Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

+9
SenthilVinu
groucho070
jaiganesh
plum
rajeshkrv
Admin
sagi
V_S
app_engine
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Oct 31, 2012 12:05 am

I have been threatening in the other forum that there'll be a series of posts on some special songs by PS, composed by IR.

For many reasons, it was a non-starter.

Encouraged by the enthu of Sureshji in posting about IR's 90's songs & the revived spirit of V_Sji on his favourites, I'm wondering, may be, the time is appropriate to start my masAlA.

Of course, I don't plan this to be at that "daily-one-song" high-speed format used for the SPB-IR songs. Never again! Neither it will be a careful catalog of "all the hits IMO", year after year.

However, it will have to be in the ONLY format I know, i.e. picking an extremely successful, excellent hit song and do some (actually a lot of) blA-blA. (Fortunately for fellowmen, there are no more pazhaya kathais as most interesting stories -that can be openly shared- have been covered in SPB-IR series ; also, major aRuvais - as in geographical vazha vazhA - will not find a place).

At this point of time, I have a request to mates prior to the first song.

My original plan was to write this entirely in Thamizh. கொஞ்சங்கூட உணர்ச்சி பூர்வமா இருக்கும் என்ற நம்பிக்கை. However, with these changed circumstances (one thing - already much smaller viewership), I'm not sure whether that would be preferred.

So, starting with a vote eduppu.

Please state your Aye or Nay for Unicode Smile

Advance நன்றிகள்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Wed Oct 31, 2012 12:37 am

Very nice App and all the best. Very Happy Thamizh'lEyE ezhuthungO. I hope everyone here can read thamizh.Smile So will it be P Susheela's solo or the duets too?
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Oct 31, 2012 12:41 am

V_S wrote: will it be P Susheela's solo or the duets too?

இழைத்தலைப்பே டூயட் பாட்டு வரி தானே...ரெண்டும் தான் V_Sji!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Wed Oct 31, 2012 12:49 am

oh! I took it literally instead of singing that line. Raja's songs in Susheela's voice. My bad. Embarassed
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  sagi Wed Oct 31, 2012 3:39 am

Aye Very Happy

sagi

Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  Admin Wed Oct 31, 2012 4:51 am

I got no issue with reading Tamizh, only I'm a bit slow (no formal Tamizh education).

Admin
Admin

Posts : 130
Reputation : 0
Join date : 2012-10-22

https://ilayaraja.forumms.net

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Nov 01, 2012 3:14 am

So far four Aye's (ennaiyum sEththu).

Giving another day for karuththu on this poll...will try to do the first post this Friday Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 02, 2012 9:35 pm

நேர்மறை மனநிலை - நல்ல உடல்நலன், மனநலன் இன்ன பிற நன்மைகள் இது தரும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், எல்லா நேரமும் இந்தத்தன்மை கொண்டிருக்க முடியுமா?

இயன்ற அளவு நேர்மறை எண்ணங்களோடு, செயல்களோடு, பேச்சுகளோடு இருக்க வேண்டும் என்று விரும்பும் கூட்டத்தில் ஒரு ஆள் நான்.

ஆனாலும் இது எவ்வளவு கடினம் என்றும் நாள்தோறும் உணருபவன். குறிப்பாக எதிர்மறையான சூழல், பேச்சுகள், ஆட்கள் இத்யாதிகளின் நடுவில் இப்படி இருப்பது கடினமோ கடினம்.

அதனாலேயே, தொல்லையான நிலையில் நேர்மறை மனநிலை வெளிப்படுதல் கண்டால் எனக்கு வியப்பு பிய்த்துக்கொண்டு போகும்! அப்படிப்பட்ட மனிதர்கள் மீதும் பெரும் விருப்பம், மதிப்பு எல்லாம் உண்டு!

ஒரு நண்பர் அப்படிப்பட்ட அம்மணி ஒருத்தரைக்காட்டினார். வாழ்வில் கடும் சோதனைகளைக்கடந்து வந்த போதிலும் நேர்மறை மனநிலையை விடாத பெண்மணி. (நண்பர் கமென்ட் : சாத்தானைக் கூட இந்த அம்மா திட்ட மாட்டாங்க, "அவன் எவ்வளவு கடின உழைப்பாளி"ன்னு பாசிடிவ் ஆகத்தான் இவுங்க பேசுவாங்க).

முடக்குநோய் வந்து சக்கரவண்டியில் காலந்தள்ளும் இந்த அம்மணியிடம் சிறிது நேரம் பேசி விட்டுச்செல்லும்போது அப்படி ஒரு வியப்பு எனக்கு - 100 % நேர்மறைப் பேச்சு மட்டுமே! அந்த மனநிலை நம்மையும் கொஞ்சம் தொற்றக்கூடாதா என்ற ஆசை!

திரைப்படங்களில் எதிர்மறையான சூழல்களில் பாடல் காட்சிகள் இருப்பது எப்போதும் காண்பது தான். சோகம், அழுகை, விரக்தி, புலம்பல், தத்துவம் இன்ன பிற சுவைகள் வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான நல்ல பாடல்கள் நாம் கண்டும், கேட்டும், மெய் சிலிர்த்தும் - ஏன், பல முறை அழுதும் இருக்கிறோம்.

அத்தகு ஒரு சூழலில், முழுக்க முழுக்க நேர்மறை வரிகளைக்கொண்ட ஒரு பாடல் இருந்தால் வியப்பு வராமல் என்ன செய்யும்?

(முகவுரை கொஞ்சம் நீளம் தான்...அடுத்த பதிவில் பாடலும் அதன் அருமை பெருமைகளும் வரும் வரை "எந்தப்பாட்டுடா இது" என்று யூகித்துக்கொண்டு இருங்கள்!

BTW, நேர்மறை மனநிலை = Positive Attitude)

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Sat Nov 03, 2012 2:09 am

ஆரம்பமே அமர்க்களம்! கலக்குங்க!! ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன் முதல் பாடலுக்காக.
எந்தன் பொன் வண்ணமே?
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Nov 05, 2012 7:22 am

V_S wrote:
எந்தன் பொன் வண்ணமே?

எனக்குத்தெரிந்து "எந்தன் பொன் வண்ணமே" டி எம் எஸ் தனித்துப்பாடிய பாடல்.

அதே பாடலை சுசீலாம்மாவும் பாடி இருக்காங்களா தெரியாது Smile

இது வேற பாட்டுங்க V_Sji Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Nov 05, 2012 9:08 pm

உண்மையில் இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கணும் என்ற எண்ணம் ஒன்றும் (முதலில்) இல்லை.
அதற்கு மேல் அன்று எழுத நேரமில்லை.

சரி, பாடல் விவரங்களை முதலில் பார்ப்போம்.
மதிப்புரை அதன் பின்னர்.

#1 ஏ தென்றலே, இனி நாளும் பாட வா!
(குழுவினருடன், படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே, இயக்குனர் மகேந்திரன், திரையில் பிரதாப் போத்தன் / சுஹாசினி)

முன்பு எழுதிய முன்னுரையை நியாயப்படுத்த இங்கே முழுப்பாடல் வரிகளும் தருவது தேவை :

பல்லவி:

ஏ தென்றலே, இனி நாளும் பாட வா!
என் வாழ்வெல்லாம் சுப மாலை சூட வா!
இளமை கவிதை, மனதில் இனிமை
பாடவே நீ வா!

சரணம் 1 :

வாழ்வென்பதே ஆராதனை
வாழ்நாள் எல்லாம் உன் தேவதை
நினைத்தேன் இரு நெஞ்சமே
நிதமும் நலமே
நிழல் போல் உன்னை தேடினேன்
வளரும் சுகமே
இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை

சரணம் 2 :

தென் காற்றிலே சங்கீதமே
என் நெஞ்சிலே உன் பாவமே
தினமும் ஜதி போடுதே
அதில் ஓர் சுகமே
சிரிக்கும் மனமீதிலே தெரியும் முகமே
ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை


இப்போது திரைக்காட்சி என்னவென்று பாருங்கள்:

(சூழமைவு : முக்கோணக் காதல். மோகன்-சுகாசினி பரஸ்பரம் காதலிக்க பிரதாப் ஒருதலையாக நாயகியைக் காதலித்துக்கொண்டிருப்பார். ஒரு குழப்பத்தால் மோகன் நாயகியை விட்டு விலக, சூழ்நிலை காரணமாக நாயகி பிரதாப்புக்கு கழுத்தை நீட்டுகிறார். மனதில் ஒருவன், மணையில் வேறொருவன். இவளது வேண்டா வெறுப்பு புதுமண மாப்பிள்ளைக்கும் தெரியும். இந்த நிலையில், மனம் / உடல் ஒட்டாத தம்பதிகளின் தேனிலவு காட்டும் பாட்டு இது)...



Last edited by app_engine on Mon Nov 12, 2012 11:10 pm; edited 2 times in total

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Mon Nov 05, 2012 9:24 pm

Excellent start App with a serene song, but high on subtle emotions. இது நம்ம பாட்டுங்க!. Smile I remember writing about the picturization of this song in mayyam. Yes, Susheela's best. The sweetness of pallavi, charanam, ludes, lovely lovely choir என்ன ஒரு amalgamation! எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை!
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Nov 05, 2012 10:38 pm

உண்மையில் இந்தப்படத்தை சில வருடங்களுக்கு முன் பார்க்கும் வரை இது வரும் சூழல் இப்படிப்பட்டதென்று தெரியாது. "மனதில் இனிமை" "இனிமேல் இனிமை" "ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை" என்றெல்லாம் பாடல் வரிகளைக்கேட்கும் போது "இரு பறவைகள் மலை முழுவதும் எங்கோ, எங்கோ பறந்தன" மாதிரி சுகமான சூழல் போலத்தான் தோன்றும்.

என்றாலும், ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் இந்தப்பாடலின் அடியாழத்தில் இருப்பது போல் உணர்ந்ததுண்டு. புரிந்ததில்லை. படம் பார்க்கும் போது தானே தெரிகிறது உண்மை நிலை என்னவென்று! எதிர்மறையான சூழலிலும் பல்லைக்கடித்துக்கொண்டு நேர்மறை எண்ணங்களை நிறுத்த முயலும் பெண்ணின் மனதை இந்தப்பாடல் எதிரொலிப்பது மிக அருமை!

அருமையான சூழல் மகேந்திரன் தந்தார் - அழுத்தமான இசையை ராசா பதில் தந்தார்!

திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத்துறை கற்றுவிட்டு அசோக் குமாரிடம் உதவியாளராய் இருந்த சின்னப்பெண்ணைக் கதாநாயகி ஆக்கியதோடு, 'முள்ளும் மலரும்' ஒளிப்பதிவுக்கூட்டாளி பாலு மகேந்திராவின் நாயகர்கள் மோகனையும் (கோகிலா), பிரதாப்பையும் (மூடுபனி) ஒன்று சேர்த்து, ஒரு இனிய அனுபவத்தை அன்றைய இளைஞர்களுக்கு அளித்தார் இயக்குனர் மகேந்திரன்.

அதே வருடத்தில் (1980 ) இவர் ஜானியையும் இயக்கினார் என்பதில் இருந்து அப்போதைய அவரது படைப்பாற்றலை நாம் உணர முடியும்!

இந்தப்படத்தின் இன்னும் இரு பாட்டுகள் தமிழ்த் திரையிசையின் மைல் கற்கள்! ('உறவெனும் புதிய வானில்' & 'பருவமே புதிய பாடல் பாடு' - ரெண்டும் எஸ்.பி.பி. ஜானகி டூயட்களின் மிகச்சிறந்த பத்தில் வரத்தக்கவை).

இப்படியாக, இசை ராசாவும் இந்த 1980ல் படைப்பாக்கத்தின் உச்சத்தை எட்டி இருந்த தருணத்தில் வந்தது இந்தத்தென்றல்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Nov 07, 2012 10:46 pm

பாடலின் தத்துவம், வரலாறு, சூழமைவு, காட்சி எல்லாம் பார்த்தாகி விட்டது.

இனி தலையாய பொருளுக்கு வருவோம் - ஒலித்துறை Smile

ஹாசினி முகம் பாராமல் பாட்டுக்கேட்க இங்கே தட்டுங்கள்:
www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2344'&lang=en]

ஆஹா - என்ன ஒரு ஆனந்தமான அனுபவம்!

ஆராயுமுன், இந்த இழையில் வழங்கப்படப்போகிற சில தமிழ் சொற்களை எல்லோருக்குமாகப்பகிர்வோம் :

பல்லவி, சரணம், தாளம், ராகம் - இவையெல்லாம் முன்பே வழக்கத்தில் உள்ள சொற்கள். கோர்த்து எடுக்கத்தேவை இல்லை Smile

"இன்ஸ்ட்ருமெண்டல்" என்பதை நாம் கருவி இசை என்று வழங்கலாம். 'வாத்திய இசை' என்பது புழக்கத்தில் உள்ளது என்றாலும் எனக்கு என்னமோ சரியாகப்படவில்லை - கொஞ்சம் கர்நாடகமாய் இருக்கு

கோரஸ் என்பதைக் "குழுப்பாடல்" அல்லது "குழுக்குரல்" "குழு இசை" இப்படி இடத்திற்கு ஏற்ப அழைக்கலாம்.

இன்டர்லூட் என்பதை எல்லோருமே "இடை இசை" என்றே அழைப்பதால் நமக்கும் அதுவே ஆகட்டும். முதல் இடை இசை, இரண்டாம் இடை இசை.

போஸ்ட்லூட் - கடை இசை (கடைசி என்றே பொருள், கடையில் விற்று நம்ம ஆட்கள் சிலர் வாங்குவதும் இருக்கு, அது அல்ல இது).

ப்ரிலூட் - முதல் இசை? தொடக்க இசை? முக இசை? முன்னிசை? முகப்பு இசை? அறிமுக இசை?

எளிமையைக்கருதி தற்போது முக இசை எனலாம் - எதிர்ப்பு ஏதும் வந்தால் மாற்றி விட்டால் போச்சு!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Nov 07, 2012 11:49 pm

பலருக்கும் ராசாவின் அபார மூளை குறித்து வியப்பு இருக்கிறது.
அளவற்ற அவரது இசை அறிவு குறித்த அதிசயிப்பும் இருக்கிறது.
(எ-டு: பாடகர் ஸ்ரீநிவாஸ்)

ஆனால், எண்ணிச்சிலரே அவரது அனாயாசமாக விதவித இசை வகைகளை "அறியாவண்ணம் ஒன்றிணைக்கும்" திறனை மதிப்புடன் பார்க்கிறார்கள். (இந்த மன்றத்தையோ அந்த மன்றத்தையோ சொல்லவில்லை - பொது மக்கள், ஏன், திரைப்படத்துறையில் உள்ள பலரின் நிலை கூட இதைப்பொறுத்த மட்டில் பரிதாபமே).

அந்த விதத்தில் பார்த்தால், 'ஏ தென்றலே' பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! கருவி இசைகளும் குழு இசையும் தனி மேற்கத்திய செவ்வியல் வடிவில் மிளிர, சுசீலா பாடும் அலாதியான மெட்டும் ("அலாதி" சொல் உபயம் கமல்) கமகங்கள் / சங்கதிகள் தூய தமிழிசை இயல்பில் மின்னுகின்றன!

கேட்கிற பாமரனுக்கோ (என்னவெல்லாம் கலந்திருக்கிறது என்று அறியாவண்ணம் வேறுலகுக்கு சென்று விடுவதால்) இது ஒரு "நல்ல, கேட்க இனிமையான, சினிமாப்பாட்டு" என்ற அளவில்!

இந்த விந்தையான வேதிக்கலவை (ரசவாதம்) செய்யும் மாயாவியை "என்ன வகை இசை இது" என்று கேட்டால், "அட எல்லாமே சப்தம் ஐயா" என்று சொல்லக்கூடும்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Nov 08, 2012 12:30 am

பாடலின் முக இசையில் வரும் அந்தக்குழுவினரின் குரல்கள் - என்னை ஆகாயத்தில் பறக்க வைப்பன. அதற்கிடையில் துள்ளி வரும் மின் கிட்டார் + ட்ரம்ஸ் ஒலி நமக்குத்தரும் இன்பம் பாலக்காடு காலேஜ் ரோட்டில் உள்ள "ஹாட் சிப்ஸ்" கடையில் சுடச்சுடக் கிடைக்கும் நேந்திர சிப்ஸ் சாப்பிடும் அதே அனுபவம்!

சில நொடிகளுக்குள்ளேயே இப்படி மாயம் நடக்கையில் மெல்ல வந்து அலை அலையாய்ப் புகும் வயலின்களும் அவற்றினோடு ஒத்துச்சேரும் மெலிதான ட்ரம்ஸ் மற்றும் கீபோர்ட் ஒலிகளும் கேட்டால் என்னால் மங்களூர் பீச்சுக்கு உடனடி "இடமாற்றம்" நடப்பதைத் தடுக்கவே முடியாது!

ராசா ராசா தான்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Thu Nov 08, 2012 12:37 am

App,
அருமையான வர்ணனை! இந்த பாடலின் அழகை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அப்படியும் மனம் நிறைவடையாது.
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  Admin Thu Nov 08, 2012 6:02 am

Just finished reading, app. Good start. Haven't heard this song for ages...

Admin
Admin

Posts : 130
Reputation : 0
Join date : 2012-10-22

https://ilayaraja.forumms.net

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Nov 08, 2012 5:54 pm

நன்றி V_S_ஜி & groucho!

இந்தப்பாடல் குறித்து இன்னும் இரண்டு போஸ்ட்கள் உள்ளன Smile

நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் எழுதுவதால் ஒரு சீரான ஓட்டம் (ஃப்ளோ) (இன்னும்) வர மாட்டேங்குது...மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் என நம்புகிறேன் Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Nov 08, 2012 8:55 pm

'ஏ தென்றலே' பாடலின் இடை இசைகள் இரண்டுமே அழகான பெண்ணின் இடை போல வனப்பானவை! (அது சரி, அழகான பொண்ணுக்கு என்ன வரையறை? புஷ்பா தங்கதுரை எழுதிய தெனாலிராமன் கதைப்புத்தகத்தில், தெனாலிராமன் தன்னுடைய மனைவியிடம் இப்படி சொல்லுவார் : "விளக்கை அணைச்சதுக்கு அப்புறம் எல்லாப்பொண்ணுமே அழகு தாண்டி!" Embarassed)

பொதுவாக எல்லாச்சிறப்பான ராசா இடை இசைகளுக்கும் சொல்லப்படும் கருத்துகள் இவற்றுக்கும் பொருந்தும் ("வெளியே சுகமாகத்தடவுகிறது அந்த வயலின்களின் கூட்டு ஒலி", "உள்ளே ஆழமாகத்தொடுகிறது அந்தப்புல்லாங்குழல் ஒலி " - இத்யாதிகள்).

அதற்கும் மேலே ஆழ்ந்து ஆராய்வது வி.எஸ்.ஜி, சுரேஷ்ஜி -களின் வேலை. (கவனிக்க - ஷா-ஜி இல்லை Wink).

என்றாலும், ஒன்றை சொல்லியே தீர வேண்டும். இவை இரண்டும் அசாதராண வகை! குறிப்பாக, அந்தத் "தடையற்ற தன்மை" (seamlessness) மற்றும் "துல்லியமான" (precision) வீழல்கள்!

ஒளிமின்னல் (ப்ரில்லியன்ட்) ராசா!

பாடகியோடு சேர்ந்து செல்லும் ட்ரம் ஒலியும், பேஸ் கிட்டாரும், இணங்கிச்செல்லும் வயலின்களும் எல்லாம் சேர்ந்து பறக்கும் அனுபவம் கொடுப்பவை!

தகிட தகிட என்று குதிரை ஓட்டம் போல இருக்கும் தாள அடிப்படை பாடலின் குதியோட்டத்துக்கு வளம் சேர்க்கிறது! (குதியோட்டப்பாடல் என்றாலே இந்த மூன்று அடிச்சுழற்சி ராசாவுக்குப்பிடித்தம் என்பது என் கருத்து. உடனே நினைவுக்கு வரும் மற்றொரு பாடல் 'விழியிலே மலர்ந்தது'. முதல் இடை இசையின் இறுதிப்பகுதியில் இந்தத் "தகிட தகிட" அடிச்சுழற்சி அழகாகக் காணலாம்).

மொத்தத்தில் "ஏ தென்றலே" ராசாவின் ராசாங்கம்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 09, 2012 10:00 pm

தேன் - கடைகளில் வாங்கியது கூடாமல், நேரடியாக உற்பத்தியாளர்களின் பண்ணைகளில் வாங்கி இருக்கிறேன். தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டின் பின்பகுதியில் வைத்திருந்த தேன் கூடுகளில் இருந்து எடுத்து வந்த - மரத்தினால் செய்த ஃப்ரேம்களில் தேனீக்கள் கட்டிய - அடைகளை, ஒரு சின்ன இயந்திரத்தில் சுழற்றி, வடித்தெடுத்த தேனை தோசையில் தொட்டு உண்ட அற்புதமான அனுபவமும் உண்டு.

இவையெல்லாம் மொத்தத்தில் தேனின் இனிப்பு மற்றும் சுவை காட்டின என்றாலும், தேனின் அரிய தன்மையை உணர்ந்த ஒரு தருணம் நினைவுக்கு வருகிறது.

நண்பர் ஒருவரது ரப்பர் எஸ்டேட் நடுவே இருந்த ஏதோ காட்டுமரத்தில் பெரிய தேனடை இருந்தது. 'கொறச்சு மலத்தேன் நமக்குக் கழிக்காம்' என்று சொல்லி அவர் அதைப் பிய்த்தெடுத்தார். எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்துக்கொடுத்த போதே அவர் எச்சரித்தார் : "அண்ணாக்கு வர ருசி கயறும் , நோக்கிக்கழிக்கணும்" என்று. (அண்ணாக்கு = உள் நாக்கு ; கயறும் = ஏறும்).

வழக்கம் போல எச்சரிப்பு ஒன்றும் கணக்கிலெடுக்காமல் சர்ரென்று உறிஞ்சியதும் - Shocked ஆஹா, ஐயோ, தாக்கப்பட்டேன்! ஜிவ்வென்று ஏதோ தலைக்கு ஏற, புரையேறியது போல் பொரும, உள் நாக்கில் ருசி தைக்க, கொஞ்ச நேரம் நான் நானாக இல்லை! அட, அட, தேனுக்கு இப்படியும் ஒரு குணமா!

பொதுவாகவே பி.சுசிலாவின் குரல் தேன் என்றாலும், 'ஏ தென்றலே' பாட்டில், தேனடையில் இருந்து நேரே உறிஞ்சுவது போன்ற தனிச்சுவை!

கர்நாடக இசை தூக்கலாக இருந்த தமிழ்த்திரைப்பாடல்களை எளிமைப்படுத்தி "மெல்லிசை மன்னர்கள்" என்று பேரெடுத்த இசை விற்பன்னர்களோடு அந்தச்செயலுக்கு இவர் செய்த சேவை அளவற்றது. கொஞ்சம் அயர்ந்தாலும் செவ்வியல் ஆகித்தீரக்கூடிய பாடல் இது. அதை எளிமைப்படுத்தி, இனிமை குறையாமல் கமகங்களையும் சங்கதிகளையும் இவர் புதைத்து வைக்கும் தன்மை அருமையோ அருமை. (கூடப்பாடிப் பார்த்தால் புரியும்). ஒவ்வொரு சொல்லும் சங்கதிகளால் மிளிர்கிறது!

எடுத்துக்காட்டாக, பல்லவியில் வரும் அந்த 'இனிமை' என்ற சொல்லை கவனியுங்கள்!

அதில் வரும் 'னி'யை மெல்ல அழுத்துகிறார் பாருங்கள், நம் இதயத்துடிப்பை அழுத்துவது போன்ற செயல் அது.

பாட்டு முழுவதும் இது மாதிரி ஒலி அழுத்தல்கள், இழுத்தல்கள், அளவான அலுக்கல் குலுக்கல்கள் கொண்டு நிறைத்திருக்கிறார், அனாயாசமாக! அல்லாமலே இந்தப்பாடல் சொற்ப சொற்களும் அவற்றின் தூக்கலான "அசைகளின் இழுவை"களும் கொண்டு நெய்யப்பட்டது. அத்தகைய "இழுவை"களுக்கு இவர் அணிகலன் இடுவது போல் விளையாடி இருக்கிறார்! குயில் / குழல் போன்ற இவரது குரலும் சேர்ந்து கொண்டு பாடலை உச்சத்தில் கொண்டு வைக்கிறது!

நிற்க, குயில் (அல்லது "பெரிய குயில்") ஜானகியுடைய பட்டம், என் அகராதியில்.

சின்னக்குயில் சித்ரா. அப்படிஎன்றால், சுசிலாவை என்ன சொல்லலாம்? ம்ம்ம்ம்...

இசைக்குயில்!

(அசைகளின் இழுவை = stretching of syllables)

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 09, 2012 10:09 pm

ஏ தென்றலே பற்றிய என் "கருத்துரைகள்" முற்றும் Smile

இந்தப்பாடல் குறித்த கூடுதல் ஆய்வுகள் நண்பர்களிடமிருந்து (குறிப்பாக வி_எஸ்_ஜி, சுரேஷ்ஜி போன்ற இசை வல்லுனர்களின் கருத்துகள்) கேட்க ஆசை.

அவ்வளவாக வலையுலகில் இந்தப்பாடல் போற்றப்படவில்லை என்று நினைக்கிறேன். வேறு இணைப்புகள் இருந்தாலும் சுட்டுங்கள்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 09, 2012 10:35 pm

பாடலாசிரியர் கங்கை அமரன் என்பதைக்குறிப்பிட மறந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் Embarassed

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 09, 2012 11:13 pm

நெஞ்சத்தைக்கிள்ளாதே பற்றிய 5 பக்கக் கட்டுரை:

http://600024.com/specials/tamil-cinema-classics-nenjathai-killathe/

'ஏ தென்றலே' குறித்தும் ஒரு வரி சொல்லி இருக்கிறார்கள்:



Suseela’s rendition for the song Ye Thendrale is still a voice to store in our hearts.


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Fri Nov 09, 2012 11:23 pm

App,
மிகவும் நிறைவாக இருந்தது. cheers I think this is the first time you are writing multiple posts on a single song? I can understand the impact every note of this song has on you from these posts. Excellent! Yes, the way she renders இனிமை is too இனிமை. Yes, We don't see much discussion/analysis on this much deserved composition, but let yours be the first and foremost. Very Happy. Let me try posting my views soon.
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum