குறள் இன்பம் - #1 - #948
+3
fring151
Usha
V_S
7 posters
Page 34 of 40
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
Re: குறள் இன்பம் - #1 - #948
#788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
பள்ளிக்காலக்குறள் #6, இந்த அதிகாரத்தில்.
அப்படியாக, ஏற்கனவே பாதிக்கு மேல் படித்திருக்கும் அதிகாரம்
பலருக்கும் நன்கு அறிமுகமான, அழகான உவமை அடங்கிய குறள். மனிதர் என்று உடை அணியத்தொடங்கினார்களோ அன்று முதலே எல்லோருக்கும் புரியத்தக்க கருத்து
உடுக்கை இழந்தவன் கைபோல
உடை (உடலில் இருந்து) நழுவும் போது (விரைந்து சென்று பிடிக்கும்) கையைப் போல
இடுக்கண் ஆங்கே களைவதாம் நட்பு
துன்பம் வருகையில் அப்போதே (உடனே) வந்து நீக்குபவன் தான் சிறந்த நண்பன்!
உடலையும் மதிப்பையும் கைகள் காப்பது போல் ஒருவனை விரைந்து காப்பவரே நண்பர்.
இங்கே விரைவு மற்றும் அனிச்சை என்ற இரண்டு பண்புகள் மனதில் கொள்ள வேண்டும்.
விரைவு குறித்து எல்லோரும் பேசுவர், சிலரே "தன்னிச்சையற்ற செயல்" என்பதை உற்று நோக்குவார்கள்.
உடல் நழுவுகையில் சென்று பிடிப்பது அனிச்சையாக நடக்கும் என்பது நாம் உணர்ந்திருக்கும் ஒன்று.
(தண்ணி அடித்தவர்களுக்குப் பொருந்தாது )
அது போல் நண்பன் துன்பம் கண்டால் உதவ ஓடி வரும் நட்பு அதில் "தனக்கு என்ன கிட்டும் / என்ன இழப்பு வரும்" என்றெல்லாம் எண்ணாது,

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
"வீற்றிருக்கை" -பொதுவாக மன்னனாக உயர்ந்த நிலையில் (அரியணையில்) இருப்பதைக் குறிப்பிடும் சொல்.
இங்கே நட்பு அப்படிப்பட்ட உயர்ந்த / சிறந்த நிலையில் எப்போது இருக்கும் என்று விளக்குகிறார்.
கொட்பு என்றால் "நிலையின்மை" என்கிறது அகராதி, அதுவும் இந்தக்குறளை மேற்கோள் காட்டி அப்படிச்சொல்லுகிறது. கொட்பின்றி - நிலைத்து, ஆடாமல் அசையாமல், உறுதியாக இருப்பது.
ஒல்லுதல் - இயலுதல் , ஒல்லும்வாய் ஊன்றுதல் = முடிந்த அளவுக்கு நண்பனைத்தாங்குதல் / உதவுதல்
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்
நட்பின் சிறப்பான (உயர்ந்த / அரியணையில் வீற்றிருக்கும்) நிலை என்னவென்றால்
கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
அசைவிலா உறுதியுடன் இயன்ற வழிகளில் எல்லாம் நண்பனைத்தாங்குவது தான்
மேலே படித்த குறளின் தொடர்ச்சி எனலாம்.
சிறிய வேறுபாடு சொல்ல வேண்டும் என்றால் இடுக்கண் வரும்போது மட்டுமல்ல மற்ற
நேரங்களிலும் உடன் இருப்பது என்று கொள்ளலாம்.

#790
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
மிக அழகான கருத்தை - அதாவது, நட்பில் போலித்தனம் அறவே கூடாது என்று அறிவுறுத்தும் குறள்.
"புனையினும்" - இதுவே இந்தக்குறளில் குறிப்பிடத்தக்க சொல்
என்று எண்ணுகிறேன். "வெளியிலே காட்டிக்கொள்வதற்காக அல்ல நட்பு" என்றும் புரிந்து கொள்ளலாம்.
அடிக்கடி சொல்லப்படும் ஒரு நகைச்சுவை ("எனக்கு அவரை நல்லாத்தெரியும் - அவருக்கு என்னைத்தெரியாது") நினைவுக்கு வரலாம்.
இவரெமக்கு இனையர்
இவர் எனக்கு இப்படிப்பட்டவர்
(இத்தன்மையர், வேண்டியவராக்கும், மிக நெருக்கமாக்கும்)
இன்னம்யாம் என்று
நான் (அவருக்கு) இப்படிப்பட்டவர் என்றெல்லாம்
புனையினும் புல்லென்னும் நட்பு
புனைந்து சொன்னால் நட்பு இழிவாகி / சிறுமை பெற்று விடும்
நட்பு என்பது செயல்களால் தெளிவிக்கப்பட்டு அவ்வண்ணம் கண்டும் உணர்ந்தும் புரியத்தக்கது.
நண்பருக்கோ மற்றவர்களுக்கோ சொல்லிச்சொல்லி விளங்க வைப்பது அல்ல! புனைந்து / மிகைப்படுத்திச்சொல்வது அதிலும் மிகக்கெடுதல்.
("உயிருக்குயிரான நண்பன்" என்பான், துன்பம் வந்தால் ஓடி விடுவான், குழந்தைகளுக்குச் சொல்லப்படும் "கரடிக்கு முன் இறந்தது போல் நடித்த கதை" நினைவுக்கு வருகிறதா?)

#791
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள்பவர்க்கு
(பொருட்பால், நட்பியல் , நட்பாராய்தல் அதிகாரம்)
சென்ற அதிகாரத்தில் நாம் தெளிவாகப் பார்த்தது போல, நட்பு என்பது வெறுமென நகைத்துப்பேச அல்ல.
அறிவுறுத்துதல்,துன்பத்தில் தாங்குதல், ஒத்த உணர்வுகள் கொண்டிருத்தல் என ஆழமான பண்புகள் கொண்ட ஒன்று.
அந்த அடிப்படையில் தான் இந்த 'நட்பாராய்தல்" என்ற அதிகாரத்தின் குறள்களை அணுக வேண்டும். அல்லாமல், வெறும்
"ஒரு நாள் நட்பு", "தொடர்வண்டி நட்பு" என்றெல்லாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.
(அவற்றுக்கும் இதில் உள்ள சில ஆராய்தல்கள் நல்லது தான் என்றாலும், தவிர்க்க இயலாத சூழல்களில் நாம் ஆராயாமல் பழகவும் , நன்மை / தீமைகளில் மற்றவரோடு திடும் என உட்படவும் நேரிடலாம். அந்நேரங்களில் இங்குள்ள அறிவுரைகள் முழுமையாகப் பொருந்தாது).
ஆராயாமல் நட்புக்கொள்வது விடமுடியாத கேட்டைத்தரும் என்று சொல்லி இங்கே தொடங்குகிறார்.
நட்பாள்பவர்க்கு நட்டபின் வீடில்லை
நட்புக்கொள்ளும் ஒருவருக்கு (அவ்விதத்) தொடர்பு உண்டான பின் விடுதலை இல்லை (என்பதால்)
நாடாது நட்டலிற் கேடில்லை
ஆராயாமல் நட்புக்கொள்வதை விடக்கேடான ஒன்று இல்லை!
ஆண் - பெண் நட்புகளில் இப்படிப்பட்ட விளைவுகளை மிகக்கேடான வழிகளில் நாம் நாள்தோறும் செய்திகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

#792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
கொஞ்சம் அழுத்தமாகவும் கடினமாகவும் ("இடித்துரைக்கும்") திருக்குறள்
அதாவது, "சாகும் அளவுக்குக் கொண்டுபோய் விடும்" கெடுதலாக இங்கே ஆராயாமல் கொள்ளும் நட்பு சொல்லப்படுகிறது!
ஒரு கணக்கில் பார்த்தால், இது நேரடி உண்மையாக ஆகி விடலாம். அதாவது, குற்றங்கள் செய்வதில் இன்பம் காண்பவர் அல்லது போதை மருந்துகள் பயன்படுத்துவோர் போன்ற கொடியவரின் நட்பை ஆராயாமல் கொண்டோம் என்றால் நமக்கு சாவு நேரிட வாய்ப்புகள் கூடும் தானே?
அல்லாத நேரத்திலும், பலவிதமான துன்பங்கள் / இக்கட்டுகள் கூடா நட்பினால் விளைவடையலாம்.
ஆதலினால், நட்பை ஆய்ந்தாய்ந்து கொள்வோமாக!
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை
பலமுறை ஆராய்ந்து கொள்ளாதவனுடைய நட்பு
(ஆய்ந்து ஆய்ந்து என்று அடுக்குத்தொடர் வருவது இங்கே மிகப்பொருத்தம்)
கடைமுறை தான்சாம் துயரம் தரும்
இறுதியில் தனக்கு சாவைத் தரும் துன்பத்தை விளைவிக்கும்

#793
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
நட்பாராய்தலில் என்னென்ன பார்க்க வேண்டும் என்று பட்டியலிடும் குறள்.
திருமணம் செய்வதற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னென்ன பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பது போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
சொல்லப்போனால், திருமணம் என்பது மானிட நட்புகளில் உச்சம் தானே?
குணமும் குடிமையும்
(ஒருவரது) நற்பண்புகளையும் குடிப்பிறப்பையும்
குற்றமும் குன்றா இனனும் அறிந்து
குறைகளையும் குறையாத இனத்தாரையும் அறிந்து
(சுற்றத்தார் யார் யார், அவர்களது பண்புகள் எப்படி என்றெல்லாம் பார்க்கச்சொல்கிறார்)
நட்பு யாக்க
(அவற்றின் அடிப்படையில்) நட்புக்கொள்ளுங்கள்
நட்பு என்பது ஒருவரது வாழ்க்கையை முழுவதுமாக மாற்றக்கூடியது என்பது தெரிந்ததே. (சென்ற அதிகாரத்திலும் இதைக்குறித்து நன்றாகப் பார்த்திருக்கிறோம். முந்தின குறளில் சாவுக்கே கொண்டு செல்லத்தக்கது என்றெல்லாம் கண்டோம்).
அப்படிப்பட்ட நிலையில், ஏனோதானோ என்று நண்பர்களைக்கூட்டாமல், ஆராய்ந்த பின் செய்வது மிக நல்லது.
குறிப்பாக "காலையும் மாலையும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவழித்தல்" எல்லோருக்கும் பழக்கமாகி விட்ட நம் நாளில், யார் நம் கூட்டாளி என்று ஆராய்வது பாதுகாப்புத்தரும்

#794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
இந்தக்"குடிப்பிறப்பு" மீண்டும் மீண்டும் வருவது எனக்கு அவ்வளவு உவப்பில்லை. என்றாலும், அடுத்து வரும் பண்புக்காக இதைப்பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்.
பழி நாணுதல்!
இன்றைக்கு நம் நாட்டில் "புகழ்" பெற்றிருப்போர் (மற்றும் அதை விரும்புவோர்) இந்தப்பண்பு உண்மையிலேயே தமக்கு இருக்கிறதா என்று ஆராய வேண்டிய ஒன்று!
முன் காலங்களில் தம் மீது பழி வருவது வெட்கக்கேடு என்று அதற்கு அஞ்சி நடப்பது தான் நற்பண்பாகக் கருதப்பட்டது. அது மெல்ல மெல்ல மழுங்கிப் பிற்காலங்களில் "பழி மறைத்து மூடுதல்" என்று ஆகி, வர வர அதையே விளம்பரம் ஆக்கும் அளவுக்கு நிலை கேடாக ஆகி வருவது நாம் காண்பதே
என்றாலும். அப்படிப்பட்ட "பழி விரும்பி"களை நாம் நட்பாக்காமல் தப்பிக்க வழி பார்ப்போம்!
குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானைக்
(நல்ல) குடியில் பிறந்து தம் மீது பழி வருவதற்கு வெட்கப்படுபவரை
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
(பொருள்) கொடுத்தாவது நண்பராக்கிக் கொள்ள வேண்டும்
உண்மையிலேயே தவறுக்கு அஞ்சுபவரே "பழி நாணுவோர்".
அல்லாமல், "குடிப்பிறப்பு பெரிது, அதற்கு இழுக்கு வரக்கூடாது" என்று அழுக்கை மூடி மறைக்க முயல்வோர் இருக்கலாம். (அதற்காகக் கொலையும் செய்வோரைப்பற்றிக் கேள்விப்படுகிறோம்).
அப்படிப்பட்டோரை இங்கே வள்ளுவர் சொல்லவில்லை என்பது புரியக்கடினம் இல்லை.

#795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
நட்பு அதிகாரத்தில் சொன்ன கருத்தை "ஆராய்தல்" வடிவில் மீண்டும் இங்கே வலியுறுத்துகிறார் புலவர்.
"இடித்துரைத்துத் திருத்துவது தான் நட்பு" என்று அங்கே பார்த்தோம். அதற்கு வல்லவரைப் பார்த்து ஆராய்வதன் தேவையை இங்கே பார்க்கிறோம்.
அழச்சொல்லி
(நாம் மனம் வருந்தி) அழும் விதத்தில் சொல்லி
(தவறுகளை நாம் உணரும் வண்ணம் சுட்டிக்காட்ட வல்லவர்)
அல்லது இடித்து
வருந்தும் வண்ணம் இடித்துரைத்து
வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
(நடைமுறை) வழக்கங்கள் அறிய வல்லவரின் நட்பை நாடிக்கொள்ள வேண்டும்
முதற்பகுதி நம்முடைய பேச்சுக்கும் அடுத்த பகுதி நம்முடைய செயல்களுக்கும் என்று சொல்லும் உரைகளும் உண்டு. அவையும் மிகப்பொருத்தமே.
நம்முடைய எண்ணம், பேச்சு, செயல் இவற்றில் உள்ள குழப்பங்களைத் துணிவுடன் சுட்டிக்காட்ட வல்லவர்கள் யாரெனத் தெரிந்து அவர்களது நட்பை அடைய முயல வேண்டும்.
எண்ணற்ற துன்பங்களில் இருந்து இப்படிப்பட்ட நண்பர்கள் நம்மை "வருமுன் காப்பார்கள்".

#796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
உண்மையான நண்பனை அடையாளம் காண நமக்கு வரும் துன்பம் உதவும்.
அந்தக்கருத்தை அழகாகச் சொல்லும் குறள். அதாவது, "துன்பத்திலும் ஒரு நன்மை" உண்டு என்று விளையாட்டாகச் சொல்லுகிறார் வள்ளுவர்
ரூபாய் நோட்டுக்களுக்காக மக்கள் அலைந்து திரியும் இந்நேரத்தில் அந்தத்துன்பம் பலருக்கும் யாரெல்லாம் உண்மை நண்பர்கள் / யாரெல்லாம் தன்னலம் பிடித்த போலிகள் என்று அடையாளம் காண உதவி செய்திருக்கும் என்று நம்புவோம்!
கேட்டினும் உண்டோர் உறுதி
(நமக்கு வரும்) கேட்டிலும் ஒரு நன்மை / பயன் உண்டு
கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்
(அது) நண்பரை நீட்டி அளந்து பார்ப்பதற்கான ஒரு அளவு கோலாகும்
"உடுக்கை இழந்தவன் கை" நினைவுக்கு வருகிறதா? உண்மையான நட்பை ஆராய ஒருவருக்கு வரும் துன்பம் அவ்விதத்தில் உதவும்.
மெய்யான நட்பு கூடவே நிற்கும், இயன்ற உதவிகள் செய்ய முயலும்.
கூடா நட்பு காணாமல் ஓடி விடும்.
நெருப்பில் இட்ட ரூபாய் நோட்டு போல அல்லது நீரில் நனைந்த புது 2000 ரூபாய் நோட்டு போல ஆகி விடும்.

#797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்
அறிவில்லாதவர்கள் நட்பு பயனற்றது. எனவே அவர்களோடு உள்ள உறவைத் துண்டித்து விடுவது "ஊதியம்" என்கிறார்.
சரி தான் - இதைக் கணக்கிடுவது எளிதே
எடுத்துக்காட்டாக, சமூக வலைத்தளங்கள் எனப்படுவன இன்று பலரது வாழ்விலும் எவ்வளவு நேரத்தை எடுத்துக்கொள்கிறது என்பது
அவரவருக்கு நன்கு தெரியும். அதே போலத்தெரிந்த உண்மை அங்கே எத்தனை முட்டாள்களோடு நேரம் வீணடிக்க வழியுண்டு என்பது.
இவற்றைத்தவிர்த்து விடுவதால் கிடைப்பது நேரம்.
நேரம் = பணம் என்பது நம் நாளில் பொதுமொழி.
அதாவது, ஊதியம்
ஒருவற்கு ஊதியம் என்பது
ஒருவருக்கு ஊதியம் (சம்பளம் / நற்பயன்) என்பது என்னவென்றால்
பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
அறிவில்லாதவர்கள் நட்பை விட்டு விடுவது தான்
வலையில் நேரம் போவது போல அன்றாட வாழ்விலும் பேதையர் கேண்மை நமது நேரத்தை வீணாக்கும். மட்டுமல்ல, வேறு பல சிக்கல்களையும் உண்டாக்கி நமது வளங்களைச் சுரண்ட வழியுண்டு.
ஆதலால், அப்படிப்பட்டோரோடு ஒட்டி உறவாட வேண்டாம்.
(ஒரு ஆளுக்கு அறிவிருக்கிறதா இல்லையா என்று பழகாமல் எப்படித் தெரிந்து கொள்வது என்கிறீர்களா? பழகினால் தான் தெரியும். அந்தப்பழக்கம் "ஆராய்ச்சி" என்ற அளவில் இருக்கட்டும். உறவில் முடிய வேண்டாம் / துண்டிக்க எப்போதும் ஆயத்தமாய் இருங்கள்).

798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
உள்ளம் = ஊக்கம் என்று முன்னமேயே படித்திருக்கிறோம்.
அதைக்குறைக்கும் எண்ணங்கள் மனதில் வரக்கூடாது. நாம் துவண்டு போய் விடுவோம்.
இந்த உண்மையை இங்கே உவமையாகப் பயன்படுத்தி வேண்டாத நட்பை விளக்குகிறார் வள்ளுவர்.
உள்ளம் சிறுகுவ உள்ளற்க
ஊக்கத்தை இழக்கச் செய்யும் எண்ணங்கள் மனதில் நினைக்கவே கூடாது. (அது போல)
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு கொள்ளற்க
துன்பம் வரும்போது கூட இருக்காமல் கைவிடுபவரோடு நட்பு கொள்ளக்கூடாது
மறுபடியும் "அல்லலில் கூட நில்லாதவர்" பற்றிய எண்ணம் இங்கே வருவதை மனதில் கொள்வோம்.
அப்படியாக, நட்பின் குறிப்பிடத்தக்க ஒரு இலக்கணம் துன்பத்தில் உடன் இருப்பது. நட்பு ஆராய்தலில் இதைச்சொல்வதனால் நாம் ஒரு முடிவுக்கு எளிதில் வரலாம்.
இதுவரை நமக்குத் துன்பம் வந்த போதெல்லாம் யாரெல்லாம் நம்மோடு உடனிருந்தனர்? அதைப்பகிர்ந்து கொண்டோ, அல்லது மீள உதவியோ, அல்லது இயலாமை என்றாலும் குறைந்தது நம் புலம்பலுக்கு செவி கொடுத்தோ யார் நின்றது?
நம் நட்பு வளையத்தை அவர்களிடம் இருந்தே தொடங்குவோம். வெறுமென சிரித்து நகைத்து நம்மோடு நேரம் போக்கும் கூட்டத்தில் இருந்து அல்ல!

#799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ்சுடும்
"நீங்கள் செய்த உதவியை சாகும் வரை மறக்க மாட்டேன் (அல்லது, உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன்)" என்று சொல்வது நாம் பலமுறை கேட்டிருப்பது.
உண்மையில் அப்படிச்சொல்கிறார்களா அல்லது வெறும் அணிக்காகவா என்றெல்லாம் பொதுவாக யாரும் ஆழமாக ஆராய்வதில்லை (உணர்ச்சி கூடிய மொழி என்று தள்ளிவிடுவதே வழக்கம்)
இந்தக்குறளில் அதன் "தலைகீழ்" உணர்ச்சி வருகிறது. அதாவது, ஒருவர் நட்புக்குச் செய்த கெடுதலை (துன்ப வேளையில் கைவிட்டு விட்டு ஓடியதை), சாகும் பொழுதும் மறக்க முடியாது என்கிறார் வள்ளுவர்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை
கேடு வரும் நேரத்தில் கைவிட்டு விடுவோரிடம் கொண்டிருந்த (பிழையான) நட்பு
அடுங்காலை உள்ளினும் உள்ளஞ்சுடும்
சாகும் நேரத்தில் நினைத்தாலும் உள்ளத்தை வருத்தக்கூடியது
கொஞ்சமே கடினமான சொல் - "சுடும்" - இங்கே பயன்படுத்துவதைக் காண முடியும். அவ்வளவு கூர்மையான வலியை ஆராயாமல் கொண்ட நட்பினால் நாம் அடைவோம்.
அதனால், "கடினமான காலத்தில் தாங்குமா" என்று ஆராய்ந்து நட்புக்கொள்க - பின்னால் நெஞ்சைச்சுடும் துயரத்தை அவ்விதம் தவிர்க்கலாம்.

#800
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு
மருவுக / ஒருவுக அழகான எதுகை. ஆனால், ஒன்றுக்கொன்று முரணான சொற்கள்
(முரண் தொடை?)
மருவுதல் - நெருங்குதல், நட்புக்கொள்ளல்
ஒருவுதல் - விட்டு விடுதல் ("உருவுதல்" )
மற்றபடி முன்னமேயே கண்டவற்றின் ஒன்று கூட்டல் எனலாம். "மாசற்றார்" (அப்பழுக்கற்றவர்) என இதுவரை நாம் செய்த ஆராய்ச்சிகளை ஒன்று சேர்க்கிறார்.
மருவுக மாசற்றார் கேண்மை
குற்றம் இல்லாதவர்களிடம் நட்பில் கூடுங்கள்
ஒன்றீத்தும்
ஏதாவது ஒன்றைக்கொடுத்தாவது
ஒருவுக ஒப்பிலார் நட்பு
ஒத்த தன்மையில்லாதாரின் நட்பை விட்டு விலகுங்கள்
இங்கே "ஒன்றீத்தும் " என்ற சொல் அழகாக நடுவில் வைக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். அப்படியாக, அதை முன்னுக்கும் பொருத்தலாம், பின்னுக்கும் பொருத்தலாம் இந்தச்செய்யுளில்.
கொடுத்தாவது நல்லோரின், அறிவுள்ளோரின், துன்பத்தில் உடன் நிற்போரின் நட்பை ஈட்டுவோம்.
அப்படியில்லாதோரின் நட்பை ஒன்றைக்கொடுத்தாவது "போ" என்று ஓட்டுவோம்

#801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
(பொருட்பால், நட்பியல், பழைமை அதிகாரம்)
அதிகாரத்தின் தலைப்பைப் பார்த்தவுடனே நமக்கு "இது என்ன சொல்" என்ற கேள்வி வருகிறது. பழைய தன்மை / பழைய நிலைமை என்பது தான் சுருக்கமாகப் பழைமை (அதாவது, பழமை என்பதன் இன்னொரு வடிவம்) என்று வருகிறதோ என்று தோன்றுவது இயல்பே.
அப்படித்தான் அகராதி பொருள் சொல்கிறது.
ஆனால், இதோடு நட்புக்கு என்ன தொடர்பு? இந்தக்கேள்விக்கு விடை சொல்ல முயல்கிறது முதல் குறள் - வரையறை வடிவில் எழுதப்பட்டிருக்கிறது.
பழைமை எனப்படுவது யாதெனின்
பழைமை என்று சொல்லப்படுவது (நட்பியலில்) என்ன என்றால்
யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
எப்படிப்பட்ட உரிமையையும் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பு தான்
(கிழமை = உரிமை, இந்த இடத்தில்)
நெடுநாள் பழகியவர்களிடம் கூடுதல் உரிமை எடுத்துக்கொள்வது இயல்பே
(எடுத்துக்காட்டு : நட்பில் நெருங்கிய பெண்கள் ஒருவர் புடவையை அவரிடம் கேட்காமலேயே எடுத்து அணிந்து கொள்வது )
அதை "அளவுக்கு மீறுகிறாய்" என்றெல்லாம் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு ஒருவரிடம் நட்பு இருந்தால், அதுவே "பழைமையான நட்பு"
புதிதாய்ப் பழகியவரிடம் இப்படி உரிமை எடுத்துக்கொள்ள யாருக்கும் கொஞ்சம் தயக்கம் இருக்கும். (சிலர் இதில் விதிவிலக்கு - தடாலடியாகப் பழகி அச்சுறுத்துவார்கள்).
ஆக, பழைமை என்பது நீண்ட காலம் பழகிய நிலை. கூடுதல் உரிமை எடுத்துக்கொள்ள இடம் கொடுக்கும் நட்பு.
ஆழமான புரிந்து கொள்ளுதலின் அடிப்படையில் அமைந்தால், அங்கே பிழைகளும் கூட ஏற்றுக்கொள்ளப்படும் - சிறுமைப்படுத்தப்பட மாட்டாது.

திருக்குறள் 1-800 எளிய தமிழில் படிக்க, PDF வடிவில்:
http://www.mediafire.com/file/c1p2mup0cyb3p91/kural_inbam_800.pdf
http://www.mediafire.com/file/c1p2mup0cyb3p91/kural_inbam_800.pdf
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்
கிழமை என்றால் உரிமை என்று முன் குறளில் கண்டோம், இங்கே உரிமைக்கு இன்னொரு சொல் - கெழுதகைமை.
இந்த இரு சொற்களும் இனி இந்த அதிகாரத்தில் அடிக்கடி வரும்.
மெல்ல மெல்ல பழைமை என்ற சொல்லை எடுத்து விட்டு, நட்பில் உரிமைக்கு இருக்கும் இடத்தை வலியுறுத்தத் தொடங்குகிறார். அதாவது, கிட்டத்தட்ட "பழைமை = நட்பில் உரிமை" என்ற அளவில். (வரையருக்குப் பொருத்தமாகவே).
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை
நட்புக்கு உறுப்பாக (தவிர்க்க இயலாத பகுதியாக / பண்பாக / அடையாளமாக) இருப்பது உரிமை (பாராட்டுதல்)
மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்
அதனால் அதற்கு உடன்படுதல் சான்றோரின் கடமை
"நண்பர் தம்மிடம் உரிமை எடுத்துக்கொள்வதை மதிப்பவன் தான் சான்றோன்" என்று குறிப்பாக உணர்த்துகிறார். அது தான் ஆழமான நட்புக்கும் சான்று.
அல்லாமல், "இன்னான் எனக்கு நண்பன், ஆனால் எப்போதும் ஏதாவது உரிமை கொண்டாடிக்கொண்டே இருப்பான் ; நாளைக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறான் - என்ன கேட்பானோ" என்ற அளவில் ஒருவர் எண்ணினால் / பேசினால், அந்த நட்பில் பழைமை இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

#803
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை
நன்கு பழக்கமான நண்பர் உரிமை எடுத்துக்கொள்ள விடாவிட்டால், அந்த நட்பால் / பழக்கத்தால் என்ன பயன்?
இப்படி ஒரு அறிவுரை இங்கே!
நேரடிப்பொருள் காண்பது எளிதே (கெழுதகைமை என்ற சொல் ஏற்கனவே படித்திருப்பதால்)
கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை
(நண்பர்) உரிமை எடுத்துக்கொண்டு செய்தவையோடு உடன்படாமல் இருந்தால்
பழகிய நட்பெவன் செய்யும்
பழகிய நட்பு கொண்டு என்ன பலன்? (என்னத்தைச் செய்ய முடியும்?)
அப்படியாக, பழைமை = உரிமை என்பது மீண்டும் இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது.
"பழகிய" என்ற சொல் இங்கே இன்றியமையாதது. எல்லா நட்பிலும் உரிமைக்கு இடமில்லை. நாட்கள் செல்லச்செல்லத்தான் நண்பர் மீது நம்பிக்கை பெருகும். அதன் அடிப்படையில் தான் உரிமை தர முடியும்.
அமெரிக்காவில் இருக்கும் "கடன் மதிப்பெண்" கிட்டத்தட்ட இந்த நட்பு இயலில் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் செயல்படுகிறது எனலாம். அதாவது,
1. ஆராயாமல் முதலில் கடன் கொடுக்க மாட்டார்கள்
2. கடன் வாங்கி மீண்டும் செலுத்துவதில் எவ்வளவு "பழமை" இருக்கிறதோ அதைச்சார்ந்தே "உரிமை". (அதாவது, ஒருவருக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம். எவ்வளவு வட்டி வீதம் என்பன இந்தப்பழைமை மதிப்பெண்ணைச் சார்ந்தே அமைகிறது)

#804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
"ஒருவர் பொறை இருவர் நட்பு" என்பது பழமொழி
அதாவது, ஒரு நட்பு தொடருவதற்கு மற்றவரின் பிழைகளையும் பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மை வேண்டுமாம்.
இங்கே கிட்டத்தட்ட அது போன்ற ஒரு சூழலைக் காண்கிறோம். பழக்கம் / உரிமை விளைவாக, நண்பர் நம்மைக்கேட்காமலேயே என்னவோ செய்து விடுகிறார். (நமக்காக - அல்லது நம் பெயரைச் சொல்லி). இப்படிப்பட்ட சூழலில் அதை ஏற்றுக்கொள்வது தான் "பழைமையான நட்பு". (ஒரு வேளை அதன் விளைவாக நமக்குப்பொருள் அழிவு வந்தாலும்).
ஒருவர் மீதுள்ள ஆழ்ந்த நட்பு / விருப்பம் அதற்கு அடிப்படை.
கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்
உரிமையால் (இடம் எடுத்துக்கொண்டு) கேட்காமலேயே நண்பர் (ஏதாவது) செய்தால்
விழைதகையான் வேண்டி இருப்பர்
(நட்பின் பழைமையால்) விரும்பும் தன்மையோடு அதை ஏற்றுக்கொண்டு இருப்பர்
"உன்னைப்பற்றி எனக்குத்தெரியும், அதனால் கேட்காமலேயே வாக்குக்கொடுத்து விட்டேன்" என்று நம் சார்பில் "மாட்டி விடும்" நண்பர்கள் எல்லோருக்கும் உண்டு
அவர்கள் மீதுள்ள நட்பால் / அன்பால், அதையும் விரும்பி (சில சமயம் பொறுமை காட்டி) இருப்பது அழகு தானே?

#805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
சென்ற குறளில் படித்ததன் தொடர்ச்சி.
அதாவது, நீண்ட கால நண்பர்கள் நம்மை "மாட்டி" விடும் (வருந்த வைக்கும்) சூழல்கள் வரத்தான் செய்யும். அப்போது, "பழைமையின்" அடிப்படையில் அதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இங்கே படிக்கிறோம்.
என்றாலும், ஒரு சிறிய வேறுபாடு ! நண்பர்களின் எல்லாப்பிழைகட்கும் "உரிமை என்ற ஒன்று தான் காரணம்" என்று சொல்லாமல், இன்னொன்றையும் கூட்டுகிறார். (பேதைமை)
நோதக்க நட்டார் செயின்
வலி / வருத்தம் தரும் செயல்களை நண்பர்கள் செய்தால்
பேதைமை ஒன்றோ
அறிவில்லாமை என்ற காரணத்தினாலோ
பெருங்கிழமை என்றுணர்க
(மற்றும் / அல்லது) மிகுதியாக உரிமை எடுத்துக்கொண்டதாலோ என்று உணர வேண்டும்
பல நேரங்களிலும் இந்த ரெண்டும் (அறிவின்மை + மிகுந்த உரிமை) சேர்ந்த நண்பர்களால் அல்லல் வருவதைக் காண முடியும்.
நமக்கு வந்தவை மட்டுமல்ல, நம்மால் நண்பர்களுக்கு அப்படிப்பட்ட சிக்கல்கள் வந்த நிலைமைகளும் நினைவுக்கு வரலாம்.

#806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
தொல்லை என்பதற்குப் பழமை என்று ஒரு பொருள் இருப்பதாக இன்று தெரிந்து கொண்டேன்
(அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறது - தொல்லைக்கண் = பழைமையான)
பாடலுக்குப் பொருள் காண, இதற்கு எதுகையாய் வரும் "எல்லைக்கண்" என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
எல்லை - வரம்பு, நெறி - அதற்குள் செயல்படுதல். (இந்தச்சொல்லுக்கும் இதே குறளை அகராதி மேற்கோள் காட்டுகிறது)
அப்படியாக, "எல்லைக்கண் நின்றார்" = நல்ல வரம்புகளுக்குள் நிற்பவர், நட்பின் நெறிப்படி நடப்பவர்.
தொலைவிடத்தும்
அழிவு (இழப்புகள்) வருமிடத்திலும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
பழைமையாய் நட்பு கொண்டிருப்பவர்களின் தொடர்பை
எல்லைக்கண் நின்றார் துறவார்
நட்பின் நெறியில் (வரம்புகளில்) நடப்பவர் விட்டு விட மாட்டார்
நட்பின் இலக்கணமே "உடுக்கை இழந்தவன் கை போல". இது இரண்டு பக்கத்தில் யாருக்கு அழிவு வந்தாலும் பொருந்தும்.
"நமக்கு இழப்புகள் வருகின்றன" என்று கருதிப்பழைமை வாய்ந்த நண்பர்களின் தொடர்பை அறுப்பது நட்பின் நெறி அல்ல. நண்பனுக்குத் துன்பம் வரும்போது தாங்குவது எப்படி மிகத்தேவையோ அதே போல் நமக்குத் துன்பம் வரும்போதும் பழையவர்களைத் துண்டிக்க முயலக்கூடாது.

#807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர்
பொதுவாக நமக்குத்துன்பம் வரும் நிலை வேறு, நண்பர் குறிப்பாக நமக்குக் கெடுதல் செய்வது வேறு.
இந்தக்குறள் இரண்டாம் சூழல் குறித்தது.
அதாவது, நம்மோடு நெடுநாள் பழகிய நண்பர் (வேண்டுமென்றோ அல்லாமலோ ) நமக்கு அழிவு அல்லது கெடுதல் வருத்தும் செயல்களில் ஈடுபடுகிறார்
நெடுநாள் பழக்கத்துக்காக அவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் நட்பு என்ன ஆகும்?
மிக உயர்ந்த கோட்பாடு இந்தக்குறளில் படிக்கிறோம் - அப்படிப்பட்ட நண்பரைப் பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல, அன்பு / நட்பு குறைக்கவும் கூடாது என்கிறது செய்யுள்! நட்புக்கு எப்படிப்பட்ட உயர்ந்த அளவுகோல் இங்கே!
அன்பின் வழிவந்த கேண்மையவர்
அன்பின் வழியால் (நீண்ட காலமாக) நட்புக்கொண்டவர்
அழிவந்த செய்யினும் அன்பறார்
(நண்பர் தமக்கு) அழிவு வரும்படியான செயல்கள் செய்தாலும், அன்பை விட்டு விட மாட்டார்!
அன்பு என்ற சொல்லின் மேன்மையே "தீமை செய்தவனுக்கும் நன்மை / அழிவு செய்பவனுக்கும் கருணை" போன்ற உயர்ந்தவற்றில் அடங்கியிருக்கிறது. அவ்வழியில் வரும் பழகிய நட்பில் இப்படிப்பட்ட ஒரு தேவை இருப்பது தவிர்க்க முடியாதது!

#808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
"பழைமை" என்று நீண்ட நாட்களாய் இருக்கும் நட்பைச்சிறப்பிக்கும் அதிகாரம் என்பதால், கொஞ்சம் குழப்பமான குறள்.
அதாவது, நீண்ட நாள் நண்பர் - அதுவும் அவரைப்பற்றி மற்றவர்கள் குறைசொன்னாலும் நாம் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்னும் அளவுக்கு நல்ல பழக்கமுள்ளவர் - நமக்கு எதிராக என்னவோ செய்கிறார்.
அப்படி அவர் செய்யும் "நாளிழுக்கம்" (இழுக்கான நாள் / கெட்ட நாள்) என்கிறார் வள்ளுவர். நட்பில் பழமையின் சிறப்பு குறித்துப் படித்துக்கொண்டிருக்கும் போது இப்படி ஒரு செய்யுள் வந்தால் குழம்பாமல் என்ன செய்வது.
அதிலும் குறிப்பாக, இதற்குச் சற்று முன்னர் தான் "அழிவந்த செய்யினும் அன்பறார்" என்று சொல்லி விட்டு, இப்போது அதே கருத்தை மாற்றுவது (அழிவந்த செய்த நாள் இழுக்கானது என்பது) குழப்பாமல் என்ன செய்யும்?
உரையாசிரியர்கள் அதற்கும் மேல் நம்மைக்குழப்ப முயல்கிறார்கள். பரிமேலழகர், மு.வ. போன்றோர் "பயனுள்ள நாள்" என்கிறார்கள். அதாவது, நாள் இழுக்கம் என்றல்ல, நட்டார் இழுக்கம் என்று வைத்துப் பொருள் கொள்கிறார்கள். அப்படியாக, "பிழை பொறுத்தலுக்கான வாய்ப்புத்தந்த பயனுள்ள நாள்" என்று சொல்கிறார்கள். மு.க.வோ "இவனோடு நட்பு கொண்டிருந்த நாளெல்லாம் வீண்" என்று எதிரான பொருள் சொல்கிறார்.
வள்ளுவர் என்ன சொல்ல வந்தாரோ அவருக்கே வெளிச்சம்!

(நீண்ட நாள் நண்பர் குறித்துப் பிறர்) குற்றம் சொன்னால் அதைக்கேட்காத அளவுக்கு நட்புரிமை கொண்டிருப்பவருக்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
நண்பர் குற்றம் செய்தால் அந்த நாள் குறிப்பிடத்தக்க ஒன்றாகி விடும்
நட்டார் இழுக்கம் செய்யின் நாள் - நண்பர் தவறு செய்தால் அந்த நாள் (...)
(அல்லது)
நட்டார் செய்யின் நாள் இழுக்கம் - நண்பர் (...) செய்தால் அந்த நாள் குறையுள்ளதாகும்
இப்படி ரெண்டையும் கலக்கி, நடுவில் ஒரு பொருள் ("குறிப்பிடத்தக்க" என்று) இட்டிருக்கிறேன்.
பிழை என்றால் என்னோடுள்ள "பழமை" கொண்டு பொறுத்தருள்க

#809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
முந்தைய குறளுக்கு மாறாக, இது புரிந்து கொள்ள மிக எளிதான ஒன்று. நேரடியான, உயர்ந்த கருத்து இங்கே படிக்கிறோம்.
ஓசை நயம் கூட்டுவதற்காக (அல்லது வெண்பாவின் தளை சரியாக அமையவேண்டும் என்பதற்காக) இங்கே அளபெடை - கெடாஅ / விடாஅ - வந்திருக்கிறது.
கெடாஅ வழிவந்த கேண்மையார்
(உரிமை) விட்டு விடாமல் / நீண்ட காலமாக நிலைத்திருக்கும் நண்பர்களுடைய
கேண்மை விடாஅர்
தொடர்பை / நட்பை விட்டு விடாமல் இருப்போரை
உலகு விழையும்
உலகம் விரும்பும்
'பழைய நண்பர்களை விட்டுவிடாமல் இருப்போரையே எல்லோரும் விரும்புவார்கள்' என்ற ஆழ்ந்த / உயர்ந்த நெறி இங்கே படிக்கிறோம்.
ஒரு வேளை அவர்கள் நமக்கு வேண்டாதது செய்திருந்தாலும் அல்லது எளிதில் தொடரமுடியாத தொலைவில் / நிலையில் இருந்தாலும் நட்பை விடாமல் இருக்க வேண்டும்.
தம்முடைய நிலை உயரும்போது பலருக்கும் வரும் குழப்பம் பழங்கால நட்பு / உறவுகளை அக்கறையின்றி விட்டு விடுவது. சில நேரங்களில் தவிர்ப்பதும் நடக்கலாம். அவையெல்லாம் இழிந்த செயல்கள். அப்படிப்பட்டவர்களை விரும்ப இயலாது தானே?
நாம் என்ன விரும்புவோமோ (அதாவது பொதுவாக உலகில் என்ன விரும்பப்படுமோ) அப்படியே ஆக முயல்வோம்.
பழைய நண்பர்களை / நட்பை விடாமல் தொடர்வோம்

#810
விழையார் விழையப்படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியாதார்
"உலகு" என்று முந்தைய குறளில் பொதுவாகச் சொன்ன வள்ளுவர் இங்கே கொஞ்சம் கூடச்சிறப்பாக எழுதுகிறார் - "விழையார் விழையப்படுப" என்று
(விழையார் = பொதுவாக நம்மை விரும்பாதவர்கள், பகைவர்கள் , எதிரிகள்)
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார்
பழைமையான நண்பர்களிடம் நட்பு செலுத்தும் பண்பை விட்டுவிடாதவர்களை
விழையார் விழையப்படுப
பகைவரும் விரும்புவார்கள்
"பிரியாதார்" என்று சொல்வதை வைத்து உரையாசிரியர்கள் அங்கே "என்னமோ தவறு நடந்திருக்கிறது" என்று புரிந்து கொள்வதைக் காணலாம்.
அதாவது, பழைமையான நண்பர் பிழை என்னவோ செய்து அங்கே பிரிவு வரத்தக்க நிலையிலும் பண்பாக நடந்து கொண்டு, நட்புரிமையை விடாமல் இருப்போருக்கு இது மிகவும் பொருத்தம்.
நம்மைப்பிடிக்காதவர்களுக்கு நம்மைப்பிடிக்க வேண்டுமென்றால் நட்பை நாம் பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
விடாப்பிடியனை எதிரிக்கும் பிடிக்கும்

#811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
(பொருட்பால், நட்பியல், தீ நட்பு அதிகாரம்)
"பருகுவார்" - என்ன ஒரு புதுமையான பயன்பாடு
பருகு என்பது பொதுவாக நீர் / சாறு போன்றவை குடிப்பதற்கோ அல்லது உணவு அருந்துவதற்கோ பயன்படுத்தப்படும் சொல். அகராதி சொல்கிறபடி, "மனமகிழ்வு" பெறுதல் (இன்பம் துய்த்தல்) என்றும் இதற்குப்பொருள் கொள்ள முடியும்.
அப்படியாக, இன்ப வெள்ளத்தில் நம்மை ஆழ்த்துவோர், மன மகிழ்வு தரும் வண்ணம் பேசி / உறவாடி அன்பு காட்டுவோர், பழக இனிமையானவர் = "பருகுவார்" !
தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்த செயலலிதா அம்மையார் மறைந்து, செய்திகளின் தலைப்பில் அவரோடு ஆண்டுக்கணக்காய் நெருங்கிய நட்பில் இருந்த தோழி பற்றி எல்லோரும் எழுதும் அதே நேரத்தில் நாமும் இங்கே நட்பியல் படித்துக்கொண்டிருப்பது வேடிக்கை தான்
இப்படிப்பட்ட "தலைப்புச்செய்தி - திருக்குறள் தொடர்பு" அடிக்கடி வந்து வியப்பளிக்கிறது
(நாம் மேற்சொன்ன நட்பு, தோழியர் இருவருக்கும் - மற்றும் பிறர்க்கும் - நல்லதற்கா / தீமைக்கா என்று நாமறியோம். பேசாமல் நம்முடைய வேலையை / படிப்பைப் பார்ப்போம் )
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
மனமகிழ்வு தருபவர்கள் போல இருந்தாலும் நல்ல பண்பில்லாதவர்களுடைய நட்பு
பெருகலிற் குன்றல் இனிது
பெருகுவதை விடக் குறைவது தான் நன்மையானது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum