விட்டது என்பது பெரிய ஆறுதல்!

Paada vandhatho gaanam..
Wow.. Bliss .. wonderful tune and PS & KJY doing an amazing job..
"Anbe ennalum naan undhan thozhi pan padi kan moodi unadhu madiyil urangum oru kili" ..
fantastic singing .yes chorus is irritating sometimes but over all what a killer song this is.
Raghavane Ramana Ragunatha by PS is another fantastic song to prove versatility of IR ..

rajeshkrv- Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
ஏற்கனவே திரைப்பாடல் இணைப்பில் கண்டபடி, நமது இப்போதைய உரையாடலுக்கான பாடல்:
#5 பாட வந்ததோ கானம் (இளமைக்காலங்கள், மணிவண்ணன் இயக்குனர், மோகனும் சசிகலாவும் திரையில், மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு)
நாம் பல இழைகளில் முன்னமே பேசிய படி, "இளையராஜாவின் இன்னிசை மழையில்" இத்யாதி விவரிப்புகளை வரலாற்றிலேயே முதல் முதலாக சுவரொட்டிகளில் எல்லாம் அச்சடித்து விளம்பரம் செய்தவர் கோவைத்தம்பி. இவர் அக்காலத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ என்பது ஒரு கொசுறுத்தகவல். சில நாட்களுக்கு முன் இவரது பல நேர்காணல்களை ஒரு நாளிதழ் இணையத்திலிருந்து வேறொரு இழையில் பதிவுகளில் சுட்டி இருந்தேன். நடுவில் கொஞ்ச நாள் ராசாவுடன் கோபித்துக்கொண்டார் என்றாலும் பின்னர் ஒன்று சேர்ந்து விட்டார் என்ற வகையில் இவர் மற்ற பலரிலிருந்து வேறுபட்டவர் எனலாம். இவரது தயாரிப்பில் முதலில் வந்த பயணங்கள் முடிவதில்லை ஒரு இசை மழை என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த இசைத்தொகுப்பில் பாலுவும் ஜானகியும் மட்டுமே. சுசீலாம்மாவோ வேறு எந்தப்பாடகருமோ இல்லை. அதன் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்
அடுத்த படத்துக்குப் பாடல்கள் பதிவு செய்தபோது என் நினைவின் படியும், இசைத்தட்டும் படியும் மணிவண்ணன் இல்லை. பாடல்கள் பட்டி-தொட்டியெல்லாம் பரவின பின்னர், அதற்கேற்ற மாதிரி ஒரு திரைக்கதை செய்து ஒப்பேத்தியதாக வரலாறு. 'ஈரமான ரோஜாவே' தவிர மற்றவை எல்லாம் படம் பார்க்கும்போது அவ்வளவாக உறுத்தாமல் செய்திருப்பார். பிரமாதம் என்றும் சொல்லிவிட முடியாது. 'பாட வந்ததோ கானம்' அருமை என்று சொல்ல முடியாவிட்டாலும், எரிச்சல் வராத அளவுக்கு இருக்கும். இது வரை பார்த்திராதவர்களுக்கும், மறந்து போனவர்களுக்கும் இங்கே யூட்யூப் இணைப்பு இருக்கிறது (அம்மணி பிகினி எல்லாம் போட்டிருப்பாங்க...டிக் டிக் டிக் பாதிப்பு அந்தக்காலத்தில்!):
பாடல் வரிகள் வைரமுத்து ஓரளவுக்கு நல்ல ஓட்டத்தில் இருந்ததை நிரூபிக்கின்றன!
பல்லவி:
பாட வந்ததோ கானம், பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன்வேளை, தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
சரணம் 1:
ராஜமாலை தோள் சேரும், நாணம் என்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர் காலம், நெஞ்சில் வெயில் காலம்
அன்பே! அன்பே, எந்நாளும் நான் உந்தன் தோழி!
பண்பாடி, கண்மூடி, உனது மடியில் உறங்கும் ஒரு கிளி!
சரணம் 2:
மூடி வைத்த பூந்தோப்பு, காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே! தேனே, கங்கைக்கு ஏனிந்த தாகம்?
உல்லாசம் உள்ளூறும் நதிகள் விரைந்தால் கடலும் வழி விடும்

இளமைக்காலங்கள் படம் அப்படியொன்றும் ஸ்பெஷல் இல்லையென்றாலும் அந்தப்பாடல்கள் வெளிவந்த காலம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருங்கிய காலம் - கல்லூரி வயதான என் இளமைக்காலம் அல்லவா?
அதிலும் குறிப்பாக இந்தப்பாடலின் முக இசையில் வரும் 'தரத்தத்த தரத்தத்த' குழுவொலி தொடங்கும்போதே பறக்கும் அனுபவம் ஒவ்வொரு முறையும் கிடைத்துக்கொண்டிருந்த பருவம் அது!
முதலாண்டு ராகிங் மூலம் வழிக்கப்பட்ட பூனைமுடி மீசை மாறி, கொஞ்சம் கட்டையான முடி முகத்தில் வளர வளர, ஆர்வப்பார்வைகள் எதிர்பாலாரிடமிருந்து அதிகரித்துக்கொண்டிருந்த தருணம்! பெண்டிர் இல்லாத கல்லூரி வளாகம் விட்டு வெளி உலகம் செல்லும் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க 'விழியில் விழுந்து இதயம் நுழைதல்கள்'. (வந்த வேகத்தில் போய் விடுவதும், அடுத்தவர் வருவதும் நடந்த காரணத்தால் வேறு குழப்பங்கள் ஒன்றும் இல்லை என்பது வேறு ஒரு ஆறுதல்! )
அந்த மாதிரி நேரங்களில் பலதும் பேருந்துகளிலோ அல்லது பேருந்து சார்ந்த (நிலையம், நிற்கை போன்ற) இடங்களிலோ என்பதால் ராசா பாடல்கள் "பின்னணி இசையாக" ஒலிப்பது அடிக்கடி நிகழும்! அப்படியெல்லாம் ஒரு பாட்டும் பின்னணியில் இல்லையென்றால், மனது தானாகவே பாடத்தொடங்குவது எந்த இசை தெரியுமா?
'பாட வந்ததோ' பாடலின் முக இசை தான்!
"சிறகடித்துப்பறந்தேன்" என்று சொல்லுவார்கள் இல்லையா - அது, அதே தான் இந்தக்குழுவொலி எனக்கு எப்போதும் தந்த, இன்றும் தருகின்ற அனுபவம்! இன்று காலை இங்கு வெண்பனி வீழல் - மெல்லிய காற்றும், முகத்தில் சில்லென அடிக்கும் பனித்தூறலும் எல்லையற்ற இன்பம் தரும் போது, வண்டியுள் நுழைந்து சாவியைத்திருகியதும் உடனே தொடங்கிய இந்த முக இசை உதவியோடு, கண்டிப்பாக, இன்று நான் மனதளவில் சிறகடித்தேன்!
அதிலும் குறிப்பாக இந்தப்பாடலின் முக இசையில் வரும் 'தரத்தத்த தரத்தத்த' குழுவொலி தொடங்கும்போதே பறக்கும் அனுபவம் ஒவ்வொரு முறையும் கிடைத்துக்கொண்டிருந்த பருவம் அது!
முதலாண்டு ராகிங் மூலம் வழிக்கப்பட்ட பூனைமுடி மீசை மாறி, கொஞ்சம் கட்டையான முடி முகத்தில் வளர வளர, ஆர்வப்பார்வைகள் எதிர்பாலாரிடமிருந்து அதிகரித்துக்கொண்டிருந்த தருணம்! பெண்டிர் இல்லாத கல்லூரி வளாகம் விட்டு வெளி உலகம் செல்லும் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க 'விழியில் விழுந்து இதயம் நுழைதல்கள்'. (வந்த வேகத்தில் போய் விடுவதும், அடுத்தவர் வருவதும் நடந்த காரணத்தால் வேறு குழப்பங்கள் ஒன்றும் இல்லை என்பது வேறு ஒரு ஆறுதல்! )
அந்த மாதிரி நேரங்களில் பலதும் பேருந்துகளிலோ அல்லது பேருந்து சார்ந்த (நிலையம், நிற்கை போன்ற) இடங்களிலோ என்பதால் ராசா பாடல்கள் "பின்னணி இசையாக" ஒலிப்பது அடிக்கடி நிகழும்! அப்படியெல்லாம் ஒரு பாட்டும் பின்னணியில் இல்லையென்றால், மனது தானாகவே பாடத்தொடங்குவது எந்த இசை தெரியுமா?
'பாட வந்ததோ' பாடலின் முக இசை தான்!
"சிறகடித்துப்பறந்தேன்" என்று சொல்லுவார்கள் இல்லையா - அது, அதே தான் இந்தக்குழுவொலி எனக்கு எப்போதும் தந்த, இன்றும் தருகின்ற அனுபவம்! இன்று காலை இங்கு வெண்பனி வீழல் - மெல்லிய காற்றும், முகத்தில் சில்லென அடிக்கும் பனித்தூறலும் எல்லையற்ற இன்பம் தரும் போது, வண்டியுள் நுழைந்து சாவியைத்திருகியதும் உடனே தொடங்கிய இந்த முக இசை உதவியோடு, கண்டிப்பாக, இன்று நான் மனதளவில் சிறகடித்தேன்!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
arumaiyaana varnanai! You took me to your college days with your narration and the way you soaked in this song. Beautiful!
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
Just finished reading all the posts. App - Super thread, this is going to be a goldmine for sure. Love your writing style in Tamil and it definitely feels very satisfying especially the various intricate details of the songs. Also, I like the randomness in choosing the songs and the surprise element therein for what would be the next song.
rajkumarc- Posts : 210
Reputation : 0
Join date : 2013-01-03
Location : SF BayArea
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
வருகைக்கும், "கவனிப்பு"க்கும் மிக்க நன்றி ராஜ்குமார் சி!
இன்னும் 'பாட வந்ததோ கானம்' குறித்து குறைந்தபட்சம் மூன்று பதிவுகளாவது உள்ளன
அடுத்த "உந்துதல்" கிடைத்ததும் அவற்றை எழுத வேண்டும்!
இன்னும் 'பாட வந்ததோ கானம்' குறித்து குறைந்தபட்சம் மூன்று பதிவுகளாவது உள்ளன
அடுத்த "உந்துதல்" கிடைத்ததும் அவற்றை எழுத வேண்டும்!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
என்னுடைய பழங்கதைப் பேச்சுகளில் (எஸ்பிபி-ராசா) நேஷனல் பேனசானிக்கின் ஒரு ஸ்டீரியோ நாடா ஒலிக்கருவி குறித்து மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறேன். எண்பதுகளின் நடுப்பாகத்தில் பல த.நா. தேநீர்க்கடைகளிலும் வீடுகளிலும் இசை முழக்கம் செய்ததில் இதற்குப்பெரும் பங்குண்டு. அப்படியொரு ஒலிக்கருவியை 'பாட வந்ததோ கானம்' வந்த காலத்தில் சித்தி கணவர் பர்மா பஜாரில் இருந்து வாங்கியிருந்தார். (வேறு கடைகளிலெல்லாம் அந்தக் காலத்தில் "நாடா கொண்டு விளையாடிகள்" கிடைக்காதுங்கோ!). மட்டுமல்ல, அவர் பதிவு செய்த ஒரு நாடாவில் முதல் பாடலும் இது தான்!
'லா லா லா, லலல லா' என்று தொடங்கும்போதே எனக்கு உணர்ச்சிகள் மீறிடும், மயிர் கூச்செறியும்! ஒவ்வொரு முறை அவரது வீட்டில் பாட்டுக்கேட்பதும் ஒரு தனி அனுபவம் தான்! நான் முன்னர் குறிப்பிட்டிருந்த ஹெட்ஃபோன் குழப்பம் இதுபோன்ற பெரிய ஒலிக்கருவிகளில் கேட்கும்போது இருக்காது. அப்படியாக, இந்தப்பாடல் அக்காலத்தில் பிரபலமாயிருந்த கருவிகள், பேருந்துகளில் உரத்த சத்தத்தில் பாடும் ஒலிப்பான்கள் என எல்லாவற்றின் தேவைகளையும் மிக நன்கு நிறைவேற்றியதால் ஒலிக்காத இடமில்லை எனலாம்!
நாட்டுப்புறத்தில் "தாம்பாளம்" என்று ஒரு பித்தளைப்பாத்திரம் இருக்கும். அண்டாக்களை மூடவோ அல்லது உணவுப்பொருட்களை வெயிலில் உலர்த்தவோ இந்த பெரிய வடிவிலான தட்டைப் பயன்படுத்துவார்கள். அதில் சின்ன சுத்தியல் கொண்டு தட்டினால் வருவது போன்ற ஒரு ஒலி இந்தப்பாட்டின் பின்னணியில் வந்து கொண்டே இருக்கும். புதுமையான ஏதோ ஒரு ட்ரம் ஆக இருந்திருக்கலாம் ('ஈரமான ரோஜாவே' பாட்டிலும் அதே சத்தம் தாளக்கருவிகளின் கூட்டத்தில், உச்ச அலைவரிசையில் தட்டிக்கொண்டிருப்பதைக் கேட்கலாம். ராசாவின் அப்போதைய புதிய விளையாட்டுக்கருவியோ என்னமோ )
பேஸ் கிட்டார் ஒலித்துணுக்குகளும், மற்ற கம்பி இசைக்கருவிகளின் துள்ளல்களும் பஞ்சமில்லால் வரும் இந்தப்பாட்டின் முக்கிய சிறப்பு என்னமோ மெட்டு தான்! நாம் இந்த இழையில் தொடர்ந்து கண்டு வருகிற படி, இசைக்கருவி அமைப்புகளை விடவும் மெட்டு முன்தங்கி இருக்கும் பாடல்களையே ராசா தெரிந்தெடுத்து சுசீலா அம்மாவுக்குக் கொடுத்து வந்திருக்கிறார் என்று எனக்குத்தோன்றுகிறது!
பொதுவாக ராசாவின் பாடலின் மெட்டுகளில் இனிமைக்கும், சிக்கலுக்கும் முன்னிடமும் ஆதிக்கத்துக்கும் இறுமாப்புக்கும் பின்னிடமும் இருக்கும். ஆனால், 'பாட வந்ததோ கானம்' பாடல் இந்த விதத்தில் ஒரு அதிசயம்! எல்லா அம்சங்களுமே தூக்கல் - எப்படி இதை சாதித்தார் என்பது இசை வல்லுனர்கள் குடைய வேண்டிய ஒன்று!
குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய மற்றொன்று, ராசாவின் அக்காலத்துப்பாடல்களில் அடித்து, நொறுக்கி விளையாடப்படும் "மேல்-தொப்பி" (ஹை ஹாட்) இதிலும் சுவை கூட்டி இருப்பது! இரண்டாம் இடை இசையில், குறிப்பாக அதன் முடிவில், இதன் ஒலி நம் காதையும் மனதையும் இன்பத்தில் ஆழ்த்தும்! வாசித்தது புருஷோத்தமராயிருக்கும் என நினைக்கிறேன் ("புரு"என்று எல்லாராலும் அறியப்படும் ராசாவின் ரிதம் துறைத்தலைவர்) - என்னவோ மகா அலெக்சாந்தருக்கு எதிரே போரிட்ட புருஷோத்தமர் (போரஸ்) என்ற நினைப்போடு வாசித்தாரோ என்னமோ, விளாசி இருப்பார்!

enna app sir, when r u planning to continue this series
rajeshkrv- Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
தடங்கலுக்கு மன்னிக்கவும்!rajeshkrv wrote:enna app sir, when r u planning to continue this series
இன்றைக்குக் கட்டாயம் ஒரு பதிப்பு உண்டு!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
முன்னமேயே சொல்லி இருப்பது போல், அம்மாவின் தாலாட்டுகளை நினைவுறுத்தும் குரல் என்பதால், சுசீலாவின் காதல் பாடல்களில் எனக்கு உணர்வு பூர்வமான லயிப்பு ஒரு நாளும் இருந்ததில்லை. எம்ஜியார் / சிவாஜி / ஜெமினி காலத்துப்பாடல்களின் காதல் சுவை என்னை அதிகம் ஈர்க்காததற்கு இது நிச்சயம் ஒரு முக்கியக்காரணி. (பாடல்களின் இசைத்தரம் என்னை வியப்பிலாழ்த்தும் என்றாலும், உணர்வுத்தூண்டல்கள் ஒன்றும் நிகழாது என்பது உண்மை).
அந்த விதத்தில், "பாட வந்ததோ கானம்" என் இளமைக்காலத்தில் வந்தது என்ற போதிலும், அதன் இசைத்துணுக்குகள் அசைத்த அளவுக்கு என் உணர்வுகளை அம்மாவின் குரல் அசைக்கவில்லை என்பது ஒரு அந்தரங்க உண்மை. பொதுவாகவே யேசுதாசின் குரலில் இருக்கும் வயது முதிர்ச்சியும் இந்த உணர்வுத்தூண்டல் நிகழ்வதற்கு இன்னொரு முட்டுக்கட்டை.
ஆதலினால், காதல் செய்ய இந்தப்பாடலின் பாடகர்கள் எனக்கு உதவவில்லை என்ற உண்மையை இப்பொழுது உடைத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன யோசனையில் ராசா இவர்களை "இளமைக்காலங்கள்" என்ற இசைத்தட்டில் ஒன்று சேர்த்தார் என்பது எனக்கு அன்றும் இன்றும் புரியாத புதிர்.
என்ற போதிலும், பல ஆண்டுகள் கழிந்தாலும், பல்லாயிரம் முறை கேட்டிருந்தாலும் இன்னும் அடங்காத பிரமிப்பு இவர்களின் குரல் வளம் மற்றும் பாடலின் வல்லமை / ஆளுமை மீது!
"கள்ளூறும் பொன் வேளை" என்ற பல்லவி வரி , "அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி" என்ற வரியில், அந்த "அன்பே" நீட்டப்படும் தருணம் - இங்கெல்லாம் வரும் உயர் அலைவரிசை மற்றும் ஒலியின் வலிமை!
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
இந்தக்குறள் தான் இந்தப்பாடலை சுசீலாம்மா மற்றும் யேசுதாசைப் பாடவைக்கும் படி ராசாவைப் பணித்திருக்கும் என்றே இப்போது தோன்றுகிறது!
அந்த விதத்தில், "பாட வந்ததோ கானம்" என் இளமைக்காலத்தில் வந்தது என்ற போதிலும், அதன் இசைத்துணுக்குகள் அசைத்த அளவுக்கு என் உணர்வுகளை அம்மாவின் குரல் அசைக்கவில்லை என்பது ஒரு அந்தரங்க உண்மை. பொதுவாகவே யேசுதாசின் குரலில் இருக்கும் வயது முதிர்ச்சியும் இந்த உணர்வுத்தூண்டல் நிகழ்வதற்கு இன்னொரு முட்டுக்கட்டை.
ஆதலினால், காதல் செய்ய இந்தப்பாடலின் பாடகர்கள் எனக்கு உதவவில்லை என்ற உண்மையை இப்பொழுது உடைத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன யோசனையில் ராசா இவர்களை "இளமைக்காலங்கள்" என்ற இசைத்தட்டில் ஒன்று சேர்த்தார் என்பது எனக்கு அன்றும் இன்றும் புரியாத புதிர்.
என்ற போதிலும், பல ஆண்டுகள் கழிந்தாலும், பல்லாயிரம் முறை கேட்டிருந்தாலும் இன்னும் அடங்காத பிரமிப்பு இவர்களின் குரல் வளம் மற்றும் பாடலின் வல்லமை / ஆளுமை மீது!
"கள்ளூறும் பொன் வேளை" என்ற பல்லவி வரி , "அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி" என்ற வரியில், அந்த "அன்பே" நீட்டப்படும் தருணம் - இங்கெல்லாம் வரும் உயர் அலைவரிசை மற்றும் ஒலியின் வலிமை!
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
இந்தக்குறள் தான் இந்தப்பாடலை சுசீலாம்மா மற்றும் யேசுதாசைப் பாடவைக்கும் படி ராசாவைப் பணித்திருக்கும் என்றே இப்போது தோன்றுகிறது!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
மீண்டும் தாலாட்டுப்பக்கம் செல்லுகிறேன்...அடுத்த பாடலுக்கு...
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
"கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை?" - என்ன அடிப்படையில் இந்தப்பழமொழி வந்தது என்று விலங்கு ஆய்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும். இந்த வலைப்பதிவின் படி, சுஜாதாவுக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதை வரி இதுவாம்:
கல்லூரிக்காலத்தில், இந்தப்பழமொழியின் சுருக்க வடிவை நண்பர் ஒருவர் ராசா பாடல்கள் பற்றிய விவாத நேரங்களில் பயன்படுத்துவார். வேண்டுமென்றே ராசாவைத்தாழ்த்தும் கூட்டம் அன்றும் இருந்தது. அப்படிப்பட்ட சிலர் ராசாவின் சில பாடல்களை "இதெல்லாம் ஒரு பாட்டா" என்று சொல்லும்போது ரத்தினச்சுருக்கமாக அவரிடம் இருந்து பதில் வரும் "இல்லை, கற்பூரம்" என்று!
பள்ளிக்காலத்தில் கற்பூரம் என்று எழுதினால் தமிழைய்யா திருத்துவார் - "கருப்பூரம்" என்று எழுதுவது தான் சரி என்பார். ("கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ" என்று தொடங்கும் நாலயிரத்திவ்வியப்பிரபந்தத்தின் நாச்சியார் திருமொழிப்பாடல்) .
இப்படியெல்லாம் இந்தச்சொல்லுக்கு இலக்கியப்பின்னணி இருந்தாலும், அந்தப்பொருளைப் பொறுத்த மட்டில் நாட்டுப்புற வழக்கு 'சூடம்' என்பது தான் ("சூடத்தக்கொளுத்து" என்றே சொல்வழக்கு நாடன் பகுதிகளில்! கற்பூரம் / கருப்பூரம் எல்லாம் எழுத்துத்தமிழில் தான்)!
கற்பூர மரம் (சின்னமோமம் கேம்போரா) இதன் இயற்கை ஆதாரம். செயற்கையாக உருவாக்கப்படும் சூடமும் பொதுவாகப் புழங்குகிறது . குழந்தைகளின் சளிக்கு மருந்தாகப்பயன்படும் என்றாலும் இதன் தலையாய பயன்பாடு வழிபாடு தொடர்பாகத்தான் என்பது எல்லோரும் அறிந்ததே!
"கற்பூர பொம்மை ஒன்று" என்ற பாடலுக்கு இவ்வளவு முன்னுரை போதும் என்று நினைக்கிறேன்
"கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை. கழுதைக்கு எதற்காக தெரிய வேண்டும் கற்பூர வாசனை?"
ரவி சுப்ரமணியம் எழுதிய கவிதையில் சுஜாதாவுக்குப் பிடித்த வரிகள் இது போல் பல!
கல்லூரிக்காலத்தில், இந்தப்பழமொழியின் சுருக்க வடிவை நண்பர் ஒருவர் ராசா பாடல்கள் பற்றிய விவாத நேரங்களில் பயன்படுத்துவார். வேண்டுமென்றே ராசாவைத்தாழ்த்தும் கூட்டம் அன்றும் இருந்தது. அப்படிப்பட்ட சிலர் ராசாவின் சில பாடல்களை "இதெல்லாம் ஒரு பாட்டா" என்று சொல்லும்போது ரத்தினச்சுருக்கமாக அவரிடம் இருந்து பதில் வரும் "இல்லை, கற்பூரம்" என்று!
பள்ளிக்காலத்தில் கற்பூரம் என்று எழுதினால் தமிழைய்யா திருத்துவார் - "கருப்பூரம்" என்று எழுதுவது தான் சரி என்பார். ("கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ" என்று தொடங்கும் நாலயிரத்திவ்வியப்பிரபந்தத்தின் நாச்சியார் திருமொழிப்பாடல்) .
இப்படியெல்லாம் இந்தச்சொல்லுக்கு இலக்கியப்பின்னணி இருந்தாலும், அந்தப்பொருளைப் பொறுத்த மட்டில் நாட்டுப்புற வழக்கு 'சூடம்' என்பது தான் ("சூடத்தக்கொளுத்து" என்றே சொல்வழக்கு நாடன் பகுதிகளில்! கற்பூரம் / கருப்பூரம் எல்லாம் எழுத்துத்தமிழில் தான்)!
கற்பூர மரம் (சின்னமோமம் கேம்போரா) இதன் இயற்கை ஆதாரம். செயற்கையாக உருவாக்கப்படும் சூடமும் பொதுவாகப் புழங்குகிறது . குழந்தைகளின் சளிக்கு மருந்தாகப்பயன்படும் என்றாலும் இதன் தலையாய பயன்பாடு வழிபாடு தொடர்பாகத்தான் என்பது எல்லோரும் அறிந்ததே!
"கற்பூர பொம்மை ஒன்று" என்ற பாடலுக்கு இவ்வளவு முன்னுரை போதும் என்று நினைக்கிறேன்
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
"கற்பூர பொம்மை ஓன்று" பாடல் 1990-ல் பாடகர் எஸ்பிபி நாயகராக நடித்த முதல் படமான "கேளடி கண்மணி"யில் உதித்த தாலாட்டு. இது இந்தத்தளத்துக்கு வரும் பெரும்பான்மையர் அறிந்தது தான்.
இந்தத்திரைப்படம் கண்டதில்லை என்றாலும் பாடல் காட்சியை யுட்யூபில் பார்த்திருக்கிறேன். எஸ்பிபியின் மனைவியாக கீதா நடித்திருப்பார். இவர்களது சிறு குழந்தையைத் தாலாட்டி சீராட்டும் பாடலே இது. அழகான மனைவி, அன்பான குடும்பம், இனிமையான குழந்தை - எளிய, அதே நேரம் சுவையான சூழலில் வரும் பாடல் என்று எழுத ஆசை தான்.
ஆனால் திரையில் கீதாவை மாலை போட்டுப்படத்தில் வைத்திருக்கிறார்கள். அதனால் சோகம் நிறைந்த பாடலாக உருமாறி இருக்கிறது.
பாடல் வரிகள் (பாடலாசிரியர் - மு மேத்தா) :
பல்லவி
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாடக்கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
சரணம் 1
பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
சரணம் 2
தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயைப் போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
இந்தத்திரைப்படம் கண்டதில்லை என்றாலும் பாடல் காட்சியை யுட்யூபில் பார்த்திருக்கிறேன். எஸ்பிபியின் மனைவியாக கீதா நடித்திருப்பார். இவர்களது சிறு குழந்தையைத் தாலாட்டி சீராட்டும் பாடலே இது. அழகான மனைவி, அன்பான குடும்பம், இனிமையான குழந்தை - எளிய, அதே நேரம் சுவையான சூழலில் வரும் பாடல் என்று எழுத ஆசை தான்.
ஆனால் திரையில் கீதாவை மாலை போட்டுப்படத்தில் வைத்திருக்கிறார்கள். அதனால் சோகம் நிறைந்த பாடலாக உருமாறி இருக்கிறது.
பாடல் வரிகள் (பாடலாசிரியர் - மு மேத்தா) :
பல்லவி
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாடக்கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
சரணம் 1
பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
சரணம் 2
தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயைப் போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
app_engine wrote:முன்னமேயே சொல்லி இருப்பது போல், அம்மாவின் தாலாட்டுகளை நினைவுறுத்தும் குரல் என்பதால், சுசீலாவின் காதல் பாடல்களில் எனக்கு உணர்வு பூர்வமான லயிப்பு ஒரு நாளும் இருந்ததில்லை. எம்ஜியார் / சிவாஜி / ஜெமினி காலத்துப்பாடல்களின் காதல் சுவை என்னை அதிகம் ஈர்க்காததற்கு இது நிச்சயம் ஒரு முக்கியக்காரணி. (பாடல்களின் இசைத்தரம் என்னை வியப்பிலாழ்த்தும் என்றாலும், உணர்வுத்தூண்டல்கள் ஒன்றும் நிகழாது என்பது உண்மை).
அந்த விதத்தில், "பாட வந்ததோ கானம்" என் இளமைக்காலத்தில் வந்தது என்ற போதிலும், அதன் இசைத்துணுக்குகள் அசைத்த அளவுக்கு என் உணர்வுகளை அம்மாவின் குரல் அசைக்கவில்லை என்பது ஒரு அந்தரங்க உண்மை. பொதுவாகவே யேசுதாசின் குரலில் இருக்கும் வயது முதிர்ச்சியும் இந்த உணர்வுத்தூண்டல் நிகழ்வதற்கு இன்னொரு முட்டுக்கட்டை.
ஆதலினால், காதல் செய்ய இந்தப்பாடலின் பாடகர்கள் எனக்கு உதவவில்லை என்ற உண்மையை இப்பொழுது உடைத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன யோசனையில் ராசா இவர்களை "இளமைக்காலங்கள்" என்ற இசைத்தட்டில் ஒன்று சேர்த்தார் என்பது எனக்கு அன்றும் இன்றும் புரியாத புதிர்.
என்ற போதிலும், பல ஆண்டுகள் கழிந்தாலும், பல்லாயிரம் முறை கேட்டிருந்தாலும் இன்னும் அடங்காத பிரமிப்பு இவர்களின் குரல் வளம் மற்றும் பாடலின் வல்லமை / ஆளுமை மீது!
"கள்ளூறும் பொன் வேளை" என்ற பல்லவி வரி , "அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி" என்ற வரியில், அந்த "அன்பே" நீட்டப்படும் தருணம் - இங்கெல்லாம் வரும் உயர் அலைவரிசை மற்றும் ஒலியின் வலிமை!
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
இந்தக்குறள் தான் இந்தப்பாடலை சுசீலாம்மா மற்றும் யேசுதாசைப் பாடவைக்கும் படி ராசாவைப் பணித்திருக்கும் என்றே இப்போது தோன்றுகிறது!
Interesting line of thought App sir.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
app,
vandhuten................ IR.. Thalattu paatu.. PS........ Great............
ungaluku pidichadha......... idhu innum Great.. ellam padikanam............ Thank u app..............
PS style.. epavum avanga..music ai vittu thalli nirpanga........... Unique style.. Voice Strength.......... romba strong...............

Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
கற்பனை வறட்சி காரணமாக இந்த இழையில் எழுதுவது கொஞ்சம் தடைப்பட்டிருக்கிறது...
இப்போதைக்கு ஒரு இணைப்பு:
http://isaikuyil.blogspot.com/2013/03/blog-post.html
இப்போதைக்கு ஒரு இணைப்பு:
http://isaikuyil.blogspot.com/2013/03/blog-post.html
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
PS enters Guinness
So, 17695 is the certified count for PS!
Much more than the previous listing of Asha B (IIRC somewhere around 11-12 K...anyways, that no longer matters as we have the certified number for PS ammA)...
Now, where are those fellows who claim 40K for SPB, 20K for VJ and similar ridiculous numbers for Mano kind of fellows?
So, 17695 is the certified count for PS!
Much more than the previous listing of Asha B (IIRC somewhere around 11-12 K...anyways, that no longer matters as we have the certified number for PS ammA)...
Now, where are those fellows who claim 40K for SPB, 20K for VJ and similar ridiculous numbers for Mano kind of fellows?
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» BGM Sharing Thread - ILAYARAAJA BGM THREAD
» ராசாவின் மெட்டுக்களில் உங்களைக்கவர்ந்தவை எவை?
» The Rawk thread
» Anything about IR found on the net - Vol 2
» MJ exclusive thread

Permissions in this forum:
You cannot reply to topics in this forum