Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

IR-Pulamaippiththan combo songs

4 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Thu Oct 28, 2021 8:56 pm

app_engine wrote:அவ்வளவாக அறியப்படாத சில பாட்டுக்கள் இட்டாச்சு - சரி மிகப்பரவலாக அறியப்பட்ட ஒரு பாட்டைக் கேட்டு இன்றைய நாளைத் தூக்கலாக முடிப்போம்!
(அதாவது, யூட்யூபில் 1 கோடிக்காட்சிகள் என்றெல்லாம் வருகிறது)

மற்றபடி, பாடல் வரிகள் வழக்கம் போலத்தான் - பள்ளியறை வகை.
(கிட்ட வா / சொட்ட வா / சூடேறுது / மாராப்பு / வீராப்பு இன்ன பிற).

மக்கள் பாட்டைச் சுவைக்கிறார்களா அல்லது காட்சியையா என்று சொல்ல இயலவில்லை - இது போன்ற பாடல்கள் நிறைய வந்த 90-களில் இசையை விடக்காட்சிப்படுத்தல் / அதற்கான செலவுகள் போன்றவை தான் பாடல் பரவுகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாக ஆகிப்போன நிலை.

app,

indha youtubeil Raja sonnadhai dhan ninaikiren. Tune nalla iruku. pidichu iruku. kaekaraanga.

https://www.youtube.com/watch?v=Uobo5HS4UXA



ஏதோ மோகம் பாட்டு programme .அதில் ராஜா சொல்றார். Tune தன் முக்கியம் என்பது போல, ஒரு உதாரணத்துடன்.

தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்                                                                                    
ஒரு தூதுமில்லை உன் தோற்றம் இல்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.என்று சொல்லி,
இந்த வரிகளில் என்ன தெரிகிறது...... Tune  செய்ததும். இந்த வார்த்தைகள் எப்படி இருக்கிறது என்று சொல்லி,

ஏதோ மோகம் ------ அ அ

ஏதோ தாகம் ------    இ இ

வார்த்தை எப்படி இருந்தால் என்ன, Tune தன் முக்கியம் என்று சொல்லி இருக்கார்.link kidaikalai.

அதனால், ராஜாவின் கருத்துப்படி, அவருடைய இசை எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. கேட்கிறார்கள் .

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Sat Oct 30, 2021 12:49 am

app_engine wrote:

இதிலும் சென்சார் அழுத்தத்தில் ஒரு வரி மாற்றப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இசைத்தட்டு வெர்ஷன் வலையில் எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை - யூட்யூபில் காணொளி இருப்பதால் திரைவடிவம் இருக்கிறது.


அன்பு சாரிடம் இசைத்தட்டு இருப்பதால் உடனடியாகச் சொல்லி விட்டார் கட்டழகு மாமாவில் உள்ள வரி என்னவென்று. Laughing

ஆக, சென்சார் அழுத்தத்தால் திரையில் மாற்றியிருக்கிறார்கள் என்பது உறுதி Smile

புலவர் ரொம்பக் குறும்புக்காரர்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Nov 02, 2021 10:46 pm

இந்தப்பாடலை இதற்கு முன் கேட்டதில்லை (அல்லது கூர்ந்து நோக்கியதில்லை).

பல்லவி சராசரி தான். சரணத்தில் தான் ராசா வெளுத்து வாங்குகிறார், அதற்கேற்ப நம்ம புலவரும் சிறப்பாக எழுதி இருக்கிறார்,. உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லாத, வீடில்லாமல் தெருவில் வாழும் இளைஞனின் உணர்வுகள் மிகச்சிறப்பாக வந்து விழுகின்றன.

சரணத்தின் கடைசி மூன்று வரிகளுக்கு மெட்டும் சொற்களும் நம் மனதைப்பிழிய வேண்டும் என்ற முனைப்போடு ராசாவும் புலவரும் உண்டாக்கி இருக்கிறார்கள்!

https://www.youtube.com/watch?v=-tYmcJTosWk



குழந்த பாடுறேன் கண்ணுமணி என் பொன்னுமணி
நெனச்சாக்கண்ணுல முத்துமணி மண்ணில் கொட்டும் மணி
தாலாட்டுக் கேட்டதில்ல தாயாரப் பாத்ததில்ல யம்மா யம்மா
தள்ளாடும் எம்மனசு சொல்லாம ஏங்குமடி(ஏங்குதடி) சும்மா சும்மா

ஓ தைப்பொங்கல் தீபாவளி நாளிலே
எல்லோர்க்கும் சாதிசனம் கூடும் அப்ப என்னோட உள்மனசு வாடும்
நான் ஆட்டோடும் மாட்டோடும் ஒன்னு தான்
அன்பாகக் கூப்பிடுற முன்னே நான் அம்மான்னு போயி நிப்பேன் கண்ணே
கால்போன போக்கிலே நாளும் போகிறேன்
"எங்கடா போற"ன்னு யார் கேட்டா?
பொறம்போக்கு பூமியைப்போல் நானே பொதுவாக வாழ்ந்துவிட்டேன் தானே
எனக்கென்ன வீதியடி தேனே அதனால பாவமில்ல மானே
அட எம்பாடு என்னோடு சொல்லாதே யாரோடும் இங்கே

ஏ ஆகாசம் பூப்பூக்கும் ராத்திரி
பாய்போட்டு ஊர் உறங்கும் அங்கே தெரு நாயோடு நாங்கெடப்பேன் இங்கே
நான் அப்போதும் நல்லாத்தான் தூங்குவேன்
மண்ணென்னும் தாய்மடியில் தூக்கம் அவ தாலாட்டு காதுக்குள்ள கேக்கும்
வானத்து வெண்ணிலா என்னப்பாத்துட்டு
"வாடா என் ராசா"ன்னு கை நீட்டும்
எனக்கந்தச் சந்திரனும் சொந்தம் இளங்காலைச் சூரியனும் சொந்தம்
ஒருகோடி நட்சத்திரச்செல்வம் இனியென்ன வாழ்க்கையிலே பஞ்சம்
தமிழ்ப்பாட்டுண்டு நானுண்டு பாராட்ட நீயுண்டு தாயே


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Nov 04, 2021 12:49 am

சின்னதாகக் கொஞ்சம் தத்துவம், மென்மையான துன்பியல், குறைவான கருவியிசை, தெம்மாங்கிலேயே மெல்லப்போகும் மெட்டு - இப்படிச்சில பொதுவான அம்சங்களோடு பல பாடல்கள் ராசாவின் குரலில் அமைந்து இசை விசிறிகளை ஆறுதல் படுத்தியிருக்கின்றன.

அவருடைய பெரும்பாலான "அம்மா" பாட்டுக்கள் இந்த வகை தான்.

அப்படிப்பட்ட ஒரு மென்மையான துன்பியல் தாலாட்டு; ஏற்ற வரிகளைப் புலவர் எழுதியிருக்கிறார்.

மனக்குழப்பம், உளைச்சல் போன்ற கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் இது போன்ற பாடல்கள்.

https://www.youtube.com/watch?v=8OiE1MtgDDg



எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும் உனக்கென நான் இருப்பேன்
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம் பெரிதென வாழ்ந்திருப்பேன்
பூமிதான்டா நம்ம தாயே வீதிதான்டா நம்ம வீடு
இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு

பாற மேலே மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது?
பாவம் இந்தப் பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சது?
தொட்டில் போட்டு ஆட்டும் கையை விட்டு விட்டுப் போவதா?
தொண்ட கட்ட அன்னக்குஞ்சு கத்திக்கத்திச் சாவதா?
அடி அம்மா அடி அம்மா நீ பேசும் தெய்வமா?
இது பாவம் பெரும் பாவம் இத தெய்வம் செய்யுமா?
இது நியாயம் தானா? நீயே சொல்லம்மா!

நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம் அது எங்கும் போகவில்லே
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம் கலங்கிடத் தேவையில்லே
பூமி எங்கும் நம்ம வீடு கண்ணில் என்ன நீரின் கூடு
இனி நாளைக்காலம் என்றும் நம்மோடு

பள்ளமுள்ள பூமி எல்லாம் ஆத்து வெள்ளம் பாயுது
பாசமுள்ள கண்ணில் எல்லாம் அன்னை முகம் தோணுது
ஆறு காஞ்சு  போன பின்னும் பூமி இங்கு வாழுது
அன்பு காஞ்சு  போயிருந்தால் வாழ்க்கை என்ன ஆவது?
அனுதாபம் அபிமானம் அது இன்னும் சாகலே
அது போல ஒரு தெய்வம் அத யாரும் பாக்கலே
நல்ல காலம் வந்து சேரும் வாடாதே

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Nov 04, 2021 10:54 pm

சற்றே மாறுபட்ட மெட்டில் ராசா இசையமைத்த பாடல். (குறிப்பாகப் பல்லவி, வெட்டி வெட்டி முடிகிறது. சரணம் வழக்கம் போல் நீரோடை போல அழகாக ஓடுகிறது.)    

புலவரைப் பொறுத்தவரை "இன்னொரு காமப்பாடல்"!.  
(தேகம் - மோகம்,  கட்டிக்கொள் - ஒட்டிக்கொள், நனையுதே - குளிருதே, உருகுதே - கருகுதே  - இப்படிப்பல வழக்கமான சொற்களைக் கொண்டு நிரப்பிய பாட்டு).

https://www.youtube.com/watch?v=AdPp_8_q83s



அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்


பூவே காதல் பூவே தேனில் ஊறும் தீவே நனையுதே குளிருதே
காதல் என்னும் நோயில்  வாடும் உள்ளம் தீயில் கருகுதே உருகுதே
தீயில் வாடும் தேகம் எங்கும் பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி உன்னில் நான் கண்டேன்
காதல் சேவை இனி நாளும் தேவை
கட்டிக்கொள் நெஞ்சத்தில் ஒட்டிக்கொள் 


காற்றில் ஊஞ்சல் ஆடும் கூந்தல் பாயும் போடும் அனுபவம் புதியது
ஆடை போன நேரம் தேகம் தன்னை மூடும் புது வகைத் துகில் இது
தோளில் ஆடும் மாலை போல நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே
நூலில் ஆடும் சுமை ஆளைத் தேடும்
வாங்கிக்கொள் தாங்கிக்கொள் என்றாடும் 

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Nov 09, 2021 1:33 am

எவ்விதத்தில் பார்த்தாலும் "குப்பைப்பாட்டு" என்று தள்ளிக் களையத்தக்க ஒன்று.

வேண்டாவெறுப்பாகத் தான் இசையமைப்பாளரும் புலவரும் இதற்கு வேலை செய்திருக்க வேண்டும் என்று எனக்குப்படுகிறது.

ஆவணப்படுத்தல் என்ற ஒரே கடமைக்காக இங்கே இடுகிறேன்.

https://www.youtube.com/watch?v=jppMqwsXsJA



ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒழுங்காக க்ளாசுக்குப் போக வேண்டாம்
சினிமாவைப் பார்க்காமல் படிக்க வேண்டாம்
சிகரெட்டு ஊதாமல் படுக்க வேண்டாம்

அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
அடக்கமா ஒன்னப் புடிச்சுக்கோ
பாப்பா என்னையும் பார்ப்பா
ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா
காலேஜில் டீனேஜில்

நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
பாத்ததெல்லாம் படிய வேணும்
படிச்சு என்ன கிழிக்கப்போறோம்?
கலெக்டர் வேலையா பார்க்கப்போறோம்?
வகுப்பில் போரு அடிக்கும் நேரம்
தெருவில் நின்னு காதல் பண்ணு
வாலிபத்துக்கர்த்தம் என்னடா?

பெண்கள் காலேஜ் நமது கோயில்
அவுங்க தான்டா நமக்கு தெய்வம்
குளிக்கும் அறையில் சிலுக்கு படத்த
எடுத்து மாட்டி சூடம் காட்டி
குளிக்கப்போனேன் KM ஜார்ஜு
வழுக்கி விழுந்தா பல்லு போச்சு
நீயும் கொஞ்சம் பார்த்து நடடா


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Nov 09, 2021 6:52 pm

சின்னப்பாட்டு என்றாலும் சிறப்பான பாட்டு!

ராசா குரலில் தாலாட்டு என்றால் இனிமையும், உருக்கமும், உணர்வு வெள்ளமும் இருந்தாக வேண்டும் அல்லவா? கண்டிப்பாக அப்படிப்பட்ட உணர்வுகள் தான் கேட்கையில் நமக்குள் பொங்குகின்றன!

எளிமையான வரிகளைப் புலவர் அழகாக எழுதியிருக்கிறார். உருவகம் / உவமை எல்லாம் மிகப்பொருத்தம்!

கஸ்தூரி மானே மானே
கண்ணீரில் நீந்தும் மீனே
ஊரெங்கும் தூங்கும் நேரம்
உன் கண்ணில் ஏனோ ஈரம்?
கண்ணே உன் அன்னை நானம்மா!
தாயே நீ கொஞ்சம் தூங்கம்மா!
புது ரோஜா இனி வாடாதே
தந்தை மனம் தூங்காதே 


ஆகாசப்பாதை ஓரம் ஊர்கோலம் போகும் மேகம்
அம்மாவைத் தேடிப்போகுமா? 
அம்மாவை நேரில் பார்த்து ஆராரோ ராகம் கேட்டு
தாலாட்டு நாளை பாடுமா?
அந்த மேகம் வரும் பாட்டோடு 
தோளில் நீ சாய்ந்தாடு 

https://www.youtube.com/watch?v=MJDOt1zE2ow



ராசாவின் யூட்யூப் சேனலில் இந்த இசைக்கோர்ப்பு இருக்கிறது - இந்தப்பாட்டு அங்கே கேட்க நேரடி லிங்க் இதோ:

https://www.youtube.com/watch?v=HuaP5ybk7cE&t=1180s


இதோடு இந்த இழையில் 100 பாடல்கள் ஆச்சு, இன்னும் கிட்டத்தட்ட அறுபது பாட்டுக்கள் இருக்கு.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Nov 09, 2021 9:06 pm

இன்னொரு சின்ன & இனிய தாலாட்டுப்பாட்டு - இது ஜானகி குரலில்.

எண்பதுகளில் வந்த நூற்றுக்கணக்கான பாடல்களின் நடுவில் இப்படிப்பட்ட சில இனிய பாடல்கள் அவ்வளவாக அறியப்படாமல் காணாமல் போயின. இன்றும் கேட்டால் புதிது போல் பளிச்சென்று இருக்கின்றன!

"தத்தெடுத்த முத்து" என்று பாடுவதாலும் இதே பாட்டுக்கு இன்னொரு துன்பியல் வடிவமும் இருப்பதாலும் ஒரு குழந்தையை மையமாக வைத்துச் சுழலும் கதை என்று தோன்றுகிறது. (சுசிலாம்மா பாடிய இன்னொரு பிள்ளைத்தமிழ் பாட்டும் இந்த இசைக்கோர்ப்பில் இருக்கிறது வேறு பாடலாசிரியர் எழுதியது).

தத்தெடுத்த முத்தே வா
சாதி மல்லிக்கொத்தே வா
சிப்பி என்னைப் பாராயோ?
சின்ன முத்தம் தாராயோ?


யார் என்பது தெரியாமே ஏன் என்பதும் புரியாமே
நீ கண்டது ஒரு சொந்தம் நான் கொண்டது உயிர் பந்தம்
ஆராரோ ஆரிரரோ என்றே அன்று பாட்டுச் சொன்னேனே
யாராரோ என்றாகும் அர்த்தம் ஒன்று அதிலே கண்டேனா?
ஆடை கட்டிய ரோஜாப்பூக்கள் அன்புக் காட்டில் துள்ளும் மான்கள்
ஊர்கோலம் போகும் விண்மீன்கள்

https://www.youtube.com/watch?v=uZRFjiBVb7Q



துன்பியல் பாட்டின் காணொளி கண்டுபிடிக்க இயலவில்லை - இந்த இணைப்பில் சென்றால் எல்லாப்பாடல்களும் கேட்கலாம். நல்ல இனிமையான இசைத்தொகுப்பு!

https://mio.to/album/Amutha+Gaanam+%281985%29

தத்தெடுத்த முத்தே வா
சாதி மல்லிக்கொத்தே வா
சிப்பி என்னைப் பாராயோ?
சின்ன முத்தம் தாராயோ?


இது ஊமையின் ராகங்கள் ஒரு ஏழையின் சோகங்கள்
யார் வந்து தீர்ப்பதோ? யார் கையில் சேர்ப்பதோ?
ஊரெல்லாம் கார்காலம் எந்தன் வானில் எந்நாளும் கோடை
நான் கேட்டு வந்த வரம் கண்கள் ரெண்டும் கண்ணீரின் ஓடை

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Nov 10, 2021 4:56 pm

எண்பதுகளின் நடுவில் வந்து அவ்வளவாக யாராலும் கண்டுகொள்ளப்படாத படம் / இசைக்கோர்ப்பு தான் "எழுதாத சட்டங்கள்". (நடிகர் திலகம், பிரபு சேர்ந்து செய்த பல மலையாளம் இறக்குமதிகளில் ஒன்று). எல்லாப்பாடல்களும் புலவர் எழுதி இருக்கிறார்.

ஓரளவுக்குப் பரவிய பாடல் தான் பாலு & தங்கை பாடிய "ஆலங்கட்டி மாமழையாம்". 

சிறப்பான மெட்டு, இசை - ஆனால் பல்லவி தவிர மற்றபடி வழக்கமான காம வரிகள். (காட்சிப்படுத்தலும் பெண்ணுடலை மையப்படுத்தி இருப்பதால் புலவரிடம் கேட்டு வாங்கியிருப்பார்கள்).

https://www.youtube.com/watch?v=V48vz3TcD0g



ஆலங்கட்டி மாமழையாம்
ஆணிமுத்துப் பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது


ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட
தேகம் முழுவதும் வழியுது நனையுது நீரில் தேனாக
இனிப்பதென்ன? மணப்பதென்ன?
ஏனோ? ஏனோ? நீயே சொல்


ஒரு ரோஜாத் தோட்டம் வா என ஜாடை காட்டும்
சேலைச் சிறகினில் இரவினில் உறவினில் ஏதோ ஏதேதோ
விடியும் வரை முடியும் வரை
ஆடல் பாடல் போதாதோ?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Nov 11, 2021 12:30 am

கேரளத்தில் இசுலாமியர் திருமணச்சடங்குகளின் விளைவாக "மாப்பிள்ளைப்பாட்டு" என்ற இசை வடிவம் இருக்கிறது. தாசேட்டன் உட்படப் பலரும் அதற்கென்று சிறப்பு இசைக்கோர்ப்புகள் எல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள். துள்ளலும் துடிப்புமாகக் கேட்க வேடிக்கையாக இருக்கும், அலுக்கவே அலுக்காது.

ராசா அந்த வடிவத்தில் என்னென்ன பாட்டுக்கள் உருவாக்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 

இந்தப்பாட்டு கிட்டத்தட்ட அவ்விதத்திலான சூழல் பாடல். ஆனால், அந்த வடிவத்தில் இல்லை. ஒலிக்கருவிகளில் மட்டும் அங்கங்கே சில மையக்கிழக்கு ஒலிகள் வருகின்றன.

பாடலில் தொடக்கத்தில் வரும் "தொகையறா" தவிர மற்றபடி புலவரும் கூடுதல் மெனக்கெடவில்லை - வழக்கமான ராசா-ரோசா / மான்-தேன் பாட்டு!

நடுவில் "நிக்காஹ்" என்ற சொல்லைச் சேர்த்தால் வேலை முடிந்தது என்று விட்டுவிட்டார் போலும்! (மன்னிக்கவும், காபூல் திராட்சை என்பதும் இருக்கிறது)
 
நபி பெருமான் அருளால் ஒரு மனதாக இருவரும் வாழ்க! சுகம் பல காண்க!
எல்லார்க்கும் அருள் செய்யும் அல்லாவே காப்பான்!
கல்யாண திருநாளில் நல்வாழ்த்து சொல்வான்!

கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்குப் பிடிச்ச ஆம்பிளை
நிக்காஹ் நடக்கும் நாளிலே
நெஞ்சங்கள் பறக்கும் வானிலே
ஆயிரம் காலங்கள் தம்பதி வாழ்க!
அத்தனை காலமும் ஆனந்தம் காண்க!

நாடகம் ஆடுவேன் காவியம் பாடுவேன்
வேஷமும் போடுவேன் வித்தைகள் காட்டுவேன்
நல்ல நடிப்பா இதோ இதோ சொல்லிக் கொடுப்பேன் தினம்
கண்ணை அடிக்கும் நிதம் நிதம் கற்றுக் கொடுப்பேன் நிதம் 
என் நெஞ்சில் எப்போதும் நீதாண்டா ராஜா
கையோடு அள்ளிக்கொள் உன் காதல் ரோஜா
போடா ராஜா போ!

கங்கையும் சிந்துவும் சங்கமம் ஆயின
காதலர் நெஞ்சமோ ஓரிடம் சேர்ந்தன
கையில் வளையல் கலீர் கலீர் காதல் இசையைத் தரும்
மின்னல் ஒளியோ பளீர் பளீர் கண்கள் அசைவில் வரும்
பெண் மானின் கண்ணுக்குள் காபூல் திராட்சை
மாப்பிள்ளை கண்ணுக்குள் தீராத ஆசை
நெஞ்சம் எங்கும் தேன்

https://www.youtube.com/watch?v=QMLsCevbK1w


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Nov 12, 2021 9:34 pm

சூழல் பாடல் - நடிகர் திலகத்தின் உணர்ச்சிப்பிளிறலுக்கு வேண்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.
'
இரண்டு சரணங்களுக்கும் வெவ்வேறு மெட்டு & உணர்வுகள் என்றெல்லாம் ராசா மெனக்கெட்டிருக்கிறார் - என்றாலும் போதுமான விளைவுகள் கிடைக்கவில்லை - சுரத்தில்லாத பாடல் வரிகள் ஒரு காரணம். 

வாசு சிறப்பாகப் பாடியிருப்பதும் அருமையான இடையிசைகளும் பாட்டில் குறிப்பிடத்தக்க அம்சங்கள். 

https://www.youtube.com/watch?v=SVTcid9uPWs



எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே?
மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் தருமம் கூண்டிலே!
ஆட்சி அவன் தான் வக்கீல் அவன் தான் 
வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான்


செய்யாத குற்றம் என்றாலும் சட்டம் தண்டிக்க அஞ்சாதது 
பொய்யான காட்சி கண் கண்ட சாட்சி ஆராய்ந்து பார்க்காதது 
தண்ணீரா தீயானது? தாய்ப்பாலா நோயானது? சொல் சொல் சொல்!
சாத்தானின் வேதம் இது சதிகாரர் வாதம் இது ஏன்? ஏன்? ஏன்?
அநியாயம் சபையேறும் ஒரு நாளில் வெளியேறும் அடப்போ போ!


பாசங்களெல்லாம் பாவங்களா? சட்டத்தின் சாபங்களா?
நீதிக்கு என்றும் கண்ணில்லையா? நியாயங்கள் இங்கில்லையா?
தந்தை பிள்ளை போரிலே, தாயின் கண்கள் நீரிலே!
உள்ளம் ஒன்றே உள்ளது, யாருக்கென்றே சொல்வது?
தாயாகி வந்து நோயாகி நின்று கண்ணீரில் சேயாகினாள் 

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Nov 12, 2021 11:07 pm

அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களில் "நாட்டு ஒற்றுமை" (அல்லது விடுதலைப்போராட்டம்) என்ற அடிப்படையில் "வேற்றுமையில் ஒற்றுமை" வகையிலான பாடல்கள் முற்காலங்களில் வருவதுண்டு.

குறிப்பாக நடிகர் திலகத்தின் பல படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெறுவது வழக்கம். 

அந்த வகையிலான பாடல். புலவர் சிறப்பாக எழுதியிருக்கிறார். விதவிதமான தாளவடிவங்கள் கொண்டு ராசாவும் அழகு படுத்தியிருக்கிறார்.

இருந்தும் இந்தப்பாடல் அவ்வளவு புகழ் பெறவில்லை. பொதுவாக இப்படிப்பட்ட பாடல்களை விடாது ஒலிபரப்பும் ஆகாசவாணி கூட இந்தப்பாட்டைக் கண்டுகொள்ளவில்லை. (அவர்களுக்கு இளையராசா என்றாலே கசப்பு தான் என்பதால் எனக்கு வியப்பில்லை).

வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் 
செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் 
முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் 


நானோ வெள்ளிப்பனியில் துள்ளித்திரியும் பொண்ணு 
இனிக்கும் ஆப்பிள் பழமும் எங்கள் மொழியும் ஒன்னு 
காஷ்மீர் மொழி ரோஜாச்செண்டு கஸல் என்னும் பாடல் உண்டு 


செந்தமிழ் என்பது எங்கள் மொழி குறள் தேன்மறை தந்த மொழி 
வந்தவர் யாரையும் வாழ்த்தும் மொழி இந்த வையத்தின் மூத்த மொழி 


வங்காளச்சிங்கம் நேதாஜி தந்த பெருமை எம்மொழியைச் சாரும் 
உலகம் போற்றும் கவியரசர் தாகூர் ஒருவன் போதும் எங்கள் பெயர் சொல்ல 


களங்கள் எங்கும் கொஞ்சும் எங்கள் நாடல்லோ 
பாலாவும் தேனும் சேர்த்துப் பேசும் பேச்சல்லோ 
மலையாளம் எங்கள் தாயின் தாயல்லோ 
எழுத்தச்சன் வந்து அச்சரம் தந்தல்லோ 
முன்னே நாங்கள் சேரர் பின்னே கேரளராயல்லோ


வீரத்துக்கு வீரம் தந்த சிவாஜி அன்னை மொழி எங்கள் மராத்தி 
நெஞ்சில் இனிக்கும் மராத்தி 
தேசம் தன்னைக்காக்க வந்த திலகன் தந்த மொழி அதுவும் மராத்தி 
என்று அவளை நினைத்துப்பாடுவோம் ஆடுவோம் 
தேன்மொழி போற்றுவோம் 


நல்ல தேனில் செய்த ஓசை எங்கள் தெலுங்கு என்னும் பாஷை 
இது கோதாவரி தீரம் செல்வம் கொழிச்சு வந்ததாகும் 
கீர்த்தனையின் நாதம் கேட்கும் எந்த நாளும் 
கீர்த்தி கொண்ட எங்கள் அன்னை மொழியே 


கன்னடம் எங்கள் மொழி பல காவியம் தந்த மொழி 
ஆயிரம் ஆண்டுகள் ஆயும் இலக்கியம் ஆயிரம் கண்ட மொழி 
எங்கள் அன்பிற்குகந்த மொழி 
ராகவேந்திரர் சாமியைக் கண்டதும் தந்ததும் எங்களின் தங்கவயல் 
என்று பாடடி ஞானக்குயில் 


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே 

https://www.youtube.com/watch?v=zLxuCv4T63M


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Nov 12, 2021 11:38 pm

சற்றே மாறுபட்ட வடிவத்திலும் சில சிறப்பான சொற்றொடர்கள் கொண்டும் இருப்பதால் இந்தப்பாட்டை "இன்னுமொரு பொது மகளிர் / காமப்பாட்டு" என்று தள்ளிவிட்டுப் போக முடியாத வண்ணம் என்னவோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. (புது வகை மது வகை / தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம் Laughing )

வழக்கம் போல ஜானகி மிகச்சிறப்பாகப் பாடியிருக்கிறார். (ஒலித்தரம் நன்றாக இல்லையென்றாலும் இனிமைக்குப் பஞ்சமில்லை). 

இதற்கு முன் அவ்வளவாக இந்தப்பாட்டைக் கேட்டதோ சுவைத்ததோ இல்லை. தப்பும் தவறுமாகக் கூட வலையில் எங்கும் பாடல் வரிகள் கிடைக்காததால் பலமுறை நிறுத்தி நிறுத்திக்கேட்டு எழுதியதில் பாட்டின் சிறப்பை உற்று நோக்கும் வாய்ப்புக்கிடைத்தது,

காணொளி வழக்கம் போல மிகக்கொடுமை என்று சொல்லத்தேவையில்லை!

https://www.youtube.com/watch?v=NrCUlkmf20Y



தேன் குளத்திலே குளிக்க வா மிதக்க வா 
பல வித்தை இதில் புரியும், அட வெட்கமென்ன இனியும்?
காதலிலே நீந்த வைக்கக் காமனவன் வெட்டி வச்ச 
தேன் குளத்திலே குளிக்க வா மிதக்க வா 


பொண்ணொன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு 
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே 
தண்ணிக்குள்ளே தீயிருந்து என்னைச்சுடும் நேரம்
பக்கத்திலே நீயிருந்து மெல்லத்தொடு போதும்
வாலிபத்துத் தெப்பம் விட மாறனவன் வெட்டி வச்ச
தேன் குளத்திலே குளிக்க வா மிதக்க வா 


கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம் 
நானொரு மேனகை புது வகை மது வகை 
செம்பருத்திப்பூவெடுத்துச் செஞ்சு வச்ச தேகம் 
தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம் 
போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே 
தேன் - புதிய தேன் / இனிக்கும் தேன் - குளத்திலே குளிக்க வா மிதக்க வா 

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Nov 15, 2021 9:52 pm

வானுலகப் பெண் மண்ணுக்கு வந்து தவமிருக்கும் முனிவரை உறவுக்கு அழைக்கும் கதையைப் படமெடுத்திருக்கிறார்கள்.

முனிவருக்கு நடிகர் திலகம் மிகப்பொருத்தம் என்றாலும் நடனப்பெண்மணி நடிகை தேர்வில் இயக்குநர் தோற்றுப்போனதால் அவ்வளவாக மக்கள் சுவைக்காத காட்சி மற்றும் பாடல் இது.

வழக்கம் போல ராசா-புலவர் கூட்டணி செவ்வியல் பாடலில் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். விரைவாக ஓடிச்செல்லும் மெட்டுக்கு ஏற்ற வண்ணம் சொற்கள் சரளமாக வந்து விழுகின்றன! பலமுறை கேட்டாலும் அலுக்காத பாடல்

ஆடையில் ஆடும் பொன்மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளையாட மை விழியாட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே


குக்கு குகு கூ கூ கூ என்று குயில் கூவாதோ? 
சொர்க்க சுகலோகத்தில் ராகம் வருமே!
தத்த தத தா தா தா நித்தம் உனை நீ தா தா 
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே
உந்தன் அருகே வந்து தழுவும் இன்ப நிலையம்
எந்தன் இடை தான் சொர்க்கபுரியே என்று புரியும்
பட்டுத்துகில் இது கலைந்தாடி வர ஆசைச் சிறகினை விரிக்கின்றதே
தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற தோகை இளமனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி குலுங்கிட நடமிடும் அபிநய அழகு


என்னுடல் இது பொன் நிற அரவிந்தம் ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்
எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம் நித்தமும் அதில் முத்திரை இடலாம்
அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள் ஆயிரம் கலை கூறிட வருமே
அந்தியில் வரும் இந்திர தனுசின்று பார்த்தவர் விழி பூத்திட வருமே
மறை பயிலும் தவ முனியே கலை பயில்வோம் வா!
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா!
மாமுனி என வாழுவதா ஞானம்? காமனின் கலை தேறுவதே ஞானம்!
நான்மறைகளை ஓதுவதா இன்பம்? நான்மறைவினில் கூடுவதே இன்பம்!
மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில் கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா!
இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா!
தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா, வா, வா!

https://www.youtube.com/watch?v=atqJe54EPzg


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Nov 17, 2021 10:03 pm

முந்தைய பாடலைப்போன்றே இதுவும் இன்னொரு "முனிவரை மயக்க முயற்சி செய்யும் பெண்ணின்" பாடல். காட்சியின் படி, அதன் முடிவில் அவள் வெற்றி பெறுவதாகவும் தெரிகிறது. 

சிறப்பான மெட்டு / இசைக்கோர்ப்பு. அதற்கேற்ப எல்லா இடங்களிலும் பொருந்தி வரும் சொற்கள் & அவற்றோடு கூடிய சொற்சிலம்பமும் உண்டு (மா தேவா, மாதே வா - இப்படியெல்லாம்).

அடிப்படையில் காமப்பாடல் என்றாலும் அப்படி நினைத்துக்கொண்டு கேட்காவிட்டால் ஏதோ வழிபாட்டுப்பாடல் என்று நினைக்க வழியிருக்கிறது Smile

https://www.youtube.com/watch?v=IiGc3aAp0rU



மா தவம் ஏன் மாதவனே?
மா துறவை நீ அறிந்தாய், மாதுறவை ஏன் மறந்தாய்?
தவமும் தனமும் சுகமும் என் வசம்


செவ்விதழோ இது தேன்கனிக் கோவை
தேவா உன் பானமுதம் தேவா உன் பானமுதம்
சேயிழை நூலிடை மின்னல் தோரணம்
காமனின் கோயிலில் நானே கோபுரம்
தேனூறும் ஆகாய கங்கை சலசல சலவென வருகிறதே
வழிகிறதே மடியினில் நீராடு


தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி நான் அங்கே தங்க நிலா
ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம்
தியாகமும் யோகமும் என்ன நாடகம்?
பிரம்மாவின் கை வண்ணம் நானே
இளமையில் ஒரு மயில் தனிமையிலே
தவிக்கிறதே ஒரு முறை பாராயோ?


அந்தி மா கலையில் இந்த மேகலைகள் அசையும் அசைவிலே 
இசைவிலே இடை ஒடிய ஒடிய நடைகள் பயிலும் மயில் இது தானே?
விழியில் இரு மரகதம் இதழில் சோமபானம்
நித்தம் பரிமாற வரவா தலைவா?
இளைய தேகம் இரவு நேரம் விரக தாபம் எரியுதே
முகிலிலான குழலும் உந்தன் உறவு தேடி அலையுதே
தவம் அது கலைவது தெரிகிறது
அருள் கொடு மா தேவா
அருகினில் மாதே வா


Last edited by app_engine on Wed Dec 01, 2021 12:27 am; edited 1 time in total

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Nov 18, 2021 1:53 am

இரண்டாம் சரணத்தில் உணர்ச்சி வெள்ளம் கூடுவதற்கேற்ப ராசா தக - தகிட என்று கண்ட நடையில் மெட்டுக்கொடுத்திருக்கிறார் - அதற்கேற்பப் புலவரும் ஆங்காரமாக வந்து கொட்டும் சொற்கள் கொண்டு எழுத, வாசுவும் சரியான அழுத்தத்தோடு பாடிச் சிறப்பித்திருக்கிறார்.

இடையிசைகளும் இந்த இரண்டாம் சரணமும் பாட்டின் சிறப்பு அம்சங்கள். மற்றபடி சராசரிப்பாட்டு.

https://www.youtube.com/watch?v=Qy8xZYTftQc



மானே மலை தந்த தேனே உனக்கென்று தானே.
வந்தேன் உயிர் கொண்டு வாழ்ந்தேன் தினம் இங்கு நானே
காதல் மணித்தீபம் காற்றில் அணைகின்ற நேரம்
ஊரே தடுத்தாலும் உந்தன் முகம் காண வருவேன்


பாடிப்பாடி அழைத்தேன் ஒரு பாசராகம் இசைத்தேன்
மஞ்சள் நிலாவைப் போலே நெஞ்சில் உலாவும் மானே
உயிரில் கலந்த உயிரை நினைந்து துடித்தேன்


பழக ஓரு மனது விலக ஒரு மனது உனது மனம் இரு மனமா?
பழைய நினைவுகளை இனிய கனவுகளைப் பலி எடுத்தான் திருமணமா?
நமது உறவு என்ன பழங்கதையா? நொடியில் மறந்து விடும் சிறு கதையா?.
விதியை நினைத்து மனம் அழுகிறதே
விழியில் அருவி வந்து வலிகிறதே
காதல் வசந்தமே என் வாழ்வின் சுகந்தமே
நீயா பிரிந்தது? எனை நீயா மறந்தது?


கங்கை நதி பொங்கியது கண்ணில் அது தங்கியது துன்பமடி தங்க மயிலே
இன்ப மொழி சொன்ன கிளி மௌனமென நின்ற நிலை என்ன பதில் தந்து விடடி
சட்டி இது சுட்டதென விட்டு விடவா? 
சத்தியமும் இன்று முதல் பட்டு விடவா?
அன்பு நதி இன்ப நதி வற்றி விடவா? 
பச்சை மரம் பட்டதென வெட்டி விடவா?
உள்ளம் அதில் உள்ள எனைத்தள்ளி விடவா? 
ஒட்டுறவு அற்றதெனச் சொல்லி விடவா?
ஜென்மமொடு ஜென்மம் என வந்த உறவு 
வெட்டி விட எண்ணுவது என்ன அழகு?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Nov 30, 2021 11:55 pm

சிறப்பான பள்ளியறைப்பாடல் - தாலாட்டு போலவும் தெம்மாங்கு போலவும் இதமாக இருக்கிறது.

மென்மையான மெட்டு மட்டும் கருவியிசை, அதற்கேற்பப் புலவரும் வரிகளில் சாந்தமாக எழுதியிருக்கிறார். சூழலைக் கருத்தில் கொண்டு என்று தோன்றுகிறது. பாக்யராஜ் திரையில் இருந்தும் காமச்சுவை குறைவாக எழுதப்பட்டிருப்பதே வியக்கத்தக்க ஒன்று தான்.

அருமை!

பூங்குயில் ரெண்டு ஒன்னுல ஒன்னாக்கூடுச்சாம்
காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டிப் பாடுச்சாம்
அடடா காத்துல எங்கும் அது தான் கேக்குது இன்னும்
கண்ணே எந்தன் கண்ணே கேளு

மேகத்துக்கு நேர் வகிடு யார் எடுத்துச் சீவியது?
மேனியெங்கும் ஓவியங்கள் யார் இரவில் தீட்டியது?
அழகுப் பெண்ணின் அங்கம் முழுதும் தங்கம் தங்கம்
பாடடி கண்ணே பருவச்சந்தம்
விழியோ கொஞ்சும் கொஞ்சும் மனமோ அஞ்சும் அஞ்சும்
மன்னனின் நெஞ்சம் எனது சொந்தம்
வானம் எது பூமி எது இரவென்ன பகலென்ன தெரியவில்லே
கண்ணே எந்தன் கண்ணே கேளு.

நீ நடந்த கால் சுவடு மண்ணை விட்டுப் போகலையே
தேவதை உன் பொன்னழகு கண்ணை விட்டுப் போகலையே
மழலை கொஞ்சும் கிள்ளை மனதில் சின்னப் பிள்ளை
தோள்களில் துள்ளும் பருவ முல்லை
மயக்கும் கண்கள் ரெண்டு மனதை அள்ளிக்கொண்டு
ஓடுது என்னைத் திருடிக்கொண்டு
பார்க்குமிடம் அத்தனையும் உனையன்றி  எனக்கிங்கு எதுவுமில்லை
கண்ணே எந்தன் கண்ணே கேளு


https://www.youtube.com/watch?v=Pz39oHMsT-4


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Dec 02, 2021 2:42 am

மிகச்சிறப்பான கருவியிசை மற்றும் சீறிப்பாயும் மெட்டு என்று ராசா சூழலுக்கேற்ப இந்தப்பாடலை வடிவமைத்திருக்கிறார். அதே அளவுக்கு உணர்ச்சிகரமாகப் பாடல் எழுத வேண்டிய  பொறுப்பு புலவருக்குப் பெரிய சுமையாகவில்லை என்பது பாடல் வரிகளைப் பார்க்கும் போது தெளிவாகிறது.

அடித்து விளையாடியிருக்கிறார்!

சிறப்பு!

https://www.youtube.com/watch?v=_h35BnNxmt8



ஆடச்சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே
பாடச்சொன்னால் பாடுவேன் ஆயுள் ரேகை பார்த்துக் கூறவே
எனது மனதில் ஒரு எரிமலை வெடிப்பது உனக்குத் தெரியவில்லையா?
உனது முடிவில் ஒரு திரிபுரம் எரிவது உனக்குத்தெரியும் அந்த நேரம் வரும் வரை

துள்ளாதே நீ உனக்கென்று உண்டான தெய்வத்தை வேண்டிக்கொள்
பெண் சாபமோ பலித்திடும் எப்போதும் தப்பாது கேட்டுக்கொள்
முட்டாள்கள் விதைத்தது முள்ளாக விளைந்தது கட்டாயம் அறுத்துக்கொள்வாய்
உன்னாலே அழிந்ததும் கண்ணீரில் நனைந்ததும் என்னென்று தெரிந்துகொள்வாய்
கொஞ்சம் பொறு நீ பாட நான் கேட்கிறேன்
கெஞ்சிக் கெஞ்சி நீ ஆட நான் பார்க்கிறேன்
தர்மம் என்னும் யுத்தம் இன்றே தொடங்கட்டும்
தஞ்சம் என்றே உந்தன் நெஞ்சம் அடங்கட்டும் போ போ

பெண்ணாலேதான் உனக்கொரு ஆபத்து உண்டாகப் போகுதே
கண்ணீரில்தான் உலகத்தில் பூகம்பம் ஆரம்பம் ஆகுதே
அப்போது நடந்ததும் இப்போது நடப்பதும் பாஞ்சாலி சபதங்களே
அப்போது ஜெயித்ததும் இப்போது ஜெயிப்பதும் சாகாத தர்மங்களே..
தாயின் கண்ணில் நீரல்ல தீ ஊழித்தீ
தோற்பதிங்கு யார் சொல்லு நானல்ல நீ
பொங்கும் எங்கள் சிங்கம் இங்கே வரும் வரும்
ரெண்டில் ஒன்று என்றே இன்றே எழும் எழும் பார் பார்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Dec 02, 2021 8:08 pm

அதே தர்மசீலன் இசைக்கோர்ப்பில் இன்னொரு சிறப்பான பாடல் புலவர் எழுதி இருக்கிறார்.

சூழல் பாடல் - கச்சிதமாகப் பொருந்துகிறது!

ராசாவின் மெட்டும் கருவியிசையும் சேர்ந்து நம்மைப் பிசைகின்றன!

அருமை!

இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா?
மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா?
என்ன உந்தன் கணக்கு?
இன்னும் சொந்தம் என்ன எனக்கு?
மனம் போல் நடத்து நடத்து!

அன்னை ஒரு தெய்வம் என்று ஊரு சொல்லும் தாயே!
உண்மை இல்லை சொன்னதென்று ஆக்கலாமோ நீயே?
வெண்ணிலவைக் காட்டி வைத்துச் சோறு தந்ததுண்டா?
தோளில் ஒரு தூளியிட்டுப் பாட்டுச் சொன்னதுண்டா?
ஐயிரண்டு மாதத்தோடு உந்தன் பாரம் போச்சு
எந்தன் ஆவி கூட என்றும் ஜென்ம பாரம் ஆச்சு
இந்த சோகமும் துன்ப ராகமும் ஆற்றிடவும் தேற்றிடவும்
யாரோ, யாரோ, என் கண்களில் நீரோ?


https://www.youtube.com/watch?v=fbfWsLFqqpQ


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Mon Dec 13, 2021 9:43 pm

எதிர்பாலரை நையாண்டி செய்து எரிச்சல் உண்டாக்குகிற இப்படிப்பட்ட பாட்டுக்கள் பொதுவாக எனக்கு உவப்பில்லாத வகை. (கற்பனைக்கு அப்பாற்பட்ட கருவியிசை கொண்டு ராசா உண்டாக்கிய சில பாடல்கள் இந்த வகையில் உண்டு - கட்ட வண்டி கட்ட வண்டி போன்றவை - கேட்டுச் சுவைக்கப் பிடிக்கும் என்றாலும் திரைக்காட்சியில் வரும்போது ஒவ்வாமை தான்.).

சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லாத இந்தப்பாட்டை இதற்கு முன் கேட்டதில்லை. 

பாடல் வரிகளைப் பதிய வேண்டி இன்று கேட்க நேர்ந்தது 

என்றாலும் இனியொருமுறை தேடிக்கேட்க வழியில்லை. அவ்வளவு தான்!

https://www.youtube.com/watch?v=-Iqbu8Mbkg8



அடியெடுத்து நடந்து வரும் அழகு ராணி அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடியிருக்கும் இளையராணி
துடி துடிக்கிற மனசு மேல நடந்து போயி
எங்கள சடசடன்னு சரிய வைக்குற அழகு ராணி
தலைவியம்மா அழகுக்குன்னே ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்


கன்னி ஒன்னக் கண்டாலே கண்ணடிக்கத் தோணாதா?
கண்ணு ரெண்டுந்தன்னாலே லவ்வு லெட்டர் போடாதா?
வாயில வெக்குற கேக்குல பாதிய கையில கொடுக்கக் கூடாதா?
ஓன் எச்சிலு பட்டதத் திங்கிற புண்ணியம் எங்களுக்கு வரக் கூடாதா?
காலேஜு பாடம் எல்லாம் நமக்கு இப்போ ஏறாது
டீனேஜு பாடத்துக்கு ஒன்ன விட்டா ஆளேது
வெளங்காத பாடம் எல்லாம் வெளங்கிக்கோணும் மச்சி மச்சி


பூவுக்கென்ன பாவாட பொண்ணுக்கென்ன மேலாட
கட்டழகுக் கண்காட்சி காட்டிக்கடி காமாட்சி
விக்கலெடுக்குது தொண்டக்குழியில தண்ணி கொடுக்கணும் இப்போது
சொக்குது சொக்குது பாக்குற கண்ணுல மில்லி அடிச்சது போலாச்சு 
அன்னாடங் காலிரண்டும் தரையிலதான் மேயாது
ஒம்மேல வெச்ச கண்ணு திரும்பி வந்து சேராது
நெனச்சாலே எள மனசு மெழுகு போல உருகுதடி

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Dec 15, 2021 1:12 am

வேடிக்கையான பாட்டு - கேட்டவுடனே சட்டென்று பிடித்து விட்டது Smile

வீரய்யா வீரய்யா போன்ற ஸ்டைலில் சைலஜாவுடன் குழுவினர் பாட ராசா குறும்பாக இசைக்கருவிகள் கொண்டு விளையாடும் பாட்டு.

புலவரும் அதற்கேற்ப நையாண்டியாக வரிகளை எழுதிச் சேர்த்திருக்கார்!


ஏ கெழவி ஏ கெழவி ஏரோப்பிளேன் பாத்தியா?
சீமையில செஞ்சு வந்த சீப்பு சோப்பு பாத்தியா?
பவுடர் இது முழு பாடி இது நல்ல தைலம் இது தல தேய்ச்சுக் குளி
எல்லாம் கோடிப்பட்டியில் வாரச்சந்தையில் வாங்கி வந்திருக்கேன்


பன்னீர் சோப்பு இது நல்லாத் தேச்சுக் குளிச்சாத்தான்
ஒரு ரோசாப் பூவாட்டம் நெறம் மாறிப் போகாதா?
ஸ்ரீதேவி ராதாவாட்டம் நீயும் ஆகோணும்
முன்ன சீமைக்குப் போன தாத்தா பாத்துச் சொக்கோணும்
சிலுக்கு சிலுக்குன்னு ஆடுதே அந்தப் பொண்ணு இன்னா சோப்பு தேச்சுக்குதுன்னு சொல்லுங்கடி
அதுவும் இதுவும் ஒன்னுதான் கெழவி போட்டுக்குளிச்சிட்டுச் சொல்லாத்தா
ஆனா ஒரு சமாச்சாரம் அந்தப் பொண்ணு சொல்லுதுன்னு
நீயும் குளிச்சுட்டு அரையும் கொறையுமா நிக்காதே பாட்டியோ


சீனா சிங்கப்பூர் அது தண்ணிக்கு அந்தப்புறம்
இந்தத் தைலம் அங்கே தான் அவ செஞ்சு கொண்டாந்தா
தேய்ச்சாக்கா ஆறு கெஜம் கூந்தல் வராதா?
நம்ம தேகத்தை மூடிக் கொள்ள சேலையாகாதா?
கட்டில போட்டுத்தான் வாரிக்கணும்
அதை கையில நாலு பேர் வாங்கிக்கணும்
இத எந்தெந்த நடிகைங்கெல்லாம் தேச்சுக்குறாங்கன்னு வெவரமா சொல்லு கண்ணு


பாடல் தனியாக யூட்யூபில் இருக்கிறதா தெரியவில்லை. இந்தக்காணொளியில் படத்தின் எல்லாப்பாடல்களும் இருக்கின்றன. 

https://www.youtube.com/watch?v=gTy_Q7FoCgw



நேரடியாக இந்தப்பாடலைப் பார்க்கவும் கேட்கவும் கீழிருக்கும் இணைப்பை க்ளிக்கவும்!

https://www.youtube.com/watch?v=gTy_Q7FoCgw&t=264s

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Dec 15, 2021 11:30 pm

https://www.youtube.com/watch?v=YNjjn9s1xhE



பல்லவியில் "விட மாட்டேன்" என்ற சொல்லத்தொடர்ந்து வரும் கிடார் சத்தம் மிகப்பொருத்தம் & சிறப்பு!
(முன்பு "ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா" பாட்டில் வந்த அதே போன்ற பயன்பாடு).

பாட்டின் அமைப்பு மற்றும் இடையிசைகள் எல்லாம் கிட்டத்தட்ட "ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்" பாடலை ஒத்திருப்பதால் கேட்க இனிமையாக இருக்கிறது.

பாடல் வரிகளோ மேற்சொன்ன இரண்டு பாடல்களிலும் இருந்து முற்றிலும் வேறுபட்டவை Smile

சூழல் பாடல் - கொள்ளைக்கார அரசியல்வாதிக்கு எதிராக ஹீரோ பாடும் பாட்டு, அதற்கேற்பப் பொருத்தமான வரிகளைப் புலவர் எழுதி இருக்கிறார். 

அரசியல்வாதிகளோடு கூடவே வாழ்க்கைப்பயணம் செய்தவருக்கு இவற்றைப் பட்டியலிடுவது ஒன்றும் பெரிதல்லவே!

அட நானாச்சு நீயாச்சு ஒன்ன நான் ஒரு கை பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு என்ன நான் சரியாகக் காட்டாம விடமாட்டேன்
நீ செய்யும் ராஜாங்கம் அப்போது மாறிப்போகும்
ஒன்னோட பேரெல்லாம் தன்னாலே நாறிப்போகும் 


எத்தன பேர் வாயில நீ மண்ண எறச்ச? பாருங்கடா சாமி கேளுங்கடா கேள்வி!
எத்தன பேர் தோட்டத்துல முள்ள வெதச்ச? பட்டியலப் போட்டுப் பாட வந்தேன் பாட்டு
கையெழுத்தப் பொய் எழுத்தாப் போடுவே, அதில் கள்ளப்பணம் கொள்ளப்பணம் தேடுவே!
நல்லவன் போல் வேஷமும் தான் போடுவே, ஒரு கூடு விட்டுக் கூடு என்று மாறுவே!
ஜாதகமே என்னிடம் இருக்கு இருக்கு இருக்குது, இப்போதே ஊரெல்லாம் சிரிக்குது
எத்தனை நாள் ஆடுவே தகடு தகடு தகடு தான்? எங்க தப்பி ஓடுவே எனது தலைவரே?
பாட்டுல சொன்னத நாட்டுல காட்டுவேன், சரியான சாப்பாடு ஜெயிலிலே!


துட்டு வச்சுப் பெட்டி தந்தாப் பேட்டி உண்டுடா, வீட்டுக்குள்ளே ஜாலி நாட்டுப்பணம் காலி
ரோட்டுக்குன்னு போட்டு வச்ச காச எடுத்துக்கட்டினது வீடு கைய வச்சு மூடு
ஆதியிலே சோத்துக்குத்தான் லாட்டரி, பல கோடியிலே கட்டிக்கிட்டே பாக்டரி
வீதியிலே ஏழை மகன் நிக்குறான், இவன் வேலைக்கொரு ரேட்டு வச்சு விக்குறான்
ஆளுக்கொரு கட்சி தான் கொடியும் வெடியும் பறக்குது, வேளைக்கொரு கொள்கை தான் உதிருது
நாளுக்கொரு போஸ்டரு தகடு தகடு தகடு தான் மைக் மட்டும் கெடச்சுட்டா உளறுடா
வெள்ளிக்காப்ப நான் மாட்டுவேன் ஜீப்புல தான் ஏத்துவேன், சரியான சாப்பாடு ஜெயிலிலே

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Dec 17, 2021 3:01 am

மற்றுமொரு பொது மகளிர் பாட்டு - இது 90-களில் என்பதால் கொஞ்சமே கொடுமையான காமச்சொற்கள் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

மற்றபடி சிறப்பாக வேறொன்றுமில்லை! 
(நல்ல மெட்டு, தங்கக்கொடி நன்றாகப்பாடியிருக்கிறார்! )

எனக்கு ஒன்ன நெனச்சா மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின் ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும் விஷம் விஷம்
எனக்குச் சூலூரு இருக்க மேலூரு 
படிக்கக் கீழூரு நானாரு விடுகதை தான் வா


பசியானாச் சோறு கேட்குது பருவம் வந்தா ஜோடி கேட்குது
இதிலென்ன வெட்கம் வாழுது எறச்ச கிணறு தாங்க ஊறுது
தாகம் வந்தா நானாச்சு தண்ணி பட்ட பாடாச்சு
இல்லயின்னு சொல்லாம அள்ளித்தாரேன் எல்லாமே
நீ கில்லாடிதான் எங்க பின்னாடி வா


கடல் ஆழம் பார்த்ததாரைய்யா? அடி வரையில் போனதாரைய்யா?
இருந்தாக்கக் காட்டு பாக்கலாம் லிஸ்ட்ட எடுத்து நீட்டு பாக்கலாம்
கோட்டை கட்டி வச்சானே பூட்டுப் போட்டு வச்சானா?
எந்தப்பக்கம் தொட்டாலும் அந்தப்பக்கம் தேனூறும்
நீ கில்லாடிதான் எங்க பின்னாடி வா

https://www.youtube.com/watch?v=gOw9MskyBMw


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Sun Dec 19, 2021 1:22 am

அமைதிப்படை இசைக்கோர்ப்பில் புலவர் இன்னொரு டூயட் பாடல் எழுதியிருக்கிறார்.

மிகச்சிறப்பான இந்தக்காதல் பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. படத்தில் இடம் பெறவில்லை என்று தோன்றுகிறது - வீடியோ கண்டுபிடிக்க முடியவில்லை.

சரணத்திற்கான மெட்டில் சட்டென்று வரும் சில மாற்றங்கள் ராசாவின் சிறப்புத்தன்மை - அதற்கேற்ற விதத்தில் புலவரும் சொற்களை அமைத்துச் சிறப்பித்திருக்கிறார். 

நல்ல பாட்டு! முதல் முறையாக இப்போது தான் கேட்கிறேன்!

முத்துமணித்தேரிருக்கு முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டாலாகுமா? பொன்மயிலே என் மனசு தாங்குமா?
அடி நீ தான் நான் பார்த்த தேவதை 
அந்த வானம் காணாத தாரகை


மண்ணில் ஒரு வானவில்லைக் கொண்டு வந்ததாரடி?
மாலையிலே நான் மயங்க மஞ்சம் ஒன்னு கேளடி
சொர்க்கமணிக்கதவு தான் தட்டத்தட்டத் திறக்குது
எப்பொழுதும் இருட்டில் தான் விடுதலை கிடைக்குது
மேகமோ அசைந்தசைந்தாடுது வேகமாய் மழை வரப்போகுது
ஒரு காதல் மின்சாரம் பாயுது
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது


நட்சத்திரப் பூப்பறிச்சு நான் உனக்குச் சூட்டுவேன்
சந்திரனில் பொன்னெடுத்து உன் கழுத்தில் பூட்டுவேன்
நீ சிரிக்கும் சிரிப்பிலே கோயில் மணி ஒலிக்குது
கையணைக்கும் பொழுதிலே என்னுயிரில் இனிக்குது
பூமியா இது அந்த வானமா எங்கு நான் இருப்பது கூறம்மா
ஒரு காதல் மின்சாரம் பாயுது
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது

https://www.youtube.com/watch?v=S6n5MtBwJ8k


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Dec 21, 2021 1:12 am

"கவலையின்றி ஆடிப்பாடித் திரியும் கன்னி" - அந்த இழைக்கேற்ற பாடல் இது. பேபி அஞ்சுவாக "அழகிய கண்ணே" பாட்டில் வந்தவர் இங்கே இளம்பெண்ணாக ஆடுகிறார்.

முதல் இரண்டு வரிகள் தெலுங்கில் இருக்கின்றன (அதற்கு என்ன தேவை என்று தெரியவில்லை - சென்னை என்று காட்டுவதற்காக இருக்கலாம்). அக்கினிப்பார்வை என்ற படத்துக்காக இந்தப்பாட்டு.

சற்றே வேடிக்கையான பாட்டு என்பதற்கப்பால் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை!

https://www.youtube.com/watch?v=eVPaslgxwhs



ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்பத்தப்பு
இதை ஊரே பாக்குது மானம் கப்பல் ஏறுது
காமத்துக்குக் கண்ணு இல்லை தேவுடா
இங்கே கால நேரம் ஏதுமின்றிப் போச்சுடா


பீச்சுப்பக்கம் காத்து வாங்கு, வீட்டுக்குள்ள காதல் பண்ணு
இங்க வந்து காதல் பண்ண வேணுமா?
முட்ட முட்ட நாலு பேரு எட்டி எட்டிப் பாக்கும்போது
தோணிக்குள்ளே காதல் பண்ணத்தோணுமா?
தள்ளிகிட்டு வந்த ஆளா? தாலி கட்டிக்கொள்ளு ராசா!
தாலி கட்டும் முன்னாலே ஜாலி என்ன அம்மாளே?


பல்லுப்போன கொள்ளுப்பாட்டன் கன்னி மேல காதல் வேட்டை
காருக்குள்ளே தள்ளி போகப் பாக்குது
காலம் போன காலம் பாத்துக் காடு போகும் நேரம் பாத்து
காதல் இன்னும் வேணுமின்னு கேட்குது
கையில் கொம்பு ஊணும் தாத்தா கண்ணடிப்பே பொண்ணப் பாத்தா
டூயட் பாட்டு பாடோணும் ப்ரேக் டான்சு ஆடோணும்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs - Page 6 Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum