Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Thu May 31, 2018 8:17 pm

இப்போதுள்ள சூழலில் இந்த இழையின் தலைப்பைக் "கண்ணீர்களின்" என்று படித்திருக்க வழியுண்டு. தூத்துக்குடியில் துப்பாக்கிக்குண்டுகளுக்கு இரையாகி விட்டவர்களுக்கான கண்ணீர் அவ்வளவு விரைவில் உலராது என்பது உண்மையே.

கண்ணீரைக் கழுவவும் தண்ணீரே வேண்டும் என்பதால் இந்த இழை.
(அதாவது, பொன்னியாறு போன்று "ஓடி வரும் தண்ணீர்" - "ஊத்திக்கொடுப்பது" என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்) 

சில பாடல்கள் குறித்து எழுதுகையில் முன்னமே அவ்வப்போது சொன்ன ஒரு கருத்துத்தான் இந்த இழையின் மையப்பொருள். 

அதாவது, கண்ணன் குறித்த பாடல்களுக்குக்குழல் கொண்டு இசை வடிவமைப்பது போன்று இளையராசா வைத்திருக்கும் இன்னொரு அரிதான "முன்னமே முடிவெடுத்துச்செய்யும்" சங்கதி.

தண்ணீர் ஓடும் வழிகள் - ஓடை, ஆறு போன்றவை - பாடல் வரிகளிலோ / சூழலிலோ வந்தால் அங்கே இசை வடிவமைக்க ராசமூளையின் "தானியங்கிப்பகுதி" சந்தூரைக் கூப்பிடும் Smile

குழப்பாமல் சொல்ல வேண்டுமென்றால் இப்படி :
கண்ணன் & புல்லாங்குழல் என்பது போன்று தண்ணீர்கள் & சந்தூர் - ராசாவின் இசை மொழியில்!

அப்படிப்பட்ட சில பாடல்களைக் கொண்டு "ஆறாத தீ" போன்ற துன்பத்தைக் கொஞ்சம் தணிக்கும் முயற்சி!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Thu May 31, 2018 8:36 pm

ஓடுகிற தண்ணீர்கள் - காவிரி கொண்டே தொடங்குவோம். அதாவது, அண்மைக்காலங்களில் தமிழர்கள் இடைவிடாமல் அழுது கொண்டிருப்பதற்கான இன்னொன்று. வற்றாத சீவநதி என்றெல்லாம் முற்காலங்களில் வழங்கியிருந்தாலும் இப்போது வெட்டாந்தரையாக மாறிப்போன கொடுமை மனதில் வெம்மையை உண்டாக்காமல் என்ன செய்யும்?

காவிரியே காவிரியே ஒலி மட்டும் கேட்க இங்கே செல்லுங்கள்:
http://mio.to/album/Archanai+Pookkal+%281982%29

ஒளிப்படத்தோடு இங்கேயும் இருக்கிறது:
https://www.youtube.com/watch?v=Z9mQF1UzcRs

சந்தூர் ஒலியில் தொடங்கும் "காவிரியே காவிரியே" பாடலைக் கேட்டால் சூடு கொஞ்சம் தணிகிறது என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

முற்காலத்தில் ராசா-பாலு குறித்த மய்யம்.காம் தளத்தில் எழுதிய சில பதிவுகளின் சுட்டிகள் / மேற்கோள்கள் இங்கே :

http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=706706&viewfull=1#post706706

app_engine wrote:
#74 காவிரியே, காவிரியே
(அர்ச்சனைப்பூக்கள், 1982 , ஜானகியுடன்)

Can't place a date on this movie, so decided to go with the alphabetical thingy. As mentioned above, the first line is directly related to the city close to kallaNai, mukkombu, koLLidam & kAviri The city where I spent 4+ extremely interesting years. 4 things made life so thrilling - obviously one being Raja's music (and anyone who listened to his output during 1982-1985 -those were fresh juice then, now aged wine - can testify to this fact), second the totally new set of friends in college hostel / Trichy and the life-perpectives that they influenced me to build up, third the countless books / periodicals / material that was opened out for me to read (Sujatha being one of them, at his peak) and fourth -countless other new people (including some whom one would have "met" only once in a bus journey).

Well, this song, is like one of those countless new people. Was there on the recordings of my Thanjavur hostelmate. And heard many times on radio. And on other occasions on buses.

Sweet melody, strongly influenced by the stronger rAgA leanings that IR started doing in 80's. Sweet melodic interludes, using his most favoured instruments. (The santoor sound reminds one of trees on riverbanks). And the tablA, which I'll love even if IR uses unchanged in another 1000 songs!

http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=707150&viewfull=1#post707150

plum wrote:

(The santoor sound reminds one of trees on riverbanks).
adhE! adhE! I got to know this song only recently so I have no idea how it is picturised though the lyrics give a clue. The predominant image with the initial santoor pieces is one of a river flowing freely into a falls - and with the birds chirping etc, the imagery invoked is quiet as app mentioned - riverbank, trees, monkeys jumping across, birds chirping. It does vividly create the imagery, doesnt it?


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Fri Jun 01, 2018 10:42 pm

சந்தூர் மையக்கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததா அல்லது வடக்கு இந்தியாவின் பண்டைய கருவியா என்றெல்லாம் அங்கங்கே உரையாடல்கள் இருந்தாலும் இந்தக்கருவியை (அல்லது இதன் ஒலியை உண்டாக்கும் மின்னணுக்கருவியை) ராசா பயன்படுத்திய விதமே தனி.

குறிப்பாக அவரது தொடக்ககாலப் பாடல்களில் இந்தக்கருவியின் பயன்பாடு முற்கால இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியது போல் அல்லாமல் ஒரு புத்துணர்வோடு இருந்தது என்பது இசையறிந்த நோக்கர்களின் கருத்து.

என்னுடைய ஆராய்ச்சி அவரது சந்தூர் பயன்பாட்டுத்திறன் குறித்தது அன்று என்பது தெளிவு. (அறிவில்லாமல் அப்படிப்பட்ட முயற்சிக்குச் செல்லக்கூடாதே!) இது வெறுமென "நீரோட்டம்" என்ற சூழல் வரும்போதெல்லாம் ராசா எப்படி சந்தூரை அழைக்கிறார் / நுழைக்கிறார் என்ற பாமர ஆராய்ச்சி மட்டுமே.

அப்படியாப்பட்ட ஒரு பழைய பாடல் - ஏதோ நினைவுகள், கனவுகள் மனதிலே மலருதே (அகல்விளக்கு).

இந்தப்பாடல் குறித்து முன்னமேயே கங்கை அமரன் இழையில் பதிவு இட்டிருக்கிறேன் - பாடல் வரிகளும் அங்கே உள்ளன :
https://ilayaraja.forumms.net/post?p=4922&mode=quote

"காவேரி ஊற்றாகவே" என்பது தான் இப்போது குறிப்பிட வேண்டிய பகுதி.

இப்படி ஒரு வரி வருகிறது என்றவுடனேயே ராசா, "கூப்பிடு அந்த சந்தூரை" என்று துடிக்கிறார். பல்லவியில் அந்த வரி வருமுன்னரே சந்தூர் ஒலி (யானை-மணியோசை போன்று) வந்து விடுகிறது என்பதை உற்று நோக்குங்கள் Smile

காவேரி ஊற்றில் தண்ணீர் குடித்து / குளித்து வாழ்ந்த அந்த நாலரை வருடங்களை மறக்க இயலாது! (எங்கள் கல்லூரிக்கென்றே ஆற்றுப்படுகையில் தனி பம்பிங் ஸ்டேசன் வைத்திருந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.)

ஆக, ஆற்றின் வழியாக எண்ணற்ற ஊற்றுகளும் பலன் பெற்று வாழும் நாடு. அந்த ஊற்றும் சந்தூரின் இசையை நமக்கு ஊற்றும் படி ராசாவைத்தூண்டி இருக்கிறது! வாழ்க!

தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர் ஊற்றுவது இன்று தங்கள் கைகளில் இருப்பதாகப் பலரும் நினைத்துக்கொண்டாலும் அடிப்படை உண்மை "வான் நின்று வழங்கி வருதலால்" தான். இதை மானிடர் உணர்ந்தால் எதிர்காலம் சிறக்கும்!

ஒலி:
http://mio.to/album/Agal+Vilakku+%281979%29

ஒளி  (ஆறு வருகிறது தான்):
https://www.youtube.com/watch?v=LPxNqvnEDXQ

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

ravinat likes this post

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Tue Jun 05, 2018 1:03 am

"மீண்டும் மீண்டும் கேட்கவைக்கும் பாடல்கள் - OCD" இழையில் சொன்னதையே இங்கு மீண்டும் சொல்லவேண்டும்.

"அடிப்பூங்குயிலே" பாடலின் முதல் சரணத்தில் ஆறு வருமுன்னே சந்தூர் இடையிசையில் வந்து விடுகிறது Smile
https://www.youtube.com/watch?v=kPSH2VcVW1o&t=114s

இங்கே ஆறு காட்சியில் வருவதில்லை. ஆனால், பெண் ஓடும்போது ஆற்று வெள்ளம் போல - சின்னச்சின்னக்கற்கள் மீது குதித்துக்குதித்துச் சலசலக்கும் தண்ணீர் போலவே - ஓடுகிறாள்.

அந்த ஓட்டத்துக்கு ராசா கொடுக்கும் பின்னணி இசை தான் சந்தூர். (பாடல் தான் முதலில் - எனவே, இயக்குநர் தனது நாயகியை இசைக்கருவியொலிக்கு ஏற்ப ஓடவைத்திருக்கிறார் என்பதே உண்மை).

அதைத்தொடர்ந்து "ஆற்றங்கரை அந்தப்புரம் ஆக்கிக்கொள்ளவா, அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா" என்று பாடல் வரிகளில் ஆறு ஓடவே செய்கிறது.

இந்த வரிகளுக்கிடையிலும் சந்தூர் "விளி & மறுமொழி" வடிவ இசைக்கோர்ப்பில் பாடகரோடு பேசுகிறது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Tue Jun 05, 2018 9:35 pm

துணி வெளுக்கும் பெண் தான் கதையின் தலைவி.

அப்படிப்பட்ட படத்தில் ஆறு (அல்லது குளம்) கண்டிப்பாக வந்தே தீரும். பாடல் வரிகள் அல்லது காட்சிகளிலும் தண்ணீர்கள் இடம் பெற்றே தீர வேண்டும்.

பாரதிராசா நடிகரான முதல் படத்தின் சூழல் தான் மேற்சொன்னது. இந்த இயக்குநரின் மேற்பார்வையில் நிவாசு இயக்கிய கல்லுக்குள் ஈரம் நான்கு சிறப்பான பாடல்களைப்பெற்றது.

இவற்றுள் ஒன்றான "கொத்துமல்லிப்பூவே"யை இன்று வண்டியில் உன்னிப்பாகக்கேட்டேன். ராசா (மற்றும் அமரன்) ஏமாற்றவில்லை.

இந்தப்பாட்டில் ஆறும் உண்டு சந்தூரும் உண்டு Smile

தொடக்க இசையிலேயே அது நுழைகிறதோ என்று சிறிய ஐயம் என்றாலும் அடித்துச்சொல்ல முடியவில்லை. சைலோபோன் / சலதரங்கம் போன்ற ஒலிகளுக்கு இடையில் இக்கருவியும் ஒலித்திருக்க வழியுண்டு என்றாலும் உறுதி இல்லை.

என்றாலும், சரணத்தில் "ஆத்தோரம் கொட்டி வச்ச மல்லி - பூவாசத்துல அள்ளி " என்று ஜானகி பாடி அழைக்க அங்கே சந்தூர் ஓடி வந்து மறுமொழி சொல்லுகிறது. இப்படியாக, சரணத்துக்குள் மறுமொழிக்கருவியாக சந்தூர்.

அவ்வளவு தானா என்று நினைக்க வேண்டாம். இரண்டாம் இடையிசைக்கு முன்பு வாசுதேவன் "ஆத்தோரம் சின்னக்குட்டி அத்த பெத்த கன்னுக்குட்டி" என்று நாட்டுப்புறப்பாட்டை "துவைக்கும்" பின்னணி ஒலியோடு பாடி முடித்தவுடனே அங்கே சந்தூருக்கு ஒரு தனி ஆவர்த்தன வாய்ப்புக்கொடுக்கிறார் ராசா Smile

அவர் மனதில் தண்ணீரின் ஓட்டம் இருந்திருக்க வேண்டும் Smile

பாட்டு முழுவதும் கேளுங்கள் - பாருங்கள் இங்கே :
https://www.youtube.com/watch?v=u502oRX1_Xc

இது குறித்து அமரனின் இழையிலும் பதிவு உண்டு:
https://ilayaraja.forumms.net/t80-gangai-amaran-#4562

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Fri Jun 08, 2018 9:54 pm

ஆறு / தண்ணீர்கள் என்றால் ராசா விசிறிகளுக்கு (அதாவது, "அந்தக்கால" ஆளுங்களுக்கு Wink ) "ஆத்து மேட்டுல" பாட்டு நினைவுக்கு வராமல் இருக்க முடியாது. ருத்ரய்யாவின் கிராமத்து அத்தியாயம் படப்பாடல்.

வழக்கம்போல இங்கும் சந்தூரின் பயன்பாடுகள் நிறையவே உண்டு. என்றாலும், சந்தூர் கொண்டு அல்ல ராசா தொடங்குவது. அது அந்த நேரத்தில் அவருக்குக்கிடைத்த புதிய பொம்மை கொண்டுள்ள விளையாட்டாக இருக்கலாம். முகப்பிசையில் அந்தக்கீபோர்டு ஒலி (?) கொண்டு தொடங்கினாலும் அது முடியும் நேரம் சந்தூர் மென்மையாக ஒலிக்கிறதோ என்று சிறிய ஐயம். உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆண் குரல் பாடும் போதும் ராசா சந்தூரைக் கண்டுகொள்ளவில்லை தான்.

ஆனால், பெண் குரல் வருமுன்னரே சந்தூர் கொண்டு இனிப்புத்தருகிறார்!

அதைக்கேட்டு விட்டுத்தான் நாம் ஜானகியின் "ஆத்து மேட்டுக்கு" வர முடியும் Smile அதற்கு அந்தப்பட்டிக்காட்டுப்பெண்ணின் "நடனம்" நளினமான அழகு.

இரண்டாம் இடையிசையில் சந்தூர் வருமிடத்தை இயக்குநர் சரியாகப் பிடித்துக்கொண்டு விட்டார்.

அங்கே தண்ணீரின் துள்ளலும், தலைவியின் பாதங்களும் கொண்டு காட்சியமைத்து ராசாவின் எண்ணஓட்டத்தைத் தானும் மறுபதிவு செய்கிறார்.

காட்சியை இங்கே பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=o6nZ3ZjKYDc
(சரணங்களின் நடுநடுவே வரும் "விளி- மறுமொழி"களில் வழக்கம் போல் பாடகருக்கு சந்தூரின் எதிரொலிகள் இனிமையோ இனிமை!)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Mon Jun 11, 2018 7:23 pm

சந்தூருக்கும் தண்ணீர்களுக்குமுள்ள ராசா வழித்தொடர்பு தொடர்கிறது, இன்னொரு சூப்பர் ஹிட் இனிமைப்பாட்டில்!

இந்தப்பாடல் குறித்து ஏற்கனவே (குறைந்தது) இரண்டு இழைகளில் பதிவுகள் உள்ளன.  முதலில் அமர்சிங் எழுதிய பாடல்கள் குறித்த புகழ் பாடலில் என் அத்தை வீட்டுக்குச் சிறு வயதில் சென்ற கதைகளை உள்ளடக்கி இங்கே பதிந்திருந்தேன். (முன்பு படிக்காதவர்கள் தவற விட வேண்டாம் - மொளப்பாரி / மாவிளக்கு / மஞ்சத்தண்ணி / தீச்சட்டி / கடாவெட்டு என்று பல நாட்டுப்புறச்சடங்குகளுக்கு நடுவே செவ்வரளித்தோட்டம் அறிமுகமான காலம் அது).
https://ilayaraja.forumms.net/t80p150-gangai-amaran#6995

மீண்டும் உமா ரமணன் இழையில் இந்தப்பாடல் வந்தது. அப்போது கடசிங்காரி போன்ற மற்ற கருவிகளைக்குறிப்பிட்டிருந்தேன். அங்கே சந்தூர் குறித்து எழுதவில்லை.
https://ilayaraja.forumms.net/t292-all-songs-by-uma-ramanan-under-ir-s-baton-78-#24932

இப்போது தோன்றுகிறது - நாட்டுப்புறப்பாடல், அதுவும் கூடுதல் துன்பமில்லாத காதல் சூழல் என்றால் அங்கே குழல், கடசிங்காரி போன்ற கருவிகளுடன் சந்தூரும் தவறாமல் வருகிறது என்று.

குறிப்பாக, அங்கே தண்ணீர்கள் (பாடல் வரிகளில் அல்லது படத்தில் சூழலில்) இருந்தால், இந்தக்கருவி "உள்ளேன் ஐயா" என்று வந்து விடுகிறது.

இங்கே இரண்டு வரிகளில் தண்ணீர் தண்ணீர் :

ராசா குரல் வருமிடத்தில் "கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே"
&
ஐலேசாப்பாடலில் "ஆறு அல ஒயாதம்மா - ஆச அது தேயாதம்மா"

சந்தூர் எங்கெல்லாம் என்று நான் சொல்லத்தேவையில்லை Smile

செவ்வரளித்தோட்டத்தில ஒன்ன நெனச்சு (பகவதிபுரம் ரயில்வே கேட்)

ஒலி:
http://mio.to/album/Bhagawathipuram+Railway+Gate+%281982%29

காணொளி
https://www.youtube.com/watch?v=Z4X9BBPm3zQ

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Fri Jun 15, 2018 9:41 pm

தற்செயல் நிகழ்வுகள் தான்.

என்றாலும் ஒரே காலக்கட்டத்தில் தொடர்ந்து ஒரே பாட்டு பல இடங்களில் இருந்தும் என்னை வந்து அடைகிறது என்பது சிலிர்க்க வைக்கும் ஒன்றே.

அப்படிப்பட்ட ஒரு பாடல், இந்த இழைக்கும் பொருந்தி வருவது இன்னும் வியப்பானது!

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

அண்மையில் இந்த இசைத்தொகுப்பு "ராசாவின் த.நா. ஹிட் பட்டியல்" இழையில் வந்தது. அங்கே வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே தமிழ் நாளிதழ் ஒன்றில் "எல்லாப்பாடல்களும் பொன்னடியான்" எழுதியவை என்று இதைக்குறித்த கட்டுரை வந்தது. இவையெல்லாம் போதாதென்று நேற்றிரவு ஏதோ ஒரு தொகுப்பை வண்டியில் "ராண்டம்" விதத்தில் ஒட்டிக்கொண்டிருந்த பொழுது இந்தப்பாட்டு கணீர் என்று சந்தூர் ஒலி கொண்ட முகப்பிசையுடன் தொடங்கிய போது மெய் சிலிர்த்தேன்! இரண்டாம் இடையிசையெல்லாம் சந்தூரின் கொண்டாட்டம் தான்!

பாடலின் சூழல் / இசை வடிவமைப்பு எல்லாவற்றிலும் ஆறு / தண்ணீர் போன்று இருக்கிறதே, ஆனால் பாடல் வரியொன்றும் அப்படிக்காணோமே என்று மனதில் நினைத்துக்கொண்டு இருக்கும்போதே இரண்டாம் சரணத்தில் தடாலென்று இந்த வரி வந்து விழுந்தது Smile

"காவிரி ஆற்றங் கரையினிலே" Smile

"ராசா-சந்தூர்-தண்ணீர்கள்-" இழையில் இந்தப்பாட்டைப் பதியவேண்டும் என்று அந்தப்பொழுதில் முடிவெடுத்தேன்.

என்ன ஒரு இனிமையான பாடல்! ரொம்ப நாளைக்கு முன்பு கண்டிருந்த காணொளியை இன்று மீண்டும் பார்த்தேன் - தண்ணீர் ஓடிச்செல்லும் அழகுள்ள சூழல் தான்!

https://www.youtube.com/watch?v=TbNdCDIfUC4


http://mio.to/album/Oruvar+Vaazhum+Aalaiyam+%281988%29

ஒரு கொசுறுத்தகவல் :
மழை நிறையப்பெய்திருப்பதால் கன்னடநாடு மதகுகளைத் திறந்திருப்பதாக இன்று செய்தியில்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

ravinat likes this post

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Tue Jun 19, 2018 12:14 am

குறுகிய காலத்துக்குள்ளேயே இன்னொரு கட்டுரையும் (பாடலாசிரியர் முத்துலிங்கம் எழுதி வரும் தொடர்)  "மலையோரம் மயிலே" குறித்துச் சொல்லுகிறது Smile

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/jun/17/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2940951--1.html

ஆக, இது நான்காவது. 

"காவிரி ஆற்றங்கரையினிலே" என்று பாடிக்கேட்ட நேரத்தில் மழையும் தண்ணீரும் வருவது சிறிய ஆறுதல் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Mon Jun 25, 2018 11:56 pm

தொடர்ந்து வேறு சில நாட்டுப்புறப்பாடல்களைத்தான் அடுத்தடுத்து இந்த இழையில் எடுத்துக்காட்ட நினைத்திருந்தேன்.

என்றாலும் நேற்றுக்கேட்ட ஒரு பட்டணத்துப்பாடலை அதற்கு முன்னே சொல்லியாக வேண்டியிருக்கிறது Smile

ஏனென்றால், அப்படிப்பட்ட ஒரு படு நாகரிகமான பாட்டிலும் தண்ணீர் / நீரோடை என்ற சொற்களும் கருத்தும் வந்தவுடனே இந்தக்கருவியை மெல்ல ராசா நுழைத்து விடுகிறார் என்பது இங்கு நான் முன்வைக்கும் "இப்படி இருக்குமோ" என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது என்பதால் Smile

"காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ" என்று பெண் பாட அதற்கு ஆண் "கோடையில் நான் ஓடை தானே" என்று பாடுவது நேரடியான தண்ணீர்களையோ அல்லது ஓடையையோ குறிப்பிடுவதில்லை. காட்சியில் ஓடை இருக்கிறது என்றாலும் இந்தப்பாடல் வரி அதைச்சுட்டுவதில்லை Wink (சொல்லப்போனால், இது போன்று பெண்ணை நிலம் என்றும் ஆணை நீரென்றும் சொல்லி காமச் சிலேடை செய்வது  திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் உள்ள பொழுதுபோக்குத்தான்).

என்றாலும், மேலோட்டமாக மட்டும் எடுத்துக்கொண்டால் (துன்பத்தால் வறண்ட வாழ்வில் இன்பம் தருபவன் என்று மட்டும்), புத்துணர்வு தரும் மழையும், வளமாக்கும் ஓடையும் நிலத்துக்கு என்ன செய்யுமோ அதையே செய்கிறான் என்பது மிக அழகான உவமை.

எது எப்படி இருந்தாலும், ஓடை என்று வந்தபின்னர் - அதுவும் ஒரு காதல் பாட்டில் - சந்தூர் இல்லாமல் எப்படி என்கிறார் இளையராசா Smile முகப்பிசையிலும் முதல் இடையிசையிலும் மிக அழகாக அது துள்ளி ஓடும் ஓடைத்தண்ணீரை நமக்கு நினைவு படுத்தி விடுகிறது!

மாலை சூடும் வேளை
(நான் மகான் அல்ல)

ஒலி:
http://mio.to/album/Naan+Mahan+Alla+%281984%29

ஒளி:
https://www.youtube.com/watch?v=GsqFsRf2sZs

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Tue Jun 26, 2018 9:34 pm

இந்த இழையில் இது வரை எடுத்துக்காட்டிய பாடல்களை வைத்துப்பார்த்தால் ஒன்று கூடப்புலனாகிறது Wink

அதாவது, ஆறு-ஓடை என்றெல்லாம் வரும்போது சந்தூர் பயன்பாடு ஓரளவுக்கு அமைதியான இன்பமான சூழல்களிலேயே காணப்படுகிறது.

அதாவது, காதலர் மகிழ்ச்சியோடு பாடும் டூயட் போன்ற சூழல். (இதுவரை இழையில் வந்த எல்லாப்பாடல்களுமே அந்த வகை தான் - கூடவே நீரோடை / ஆறு போன்றவற்றைச் சுட்டிக்காட்டும் சூழல் - இங்கே சந்தூர் ஒலி நுழைப்பதை ராசா அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டே இருக்கிறார்).

அதே வகையிலான இன்னொரு சூப்பர் ஹிட் பாடல் - பொத்தி வச்ச மல்லிகை மொட்டு. இந்தப்பாடலின் தொடக்கம் முதலே சந்தூர் (அல்லது அது போன்று ஒலிக்கும் கீபோர்ட்) பயன்படுத்தப்படுவதைக்காணலாம். பல்லவிக்கெல்லாம் "விளி-மறுமொழி"யாகவே கூட வருகிறது! இரண்டாவது இடையிசை தொடக்கத்திலேயே இந்த ஒலி தான்!

சந்தூர் சரி - தண்ணீர் எங்கே என்று கேட்கிறீர்களா?

வைரமுத்து அவருக்கே உரிய (காமச்சுவை) வழியில் சொல்வதைக்கேளுங்கள்:

ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன்
வெக்க நேரம் போக மஞ்சக்குளிச்சேன்
கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா
Laughing

https://www.youtube.com/watch?v=N1XLJk4W97U


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Wed Jun 27, 2018 10:11 pm

இந்த இழையில் இது வரை வந்த மற்ற எல்லாப்பாடல்களையும் போன்ற இன்னொரு பாடல் Smile

இங்கேயும் ஆறு (பொன்னி - பொன்னி நதி) பாடல் வரிகளில் வருகிறது.

இனிமையான, நேர்மறையான காதல் சூழல் - நாட்டுப்புறம், அமைதி - இவையெல்லாம் பொருந்தி வருகின்றன.

வேறு வழியே இல்லை - சந்தூர் ஒலி (நேரடிக்கருவியோ அல்லது கீபோர்டோ) வந்தே ஆக வேண்டும் Wink முன்னிசையிலும்,  பல்லவி சரணங்களில் "விளி -மறுமொழி" என்ற வடிவத்திலும் அழகாக வருகிறது இந்தக்கருவியொலி!

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச்சொல்லடி

இனிமையான குரலில் நம்மை ஸ்வர்ணலதா மயக்குகிறார் - கள்ளமில்லா இளம்பெண்ணாகக் காட்சியில் மோனிஷாவும் அழகாகத் தோன்றுகிறார்.

இந்த இருவருமே இளம் வயதில் இறந்து போய் விட்ட கேரளப்பெண்குட்டிகள் Sad  

என்றாலும், இது போன்ற பாடல்களாலும் காட்சிகளாலும் இன்றும் இறக்காமல் இருக்கிறார்கள்!

https://www.youtube.com/watch?v=8Hjf-UyTSKg


Last edited by app_engine on Mon Jul 16, 2018 10:03 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Thu Jun 28, 2018 7:21 pm

இது வரை இந்த இழையில் டூயட் மழை வெள்ளம்.

ஒரு மாற்றத்துக்கு இப்போது பெண் குரல் தனித்துப்பாடிய பாடலொன்று. இனிமையான ஜானகி குரல் என்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது.

இந்த இழையில் நிறுவ முயலும் கோட்பாட்டுக்கு இந்தப்பாடல் பேரளவில் உதவுகிறது என்பது இன்னொரு மகிழ்ச்சி தரும் பொருள். இழையை முழுமையாகப் படிக்காமல் நேரடியாக இந்தப்பதிவுக்கு யாராவது வந்திருக்கலாம் - அவர்களுக்கென்று நமது "கோட்பாடு" என்ன என்று மீண்டும் இங்கே தருகிறேன்:

"துன்பமில்லாத இனிய சூழலில் வரும் பாடல்களில், தண்ணீர் ஓடிச்செல்லும் "ஆறு, ஓடை, நதி" போன்ற பாடல் வரிகள் தென்பட்டால் ராசா உடனே சந்தூர் எனும் இனிய கருவியிசை அந்தப்பாடலில் இட்டு விடுவார்".

(இதையே கொஞ்சம் விரிவாக்கி, பாடல் வரி நேரடியாகச்சொல்லாவிட்டாலும், சூழலோ / திரைக்காட்சியோ அப்படி வரும் என்று இயக்குநர் சொன்னாலும் ராசாவின் மூளை சந்தூரை வரவழைக்கும் என்று இன்னொரு கோட்பாடு கொண்டு வர முடியும். அது பிற்பாடு ஒரு நாளைக்கு Smile  தற்பொழுது நேரடியாகப் பாடல் வரியில் ஓடுகிற தண்ணீர் உள்ளதை மட்டும் சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்).

"சரி, அந்தப்பாட்டு என்ன - கொள்கை / கோட்பாடு - வழவழ என்று இழுக்காமல் சொல்லு" என்ற ஒலி கேட்கிறது Embarassed

இதுவரை இந்த இழையில் வந்தவை போன்றே இதுவும் ஒரு "வழிபாட்டு உரு" (iconic) ஆகக் கருதப்படும் பாடல் - நாதம் என் ஜீவனே! (காதல் ஓவியம்).

குறிப்பாக, முதல் சரணத்தில் "அமுதகானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் ஆடும்" என்று சொன்னவுடனே மிகுந்த மகிழ்ச்சியுடன் துள்ளிக்கொண்டு சந்தூர் இசைப்பதைக் கேட்கலாம்! அதாவது, "ஓடுகிற தண்ணீருக்கு சந்தூர்" என்று ராசா நேரடியாகச் சொல்லுகிறார்!

இதே பாடலின் ரெண்டாம் சரணத்தில் வேறு பாடல் வரி வரும்போது குழல் ஊதுகிறார் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். அப்படியாக, நமது கோட்பாட்டுக்கு நேரடியாக உதவி செய்யும் இந்த இனியபாடலை இங்கே கேட்கலாம் :

https://www.youtube.com/watch?v=0WS4YtAqILY


ஒளிப்படத்தில் முதல் சரணத்தைக்காணோம் - என்றாலும், முழு நீளம் ஆறு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியாக, அங்கங்கே வரும் சந்தூர் ஒலிகளுக்குக் காட்சியமைப்பும் திரைச்சூழலும் சேர்ந்திசையாக இருக்கின்றன Smile

https://www.youtube.com/watch?v=CWV6NsqItpY

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Fri Jun 29, 2018 6:15 pm

காதல் ஓவியத்திலிருந்தே இன்னொரு பாடல் - ஜானகி பாலு குரல்களில் டூயட் நதியில் ஆடும் பூவனம்.

இதன் முதல் சொல்லே நதி என்பதால் இந்தப்பாடலில் சந்தூரை எதிர்பார்த்தேன். ராசா ஏமாற்றவில்லை Smile

முதலில் சுலோகம், ரெண்டாம் இடையிசையில் சுரங்கள் என்று கிட்டத்தட்ட "செமி-க்ளாசிக்கல்" வகையில் இந்தப்பாடல் வந்தாலும், வீணை - மிருதங்கம் - கடம் என்று மட்டும் நிறுத்தி விடாமல், கிடார் உட்பட்ட தமது விருப்ப இசைக்கருவிகளை ராசா அங்கங்கே பயன்படுத்தத்தவறவில்லை!

முதல் பல்லவி தொடங்கு முன் சில நொடிகளே வரும் முன்னிசையில் நமது கோட்பாட்டுக்கருவி வந்து விடுகிறதுSmile

அதே போன்று முதல் இடையிசையிலும் குழல்-கிட்டார்(வீணை?) நடத்தும் கூட்டிசை தொடங்குமுன்னர் சந்தூருக்கு முதல் மரியாதை செய்து விடுகிறார் ராசா.

அப்படியாக, இந்தப்பாடலும் நமது கோட்பாட்டுக்கு வலு சேர்க்கிறது!

https://www.youtube.com/watch?v=Nt-0Oj-vfbo


காட்சியமைப்பில் நதி இருந்தே ஆக வேண்டும் (இயக்குநர் பாரதிராஜா இதைச்சொல்லித்தான் பாடலை வாங்கியிருப்பார்).

காணொளியில் ஆறு வருவதைப்பாருங்கள் :

https://www.youtube.com/watch?v=MBW0ojMDUBs


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Mon Jul 02, 2018 9:34 pm

சென்ற கிழமையின் முடிவு நாட்களில் கேட்ட இரண்டு பாடல்கள் இப்போது நமது ஆய்வுக்கு.

ரெண்டுமே ஒரே படத்திலிருந்து தான் - முன்பு இந்த இழையில் நாம் பார்த்தது போன்ற அவ்வளவு புகழ் பெற்ற "வழிபாட்டு உரு" அளவிலானவை அல்ல. என்றாலும், இவை இரண்டுக்கும் ஒரு சின்னச்சிறப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஒரே திரைப்படத்தின் இசைத்தொகுப்பில் ஏழடிச்சுழற்சி மற்றும் ஐந்தடிச்சுழற்சி என்று கூடுதல் சிக்கலான நடைகளை ராசா பயன்படுத்தியது சக்கரைத்தேவனுக்குத்தான்.

இப்போது இந்தப்பாடல்கள் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும் - மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் (தகிட-தகதிமி) மற்றும் தண்ணீர்க்குடம் கொண்டு (தக-தகிட).

நீரோடை / ஆறு என்ற காட்சிப்படுத்தல்களுக்காக நாம் இவற்றை அள்ளவில்லை (ஏற்கனவே சொன்னது போன்று, அது இன்னொரு நாளைக்கு வைத்திருக்கிறேன், இப்போதைக்குப் பாடல் வரிகளில் ஆறு / ஓடை வர வேண்டும், கூடவே பாட்டினுள்ளில் சந்தூரும். அது தானே நமது ஆராய்ச்சி?)

ஒலிப்பேழை இங்கே:
http://mio.to/album/Sakkarai+Thevan+%281993%29

"காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும்போது" - மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் பாடலின் பல்லவியிலேயே "காட்டாறு" ஓடுகிறது. முகப்பிசையிலும், விளி - மறுமொழி போன்றவற்றிலும் சந்தூர் ஒலி வழக்கம் போல் வந்து விடுகிறது.

https://www.youtube.com/watch?v=Uz2wi-9PfZ4


தண்ணீர்க்குடத்தின் முகப்பிசையில் வருவது சந்தூர் ஒலியா என்று அடித்துச்சொல்ல முடியவில்லை. ஆனால், முதல் இடையிசையில் தெளியாகவே வந்து விடுகிறது.

அதுவும் "நீரோடைக்காற்றாக நெஞ்சில் உலாவும் தெம்மாங்குப்பாடல்கள் தெய்வீகமாகும்" என்ற வரி வருமுன்னரே இந்தக்கருவி ஒலி வந்து நமது ஆய்வுக்கு "ஆமாஞ்சாமி" போட்டு விடுகிறது Smile

இரண்டாவது இடையிசையிலும் இந்த ஒலி கேட்கலாம்!

https://www.youtube.com/watch?v=iydpjo-iJy8

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Tue Jul 03, 2018 10:55 pm

போகிற போக்கில் தான் என்றாலும் (அதாவது சிறிய அளவிலாயினும்) ஆறு / பொன்னி என்றெல்லாம் வரிகள் வந்த உடனே சில நாட்டுப்புறப்பாடல்களில் சந்தூர் ஒலி உட்படுத்துவது ராசாவுக்கு இருக்கிற பழக்கம் தான்.

ராமராசனுக்குத் திரையில் காட்சியளிக்கக் கிடைத்த இரண்டு மிகச்சிறந்த பாடல்கள் இன்றைய கணக்குக்கு Smile

தோப்போரம் தொட்டில் கட்டி - "ஆத்தோரம்" சில்லு வண்டு - பேரளவில் குழலின் பயன்பாடு என்றாலும், இந்தச் சொல்லுக்கும் சூழலுக்குமாவது கொஞ்சம் சந்தூர் வேண்டும் என்று ராசா முடிவு செய்திருக்க வேண்டும்)

https://www.youtube.com/watch?v=vjbcgGcpyPI


வாசலிலே பூசணிப்பூ - இதுவும் வேறு பல கருவிகள் பேரளவில் பயன்படுத்தப்படும் பாடல் என்றாலும், "மீண்டும் மீண்டும் கூடிச்சேருது பொன்னியாறு" என்றும் "ஆத்து வெள்ளம் மேட்டை விட்டுப்பள்ளத்துக்கு ஓடி வரும்" என்றும் இரண்டாம் சரணத்தில் வரும் என்பதை இரண்டாம் இடையிசையில் மென்மையாக வரும் (மற்றும் பல்லவியில் மறுமொழியாகவும்) சந்தூர் சொல்கிறது.

https://www.youtube.com/watch?v=FSf5kcZuhag

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Wed Jul 04, 2018 10:40 pm

கல்லுக்குள் ஈரத்தின் கொத்தமல்லிப்பூவை முன்னமேயே இந்த இழையில் பார்த்திருக்கிறோம்.

படம் வந்த பொழுது அந்தப்பாட்டுத்தான் எங்க ஊரிலெல்லாம் தான் கூடுதல் ஹிட் என்றாலும், இன்னொரு பாடல் தான் இன்று தமிழர் பலருக்கும் தெரிந்த ஒன்று.

சிறுபொன்மணி அசையும்

சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இந்தப்பாடல் (கிட்டத்தட்ட முழுப்பாடலும்) ஒரு வெற்றி பெற்ற புதுப்படத்தில் வந்ததால் தான் இப்படி. 

சுப்ரமணியபுரம் என்ற அந்தப்படத்தின் நாயகி பாட்டுக்கேற்ப நடப்பது / கண்ணால் பேசுவது எல்லாம் மூலப்படத்தில் அறிமுக நடிகை அருணாவைக்கொண்டு பாரதிராசாவும் நிவாசும் ஓரளவு முயன்றவையே.
https://www.youtube.com/watch?v=qPPvYrVQJBg


1 மில்லியனுக்கும் கூடுதல் பார்வைகளைக்கொண்ட அந்தக்காணொளியில் அங்கங்கே ஆறு உண்டு. பாடல் வரியிலுல் "நதியும் முழு மதியும்" என்று வருவது தெரிந்ததே. 

சந்தூர்? முகப்பிசையிலும் இடையிசையிலும் அது மிக இனிமையாக அங்கங்கே வருவதும் நாம் அறிந்ததே.

நான் இது வரை கவனிக்காத ஒன்று - இந்தப்பாட்டுக்கு இன்னொரு காணொளியும் இருக்கிறது (சங்கீதா - அருணா எல்லாம் நாட்டியம் ஆடுகிறார்கள், ராசா குரலில் பாரதிராசா பின்னணி இசை இல்லாமல் பாடவெல்லாம் செய்கிறார்.
https://www.youtube.com/watch?v=c4SHlTXI728


ஆக, சுப்பிரமணியபுரம் படக்காட்சி இந்தப்பாடலுக்கு மூன்றாவது காணொளி Smile
https://www.youtube.com/watch?v=ZJVk_NT2kco


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Thu Jul 05, 2018 7:10 pm

கிடார் - ட்ரம்ஸ் என்று மேற்கத்திய அடிதடியோடு ஒரு பாடலை எதற்காக ஒரு பட்டிக்காட்டுப்படம் / சூழலுக்கு ராசா கொடுத்தார் என்பது புரியாத ஒன்று.

இயக்குநர் கேட்டிருக்க வழியுண்டு - ஏனென்றால் படத்தின் மற்ற பாடல்கள் எல்லாம் பழமையான வகை.

பட்டு வண்ணச்சேலைக்காரி / தாயும் நானே தங்க இளமானே / நீ பாடும் பாடல் எது - இப்படி எல்லாமே 70-கள் போன்ற தோற்றம்.

என்ன தான் வேறுபட்ட முயற்சி என்றாலும் ரஜினி / அம்பிகா / ராதா எல்லாம் இருக்கும் போது ஒரு பாட்டாவது புது ஸ்டைலில் , வணிகத்துக்கு உதவியாக வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.

அது கிடக்கட்டும், நமக்கு வேண்டியது "ஆறு / ஓடை" Smile பல்லவியின் முதல் வரியிலேயே "ஆத்தோரம் காத்தாட" என்று சூழலைச் சுட்டிக்காட்டி விடுகிறார் பஞ்சு அருணாச்சலம்.

ஆனால், அடிதடியான ஒரு பாடலில் எங்கே மென்மையான சந்தூர் ஒலியைத் தருவது என்றெல்லாம் ராசா அவதிப்படவில்லை - இருக்கவே இருக்கு இடையிசை, அங்கே புகுத்தி விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்.

இரண்டாவது இடையிசையில் அவ்விதமான ஒலி கேட்கிறது - குழலோடு பேச்சு வார்த்தையாக. (அதற்கு இயக்குநர் முத்துராமன், ரஜினி மற்றும் ராதாவின் "ஆடை அவிழ்ப்புக்காட்சி" படமாக்கியிருப்பது வேடிக்கை).

http://mio.to/album/Engeyo+Ketta+Kural+%281982%29

https://www.youtube.com/watch?v=_agLV5hb6A8


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Fri Jul 06, 2018 8:45 pm

நீண்ட நாட்களுப்பின் இன்னொரு முறை நேற்றிரவு முதல் மரியாதை படம் பார்க்க நேர்ந்தது. இதன் பின்னணி இசை குறித்த ஆய்வு ஒன்று நடத்தினாலும் இந்த "ஆறு-தண்ணீர்" குறித்த எண்ணங்கள் வந்தே தீரும் Smile

எல்லோரும் எப்போதும் இந்தப்படத்தின் பின்னணி இசையிலும் பாடல்களிலும் குழல் குறித்து மட்டுமே பெருமை பேசுவதைக் கேட்டிருக்கிறோம். சொல்லப்போனால் வயலின் போன்ற கருவிகளின் பயன்பாடு குறைவாக இருப்பது குறித்துக்கூடப் பேசுவார்கள். "பூங்காற்று திரும்புமா" பாடலில் கம்பிக்கருவிகளே இல்லை என்று ஒரு முறை ஆப் ஜாக்கி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டபோது "அட, ஆமால்ல" என்று வியந்திருக்கிறேன். குழல் தூக்கி நிற்கிறது, "குயில் = குழல்" என்பதெல்லாம் மெய் தான் Smile

ஆனாலும் அதோடு கூட்டணி அமைத்துக் கணக்கு வழக்கில்லாமல் படம் முழுவதும் மற்றும் பாடல்களிலும் சந்தூர் ஒலி வருவது குறித்து அடிக்கடி யாரும் பேசிக் கேட்டதில்லை Smile

இப்போது அதற்கு ஒரு சிறு வாய்ப்பு. என்றாலும், நான் முன்னமே சொன்னது போலக் காட்சிகள் குறித்தெல்லாம் பின்பு பேசுவோம்.

இப்போதைக்குப் பாடல் வரிகளில் ஓடும் நீரும் கருவிகளில் சந்தூர் ஒலியும் வருகிறதா என்பதை மட்டுமே பார்ப்போம்.

"சுழியிலே படகு போல எம்மனசு சுத்துது சுத்துது" என்று ராசாவே உன்ன நம்பி பாடலின் இரண்டாம் சரணத்தில் வருகிறதல்லவா - அது என்ன சுழி?

பள்ளிக்காலத்தில் எங்கள் ஊரில் இருந்த காட்டாற்றில் செந்தண்ணீர் வெள்ளம் வரும்போது ஓடிச்சென்று நெடுநேரம் நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு. பாய்ந்து செல்லும் அந்த வெள்ளத்தில் நீர்ச்சுழிகள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு! விரைந்து செல்லும் வெள்ளத்துக்கு ஏதாவது தடைகள் வரும்போதோ அல்லது வேறு எதாவது காரணம் கொண்டோ இருக்கலாம் இந்தச்சுழிகள் Smile நம்ம தலையில் உள்ள முடியில் இருக்கும் சுழி போன்றே தோன்றும் அவற்றைக்காண்பது வியப்பாக இருக்கும்.

அதைத்தான் இங்கே குயிலு "சுழியிலே" படகு என்கிறாளோ?  

வைரமுத்து நம்மைப்போல் ஆற்றங்கரையில் நின்று வேடிக்கை பார்த்தவர் என்பதில் ஐயமில்லை!

படத்தின் பின்னணி இசை அளவுக்கு நிறையப்பயன்பாடு இந்தப்பாட்டில் இல்லை என்றாலும்,  மென்மையாக அங்கங்கே சந்தூர் ஒலி வரத்தான் செய்கிறது! ('அந்த நெலாவத்தான்' பாட்டிலெல்லாம் நிறையவே சந்தூரொலி உண்டு - ஆனால் அங்கே பாடல் வரிகளில் ஆறு / ஓடை இல்லை)

https://www.youtube.com/watch?v=lL-7q3g0k3k


https://www.youtube.com/watch?v=eXP2G8ocziU

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Mon Jul 09, 2018 6:17 pm

- நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேல
- வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தானா ஓடுவது
- புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன

இப்படி நீரோட்டம் குறித்து நிறைய எழுதப்பட்டிருக்கும் முதல் சரணம் கொண்ட பாடல் மலையூர் மம்பட்டியானின் "சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூப்போல".

ராசா-ஜானகி குரல்களில் மிகச்சிறப்பாக அமைந்த பாடல் - 35 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் இளமை குறையாத பாடல்.

இதற்கு முகப்பிசையிலும் / சேர்ந்திசையிலும் / இடையிசைகளிலும் சந்தூர் ஒலி வராவிட்டால் தான் நாம் வியக்க வேண்டும். ஆக, இந்த ஒரு குறிப்பிட்ட பொருளில் ராசா நாம் "எதிர்பார்க்கும் வண்ணமே" இசையமைத்திருக்கிறார் என்று சொல்லிக்கொள்ள வழியிருக்கிறது Wink

ஆடியோ மட்டும் உள்ள இந்த யூட்யூபில் தொடக்க இசையும் தெளிவாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=tLaqd1-Wq1o


இந்தக்காணொளியில் முகப்பிசை இல்லையென்றாலும், ஆறு இருக்கிறது. சரிதாவும் தியாகராசனும் இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=alRD1Zvyl7M


மேற்கண்ட பாடலை யூட்யூபில் தேடிய போது என் கண்ணில் அதைவிடவும் அதிகமாக மக்கள் கண்டிருக்கும் இன்னொன்று கண்ணில் பட்டது - ஆடிப்போனேன் (மவனும் மீராவும் இதில் அதே பாடலின் ரீமிக்ஸ் வடிவத்துக்கு நடிக்கிறார்கள்)
https://www.youtube.com/watch?v=Ygz3vqJN-6w





app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Wed Jul 11, 2018 12:24 am

இது வரை பொதுவாக அழுமூஞ்சிப் பாடல்கள் இந்த இழையில் நாம் பார்க்கவில்லை.

இந்தப்பாடல் முழுக்க முழுக்க அழுமூஞ்சி இல்லை என்றாலும் மகிழ்ச்சியான சூழல் என்றும் சொல்லி விட முடியாது. அதாவது, படத்தில்.

தனியாக வெறும் பாடல் மட்டும் என்று பார்த்தால், எளிமையான ஒரு தாலாட்டு எனலாம். (ஒரு மென்மையான சோகம் புதைந்திருக்கிறது என்று தோன்றினாலும், நேரடியாக அப்படிப்பட்ட வரிகள் பாடலில் இல்லை).

அதிலே "ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமோ" என்ற வரி வருகிறதே - இந்தப்பாடலிலும் ராசாவுக்கு சந்தூர் ஆசை வரக்கூடுமோ என்று தேடிப்பார்த்தேன்.

அட, முகப்பிசையிலேயே அதைக்கொண்டு அழகு சேர்க்கிறார். இடையிசைகளிலும் தென்படலாம். தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்:

தேனே தென்பாண்டி மீனே:
https://www.youtube.com/watch?v=TmIiNjC8kOE


முழு ஆல்பமும் இங்கே :
https://www.youtube.com/watch?v=KfjlwKHLkDM


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Wed Jul 11, 2018 10:20 pm

சின்னக்குயில் தமிழ்த்திரையிசைக்கு வந்த போது அவர் குரலை ராசா குழலோடு ஒப்பிட்டிருக்கலாம் - அந்தக் குக்குக் குக்குக் கூ கூ என்ற பாடலில் குழலொலி தூக்கலாக இருந்தது மெய்யே.

ஆனால், பெரும் இசைக்குயில் ஜானகியோ, ராசா வரும்போது கூடவே வந்தது Smile

http://mio.to/album/Annakkili+%281976%29

அங்கே தூக்கலாக ஒரே ஒரு இசைக்கருவியைச் சிறப்பிக்காமல் எண்ணற்ற இசைக்கருவிகளைக் கூட்டாகச் சேர்த்து, ஈடு கொடுத்து, ஆரவாரம் செய்ய வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட வரையறையற்ற காட்டாறு ஜானகியின் திறமை!

குறிப்பாக, நமது இழையின் பொருளோடு ஓட்டிப்பார்த்தால் முதல் படத்தில் "நதியோடு பிறந்தேன், கொடி போல வளர்ந்தேன்" என்றும் "நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்" என்றும் இசைக்குயில் பாடும் சூழலில் தூக்கலாக வந்த கருவி என்ன தெரியுமா? முகப்பிசை & பல்லவியின் பின்னணியில் சேர்ந்திசை என்றெல்லாம் ராசா கூட்டிச்சேர்த்த சந்தூர் தான் Smile பாட்டின் முழு நீளமும் அங்கங்கே கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=NnCge4x-df0


வேடிக்கை என்னவென்றால், இந்தப்பாட்டுக்கு ஒரு துயரமான வடிவமும் படத்தில் உண்டு - அதாவது, அந்தப்படத்தில் இருந்த ஒரே ஆண்குரல் பாட்டு. "நதியோரம் பிறந்தாள் கொடி போலே வளர்ந்தாள" என்று சவுந்திரராசர் அழுது வடியும் பாடலுக்கும் முகப்பிசையிலும் இடையிசைகளிலும் நம் மனதைப்பிசைவது சந்தூரே!

https://www.youtube.com/watch?v=L06Szi262n8


அன்னக்கிளி உன்னைத்தேடுதே - ராசா உலகில், நதியென்றால் அங்கே சந்தூர் உள்ள பாடல் Smile

பிற்குறிப்பு:

முதல் படத்திலுள்ள 5 பாடல்களில் 4 பெண் குரலில்! அதிலும் மூன்று ஜானகியம்மா. அதைத்தொடர்ந்தது எண்ணற்ற பாடல்கள், சுவைகள், சிறப்புகள் என்று "தென்றல் வந்து தீண்டும் போது" வரையிலுமே ஜானகி குரலுக்கும் திறமைக்கும் அளவற்ற சிறப்புச்செய்தவர் ராசா.

எப்படிப்பார்த்தாலும், அதற்குப்பின்னால், ஒரு படி குறைவாகத்தான் தான் ராசாவோடுள்ள எஸ்பிபி கூட்டணி.

ஆனால் அவரோ "தான் தான் ராசாவுக்கு ஆகச்சிறந்த கூட்டணி" என்று அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் மார்தட்டிக்கொண்டார். "ராசா தற்கொலை செய்ய வேண்டும்" என்று பாரதிராசாவோடு கூட்டுப்போட்டுக்கொண்டு மேடையில் பேசி விட்டும், முகநூலில் ராசா குறித்து வேண்டாதது எழுதி ஆயிரக்கணக்கானோரின் வசையை ராசாவுக்கு ஈட்டிக்கொடுத்தும் - இப்படியெல்லாம் பெரும் கெட்ட பெயர் எடுத்த பின்னால், என்னவோ தனக்குப் பெரிய மனசு என்று காட்டிக்கொள்ள முயன்று அதிலும் தன்னைக்குறித்தே பாதித் தம்பட்டம் அடித்து விட்டிருக்கிறார்.

"அன்னக்கிளி நினைவிருக்கா?" என்பதாயிருக்கும் ராசா விசிறிகள் அவருக்குச் சொல்ல வேண்டிய மறுமொழி!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Fri Jul 13, 2018 12:19 am

"சாரல் தூவும் முகில்களும்" என்று கவிஞர் சொன்னவுடனேயே ராசாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை!

சந்தூரைக்கொண்டு உடனே அதைத் தெரிவிக்கிறார். பாடலில் மழைச்சாரல் தெறிக்கிறது - தொடர்ந்து வரும் "ஆனந்தப்புதுவெள்ள நீரோட்டமும்" நமது இழைக்கான பொருத்தத்தை அறிவிக்கின்றன,

நிறம் மாறாத பூக்கள் - இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த பாடலான "ஆயிரம் மலர்களே மலருங்கள்' பாடலிலும் சந்தூர் இனிமை உண்டு என்றாலும் அங்கே ஆறு / ஓடை போன்ற வரிகளோ / கருத்தோ இல்லை.

ஆதலால், "இரு பறவைகள்" பாடலுக்குச்சென்று தேடியெடுத்தேன்.

எதிர்பார்த்தது போன்றே இங்கும் முகப்பிசை, இடையிசை, மறுமொழிக் கருவியிசைகள் என்று அங்கங்கே நமக்கு வேண்டிய ஒலியும் இருக்கிறது.

பிறகென்ன - நமது கோட்பாட்டுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு / தெளிவு கிடைத்தாயிற்று Smile

நிறம் மாறாத பூக்கள் ஒலிப்பேழை:
http://mio.to/album/Niram+Maaraatha+Pookkal+%281979%29

இரு பறவைகள் காணொளி :
https://www.youtube.com/watch?v=thlTCTERykU

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Mon Jul 16, 2018 9:51 pm

காவிரியின் புகழ் பாடும் பாடல்களில் மகாநதி படத்தில் வரும் ஷோபா-உமா-பாலு பாடும் ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பாடல் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. அவரோட ஊர் மற்றும் பேர் எல்லாம் பாடலில் வருவதால் வாலி மிகுந்த மகிழ்வுடன் எழுதி இருக்க வேண்டும்.

பல்லவியில் சிறுமியின் குரலில் "இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி" என்று வந்தவுடனேயே ராசா சிலிர்த்தெழுந்து சந்தூரை மறுமொழி சொல்லவைப்பது நமது கோட்பாட்டின் அடிப்படையில் வருகிறது Smile

மட்டுமல்ல, பாட்டின் இந்தப்பாடலின் இடையிசைகளில் சந்தூர் ஒலித்தே ஆகவேண்டும் என்பது ராசாவின் உணர்வுகளின் கட்டாயம் என்றே தோன்றுகிறது. அதுவும் "கங்கையின் மேலான காவிரித்தீர்த்தம்" என்றெல்லாம் வரி உள்ள பாடலில் இந்தக்கருவியின் ஒலியில்லாமல் கடந்து செல்வது ராசாவின் உணர்வுகளின் அடிப்படையில் சரியாக இருக்காதல்லவா (என்று எனக்குத் தோன்றுகிறது).

ஆக, நம் கோட்பாட்டுக்கு வலு சேர்க்கும் இன்னுமொரு பாடல்!

https://www.youtube.com/watch?v=Nv1Y9bbOcdM


https://www.youtube.com/watch?v=itZ1ESboqOk

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Wed Jul 18, 2018 9:04 pm

பாடலின் நடுவே வரும் ஒரே ஒரு வரி - "பொங்கிடும் காவிரி கொள்ளிடத்தோடு சங்கமமாகிறது".

மற்றபடி இந்தப்பாடலுக்கும் ஆறு அல்லது ஓடைக்கும் பெரிய பிணைப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

என்றாலும், இந்த ஒரு வரி போதாதா ராசாவுக்கு?

முதலில் இந்த இனிய மெட்டையும் / மெத்தையையும் / சூழலையும் கேட்டவுடனேயே பஞ்சு அருணாச்சலத்துக்கு எப்படி மனதில் காவிரியும் கொள்ளிடமும் அவற்றின் சங்கமமும் வந்திருக்க வழியுண்டு என்பது ஆர்வம் தூண்டும் ஒன்று!
(அவன் காவிரி / அவள் கொள்ளிடம் என்ற அந்தக்குறும்பை உற்று நோக்குங்கள்)

தொடர்ந்து பாடல் பதிவுக்கு முந்தைய நாளிலோ அல்லது அதே நாளிலோ தான் ராசா கருவி இசைக்கோர்ப்பு எழுதியிருப்பார். அப்போது அவரது கண்ணில் பட்ட இந்த ஒரு வரியாக இருக்கலாம் கருவி இசை இன்னின்ன விதத்தில் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க அவரைத்தூண்டியது!

வாசுதேவன் குரலில் அந்த வரி வரு முன்னும் பின்னும் சந்தூர் பாடகரோடு நடத்தும் "பேச்சு வார்த்தை" மிக அருமையான ஒன்று! மட்டுமின்றி, இந்தப்பாடல் முழுவதுமே சந்தூர் ஒலி எங்கும். (பல்லவியில் எல்லாம் மேற்கத்திய இசைப்பாடல்களில் பியானோ கூடவே வருவது போன்று இங்கே சந்தூர் கொண்டு இழைக்கிறார்! இடையிசைகளிலும் இக்கருவியின் ஒலி கோலோச்சி நிற்கிறது).

என்ன இனிமையான உலகம்!
https://www.youtube.com/watch?v=1MLRKCeQ3Wk


https://www.youtube.com/watch?v=6gZXAQxnb78

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters Empty Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum