Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

+9
SenthilVinu
groucho070
jaiganesh
plum
rajeshkrv
Admin
sagi
V_S
app_engine
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  groucho070 Wed Nov 28, 2012 9:28 am

App, T.P. Gajendran is also an actor now, minor comedian. Short tubby guy, the one who directs Kamal as Lord Shiva (Sivan bubble oothamAttaru Sambantham) in PKS.

Can't remember the movie, but the song was a bit of a hit among us over here. Constant radio play. Good one, app, especially the explanation on "ayee".
groucho070
groucho070

Posts : 269
Reputation : 1
Join date : 2012-11-26

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Nov 28, 2012 8:13 pm

கள்ளக்குரலில் பாடுதல் என்பது மேற்கத்திய இசைத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறை என்றாலும் தமிழ் மரபிசை விரும்பிகள் (மற்றும் "முயற்சி" விரும்பிகள்) அவ்வகையில் பாடுவதை எள்ளி நகையாடுவதை சில சமயம் கண்டிருக்கிறேன்.

80'களில் வந்த ஒரு அரசு பதில் (குமுதம்) உடனடியாக நினைவுக்கு வருகிறது:

கேள்வி: ஜானகியின் குரல்?

அரசு பதில்: அது கால் குரல்!

என்ன பொருளில் சொன்னார் என்று எனக்குப்புரியவில்லை என்றாலும் என் பெரியம்மா பையன் சொன்ன விளக்கம் "கள்ளக்குரல்" என்பதாக. (இப்போது கேட்டால் "குவார்ட்டர் / போதை தருவது" என்று ஒரு வேளை மாற்றிச்சொல்லலாம்).

எது எப்படி இருந்தாலும், நான் கேட்ட வரை, சுசீலாம்மாவுக்கு அது தேவைப்பட்டதே இல்லை என்றே தோன்றுகிறது. மட்டுமல்ல, அவரது பிரபலக் கூட்டுப்பாடகரான டி எம் எஸ் போல "மூக்குக்குரலிலும்" பாட வேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

இதனாலோ என்னமோ, ராசா கவலையே படாமல் சுசீலாவுக்குப் பாட்டுகள் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். பொதுவாக அவருக்குத் "தரம் தாழ்ந்த" வரிகள் உள்ள பாடல்கள் / முக்கல் முனகல் வகையறாக்கள் கொடுத்ததில்லை என்பதைத்தவிர "இதை இவர் குரல் கையாளுமா, பாட முடியுமா" என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை!

இசைக்கருவிகள் இல்லாமல் வரும் அந்தத் தொடக்க வரிகளெல்லாம் அவ்வளவு இனிமை. (திரைப்பாடகிகள் எல்லாருக்கும் இது சரிவரும் என்று சொல்ல இயலாது). கொஞ்சம் வயதாகி விட்டிருந்தது என்ற போதிலும் ஒரு அலட்டலும் இல்லாமல் இந்தப்பாடலின் கடினமான பகுதிகளை அவர் ஊதித்தள்ளுவதை நாம் காண முடியும். ("பொண்ணு மணித்தேரு, நான் பூட்டி வச்சேன் பாரு" எல்லாம் ஒரு அலட்டலும் இல்லாமல் விளையாடுகிறார்!)

இவற்றுக்கெல்லாம் மேலே அவர் உள்ளடக்கி வைக்கும் சங்கதிகள்! அம்மம்மா! என்ன ஒரு இனிமை - "நானாப்பாடலியே" வை இறுதியில் இரு முறை பாடுவதைக் கவனியுங்கள்! முதல் முறை ஒரு விதம் - தொடர்ந்து வருவது இன்னொரு விதம்!

பொதுவாக "நாகரிகப்"பாடல்கள் இவர் வசம் செல்லும்! (பட்டிக்காட்டுப் பாடல்கள் ஜானகிக்கும் மற்றுள்ள பாடகிகளுக்கும்)... என்றாலும், இந்தப்படத்தின் அத்தனை நாட்டுப்புறப்பாடல்களும் முழுமையாக அம்மாவுக்கு ராசா கொடுத்திருக்கிறார். அவரும் விளாசித்தள்ளி இருக்கிறார்! நூறு சதவிகிதம் பட்டிக்காட்டுத்தன்மை இல்லை என்பது உண்மை தான். ஆனால், 80-களில் தமிழ்நாட்டு நாட்டுப்புறத்தில் வாழ்ந்த, ஒரு அஞ்சாங்கிளாஸ் வரையாவது படித்த பெண்களுக்குக்கூட நாகரிகச்சாயல் பேச்சில் வந்து விட்டிருந்தது என்பது உண்மை!

அவ்விதம், இவரது குரலும், பாடும் விதமும் சூழலுக்கு அருமையாக ஒத்துப்போவதை நாம் ஒத்துக்கொள்ளலாம்!


Last edited by app_engine on Wed Nov 28, 2012 8:25 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Nov 28, 2012 8:15 pm

தகவலுக்கும் கருத்துகளுக்கும் நன்றி ராஜேஷ் & க்ரௌசோ!

ஆச்சு, மூணு ஒருமைப்பாடல் முடிச்சாச்சு - அடுத்து டூயட்!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  rajeshkrv Fri Nov 30, 2012 10:03 pm

May be under IR's baton she did not sing much of folkish numbers but right from T.Chalapathirao , MSV,KVM and many others she has sung many many folkish tunes . for instance Kurunjiyile poo malarndhu, theru paaka vandhirukkum, othayadi pathayile, pambai udukkai katti and many more
where gramiya manam was brought out perfectly by her ...

rajeshkrv

Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Sat Dec 01, 2012 1:36 am

ஆச்சு, ஒரு டூயட் பாட்டுக்கான சமயம் ஆச்சு Smile

மேற்கத்திய "பொதுமக்களின்" இசை தற்போது முக்கால்வாசி தனியாள் பாட்டுகளே. சொல்லப்போனால், பல பத்தாண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் குழுப்பாடல்கள்! (தனியாள் பாட்டுகளையே தொழில்நுட்பம் கொண்டு பல சந்தர்ப்பங்களிலும் குழு போலக்காட்டி விடுகிறார்கள் என்பது வேறு).

இரட்டையர் பாடல்கள், அதிலும் ஆண்-பெண் பாடல்கள் மிக மிகக்குறைவே. 80-களின் மிகப்பிரபல பாடகர்கள், அதாவது மைக்கேல் ஜாக்சன், மடோன்னா போன்ற பிரபலங்கள் எத்தனை ஆண்-பெண் டூயட் பாடி இருக்கிறார்கள்? துருவித்துருவித் தேடினாலும் கண்டுபிடிப்பது மிகக்கடினம்.

தமிழ்த்திரை இசையோ இந்த விஷயத்தில் நமக்கு ரொம்ப தாராளமாக இருந்திருக்கிறது. மனிதன் எப்படி ஆண்-பெண்ணாக வாழ்கிறானோ அப்படியே நமது இசையிலும் ஆண்-பெண் இரட்டைப்பாடல்களைத்தந்து இயல்போடு ஒன்றி இருக்கிறார்கள்.

சமீபத்தில் நான் படித்த ஒரு ருசிகரமான கட்டுரை நினைவுக்கு வருகிறது. நீங்கள் படைப்பில் நம்பிக்கை உள்ளவர் என்றால் இதைக்கட்டாயம் படிக்க வேண்டும். பரிணாமவாதி என்றாலும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்பது என் கருத்து Smile

http://www.trueorigin.org/sex01.asp

ராசாவின் முதல் படத்தில் டூயட் இல்லை. ஆனாலும் அன்னக்கிளி மிகப்பிரபலம்! கிட்டத்தட்ட அதுவே தமிழ்த்திரை இசைக்கு ஒரு சின்னப் புரட்சி தான். அன்றுவரை முதலிடத்தில் இருந்த டூயட் பாடகர்கள் ரெண்டு பேரையும் சோகமான தனிப்பாடல் பாடி அழவைத்து விட்டு, இருந்த மற்ற குஷிப்பாடல்களையும் ஜானகிக்குக்கொடுத்து விட்டார்கள். (இதில் ராசாவின் பங்கு எவ்வளவு, பஞ்சு என்ன செய்தார், தேவராஜ்-மோகன் எப்படி வழிநடத்தினார்கள் என்றெல்லாம் உறுதியாகத்தெரியாது.)

நமக்குத்தெரிந்ததெல்லாம் இவ்வளவே : ராசாவின் முதலாவதும் மிகச்சிறப்பாக அமைந்ததுமான டூயட் பாட்டை சுசீலாவுடன் யேசுதாஸ் பாடவேண்டும் என்று காலம் முடிவு செய்து வைத்திருந்திருக்கிறது! Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Sat Dec 01, 2012 1:41 am

rajeshkrv wrote:May be under IR's baton she did not sing much of folkish numbers

சரியாகச்சொன்னீர்கள் - நான் ராசாவின் தெரிவுகளைப் பற்றி மட்டும் தான் அங்கே சொன்னேன்.

அவரைப்பொறுத்த மட்டும், குறிப்பாக வந்த புதிதில், சுசீலா = நவீனம் / நாகரிகம் Smile


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Tue Dec 04, 2012 12:37 am

ராசா இசையில் வெளிவந்த முதல் டூயட் பாடல் என்ற கணக்கிலானாலும் சரி, 35 வருடங்கள் கழிந்தும் இன்னும் இளைமைப் பொலிவுடன் இருக்கிறது என்ற பொருளிலானாலும் சரி, பத்ரகாளி படத்தின் இந்தப்பாடல் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது :

#4 "கண்ணன் ஒரு கைக்குழந்தை"  (சுசீலாவுடன் பாடியது யேசுதாஸ், திரையில் சிவகுமார் மற்றும் ராணி சந்திரா, பாடலாசிரியர் வாலி)

ஏன், பத்ரகாளியில் தானே ஜானகி / மலேசியா வாசுதேவனின் "ஒத்த ரூவா ஒனக்குத்தாரேன், பத்தாட்டியும் எடுத்துத்தாரேன்" இருந்தது, அதை விட இது எப்படி முந்தும் என்று ஒருவேளை சிலர் கேட்கலாம்.

அதற்கு என் விடை : இசைத்தட்டைப் பொறுத்த மட்டில், இது தான் முதல்! அந்த 'ஆராரிரோ, ஆராரிரோ' முடிந்தவுடன் தான் ஒத்த ரூவாவின் முக இசை தொடங்கும் என்பதைக் கவனத்தில் கொள்க. பல நூறு முறை "கொம்பு / கூம்பு ஒலிப்பானில்"  (ஹார்ன்  ஸ்பீக்கருக்கு  என்  தமிழ்... மலையாளத்தில்  "கோலாம்பி")   கேட்டுக்கேட்டு எனது மனதில் ஆட்டோமேட்டிக் ஆக அந்தத்தாலாட்டு ஒலியைத்தொடர்ந்து 'டொடோடோ டோடோடோ' என்று இசைக்கருவி  ஒலிக்கத்தொடங்கி விடும்!

வானொலி மற்றும் இசைத்தட்டில் நாம் கேட்கும் வெர்ஷன் ஒன்று...திரையிலும் திரைப்பாடல் இணையத்தளத்திலும் இருக்கும் வெர்ஷன் வேறொன்று. அதனாலோ என்னமோ இசைத்தட்டில் உள்ள பதிப்பில் யேசுதாஸ் கண்ணுறக்கம் மறந்ததம்மா' என்று பாடுவதற்கும் சுசீலா 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' என்று தொடங்குவதற்கும்  இடையில் ஒரு சின்ன "வெட்டி இழுத்தல்" (ஜெர்க்) இருக்கும். (உற்றுக்கவனித்தால்  தெரியும்).

இசைத்தட்டில் இருக்கும் பதிப்பு கேட்க:
http://download.tamilwire.com/songs/__A_E_By_Movies/Bathrakali/Kannan%20Oru%20-%20TamilWire.com.mp3

திரைப்பாடல் :
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0393'&lang=en

யூட்யுப் இங்கே:


பாடல் வரிகள்:

(மேற்சொன்ன இரு பதிப்புக்குழப்பமும், சரணங்களுக்கு இடையில் புதிய பல்லவி வரிகளின் வருகையும் கருத்தில் கொண்டு, இந்தப்பாடலை பல்லவி-அனுபல்லவி-சரணம் என்றெல்லாம் பிரிப்பது கடினமாக உள்ளது)

கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

உன் மடியில் நானுறங்க
கண்ணிரெண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடி வரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

(பின் வருவன திரையில் மட்டும் உள்ள வரிகள்)

மஞ்சள் கொண்டு நீராடி
மை குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடுமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா


(மீண்டும் பல்லவி, இசைத்தட்டிலும் திரையிலும்)

கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

ஆராரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
ஆராரிரோ...


Last edited by app_engine on Fri Mar 14, 2014 6:14 pm; edited 2 times in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  rajeshkrv Wed Dec 05, 2012 2:52 am

These are the songs which make me say "we need that IR of that era". sheer magic is the tune .. right from the start where the cradle is shown with a toy hanging on top of it(typical of middle class families) and husband teasing wife.. This is the first movie and very first song of Vaali for IR. A.C.Thirulokachander who directed MGR/NT under huge banners directed this classic Bhadrakali,though Sivakumar was the hero , actual hero was Ranichandra and her body double who gave a performance of her life time.. ACT being a veteran director and music lover(look at all his films, songs would be top class ) brought out the best of IR .. in one movie he made IR to give all types of songs be it romantic,folkish, classic-kadha kalakshepam what not.. Though all songs are gems 2 songs stood out , one the evergreen romantic song "Kannan oru kai kuzhandhai"
vaali plays with words here being a brahmin hero it's custom to do gayathri japam and heroine's name being gayathri vaali effectively uses
"Gayathri mandhirathai ucharikkum bakthanamma" .. KJY doing what Sivakumar did in the movie (keeping subtle) while PS doing what RC did in the movie.. she drives the song starting till end and what a rendition..."thella thelivana" rendition ...

other song which is on par with this was "Kettele ange "another fantastic solo by PS ..

Thanks for the pick app. Kannan endrume kaizkuzhandhai thaan

rajeshkrv

Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  SenthilVinu Wed Dec 05, 2012 5:13 pm

Gold! Excellent write-ups. Like the way you are giving multi-dimensional information about the songs.

SenthilVinu

Posts : 80
Reputation : 0
Join date : 2012-11-17

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Dec 05, 2012 7:51 pm

மிக்க நன்றி, செந்தில் சார்!

நான் எஸ்பிபி - ராசா இழையில் எப்போதும் சொல்லுவது போல, உங்கள் ஊக்குவிப்புகள் எல்லாம் கரும்பு தின்னக்கிடைக்கும் கூலி!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Dec 05, 2012 11:29 pm

பத்ரகாளி படம் இதுவரை நான் பார்த்ததில்லை என்றாலும், ராசாவுக்கும் அப்பால் இந்தப்படத்தோடு எனக்கு ஒரு சிறு தொடர்பு இருக்கிறது. பள்ளிக்காலத்தில் ஆண்டுவிழாவுக்கு என்று போடப்படும் நாடகங்களில் "கணக்கு வாத்தியார் மகன்" என்ற தகுதியினால் மெல்ல நான் நுழைந்து விட்டிருந்த காலம் அது. (அதற்கு அப்பால், வசனங்களை உருப்படியாக மனப்பாடம் செய்யக்கூடியவர்களும் அந்தச்சிறு பள்ளியில் அக்காலத்தில் வெகு சிலரே).

அப்படிப்பட்ட ஒரு "ஓரங்க" நாடகத்தில் பொண்டாட்டிக்குப்பயப்படும் பாத்திரத்தில் நடித்து, பஞ்சாரக்கூடைக்குள் எல்லாம் ஒளிந்து கூட்டத்தாரை சிரிக்க வைத்த போது, அதை இயக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் ரிஹர்சல் சமயத்தில் திடுக்கென்று ஒரு மசாலா சேர்த்தார். ("பஞ்சாரக்கூடை" = கோழி + குஞ்சுகளை அடைத்து வைக்கும் கூடை, சின்னப்பையன் என்பதால் உள்ளே உட்கார அவ்வளவு கடினமில்லை. இந்தக்கூடை சில பாரதிராஜா படங்களில் காண முடியும்).

மசாலா? பெரிதாக ஒன்றுமில்லை, நானே சில வரிகள் ஏதாவது ஒரு திரைப்பாடல் பாடி ஆட வேண்டும் என்ற ஒரு காட்சி. சிரிக்க வைக்கத்தான் என்றாலும், "மேடையில் பாடி ஆடுவதா" என்று எனக்கு ஒரே வெட்கம். Embarassed வேடத்துக்கு வேட்டி / துண்டெல்லாம் வேறு - அவையெல்லாம் அவிழ்ந்து கிவிழ்ந்து விழாமல் வேறு ஆட வேண்டும். அதாவது, ஒரு பொண்டாட்டிதாசன் "தைரியமாக" அவளுக்குத்தெரியாமல் சினிமா பார்த்துவிட்டு அந்தப்பாட்டை வேறு ஆனந்தமாகப் பாடி ஆடுகிறானாம். உலகம் எவ்வளவு சிம்பிள் ஆக அந்தக்காலத்தில் இருந்திருக்கிறது பாருங்கள்!

அப்படி அவன் பார்ப்பதாகச்சொன்ன படம் பத்ரகாளி. அப்படியாக பல்லவி மட்டும் பாடி நான் ஆடிய பாடல் 'கேட்டேளே இங்கே'. அதனால் ரிஹர்சல் சமயத்தில் பெரியவர்கள் எல்லாம் இந்தப்படத்தைப்பற்றி விலாவாரியாகப் பேசி, வானூர்தி விபத்தில் இறந்து போன ராணிசந்திராவுக்காக இரக்கப்பட்டது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. (என் அம்மா : "அந்தப்பொண்ணு என்னா அருமையா ஆட்டம் போட்டு நடிச்சுச்சு, அய்யோ பாவம்").

அந்தக்காலத்தில் வானூர்திகளே மிகக்குறைவு. என்றாவது ஒரு நாள் சத்தம் கேட்டால் எல்லோரும் வெளியே ஓடி வந்து அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருப்போம், மறையும் வரை...(வீட்டுக்கிட்டத்தில் டெட்ராய்ட் மெட்ரோ ஏர்போர்ட் என்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை இறங்கும் விமானங்கள் தலைக்கு மேல் பறக்கும் இன்றைய நிலையை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை). கூடாமலும், வானூர்தி விபத்து என்பது அன்றும் இன்றும் மிக அரிது என்பதால், அன்று புயல் - சுனாமி அளவுக்கு ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்று!

ராணி சந்திரா இறந்த விபத்துக்குள்ளான விமானம், "பதிலாக வந்தது" என்பதும், முதல் விமானம் கோளாறு காரணமாகத் திரும்பிய பின், பயணிகள் இறக்கி இதில் ஏற்றப்பட்டனர் என்பதும் விபத்து பற்றி இன்னும் அதிகம் ("விதி வலிது" இத்யாதி) பேசக் காரணம் ஆனது. சில இணைப்புகள் இங்கே:

http://en.wikipedia.org/wiki/Rani_Chandra
http://aviation-safety.net/database/record.php?id=19761012-0
http://en.wikipedia.org/wiki/Indian_Airlines_Flight_171

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Fri Dec 07, 2012 11:05 pm

தெளிவாகவே, கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடலின் மிகச்சிறந்த அம்சங்கள் மெட்டும் சுசீலாவும்! அடுத்து யேசுதாஸ்! ராசாவின் பொதுவாகக் குறிப்பிடத்தக்க அம்சமான கருவி இசை, இந்தப்பாடலில் "ஒத்துழைப்பு" வேலை மட்டுமே செய்கிறது எனலாம்.

மூன்றடி சுழற்சியில் தகிட தகிட தாளம் வழக்கம் போல இனிமையும் ஓட்டமும் அளிக்கிறது! அடுத்த காலத்தில் நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்களில் பெரும்பான்மை இந்தத்தாள அடிப்படையிலேயே இருப்பது ஒரு வியப்பான நிலை தான்! ஒரு வேளை வயதாக ஆக வால்ட்ஸ் இசை அதிகம் பிடிக்குமோ என்னமோ...Embarassed (நேற்று முழுவதும் 'கையெத்தா தூரத்துக் கண் எத்தேணம்' வண்டியில் பாடிக்கொண்டிருந்தது!)

இவ்வகை மனநிலையில் விக்கி அவர்கள் சொல்வனத்தில் எழுதிய "இளையராஜாவின் ஜாஸ் வால்ட்ஸ்" கட்டுரை படிக்கவும், அதிலுள்ள இசைத்துளிகள் கேட்கவும் இதமோ இதம்!

http://solvanam.com/?p=19324

முக இசையில் வரும் கருவி கீபோர்டா அல்லது சந்தூரா அல்லது வேறு ஏதாவது பியானோ / ஹார்ப்சிகார்ட் மாதிரி குறிப்பிடத்தக்க கருவியின் மாறுபட்ட பயன்பாடோ என அறியேன். (வேறொரு இழையில் இந்தக்கேள்வி கேட்டிருக்கிறேன், விடை வந்த பாடில்லை). மிக இனிமையான இந்தக்கருவி தொடக்க காலத்து ராசா பாடல்களில் எப்போதும் பயன்படுத்தப்பட்டிருப்பது நாம் அறிந்ததே! இப்பாடலின் சரணத்திலும், சுசீலா 'என்னெவென்று சொல்வேனோ' முடித்ததும் யேசுதாஸ் 'ஏழ்பிறப்பும்' எனத்தொடங்கும் முன்னர் இந்தக்கருவி ஒரு மென்மையான 'இணைப்பு இசை' கொடுப்பதைக் கேட்கலாம்!

பாடல் நெடுகிலும் மென்மையாக வரும் கிட்டார் ஒலிகள் (பேஸ் மற்றும் கார்ட்ஸ்) வழக்கம் போல இனிமை (அவ்வளவு தூக்கலாக இல்லை என்றாலும்). இடை இசையில் குழல் மற்றும் வீணையின் நாதம் மெய் சிலிர்க்க வைக்கிறது! அதே போலத்தான் வயலின்களின் ஒத்திசைவும்! பல்லவியில் பாடகியின் கூப்பிடுதலுக்கு ("கண்கள் சொல்லும் பூங்கவிதை") வயலின்கள் வந்து "ஆமாம், ஆமாம்" என்று பதில் கொடுப்பது சர்க்கரையைத் தேனில் குழைத்து நாவில் வைப்பது போல!

அதே போல யேசுதாஸ் 'என்னவென்று சொல்வேனோ' என்று முடிக்கும் போதும் 'ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா'' என்று பாடும் போதும் கூடவே வந்து குழையும் குழலொலி! அடடா! மெல்லிய மழைச்சாரலின் சுகம்!

இப்படியெல்லாம் பல சிறப்புகள் இருந்தாலும், இவற்றை எல்லாம் ஒரேயடியாக மறைப்பன நான் முன்னமேயே சொன்ன மாதிரி இனிமையோ இனிமையான மெட்டும் அம்மாவின் பாடும் விதமும்!

அதிலும் ராசா இந்த இரண்டு வரிகளுக்கு ரெண்டு மெட்டுகள் இட்டு நம்மை வியக்க வைக்கிறார்:

"உன்மடியில் நானுறங்க, கண்ணிரண்டும் தான் மயங்க, என்ன தவம் செய்தேனோ, என்னவென்று சொல்வேனோ!"

முதலில் ஆண் குரல் (ஒப்பிடும்போது) கீழான அலைவரிசையில், ஒரு மெட்டில், அமைதலுடன் இவற்றைப் பாடுகிறது. (ராஜேஷ் அவர்கள் சொன்னது போல, ஒப்பீட்டில் அமைதியான ஆண் பாத்திரத்தின் ஆளுமையை இது காட்டுகிறது எனலாம்). தொடர்ந்து வரும் பெண் குரலோ வேறு மெட்டில், கொஞ்சம் மேலான அலைவரிசையில், கொஞ்சம் அதிகமான சக்தியோடு இதைப்பாடும் போது, நிச்சயமாக, உத்தரவாதமாக, ரோமாஞ்சம்!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  SenthilVinu Sat Dec 08, 2012 2:10 am

Arumai!

Being sick has it's benefits. I'm able to read so much material on Raja like this and digg into his songs.

SenthilVinu

Posts : 80
Reputation : 0
Join date : 2012-11-17

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Mon Dec 10, 2012 11:27 pm

நன்றி செந்தில்!

கண்ணன் ஒரு கைக்குழந்தை குறித்து ஒரு பதிவு கூட எழுத மிச்சம் இருக்கிறது...மிகச்சிறந்த அம்சமான "அம்மாவின் பாடும் விதம்"!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Tue Dec 11, 2012 12:15 am

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே!

அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லிவிழி மூடம்மா!

அன்பில் மலர்ந்த நல்ரோஜா கண்வளராய் என் ராஜா !

இது போன்ற சுசீலா பாடல்கள் எல்லாம் எனக்குச் சின்ன வயதில் அம்மா கண்டிப்பாகப்பாடி இருப்பார்கள் - ஏனென்றால், மற்ற பல சின்னப்பிள்ளைகளை இந்தப்பாடல்கள் பாடி அவர் தாலாட்டுவதை நான் பின்னாட்களில் கண்டிருக்கிறேன். அப்படியே சுசீலா பாடுவது போலவே இருக்கும்! அப்படியாக, தாலாட்டும் சுசீலாம்மாவின் குரலும் என்னைப்பொறுத்த மட்டில் இணைபிரிக்க முடியாதவை! பலமுறை "இளைய-பாலு" இழையில் சொல்லி இருப்பது போல, சுசீலா குரல் எனக்கு எச்.எம்.வி. (ஹிஸ் "மதர்ஸ்" வாய்ஸ்)!

ஆராரிரோ, ஆராரிரோ என்று பத்ரகாளி பாடலில் அவர் பாடுவது சின்னக்குழந்தைக்காக இல்லை என்றாலும் தாலாட்டு தானே Smile அந்த இனிமையும், சாந்தமும் அப்படியே நம்மை அன்னை மடிக்கு அழைத்துச்செல்லும்! தம்பி தங்கைகள் மற்றும் கசின்களோடு அந்த மென்மையான "மெத்தை"யில் இடம்பிடிக்க முண்டியடித்த காலங்கள் மறக்கக்கூடியவையா?

இந்தப்பாடல் வந்தபுதிதில் "தலைவன்-தலைவி"ப்பாடல் என்று புரிந்து கொள்ளும் வயதில்லாததால், பல்லவி மட்டுமே மனதில் இறங்கி இருந்தது. "கையிரண்டில் நானெடுத்து" என்பதை, அப்பாவும் அம்மாவும் சேர்ந்து குழந்தையைத் தாலாட்டுவதாகவே நினைத்திருந்த காலம் அது Embarassed ! நாட்கள் செல்லச்செல்லத்தான் இருவரும் மாறி மாறி "உன்மடியில் நானுறங்க, கண்ணிரண்டும் தான் மயங்க" என்பதெல்லாம் மனது ஆராயலானது! Laughing படம் பாராமல் பாட்டுக்கேட்பதில் உள்ள, இப்படிப்பட்ட குழப்பங்களுடன் கூடிய சுகமே அலாதி தான்!

சுசீலாவின் குரல் இந்தப்பாடலில் போதுமான அளவு இளமையும் அதே அளவு முதிர்ச்சியும் கொண்டு தனித்தன்மையுடன் இருக்கிறது எனலாம்! காதலர்களுக்கு இளமை - குழந்தைகளுக்கோ அன்னையின் அரவணைப்பு போன்ற ஒரு உணர்வு! அபூர்வமான குரல், அபூர்வமான பாடும் விதம், அதிசயமான பாடல்!

சுசீலாவை நேரில் கண்டவர்கள் மற்றும் பழகினவர்கள், அவரது பேச்சுத்தமிழ் அவ்வளவு சரளம் அல்ல என்று எழுதிக்கண்டிருக்கிறேன். தடுமாற்றங்கள் இருக்கும் மற்றும் தெள்ளத்தெளிவு அல்ல என்று சொல்லுவார்கள். ஆனால் அவரது பாட்டுகள்! இவரைப்போல் இன்னொருவர் தமிழில் பாட முடியுமா என்பது போலிருக்கும்! 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 100% மொழி தெரியாத நிலையில் இப்படி அவர் பாடி இருப்பது, கண்டிப்பாக உலக அதிசயங்களில் ஒன்று!

ஒவ்வொரு அசையும், சீரும், பதமும், வாக்கும் தெள்ளத்தெளிவாக, சரியான அழுத்தம் மற்றும் உணர்வுடன் பாடி, இந்தப்பாடலை ராசாவின் வரலாற்றிலேயே மிகச்சிறப்பான, மிக அரிய பாடல்களில் ஒன்றாக ஆக்கிவிட்டார் இந்த அம்மணி!

இதற்கு மேல் சொல்ல எனக்கு இசையறிவும் இல்லை, மொழிப்புலமையும் இல்லை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  V_S Tue Dec 11, 2012 12:23 am

I was silently reading your wonderful posts. Waiting for you to complete your writing about this song. Very Happy Very well done App sir: cheers Definitely a new feeling reading in our mother tongue, always special! You have glorified the song and P Susheela amma! The way you normally write about the song (from SPB-IR thread) is one post per song, but this one seems like 'anu-anuva-rasithu-ezhuthara-style', I like it very much. Very Happy
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Tue Dec 11, 2012 6:03 pm

மிக்க நன்றி வி எஸ்ஜி!

தினமும் ஒரு பாட்டுக்கு ஒரு பதிவு என்ற முறையில் 400க்கும் அதிகமான பதிவுகள் இளைய-பாலு இழையில் (படு வேகத்தில்) செய்து அலுத்து விட்டது.

ஆற அமர சுவைப்பது என்று முடிவு செய்தே இந்த இழையில் இறங்கினேன் Smile

அடுத்த ஐந்தாவது பாடலும் ஒரு சுசீலா-யேசுதாஸ் டூயட் பாடலே...


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  kiru Wed Dec 12, 2012 9:48 am

To me, early IR had a very song resemblance to MSV. badrakali.kannan_oru_kaikuzhandhai falls into this category in my book. Anyway, P Susheela is my favorite female voice and later Chitra. PS's voice has a pristine clarity to it. As app mentions, there is a gentle, dignified sweetness to it, as well. Always majestic. Nice writing, app. Looking forward to more.
(you probably inherited the music gene from your mom. Looks like math and music are very genetic)

kiru

Posts : 551
Reputation : 3
Join date : 2012-10-31

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Dec 12, 2012 11:33 pm

நன்றி, கிரு!

அடுத்த பாடலில் கொஞ்சம் ராசாவின் இசைப்பதிவு(ஒலிப்பதிவு)க் குழப்பங்கள் பற்றிய என் கருத்துகள் இருக்கும், நீங்கள் அதன் மீதான ஆய்வுகள் தூவுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Dec 13, 2012 1:01 am

70-களிலேயே இந்தியத்திரைப்படங்களில் ஸ்டீரியோ ஒலிப்பதிவு வந்துவிட்டது என்பது நாம் அறிந்ததே. (ஷோலே தொடக்கம் என நினைக்கிறேன்). என்றாலும் அதன் முதிர்ச்சி மேலை நாட்டு இசைப்பதிவுகளின் அளவில் இல்லை என்பது ஒரு இனிப்பில்லாத உண்மை. ஹெட்போனில் பாட்டுக்கேட்பதற்கு முன் இதை உணர்ந்ததில்லை.

இளையராஜா 'ப்ரியா'வில் இந்ததொழில்நுட்பத்தைக் கையாண்டபோது எல்லோரும் அதை 'ஆஹா, ஓஹோ' என்று புகழ்ந்ததும் நம் நினைவில் பசுமையாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வருவித்த ஒலிக்கருவிகளை பேருந்துகளில் பொருத்தும் காலத்தில் வந்த அந்தப்பாடல்கள் கேட்க அவ்வளவு இனிமையாக இருந்தன. தமிழ்நாட்டில் அக்காலத்தில் வாக்மேன் அவ்வளவாக நான் கண்டதில்லை. அப்படியாக, ஒலிப்பதிவு பற்றி நிறையப்பேர் பேசுவதும் எழுதுவதும் செய்த போதும், உண்மையில் கேட்டு / அனுபவித்து "அப்படித்தானா / இல்லையா" என்று அறிந்து மெச்சியோர் (அல்லது மெச்சாதோர்) மிகக்குறைவே Smile

இளைய-பாலு இழையில் நான் எழுதியது போல, கல்லூரிக்குச்சென்றபின் மேற்கத்திய பாப் இசை மீது ஒரு திடீர்ப்பிரியம் வந்த காலக்கட்டம் ஒன்று இருந்தது. (த்ரில்லர் ஆல்பம் உலகையே கலக்கிய காலக்கட்டம்). அதற்கான பல காரணிகளில் ஒன்று, காதில் ஒலிப்பானை மாட்டிக்கொண்டு பாட்டுக்கேட்கும் புத்தம் புது அனுபவம்! விளைவு? எனக்கு உயிராய் இருந்த சில ராசா பாடல்கள் கூட, சிறிது காலத்துக்குக் கேட்க விருப்பமில்லாமல் போனது.

அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் நமது அடுத்த பாடல்! இந்தப்பாடல், பேருந்துகளிலும், தேநீர்க்கடைகளிலும் கேட்டுக்கேட்டு அனுபவித்த, அவ்வளவு இனிமையானதாக என் கணக்கில் இருந்த ஒன்று, ஹெட்போனில் தாங்க முடியாமல் போனது Sad காரணம்? நமது இசை / ஒலிப்பதிவில் இன்னும் முதிர்ச்சி எட்டாமை எனலாம். இந்த ஒரே அம்சத்தின் மீது அப்போது மனம் ஒருமுகப்பட்டதால், இந்தப்பாடல்கள் வாக்மேனில் கேட்கும்போது தலைவலிக்குக்கூட ஆளாயிருக்கிறேன்! Embarassed

என் இப்போதைய கருத்துப்படி, அந்தக்காலத்தின் தேவைக்கேற்ப - அதாவது பாடல் பேருந்துகளிலும், தேநீர்க்கடைகளிலும், விழாக்களிலும் இன்னும் வானொலியிலும் அற்புதமாக ஒலித்தால் போதும் என்ற சிந்தனையில் - ராசாவும் கூட்டாளிகளும் பதிவு செய்திருக்க வேண்டும்.

பாடலைப்பற்றி இன்னொரு நாள் விவரமாகப்பேசலாம்.

படம் இளமைக்காலங்கள் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிவிடுகிறேன். Smile

ஹெட்போனில் கேட்டுவிட்டு வாருங்கள், பின்னர் பேசலாம்!

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR1084'&lang=en



app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  plum Thu Dec 13, 2012 5:24 am

காரணம்? நமது இசை / ஒலிப்பதிவில் இன்னும் முதிர்ச்சி எட்டாமை எனலாம். இந்த ஒரே அம்சத்தின் மீது அப்போது மனம் ஒருமுகப்பட்டதால், இந்தப்பாடல்கள் வாக்மேனில் கேட்கும்போது தலைவலிக்குக்கூட ஆளாயிருக்கிறேன்

Interesting - 90s-la ungaLoda collegedays-la-ninga irundha mAdhiri pala pEru vandhadhu uNmai illaiyA? (They became the majority as opposed to the minority that you were in your college days).

My initial antipathy to Rahman was ppl like this who argued mostly along the lines of theLivu in olippadhivu. OraLavukku ppl like Shashi in tfmpage were the ones(only ones ever I have seen) talking about musical elements of Rahman. adhukku munnaiyum pinnaiyum I am seeing only hacks with no love for music but just end-result kEkka theLivA irukku types.

In hub, we do have ppl saying things like "rules break paNNittAruppA". Sadly, they dont have the articulation or perhaps knowledge to sy what rule, what is the background of that rule, who all applied the rule fastidiously and how he broke it. Only claims without backup logic or evidences.

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  plum Thu Dec 13, 2012 5:25 am

pAda vandhadhOr ganam surely? I can understand if it gives you headache in headphone. Recording - especially that tharathaththa chrous - can be irritating even when the volume is up on normal speakers.

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Thu Dec 13, 2012 7:00 pm

ப்ளம்,

ஒரு சின்ன தன்னிலை விளக்கம் - என்னுடைய குழப்பம் பொதுவாக 'ஒலிப்பதிவு' என்ற பொருளில் அல்ல. Embarassed

சொல்லப்போனால், 'பாட வந்ததோ கானம்' பேருந்துகளில் மற்றும் தேநீர்க்கடைகளில் எல்லாம் உரத்த ஒலியில் கேட்கும்போது கூட எனக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஒரு குழப்பமும் இல்லை.

அதாவது, இந்தத் தெளிவு / அலைவரிசைகளின் உள்ளடக்கம் / ஒலி அளவுகளின் பொதுவான சமநிலை, இப்படிப்பட்டவற்றில் நான் அப்போது குறை காணும் அளவுக்கு வளரவில்லை! அவை அல்லவா 90-களின் இளைஞர்களின் குற்றச்சாட்டு?

என்னுடைய ஒரே துன்பம் இடது மற்றும் வலது காதுகளுக்கான "சுகமில்லாத ஒரு பாகப்பிரிவினை".

எடுத்துக்காட்டாக, இந்தப்பாடல் முழுதும் ட்ரம்ஸ் ஒலி ஒரு காதில் மட்டும் தான் வரும்! Shocked

பேருந்தில் கேட்கையில் இது பிரச்னை இல்லை. ஹெட்போனில்? அதுவும் இந்த 'பாகப்பிரிவினை'க்கு "நிர்ப்பந்தமான முதன்மை" கொடுத்து ஒரு இளைஞன் கேட்கையில்?

அவனுக்குத் தலைவலி வரும் தானே?

மெல்லத்திறந்தது கதவு, எங்க ஊரு பாட்டுக்காரன், புன்னகை மன்னன் போன்ற, 80-களின் பின் பகுதியில் வந்த இசைத்தொகுப்புகளிலேயே இந்தக்குறை சரி செய்யப்பட்டு விட்டது என்பது பெரிய ஆறுதல்! Smile





app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  rajeshkrv Mon Dec 17, 2012 8:18 am

Paada vandhatho gaanam..
Wow.. Bliss .. wonderful tune and PS & KJY doing an amazing job..
"Anbe ennalum naan undhan thozhi pan padi kan moodi unadhu madiyil urangum oru kili" ..
fantastic singing .yes chorus is irritating sometimes but over all what a killer song this is.

Raghavane Ramana Ragunatha by PS is another fantastic song to prove versatility of IR ..

rajeshkrv

Posts : 7
Reputation : 0
Join date : 2012-11-10

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  app_engine Wed Dec 19, 2012 1:39 am

ஏற்கனவே திரைப்பாடல் இணைப்பில் கண்டபடி, நமது இப்போதைய உரையாடலுக்கான பாடல்:

#5 பாட வந்ததோ கானம் (இளமைக்காலங்கள், மணிவண்ணன் இயக்குனர், மோகனும் சசிகலாவும் திரையில், மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு)

நாம் பல இழைகளில் முன்னமே பேசிய படி, "இளையராஜாவின் இன்னிசை மழையில்" இத்யாதி விவரிப்புகளை வரலாற்றிலேயே முதல் முதலாக சுவரொட்டிகளில் எல்லாம் அச்சடித்து விளம்பரம் செய்தவர் கோவைத்தம்பி. இவர் அக்காலத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ என்பது ஒரு கொசுறுத்தகவல். சில நாட்களுக்கு முன் இவரது பல நேர்காணல்களை ஒரு நாளிதழ் இணையத்திலிருந்து வேறொரு இழையில் பதிவுகளில் சுட்டி இருந்தேன். நடுவில் கொஞ்ச நாள் ராசாவுடன் கோபித்துக்கொண்டார் என்றாலும் பின்னர் ஒன்று சேர்ந்து விட்டார் என்ற வகையில் இவர் மற்ற பலரிலிருந்து வேறுபட்டவர் எனலாம். இவரது தயாரிப்பில் முதலில் வந்த பயணங்கள் முடிவதில்லை ஒரு இசை மழை என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த இசைத்தொகுப்பில் பாலுவும் ஜானகியும் மட்டுமே. சுசீலாம்மாவோ வேறு எந்தப்பாடகருமோ இல்லை. அதன் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்

அடுத்த படத்துக்குப் பாடல்கள் பதிவு செய்தபோது என் நினைவின் படியும், இசைத்தட்டும் படியும் மணிவண்ணன் இல்லை. பாடல்கள் பட்டி-தொட்டியெல்லாம் பரவின பின்னர், அதற்கேற்ற மாதிரி ஒரு திரைக்கதை செய்து ஒப்பேத்தியதாக வரலாறு. 'ஈரமான ரோஜாவே' தவிர மற்றவை எல்லாம் படம் பார்க்கும்போது அவ்வளவாக உறுத்தாமல் செய்திருப்பார். பிரமாதம் என்றும் சொல்லிவிட முடியாது. 'பாட வந்ததோ கானம்' அருமை என்று சொல்ல முடியாவிட்டாலும், எரிச்சல் வராத அளவுக்கு இருக்கும். இது வரை பார்த்திராதவர்களுக்கும், மறந்து போனவர்களுக்கும் இங்கே யூட்யூப் இணைப்பு இருக்கிறது (அம்மணி பிகினி எல்லாம் போட்டிருப்பாங்க...டிக் டிக் டிக் பாதிப்பு அந்தக்காலத்தில்!):



பாடல் வரிகள் வைரமுத்து ஓரளவுக்கு நல்ல ஓட்டத்தில் இருந்ததை நிரூபிக்கின்றன!

பல்லவி:

பாட வந்ததோ கானம், பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன்வேளை, தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

சரணம் 1:

ராஜமாலை தோள் சேரும், நாணம் என்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர் காலம், நெஞ்சில் வெயில் காலம்
அன்பே! அன்பே, எந்நாளும் நான் உந்தன் தோழி!
பண்பாடி, கண்மூடி, உனது மடியில் உறங்கும் ஒரு கிளி!

சரணம் 2:

மூடி வைத்த பூந்தோப்பு, காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே! தேனே, கங்கைக்கு ஏனிந்த தாகம்?
உல்லாசம் உள்ளூறும் நதிகள் விரைந்தால் கடலும் வழி விடும்


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread - Page 3 Empty Re: ராசாத்தி குரலுல என் ராசாவின் பாட்டுத்தான் - The IR-PS thread

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum