ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
+9
SenthilVinu
groucho070
jaiganesh
plum
rajeshkrv
Admin
sagi
V_S
app_engine
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
நன்றி வி_எஸ்_ஜி!
உங்கள் ஆய்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
உங்கள் ஆய்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
Nice thread app. Nice start. Ye thendrale is one of the best of the IR-PS combinations.
As a matter of fact PS's ringtone was this song for couple of months.
B'ful composition and great rendition.Mahendran could have avoided hasini's closeup shots

rajeshkrv- Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
Welcome rajeshkrv. Please share your thoughts without fail. :smile:
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
"ஐப்பசியில் அடைமழை, கார்த்திகையில் கனமழை" என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டின் நாட்டுப்புறங்களில் சொல்வதுண்டு. மற்ற தட்பவெப்பங்கள் எப்படியோ, இந்த ஒன்றில் மட்டும் டெட்ராய்ட் தமிழ்நாட்டோடு கொஞ்சம் ஒத்துப்போகிறது இங்கு எப்போதும் நவம்பரில் மழைக்காலம் தான். இன்று அடைமழை! (ராத்திரி கொஞ்சம் வெண்பனியும் வீழும் என்று முன்னறிவித்திருக்கிறார்கள்).
தீபாவளிப்பண்டிகை இந்த ஐப்பசியில் வருவதால் மழையும் கூடவே வருவதுண்டு. சிறுசுகள் "வேணாமே" என்றும் பெருசுகள் "வேணுமே" என்றும் விரும்பும் மழை! (பட்டாசு சிறுசுகளின் கவலை - "வறட்டுத்தீபாவளி" ஆகக்கூடாதே என்பது பெருசுகளின் மனதில்).
எப்படியோ, தமிழ்நாட்டின் மழைக்காலத்தில், அதாவது தீபாவளிக்கு வந்த ஒரு சுசீலா பாடலை இன்றைய மழை எனக்கு நினைவுக்குக் கொண்டுவந்து விட்டது அது தான் இந்த இழையில் வரப்போகும் அடுத்த பாடல்! என்ன, ஒரு கால் நூற்றாண்டுக்கு முந்தைய தீபாவளிப்பாடல்
மழையோடு இந்தப்பாடலுக்கு வேறொரு உறவும் உண்டு - ஆனால், பொதுவான மழை அல்ல, "உப்பு மழை" !

Last edited by app_engine on Thu Sep 02, 2021 9:18 pm; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
rajeshkrv wrote:As a matter of fact PS's ringtone was this song for couple of months.
வருகைக்கும், இப்படி ஒரு அரிய தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி ராஜேஷ்!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
அற்புதமான பாடல்கள் இருந்தும், ரெட்டை வேடத்தில் கமல் இருந்தும், பரிதாபமான தோல்வியை சந்தித்தது 'எனக்குள் ஒருவன்'. 1984'ல் வந்த தீபாவளி ரிலீஸ் இது. (கே பாலச்சந்தரின் கவிதாலயா தயாரித்த இந்தப்படத்தை அப்போதைய மசாலா டைரக்டர் எஸ் பி முத்துராமன் இயக்கினார். ஸ்ரீப்ரியா, சோபனா என்று இரண்டு கதாநாயகிகள். கார்ஸ் என்ற இந்திக் கலைச்செல்வத்தின் தமிழ்ப்பதிப்பாம்!).
என்றாலும், இன்று வரை 'மேகம் கொட்டட்டும்' பாடல் பேசப்படுகிறது! அவ்வளவாய் இப்போது பேசப்படாவிட்டாலும், வந்த பொழுதில் மிகப்பரபரப்பாக ஒலிபரப்பான பாடல் தான் நமது இழையின் இரண்டாவது பாடல்.
#2 தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி!
(சுசீலாவுடன் நட்டுவனாரின் குரலும் பாடலில் பிரபலம்!)
முழுப்பாடல் வரிகளும் பாருங்கள்:
(வைரமுத்து என்று நினைக்கிறேன், காரணம் 'உப்பு மழை பெய்கிறதே' கொஞ்சம் கமல் கைவண்ணமும் தெரிகிறது )
பல்லவி:
தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி, என் தோழி !
காணவில்லை தலைவனை, காயவில்லை தலையணை
தேட வேண்டும் எந்தன் ஜீவனை!
சரணம் 1:
பொட்டு வைத்தான், பூவைக்கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான், பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்
என்ன ஒரு வேதனை? பத்து விரல் சோதனை!
தேனாற்றில் பாலோட, நானென்ன வாதாட?
கண் விழித்தால் காலை வேளை காணவில்லையே!
சரணம் 2:
ஊமைத்தென்றல் வந்து என்னைக்கொல்கிறதே
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே
உள்ளம் தொட்ட மன்மதா, என்னை விட்டுச்செல்வதா?
உன் சேதி வாராதா, உள் நெஞ்சம் ஆறாதா?
இந்த அலை நிலவைப்பார்த்துக் கைகள் நீட்டுதா?
யூட்யூப் இங்கே:

Last edited by app_engine on Tue Nov 13, 2012 4:11 pm; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
What a song.. I hate the 80's where only romance songs were heard again and again and these kind classic songs were not given that much hearing ..nevertheless it's such a b'ful song and IR time and again knows when to use PS's voice aptly and does it again.
Also after 60's and 70's situational songs were fading away and this one was a rare situational song wherein the heroine tries to tell her feeling for the hero indirectly(imagination though) but still nicely done. Sripriya and bharatanatyam you got to be kidding .. still i'm just forgiving all these just for PS & IR. Coming from Classical background this is a cake walk for PS but she knows what light music is and she does it with ease rather
effortlessly and real music lovers will instantly fall in love with this song..
thanks for the pick app.
Wishing everyone a very happy Deepavali.
Also after 60's and 70's situational songs were fading away and this one was a rare situational song wherein the heroine tries to tell her feeling for the hero indirectly(imagination though) but still nicely done. Sripriya and bharatanatyam you got to be kidding .. still i'm just forgiving all these just for PS & IR. Coming from Classical background this is a cake walk for PS but she knows what light music is and she does it with ease rather
effortlessly and real music lovers will instantly fall in love with this song..
thanks for the pick app.
Wishing everyone a very happy Deepavali.
rajeshkrv- Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
vAlithezhudhiya from some Mallu film is a preferred version for me compared to this.
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
Wonderful song App! Especially the charanams, totally different from the pallavi. The pallavi is kind of having a racy start, and the charanam takes its own time and then the merger, beautifully composed. One of PS's best.
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
அகத்திணை பற்றிய சிறிய விளக்கம் இங்கே:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஆக, நமது பாடல், தலைவி "பாலைத்திணை" நிலையில் உள்ளதை சுட்டுகிறது. முதல் சரணம் "வயது வந்தோருக்கு மட்டும்" ரகம் என்றாலும், செவ்வியல் இசைக்கருவி ஒலிகள் அதை அழகாய்ப் பூசிமெழுகி மறைக்கின்றன. சுசீலாம்மா அருமையாகத்தமிழில் பாடுவார் என்றாலும், மொழியின் விளையாட்டுக்கள் எல்லாம் தெரிந்தவர் அல்லர் என்றே நினைக்கிறேன். பாவம், விவரம் தெளிவாகச் சொல்லாமல் இந்த ராசா-கமல்-வைரம் எல்லாம் அவரை சதித்து விட்டிருப்பார்கள். (இந்தப்படத்தின் இன்னொரு பாடலில் வரும் வரி "புடவைப்புதையல் உனக்கே படையல்" - இந்தக் குறும்புப் பேர்வழிகள் ஜானகிக்கும் அதன் பொருள் சொல்லாமல் சதித்து விட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்! )
யாரைய்யா இந்த அற்புதமான நட்டுவனார்? 'மறைந்திருந்தே பார்க்கும்', 'நலந்தானா' (தில்லானா மோகனாம்பாள்) மற்றும் 'மன்னவன் வந்தானடி' (திருவருட்செல்வர்) பாடல்களில் உள்ளதும் இவர் குரலே என்பது என் யூகம். அவை மூன்றும் கே வி மகாதேவன், சுசீலா கூட்டில் வந்த காலத்தால் அழியா நாட்டியப் பாடல்கள்! அவை அளவுக்கு எனக்குள் ஒருவன் பாடல் நிலைநில்லாமைக்கு இசையல்ல காரணம் என்பது என் கருத்து. பாடல் வரிகளும், திரைக்காட்சி அமைவும் பல படிகள் கீழ். என்றாலும், ராசாவும், சுசீலாம்மாவும் மற்றும் நட்டுவனாரும் அதே உயர் நிலை எட்டி இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.
அதிலும் குறிப்பாக அந்த முதல் இடை இசையின் உச்சம் அதிசயம்! பாடல் முழுதும் முழங்கும் மிருதங்கம் மற்றும் தவில்களின் 'தகிட தகிட' மூன்றடி சுழற்சி, குதிரை ஓட்ட வேகத்தைத் தருகிறது. இது கூடாமல், ராசாவின் சுகமான பேஸ் கிட்டார் ஒலியும்!
அற்புதமான நடன மெட்டும் முன் சொன்ன மூன்று பாடல்களின் அதே அமைப்பைத்தழுவி சிறப்பாக உள்ளது. பாடல் வரிகளுக்கிடையில் வரும் குழலோசையும், இடை இசைகளில் மிளிரும் வீணை ஒலிகளும் மீண்டும் மீண்டும் கேட்டு, உள்வாங்கி, உணரத்தக்கன!

Hamsadhwani(beautiful sound!!) at its perfection is this song.
Plain reading the lyrics wont say how they fit into this tune - but Raaja does some pushing of
the longer syllables to make "Thaen aatril paalaada" work as if it is natural.. PS - does the brisk melody carnatic
singing appear easy - just as easy she did for "isai arasi" in thaai moogambigai..
Fantastic, yet very underrated song from the karz remake..

jaiganesh- Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
ஸ்ரீப்ரியா பாராமல் பாடல் கேட்க: http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0809'&lang=en
"அசை இழுவை" என்ற பதத்தை சென்ற பாடலில் பயன்படுத்தி இருந்தேன். அதை அசை நீட்சி என்று வேண்டுமானாலும் சொல்லலாம். 'தேர் கொண்டு சென்றவன்' பாடலில் இந்த நீட்சிகள் கோலாகலம்! செவ்வியல் இசையில் தேர்ந்த சுசீலா இவற்றை அனாயாசமாக இப்பாடலில் கையாளுகிறார்.
அதிலும் குறிப்பாக, ஒரே வரி மறுமுறை வரும்போது காட்டும் மாற்றங்கள், அடடா! எடுத்துக்காட்டாக, அந்த உப்பு மழை இரண்டாம் முறை பெய்யும் பொழுது எப்படி முடிக்கிறார் என்று பாருங்கள்! அந்த இறுதி 'தே' என்ற அசையை எப்படியெல்லாம் நீட்டி, வளைக்கிறார் / குலுக்குகிறார்! முதல் முறை ஒரு விதம், மறுமுறை வேறு விதம் - மெய் சிலிர்ப்பு!
பாடுவதில் மிகக்கடினமானது "ஆ" ஒலியின் நீட்சிகளும், இழுவைகளும் என்பது என் தனிக்கருத்து. முறைப்படி பாடிப்பயின்றவர்கள் இதை மறுக்கவோ / உறுதி செய்யவோ வேண்டுகிறேன்! நாவையும், உதடுகளையும், பற்களையும் பயன்படுத்தாமல் வெறும் தொண்டையிலிருந்தும் (ஒரு வேளை அடி வயிற்றிலிருந்தும்) ஒலிமாற்றங்கள் உண்டாக்க வேண்டுமல்லவா?
இதனால் 'செண்பகமே' பாடலின் தொடக்கத்தில் வரும் "ஆ ஆ" ஹம்மிங் எப்போதும் எனக்கு வியப்பு உண்டாக்கும். அதே போல சில "பகுதி-செவ்வியல்" வகைப்பாடல்களில் வரும் இவ்வித "ஆ"காரங்கள் எனக்குள் அதிசயிப்பை உண்டாக்குவன! யேசுதாஸ், ஜானகி இதில் கரை கடந்த மற்றிருவர்!
தேர்கொண்டு பாடலின் பல்லவி இறுதியில் அப்படி ஒரு "ஆ"காரத்தை சுசீலாம்மா ஊதித்தள்ளுவதைக்கேளுங்கள்! இந்தப்பாடல் முழுவதுமே அவரது குரலின் கொண்டாட்டம் என்று கூடச்சொல்லுவேன்! ஏறத்தாழ முழுப்பல்லவியும் உயர் அலைவரிசை / சரணத்தின் பகுதிகளும் உயர் அலைவரிசை - என்று பாட அவ்வளவு எளிதல்லாத பாடல்! என்றாலும், கேட்பவரது லயிப்பை நீக்காமல் மென்மையை எப்படியோ உறுதி செய்து விடுகிறார் இந்த மெல்லிசைக்குயில்! (இதுவே வாணியாக இருந்தால் - நினைத்தாலே நடுங்குகிறது, உடன் நினைவுக்கு வருவது "கவிதை கேளுங்கள்" )

Last edited by app_engine on Thu Apr 18, 2013 1:21 am; edited 2 times in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
ராசா இசையில் சுசீலாம்மாவின் மேற்கத்திய மரபிசை & இந்திய மரபிசை சார்ந்த பாடல்கள். #1 / #2 ஆக வந்துவிட்டன!
அடுத்து தமிழ் நாட்டுப்புற இசை / தெம்மாங்கு வர வேண்டிய தருணம்
அடுத்து தமிழ் நாட்டுப்புற இசை / தெம்மாங்கு வர வேண்டிய தருணம்
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
த.நா.வில் பல பையன்களும் காய்கறி மற்றும் பூ வாங்குவது - அதாவது சரியாக வாங்கப்படிப்பது - கல்யாணத்துக்குப் பின் தான். (நான் சொல்வது அந்தக்காலத்தில், இப்போ எப்படியோ தெரியாது.) அதிலும் என்னைப்போன்ற பேர்வழிகள் அதுக்கப்புறமும் நிறையக்குட்டு வாங்கித்தான் சரிப்படுவார்கள்.
காய்கறி விஷயத்தில் நான் தேறி விட்டாலும், இந்தப் பூ பிசினஸ் சரிப்பட்டு வந்ததே இல்லை. பூக்களை செடிகொடிகளில் வைத்துப்பார்ப்பது தான் அழகு என்று ஆழ்மனதில் அழுந்தி விட்டதோ தெரியாது. எப்படியோ, கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் இருப்பதால் இது ஒரு பிரச்னை இல்லை ரொம்ப டோஸ் கிடைத்தால் கடைக்காரன் கலர் கலராக சேர்த்து வைத்து இருக்கும் ஒரு பூச்செண்டு வாங்கிக்கொடுத்து சமாளித்து விடலாம்.
இப்படிப்பட்ட நான், பணியிடத்தில் ஒரு சிறு கொண்டாட்டத்துக்காக "எங்கே பூக்கள் வாங்குவது" என்று சக பணியாளர்கள் போன வாரம் தர்க்கம் செய்து கொண்டிருந்த போது (அதிலும் எல்லாரும் பெண்கள் வேறு) மரியாதையாக வாயை மூடிக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.
பாழாய்ப்போன இந்த நாக்கு சும்மா இருக்காதே அதுவும் "எங்கையுமே கிடைக்கலை" ரேஞ்சில் அவர்கள் கவலைப்படுவதைக்கேட்ட போது, "எங்க வீட்டுக்கிட்ட இருக்கற க்ரோகர் கடையில் எப்பவும் நிறைய நல்ல பூக்கொத்துகள் ஃப்ளோரல் செக்ஷனில் இருக்கும்" என்று அது உளறி வைத்தது!
விளைவு?
அவற்றை வாங்கி வரும் பணியை மேலாளி அம்மா என் தலையில் கட்டினார். ஒரே ஒரு பூச்செண்டு வாங்கி வர அவ்வளவு அலட்டிக்கொள்ளும் நான், பத்துக்கொத்துகளை (ஒவ்வொன்றிலும் ஆறு ஸ்டெம்கள் வேறு) தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வருவது வீட்டுக்காரம்மாவுக்கு மிக ஹாஸ்யமான காட்சியாக மாறிப்போனது.
போதாக்குறைக்கு அவற்றை வாடாமல் காப்பாற்ற நீரில் இட்டு வைத்துப்பாதுகாக்கும் பணி வேறு! மற்ற நாள் அதே போல் முக்கிக்கொண்டு பார்க்கிங் இடத்திலிருந்து அலுவலகம் வரை -கிட்டத்தட்ட கால் மைல் தூரம்- தூக்கிச்சென்ற போது எல்லோரும் என்னையே பார்ப்பது போலும் நான் துணி இல்லாமல் நடப்பது போலும் பயங்கரமான உணர்வு!
எது எப்படியோ, பூவாயி பாட்டு பற்றி நான் எழுத நினைத்த நேரத்தில் இப்படி ஒரு விதமாகப் "பூக்களோடான உறவு" ஏற்பட்டது விந்தை தான்

'ஆயி' என்ற சொல்லுக்கு ஒன்றிலதிகம் பொருள் உள்ளது தெரிந்ததே.
ஒரு முறை விகடனில் 'ஆத்தா, நான் பாஸாயிட்டேன் ' மாதிரியான படப்பெயர்களைக் கேலி செய்து வந்த ஜோக் :
குழந்தை, அம்மாவிடம் : "ஆத்தா, நான் ஆயி இருந்துட்டேன்"
தெளிவாகவே, 'பூவாயி'க்கு வேறு பொருள் - 'பூவாத்தாள்' / 'மலர்த்தாய்' என்றே பொருள் கொள்ள வேண்டும். எங்கள் நாட்டுப்புறத்தில் அம்மாவை ஆயி என்று அழைப்பதும், அப்பாயி / அம்மாயி போன்ற உறவுப்பெயர்களும், கருப்பாயி, ராக்காயி போன்ற சொந்தப் பெயர்களும் சர்வ சாதாரணம்! சமீபத்தில் இறந்து போன என்னுடைய அத்தை பெயர் இளங்கோ அடிகளுக்குக் கண்டிப்பாய்ப்பிடிக்கும் -சிலம்பாயி! (சரியான வயது அவருக்கும் யாருக்கும் தெரியாது - ஆனால் என் அப்பா உட்பட்ட அவருடைய தம்பிகளின் வயதின் அடிப்படையில் தொண்ணூறுக்கு மேல் என்று கணக்கிடலாம் - எண்பது வயதுக்கப்புறமும் காட்டுக்கும் தோட்டத்துக்கும் போய் வந்து கொண்டிருந்தவர்; தொங்கட்டான் அணிந்து நீண்ட காதும், பழமொழிகள் வரிக்குவரி தெறிக்கும் நாட்டுப்புற மொழியுமாக பாரதிராசா படம் பார்க்கும்போதெல்லாம் கட்டாயமாக நினைவுக்கு வருபவர்).
ஆயி என்ற சொல், திருச்சி மாவட்டத்தில் அம்மா மக்களை ஆசையாக அழைக்கும் விளிப்பெயராக இருப்பதையும் கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் முதல் முதலாய் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவப்பட்ட கல்லூரி உள்ள புத்தனாம்பட்டிக்கு அடுத்துள்ள அம்மணி மங்கலம் (அரசிதழில் உள்ள ஊர்ப்பெயர் "அபினி மங்கலம்" ) என் கல்லூரித்தோழனின் ஊர். அவன் வீட்டுக்கு ஒரு முறை சென்ற போது அவனுக்குக்கிடைத்த அதே அன்பான 'ஆயி, ஆயி' என்ற விளி அவனது அம்மா எனக்கும் அருளியது மறக்க முடியாத, என்றும் நினைத்துப் பூரிக்கும் ஒன்று!
அப்படியாக, 'நான் பூவாயி' என்று பல்லவியில் இனிமையாக ஒலிக்கும் இந்தப்பாடல் அற்புதமான நாடன் பாட்டாக இருப்பதில் அதிசயமில்லை!

'எங்க ஊரு காவக்காரன்' என்ற இந்தப்படத்தைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ராமராஜன் படத்துக்கு ராசா இசை என்ற அளவில் எவரும் யூகிக்க முடியும்.
டி பி கஜேந்திரன் என்பவராம் இயக்குனர். கேள்விப்பட்டதில்லை. யூட்யூபில் இருந்து நாயகி கௌதமி என்று அறிந்து கொள்ளலாம். அல்லாமல் வேறு ஒன்றும் தெரியாது.
பாடல் வரிகளில் வரும் 'நாத்து நடும்' செயல் திரைக்காட்சியிலும் இருக்கிறது. (கௌதமி நாத்து - அதாவது "நாற்று" - நடுகிறாரோ இல்லையோ அடிக்கடி நெற்றி வேர்வையைத் துடைத்துக்கொள்கிறார் நல்ல வெயிலில் படமாக்கி இருப்பார்கள் போலும்! ராமராஜன் "புலிநகம்" வைத்த சங்கிலி எல்லாம் போட்டு வேடிக்கையாக இருக்கிறார்!
பாடல் வரிகள்:
தென்பாண்டிச்சீமை தெம்மாங்குப்பாட்டு
பாட்டோட வாழும் என் சாமியே
ஓம்பேரப் போட்டு நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் ஓம்பூமியே
என் மூச்சு என் பேச்சு நீ தானையா
என் வாக்கு நீ கேட்டு காப்பாத்தையா
பல்லவி
ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி
நானா பாடலியே நீதான் பாட வச்சே
சரணம் 1
வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது
பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு
விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு
நீ வாயேன் வழி பாத்து
சரணம் 2
கண்ணுதான் தூங்கவில்ல காரணம் தோணவில்ல
பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே
நாட்டுப்புறத்தில் நாற்று நடல் மிகப்புனிதமாகக் கருதப்படும் ஒன்று என்பதை சிறு வயதிலேயே உணர நேர்ந்தது. பள்ளிப்பருவம் முழதும் காலைக்குளியல் தோட்டக்கிணறுகளில் தான். (பொதுவாக மோட்டார் பம்ப்செட் தண்ணியில். மின்சாரம் இல்லாத போது மட்டும் கிணற்றில் குதித்து விடுவோம்). சிறுவயதில் அப்படி ஒரு காலைப்பொழுதில் குளிக்கச்செல்லும்போது வரப்பை ஒட்டிக்கிடந்த நாற்றுக்கட்டை அறியாமல் மிதித்து விட, வெகுண்ட ஒரு பெண்மணி "என்ன தம்பி, பிள்ளைய மிதிச்சுட்டுப்போற" என்று சீறினது முதலே நாற்றின் முக்கியத்துவம் எனக்குத்தெரியும்.
குற்ற உணர்வோடு நான் நெளியும் போது, எனக்கு சற்றுப்பின்னால் வந்து கொண்டிருந்த என் அப்பாவுக்கு முன்பு வலியச்சென்று இன்னொரு பெண் நாற்றுக் கட்டை வரப்பில் இடுவதையும், அவரை அவர்கள் எல்லோரும் வழி மறிப்பதையும் பார்த்து இன்னும் குழம்பினேன். ஒரே ஒலவைச்சத்தமும் கூச்சலும் வேறு! அப்பா சிரித்துக்கொண்டே அவர்கள் எல்லோருக்கும் காசு கொடுத்ததும் தான் போக விட்டார்கள்.
அப்படியாக, நாற்று என்பது குழந்தை போல!
இப்போதும் மனதில் மறையாத ஓவியம் அந்த நெல் வயல்!

Last edited by app_engine on Wed Nov 28, 2018 8:25 am; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
Superb write-up App on Aasayila paathi katti and excellent narration on 'naRRu nadal'. Took me to our villages. I too didn't know how much they respect them. Thank you for sharing very valuable information! What a song! No doubts Maestro had written P Susheela's name to this song and almost whole soundtrack; Arumbaagi Mottaagi, ThOppOram Thottil Katti, Maalai KarukkalilE, Jivvu Jivvu Jivvunnu.
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
கவுதமியைப்பார்க்காமல் பாட்டுக்கேட்க:
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0820'&lang=en
#3 ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வச்சேன் நான் பூவாயி
பாடல் வரிகள் கங்கை அமரன் என்று தோன்றுகிறது.
"ராசாவுக்கு உறக்கத்தின் நடுவிலும் வந்து விழும்" என்று சொல்லத்தக்க எளிய தெம்மாங்கு மெட்டு. (சந்தங்களில் கொஞ்சம் அங்கங்கே 'இன்று நீ நாளை நான்' படத்தின் 'மொட்டு விட்ட முல்லக்கொடி' பாடலின் சாயல்).
தொடக்கத்தில் இசைக்கருவிகள் ஏதுமின்றி சில வரிகள். அதைத்தொடர்ந்து மிகக்குறுகிய முக இசை. மெலிதான குழலிசையின் கூட்டத்தில் கீபோர்ட். இவற்றுக்கிடையில் நரம்பு ஒன்றை மீட்டும் சத்தமும்!
பல்லவியை விட இனிய அனுபல்லவி ("நானாப்பாடலியே - நீ தான் பாட வச்சே") ! சுகமான மெட்டுக்கு சுவையான 'தகதிமி தகஜுனு' நாலடிச் சுழற்சியில் தாளம்! ராசாவின் ஸ்பெஷல் ரெசிப்பியான தாலாட்டும் தபலாவுக்கு பேஸ் கூட்டு! இவற்றுடன், மேற்கத்திய மரபிசையின் "அழைப்பதும் - விடை தருவதும்" இந்தப்பாட்டின் முழு நீளம் நாம் அனுபவிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, பாடகி "நான் பூவாயி" என்று அழைக்கவும் உடனே குதித்து வந்து "உத்தரவு தலைவி" என்பது போல் விடை தரும் அந்தக்குழல் மற்றும் சந்தூர்(?) சத்தம் - ஆஹா, என்ன சுகமான உலகம்! அதே போல, சரணத்தின் முதல் வரியில் பாடகி கடைசி அசையை நீட்டும் போது (எ-டு: கண்ணு தான் தூங்கவில்ல...வின் கடைசில் வரும் 'ல'வை இனிமையாக இழுக்கும்போது) வரும் அந்தக் குறும்பான குழலொலி இருக்கிறதே - அட அட!
முதல் இடை இசை தான் இந்தப்பாட்டில் எனது உச்ச உன்மத்த நேரம்! ஆராயாமல் அனுபவிக்க வேண்டிய அற்புதம்! குழலொலி வரும்போதே மயிர்கூச்செரியும்! அதையும் விடக்குழலுக்கு மேல் குறும்பாக ஒலிக்கும் அந்த உயர் அலைவரிசை வயலின்கள்! இந்த ஒரு இடை இசைக்கு மட்டுமே இந்த உலகின் எல்லாப் பொன்மணி வைரங்களையும் ராசா காலில் வந்து கொட்டலாம்!
இரண்டாம் இடை இசையில் குறும்புக்குப்பதிலாக சாந்தம்! மென்மை! எப்படித்தான் இந்த மனிதருக்கு இந்த வேதிக்கலவை செய்ய முடிகிறதோ என்று வியக்கும் வண்ணம் குழல், வயலின்கள், பேஸ் கிட்டார் மற்றும் கீபோர்ட் எல்லாம் அடுக்கடுக்காய் செதுக்கி அமைக்கப்பட்ட ஒரு அரிய கலைப்பேழை!
ஹூம், பேசிப்பேசித் தீராது இந்த நாட்டுப்புறக்கலைஞனின் கைவண்ணங்கள்!

மிக்க நன்றி V_S_ஜி!
சிறுவயதில் எனக்கு நாற்றங்கால் பார்க்க ரொம்பப்பிரியம்! அப்படியே பச்சைப்பசேல் என்று அழகாய் இருக்கும். அதை ஏன் அநியாயமாகப் பிடுங்கி வயலில் நட்டு அழகிழக்கச்செய்கிறார்கள் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்

Fantastic pick. T.P.Gajendran was Visu's assistant and then became director himself.
Aasayila pathi katti has 2 versions one solo and one duet..
the best song from the album is Thopporam thottil katti. Absolute stunner by PS.
Ramarajan-gowthami acted in quite no of movies then ..
Gangai amaran's lyrics .. simple nothing to rave about except for Raja's stunning music and PS's rendition..
Deva rehashed the same tune for his "aadiyile sethi solli" GA wrote that song too. Atrocious...
Aasayila pathi katti has 2 versions one solo and one duet..
the best song from the album is Thopporam thottil katti. Absolute stunner by PS.
Ramarajan-gowthami acted in quite no of movies then ..
Gangai amaran's lyrics .. simple nothing to rave about except for Raja's stunning music and PS's rendition..
Deva rehashed the same tune for his "aadiyile sethi solli" GA wrote that song too. Atrocious...
rajeshkrv- Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
App, T.P. Gajendran is also an actor now, minor comedian. Short tubby guy, the one who directs Kamal as Lord Shiva (Sivan bubble oothamAttaru Sambantham) in PKS.
Can't remember the movie, but the song was a bit of a hit among us over here. Constant radio play. Good one, app, especially the explanation on "ayee".

groucho070- Posts : 269
Reputation : 1
Join date : 2012-11-26
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
கள்ளக்குரலில் பாடுதல் என்பது மேற்கத்திய இசைத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறை என்றாலும் தமிழ் மரபிசை விரும்பிகள் (மற்றும் "முயற்சி" விரும்பிகள்) அவ்வகையில் பாடுவதை எள்ளி நகையாடுவதை சில சமயம் கண்டிருக்கிறேன்.
80'களில் வந்த ஒரு அரசு பதில் (குமுதம்) உடனடியாக நினைவுக்கு வருகிறது:
கேள்வி: ஜானகியின் குரல்?
அரசு பதில்: அது கால் குரல்!
என்ன பொருளில் சொன்னார் என்று எனக்குப்புரியவில்லை என்றாலும் என் பெரியம்மா பையன் சொன்ன விளக்கம் "கள்ளக்குரல்" என்பதாக. (இப்போது கேட்டால் "குவார்ட்டர் / போதை தருவது" என்று ஒரு வேளை மாற்றிச்சொல்லலாம்).
எது எப்படி இருந்தாலும், நான் கேட்ட வரை, சுசீலாம்மாவுக்கு அது தேவைப்பட்டதே இல்லை என்றே தோன்றுகிறது. மட்டுமல்ல, அவரது பிரபலக் கூட்டுப்பாடகரான டி எம் எஸ் போல "மூக்குக்குரலிலும்" பாட வேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
இதனாலோ என்னமோ, ராசா கவலையே படாமல் சுசீலாவுக்குப் பாட்டுகள் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். பொதுவாக அவருக்குத் "தரம் தாழ்ந்த" வரிகள் உள்ள பாடல்கள் / முக்கல் முனகல் வகையறாக்கள் கொடுத்ததில்லை என்பதைத்தவிர "இதை இவர் குரல் கையாளுமா, பாட முடியுமா" என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை!
இசைக்கருவிகள் இல்லாமல் வரும் அந்தத் தொடக்க வரிகளெல்லாம் அவ்வளவு இனிமை. (திரைப்பாடகிகள் எல்லாருக்கும் இது சரிவரும் என்று சொல்ல இயலாது). கொஞ்சம் வயதாகி விட்டிருந்தது என்ற போதிலும் ஒரு அலட்டலும் இல்லாமல் இந்தப்பாடலின் கடினமான பகுதிகளை அவர் ஊதித்தள்ளுவதை நாம் காண முடியும். ("பொண்ணு மணித்தேரு, நான் பூட்டி வச்சேன் பாரு" எல்லாம் ஒரு அலட்டலும் இல்லாமல் விளையாடுகிறார்!)
இவற்றுக்கெல்லாம் மேலே அவர் உள்ளடக்கி வைக்கும் சங்கதிகள்! அம்மம்மா! என்ன ஒரு இனிமை - "நானாப்பாடலியே" வை இறுதியில் இரு முறை பாடுவதைக் கவனியுங்கள்! முதல் முறை ஒரு விதம் - தொடர்ந்து வருவது இன்னொரு விதம்!
பொதுவாக "நாகரிகப்"பாடல்கள் இவர் வசம் செல்லும்! (பட்டிக்காட்டுப் பாடல்கள் ஜானகிக்கும் மற்றுள்ள பாடகிகளுக்கும்)... என்றாலும், இந்தப்படத்தின் அத்தனை நாட்டுப்புறப்பாடல்களும் முழுமையாக அம்மாவுக்கு ராசா கொடுத்திருக்கிறார். அவரும் விளாசித்தள்ளி இருக்கிறார்! நூறு சதவிகிதம் பட்டிக்காட்டுத்தன்மை இல்லை என்பது உண்மை தான். ஆனால், 80-களில் தமிழ்நாட்டு நாட்டுப்புறத்தில் வாழ்ந்த, ஒரு அஞ்சாங்கிளாஸ் வரையாவது படித்த பெண்களுக்குக்கூட நாகரிகச்சாயல் பேச்சில் வந்து விட்டிருந்தது என்பது உண்மை!
அவ்விதம், இவரது குரலும், பாடும் விதமும் சூழலுக்கு அருமையாக ஒத்துப்போவதை நாம் ஒத்துக்கொள்ளலாம்!

Last edited by app_engine on Wed Nov 28, 2012 8:25 pm; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
தகவலுக்கும் கருத்துகளுக்கும் நன்றி ராஜேஷ் & க்ரௌசோ!
ஆச்சு, மூணு ஒருமைப்பாடல் முடிச்சாச்சு - அடுத்து டூயட்!
ஆச்சு, மூணு ஒருமைப்பாடல் முடிச்சாச்சு - அடுத்து டூயட்!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
May be under IR's baton she did not sing much of folkish numbers but right from T.Chalapathirao , MSV,KVM and many others she has sung many many folkish tunes . for instance Kurunjiyile poo malarndhu, theru paaka vandhirukkum, othayadi pathayile, pambai udukkai katti and many more
where gramiya manam was brought out perfectly by her ...
where gramiya manam was brought out perfectly by her ...
rajeshkrv- Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10
Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread
ஆச்சு, ஒரு டூயட் பாட்டுக்கான சமயம் ஆச்சு
மேற்கத்திய "பொதுமக்களின்" இசை தற்போது முக்கால்வாசி தனியாள் பாட்டுகளே. சொல்லப்போனால், பல பத்தாண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் குழுப்பாடல்கள்! (தனியாள் பாட்டுகளையே தொழில்நுட்பம் கொண்டு பல சந்தர்ப்பங்களிலும் குழு போலக்காட்டி விடுகிறார்கள் என்பது வேறு).
இரட்டையர் பாடல்கள், அதிலும் ஆண்-பெண் பாடல்கள் மிக மிகக்குறைவே. 80-களின் மிகப்பிரபல பாடகர்கள், அதாவது மைக்கேல் ஜாக்சன், மடோன்னா போன்ற பிரபலங்கள் எத்தனை ஆண்-பெண் டூயட் பாடி இருக்கிறார்கள்? துருவித்துருவித் தேடினாலும் கண்டுபிடிப்பது மிகக்கடினம்.
தமிழ்த்திரை இசையோ இந்த விஷயத்தில் நமக்கு ரொம்ப தாராளமாக இருந்திருக்கிறது. மனிதன் எப்படி ஆண்-பெண்ணாக வாழ்கிறானோ அப்படியே நமது இசையிலும் ஆண்-பெண் இரட்டைப்பாடல்களைத்தந்து இயல்போடு ஒன்றி இருக்கிறார்கள்.
சமீபத்தில் நான் படித்த ஒரு ருசிகரமான கட்டுரை நினைவுக்கு வருகிறது. நீங்கள் படைப்பில் நம்பிக்கை உள்ளவர் என்றால் இதைக்கட்டாயம் படிக்க வேண்டும். பரிணாமவாதி என்றாலும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்பது என் கருத்து
http://www.trueorigin.org/sex01.asp
ராசாவின் முதல் படத்தில் டூயட் இல்லை. ஆனாலும் அன்னக்கிளி மிகப்பிரபலம்! கிட்டத்தட்ட அதுவே தமிழ்த்திரை இசைக்கு ஒரு சின்னப் புரட்சி தான். அன்றுவரை முதலிடத்தில் இருந்த டூயட் பாடகர்கள் ரெண்டு பேரையும் சோகமான தனிப்பாடல் பாடி அழவைத்து விட்டு, இருந்த மற்ற குஷிப்பாடல்களையும் ஜானகிக்குக்கொடுத்து விட்டார்கள். (இதில் ராசாவின் பங்கு எவ்வளவு, பஞ்சு என்ன செய்தார், தேவராஜ்-மோகன் எப்படி வழிநடத்தினார்கள் என்றெல்லாம் உறுதியாகத்தெரியாது.)
நமக்குத்தெரிந்ததெல்லாம் இவ்வளவே : ராசாவின் முதலாவதும் மிகச்சிறப்பாக அமைந்ததுமான டூயட் பாட்டை சுசீலாவுடன் யேசுதாஸ் பாடவேண்டும் என்று காலம் முடிவு செய்து வைத்திருந்திருக்கிறது!

Similar topics
» BGM Sharing Thread - ILAYARAAJA BGM THREAD
» ராசாவின் மெட்டுக்களில் உங்களைக்கவர்ந்தவை எவை?
» The Rawk thread
» Anything about IR found on the net - Vol 2
» MJ exclusive thread

Permissions in this forum:
You cannot reply to topics in this forum