Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Tue Jan 09, 2018 12:52 am

#20 ilayaraja Sir Sudha dhanyasi ragam songs

- சுத்த தன்யாசி - அந்த சன்யாசியோட (ராசாவோட) சொத்து, காடும் காடு சார்ந்த இடங்களுக்கான ராகம் ; ஆம்பல் குழல் - புல்லாங்குழலை இந்த ராகத்தின் பாடல்களில் எல்லாம் வாரி இறைக்கிறார்!

- விழியில் விழுந்து இசையில் நுழைந்து கொண்டு தொடங்குகிறார் - புல்லாங்குழலின் மாயம் இங்கு

- ராஜாப்பொண்ணு ஆதி வாடியம்மா (ஒரே முத்தம்), காலை நேரக்காற்றே (பகவதிபுரம் ரயில்வே கேட்), தவிக்குது தயங்குது ஒரு மனது (நதியைத்தேடி வந்த கடல்) , நதியோரம் (அன்னை ஓர் ஆலயம்) , பூவரசம்பூ பூத்தாச்சு / மாஞ்சோசைக்கிளி தானே (கிழக்கே போகும் ரயில்) - இப்படி நிறைய 70'களின் சூப்பர் ஹிட் பாடல்கள்

- சிறுபொன்மணி அசையும் இது தெறிக்கும் புது இசையும் - அட இந்தப்பாடலும் சுத்த தன்யாசி தான், இடையிசையில் கிரகபேதம் செய்து மோகனம் தருவார் ; ஆகச்சிறந்த தமிழ்த்திரைப்பாடல்களில் ஒன்றான "பூந்தளிராட" இந்த ராகம் தான்

- ஏ உன்னைத்தானே - நிறைய அந்நிய சுரங்கள் இல்லாத பாடல் (இளமை இதோ இதோ, மேகம் கொட்டட்டும் போன்றவை போல இல்லாமல்), ஆடும் நேரம் இது தான் தான் என்ற பாட்டும் இதே ராகம்

- காதலுக்கு மரியாதையின் ஆனந்தக்குயிலின் பாட்டு, காலாபானியின் செம்பூவே பூவே, தர்மதுரையின் மாசி மாசம் ஆளான பொண்ணு - இப்படி 90-களிலும் ஹிட் பாடல்கள்

- இந்த விடியோவுக்கு ஒரு க்ளைமாக்ஸ் வைக்கிறார், புதிய பூவிது பூத்தது

He has more video(s) on this rAgam, will collect and feature in the thread as well Smile

https://www.youtube.com/watch?v=I2fMDttXcvY

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Jan 10, 2018 12:16 am

#21 ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2

- பரிபாடலில் தமிழிசை குறித்து உள்ளதைச்சொல்லுகிறார். பாடுமிடத்தை அங்கே பண்ணை என்கிறார்கள், அதாவது இன்று பண்ணைப்புரம் Smile

- பூவேறு கோனும் (திருவாசகம்) - குரலிசையோடு சேர்ந்து வரும் ஒத்திசை குறித்துப்புகழ்கிறார்

- மெட்டைப்பெரும்பாலும் என்ன ராகத்தில் எடுத்துச்செல்கிறாரோ அதையே குறிப்பிடுகிறேன். (ஆரோசை / அமரோசை குறித்தெல்லாம் பேசுகிறார், ஆரோகணம் எல்லாம் விட்டுறலாம்) - ஆயிரம் மலர்களே மலருங்கள், பூமாலை ஒரு பாவை ஆனது

- மாலையில் யாரோ மனதோடு பேச - மெலோடியோ மெலடி - இளம் வயதில் தவறிப்போன ஸ்வர்ணலதாவுக்கு என்னென்ன முத்துக்கள் கொடுத்திருக்கிறார்

- கீர்த்தியைப் பாடுவதே கீர்த்தனம் என்கிறார், ஐம்பது வகைப்பாடல்கள் இப்படித் தமிழிசையில் இருக்கின்றன என்கிறார் - பூப்பூப்பூ புல்லாங்குழல் பூவின் மடல் - ஏழு என்ன ஏழு, ஐந்து சுரங்களுக்குள் எத்தனை பாடல் என்கிறார்

- பார்த்திபனுக்குக்கொடுத்த கொடை, வராது வந்த நாயகன் என்ற அழகான மெட்டு

-காலையில் கேட்டது கோவில் மணி - எமெஸ்வி தயாரிப்புக்காகக் கொடுத்த ஸ்பெஷல் ; ஒம்மனசுல பாட்டுத்தான் - சங்கிலி முருகனுக்கு, கல்லாயிருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய் என்று கலைஞரின் உளியின் ஓசைக்கு - இப்படி நிறைய

- மனசு மயங்கும் - வீணையின் உச்ச ஆக்டேவ் - மனதைச்சுண்டும் பயன்பாடு சிப்பிக்குள் முத்துக்காக

- இந்த ராகத்தில் இப்படி ஒரு பாட்டைப்போட முடியுமா என்று நினைக்கச்செய்யும் "ஒரு பூங்காவனம்" - ராசாவே ஒரு நிகழ்ச்சியில் சொல்லிக்காட்டிய பாடல், மணிரத்னத்துக்காக (எல்லாப்பாடலுமே அற்புதம், விதவிதமான ராகங்கள் இந்தப்படத்துக்கு)

சுத்த தன்யாசி இன்னும் இருக்கு என்கிறார், யூட்யூப் கண்டுபிடித்தால் இங்கே கண்டிப்பாக இடுவேன்

https://www.youtube.com/watch?v=KbMbnabVHJEapp_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Jan 10, 2018 11:35 pm

#22 ilayaraja Sir songs in rare ragas - part-1 & part -2

- சபாக்களில் பயன்படுத்தாத, அபூர்வமாக மட்டுமே பயன்படுத்தும் ராகங்களையும் அவர் விட்டு வைக்கவில்லை என்று வெளிப்படுத்தும் இரண்டு காணொளிகள் - அதில் இது முதலாம் யூட்யூப்.

- அதற்கான பின்னணியை ராசா திரைக்கு வருமுன் பத்மா சுப்ரமணியத்துக்காக இசையமைத்த காலத்தோடு இணைத்துப்பார்க்கிறார். தவறான குற்றச்சாட்டுக்குப் பாட்டுக்கள் / சிறப்பு ராகங்கள் வழியே பதில் சொல்கிறார் என்று யூகிக்கிறார்.

- "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே பாடல் கொண்டு" தொடங்குகிறார். (திரை இலக்கியவாதி மகேந்திரனுக்கு என்கிறார்). அதைத்தொடர்ந்து ஸ்ரீதருக்கு சலநாட்டையில் "பனிவிழும் மலர்வனம்" கொடுத்தார்.

- கரையாத மனமும் உண்டோ, பாட வந்ததோ கானம், தேஷ் கண்ட நடையில் (விழியில் ஒரு கவிதை படித்தேன்) இப்படி பலப்பல அற்புதங்கள்

- எல்லாரும் போட்ட ஹரி காம்போதி - ஆனால் இவர் போடும் போது இரண்டு சரணங்களும், மேற்கத்திய இசை / கர்நாடக இசை என்று எல்லாம் கொண்டு விளையாடி மீறுகிறார், குறிப்பாக இடையிசைகளில், இரண்டாம் சரணத்தில் - இப்படியெல்லாம் (வருஷம் 16 - பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்)

- காபி ராகம் கொண்டு எளிய மெட்டு ஆனால் இடையிசைகளில் புகுந்து விளையாடி மும்பை இசைக்கலைஞர்களின் கைதட்டல் வாங்கினார் என்கிறார் (ஏ பாடல் ஒன்று - இது அங்கேயா பதிவு செய்தார்கள்? தரங்கிணி என்றும் சிங்கப்பூர் என்றும் இரண்டு கதைகள் கேட்டிருக்கிறேன். இப்போது மும்பை என்கிறார்)

- கரகரப்ரியா - பாரதிராஜாவுக்கென்று - பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே (மாதவிப்பொன்மயிலாள் பாட்டும் இதே ராகமாம், மாதவி கனெக்ஷன் தான் இன்பிரேஷனோ என்று எனக்குத்தோன்றுகிறது)

- கர்நாடகக்கமாஸ் - ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

- லதாங்கி கொண்டு சின்ன ராசாவே சித்தெறும்பு என்னக்கடிக்குது (இந்த ராகத்துல இப்படிப்பட்ட பாட்டுப் போடக்கூடாது என்று யாருய்யா சொன்னது என்கிறார், நவரசம் கொடுப்பதில் என்ன தப்புங்கிறார்)

- நளினகாந்தி - எந்தன் நெஞ்சில் நீங்காத - என்ன அழகான ட்யூன்!

- சாருலதா மணியையும் புகழ்கிறார் (ராகங்கள் குறித்து இவர் நிறையக்கட்டுரைகள் / நிகழ்ச்சிகள் / கச்சேரிகள் என்று திரையிசை குறித்துப்புகழ்பவர்)

- ராசாவை நேரில் கண்ட அனுபவத்தைச்சொல்லிப் "பார்த்த விழி பார்த்தபடி" குறித்துப்புகழ்கிறார்

- கண்ணா வருவாயா (பாட் தீப் என்ற இந்துஸ்தானி ராகம், இரண்டு சரணங்களும்  வேறு வேறு என்று இழைப்பது வேறு)

- ரமாப்ரியா - கமலம் பாதக்கமலம் - மோகமுள் (அபரிமிதமான செவ்வியல் மரபு ஞானம்)

- மீனவர்கள் பாடும் "சித்திரச்செவ்வானம்" (காற்றினிலே வரும் காதம்) - கம்பீரநாட்டை ராகம் பாடலில் வருகிறது, ஆனால் அமைப்பு நெய்தல் இசை வெளிப்பாடுகள் கொண்டு நெய்கிறார் என்பது இசைத்தமிழின் அற்புதம்.

https://www.youtube.com/watch?v=K2q5bi5mG3chttps://www.youtube.com/watch?v=2y-VgCRFGME


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Fri Jan 12, 2018 11:35 pm

#23 ilayaraja Sir pantuvarali ragam tracks and songs

- இளையராசாவைப் பகாசுரன் என்றும் பீமன் என்றும் புகழ்கிறார் - பல ராகங்களில் உள்ள மெட்டுக்களை / வடிவங்களை எல்லாம் விழுங்கி, யாருக்கும் மிச்சம் வைக்காமல் செய்தவர் என்பதற்கு உவமையாக!

- ராஜபார்வையின் வயலின் கச்சேரி பந்துவராளி குறித்துப் புகழாமல் இருக்க முடியுமா? செய்கிறார் - சேர்ந்திசை குறித்தும் பலபண்ணிசை குறித்தும் விளக்குகிறார்!

- இந்துஸ்தானி சுவையில் வந்த நினைவெல்லாம் நித்யா பந்துவராளி "ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்"

- ஃபியூஷன் என்ற சொல்லைத்தவிர்த்துப் "புதிய பரிமாண இசை" என்று சொல்ல விழைகிறார் (It is fixed என்ற HTNI டிராக்)

- ஒரு புத்தகமாக ஆவணப்படுத்த வேண்டும், தமிழ்ப்பண்ணிசையின் குரல் எப்படி ராசா வழியே ஓங்கி ஒலித்தது என்றெல்லாம் எழுத ஆவலை வெளிப்படுத்துகிறார்

- மெட்டுப்போடுவது ஒன்று, அதற்கு அழகைக்கொடுப்பது வேறொன்று - இளையராஜாவின் இந்த இசையியலின் தாக்கம் ரகுமானின் இந்திப்பாடல்களில் இருந்ததாகச் சொல்கிறார்

- பிறையே பிறையே - பிதாமகன் குறித்தும் சொல்கிறார்

- "சின்னப்பசங்களா - யாரோடு விளையாடுறீங்க" என்று நான் கடவுளின் ஓம் சிவோஹம் வழியாக வேட்டையாடு விளையாடு ராகவன் மாதிரி அடித்தார் என்கிறார்

https://www.youtube.com/watch?v=ORUVFRVwAxQapp_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Jan 17, 2018 1:14 am

#24 ilayaraja Sir .....ragas with minute differences....but astonishing musical structure

- அவருடைய நூல் குறித்தும் அதற்கான பணம் வழங்குவதற்கான ஏற்பாடு குறித்தும் சொல்கிறார்

- அதைத்தொடர்ந்து கேதாரத்தின் பொன்மாலைப்பொழுது வருகிறது - இசைக்கோர்வைகள் குறித்துப்புகழ்கிறார், தொடர்ந்து சுந்தரி நீயும் Smile

- சுத்த தன்யாசியோடு உறவுள்ள ஆனால் அபூர்வமான ராகமொன்றில் 'சிந்திய வெண்மணி' (ஸ்வதஸ்வினி) ; சுமனேச ரஞ்சினி ராகத்தின் கூறுகள் உள்ள "ஏதோ கனவுகள் நினைவுகள்" (இதுவம் சுத்த தன்யாசியில் இருந்து ஒரே சுரம் மாறிய ஒன்று தான்)

- மலையமாருதம் கொண்டு செய்த கண்மணி நீ வரக்காத்திருந்தேன் எப்படி சக்ரவாகத்தின் பாடலில் இருந்து முழுமையாக மாறி வருகிறது என்று நீ பாதி நான் பாதியோடு ஒப்பிடுகிறார் (ஒரே சுரமாற்றம்)

- தர்மவதி / மதுவந்தி குறித்த ஒப்பீடு, என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் இடுகிறார் (வாணிக்கு வாழ்நாள் பரிசு என்கிறார்)

- மோகனத்தின் "நான் உந்தன் தாயாக வேண்டும்" எப்படி அதோடு ஒட்டி வரும் ராகமான ரசிகரஞ்சனி (ஒரே சுரமாற்றம்) - "அமுதே தமிழே அழகிய மொழியே" - எவ்வளவு வேறு பட்ட மெட்டுக்கள் பிறக்கின்றன!

- கம்பீரநாட்டையின் "இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்" இதற்கு நெருங்கிய ராகமான அமிர்த வர்ஷினியின் "தூங்காத விழிகள் ரெண்டு" - இரண்டு பாடல்களையும் எப்படி ஒப்பிட? என்ன ஒரு ஒட்டுமொத்தப்புதுமை!

https://www.youtube.com/watch?v=FEymmcHjhTo


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Thu Jan 18, 2018 1:28 am

#25 ilayraja Sir Sivaranjani ragam songs----absolute wonders

- "சோகரசத்தை அடையாளம் காட்டுவதற்கு" என்று சொல்லப்படும் சிவரஞ்சனி - படுமலைப்பண்ணின் சேய் ராகம் - இதில் ராசா எப்படி நவரசங்கள், புதிய பரிமாணங்கள், வித்தியாசமான இசை மெட்டுக்கள் கொடுத்தார்!

- ராசா என்பார் மந்திரி என்பார், சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே - சோகரசம் தான்

- ரவுடியின் காதலுக்கு "உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே"

- சிவரஞ்சனி பாடல்களில் ராஜாவின் "கார்ட்" மிகச்சிறப்பு என்கிறார்

- விரகதாபம் கொண்ட "நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே" "யம்மா யம்மா தள்ளிச்செல்லு"

- காதல் உணர்வுகளின் உச்சத்தைக்கொட்டின "அடி ஆத்தாடி"

- மீண்டும் சோகரசம் - பெத்து எடுத்தவ தான் / குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே

- வள்ளி வள்ளி என வந்தாள் - ரிதம் தூக்கல், இப்படியும் முடியுமா என்ற வியப்பு! மிஸ்ரநடை 7/8 அற்புதம் - மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்! அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன் (ஆஷா போஸ்லே பாட்டு)

- "அடர்த்தியாக இந்த ராகத்தைக்கொடுத்த பாடல்" குடகு மலைக்காற்றில் என்கிறார்

- உச்சக்கட்டமாக ஒரு பாடலை இடுகிறார் (சோகம், விரகம், காதல், கொண்டாட்டம் இவற்றுக்கெல்லாம் மேல்) வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே (இதை என்ன ரசம் என்று சொல்ல?)

https://www.youtube.com/watch?v=yIkcpelx9pY


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Fri Jan 19, 2018 9:58 pm

#26 ilayaraja Sir.....songs in various Hindhustani ragas....songs of eternal beauty and sanctity

- மரபிசையில் நாட்டுப்புறம் மற்றும் பல பிற இசை வடிவங்கள் கூடி உண்டான இந்துஸ்தானி இசை குறித்து விளக்குகிறார்

- "இந்துஸ்தானி ராகத்தில் போடுவது" என்று மெனக்கெட்டுப்போடாமல் இயல்பாக மெட்டுப்போடுதல் ராசாவுக்கு மிகவும் கைவந்த கலை!

- பெஹாக் ராகத்தில் ஒரு ஸ்டைலிஷ் பாட்டு மீண்டும் கோகிலாவில் "ஏய் ஓராயிரம்" என்று கொடுத்தார்! அதே போன்று உன் பார்வையில் ஓராயிரம் Smile

- பீம்பிளாசி என்று ஒரு ராகம் (ஆபேரிக்கு இணை என்கிறார்) - தியாகத்தில் கொடுத்த காவியப்பாடல் "வசந்த காலக்கோலங்கள்"

- பாஸந்தி - வசந்தி என்னும் ராகம், இதுவும் தியாகத்தில் போட்டார் - நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (புல்லாங்குழல் மனசாட்சியாகப்பேசும்)

- பாகேஸ்வரி என்ற அருமையான ராகத்தில் நினைச்சே பார்க்க முடியாத ஒரு ட்யூன் அறுவடை நாளில் வெஸ்டர்ன் பாடல் "மேளத்தை மெல்லத்தட்டு " (அறுவடை நாள்)

- பிருந்தாவன சாரங்கா / பிருந்தாவனி என்ற தொடர்புள்ள ராகங்களில் அமைந்த "பூங்காற்றே தீண்டாதே" பாடல் (குங்குமச்சிமிழ்)

- மாண்டு ராகத்தில் ("ஒரு நாள் போதுமா" திருவிளையாடல் பாடலின் ராகம்) அற்புதமாக ராசா போட்ட பாடல் கண்ணிரண்டும் வந்து வந்து கூடும் (கோவில் காளை)

- பகாடி - வான் மேகங்களே (பக்கார்டி ரம் என்று ஒப்பிடுகிறார்)

- பாட்தீப் (கௌரி மனோகரியின் சேய் ராகம் என்கிறார்) - இதில் ஸ்டைலாக இட்ட பாடல் "பாடும் வானம்பாடி"

- ஜோக் ராகத்தில் போட்டது - கருவி இசையில் விளையாடிய "ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே"

- உச்சக்கட்டமாகக் கண்ணீர் வரவழைக்கும் நாயகன் பாடல் - நீயொரு காதல் சங்கீதம் - ராகம் ஷ்யாம் கல்யாண் என்கிறார்கள். மகத்தான இசைக்கோர்வை!

https://www.youtube.com/watch?v=quKGuPNZMHYapp_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Tue Jan 23, 2018 9:33 pm

#27 ilayaraja Sir...songs in Hamsanandhi.....great appreciations from carnatic icons

- கமணஸ்ரமா தாய் ராகம், இது (ஹம்சநந்தி) சேய், தேசுலாவுதே தேன் மலராலே இந்த ராகமாம்

- டிஎன் சேஷகோபாலன் தொலைக்காட்சியில் ராசா குறித்துப் புகழ்ந்ததை நினைவுகூருகிறார் (ஹம்சநந்தி "ராகதீபம் ஏற்றும் நேரம்" குறித்துச்சொன்னது). சுப்புடு "உண்மையிலேயே அவன் ராகதேவன் தான்யா" என்று சொன்னதையும் சொல்கிறார்.

- ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே (வாத்தியார் வீட்டுப்பிள்ளை) பாடலில் சிஞ்ச்சா எப்படி வருகிறது என்று புகழ்கிறார்

- வானம் நிறம் மாறும் (தாவணிக்கனவுகள்) பாடலில் மேதைமை தெரிகிறது என்கிறார்

- வேதம் அணுவிலும் ஒரு நாதம் - சலங்கை ஒலியின் உச்சக்கட்டப்பாடல் அடுத்து சுட்டப்படுகிறது (புகழ்ந்து தள்ளுகிறார்)

- தளபதியின் "புத்தம்புதுப்பூப்பூத்ததோ" - படத்தில் வராத பாடல் (சூழல் குறித்து விளக்குகிறார்)

- "தேன் வெடிப்பு" என்று இந்தக்காணொளியின் இறுதிப்பாடலை விவரிக்கிறார் (ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ)

https://www.youtube.com/watch?v=AVexDrT6Y6E


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Thu Jan 25, 2018 2:37 am

Looks like most of the rAgam-specific youtubes are covered in this thread.
(i.e. whatever so far released by him on youtube, he might publish more in the future and we'll make sure they are grabbed and reported here)

Now, we can cover some of his "other" youtubes.

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Thu Jan 25, 2018 2:48 am

#28 ilayaraja Sir celeberated Mellisai Mannar MSV.....why?

- அண்ணா என்று அழைத்து எமெஸ்வி அவர்களைக்கொண்டாடிய ராசா

- என்னுள்ளில் எமெஸ்வி நிகழ்வில் ஏன் 'நிலவே என்னிடம் நெருங்காதே ஒன்றே கஸல்' என்று ராசா சொன்னார்? எமெஸ்வி எந்த அளவுக்கு இந்துஸ்தானியில் திறமை பெற்றிருந்தார்?

https://www.youtube.com/watch?v=zg_b9P2qB5Uapp_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Thu Jan 25, 2018 11:34 pm

#28 Ilayaraja vs C.R.Subburaman Guru vs Shishyan = Gurusishyan

- (மானசீக) குருவை மிஞ்சின சீடன் ராசா! தேவதாஸ் திரைப்படப்பாடல்கள் ராசாவுக்கு மிகப்பிடித்தவை என்பதை நினைவுகூருகிறார்.

- சுகராகமான கல்யாணியில் சோகப்பாட்டு (துணிந்த பின் மனமே) செய்த சுப்பாராமனை மிஞ்சும்படி இளையராஜா செய்த முயற்சி, சோகராகமான சுபபந்துவராளியில் கேலி / நக்கல் / நையாண்டிப் பாடல் செய்தது (கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் - குரு சிஷ்யன்)

- வாலி "குருவை மிஞ்சும் சிஷ்யா" என்று சொல்வது ராசாவை என்கிறார்

https://www.youtube.com/watch?v=fntQAOlQIL0app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Mon Jan 29, 2018 11:45 pm

#29 ilayaraja Sir extraordinary musical genius --Can Charunivedita criticise him?

- தொடக்கத்தில் ஒரு சிம்பனி இசையை ஒலிக்கவிடுகிறார் ( சிம்பனி #9 D-மைனர் - பீத்தோவன், 1824, அவர் தனது கேட்கும் திறன் இழந்த பின்னர் எழுதிய இசை)

- மேற்கத்திய செவ்வியல் இசையில் சங்கீத ஒலிகள் இசைக்குறியீடுகளால் (நொட்டேஷனில்) எழுதப்படுவதன் சிறப்பை இதன் வழியாக விளக்குகிறார். யார் என்ன சுதியில் பாடினாலும் பெருந்தன்மையோடு ஒத்திசைப்பது மேற்கத்திய செவ்வியல் இசையின் சிறப்பு!

- பீத்தோவன் போன்று கருவியில் வாசித்துக்கேட்காமலே இசையை மனதில் எண்ணிக் குறியீடுகளில் எழுதும் வல்லமை பெற்றவர் அல்லவா இளையராசா? சொல்லப்போனால் அம்மேதைகளுக்கும் இவர் மேல் - இந்தியச்செவ்வியல் இசையும் இவருக்கு அத்துப்படி அல்லவா?

- ஆண்டுக்கணக்கில், வாய்ப்புகள் இருந்து, அத்தகைய சமூகத்தில் இருந்து கற்றுக்கொண்டு அரங்கேறும் கர்நாடக இசையை அனாயாசமாக கடும் வேலைப்பளுவுக்கும் நடுவே கற்றுத்தேர்ந்த ராசாவை என்னென்பது?

- சாரு போன்ற ஆட்கள் இவரைப்பற்றிப்பேசுமுன் இவற்றையெல்லாம், மற்றும் ஒரு பின்புலம் இல்லாமல் வந்தது பற்றியெல்லாம் எண்ணாமல் பேசலாமா என்கிறார்!
 
https://www.youtube.com/watch?v=QRi6L-MX-gA


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Jan 31, 2018 12:30 am

#30 Ilayaraja Sir, Musical tajmahal on western classical and carnatic

- மேற்கத்திய செவ்வியல் இசையின் வரலாறு குறித்துப்பேசுகிறார்

- கர்நாடக இசையில் மேடைக்கச்சேரிகளில் (சபாக்களில்) பாடுவோரிடம் போட்டி இருக்கிறதே ஒழிய இன்னோவேஷன் இல்லை என்பதை அழுத்தமாக முன்வைக்கிறார் - திரையிசையில் தான் அவ்விதமான முன்னெடுப்பு இருக்கிறது என்கிறார்.

- மாறாக மேலைச்செவ்வியல் இசையில் போட்டியல்ல, ஒருங்கிணைக்கும் தன்மைக்கே முதலிடம் என்கிறார் (எல்லோரும் அவரவர் கடமையை நிறைவேற்ற ஒன்று கூடுகிறார்கள் என்கிறார்)

- சர்ச் இசையாகத்தொடங்கி சமூக இசையாக உருமாறிய மேலைச்செவ்வியல் வரலாறு - பன்முகத்தன்மை கொண்ட கலை - புதுமைகள் பெருக்கம் என்கிறார்

- என்னென்ன புதுமைகள் கர்நாடக இசையில் நடத்தப்பட்டன (கச்சேரிகளிலும் திரை இசையிலும் ஏற்கனவே நடந்தவை) குறித்து விவரிக்கிறார்

- இரண்டிலும் புலமை பெற்ற இளையராஜா எப்படி 4 நிமிடப்பாடல் என்ற லிமிடெட் களத்தினுள் நின்று கொண்டு விளையாடுகிறார், இரண்டையும் எப்படி இணைத்துத் தனக்கேயுண்டான ஒரு புது முறையை அப்படிச்செய்தார் என்று விளக்குகிறார் (அம்சத்வனியில் கமகத்தோடு fugue சேர்ப்பது போன்றவை)

https://www.youtube.com/watch?v=FbteOGg47c8app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Mon Feb 05, 2018 10:23 pm

#31 ilayaraja Sir...Should have been given the first place in the top 25 com;posers list

- எந்த அடிப்படையில் அந்தப்பட்டியல் இடப்பட்டது என்பதைக்குறித்து யாரும் பேசவில்லை - ஏன் ஒன்பதாவது இடம், ஏன் முதலிடம் இல்லை என்றெல்லாம் கேட்க வேண்டாமா? என்கிறார்.

- முதல் 8 பேர் யார் யார், ஏன் அவர்கள் சிறப்பானவர்கள் என்றெல்லாம் விளக்குகிறார் ; என்னியோ மோரிகோனே மட்டுமே வேறுபடுகிறார் - ராசா போல் என்கிறார்

- எப்படியெல்லாம் ராசா கூடுதல் செய்திருக்கிறார் என்று கூட்டிச்சேர்க்கிறார்

https://www.youtube.com/watch?v=bX2zXs6HCkYapp_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Feb 07, 2018 12:49 am

#32 reply of a fan'atic' of ilayaraja to the controversy of handling 40-50 films in a year

ரகுமானுக்கு கேள்விக்கணைகள் தொடுத்த யூட்யூப் Smile

https://www.youtube.com/watch?v=5BZ3Geki194


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Feb 07, 2018 9:54 pm

#33 ilayaraja Sir....a scintillating classical (raga) journey with the great Director Sridhar

- "ராகங்கள் அடிப்படையான தொகுப்பில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி" என்று சொல்லி ஸ்ரீதருடனான ராசாவின் கூட்டணி குறித்து இந்த யூட்யூப் இட்டிருக்கிறார்

- ராசாவின் இசையமைப்பு வடிவின் முக்கியமான பல மாற்றங்கள் ஸ்ரீதரோடு செய்த படங்களில் நடந்ததாகச் சொல்கிறார் - குறிப்பாக ராகங்கள், புதுப்புது வடிவங்கள்

- முதல்படம் அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்கிறார் (இளமை ஊஞ்சலாடுகிறது தானே? 1978 v/s 1977 - தகவல் பிழை)

- இளமை ஊஞ்சலாடுகிறது பாடல்களை சிலாகித்து விட்டுப்பின்னர் 'நினைவெல்லாம் நித்யா' வுக்குச்செல்கிறார்

- நானும் ஒரு தொழிலாளி குறித்தும் பேசுகிறார்

-தலையைக் குனியும் தாமரையே (ஒரு ஓடை நதியாகிறது) குறித்து flanger for violin பற்றியெல்லாம் சொல்லி பிரமிக்கிறார்

- ஒரு இனிய உறவு பூத்தது குறித்தும் பேசுகிறார் (எங்கே எங்கே சுகம் எங்கே - அமீர் கல்யாணி ராகம்)

- உன்னைத்தேடி வருவேன் பாடல்கள் பற்றியும் புகழ்கிறார் (ஒரு நாளில், என் அன்பே அன்பே உன் மனம் என் வசம் பாடல்கள்)

- தந்துவிட்டேன் என்னை (விக்ரமின் முதல்) படத்தில் முத்தம்மா முத்தாலம்மா (7/8 பிருந்தாவன சாரங்கா)

- தென்றலே என்னைத்தொடு பாடல்களைக் குறித்துச்சொல்லி உச்சம் காண்கிறார்

https://www.youtube.com/watch?v=eabZ8MVA9UUapp_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Fri Feb 09, 2018 11:34 pm

#34 ilayaraja Sir-- various forms of universal music-----part-1---tamilisai heritage

இளையராஜா யார்
(தமிழிசையில் அவரது இடம் என்ன என்பது குறித்த ஆய்வு, முதல் பகுதி)

Highlights the uniqueness of IR and how his work was extraordinary!

https://www.youtube.com/watch?v=V9eaEzaEI2c


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Feb 14, 2018 11:19 pm

#35 ilayaraja Sir.....tunes of beautiful ragas and bgms of extraordinary brilliance

- சில சுவையான ராகங்களின் தொகுப்பு - அவற்றில் ராசா அமைத்திருக்கும் பாடல்கள்.

- கன்னடப்பிரதேச இசை - பக்தி என்ற அளவில் சுருங்கி நின்றுபோய் விட்டது, தாண்டி வெளியில் கொண்டு வந்து சமூக இசையாக்கியது திரை இசை தான் என்று அடித்துச்சொல்கிறார்

- கமாஸ் என்ற ராகத்தில் 'ஒருவர் வாழும் ஆலையம்' படத்தில் அற்புதமாக வடிவமைத்த "பல்லவியே சரணம்" & முற்காலத்தில் வந்த வேறொரு பாடல் 'நான் பேச வந்தேன்' (பாலூட்டி வளர்த்த கிளி) - என்ன அழகான மெட்டு, இடையிசைகள்!

- லலிதா ராகத்தில் வந்த உன்னால் முடியும் பாடல் (இதழில் கதை எழுதும் / லலித ப்ரிய கமலம் தெலுங்கில்), முகப்பிசை குறித்துப் புகழுகிறார். இசையைக் காட்சிபூர்வமாகப் பார்த்தால் தான் இப்படிப்பட்ட பாடல் எல்லாம் செய்ய முடியும் என்கிறார்

- சிவரஞ்சனி ராகத்தொகுப்பில் முந்தைய விடியோவில் விடுபட்ட பாடல் என்று சொல்லி 'எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்' (நதியைத்தேடிவந்த கடல்) ; சுமனேசரஞ்சனி / சமுத்ரப்ரியா ராகத்தில் கண்ணம்மா காதலென்னும் கவிதை சொல்லடி

- ரசிகரஞ்சனி - ராகத்தில் அவர் காட்டும் வேறுபாடுகள் என்று சொல்லி, அமுதே தமிழே பாடலோடு நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன் பாட்டை ஒப்பிடுகிறார், குறும்பு பிடித்த 'கோணாத செங்கரும்பு' (படிக்காத பண்ணையார்) பாட்டும் இந்த ராகம் தானாம். Laughing

- தர்பாரி கனடா ராகம் - மேற்கத்திய செவ்வியல் இசை கொண்டு இதற்கு முகப்பிசை / இடையிசை அலங்காரங்கள் செய்த அற்புதமான பாடல் : கல்யாணத்தேன் நிலா ; ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

- அமிர்தவர்ஷினி (தூங்காத விழிகள் ரெண்டு பாடலின் "மழை வர வைத்த" ராகம்) - இந்த ராகத்தில் நாட்டுப்புறப்பாட்டு கொடுத்ததை இந்த விடியோவின் க்ளைமாக்ஸ் என்கிறார் - காத்திருந்த மல்லி மல்லி - மல்லுவேட்டி மைனர்

https://www.youtube.com/watch?v=h1zVXyC0Y_k


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Fri Feb 16, 2018 11:51 pm

#36 ilayaraja Sir...Karaharapriya ragam songs(new)...my worship for his Padmavibushan

- அண்மையில் (அதாவது பத்மவிபூஷணுக்குப்பின்) இடப்பட்ட "கரஹரப்ரியா" ராகத்தில் இருக்கும் பாடல்கள் குறித்த காணொளி

- "ஹவ் டு நேம் இட்" ஆல்பத்தின் "டு எனிதிங்" என்ற (எனக்கு மிகப்பிடித்த) டிராக் குறித்து விவரிக்கிறார் - புகழ்கிறார் Smile

- உன்னால் முடியும் தம்பியின் நாதஸ்வர இசையும் அதோடு சேர்ந்த ஆலாபனைகளும் குறித்து சிலாகிக்கிறார்

- நெற்றிக்கண்ணின் "மாப்பிள்ளைக்கு மாமன் மனசு" - அதன் ஆலாத்தி (ஆலாபனைக்கான தமிழிசைச்சொல்) தொடங்கி எப்படி இந்த ராகமும், பாடல் வரிகளும், ரிதமும் சேர்ந்து விளையாடுகிறார்

- ஆனந்தம் பொங்கிடப்பொங்கிட (சிறைப்பறவை?) இந்தப்பாடல் வழியே ராசாவின் மெட்டமைப்பதன் தனித்துவம் குறித்துச்சொல்கிறார்

- 'பூங்காற்று திரும்புமா' பாட்டில் லயிக்கிறார் (ராசாவே வருத்தமா? இந்த இயக்குனர் இப்போ பேசுவதெல்லாம் வருத்தம் தான் என்கிறார் )

- தூளியிலே ஆடவந்த கொண்டு தாலாட்டுகிறார் - தானா வந்த சந்தனமே கொண்டு காதல் மழை பொழிகிறார் - என்னவெல்லாம் நளினமான மெட்டமைப்புகள்

- ஏத்தமைய்யா ஏத்தம் கொண்டு நாட்டுப்புறப்பாட்டில் இந்த ராகத்தின் வரலாறு வெளிப்படுகிறது

- சின்னவர் படத்தில் காமெடிக்கு இதே ராகம் தான் - கடலோரக்கவிதையே கவி பாடும் இளமையே

- உச்சக்கட்டமான பாடலாக டிக் டிக் டிக்கின் "பூமலர்ந்திட" - இசைக்கருவிகளின் பி எச் டி அளவிலான பயன்பாடு குறித்துச்சொல்கிறார் Smile இந்தப்பாட்டெல்லாம் பல்கலைக்கழகத்தில் பாடமாக இடம் பெற வேண்டியது என்கிறார்!

https://www.youtube.com/watch?v=AeqUmBs3_3Y


app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Sat Feb 24, 2018 12:25 am

#37 Ilayaraja Sir.....Songs based on Sankarabaranam raga.....tunes of divinity!

- சி மேஜர் மேற்கத்திய இசையில் "பயிற்றுவிக்கும் ராகம்", கமகங்கள் தவிர்த்துப்பார்த்தால் சங்கராபரணத்துக்கு இணையானது (குறிஞ்சிப்பண்)

- இலக்கணப்படி சங்கராபரணத்தோடு (வெறும் சி மேஜர் அல்ல) எக்கச்சக்கப் பாடல்கள் ராசா தான் செய்தார் என்கிறார்

- ஹேடின் 26 சிம்பனிகள் சி மேஜரில் செய்தார் என்று சொல்லி அதன் சேம்பிள் இட்டுக்காட்டுகிறார்

- பாடிவா தென்றலே ஒரு பூவைத்தாலாட்டவே - முழு இலக்கணம் இல்லாவிட்டாலும் இடையிசைகளில் விளையாடிய பாடல்

- பெண்மானே சங்கீதம் பாடி வா (நான் சிவப்பு மனிதன்) இடையிசைகள் / பாடல் வரிகள் குறித்துப் புகழ்கிறார்

- பச்சமலப்பூவு - ஒரு கர்நாடக இசைக்கச்சேரியில் பாட முழுத்தகுதி உள்ள பாடல் என்கிறார் (மனஇறுக்கத்தை நீக்கும் ராகம் என்பதால் படத்தின் சூழலுக்கு மிகப்பொருத்தம் என்கிறார்).

- எளிய சூழலில் இட்ட "ஆலப்போல்" (எஜமான்), மெட்டுக்கு முழுமையான முக்கியத்துவம் கொடுத்த "பாதக்கொலுசு பாட்டுப்பாடி வரும்" (திருமதி பழனிச்சாமி)

- புல்லாங்குழல் - வயலின் பேசும் பேச்சு, கூட்டுக்குரலிசை எல்லாம் சேர்ந்த மாயாஜாலப்பாடல் - பூவே இளைய பூவே

- சில இடங்களில் அந்நிய சுரம் தொடக்கூடிய பாடல் என்று சொல்லி 'நான் ஏரிக்கரை மேலிருந்து' இடுகிறார்

- விடியோவின் உச்சக்கட்டப்பாடல் என்று சொல்லி 'புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்கப்பார்ட்டி" (ராசாவுக்குக்கொடுக்கப்பட்ட சவால் என்கிறார்)

https://www.youtube.com/watch?v=9oW1l_3koCY
app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Tue Mar 06, 2018 11:12 pm

#38 Ilayaraja Sir...compositions in Kapi ragam....Cappuccino to Kumbakonam filter coffee

- திரையிசையில் எல்லா இசை அமைப்பாளர்களும் கையாண்டிருக்கும் பண் - பலரும் விரும்பிக்கையாளும் ராகம். இந்துஸ்தானியில் சமானமானது பீலு எனும் ராகமாம்

- சின்னஞ்சிறு கிளியே (சி ஆர் சுப்பாராமன்) செந்தமிழ்த்தேன் மொழியாள் (எமெஸ்வி), காதல் சிறகைக் காற்றினில் விரித்து (வி-ஆர்) குறித்தெல்லாம் பேசுகிறார்

- தொடக்க காலத்தில் மாரியம்மன் திருவிழா படத்தில் "சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி" என்ற டிஎம்எஸ் பாடலைச் சுட்டுகிறார்

- ஏ பாடல் ஒன்று - ப்ரியாவின் ஸ்டீரியோ பாடல் குறித்துப்புகழ்கிறார் (ஷெனாய் ஒலியின் இனிமை அடடா)

- கரகரப்ரியா பாடல் என்றாலும் காப்பி பகுதிகள் சிறப்பாக வெளிப்படும் "மாலை சூடும் வேளை" (நான் மகான் அல்ல)

- பாபி செம்பருத்தி ஒப்பீடு செய்கிறார், காப்பி ராகத்தின் "செம்பருத்திப்பூவு சித்திரத்தைப்போல அம்பலத்தில் ஆடுகின்றேன்" பாடலின் மெட்டில் மெய் மறக்கிறார்

- டப்பாங்குத்தில் சங்கீத வித்வான் பிச்சையெடுக்கும் "தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" - தொடக்கத்தில் வரும் அந்த வயலின் இசையின் சில நொடிகளிலேயே மனதை நொறுக்கும் பாடல்

- சாமி கிட்டச்சொல்லி வச்சு - ஆவாரம்பூ பாடல் இந்த ராகத்தின் வெளிப்பாடு தான்

- கண்ணே கலைமானே கன்னிமயிலெனக் கண்டேன் உனை நானே

- மலையாள உலகத்தைப் புரட்டிப்போட்டு அற்புதம் செய்த "தும்பி வா" - காப்பி ராகத்தின் அழகு கொண்டு செதுக்கிய பாடல்; ஜானகிக்கும் ஒரு மகுடக்கல்

- தமிழில் இந்தப்பாட்டை அவரே பாடி இதயம் கவர்ந்தார்! இசை வரலாற்றில் தனி இலக்கணமான பாடல்

https://www.youtube.com/watch?v=VhsKMddcU6I

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Usha Tue Dec 25, 2018 7:43 pm

Brindhavana saranga......

https://www.youtube.com/watch?v=X4La2sZHddQ

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Usha Sat Nov 09, 2019 2:20 pm

Madhura Sudha Madhyamavathi... MSV and IR

IR's Madhyamavathi. rombave kirukku naan......

https://www.youtube.com/watch?v=iIdcHYGSSwY

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Usha Wed Jun 10, 2020 3:42 pm

Ilaiyaraaja Sir....his musical identity for heroine characters....Command over Carnatic ragas!

inimel dhan kaekanam...... from madhura sudha...

arumaiyana heroines........

unnal mudiyum thambi Lalitha

Sindhu bhairavi Sindhu

karpoora mullai Maya vinodhini

padum paravaigal Heroine ku piditha ragam..keeravani adharkaga oru paatu.

carnatic isai aLumai... Raja Sir.....

https://www.youtube.com/watch?v=Sz5uc_We_-o

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Usha Wed Jun 10, 2020 4:08 pm

ivarudaiya youtubeil indha video..

endha pirandha nalaiku endru theiryavilali. anal Arpudham... Respect... for Raja.. adhuvum ipadi.. avarudaiya padalgal.. ivargaluku
Rajavirku ipadi oru mariyadhaiya thara thondri irukiradhu..

Feelings.. adhu dhane Raja.....

https://www.youtube.com/watch?v=fj7A8ZU1FwM

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை - Page 2 Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum