குறள் இன்பம் - #1 - #948
+3
fring151
Usha
V_S
7 posters
Page 19 of 40
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
Re: குறள் இன்பம் - #1 - #948
#419
நுணங்கிய கேள்வியரல்லார் வணங்கிய
வாயினராதல் அரிது
நுணங்கிய = நுட்பமான
இந்தச்சொல்லுக்கு எதுகையாக "வணங்கிய" என்று வருகிறது.
(வணங்காமுடி என்பதற்கு எதிர்ச்சொல், வணங்கிய - அடக்கமான, பணிவான என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம்).
மற்றபடி, எளிதான குறள். நல்ல கேள்வியறிவு இல்லாவிட்டால், அடக்கமின்றிப் பேசுவார்கள் என்ற பொதுவான உண்மையைச் சொல்லுகிறது.
நுணங்கிய கேள்வியரல்லார்
நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர்கள்
வணங்கிய வாயினராதல் அரிது
பணிவான விதத்தில் பேசும் தன்மையுள்ளவர் ஆதல் கடினம் (அல்லது, இயலாது) !
அதாவது, "வாய் நீளம்" என்றால், "காது மந்தம்" என்கிறார்

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
முன்னமேயே ஒரு குறளில் பார்த்திருக்கிறோம், மாக்கள் = பகுத்தறிவில்லாத மக்கள்!
(பள்ளிக்காலத்தில் எல்லாம் "விலங்குகள்" என்றே சொல்லிக்கொடுப்பார்கள் )
இங்கே மீண்டும் அதே சொல், கேள்வியறிவற்ற ஆனால் "வாயால் தின்ன மட்டும் ஆவலுள்ள" மக்களுக்குக் கிடைக்கிறது!
கூடவே இன்னும் கொஞ்சம் வசவும் உண்டு ("இருந்தா என்ன செத்தா என்ன"!)
செவியிற் சுவையுணரா
செவியின் (கேட்டறிவதன்) சுவையை உணராத
வாயுணர்வின் மாக்கள்
வாயின் சுவை (மட்டும்) உணரும் பகுத்தறிவற்ற மக்கள்
அவியினும் வாழினும் என்
செத்தால் என்ன, வாழ்ந்தால் என்ன?
(பயனற்றவர்கள் என்று பொருள்)
"அவி" என்பது மிக அழகான உவமை, உயிரில்லா நிலைக்கு.
நம் மனதில் எரியும் விளக்கின் படம் உடனே வருகிறது!
அதாவது "உயிருள்ள ஆள்" = ஒளிச்சுடர் எரியும் விளக்கு
இறந்த பிணம் = அவிந்த / அணைந்த / சுடரற்ற விளக்கு!
ஆக, உயிர் = ஒளிச்சுடருடன் ஒப்புமை

#421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கலாகா அரண்
(பொருட்பால், அரசியல், அறிவுடைமை அதிகாரம்)
ஏற்கனவே பல முறை "இது தான் அறிவு, அது தான் அறிவு" என்று சொல்லியிருக்கும் வள்ளுவர், இங்கே அறிவுக்கு என்றே ஒரு தனி அதிகாரம் தருகிறார்.
எப்படியெல்லாம் இதைச் சிறப்பிக்கப் போகிறார் என்று பார்க்கலாம்
அரசியல் என்பதால், அரண் என்று தொடங்குகிறாரரோ?
ஆக, மன்னர்க்கு வேண்டிய அறிவு என்றும் கொள்ள முடியும்.
அற்றம் என்றால் "அழிவு, முடிவு" என்றெல்லாம் பொருள்.
செறுத்தல் என்றால் எதிர்த்தல் / தடுத்தல். அப்படியாகச் செறுவார் = பகைவர்.
அறிவற்றங் காக்குங் கருவி
அறிவு தான் அழிவிலிருந்து காக்கும் கருவி!
செறுவார்க்கும் உள்ளழிக்கலாகா அரண்
பகைவராலும் அழிக்க முடியாத உள்ளான அரண் (கோட்டை)!
உண்மை தான் :-)

#422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பதறிவு
"தீதொரீஇ" இந்தக்குறளில் குறிப்பிடத்தக்க பகுதி!
சொற்கோப்பிலும், பொருள் வன்மையிலும்!
தீது = எளிதில் புரிகிறது, தீமை
தொரீஇ? தொல்காப்பியத்தில் உள்ள சொல் என்று இன்று கற்றேன்.
அதுவும், ஒரு இனிமையான கருத்தைச் சொல்லும் செய்யுள் என்று இது போலுள்ள பக்கங்கள் சுட்டுகின்றன
சென்ற இடத்தால் செலவிடா
சென்ற இடத்திலெல்லாம் (கண்ட கண்ட இடத்திலேயும்) மனதைப் போக விடாமல்
தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பதறிவு
தீமைகளை நீக்கி நன்மையில் மட்டும் செலுத்துதல் தான் அறிவு!
(தொல்காப்பியர் + வள்ளுவர் = வட எழுத்து நீக்காவிட்டால் தீமை )

தொல்பழங்காலத்தில் இந்தியாவின் பெருநிலை மொழிகளாகத் தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் சமசுகிருதம் அனைத்து மொழிகளிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தியும் வருகின்றது. இத்தாக்குறவிற்குத் தமிழ் தவிர பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன தொடக்கத்திலேயே இடம் தந்தன. ஆனால் தமிழ்மொழி மட்டும் இடம் தரவில்லை. இதனை,
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே – தொல்.சொல்.397
எனும் விதி துலக்கும். இவ்விதி பேச்சு வடிவத்தை ஏற்கலாம் என்பதையும், எழுத்து வடிவத்தை ஏற்கலாகாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
சென்ற இடத்தால் செலவிடா
சென்ற இடத்திலெல்லாம் (கண்ட கண்ட இடத்திலேயும்) மனதைப் போக விடாமல்
தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பதறிவு
தீமைகளை நீக்கி நன்மையில் மட்டும் செலுத்துதல் தான் அறிவு!
(தொல்காப்பியர் + வள்ளுவர் = வட எழுத்து நீக்காவிட்டால் தீமை )
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
புகழ் பெற்ற, வள்ளுவருக்குப் புகழ் அள்ளித்தரும் குறள் !
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று சொல்லத்தேவையில்லை
(இந்தக்குறளின் அழகும், கருத்தும் பிடிக்காதவர்களைத் தேடிக்கண்டுபிடிக்கத்தான் வேண்டும்)
எப்பொருள்
எந்தப்பொருள் (கருத்து) என்றாலும்
யார்யார்வாய்க் கேட்பினும்
அதை யார் வாயில் இருந்து கேட்டாலும் (அல்லது எங்கிருந்து படித்தாலும்)
அப்பொருள்
அந்தப்பொருள் (கருத்து / கொள்கை / கோட்பாடு எல்லாமே அடக்கம்)
மெய்ப்பொருள்
சொல்லும் உண்மை (அல்லது அதில் பொதிந்திருக்கும் உண்மை, அல்லது அது உண்மை தானா என்று)
காண்பதறிவு
காண்பது தான் அறிவு!

#424
எண்பொருளவாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பதறிவு
அறிவுத்தொடர்பின் இரு வழிப்பயணத்தை அழகாகச் சொல்லும் குறள் :-)
நாம் சொல்லும் கருத்துகள் மற்றும் கேட்டுப்புரிந்து கொள்ளும் கருத்துகள் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறார் வள்ளுவர்!
எண்மை = எளிமை - நம்மிடமிருந்து வெளிவரும் பேச்சும் கருத்தும் இப்படி இருக்க வேண்டும்!
நுண்மை = நுட்பம், நுணுக்கம் - மற்றவரிடமிருந்து நாம் கேட்டுப் புரிந்து கொள்வது அப்படி இருக்க வேண்டும்!
என்ன அழகு! மீண்டும் இங்கு கேள்விச்செல்வம் புகழ் பெறுகிறது!
எண்பொருளவாகச் செலச்சொல்லி
எளிமையாக (மற்றவருக்குள்) செல்லுமாறு நம் கருத்தைச்சொல்வதும்
தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு
பிறர் வாயில் இருந்து கேட்பதன் நுட்பத்தைத் தான் உணர்ந்து கொள்வதும் தான் அறிவு!

#425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லதறிவு
தழீஇய = நேரடியான பொருள் "தழுவிய" (மரூஉ மொழி)
ஆனால் இங்கு வருவது "நட்பு" என்ற பொருளில் என்று உரையாசிரியர்கள் கூறுவதில் இருந்து புரிகிறது.
(முதலில் நான் "உலகம் தழுவிய அறிவு" என்று புரிந்து கொள்ள முயன்றேன். அப்படி விளக்கினால் பொருள் மாறும் - அதாவது, "உலகம் தழுவியதோடு சேர்ந்து கொள்வதும் / எல்லோரும் விடும்போது விட்டுவிடுவதும் அறிவல்ல, ஆட்டு மந்தை மனநிலை கூடாது" என்கிறாரோ என்று நினைத்தேன்).
உலகம் தழீஇய தொட்பம்
உலகையே நட்பாக்கிக் கொள்வது தான் அறிவு (ஒட்பம்)
மலர்தலும் கூம்பலும் இல்லதறிவு
(நட்பில்) மலர்போல் (மகிழ்ந்து) விரிதலும் (பின்னர்) சுருங்குதலும் அல்ல அறிவு!
மேலுள்ள "நட்பு" சார்ந்த விளக்கம் எல்லாரும் சொல்லுவது.
மாற்றி சிந்தித்தால், என் முதல் புரிதலும் அவ்வளவு விலகி இல்லை என்று தோன்றுகிறது

#426
எவ்வதுறைவது உலகம் உலகத்தோடு
அவ்வதுறைவதறிவு
இந்த உலகம் / உலகு என்பது எப்போதுமே குழப்பமான ஒரு சொல்.
மண்ணுலகு என்று நிலத்தைக் குறிக்கலாம்.
மனிதர்கள் என்று குழுவை அடையாளப்படுத்தலாம்.
சூழல், இயற்கை என்றெல்லாமும் பொருள் கொள்ளலாம். ஒரு காலகட்டத்தையும் "அன்றைய உலகு, இன்றைய உலகு" என்றெல்லாம் சுட்டலாம். ("யுகம்").
இதில் எதை வள்ளுவர் சொல்லுகிறார் என்பது அவரவர் விருப்பப்படிப் படித்துக்கொள்ள வேண்டும்.
மற்றபடி, "எல்லோரும் போகும் வழியில் போவதே அறிவு" என்று சொல்லுவது எனக்கு ஏற்புடையது அல்ல. அது நடைமுறைக்கு வேண்டுமானால் சரிப்படலாம். ஆனால், அறிவுக்கு எப்படிச் சரிப்படும்?
எல்லோரும் போகும் வழியில் இருந்து விலகாத ஒரு அறிவியல் வல்லுனரும் வெற்றி பெற்றிருக்க இயலாதே? ஆக, இங்கு நான் உலகம் என்பதை "நிலம் / இயற்கை" என்று கொள்ளுகிறேன்
எவ்வதுறைவது உலகம்
இயற்கை (நிலம்) எப்படி ஒழுகுகிறதோ (செயல்படுகிறதோ)
உலகத்தோடு அவ்வதுறைவதறிவு
அதற்கேற்ப, அதனோடு சேர்ந்து ஒழுகுதல் / செயல்படுதல் தான் அறிவு!
மற்ற உரைகளில் இருந்து வேறுபடுகிறேன் என்பது தெளிவு!

#427
அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்
அஃதறி கல்லாதவர்
பள்ளிக்காலத்தில் சரிவரப் புரியாமலே படித்து (மனப்பாடம் எல்லாம் செய்த) குறள்
அதுவும் அந்த அஃதறி "கல்லாதவர்" என்பதில் உள்ள "கல்லா"ப்பெட்டியை நிறையவே அழுத்திச் சொல்லுவோம்
பொருள் புரிவது கடினமல்ல, என்றாலும் பல விளக்கங்கள் உள்ளே இருக்க வாய்ப்பிருக்கிறது
அறிவுடையார் ஆவதறிவார்
அறிவுடையவர்கள் ஆவது (ஆகப்போவது) என்ன என்று அறிவார்கள்
அறிவிலார் அஃதறி கல்லாதவர்
அறிவில்லாதோரோ, அப்படி அறிய இயலாதவர்கள்
"எதிர்காலத்தில் / நாளைக்கு என்ன நடக்கும் என்ற அறிவு", "செய்வதற்கு என்ன எதிர்வினை வரும் என்ற அறிவு" என்றெல்லாம் இந்த "ஆவது அறிதல்" என்பதை உரைகள் விளக்குகின்றன.
பொதுவாக அவற்றோடு உடன்படலாம் என்றாலும், தலைகீழாய் அணுகுவதில் உள்ள குறும்புக்காக:
உள்ள நிலையை அலசி, அடுத்து என்ன ஆகும் என்று சொல்லத்தெரிந்தால் தான் அறிவாளி
முன்பார்வை இல்லாதவன் முட்டாள்

#428
அஞ்சுவதஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
நேரடியான கருத்தைச் சொல்வதும், புரிந்து கொள்ள எளிமையுமான திருக்குறள்.
மிக நடைமுறையான அறிவை நமக்குக் கற்பிக்கவும் செய்கிறது.
அஞ்சுவதஞ்சாமை பேதைமை
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாமல் இருப்பது பேதைமை (அறிவு இல்லாமை)
அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
(அப்படியாக) எவற்றுக்கு அஞ்ச வேண்டுமோ அவற்றுக்கு அஞ்சுவது அறிவுள்ளோரின் தொழிலாகும்!
தீயும், மின்சாரமும், எச்.ஐ.வி.யும் உடனடியாக நம் மனதுக்கு வரும் எடுத்துக்காட்டுகள்
"அடப்போய்யா, 'அச்சம் என்பது மடைமையடா' என்று எனக்குச் சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கிறார்கள்" என்று நீங்கள் நினைத்தால், குழப்பம் தான்!
வள்ளுவர் உங்களைப் "பேதை" (முட்டாள்) என்று சொல்லுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

#429
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை
அதிர வருவதோர் நோய்
வரப்போகும் துன்பங்களை முன்கூட்டியே அறிந்து அறிவுடையோர் தவிர்ப்பர் - ஆகையால், அதிர்ச்சியான துன்பம் அவர்களுக்கு (எதிர்பாராமல்) வராது என்று சொல்லும் குறள்.
வெடிகுண்டுகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் எழுதப்பட்ட குறள்
மட்டுமல்ல, இயற்கையோடு ஓரளவு மனிதன் ஒன்றி வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டது. (இன்று போல் நெருக்கடியான நிலைமை அல்லாததால் நிலமே நடுங்கினாலும் பல்லாயிரக்கணக்கில் சாகும் நிலை அன்றில்லை). போகட்டும், பொருள் பார்ப்போம்.
அதிர வருவதோர் நோய்
அதிரடியாக வரக்கூடிய துன்பம்
(எதிர்பாராத அதிர்ச்சியான துயரம்)
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை
எதிர்காலத்தில் வரவிருப்பதை அறிந்து காக்க வல்ல அறிவுடையோருக்கு இல்லை!
முன் எச்சரிக்கையோடு இருத்தல் அறிவாளிகளின் பண்பு என்று கொள்ளலாம்.
அல்லது, தூய அறிவு என்பது, எதிர்காலத்தில் வரவிருக்கும் பேரழிவுக்கு எதிராகக்காக்க இன்றே செயல்படுவது என்றும் கொள்ளலாம்!

#430
அறிவுடையார் எல்லாமுடையார் அறிவிலார்
என்னுடையரேனும் இலர்
வேறு என்ன இருந்தாலும், அறிவு இல்லாவிடில் ஒன்றுமில்லை என்று நேரடியாக அடிக்கும் குறள்!
பொருட்பாலின் ஐம்பதாவது குறள் என்ற விதத்தில் வள்ளுவர் அடித்த 50-ஆம் ஓட்டம் எனலாம்
(அதாவது எவ்வளவு பொருள் இருந்தாலும் அறிவில்லையேல் சுழி நிலை என்கிறார்)
அறிவுடையார் எல்லாமுடையார்
அறிவுடையவர்களுக்கு எல்லாம் (எல்லா நலன்களும், செல்வங்களும்) உண்டு
அறிவிலார் என்னுடையரேனும் இலர்
அறிவு இல்லாதவர்களிடம் என்னவெல்லாம் இருந்தாலும் ஒன்றும் இல்லாதவர்களே!
அதாவது, பணம் / பொருள் இல்லாத நிலை அறிவுள்ளோர் ஒரு வேளை எதிர்ப்படினும் ஒன்றும் குறைந்து போய்விட்டதாக எண்ண வேண்டாம் என்கிறார்.
அது எப்படியேனும் சரி செய்யப்படும். (அல்லது, வேண்டிய தேவைகள் எப்படியாவது கிடைத்து விடும், அவை அறிவுக்கு மாற்றீடு அல்ல).
ஆனால், பொருள் இருந்து அறிவில்லா நிலை சரி செய்ய முடியாத/ மாற்றீடு இல்லாத துன்ப நிலை என்கிறார்.
உண்மை தான்

#431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
(பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல் அதிகாரம்)
வள்ளுவர் "சிறுமை" என்று சொல்லுவதை உரையாசிரியர்கள் காமம், பெண்ணாசை என்றெல்லாம் ஏன் சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை.
ஒரு வேளை முற்காலங்களில் சிறுமை என்றால் அது தான் பொருளோ என்னமோ
சிறுமை என்றதும் எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம் "பெருந்தன்மை இல்லாத நிலை - அதாவது குறுகிய மனது, தன்னலம்" போன்ற சின்னத்தனங்கள்.
பொதுவான பொருளை மட்டும் பார்ப்போம்.
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
செருக்கு (பெருமை / இறுமாப்பு) , சினம், சிறுமை - இவை இல்லாதோர்
பெருக்கம் பெருமித நீர்த்து
அடையும் பெருக்கம் (அல்லது செல்வம்) மேம்பாடுடன் விளங்கும்!
அது சரி, ஏன் இந்தக்கருத்து "குற்றங்கடிதல்" என்ற அதிகாரத்தில்?
"செருக்கு / சினம் / சிறுமை இல்லாதவன் தான் குற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டால் ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளவன்" என்று சொல்ல வருகிறாரோ?
(குறிப்பாக அரசியல் என்பதால், மன்னர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்றும் கொள்ளலாம்)

#432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
இவறல் = பேராசை
ஏதம் = குற்றம்
ஆக, இங்கே மன்னர்களுக்கு எவை குற்றங்கள் என்று வள்ளுவர் சொல்லிக் "கடிந்து கொள்கிறார்"
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும்
பேராசையும், மாண்பு (மாட்சிமை) இல்லாமல் போன மானமும் (மானம் இழந்த நிலை), கூடாத / தகுதியில்லாத உவகைகளும் (இன்பங்கள்)
இறைக்கு ஏதம்
மன்னருக்குக் குற்றங்களாகும்! (கூடவே கூடாதவை)
அப்படியாக, மன்னர்கள் தவறிழைத்தால் அவர்களது குற்றங்களைக் கடிதல் புலவர்களின் கடமை என்பதையும் இங்கே வள்ளுவர் நினைவுறுத்துகிறார்!
நம் நாட்களில் புலவர்கள் அரசியல்வாதிகளுக்குக் கட்டுப்பட்டு வணக்கமிட்டு நிற்கும், அவர்களது கொள்ளைகளில் கூட்டுப்பங்கு எடுக்க முயலும் நிலையை வள்ளுவர் கண்டால் என்ன சொல்லுவார்?

#433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணுவார்
"பைய்யத் தின்னால் பனையும் தின்னாம்" என்று மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. நிறைய உணவைத் தட்டில் இட்டு விட்டு நாம் முழிக்கும் போது சொல்லுவார்கள்.
அப்படியாக, "பெரிய அளவு, நிறைய, கூடுதல், உயரம்" என்றெல்லாம் சொல்லுவதற்குப் பனை உவமை.
அதற்கு எதிர் உவமை தினை. (ஒரே ஒரு சிறிய தானிய மணி)
தினைத்துணையாங் குற்றம் வரினும்
தினை அளவுக்கே குற்றம் வந்தாலும் (அதாவது மிகச்சிறிய தவறு செய்து விட்டாலும்)
பழிநாணுவார்
பழிக்கு நாணுபவர்கள் / அஞ்சுபவர்கள்
பனைத்துணையாக்கொள்வர்
அதைப் பனை போல எண்ணிக் கொள்வார்கள் (பெரிதாகக் கருதுவார்கள்)
குற்றம் கூடாது என்பதில் எவ்வளவு முனைப்பாக இருக்க வேண்டும் என்று அருமையான உவமையோடு சொல்லும் குறள்!

#434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை
"முதலில் உனக்கு வரும் கோபத்தை அடை / அடக்கு" என்று சொல்லுவது நாம் அடிக்கடி கேட்பது.
அப்படியாக, ஒரு கெட்ட இயல்பைப் "பூட்டி" வைக்க வேண்டும் என்று சொல்லும் மொழிமுறை இந்தக்குறளில் அழகாக வருகிறது.
"பூட்டுப் போடுதல்" என்பதைக் "காத்தல்" என்றும் சொல்லலாம் தானே
குற்றமே அற்றந் தரூஉம் பகை
அழிவு தரும் பகை குற்றம் தான்! (ஆகையால்)
குற்றமே காக்க பொருளாக
குற்றம் வராமல் (இருப்பதைக்) காத்துக்கொள்ள வேண்டும்
நேரடியான பொருள் "குற்றத்தை அரும்பொருள் போலக் காக்க" என்று தான்.
அதாவது, "குற்றம்" என்பதைக் கருவூலத்தில் போட்டு அடைத்து வைக்க வேண்டுமாம்.
குற்றம் செய்யும் தன்மையை அடைத்துப்பூட்ட வேண்டும் அரசன்!
வெளியே வர விடக்கூடாது!

#435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்கெடும்
நன்கு அறிமுகமான குறள் என்றாலும், "குற்றப்பின்னணி"யில் வைத்து சிந்தித்ததில்லை
பொதுவாக, அழிவு வருமுன் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ற அளவில் தான் மனதில் .இருந்தது.
இப்போது தான் இதன் முழுப்பொருளும் விளங்குகிறது
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
(குற்றம்) வருமுன்பே (அதற்கு எதிராகத் தன்னைக்) காத்துக்கொள்ளாதவன் வாழ்க்கை
எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்
தீயின் முன்னாள் வைக்கோல் போர் (எப்படி அழியுமோ அது) போலக் கெட்டழியும்!
என்ன ஒரு சூடான உவமை!
அழிவுக்குக் காரணம் நாம் செய்யும் குற்றம்! ஆக, அழிவு வராமல் காக்க வேண்டுமென்றால் குற்றம் செய்யாமல் இருப்பதே முதல்படி.
("குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது" - அருமையான பாடல்)

#436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்றமாகும் இறைக்கு
குற்றம் என்ற பொருளில் மன்னனுக்கு மிகத்தேவையான ஒரு பண்பை வலியுறுத்தும் அழகிய குறள்
அறத்துப்பாலில் "ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ" என்று பார்த்திருக்கிறோம். இங்கோ, அதன் அடிப்படையில் மன்னன் நடவடிக்கை எடுப்பதையும் சேர்த்து வள்ளுவர் எழுதுகிறார்.
தன்குற்றம் நீக்கி
(முதலில்) தன்னுடைய குற்றங்களை நீக்கி
பிறர்குற்றங் காண்கிற்பின்
(பின்னர்) பிறர் குற்றம் காணவும் (களையவும்) முற்படுவான் என்றால்
என்குற்றமாகும் இறைக்கு
அத்தகைய மன்னனுக்கு என்ன குற்றம் வரும்? (குழப்பம் ஒன்றும் வராது என்று பொருள்)
தனது குற்றம் காண்பது மட்டுமல்ல, நீக்குவதே முதல் படி என்று அடித்துச்சொல்லுகிறார்.
"முதலில் உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடு, பின்பு மற்றவனின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க வழி பார்க்கலாம்"
-மலைச்சொற்பொழிவில் இயேசு

#437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
இவறி என்ற சொல் இந்தக்குறள் வழி இன்று கற்றுக்கொள்கிறேன்
கருமி / பிசினாறி / கஞ்சன் என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது.
செயற்பால செய்யாத
செய்யத்தக்க வேண்டியவற்றைச் செய்யாத (கட்டாயம் செய்ய வேண்டிய நன்மைகளைச செய்ய மனமற்ற)
இவறியான் செல்வம்
கருமியின் பொருள் வளம்
உயற்பால தன்றிக் கெடும்
உளதாகாமல் நசித்துப் போய்க் கெடும்!
(40-ஆம் குறளில் 'உயற்பால' என்பதற்குச் சொன்ன பொருள் இங்கே பொருந்தாது. ஆகவே, மீண்டும் தேடல். அகராதியில் இந்தக் குறளைச் சுட்டி "உளதாகை" என்கிறார்கள்.)
மன்னன் குற்றங்கடிதல் என்ற விதத்தில் பார்த்தால், தலைவன் கருமியானால் ஒரு நாட்டின் செல்வமே இல்லாதாகும் என்று புரிந்து கொள்ளலாம்.

#438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவதொன்றன்று
கருமித்தனம் என்பதற்கு இன்னொரு சொல் இங்கே : பற்றுள்ளம்!
(பொருளைப் பற்றிக்கொண்டு, "விடமாட்டேன்" என்று சொல்லும் உள்ளமோ?)
அகராதி சொல்லுகிறபடி, இவறன்மை என்பதும் சேர்ந்து வரும் ஒன்று தான் - "கருமித்தனத்தின் தன்மை"
பற்றுள்ளம் என்னும் இவறன்மை
பொருள் மீது பற்றுள்ள உள்ளம் கருமித்தன்மை கொண்டிருப்பது (என்ற குற்றம்)
எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்றன்று
எதனோடும் சேர்த்து எண்ண முடியாத ஒன்றாகும்.
(அதாவது, அவ்வளவு கொடுமையான குற்றம், எதையும் விடத்தீங்கானது!)
உயர்வு நவிற்சி என்று வைத்துக்கொள்வோம்.
புலவருக்கு ஈகை காட்ட மன்னன் யாராவது மறுத்தபோது வந்த சீற்றத்தில் வந்தது என்றும் வைத்துக்கொள்ளலாம்

#439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
பொதுவான குறள் , பொருள் புரிவதும் எளிதான ஒன்று
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை
ஒருபோதும் தன்னைத்தானே வியந்து மதிப்பிடக்கூடாது!
("அட, நான் எவ்வளவு உயர்ந்தவன், அழகன், என் திறமை தான் என்ன!" என்றெல்லாம் தன்னையே பாராட்டி வியப்பது குற்றம் என்று கடிந்து கொள்கிறார். குறிப்பாக, மன்னர்களுக்கு அறிவுரை சொல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
மற்றவர் நம்மைப்பார்த்து வியக்க வேண்டுமே ஒழிய, நாமே நம்மைப்பார்த்து அல்ல!)
நன்றி பயவா வினை நயவற்க
நன்மை பயக்காத செயல்களை நாடவும் கூடாது
((நயம் / நயன் என்றால் விருப்பம் என்று ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம்)
ஆக, என்ன கூடாது / எவையெல்லாம் குற்றங்கள் என்று பட்டியல் போட்டுக் கடிந்து கொள்கிறார், இந்த அதிகாரம் முழுவதும்!

#440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
யாரையும் வீழ்த்த அவர்களுக்கு எங்கே குறைவு இருக்கிறது என்று ஆராய்வது பொதுவான ஒரு முயற்சி.
ஒருவரது விருப்பங்களை அறிந்து அதன் அடிப்படையில் குழி தோண்டுவது என்றும் உள்ள போர் சூழ்ச்சி.
மன்னன் வீழாதிருக்க, எவ்வாறு தன் காதல்களை பிறர் அறியாமல் காக்க வேண்டும் என்று கடிந்து கொள்ளும் குறள்
காதல காதல் அறியாமை உய்க்கிற்
தன் விருப்பம் மற்றவருக்குத் தெரியாமல் அடைய முடிந்தால்
பின் ஏதில ஏதிலார் நூல்
பின் பகைவரின் திட்டம் வலிவில்லாமல் போகும்!
ஏதிலார் என்பதற்கு இங்கு சொல்லப்படும் பொருள் "பகைவர்" (அல்லாமல், அந்நியர் / பரத்தையர் என்றெல்லாம் இதற்குப் பொருள் உள்ளதாம்)
நூல் என்பதற்கு அகராதி சொல்லும் எண்ணற்ற பொருட்கள் பார்த்தால் தலை சுற்றும்
திட்டம் / சூழ்ச்சி (ஆலோசனை) என்பது அதில் ஒன்று மட்டுமே. .

#441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
(பொருட்பால், அரசியல், பெரியாரைத்துணைக்கோடல் அதிகாரம்)
மூத்த = முதிர்ச்சி அடைந்த, இந்தக்குறளில் இதை முன்னாலும் பின்னாலும் பொருத்திக் கொள்ள முடியும்
அதாவது, அறனறிந்து மூத்த = அறம் தெரிந்து, அதிலே நடந்து முதிர்ந்த
அல்லது, மூத்த அறிவுடையார் = அறிவில் முதிர்ந்தவர்
எப்படி எடுத்தாலும் நல்ல விதத்தில் பொருந்தும் - அவரே பெரியோர் :
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
அறம் தெரிந்து, அறிவில் சிறந்து முதிர்ந்தவர்களின் நட்பு
திறனறிந்து தேர்ந்து கொளல்
எப்படிப்பெறுவது என்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
அறத்திலும் அறிவிலும் சிறந்தோர் நமது பக்கத்தில் நின்றால் தான் அரசில் வெற்றி பெற முடியும்.
அவர்களின் நட்பை எவ்வளவு முயற்சி செய்தாகிலும் அடைய வேண்டும் என்று மன்னனுக்கு அறிவுரை சொல்லுகிறார் இங்கே!

#442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
பெற்றி என்றால் "தன்மை" என்று சொல்லும் அகராதி, இந்தக்குறளை எடுத்துக்காட்டுகிறது.
அப்படியாக, "பெற்றியார்" = தன்மை நிறைந்தோர்!
மற்றபடி படிக்க எளிமையான குறளே
உற்றநோய் நீக்கி
வந்திருக்கும் துன்பத்தை நீக்கி
உறாஅமை முற்காக்கும்
இனித்துன்பம் வராமல் முன்னமேயே காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
தன்மை உள்ளோரின் நட்பைத் தேடித்தக்கவைத்துக் கொள்ள வேண்டும்!
இவ்வாறாக, "பெரியோர்" என்பவர் துன்பம் நீக்க வல்லோர். மேலும், இனித்துன்பம் வராமல் காக்க என்னென்ன வழி என்றும் தெரிந்தோர். (நம்மில் பலருக்கும் நமது அம்மா / அப்பா நினைவுக்கு வந்திருக்கும் )
மன்னன் என்பவன் இத்தகைய பெரியோருடன் நட்பு பேணவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

#443
அரியவற்றுளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
தமர் = தம்முடையவர், உறவினர், நண்பர், (அறிவுரை தருவதற்குக் கூடவே இருக்கும்) சிறந்தோர்
பெரியாரை இவ்விதமாகத் "தமராகக்" கொள்ளுதல் எவ்வளவு சிறப்பானது என்று சொல்லும் செய்யுள்
சொற்சுவை / செய்யுள் அழகு / உவமைச்சிறப்பு இப்படியெல்லாம் இங்கே பெரிய அளவில் இல்லை என்றாலும் ஆழ்ந்த பொருள் உள்ள குறள் தாம்
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
பெரியாரைப்பேணி (அன்புடன் நட்புக்கொண்டு, அதைக்காத்து) அவர்களைத் தம்முடையோர் ஆக்குதல்
அரியவற்றுளெல்லாம் அரிதே
அரியவை எல்லாவற்றிலும் அரியது. (மிகச்சிறந்த ஒன்று, கிடைப்பதற்கு அரிதானது, விலை மதிப்பற்றது என்றெல்லாம் கொள்ளலாம்).
சிறந்த பெரியோரின் உறவு என்ன கொடுத்தும் காத்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில் பல நேரங்களிலும் இதற்கான தேவை பணமோ பொருளோ அல்ல - மதித்தல், அன்பு காட்டுதல், தொடர்பில் இருத்தல் என்பன மட்டுமே.
இளைஞர் மற்றும் நடுவயதினர் மனதில் கொள்ள வேண்டிய அறிவுரை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum