குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை
3 posters
Page 14 of 16
Page 14 of 16 • 1 ... 8 ... 13, 14, 15, 16
Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை
#1265
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட
சற்றே சூடான பாட்டு
அதாவது, வேட்கை மிஞ்சித்தென்படும் பாடல் - "அவர் வரும்போது விரைந்து செல்வேன்" என்றெல்லாம் இல்லை - "அவரைப் பருகித்தள்ளுவேன் / அருந்தி மகிழ்வேன்" என்றெல்லாம் கூடுதல் ஆர்வத்துடன் பெண் பாடுவது!
கிட்டத்தட்ட நம் காலத்துத் திரைப்பாடல்கள் போன்ற குரலில்! எப்படியும் தமிழ்த்திரைக்கவிஞர்கள் எல்லோருக்கும் முன்னோடி திருவள்ளுவர் தானே
மன் என்ற அசைச்சொல்லும், கொண்கன் என்ற கணவனுக்காக சொல்லும் மீண்டும் இங்கு காண்கிறோம். அதோடு ஓசைநயம் கொடுப்பதற்காக "வருக, பருக" என்ற எதுகையும் இருக்கிறது. இரண்டே அடிகளில் இவ்வளவு நேர்த்தியோடு காமச்சூடு சேர்க்கிறார் கவிஞர்!
கொண்கன் ஒருநாள் வருகமன்
(என்னைப்பிரிந்து தவிக்க விட்டிருக்கும்) கணவன் ஒருநாள் வரட்டும் வரட்டும் (அல்லது, வந்து தான் தீர வேண்டும்)
பைதல்நோய் எல்லாம் கெட
(என்னை இப்போது பீடித்திருக்கும்) பசலை நோய் எல்லாம் உடனே நீங்கும் படியாக
பருகுவன்
(அவனைப்) பருகி மகிழ்வேன் (அதாவது, ஆவல் தீரக் கூடிக்கலப்பேன்)
கணவனை இங்கே "குடிக்கவிருக்கும் ஒரு பானமாக" உருவகப்படுத்துகிறார் - திரைப்பாடல்கள் போன்றே
நுகர்வேன், தின்பேன், குடிப்பேன், விழுங்குவேன் என்றெல்லாம் காதலரோடு உறவாடுவதை விவரிப்பது நாம் அடிக்கடிக் கேட்பவை தானே?

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை
#1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்
"அலைபாயும் மனது" என்பதற்கான அழகான விளக்கப்பாடல்.
"கேளிர்" என்பது பொதுவாக உறவினர் என்று பொருள் படும் சொல் (யாவரும் கேளிர்) - இங்கே அது மிக நெருங்கிய உறவான கணவனை (அல்லது காதலனைக்) குறிக்கிறது என்பது தெளிவு.
அதிலும் "கண் அன்ன கேளிர்" (கண் போன்ற - கண்ணான கணவன்).
அவர் நெடுநாள் பிரிந்து சென்றிருக்கிறார் - கிட்டத்தட்டப் பல அதிகாரங்களாக அந்தச்சூழலில் தான் பாடல்கள் படித்துக்கொண்டிருக்கிறோம், என்றாலும் இந்த அதிகாரத்தில் அவர் திரும்பி வரும்போது என்ன நிகழும் என்பது தான் மையப்பொருள்.
"வரின்" என்று சொல்லுவதில் "ஒரு வேளை" என்ற ஐயமும் உள்ளே கிடந்தது வதைப்பது தெரிகிறது.
சரி, இப்போது அவர் என் முன்னாள் வந்தால் என்ன செய்வேன் என்று இப்போது மனம் அலை பாய்கிறது!
புலப்பேனோ, புல்லுவேனோ, கலப்பேனோ - என்று அழகிய ஓசை நயத்துடன் மூன்று உணர்வுகளோடு அலை பாய்கிறாள் பெண்.
புலத்தல் - ஊடுதல், சிணுங்கி ஊடல் கொள்ளுதல், பொய்யான சினம் காட்டுதல்
புல்லுதல் - தழுவி அணைத்துக்கொள்ளுதல்
கலத்தல் - உறவு கொள்ளுதல், ஒருவரோடொருவர் கலத்தல் என்று பொருள் கொள்ளலாம். என்றாலும், சில உரையாசிரியர்கள் முதலில் சொன்ன இரண்டையும் கலத்தல் (அதாவது ஊடலும் கூடலும் கலத்தல்) என்றும் விளக்கம் சொல்கிறார்கள்.
ஆக மொத்தம் படிப்பதற்கும் அந்தச்சூழலை மனதில் படம் பார்ப்பதற்கும் மிகச்சுவையான பாட்டு!
கண்அன்ன கேளிர் வரின்
(பிரிந்து சென்ற) கண் போன்ற என் கணவர் இப்போது வந்தால்

(அவரோடு) ஊடல் கொள்வேனோ- அல்லது தழுவிக்கொள்வேனோ - அல்லது கலந்து இன்புறுவேனோ?
(ஐயோ, நான் என்ன தான் செய்வேன்...கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை)

#1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து
நிறைய இடைவெளிக்குப்பின் ஆண்குரலில் ஒரு பாட்டு.
போருக்கோ, திட்டப்பணிக்கோ, வெளிநாட்டில் வேலைக்கோ, வணிகத்துக்கோ அல்லது வேறு ஏதாவது பெருந்தொண்டுக்கோ வேண்டி மனைவியை விட்டுவிட்டு வெளியூர் செல்லும் கணவனின் மனநிலையை மிக அழகாகச் சொல்லும் கவிதை இது.
வள்ளுவர் காலத்தில் வேந்தன் - இன்று மேலாளர் / முதலாளி / தலைவன் என்று வெவ்வேறு நிலைகளில்.
முன் நிற்பவர் சரியாக இயக்கவில்லை என்றால் முழுக்கூட்டமும் எப்படித்தங்கள் உறவுகளை நெடுநாள் பிரிந்து அவதிப்படுவார்கள் என்று விளக்கும் பாடலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
"தலைவனது முடிவுகள் எப்படி இருக்குமோ - நமக்கு என்ன விளையுமோ" என்று ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள உழைப்பாளிகளின் குரலாகவும் இதைக்கொள்ளலாம்!
வினைகலந்து வென்றீக வேந்தன்
வேந்தன் / தலைவன் தன் செயலை முனைப்பாகவும் சிறப்பாகவும் செய்து வெல்லக்கடவன்
(அல்லது, "வென்றிட வேண்டுமே" என்ற கவலை)
மனைகலந்து மாலை அயர்கம் விருந்து
(அப்போது தான் நானும் என்) மனைவியுடன் கூடி மாலைப்பொழுதில் விருந்துண்டு இளைப்பாறலாம்
ஆக, இங்கே மன்னனின் கவலை வெல்லுவதில் என்றால் குடிமகனின் கவலை தனது மனைவியோடு உண்ணுவதில் என்று எடுத்துக்கொள்ளலாம்
மொத்தத்தில் கவலை இல்லாத மனிதன் என்று யாருமில்லை!

#1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார்
வருநாள்வைத்து ஏங்குபவர்க்கு
பண்டைய நாட்களில் கதிரவனின் நிழல், உதிரும் மணல் போன்றவை முதல் நம் நாளில் அணு, மின்னணு, மண் அணு (குவார்ட்சு) என்றெல்லாம் நேரத்தை அளக்க ஆயிரமாயிரம் கருவிகள்.
இருந்தாலும் மனம் காலத்தை அளப்பதே வேறு விதத்தில்
"நாள்" என்ற சொல் பொதுவாக 24 மணிநேரம் கொண்ட காலஅளவைக் குறித்தாலும், வழக்கிலும் கவிதையிலும் வரலாற்றிலும் அதற்குப் பலப்பல பொருட்கள்.
எடுத்துக்காட்டாக, "அசோகரின் நாளில்" என்று படித்தால் அதை ஒரு 24 மணிநேர நாளாக நாம் கருதுவதில்லை. பல ஆண்டுகள் அடங்கிய அவரது "வாழ்நாள்" அல்லது குறிப்பாக அவரது "ஆட்சிக்காலம்" என்று புரிந்து கொள்வோம் அல்லவா?
அவ்விதத்தில் நமது மனமும் மொழிகளும் காலத்தை ஒரே சொல் கொண்டு பலவிதத்தில் அளக்கின்றன. அது மட்டுமல்ல, ஒரே சொல்லுக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு கால அளவில் பொருள் கொள்ளவும் முடியும். "நமது பார்வையில் ஆயிரம் ஆண்டுகள் என்பது இறைவனுக்கு ஒரு நாள் போல" என்று விவிலியம் சொல்வது நினைவுக்கு வருகிறது.
எப்படி இருந்தாலும் நமக்கு விருப்பமான ஒன்று நடக்கும் பொழுது மணிநேரங்கள் நொடி போலக்கழிந்து போவதும் (எ-டு: அதிகாலை உறக்கம்) வேண்டாதவை நிகழ்கையில் ஒரு கணம் ஒரு யுகமாகத் தோன்றுவதும் மனதின் விளையாட்டு.
காத்திருப்பது என்பது அப்படிப்பட்ட "வேண்டாதவற்றுள்" தலையாயது.
இந்தக்குறளில் நெடுந்தொலைவு (அல்லது காலம்) பிரிந்து சென்று விட்ட கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணுக்கு ஒரு நாள் ஏழு (அல்லது பல) நாட்களாகத் தோன்றும் அயர்ச்சி நிலை.
சேண்சென்றார் வருநாள்வைத்து ஏங்குபவர்க்கு
நெடுத்தொலைவு சென்றவர் வரப்போகிற நாளை எண்ணி ஏங்குபவருக்கு
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்
ஒரு நாள் பலநாட்களாகத் தோன்றும்
(கடிகை சுழலாமல் நின்று விட்டதாகத் தோன்றும்)

#1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்
அலைபாயும் உள்ளத்தின் கொந்தளிப்புகளை ஆவணப்படுத்தும் அதிகாரம் கொஞ்சம் தத்துவ எண்ணங்களோடு நிறைவு பெறுகிறது.
உள்ளம் உடைந்து சிதைந்த பின் அவன் வந்தால் என்ன கொண்டால் என்ன என்று முடிகிறது. மிகவும் ஆழ்ந்த சிந்தனை.
மனச்சிதைவு என்ற கொடுமையான நோய் குறித்த எனது கவலையான எண்ணங்களை இந்தக்குறள் மீண்டும் மனதில் ஓங்கி ஒலிக்க வைத்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நான் வேலை செய்த இடத்தில் கிடைத்த ஒரு அறிக்கையின் படி அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் #1 நோய் மன அழுத்தம் தான். இந்த நிலை உலகின் வேறு பல நாடுகளுக்கும் பரவி ஆளும்படியான சூழல்கள் எங்கும் கூடி வருவது நாம் கண்டு கொண்டிருப்பது.
உள்ளம் நொறுங்கி உருக்குலைவதற்குப் பல காரணிகள் உண்டு என்பது மெய்யே. மரபணுக்களுக்கும் இதில் பங்கு உண்டு என்று கூடச் சில ஆய்வுகள் சொல்லுகின்றன - என்றாலும் சூழலுக்குத் தான் பெரும்பங்கு என்பதை யாரும் எதிர்ப்பதில்லை. நமது உள்ளத்தைத் தீயில் இட்டு வதைக்கும் சூழல் எங்கும் பெருகி வருவது மறுக்க முடியாதது!
"உள்ளம் உடைந்து உக்கக்கால்" என்கிறார் வள்ளுவர். நம்மைத்தாக்கி உருக்குலைக்கும் சொற்கள் அவை.
இங்கே பிரிந்தவனுக்காகக் காத்திருந்து, உள்ளம் நொந்து, ஒரு நிலையில் சிதைவு ஏற்பட்டு அழியும் சூழல் என்பது வெளிப்படை.
உள்ளம் உடைந்துக்கக்கால்
மனம் நொறுங்கி அழிந்து போய் விட்டால்
(அதன் பின்னர் உடல் + உயிர் மட்டும் மீந்திருக்கையில்)

(மீண்டும் என்னை அவர்) பெறுவதால் என்ன ஆகப்போகிறது? என்ன தான் செய்ய முடியும்? கூடிக்கலந்தாலும் என்ன ஆகப்போகிறது?
உள்ளத்தின் உணர்வுகள் இறந்த நிலையில் ஒரு ஆள் கிடைத்து என்ன ஆகப்போகிறது என்ற மிக ஆழ்ந்த கருத்தைச்சொல்லி இந்த விதும்பல் அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.
இவ்விதமான நிலையில் உச்சக்காட்சி வைக்கப்பட்ட சில திரைப்படங்கள் நினைவுக்கு வரலாம். மனதை வலிக்க வைக்கலாம்!

#1271
கரப்பினுங் கையிகந்தொல்லா நின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
(காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)
குறிப்பறிதல் என்ற மிக அழகான அதிகாரம் இந்தப்பாலின் தொடக்கப்பகுதியில் பார்த்திருக்கிறோம். இப்போது கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று, "குறிப்பறிவுறுத்தல்"
அறிதல் நிலையில் ஒரு காலத்தில் தொடங்கிய காதல் கனிந்து, பிரிந்து, இப்போது அறிவுறுத்தும் நிலையில் முதிர்ந்து நிற்பது சற்றே வலி தந்தாலும் அப்படித்தானே இயற்கை செல்லுகிறது?
முந்தைய அதிகாரத்தில் இருந்தது போன்றே இதிலும் கண்களுக்குத்தான் வேலை என்று எதிர்பார்க்கலாம்
அவர்வயின்விதும்பல் அதிகாரம் கழிந்தவுடன் இது வருவதால் "அவர் வந்துவிட்டார்" என்று புரிந்து கொள்ளலாம்.
அதாவது, பிரிவும் காத்திருப்பும் ஒரு வழியாக முடிவுக்கு வந்து இப்போது கண்ணெதிரில் நிற்கிறார், தழுவிக்கொள்கிறார்...பேச்சு வராமல் தவிக்கிறாள், என்னென்னவோ சொல்லத் தோன்றினாலும் நாணத்தினால் அடக்க முயலுகிறாள். இப்படிப்பட்ட சூழல் நமது மனதில் படமாக விரிகிறது.
அவள் என்னவோ சொல்லவந்து அதை அடக்குகிறாள் என்று அவளது கண்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. அதையே ஆண் குரலில் பாடலாகக் கேட்கிறோம்!
கரப்பினுங் கையிகந்தொல்லா
மறைத்தாலும் (அல்லது மறைக்க முயன்றாலும்) கைகடந்து (தடையை மீறி) நிற்காமல்
நின் உண்கண் உரைக்கல்
உன்னுடைய மையெழுதிய கண்கள் (எனக்குச்) சொல்வதற்கென்று
உறுவதொன் றுண்டு
உள்ள (அல்லது துடிக்கின்ற) செய்தி ஒன்று உண்டு
என்ன செய்தி என்று வள்ளுவர் சொல்லாவிட்டாலும் நமது உரையாசிரியர்கள் கற்பனை செய்து கண்டு பிடித்திருக்கிறார்கள் - அதாவது, "மீண்டும் இது போன்று பிரிந்து போய் விடாதே" என்பது தான் அந்தச்செய்தியாம்,
அது எப்படிக்கண்டு பிடித்தார்கள் என்று எனக்குப் பிடிபடவில்லை.
ஒருவேளை மிச்சம் இருக்கும் ஒன்பது குறள்களையும் படித்தால் அப்படித்தோன்றுமோ என்னமோ, படித்துப்பார்க்கலாம்

#1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது
"பெண் நிறைந்த நீர்மை" (அதாவது, பொதுவாகப் பெண்களுக்கு நிறைய இருக்கும் "நீர்மை") என்று காதலன் சொல்லுவதை வள்ளுவர் என்ன கருத்தில் சொன்னாரோ தெரியவில்லை. நம்முடைய உரையாசிரியர்கள் தமது கற்பனைக்கேற்ப "நீர்மை" என்ற சொல்லுக்கு விதவிதமாகப் பொருள் சொல்லி மகிழ்கிறார்கள்.
பெண்களை மட்டமாக எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்ததாலோ என்னவோ பரிமேலழகர் "மடமை" என்கிறார். (அதாவது, பெண்களுக்குப் பொதுவாகவே நிறைய இருக்கும் முட்டாள்தனம் / பேதைமை என் காதலிக்கு நிறையவே இருக்கிறது. பேதை என்ற சொல்லின் நீட்சியாக அவர் எடுத்துக்கொண்டிருக்கலாம்.)
பிற்காலங்களில் வந்த உரையாசிரியர்களால் (முவ, முக, சாலமன் பாப்பையா போன்றோர்) அப்படி அடித்துப் பெண்களை மட்டம் தட்ட முடியாததால், பெண்மை / தன்மை / அழகு என்றெல்லாம் எழுதி மழுப்புவதும் வேடிக்கையாக இருக்கிறது.
ஆக மொத்தத்தில், "நீர்மை என்றால் உண்மையில் என்ன?" என்று நமக்குக்குழப்பம் வரும்படி செய்கிறார்கள். (நல்ல வேளை, அழுது வடியும் "நீர்"+"மை" என்று யாரும் சொல்லவில்லை - அது கூடப் பொருத்தமாகத்தான் இருந்திருக்கும், பிரிந்தவன் வந்து தழுவிக்கொள்ளும்போது நிறைய அழுவாச்சி இருக்கும் தானே? )
நல்ல தன்மை, நற்பண்பு, மென்மை என்று எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் (எதுக்கு வம்பு?)
கண்ணிறைந்த காரிகை
என் கண்கள் நிறைந்த அழகுள்ள காரிகையும்
காம்பேர்தோட் பேதைக்கு
மூங்கில் காம்பு ஒத்த தோளுடைய பேதையுமான (என் காதலிக்கு)
பெண்நிறைந்த நீர்மை பெரிது
பெண்களுக்கு நிறைய இருக்கும் நற்பண்பு / மென்மை பெரிய அளவில் இருக்கிறது!

#1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு
சட்டென்று புரிந்து கொள்ள முடியாத பாடல் - உரையாசிரியர்கள் உதவி இல்லாமல் கடினம்
மணி என்று சொல்வதை "மணி மாலை" என்று மொழி பெயர்த்தால் தான் விளங்கும். இல்லாவிடில், என்ன மணி என்ன நூல் என்று சுற்றிக்கொண்டிருப்போம்.
மற்றபடி மிக ஆழமான பொருள் எல்லாம் தோண்டும்படியாக ஒன்றுமில்லை. (என்றாலும், அணி என்று எளிமையாக வள்ளுவர் சொல்லுவதை "புணர்ச்சியால் வந்த அழகு" என்று மணக்குடவர் மட்டும் பரிமேலழகர் விளக்குவது சற்றே கூடுதல்).
மணியில் திகழ்தரு நூல்போல்
மணி மாலைக்குள்ளே இருக்கின்ற நூல் போன்று
(அதாவது வெளியில் தெரிந்தும் தெரியாமலும் இருந்தாலும் கண்டிப்பாக உள்ளே இருக்கிறதென்று எல்லோரும் அறிவோம்)
மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு
பெண்ணின் அழகுக்குள்ளும் திகழுகின்ற (குறிப்பு) ஒன்று ஒண்டு
அது என்ன குறிப்பு, என்ன அறிவுறுத்துகிறாள் என்றெல்லாம் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் காதல் / பிரிதல் / சேர்தல் செய்திருக்க வேண்டும், அப்போது தான் புரியும்
மணி-அணி என்ற ஓசை நயம் தரும் எதுகை கொண்டு பாட்டு இனிமையாகவே இருக்கிறது!

#1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்றுண்டு
மணிமாலைக்குள் நூல் என்ற உவமை சென்ற குறளில், இப்போது மொட்டுக்குள் இருக்கும் நறுமணம் என்று அடுத்த உவமை வருகிறது (ஒரே பொருளுக்குத்தான், பெண்ணுக்குள் மறைந்திருக்கும் / அவள் அறிவுறுத்தும் குறிப்பு).
சென்றதில் அவளது அழகுக்குள் புதைந்திருப்பதாகச் சொன்னவர் இங்கு அவளது புன்னகைக்குள் வைத்திருப்பதாகச் சொல்லுகிறார் என்பது இன்னொரு சிறிய மாற்றம்.
ஆக மொத்தம், வெளிப்படையாகச் சொல்லாமல் அதே நேரத்தில் குறிப்பு அறிவுறுத்துவதற்குப் பெண் பயன்படுத்தும் பல வழிகளை வள்ளுவர் இங்கே பட்டியல் இடுகிறார்.
அதோடு, ஒவ்வொன்றுக்கும் ஒரு உவமையும் அள்ளி வழங்குகிறார் - கவி என்றாலே உவமைகள் கொண்டு அணி செய்பவர் தானே - அதிலும் வள்ளுவர் உவமைகள் வீசுவதில் படுதிறமைசாலி!
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்
(இன்னும்) மலராத மொட்டுக்குள் உள்ள நறுமணம் போன்று
(உள்ளே மணம் புதைந்திருக்கிறது என்றாலும் அது ஊர் முழுக்க வீசுவது மலர்ந்த பின்னரே; மொட்டு நிலையில் அடுத்துச்சென்றால் ஒரு வேளை புலப்படலாம்; அல்லது, "மொட்டுக்குள் மணப்பொருள் உள்ளது" என்று நாம் ஏற்கனவே அறிந்திருப்பதால் நமது மூக்கு அதை நுகர முயலலாம்)
பேதை நகைமொக்குள் உள்ளதொன்றுண்டு
பெண்ணிடம் அரும்பும் புன்னகையிலும் (நறுமணமான குறிப்பு) ஒன்று உள்ளது
பிரிவுக்கொடுமையெல்லாம் மாறி, இப்போது மீண்டும் தழுவி அணைத்துக்கொள்ளும் நிலையில் உள்ளத்தின் காதலையும் காமத்தையும் மகிழ்ச்சியையும் அவள் சொற்களாலும் வேறு செய்கைகள் கொண்டும் ஊரறியக் காட்டுவதில்லை.
அவளுடைய மீண்டு வந்த அழகுப்பொலிவு, துயரம் நீங்கி முகிழ்க்கும் நகை என்று பல வழிகளிலும் குறிப்பாக அவனுக்கு அறிவுறுத்துகிறாள் என்று புரிந்து கொள்கிறோம்

#1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து
இங்கு "குறிப்பு"க்கு உருவகம் இருக்கிறது (மருந்து), இப்படியெல்லாம் போகிற போக்கில் தெளித்துச் செல்வது சிறப்பான புலவர்களின் பெருங்குணம். அவர்களிலும் உச்ச நிலையில் உள்ளவர் வள்ளுவர் என்பதால் இவற்றையெல்லாம் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் படித்து விட்டுப்போகிறோம்
சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்தக்குறளும் ஆண்குரலில் ஒலிக்கிறது என்பதை மனதில் கொள்வோம் - இவ்வளவு நாளும் பிரிவால் வருந்திய பெண்ணின் துயரத்தையே படித்துக்கொண்டிருந்தவர்களுக்கு "அட, இவனுக்கும் பெருங்கவலை உறுத்துகிறதா, அதற்கு மருந்து தேடுகிறானா?" என்ற எண்ணம் வரலாம்.
மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம் "கவலை இல்லாத மானிடன் இல்லை"
"கள்ளி" என்று செல்லமாகக் காதலியைக் கூப்பிடுவது பாடல்களில் காண்பதே. இங்கே அவள் மறைவாகத் தரும் குறிப்பைக் "கள்ளம்" என்று அழைக்கிறான். (அதாவது, இவனுக்கு மட்டுமே புரியும், மற்றவர்க்கு மறைவு).
செறிதொடி செய்திறந்த கள்ளம்
நெருக்கமாக (செறிவாக) வளையல்கள் அணிந்திருப்பவள் செய்து விட்டுச்சென்ற கள்ளத்தனமான குறிப்பு
உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து
என்னைத் துன்புறுத்தும் துயரத்தை நீக்கும் மருந்து ஒன்றைக்கொண்டிருக்கிறது!
- அவனுக்கு என்ன துன்பம்?
- அவள் கொடுத்தது என்ன குறிப்பு?
- அது எப்படி ஐயா மருந்து?
இவையெல்லாம் ஒவ்வொருவருடைய சூழலுக்கேற்ப வைத்துக்கொள்ளலாம்.
இப்படிப் பல சூழலுக்கும் பொருந்தும் ஒரு சிறப்பான குறள்

#1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வதுடைத்து
சற்றே கடினமான குறள் - என்றாலும் பெண்ணின் மனதை மிக அழகாகப் படம் பிடிக்கும் ஒன்று.
அதிகாரத்தின் அடிப்படையில் சூழல் கிட்டத்தட்ட நமக்குத்தெரிந்தது தான்.
-காதலன் நீண்ட நாள் பிரிந்து சென்றிருந்தான், தலைவி துயரத்தில் வாடி வதங்கினாள்
-திரும்பி வருவான் என்ற தகவல் கிடைத்து அவன் வரும் நாளை எண்ணி எண்ணி ஏங்கினாள்
-அவன் திரும்பி வந்தே விட்டான், அவளைத் தழுவிக்கொண்டான்
-இவ்வளவு நாள் பிரிந்திருந்த துன்பத்தை நீக்கும்படி இருவரும் கூடிக்கலந்து மகிழ்கிறார்கள்
இப்படிப்பட்ட சூழலில், அவள் மனதின் ஆழத்தில் வரும் சில குழப்பமான எண்ணங்கள், அச்சம், ஐயம் எல்லாம் இந்தக்குறளில் எழுதப்பட்டிருக்கிறது!
அதாவது, "இந்த இன்பம் நீடிக்குமா...ஐயோ, இவ்வளவு அன்போடு இவர் கூடுவது இன்னொரு பிரிவை அறிவிக்கத்தானோ, தான் மீண்டும் பிரிந்து செல்ல வேண்டும் என்று சொல்லி விடுவாரோ" - இப்படியெல்லாம்.
இன்பம் திளைக்கும் நேரத்திலும் இயல்பாக மனதில் ஆழத்தில் வரும் அச்சங்கள் ஐயங்கள் எல்லோருக்கும் - குறிப்பாக நாம் மேற்சொன்ன சூழலில் உள்ள பெண்ணுக்கு - மானிட இயல்பு தானே?
அந்த விதமான "எதற்கெடுத்தாலும் ஐயப்படும்" நிலைக்கு, அதாவது ஒரு ஆழ்ந்த மன அழுத்தம் / நோய் நிலைக்கு முந்தைய நீண்ட பிரிவு அந்தப்பெண்ணைத் தள்ளியிருக்கிறது. (பேச்சு வழக்கில் "சித்தப்பிரமை" என்று சொல்லுவார்கள், paranoia நோய்க்குத் தனித்தமிழில் "கற்பனை ஐயம்" என்று வைத்துக்கொள்ளலாம். மிகுந்த அன்பு காட்டுவோர் மீதே தவறுதலாக ஐயம் கொள்தல் இவ்வகைப்பட்டது)
அதன் விளைவாக, அவன் காட்டும் அளவற்ற அன்பையே அவள் "பிரிவுக்கான முன்னெச்சரிக்கை" என்ற குறிப்பு அறிவுறுத்தலாக எடுத்துக்கொள்கிறாள். மனம் எவ்வளவு சிக்கலானது என்று விளக்கும் குறள் என்று கூடச் சொல்லலாம்!
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்
பேரளவில் அன்பு செலுத்தி நான் விரும்புகிற விதத்தில் கலந்து இன்பமூட்டுவது
அரிதாற்றி அன்பின்மை சூழ்வதுடைத்து
அரிதான துன்பத்தைத் தந்த அன்பற்ற நிலைமை பற்றிய குறிப்போ (என்று எண்ணவைக்கிறது)

#1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை
தணத்தல் என்றால் விலகுதல், பிரிதல் என்கிறது அகராதி.
"அப்பாடா, ஒருவழியாகக் காதலனும் காதலியும் மீண்டும் சேர்ந்து விட்டார்கள்" என்றெல்லாம் நாம் நிம்மதியாக இருக்கக்கூடாது என்று வள்ளுவர் உடனே பிரிவு பற்றிக் "குறிப்பறிவுறுத்துதல்" தொடங்கி விட்டார்
அந்தத் தணத்தலுக்கு ஓசை நயம் சேர்க்கும் "தண்ணந்துறைவன்" என்று அவனுக்கு ஒரு பட்டப்பெயரும் கொடுக்கிறார். அதாவது, "தண்ணீர்த்துறை" உள்ளவனாம். நெய்தல் நிலம் / திணை இங்கு வருகிறதோ என்று மனம் அடித்துக்கொள்கிறது. (கடல் & கடல் சார்ந்த இடம் / துறை முகம். மீன் பிடித்தம் என்றாலே மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும். ஒரு கணக்கில் பார்த்தால் அன்றாடம் செத்துப்பிழைக்கும் - இரங்கல் / அழுகை வந்து தாக்கிக்கொண்டிருக்கும் வாழ்வு).
ஆக மொத்தம் இந்தக்குறளில் பெண் மீண்டும் அழுகை தொடங்கி விட்டாள், வளை கழன்று விழுகிறது..."அடப்போங்கப்பா" என்று சொல்லத்தோன்றுகிறது!
தண்ணந் துறைவன் தணந்தமை
நீர்த்துறை உள்ள காதலன் (மனதளவில்) பிரிந்தது / விலகியது
நம்மினும் முன்னம் உணர்ந்த வளை
நமக்கே முன்பே இந்த வளையல் தெரிந்து கொண்டு விட்டதே
அவளை உடலளவில் அவன் தழுவினாலும் எதோ ஒரு வழியாக "விலகப்போகிறேன்" என்று குறிப்பு அறிவுறுத்தி இருக்கிறான். அதை இந்தப்பேதைப்பெண் புரிந்து கொள்ளக்காலம் பிடிக்கிறதாம்.
ஆனால், அதற்கு முன்னேயே அவளது உடல் புரிந்து கொண்டு விட்டது. அது மெலிய மெலிய, வளையல் கழன்று விழத்தொடங்கி விட்டது என்று சொல்ல வருகிறார் வள்ளுவர்.

#1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
நெருநல் = நேற்று (முன்னமேயே திருக்குறள் வழியே படித்திருக்கிறோம்).
ஆக, இந்தக்குறளில் தெளிவாகவே "மீண்டும் பிரிவு" என்ற கருத்து நேரடியாக வந்து விட்டது
"நேற்று என்னை விட்டு விட்டுப்போய் விட்டார்" என்று மீண்டும் புலம்பத்தொடங்கி விட்டாள் இந்தப்பெண். என்ன காமத்துப்பாலோ புரியவில்லை - முக்கால் பங்கு அழுகையும் பசலையுமாகவே இருக்கிறது.
ஒருவேளை அது தான் அக்காலத்து மக்களில் பெரும்பாலோருக்கு இருந்த வாழ்வோ என்று வரலாறு குறித்த எண்ணமும் எழுகிறது.
இந்தக்கூட்டத்தில் "மனதில் தோன்றும் மிகைப்படுத்தல்கள்" என்ற கருத்தையும் வள்ளுவர் உள்ளே புகுத்துகிறார். சிறிய அளவில் பெண்களை ஏளனம் செய்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, விட்டுப்பிரிந்து மறுநாளே "ஏழு நாள் ஆனது போல இருக்கிறது " அல்லது "அவர் என்னைப்பிரிந்து நெடுநாள் ஆகிவிட்டது" என்று மிகைப்படுத்திப் புலம்புவது அந்தக்காலத்துப்பெண்டிரின் வழக்கமோ?
எம் காதலர் நெருநற்றுச் சென்றார்
என் காதலர் நேற்றுத்தான் விட்டுச்சென்றார்
(தொழிலுக்கோ / வேலைக்கோ / போருக்கோ / வேறேதோ அலுவலுக்கோ சென்றிருக்கலாம்)
யாமும் எழுநாளேம் மேனி பசந்து
எனக்கோ ஏழுநாள் / நெடுநாள் ஆனது போன்று தோன்றி, என் மேனி பசலை கொண்டு விட்டது
எப்போதுமே கட்டிப்பிடித்துக்கொண்டு, ஒட்டிக்கொண்டு வீட்டில் இருப்பது என்பது நடைமுறையல்ல. ஆக மொத்தம், மிகைப்படுத்தல் கொண்டு புலம்புவது தான் வீட்டில் உள்ள பெண்களின் வழக்கம் என்று வள்ளுவர் "குறிப்பு அறிவுறுத்துவதாக" நாம் எடுத்துக்கொள்ளலாம். (பெண்களே, நீங்களும் ஏதாவது வேலைக்கு என்று வெளியில் கிளம்பி விடுவது நல்லது )

#1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டவள் செய்தது
இந்தக்குறளைப் படித்தவுடன் "அப்பாடா" என்று இருக்கிறது! நிறையப்பாடல்களுக்குப்பின் மீண்டும் ஒரு சுறுசுறுப்பான பெண்ணை இங்கே பார்க்கிறோம்.
மிக அழகான குறள்!
சூழல் கிட்டத்தட்ட முந்தைய சில குறட்பாக்கள் போன்றதே. நெடுநாள் கழித்துத் திரும்பி வந்தவன் மீண்டும் விட்டுவிட்டுச்செல்ல முடிவு செய்திருக்கும் நிலை. "இனிமேலும் என்னால் வாளாவிருக்க முடியாது" என்று தன் செயல்கள் வழியே பெண் குறிப்பு அறிவுறுத்துவதாக அழகான காட்சிப்படுத்தல் இங்கே பார்க்கிறோம்.
"இங்கே பாருங்கள், நான் என்னென்னவற்றைப் பார்க்கிறேன் என்று நோக்குங்கள் - அப்போது நான் சொல்ல வரும் குறிப்பு உங்களுக்குப்புரியும்" என்று கண்களால் காதலனிடம் சொல்கிறாள்.
தொடர்ந்து அவளது கண்களைப் பின்தொடருவோம் நாமும்!
தொடிநோக்கி
கை வளையலை நோக்கினாள்
(நீ பிரிந்தால் இவை கழன்று விழும் அளவுக்கு இளைத்துப்போவேன்)
மென்தோளும் நோக்கி
மென்மையான தோளை நோக்கினாள்
(இவை மெலிந்து நலிந்து அழகிழந்து போகும், பசலை பிடிக்கும்)
அடிநோக்கி
காலடிகளை நோக்கினாள்
(அதனால், இனி நான் இங்கே தனித்திருக்க மாட்டேன், நீ போகுமிடம் நானும் பின்னேயே நடந்து வருவேன்)
அஃதாண்டவள் செய்தது
அது தான் அங்கே அவள் செய்தது
(இவற்றின் வழியாக "நான் உன்னுடன் கூடப்போவேன்" என்று தனது குறிப்பை வலியுறுத்துவதாக விளக்குகிறார்கள்)
நோக்கி என்ற சொல் மூன்று முறை சிறப்பாக வந்து ஓசை நயம் சேர்க்கிறது

#1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு
சூழமைவைப் பார்க்காமல் படித்தால் எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படத்தக்க ஒரு செய்யுள்
அதாவது, "கண்ணாலே காதல் சொல்லிக் கெஞ்சுவது தான் பெண்மைக்கு அடையாளம்" என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அபாயம் இங்கே இருக்கிறது. அதனால தான் இடம் பொருள் குறித்த புரிதலுக்குத் தேவை.
நெடுநாள் கழித்து மீண்டும் இணைந்து இன்பத்தோடு இருக்கையிலேயே அடுத்த பிரிவு குறித்த அறிவிப்பு அவன் தருகிறான். முந்தைய பிரிவுத்துன்பத்தின் மனஉளைச்சலே இன்னும் நோயாக இருக்கையில் இது அவளுக்கு ஒரு பெரும் இடி. "எப்படி இந்தப்பிரிவைத் தவிர்க்கலாம்? தாங்க மாட்டேனே" என்று அதிர்ச்சியில் இருக்கும் பெண் என்னென்ன வழிகளில் தன குறிப்பை அறிவுறுத்துகிறாள் என்று அங்கே நிற்பவர்களோடு (தோழியர்?) சேர்ந்து நாமும் பார்க்கிறோம்.
அந்தப்புரிதலோடு படித்தால் இந்தப்பெண்ணின் கடினமான சூழல் நமது மனதைக்கரைக்குமல்லவா? அப்போது நாம் அவளுடைய பார்வையை எப்படி மதிப்போம்? வாருங்கள், படிக்கலாம்!
கண்ணினால் காமநோய் சொல்லி இரவு
தன் கண்களால் காதல் நோயைச்சொல்லி (அவனைக்) கெஞ்சுவது / இரப்பது
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப
(இந்தப்)பெண்ணுக்குரித்தான பெண்மை அழகை இன்னும் சிறப்பாக்குகிறது என்று (எல்லோரும்) சொல்வார்கள்!
"என்னை விட்டுப்போகாதே, கூடவே நானும் வருகிறேன் அன்பே" என்று அவள் கண்களால் இரந்து கெஞ்சுகிறாள். இன்னொரு பிரிவு என்னைக்கொன்று விடும் என்ற செய்தி அதில் புதைந்திருக்கிறது. எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அந்தக்குறிப்பை அவள் அறிவுறுத்துகிறாள்.
இந்நிலையில் கரையாத மனமும் உண்டோ?

#1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
(காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சி விதும்பல் அதிகாரம்)
அவர்வயின் விதும்பல் அதிகாரத்திலேயே "விதும்பல்" என்றால் விரைதல் என்று படித்திருக்கிறோம். அவர் வருவதற்காகப் பரபரப்பாக இருப்பது என்று அப்போது படித்தோம்.
இப்போது அவர் வந்தாயிற்று. எப்படியெல்லாமோ குறிப்புகள் அறிவுறுத்தி ஆயிற்று.
அடுத்து என்ன - புணர்ச்சிக்காக விதும்பல் (விரைதல், பரபரப்பு, ஆவல் என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம்).
ஆக, தழுவல்களும் அணைப்புகளும் நடத்தவேண்டும் என்று இரண்டு பேரும் விரும்பி விரைவது இந்தப்பத்துக் குறள்களிலும் முழுமையாக இருக்கும் என்று நம்புவோம். இங்கேயும் "விட்டு விட்டுப்போய் விடுவாரோ, பிரிவோமோ" என்றெல்லாம் அழுது தொலைக்காமல் இருக்கக் கடவர்கள்
மிகச்சிறப்பான ஒரு ஒப்பீட்டோடு முதல் பாட்டுத் தொடங்குகிறது. கள்ளுக்கும் காமத்துக்கும் ஒப்பீடு - அட அட, இரண்டுமே பித்தம் உண்டாக்க வல்லவை, என்றாலும் காமம் என்ன விதத்தில் உசத்தி என்று வள்ளுவர் விளக்கும் கவிதை!
உள்ளக் களித்தலும்
நினைக்கும் போதே களிப்பு ஏற்படுவதும்
(உடலால் துய்க்க வேண்டும் என்றில்லை, எண்ணினாலே போதும்)
காண மகிழ்தலும்
காணும் போதே மகிழ்தலும்
(குடித்தால் தான் கள்ளின் பித்தம், ஒருவரையொருவர் கண்டாலே போதும் காதல் பித்தம்)
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
கள்ளுக்கு இல்லை, காமத்துக்குத்தான் உண்டு!
மிக எளிய மற்றும் நேரடியான குறள் - விளக்கம் தேவையில்லை!
என்றாலும், இரண்டையும் வாழ்வில் துய்த்த / துய்க்கிறவர்கள் மட்டுமே முழுமையாக இந்தக்குறளின் சிறப்பைப் புரிந்து கொள்ள முடியும் - மற்றவர்கள் கற்பனை மட்டுமே செய்ய இயலும்
(இப்போது புரிகிறதா, இதை எல்லாம் பள்ளிக்கூடப் பாடநூல்களில் ஏன் கற்பிப்பதில்லை என்று )

#1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்
எச்சரிக்கைக்குறள்
"காமம் பொங்கி வருகையில் ஊடல் நடத்தி இன்பத்தைக் கெடுக்காதீர்கள்" என்ற நடைமுறை அறிவுரை / எச்சரிக்கை தரும் பாடல்.
சில உரையாசிரியர்களின் புரிதல் இது குறிப்பாகப் பெண்களுக்கு என்று. "ஊடல்" என்றாலே பெண்கள் தான் செய்வது என்று வைத்துக்கொண்டால் அது ஒரு வகையில் சரி தான் மேலும் "அந்தக்காலத்து" ஆட்களுக்கு அப்படித்தான் தோன்றும் என்றும் கொள்ளலாம் மற்றபடி வள்ளுவர் பெண்ணுக்குத்தான் அறிவுரை சொல்லுகிறார் என்று எனக்குத் தோன்றவில்லை. இரு பாலாருக்கும் என்று எடுத்துக்கொள்வது நல்லது.
பொருள் புரிவது மிக எளிது, வழக்கமான "தினை / பனை" ஒப்பீடு தான். (மிகச்சிறியது தினை, பனையோ பெரியது / உயர்ந்தது / கூடியது / வலியது). கூடல் விருப்பம் பனையளவு வருகின்ற நிலையில், தினையளவு போலும் ஊடல் கொண்டு கெடுத்துத் தொலைக்காதீர்கள் என்பது பாடலின் செய்தி.
அதாவது, முழு விருப்பம் + அன்பு + ஈடுபாட்டோடு இன்பம் துய்ப்பீர்களாக.
மேலும், "தினை / பனை"யில் எதுகை ஓசை நயம் உள்ளது வெளிப்படை.
பனைத்துணையும் காமம் நிறைய வரின்
பனை அளவுக்கு (மிகுதியான) காமம் நிறைந்து வரும்போது
தினைத்துணையும் ஊடாமை வேண்டும்
தினை அளவுக்குக்கூட (மிகச்சிறிதாகக்கூட) ஊடல் கூடாது
(ஊடாமை வேண்டும் = ஊடல் வேண்டாமை, எதிர்மறையை இடம் மாற்றிப்புரிந்து கொள்வது)
பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு குறள் கடைசிக்குறள் (#1330) - அங்கே ஊடுதல் காமத்திற்கின்பம் என்று நிறையப்பேர் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், அது காமக்கூடலுக்கு முன்னானது. அது முடிந்து, பின்னர் கூடிக்கொஞ்சும்போது - அதாவது பனையளவு காமம் வந்த பின்னர் - மீண்டும் ஊடி இன்பத்தைக் கெடுக்காதீர்கள் என்று சொல்வதாகக் கொள்ள வேண்டும்.

#1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாதமையல கண்
"விரும்பிப்போனால் விலகிப்போகும், விலகிப்போனால் விரும்பி வரும்" என்று ஒரு திரைப்படத்தில் சொல்லிக்கொடுப்பார்கள். (சின்ன வயதில் பார்த்தது - 'வா ராசா வா' என்று நினைக்கிறேன், உறுதியாகச் சொல்ல முடியவில்லை).
அதாவது, நம்மைக் கண்டு கொள்ளாமல் இருப்பவர்கள் மீது நமக்கு ஆவல் கூடிக்கூடி வருதல்.
இங்கே கிட்டத்தட்டத் தலைவிக்கு அதே நிலை. வீட்டுக்கு வந்து விட்டான் என்றாலும் காதலனுக்கு வேறு ஆயிரம் வேலைகள் - இவளைப் பெரிதாகக் கண்டு கொள்ளாதது போன்று இருக்கிறான். இவளோ இருப்புக்கொள்ளாமல் தவிக்கிறாள்.
"இவ்வளவு காலத்துப்பிரிவுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள் - நாம் கூடிக்கூடி மகிழ வேண்டாமா, இன்னும் என்ன வேறு வேலைகள்" என்றெல்லாம் மனதுக்குள் பொருமினாலும், அவனை வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்கிறார் வள்ளுவர்.
பேணாது பெட்பவே செய்யினும்
(என்னை) விரும்பிக் கொஞ்சாமல் அவருக்கு விருப்பமான செயல்களையே செய்து கொண்டிருந்தாலும்
கொண்கனைக்காணா தமையல கண்
கணவனைக் காணாமல் அமைய மாட்டேன் என்கிறது என் கண்கள்!
கண்டிப்பாக இது போன்ற "புறக்கணிப்பு" விளையாட்டுக்கள் வள்ளுவரோ அல்லது அவரது காலத்தில் வாழ்ந்த மற்ற ஆண்மக்களோ நடத்தி இருக்க வேண்டும். அதே நேரத்தில், இப்படியெல்லாம் என்னை ஏன் வதைக்கிறார் என்று தோழியரோடு பெண்கள் சொல்லியிருக்கவும் வழியுண்டு.
அதையே நாம் இந்தப்பாடலில் காட்சியாகக் காண்கிறோம்.
என்றாலும் நம் நாட்களில் இப்படிப்பட்ட விளையாட்டுகள் வேண்டுமா என்று ஆடவர்கள் மிகவும் ஆராய்ந்து எண்ணிக் கையாள வேண்டும் :-)

#1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என்னெஞ்சு
மிக அழகாக ஒரு நடைமுறை உண்மையைச் சொல்லுகிறது இந்தத்திருக்குறள்!
கூடுவதற்கான உடல் / மன ஆவல் என்பது எவ்வளவு வலியது என்பதைப்பலரும் உணருவதில்லை. "நானெல்லாம் ரொம்ப மனவலிமை உள்ள ஆளாக்கும், என்னையெல்லாம் அவ்வளவு எளிதாக அசைத்து விட முடியாது" என்று பீற்றிக்கொண்ட பலரும் பாலுறவுக்கான சூழல் அமைகையில் எளிதில் அமிழ்ந்து போவது ஆயிரக்கணக்கில் நாம் அன்றாடம் காணும் ஒன்று.
ஆக, "என்னைக்கிட்டாது" என்று யாரும் மார்தட்டிச் சொல்ல முடியாது என்ற அறிவியல் உண்மையை உணர்த்தும் பாடல்!
ஊடற்கண் சென்றேன்மன் தோழி
அவரோடு பிணங்கி ஊடுவதற்காகத்தான் சென்றேனடி என் தோழி!
(மன் என்ற அசைச்சொல் வருவதைப்பார்க்கலாம், தன்னைத்தானே திட்டிக்கொள்வதை இது உணர்த்துகிறது. "சனியன் - இந்த ஆவல் விடாமல்" என்று அங்கலாய்ப்பதாகக் கொள்ளலாம்)
அதுமறந்து கூடற்கண் சென்றது என்னெஞ்சு
(ஆனால்) அதை மறந்து விட்டு என் நெஞ்சு கூடுவதற்கான ஆவலோடு இணங்கிச் சென்றதே!
இங்கே இன்னொன்றையும் உற்று நோக்க வேண்டும் - இங்கே யாரோ ஒரு புதிய ஆளிடமல்ல அவள் செல்வது. கணவன் அல்லது காதலனோடு என்னவாவது சண்டை போட வேண்டும் என்று போவது எதற்காக என்ற கேள்வியையும் ஆராய வேண்டும்.
தனக்கு வேண்டிய அளவு நேரமோ, அக்கறையோ அவன் கொடுக்கவில்லை என்பது தானே பொதுவாக ஊடல்களின் அடிப்படை. ஆக, இங்கே செல்வது தன்மீதான அக்கறையைத் தூண்டுவதற்காக என்பது வெளிப்படை
அப்படிப்பட்ட சூழலில் அங்கே கூடலுக்கான ஏக்கம் புதிதாக வந்தது ஒன்றுமில்லை. முன்னமேயே இருந்தது தான்.
என்ன, நடுவில் நடக்க வேண்டிய ஊடல் விளையாட்டையே மறக்கும்படி உடலும் மனமும் அவளைத் தூண்டி விடுகின்றன, புணர்ச்சி விதும்பல் அவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்!

#1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து
அருமையான ஒரு உவமையும் அழகான ஒரு பொது உண்மையும் இந்தப்பாட்டில்.
உவமைக்குப்பின்னர் வருவோம், உண்மை முதலில்.
"காதலருக்கு" என்று இந்தப்பாட்டில் கண்டாலும் அல்லாதவருக்கு இடையே நடப்பவற்றிலும் "நேரில் காணல், சந்தித்தல்" எப்படி சினம் தணிக்கவும் நட்பு செழிக்கவும் உதவுகிறது என்று நமக்கு இங்கே வள்ளுவர் நினைவு படுத்துகிறார்.
"நேரில் பார்த்தால் இப்படிக் கடுமையாக என்னால் பேச முடியாது" என்று சிலர் கடிதம் / அஞ்சல் அனுப்புவதை அன்றாடம் பார்க்கலாம். ("அவன் முகத்தைப்பார்த்தால் என்னால் திட்டமுடியாது, அதனால் தொலைபேசியில் அழைத்துக் கத்தி விடுகிறேன்" என்று சொல்பவர்களைப் பலமுறை கண்டிருக்கிறேன்).
ஏன் அப்படி? அது ஒரு அடிப்படை மானிட இயல்பு!
தனக்கு ஒருவரோடு எவ்வளவு சினம் இருந்தாலும் நேரில் சந்திக்கையில் வெளிப்படும் சிறிய புன்முறுவல் அதை அடித்து நொறுக்கிவிடும். இல்லாவிட்டாலும், முகத்தைப்பார்ப்பது காட்டத்தைத் தணிக்கும் என்பது அடிப்படை அறிவியல் என்றே சொல்லலாம்!
இந்தக்குறளிலோ பெண்ணுக்கு இருக்கும் காமமும் கணக்கெடுத்தால், அவனை நேரில் கண்டதும் அதுவரை கண்டிருந்த குற்றம் மறப்பதற்கு இன்னும் கூடுதல் காரணம்.
இங்கே அதற்கு அழகான உவமையாக, "மையெழுதும் கண் எழுதுகோலைக் காண முடியாதது போல" என்கிறார். (புணர்ச்சி விதும்பி அவனை நேரில் காணும் போது முன்பு கணக்கில் வைத்திருந்த குற்றத்தை எங்கே காண்பது?)
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்
மைதீட்டும் பொழுது அந்த எழுதுகோலைக் காணாத கண்ணைப்போல் (இப்போது ஆகிறேன் நான்!)
கொண்கன் கண்ட இடத்து
கணவனை நேரில் கண்ட பொழுது
(நீண்ட நாள் பிரிவுக்குப்பின் சந்திக்கும் போது என்று எடுத்துக்கொள்ளலாம்)
பழிகாணேன்
அவருடைய பழியை (குற்றத்தை - நீண்ட நாள் என்னை விட்டுப்பிரிந்திருந்தது - போன்ற தவறை) என்னால் காண முடியவில்லை!
ஓடிச்சென்று கட்டிக்கொள்ளத்தான் முடியுமே ஒழிய, எண்ணி எண்ணிக் கணக்கில் வைத்திருக்கும் குற்றம் கொண்டு சண்டை போட மனம் வராது தானே?

#1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல்லவை
சென்ற குறளின் நீட்சி இது என்று சொல்லலாம்.
அதாவது, நேரில் காணும்போது ஏற்படும் நேர்மறையான விளைவு; மற்றும், காணாமல் இருக்கையில் ஏற்படும் எதிர்மறை உணர்வு. இரண்டும் எப்படி எதிரும் புதிருமானவை என்று சொல்வது.
மிகவும் நடைமுறையான ஒரு அறிவுரையும் இதில் அடங்கியிருக்கிறது. என்ன என்பதைப் பொருள் படித்துவிட்டுப் பார்ப்போம்.
இங்கே வள்ளுவரின் சொற்கள் கொண்டுள்ள சிலம்பம். ('துப்பார்க்குத்துப்பாய' வகையிலான பாடல். காணும், காணா, காணேன் என்று ஒரு சொல்லின் வெவ்வேறு வடிவங்களைச் சுழற்றி அடிக்கும் ஒரு விளையாட்டு).
காணாக்கால் காணேன் தவறல்லவை
அவரைப்பார்க்காமல் இருக்கையில் தவறுகள் அன்றி வேறெதையும் காண முடியவில்லை!
(ஆளைப்பார்க்காத நேரத்தில் அவர் எப்படியெல்லாம் என்னைத் துன்புறுத்துகிறார், என்னென்ன தப்புகள் செய்திருக்கிறார் என்று மட்டும் தான் என் மனம் கணக்குப்போடுகிறது)
காணுங்கால் காணேன் தவறாய
(ஆனால்) அவரைப்பார்க்கும் பொழுது ஒரு தவறையும் நான் காணேன்!
நேரில் பார்த்தவுடன் எல்லாத்தவறுகளும் மறந்து போகின்றன. இப்போது பிழை கண்டுபிடிக்க ஒன்றுமில்லை. (கட்டிப்பிடித்துக் கொஞ்சுவது தான் மனதில் வருகிறதே ஒழிய வேறொன்றும் இல்லை என்று பொருள், அதிகாரம் புணர்ச்சி விதும்பல் ஆச்சே?)
ஆக, இங்கே என்ன அறிவுரை?
மனம் ஒரு குரங்கு - ஆளில்லாத பொழுது அதையும் இதையும் நினைத்து விதவிதமாய்க் குறை கண்டுபிடித்துக்கொண்டிருக்கும். ஒன்றுமில்லாததைக் கூடப் பெரிதாக்கும், கணக்குக்கூட்டும்!
அடிக்கடி நேரில் பார்ப்பதும் அணைப்பதும் கொஞ்சுவதும் காதலிலும் நட்பிலும் மிகத்தேவை, எத்தனை பிழைகள் நடந்திருந்தாலும் அவையெல்லாம் தீர்க்கப்படும் என்று புரிந்து கொள்கிறோம்!

#1287
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
வேடிக்கையான உவமை சொல்லுகிறார் இந்தக்குறளில்.
"வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விடும் என்று நன்றாகத் தெரியும் பொழுது யாராவது ஆற்றில் குதிப்பார்களா?" என்பது தான் உவமை. (முட்டாள்தனம், தற்கொலைக்குச்சமம் என்று உடனே மறுமொழி சொல்லுவோம்.)
அதே போன்ற பேதைமை தான் புணர்ச்சி விதும்பல் நிலையில் ஊடல் கொள்ள முயல்வது. (வேலைக்காகாது - பயனற்ற மூடச்செயல் என்று பொருள்).
மூடத்தனம் என்பது தான் இரண்டுக்கும் ஒப்பீடு என்று புரிந்து கொள்கிறோம். மற்றபடி எளிய பாட்டுத்தான்.
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
(நம்மை) இழுத்துக்கொண்டு விடும் என்று தெரிந்தும் புனலுக்குள் (ஆற்று வெள்ளத்தில்) பாய்வது போலத்தான்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
பயனற்றுப்போகும் (பொய்த்துப்போகும்) என்று தெரிந்தும் ஊடல் கொள்வது.
நெடுநாள் பிரிந்தபின் கூடுகிறார்கள். தழுவிக்கலப்பதற்கான வேட்கை மிகுந்திருக்கும் இந்த நிலையில் ஊடல் காண்பிப்பது கொண்டு ரெண்டு பேருக்கும் ஒரு பயனுமில்லை. அப்படியே முயன்றாலும் உடனே பொய்த்துப்போகும் / தோற்றுப்போகும் என்பது மிகத்தெளிவு!
ஆதலினால் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று வள்ளுவர் ஊக்குவிக்கிறார்

#1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
"கள்வனின் மார்பும் கள்ளும்" - அட அட, பெண்ணுக்கு எப்படிப்பட்ட உவமை இங்கே பொங்கி வழிகிறது
ஆடவனின் ஆண்மை அவளை எப்படி அலைக்கழிக்கிறது தெரியுமா - கள் ஒருவனை எப்படி ஆட்கொள்கிறதோ அது போல என்கிறாள்.
கேரளம் போலுள்ள இடங்களில் பெரிதாய் யாரும் அறியாமல் வீட்டில் குடிக்கும் கள் அல்ல, தமிழ்நாடு போன்ற இடங்களில் கள் குடித்து ஆடை அவிழ்ந்து தெருவில் உருண்டு புரண்டு இழிவு அடையும் கள்ளு குடி குறித்து இங்கே படிக்கிறோம்!.
அதாவது, கள் குடித்துத் தெருவில் உருண்டால் இழிவு என்று தெரிந்தாலும் அது ஈர்க்கிறது சிலரை!
அது போன்றே, இந்தக் கள்வன் மார்பின் மீது சாய்ந்து கொஞ்ச விரும்பினால் மற்றவர்கள் ஏளனம் செய்யும் அளவுக்கு இவளுக்கு அவன் துன்பம் தருவான் என்று தெரிந்தும் அவ்வளவு ஈர்ப்பாம்
களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும்
(அதனால்) களிப்பு அடைந்தவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து இகழும் (இளிக்கும்) நிலை வருமென்றாலும்
கள்ளற்றே கள்வநின் மார்பு
(விட முடியாத) கள் போன்றதடா கள்வா நின் மார்பு!
அவளை விட்டுப்பிரிந்து சென்று கடினமான துன்பம் தந்தவன் அவன். ஊரில் உள்ள எல்லோரும் அவரைப்பார்த்து நகைக்கத்தக்க விதத்தில் ஒரு இழிவை அடைந்ததும் உண்டு.
என்றாலும், அவனுடைய மார்பை மீண்டும் மீண்டும் தழுவிக் கொஞ்ச வேண்டும் என்ற அவளுடைய விருப்பத்தை அந்தத்துன்பங்களோ இழிவோ சற்றும் குறைக்கவில்லை.
அவனோடுள்ள அவளது விருப்பம் பித்தம் / போதை போன்றது என்கிறாள்! அதற்காக எந்த இழிவையும் தாங்குவேன் என்று வெட்கம் / நாணம் துறக்கிறாள் என்று பொருள்!

#1289
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படுவார்
பலரும் பலமுறை சொல்லிக் கேட்டிருக்கும் ஒரு சொற்றொடர் "மலரினும் மெல்லியது காதல்" - அது இங்கிருந்து தான் வருகிறது என்று இப்போது தெரிந்து கொண்டேன்
என்றாலும், என்ன விதத்தில் காமம் மலரை விட மெல்லியது என்று எனக்குப்புரியவில்லை. அதாவது, காமத்துக்கும் "மென்மை" என்ற அளவுகோலுக்கும் எப்படி ஐயா உறவு? பொருட்களுக்கு வலிமை / மென்மை என்று அளக்கலாம். ஆட்களுக்கு / ஆள் தன்மைகளுக்கு வலிமை / மென்மை என்று சொல்லலாம் (அவன் மென்மையானவன், அவளுக்கு இளகிய மனது எளிதில் உடைந்து விடும் - என்றெல்லாம் சொல்வது பொதுவான வழக்கம், புரியவும் செய்கிறது).
ஆனால், காமம் மலரை விட மென்மையானது என்றால் எப்படி?
எளிதில் "புட்டுக்கும்" என்றா? அல்லது, மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் - இல்லையென்றால் பிய்ந்து / உடைந்து போய் விடும் என்றா? மட்டுமல்ல, "புணர்ச்சி விதும்பலில்" எதற்காக இந்தக்கருத்தைச் சொல்கிறார்? (பிரிந்தவர் கூடும்போது கொஞ்சம் அயர்ந்தாலும் மீண்டும் பிரிவு வரும் என்கிறாரா?)
சரி, நமக்கு எதற்கு இந்த எதிர்மறையான ஆராய்ச்சி?
பொருள் படிப்போம்
மலரினும் மெல்லிது காமம்
காமம் (அல்லது காதல்) மலரை விட மென்மையானது
சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்
சிலர் (மட்டுமே) அதன் தன்மையை நன்கு அறிவார்கள்
(அல்லது - அதை சரியாகக் கையாளுவார்கள், நன்மையை அடைவார்கள், பலனை நுகர்வார்கள்)
கிட்டத்தட்ட நான் நினைத்த பொருள் தான் - புணர்ச்சி விதும்பலின் பொழுது சற்று ஊடல் / முகச்சுளிப்பு காட்டினாலும் காதல் இன்பம் பெற முடியாமல் போகும்! அவ்வளவு மென்மையானது, எளிதில் நசுங்கி விடக்கூடிய மலரினும் மெல்லியது!
(வேறு நேரங்களில் உயிரையே கொடுக்கும் அளவுக்கு வலிமையாக இருப்பதையும் மறந்து விட வேண்டாம்)!

#1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான் விதுப்புற்று
துனி என்றால் வெறுப்பு, சினம், வெகுளி, துன்பம் போன்ற பொருட்கள் அல்லாமல் புலவி நீட்டம் (காதலின் நடுவே வரும் ஊடல்) என்றும் ஒரு பொருள் சொல்கிறார்கள். அதுவே இங்கு வள்ளுவர் சொல்லுவது. (கண்ணின் துனித்தே = கண்ணில் தோன்றிய ஊடல்).
அதிகாரத்தின் இறுதிக்குறள் ஆண்குரல் பாடுகிறது. ஆண் மனதில் தோன்றிய உணர்வில் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். (பெண் உண்மையில் அப்படித்தான் உணர்ந்தாளா, நடந்தாளா என்றெல்லாம் ஆராயாமல் - வெறுமென ஆணுக்கு அப்படித்தோன்றியதாக எடுத்துக்கொண்டால் குழப்பம் வராது, எழுதிய வள்ளுவர் ஆண் என்பது தானே?)
கண்ணின் துனித்தே கலங்கினாள்
கண்களில் ஊடல் காட்டினாலும் விரைவில் அதை மறந்து விட்டாள்
(அது எப்படி எனக்குத் தெரியும் என்றால்...)
புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்று
தழுவுதலில் என்னை விடவும் விரைவாகச் செயல்பட்டுக் கலந்தாள்.
ஆக, அந்தத் "துனி" கண்ணில் சிறிய பொழுது தோன்றியது பாசாங்காக இருக்கலாம். அல்லது உண்மையிலேயே சினம் இருந்தாலும் உடல் ஆவல் அதைத் தோற்கடித்ததால் விரைவாகத் தழுவிக்கலந்திருக்கலாம்.
எப்படி இருந்தாலும், இந்தக்குறள் அவள் மனதில் என்ன நடந்தது இன்று சொல்லவில்லை. அவளைப்பார்த்து இவன் என்ன நினைத்துக்கொள்கிறேன் என்பதையே சொல்கிறது!
"பெண் மனது என்னவென்று பெண்ணுக்குத்தான் தெரியும்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum