Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

+9
SenthilVinu
groucho070
jaiganesh
plum
rajeshkrv
Admin
sagi
V_S
app_engine
13 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  rajeshkrv Fri Feb 08, 2013 9:26 am

enna app sir, when r u planning to continue this series

rajeshkrv

Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Feb 08, 2013 4:08 pm

rajeshkrv wrote:enna app sir, when r u planning to continue this series
தடங்கலுக்கு மன்னிக்கவும்!
இன்றைக்குக் கட்டாயம் ஒரு பதிப்பு உண்டு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Feb 08, 2013 9:10 pm

முன்னமேயே சொல்லி இருப்பது போல், அம்மாவின் தாலாட்டுகளை நினைவுறுத்தும் குரல் என்பதால், சுசீலாவின் காதல் பாடல்களில் எனக்கு உணர்வு பூர்வமான லயிப்பு ஒரு நாளும் இருந்ததில்லை. எம்ஜியார் / சிவாஜி / ஜெமினி காலத்துப்பாடல்களின் காதல் சுவை என்னை அதிகம் ஈர்க்காததற்கு இது நிச்சயம் ஒரு முக்கியக்காரணி. (பாடல்களின் இசைத்தரம் என்னை வியப்பிலாழ்த்தும் என்றாலும், உணர்வுத்தூண்டல்கள் ஒன்றும் நிகழாது என்பது உண்மை).

அந்த விதத்தில், "பாட வந்ததோ கானம்" என் இளமைக்காலத்தில் வந்தது என்ற போதிலும், அதன் இசைத்துணுக்குகள் அசைத்த அளவுக்கு என் உணர்வுகளை அம்மாவின் குரல் அசைக்கவில்லை என்பது ஒரு அந்தரங்க உண்மை. பொதுவாகவே யேசுதாசின் குரலில் இருக்கும் வயது முதிர்ச்சியும் இந்த உணர்வுத்தூண்டல் நிகழ்வதற்கு இன்னொரு முட்டுக்கட்டை.

ஆதலினால், காதல் செய்ய இந்தப்பாடலின் பாடகர்கள் எனக்கு உதவவில்லை என்ற உண்மையை இப்பொழுது உடைத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன யோசனையில் ராசா இவர்களை "இளமைக்காலங்கள்" என்ற இசைத்தட்டில் ஒன்று சேர்த்தார் என்பது எனக்கு அன்றும் இன்றும் புரியாத புதிர்.

என்ற போதிலும், பல ஆண்டுகள் கழிந்தாலும், பல்லாயிரம் முறை கேட்டிருந்தாலும் இன்னும் அடங்காத பிரமிப்பு இவர்களின் குரல் வளம் மற்றும் பாடலின் வல்லமை / ஆளுமை மீது!

"கள்ளூறும் பொன் வேளை" என்ற பல்லவி வரி , "அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி" என்ற வரியில், அந்த "அன்பே" நீட்டப்படும் தருணம் - இங்கெல்லாம் வரும் உயர் அலைவரிசை மற்றும் ஒலியின் வலிமை!

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"

இந்தக்குறள் தான் இந்தப்பாடலை சுசீலாம்மா மற்றும் யேசுதாசைப் பாடவைக்கும் படி ராசாவைப் பணித்திருக்கும் என்றே இப்போது தோன்றுகிறது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Feb 08, 2013 10:10 pm

மீண்டும் தாலாட்டுப்பக்கம் செல்லுகிறேன்...அடுத்த பாடலுக்கு...Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Feb 11, 2013 10:34 pm

"கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை?" - என்ன அடிப்படையில் இந்தப்பழமொழி வந்தது என்று விலங்கு ஆய்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும். இந்த வலைப்பதிவின் படி, சுஜாதாவுக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதை வரி இதுவாம்:

"கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை. கழுதைக்கு எதற்காக தெரிய வேண்டும் கற்பூர வாசனை?"

ரவி சுப்ரமணியம் எழுதிய கவிதையில் சுஜாதாவுக்குப் பிடித்த வரிகள் இது போல் பல!

கல்லூரிக்காலத்தில், இந்தப்பழமொழியின் சுருக்க வடிவை நண்பர் ஒருவர் ராசா பாடல்கள் பற்றிய விவாத நேரங்களில் பயன்படுத்துவார். வேண்டுமென்றே ராசாவைத்தாழ்த்தும் கூட்டம் அன்றும் இருந்தது. அப்படிப்பட்ட சிலர் ராசாவின் சில பாடல்களை "இதெல்லாம் ஒரு பாட்டா" என்று சொல்லும்போது ரத்தினச்சுருக்கமாக அவரிடம் இருந்து பதில் வரும் "இல்லை, கற்பூரம்" என்று!

பள்ளிக்காலத்தில் கற்பூரம் என்று எழுதினால் தமிழைய்யா திருத்துவார் - "கருப்பூரம்" என்று எழுதுவது தான் சரி என்பார். ("கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ" என்று தொடங்கும் நாலயிரத்திவ்வியப்பிரபந்தத்தின் நாச்சியார் திருமொழிப்பாடல்) .

இப்படியெல்லாம் இந்தச்சொல்லுக்கு இலக்கியப்பின்னணி இருந்தாலும், அந்தப்பொருளைப் பொறுத்த மட்டில் நாட்டுப்புற வழக்கு 'சூடம்' என்பது தான் Smile ("சூடத்தக்கொளுத்து" என்றே சொல்வழக்கு நாடன் பகுதிகளில்! கற்பூரம் / கருப்பூரம் எல்லாம் எழுத்துத்தமிழில் தான்)!

கற்பூர மரம் (சின்னமோமம் கேம்போரா) இதன் இயற்கை ஆதாரம். செயற்கையாக உருவாக்கப்படும் சூடமும் பொதுவாகப் புழங்குகிறது . குழந்தைகளின் சளிக்கு மருந்தாகப்பயன்படும் என்றாலும் இதன் தலையாய பயன்பாடு வழிபாடு தொடர்பாகத்தான் என்பது எல்லோரும் அறிந்ததே!

"கற்பூர பொம்மை ஒன்று" என்ற பாடலுக்கு இவ்வளவு முன்னுரை போதும் என்று நினைக்கிறேன் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Feb 13, 2013 1:04 am

"கற்பூர பொம்மை ஓன்று" பாடல் 1990-ல் பாடகர் எஸ்பிபி நாயகராக நடித்த முதல் படமான "கேளடி கண்மணி"யில் உதித்த தாலாட்டு. இது இந்தத்தளத்துக்கு வரும் பெரும்பான்மையர் அறிந்தது தான்.

இந்தத்திரைப்படம் கண்டதில்லை என்றாலும் பாடல் காட்சியை யுட்யூபில் பார்த்திருக்கிறேன். எஸ்பிபியின் மனைவியாக கீதா நடித்திருப்பார். இவர்களது சிறு குழந்தையைத் தாலாட்டி சீராட்டும் பாடலே இது. அழகான மனைவி, அன்பான குடும்பம், இனிமையான குழந்தை - எளிய, அதே நேரம் சுவையான சூழலில் வரும் பாடல் என்று எழுத ஆசை தான்.

ஆனால் திரையில் கீதாவை மாலை போட்டுப்படத்தில் வைத்திருக்கிறார்கள். அதனால் சோகம் நிறைந்த பாடலாக உருமாறி இருக்கிறது. Sad

பாடல் வரிகள் (பாடலாசிரியர் - மு மேத்தா) :

பல்லவி

கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாடக்கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

சரணம் 1

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

சரணம் 2

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயைப் போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Wed Feb 13, 2013 2:42 am

app_engine wrote:முன்னமேயே சொல்லி இருப்பது போல், அம்மாவின் தாலாட்டுகளை நினைவுறுத்தும் குரல் என்பதால், சுசீலாவின் காதல் பாடல்களில் எனக்கு உணர்வு பூர்வமான லயிப்பு ஒரு நாளும் இருந்ததில்லை. எம்ஜியார் / சிவாஜி / ஜெமினி காலத்துப்பாடல்களின் காதல் சுவை என்னை அதிகம் ஈர்க்காததற்கு இது நிச்சயம் ஒரு முக்கியக்காரணி. (பாடல்களின் இசைத்தரம் என்னை வியப்பிலாழ்த்தும் என்றாலும், உணர்வுத்தூண்டல்கள் ஒன்றும் நிகழாது என்பது உண்மை).

அந்த விதத்தில், "பாட வந்ததோ கானம்" என் இளமைக்காலத்தில் வந்தது என்ற போதிலும், அதன் இசைத்துணுக்குகள் அசைத்த அளவுக்கு என் உணர்வுகளை அம்மாவின் குரல் அசைக்கவில்லை என்பது ஒரு அந்தரங்க உண்மை. பொதுவாகவே யேசுதாசின் குரலில் இருக்கும் வயது முதிர்ச்சியும் இந்த உணர்வுத்தூண்டல் நிகழ்வதற்கு இன்னொரு முட்டுக்கட்டை.

ஆதலினால், காதல் செய்ய இந்தப்பாடலின் பாடகர்கள் எனக்கு உதவவில்லை என்ற உண்மையை இப்பொழுது உடைத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன யோசனையில் ராசா இவர்களை "இளமைக்காலங்கள்" என்ற இசைத்தட்டில் ஒன்று சேர்த்தார் என்பது எனக்கு அன்றும் இன்றும் புரியாத புதிர்.

என்ற போதிலும், பல ஆண்டுகள் கழிந்தாலும், பல்லாயிரம் முறை கேட்டிருந்தாலும் இன்னும் அடங்காத பிரமிப்பு இவர்களின் குரல் வளம் மற்றும் பாடலின் வல்லமை / ஆளுமை மீது!

"கள்ளூறும் பொன் வேளை" என்ற பல்லவி வரி , "அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி" என்ற வரியில், அந்த "அன்பே" நீட்டப்படும் தருணம் - இங்கெல்லாம் வரும் உயர் அலைவரிசை மற்றும் ஒலியின் வலிமை!

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"

இந்தக்குறள் தான் இந்தப்பாடலை சுசீலாம்மா மற்றும் யேசுதாசைப் பாடவைக்கும் படி ராசாவைப் பணித்திருக்கும் என்றே இப்போது தோன்றுகிறது!

Interesting line of thought App sir. Very Happy

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  Usha Fri Feb 15, 2013 1:56 pm

app,
vandhuten................ IR.. Thalattu paatu.. PS........ Great............

ungaluku pidichadha......... idhu innum Great.. ellam padikanam............ Thank u app..............

PS style.. epavum avanga..music ai vittu thalli nirpanga........... Unique style.. Voice Strength.......... romba strong...............

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Mar 11, 2013 6:30 pm

கற்பனை வறட்சி காரணமாக இந்த இழையில் எழுதுவது கொஞ்சம் தடைப்பட்டிருக்கிறது...

இப்போதைக்கு ஒரு இணைப்பு:

http://isaikuyil.blogspot.com/2013/03/blog-post.html

Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Tue Mar 29, 2016 7:38 pm

PS enters Guinness

applause

So, 17695 is the certified count for PS!

Much more than the previous listing of Asha B (IIRC somewhere around 11-12 K...anyways, that no longer matters as we have the certified number for PS ammA)...

Now, where are those fellows who claim 40K for SPB, 20K for VJ and similar ridiculous numbers for Mano kind of fellows?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Tue Mar 29, 2016 7:44 pm

Some of those who worked for authenticating the list were DF-ers Smile

PS wrote:
2003ம் ஆண்டு, தேன் ராஜா, ராஜேஷ் ஆகியோர் என் பெயரில் இணையதளம் (psusheela.org) ஒன்றை துவக்கினார்கள். கலைக்குமார் என்பவர் எனது பாடல்களை எல்லாம் சேகரித்தார். அவருடன் இன்னும் ஐந்தாறு பேர் சேர்ந்து கொண்டு இந்த பணியை செய்தார்கள். இவை எல்லாவற்றையும் கின்னஸ் குழுவுக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின் எனக்கு இந்த கவுரவம் கிடைத்தது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty It is a honor

Post  thenraja Mon Apr 04, 2016 5:19 pm

It is an honor to have our names mentioned by PS in her press meet. Without Kalai, this was not possible. It is very difficult to list all songs by the great singers but extremely difficult to show evidence to Guinness for those songs. It will be a huge challenge to other singers who claim to have sung 30k, 40k songs.
The count of 17,695 was from awhile ago. Evidence for additional songs have been provided. So, I expect the count to go higher.
Thanks app_engine for posting this info in this thread.

thenraja

Posts : 1
Reputation : 0
Join date : 2016-04-03

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Apr 04, 2016 6:05 pm

Welcome to our forum, Then Raja sir!

It's a pleasure to see your post here!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Apr 23, 2018 5:40 pm

As everyone is today propagating a false message on media that S Janaki (my most fav. singer BTW) had sung 48K songs, I need to grab this link and share with people :

http://www.guinnessworldrecords.com/world-records/most-studio-recordings-singles-and-albums-combined

Pulapaka Susheela Mohan, India (b.1935) has reportedly recorded up to 17,695 solo, duet and chorus backed songs in over 6 Indian languages since the 1960s, as verified on 28 January 2016

Sadly a number of Pulapaka's early recordings have been lost and could not be counted towards this record. 

Though this talks about not listing "all" the songs as some of the early recordings could not be shown proof, I doubt if those could really run into even 100's (let alone 1000's) as the number of movies / albums made in those days were relatively VERY FEW.

If someone has questions about that, please search the web for the yearwise total number of movies made in Indian languages Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri May 24, 2019 4:16 am

IR attends a function felicitating PS:
https://www.vikatan.com/news/cinema/157862-ilaiyaraja-and-vairamuthu-participated-in-psusheela-appreciation-ceremony.html

பி.சுசீலாவைப் பற்றி 15 நிமிடங்களுக்கும் மேல் பேசினார். `நானா பாடலையே. நீதான் பாடவெச்சே' என இளையராஜாவைப் பார்த்து சுசீலா பாட, அரங்கத்தில் கைதட்டல் அதிகரித்தது. தான் இசைத் துறைக்கு வரக் காரணமான, `மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாடல் பற்றி நெகிழ்ச்சியாகக் கூறினார் இளையராஜா. மேலும், ``இப்பாடலில் வரும் `மயங்குது எதிர்காலம்' என்ற வரியில்தான் நான் அதிகம் மயங்கினேன். சுசீலாவின் குரல், இந்த நூற்றாண்டில் இணையற்ற குரல்" என்றார். பி.சுசீலாவுக்கு சால்வையைப் போர்த்தி, வைர மோதிரத்தை அணிவித்தார் இளையராஜா.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Tue Oct 01, 2019 3:18 am

https://youtu.be/YKOBXCN5Z5Q

மிகச்சிறப்பு!

முதலில் பொதுவாகத்தொடங்கி நல்லதாக நாலு சொற்கள் சொல்லிவிட்டுப்போகலாம் என்று தான் முயலுகிறார்.

தொடர்ந்து அவரைத்துருவித்துருவிக் கேள்வி கேட்டவுடன் சிறப்பாக - மெல்லிசை மன்னர், இன்னிசைக்குயில், கவியரசர் என்று மூவரையும் வான் அளவுக்குப் புகழ்ந்து கொண்டு அதே நேரத்தில் நன்றி மறந்த ரெண்டு பார்வையாளர்களைச் சிறப்பாக இடித்துரைக்கவும் செய்யும் ராசாவின் துல்லியம் - அட அட !

அதில் ஒன்னு பாருங்க - "சுசீலாம்மா நீங்க தான் எனக்கு ஆசி தரணும்" என்றெல்லாம் சொல்லும் உண்மையான பணிவு (அதுவும், "நீ தான் பாட வச்ச" என்று அம்மா புகழும் போது) , மெல்லிசை மன்னர், கவிஞர் என்று முன்னோர்களைக் குறிப்பிட்டுப்புகழும் தாழ்மை - இதையெல்லாம் ஒரு ஊடகக்காரனும் புகழ்ந்து எழுதவே மாட்டாங்க! 

இதையே கூட "வை.மு.வை ராசா இழித்துரைத்தார்" என்று தலைப்புச்செய்தியில் இட வாய்ப்பிருக்கு Smile
(அந்த மூணு பெரும் கொஞ்சக்கூடப் பெரியோரை மதிக்காதவர்கள் என்று மூஞ்சிகளைப் பார்த்தாலே தெரியுது. என்னவோ விளக்கெண்ணெய் குடிச்சது போன்று முகத்தில் ஈயாடாமல் இருக்காங்க).

கண்ணதாசனை ராசா புகழுவதை இந்த ரெண்டு பேராலும் தாங்க முடியவில்லை போலும் - அவ்வளவு பொறாமை, அகந்தை பிடித்தவர்கள்!

வீடியோவின் இறுதியில்:

தமிழ்த்தாய் வாழ்த்து உட்படக்  காலத்தால் அழியாத பல செல்வங்களில் பாடிய அம்மாவுக்கு இந்த ஆள் தான் என்னமோ ரகுமான் கிட்ட சிபாரிசுக்கடிதம் குடுத்துச் சான்ஸ் வாங்கிக்குடுத்தது போன்ற பரப்புரை செய்றாங்க - அவ்வளவு திமிர் பிடித்த கூட்டம் தான் இந்த நாட்டில் எளிமை / தாழ்மை / பணிவின் அடையாளங்களாம் Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Oct 02, 2019 3:02 am

ஊடகம் இதை எப்படி அறிவிக்கிறது என்று வேடிக்கை பாருங்கள்:
https://youtu.be/q97EOH_Gzek

ராசா சொன்னது fact ("மெட்டு கேட்டதும் சொற்கள் கொட்டும் - பிறருக்கு அது நடக்கலை, அதனால் கண்ணதாசன் சிறந்தவர்"). மாறாக, MSV தான் ஆகச்சிறந்த இசையமைப்பாளர் என்று வை.மு. சொன்னதாகச் சொல்கிறார்கள்.  அது ஒரு கருத்து மட்டுமே!

என்றாலும், அதற்கு ராசா கைதட்டுவாரேயொழியப் பொறாமைப்பட மாட்டார்! Smile  
"இவரென்ன சொல்வது, நானே சொல்றேன் - என் இசையே மெல்லிசை மன்னர் இட்ட பிச்சை" என்றெல்லாம் உரக்கச்சொல்லிவிட்டுப்போவார். 

அது "பணியுமாம் என்றும் பெருமை" வகைப்படும்.

வேப்பெண்ணெய் குடிச்சது போன்று முழிக்கும் வை.மு / கங்கைகள் "சிறுமை அணியுமாம் தன்னை வியந்து" வகையறா Smile  
இப்படி 2 விதமான ஆட்களைப்பற்றித்தான் வள்ளுவர் எழுதி வைத்து விட்டுப்போயிருக்கிறார் என்று இந்த ஒரு நிகழ்வே நமக்குத் தெளிவாக வெளிப்படுத்துகிறது!

https://ilayaraja.forumms.net/t288p25-topic#24352

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 4 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum