Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

+9
SenthilVinu
groucho070
jaiganesh
plum
rajeshkrv
Admin
sagi
V_S
app_engine
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Nov 08, 2012 12:30 am

பாடலின் முக இசையில் வரும் அந்தக்குழுவினரின் குரல்கள் - என்னை ஆகாயத்தில் பறக்க வைப்பன. அதற்கிடையில் துள்ளி வரும் மின் கிட்டார் + ட்ரம்ஸ் ஒலி நமக்குத்தரும் இன்பம் பாலக்காடு காலேஜ் ரோட்டில் உள்ள "ஹாட் சிப்ஸ்" கடையில் சுடச்சுடக் கிடைக்கும் நேந்திர சிப்ஸ் சாப்பிடும் அதே அனுபவம்!

சில நொடிகளுக்குள்ளேயே இப்படி மாயம் நடக்கையில் மெல்ல வந்து அலை அலையாய்ப் புகும் வயலின்களும் அவற்றினோடு ஒத்துச்சேரும் மெலிதான ட்ரம்ஸ் மற்றும் கீபோர்ட் ஒலிகளும் கேட்டால் என்னால் மங்களூர் பீச்சுக்கு உடனடி "இடமாற்றம்" நடப்பதைத் தடுக்கவே முடியாது!

ராசா ராசா தான்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Thu Nov 08, 2012 12:37 am

App,
அருமையான வர்ணனை! இந்த பாடலின் அழகை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அப்படியும் மனம் நிறைவடையாது.
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  Admin Thu Nov 08, 2012 6:02 am

Just finished reading, app. Good start. Haven't heard this song for ages...

Admin
Admin

Posts : 130
Reputation : 0
Join date : 2012-10-22

https://ilayaraja.forumms.net

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Nov 08, 2012 5:54 pm

நன்றி V_S_ஜி & groucho!

இந்தப்பாடல் குறித்து இன்னும் இரண்டு போஸ்ட்கள் உள்ளன Smile

நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் எழுதுவதால் ஒரு சீரான ஓட்டம் (ஃப்ளோ) (இன்னும்) வர மாட்டேங்குது...மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் என நம்புகிறேன் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Nov 08, 2012 8:55 pm

'ஏ தென்றலே' பாடலின் இடை இசைகள் இரண்டுமே அழகான பெண்ணின் இடை போல வனப்பானவை! (அது சரி, அழகான பொண்ணுக்கு என்ன வரையறை? புஷ்பா தங்கதுரை எழுதிய தெனாலிராமன் கதைப்புத்தகத்தில், தெனாலிராமன் தன்னுடைய மனைவியிடம் இப்படி சொல்லுவார் : "விளக்கை அணைச்சதுக்கு அப்புறம் எல்லாப்பொண்ணுமே அழகு தாண்டி!" Embarassed)

பொதுவாக எல்லாச்சிறப்பான ராசா இடை இசைகளுக்கும் சொல்லப்படும் கருத்துகள் இவற்றுக்கும் பொருந்தும் ("வெளியே சுகமாகத்தடவுகிறது அந்த வயலின்களின் கூட்டு ஒலி", "உள்ளே ஆழமாகத்தொடுகிறது அந்தப்புல்லாங்குழல் ஒலி " - இத்யாதிகள்).

அதற்கும் மேலே ஆழ்ந்து ஆராய்வது வி.எஸ்.ஜி, சுரேஷ்ஜி -களின் வேலை. (கவனிக்க - ஷா-ஜி இல்லை Wink).

என்றாலும், ஒன்றை சொல்லியே தீர வேண்டும். இவை இரண்டும் அசாதராண வகை! குறிப்பாக, அந்தத் "தடையற்ற தன்மை" (seamlessness) மற்றும் "துல்லியமான" (precision) வீழல்கள்!

ஒளிமின்னல் (ப்ரில்லியன்ட்) ராசா!

பாடகியோடு சேர்ந்து செல்லும் ட்ரம் ஒலியும், பேஸ் கிட்டாரும், இணங்கிச்செல்லும் வயலின்களும் எல்லாம் சேர்ந்து பறக்கும் அனுபவம் கொடுப்பவை!

தகிட தகிட என்று குதிரை ஓட்டம் போல இருக்கும் தாள அடிப்படை பாடலின் குதியோட்டத்துக்கு வளம் சேர்க்கிறது! (குதியோட்டப்பாடல் என்றாலே இந்த மூன்று அடிச்சுழற்சி ராசாவுக்குப்பிடித்தம் என்பது என் கருத்து. உடனே நினைவுக்கு வரும் மற்றொரு பாடல் 'விழியிலே மலர்ந்தது'. முதல் இடை இசையின் இறுதிப்பகுதியில் இந்தத் "தகிட தகிட" அடிச்சுழற்சி அழகாகக் காணலாம்).

மொத்தத்தில் "ஏ தென்றலே" ராசாவின் ராசாங்கம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 09, 2012 10:00 pm

தேன் - கடைகளில் வாங்கியது கூடாமல், நேரடியாக உற்பத்தியாளர்களின் பண்ணைகளில் வாங்கி இருக்கிறேன். தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டின் பின்பகுதியில் வைத்திருந்த தேன் கூடுகளில் இருந்து எடுத்து வந்த - மரத்தினால் செய்த ஃப்ரேம்களில் தேனீக்கள் கட்டிய - அடைகளை, ஒரு சின்ன இயந்திரத்தில் சுழற்றி, வடித்தெடுத்த தேனை தோசையில் தொட்டு உண்ட அற்புதமான அனுபவமும் உண்டு.

இவையெல்லாம் மொத்தத்தில் தேனின் இனிப்பு மற்றும் சுவை காட்டின என்றாலும், தேனின் அரிய தன்மையை உணர்ந்த ஒரு தருணம் நினைவுக்கு வருகிறது.

நண்பர் ஒருவரது ரப்பர் எஸ்டேட் நடுவே இருந்த ஏதோ காட்டுமரத்தில் பெரிய தேனடை இருந்தது. 'கொறச்சு மலத்தேன் நமக்குக் கழிக்காம்' என்று சொல்லி அவர் அதைப் பிய்த்தெடுத்தார். எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்துக்கொடுத்த போதே அவர் எச்சரித்தார் : "அண்ணாக்கு வர ருசி கயறும் , நோக்கிக்கழிக்கணும்" என்று. (அண்ணாக்கு = உள் நாக்கு ; கயறும் = ஏறும்).

வழக்கம் போல எச்சரிப்பு ஒன்றும் கணக்கிலெடுக்காமல் சர்ரென்று உறிஞ்சியதும் - Shocked ஆஹா, ஐயோ, தாக்கப்பட்டேன்! ஜிவ்வென்று ஏதோ தலைக்கு ஏற, புரையேறியது போல் பொரும, உள் நாக்கில் ருசி தைக்க, கொஞ்ச நேரம் நான் நானாக இல்லை! அட, அட, தேனுக்கு இப்படியும் ஒரு குணமா!

பொதுவாகவே பி.சுசிலாவின் குரல் தேன் என்றாலும், 'ஏ தென்றலே' பாட்டில், தேனடையில் இருந்து நேரே உறிஞ்சுவது போன்ற தனிச்சுவை!

கர்நாடக இசை தூக்கலாக இருந்த தமிழ்த்திரைப்பாடல்களை எளிமைப்படுத்தி "மெல்லிசை மன்னர்கள்" என்று பேரெடுத்த இசை விற்பன்னர்களோடு அந்தச்செயலுக்கு இவர் செய்த சேவை அளவற்றது. கொஞ்சம் அயர்ந்தாலும் செவ்வியல் ஆகித்தீரக்கூடிய பாடல் இது. அதை எளிமைப்படுத்தி, இனிமை குறையாமல் கமகங்களையும் சங்கதிகளையும் இவர் புதைத்து வைக்கும் தன்மை அருமையோ அருமை. (கூடப்பாடிப் பார்த்தால் புரியும்). ஒவ்வொரு சொல்லும் சங்கதிகளால் மிளிர்கிறது!

எடுத்துக்காட்டாக, பல்லவியில் வரும் அந்த 'இனிமை' என்ற சொல்லை கவனியுங்கள்!

அதில் வரும் 'னி'யை மெல்ல அழுத்துகிறார் பாருங்கள், நம் இதயத்துடிப்பை அழுத்துவது போன்ற செயல் அது.

பாட்டு முழுவதும் இது மாதிரி ஒலி அழுத்தல்கள், இழுத்தல்கள், அளவான அலுக்கல் குலுக்கல்கள் கொண்டு நிறைத்திருக்கிறார், அனாயாசமாக! அல்லாமலே இந்தப்பாடல் சொற்ப சொற்களும் அவற்றின் தூக்கலான "அசைகளின் இழுவை"களும் கொண்டு நெய்யப்பட்டது. அத்தகைய "இழுவை"களுக்கு இவர் அணிகலன் இடுவது போல் விளையாடி இருக்கிறார்! குயில் / குழல் போன்ற இவரது குரலும் சேர்ந்து கொண்டு பாடலை உச்சத்தில் கொண்டு வைக்கிறது!

நிற்க, குயில் (அல்லது "பெரிய குயில்") ஜானகியுடைய பட்டம், என் அகராதியில்.

சின்னக்குயில் சித்ரா. அப்படிஎன்றால், சுசிலாவை என்ன சொல்லலாம்? ம்ம்ம்ம்...

இசைக்குயில்!

(அசைகளின் இழுவை = stretching of syllables)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 09, 2012 10:09 pm

ஏ தென்றலே பற்றிய என் "கருத்துரைகள்" முற்றும் Smile

இந்தப்பாடல் குறித்த கூடுதல் ஆய்வுகள் நண்பர்களிடமிருந்து (குறிப்பாக வி_எஸ்_ஜி, சுரேஷ்ஜி போன்ற இசை வல்லுனர்களின் கருத்துகள்) கேட்க ஆசை.

அவ்வளவாக வலையுலகில் இந்தப்பாடல் போற்றப்படவில்லை என்று நினைக்கிறேன். வேறு இணைப்புகள் இருந்தாலும் சுட்டுங்கள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 09, 2012 10:35 pm

பாடலாசிரியர் கங்கை அமரன் என்பதைக்குறிப்பிட மறந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் Embarassed

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Nov 09, 2012 11:13 pm

நெஞ்சத்தைக்கிள்ளாதே பற்றிய 5 பக்கக் கட்டுரை:

http://600024.com/specials/tamil-cinema-classics-nenjathai-killathe/

'ஏ தென்றலே' குறித்தும் ஒரு வரி சொல்லி இருக்கிறார்கள்:



Suseela’s rendition for the song Ye Thendrale is still a voice to store in our hearts.


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Fri Nov 09, 2012 11:23 pm

App,
மிகவும் நிறைவாக இருந்தது. cheers I think this is the first time you are writing multiple posts on a single song? I can understand the impact every note of this song has on you from these posts. Excellent! Yes, the way she renders இனிமை is too இனிமை. Yes, We don't see much discussion/analysis on this much deserved composition, but let yours be the first and foremost. Very Happy. Let me try posting my views soon.
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Sat Nov 10, 2012 1:06 am

நன்றி வி_எஸ்_ஜி!

உங்கள் ஆய்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  rajeshkrv Sat Nov 10, 2012 8:49 am

Nice thread app. Nice start. Ye thendrale is one of the best of the IR-PS combinations.
As a matter of fact PS's ringtone was this song for couple of months.

B'ful composition and great rendition.Mahendran could have avoided hasini's closeup shots

rajeshkrv

Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Sat Nov 10, 2012 8:32 pm

Welcome rajeshkrv. Please share your thoughts without fail. :smile:
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Nov 12, 2012 7:35 pm

"ஐப்பசியில் அடைமழை, கார்த்திகையில் கனமழை" என்ற  ஒரு  பழமொழி  தமிழ்நாட்டின்  நாட்டுப்புறங்களில் சொல்வதுண்டு. மற்ற தட்பவெப்பங்கள்  எப்படியோ, இந்த ஒன்றில் மட்டும் டெட்ராய்ட் தமிழ்நாட்டோடு கொஞ்சம் ஒத்துப்போகிறது Smile இங்கு எப்போதும் நவம்பரில் மழைக்காலம் தான். இன்று  அடைமழை!  (ராத்திரி  கொஞ்சம்  வெண்பனியும் வீழும் என்று முன்னறிவித்திருக்கிறார்கள்).

தீபாவளிப்பண்டிகை இந்த ஐப்பசியில் வருவதால் மழையும் கூடவே வருவதுண்டு. சிறுசுகள் "வேணாமே" என்றும் பெருசுகள் "வேணுமே" என்றும் விரும்பும் மழை! (பட்டாசு சிறுசுகளின் கவலை - "வறட்டுத்தீபாவளி" ஆகக்கூடாதே என்பது பெருசுகளின் மனதில்).

எப்படியோ, தமிழ்நாட்டின் மழைக்காலத்தில், அதாவது தீபாவளிக்கு வந்த ஒரு சுசீலா பாடலை இன்றைய மழை எனக்கு நினைவுக்குக் கொண்டுவந்து விட்டது Smile அது தான் இந்த இழையில் வரப்போகும் அடுத்த பாடல்! என்ன, ஒரு கால் நூற்றாண்டுக்கு முந்தைய தீபாவளிப்பாடல் Smile

மழையோடு இந்தப்பாடலுக்கு வேறொரு உறவும் உண்டு - ஆனால், பொதுவான மழை அல்ல, "உப்பு மழை" ! Wink


Last edited by app_engine on Thu Sep 02, 2021 9:18 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Nov 12, 2012 7:40 pm

rajeshkrv wrote:As a matter of fact PS's ringtone was this song for couple of months.

வருகைக்கும், இப்படி ஒரு அரிய தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி ராஜேஷ்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Nov 12, 2012 10:54 pm

அற்புதமான பாடல்கள் இருந்தும், ரெட்டை வேடத்தில் கமல் இருந்தும், பரிதாபமான தோல்வியை சந்தித்தது 'எனக்குள் ஒருவன்'. 1984'ல் வந்த தீபாவளி ரிலீஸ் இது. (கே பாலச்சந்தரின் கவிதாலயா தயாரித்த இந்தப்படத்தை அப்போதைய மசாலா டைரக்டர் எஸ் பி முத்துராமன் இயக்கினார். ஸ்ரீப்ரியா, சோபனா என்று இரண்டு கதாநாயகிகள். கார்ஸ் என்ற இந்திக் கலைச்செல்வத்தின் தமிழ்ப்பதிப்பாம்!).

என்றாலும், இன்று வரை 'மேகம் கொட்டட்டும்' பாடல் பேசப்படுகிறது! அவ்வளவாய் இப்போது பேசப்படாவிட்டாலும், வந்த பொழுதில் மிகப்பரபரப்பாக ஒலிபரப்பான பாடல் தான் நமது இழையின் இரண்டாவது பாடல்.

#2 தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி!

(சுசீலாவுடன் நட்டுவனாரின் குரலும் பாடலில் பிரபலம்!)

முழுப்பாடல் வரிகளும் பாருங்கள்:

(வைரமுத்து என்று நினைக்கிறேன், காரணம் 'உப்பு மழை பெய்கிறதே' Smile கொஞ்சம் கமல் கைவண்ணமும் தெரிகிறது Embarassed )

பல்லவி:

தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி, என் தோழி !

காணவில்லை தலைவனை, காயவில்லை தலையணை

தேட வேண்டும் எந்தன் ஜீவனை!

சரணம் 1:

பொட்டு வைத்தான், பூவைக்கொண்டு சுட்டு வைத்தான்

தொட்டு வைத்தான், பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்

என்ன ஒரு வேதனை? பத்து விரல் சோதனை!

தேனாற்றில் பாலோட, நானென்ன வாதாட?

கண் விழித்தால் காலை வேளை காணவில்லையே!

சரணம் 2:

ஊமைத்தென்றல் வந்து என்னைக்கொல்கிறதே

கண்களிலே உப்பு மழை பெய்கிறதே

உள்ளம் தொட்ட மன்மதா, என்னை விட்டுச்செல்வதா?

உன் சேதி வாராதா, உள் நெஞ்சம் ஆறாதா?

இந்த அலை நிலவைப்பார்த்துக் கைகள் நீட்டுதா?

யூட்யூப் இங்கே:



Last edited by app_engine on Tue Nov 13, 2012 4:11 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  rajeshkrv Tue Nov 13, 2012 9:57 am

What a song.. I hate the 80's where only romance songs were heard again and again and these kind classic songs were not given that much hearing ..nevertheless it's such a b'ful song and IR time and again knows when to use PS's voice aptly and does it again.
Also after 60's and 70's situational songs were fading away and this one was a rare situational song wherein the heroine tries to tell her feeling for the hero indirectly(imagination though) but still nicely done. Sripriya and bharatanatyam you got to be kidding .. still i'm just forgiving all these just for PS & IR. Coming from Classical background this is a cake walk for PS but she knows what light music is and she does it with ease rather
effortlessly and real music lovers will instantly fall in love with this song..
thanks for the pick app.

Wishing everyone a very happy Deepavali.

rajeshkrv

Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  plum Tue Nov 13, 2012 10:44 am

vAlithezhudhiya from some Mallu film is a preferred version for me compared to this.

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Tue Nov 13, 2012 6:04 pm

Wonderful song App! Especially the charanams, totally different from the pallavi. The pallavi is kind of having a racy start, and the charanam takes its own time and then the merger, beautifully composed. One of PS's best.
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Tue Nov 13, 2012 7:47 pm

அகத்திணை பற்றிய சிறிய விளக்கம் இங்கே:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

ஆக, நமது பாடல், தலைவி "பாலைத்திணை" நிலையில் உள்ளதை சுட்டுகிறது. முதல் சரணம் "வயது வந்தோருக்கு மட்டும்" ரகம் என்றாலும், செவ்வியல் இசைக்கருவி ஒலிகள் அதை அழகாய்ப் பூசிமெழுகி மறைக்கின்றன. சுசீலாம்மா அருமையாகத்தமிழில் பாடுவார் என்றாலும், மொழியின் விளையாட்டுக்கள் எல்லாம் தெரிந்தவர் அல்லர் என்றே நினைக்கிறேன். பாவம், விவரம் தெளிவாகச் சொல்லாமல் இந்த ராசா-கமல்-வைரம் எல்லாம் அவரை சதித்து விட்டிருப்பார்கள். Embarassed (இந்தப்படத்தின் இன்னொரு பாடலில் வரும் வரி "புடவைப்புதையல் உனக்கே படையல்" - இந்தக் குறும்புப் பேர்வழிகள் ஜானகிக்கும் அதன் பொருள் சொல்லாமல் சதித்து விட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்! Laughing )

யாரைய்யா இந்த அற்புதமான நட்டுவனார்? 'மறைந்திருந்தே பார்க்கும்', 'நலந்தானா' (தில்லானா மோகனாம்பாள்) மற்றும் 'மன்னவன் வந்தானடி' (திருவருட்செல்வர்) பாடல்களில் உள்ளதும் இவர் குரலே என்பது என் யூகம். அவை மூன்றும் கே வி மகாதேவன், சுசீலா கூட்டில் வந்த காலத்தால் அழியா நாட்டியப் பாடல்கள்! அவை அளவுக்கு எனக்குள் ஒருவன் பாடல் நிலைநில்லாமைக்கு இசையல்ல காரணம் என்பது என் கருத்து. பாடல் வரிகளும், திரைக்காட்சி அமைவும் பல படிகள் கீழ். என்றாலும், ராசாவும், சுசீலாம்மாவும் மற்றும் நட்டுவனாரும் அதே உயர் நிலை எட்டி இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

அதிலும் குறிப்பாக அந்த முதல் இடை இசையின் உச்சம் அதிசயம்! பாடல் முழுதும் முழங்கும் மிருதங்கம் மற்றும் தவில்களின் 'தகிட தகிட' மூன்றடி சுழற்சி, குதிரை ஓட்ட வேகத்தைத் தருகிறது. இது கூடாமல், ராசாவின் சுகமான பேஸ் கிட்டார் ஒலியும்!

அற்புதமான நடன மெட்டும் முன் சொன்ன மூன்று பாடல்களின் அதே அமைப்பைத்தழுவி சிறப்பாக உள்ளது. பாடல் வரிகளுக்கிடையில் வரும் குழலோசையும், இடை இசைகளில் மிளிரும் வீணை ஒலிகளும் மீண்டும் மீண்டும் கேட்டு, உள்வாங்கி, உணரத்தக்கன!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  jaiganesh Tue Nov 13, 2012 8:46 pm

Hamsadhwani(beautiful sound!!) at its perfection is this song.
Plain reading the lyrics wont say how they fit into this tune - but Raaja does some pushing of
the longer syllables to make "Thaen aatril paalaada" work as if it is natural.. PS - does the brisk melody carnatic
singing appear easy - just as easy she did for "isai arasi" in thaai moogambigai..
Fantastic, yet very underrated song from the karz remake..

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Nov 14, 2012 10:01 pm

ஸ்ரீப்ரியா பாராமல் பாடல் கேட்க: http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0809'&lang=en

"அசை இழுவை" என்ற பதத்தை சென்ற பாடலில் பயன்படுத்தி இருந்தேன். அதை அசை நீட்சி என்று வேண்டுமானாலும் சொல்லலாம். 'தேர் கொண்டு சென்றவன்' பாடலில் இந்த நீட்சிகள் கோலாகலம்! செவ்வியல் இசையில் தேர்ந்த சுசீலா இவற்றை அனாயாசமாக இப்பாடலில் கையாளுகிறார்.

அதிலும் குறிப்பாக, ஒரே வரி மறுமுறை வரும்போது காட்டும் மாற்றங்கள், அடடா! எடுத்துக்காட்டாக, அந்த உப்பு மழை இரண்டாம் முறை பெய்யும் பொழுது எப்படி முடிக்கிறார் என்று பாருங்கள்! அந்த இறுதி 'தே' என்ற அசையை எப்படியெல்லாம் நீட்டி, வளைக்கிறார் / குலுக்குகிறார்! முதல் முறை ஒரு விதம், மறுமுறை வேறு விதம் - மெய் சிலிர்ப்பு!

பாடுவதில் மிகக்கடினமானது "ஆ" ஒலியின் நீட்சிகளும், இழுவைகளும் என்பது என் தனிக்கருத்து. முறைப்படி பாடிப்பயின்றவர்கள் இதை மறுக்கவோ / உறுதி செய்யவோ வேண்டுகிறேன்! நாவையும், உதடுகளையும், பற்களையும் பயன்படுத்தாமல் வெறும் தொண்டையிலிருந்தும் (ஒரு வேளை அடி வயிற்றிலிருந்தும்) ஒலிமாற்றங்கள் உண்டாக்க வேண்டுமல்லவா?

இதனால் 'செண்பகமே' பாடலின் தொடக்கத்தில் வரும் "ஆ ஆ" ஹம்மிங் எப்போதும் எனக்கு வியப்பு உண்டாக்கும். அதே போல சில "பகுதி-செவ்வியல்" வகைப்பாடல்களில் வரும் இவ்வித "ஆ"காரங்கள் எனக்குள் அதிசயிப்பை உண்டாக்குவன! யேசுதாஸ், ஜானகி இதில் கரை கடந்த மற்றிருவர்!

தேர்கொண்டு பாடலின் பல்லவி இறுதியில் அப்படி ஒரு "ஆ"காரத்தை சுசீலாம்மா ஊதித்தள்ளுவதைக்கேளுங்கள்! இந்தப்பாடல் முழுவதுமே அவரது குரலின் கொண்டாட்டம் என்று கூடச்சொல்லுவேன்! ஏறத்தாழ முழுப்பல்லவியும் உயர் அலைவரிசை / சரணத்தின் பகுதிகளும் உயர் அலைவரிசை - என்று பாட அவ்வளவு எளிதல்லாத பாடல்! என்றாலும், கேட்பவரது லயிப்பை நீக்காமல் மென்மையை எப்படியோ உறுதி செய்து விடுகிறார் இந்த மெல்லிசைக்குயில்! (இதுவே வாணியாக இருந்தால் - நினைத்தாலே நடுங்குகிறது, உடன் நினைவுக்கு வருவது "கவிதை கேளுங்கள்" Embarassed )


Last edited by app_engine on Thu Apr 18, 2013 1:21 am; edited 2 times in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Nov 19, 2012 10:21 am

ராசா இசையில் சுசீலாம்மாவின் மேற்கத்திய மரபிசை & இந்திய மரபிசை சார்ந்த பாடல்கள். #1 / #2 ஆக வந்துவிட்டன!

அடுத்து தமிழ் நாட்டுப்புற இசை / தெம்மாங்கு வர வேண்டிய தருணம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Nov 19, 2012 10:22 pm

த.நா.வில் பல பையன்களும் காய்கறி மற்றும் பூ வாங்குவது - அதாவது சரியாக வாங்கப்படிப்பது - கல்யாணத்துக்குப் பின் தான். (நான் சொல்வது அந்தக்காலத்தில், இப்போ எப்படியோ தெரியாது.) அதிலும் என்னைப்போன்ற பேர்வழிகள் அதுக்கப்புறமும் நிறையக்குட்டு வாங்கித்தான் சரிப்படுவார்கள்.

காய்கறி விஷயத்தில் நான் தேறி விட்டாலும், இந்தப் பூ பிசினஸ் சரிப்பட்டு வந்ததே இல்லை. பூக்களை செடிகொடிகளில் வைத்துப்பார்ப்பது தான் அழகு என்று ஆழ்மனதில் அழுந்தி விட்டதோ தெரியாது. எப்படியோ, கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் இருப்பதால் இது ஒரு பிரச்னை இல்லை Smile ரொம்ப டோஸ் கிடைத்தால் கடைக்காரன் கலர் கலராக சேர்த்து வைத்து இருக்கும் ஒரு பூச்செண்டு வாங்கிக்கொடுத்து சமாளித்து விடலாம்.

இப்படிப்பட்ட நான், பணியிடத்தில் ஒரு சிறு கொண்டாட்டத்துக்காக "எங்கே பூக்கள் வாங்குவது" என்று சக பணியாளர்கள் போன வாரம் தர்க்கம் செய்து கொண்டிருந்த போது (அதிலும் எல்லாரும் பெண்கள் வேறு) மரியாதையாக வாயை மூடிக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.

பாழாய்ப்போன இந்த நாக்கு சும்மா இருக்காதே Sad அதுவும் "எங்கையுமே கிடைக்கலை" ரேஞ்சில் அவர்கள் கவலைப்படுவதைக்கேட்ட போது, "எங்க வீட்டுக்கிட்ட இருக்கற க்ரோகர் கடையில் எப்பவும் நிறைய நல்ல பூக்கொத்துகள் ஃப்ளோரல் செக்ஷனில் இருக்கும்" என்று அது உளறி வைத்தது! Embarassed

விளைவு?

அவற்றை வாங்கி வரும் பணியை மேலாளி அம்மா என் தலையில் கட்டினார். ஒரே ஒரு பூச்செண்டு வாங்கி வர அவ்வளவு அலட்டிக்கொள்ளும் நான், பத்துக்கொத்துகளை (ஒவ்வொன்றிலும் ஆறு ஸ்டெம்கள் வேறு) தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வருவது வீட்டுக்காரம்மாவுக்கு மிக ஹாஸ்யமான காட்சியாக மாறிப்போனது.

போதாக்குறைக்கு அவற்றை வாடாமல் காப்பாற்ற நீரில் இட்டு வைத்துப்பாதுகாக்கும் பணி வேறு! மற்ற நாள் அதே போல் முக்கிக்கொண்டு பார்க்கிங் இடத்திலிருந்து அலுவலகம் வரை -கிட்டத்தட்ட கால் மைல் தூரம்- தூக்கிச்சென்ற போது எல்லோரும் என்னையே பார்ப்பது போலும் நான் துணி இல்லாமல் நடப்பது போலும் பயங்கரமான உணர்வு!

எது எப்படியோ, பூவாயி பாட்டு பற்றி நான் எழுத நினைத்த நேரத்தில் இப்படி ஒரு விதமாகப் "பூக்களோடான உறவு" ஏற்பட்டது விந்தை தான் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Nov 22, 2012 1:42 am

'ஆயி' என்ற சொல்லுக்கு ஒன்றிலதிகம் பொருள் உள்ளது தெரிந்ததே. Embarassed

ஒரு முறை விகடனில் 'ஆத்தா, நான் பாஸாயிட்டேன் ' மாதிரியான படப்பெயர்களைக் கேலி செய்து வந்த ஜோக் :

குழந்தை, அம்மாவிடம் : "ஆத்தா, நான் ஆயி இருந்துட்டேன்" Smile

தெளிவாகவே, 'பூவாயி'க்கு வேறு பொருள் - 'பூவாத்தாள்' / 'மலர்த்தாய்' என்றே பொருள் கொள்ள வேண்டும். எங்கள் நாட்டுப்புறத்தில் அம்மாவை ஆயி என்று அழைப்பதும், அப்பாயி / அம்மாயி போன்ற உறவுப்பெயர்களும், கருப்பாயி, ராக்காயி போன்ற சொந்தப் பெயர்களும் சர்வ சாதாரணம்! சமீபத்தில் இறந்து போன என்னுடைய அத்தை பெயர் இளங்கோ அடிகளுக்குக் கண்டிப்பாய்ப்பிடிக்கும் -சிலம்பாயி! Smile (சரியான வயது அவருக்கும் யாருக்கும் தெரியாது - ஆனால் என் அப்பா உட்பட்ட அவருடைய தம்பிகளின் வயதின் அடிப்படையில் தொண்ணூறுக்கு மேல் என்று கணக்கிடலாம் - எண்பது வயதுக்கப்புறமும் காட்டுக்கும் தோட்டத்துக்கும் போய் வந்து கொண்டிருந்தவர்; தொங்கட்டான் அணிந்து நீண்ட காதும், பழமொழிகள் வரிக்குவரி தெறிக்கும் நாட்டுப்புற மொழியுமாக பாரதிராசா படம் பார்க்கும்போதெல்லாம் கட்டாயமாக நினைவுக்கு வருபவர்).

ஆயி என்ற சொல், திருச்சி மாவட்டத்தில் அம்மா மக்களை ஆசையாக அழைக்கும் விளிப்பெயராக இருப்பதையும் கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் முதல் முதலாய் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவப்பட்ட கல்லூரி உள்ள புத்தனாம்பட்டிக்கு அடுத்துள்ள அம்மணி மங்கலம் (அரசிதழில் உள்ள ஊர்ப்பெயர் "அபினி மங்கலம்" Laughing ) என் கல்லூரித்தோழனின் ஊர். அவன் வீட்டுக்கு ஒரு முறை சென்ற போது அவனுக்குக்கிடைத்த அதே அன்பான 'ஆயி, ஆயி' என்ற விளி அவனது அம்மா எனக்கும் அருளியது மறக்க முடியாத, என்றும் நினைத்துப் பூரிக்கும் ஒன்று!

அப்படியாக, 'நான் பூவாயி' என்று பல்லவியில் இனிமையாக ஒலிக்கும் இந்தப்பாடல் அற்புதமான நாடன் பாட்டாக இருப்பதில் அதிசயமில்லை!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 2 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum