Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Taking next gen MD's into account...

+17
rajkumarc
Bala (Karthik)
Wizzy
plum
ravinat
rajaclan
isaifan
jaiganesh
Drunkenmunk
Usha
kiru
V_S
vicks
sagi
crimson king
fring151
app_engine
21 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

Taking next gen MD's into account... - Page 8 Empty Re: Taking next gen MD's into account...

Post  V_S Fri Jan 27, 2017 10:42 pm

தொண்ணூறுகள் முதல் இன்று வரை தமிழ்த்திரையிசையில்  நாம் எவ்வளவு காம்ப்ரமைஸ் ஆகியிருக்கோம் என்று நினைத்துப்பார்த்த்தாலே எழுதக்கூடக் கூசுகிறது.

திரையில் நாட்டுப்புற இசை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மறைந்து போனதைக்கண்டு மனது விம்மி அழுததை பொறுக்கவில்லையென்றாலும் உள்ளுக்குள்ளேயே புதைத்ததுக்கொண்டேன். சரி இதை விட்டுவிடுவோம். கிராமங்களை ஒட்டி திரைப்படங்கள் நிறைய வருகின்றது, ஆனால் அதற்கேற்றாற்போல் இசை அமைவது மிகக்கடினமாகிப் போய்விட்டது. படத்திற்கும் பாடலுக்கும் சுத்தமாக சம்மந்தில்லாமல் போனது மறு அதிர்ச்சி. அவங்கள்லாம் நகரத்த்தில் உழன்றவர்கள் அதனால் வரவில்லை, மற்றவற்றை கேட்கலாம் என்று மனது எனக்குள் சொல்லிக்கொண்டது.

கர்நாடக (semi-classical/light-classical) இசையை எப்படி கையாண்டார்களென்றால், ஒன்று ஏற்கனவே போடப்பட்ட மெட்டை கொஞ்சமும் மாற்றாமல், தற்போதைய (contemporary) மேற்கத்திய இசைக்கருவிகளுடன் (ஆனால் செவ்வியல் அல்ல) சேர்த்து நல்ல ஒலித்தரத்துடன் பியூஷன்  என்ற பேரில் ஏமாற்றினார்கள். அதில் அவர்களின் பங்களிப்பு வெகு குறைவு, அப்படியே இருந்தாலும் அது கூட்டுப்பிரார்த்தனையே என்று பின்னர் தொலைக்காட்சிகளின் மூலம் தெரிந்துகொண்டு மிக அதிர்ச்சியடைந்தேன். இதற்கு இன்னொரு காரணம், திரைப்படங்களும் நம் செவ்வியல் இசையின் பின்புலனற்ற திரைப்படங்கள் தான் வருகின்றது. இதற்கும் இன்னொரு காரணம், இயக்குனர்கள் தற்போதைய இசையமைப்பாளர்களால் இந்த மாதிரி படங்களுக்கு இசையமைக்க முடியாதென்றும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனரா என்ற ஐயமும் மனதில் ஏற்படுகிறது. சரி இதையும் விட்டு விடுவோம் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

சரி இவர்களின் பின்னணி இசையை கவனிப்போம் என்றால், மேல் சொன்ன இரண்டே தேவலாம் என்ற நிலைக்கு தள்ளிவிடுவது எனோ காலத்தின் கொடுமை. பின்னணி இசை அமைப்பதற்கு மேற்கூறிய "ஏற்கனவே அமைத்ததை  உபயோகிப்பது"  என்பது மிகக்கடினம் என்பதால், ஒரு சிலர் இன்னொரு இசையமைப்பாளரை நாடுகின்றனர் (அவருக்கு என்னைவிட எதோ தெரியும் என்ற அளவிற்குத்தான்). வேறு சிலரோ தன்னை தூக்கத்தில் ஏதோ கெட்ட கனவு வந்து எழுப்பிவிட்டதுபோல் கண்டபடி பயந்து ஹார்மோனியக்கட்டைகளை பற்றி அது சரஸ்வதியின் சாபம் பெற்றவண்ணம் அபஸ்வரமாக ஒலிக்கிறது. மற்ற சிலரோ இந்த வம்பே வேண்டாம் என்று ""ஏற்கனவே அமைத்ததை  உபயோகிப்பது" ஆனால் கண்டுபிடிக்க கடினமாக மேற்கிலிருந்து சுட்ட கனியை கிழக்கிற்கு தானே அமைத்தது மாதிரி இறக்குமதி செய்கிறார்கள். சரி இந்த வம்பே வேணாம் என்று படத்தை மட்டும் காது பொத்தி பார்ப்போம் என்ற மனநிலைக்கு எப்பொழுதோ வந்துவிட்டேன்.

என்னென்ன இசைக்கருவிகள் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால், சுற்றி சுற்றி பியானோ, கிடார், ரிதம், எப்போதாவது புல்லாங்குழல். இந்த நான்கும் இப்பொழுதான். முன்பெல்லாம் (90-2000s) எல்லாமே கீபோர்டாக மட்டுமே இருந்தது. அதெல்லாம் செல்லுபடி ஆகவில்லையென்று உணர்ந்து இதை கையில் எடுத்திருக்கிறார்கள். இதில் இந்த "லைவ்" இசைக்கருவிகள் வாசிக்கும் இசையமைப்பாளர்களை அவுட்டேட்டட் என்றும் கிண்டல் வேறு. இப்போது அவர்களே வேறு வழியில்லாமல் இந்தப்பக்கம் வந்தாகிவிட்டது. வந்தது மட்டும்தான் இந்தப்பக்கம். எப்படி, எப்போது இக்கருவிகளை வாசிக்கவேண்டும் என்று இருக்கிறதல்லவா? அதில் வழக்கம் போல் தேர்ச்சியின்மையால் எடுபடாமலே போனது/போகின்றது. அர்ஸஸ்ட்ரா என்ற அற்புதமான செவ்வியல் தன்மையை முழுவதுமே அழித்துவிட்டார்கள் இவ்விசையைமப்பாளர்கள். ஆக நாம் விரும்பி கேட்கும் இன்டெர்லூட்ஸ் இன்று ஒன்று இல்லாமல் போனது. அதற்கு இன்னொரு காரணம் வேறு கூறுகிறார்கள். கருவிகளை சரியாக  வாசிக்க தெரியாதலால், அந்த இடத்தில் குய்யோ முறையோ என்று பல்வேறு மேற்கத்திய கத்தல்கள் (அங்கிருந்து சுட்ட பழம்) மூலம் நிரப்பி அதுதான் இன்றைய ட்ரெண்ட் என்று கிளப்பி விடுகிறார்கள். இன்றைய தலைமுறை மக்களும்  வாயை பிளந்து இதுவல்லவோ பியூஷன் என்று கொஞ்சம் மற்ற இசையை நன்கு கேட்டு ஆராய்ந்து முடிவுக்கு வராமல், கும்பலோட கோவிந்தாக மாறியுள்ளார்கள். இதையும் விட்டுவிடுவோம், என்று மனம் கெஞ்சிக் கெஞ்சிக் என்னை கேட்டுக்கொண்டபடியால் சரி என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் ஒரு பாடல் கேட்டவுடன் சொல்லிவிடலாம் இது யார் பாடல் என்று. இப்பொழுது அது விடை தெரியா விடுகதையாகவே இருக்கிறது, ஏனென்றால், ஏற்கனவே சொன்னது போல் அது கூட்டுப்பிரார்த்தனை, அல்லது "ஏற்கனவே அமைத்ததிலிருந்து" பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டது. அந்த சலுகையும் இப்போது கொடுத்தாகிவிட்டது.

அன்று போல் 40-50 படங்கள் வருடத்திற்கு ஒரு இசைமைப்பாளருக்கு இல்லை இன்று. ஏன் 10 கூட இல்லை. என் ஐந்தே அபூர்வம். ஒரு படத்திற்கு பாடல் அமைப்பதற்கு  இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள், பாடல் தேவகானம்  போல்லலவா  இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் ஒரு நப்பாசை அவர்களை நோக்கி பாயும் என் காதுகளும் மனதும். அதற்கென்ன தெரியும் பாவம். ஒரு பாடல் ஆரம்பிக்கும் என்று பார்த்தால், அது தொடங்கிய இடத்திலேயே இருக்கிறது. கேட்டால் அதுதான் புதுமையாம். அதையும் விடுவோம், அடுத்த பாட்டிற்கு போவோம் என்றால் அவ்வளவும் மேற்கத்திய வாடை, பாடலின் மெட்டிலிருந்து , பாடும் விதத்திலிருந்து. இவையெல்லாம் நான் 80லேயே கேட்டாகிவிட்டது. திரும்பவும் இது புதிது என்று பொய் சொல்லி புகுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை, ஏமாறப்போவதுமில்லை.

அன்றெல்லாம் ஒரு படத்தில் எல்லா பாடல்களும் ரசிக்கும்படியாக  இருக்கும். நல்ல பாடல்கள் வந்துகொண்டே இருக்கும். நமக்குத்தான் கேட்க நேரமிருக்காது. படத்திற்கு ஏற்றாற்போல் பின்னணி இசை வெகு சிறப்பாகவே இருக்கும் (ராஜா இசையில் மட்டும், பின்னணி இசைக்காகவே படத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்),  பாடலின் மெட்டும், அதற்கேற்றாற்போல் கூடவே பயணிக்கும் இசையும், எல்லாம் குறுகிய நேரத்தில் அமைத்தாகும். இன்று என் கோரிக்கையெல்லாம், திரையிசையில் ஒரு தூய கிராமப்புற இசையோ, செவிக்கினிமையான கர்நாடக இசையோ, படம் பார்க்காமலே நம் மனதில் அசைந்தோடும் பின்னணி இசையோ, படத்தின் எல்லா பாடல்களும் ரசிக்கும்படியாகவோ, படத்திற்க்கேற்றாற் போல் இசையும் பாடலும் அமைவதோ, அல்லவே அல்ல. அந்த பொன்னான நேரமெல்லாம் கடந்து நானும் எவ்வளவோ முதிர்ந்து எல்லையில்லா காம்ப்ரமைஸுக்கு தள்ளப்பட்டாலும், மனதோரம் ஒரு ஏக்கம். எப்போதும் இல்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் நம் தமிழ் சினிமாவில் ஒரு செவிக்கினிமையான, தென்றல் போன்ற, நிபந்தனையற்ற, காலமெல்லாம் கேக்கற மாதிரி, சொந்த படைப்பாக ஒரு மெட்டு வராதா என்று. வருவதற்கான ஒரு அறிகுறியும் தென்படவில்லை என்பதுதான் ஆழ்ந்த வருத்தம். இதைக்கூட உங்களால செய்ய முடியாதா?

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Taking next gen MD's into account... - Page 8 Empty Re: Taking next gen MD's into account...

Post  Usha Thu Feb 09, 2017 12:37 pm

V_S,
   Vijay antony and Iman.. sila paatu..... nalla iruku....... kaekara madhirii ..konjam rasikara madhirii iruku..........

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Taking next gen MD's into account... - Page 8 Empty Re: Taking next gen MD's into account...

Post  Usha Thu Feb 09, 2017 12:47 pm

Film . Kidaari

Music ... Darbuka Siva.

kaeta paatu.. Pagaivanukaruvai nan nenjae..

current trend. their feelings and the expressions. ellam contrast aga irukriadhu...

sogam kashtam.. idhai patri solla varum podhu.. solra varathai .. oru comedy..... ipadithan iruku ipo.....

bharathiyar.. indha paatuku  feelings.  epadi irundhu iruka mudiyum endru unara mudigiradhu....... Being an IR fan....

anal.. indha paatu.. ipodhu.  feelings...  yetru kolla mudiyavilai....

pagaivanukarulvai nan nenjae.. epadi iruka vendum.. Unarvu..........  oru pan patta manadhaga. adhil sirudhu inimai...........

anal paatin interludes. oru serious psychovin manadhin velipadaga irukiradhu........

mana nilai padhika pattavargalin manadhu apadi irukalam.. adharku advice madhirii varum isai epadi iruka vendum.......

idhai than naan unargiren.. contrast feelings expression. idhu danger illaiyo..........

https://www.youtube.com/watch?v=8mXd29WIADY

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Taking next gen MD's into account... - Page 8 Empty Re: Taking next gen MD's into account...

Post  app_engine Tue Mar 07, 2017 6:06 pm

Please get ready to hear the next symphony in TFM Wink
http://cinema.dinamalar.com/tamil-news/56902/cinema/Kollywood/I-will-make-music-with-some-different-style-says-e.s.ram.htm

MD - Ram wrote:
சிம்பொனி இசை வடிவம் என்பதால் வயலின் அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறேன்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Taking next gen MD's into account... - Page 8 Empty Re: Taking next gen MD's into account...

Post  app_engine Mon Mar 13, 2017 6:00 pm

power pANdi

Those who heard this please post on whether this is true IR-like or another wannabe...


Soorakaathu sounds straight out of Ilaiyaraja’s folk repertoire and it’s only befitting that the album, which evokes nice Raja memories, pays a nod to the legend.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Taking next gen MD's into account... - Page 8 Empty Re: Taking next gen MD's into account...

Post  V_S Mon Mar 13, 2017 7:49 pm

I already listened to this album. There is nothing about ILaiyaraaja in it. Not an inch of sweetness in the entire album. The worst part of the album is when Dhanush and the music director decide to sing couple of songs themselves, they sound horrible unable to keep up with the pitch and sruthi. யப்பா! ஆள உடுங்கப்பா kind of feeling. I don't like Ananthu's voice and emotionless (be it in Kabali or here) singing. Power-nil Paandi. Our TFM has already gone to trash. Not much expectations at all, but still will listen to them.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Taking next gen MD's into account... - Page 8 Empty Re: Taking next gen MD's into account...

Post  app_engine Sat Jun 30, 2018 4:08 pm

Santhosh Narayanan Interview :

https://www.kamadenu.in/news/cinema/3490-only-composers-like-anirudh-can-make-every-song-a-hit-santhosh-narayanan.html


அனிருத் போன்றவர்களால் தான் ஒவ்வொரு படத்திலும் ஹிட் கொடுக்க முடியும்

இவர் அனிருத்தைப் புகழ்கிறாரா திட்டுகிறாரா?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Taking next gen MD's into account... - Page 8 Empty Re: Taking next gen MD's into account...

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum