Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Fri May 27, 2022 9:56 pm

ஆங்கில எழுத்துக்கள் போன்றே எஸ்பானியோல் எழுத்துக்கள் பார்ப்பதற்குத் தோன்றினாலும், ஒலிகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒவ்வொரு எழுத்தாகப் படித்து ஒலித்துப் பயிற்சி செய்தால் முறையாகப் பேச வழி வகுக்கும்.

முதல் எழுத்து : 

A


ஆங்கிலம் போன்றே capital / small என்ற வழக்கம் இம்மொழிக்கும் உண்டு. 

எங்கெங்கே பெரிய எழுத்து / எங்கெங்கே சின்னது என்று இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. அந்த விதிகள் தெரிந்ததும் எழுதுகிறேன்.

"ஏ" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த எழுத்தை ஸ்பானிஷில் "அ " என்று தான் சொல்கிறார்கள்!

ஆக, இதற்கான ஒலி கிட்டத்தட்ட இந்திய மொழிகளின் முதலெழுத்து போலத்தான் = " "

Smile

e.g.
(el) agua = அகுவா  = தண்ணீர்


Last edited by app_engine on Wed Jun 01, 2022 6:20 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Mon May 30, 2022 8:03 pm

B
b

ஆங்கிலத்தில் "be' "bee" என்றெல்லாம் சொல்லப்படும் இரண்டாவது எழுத்து.

எஸ்பானியோலிலும் அதே ஒலி உள்ள ஒற்றெழுத்துத் தான். என்றாலும், தனியாக எழுத்தை மட்டும் படிக்கையில் "பே" (bay என்பது போன்ற ஒலியில்) சொல்கிறார்கள்.

100% அதே போன்ற ஒலி தமிழில் இல்லையென்றாலும் பிற இந்திய மொழிகளில் உண்டு. (ബ്  / ब ) .

வேறு சில ஒலிகளுக்கு வடமொழி எழுத்துக்கள் தமிழில் இருந்தாலும் இந்த ஒலிக்கு இல்லை. படிப்பவரே அது ப் (p) அல்லது ப் (b) என்று முடிவு செய்து கொள்ள வேண்டும் Smile

bebe -  (spanish) = baby (english)

பேபெ (குழந்தை)


Last edited by app_engine on Sat Jun 04, 2022 4:14 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue May 31, 2022 4:46 pm

C
c

ஆங்கிலத்தில் "சி / சீ" என்று சொல்லப்படும் மூன்றாவது எழுத்து. 

இதுவும் ஒற்றெழுத்தே.

அதே போன்ற ஒலி தான் ஸ்பானிய மொழியிலும். என்றாலும், இதை அவர்கள் தனி எழுத்தாகச் சொல்லும் போது  "ஸெ"  அல்லது  "ஸே" என்று ஒலிக்கிறார்கள்.

அதோடு ஒரு h சேர்த்தால், அதாவது ch என்பதை "சே" என்று சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஆங்கிலம் போன்ற ஒலி என்பதால் படிக்க மெனக்கெட வேண்டியதில்லை 

நாம் முன்னமே படித்த ஒன்று நினைவுக்கு வருகிறதா? 

CDMX

Ciudad de Mexico (சியுதாத் தே மெஹிக்கோ) 

Ciudad = city = மாநகர் (CDMX = City of Mexico)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Wed Jun 01, 2022 3:49 pm

D
d

இதுவும் ஆங்கிலத்தின் நான்காவது எழுத்துக்கு இணையானதே.

பார்ப்பதற்கு "டி / டீ" வடிவில் தான். என்றாலும், ஸ்பானிய மொழியில் இதை "தே" (dhey என்பது போன்ற ஒலியில்) சொல்கிறார்கள். நாம் முன்னமே கண்டது போல நுனி நாக்கை மடிக்காமல்  மேலே தொட்டுத்தான் இந்த எழுத்து ஒலிக்கப்படுகிறது - ஆகையால், "ட்" அல்ல "த்" Smile

ஒற்றெழுத்து என்பதால் இதன் அடிப்படை ஒலி "த்" / "dh" - இதற்கும் தமிழில் தனி எழுத்துக்கிடையாது. படிப்பவர் தான் அது "த்" (th) அல்லது "த்" (dh) என முடிவு செய்ய வேண்டும். 

என்றாலும் பிற இந்திய மொழிகளில் இந்த ஒலிக்கென்று தனி எழுத்துக்கள் உண்டு  (ദ് / द )

Dios - God   (தியோஸ் - கடவுள்) 
ஆங்கிலம் போன்றே இங்கும் capital பயன்படுத்துவத்தைப் பாருங்கள்!

இதற்கு ஒத்த ஒலியில் வரும் சொல் : 
dia(s) - day(s)  (தியா(ஸ்) - நாள் / நாட்கள்)

ஆக, சற்றே மாற்றி ஒலித்தால் பொருள் மாறிவிடும் என்பதையும் புரிந்து கொள்வோம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu Jun 02, 2022 9:54 pm

E
e

ஆங்கிலத்தில் "இ" அல்லது "ஈ" என்று சொல்லப்படும் எழுத்தை ஸ்பானிய மொழியில்.  "எ" (அல்லது "ஏ") என்று சொல்லுகிறார்கள் 

இது இரண்டாவது உயிரெழுத்து. 

இதன் ஒலி ஆங்கிலம் போல இடத்துக்கு இடம் மாறுவதில்லை என்பது பெரிய ஆறுதல். அதாவது, இந்த எழுத்து எங்கே வந்தாலும் எ - ஏ 
ஒலியிலேயே படிக்கலாம் Smile

அதாவது, வேறு ஒற்றெழுத்துக்களுக்கு அடுத்து இது வரும் போது  (அதாவது தமிழில் "உயிர்மெய்" என்று சொல்லப்படும் அதே போன்ற பயன்பாடு)  அங்கும் "எ ஏ" ஒலி தான்.

அதாவது, de என்று எழுதுவதை "தே" என்று சொல்லி விட வேண்டும் Smile

e என்பதே ஒரு சொல் தான் "and" / "மற்றும்" என்ற பொருளில். நடைமுறையில் "and" என்பதற்கு "y" தான் பயன்படுத்துகிறார்கள் என்றாலும் "e" சொன்னாலும் தவறில்லை!

hombre e mujer (ஓம்ப்ரே ஏ முஹேர்) = man and woman

entrada = entry 
(எந்த்ராதா = உள்ளே)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Fri Jun 03, 2022 3:04 pm

F
f

ஆங்கிலத்தில் "எஃப்" என்று சொல்லப்படும் எழுத்தை "எஃபே" (efE) என்று ஸ்பானிய மொழியில் சொல்லுகிறார்கள்.  ஒற்றெழுத்து என்பதில் ஐயமில்லை. ஆங்கிலம் போன்ற அதே ஒலி என்பதால் இந்த எழுத்துக்குக் கூடுதல் மெனக்கெட வேண்டியதில்லை Smile

இணையான ஒலியைச் சுட்டிக்காட்டும் நேரடியான எழுத்து தமிழில் இல்லை. பிற இந்திய மொழிகளில் உண்டு எனலாம். (ഫ്  / फ़ )

fe = faith (ஃ பே = நம்பிக்கை / விசுவாசம்)

வழக்கில் "la fe" (லா ஃபே) என்று தான் சொல்ல வேண்டும். 

அதாவது, "the faith" - பெண் பால் சொல்.

பல சொற்களும் கண்டிப்பாக இப்படி "the" விகுதி சேர்த்துத்தான் சொல்ல வேண்டும் என்பது இம்மொழியின் இலக்கணம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Wed Jun 08, 2022 12:33 am

G
g

ஆங்கிலத்தில் ஜி என்று அழைக்கப்படும் ஏழாவது எழுத்து. ஒற்றெழுத்து.

ஸ்பானிஷிலும் 7-ஆவது எழுத்துத்தான். ஆனால், "ஜி" என்று சொல்லாமல், "ஹே" (hay) என்று அழைக்கிறார்கள்!

அது ஒரு சின்ன வேடிக்கை மட்டுமே. "ஒலித்தல்" என்று வரும்பொழுது, இதற்கு இரண்டு ஒலிகள் இருப்பது இன்னொரு வேடிக்கை.

"ஹ்" என்றும் "க்" (ஆங்கில g / மலையாள "ഗ്" / இந்தி "ग" ) என்றும் இதற்கு இரண்டு ஒலிகள் இருக்கின்றன.  

அதாவது ஆங்கிலம் போலவும் இருக்கு, அல்லாமலும் இருக்கு!

galaxia (கேலாக்சியா) = galaxy = விண்மீன் மண்டலம்
germen (ஹெர்மென்) = germ = கிருமி

அடுத்து வரும் உயிரெழுத்தைப்பொறுத்து இந்த எழுத்தின் ஒலி "ஹ்" அல்லது "க்" என்று மாறும் என்று தோன்றுகிறது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Wed Jun 08, 2022 5:15 pm

H
h

ஆங்கில எழுத்து "எச்" போன்றே தோற்றமளித்தாலும் இதற்கு ஸ்பானிஷ் மொழியில் "ஆச்சே" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இந்த எழுத்துக்குப் பொதுவாக "ஹ்" ஒலி இருக்கிறது என்றாலும் சில சொற்களில் மட்டும் இது ஓசை இல்லாமல் - மௌனமாக - இருக்கும். எடுத்துக்காட்டு "honest" - இந்தச்சொல்லில் வரும் h ஓசை இல்லாமல் இருப்பதால் "ஆனஸ்ட்" என்று தான் இந்தச்சொல்லை ஒலிப்பார்கள். அவ்வளவு ஏன், இதற்கான விகுதி கூட "a" அல்ல, "an" (an honest man).

ஸ்பானிஷில் இந்த எழுத்து சொல்லின் தொடக்கத்தில் வந்தால் எப்போதுமே ஓசை இல்லாமல் தான் இருக்கும். 

எடுத்துக்காட்டாக, "hola" என்ற சொல் தான் பலரும் முதலில் கற்கும் ஸ்பானியச்சொல் - இதன் பொருள் ஆங்கிலத்தில் "hello". இந்தச்சொல்லை ஒலிக்கையில் "ஓலா" என்று தான் சொல்ல வேண்டும்.

என்றாலும், இதே எழுத்து வேறு சில இடங்களில் வரும்போது ஒலியில் மாற்றம் செய்வதால் தான் தேவைப்படுகிறது. 

நாம் முன்னமே பார்த்திருக்கிறோம் - ch - என்று வருகையில் வல்லினமான "ச்" ஒலி தருகிறது. (வெறும் c இட்டால் "ஸ்" என்றும் ch இட்டால் "ச்" என்றும் ஒலிக்கவேண்டும்).

இந்த நேரத்தில் "c" எழுத்தின் "k" பயன்பாட்டையும் சொல்லி விடுகிறேன். 

ஆங்கிலம் போன்றே அந்த எழுத்தை சில இடங்களில் "ஸ்" என்றும் சில இடங்களில் "க்" என்றும் பயன்படுத்துகிறார்கள்.

casa = காசா  (house / வீடு)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu Jun 09, 2022 4:57 pm

I
i

மூன்றாவது உயிரெழுத்து - ஆங்கிலத்தில் "ஐ" என்று சொல்லப்படும் இந்த எழுத்தை ஸ்பானிஷில் "இ" அல்லது "ஈ" என்று அழைக்கிறார்கள்.

ஒலியைப் பொறுத்தவரை ஓரளவுக்கு ஆங்கிலம் போலத்தான் - ஆனால் "இ" என்றே ஒரே ஒலி மட்டும் தான் என்று நினைக்கிறேன். 

இடத்துக்கு இடம் "இ" என்றும் "ஐ" என்றும் ஆங்கிலத்தில் சொல்லுவது போன்ற குழப்பம் இம்மொழியில் இருக்காது என்று தோன்றுகிறது Smile

idea (இதேயா) = idea / யோசனை

"idea" பார்த்தீர்களா? 

ஆங்கிலத்தில் "ஐடியா"   - அதே எழுத்துக்கள் தான் ஸ்பானிஷிலும் - என்றால் ஒலிப்பதோ "இதேயா" என்று Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Mon Jun 13, 2022 8:50 pm

J
j

ஆங்கிலத்தில் "ஜே" என்றழைக்கப்படும் அதே எழுத்து வடிவம்.  ஆனால், வடிவம் மட்டும் தான் அது போல. பெயரும் / ஒலியும் முற்றிலும் வேறு!

இந்த எழுத்துக்கு ஸ்பானிஷ் பெயர் "ஹோத்தா" Smile

ஒலியோ "ஹ்"  (அதாவது, ஆங்கிலத்தில் H எழுத்துக்கு இருக்கும் அதே ஒலி!)

கலிஃபோர்னியாவின் வளைகுடாப்பகுதியில் இருக்கும் "San Jose" என்பது இந்தியர்கள் பலரும் நன்கு அறிந்த நகரம். (அதாவது, "சிலிகான் பள்ளத்தாக்கு" என்ற பெருமை வாய்ந்த பகுதியின் மைய நகரம்).

ஆனால், நாம் நினைப்பது போல அந்த நகரத்தின் பெயர் "சான் ஜோஸ்" அல்ல Smile  "சான் ஹோஸே" என்று தான் அமெரிக்கர்கள் சொல்கிறார்கள். அதாவது, அந்தப்பெயரை ஸ்பானிய முறையில் தான் எல்லோரும் ஒலிக்கிறார்கள்!

jugo (ஹுகோ / hoogo) = juice / சாறு

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jun 14, 2022 3:27 pm

K
k


ஆங்கிலத்தில் "கே" என்றழைக்கப்படும் எழுத்து.

ஸ்பானிய மொழியில் "கா" என்று சொல்லுகிறார்கள்.

ரெண்டிலும் ஒலி ஒன்றே தான் - "க்".

இரண்டு மொழிகளிலும் இந்த எழுத்து ஒரு குழப்பமும் இல்லாத எழுத்து. நேரடியான, தெளிவான, வல்லின மெய்யெழுத்து.

kilo (கிலோ) = kilo / ஆயிரம்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Wed Jun 15, 2022 8:05 pm

L
l

LL
ll

ஆங்கிலத்தில் "எல்" என அழைக்கப்படும் எழுத்து.

ஸ்பானிய மொழியில் "எலே" என்று திருநெல்வேலிக்காரர்களைப்போல் இந்த எழுத்தை அழைக்கிறார்கள்.

ஒலி அதே "ல்" தான். 

அதாவது, இந்த எழுத்து ஒற்றையாக வரும்போது. Smile

ஆனால், அதே எழுத்து இரட்டையாக வந்தால் இதை " டோப்லே எலே" என்றோ "எயெ" என்றோ அழைக்கிறார்கள். மட்டுமல்ல, அதனுடைய ஒலியும் "ய்" என்று ஆகி விடுகிறது. 

சற்றுக்கொடுமை தான் - என்றாலும் பழகிக்கொள்ள வேண்டும்.!

la (லா) = the (இந்த / அந்த)

lluvia (யூவியா) = rain (மழை)


Last edited by app_engine on Tue Jul 19, 2022 5:17 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu Jun 16, 2022 10:01 pm

M
m

ஆங்கிலத்தில் எம் என்று சொல்லப்படும் எழுத்தை ஸ்பானிய மொழியில் "எமே" என்று அழைக்கிறார்கள்.

அதே ஒலி தான் "ம்" - மெய்யெழுத்து.

வேறொரு குழப்பமோ / ஒலியோ இல்லாத எளிதான எழுத்து Smile

muchas (முச்சாஸ்) = many / பல 

muchas gracias Smile நன்றிகள் பல!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sat Jun 18, 2022 7:02 pm

N
n


Ñ
ñ

ஆங்கிலத்தில் "என்" என்று அழைக்கப்படும் எழுத்தை ஸ்பானிஷில் "எனே" என்று சொல்லுகிறார்கள்.

என்றாலும், ஒலி ஆங்கிலம் போன்றதே -'ன்" - அதில் வேறு குழப்பமில்லை.

அதே நேரத்தில், அந்த எழுத்தின் மீது அலை போன்ற ஒரு சிறு குறியீடு இட்டு அதை இன்னொரு எழுத்தாகக் கணக்கில் வைக்கிறார்கள் - "என்யே" என்று இந்த எழுத்தை ஸ்பானிய மொழியில் அழைக்கிறார்கள். மூக்கில் ஒலிக்க வேண்டும் என்கிறார்கள். (அதாவது தமிழில் "ஞ" சொல்லுவதைப்போன்ற விதத்தில் "ன்ய்" என்று இந்த மெய்யெழுத்து ஒலிக்கிறது.

no (நோ)  = no / இல்லை 

niño (நின்யோ - மூக்கில் ஒலிக்க வேண்டும்) = little boy / சிறுவன்
(இங்கே முதல் எழுத்து வெறும் "n" என்பதையும் மூன்றாவது எழுத்து அலையடித்த " ñ " என்பதையும் உற்று நோக்குங்கள்!)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Mon Jun 20, 2022 2:58 pm

O
o

ஆங்கிலத்திலும் ஸ்பானிய மொழியிலும் ஒரே பெயர் இந்த எழுத்துக்கு  "ஓ".

உயிரெழுத்து.

ஒலியிலும் இரு மொழிகளுக்கும் வேறுபாடு இல்லை - அதே "ஒ / ஓ " ஒலிகள் தான் Smile

அப்படியாக, இந்த எழுத்துப் படிக்க ஒன்றும் மெனக்கட வேண்டியதில்லை!

ola (ஓலா) = wave / அலை

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jun 21, 2022 5:12 pm

P
p

ஆங்கிலத்தில் "பீ" என்று அழைக்கப்படும் எழுத்தை ஸ்பானிஷில் "பே" என்று சொல்லுகிறார்கள்.

மற்றபடி அதே "ப்" ஒலி தான் - அதே மெய்யெழுத்து. வேறொரு மாற்றமும் இல்லை.

porque (போர்க்கே)  = because / ஏனெனில்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Fri Jun 24, 2022 7:20 pm

Q

q

ஆங்கிலத்தில் "க்யூ" என்று அழைக்கப்படும் எழுத்தை ஸ்பானிய மொழியில் "கூ" என்று சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட அதே "க்" ஓலி தரும் வல்லின மெய்யெழுத்துத்தான்.

அது தான் "கா" (K) இருக்கே பிறகு இது எதற்கு என்றெல்லாம் கேட்கக்கூடாது. இதெல்லாம் இப்படித்தான் - மொழிகளில் இப்படி நிறைய வேடிக்கைகள் இருக்கத்தான் செய்யும்!

quesa (கேஸா) = cheese / பாலடைக்கட்டி

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sat Jun 25, 2022 4:56 pm

R
r


RR
rr

ஆர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் எழுத்தை ஸ்பானிய மொழியில் "எரே"  என்று அழைக்கிறார்கள்.

ஒலியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட நமது "ர்" தான். 

அதே நேரத்தில் இம்மொழியில் "rr" இட்டால், "ற்" ஒலியில் படிக்கிறார்கள் என்பது சிறப்பான ஒன்று. 

அதாவது, தமிழ் போன்றே வல்லின றகரம் இம்மொழியில் பயன்படுத்தப்படுகிறது!

rio (ரியோ) = river / ஆறு 
perro (பெறோ) = dog / நாய்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sun Jun 26, 2022 2:17 pm

S
s

"எஸ்" என்று நமக்கு ஆங்கிலத்தில் அறிமுகமான எழுத்தை எஸ்பானியோலில் :"எசே" என்று அழைக்கிறார்கள்.

என்றாலும், ஒலி அதே தான் - "ஸ்" - வேறொரு மாற்றமுமில்லை.

அப்படியாக, இதுவும் படிக்க எளிதான ஒற்றெழுத்துத்தான்!

sol (சோல்) = sun / சூரியன்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Mon Jun 27, 2022 12:20 am

T
t

"டீ" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் எழுத்து வடிவத்தை ஸ்பானிய மொழியில் "தே" என்று அழைக்கிறார்கள்.

வல்லின "த்" ஒலி இந்த எழுத்துக்கு. 

அதனால், "தமிழ்" என்ற சொல்லின் முதலெழுத்து போன்ற அதே ஒலி.  

tamrindo (தமரிந்தோ) = tamarind / புளி

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Mon Jun 27, 2022 2:54 pm

U
u


ஆங்கிலத்தில் "யூ'  - ஸ்பானிஷில் "ஊ"  Smile

பெரும்பாலும் "ஊ" என்றே இம்மொழியில் ஒலிக்கிறார்கள் என்பதால் படிக்க ஆங்கிலத்தைக்காட்டிலும் எளிது.

பொதுவாகவே உயிரெழுத்துக்களை நேரடியாக - அதாவது இந்திய மொழிகள் போன்று - ஒலிக்கிறார்கள் என்பதால் படிப்பது பெரிய அளவில் எளிதாகி விடுகிறது.

uno (ஊனோ) = one / ஒன்று

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jun 28, 2022 3:33 pm

V
v


ஆங்கிலத்தில் "வீ" என்று எளிதாகச் சொல்லப்படும் எழுத்து ஸ்பானிய மொழியில் சற்றே குழப்பமான எழுத்து.

சொல்லப்போனால், ஆங்கில "B" யும் இந்த எழுத்தும் எளிதில் குழப்பிக்கொள்ளப்படும் தன்மை இந்த மொழியில் இருப்பதை உணர முடிகிறது. இதை "B" படிக்கையில் நான் சரியாக நோக்கவில்லை).

இதைப்புரிந்து கொள்ள ஒரு இந்திய எடுத்துக்காட்டு சொல்ல வேண்டியிருக்கிறது.

வங்காளம் = பெங்கால் (Bengal)
ரவீந்திரநாத் தாகூர் = ரபீந்திரநாத் தாகூர் (Rabinranath Tagore)

ஒரிஜினல் மொழியில் "B" என்று சொல்வதைத் தமிழில் "வி" என்று சொல்லிக்குழப்பி வைத்திருக்கிறோம் அல்லவா?  (தமிழர்கள் மட்டுமல்ல, வங்காளிகளுக்கும் இதே குழப்பம் தலைகீழாக இருக்கிறது. என் பெயரைப் பலரும் " இன்ப baண்ணன்" என்று சொல்லுவார்கள்.

அதே போன்ற குழப்பம் நம் போன்ற தமிழர்களுக்கு ஸ்பானிய B / V இவற்றுக்கிடையில் வர வழியிருக்கிறது.

இந்த எழுத்தை "உவே" (அல்லது "உபே" ubey) என்று அழைக்கிறார்கள். இடத்துக்குத் தகுந்த விதத்தில் வாயைப்பாதி  மூடி அல்லது வாயைத்திறந்து சொல்ல வேண்டும் Smile

vamanos(வாமானோஸ்) = let's go / போகலாம் (Dora அடிக்கடி சொல்வது Smile )

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu Jun 30, 2022 6:20 am

W
w

ஆங்கிலம் போலத்தான் இந்த எழுத்தும்.

அங்கே "டபுள் யு" - இங்கே "டொப்ளே ஊ" 

ஒலியும் ஆங்கிலம் போன்றே தான். எனக்கு இந்த எழுத்தை ஆங்கிலத்திலேயே சரியாகச் சொல்ல வராது. அவர்களிடம் "V- க்கும் இதற்கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டு வெறுப்பேற்றுவது வழக்கம். 

வேடிக்கை என்னவென்றால் ஸ்பானிய மொழியில் இந்த எழுத்தைப் பயன்படுத்தும் சொற்கள் இல்லை. அதாவது அந்த மொழியில் உருவான சொற்கள்!

எல்லாமே வேற்று மொழிச்சொற்கள் அல்லது பெயர்கள் தான். அவற்றுக்கு வேண்டித்தான் இந்த எழுத்தே Smile

Wisconsin - விஸ்கான்சின்  - நான் இப்போது குடியிருக்கும் அமெரிக்க மாநிலம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu Jun 30, 2022 4:39 pm

X
x

ஆங்கிலத்தில் "எக்ஸ்" என்று அழைக்கப்படும் எழுத்து ஸ்பானிஷிலும் இருக்கிறது. "எக்கிஸ்" என்று சொல்லுகிறார்கள்.

இதற்கு மூன்று வெவ்வேறு ஒலிகள் இருக்கின்றன - ஸ், க்ஸ் , ஹ் 

சொற்களின் தொடக்கத்தில் வந்தால் "ஸ்" ஒலி கொடுக்கப்படுகிறது.

xenofobia (ஸெனோபோபியா) = xenophobia / அந்நிய வெறுப்பு (இது கிரேக்கச்சொல் என்பதால் இப்படி இருக்கலாம். ஆங்கிலத்திலும் இதே ஒலி தான்.)

சொற்களின் இறுதியில் அல்லது நடுவில் வந்தால் பெரும்பாலும் "க்ஸ் " ஒலி - ஆங்கிலம் போன்றே.

examen (எக்ஸாமென்)  = exam / சோதனை 

சில பெயர்களில் "ஹ்" ஒலியிலும் வருகிறது என்பது தான் மூன்றாவது, குழப்பமானது. (ஆங்கிலத்தில் இப்படிக்குழப்பம் இல்லை என்று நினைக்கிறேன்).

Mexico (மெஹிக்கோ)  = Mexico / மெக்சிகோ 
Texas (டெஹாஸ்)  = Texas / டெக்சாஸ் 

ஸ்பானிய "x" குறித்த ஒரு நல்ல காணொளி:

https://www.youtube.com/watch?v=SQXcinAl5O8

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sun Jul 03, 2022 10:39 pm

Y
y

ஆங்கிலம் போன்றே ஒலி (ய்) தான் இந்த எழுத்துக்கு என்றாலும் ஸ்பானிய மொழியில் இதை "யி" என்று சொல்கிறார்களே ஒழிய "ஒய்" என்று குழப்புவதில்லை Smile

ஆக, இதுவும் படிக்க எளிதான எழுத்துத்தான். பல நேரங்களிலும் கிட்டத்தட்ட "இ" என்றே சொல்லிவிட்டுப் 
போகலாம்.

y என்பதே ஒரு சொல்லாகப் பயன்படுவதை முன்னரே பார்த்திருக்கிறோம். ("and / உம்" என்ற பொருளில். )

hombre y mujer = man and woman 

இன்னொரு எளிய சொல்:

yo (யோ) = I / me / நான் / என் / என்னை

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! - Page 2 Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum