Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

2 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 3 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sun Jul 03, 2022 11:32 pm

Z
z

ஆங்கிலேயர்களால் "இசட்" என்றும் அமெரிக்கர்களால் "ஸீ" என்றும் அழைக்கப்படும் ஆங்கிலத்தின் கடைசி எழுத்துத்தான் ஸ்பானிய மொழியிலும் கடைசி எழுத்து. இம்மொழியில் இதை "ஸேதா" என்று அழைக்கிறார்கள்.

அதே "ஸ்" ஒலி தான். (தமிழில் இல்லை. மலையாளத்திலும் இல்லை. இந்தியில் கிட்டத்தட்ட இருக்கிறது - ज़ )

zapato (ஸபாத்தோ) = shoe (செருப்பு)

ஆக, எல்லா எழுத்துக்களும் கற்றாகி விட்டது. இவற்றைத் தொகுத்து, ஆங்கில எழுத்துக்களோடு ஒப்பிட்டு ஒரு சார்ட் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவு செய்கிறேன்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 3 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jul 19, 2022 9:01 pm

ஸ்பானிய மொழி எழுத்துக்கள் / ஒலிகள் / ஆங்கிலத்தோடு ஒப்பீடு எல்லாம் எக்செல் மற்றும் pdf வடிவில் ஆக்கி இருக்கிறேன். எங்காவது சேமித்து விட்டு அதன் இணைப்புத் தருகிறேன்.

இப்போதைக்குப் பட வடிவில் இங்கே:

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 3 Spanis10


Last edited by app_engine on Tue Jul 19, 2022 9:32 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 3 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jul 19, 2022 9:02 pm

ஸ்பானிஷ் படிப்பது (அதாவது "வாசிப்பது") ஏன் நமக்கு எளிது தெரியுமா?

1. நமக்கு ஏற்கனவே ஆங்கில எழுத்துக்கள் தெரியும் /  பழக்கம். 

மேலேயுள்ள பட்டியலில் உள்ளபடி, 12 மெய்யெழுத்துக்கள் அப்படியே ஆங்கிலம் போன்ற ஒலி தான்.  ஒரு மாற்றமும் இல்லை. 
b,c,f,k,m,n,p,q,s,w,y,z

இன்னும் இரண்டு கிட்டத்தட்ட அதே ஒலி (d & t )  - என்ன நாக்கை மடிக்காமல் ஒலிக்க வேண்டும் - அதாவது, "ட்" அல்ல "த்"!

ஆக, ஏற்கனவே நமக்குப் பாதிக்கு மேல் தெரிந்த எழுத்துக்கள் மற்றும் அதே ஒலிகள்!

2.  மிச்சமிருப்பதில் ஐந்து உயிரெழுத்துக்கள். அவையும் ஆங்கிலத்தில் உள்ள அதே  a,e,i,o,u.

ஆனால், ஆங்கிலம் போல வித விதமான ஒலிகள் இல்லாததால் இன்னும் படிக்க எளிது. 

"a" என்றால் "அ" என்று படித்து விட்டுப்போகலாம். அதே எழுத்தை ஏ, எ, அ , ஆ என்றெல்லாம் குழப்ப வேண்டியதில்லை.    
அது போன்றே, e-எ / i-இ / o-ஓ / u-ஊ ! 

3. மிச்சமிருப்பது 8 எழுத்துக்கள். அவற்றுள் , x எழுத்து 99% ஆங்கிலம் போலத்தான். ஓரிரு சொற்களில் மட்டும் ஹ் ஒலி வருகிறது என்று தெரிந்தால் போதும்.
ஆக, 20 ஆச்சு.

4. h எழுத்துக்கு ஒன்றும் மெனக்கெட வேண்டாம். ஒலியே கிடையாது. மற்றபடி, ch என்று சேர்ந்து வந்தால் ஆங்கிலம் போன்றே "ச்" ஒலி  - அவ்வளவு தான்.
 
5. இனி இருப்பவற்றுக்கு மட்டும் வேறுபாடுகள் நோக்கினால் போதும்.

g  - பாதி ஆங்கிலம் போல ; சில இடங்களில் மட்டும், அதாவது, "ge" என்று வரும்போது "ஹே" 
j  - முற்றிலும் மாறுபட்டு "ஹ்" ஒலி  - San Jose என்றால் "சான் ஹோஸே" (சான் ஜோஸ் அல்ல)
l  - தனித்து வந்தால் ஆங்கிலம் போல "ல்". இரட்டையாக ll என்று வந்தால் மட்டும் "ய்"
ñ  - இது புதிய எழுத்து மற்றும் குறியீடு. என்றாலும், இந்த ஒலி நமக்கு அவ்வளவு கடினமெல்லாம் இல்லை. சொல்லப்போனால், ங் / ஞ் அளவுக்கெல்லாம் இல்லை. niño - நின்யோ / señorita -சென்யோரீட்டா எல்லாம் அடிச்சுத் தள்ளி விடலாம்!
r  - இதுவும் கிட்டத்தட்ட ஆங்கிலம் போலத்தான். மற்றபடி, வல்லின "ற" ஒலியில் வரும் rr என்ற இரட்டையெல்லாம் நமக்கு ஜுஜுபி  Smile
v  - இதுவும் பெரும்பாலும் ஆங்கிலம் போன்றே. வ் - என்ற ஒலி. எங்கெல்லாம் "ப்" என்கிறார்கள் என்று மட்டும் பார்த்தால் முழுமையாகத் திருத்தமாகப் படிக்கலாம் - என்றாலும், "வ" என்று சொல்லிவிட்டுப் போனாலும் பழி பாவமெல்லாம் ஒன்றுமில்லை!

வாங்க, எல்லோரும் படித்துப்பழகலாம் !

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 3 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum