Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 16, 2014 11:23 pm

#300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற


மிக எளிமையான, அழகான குறள்!

பிற்காலத்தில் பாரதி எழுதிய "யாமறிந்த மொழிகளிலே" இதே வடிவத்தில் வந்தது என்பது நினைவில் வருகிறது.

பொருள் மிக நேரடியானது!

வாய்மையின் நல்ல பிற எனைத்தொன்றும்
வாய்மையை விட நல்ல வேறு எந்த ஒன்றும்

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை
யாம் மெய்யாகக் கண்டவற்றுள் இல்லை!

பல்வேறு பண்புகள் குறித்துக் கண்டும் கேட்டும் படித்தும் நல்லறிவு கொண்டிருந்த வள்ளுவர், அடித்துச் சொல்லுகிறார் - வாய்மையிலும் உயர்ந்த ஒன்றுமில்லை என்று!

கண்டிப்பாகக் கவனிக்கத்தக்க ஒன்று!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 17, 2014 5:54 pm

#301
செல்லிடத்துக்காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்
(அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை அதிகாரம்)

இன்றைய பொதுவழக்கில் "வெகுளி" என்றால் அப்பாவி, கள்ளமறியாத என்ற பொருளில் மட்டுமே பயன்பாடு இருக்கிறது. என்ற போதிலும், வள்ளுவத்தில் அது சினம் / கோபம் என்ற பொருளிலேயே காணப்படுகிறது.

அந்தக்காலத்தில் சினம் கொண்டிருந்தாலே "விவரங்கெட்ட அப்பாவி" என்று பொருள் கொண்டார்களோ என்னமோ Smile

அல்லது "கள்ளத்தனம் உள்ளவன் கோபத்தை வெளிக்காட்டாமல் சூது செய்வான், வெகுளியோ தன வெகுளியை எல்லோருக்கும் காட்டி விடுவான்" என்று கொண்டார்களோ என்னமோ Smile

எப்படி இருந்தாலும் சரி, இங்கே வெகுளாமை = சினம் கொள்ளாமை, அல்லது சினத்தை வெளிக்காட்டாமை Smile

முதல் குறளிலேயே நையாண்டிச்சுவை காண்கிறோம் Smile

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்
கோபம் செல்லுபடியாகும் இடத்தில் அதைக்காப்பவனே சினங்காப்பவன் (எனும் தகுதி பெறுகிறான்)

அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என்
அல்லாத இடத்தில் (அதாவது சினம் பலிக்காத இடத்தில்) அதைக் காத்தாலென்ன, காக்காவிட்டால் என்ன?

"வலியார் முன் தன்னை நினைக்க" என்ற குறள் நினைவுக்கு வருகிறது அல்லவா?

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 20, 2014 7:14 pm

#302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் 
இல்அதனின் தீய பிற

கடந்த குறளின் தொடர்ச்சி என்று கொள்ளலாம்.

"பட்டால் என்ன, படா விட்டால் என்ன" என்று அங்கே நையாண்டி செய்தாலும், "எச்சரிக்கும் பொறுப்பு" உணர்ந்து "தீது" என்று வலியுறுத்துகிறார் இங்கே.

செல்லா இடத்துச் சினந்தீது
செல்லுபடியாகாத இடத்தில் சினங்கொள்வது தீமையில் விளைவடையும்!
(வலியோரிடம் சென்று சினம் காண்பித்தால் அடி-உதை கிடைக்கும் என்று எச்சரிக்கிறார்)

செல்லிடத்தும் அதனின் தீய பிற இல்
செல்லுபடியாகும் இடத்திலும் அதனை விட மிகத்தீமையானது வேறொன்றும் இல்லை!

பலிக்கும் என்பதற்காக சினந்து நடந்தால், தீய விளைவுகள் (குற்ற உணர்வு / உடைந்த உறவுகள் போன்றன) வருமேயொழிய நன்மை இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கூடாமல், கெட்ட பெயரும் சேர்த்துக் கொள்வோம்.

ஆகையால், "ஆறுவது சினம்"!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 21, 2014 7:19 pm

#303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்


முந்தைய இரண்டு குறள்களின் கூட்டுத்தொகை இது.

தீய பிறத்தல் அதனான் வரும்
சினம் கொள்ளுவதால் தீமை பிறக்கும் (என்பதால்)

மறத்தல் வெகுளியை யார்மாட்டும்
யார் மீதும் சினம் கொள்ளாமல் விட்டு விடுங்கள்!

ஏற்கனவே சொன்ன கருத்தை எதுகையுடன் (மறத்தல் / பிறத்தல்) மீண்டும் சொல்கிறார் என்பதைத்தவிர இந்தக்குறளில் புதுச்சிறப்பு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை.

ஆனாலும், நம் உரையாசிரியர்கள் அந்த "மறத்தல்" என்ற சொல்லை "மறந்து விடுதல்" என்று அப்படியே   பெயர்த்திருப்பது கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றியது.

மறத்தல் என்பது "விட்டு விடுதல்" என்ற பொருளில் என்பதே என் புரிதல்.

நினைவிலிருந்து அழித்தல் அல்ல!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 22, 2014 6:55 pm

#304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற

பட்டறிந்து உணர்ந்து எழுதி இருக்கிறார் என்று கொள்ளலாம்!

சினம் வரும்போது முகத்தில் சிரிப்பும் போகும், உள்ளத்தில் உவப்பும் போகும்!

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
சிரிப்பினையும் மகிழ்ச்சியையும் கொல்லும் சினத்தை விட

பகையும் உளவோ பிற
வேறு ஏதாவது (பெரிய) பகையும் இருக்கிறதா?
(இல்லை என்று பொருள் பொதிந்திருக்கிறது)

இந்தக்குறளில் எனக்கு நகை, உவகை எனும் சொற்கள் மிகவும் பிடித்திருக்கின்றன! 

என்ன அழகான சொற்கள் - அன்றாடப் பேச்சு வழக்கில் இவற்றைப் பயன்படுத்தினால் எவ்வளவு இனிமையாய் இருக்கும் என்றெல்லாம் தோன்றுகிறது.

என்றாலும், தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள ஒரு தன்மை - "பேச்சு வேறு, எழுத்து வேறு" என்று ஆகி விட்டது!

எழுதுகிற விதத்தில் பேசினால் நம்மைப் பைத்தியம் என்று மற்றவர்கள் முடிவு செய்ய வாய்ப்பிருக்கிறதே Sad

அப்படியெல்லாம் பேசியே தீர வேண்டுமென்றால் மேடை, ஒலிபெருக்கி எல்லாம் வேண்டும் Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 23, 2014 9:30 pm

#305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்


சொற்பொருள் புரிய எளிய குறள்.

மிகவும் நேரடியான உட்பொருளும் கூட - அவ்விதத்திலும் புரிந்து கொள்ள ஒரு கடினமுமில்லை Smile

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க
தன்னைத்தான் காக்க வேண்டுமென்றால் (அப்படி விரும்பினால், நினைத்தால்) சினம் வராமல் / வெளிப்படுத்தாமல் காக்கவும்

காவாக்கால்
(அவ்வாறு) காக்கவில்லை என்றால்

தன்னையே கொல்லுஞ் சினம்
தன்னையே (அதாவது, வெகுண்டவனை) சினம் கொன்று விடும்

அப்படியாக, வள்ளுவர் சொல்லும் மிகச்சிறந்த "தற்காப்பு" முறை, சினம் வராமல் காப்பது.

கத்தியை எடுத்தவன் கத்தியால் (அல்லது, பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால்) மடிவான் என்று இயேசு தன்னைப் பின்பற்றினவர்களுக்கு அறிவுரை சொன்னதாக விவிலியம் கூறுவதை ஒத்த குறள் Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 24, 2014 11:10 pm

#306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்

ஏமப் புணை - கொஞ்ச நாளைக்குப்பின் மீண்டும் அகராதியில் தேட வைத்த அழகிய சொற்கட்டு!

ஏமம் என்றால் இன்பம், களிப்பு, மயக்கம் என்றெல்லாம் வருகிறது.

புணை?

இது ஒரு வேளை "பிணை" என்ற சொல்லிலிருந்து வந்திருக்க வேண்டும். அதாவது, "கட்டு/ கட்டுதல் " Smile

அப்படியே கொஞ்சம் போனால், "கட்டு" மரம் / தெப்பம் / மரக்கலம், மற்றும் உதவி Smile

(மற்ற படி, புணை / பிணைக்கு நீதி மன்றத்தில் என்ன பொருள் என்று அறியாமல் யாராவது தமிழ்நாட்டில் இப்போது இருந்தால் அது வியப்புக்குரியதே Wink )

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
தன்னிடத்தில் சேரும் யாரையும் கொல்லத்தக்க சினம் 
(வெகுண்டவன் தன்னையே கொல்வான் என்று முன்னமேயே படித்ததே, இங்கு சினத்தை ஒரு கொலைகாரனாக உருவகப்படுத்துகிறார்)

இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்
இன்பம் தரும் பாதுகாப்பாக / பிணையாக / உயிர்காக்கும் மரக்கலம் போல இருக்கும் இனத்தவரையும் அழிக்கும். (அல்லது சுட்டு அகற்றும்)

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 27, 2014 6:02 pm

#307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
நிலத்தறைந்தான் கைபிழையாதற்று

ஒருவரது உடைமைகளில் (சொத்துக்களில்) ஒன்றாக சினம் என்ற பண்பு இருந்தால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் குறள் Smile

அதோடு, சினம் கொண்டு நடப்பதன் மூடத்தனத்தையும் வலியுறுத்தும் குறள்.

நிலத்தறைந்தான் கைபிழையாதற்று
(வெறும்) தரையை அறைபவன் (அடிப்பவன்) கை எப்படித்தப்ப முடியாதோ, அதே போல 
(அதாவது, வலித்தே தீரும் Laughing தப்பிக்க வழியில்லை என்று சுருக்கம் )

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
சினத்தைக் தன் (பொருள்) உடைமையாகக் கொண்டிருப்பவன் கேட்டிலிருந்து / அழிவிலிருந்து தப்ப இயலாது!

நமக்கு இருக்கும் பண்புகள் எல்லாம் நமது உடைமைகள் என்ற அருமையான குறிப்பும் இங்கு நாம் காண முடியும்.

சினத்தைச் சம்பாதித்தால் அழிவுக்கு விதை போடுகிறோம் என்று பொருள்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 28, 2014 5:53 pm

#308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று

இணர் என்பதற்குப் பூங்கொத்து என்றும் நெருங்குதல் என்றும் அகராதியில் பொருள் காண்கிறோம்.

"இணர் எரி தோய்வன்ன" என்று வருவதால் "அடர்த்தியான நெருப்பு" என்று கொள்ளலாம். அல்லது, சில உரையாசிரியர்கள் சொல்லுவது போல் "பல சுடர்களை உடைய தீ" என்றும் புரிந்து கொள்ளலாம்.

"புணர்" என்பதற்குக் "கூடு" என்ற பொருள் உள்ளது. (உடல் அளவிலும் மற்றபடியும்).

"புணரின்" என்ற சொல்லுக்குப் பொதுவாக எல்லா உரை ஆசிரியர்களும் "கூடுமானால்" என்று பொருள் சொல்லுகிறார்கள். மு.க. மட்டும் (எதிர்பார்த்தபடியே) "உறவு கொள்ள வந்தால்" என்று சொல்லுகிறார்   rotfl2

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
அடர்ந்த நெருப்பில் தோய்ப்பது போன்ற துன்பத்தை (நமக்கு ஒருவர்) செய்தாலும்

புணரின் வெகுளாமை நன்று
கூடுமானால் (அவர் மீது) சினம் கொள்ளாமல் இருப்பது நல்லது!

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு"  (சினம் கொள்ளாதே) Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 29, 2014 6:34 pm

#309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின்

உள்ளுதல் என்றால் "எண்ணுதல் / சிந்தித்தல் / மனதில் நினைத்தல்" என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

பார்த்திராவிட்டாலும், எளிதில் கண்டுபிடிக்கத்தக்கதே! 

உள்ளே - உள்ளுக்குள்ளே - என்ன இருக்கிறதோ அதுவே உள்ளுதல் Smile

சினம் மட்டும் இல்லாவிட்டால் எண்ணியதெல்லாம் கைகூடும் என வாக்குத்தரும் குறள் Smile

உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்
உள்ளத்தில் ஒருவன் சினம் கொள்ளாதவன் என்றால்

உள்ளியதெல்லாம் உடனெய்தும்
(அவன்) எண்ணுவதெல்லாம் உடனே நடக்கும்! (கைகூடும் / நிறைவேறும்)

சினங்கொண்டு, கொடுக்கும் பொருளை வேண்டாமென்றோ அல்லது உணவு வேண்டாமென்றோ பிள்ளைகள் மறுக்கும் போது, "கோவிச்ச *** வெறும் *** " என்று ஏளனம் செய்யும் பெரியவர்களைக் கண்டிருக்கிறேன் Laughing

(மொழி பெயர்ப்பு: ***  =  "பின்னழகு" )

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 30, 2014 9:58 pm

#310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை


ஒரே சொல்லுக்குரிய இரண்டு பொருட்களை வைத்து வள்ளுவர் நடத்தும் சொல் விளையாட்டு.

இறத்தல் என்பதற்கு இரு பொருட்கள். ஒன்று சாதல். மற்றது நெறி கடந்து செல்லுதல் / மிகுதல்.

அதோடு, இரு சொற்றொடர்களுக்கும் பொருந்தும் வண்ணம் "சினத்தை" என்ற சொல்லை நடுவில் வைத்தும் ஒரு சின்ன விளையாட்டு நடத்தி இருக்கிறார் Smile

(சினத்தை) இறந்தார் இறந்தார் அனையர்
சினங்கொண்டு மிகுவோர் / நெறி கடப்போர் செத்துப்போனவர்களைப் போன்றவர்கள்
(வாழ்ந்தும் பயனில்லை / மண்ணுக்கு வெறும் சுமை)

சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை
(மாறாக) சினத்தை விட்டு விட்டவர்கள் (முற்றும்) துறந்தவர்களோடு சேர்க்கப்படுவர்!

சினம் மட்டும் விட்டு விட்டாலே போதும், ஒருவர் துறவற இயலில் தகுதி படைத்தவர் ஆகி விடுகிறார் என்று அழகாகச் சொல்லுகிறார்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 05, 2014 8:37 pm

#311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள்
(அறத்துப்பால், துறவறவியல், இன்னா செய்யாமை அதிகாரம்)

எல்லாச் சொற்களுமே நன்கு அறிந்தவை தாம் - அன்றாட உரையாடல்களில் பயன்படுத்துவதில்லை என்றாலும்.

அப்படியாக, எளிதில் பொருள் காண முடியும் Smile

சிறப்பீனும் செல்வம் பெறினும் 
சிறப்புத்தர வல்ல செல்வம் பெறுவோம் என்றாலும் 

பிறர்க்கு இன்னா செய்யாமை
(அந்த செல்வத்துக்காக) மற்றவர்களுக்குத் தீங்கு / துன்பம் செய்யாமல் இருப்பது தான் 

மாசற்றார் கோள்
மாசு / குற்றம் இல்லாதவர்களின் கொள்கை!

பணத்துக்காக / பொருள் ஈட்ட "எதுவும்" செய்ய முயலுவோர் நிறைந்த இவ்வுலகில், "யாருக்கும் துன்பம் செய்து பொருள் ஈட்ட மாட்டேன்" என்ற கொள்கை கொண்டிருப்போர் மாசற்றோர் தானே?

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Nov 06, 2014 8:50 pm

#312
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா 
செய்யாமை மாசற்றார் கோள்

மீண்டும் "மாசற்றார் கோள்" - குற்றமற்றவர்களின் கொள்கை Smile

"கறுத்து" என்பதற்குச் சினந்து என்று பொருள். 

கறுப்பு /  கருப்பு இரண்டும் கருமை நிறம் என்ற பொருளில் பயன்படுகின்றன."முகம் கருத்தது / கறுத்தது" என்ற சொற்றொடர் சினத்துக்கு வழங்குவதை அடிக்கடி காண்பதால் அதே பொருளில் இங்கும் "சினம்" என்று கொள்ளலாம்.

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும்
(நம் மீது ஒருவர்) சினம் கொண்டு துன்பம் செய்யும் பொழுதும் 

மறுத்தின்னா செய்யாமை
(அவருக்குத்) திருப்பித் துன்பம் செய்யாதிருத்தல் 

மாசற்றார் கோள்
மாசற்றவர்கள் கொள்கையாகும்!

பழிவாங்கும் எண்ணம் இல்லாதிருத்தல் உடலுக்கும், மனதுக்கும், வாழ்வுக்கும் நல்லது தான்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Nov 07, 2014 11:46 pm

#313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
உய்யா விழுமந் தரும்

முன்னமேயே ஒரு முறை பார்த்தது போல் இங்கும் விழுமம் என்பது துன்பம் என்ற பொருளில் வருகிறது. (விழுப்பம், அதாவது நன்மை, என்ற பொருளில் அல்ல)

"யாருக்குத் தப்ப இயலாத (உய்யா) துன்பம் வரும்" என்பதைப் பல வளைவுகளுடன் வள்ளுவர் சொல்லும் விதமே தனி :

செய்யாமல் செற்றார்க்கும்
(நாம் ஒரு தீங்கும்) செய்யாதிருக்கும் போது நமக்குத்தீமை செய்வோருக்கும் 

இன்னாத செய்தபின்
(திருப்பித்) தீமை செய்தோம் என்றால் 

உய்யா விழுமந்தரும்
(அது நமக்குத்) தப்ப இயலாத துன்பத்தையே தரும்!

பழிக்குப்பழி வாங்குவது துன்பம் தருமேயொழிய நன்மை தராது என்கிறார் வள்ளுவர்!

முன் குறளில் கண்ட "மாசற்றவர் கொள்கை" அவர்களைத் தீங்கினின்று காக்கிறது என்று உணர்த்துகிறார்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Nov 10, 2014 8:42 pm

#314
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்

மிக உயர்ந்த கொள்கையைச் சொல்லும் அருமையான குறள், தமிழ் படித்த எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்றும் கூட!

நமக்கு யாராவது துன்பம் செய்தால் அவரைத் தண்டிக்க ("ஒறுக்க") மிகச்சிறந்த வழி என்ன எனப்புகட்டும் செய்யுள்!

இன்னா செய்தாரை ஒறுத்தல்
(நமக்குக்) தீங்கு செய்தோருக்குத் தண்டனை தருவதற்கு

அவர் நாண
அவர்கள் வெட்கப்படும்படி 

நன்னயஞ் செய்து விடல்
நன்மைகள் செய்து விட வேண்டும்!

"விடல்" என்பதற்கு "அவர்கள் செய்த தீமையையும், திருப்பி நாம் செய்த நன்மையையும் மறந்து விடுதல்"  என்று சில உரையாசிரியர்கள் கூடுதல் விளக்கம் அளிக்கிறார்கள். 

அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 11, 2014 8:24 pm

#315
அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய் 
தந்நோய்போல் போற்றாக் கடை

"மற்றவர்களது துன்பத்தை உணருதல்" என்பது மனிதர் காட்டும் ஒரு தனி இயல்பு. 
(மற்ற உயிரிகளுக்கும் இவ்வுணர்வு இருக்கலாம்,  ஐயோ பாவம் - சொல்லத்தெரியாது இல்லையா?)

இந்தக்குறளை "இன்னா செய்யாமை" என்ற பொருளில் எழுதி, வள்ளுவர் கூடுதல் வலிமை சேர்க்கிறார். 
(அதாவது, மற்றவர் அடையும் துன்பத்தைத் தாமே அடைவது போல் உணரும் ஒருத்தன் யாருக்கும் துன்பம் செய்ய மாட்டான் அல்லவா?)

"பொன் விதியின்" மாற்று வடிவம் நினைவுக்கு வருகிறது. 
(அதாவது, கன்ஃபியூஷியஸ் சொன்ன "மற்றவர்கள் உங்களுக்குச் செய்ய விரும்பாததை நீங்களும் மற்றவருக்குச் செய்ய வேண்டாம்")

பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை
மற்றவர் துன்பத்தைத் தம் துன்பம் போல் உணரா விட்டால் 

அறிவினான் ஆகுவதுண்டோ
(அப்படிப்பட்டவரின்) அறிவினால் ஒரு பயனுமில்லை!

மனதில் மென்மை இல்லாத மனிதருக்குத் தலையில் அறிவிருந்து என்ன பயன்?

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Nov 13, 2014 7:20 pm

#316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை 
வேண்டும் பிறன்கண் செயல்

209ஆம் குறளில்  துன்னுதல் என்ற சொல் கண்டோம். அதையும், இந்தக்குறளையும் அகராதி சுட்டுவது குறிப்பிடத்தக்கது Smile

மேவுதல் (எடுத்துச்செய்தல்) என்ற பொருளில் இந்தக்குறளில் இச்சொல் பயன்படுகிறது.

இன்னா எனத்தான் உணர்ந்தவை
தீங்கு / துன்பம் என்று தான் உணர்ந்தவற்றை 

பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும்
மற்றவர்களுக்குச் செய்ய முனையக்கூடாது!

நாம் முந்தைய குறளில் பேசிய கன்ஃபியூஷியஸ் விதியின் திருக்குறள் வடிவம் Smile

(இதன் நேர்மறை வடிவம் தான் "பொன் விதி" - அதாவது, "மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்")

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Nov 17, 2014 9:39 pm

#317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 
மாணாசெய்யாமை தலை

எஞ்ஞான்றும் = எப்போதும் / ஒரு போதும் (சூழலுக்கேற்ப)

முன்னமேயே 44ஆம் குறளில் கண்ட சொல் தான் Smile

'மாணா' (செய்யாமை) என்பது புதிய சொல் என்று நினைக்கிறேன்.

இந்தச்சொல்லைத் தனியே தேடினால் அகராதியில் காணோம். உரைகளின் அடிப்படையில் மற்றும் சூழல் வைத்துப் பார்க்கும் போது, மாண் (மாண்பு, மாட்சிமை) என்பதன் எதிர்ச்சொல் எனக்கொள்ளலாம்.

அதாவது, இழிவு / துன்பம் (அப்படியாக, "இன்னா")

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்
எந்த அளவிலும் எப்போதும்  யாருக்கும்

மனத்தானாம் மாணாசெய்யாமை தலை
துன்பம் செய்தல் பற்றி மனதிலும் நினைக்காதிருத்தலே உயர்ந்தது!

உண்மையிலே மிக உயர்ந்த அளவுகோல் தான்!

முற்றும் துறத்தல் என்றால் என்ன என்பதை மிக அழகாக இந்த "இன்னா நினையாமை" செய்யுள் மூலம் வள்ளுவர் வரையறை செய்கிறார்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 19, 2014 1:11 am

#318
தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான் என்கொலோ 
மன்னுயிர்க்கு இன்னா செயல்

"என் கொலோ" என்ற வருத்தம் மட்டுமே இந்தக்குறளில் கூடுதலாக நாம் காணுவது.

மற்றபடி, முந்தைய குறள்களில் சொல்லப்பட்ட அதே கருத்து மீண்டும் மீண்டும் வருவது எளிதில் உணரத்தக்கது.

தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான்
தன உயிருக்குத் துன்பம் என்னவென்பதை அறிந்து உணர்ந்தவன் 

மன்னுயிர்க்கு இன்னா செயல் என்கொலோ
மற்ற உயிருக்கு (அதே) துன்பத்தைச் செய்வது எதற்காக?

பொதுவாக வலையுலகில் சொல்லப்படும் ஒரு வருத்தமான நகைச்சுவையை நினைவு படுத்துகிறது 
(ஏதாவது திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது) :

"உனக்கு வந்தா ரத்தம், அவனுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?"

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 19, 2014 8:59 pm

#319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்

பகல் = பகலவன் தென்படும் வேளை Smile
 
(பகலவன் = கதிரவன், அவன் உச்சியில் நிற்கும் நேரமே பகலின் உச்சம், பகலுணவு = உச்சி வேளையில் உண்ணும் உணவு...
கேள்வி - "சூரியன்" தமிழில் இருந்து வடமொழிக்குப் போனதா அல்லது அங்கிருந்து வந்ததா?)

முற்பகல்  = பகலவன் எழுவதிலிருந்து உச்சி வேளை வரை 

பிற்பகல்   = உச்சி முதல் பகலவன் மறைவது வரை உள்ள வேளை

மற்றவர்க்கு இன்னா செய்தால் தண்டனை விரைவாக (அல்லது கண்டிப்பாக) வந்தே தீரும் என்று சொல்லும் பாடல்.


பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
மற்றவர்க்கு முற்பகலில் தீமை செய்தால் 

தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்
நமக்குத்தீமை பிற்பகலில் தானாகவே வந்து விடும்!

இன்னா செய்வதற்கு எதிரான எச்சரிக்கை என்று இதைக்கொள்ளலாம்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Nov 20, 2014 11:22 pm

#320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டுபவர்

இன்னாவுக்கான இன்னொரு சொல் - நோய் - இந்தக்குறளில் காண்கிறோம். 

மற்றபடி, செய்யுளின் பொருளில் இதுவரை கண்டவற்றில் இருந்து பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை.

அதே "நமக்குத்தீமை வேண்டாமென்றால் மற்றவர்க்கு இன்னா செய்யக்கூடாது" என்பது தான் Smile

பொருள் பார்ப்போம்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்
தீங்கு செய்தவர் மீதே தீங்கெல்லாம் வருகிறது, (அதனால்)  

நோயின்மை வேண்டுபவர்
தன் மீது தீமை வர விரும்பாதவர் (அல்லது, "தீங்கின்மை வேண்டும்" என்பவர்)

நோய்செய்யார்
(மற்றவர்களுக்குத்) தீமை செய்ய மாட்டார்!

எளிதில் புரிந்து விடுகிறது - என்றாலும், செயல்படுத்தல் அவ்வளவு எளிதல்ல என்பது தான் உண்மை Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Nov 21, 2014 10:45 pm

#321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
பிறவினை எல்லாந்தரும்
(அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை அதிகாரம்)

"கோறல்" என்ற புதிய சொல் இந்தக்குறள் வழியே இன்று கற்றுக்கொண்டேன் Smile

"கொல்லுதல்" என்று அதற்குப்பொருள்.

அந்த அருஞ்சொற்பொருள் புரிந்தால் குறளை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்!

அறவினை யாதெனின் கொல்லாமை
அறவினை (அதாவது நன்மையான வினைகள்) என்ன வென்றால் (உயிர்) கொல்லாமை தாம்!

கோறல் பிறவினை எல்லாந்தரும்
கொல்லுதல் மற்ற எல்லாத்தீமையும் தந்து விடும்!

இந்த அதிகாரத்தின் மற்ற குறள்களுக்குப் போகும்போது விளங்கும் இங்கு மனிதர்களைக் கொல்லுவதைப் பற்றி மட்டும் சொல்கிறாரா இல்லையா என்று.Smile

தற்பொழுது பொதுவாகக் "கொல்லாமை" என்று மட்டுமே கொள்வோமே Wink

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 26, 2014 12:56 am

#322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை


எம்ஜியார் சத்துணவுத்திட்டம் கொண்டுவரும் முன்னர் தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட "மதிய உணவு" வழக்கில் இருந்தது.

கனடாவில் இருந்து காகிதப்பைகளில் நன்கொடையாகத் தரப்பட்ட (கேர் நிறுவனம் வழி) மக்காச்சோள மாவு மற்றும் டால்டா கொண்டு செய்த உப்புமா ஏழைக்குழந்தைகளுக்குப் பகிருவார்கள்.

அந்த நேரத்தில் அங்கிருந்தால், அதன் மணமே நம்மை என்னவோ செய்யும் Embarassed

அத்தகைய உணவு வேளையில், குழந்தைகள் உண்ணத்தொடங்குமுன் ஒரு மாணவனைக் கொண்டு இந்தக்குறளை உரக்கச்சொல்லும்படி ஆசிரியர் பணிக்க, அவனோ சொல்லும் பொருளும் உணராமல் கடகடவென்று மனப்பாடமாய்ச் சொல்லுவதைக் கேட்டுக்கேட்டு, மிகச்சிறு வயதிலேயே அறிமுகமான குறள்!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
(தன்னிடமுள்ள உணவுப்பொருளை) எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து உண்டு, பல உயிர்களையும் காத்தல்

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
நூலோர்கள் (அறநூல் எழுதியவர்கள்) தொகுத்த எல்லாவற்றிலும் மேலானது (முதன்மையான அறம்)!

'உயிர் காக்க உணவு பகிர்தல்' என்ற பொருளைக் "கொல்லாமை" அதிகாரத்தில் வைத்த வள்ளுவரின் அறிவை மெச்சாமல் என்ன செய்ய?

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 26, 2014 11:16 pm

#323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று

நல்லறங்களின் தரவரிசைப் பட்டியல் இடும் வேலை செய்கிறார் இந்தக்குறளில் Smile

முதலிடம் - கொல்லாமை.

இரண்டாமிடம் - பொய்யாமை Smile

ஒன்றாக நல்லது கொல்லாமை
ஒரே நல்ல அறம் என்றால் அது கொல்லாமை

மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று
மற்றவற்றில் (அல்லது, அதைத்தவிர்த்து விட்டுப்பார்த்தால்) அதன் பின்னாகப் பொய்யாமை நல்லது!

முதன்மையான அறம் கொல்லாமை என்று சொல்லுவது குறிப்பாகத் துறவிகளுக்கு என்று கொள்ள வேண்டுமா என்று தெரியவில்லை. 

ஏனென்றால் இதற்கு முன்னும் பல்வேறு நல்ல பண்புகளுக்கு / அறங்களுக்கு வள்ளுவர் தலையாய இடம் கொடுத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இன்னொன்று -  இது மனிதர்களை மட்டுமா எல்லா உயிரிகளையுமா என்று நேரடியாகச் சொல்வதில்லை என்பதை உற்று நோக்க வேண்டும் Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 01, 2014 7:17 pm

#324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி

மிக எளிதில் பொருள் புரியத்தக்க குறள்.

அதாவது, "ஆறு" என்றால் வழி / வாழ்க்கை வழி / நெறி என்று வரையறுக்கும் திறமை இருந்தால் Smile

நல்லாறு எனப்படுவது யாதெனின்
நல்ல வாழ்க்கை வழி என்னவென்றால் 

யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி
ஒரு உயிரையும் கொல்லாமல் வாழும் நெறிமுறை தான்!

'யாதொன்றும்' என்பதில் உயர்திணை மட்டுமல்ல, அல் திணையும் உள்ளது என்பது தெளிவு. 

முன்னமேயே புலால் உண்ணாமை அதிகாரத்தில் சொன்ன கருத்துகளின் நீட்சி என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வள்ளுவரைப் பொருத்தமட்டில் மிகத்தெளிவாகவே இருக்கிறார் - உயிர்களைக் கொல்லாமல் வாழும் நெறி தான் நன்மையாக வாழ்க்கை நெறி (குறிப்பாகத் துறவிகளுக்கு)!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 14 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum