Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  jaiganesh Wed Jul 23, 2014 8:41 pm

trmolo -- term tremolando especially refers to a rapid repetition on a bowed string instrument
going by this definition, i think the right thamizh term would be (acc. to me) 
கடிமீள்தொடரிசை - 
கடி - வேகம், விரைவு
மீள்தொடர் - repeated

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  jaiganesh Wed Jul 23, 2014 9:02 pm

ravinat wrote:I need some more words to make some simple sentences.

1) Pitch - கட்டை?
2) Tone -
3) Tune - மெட்டு?
4) Octave - ??
5) Scale - ??

I think with these words, we can create a simple set of paragraphs and do an acid test. Tremolo, trills are the next ones we can take up.
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.23625.0.52.tamillex
pitch -> சுருதி?
தக்கு  - low pitch
எச்சு - high pitch

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  app_engine Wed Jul 23, 2014 9:28 pm

jaiganesh wrote:http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.23625.0.52.tamillex
pitch -> சுருதி?
தக்கு  - low pitch
எச்சு - high pitch

In that same lexicon page, they give ஆரோசை / அமரோசை for high pitch / low pitch Smile

I guess the root words are ஆரவாரம் / அமர்ந்து for high / low Smile

ஆரோசை ār-ōcai : (page 245)

ārōhin. Variety of musical composition; இசையின் வர்ணபேதங்களு ளொன்று.

ஆரோசை ār-ōcai
, n. < ஆர்¹- +. (Mus.) High pitch, opp. to அமரோசை; ஏற்றிப்பாடும் இசை. ஆரோசை யமரோசைகளி னமைத்தார் (பெரியபு. ஆனாய. 24).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  jaiganesh Wed Jul 23, 2014 9:35 pm

app_engine wrote:
jaiganesh wrote:http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.23625.0.52.tamillex
pitch -> சுருதி?
தக்கு  - low pitch
எச்சு - high pitch

In that same lexicon page, they give ஆரோசை / அமரோசை for high pitch / low pitch Smile

I guess the root words are ஆரவாரம் / அமர்ந்து for high / low Smile

ஆரோசை ār-ōcai : (page 245)

ārōhin. Variety of musical composition; இசையின் வர்ணபேதங்களு ளொன்று.

ஆரோசை ār-ōcai
, n. < ஆர்¹- +. (Mus.) High pitch, opp. to அமரோசை; ஏற்றிப்பாடும் இசை. ஆரோசை யமரோசைகளி னமைத்தார் (பெரியபு. ஆனாய. 24).

now u know where aarohanam and avarohanam came from... ;-)

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  ravinat Mon Jul 28, 2014 7:36 pm

Continuing on this topic, it is now time to take a stab at putting all the words together and doing an acid test. Here is a set of words that we have come up so far:

Counterpointமுரண்சேரிசை
Folk Musicநாட்டார் இசை
Carnatic Musicகர்நாடக இசை
Hindustani Musicஇந்துஸ்தானி இசை
Western Classical Musicமேலை தொன்னிசை
Imitationநகலின்னிசை
Fugueநகல் முரண்சேரிசை
Harmonyஒத்திசைவு
Contrapuntalபல்லின்னிசையமைப்பு
Cannonமீள்தொடரிசை
Trillஉடன்மாற்றுகோவை
Pitchசுருதி

Let me now try an English paragraph and see if all the recommended words come together. In this post, I will leave the English paragraph that needs to be translated. Let each one of us try to translate and see if these words convey what we want to convey. If it does not, let's adjust...

"Like several countries in the world, India has a rich tradition of classical music. Like most countries, it has several rich folk music traditions. Also, as an ancient nation with a rich civilization, India has well developed classical musical systems such as Hindustani music and Carnatic classical music. The right pitching is paramount for all Indian musical systems. "

"Western Classical Music, is relatively new compared to Indian classical music. However, due to its focus on documentation and strict rules, combined with technology advances, it has reached a widespread audience. WCM is rooted in its strong foundation of harmony. Harmony requires one or more voices to be played simultaneously. Like ICM, WCM also has strong leanings towards melody. Beyond just creating simple melodies, WCM has a structured approach towards single and multiple melody creation. Single melody creation is governed strictly by scales, which has several variations, though not in as many variations as an Indian Raga. Multiple melody creation is a vast subject by itself and most of multi-melodic music falls under the idea of what musicologists call contrapuntal music. Fugue, counterpoint all take advantage of the contrapuntal form of music.  Imitation is a western melodic form and a cannon is its simplest form. Fugue is more sophisticated form of imitation."

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  Drunkenmunk Mon Jul 28, 2014 9:12 pm

பல நாடுகளைப்போல் இந்தியாவிருக்கும் தொல்லிசை மரபில் பெரும் பாரம்பர்யம் உண்டு. கிட்ட தட்ட அனைத்து நாடுகளை போல் இந்தியவிருக்கும் நாட்டார் இசையில் பல தொன்மை வாய்ந்த மரபுகள் உண்டு. மேலும், மிக பழமையான ஒரு நாகரீகத்தின் இருப்பிடமாக விளங்கும் இந்த நாடு, தொல்லிசை மரபுகளை ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை வடிவங்களாக தொகுத்து, வளர்த்து மற்றும் பராமரித்து வந்திருக்கிறது. சரியான சுருதியில் இசை அமைவது என்பது அனைத்து இந்திய இசை மரபுகளுக்கும் முக்கியமான ஒரு அடையாளம்.

மேலை தொன்னிசை என்பது இந்திய தொன்னிசையுடன் ஒப்பிடும் பொழுது சற்றே புதுமையான ஒரு மரபு. ஆனால், அதன் கட்டுக்கோப்பான முறைகள் மற்றும் தொகுக்கும் வழக்கமும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் கைகோர்த்து அதற்க்கு ஒரு விரிவான ரசிகர் பட்டாளத்தை அமைத்து தந்துள்ளது. இந்திய தொன்னிசையை போல், மேலை தொன்னிசையும் இன்னிசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால், மேலை தொன்னிசை இசையை இனிமையாக அமைப்பதோடு, அதை ஒற்று மற்றும் வேற்றின்னிசையாக படைக்கும் முறைகளையும் நன்றாக தொகுத்துள்ளது. ஒற்றின்னிசை முறையை உட்செலுத்துவது கோவைகள். இந்திய ராகங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு இல்லா விட்டாலும், கோவைகளில் பல விதங்கள் உண்டு. வேற்றின்னிசை ஒரு பெரும் களம், மற்றும் வேற்றின்னிசையில் கிட்ட தட்ட அனைத்து இசை வகைகளும் அறிஞர்களின் பார்வையில் பல்லின்னிசியமைப்பிற்கு கீழ் வரும். நகல் முரண்சேரிசை, முரண்சேரிசை என்பன போன்ற இசை வடிவங்கள், பல்லின்னிசையை அடிப்படையாக வைத்தே அமைபவை. நகல்லின்னிசை என்பது மேலும் ஒரு மேலை இன்னிசை வகை, மற்றும் மீள்தொடரிசை என்பது அதில் இருப்பதிலேயே மிக எளிதான வடிவம். நகல் முரண்சசேரிசை என்பது நகல்லின்னிசையின் ஒரு மனப்பாங்கான வகை.

Last edited by Drunkenmunk on Mon Jul 28, 2014 9:13 pm; edited 1 time in total
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  Drunkenmunk Mon Jul 28, 2014 9:12 pm

PS: My Tamil is self taught. So people who know better, please feel free to wade in Smile
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  app_engine Mon Jul 28, 2014 10:05 pm

உலகில் உள்ள பல நாடுகளைப்போல், இந்தியாவுக்கும் தொன்மை இசை மரபு சிறப்பாக இருக்கிறது. மற்ற நாடுகளைப்போல் இங்கும் பல்வேறு நாட்டார் இசை மரபுகள் சிறப்பாக உள்ளன. மேலும், இந்தியா பண்டைய காலத்திலேயே வளமிக்க நாகரிகம் கொண்டிருந்த  நாடு என்பதால்,  இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை போன்ற செறிவான தொன்மை இசை மரபுகள் இங்கு விளைந்திருக்கின்றன! எல்லா இந்திய இசை மரபுகளுக்கும் சரியான சுருதி மிக முக்கியமாகும்.

இந்தியத்தொன்மை இசையோடு ஒப்பிட, மேலைத்தொன்மை இசை புதியது எனலாம். என்றாலும், அதன் அழுத்தமான விதிமுறைகள் மற்றும் எழுதிக்காக்கும் தன்மை என்பனவற்றால் விரிவான விதத்தில் பலரையும் சென்றடைந்திருக்கிறது. மேலைத்தொன்னிசைக்கு ஆணிவேரும் அடித்தளமும்  ஒத்திசைவு தான். ஒத்திசைவு பெற ஒன்றிலதிகம் ஒலிகள் ஒரே சமயத்தில் வாசிக்கப்பட வேண்டும்.  இந்தியத்தொன்னிசை போன்றே மேலைத்தொன்னிசையும் மெட்டு சார்ந்தது தான். என்றாலும், எளிய மெட்டுக்களுக்கும் அப்பால், மேலைத்தொன்னிசை ஒற்றை மற்றும் பன்மை மெட்டுக்கள் உண்டாக்க ஒரு திட்டமிட்ட வழிமுறை கொண்டிருக்கிறது. ஒற்றை மெட்டு உருவாக்குதல்  திட்டவட்டமான சுரச்சேர்க்கைகளால் நிர்வகிக்கப் படுகிறது. ஒரு இந்திய ராகம் அளவுக்கு இல்லாவிட்டாலும் இவற்றிலும் மாறி மாறி வரும் பல்வேறு வகைகள் உள்ளன.  பன்மை மெட்டுக்கள் உருவாக்குதல் என்பது மிக விரிவான ஒன்று. பெரும்பாலான பன்மை மெட்டு இன்னிசை, இசை வல்லுனர்களால் பல்லின்னிசை அமைத்தல் என்று சொல்லப்படும் முறையின் கீழ் வருகிறது. முரண் சேரிசை , நகல் முரண் சேரிசை  என்பன இவ்வித பல்லின்னிசை முறையான இசை வழியில் வருகின்றன. நகல் இசை  என்பது மேற்கத்திய மெட்டு வகைகளில் ஒன்று. அதன் எளிய வடிவம் மீள் தொடர் இசை. அதன் மிகச்சிக்கலான வடிவம் நகல் முரண் சேர்ந்த இசை.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  jaiganesh Tue Jul 29, 2014 7:26 am

Awesome .. let me post mine once i get hold of the keyboard..

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  ravinat Fri Aug 22, 2014 8:53 pm

I have not forgotten about this. I liked App's version. However, I got very busy and also did not want to be influenced by his version. Here is my shot at the paragraph.

"Like several countries in the world, India has a rich tradition of classical music. Like most countries, it has several rich folk music traditions. Also, as an ancient nation with a rich civilization, India has well developed classical musical systems such as Hindustani music and Carnatic classical music. The right pitching is paramount for all Indian musical systems. "

"Western Classical Music, is relatively new compared to Indian classical music. However, due to its focus on documentation and strict rules, combined with technology advances, it has reached a widespread audience. WCM is rooted in its strong foundation of harmony. Harmony requires one or more voices to be played simultaneously. Like ICM, WCM also has strong leanings towards melody. Beyond just creating simple melodies, WCM has a structured approach towards single and multiple melody creation. Single melody creation is governed strictly by scales, which has several variations, though not in as many variations as an Indian Raga. Multiple melody creation is a vast subject by itself and most of multi-melodic music falls under the idea of what musicologists call contrapuntal music. Fugue, counterpoint all take advantage of the contrapuntal form of music.  Imitation is a western melodic form and a cannon is its simplest form. Fugue is more sophisticated form of imitation."

உலகின் பல நாடுகளைப் போல, இந்தியாவும் உயர்ந்த தொன்னிசை பாரம்பரியம் உள்ள நாடு. நாட்டார் இசை பாரம்பரியமும் இதில் அடங்கும். உலகின் பசுமையான நாகரீகங்கள் தோன்றிய நாடாதலால், இந்தியாவில் நன்கு வளர்ந்த தொன்னிசை வடிவங்களான இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசை வடிவங்கள் அடங்கும். பொதுவாக இந்திய இசைக்கு சரியான சுருதியில் பாடுவது அவசியம்.

மேலை தொன்னிசை, இந்திய தொன்னிசையை பார்க்கையில் புதியது என்று சொல்லலாம். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் இசையை எழுதிப் பாதுகாக்கும் அணுகுமுறை மற்றும் கண்டிப்பான விதிகள், இன்று இவ்விசையின் பரவலான அங்கீகரிப்புக்கு காரணம் என்று சொல்லலாம். ஒத்திசைவு என்பது மேலை தொன்னிசையின் ஆணிவேர் என்று கொள்ளலாம். ஒத்திசைவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வரங்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்பட வேண்டும். இதை மேலை தொன்னிசையில் குரல்கள் என்று சொல்லுகிறார்கள். இந்திய தொன்னிசையைப் போல, மேலை தொன்னிசையிலும் இன்னிசைக்கு முக்கிய பங்கு உண்டு. வெறும் இன்னிசைக்கு அப்பால், பல இன்னிசைகளை உருவாக்குவதற்கு, தெளிவான விதியமைப்பே மேலை தொன்னிசையில் உண்டு. எளிய இன்னிசைத் தொகுப்பை உருவாக்க, ஸ்கேல்கள் மற்றும் அதை சேர்ந்த விதிகள் மேலை தொன்னிசையில் இருந்தாலும், இந்திய தொன்னிசையை யின் ராக அமைப்பைப் போல ஏராளமான வேறுபாடுகள் அடங்கியதல்ல.

பல்லின்னிசை உருவாக்குவது என்பது ஒரு விரிவான துறையானாலும், இசை வல்லுனர்கள் இதை பல்லின்னிசையமைப்பு என்று அழைக்கிறார்கள். நகல் முரண்சேரிசை, முரண்சேரிசை போன்ற இசை வடிவங்கள் பல்லின்னிசையமைப்பின் வடிவங்கள் என்று கொள்ளலாம். நகலின்னிசை என்பது மேலை தொன்னிசையின் ஒரு இன்னிசை வடிவம். மீள்தொடரிசை என்பது நகலின்னிசையின் எளிய வடிவம், நகல் முரண்சேரிசை என்பது அதன் செம்மைப்பாடுடைய வடிவம்.

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  ravinat Sat Jan 03, 2015 2:19 am

Maybe, this is not the right place for this. I came across this youtube video that has a fantastic compilation of the best piano pieces from films and classical music. Highly recommended.

https://www.youtube.com/watch?v=ZLhbz7z5he0

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2 Empty Re: Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum