Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

IR-Pulamaippiththan combo songs

4 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

IR-Pulamaippiththan combo songs Empty IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 08, 2021 8:21 pm

புலவர் புலமைப்பித்தன் இறப்புச்செய்தி துயரமான ஒன்று!

ஆழ்ந்த இரங்கல்கள்!

ராசாவுக்கு அவர் எழுதிய சிறப்பான பாடல்களை இந்த இழையில் நினைவு கூர்வோம்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 08, 2021 8:26 pm

நாயகன் படத்தில் ஒரு பாடல் (நிலா அது) தவிர்த்து எல்லாமே அவர் எழுதிய பாடல்கள் தான்.

தென்பாண்டிச்சீமையிலே அவற்றுள் ஆகச்சிறந்த ஒன்று - கண்கலங்க வைக்கும் தாலாட்டு!
 
https://www.youtube.com/watch?v=VIRKf__jG-c


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 08, 2021 8:33 pm

தாலாட்டு என்றால் தாலாட்டு - ஒப்பாரி என்றால் ஒப்பாரி 

https://www.youtube.com/watch?v=mbai5NfwL3g





தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ?
யாரடிச்சாரோ, யாரடிச்சாரோ?


வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே


அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 09, 2021 5:50 pm

சித்திரையில் நிலாச்சோறு - இந்தப்படமோ பாடல்களோ பொதுவெளியில் பெரிதாக அறியப்படாவிட்டாலும் ராசா விசிறிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த இசைத்தொகுப்பு. 

நீண்ட நாட்களுக்குப்பின் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய படம் - அவருக்கு எப்போதுமே மிகச்சிறப்பான பாடல்களை ராசா வழங்கியிருக்கிறார் - பயணங்கள் முடிவதில்லையில் தொடங்கிய பயணத்தில் இது தான் (இது வரை) இறுதி.

"காலையிலே மாலை வந்தது" என்ற மிக இனிய ஒரு பாடல் - இயற்றியவர் புலவர் புலமைப்பித்தன்.

சத்பபர்ணா என்ற வங்காளப்பெண் பாடியிருக்கிறார். நாயன இசையின் முழக்கமும் வீணையின் இனிமையும் கலந்த சிறப்பான பாடல்!


காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இனிக்காலமெல்லாம் உனைத்தொடர்ந்து வர
உன் காலடிதான் இனிச்சரணமென
இந்த வானமும் பூமியும் வாழ்த்துச்சொல்ல


கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன் கண் திறந்தேன் என்ன அழகு!
எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன் இன்று அதில் நல்ல தெளிவு!
மூங்கில் காடு முழுசாப் பாடும் புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இரு விழிகளில் கதை எழுது


இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு இந்த வரம் வேணும் எனக்கு
சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு


https://www.youtube.com/watch?v=ZVWZsHh4F7c



காட்சிக்கொடுமையைத் தவிர்த்து விட்டுப்பாட்டு மட்டும் கேட்கவேண்டுமென்றால் :

https://www.youtube.com/watch?v=gHeiRCMVUUc


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 09, 2021 6:43 pm

எனக்குத் தெரிந்த வரையிலும் (மற்றும் அன்பு சாரின் எக்செல் கோப்புப்படியும்) புலவர் ராசாவுக்காகப் பாடல் எழுதிய முதல் படம் தீபம். (நடிகர் திலகம் திரையில்).

இந்த இசைத்தொகுப்பின் எல்லாப்பாடல்களும் புலமைப்பித்தன் தான். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது - இன்று வரை அவ்வப்போது கேட்டு மகிழும் தாசேட்டன் - ஜானகி பாடல்.

பூவிழி வாசலில் யாரடி வந்தது? 
கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே? மெல்லத்தொடவா கனியே?
இந்தப்புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே!


அரும்பான காதல் பூவானது அனுபவ சுகங்களைத்தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில் நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போராடுது
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை


இளமாலைத்தென்றல் தாலாட்டுது இளமையின் கனவுகள் ஆடுது
மலைவாழைக்கால்கள் தள்ளாடுது மரகத இலை திரை போடுது
கார் மேகமோ குழலானது ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ?
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே?


கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ? கலை இது அறிமுகம் வேண்டுமோ?
அசைந்தாடும் ஊஞ்சல் நாமாகவோ? நவரச நினைவுகள் தோன்றுமோ?
பூமேனியோ மலர் மாளிகை பொன் மாலையில் ஒரு நாழிகை
நாளும் நானாடவோ?
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

இலட்சக்கணக்கில் காட்சிகள் கண்ட காணொளி இது:

https://www.youtube.com/watch?v=sXJNLCfsPAs


என்றாலும், சற்றே தெளிவாக இருப்பது இங்கே:

https://www.youtube.com/watch?v=HJUWfjrHO6k


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 09, 2021 7:28 pm

தீபத்தில் இன்னொரு பாட்டு - அந்தப்புரத்தில் ஒரு மகாராணி, தமிழகமெங்கும் பரவலாக ஒலித்த பாடல் அக்காலத்தில்.

இதிலும் உவமை, உருவகங்கள் எல்லாம் சடசடவென்று வந்து விழுந்திருக்கும். புலவரின் திறமைக்கு இந்தப்பாடல் ஒரு சான்றே!

பாடலின் இனிமைக்கு டி எம் எஸ்ஸின் பாணி சற்றுத்தடை என்றாலும் திரையில் வருபவருக்குப் பொருத்தம் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம்.

அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்


சாமந்திப்பூக்கள் மலர்ந்தன இரு சந்தனத்தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ?


அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் 
அவன் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்


சங்கு வண்ணக்கழுத்துக்குத் தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ளத்துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றான்


முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப்பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகைத்தென்றல் வந்து ஆரிரோ பாடும்

https://www.youtube.com/watch?v=qrV_3zrCjg8


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 09, 2021 11:17 pm

புலவருக்கான இரங்கல் செய்தியில் கமல் அவரது காதல் பாடல்களில் காமமும் உட்பட்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

உடனே முக்கால்வாசிப்பேருக்கு "ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ" நினைவுக்கு வர வழியுண்டு. புலமைப்பித்தனே அதை ஒரு நேர்காணலில் சொல்லிச் சிரித்ததாக நினைவு. பாடலில் அப்படிப்பட்ட அம்சங்கள் தூக்கல் என்றாலும், "இல்பொருள் உவமை அணியைக்" கொண்டு (சூரியன் இல்லாமல் தாமரை மலராது) தொடங்கினார் என்ற விதத்தில் அது சிறப்பான பாடலே. மட்டுமல்லாமல் நீண்ட பல்லவி மெட்டு என்று ராசாவும் சிறப்புச் சேர்த்த பாடல் அது.

ஆனால், நான் இங்கே வேறொரு பாடலைக் குறிப்பிட விரும்புகிறேன். மிகச்சிறப்பான இசையமைப்பு (குறிப்பாகத் தாளக்கொழுப்பு) கூடிய அதிசயப்பிறவி படத்துப்பாடல் Smile

ஜானகியின் ஆகச்சிறந்தவற்றுள் ஒன்றாக நான் கருதும் பாடல் இது. பலமுறை வண்டியில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருப்பது வழக்கம். அதிலும் அவர் முதல் சரணத்தில் "உதட்டுத்தேனை" என்ற சொல்லை இரண்டாம் முறை பாடும்போது கூடுதல் அலுக்கல்  சேர்த்துப்பாடுவது ரொம்ப, ரொம்பப்பிடித்த ஒன்று.

காட்சிப்படுத்தல் கொடுமை என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க வழியில்லை. வந்தபோதே இதைக் கடுமையாக ஏளனம் செய்திருக்கிறோம்.

என்றாலும், இதுவும் சொற்கள் மெட்டில் சிறப்பாக அமர்வதிலும், இன்பச்சுவையிலும், உவமைகளிலும் கவிஞருக்குப் பெருமை சேர்ப்பதே!

இதழ் எங்கும் முத்துக்கள் சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இளநெஞ்சம் தித்திக்கும் இன்பங்கள் பொங்கட்டும்


முத்திரை முத்தமிடு என் மடியில் மெத்தையிடு
வித்தையைக் கத்துக்கொடு அந்த விவரம் சொல்லிக்கொடு
கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா


இலவம் பஞ்சுக்கன்னம் மெல்லத்தொடு
உதட்டுத்தேனைக் கொஞ்சம் அள்ளிக்கொடு
தொட்ட இடம் அத்தனையும் இன்ப வெள்ளம் பாயும்
துள்ளி வரும் கன்னியுடல் எந்தன் கையில் சாயும்
இரவிலே உன் நினைவு பகலிலே உன் கனவு
தூங்கிடாமல் தூங்க வேண்டும்
தோளில் என்னைத் தாங்க வேண்டும் வா வா


பருவராகம் பாடு என்னருகில் 
இதழில் தாளம் போடு என்னுடலில்
பள்ளியிலே வெள்ளி நிலா தேனைத்தூவும் நேரம்
பக்கத்திலே கன்னி நிலா உன் கண்ணில் போதை ஏறும்
நவரசம் உன் விழியில் மதுரசம் உன் இதழில்
கூந்தல் என்னும் பாயைப்போட்டு
தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா

https://www.youtube.com/watch?v=2NxQ8sC4BPU



https://www.youtube.com/watch?v=T2LFqYrz3VU


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  BC Fri Sep 10, 2021 12:25 am

May his soul rest in peace.  Such a fine lyricist, far better than the many-times-overrated VM, IMHO.  Yet, he does not have any National award.  All the 3 songs of Koyil Puraa were penned by him.

Here are a series of videos of him chatting with Mano in the "Manadhodu Mano" show on Jaya TV years ago.












BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

app_engine likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Sep 10, 2021 5:46 pm

BC wrote:Here are a series of videos of him chatting with Mano in the "Manadhodu Mano" show on Jaya TV years ago.

மனோவுடைய ரியாக்ஷன்கள் எல்லாமே வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் தன்மையுடையவை!
rotfl

அவரு வெள்ளந்தியா இல்லை குசும்பனா என்பது தெரியாது - ஆனால் எனக்கென்னமோ மிகச்சிறந்த நகைச்சுவைக்கலைஞர் என்பது உறுதியாகத் தெரிகிறது!

(ராசா குடும்பத்தயாரிப்பான சிங்காரவேலன் படத்தில் அவருடைய நடிப்பும் இதே போன்று தான் இருக்கும் - நகைச்சுவையின் உச்சம் அந்தப்படம்!)

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Sep 10, 2021 8:53 pm

கமல் திரையில் தோன்றுவதற்கென்று கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உருவான இரண்டு பாடல்கள் -  இளங்கிளியே (சங்கர்லால்) மற்றும் ஹம் பனே தும் பனே (ஏக் துஜே கே லியே).

இரண்டின் பல்லவிகளும் கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருக்கும் (என் கருத்துப்படி). வேடிக்கை என்னவென்றால் ஒன்று இளையராஜா இசை மற்றது லக்ஷ்மிகாந்த் பியாரிலால். கருவியிசைத்தொகுப்புகள் வேறுபட்டாலும் என்னவோ ஒன்று பொதுவாக இருப்பதாக எனக்குத்தோன்றும்.

இந்தப்பாடலில் பாலுவும் ஜானகியும் எப்படிக் கலக்கியிருக்கிறார்களோ அதே அளவுக்குப் புலவரும் புகுந்து விளையாடி இருக்கிறார்.

குறிப்பாகச் சொற்களில் ஒலி இசைவுகள் மிகப்பொருத்தமாகவும் - அதே நேரத்தில் திணிப்பு உணர்வில்லாமல் இயல்பாகவும் இருக்கும்!

தீட்டி, ஊட்டி, காட்டி, வாட்டி எல்லாம் அழகாக வந்து விழும். அது போன்றே தூது, மாது, போது, ஏது - இப்படி ஓசை நயத்தில் மிகச்சிறப்பான பாடல்!

இளங்கிளியே இன்னும் விளங்கலியே
என்னைத்தழுவிட அருகினில் வந்தால் என்ன?
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன?

Come on my darling, feel me by holding
Don't ever leave me, say that you love me!

இளங்கிளியே இன்னும் விளங்கலியே
உன்னைத் தழுவிடும் நினைவுகள் ஒன்னா ரெண்டா?
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா?

Hello my beauty, don't be so naughty
I'm so hottie but I can't help it sweetie!

கண்ணில் அஞ்சனம் தீட்டி ஒரு காதல் போதையை ஊட்டி
நெஞ்சில் பஞ்சணை காட்டி எனை நோகச்செய்வதேன் வாட்டி
அந்தக் காமன் விட்ட தூது உன்னை காதல் கொண்ட மாது
நானும் உன்னைக் கேட்கும் போது இங்கு பாவம் என்ன ஏது?

சின்ன நூலிடை மேலே கொடி மின்னல் தொட்டது போலே
வந்து நீ தொடும் நேரம் குளிர் வானம் மண்ணிலே தோன்றும்
உந்தன் காதல் போதும் போதும் எந்தன் கற்பு என்ன ஆகும்?
என்னைப் பெண்கள் தொட்டதில்லை நானும் பேசிப் பார்த்ததில்லை


https://www.youtube.com/watch?v=A6YHPEyCR-w


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Fri Sep 10, 2021 9:25 pm

மனோவுடனான நேர்காணலில் "நீ ஒரு காதல் சங்கீதம்" பாடல் குறித்துச் சொல்லுகையில் உடல் உறுப்புகளை இழுக்காமல் (அதாவது நேரடியான காமம் கலக்காமல்) எழுத வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்ததாகச் சொல்கிறார்.

அதே போன்ற ஒரு பாடல்.

இதுவும் திட்டமிட்டுச் செய்ததா அல்லது இயல்பாக வந்ததா தெரியவில்லை. ஆனால், காதல் பாட்டில் இவ்வளவு தாய்மை உணர்வு கொண்டிருந்த இன்னொரு பாட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. அவ்வளவு சிறப்பு / மென்மை  / இனிமை!

படமாக்கலும் அழகே - மகேந்திரன் இயக்கத்தில்!

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல அன்புக்குப் பஞ்சமில்ல
தாலேலோ தாலேலோ

நடந்தாக் காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சாக் கோயில் மணி அடிக்கும் கண்ட கண்ணு படும்
பேசும் போது தாயைப் பாத்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ

இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன நான் பார்க்க விழி திறப்பேன் இது சத்தியமே
நீரும் போனா மேகம் ஏது?
நீயும் போனா நானும் ஏது?
என்னுயிரே நீ இருக்க உன்னுயிரும் போகுமோ?


https://www.youtube.com/watch?v=S984kxhgrjg



ஸ்டீரியோ ஒலித்தரத்தில் கேட்கவேண்டுமென்றால் இங்கே செல்லலாம்!

https://www.youtube.com/watch?v=yp6nMDPkjTM


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Sat Sep 11, 2021 12:02 am

கல்லூரிக்காலம் தொட்டு இன்றுவரை அதே விருப்பத்துடன் கேட்கின்ற பாடல்களில் ஒன்று "மாலைக்கருக்கலில் சோலைக்கருங்குயில்".

மிக இனிமையான & சிறப்பான தெம்மாங்கு மெட்டு. அருமையான இசைக்கோர்ப்பு. ஜானகியும் தாசேட்டனும் மிகச்சிறப்பாகப்பாடியுள்ளது என்பவை குறிப்பிடத்தக்க காரணங்கள்.

இதற்கு முன்னால் பாடல் வரிகளை உற்று நோக்கியதில்லை என்றாலும் அவற்றை விரும்பித்தான் கேட்டிருக்கிறேன். (அதாவது, வேறு பல  இனிமையான பாடல்களில் உள்ள வரிகள் சின்ன எரிச்சல் அல்லது வெறுப்பு / அருவருப்பு உண்டாக்குவது போன்றவை ஏற்பட்டதில்லை).

குறிப்பாக "கண்ணுக்குள்ளே வா வா, நெஞ்சுக்குள்ளே போ போ" எப்போதுமே மிகவும் விருப்பமான வரிகள்.

இன்று மீதமுள்ளவற்றையும் உற்று நோக்கியத்தில் பாட்டின் தரம் மிகச்சிறப்பு என்று புரிந்தது.  

மாலைக்கருக்கலில் சோலைக்கருங்குயில் ஏன் பாடுதோ?
ஜோடிக்குயிலொன்னு பாடிப் பறந்ததைத்தான் தேடுதோ?
கண்ணுக்குள்ளே வா வா!
நெஞ்சுக்குள்ளே போ போ!
என் ஜீவனே!

பொண்ணுன்னாப் பொண்ணில்ல தேவ மங்க! பூமிக்கு வந்ததென்ன?
கண்ணுன்னாக் கண்ணில்ல காந்தம் அம்மோய் கதையொன்னு சொன்னதென்ன?
கை வளையோ நான் வளைக்க?
நீ வருவாய் நான் ரசிக்க!
கன்னத்தில் செந்தூரக்கோலம் இட கையோடு கை கொண்டு தாளமிட
நீ ஓடி வா!

இரவெல்லாம் பூமாலை ஆகட்டுமா, மகராசன் தேகத்துல?
மருதாணி நான் வந்து பூசட்டுமா, மகராணி பாதத்தில?
உன் மடிமேல் நான் மயங்க
நாள் விடிந்தால் கண் உறங்க
காவேரி ஆத்துக்குக் கல்லில் அணை கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை
நான் போடவா?


https://www.youtube.com/watch?v=0UYs31lZNRU


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  BC Sat Sep 11, 2021 2:17 am

app_engine wrote:
BC wrote:Here are a series of videos of him chatting with Mano in the "Manadhodu Mano" show on Jaya TV years ago.

மனோவுடைய ரியாக்ஷன்கள் எல்லாமே வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் தன்மையுடையவை!
rotfl

அவரு வெள்ளந்தியா இல்லை குசும்பனா என்பது தெரியாது - ஆனால் எனக்கென்னமோ மிகச்சிறந்த நகைச்சுவைக்கலைஞர் என்பது உறுதியாகத் தெரிகிறது!

(ராசா குடும்பத்தயாரிப்பான சிங்காரவேலன் படத்தில் அவருடைய நடிப்பும் இதே போன்று தான் இருக்கும் - நகைச்சுவையின் உச்சம் அந்தப்படம்!)

Mano is pretty innocent and humorous too.  It could be the lack of fluency in spoken Tamil that makes him look more hilarious than he actually is.  From what SPB and IR have shared, he is mischievous at times.  Always adore Mano and IR interactions; so lively and unpretending.  And thank goodness, he heeded the advice of IR and did not turn into a run-of-the-mill comedian in movies following Singaaravelan.  Otherwise, he would have been totally lost - neither here nor there. 

I did not know the movie was Paavalar Creations.  Anyway, it was quite good entertainer-kind and certainly not in the league of MMKR or even the outrageously good comedy in Aboorva Sagodharargal.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 14, 2021 12:25 am

BC wrote:
I did not know the movie was Paavalar Creations.  Anyway, it was quite good entertainer-kind and certainly not in the league of MMKR or even the outrageously good comedy in Aboorva Sagodharargal.

Singeetham-Kamal combo comedy was a different level.

Velan was R V Udhayakumar I think.

More of Goundamani show than Kamal's Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 14, 2021 12:42 am

புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் சிலவற்றுக்கு ராசா இசையமைத்ததோடு பாடியும் சிறப்பித்திருக்கிறார்.

அவற்றுள் ஒன்று "சக்களத்தி" படத்தில் வந்த "வாட வாட்டுது" என்ற மண்மணம் கமழும் இனிமையான பாடல்.

கேட்டவுடனே ஒரு நாட்டுப்புற இரவில் நாம் அமிழ்ந்து போகும் வண்ணம் இசையும், பாடும் விதமும், வரிகளும் - எல்லாமே மிக அருமையாக அமைந்த பாட்டு.

எனக்குப்பள்ளிக்கால நினைவுகளையையும் அதோடு கூடக்கூட்டி வந்து விடும் சிறப்பு இந்தப்பாட்டுக்கு உண்டு!   கேட்கும்போதே சிறுமலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று நம்மை வருடித் துன்புறுத்துகிறது!

வாட வாட்டுது ஒரு போர்வை கேக்குது
இது ராத்திரி நேரமடி!

ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஒரே ஆச ஒரே வேள தொட்டாப் போதும் கெட்டா போகும்?
ஒன்ன நெனச்சேன் தவிச்சேன்

பன்னீர்ப்பூவே உண்ணாத் தேனே
தொட்டேன் நானே மச்சாந்தானே
கண்ணச் சாய்ச்சு மெல்லப்பாத்து ஒன்னே ஒன்னு தந்தா என்ன?
அத நான் நெனச்சே எளச்சேன்

அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
எல்லா வீடும் இதே நேரம் சொல்லும் பாட்டு நல்லாக்கேட்டு
கொஞ்சம் கதவத் தெற நீ


https://www.youtube.com/watch?v=O1LHnFJ93x0


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 14, 2021 1:18 am

அதே சக்களத்தி படத்தில் வந்த "என்ன பாட்டுப்பாட" ஒரு வேடிக்கையான பாடல்!

"இப்படியெல்லாம் பாட்டா?" என்று வந்த காலத்தில் சிலர் ஏளனம் செய்தாலும் பட்டிதொட்டியெல்லாம் அது ஒலித்தது.

இன்று வரை பலரது நினைவிலும் நிற்கிறது.

ராசா மெட்டு வடிவத்தில் ஏடாகூடமான மாற்றங்கள் செய்து அது வரை இருந்த மெட்டு ஓட்டத்தையே மாற்றினார் என்று இசை வல்லுநர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். எடுத்துக்காட்டுகளாக ஒருவேளை "இது ஒரு பொன்மாலைப்பொழுது / இளைய நிலா" போன்ற எளிதில் "ஒழுகாத / ஓடாத" பல்லவிகள் நினைவுக்கு வரலாம்.

ஆனால் எனக்கு உடனே இந்தப்பாட்டு நினைவுக்கு வரும். ராசா மெட்டுப்போடக் கையாண்ட முறையே அதற்கு முன்னிருந்த திரையிசை அமைப்பாளர்களிடமிருந்து மாறி நின்ற ஒன்று என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

தன்னுடைய சூழல்கள், அங்கிருக்கும் தாளங்கள், ஓசைகள், ஒலிகள் என்று பலவற்றாலும் தாக்கப்பட்டும் - அவற்றையல்லாம் உள்வாங்கியும் - அதே நேரத்தில் ஊற்று போல உள்ளே இருந்து பொங்கும் கற்பனை வளம் கொண்டும் இசையமைத்த ஒரு இயற்கைக்கலைஞன் என்பதற்கு இதெல்லாம் ஒரு சோறு பதம்!

இப்படிப்பட்ட ஏறுக்குமாறான சந்தங்கள் / மெட்டுக்களுக்குப் பாட்டு எழுதுவது கவிஞர்களுக்கு எளிய வேலை அல்ல! எளிதில் வழுக்கி விழ வழியிருக்கிறது. அல்லது, வெறும் சொற்களைக் கோர்த்துப் பொருள் இல்லாமல் கோட்டை விட நேரிடலாம் (நடந்திருக்கிறது).

இங்கே எளிமையான சொற்கள் மெட்டின் மீது அமர்வது மட்டுமல்ல - ஒரு மென்மையான "சமுதாயப்பார்வையும்" புகுத்தப்படுவது நடக்கிறது!  

எத்தனை கருத்துக்கள் பாருங்கள்:

1. இது சர்க்காரு ரோடு (சம உரிமை)
2. பள்ளிக்கூடத்துக்கு வேகமாப்போகணும் (படிச்சு முன்னேறு)
3. வைக்காதே ஆசை  (அதுவே எல்லாத்துன்பத்துக்கும் காரணம்)
4. அங்கே இங்கே கண்ணை வைக்காதே (கண்ணின் ஆசை ஆபத்தில் முடியும்)
5. மேடையின்றி வேடம் போடுறான் / தாளம் போடுறான் (பொதுவாக நிலவும் போலித்தனம் - மாய்மாலம் - "ஆமாஞ்சாமி")
6. வீண் பொல்லாப்பு வேண்டாம் (செவியடக்கம் / நாவடக்கம்)

வியந்து போகிறோம்!

https://www.youtube.com/watch?v=KjbZ_IIdeGU



என்ன பாட்டுப்பாட?
என்ன தாளம் போட?
வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
மாடு ரெண்டும் தாளம் போடக் கொம்பக்கொம்ப ஆட்டுது
நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு

பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாகப்போகணும்
வண்டி பூட்டுனாச் சண்டி ஆகுற காப்பி ஓட்டலப் பாத்து நிக்கிற
வைக்காதே ஆச அது வெங்காய தோச
அங்கேயும் இங்கேயும் கண்ண நீ வைக்காதே

கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம்
மேடையின்றியே வேஷம் போடுறான் ஆளப் போலவே தாளம் போடுறான்
சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம்
கண்டாலும் சொல்லாதே சொன்னாலும் கேக்காதே

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  BC Tue Sep 14, 2021 1:57 am

app_engine wrote:
"இப்படியெல்லாம் பாட்டா?" என்று வந்த காலத்தில் சிலர் ஏளனம் செய்தாலும் பட்டிதொட்டியெல்லாம் அது ஒலித்தது.
Whoever thought so is definitely out of mind.  Such a unique song - both tune and rhythm with the perfect voice (IR's).  Profound philosophy there, again the combination of that with his voice has always produced the best songs, like Appan endrum from Gunaa or the most recent Iraivanai thedum from 60 Vayadhu Maaniram.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 14, 2021 9:44 pm

பள்ளி வயதில் பொதுவாகத் துயரப்பாடல்கள் பிடிக்காது (எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலோருக்கு அப்படித்தான் என்பது கண்டறிந்த உண்மை).

என்றாலும், வானொலியிலும் கோலோம்பி ஒலிப்பான்களிலும் அவை வருவதைத் தவிர்க்க முடியாது என்பதால் நிறையவே கேட்டு வளர்ந்த சூழல்.

ராசா வரும்போதே பல்சுவைகளோடு வந்தார் என்பது தெரிந்த ஒன்று. (சுத்தச்சம்பா - களிப்பு, மச்சானைப்பாத்தீங்களா - இரண்டு வகையும் - துள்ளல் மற்றும் துயரம், அன்னக்கிளி - இதுவும் இரன்டு வகையும், சொந்தமில்லை பந்தமில்லை - துயரம்).

ஒரு விதத்தில் பார்த்தால், துயரப்பாடல்கள் பாதிக்குப் பாதி கொண்டு வந்தார் என்றே கொள்ளலாம். என்றாலும், இசை ஈர்க்க வைத்ததால் அவற்றையும் சுவைக்கும் தன்மை துளிர் விட்டது. நாளாக நாளாக, அவற்றில் காணும் கருத்துக்களும் மனதுள் புகத்தொடங்கியதால் இந்த வகைப்பாடல்களைச் சுவைப்பது வாழ்வின் பங்காக ஆகிப்போனது.

அப்படிப்பட்ட ஒரு பாடல், இந்த "ஓடம் ஒன்று" - புலவர் புலமைப்பித்தன் எழுதியது - ராசா இசைமைத்த சில கருப்பு வெள்ளைப்படங்களில் ஒன்றான "திரிபுர சுந்தரி"யில் மீனவர் வாழ்வில் உள்ள சில நிலையாமைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள், இவற்றுக்கு அப்பால் ஒரு நேர்மறை மனநிலை என எல்லாவற்றையும் உள்ளடக்கிய வரிகள்.

மனதை உருக்கும் விதத்தில் ராசா குரல்.

காட்சியமைப்பை இன்று கண்ட போது மனஅழுத்தம் / சோர்வு உண்டானது. என்றாலும், பாடல் வரிகள் மற்றும் இசை நம்மை வருடத்தக்கது.

பாட்டு மட்டும் கேட்பதற்கு இங்கே செல்லலாம்:
https://www.youtube.com/watch?v=3bw-5M0Zv4Q


காட்சியைப் பார்த்தே ஆக வேண்டும் என்றால் இங்கே இருக்கிறது:
https://www.youtube.com/watch?v=ARSwFniIU64


ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம்
ஏதோ ஒன்று நாளை என்று இன்னும் வாழ்கின்றோம்

பாதை என்று ஏதும் இல்லை காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம்
தாகம் வந்தால் நீரும் இல்லை நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம்
இந்த நீரில் சென்றே கானல் நீரானோம்

தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்
ஓடம் விட்டோம் தீபம் இல்லை நாங்கள் இங்கே ஓடம் போலானோம்
எந்த நேரம் எங்கே போவோம் என்றானோம்

மேகம் என்றால் மின்னல் உண்டு தோன்றும் மின்னல் தானே மாறாதா?
வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு காணும் இன்னல் தானே தீராதா?
நல்ல காலம் ஒன்று நாளை வாராதா?

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Tue Sep 14, 2021 10:20 pm

மனச்சோர்வில் தள்ளத்தக்க பாடல் கேட்டால் அதைச் சரியாக்க வேறொரு எளிமையான / நகைச்சுவையான பாட்டும் கேட்டாக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கட்டாயம்.

அவ்விதத்தில் மிக வேடிக்கையான ஒரு பாட்டை இப்போது கேட்போம்.

வந்த புதிதில் இது தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்காத நாளில்லை! இப்போதும் கேட்க இனிமை தான் என்றாலும் இந்தப்படத்தின் பிற பாடல்கள் போல மக்கள் இதை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை என்பது யூட்யூப் காட்சிகளின் எண்ணிக்கையைப் பார்க்கையில் புரிகிறது Smile

பாக்கியராஜின் திரைவரலாற்றில் ஆகப்பெரும் வெற்றியும் புகழும் பெற்ற முந்தானை முடிச்சு படத்தில் வரும் நகைச்சுவைப்பாடல். பட்டிக்காட்டில் உள்ள ஒரு சுட்டிப்பெண் தனது வருங்காலக்கணவன் குறித்த கனவுகளைக் கூடச்சுற்றும் சிறுவரிடம் சொல்லும் பாட்டு.

உரையாடல் போல எழுதப்பட்டிருக்கும் இந்தப்பாடலின் வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை Smile மெட்டுக்கேற்ப மிக இனிமையாகவும் நகைச்சுவையாகவும் புலவர் விளையாடி இருக்கிறார் என்பதை மெச்சுவோம்!

https://www.youtube.com/watch?v=a32iD22MeHM



நான் புடிக்கும் மாப்பிள்ள தான் நாடறிஞ்ச மன்மதன்டா!
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள!
நான் "கை கட்டி வாய் பொத்தி நில்லு"ன்னா நிக்கணுன்டோய்!

மூஞ்சியத் தூக்காமக் காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணுன்டோய்
ராத்திரி ஷோவுக்கு டூரிங்கு டாக்கீஸ் கூட்டிட்டுப் போகணுன்டோய்
(எங்களையும் கூட்டிட்டுப் போகணுன்டோய்!)
சாமத்தில கால் வலிச்சா நீவி விடக் கத்துக்கணும்
சேவல் கோழி கூவும் முன்னே வாசலையும் கூட்டணுன்டோய்
ஆக மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ள டோய்

"மாமா"ன்னு கூப்பிட்டா "ஏம்மா?"ன்னு கேக்காமத் தாப்பாளப்போடணுன்டோய்
மானுன்னு தேனுன்னு மல்லிகப்பூ வச்சு மாரோட சாய்க்கணுன்டோய்
ஆம்பிள தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும்
ஊருலகம் மெச்சும்படி ராணி என்ன வச்சுக்கணும்
ஒரு வப்பாட்டி கிப்பாட்டி வைக்காமப் பாத்துக்கணும்

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 15, 2021 7:53 pm

ஒரே அசையில் (அல்லது சீரில்) முடியும் சொற்களைக் கொண்டு நெய்யப்பட்ட பாடல்கள் தமிழ்த்திரையிசையில் காலம் காலமாக இருந்து வருகின்றன.

கவிஞர் கண்ணதாசனின் இவ்வகையிலான பாடல்கள் சிறப்பானவை - பரவலாக அறியப்பட்டவை. வேறு கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். ("பார்த்தேன், சிரித்தேன்...உனைத்தேன் என நான் நினைத்தேன்" போன்றவை).

அவ்விதத்தில் ராசா-புலமைப்பித்தன் கூட்டணியில் லா -லா என்ற அசையில் முடியும் சொற்களைக்கொண்ட "கல்யாணத்தேன் நிலா" எல்லோரும் அறிந்த பாடல். மனோவுடனான நேர்காணலில் அது குறித்துச் சொல்லியிருக்கிறார். மம்மூட்டி ஒரு நிகழ்ச்சியில் புலவர் மற்றும் இந்தப்பாடல்  பற்றிச்சொல்லும் காணொளியும் அண்மையில் பலரும் கீச்சினார்கள்.

அதே போன்ற ஒரு பாடல் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்கிறது என்பது என்னைப்போன்ற "80-களில் கல்லூரி சென்ற கிழங்களுக்கு" நினைவில் இருக்கிறது. Laughing

"னம்" என்ற  அசையில் முடியும் சொற்கள் கொண்டு நெய்த பாடல். இதன் தாளமும் மெட்டும் வந்த போது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

அச்சமயத்தில் இந்த "னம்-னம்" வேலை எனக்கு உவப்பிலாமல் இருந்தது.

என்றாலும், உற்று நோக்கினால் அது எளிதான வேலை அல்ல என்பது தெரிய வரும். அவ்விதத்தில் இந்தப்பாடலை எழுதியவரைப் போற்றியாக வேண்டும்!

நாளும் என் மனம்
இனிப் பாடும் மோகனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம்
பொன் மனம்

ராசராச சோழன் தரும் சிம்மாசனம்
தேவை இல்லை பாவையுடல் பொன்னாசனம்!
தென்றல் வந்து பாடும்  ஒரு பூ வாசனம்
தேனில் கங்கை ஓடுவதில் நீர்ப்பாசனம்
ஏழு வண்ண வானவில்லில் ஆடும் தோரணம்
நாளை நல்ல நாளைப் பார்த்துப்பாடும் நாயனம்

அங்குமிங்கும் துள்ளும் விழியே மானினம்
ஆசை கொண்டு பேசும் தமிழே தேனினம்
கண் வரைந்த பொன்னோவியம் நீ நூதனம்
காதல் இன்பம் நாளும் தரும் உன் பூ வனம்
பூ மரங்கள் எங்கும் எங்கள் காதல் சாசனம்
பூமியோடு வானம் சாட்சி இன்ப தரிசனம்


https://www.youtube.com/watch?v=QI0IlKVvGuA



https://www.youtube.com/watch?v=TRrDdPFxzbw


(பின்குறிப்பு - தமிழில் இது ஓரளவுக்குத்தான் பரவியது என்றாலும் பின்னாளில் இதன் தெலுங்கு வடிவம் பெரும் வெற்றி பெற்ற பாடல்)

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 15, 2021 9:14 pm

மோகம், தாகம், தேகம் - இப்படியெல்லாம் போட்டு 80-களில் ராசாவின் மாபெரும் ஹிட் பாடல்களை எழுதியவர் வைரமுத்து மட்டுமே என்று அறியாமையில் மூழ்கிக்கிடந்தவர்கள் பலர்.

அப்படிப்பட்டோரை வலையுலகில் வந்து விழுந்த இசைத்தட்டு உறைகளின் படங்கள் தட்டி எழுப்பி விட்டன (நான் உள்பட).

இன்று அப்படிப்பட்ட மூடநம்பிக்கை உள்ளவர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றாலும் இப்போதும் பல பாடல்களின் ஆசிரியர் யாரென்று அறியாமல் வைமு கணக்கில் எழுதுவோர் கணிசமான அளவு உள்ளனர்.

இது ஒரு கசப்பான உண்மை.

ஆதலால் இந்த சூப்பர் ஹிட் (மற்றும் எவர்க்ரீன்) பாடலை எழுதியவர் புலமைப்பித்தன் என்று உரக்கச்சொல்லுவோம் Wink

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப்பாதங்கள்
மண் தொட்டதால் இங்கு செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே!
சூடிய பூச்சரம் வானவில் தானோ?

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனல் ஆகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக்கோவிலில் பாலபிஷேகம்


https://www.youtube.com/watch?v=5SnY3H-0VlQ


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

IsaiRasigan and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Wed Sep 15, 2021 11:07 pm

அதே போன்று வேறு சில பாடல்கள் - முற்காலங்களில் நான் வைமு கணக்கில் வரவு வைத்திருந்தேன். இந்த இசைத்தட்டுக்களின் உறைகள் தெளிவு கொடுத்தன.

அதற்குப்பின் அன்புசாரின் எக்செல் கோப்பு வந்ததோடு ராசாவின் தமிழ்ப்பாடல்கள் குறித்த தகவல் களஞ்சியமே கையில் உள்ளதால் குழப்பங்கள் இல்லை.

மற்ற இசையமைப்பாளர்களுக்கு இப்படிப்பட்ட களஞ்சியங்கள் இருக்கின்றவா தெரியாது. பெரிய அளவில் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் குறித்து மட்டும் தான் இப்படி ஆராய வேண்டும். ஓரிரு படங்கள் செய்து பின்னர் காணாமல் போகும் இன்றைய இசையமைப்பாளர்கள் குறித்தெல்லாம் ஆராய்ச்சிக்கு இடமே இல்லை Laughing

இந்த மூன்று பாடல்கள் குறித்துப் பலரும் எழுதி ஆயிற்று.

காணொளிகளிலும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால், இங்கே வரிகள் மற்றும் காணொளி இணைப்புகளை மட்டும் இட்டு வைக்கிறேன் Smile
(எல்லாமே ஜானகி-பாலு குரல்களில் என் கல்லூரிக்காலத்தில் வந்த சூப்பர் ஹிட் பாடல்கள்)

1. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ?
https://www.youtube.com/watch?v=dfNvFp30SF4



ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ?
ராஜ சுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ?
சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்


வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்


மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழை இல்லை நீர் தெளித்துப் போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் பொறுமை அவசியம்


2. விழியிலே, மணிவிழியில் மௌனமொழி பேசும் பெண்ணே
https://www.youtube.com/watch?v=tKFiu5mWOXc



விழியிலே மணிவிழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
அர்த்தஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்


கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே


காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நக வரி
இன்பச்சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலையன்னம் மாதிரி மடியில் தூங்கும் காதலி
விடிய விடிய என் பேரை உச்சரி


3. கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
https://www.youtube.com/watch?v=r6PLYz80KWU



கண்மணியே பேசு, மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ, உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ?


அந்தப்புறம் எந்தப்புறமோ?
விழி மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு?
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது


உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத்தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்
கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
வானகம் இவ்வையகம் யாவுமே என் கையகம் நீதான் தந்தாய்

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha, IsaiRasigan and BC like this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Usha Thu Sep 16, 2021 5:54 pm

app,

ingae neengal arambikum ovoru izhaikum oru artham iruku than. oru unmaiyin vadivamaga. andha vidhathil... indha izhaiyum.

neengal sonna indha 3 paatum, vizhiyile, oh vasantha raja, kanmaniyae pesu ellam vairamuthu endru dhan nanum ninaithu irundhen.

unmai theirya vendum dhan. Pulaipitthan avargalin padalgal Rajavodu, ondru vidamal ingae padhivu seiya vendum dhan.

twitteril parthen. Raja varutham therivithu ezhudhi irundhar. niraiya padalgal enagaga ezhudhi irukar endru.



Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

app_engine likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 16, 2021 6:18 pm

இளையராஜாவின் 200-ஆவது படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு வெளிவந்தது "ஆயிரம் நிலவே வா". இந்தப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்தன.

அவற்றுள் ஒன்று புலவர் புலமைப்பித்தன் எழுதினது - "கங்கையாற்றில் நின்று கொண்டே நீரைத்தேடும் பெண்மான் இவள்".

இதே போன்ற ஒன்று பேச்சுவழக்கில் நாம் பயன்படுத்துவது உண்டு  - "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது" Smile

அதிலாவது உருக்கி எடுக்க வேண்டும், வற்றாத ஆற்றில் நீருக்கு என்ன பஞ்சம்?

அந்த வரி "ஏன் அப்படி? கவிஞர் என்ன சொல்ல வருகிறார்?" என்று கூடுதல் அறிய ஆவலைத்தூண்டும் ஒன்று.

பாடல் முழுவதும் கேட்டுப்பார்ப்போம்:

கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடிக் காட்சி தேடி இன்னும் எங்கே செல்வாள் இவள்?
தன்னையே தான் நம்பாது போவதும் ஏன் பேதை மாது?

பொய் போலவே வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்
ஓராயிரம் சாட்சி யார் கூறினும் அவை எல்லாம் வேஷம் என்றாள்
தன் கண் செய்த மாயம் பெண் மேல் என்ன பாவம்?
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி?

பொய் மானையே அன்று மெய் மான் என அந்தச் சீதை பேதை ஆனாள்
மெய் மானையே இன்று பொய் மானென இந்தக் கோதை பேதை ஆனாள்
பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது


கதை மற்றும் நிகழ்வுகள் எல்லாம் தெரியாமல் முழுப்பொருள் புரியாது என்றாலும் ஆக மொத்தத்தில் இது தான் சொல்ல வருவது என்று தெரிகிறது :

வீண் சந்தேகம் இங்கே + ஏமாற்றம்

இந்தக்காட்சிகளில் இருந்து உங்களுக்கு ஏதாவது கூடுதல் புரிகிறதா பாருங்கள்:

https://www.youtube.com/watch?v=5yVhM5E9itQ


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  app_engine Thu Sep 16, 2021 8:53 pm

90-களின் நடுவில் வந்த சிறப்பான ஏழடி சுழற்சிப்பாடல் "எல்லாமே என் ராசா தான்" படத்தின் "வீணைக்கு வீணைக்குஞ்சு".

60-களில் வந்த நடிகர் நிலத்தின் படங்கள் போன்ற உணர்ச்சி மேலீட்டுப்படங்களை நாட்டுப்புறப் பின்னணியில் சிறப்பாக, அலுக்காமல் சொன்னவர் ராஜ்கிரண். சிறந்த நடிகரும் பெரிய ராசா விசிறியுமான இவர் பல படங்களின் பெயர்களிலேயே ராசா மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார்.

எனக்கு மிகவும் பிடித்த இந்த இனிமையான பாடலை எழுதியவர் புலமைப்பித்தன் என்பதை இப்போது தான் குறிப்பாகக் கண்டு கொண்டிருக்கிறேன். அன்பைப்பரிமாறும் அழகான சொற்கள் கொண்டு இழைத்திருக்கிறார். ராசா குரலின் உருக்கமும் சேர்த்து மனதைப்பிழிந்தெடுக்கும் பாட்டு.

https://www.youtube.com/watch?v=vhl0G1gnIck



வீணைக்கு வீணைக்குஞ்சு நாதத்தின் நாதப்பிஞ்சு
விளையாட இங்கு வரப்போகுது
என்னோட நெஞ்சம் இப்போ இலவம்பஞ்சு
கொண்டாந்து தர்றேன் நல்ல மாங்காப்பிஞ்சு

தங்கம் வைரம் எல்லாம் வயித்தில் சுமந்திடும் தங்கமே
இந்தச்செல்வம் போதும் இனியும் நமக்கென்ன பஞ்சமே
புள்ளைத்தாச்சி உன்னைப்போலே அதிர நடப்பது ஆகுமா?
கண்ணை மூடிக் கவலை நீங்கி எனது மடியிலே தூங்கம்மா
தாயாகப் போகும் உன்னைத் தாலாட்டுப்பாடும் அன்னை
நானன்றி வேறு இங்கு யாரம்மா?

ரோசா நாத்து நீயும் கரிசல் நெலத்துல வாடுறே
ராசா வீட்டுப்பொண்ணு வறுமைச்சிறையில வாழுதே
மண்ணின் வாசம் மனசில் வீசும் பெருமை உடையவள் நீயம்மா
உன்னைப் பாத்து உருகிப் போச்சு இரும்பு மனசொன்னு பாரம்மா
ஏழைக்கு வாழ்க்கப்பட்டு எந்நாளும் துன்பப்பட்டு
வேறென்ன கண்ட தாயி என்னிடம்?

வீணைக்கு வீணைக்குஞ்சு நாதத்தின் நாதப்பிஞ்சு
விளையாட இங்கு வந்து சேர்ந்தது
விளையாடி வேதனையைத் தீர்க்குது
தாலாட்டுச் சொல்லும் இந்த மைனாக்குஞ்சு
தானாடும் தேகம் நல்ல அன்னக்குஞ்சு


இறுதிப்பல்லவி சற்றே மாறி வருகிறது. அந்தப்பகுதி திரையில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=S4Ho9m1gf7w



அவரது முந்தைய படங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஓடிய படம் என்று நினைக்கிறேன். பாட்டுக்கள் எங்கும் ஒலித்தன,

வடிவேலு நகைச்சுவை மிகச்சிறப்பு என்பது எல்லோருக்கும் தெரியும் Laughing

https://www.youtube.com/watch?v=3igNEB3-Xrc


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

BC likes this post

Back to top Go down

IR-Pulamaippiththan combo songs Empty Re: IR-Pulamaippiththan combo songs

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum