Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

+3
Usha
ravinat
app_engine
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Mar 13, 2018 5:16 pm

#37 சொக்கனுக்கு ஆசப்பட்டு (அண்ணனுக்கு ஜே, சித்ராவுடன் டூயட்)

Reading the first line didn't automatically bring the melody in my mind Embarassed  

That means either I've not heard the song before or even if I'd heard it earlier, it didn't register enough.

I think the possibility of such a sweet themmAngu melody (especially saraNam is simply awesome) not registering in my mind is quite remote (unless it was while travelling with some other horrible thing preoccupied in the mind).

So, the more probable option is I've really never heard this one before Sad Well, better late than never - what a lovely song!

GA had penned the lines and I could locate the lyrics in that "gangaikkarai thOttam" blog and added the missing "vallina oRRezhuththukkaL" Wink

https://www.youtube.com/watch?v=9MfZM5y1XfA


பல்லவி :

சொக்கனுக்கு ஆசப்பட்டுச் சொக்கி நிக்கும் மீனாட்சி நான்
கந்தனுக்கு வாக்கப்படச் சொந்தமுள்ள தெய்வான நான்
எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்
எப்பத்தான் கை ஒன்னு சேரும்

சரணம் 1:

காத்திருந்தேன் பல கனவு கண்டேன் வழி
பாத்திருந்தேன் நானும் ரொம்ப நாளா
ஆசைப்படித் தேடி வந்தான் என் ராசா
வாழ ஒரு வாக்குத் தந்தான் என் ராசா
சொல்லாத ஆச ஒன்னு உள்ளுக்குள்ள பூட்டி வச்சேன்
கல்யாண மாலை ரெண்டு இப்பொழுதும் கட்டி வச்சேன்
ஒன்னோடொன்னு சேத்து வைக்கும் கன்னி பூஜ தான்
ஈடேறத்தான் வேணுமம்மா இந்த ஆசைதான்

சரணம் 2:

வாழ்ந்து வந்தேன் நான் அவனுடனே
இந்த மனசுக்குள்ள சேந்திருந்தேன் நானே
தனி மரமாய் வாழ்ந்திருந்தேன் நாந்தானே
துணையெனவே தேவியென்னைச் சேந்தானே
காதலுக்கு பேதமில்ல கற்பனைக்கு வேலியில்ல
கட்டழகு மாமா வந்து கட்டவேணும் தாலி ஒன்னு
ஒன்னாலதான் ஆகுமம்மா ஒன்னாச் சேக்கத்தான்
ஒன்னாகத்தான் வாழ்ந்திருப்போம் அம்மா பாக்கத்தான்

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Mar 14, 2018 9:24 pm

#38 இனிமேல நல்ல நேரந்தான் (பொன்மனச்செல்வன், மலேசியா வாசுதேவனுடன் டூயட்)

Most of us regulars in this forum are aware of how IR's saraNams are often superior to the "catchy" pallavi melodies.  Also, we often appreciate his "connectors" - how he concludes an interlude with a terrific syllable to connect to saraNam melody or how he ends a saraNam (often in an unexpected fashion) and connect back to pallavi brilliantly.

This song's saraNam ending is a quintessential example of such brilliance in "ending saraNam and connecting back to pallavi".

I have no words to explain it but to simply ask people to "please listen with focus on that ending few seconds" Smile

Nice song, first-time-listen for me! GA pAdal varigaL.

https://www.youtube.com/watch?v=WpI9yIjdsC4


பல்லவி :

இனிமேல நல்ல நேரந்தான்
என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலந்தான் 
அள்ளித்தான் வாரிக்கட்டு முல்லப்பூ மால கட்டு

சரணம் 1:

பொன்வேலி போடு சிங்காரச்செல்லய்யா கல்யாணக்காலம் எப்போது சொல்லய்யா 
நாளென்ன பொழுதென்ன நான் சேரத்தான் தேனள்ளித் தொட்டுத்தொட்டு நான் கூடத்தான்
பூவொன்னு பட்டுக்கட்டி என் கூடத்தான் நீயள்ளித் தந்ததென்ன இப்போது தான்
பொண்ணுக்கு உன்மேலே ஆசை உண்டு பூலோகம் காணாத பாசம் உண்டு 
சொல்லித்தான் தேர்ந்தெடுத்தேன் சொர்க்கத்தில் பூட்டி வச்சேன்

சரணம் 2:

கண்ணால பாரு பொன்னாகக் குவிப்பேன் காதோட கேளு எல்லாமும் கொடுப்பேன் 
பூவோடு காத்தாக என்கூடத்தான் நீ வந்து சேர்ந்தாலே போதும் மச்சான் 
பாய்மேல பூப்போட்டுப் பாராட்டுத்தான் பாருங்க நாளொன்னு தாலாட்டத்தான் 
கண்ணுக்கு முன்னால காவேரி தான் ஒன்னுக்குள் ஒன்னாகும் இந்நேரம் தான் 
சொந்தம் தான் சேர்ந்ததய்யா சோகம் தான் போனதய்யா

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Mar 15, 2018 6:46 pm

#39 நீ பாதி நான் பாதி கண்ணே (கேளடி கண்மணி, ஏசுதாசுடன் டூயட்)

வாலி எழுதிய அற்புதமான கவிதைகளில் ஒன்று இந்தத்திரைப்பாடல்!

பல்லவியின் முதல் வரியிலேயே சிக்சர் அடிக்கிறார் - ஈருடல் ஓருயிர் என்பதை மாற்றி ஒரே உடல் தான் என்று அழகாக 'நீ பாதி நான் பாதி' என்று சொல்லித்தொடங்குகிறார்.

பாடல் முழுக்க இப்படிப்பட்ட விளாசல்கள் தான் - மெய்யானது உயிர்மெய்யாக, வலது கண்ணும் கலங்கி விடுமே, இருட்டில் இருக்கும் நிழல் -இப்படி வரும் விளையாட்டில், எடை கூடிய உதிரிப்பூக்கள் அழகிய கண்ணே பேபி அஞ்சுவும் "சுமையானது" என்று அடி வாங்கும் வேடிக்கை!

அழகான மெட்டுக்கு இப்படியெல்லாம் அருமையான கவிதை கிடைப்பது அந்த வசந்த் செய்த பெரும்பேறு தான்.
(இப்படியெல்லாம் போட்டுக்கொடுத்தாலும் அந்த ஆள் அடுத்த படத்துக்கே ராசாவை விட்டுவிட்டு ஓடி விட்டார் - பாலச்சந்தர் சதி என்று நினைக்கிறேன்).

அருமையான குரலில் அழகாகப் பாடி இருக்கிறார்கள் என்றாலும் இரு பாடகர்களும் கொஞ்சங்கொஞ்சம் சொதப்பவும் செய்திருக்கும் பாடல்.

"வானப்பறவை" என்பதைக்கிட்டத்தட்ட "மானப்பறவை" என்று பாடுகிறார் உமா ரமணன். (கானகந்தர்வன் ப்ளாக் அவ்வாறே பதிவும் செய்திருக்கிறது rotfl ).

ஏசுதாசும் அவ்வண்ணமே - மலையாள வாடை தூக்கல்.

சொர்க்கத்தை ஸ்வர்க்கம் என்கிறார் (அதே ப்ளாக் "சோகம்" என்று இட்டிருக்கிறார்கள் Laughing )

மிகச்சிறப்பான பாடல்.

BTW, check out all the songs in that movie at #IR_Official_YT - what a tremendous album!

https://www.youtube.com/watch?v=CTvD1tfUnII


Video youtube:
https://www.youtube.com/watch?v=6gUCGu03Prk


பல்லவி:

நீ பாதி நான் பாதி கண்ணே (கண்ணா)
அருகில் நீயின்றித் தூங்காது கண்ணே
நீயில்லையேல் இனி நானில்லையே உயிர் நீயே

சரணம் 1:

வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே
மெல்லச்சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர்மெய்யாகவே தடையேது?

சரணம் 2:

இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Mar 16, 2018 5:59 pm

#40 தண்ணியில நனஞ்சா (கேளடி கண்மணி, சோலோ)

UR got another song in that album (possibly not picturized in the movie, could not locate any video on youtube).  It's a terrific composition by IR and Mu.Mehta wrote excellent lines (almost Kannadasan standard for such songs, with neat flow with the melody) but UR executed it in a "பரிதாபமான" way Embarassed

Well, one won't expect SJ levels of execution of such sensuous numbers (or even the controlled ways of KSC) but at least some kind of delivery in line with the setting / situation / pAdal varigaL Sad

It would have been better if they had another version with a different singer...

Interestingly, even with this kind of singing, the song became quite popular (because of the melody / orch and also being part of a super hit album)...

https://www.youtube.com/watch?v=rSFTjqabPZU


பல்லவி:

தண்ணியில நனஞ்சா இது தங்கமென ஜொலிக்கும்
கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்
புத்தம்புதுசு வெள்ளிக்கொலுசு என்றும் இளசு இந்த மனசு
நான் கண்ணால பந்தாட, அட, நீ தன்னால திண்டாட

சரணம் 1:

மோகமெனும் தீயினிலே மூடிவைத்த மல்லிகைப்பூ
தேகமெனும் பாற்கடலில் புன்சிரிப்பு
வாசமுள்ள பூவிருக்கு பூவுக்குள்ளே தேனிருக்கு
தேன்குடிக்க வந்த பின்னும் யார் நினைப்பு
ஓரவிழிப்பார்வையிலே உள்ளதென்ன காணலியா
ஓடிவந்த வெள்ளிநிலா பார்ப்பதென்ன தோணலியா
கொள்ளையடித்தால் குறைந்திடுமா செல்வமிது தான்
தள்ளியிருந்தால் நடந்திடுமா இன்பக்கதை தான்

சரணம்  2:

நாலுபக்கம் சுவரு இல்லாக்கோவிலடி கோவிலிலே
ஜாதிமதபேதம் எதும் இல்லையடி
எட்டுத்திக்கும் ஏற்றுக்கொள்ளும் வேதமடி வேதத்திலே
இன்பம் மட்டும் தான் இதற்கு மூலமடி
தேசமெங்கும் பேரெடுத்த தீரர்களும் வீரர்களும்  
தேடிவந்து நாடிநிற்கும் தேவதையின் வாசலடி
புத்தகத்தில் பாடம் இல்லையடி இங்கே இருக்கு
பள்ளியறையின் புள்ளிமயிலே இன்பக்கணக்கு

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  mythila Sat Mar 17, 2018 12:00 pm

app_engine wrote:#25 தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே (கெட்டி மேளம், ஏசுதாசுடன் டூயட்)

Very sweet song! This is from a movie 'ketti mELam' (directed by Visu, possibly the only Visu-directed movie that had IR as MD - rest all had MSV / S-G or someone else).

The pAdal varigaL are by one Idhayachandran and they're pretty good (especially the saraNam portions, that are written to a complicated melody). I'm not sure if he had penned any other song.

KJY is effortless while UR is a "முயற்சிப்பாடகி" in this song - she gets pass marks Laughing


As a first time listen, this song is Quite A Find for me Smile
Terrific interludes !!! Based on Gujari Thodi raagam. Thank you app sir.

mythila

Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Mar 19, 2018 6:01 pm

#41 பூத்துப் பூத்துக் குலுங்குதடி (கும்பக்கரை தங்கையா, எஸ்பிபியுடன் டூயட்)

This song is quite a celebration!

For some reason, this whole album was missed by me when it arrived Embarassed As per Anbu sir's spreadsheet, the music got released in 1990 and the movie came out in Jan 1991 - that could explain how it got missed by my 'TFM radar' which got switched off during my "engagement-accident-marriage-postponed" period Wink

That way, even though this song is quite familiar to me (possibly thanks to listening it on travels inside TN during 90's), never knew which movie the song was from. Interestingly, thru out my indulgence in tfmpage / mayyam hub, never got in touch with this album Embarassed (Yes, I've read many posts about the album by others but never had a personal connection).

That way, this song is NOT part of the IR-SPB thread where I posted personal recollections about all the hit songs of the combo!

Such a lovely and sweet song - like most IR songs, the melody gets sweeter when we enter the saraNam. Of course, the saraNam ends in a glorious fashion to return to the catchy pallavi! Per SPB standards, average singing but Per UR standards, one of her best Smile

GA penned the lines (and directed the movie too, after karagAttakkAran). My most fav. song of the album is, of course, thenRal kAtRE thenRal kAtRE - the sweet SJ with misra chApu!

https://www.youtube.com/watch?v=U6Cv92R9f4E


பல்லவி :

பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் கொட்டும் புதுக்குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ

சரணம் 1: 
வெக்காத செந்தூரம் தான் வச்சு வந்தேன் உன்னோடு நான்
இப்போது நீ தந்தா என்ன முத்தாரம் தான்
வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்
மொட்டானதே இளம் மேனி மேனி தொட்டாடவே வரும் மாமன் நீ
மேளம் ஒரு இடி இடிக்குது வானம் புதுக்குட பிடிக்குது வா வா வா மானே

சரணம் 2:

பட்டோட பொண்ணாடத்தான் பாத்த மனம் ஒன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே
தோளோடு தோளோகத்தான் மேலோடு மேலோகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்
செம்மேனியா செந்தாழம் பூவா அது உன்மேனியா பொன் மேனியா
பாத்தா உடல் சிலு சிலுக்குது பார்வை பட கிளுகிளுக்குது வா வா வா மாமா

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Mar 20, 2018 6:45 pm

#42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா (தந்துவிட்டேன் என்னை, அருண்மொழியுடன் டூயட்)

A sweet melody, with misra nadai to boast as well (the song got covered in the #IR_misrA thread earlier)!

The pAdal varigaL are by IR but the singers make them so unclear that one had to struggle to make sense and get the lyrics Embarassed

I even tried with a so-called hi-res audio version and still could not hear many syllables clear - atrocious singing I should say, about both the singers Sad

First of all, even in the pallavi, they kill the word "மொத்தமா" (meaning : totally) as "மொத்தம்மா" (meaning : mam, slap). Even a simple word such as "சொன்னாலே" is sung in a "food-in-the-mouth" fashion by UR that it sounds like "பொன்னாலே" Sad

I tried to make as much meaningful sentences as possible, out of such horror singing, in saraNam lines too Embarassed

If someone hears different words from what are given here, definitely not my fault! Blame it on Arunmozhi, Uma & IR (both lyricist & MD). கொடுமையப்பா!

Hi-Q audio:
https://www.youtube.com/watch?v=CTLt6FMNQxg

Video (Vikram's first Thamizh movie, directed by none other than Sridhar)

https://www.youtube.com/watch?v=IZfbShCpJmo


பல்லவி :

முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா
மொத்தமா அச்சம் வெட்கம் விட்டாளம்மா
கல்யாணத்தேதி எப்போது கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதுமிப்போது பெண்மானே ஏங்குது

சரணம் 1:

சோலைச்சொகுசு என்னை ஒரு பாடு படுத்த
காலைக்காற்று வந்து வந்து வாரித்துரத்த
ஏலங்கிளியே ஏரிக்கரையில் காக்க வைக்காதே
சில காலம் தனியே வாடி உனையெதிர் பார்க்க வைக்காதே
மீசை அரும்பிட வாலைக்குறும்புகள் வாலை ஆட்டி வந்து
ஆசை இதயத்தில் வேலை நடத்துது மாலை சாட்சி இன்று
கல்யாணத்தேதி எப்போது கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதுமிப்போது பெண்மானே ஏங்குது

சரணம் 2:

காலை எழுந்தால் கண்ணில் அந்த ராமன் வருவான்
காலில் விழுந்தால் விண்ணில் இந்த மாமன் வருவான்
பாயை எடுத்தால் நாளும் காதல் நோயில் நான் விழுவேன்
இந்தக்காயைக் கனிபோல் மாற்றும் மருந்தே உன்னைத்தான் தொழுதேன்
காத்துக்கிடக்குது காத்துக்கருப்புகள் பாத்துப்பழகம்மா
கைகோத்து நடந்திடக் காலம் இருக்குது காதல் அழகம்மா
கல்யாணத்தேதி எப்போது கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதுமிப்போது பெண்மானே ஏங்குது

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Mar 21, 2018 6:12 pm

#43 ஒன்னப்பாத்த நேரத்தில உலகம் மறந்து போனதடி (மல்லுவேட்டி மைனர், மலேசியா வாசுதேவனுடன் டூயட்)

Definition of a "racy" duet song Smile

If you disagree, please try to listen to the song and get the pAdal varigaL (i.e. without referring to the lines given here below, quite a struggle for me this morning!).

MV is at ease, with his typical folk touch and delivers in his superb style. OTOH, for UR, it is a little bit of struggle (IMO) but she manages well with the folk slang.

Lovely song, overall - despite some kuRumbu varigaL by GA - நீ பாத்து நீரூத்து / செங்கரும்புச்சாறு / பொங்குகிற ஆறு etc Laughing .

Though I've stopped looking for such double-meaning references after college days, some such lines are "on the face" and can't brush aside Wink

Video is available on youtube (Manobala directed movie it seems)

https://www.youtube.com/watch?v=t7YquqEAR_E


பல்லவி:

ஒன்னப்பாத்த நேரத்துல உலகம் மறந்து போனதடி
கண்ணப்பாத்த வேகத்துல என்ன மறந்து போனதடி
காலந்தெரியல அம்மாடி நேரந்தெரியல
இப்போது தனிச்சுப்படுக்கவும் நெனச்சுத்துடிக்கவும் எனக்குத்தான் முடியல

சரணம் 1:

செந்துருக்கம் போலச் சேந்துருங்க மாமா
வம்புகிம்பு வேணாம் சொல்லிப்புட்டேன் ஆமா
தேசாதி தேசம் எல்லாம் தேரேறிப் போவோமா
ராஜாதிராஜா போல ராஜாங்கம் பாப்போமா
பாலாச்சு நூலாச்சு பட்டு உடல் தானே
நீ பாத்து நீரூத்து தொட்டிலுக்குத்தானே
அழகுப்பவளமே ஒம்மேல மனசு தவழுமே
இப்போது எனக்கு சபலமே தெனமும் சலனமே தொணைக்கு நீ வரணுமே

சரணம் 2:

செங்கரும்புச்சாறு பொங்குகிற ஆறு
சங்கமத்தத்தேடி உங்க வந்தேன் பாரு
நீராடும் நேரம் பாத்து நீபோடு பூமால
நீ கேக்கத்தானே மாமா நான் பாடும் பாமால
பாவாடக் காத்தோட மெட்டுச்சொல்லிப்பாட
சாஞ்சாடும் நாத்தோட சந்தஞ்சொல்லிக்கூட
பாட்டு இசைக்கிற என்னெஞ்சப் போட்டு அசைக்கிற
எப்போதும் கேட்டுக்கிறங்குறேன் பாத்து மயங்குறேன் மனசுத்தான் சரியில்லே

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Mar 22, 2018 7:08 pm

#44 சின்னமணி பொன்னுமணி சிரிச்சாக்காக் கோயில் மணி (மல்லுவேட்டி மைனர், சித்ரா / ஏசுதாசுடன் மூவர் பாட்டு)

One more song for UR from the same movie, this one a "serious" one, situational. There are two women on screen (Seetha and Shobhana) and KSC / UR are the voices.

Nothing earth-shaking in the song, just a sweet situational number with typical IR ingradients Smile

https://www.youtube.com/watch?v=BvOHd6Ul_4Q


பல்லவி :

சின்னமணி பொன்னுமணி சிரிச்சாக்காக் கோயில் மணி
ஒன்னப் பெத்த ராசவுக்கு அவதான்டா (நீ தான்டா) கண்ணின் மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி
(பெத்தெடுத்த தாய் ஒருத்தி நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா /
பெத்தெடுத்த தாய் ஒருத்தி உன்னத் தத்தெடுத்தேன் நான் ஒருத்தி)
இந்த இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்
(அந்த இருவருக்கும் கேள்வி நான் ஒருத்தன் /
எங்க இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்)

சரணம் 1:

எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது
வச்சதுக்குத் தண்டனைய அனுபவிச்சேன் இப்போது
நானாகப் போட்ட வித முளைச்சுதடா நேத்து
நீயேனும் திருந்தி நட என் கதயப் பார்த்து
பொய் மானப் புள்ளி மானுன்னு நம்பிக்கிட்டா
ஒரு முள்ளால இவ மாலயக் கட்டி வச்சா
இதைத் தோளில் தாங்கும் துயரம் நெஞ்சு பொறுக்கலடா

சரணம் 2:

ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன்
உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல
தீ மேல கைய வச்சுச் சுட்டுக்கிட்ட பாவம்
உம் மேல கோபப்பட்டா அதில் என்னய்யா நியாயம்
பொன் மான நீ பொய்யின்னு சொல்லுறியே
என் அம்மானே என்ன சொல்லுல கொல்லுறியே
என் வாழ்வும் தாழ்வும் எனது மன்னவன் உன்னிடமே


Last edited by app_engine on Sat Oct 02, 2021 8:14 am; edited 3 times in total

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Mar 23, 2018 7:03 pm

#45 ஓ உன்னாலே நான் பெண்ணானேனே (என் அருகில் நீ இருந்தால், மனோவுடன் டூயட்)

Oh, those days when hit songs were made for unknown faces & obscure movies Smile

Excellent song at a leisurely pace - with singers having no trouble in delivering at all & the overall package very relaxing / soothing!

Lovely number with a haunting melody Smile

There is difficulty in deciphering a couple of words, however - hopefully what is printed below is what Na Kamarasan wrote (well, he is no more and cannot be offended).

Good quality audio link:
https://www.youtube.com/watch?v=eisZqOg-WSc

Video:
https://www.youtube.com/watch?v=uWkKKckKmHM


ஓ உன்னாலே நான் பெண்ணானேனே
உன் கண்ணாலே நான் பொன்னானேனே
தேடாத நேரமில்லையே
தீராத காதல் தொல்லையே

மாலை நேரப்பூக்களே ஆவல் மீறிப்பார்க்குதே
வானம் காதல் வீதிதான் வானம்பாடி பாடுதே
இரவெல்லாம் உன் உறவோடு எண்ணாத சொர்க்கலோகம்
கதை பேசும் பெண்ணின் கண்ணில் கவிதைத் தென்றல் வீசும்
விரலில் (இதழில்?) ஊஞ்சலாடும் விரகதாபம் மேலும் ஏறும்

நாணம் மூடும் மௌனமே கூறும் (ஊறும்?) காதல் வேதமே
காதல் தேவன் பேசினால் காலம் ஊமையாகுமே
இதழ் மேலே என் இதழ் சேரப் பெண் உதவி செய்ய வேண்டும்
மடிமேலே என் தலை சாய என் மனது உன்னைக் கேட்கும்
கேள்வி என்ன கண்ணே நானும் என்றும் உந்தன் சொந்தமே

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Mar 26, 2018 6:15 pm

#46 பாடு பாட்டெடுத்து ஆடு காலெடுத்து ஜாலி (என் அருகில் நீ இருந்தால், மனோ மற்றும் குழுவுடன்)

UR got another song, this too with Mano, in that same album.

However, she sings only in the opening and closing pallavi. Rest of the song (saraNams and in-between pallavis are Mano / male chorus only).

Also, this song is in the same "genre" (rock'n'roll) as pudhu mAppiLLaikku / rumbumbum. The album possibly came around the same time of MMKR (the movie release date is a few months prior to MMKR, the album too possibly came earlier than that).

Some kuppai Thanglish lyrics by Vaali. No video could be located on youtube (which is not a big deal anyways).

https://www.youtube.com/watch?v=W-osp6mFUJw


பல்லவி :

பாடு பாட்டெடுத்து ஆடு காலெடுத்து ஜாலி
சூடா ராத்திரிக்கு ஜோரா வந்திருக்கு லாலி
ஆடிப்பார்க்க துணை இணை யாரோ யாரோ
தேடிப்பார்த்தேன் இதோ இதோ ஹீரோ ஹீரோ

சரணம் 1:

கற்றுக்கொண்டாச்சு மைக்கேல் ஜாக்சன் கற்றுத்தராத ப்ரேக் டான்ஸ்
நெஞ்சில் உண்டாச்சு மீட்டர் மேட்டர் ரெண்டும் கெடாத பாப் சாங்ஸ்
கட்டுப்படாமல் கால்கள் எங்கும் வட்டம் இடாதோ சொல்
தட்டுப்படாத சொர்க்கம் கண்ணில் தட்டுப்படாதோ சொல்

சரணம் 2:

எங்கும் உலாவும் நீயும் நானும் க்ரீடம் இல்லாத ராஜா
மச்சம் எந்நாளும் உச்சம் உச்சம் அச்சம் இல்லாமல் வாழ்ந்தா
எங்கே சென்றாலும் சர்க்கார் ரோடு எல்லாம் நம் ரோடு தான்
எல்லையில்லாத வானம் பூமி எல்லாம் நம் வீடு தான்

சரணம் 3:

யம்மா இத்தோடு போச்சு போச்சு பக்கம் வராது காலேஜ்
எங்கும் உல்லாசம் தேடு தேடு போனால் வராது யங் ஏஜ்
எங்கே இப்போது கால்கள் போகும் அங்கே சென்றாலென்ன
குட்டி யாராச்சும் நேரில் வந்தா குட் நைட் சொன்னாலென்ன


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Mar 27, 2018 10:34 pm

#47 வானத்தில் இருந்து மண் மீது வந்தாள் (வெள்ளையத்தேவன், அருண்மொழியுடன் டூயட்)

First time listen of a so-so song (northie sounding somewhat, not a big fan of such numbers. To add to the woes, it has Arunmozhi singing Embarassed )

Well, if the movie had some hopeless guy like Ramki as hero, such songs were way more than what it would have deserved, IMHO Embarassed

https://www.youtube.com/watch?v=i9ne1r-TS3k


பல்லவி:

வானத்தில் இருந்து மண் மீது வந்தாள் சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும் சந்தோஷமான பூமழை
மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம் பறக்கும் பறக்கும் அந்தத்துன்பம் துன்பம்
அன்புக்குப்பொங்குது நெஞ்சமே அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே

சரணம் 1:

தென்றல் உந்தன் பேரைச்சொல்லத் திங்கள் உன்னைத்தேடுதே
செவ்வாய் ஓரம் தேனைத்தேடி தேனின் வண்டு ஏங்குதே
மின்னல் ஒரு மாலையாய்த் தோளில் வந்து சூடவே
வண்ணமயில் தோகையாய் என்முன் வந்து ஆடுதே
நாளை வரும் நாளை நாம் பொன்னாளே என்று பாடலாம்
சிறு பூவே மனம் பாடும் ராகம் நீயே வர வேண்டும் தேவி

சரணம் 2:

எந்தன் நெஞ்சில் தீபம் ஏற்றிக் கோவில் கொண்ட பூங்கொடி
கொஞ்சும் மஞ்சள் மாலை சூடத்தேரில் வந்த மாங்கனி
கண்ணீர்ப்பூக்கள் போனது பன்னீர்ப்பூக்கள் பாடுது
வானம் நெஞ்சம் ஆனது வாழும் நாட்கள் வந்தது
காலை மாலை அந்தியில் அன்புக்காதல் தேவன் கீதமே
திருநாளே சுகம் தேடும் நேரம் தானே வர வேண்டும் தேவா

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Mar 28, 2018 7:00 pm

#48 இங்கு இருக்கும் காலம் வரைக்கும் (எதிர்க்காற்று, சோலோ)

What a lovely melody, orchestration and (unusually) excellent poetry! Vaali in one of those very inspired moments pens some beautiful lines, matching the terrific melody!

Unfortunately, UR brings the song down - lifeless, clueless, emotionless singing of the theme of the song! Not sure if the movie situation needed it that way...but still...

It called for SJ / KSC / KJY kind of person to match the awesome stuff packed in this song. An example of how a great song can be reduced to just a good song by the singer Embarassed

Somewhat better quality audio:
https://www.youtube.com/watch?v=uipN8BxtrU8


Video:
https://www.youtube.com/watch?v=awa8Ix45_2Q


பல்லவி :

இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்
வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள்
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே

சரணம் 1:

வான் தரும் பொன் தூறலில் மாமலைப் பூஞ்சாரலில் சுகம் என நான் நனைகிறேன்
ராத்திரி நிலாவினில் பூத்திடும் கனாவினில் கவிதைகள் நான் புனைகிறேன்
தென்னங்கீற்றும் தென்திசைக்காற்றும் அன்பின் வேதம் கூறாதா
அன்பின் வேதம் கேட்டதனாலே துன்பம் யாவும் தீராதா
பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும் மனிதனுக்குள் தேவன் வாழ்வான்

சரணம் 2:

தேசமே என் பூவனம் பாசமே என் கீர்த்தனம் உலகமே என் உறவினம்
வேர்வையும் கண்ணீரையும் பார்க்கையில் எவ்வேளையும் உருகுமே என் இளமனம்
வேனிற்காலம் வந்தது என்று வானம்பாடி பாடாதோ
வாசல் தேடி வெயிலும் வந்து வண்ணக்கோலம் போடாதோ
ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும் பல வருஷம் பேச வேண்டும்

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Mar 29, 2018 6:13 pm

#49 கோட்டையை விட்டு வேட்டைக்குப்போகும் (சின்னத்தாயி, குழுவினருடன்)

The very famous children version of the song has UR as the main singer. (Not sure if the other little ones are listed in the disk Embarassed Anbu sir's spreadsheet says chorus, without naming them).

UR does a neat job in this case and the song has other special elements (uRumi, for one) to gain the special place among those who follow TFM / IR.

Vaali has some fun pushing in social problems into this number Smile

https://www.youtube.com/watch?v=OMxWwBeVDDo


பல்லவி  :

கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சூடலமாடசாமி 
சூடலமாடசாமியும் நான் தான் பூசாரி நீ தான் சூடம் ஏத்திக் காமி
கொட்டவேணும் மேளம் கையைக்கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் அருள்வாக்குச் சொல்லும் நேரம்

சரணம் 1:

அன்னாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா விலையேறிப்போகுது மார்க்கெட்டுல
என்னாட்டம் ஏழைங்க அதைவாங்கித் திங்கத்தான் துட்டில்ல சாமி பாக்கெட்டுல
வீட்டுக்கு வீடு எங்களத்தான் மரம் ஒன்னு வைக்கச் சொல்லூறாக
மரமே தான் எங்க வீடாச்சு சாமி ஏழைங்க வாயை மெல்லூறாக
எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் உன்னால தான்
கண்ணால பாரு நேராக்கிக் காட்டு உன்னால தான்

சரணம்  2:

ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே என்னாட்டம் ஏழையப்பார்க்கணுமே
எல்லோரும் போல் என்னை நீயும் தான் தள்ளாமே எந்நாளும் தான் காக்கனுமே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கனுமே 
எப்போதும் காவல் நானிருப்பேன் என்னென்ன வேணும் நான் கொடுப்பேன் 
பொல்லாங்கு பேசும் ஊர் சனம் தான் புண்ணாக்கிப் போச்சே என் மனம் தான்
என்னாட்டம் சாமி எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான் 
என்னோடு நீயும்  உன்னோடு நானும் எந்நாளும் தான்

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Apr 03, 2018 8:22 pm

#50 ஓ வானமுள்ள காலம் மட்டும் (புதிய ஸ்வரங்கள், ஏசுதாசுடன் டூயட்)

Didn't know the name of the movie before (but have definitely heard the song).  It sounds like a mid-80's Malayalam song and not a typical 1991 number.  

Very sweet, regardless. This combo of KJY-UR always seems to work well Smile Vaali lyrics are typical - not bad but nothing great. Though ordinary (repetitive kind of) phrases, they jell very well with the melody. As always, UR working hard to do something listenable while KJY does the thing effortlessly.

https://www.youtube.com/watch?v=oT6K_2H7CBc


பல்லவி :

ஓ வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு இணைத்தான் பூவைக்காற்றோடு
ஓ கானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தப் பாடல்
இனி என் ஜீவன் உன்னோடு வருவேன் நாளும் பின்னோடு

சரணம் 1:

சூர்யோதயம் சந்திரோதயம் காலை மாலை நீயாக  
பெண்ணோவியம் பொன்னோவியம் சூடும் பூவும் நீயாக
மாலை போலவே மாது மார்பில் ஆடிடும்போது  
வேதங்கள் ஓத வெட்கங்கள் மோத கையும் கையும் கலந்து கொள்ளலாம்

சரணம் 2:

பன்னீரையும் வெந்நீரென தீண்டும்போது நான் கண்டேன்
பூமஞ்சமும் முள் மஞ்சமாய்த் தூங்கும்போது நான் கண்டேன்  
காற்றில் காய்ந்திட மெல்ல காதல் பனித்துளி அல்ல
தேகங்கள் ரெண்டு ஜீவன்தான் ஒன்று ஒன்றை ஒன்று விலகக் கூடுமா

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Apr 04, 2018 7:06 pm

#51 ஏ மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி (புது நெல்லு புது நாத்து, சித்ராவுடன் டூயட்)

Never paid close attention to this song until today. (Not even sure if I had listened to this before) Embarassed

This one sounds like a song from some 90's Raj Kiran movie. IR was transitioning the orch / sounds from the Ramarajan era (late 80's) into something different (not that much to my liking) - which I should start calling as IR_Folk_V3 from now onwards. 70's to early 80's was IR_Folk_V1, with lot of experimentation with rhythm & WCM. Later part of 80's for Ramarajan was IR_Folk_V2, with reduced complexity in rhythms but sweeter melodies.

The 90's one, V3, had different sounds, like this pudhu nellu pudhu nAththu / araNmaNaikkiLi kinds - relatively less palatable to me.

Song is sweet, with a catchy anupallavi (that also gets repeated in the end of saraNam). Also, the clap sounds are typical of BR songs...GA has penned the lines without much strain or imagination (so-so).

Audio only:
https://www.youtube.com/watch?v=wdhBxDoHo8M

Video:
https://www.youtube.com/watch?v=C6oKPun7ftI


பல்லவி :

ஏ மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி
எம்மனசுக்குள்ள உள்ளத நீ கண்டுபிடி
ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா
ராவானாப் போதும் நடுங்குதம்மா லேசா
ஆமாமா அது சுகந்தானம்மா
ஏம்மாமா எப்போ வருவாரம்மா

சரணம் 1:

ரோசமுள்ள காளையம்மா வேகமுள்ள மாமா
கன்னிப் பொண்ணக் கண்ணுவச்சிக் கட்டிக்கிட்ட மாமா
தூங்காமக் காத்திருக்கேன் தொட்டுத் தொட்டுப் பேசலையே
தோளோடு சேரலையே சொல்லி மனம் மாறலையே

சரணம் 2:

பரிகாரம் சொல்லு புள்ள பாசம் வச்ச மனசு
ஓ குடிகாரன் பெத்த புள்ள தூக்கங்கெடும் வயசு
புது நெல்லு புது நாத்து பொங்கலுக்குக் காத்திருக்கு
புதுப்பொண்ணு இது ரெண்டும் மாமன் சொல்லுக்குக்காத்திருக்கு

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Apr 05, 2018 6:03 pm

#52 கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது (தம்பி பொண்டாட்டி, சோலோ)

Some 70's MSV style song - even the lyrics reflect that time period (Panju A wrote them for his own production).

UR does a neat job of singing this (easy) devotional number, which is a first-time-listen for me.

https://www.youtube.com/watch?v=4OwEL2XBKFM


பல்லவி :

கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாகத் திருமால் உருவாக
மால்மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் அல்ல நாள் இன்று தான் திருநாளே

சரணம் 1:

துன்பங்கள் வந்து எமை வாட்டும்போது துணை உனது திருப்பாதங்களே
துணையுமில்லாது தவிக்கின்ற பேர்க்கு வழி சொல்லுமே உந்தன் வேதங்களே
நன்மை வாழ நலிவுகள் தீர நலமே உன்னை நாடினோம்
உண்மை ஜோதி ஒளியினைக்காண உறவே உன்னைப்பாடினோம்
ஒரு கீதை தந்து பாதை தந்து தர்மம் தந்த தேவனே

சரணம் 2:

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே திருவரங்கா உன்னையே நினைந்தோம்
திருவடிப்புகழைத் தினம் தினம் பாடி அருட்கடலே உன்னையே பணிந்தோம்
பக்தர் உள்ளம் இன்பம் காணப்பக்கம் நிற்கும் நாதனே
பலவாம் துன்பம் பனிபோல் போக்கும் பதியே எங்கள் தேவனே
ஒரு கீதை தந்து பாதை தந்து தர்மம் தந்த தேவனே

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Apr 06, 2018 6:05 pm

#53 பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து (வால்டர் வெற்றிவேல், மனோ / சுனந்தாவுடன் குழுப்பாடல்)

I won't hesitate to call this song the "career best of Mano" Smile

His "prayer-devotional-like" rendering was typically a disaster (in songs like 'kAviyam pAdivA thenRalE"). However, that style works perfectly in this number - very emotional song (தொண்டை அடைக்கும் கண் கலங்கும் type) and Mano does a very nice job here.

The ladies are fine too, not spoiling the mood or the beauty of the melody. Vaali has nice supporting lines and a total, great package of a song this one is!

I've stopped worrying about visuals long back (and didn't bother to look at them when playing and verifying the pAdal varigaL) Wink

Here you go, for anyone interested in watching Sathyaraj trying to become a Sivaji Ganesan:

https://www.youtube.com/watch?v=MkBGtUDh9wo


பல்லவி :

பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூப்போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டிச் சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென?
நான் கொஞ்சிடுவேன் உனை என் பிள்ளையென
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க!

சரணம் 1:

காவிரி போலே கங்கை போலே உன் பேரும் உன் சீரும்
பொங்கிட வேண்டும் தேசம் உனைப் பேசிட வேண்டும்
உந்தன் அண்ணனைப் போலே மண்ணின் மேலே
ஊரார்கள் பாராட்ட வாழ்ந்திட வேண்டும்
அன்னை மனம் வாழ்த்திட வேண்டும்
சின்னச் சின்ன வார்த்தை ஒன்று ரெண்டு பேசும்
தம்பி உந்தன் வாழ்வில் தென்றல் வந்து வீசும்
காலம் உன் வசமே எனப்பாடும் என் மனமே
நாளும் என் அருகில் மணம் வீசும் சந்தனமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க!

சரணம் 2:

என்னிடம் உன்னைத் தந்தாள் அன்னை கண்மூடிச்சென்றாளே
சென்றவள் அன்று சொன்ன சொல்லும் நெஞ்சினில் உண்டு
எந்தன் கண்களில் பார்வை வந்தால்
முதல் பார்வையிலே அய்யா உன் பொன் முகம் பார்ப்பேன்
பின்பு எந்தன் மன்னனைப்பார்ப்பேன்
அண்ணன் அண்ணி போலே தெய்வம் உண்டோ கூறு
உன்னை எண்ணி நாளும் வாழும் உள்ளம் பாரு
பொன்னே பொன்மணியே எங்கள் கண்ணே கண்மணியே
பேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Apr 09, 2018 8:10 pm

#54 கண்மணிக்குள் சின்னச்சின்ன மின்மினிகள் (சின்ன மாப்ளே, எஸ்பிபி & மின்மினியுடன் கூட்டுப்பாடல்)

This "average-by-IR-standards" song is part of a nice album that had the super hit "kAdhOram lOlAkku" song.

Well, the whole album is available on #IR_Official_YT Smile

https://www.youtube.com/watch?v=_GVtItWKwNM


Like I said above, nothing significant about this particular number where SPB sings with Minmini and UR and the singers just render the average lines penned by Vaali for an above-average tune. The decent orchestration possibly didn't get the attention it deserved, being the lesser of the songs in a nice album.

Video :

https://www.youtube.com/watch?v=FlyayVyjTbM



பல்லவி:

கண்மணிக்குள் சின்னச் சின்ன மின்மினிகள் மின்ன மின்ன
மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ
இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ
ஆடட்டும் ஆடட்டும் ஆனந்தம் கூடட்டும்
பாடட்டும் பாடட்டும் பாலாறு ஓடட்டும்

சரணம் 1:

வானில் வரும் நட்சத்திரம் பெண்ணாக இன்று பக்கத்தில் நின்றிடுமோ
முக்கனியும் சக்கரையும் வாங்கிக்கொள் என்று சொல்லாமல் சொல்லிடுமோ
தேருக்குள் வைக்கத்தேவைப்பட்ட சிற்பமே
தேகத்தில் என்றும் தேனைச்சொட்டும் புஷ்பமே
காத்திருந்தேன் நீ அணைக்க காதல் என்னும் தீ அணைக்க
பாத்திருந்தேன் நாள் முழுக்கப் பாற்குடத்தில் நான் குளிக்க
புது மின்சாரம் உன்னாலே உண்டாகும் நேரமின்று

சரணம் 2:

பத்துத்தரம் முத்தம் தரும் கன்னத்தில் வந்த காயங்கள் ஆறிடுமோ
அல்லி மொட்டுத் தென்றல் தொட்டு அம்மாடி என்று கூச்சல்கள் போட்டிடுமோ
மாப்பிள்ளை செய்யும் லீலை இன்னும் என்னவோ
வேடிக்கை இங்கு போதும் என்று சொல்லவோ
காதலுக்கு ஏது எல்லை? போதும் என்ற வார்த்தை இல்லை
ராத்திரிக்கு ராத்திரி தான் பாட்டெடுக்கும் போக்கிரி தான்
அடி இப்போதும் எப்போதும் தப்பாது தாளக் கட்டு

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Apr 10, 2018 6:27 pm

#55 இது மானோடு மயிலாடும் காடு (எங்க தம்பி, அருண்மொழியுடன் டூயட்)

Browsed the youtube to see some of the visuals Shocked

What a disconnect! One would think that they've superimposed some other song's visuals for this duet rotfl Not sure if the director communicated what he was planning to shoot when he got the song from IR. If he wanted a mukkal-munagal number (or at least something like mAsi mAsam ALana poNNu), he should have simply told IR and would have been treated with an entirely different number.

This sounds like a prayer song - both UR & AM are best fits for such genre and definitely not for risque!  Of course, Muthulingam's lines are fitting for either a simple love duet or mukkal munagal number. However, the "effects" are not added by IR (or singers).

இப்படி என்னென்ன கொடுமைகள் எல்லாம் 90-களில் நடந்திருக்கிறதோ Sad

https://www.youtube.com/watch?v=LQ62hpQM9Iw


இது மானோடு மயிலாடும் காடு
புதுத்தேனோடு மலராடும் வீடு
மாலை வந்தாலே மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்

பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே பால் மேனி சதிராடுதே
கனியாய்க் கனிந்து கனவில் மிதந்து இளமை விருந்து இதழில் அருந்து
பார்வைப் பூவாலே பட்டு மெத்தை போட்டாலே
பருவம் ராகம் பாடாதோ ஹோய்

உன் மூச்சு என் மேல் படுகின்றபோது என் மூச்சும் சூடாகுதே
கொதித்தால் என்னம்மா குயிலே கண்ணம்மா அணைத்தே அள்ளம்மா அழகே செல்லம்மா
மேகம் நீதானே மின்னல் கொடி நான் தானே
மடி மேல் வா வா மீன் போலே ஹோய்

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Apr 11, 2018 7:09 pm

#56 காதல் நிலாவே பூவே கை மீது சேர வா (மணிக்குயில், அருண் மொழியுடன் டூயட்)

While I can die for Arun mozhi's magic with flute - perfect reproduction of what IR wants, not just in studio but on stage too, I can't say the same for his singing. Of course he may not make any mistakes (with pitch pace etc), typically it is lifeless rendering IMHO. He is simply not playback singing material IMVSO. I'm 200% sure it was only project management requirements (or some whim) that made IR deploy him for so many numbers Embarassed

Well, despite all my dislike for his singing, I can tolerate this song Smile One of those better ones - may be the saraNam melody hides all the shortcomings of the singers. Especially the ending of saraNam and the "connector sangathi" from end of saraNam to pallavi - WOW!

Vaali's pAdal varigaL are quite nice too!

Audio :
https://www.youtube.com/watch?v=dkVpp1kLLnU

Video:
https://www.youtube.com/watch?v=AthH-KLAFes


பல்லவி :

காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
ஆசைக்கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட
இளமாலை நேரம் தான்

சரணம் 1: 

ஏட்டில் ஒரு பாவலன் எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை புனையாத ஓவியம்
மீன் வளர்க்கும் என் கண் தேடுதுன் சொந்தம்
தேன் வளர்க்கும் என் வாய் பாடுதுன் சந்தம்
நீராடும் ஓடையே எனக்கெனக் குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே அன்பே வா

சரணம் 2:

நாளும் உனைக் கூவிடும் துயிலாத பூங்குயில்
நீயும் எனை வாட்டினால் உறவேது பூமியில்
நான் விரும்பும் பொன் மான் தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும்
சேராது உன் மடி தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே அன்பே வா

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Apr 12, 2018 9:39 pm

#57 தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே (மணிக்குயில், மனோவுடன் டூயட்)

This is one of those "northie genre" songs that slowly started alienating IR from the TN public in 90's, IMHO.

Predominantly "dOlak" sounds and a lot of indhi style orch Sad

It was nothing new for IR - he had done some such numbers from time to time in the prior years too (like one song in dharmaththin thalaivan - veLLi maNikkiNNaththilE), but those were rare and far between. More of curiosity value than mainstream. OTOH, such dOlak songs seemed to have become one too many in the early 90's. May be the huge success of 'chinna rAsAvE siththeRumbu onna' compared to the other songs of the album pushed IR in that direction Sad

Unfortunately, such ones easily got replicated by the likes of Deva - somewhat diminishing the uniqueness of IR.

Actually, if someone had not authenticated it (as in this reliable Anbu sir's spreadsheet), it would have been hard for someone to convince me that this is indeed a rAsA song Embarassed The pAdal varigaL of Ponnadiyan has nothing much to appreciate either - sangeetham sAreeram, AlApanam & such vocabulary Embarassed

Interestingly, such hitherto-unknown-to-me-IR-songs are among those with millions of hits on youtube Shocked

Proof that my taste is so much alienated from the majority crowd that frequents youtube...

https://www.youtube.com/watch?v=YBTtq5O_rdg


பல்லவி :

தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார் தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா

சரணம் 1:

உன்னிடத்தில் இத்தனை நாள் உண்மை ஒன்றை மறைத்ததுண்டு
சின்னஞ்சிறு வயது முதல் எனக்கொரு மனைவியுண்டு
கோபம் கொள்ள வேண்டாமம்மா ஹோய் தாங்கிக்கொள்ள வேண்டுமம்மா
நல்லவன் என்று உன்னையே நினைத்தேனே உண்மையறிந்து துடித்தேன் நான் தானே
போட்டதென்ன வேஷம் இனிப் போதும் போதும் மோசம்
நான் சொன்ன சம்சாரம் எந்தன் சங்கீதம்
இதைக் கண்டு கொள்ள முடியாமல் ஆர்ப்பாட்டமா?

சரணம் 2:
நெஞ்சை அள்ளும் பாடலிலே என்னையள்ளிக் கொடுத்துவிட்டேன்
நல்ல இசைத்தேடலிலே வேறெதையும் மறுத்துவிட்டேன்
என்னுடையே சங்கீதம் நீ ஹோய் உன்னுடைய சாரீரம் நான்
ஒன்றையொன்று தான் இனிமேல் பிரியாது அள்ள அள்ளத்தான் அமுதம் குறையாது
தெள்ளுதமிழ்ப் பள்ளு உன் கண்ணில் உள்ள கள்ளு
எந்நாளும் உன் நாதம் என்னை நீங்காது
இனிக்காலம் தோறும் ஓயாது ஆலாபனம்

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Apr 13, 2018 11:01 pm

#58 உந்தனின் பாடல் என்னை எங்கோ கொண்டு செல்ல (ராக்காயி கோயில், மனோவுடன் டூயட்)

Another lackluster song from the year 1992 (first time listen for me and I'm definitely not impressed Embarassed Would have dismissed as a non-IR number if presented without authentication).

Well, the singers could not add much is pretty obvious when IR himself appeared to have composed this number without much interest, IMHO. I'm not simply alleging - just listen to the unimaginative call-response (with strings) in the anu pallavi portion - one would never expect this "northie" style silly thingy from the great maestro!

Pulamaippiththan adds to the woes with unimaginative lines - despite trying to do some double meaning thingy & all (ஆலிலையின் வாசலிலே அந்திமழை சிந்தி விழ வேண்டும் Embarassed Embarassed )

Documenting this as part of the thread exercise...

https://www.youtube.com/watch?v=YB1WVigDzsg


Some hi-res version audio (nothing impressive, however)

https://www.youtube.com/watch?v=RWIDTII2NVQ

பல்லவி :

உந்தனின் பாடல் என்னை எங்கோ கொண்டு செல்ல
உள்ளத்தின் ஆசை தன்னை இன்னும் என்ன சொல்ல
ராத்திரி தூக்கம் வருமோ கண்களை மூட விடுமோ
காற்றிலும் இந்தக்கொதிப்போ காதலில் வந்த தவிப்போ

சரணம் 1:

பூவிதழின் தாழ் திறந்து வண்டு வந்து கள்ளருந்திப் பாடும்
பூமி எது வானம் எது என்று சொல்லி அங்கும் இங்கும் தேடும்
இன்பத்தின் வேதனை ஏதோ மானே மானே
என்னென்று பார்த்திட வந்தேன் நானே நானே
நித்திரை போனது உன்னால் தானே தானே
நித்தமும் நெஞ்சினில் ஊறும் தேனே தேனே
காதலெனும் போதையிலே காலங்கள் தானேதடி ஹோ

சரணம் 2:

ஆசையிலே பேசையிலே சொர்க்கம் இந்த மண்ணில் வர வேண்டும்
ஆலிலையின் வாசலிலே அந்திமழை சிந்தி விழ வேண்டும்
உந்தனின் பார்வையில் ஏதோ மாயம் மாயம்
உந்தனின் பார்வையில் எங்கும் காயம் காயம்
நெஞ்சினில் ஆயிரம் மின்னல் ஓடும் ஓடும்
கண்களும் ஆனந்த நீரில் ஆடும் ஆடும்
மார்கழியின் ராத்திரியில் மன்மத ஆராதனை ஹோ

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Apr 16, 2018 5:53 pm

#59 இந்த மாமாவுக்குத் தண்ணி வைக்கலாமா? (மகுடம், சித்ரா / ஸ்வர்ணலதாவுடன் குழுப்பாடல்)

After couple of not-so-great numbers in this thread, what a refreshing change with this song!

A stunner that can boast of a number of typical IR-only kind of elements that differentiate the master from the crowd Smile

I've never heard this song before (many websites do not credit UR in this song at all - what a pity! However, Lakshman Sruthi site - where I've got the lyrics that needed minor tinkering - lists UR, like our spreadsheet).

Apparently for a Pratap Pothen movie and it goes without saying that IR always does special work for him (regardless of all the claims that he treats every director same, there are some who somehow "inspire him" and thus get special treatment! )

Sweet song that gets everything right - the melody, orch, singing - all top notch; one can even call this song the "reference version for Rudramadevi's "andhappuramulO" number Smile
(exception : the pAdal varigaL by Vaali - OK for the song / situation etc but not palatable to me)

https://www.youtube.com/watch?v=lrKqOGNYl28


பல்லவி :

இந்த மாமாவுக்குத் தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தித் தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டுப் பாடி வரலாமா
நானாகத்தான் தேடிப் போயித் தொட மாட்டேன்
தொடுப்புட்டா காலை வாரி விட மாட்டேன்
இடம் தான் கெடச்சதும் உடும்பாய்ப் புடிப்பவ நான்

சரணம் 1:

நான் பட்ட பாடு என்ன சொல்ல நூலாகிப் போனேன் மெல்ல மெல்ல
தாலி கட்டி வந்த தாரமுன்னு பேரு வாடி நின்னேன் பல நாளு
வீட்டுக்கு வீடு வாசப்படி வெக்கத்த விட்டு ஆளப் புடி
ஆம்பள தான் ஒரு கல்லுப்புள்ளையாரு அசச்சிடத் தான் வழி பாரு
சிவகாமி உன் ஆசாமி உன் பின்னோடு வர அடியே இது தான் சமயம்
புடவத் தலப்புலப் புருஷன் அடங்கிடுவான்

சரணம் 2:

சாமத்தில் கூடக் காத்திருந்தோம் சாமந்திப்பூவாப் பூத்திருந்தோம்
வாடியம்மா இப்ப வந்திடுச்சு வேள ஆனந்தம் தான் இனி மேல
வேலைக்குப் போயி வீடு வரும் ஆணுக்கு எப்போ மூடு வரும்
குளிப்பாட்டி அதக் கொண்டு வர வேணும் சரண்டரு தான் எந்த ஆணும்
பூவோடு உன் பாவாட ஓர் போதை தான் தரும் மயிலே இளமாங்குயிலே
மடி மேல் விழுந்தவன் மறு நாள் எழுந்திடுவான்

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Apr 17, 2018 7:32 pm

#60 அம்மா புள்ளையா நீ அப்பா புள்ளையா ( தென்றல் வரும் தெரு, மனோ / பேபி பிரசன்னாவுடன் குடும்பப்பாடல்)

A fun song that suits UR quite well and Mano does a neat job as well, without much complications. Otherwise there's not much to write about a simple number where dad and mum does some konjal and fight in front of the child.

Mu.Mehta has penned the lines for a soft melody and the orchestration is quite minimal too. I guess the song does not have video and no youtube can be found (except a privately made one Laughing )

The audio link:
http://download.tamiltunes.live/songs/__P_T_By_Movies/Thendral%20Varum%20Theru/Amma%20Pillaiya%20-%20TamilWire.com.mp3

Some family video posted on youtube, with decent quality audio of this song:

https://www.youtube.com/watch?v=QB1NfWAXu5w

பல்லவி:

அம்மா புள்ளையா நீ அப்பா புள்ளையா 
சும்மா சொல்லம்மா என் செந்தூரப்பூ நீயம்மா 
கண்ணான கண்ணே என் கண்ணம்மா முத்தான முத்தே என் முத்தம்மா 

செல்லப்புள்ள தான் நான் நல்ல புள்ள தான் 
(அம்மா புள்ள தான் நான் அப்பா புள்ள தான்)
அப்பாவும் அம்மாவும் என்னோட கைக்குள்ள தான் 
அம்மா என் அம்மா நீ அம்மம்மா அப்பா என் அப்பா நீ அப்பப்பா 

சரணம் 1:

வண்டலூர் சூவுக்குக் கூட்டிட்டுப்போறேன் சுற்றுலாக் கண்காட்சி காட்டிட்டு வாரேன் 
தங்கத்தில தொட்டில் கட்டித்தந்தாலும் பெண்ணே தாய் மடியைப்போல அது ஆகாது கண்ணே 
பள்ளியில சேர்த்தது நானு - கண்ணப்போல காத்தது நானு 
சீராட்டும் தந்தை நானே - தாலாட்டும் அன்னை நானே 
அப்பா புள்ள ஒத்துக்க இப்ப வீரத்த நீ கத்துக்க இப்ப 
யாரு புள்ள சொல்லட்டும் பாப்போம், சொல்லு சொல்லு சொல்லு

சரணம் 2:

அம்மாவோட ரத்தம் பாலாக மாறும் அதனால புள்ள தாயோட சேரும் 
தந்தையோட வேர்வை மண்ணில் சிந்தாட்டிப் பெண்ணே 
தாயிடத்தில் ரத்தம் கூட ஊறாது கண்ணே 
தூக்கத்தில முழிச்சவ நானு - துன்பங்களை சகிச்சவன் நானு  
சோறெடுத்து ஊட்டினதாரு - வாழ வழி காட்டுவதாரு
அம்மா புள்ள ஒத்துக்க இப்போ பாசத்த நீ கத்துக்க இப்போ 
யாரு புள்ள சொல்லட்டும் பாப்போம், சொல்லு சொல்லு சொல்லு

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 3 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum