குறள் இன்பம் - #1 - #948
+3
fring151
Usha
V_S
7 posters
Page 6 of 40
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
Re: குறள் இன்பம் - #1 - #948
#113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
கொஞ்சம் குழப்பமான குறள்
"நன்றே" என்று பொதுவாகச் சொல்லி இருப்பது தான் குழப்பத்துக்குக் காரணம். 'யாருக்கு நல்லது', 'எதனால் நல்லது', 'எப்படி நடுநிலை இல்லாமல் வரும் செல்வம் நன்று தரும்' என்றெல்லாம் கேள்விகள் எழும்புவது இயல்பு.
இந்த சமயத்தில் "புரை தீர்ந்த நன்மை" என்று வேறொரு குறளில் வள்ளுவர் பொய்மை குறித்துச் சொல்லுவது நினைவுக்கு வருவதும் தவிர்க்க இயலாதது.
இங்கே அப்படித்தான் அவர் சொல்வதாகச்சில உரையாசிரியர்கள் எழுதுவதைக் காண முடியும் ("யாருக்கும் தீங்கு தராத நன்மை").
என்ற போதிலும், என்னைப் பொருத்தவரையில் அது "உயிரே போனாலும்" என்பது போன்ற ஒரு சொல்லாடல் என்றே கொள்வேன்
நடுவிகந்தாம் ஆக்கத்தை
நடுநிலை தவறி வரும் செல்வத்தை / பயனை
நன்றே தரினும்
நன்மை தருவதாகவே இருந்தாலும்
அன்றே யொழிய விடல்
ஏற்கலாகாது!
உடனே (வரும் நாளிலேயே) அதைத் தவிர்த்து (ஒழித்து) விட வேண்டும்!
பொதுவாக எல்லோருக்கும் நல்ல அறிவுரை என்றாலும், நீதிபதிகளுக்கு மிகவும் உகந்த ஒரு குறள்!

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: குறள் இன்பம் - #1 - #948
#114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
எச்சம் என்பதற்கு வழித்தோன்றல்கள் / எஞ்சி இருக்கும் குடும்பத்தவர் என்று முன்னொரு குறளில் கண்டோம். இங்கும் அதே பொருள் கொள்வது பொருத்தமே.
மாறாக, மு.வ. உரையில் சொல்லுவது போல, "எஞ்சி நிற்கும் புகழ் அல்லது பழி" என்று கொண்டாலும் பொருத்தமாகவே இருக்கிறது.
தக்கார் தகவிலர் என்பது
ஒருவர் நடுவு நிலைமை உள்ளவராக வாழ்ந்தாரா இல்லையா என்பது (அதாவது "நடுநிலைமை உள்ளவர்" என்ற பட்டத்துக்குத் தகுதியானவரா இல்லையா என்பது)
அவரவர் எச்சத்தாற் காணப் படும்
அவரவர் என்ன விட்டுச்சென்றார் என்பதிலிருந்து வெளிப்படையாகத் தெரியும்! (நல்ல பிள்ளைகளா இல்லையா / புகழா அல்லது பழியா)
நடுவு நிலைமை அதிகாரத்தில் உள்ளதால் நாம் அந்தப் பண்புக்கு என்று கொள்கிறோம்.
மற்றபடி, இந்தக்குறள் வேறு பல பண்புகளுக்கும் "தக்கார் / தகவிலார்" என்ற அளவில் பொருந்தும் ஒரு பொது நீதி!
(எடுத்துக்காட்டு : விருந்தோம்பல்)

#115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
"சூழ்நிலைக்கைதி" என்ற ஒரு சொல் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு.
சில நேரங்களில் அது முழுக்க முழுக்க உண்மை என்றாலும், வேறு சில தருணங்களில் முதுகெலும்பில்லாதவர்கள் இதை ஒரு கேடயமாகக் கொள்வதைக் காண முடியும்.
தெளிவாக, நேர்மையாக ஒரு நிலை எடுப்பதற்கு மாறாக "என்னால் என்ன செய்ய முடியும், நிலைமை அப்படி" என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள - அல்லது சமாளிக்க - முயலும் கோழைகளுக்கு இந்தக்குறள் ஒரு சம்மட்டி அடி!
கேடும் பெருக்கமும் இல்லல்ல
கேடான நிலையும் மேன்மையான நிலையும் ஒருவருக்கு வருதல் இயல்பே (இத்தகைய மாற்றான நிலைகள், உலகில் இல்லாத விந்தை ஒன்றும் கிடையாது!)
நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி
(என்ற போதிலும், எத்தகைய நிலையிலும் - அதாவது வாழ்விலும் தாழ்விலும்) நெஞ்சத்தில் நேர்மை தவறாது இருத்தல் தான் சான்றோர்க்கு அழகு!
நெஞ்சத்தின் நேர்மையை சுற்றுச்சூழல் தாக்கி மாற்றும் படி விட்டு விடாதீர்கள்!

#116
கெடுவல்யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்
மிக நேரடியான, குழப்பமில்லாத குறள்!
இதில் என்னைக்கவருவது என்னவென்றால், மீண்டும் வள்ளுவர் நெஞ்சத்தின் நிலையைப்பற்றி எழுதுவது!
வெளிப்படையாக ஒருவர் நடுவு நிலையில் செயல்படுகிறாரா இல்லையா என்பதற்கும் அப்பால் "தன் உள்ளத்தில் என்ன நினைக்கிறார்" என்பதை உன்னிப்பாகப் பார்ப்பதால் சிறந்து விளங்கும் இன்னொரு குறள்!
தன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்
தன் நெஞ்சத்தில் நடுநிலைமை இல்லாத ஒன்றைச் செய்ய நினைக்கும் தருணத்திலேயே
கெடுவல்யான் என்பது அறிக
(இத்தகைய செயல்) தன்னை அழிவுக்கு வழிநடத்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!
நெஞ்சத்தின் எண்ணங்கள் ஒருவரது பேச்சு மற்றும் செயல்களில் விளைவடையும் என்பது தெரிந்ததே.
அதனால், நெஞ்சத்துக்கு முதலில் கடிவாளம் தேவை!

#117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
நேர்மையாக நடப்போருக்குப் பொருள் அளவில் குறைபாடுகள் வரலாம் என்பதை ஒத்துக்கொள்ளும் குறள்
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
சரியான நடுநிலையில் வாழும் ஒருவனுக்குப் பொருள் அளவில் தாழ்வு (வறுமை) வந்தால்
உலகம் கெடுவாக வையாது
அந்த நிலையை உலகம் "கேடு" என்று இகழாது!
இங்கே சொல்லப்படும் உலகு, நல்லோர் அடங்கிய நல்லுலகு என்றே நாம் கொள்ள வேண்டும். கண்டிப்பாக, அத்தகையோர் நேர்மையான சான்றோரை -இப்படி ஒரு நிலையை அடைந்து விட்டாலும் - மதிப்பரே தவிர இகழ மாட்டார்கள்!
ஆனால், பொதுவான உலகில் இன்று அவ்வித மனநிலை இல்லை என்பது தெரிந்ததே
என்றாலும், "பெரிய நேர்மையாய் இருந்தானாம், இப்போ கஞ்சிக்கே வழி இல்லை பாரு" என்று இகழும்போதும், அத்தகைய தீய உலகில் உள்ளோரும், மனதுக்குள் "என்ன ஒரு வியக்கத்தக்க வாழ்வு வாழ்ந்திருக்கிறார், என்னாலெல்லாம் இப்படி முடியவில்லையே" என்று ஆதங்கப்பட்டு மெச்சுவார்கள் என்பது தான் உண்மை!

#118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
தமிழ் படித்த பலருக்கும் நன்கு பழக்கப்பட்ட குறள்!
நீதி மன்றத்தில் இருக்கும் "கண்ணில் கருப்புத்துணி கட்டி மறைத்த சிலை" நினைவுக்கு வருவது இயல்பே.
(நேரடியாக நீதிமன்றத்தில் சென்று பார்க்காதவர்களும் ஒளிப்படங்களில் பார்த்திருக்கலாம். இல்லாவிட்டாலும் கண்டிப்பாகத் திரைப்படங்களில் பார்த்தே இருப்பார்கள் )
அந்தச்சிலையின் கையில் பிடித்திருக்கும் துலாக்கோல் (தராசு) தான் இந்தக்குறளின் உவமை
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்து
தான் சமமாக நின்று, தன்மீது வைக்கும் பொருளை (எடைக்கல்லோடு) ஒப்பிடும் துலாக்கோல் போல அமைந்து
ஒருபால் கோடாமை சான்றோர்க் கணி
ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல் (நடுநிலையுடன்) செயல்படுவது சான்றோர்க்கு அழகு!
மின்னணு எடை இயந்திரங்கள் எங்கும் பரவி வருவதால் இத்தகைய கோல்கள் கொஞ்ச நாளில் காணாமல் போய்விட வழியுண்டு.
எங்காவது அழகான ஒன்று கிடைத்தால் வாங்கி அலங்காரப்பொருளாக வைத்து, அது காட்டும் நடுநிலை அறிவுரையையும் நினைவில் வைப்பது சிறப்பாக இருக்கும்!

#119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
செப்பம் - என்ன ஒரு அழகான சொல்!
செம்மை என்று இதற்குப்பொருள் சொல்கிறது அகராதி! "செப்பனிடுதல்" என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒரு பயன்பாடு.
செப்பம் என்ற சொல்லை இங்கே "செம்மையான நடுநிலை" என்ற அளவில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்!
ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்
மனதின் உள்ளே ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து விடும் கோட்டமான (கோணலான, நேர்மையற்ற) நிலைமை இல்லாதிருப்பதோடு
சொற்கோட்டம் இல்லது செப்பம்
சொற்களிலும் (ஒரு பக்கம் சாயும்) கோணலான நிலை இல்லாதிருப்பது தான் செம்மை!
இதன் முதல் பகுதிக்கு இன்னொரு விளக்கமும் பொருத்தமானதே. அதாவது, "மனதில் கோட்டம் இல்லாமல் இருந்தால், சொற்கோட்டம் வராது" என்றும் விளக்கலாம்.
அது விளக்கம் என்பதற்கும் அப்பால், உண்மையும் தான்

#120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
அறத்துப்பாலில் திடீரென்று பொருட்பால் வருவது போல் தோற்றம் - வாணிகம் பற்றிய குறள் ஏன் "நடுவு நிலைமை" அதிகாரத்தில் என்று எண்ண வைக்கிறது.
என்றாலும், இதன் உள்ளே பொதிந்திருக்கும் மனநிலையின் மீது நம் சிந்தனையை ஒருமுகப்படுத்தலாம்.
"பிறவும் தமபோல்" என்ற உயரிய கருத்தில், தன்னலமில்லாது, தனக்கு வேண்டிய பக்கத்தில் சாராது வாழும் பொது நெறி காண்கிறோம்.
வாணிகம் என்பது வெறுமென ஒரு "சூழல்" என்று மட்டும் கொண்டு, இந்த அறநெறி படிப்பது தான் வள்ளுவரின் நோக்கம் என்றே புரிந்துகொள்ளவேண்டும்!
பேணிப்பிறவும் தமபோல் செயின்
மற்றவர் பொருளையும் தமது போலப் பேணிப் போற்றுதல் தான்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம்
வணிகருக்கு நல்ல வாணிக முறை!
மொத்தத்தில் "ஒரு பக்கம் சாராமல் எல்லோரது உடைமைகளையும் பாதுகாத்தல்" என்பது மிக உயரிய பண்பு, நெறி!

#121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
(அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை அதிகாரம்)
தெரிந்த குறள் என்றாலும் புதிதாய்ச் சிலவற்றைக் கற்க வாய்ப்பிருக்கிறது.
பொதுவான பொருள் புரிதல் எளிதே : "அடக்கம் ஒருவரை உயர்த்தும், அடக்கமின்மை தாழ்த்தும்".
என்றாலும், "அமரர், உய்த்தல், ஆரிருள்" என்ற சொற்களுக்கு உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் தத்தம் நம்பிக்கைகளின் அடிப்படையில் பொருள் சொல்வதைப் பார்க்க இயலும்
மர் / மரர் / மரித்தல் / மரணம் என்ற சொல்லின் தொடக்கம் தமிழா வடமொழியா என்ற ஆய்வு இந்த இழையின் நோக்கமல்ல முதல் குறளிலேயே ஆதியும் பகவனும் இருப்பதைக் கண்டிருக்கிறோம் அல்லவா?
அமரர் = இறப்பில்லாதவர்!
(ஆங்கிலம் உட்படப்பல மொழிகளிலும் இப்படி "அ" முன்னால் சேர்த்து எதிர்ப்பதம் ஆக்குவது கவனிக்கத்தக்க ஒன்று)
பொதுவான இந்தியத்தொன்மையின் அடிப்படையில் இதை "தேவர்கள்" என்று சிலர் பெயர்க்கிறார்கள். மு.க. அவரது நம்பிக்கைப்படி, "அழியாப்புகழ்" (ஆள் இறப்பான், புகழ் இறக்காது) என்று சொல்லுகிறார்.
'உய்த்தல்' என்பதும் அதே அடிப்படையில் (புகழ்) கொடுக்கும் என்றோ (வானுலகில்) கொண்டு சேர்க்கும் என்றோ சொல்லப்படுகிறது. (தப்பிப்பிழைத்தல் என்ற பொருள் நாம் முன்னமேயே பார்த்தது தான்).
அதே போல 'ஆரிருள்' என்பது இருண்ட வாழ்வு என்றும் நரகம் என்றும் பொருள் சொல்லப்படுவதைக் காணலாம்.
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடக்கம் ஒருவருக்கு இறப்பில்லாத வாழ்வு தரும்
அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
அடக்கம் இல்லாமை என்றென்றும் இருளுக்குள் தள்ளி விடும்!
(இறப்பை உறக்கத்துடன் ஒப்பிடுவதுண்டு. நீண்ட உறக்கம், ஆரிருள் தானே!)

#122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு
உவமையையும் விடக்கூடுதல் வலிமையாக ஒப்பிடுவது தான் உருவகம். முன்னதில் "போல" என்ற ஒப்பீடு இருக்கும். உருவகத்திலோ அதுவும் இல்லாமல், ரெண்டும் ஒன்றே என்ற நிலையில் இருக்கும்.
இங்கு அடக்கத்துக்கு வள்ளுவர் உருவகம் தருவதைக்காணலாம். அதிலும் வேடிக்கை என்ன என்றால், அவரே அந்த வேலையைச் செய்யாமல், உருவகப்படுத்தும் வேலையை நம்மிடம் தருகிறார்
"அடக்கத்தைப் பணம் என்றே கருதுங்கள்" என்று அழகாகச் சொல்லுகிறார்!
காக்க பொருளா அடக்கத்தை
அடக்கம் என்னும் நற்பண்பைப் பொருட்செல்வம் போல் எண்ணிக்காப்பற்றுங்கள்!
ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு
ஒருத்தருக்கு அதை விடவும் பெரிய செல்வம் (ஆக்கம்) இல்லை!
என் தனிக்கருத்துப்படி, பொருட்செல்வம் ஒருக்காலும் நற்பண்புகளுடன் ஒப்பிடத் தகுதி இல்லாதது. "தங்கம் மாதிரிக்குணம்" என்று சொல்வதைக் கேட்கும்போதெல்லாம், ஒப்பீடு தான் என்றாலும், கொஞ்சம் சினம் வரும்.
அதனால், "அடக்கத்தை விடப் பெரிய ஆக்கம் இல்லை" என்று சொல்லும் அளவில் இந்தக்குறளை மதிக்கலாம்!

#123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
அடக்கத்தோடு வாழ்பவருக்கு வரும் சிறப்பை எழுதியிருக்கிறார் வள்ளுவர்!
அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்
அறிவைப்பெற்று சரியான நெறியில் அடக்கத்துடன் விளங்கினால்
செறிவறிந்து சீர்மை பயக்கும்
(அந்த நல்ல தன்மையின்) நிறைவை எல்லோரும் உணர்வதால், ஒருவருக்கு மேன்மை கிடைக்கும்!
"அறிவறிந்து" என்பதை இன்னொரு விதத்திலும் விளக்கலாம்.
"தன்னால் இன்னின்னது முடியும்" என்ற அறிவு
அதாவது, அளவுக்கு மிஞ்சி ஒரு ஆள் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டால் அது ஒரு வகையான "அடக்கமின்மை".
அப்படிப்பார்த்தால், அறிவறிந்து = "நான் இன்று, இந்தப்பொழுதில், இன்ன நிலையில் தான் இருக்கிறேன் என்று அறிவது"

#124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
"தோற்றம்" என்ற சொல்லுக்கு இரு விதமான உரைகளைக் காண முடிகிறது.
"உயர்வு" என்று பல உரைகளும் கூறுகின்றன. "மற்றவர்கள் மனதில் உருவாகும் தோற்றம்" என்றும் உரை எழுதி இருக்கிறார்கள். இரண்டும் பொருத்தமானதே
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
தன் நெறியில் மாறாமல் அடக்கத்துடன் உள்ளவனின் உயர்வு (அல்லது அவர் பற்றிய மற்றவரது அளவீடு)
மலையினும் மாணப் பெரிது
மலையை விடவும் மிகவும் பெரியது!
கவனிக்கத்தக்க ஒரு கேள்வி - எப்போது இந்த "நிலையில் மாறாத அடக்கத்தன்மை" தென்பட வேண்டும்?
வாழ்வுச்சூழலில் பெரும் மாற்றங்கள் வரும் போது! குறிப்பாகப் பொருள் உயர்வு / தாழ்வு மனிதரின் அடக்கத்தில் பெரும் மாற்றங்கள் செய்ய இயலும். அதே போல் தான் புகழும்!
அவ்வித நிலை மாற்றங்கள் வரும்போது அடக்க நெறியில் பிறழாமல் இருப்பவன் மலையினும் பெரியவன் தானே!

#125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
செல்வம் - இந்தச்சொல்லுக்கு அகராதி தரும் பொருள்களில் ஒன்று "கல்வி அல்லாதது"
பொருள், பணம் என்றெல்லாம் பொதுவாக வரையறுக்கலாம். (கல்விச்செல்வம், செவிச்செல்வம், பிள்ளைச்செல்வம் போன்ற உருவகங்களோடு குழப்பிக்கொள்ளக் கூடாது).
இந்தக்குறளில் வரும் இன்னொன்று, அடக்கம் = பணிதல்!
வேறு சொற்களில் சொன்னால், மற்றவர்களை நம்மிலும் உயர்ந்தவர்களாக - அதாவது, என்னவோ ஒன்றில் சிறந்தவர்களாகக் கருதி - மதிப்புக்கொடுத்தல்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
அடக்கமாக இருப்பது எல்லோருக்குமே நல்லது!
அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து
அதிலும் குறிப்பாக, செல்வந்தர்களிடம் இருக்கும் அடக்கம் அவர்களுக்கு இன்னுமொரு செல்வமாய் விளங்கும்!
செல்வத்தைப் பெருக்க என்ன ஒரு எளிய வழி!

#126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
ஐந்தடக்கல் முன்னமேயே நாம் கண்ட, படித்த ஒன்று. (ஐந்து புலன்களையும் அடக்கி ஆளுதல்).
எழுமை என்பதும் முன்பே கண்டதே. "ஏழு முறை மறுபடி மறுபடி பிறவி எடுத்தல்" என்ற நம்பிக்கை வள்ளுவர் காலத்தில் இருந்த பொதுச்சிந்தனை. அதை அவர் அங்கங்கே உட்படுத்தி இருக்கிறார்.
இந்தக்குறளில் நாம் புதிதாய்ப் படிக்கும் சொல் "ஏமாப்பு"
அதன் பொருள், பாதுகாப்பு / அரண் என்பதாக அகராதி சொல்லுகிறது
நாம் காணும் இன்னொன்று, அடக்கத்துக்கு ஆமையை உவமையாக்குதல். (தன் கூட்டுக்குள்ளே அடங்குவதன் மூலம் பாதுகாப்புக் காணும் ஒரு உயிரி!)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஒரு பிறவியில் ஆமை கூட்டில் அடங்குவது போல் ஐந்து புலன்களையும் அடக்கியாண்டால்
எழுமையும் ஏமாப்புடைத்து
ஏழு பிறவியிலும் அது பாதுகாப்பைத் தரும்!

#127
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
ஐம்புலன்களில் மிகவும் வலிமை வாய்ந்தது என்ன என நமக்கு அறியத்தரும் குறள்!
நாக்கு (வாய்) தான் அது!
மனிதர்களின் வெளித்தொடர்புக்கான உடல் உறுப்புகளில், உள்வாங்குவது மட்டுமல்லாமல் பேரளவில் "வெளியில் விடும்" உறுப்பு இது தான். (காது / மூக்குக்கு இந்தத் திறன் இல்லை, கண்ணுக்கு ஓரளவு உண்டு, நவீன உலகில் மற்ற உடல் உறுப்புகள் - குறிப்பாகக் கை - கொண்டு எழுதி / தட்டச்சு செய்து தகவல் வெளியிடலாம். எனினும், அடிப்படையான விதத்தில் நாவுக்கு ஈடு இணை இல்லை)
அதனாலேயே இதனைக் கட்டுப்படுத்துவது கூடுதல் தேவை ஆகிறது!
தமிழ் படித்த எல்லோருக்கும் நன்கு அறிமுகம் என்றாலும் எல்லாச்சொற்களுக்கும் பொருள் தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை.
எடுத்துக்காட்டாக, "சோகாப்பர்" என்றால் என்ன பொருள்?
இதன் அடிப்படைச்சொல் "சோகா" அல்லது "சோகாப்பு". இதற்கு அகராதி தரும் பொருள் "துன்பம்". அப்படியாக, "சோகாப்பர்" என்பதன் பொருள், "துன்புறுவர், துன்பத்துக்குள்ளாவர்" என்பதாகும்.
யாகாவாராயினும் நாகாக்க
வேறு எதை அடக்காவிட்டாலும் நாவை (பேச்சை) அடக்க வேண்டும்
காவாக்கால்
அப்படி அடக்காவிட்டால் (அடக்கமில்லாமல் பேசிக்கொண்டிருந்தால்)
சொல்லிழுக்குப் பட்டு சோகாப்பர்
சொற்களின் குற்றத்தில் அகப்பட்டுத் துன்பத்துக்குள்ளாவார்கள்!

#128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகாதாகி விடும்
நாவடக்கம் பற்றிய இன்னுமொரு குறள்!
"ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல்" என்று மு.க. இதற்கு அழகாக உரை எழுதுகிறார்!
நிறைய நல்ல அறங்கள் செய்பவரும் ஒரே ஒரு தகாத சொல் வழியாகத் தன் நற்பெயர் எல்லாம் இழப்பது எவ்வளவு துயரமான நிலை!
தீச்சொல் ஒன்றானும்
ஒரே ஒரு தீமையான சொல் தான் என்றாலும்
பொருட்பயன் உண்டாயின்
அதன் பொருட்டுத் தீய விளைவு உண்டாகும் என்றால்
நன்றாகாதாகி விடும்
(ஏற்கனவே செய்திருக்கும்) நன்மைகள் இல்லாமல் போய் விடும்!
நாவைச் சரியான விதத்தில் அடக்கியாள வேண்டியதன் தேவையை வள்ளுவர் மீண்டும் வலியுறுத்துவது கவனிக்கத்தக்க ஒன்று!
நேரடி வாழ்வில் நானே கண்ட உண்மை இது! எத்தனையோ உதவிகளும் நன்மைகளும் செய்தாலும் ஒரே ஒரு கடுஞ்சொல் வழியாக எல்லா மதிப்பையும் இழந்து போனவர்கள் உண்டு!
பைபிள் : சிறிதளவு நெருப்பு காட்டையே கொளுத்த வல்லது - நாவும் நெருப்புத்தான்!

#129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
ஆறுவது / மாறுவது புண்.
மாறாமல் நிற்பது வடு.
இதை வைத்துக்கொண்டு வள்ளுவர் சொல் விளையாட்டு நடத்தி இருக்கும் குறள், பலருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்
தீ சுடுவதால் வரும் புண் உள்ளே ஆறிவிடும். (வெளியில் வடு எப்போதும் இருந்தாலும், உள்ளே வலி இருக்காது)
ஆறாதே நாவினாற் சுட்ட வடு
நாவில் இருந்து வரும் பேச்சால் பட்ட புண், உள்ளே இருந்து எப்போதும் வலித்துக்கொண்டே இருக்கும்! (மாறாத வடு போல).
ஆறிவிடும் தீச்சூட்டை வள்ளுவர் புண் என்றும் ஆறாத நாச்சூட்டை வடு என்றும் அடையாளப்படுத்துவது அழகு!
இந்தக்குறளையும் சேர்த்து மூன்று தொடர்ந்த செய்யுள்கள் நாவடக்கம் பற்றி வருவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு விதத்தில் பார்த்தால், நாவினை அடக்க வேண்டி வள்ளுவர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தும் "தொப்பிச்சூது"

#130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
இரண்டு புதிய சொற்கள் படிக்கிறேன் இந்தக்குறள் வழியாக!
கதம் = கோபம், சினம்
செவ்வி = காலம் (ஏற்ற காலம் / தக்க தருணம்)
என்ன அழகான சொற்கள்!
இவையெல்லாம் நாம் நாள்தோறும் பயன்படுத்தாமல் ஆங்கிலமோ வடமொழியோ கொண்டு இனிமை இழந்து திரிகிறோமே என்று மெலிதான வருத்தம் வருகிறது
கதங்காத்துக்கற்று
சினத்தை அடக்கி, கல்வியில் தேர்ந்து
அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அடக்கம் என்னும் பண்போடு நடப்பவனைக் காணும் தக்க காலத்துக்காக
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
அறம் அவன் வரும் வழியில் நுழைந்து விழி வைத்துக்காத்திருக்கும்!
என்ன அழகான கவிதை!
அறத்தை இங்கு பெண்ணாக உருவகப்படுத்துகிறார் என்றே சொல்லலாம்!
அடக்கமுள்ளவனின் வழியில் அறமெனும் அழகி காத்திருப்பாள்!

#131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
(அறத்துப்பால், ஒழுக்கமுடைமை அதிகாரம்)
ஒழுக்கம் என்றால் என்ன?
ஒழுகு என்ற சொல்லில் இருந்து வருகிறது. செல், நட என்று அதன் பொருள்.
அப்படியாக, "ஒழுக்கம்" = "நடப்பு / நடத்தை / நடக்கும் முறை".
பொதுவாக, நல்நடத்தை என்று கொள்ளலாம்!
(அதாவது, ஒழுக்கம் = நல்லொழுக்கம்! தீயொழுக்கம் என்று சொல்லாத வரை அது நல்ல நடத்தை என்றே பொருள் கொள்ளப்படும் ).
சரி, அப்போ விழுப்பம் என்றால்?
விழுமம் (சிறப்பு) என்றும் நன்மை என்றும் இரண்டு விதத்திலும் நேர்மறையான பொருள் தரும் ஒரு அழகிய சொல்!
ஒழுக்கம் விழுப்பந் தரலான்
ஒழுக்கம் (நல்ல நடத்தை) சிறப்பு (மற்றும் நன்மை) தருகிறது. எனவே,
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் உயிரை விட மேலாகப் போற்றப்படும்!
"உயிரை விட மேலானது" என்று சொல்லுவதை விடக்கூடுதலாக எதையும் உயர்த்திச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!
அவ்வளவு உயர்ந்தது!

#132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
பரிந்து என்பதற்குச் சில உரைகள் "வருந்தியும்" என்று சொல்லுகின்றன. நமக்கு நன்கு தெரிந்த பொருள் "சார்பாக(ப் பேசுதல்)" என்பதே.
"தேரினும்" என்பது நாள்தோறும் உள்ள உரையாடல்களில் அதிகம் வராத சொல் என்றாலும், "தேர்தல், தேர்ந்தெடுத்தல்" என்பவை நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் இணைச்சொற்கள் தாம்!
ஆக, இந்தக்குறளின் பொருள் கண்டுபிடித்தல் கடினம் ஒன்றுமில்லை!
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்
நல்ல நடத்தையை விரும்பிப்போற்றி வலியுறுத்திக் காத்துக்கொள்ள வேண்டும்!
தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை
(ஏனென்றால், பல வழிகளைத்) தேடித் தேர்ந்தெடுத்துப் புரிந்து போற்றினாலும், ஒழுக்கம் தான் நமக்குத்துணை!
மொத்தத்தில், ஒருத்தருக்கு இருக்கும் பல தெரிவுகளிலும் நல்நடத்தை என்பதே சிறந்த தேர்வு என்று சொல்கிறார் வள்ளுவர்!

#133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
குடிமை, இழிந்த பிறப்பு போன்ற பயன்பாடுகள் "வருண"த்தைத் தாங்குவதாகப் பரிமேலழகர் உரை சொல்லுவதைக் காணமுடியும். மற்ற உரைகளும் குலம் / குடிப்பிறப்பு என்கிற விதத்தில் செல்லுகின்றன.
வியப்பொன்றுமில்லை, வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த (சரி சரி , பெரிய அளவில் இன்றும் நடைமுறையிலும், அரசுப்படிவங்களிலும் இருக்கின்ற) பிறப்பு அடிப்படையிலான உயர்வு / இழிவு படுத்தல்கள் இந்தக்குறளில் எதிரொலிக்கின்றன என்று கொள்ளலாம்.
ஆதலினால், இந்தக்குறளை என் கருத்தைக்கொண்டு விளக்க முயலப்போவதில்லை. (அதாவது, பிறப்பால் அல்ல ஒருவர் உயர்வா இழிவா என்று சொல்வது, இறக்கையில் அவர் விட்டுச்செல்லும் பெயர் தான் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்பது என் கட்சி).
நேரடியான பொருள் மட்டும் பார்ப்போம்...
ஒழுக்கம் உடைமை குடிமை
நல்ல நடத்தை உள்ளவர் தான் உயர்ந்த குடியில் உள்ளவர்
இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்
ஒழுக்கம் தவறுவோர் இழிவான குடியில் பிறந்தவர்களாகி விடுவார்கள்

#134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
மணக்குடவர் அழகாகச் சொல்வது போல், கல்வியை விட ஒழுக்கம் உயர்ந்தது என்று வலியுறுத்தும் குறள்
அப்படியாக, இது வேதம் ஓதும் கல்வி குறித்தது என்றாலும் ("ஓத்து = வேதம் கற்பிக்கும் இடம்" & "பார்ப்பான் = அந்தணன் / பிராமணன்") பெரிய அளவில் பார்த்தால் எல்லாக்கல்விக்கும் பொருந்தும்.
அந்த வழியாக, எல்லா மனிதருக்கும் ("வேதம் ஓத" என்று முற்காலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்ட பார்ப்பனர் மட்டுமல்ல, அல்லாதோருக்கும்) கல்வி - ஒழுக்கம் பற்றிய ஒப்பீடு பொருத்தமானது. குறிப்பாக, இன்றைய சூழ்நிலையில்!
பார்ப்பான் மறப்பினும் ஓத்துக் கொளலாகும்
(படித்த வேதச்சொற்களை) ஓதுபவன் மறந்து போனாலும் மீண்டும் பள்ளியில் கற்றுக்கொள்ள இயலும்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
ஆனால், நடத்தை கெட்டுப்போனால் பிறப்புக்கே இழுக்காய் மாறும்!
நெறி தவறாமல் வாழுதல் கல்வியிலும் மேன்மையானது!

#135
அழுக்காறுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கமிலான்கண் உயர்வு
அழுக்காறு - அந்தக்காலத்திலிருந்தே எனக்கு மிகவும் வேடிக்கையாகத் தோன்றும் ஒரு சொல்
"பொறாமை" (அசூயை) என்று அதன் பொருள். "மனதில் அழுக்கு ஆறு போல் ஓடுகிறது" என்று அந்தச்சொல்லுக்கு விளக்கமோ என்னவோ
மணக்குடவர் உரை அழுக்காறு என்பதை "மனக்கோட்டம்" என்று சொல்லுகிறது. அதுவும் அருமை தான்
அந்த ஒரு சொல்லுக்குப் பொருள் தெரிந்தால் போதும் இந்தக்குறளை விளங்கிக்கொள்ள!
அழுக்காறுடையான்கண் ஆக்கம்போன்று
பொறாமை பிடித்தவனிடத்தில் எப்படி செல்வம் சேராதோ அது போல
ஒழுக்கமிலான்கண் உயர்வு இல்லை
நல்ல நடத்தை இல்லாதவனுக்கு வாழ்வில் உயர்ந்த நிலை இருக்கவே இருக்காது!

#136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கறிந்து
நிறைய அருஞ்சொற்கள் இருப்பதால், இந்தக்குறளைப் படிக்க முயற்சி தேவை
முதலில் யார் இந்த "ஒல்கார்"?
ஒல்குதல் = தளர்தல், பின்வாங்குதல் என்று அகராதி சொல்கிறது. ஆகவே, "ஒழுக்கத்தின் ஒல்கார்" = (ஒரு போதும்) ஒழுக்கத்தில் தளராதவர்.
அடுத்து, "ஏதம்" என்றால் என்ன?
ஏதம் = குற்றம், அப்படியாக ஏதம் படுதல் என்பது "குற்றத்துக்கு உள்ளாதல்" என்று பொருள் படும்.
இறுதியாக, என்ன அது "பாக்கு"? (கண்டிப்பாக வெற்றிலையோடு மெல்லுவது அல்ல)
பாக்கு = எதிர்கால வினையெச்ச விகுதி என்று நிகண்டு சொல்லுகிறது. அவ்வளவே
அப்படியாக, இந்தக்குறளின் பொருள்:
இழுக்கத்தின் ஏதம் படுபாக்கறிந்து
நல்ல நடத்தை இல்லாவிடில் குற்றத்துக்கு உள்ளாகிவிடும் அபாயம் இருப்பதை அறிந்து
உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார்
(மன) உறுதியுடைவர்கள் ஒழுக்கத்தில் தளர / தவற மாட்டார்கள்!
குற்றம் வருமே என்ற அச்சத்தினாலாவது ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று இந்தக்குறள் சொல்லுவதாகவும் கொள்ளலாம்

#137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
"போகாத ஊருக்கு வழி" என்ற ஒரு சொல்லாடல் நாம் அடிக்கடி கேட்கும் ஒன்று. அந்தக்குரலில் ("எய்தாப் பழி") சொல்லப்பட்டுள்ள குறள் - பலருக்கும் நன்கு அறிமுகமான ஒரு செய்யுள் இது.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
நல்ல நடத்தையால் மேன்மையை அடைவார்கள்!
இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி
தீய நடத்தையாலோ? வேண்டாத பழியையே அடைய நேரிடும்!
நேரடியாக, எளிதாகச் சொல்லப்படும் அறிவுரை!
"எதிர்மறை இரண்டடி" வகையான செய்யுள் என்பதன் அடிப்படையில், பழிக்கு "கீழ்மை" என்ற பொருளும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum