Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Anything about IR found on the net - Vol 1

+44
nambik
Kr
ravinat
crimson king
dilbert
kaarigan
D22_Malar
writeface
Drunkenmunk
crvenky
Punnaimaran
fring151
endrum_raja
rajkumarc
layman10
MumbaiRamki
kamalaakarsh
Usha
mavurundai
Raaga_Suresh
vicks
Sanjeevi
balachidambaram
raajarasigan
mythila
groucho070
irir123
SenthilVinu
kiru
sheepChase
Wizzy
2040
Sakalakala Vallavar
Bala (Karthik)
sagi
skr
kv
kameshratnam
plum
jaiganesh
Admin
Joe
V_S
app_engine
48 posters

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Fri Apr 12, 2013 4:38 pm

Wizzy wrote:it was a goof up on the part of the blogger, the track on the cd is from 'Padikatha Panaiyaar'

That's good to know!

nanRi Wizzy!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  mavurundai Fri Apr 12, 2013 7:02 pm

Balu Mahendra's latest blog post. It has some font conversion issues. Converted and pasted it here.
http://filmmakerbalumahendra.blogspot.com/2013/04/blog-post.html

முள்ளும் மலரும் படத்தில் நான்.
பாலு மகேந்திரா

பூனே திரைப்படக் கல்லூரியின் ஒளிப்பதிவுத் துறையில் என் மூன்று வருடப் படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பாரக்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் நெல்லு” இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியாத். செம்மீன்” புகழ் ராமு கரியாத்.
முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71-முதல் 75-வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன். பெரும்பாலானவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்களுக்குள் மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குத்தரப்படுகிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைகிறது. ஐந்து வருடங்களில் 21 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976 - ல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான கோகிலா” - வைத் தொடங்குகிறேன். கோகிலாவின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்கிறேன். கோகிலா கன்னடமொழிப் படம். கமலஹாசன், ஷோபா மற்றும் ரோஜாரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்ற கன்னட இளைஞரை இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துகிறேன். அப்பொழுது மோகன் பங்களூர் வங்கி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

இந்தப் படத்தின் இசை, இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான சலீல் சௌத்ரி. கோகிலா படத்தின் மூலம் சிறநத திரைக்கதையாளருக்கான கர்நாடக அரசின் விருதும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைக்கிறது. கோகிலா, கன்னட மொழியிலேயே சென்னையில் 150 - நாட்கள் ஓடிச் சாதனை படைக்கிறது. கோகிலாவை அடுத்து நான் ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பினேன். என் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தைப் பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ்ப் படத்திற்கு “அழியாத கோலங்கள்” என்று பெயர் வைத்து படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன்.
இந்தச் சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார்.
கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் “முள்ளும் மலரும்” என்ற நாவலைத்தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.
அந்த நாவலை கல்கியில் அது கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன. அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல
நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜனிகாந்தும் அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.
கோகிலாவைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ்ப் படத்திலும் ஷோபா இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்தப் படம் பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று விடலைப் பையன்களைப் பற்றிய படம். அந்த மூன்று விடலைகளும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஷோபாவுக்கு “அழியாத கோலங்கள்” படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல் தான் வைத்திருந்தேன்.
ஆனால் முள்ளும் மலரும் படத்தில் அவளுக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில், ரஜினி தங்கையாக அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்றுபடுகிறது.
எனவே எனது “அழியாத கோலங்கள்” படத்தைக் கொஞ்சம் தள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான “ முள்ளும் மலரும்” படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன்.
மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல.
எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (தங்ள்ல்ர்ய்ள்ண்க்ஷண்ப்ண்ற்ஹ்) மிக அதிகமாகிறது. ஒரு படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே “முள்ளும் மலரும்” படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாட­லும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கெமராக் கோணங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்துப் பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்கிறேன்.
இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
“முள்ளும் மலரும்” படம் 1978 - ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிளது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி.
எனது முதல் தமிழ்படமான “அழியாத கோலங்கள்” 79-ல் தான் வெளியானது.
“முள்ளும் மலரும்” படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உணர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவுபண்ணியிருந்தார்.
“செந்தாழம் பூவில் ..” என்ற அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்து கொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ்.
இன்றுவரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது...
இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொன்டாஜ் (ஙர்ய்ற்ஹஞ்ங்) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன். அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குத்தான் தன்னுடைய வாய்அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.
1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த “லவ் மொன்டாஜ்” என்ற உத்தியை இன்றைய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.
கதையின் நகர்வு, கதாபாத்திரங்களின் தோற்றம், அவர்களின் உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புத்தன்மை என்று பார்த்துப் பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டுமுதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும், இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்பங்களையும்தவிர, பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்புத்தன்மைக்குப் புறம்பானவை, அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.

“முள்ளும் மலரும்” படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு கந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட்ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணுசெட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி..என முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை! நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு!


எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனது படங்களின் மூலம் மகேந்திரனும், இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எங்கள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எங்கள் உடல்கள். நாங்களல்ல!

mavurundai

Posts : 16
Reputation : 1
Join date : 2012-11-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  vicks Mon Apr 15, 2013 2:58 am

came across this video where Maestro talks about his experiences with 'Maha Periyava' :
https://www.youtube.com/watch?v=sWEE-gVSdwc

this video once again seems to prove what the Maestro claims - that so many unique incidents have occured in his life!

vicks

Posts : 84
Reputation : 0
Join date : 2013-01-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Mon Apr 15, 2013 8:21 pm

கண்கள் பார்க்கும் இசை

Written by Sukumaran...some IR references here and there Smile



சினிமாவுக்கான விஷுவல் மியூசிக்கை உருவாக்கியவர் இளையராஜா, அவர் வருகைக்குப் பின்னர் தான் திரை இசை, காட்சி முக்கியத்துவம் பெற்றது.

...

முழுவதும் இசை மயமான படங்களை இளையராஜாவும் நமக்கு அளிக்கவில்லை. அது அவருடைய குறையாகவும் இயக்குநர்களின் குறையாகவும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர் இசையமைத்த சில படங்களில் தென்படும் காட்சி இசைஅபூர்வமானது. புன்னகை மன்னன் படத்தில் ரேவதி தன் காதலைத் தெரிவித்தவுடன் ஆடும் காட்சியில் வரும் இசை, கண்ணே கலைமானே பாட்டின் இடையீடுகளில் வரும் இசை இவையெல்லாம் காட்சி ஒலியாகவும் இசை காட்சியாகவும் மாறும் அபூர்வ தருணங்களின் உதாரணங்கள். ஆனால் இசைக்கு வாய்ப்பு மிக அதிகமாக இருந்த ஒரு படத்தில் இளையராஜாவின் இசைவெறும் செவி இசையாக மட்டுமே தேங்கிப் போனதும் உண்டு. அது ‘மோகமுள்’ என்ற சங்கீதத்தின் உச்சம் தளும்பும் நாவலின் திரைவடிவத்தில். இசைப் படமாக வந்திருக்க வேண்டியது பாடல்களின் படமாகச் சுருங்கிவிடுகிறது. மாறாக ஓர் அசட்டுக் கதைப்படமான ‘நாடோடித் தென்றல்’ (கதை - இளையராஜா) காட்சி இசையால் உயர்ந்து நிற்கிறது. இசையைக் காட்சியாகப் பார்க்கும் இந்த நுட்பம் தான் ஒரு படத்தின் மொத்த ‘மூடை’யும் ஒருமைய இசைக்குள் theme music அடக்கச் செய்கிறது. மெலிதான டிரம் பீட்டுகளுடன் சீட்டியடிப்பது போல எழும் இசையைக் கேட்டதுமே‘ தி குட் பேட் அண்ட் அக்ளி ’ என்ற ஹாலிவுட் படத்தின் காட்சிகள் மனக் கண்ணில் திரையிடப்படும், அது எனியோ மோரிக்கோ வின் காட்சியிசையின் விளைவு. இதைத் தமிழில் சாத்தியமாக்கியவர் இளையராஜா. ‘நாயகன்’ , ‘தளபதி’ ‘சேது’ ‘நந்தலாலா’ படங்களில் அவர் அமைத்திருக்கும் தீம் மியூசிக்கே படத்தை மனத்திரையில் நகரச் செய்யும். இந்த நுட்பம் ரஹ்மானிடம் செழுமை பெறுகிறது. ரஹ்மானின் தீம் மியூசிக் இல்லாமல் ‘பம்பாய்’ படத்தை ரசிப்பது கடினம்.

தமிழ் சினிமாவில் தீம்மியூசிக் என்ற அம்சம் அறிமுகமானது இளையராஜா காலத்தில் என்றும் அது செழுமை பெற்றது ரஹ்மானிடமும் என்றும் நினைத்திருந்தேன். வேடிக்கையாக யோசித்த போது அதை அறிமுகப்படுத்தியவர்கள் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் என்று தோன்றியது. ஆட்டுக்கார அலமேலு படத்தில் வரும் ‘டொடொய்ங் டொய்ங்’ சத்தம் தான் ஒரு வேளை தமிழ்ச் சினிமாவின் முதல் தீம்மியூசிக்காக இருக்கலாம்.


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Mon Apr 15, 2013 8:29 pm

article by Nallusamy who did the camera work for 'avaL appadiththAn'

Quite interesting!



படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனை ஆகிவிட்டது. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, இளையராஜா கூட்டணியில் ஸ்ரீதர் தயாரிப்பில் அப்போது வெளியாகி இருந்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் நன்றாக ஓடியதால் எங்கள் படம் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை வைத்தே படம் எடுத்துவிட்டோம்.

படம் முடிந்து விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினோம். அன்று தான் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். படம் பார்த்தவுடன் அனைவர் முகத்திலும் சவக்களை! ரேட் குறைவாகத்தான் விற்றிருந்தோம். எனவே அனைவரும் பிரிண்டுகளை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் நல்ல தியேட்டர்களில் வெளியிடவில்லை. இப்படம் 1978 தீபாவளிக்குரிலீஸ். 12 படங்கள் ரிலீசாகின. கமலுக்கு மூன்று படம். ரஜினிக்கு மூன்று படம். ஆனந்தவிகடன் விமர்சனத்தில் எங்கள் படத்துக்குத்தான் குறைவான மார்க். நூற்றுக்கு 28 மார்க்.

படம்வெளியானதும் மோசமான எதிர்வினை. சில இடங்களில் தியேட்டர் நாற்காலிகளை ரசிகர்கள் உடைத்ததாகத் தகவல். இரண்டே வாரத்தில் தமிழ்நாடு முழுக்க படம் தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்டு விட்டது. படம் ஓடவில்லை. நாங்கள்தோற்று விட்டோம் என்று நினைத்த போது ஓர் அதிசயம் நடந்தது. புகழ்பெற்ற இயக்குநர் மிருணாள் சென் சென்னைக்கு வந்து தங்கினார்.

ஓர் இரவு எதாவது படம் பார்க்கலாமே என்று அவள் அப்படித்தான் படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறார்.

மறுநாளே அவர் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து படம் மிகவும் அற்புதமாக உள்ளது. ஏன் நீங்கள் நல்ல படத்தை ஆதரிப்பதில்லை என்று புகழ்ந்து பேட்டி கொடுத்தார். பத்திரிகைகள் அவர் பேட்டியை வெளியிட்டதுடன் ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, ருத்ரய்யா பேட்டிகளையும் வெளியிட்டன.

படம் ஓட ஆரம்பித்துவிட்டது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் 100 நாள் ஓடியது. இதற்கு தமிழக அரசின் மூன்று விருதுகள் கிடைத்தன. எனக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கிடைத்தது.


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Tue Apr 16, 2013 8:27 pm

Pamaran's article on comedians, especially GM

The IR reference :

பாமரன் wrote:

எனது பால்ய காலங்களைப் பலர் பங்கு போட்டுக் கொண்டாலும் எனது இளமைக் காலத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் இருவர் மட்டுமே. ஒன்று : இளையராஜா. மற்றொன்று: எனது தானைத் தலைவன் கவுண்டமணி. எண்பதுகளில் ஒரு திரைப்படம் பார்க்கப் போகிறோம் என்றால் அது இளையராஜா இசையமைத்ததாய் இருக்க வேண்டும். அல்லது கவுண்டமணி நடித்ததாய் இருக்க வேண்டும்.


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Tue Apr 16, 2013 8:32 pm

IR is following our forum



ஏப்ரல் 14. தமிழ் புத்தாண்டையொட்டி தன் வீட்டிற்கு பழம்பெறும் கவிஞர்களை நேரில் வரவழைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. அவர்களுக்கு அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டிருக்கிறது.

இதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி, எல்.ராமநாதன் காலத்து கவிஞர்களை கூட தேடி தேடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். காலம் கடந்த கவுரவம் என்றாலும், கனிவோடு வர சம்மதித்தார்களாம் பலர்.


Once we've started writing about GA (and now VM), rAsA also suddenly calls kavingnars and honors them Smile

That way, our forum is munnOdi to rAsA Laughing

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Wed Apr 17, 2013 10:13 pm

One more migration
'aa dinagaLu' Kannada director...



After having worked with Ilayaraja in two films, this time Chaitanya chose Anoop Seelin to score music.


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  Raaga_Suresh Thu Apr 18, 2013 1:47 pm

Title song of 'Touring Talkies':

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=l-XDi9uMSX8

Raaga_Suresh

Posts : 405
Reputation : 24
Join date : 2012-10-24

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  mavurundai Thu Apr 18, 2013 11:16 pm

http://www.self-titledmag.com/2013/04/18/premiere-ilaiyaraaja-malaysia-vasudeva-aththi-marakkili/

A sequel of sorts to Finders Keepers’ sprawling Solla Solla compilation, Ilectro transports us to the totally ’80s phase of Tamil pop’s Crown Prince, Ilaiyaraaja. Baffling in the best way possible, it imagines a world where emerging strains of synth-pop and electro merge with the mad-for-it soundtrack music of Kollywood.

Or as Finders Keepers founder Andy Votel once told the Red Bull Music Academy, “This one-man wide-winged pop-culture vulture has been indiscriminately ravaging and regurgitating global pop for over 40 years, and made some of the most joyous, existential and euphoric electronic South Asian pop music to ever grace the dancefloors, picture houses, wedding parties, concert halls and discotheques of Tamil and Malay-speaking countries and beyond. With a portfolio of 4,500 recorded songs under his belt, it might seem humanly impossible by the standards of today’s Western pop perfectionists and procrastinators to achieve what this mutable multi-instruMENTALIST has already done. Perhaps it actually IS ‘humanly impossible.’ He’s a deeply religious man, without vices or venom, and has a strong preservationist tendency towards traditional Indian music. But Ilaiyaraaja is no enemy of technology. He is friends with the robots.”

Take that, Daft Punk…

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Indo-magnetic-illy


mavurundai

Posts : 16
Reputation : 1
Join date : 2012-11-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  V_S Fri Apr 19, 2013 2:18 am

Wow! super share mavurundai. the clap I have already ordered the CDs. Can't wait to listen. aththi marakiLi is superb, kickass stuff. Feel like listening for the first time. Excellent quality, imagining how the CD version would be. Very Happy

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty On priacy

Post  layman10 Fri Apr 19, 2013 5:03 am

http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Fighting-piracy-legally-is-a-headache-Ilaiyaraja/articleshow/19597040.cms

Intha questionukku 17th centry reference ellam thervaiya?. Athuvum P B Srivasukkum, super mokkai singer Srinivasukkum difference theriyatha TOI kitta?.

layman10

Posts : 12
Reputation : 0
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  Raaga_Suresh Fri Apr 19, 2013 12:12 pm

V_S,

The complete article about Raja and other 'alternate' musicians here:

http://www.redbullmusicacademy.com/magazine/ten-electronic-extroverts-from-the-middle-east-and-south-asia-02

Raaga_Suresh

Posts : 405
Reputation : 24
Join date : 2012-10-24

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  V_S Fri Apr 19, 2013 5:12 pm

Sureshji,
Thank you so much for sharing this amazing article. the clap It's good that he saved till last to write about Maestro, which shows how different he is from others. Nicely written, great style. Great honor to Maestro. I also read part-1. Some nice names there, need to listen to them. It gives a good overall summary of musicians in south-asia.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  plum Fri Apr 19, 2013 7:19 pm

I was initially sceptical about the article, thinking he is lumping IR with many other "South Asian composers". I thought this is just another Lloyd Webber, with interest in just exotic stuff. But he warmed my cokcles with that "I saved the best for the last", thereby acknowledging the uniqueness of Raja.



I am also glad he understood that this is a composer who has mastered every genre, and utilises them simultaneously with proper integration(not just L Subbu/Zakirbhaislbandhi fusion).



It doesnt matter that the man who appreciated is a veLLakAran here. What matters is he has understood IR so much in depth - this is something that needs to be brought to IR's attention. I am thinking let me bring it to KR's attentnion but I stop myself immediately - because KR will sue this guy for compensation if I do.



dei Karhtikeya, ipdu mAnatha vAngaRiyEdA!

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  layman10 Fri Apr 19, 2013 7:34 pm

plum wrote:


It doesnt matter that the man who appreciated is a veLLakAran here. What matters is he has understood IR so much in depth - this is something that needs to be brought to IR's attention. I am thinking let me bring it to KR's attentnion but I stop myself immediately - because KR will sue this guy for compensation if I do.

dei Karhtikeya, ipdu mAnatha vAngaRiyEdA!

Don't worry, they pay copy right to Agi Music for these releases Smile (if that's what you meant here).

These records seem get good attention in many community FM radios in the west. Some documentaries, ads sourcing Rajas music (also that Olympic talk) was because of these releases.

layman10

Posts : 12
Reputation : 0
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Sat Apr 20, 2013 3:51 pm

An old colleague posted this in FB :


உங்கள் இசை உலக வாரிசு யார்?

வாரிசு என்றால் சேர்த்து வைத்த உண்டுபண்ணிய சொத்துக்களை அனுபவிப்பவர்கள். அந்த முறையில் பார்த்...தால் என் ரசிகர்கள் எலலாருமே என்னுடைய வாரிசுகள்தான். அவர்கள்தான் நான் உண்டு பண்ணிய இசை அனைத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.

....... இசைஞானி நன்றி குமுதம் ராஜபவனி 24.4.13

Laughing

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  Raaga_Suresh Sun Apr 21, 2013 8:05 pm

P_R wrote this superb note on Tiruvasagam and posted it on twitter:

http://www.twitlonger.com/show/n_1rjsndu

". @balakarthik78 @_Drunkenmunk @JVazhkudai

want to write a bit about TiS. Particularly Jai's comment about 'he should also set pAsurams' to tune. It is a fairly common notion that I am not sure I feel strongly about.

I am more familiar with pAsurams - as I grew up learning them a bit and later developed a keener interest in it. And then whenever I attempted to read saiva thirumuRaigaL I felt a certain dissance.

Not in the least because the 'devotion' exalted in the periyapurANam stories was too extreme and unpalatable for me - piLLaikkaRi, cutting the hand of the woman who plucked the flower meant for Siva, 'giving' one's wife to sivanadiyAr and cutting up oor-makkaL who opposed, appoodhi adikaL serving appar food hiding his son's death, kaNNappar gouging his eye out etc.

In comparison the pAsurams are rather 'mild' and the mood is generally celebratory. Celebrating the joy of the Lord. His leelaigaL, the joy of reaching him etc. And many sanga-ilakkiya tropes in that - AzhwAr singing like a 'woman yearning for the Lord', singing like a mother (even foster mother - செவிலித்தாய் கூற்று) of a girl who is distressed by her love for the Lord etc. And many other லௌகீக situations where God is portrayed as the approachable, conversed with on a faux one to one basis. PeriyAzhwAr is all about the wonder of God in a human form - indeed child form.

With this background familiarity I found/find saiva thirumuRaigaL that much forbidding. They seemed replete with the theme of 'having wasted time in wordly desires'(anticipating the later songs of arunagiri and the sidhdhars) and the concept of grace. Grace inherently means one is undeserving of the bounty one receives - which is what, it is said, attracted G.U.Pope to ThiruvAsagam. I found it difficult to engage with.

Not to mention the quips at other Gods (putril vALaravam) and jains (by sammandhar) which understandably reflect the political climate of the times they were written in.

Of course take all this with a pinch of salt, I have read only so much. nammAzhwAr, thirumangai Azhwar have many many poems which are as esoteric and reverential - if not more- as Saiva thirumuRaigaL. thoNdar adippodi AzhwAr talks about 'wasting time with desires'. thiruppANAzhwAr and nammAzhwAr take swipes at 'lesser' gods and forms of worship - though admittedly in much milder ways. And here kAraikkAl ammaiyAr has apparently written many poems with a personal touch - channeling a kind of maternal love for SivaperumAn.

I am talking about my limited reading exposure.

So, in many ways, iLayarAjA had to cut through this baggage of mental resistance to achieve the necessary 'subcutaneous effect'. And he knocked me out silly. It is like he makes you feel (what you think was) exactly the kind of emotion, the small-ness that mANikkavAsagar felt.

And mANikkavAsagar is particularly special as his isn't the humility of a mendicant (appar) or of a child who has always been devoted (sammandhar) but of a man who was once the proud prime minister of a land. And when he sings

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டு அருளி

you really really feel that. It is not like kaNNappanAyanar was not just unpalatable to the modern me. But even to mANikkavAsagar back then, he was a standard that could not be achieved and was extreme. He says the Lord who has seen such love, still chooses to Grace me, though I am incapable of expressing that much love (how can one not take the chosen lyrics as #meta I say :-) )

Every line expresses the emotion perfectly

என் பொருட்டு உன்னை சிக்கெனப் பிடித்தேன்
I need you, and it is me who has grasped you

and that contextualizes the love. The admittedly silly human claim that I have caught you immovably

எங்கு எழுந்து அருளுவது இனியே

suddenly becomes something earnest simply because of the bhakthi of the one who sings so earnestly. He is a clumsy, immaterial, negligible human being - but that only accentuates the love.


புகவே வேண்டா புலன்களில் நீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின்

A regular line about 'you just don't need to indulge in worldly desires, just think of the Lord' but rather than self pity or simple instruction it is more like a 'wise suggestion' (seriously, you don't need to do it man...do yourself a favour - அப்டீங்கிற மாதிரி)

And the line that gets me is

நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட

நகவே - He came down to this earth for us and what happened, He was mocked at.
It strikes such a strong parallel with the Christian narrative of 'God sending his son to die for our sins'. The suffering that Christ went through is elaborated in great detail. கடவுளுக்கு என்ன தலையெழுத்தாய்யா நமக்காக இம்சை படுறதுக்கு. ஆனாலும் நமக்காக செஞ்சாரு....அப்டீன்ற மாதிரி (again #meta..contrast with He doesn't need us, we need him - எம் பொருட்டு உன்னை..)

How different from the celebratory tone of avatharams in the Vaishanvite tradition. In thiruvAsagam the bhakthan is feeling 'bad' for the Lord to have come down and lived among us and suffered mocking.

The supplicatory, deferential tone of the poems is given fullest expression in the music. (The பாச வேர் அறுக்கும் bass you mentioned - it is so precise, it is the tense and arduous task of extricating oneself from one's bounds).

கோத்தும்பி sung to the bee - with the refrain in each stanza - to 'go buzz all this to Him' - has the violins buzzing the flight of the bee. And when there is a 'let' in the flow - it reflects the exasperation of the poet (as you say 'முடியல!')

உள்ளப்படாத திருவுருவை...
கள்ளப்படாத களிவந்த.....

has the same the same சந்தம் even in the second word but the next line

வெள்ளப்பிரான் எம்பிரான்

he has given up. The boundless flow of வெள்ளப்பிரான் (நம்மாழ்வார் has a comparably brillant line- கொள்ள மாளா இன்ப வெள்ளம்) has him break down and want to just say 'எம்பிரான்'. And you sense that there.

The one celebratory song - முத்து நற்றாமம் - is set when girls are pounding the சுண்ணம் for the Lord. And all in a சித்தம் சிவனொடு ஆட ஆட mode- cannot but force you think of what it means to engage with the physical form of siva and the sheer work of celebrating an idol/form - when thinking of the esoteric (stated elsewhere as உள்ளப்படாத திருவுருவை). You see the இடித்தல் beats coming together perfectly in the last line of each stanza. It doesn't feel one bit thrust in, or forced for effect. Or even like a song, built for that effect. It is so organic! And what a frenzy it works up to towards the end.

And then you feel

பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யை

doesn't even feel judgmental (like மற்றுமோர் தெய்வம் தன்னை)..it is very matter of fact. That is how He is - 'if you are not True, He is elusive to you, but to the truly devout, He presents Himself'.

So even in a truly celebratory song, he cuts to en emotional finale.

And for some reason I believe, pAsurams may not provide that base material. Precisely what makes them appealing - and IMO more enjoyable - poetry - are the variety, the rootedness in day to day life, the Lord's leelaigaL etc. are exactly the thing that check them from getting intensely otherworldly.

Which is why I believe - TiS would be untoppable - because it synchs perfectly well with (what we believe is) Raja's own spiritual inclination.

Though it is a downright silly thing to call something as a 'definitive' work, for someone with a monstrous body of work like Raja, I do feel feel emboldened enough to venture a guess that he has plumbed the depths of his own self in this album.

And for that one reason this is in a league of its own.

To those who consider it a 'lesser, later' work...என்னத்த சொல்ல..


என்பு எலாம் உருக நோக்கி (என்பு - bone)
அம்பலத்து ஆடுகின்றன
என் பொலா மணியை ஏத்தி (unpierced pure ruby)
இனிது அருள் பருக மாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சும் ஆறே (can't even enunciate how scared that makes me)"

Raaga_Suresh

Posts : 405
Reputation : 24
Join date : 2012-10-24

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  V_S Sun Apr 21, 2013 10:08 pm

Thanks Sureshji for sharing. Amazing write-up with lot of depth and reasoning. noteworthy noteworthy To be honest, I keep postponing to listen to it fearing I might lose focus anytime as it begs to be listened without any distraction and it also needs more time to devote (and also continuous time) than any other Raja albums. This is almost like a long prayer God. I will have to listen again very soon.

P_R wrote:
How different from the celebratory tone of avatharams in the Vaishanvite tradition. In thiruvAsagam the bhakthan is feeling 'bad' for the Lord to have come down and lived among us and suffered mocking.

Excellent take here, but is it not that all avatharams are to save the world/country (kind of thing) from bad, when compared to Siva's where his purpose is entirely different; to take care the day-to-day activities of his people?. Also all avatharams life span is huge while Siva's avatharams are just in moments. I believe the context is entirely different. Please correct me if I am wrong.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  kiru Mon Apr 22, 2013 8:09 am

I can identify with the sentiments of P_R wrt the violence in saiva tradition in tamil land. IMHO, this betrays a character flaw in the tamil society. A sensitive friend from Madurai lamented that statues depicting kazhuvERRal (throwing jains onto spikes) are still being carried around in temple processions. Jain monks escaped to the caves and practicing Jains started following hindu practices and eventually became one more caste in the system. Even today these people follow certain jain traditions (like not consuming proper food after sunset - only milk).

kiru

Posts : 551
Reputation : 3
Join date : 2012-10-31

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Mon Apr 22, 2013 5:43 pm

Mahendran says "no" to rAsA

and chooses GVP...

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  jaiganesh Mon Apr 22, 2013 8:21 pm

kiru wrote:I can identify with the sentiments of P_R wrt the violence in saiva tradition in tamil land. IMHO, this betrays a character flaw in the tamil society. A sensitive friend from Madurai lamented that statues depicting kazhuvERRal (throwing jains onto spikes) are still being carried around in temple processions. Jain monks escaped to the caves and practicing Jains started following hindu practices and eventually became one more caste in the system. Even today these people follow certain jain traditions (like not consuming proper food after sunset - only milk).
Such conversions, celebration of inter faith defeat was happening all over the world and as much as we would like to tell others that it did not happen in india - fact is it happened. One has to bear in mind that by 6th century, India was mostly a jainist/buddhist country and the bhakti movement in thamizh naadu tipped the scale heavily in favour of saivist and vaishnavist faiths. If we read closely the times of Mahendravarma pallavan who is supposed to have tortured thirunaavukkarasar for having converted to saivism, that is what marriage of religion and state yield - a form of fascism. It is strange that what was a symbol of triumph (kazhuveetral of jains who lost in a debate to gnanasambandhar) is now a burden on the consciousness of saivites after centuries. We have to bear in mind that had saivites lost, then they would have had to climb the pole too. There are even records of jainist scholars jumping into a fire and there are comparable rituals in buddhism where monks renounce life if they feel they have to introspect for any mistakes they made.
In sangam literature we can read about kings and poets who give up life for honor. One hears about 'vadakkirundhu uyir thurathal' - these are not pleasant sights at all.. http://en.wikipedia.org/wiki/Sokushinbutsu http://en.wikipedia.org/wiki/Sallekhana http://en.wikipedia.org/wiki/Prayopavesa
Actions of people of those times cannot be judged by prisms of modern secularism. so lets go easy on kazhuvetram and likes. as far as piLLaikkari is concerned - it is no surprise as the time was also marked by a saivist sect called 'kapalikas' who were known for their inhuman rituals which were weird and they lived on the fringes of our society only to be rooted out by the mainstream saivist sect over a period of time. Mahendra varma has written a sanskrit play ridiculing kapalikas and monks of other religion. It is called mattavilasa and is staged even today in kerala. http://en.wikipedia.org/wiki/Mattavilasa As inhabitants of a more modern and liberal globe in this eon, i guess our responsibility is to distill the essence of religios and theosophical literature of the past and assimilate the best essence from it, discarding the historical noise that comes along. I feel that is what Raaja has done in Thiruvaasagam - he has personalised and internalised it and the resultant musical drama, oratorio is as much a reflection of his soul as it is that of maanikka vaasagar.

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  jaiganesh Tue Apr 23, 2013 2:09 am

http://www.jaychaa.com/the-path.php
have seen him play in raajaa's concerts.. nice to know he has a blog..

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Tue Apr 23, 2013 6:39 pm

another IRF blogger


என்னுடைய செல் பேசியில் இருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களில் கிட்டத்தட்ட 95% மேல் ராஜாவின் பாடல்களே ஆக்கிரமித்திருக்கும்.ஆலுவலக நண்பர் ஒரு முறை "இளையராஜாவை விட்டு வெளியே வாங்க,அவர் காலமெல்லாம் முடிந்து விட்டது" என்றார்.நான் எதுவும் பேசாமல் இந்தப்பாடலை போட்டு காட்டி "இதை விட சிறந்த பாடலை எனக்கு காட்டுங்கள்,அப்போது நான் அவரை விட்டு வெளியே வர முயற்சிக்கிறேன் " என்றேன்.

இன்னும் இளையராஜாவை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதால் மற்றவர்கள் என்னை வயதானவனாக நினைகிறார்கள்,ஆனால் உண்மையில் அதனால் தான் நான் இளமையாகவே இருக்கிறேன்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  app_engine Tue Apr 23, 2013 6:51 pm

rAsA to score for a "power star" film

Anything about IR found on the net - Vol 1 - Page 20 3325497835

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 1 - Page 20 Empty Re: Anything about IR found on the net - Vol 1

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum