Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Anything about IR found on the net - Vol 4

+23
counterpoint
crvenky
FerociousBanger
Jose S
raagakann
SenthilVinu
irir123
jaiganesh
sundar.arzach
vss1902
Kr
IsaiRasigan
vigneshram
sudhakarg
irfan123
nanjilaan
kamalaakarsh
ravinat
BC
crimson king
Usha
mythila
app_engine
27 posters

Page 30 of 43 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36 ... 43  Next

Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  ravinat Tue Apr 27, 2021 8:45 pm

IsaiRasigan wrote:ஜெயமோகனின் அற்புதமான கட்டுரை

#இசைஞானி_77_சிறப்பு_பதிவு
============================
எழுத்தாளர் #ஜெயமோகன் அவர்கள் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவருடைய உரையில் இருந்து

#பாகம்_1

கேள்வி :
மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?

பதில் :
எழுத்தாளர் ஜெயமோகன் =   இளையராஜா

ஒருவரின் கடிதத்திற்கு விளக்க எழுதிய பதில் கடிதம்

கேளிக்கைத்தளத்தில் எப்போதும் திறமைகள் வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அது ஒரு தொழில். மிகப்பெரிய லாபம் உடையது. சமூகமுக்கியத்துவம் கிடைப்பது. ஆகவே அதனுள் நுழையப் பல்வேறு திறமைகள் முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன. வாய்ப்பு பெறுபவர்கள் நூற்றுக்கொருவர். வெற்றிபெறுபவர்கள் அவர்களில் நூற்றுக்கொருவர். ஆகவே கேளிக்கைக் கலைத்துறையில் உள்ள சாதனையாளர்களின் பட்டியல் எப்போதும் நீளமானதாகவே இருக்கும்.

அதிலும் தமிழ் சினிமாவில் உச்சகட்டக் கலைத்திறன் வெளிப்பட்டது இசையில்தான். ஆகவே அங்கே சாதனையாளர் பட்டியலும் மிக நீளமானது. காரணம் சினிமாவின் பிற துறைகளான இயக்கம், எழுத்து,ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு, நடிப்பு ஆகியவற்றில் நமக்கு முன்வரலாறு கிடையாது. ஆக்கத்தின் தளத்திலும், ரசனையின் தளத்திலும். ஆகவே அவற்றில் சென்ற காலத்தில் மிகப்பெரிய திறமைகள் வெளிப்படவுமில்லை.

தமிழ்த் திரையிசை தனித்துவத்துடன் உருவான நாற்பதுகள் முதலே அதில் சாதனையாளர்கள் வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். எவரையும் குறைத்து மதிப்பிடமுடியாது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் என்னைப் பித்துப்பிடிக்கச் செய்யும் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஏன், அதிகம் பேசப்படாத சங்கர் கணேஷ் இசையிலேயே ‘முத்தாரமே உன் ஊடல் என்னவோ’ ‘செந்தாமரையே செந்தேனிதழே’ போன்ற பல பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

ஆகவே தமிழ்த்திரையிசையை இளையராஜாவிலிருந்து ஆரம்பிப்பதும் சரி, இளையராஜா அன்றிப் பிறரை நிராகரிப்பதும் சரி, அபத்தம். இளையராஜா முன் ஒருவர் அப்படிச் சொன்னால் உடனே எழுந்து போகச் சொல்லிவிடுவார். அவரே தமிழ்த்திரையிசையின் முன்னோடி மேதைகளின் ரசிகர். அவர் முன் அமர்ந்து அவரது குரலில் ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றவர்கள் அமைத்த பாடல்களைப் பாடக்கேட்டிருக்கிறேன். அப்போது ராஜாவில் கூடும் பரவசம் ஒரு மறக்கமுடியாத மனச்சித்திரம்.

ஆனால் இந்த ஒளிமிக்க பால்வழியில் இளையராஜா கண்டிப்பாக ஒரு மகத்தான நட்சத்திரம். அவரது முக்கியத்துவம் ஒரு வெற்றிடத்தில் அவர் தோன்றினார் என்பதனால் அல்ல. மாறாக ஒரு மிகப்பெரிய மரபை வெற்றிகரமாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றார் என்பதனால்தான் அவர் மகத்தானவராக ஆகிறார்.

நான் இசை விமர்சகன் அல்ல. இசைப்பயிற்சி கொண்டவனும் அல்ல. ஆகவே இசை பற்றி விரிவாக விவாதிக்கத்  தயங்குகிறேன். ஆனால் நான் இளையராஜா மிகையாகப் புகழப்படுகிறார் என நினைக்கவில்லை, மாறாக சரியாக இன்னும் ரசிக்கப்படவில்லை, மதிப்பிடப்படவில்லை, கௌரவிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

இளையராஜா தமிழ்த்திரையிசையில் உருவாக்கிய மகத்தான திருப்பம் என்ன? மீண்டும் சொல்கிறேன், இதை ஒரு நிபுணராக சொல்லவில்லை. நான் சாதாரண ரசிகன். கடந்த ஏழாண்டுக்காலமாக சினிமாவுக்குள் இருக்கிறேன். இன்று சினிமா என்ற கலை எனக்குத்தெரியும். இந்த இரு தகுதியில் இதைச் சொல்கிறேன். ‘இளையராஜாவுக்கு முன்னால் இருந்த இசையமைப்பாளர்கள் சினிமாவில் பணியாற்றிய இசைநிபுணர்கள். இளையராஜா சினிமாவை உருவாக்குவதில் பங்கெடுத்த முதல் இசையமைப்பாளர்’

இந்த வேறுபாட்டைப் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய மூத்த இயக்குநர்கள் முதல் நவீன இயக்குநர்கள் வரை பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். முந்தைய இசையமைப்பாளர்களுக்கு சினிமாவின் ஒட்டுமொத்த கதையமைப்பு, காட்சிக்கட்டுமானம், கதைமாந்தர்களின் உணர்ச்சிகரம் பற்றிய ஆர்வமோ அறிதலோ இருந்ததில்லை. உண்மையில் மானசீகமாக அவர்கள் சினிமாவுக்குள் இல்லை. அவர்கள் இசையில் மட்டுமே இருந்தார்கள். அவர்களை சினிமாக்காரர்கள் அணுகி தங்களுக்குத் தேவையான இசையை பெற்றார்கள்

அன்றெல்லாம் சினிமா உருவாவதற்கு முன்னதாகவே, ஒரு கருகூட உருவாவதற்கு முன்னரே, அவர்கள் பாடல்களைப் போட்டுவிடுவார்கள். பெரும்பாலும் இயக்குநர் கோரும் தருணங்களை மட்டுமே அவர்கள் அறிந்திருப்பார்கள். அவற்றை மட்டுமே கருத்தில்கொண்டு இசையமைப்பார்கள். அந்தத் தருணங்கள்கூட பெரும்பாலும் எல்லா சினிமாவுக்கும் பொதுதான். காதல் பாடல்,தத்துவப்பாடல், கதாநாயகன் அல்லது கதாநாயகி அறிமுகப்பாடல் என்று.காலப்போக்கில் இன்ன நடிகருக்கு இப்படி, இன்ன இசையமைப்பாளருக்கு இப்படி என ஒரு மனச்சித்திரம் உருவாகிவிடுகிறது. அதைத் தொடர்ந்து செல்வார்கள்.

அபூர்வமான தருணங்கள் வரும்போது அந்தத் தருணத்தை அவர்களுக்கு நன்றாக எடுத்துச்சொல்லி அதற்கேற்ப தகுதியான இசையை அவர்களிடமிருந்து பெறக்கூடிய இயக்குநர்கள் மட்டுமே படத்துடன் சரியாக இயைந்து போகும் பாடல்களைப் பெற்றிருக்கிறார்கள்- மிகச்சிறந்த உதாரணம் ஸ்ரீதர். ஆகவே பல படங்களில் இசை படத்துக்குச் சம்பந்தமில்லாமல் இருக்கும். சிலசமயம் படத்தைவிடப் பலமடங்கு மேலே கூட இருக்கும்.

ஒருபடத்தைப்புரிந்துகொண்டு அதற்காக ஒரு இசைக்கட்டுமானத்தை உருவாக்குவதென்பது அவர்கள் அறியாதது. படத்துக்குள் செல்ல முடியாத காரணத்தால் அவர்கள் அமைத்த பின்னணி இசை என்பது பெரும்பாலும் காட்சிகளை நிரப்புவதாகவே இருந்தது. பெரும்பாலும் இன்னின்ன காட்சிகளுக்கு இவ்வாறு என்று ஒரு இலக்கணம், அல்லது டெம்ப்ளேட் இருந்திருப்பதை அக்காலப் படங்களைக் கண்டால் அறியலாம்.

பெரும்பாலான சமயங்களில் அந்தப் படத்துக்காக அவர்கள் போட்ட ஒரு பாடலை இயக்குநர்கள் ‘தீம் மியூசிக்’ ஆகப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். அபூர்வமாக ஸ்ரீதர் போன்ற இயக்குநர்கள் ஒரு தீம் மியூசிக்கைக் கேட்டு வாங்குவதுண்டு.

முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்குத் திரையிசை என்றால் பாடல்கள் மட்டுமே. ஆகவே பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் இடையே பிரம்மாண்டமான வேறுபாடு இருப்பதைக் காணலாம். தில்லானா மோகனாம்பாள் படத்தின் பாடல்கள் மற்றும் நாதஸ்வர இசை ஒரு தளத்தில் இருக்க, பின்னணி இசை சம்பந்தமே இல்லாமல் இருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்கள் படத்தின் கலைபூர்வ கட்டுமானத்தையும் உணர்ச்சிகரத்தையும் உருவாக்குவதில் பங்குபெற்றதே இல்லை.

முதல்படம் முதலே இளையராஜா இதற்கு நேர்மாறானவராக இருந்திருக்கிறார். எப்போதுமே அவர் படத்தை உருவாக்குபவர்களில் ஒருவர். கதையையும், சூழலையும் ,கதாபாத்திரங்களையும் முழுமையாகவும் துல்லியமாகவும் உள்வாங்குவதில் அவருக்கிருக்கும் திறன் அபூர்வமான ஒன்று. ஓர் உதாரணம், சின்னத்தாயி என்ற அதிகம் அறியப்படாத படம். யதார்த்தமான இந்தப்படத்தில் அதன் நெல்லைச்சீமை வாசனையை, அதன் கருவை, உணர்ச்சிகரத்தை அற்புதமாக உள்வாங்கி இசையமைத்திருக்கிறார் ராஜா.

காரணம், பழைய இசைமையமைப்பாளர்கள் மனதளவில் மிக எளிமையான இசைவாணர்கள். வாழ்க்கையின் நுண்ணியதளங்கள் அவர்களுக்குத் தெரியாது. வாசிக்கும்பழக்கம் கொண்டவர்கள் அனேகமாக எவருமில்லை. ஆகவே அவர்களால் ஒருபடத்தின் கதைக்குள் நுழைந்து பங்காற்ற முடிவதில்லை.இளையராஜா மானுட உணர்ச்சிகளை அனுபவம் மூலம் இலக்கியம் மூலம் அணுக்கமாக அறிந்தவர்.

பொதுவாக இசைசார்ந்த நுண்ணுணர்வு மிக்கவர்களுக்குக் காட்சிசார்ந்த நுண்ணுணர்வுகள் மிகக் குறைவாகவே இருக்கும். இளையராஜா அதற்கு அபூர்வமான விதிவிலக்கு என்கிறார்கள். அவரது காட்சியுணர்வும் மிகத்துல்லியமானது. அவரால் ஒரு படத்தை இயக்கவோ எடிட் செய்யவோ முடியும் என்று ஓர் இயக்குநர் ஒருமுறை சொன்னார். இந்த இயல்பு காரணமாக ஒரு படத்தின் கதையைக் கேட்டதுமே அவர் அதன் காட்சிகளைக் கற்பனைசெய்துவிட உதவுகிறது. அந்தக் காட்சியுலகுக்கேற்ற இசையை உடனே அவர் உருவாக்குகிறார்.

இளையராஜா வருகைக்குப்பின் திரைப்படங்களில் இசை ‘சேர்க்கப்படுவது’ இல்லாமலானது. இசையுடன் சேர்ந்தே திரைப்படம் உருவாக்கப்படுவது தொடங்கியது.அவரது பெரும்பாலும் அனைத்துப் படங்களுக்கும் ஓர் இசைத்திட்டத்தை [scheme] அவர் உருவாக்குகிறார். பாடல்களாகவும் தீம்இசையாகவும் அதை அவர் அளிக்கிறார். அது படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு அளிக்கிறது.

தமிழில் எடுக்கப்பட்ட பல நல்ல படங்கள் அவரது இசையைப் படப்பிடிப்பில் போட்டுக்கேட்டுக்கேட்டு அதிலிருந்து ஊக்கம்பெற்று எடுக்கப்பட்டவை. உக்கிரமான காட்சிகளின்போது அவரது இசையைப் பின்னணியில் போட்டு நடிப்பை வாங்குவார்கள், இசைக்கு நடிப்பு பொருந்தினால் அது ஓக்கே என்பார்கள். ’நான்கடவுள்’ அப்படி உருவாவதை நான் அருகிருந்து கண்டிருக்கிறேன்.

படங்களின் பின்னணி இசைச்சேர்ப்பை இளையராஜாவுக்கு முன் பின் என்றே பிரிக்கலாம். தமிழின் பெரும்பாலான பெரிய இசையமைப்பாளர்களின் படங்களில் பின்னணி இசை அவர்களின் இசைநடத்துநர்களால் [ஜோசப் கிருஷ்ணா, புகழேந்தி ] அமைக்கப்பட்டதுதான் என்பதை இன்று அனேகமாக அனைவருமே அறிவார்கள்.ஆனால் இளையராஜா படத்தைப் போட்டுப்பார்த்து, அதன் ஒட்டுமொத்ததையும் உள்வாங்கி , ஒவ்வொரு காட்சித்துணுக்கையும் அவதானித்து முழுமையாக ஈடுபட்டுப் பின்னணி இசையமைத்த முதல் இசையமைப்பாளர்.

திரையில் ஓடும் படத்தின் முன் ஒரு இரண்டுவயதுக் குழந்தைபோல கண்பிரமித்து நிற்கும் இளையராஜாவை நான் என் மனதின் அழியா ஓவியமாக வைத்திருக்கிறேன். அவரது முகத்தில் ஒளி நடனமிடும். கண்கள் மின்னும். உணர்ச்சிகள் கொந்தளிக்கும். கண்கள் கலங்கி வழியும். சமயங்களில் படம் ஓடும்போதே சரசரவென இசையை எழுதிக்கொண்டிருப்பார். தமிழின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் அவரது நல்ல படம் ஒன்றைப்பற்றிச் சொல்லும்போது ‘இளையராஜா மட்டும்தான் அந்தப்படத்தை முழுமையாக உணர்ந்து ரசித்தவர்’ என்று சொன்னார்.

பின்னணி இசை காட்சிகளைத் தொகுப்பதும் இடைவெளிகளை நிரப்புவதும் மட்டுமல்ல என்பதை ராஜாவின் இசையே காட்டியது. அது ஒரு அற்புதமான உணர்வுவெளியைப் படத்தின் அடியோட்டமாக எழுதி சேர்த்தது. சில சமயம் காட்சிகளுக்கு விளக்கம் அளித்தது. சிலசமயம் அடுத்தகாட்சிக்குக் கொண்டு சென்றது. சிலசமயம் காட்சிகள்மேல் இளையராஜாவின் மேலதிக அர்த்தத்தை ஏற்றிக்காட்டியது. இன்றும்கூட ராஜா பின்னணி இசையில் செய்ததென்ன என்பதை நம்மவர்களில் ஒரு ஆயிரம்பேர்கூட உணர்ந்ததில்லை என்பதே உண்மை.

தொடர்ச்சியாக நாளைய தினம்

நன்றி ++++++++இந்து தமிழ்

அன்புடன் உங்கள்
#kovai_jagadeeshponns
Ilayaraja Isai Pasarai🎵
இளையராஜா இசைப்பாசறை🎵
Delightful to read...

ravinat

Posts : 679
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Usha and IsaiRasigan like this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan Sat May 01, 2021 5:04 pm

https://m.youtube.com/watch?v=2PKhL5eKI60&feature=youtu.be

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Usha likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Mon May 03, 2021 5:36 pm

IsaiRasigan wrote:https://m.youtube.com/watch?v=2PKhL5eKI60&feature=youtu.be

kaetka asaiyaga kaathirukiren..........

sila slogagngal....... Abirami andhadhi, Sowndharya Lahari .. idharkellam Raja compose seidhal..... saadharanamaga irundhalum sari.

Raja's Composition irundhal podhum...... padika, kaetka nanraga irukum. adharkum kaathirukiren.......

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

IsaiRasigan likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Mon May 03, 2021 5:42 pm

koondhalile megam from QFR...

paatu vandha kadhaiyai Subashree solli irukar... paatu ezhudhiya kannadasan azhagu..... azhagaga eduthu solli irukar.

Ragathin Special and Rajavin Special... instruments special. miga azhagaga eduthu solli irukar Subashree.

Arumaiyana muyarchi........ Arumaiyana Result......

https://www.youtube.com/watch?v=dd6PmudlDzs

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Mon May 03, 2021 5:48 pm

Pesa kudadhu........

pattai kaetale... andha thalam..... manadhil varum.. Subashree adhai azhagaga eduthu solli irukar.

Ellorum nanraga seidhu irukirargal.........

string instruments. avarngalin tone.. patri solli irukar Subashree. True...

https://www.youtube.com/watch?v=5lK8B8jV0nY

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Mon May 03, 2021 6:14 pm

Ilaiya Rajavirkaga.. oru paatu.. oru tune. ivargalim irundhu. ellam sari.. edharkaga ipadi oru soga bhavam. adhanal pidikavillai.

https://www.youtube.com/watch?v=7iSYdXMcx1c

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  BC Tue May 04, 2021 2:38 am

Usha wrote:Pesa kudadhu........

That was an excellent presentation by the team.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Usha likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  BC Tue May 04, 2021 2:48 am

Usha wrote:Ilaiya Rajavirkaga.. oru paatu.. oru tune. ivargalim irundhu. ellam sari.. edharkaga ipadi oru soga  bhavam. adhanal pidikavillai.

https://www.youtube.com/watch?v=7iSYdXMcx1c

A decent tribute (good music and video), well done, IMHO.  It is "their" song, their composition; so it is not fair on us to expect anything more, and force our opinions on them.  Maybe, they thought a "serious"-kind of music is more respectful than a "happy, fun-filled" one.  Moreover, even Malayalam films and their music is very different from ours.  Overall, I am happy that all other states respect him more than our own ilk, which I find quite disgusting and unsettling.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Usha likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  ravinat Tue May 04, 2021 4:06 pm

BC wrote:
Usha wrote:Ilaiya Rajavirkaga.. oru paatu.. oru tune. ivargalim irundhu. ellam sari.. edharkaga ipadi oru soga  bhavam. adhanal pidikavillai.

https://www.youtube.com/watch?v=7iSYdXMcx1c

A decent tribute (good music and video), well done, IMHO.  It is "their" song, their composition; so it is not fair on us to expect anything more, and force our opinions on them.  Maybe, they thought a "serious"-kind of music is more respectful than a "happy, fun-filled" one.  Moreover, even Malayalam films and their music is very different from ours.  Overall, I am happy that all other states respect him more than our own ilk, which I find quite disgusting and unsettling.
I agree with BC. 

While the Tamils are so freaking divided in even recognizing a genius, the Malayalees went on to creating a very nice dedication for Raja, learning to sing in Tamil. We have to take lessons from these guys.

Imagine a bunch of Tamils, in perfect Bengali doing a tribute to the Burmans. 

The Malayalam reality music shows have regular 'Ilayaraja' round. Our Tamil channels are happy with 'only Tamil' kuththu paatu.

We do not have a large heart.

ravinat

Posts : 679
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Usha and BC like this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue May 04, 2021 7:56 pm

BC and ravinat,
நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது.என் மனதிற்க்கு சோகமாகப் பட்டதால்(இப்போதும் பாட்டைக் கேட்டால் சொல்லத் தெரியாத சோகம் என் மனதில்).அதனால் அப்படி சொல்லிவிட்டேன்.எடுத்துச் சொன்னதற்க்கு மிக்க நன்றி.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

BC likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  BC Wed May 05, 2021 12:40 am

ravinat wrote:
The Malayalam reality music shows have regular 'Ilayaraja' round. Our Tamil channels are happy with 'only Tamil' kuththu paatu.

We do not have a large heart.

Since I do not have access to those lovely shows, I console myself looking at just the promos of the same on YouTube.  

Tamil reality shows have overloaded-cacophony and even during the few instances they happen to feature IR songs, the lame judges will go gaga for everything in the studio, EXCEPT the composition and IR.  The comments are always layman-kind (good, nice, excellent, vera level etc. and even worse, a "standing ovation" for every rendition!).  Don't we all know to pass such comments?!  

THEY (let us not term it "we" and include ourselves in that noise-fest bunch) NEVER had/will have a large heart.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Wed May 05, 2021 1:34 am

BC wrote:
Tamil reality shows have overloaded-cacophony and even during the few instances they happen to feature IR songs, the lame judges will go gaga for everything in the studio, EXCEPT the composition and IR.  The comments are always layman-kind (good, nice, excellent, vera level etc. and even worse, a "standing ovation" for every rendition!).  Don't we all know to pass such comments?!  

The current one in Vijay TV is perhaps the worst ever musically (Anirudh brand ambassador and ARR comes to promote his production etc).  A comedy show basically, promoting many other things among some mediocre singing based on TFM.  

Perhaps based on the one prior (some champion of champions which pretty much followed a similar style) KSC probably said "இனிமேல் என்னையெல்லாம் இப்படிப்பட்ட கொடுமைக்குக் கூப்பிடாதீங்க".

I really pity Unni Embarassed

BTW, "not mentioning IR" may be the condition imposed by the sponsors (who perhaps obey orders from ARR & Anirudh).

As I particularly look for any mention of IR, just caught Sujatha's daughter - who replaced Kalpana in recent shows - briefly mention his name once and say 'pranAm' Wink which is the only reference to Maestro so far.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  BC Wed May 05, 2021 2:35 am

app_engine wrote:
The current one in Vijay TV is perhaps the worst ever musically (Anirudh brand ambassador and ARR comes to promote his production etc).  A comedy show basically, promoting many other things among some mediocre singing based on TFM.  

Perhaps based on the one prior (some champion of champions which pretty much followed a similar style) KSC probably said "இனிமேல் என்னையெல்லாம் இப்படிப்பட்ட கொடுமைக்குக் கூப்பிடாதீங்க".

I really pity Unni Embarassed

BTW, "not mentioning IR" may be the condition imposed by the sponsors (who perhaps obey orders from ARR & Anirudh).

As I particularly look for any mention of IR, just caught Sujatha's daughter - who replaced Kalpana in recent shows - briefly mention his name once and say 'pranAm' Wink which is the only reference to Maestro so far.

Did Chitra really say that?!  If so, hats off to her.  But I guess you meant it on a lighter note.

How the likes of Chitra and Mano put up with this kind of nonsense (Chitra and Mano, especially), is beyond my comprehension.  My mom hat-tips and sends me rough-snippets of the show whenever IR is mentioned.  I have seen Shwetha doing that (as if she thinks that itself is some kind of a favor).  Arr and Anirudh are both obvious sponsors themselves.  The rest of them are mere puppets in their hands.  The usual Srinivas and Sujatha headaches have moved to Zee TV, probably because they were paid more and Zee has nearly an entire show dedicated to those few music directors.

I remember that the first 3 seasons of Super singer had a majority of IR songs.  And then everything started going haywire, slowly but steadily (donkey shrinks to ant story).  So, Vijay TV doing the IR-1000 event itself is a huge surprise to me.  I am sure they would NEVER have done it if they did not have a huge stake in it.  TRP is the motto and money is the name of the game.  Channels just mint money in the name of "voting", a joke, all for selecting the "best voice".  The judges are only happy to receive their big chunks from the huge pie.  So, they will do anything that is being asked.  All these shows are totally hopeless, soap-operas with glitz and glamor.

Already, these shows are mass-producing average talents, like factories producing goods by the ton, that come out and barely manage to eke out a living/"career" for themselves.  Other than that, nothing much to expect.  Even more dumbfounded by the parents who send in their kids to endure such nonsense despite knowing everything about these shows.

Gone are the glorious days of actual singing competitions like Saptha Swarangal (A. V. Ramanan did a very good job), Mile sur mera tumhara and old Saregama where some good amount of advice and criticism were intrepidly put forth by able judges which helped produce good talents like Shreya Ghoshal, Haricharan, Karthik etc.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Abu Thahir likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  counterpoint Sat May 22, 2021 6:05 pm

I have found some of the past malayalam reality shows to be judged much better, especially the ones where Sharreth and MG Srikumar and the likes were judges. They are very tough and generally no-nonsense and the participants are also talented. Vijay TV has been pure business-minded for the past 10 yrs or so.

counterpoint

Posts : 191
Reputation : 4
Join date : 2014-04-22

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Mon May 31, 2021 5:37 pm

from Andrew Tweet

Padalil Ilakiya tharam patri Rajavin parvai. epodhum avar sari dhan enaku.

https://twitter.com/ir_bakthan/status/1399261562435563520

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Jun 01, 2021 5:56 pm

from BChidam for Ilaiyaraja

https://open.spotify.com/episode/5P8mOTWbt5wiZ2tXigFeus

https://open.spotify.com/playlist/5POiQ4ZUXv1Dg76JJtF99t?si=YuFlfvgzTT6gDSjMolal9g&nd=1

https://twitter.com/BChidam

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan Wed Jun 02, 2021 8:08 am

from Facebook


=AZUvezUeJ_8RFJFBq8XrLw3fnyqYFaZGJhFec_MYV51ZjDO4RZ35bh_XFMayXxhLUMq3rqHMCsg3bKVGaIcarjzZ812xbpu6xf8W5WGoWqWY9vMXDjejpBT7_GTJVMNJxI5j2LLSY3D6KWHlgwoYB_OWB6DDZQ7pCTvMiPlwc7kiIu-GyPdOk5Gl588A_px989Q&__tn__=-UC%2CP-y-R]Kuppuswamy Ganesan

=AZUvezUeJ_8RFJFBq8XrLw3fnyqYFaZGJhFec_MYV51ZjDO4RZ35bh_XFMayXxhLUMq3rqHMCsg3bKVGaIcarjzZ812xbpu6xf8W5WGoWqWY9vMXDjejpBT7_GTJVMNJxI5j2LLSY3D6KWHlgwoYB_OWB6DDZQ7pCTvMiPlwc7kiIu-GyPdOk5Gl588A_px989Q&__tn__=%2CO%2CP-y-R][size=11]5 மணி நேரம்  · 
[/size]

நண்பர் ஒருவரிடம் யாராவது ‘நான் இளையராஜாவின் பரம ரசிகன்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டால் போதும். உடனே உற்சாகமாகி, “இந்த உலகத்திலேயே இளையராஜாவுக்கு நம்பர் 1 ரசிகர் ஒருவர் இருக்கிறார். அவருக்குக் கீழேதான் மற்றவர்கள். ராஜாவின் பாடல்கள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி” என்று நிறுத்துவார். புதியவர் ஆர்வத்தோடு, “யாருங்க அவர்?” என்பார். நண்பர் பெருமிதத்தோடு, “நான்தான்” என்பார்.

இளையராஜாவின் அத்தியந்த ரசிகன் தான் மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டியது என்பது நண்பருக்குத் தெரியாது.

இளையராஜாவின் விசேஷம் அதுதான். அவரை எல்லோருக்கும் பொதுவானவர் என்று யாரும் நினைப்பதில்லை. அவர் தனக்காகவே, தன் பொருட்டே இந்தப் பாடல்களை உருவாக்கியிருக்கிறார் என்று உண்மையாகவே நம்புகிறவர்கள்தான் அதிகம்.

எப்படி இந்தக் கலைஞனால் எல்லோருக்கும் அந்தரங்கத் தோழனாக மாறியிருக்க முடிந்திருக்கிறது? உண்மையில் அவர் உருவாக்கும் சங்கீதத்தைக் கேட்டு அவரை உருவகித்துக்கொண்டவர்களுக்கு, அவரை நேரில் சந்தித்தால், அவரோடு உரையாடிப் பார்த்தால் கிடைக்கும் சித்திரம் வேறாகத்தான் இருக்கும். ஒரு நிஜமான மேதையைச் சாதாரணர்களால் அவ்வளவு எளிதில் அளந்துவிட முடிவதில்லை. மேதைகளின் அகக் கதவுகள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகத் திறந்துவிடுவதில்லை.

எழுதித் தீராத பெருமைகள்

ஆனாலும் என்ன, இன்று அவரைவிட தமக்கு நெருக்கமான கலைஞனாக வேறு எவரையும் தமிழர்கள் தமது மனங்களில் வைத்திருக்கவில்லை. வேறு எந்தத் திரைக் கலைஞரைப் பற்றியும் இந்த அளவுக்கு எழுதப்பட்டதுமில்லை. அவருடைய நாட்டார் இசைப் பின்னணி, திரையுலகிற்கு வந்த பிறகு தன் இசையறிவை மேம்படுத்திக்கொள்ள செவ்வியல் இசை மரபுகளைக் கற்றது, பீத்தோவனையும் தியாகராஜரையும் தனது பாடல்களில் ஒன்றிணைத்தது எனப் பல்லாயிரம் பக்கங்கள் அச்சிலும் இணையத்திலும் இன்றுவரை எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவ்வளவு எழுதியும் அவருடைய இசையைப் பற்றிப் புதிதாகச் சொல்வதற்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

ராஜாவின் மீதான மயக்கத்துக்கான அடிப்படைக் காரணம் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த தென்னிந்தியர்களின் அந்தரங்க உலகை இந்தக் கலைஞனின் சங்கீதம் வியாபித்திருப்பதுதான். இவர்கள் எல்லோரிடமும் ஒரு கதை இருக்கிறது. அது வேறு எவரோடும் பகிர்ந்துகொள்ள முடியாத கதையாக இருந்தாலும், ஒரே ஒருவருக்கு மட்டும் அது தெரிந்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். தன்னுடைய ரகசிய உணர்வுகளை எப்படியோ கண்டுபிடித்து, தன்னை ஆற்றுப்படுத்துவதற்காகவே இந்தப் பாடலை இளையராஜா உருவாக்கியிருக்கிறார் என்று சத்தியம் செய்கிறார்கள். மொட்டை மாடிகளில், இரவு வானத்துக்குக் கீழே அவர்கள் தனியாக அமர்ந்திருக்கவில்லை. அந்த இசைக் கலைஞன் அருவமாக அவர்களுக்கு நெருக்கமாக அமர்ந்திருக்கிறார். அவர்களுடைய தலைகளை தன் மடியில் கிடத்திக்கொள்கிறார். அவருடைய கூட்டு வயலின்களும் புல்லாங்குழலும் அவர்களுடைய கண்ணீரை ஒற்றியெடுக்கின்றன.

“இளையராஜா என்று ஒருத்தர் இல்லையென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பே செத்துப்போயிருப்பேன்” என்று எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருப்போம். இந்த மனிதனின் அளவுக்கு ரசிகனின் உயிர் தொட்ட இசைஞன் வேறு யாராவது இருக்கிறார்களா என்று வியப்புடன் யோசிக்க வேண்டியிருக்கிறது.

“இது என்னுடைய பாட்டு”

இவருக்கு முன்பு எண்ணற்ற மேதைகளைப் பங்களித்த பூமி இது. அக்கலைஞர்கள் பிரமிக்க வைத்திருக்கிறார்கள். கடவுள்களின் அவதாரங்களாக நினைக்க வைத்திருக்கிறார்கள். விழுந்து பணிய வைத்திருக்கிறார்கள். ஆனால், இவர்தான் நம்மை ஆதரவாக அணைத்து, தன் மடியில் கிடத்தி கண்ணீர் துடைப்பவராக இருந்து வருகிறார். இவரது இசையைத்தான் நாமும் நமக்கென்று சொந்தம் கொண்டாட முடிகிறது. “இது என்னோட பாட்டு” என தைரியமாக அறிவித்துக்கொள்ள முடிகிறது.

இதனை விளக்கப் புகுந்தால் அது தர்க்க முரண்பாடுகளைக் கொண்டுவருவதாக அமையும். பகுத்தறிவு கொண்டு விளக்க முடியாத விநோதங்களை இளையராஜாவின் இசை நம்மிடம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தம்முடைய தனிப்பட்ட அனுபவங்களை ஒருவர் சொல்லத் தொடங்கினால், சுற்றியுள்ள மற்றவர்களும் தயக்கங்களைத் துறந்து தனக்கு நேர்ந்த அதிசய அனுபவங்களை விவரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

எல்லோருடைய கதைகளிலும் ஒரு பொதுத் தன்மை இருப்பதைக் காண்கிறோம். விளிம்புகளில் தொற்றிக்கொண்டிருப்பவர்களை இவரது சங்கீதம் கைப்பற்றி மேலே இழுத்துவந்திருக்கிறது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டிருப்பவர்களுக்கு ஆறுதலை மட்டுமல்ல நம்பிக்கையையும் தந்து உயிர்ப்பித்திருக்கிறது. இவருடைய பாடல்களின் வரிகளால் அல்ல, அந்த நாதத்தால் ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் இவர்கள். கவிஞர்களின் வரிகள் புத்துணர்வைக் கொண்டுவந்த கதைகள் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இருந்திருக்கின்றன. இளையராஜாவின் வருகைக்குப் பிறகு வரிகள் கரைந்துவிட்டன. குரலற்ற, சொற்களற்ற இசை ஒவ்வொருவரின் மன அமைப்புக்கேற்பத் தகவமைத்துக்கொண்டு வியாபித்திருக்கத் தொடங்கிவிட்டது.

இறுக்கம் தளர்த்திய இசை

அன்று நான் அமர்ந்திருந்த பேருந்தின் ஓட்டுநருக்கும் இன்னொரு பேருந்தின் ஓட்டுநருக்கும் பெரிய தகராறு. பேருந்து நிலையத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கூடிவிட்டார்கள். எந்த நேரத்திலும் கைகலப்பாக மாறும் சூழல். யாரோ வந்து எப்படியோ சமாதானப்படுத்தி எங்கள் ஓட்டுநரைப் பேருந்தில் ஏற்றிவிட்டார்கள். அவரும் உரக்கத் திட்டிக்கொண்டே வண்டியைக் கிளப்புகிறார். பேருந்து நிலைய வாசலுக்கருகே குறுக்கே நிறுத்தியிருந்த வண்டியின் ஓட்டுநரைத் திட்டுகிறார். அவருக்குப் பக்கத்தில் மூட்டைகளாக அடுக்கிவைத்திருந்த பயணியைத் திட்டுகிறார்.

பேருந்தில் அதுவரை ஏதோ புதிய படங்களின் பாடல்கள் இரைச்சலாக ஒலித்துக்கொண்டிருந்தன. அந்த சத்தத்தை மீறி எங்கள் ஓட்டுநர் கத்திக்கொண்டிருந்தார். பேருந்து நகர எல்லையைத் தாண்டும்போது ஒரு பாடல் முடிந்து மற்றொரு பாடல் ஆரம்பித்தது. ஏதோ மறுபடியும் திட்டுவதற்கு வாயெடுத்த ஓட்டுநர் சட்டென்று மெளனமானார். ஸ்வர்ணலதாவின் குரல் – அந்தப் பிரபலமான ஹம்மிங் – பேருந்தைத் தழுவத் தொடங்கியது. பிறகு பாடல் தொடங்கியது.

‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

மன்னன் பேரும் என்னடி…’

திடீரென்று பேருந்துக்குள் வெப்பம் குறைந்தது. உடம்பை நனைக்காமல் எல்லோருக்குள்ளும் மழை தூவத் தொடங்கியது.

நான் ஓட்டுநரையே கவனித்துக்கொண்டிருந்தேன். நெரித்திருந்த புருவங்கள் இப்போது தளர்ந்திருந்தன. சற்று நேரம் கழித்து அவருடைய விரல்கள் ஸ்டியரிங்கில் தளமிடத் தொடங்கின.

பாடல் முடிந்தபோது வேறு மனிதராகியிருந்தார். கைக்குழந்தையோடு நின்றுகொண்டிருந்த பெண்ணிடம். “அந்த மூட்டையை நகர்த்திட்டு பானட் மேல உட்காரும்மா. குழந்தையை அந்தப் பெரியவர்கிட்ட கொடு” என்றார்.

எவ்வளவு கனிவு அந்தக் குரலில்!

இன்னும் நூறாண்டு நீங்கள் வாழ வேண்டும் ராஜா!

*

(மின்னஞ்சல்கள் இணைய இதழில் 2018ல் வெளிவந்த கட்டுரை. இக்கட்டுரை வெளிவந்தவுடன் என்க்கு நேர்ந்த அனுபவம் இது:

"வணக்கம் சார். உங்க இளையராஜா கட்டுரை படிச்சேன்."
"அப்படிங்களா? நன்றி. சொல்லுங்க. உங்க பேரு?"
"முருகன். புதுக்கோட்டைங்க".
"சொல்லுங்க"
"......"
"முருகன், சொல்லுங்க"
"....."(விசும்பல் ஒலி)
"முருகன்...என்ன ஆச்சு? சொல்லுங்க"
"சார்... உங்க கட்டுரைல எழுதியிருந்தீங்களே.. "
"ம்.."
"அது நாந்தாங்க"
"அப்படிங்களா? சொல்லுங்க"
அதன் பிறகு அவர் திணறித் திணறி சொன்னதன் தொகுப்பு:
"எனக்கு ரெண்டு வயசாகி இருந்தப்போ அப்பா போயிட்டாருங்க. நாலரை வயசில அம்மா வேலைக்கு போயிருந்தப்போ ஆக்ஸிடென்ட்ல போயிட்டாங்க.... அத்தை, பெரியப்பா, தாத்தா வீடுன்னு நாலஞ்சு வீட்ல வளர்ந்தேங்க. எந்த வீட்லயும் அவங்களோட சேர்ந்து என்னை படுக்க வைக்க மாட்டாங்க. தனியாத்தான் படுப்பேன். ஸ்டோர் ரூம், திண்ணை, சமையல் ரூம், மொட்டை மாடி....அம்மாப்பா இல்லாத பசங்க தனியா படுத்து தூங்கறதைப் பத்தி யோசிச்சுப் பாருங்க.....
ஆனா நான் தனியாவே இருந்ததில்லீங்க. டிரான்சிஸ்டர் ஒண்ணு வச்சிருப்பேங்க. ராஜா என்னைத் தனியா இருக்க விட்டதேயில்லீங்க. சிலோன் ரேடியோல ராஜா சார் எனக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் தூங்கவப்பாருங்க. நான் அழுதா உடனே அவருக்கு எப்படியோ தெரிஞ்சிடும். உடனே எனக்கு பொருத்தமா ஆறுதலா ஏதோவொரு பாட்டைத் தருவாருங்க. மடியில போட்டு கண்ணைத் தொடச்சி விடுவார்னு எழுதியிருந்தீங்களே.... அது எனக்குத்தாங்க. அவருதான் என்னைக் கைவிடாம தூக்கி நிறுத்தியிருக்காருங்க".


ராஜா சார்.....இந்தக் கதைகள் எல்லாம் உங்கள் காதில் விழுகிறதா?)

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Usha and BC like this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Happy Birthday Raja

Post  IsaiRasigan Wed Jun 02, 2021 8:18 am

Anything about IR found on the net - Vol 4 - Page 30 190199943_10227088497257492_5251617716922300360_n.jpg?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=tdN5XWRpBxQAX-e5wl9&_nc_ht=scontent.fmaa1-1

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Usha likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan Wed Jun 02, 2021 8:25 am

https://fb.watch/5SPUPMaqIz/

=AZVT6V4034vYQ2INGyQms2_IUA97OERH4nRsUY6GUWTkJFQ_aFq07pPuzwasOg75BqnVgtq0h7U3zR3ViH-AcwTRHmClF9to-c_Or-ef1_EzIatgkWIkc0DJHKw8PgsXBDxxcbk1mIYuXZiEFwKCCzELrLY2lN0p9tGT_RjWJrS-zd6uj3V_zhavDexHhITmkkc&__tn__=-UC%2CP-R]Sharreth 


=AZVT6V4034vYQ2INGyQms2_IUA97OERH4nRsUY6GUWTkJFQ_aFq07pPuzwasOg75BqnVgtq0h7U3zR3ViH-AcwTRHmClF9to-c_Or-ef1_EzIatgkWIkc0DJHKw8PgsXBDxxcbk1mIYuXZiEFwKCCzELrLY2lN0p9tGT_RjWJrS-zd6uj3V_zhavDexHhITmkkc&__tn__=%2CO%2CP-R]57 நிமிடங்கள்  · 




என் ராஜாசருக்கு ஆயிரம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் Anything about IR found on the net - Vol 4 - Page 30 1f64fAnything about IR found on the net - Vol 4 - Page 30 1f64fAnything about IR found on the net - Vol 4 - Page 30 1f64fAnything about IR found on the net - Vol 4 - Page 30 1f64f




  · 
அசலைக் காட்டு
  · 
இந்த மொழிபெயர்ப்பை மதிப்பிடவும்





=AZVT6V4034vYQ2INGyQms2_IUA97OERH4nRsUY6GUWTkJFQ_aFq07pPuzwasOg75BqnVgtq0h7U3zR3ViH-AcwTRHmClF9to-c_Or-ef1_EzIatgkWIkc0DJHKw8PgsXBDxxcbk1mIYuXZiEFwKCCzELrLY2lN0p9tGT_RjWJrS-zd6uj3V_zhavDexHhITmkkc&__tn__=FH-R]

=AZVT6V4034vYQ2INGyQms2_IUA97OERH4nRsUY6GUWTkJFQ_aFq07pPuzwasOg75BqnVgtq0h7U3zR3ViH-AcwTRHmClF9to-c_Or-ef1_EzIatgkWIkc0DJHKw8PgsXBDxxcbk1mIYuXZiEFwKCCzELrLY2lN0p9tGT_RjWJrS-zd6uj3V_zhavDexHhITmkkc&__tn__=FH-R]








1:33 / 1:44
[ltr]








=AZVT6V4034vYQ2INGyQms2_IUA97OERH4nRsUY6GUWTkJFQ_aFq07pPuzwasOg75BqnVgtq0h7U3zR3ViH-AcwTRHmClF9to-c_Or-ef1_EzIatgkWIkc0DJHKw8PgsXBDxxcbk1mIYuXZiEFwKCCzELrLY2lN0p9tGT_RjWJrS-zd6uj3V_zhavDexHhITmkkc&__tn__=%2B%3FFH-R]





[/ltr]





Anything about IR found on the net - Vol 4 - Page 30 Svg%3e

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Svg%3e


665நீங்கள் மற்றும் 664 பேர்

94 கருத்துகள்

34 பகிர்வுகள்


IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Usha likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan Wed Jun 02, 2021 8:35 am

Writer Suka (Director of Padithurai)


=AZV1GXqt2RYFzmV_cq3wqzbzO1DV_6ds7Jgf1zPa0VZI_iJwptFh2gX86MphYuERJKZ3bMpW_IU2sqq2EkV3H6t4BjMRDQ7nWdJfWcEtIUG9Sf3NE9NniJ2qKb007ZEmTNHb-ffPDj4US_rXVT5HxJ98Rl-MyurCgnDJX20vezCDOg&__tn__=-UC%2CP-R]N S S K Suresh


=AZV1GXqt2RYFzmV_cq3wqzbzO1DV_6ds7Jgf1zPa0VZI_iJwptFh2gX86MphYuERJKZ3bMpW_IU2sqq2EkV3H6t4BjMRDQ7nWdJfWcEtIUG9Sf3NE9NniJ2qKb007ZEmTNHb-ffPDj4US_rXVT5HxJ98Rl-MyurCgnDJX20vezCDOg&__tn__=%2CO%2CP-R]1 மணி நேரம்  · 



78 . . .

மதிய உணவுக்குப் பின்னான உண்ட மயக்கத்தில் இருக்கும் போது வழக்கமாக குறுஞ்செய்தி அனுப்புகிறவரிடமிருந்து அழைப்பு. பதறி எழுந்து எடுத்து, ‘ஸார்’ என்றேன். ‘உடனே பிரஸாத்துக்கு வா’. அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் பிரஸாத் ஒலிப்பதிவு கூடத்துக்குள் நுழைந்தால், அங்கு தொலைக்காட்சி ஒளிப்பதிவு கருவிகள் சூழ இயக்குநர் பால்கி அமர்ந்து இளையராஜாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். உடன் கார்த்திக் ராஜா மற்றும் இசைக்கலைஞர்கள். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழித்துக் கொண்டு நின்றேன். பால்கி அருகில் வந்து கை குலுக்கி தோளில் தட்டி, ‘என் செஷன் முடிஞ்சுது. நெக்ஸ்ட் நீங்கதான் சுகா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பால்கி அமர்ந்திருந்த இடத்தில் என்னை அமரச் செய்து, ‘ம்ம்ம். கேளு’ என்றார் பெரியவர். ‘ஒரு நிமிஷம் ஸார்’ என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த கார்த்திக் ராஜாவிடம் ‘கார்த்திக். இங்கே என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல. நான் என்ன கேள்வி கேக்கணும்?’ என்றேன். கார்த்திக் ராஜா சிரித்தபடி, ‘வேற ஒண்ணும் இல்லங்க. அப்பாவால வர முடியாம போன ப்ரோக்ராம டெலிகாஸ்ட் ஆகப் போகுது. அதுல பாடின பாட்டுகளைப் பத்தி அப்பாக்கிட்ட ஒரு சின்ன டிஸ்கஷன்’ என்றார். ‘பாட்டு லிஸ்ட் குடுங்க’ என்று வாங்கி அவசர அவசரமாக மேய்ந்தேன். அதன் பிறகு இந்தப் பாடலைப் பற்றிக் கேட்டேன்.

சுகா

=AT3QKnV5xROyRY7yuR-3_U-SZYXPuyt4S-OeY9_XLPROc7r_Kd7utlgE7r135AATbE_ZrqqJgO9SNQa6hPT4Wx_ulxGxU7Uys6iTzyBNxia9SbjRcnySCsSlRhvYIoIBEHgT86--SLYHIEwZFJMaSIQ-njOelVxfDDZeZJFLBiqLG0Kvn4C1JLCmyxQpkLS0ag]https://youtu.be/vtxlKZjadg0







Anything about IR found on the net - Vol 4 - Page 30 188423443_1632278950494596_5586822928153556882_n.jpg?_nc_cat=101&ccb=1-3&_nc_sid=1055be&_nc_ohc=Tc8C_Phy7-oAX8o5nC8&_nc_ht=scontent.fmaa1-3




Watch இல் உள்ள கூடுதல் வீடியோக்கள்




வீடியோவை மீண்டும் இயக்கு




பகிர்





Anything about IR found on the net - Vol 4 - Page 30 Svg%3e

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Svg%3e


5555



6 பகிர்வுகள்


IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Usha likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan Wed Jun 02, 2021 8:53 am


=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=-UC%2CP-R]Perumal Seenuvasakumaran


=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=%2CO%2CP-R][size=11]2 மணி நேரம்  · 


[/size]
=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=<%2CP-y-R]
=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=<%2CP-y-R]=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=<<%2CP-y-R]

=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=<<%2CP-y-R]


=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=-UC%2CP-y-R]Kuppuswamy Ganesan

6 ம  · 


=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=*NK-y-R]#சங்கீதப்_பிரவாகத்தின்_நதிமூலம்

=AZXIVrAwWkXmQPIsHPc3QhFXwg6vxF3od68WeJc0RT7YMVWPh7gdKcp0sXa9gaqYb16P2fPHhqKKXZARqceCkLfOAujoiV9D3p4b9fC2hSdNyyTcAKHvxYpY4Had_FRGTe_6nleDGRa8GJgsFYTuIONIXyvn03Rio99hUEa0eGS4FZQ60uiP_H4fakMexYYv6DY&__tn__=*NK-y-R]#ஜி_குப்புசாமி

1975முதல் 1980 வரையிலான காலகட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவது. இந்த ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்த பல சம்பவங்களின் முக்கியத்துவம், அவை எதிர்காலத்தில் பலவற்றின் முகங்களை என்றென்றைக்குமாக மாற்றப்போகிறது என்பதெல்லாம் அன்றைக்கு அவை நிகழும் காலத்தில் உணரப்படவில்லை. அவசரநிலைப் பிரகடனத்தின் மூலம் சுதந்திர இந்தியாவின் இருண்டகட்டம் 75ம் வருடத்தில் தொடங்கினாலும் இரண்டரை வருடங்களில் மந்திரம் போல இருள்விலகி, ஒரு புதிய பொற்காலததின் விடியல் இந்திய மக்களின் கண்களைக் கூசவைத்து, அதன் விளைவாக துளிர்த்த பலகோடி நம்பிக்கைகள் அற்பாயுசில் கலைந்துபோன மூன்றரை வருடக் கனா அந்த காலகட்டம். அரசியலில் மட்டுமின்றி திரையுலகிலும் புதியசக்திகள் தலையெடுத்த காலம் அது. பொற்காலக் கனவுகள் எழுப்பிய மாளிகைகள் 80ம் வருட பூகம்பத்தில் சரிந்தாலும் தப்பிப்பிழைத்த ஒற்றை மாளிகையாக நின்றது அபாரமானத் திறமைகளைக் கொண்டிருந்த ஒரு யுகத்துக்கான இசைமேதைமை.
தமிழ்த் திரை இசையைப் பொறுத்தவரை எழுபதுகளின் முற்பாதி, உணர்ச்சி மேலிட்ட நெகிழ்விசையும், அதீத நாயகர்களின் உற்சாகத் துள்ளிசையுமாக இருந்த அறுபதுகளின் நீட்சியாகவே இருந்தது. விஸ்வநாதன் & ராமமூர்த்தியும், கே.வி. மகாதேவனும் திரையிசை வரலாற்றின் அதிமுக்கிய அத்தியாயங்கள். ஆனாலும் எழுபதுகளின் சோசலிச சர்க்கார், திராவிட ஆட்சிகளில் தமிழ்ச் சமூகத்தின் மனநிலையில் ஏற்பட்டிருந்த மெலிதான நகர்வுகளுக்கு ஈடுகொடுப்பவர்களாக இந்த மேதைகள் இல்லாததால்தான், தமிழக இல்லங்களுக்குள் ஆர்.டி.பரமனும், லக்ஷ்மிகாந்த் பியாரேலாலும் பிரவேசிக்கத் தொடங்கினார்கள். ரஃபியும், லதாவும், கிஷோரும், ஆஷாவும் தமிழ்க்குடும்ப உறுப்பினர்கள் ஆனார்கள்.
கே.வி. மகாதேவன் தெலுங்கிற்கு நகர்ந்துவிட எம்.எஸ்.வி. மட்டும் தனியாகக் கோலோச்சியிருந்த காலம் அது. விஜயபாஸ்கர், சங்கர் - கணேஷ், ஷ்யாம், ஜி.கே. வெங்கடேஷ் போன்றோரிடம் சில புதிய இயக்குநர்கள் இணைந்திருந்தார்கள். ஒரு பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன் தணிந்திருந்த ஓர் உள்ளடங்கிய பதற்றச்சூழல் அது. ஒரு நாயகனின் வருகைக்கான தேவை மிகத் தெளிவாக உணரப்பட்ட நேரம் என்றுகூட இன்று நாற்பது வருடங்கள் கழித்துத் திரும்பிப்பார்க்கையில் சொல்ல முடிகிறது. இல்லாவிட்டால் மிக எளிமையான, கவர்ச்சியற்ற தோற்றத்துடன் ஒரு கிராமத்தான் ஆர்மோனியப் பெட்டியில் வாசித்துக்காட்டிய நாட்டார் இசையில் அமைந்த பாடல்களுக்காகவே ஒரு கதையை உருவாக்கும் துணிவு பஞ்சு அருணாசலம் என்ற இளம் தயாரிப்பாளருக்கு வந்திருக்காது.
பாடல்களுக்காகவே எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் திரைப்படம் என்ற அளவில் 'அன்னக்கிளி' நிச்சயமாக ஒரு நல்ல படம்தான். கிராமமும், அதன் மனிதர்களும் உண்மையாக இருந்தனர். மிகையில்லாத ரகசியக் காதலும், ஏக்கமும், துக்கமும் இருந்தது. இதுவரை திரையில் கேட்டிருக்காத ஒரு புதிய இசை முழுக்க முழுக்க மண்வாசனையோடு சொக்கிப்போக வைத்தது.
இந்த இசை அதுவரை தமிழ்ச்செவிகளுக்கு பழக்கமாகியிருக்காத இசை. வானொலியில் நாட்டுப்புறப்பாடல்களைக் கேட்டு மிரண்டு ஓடிய மேல் தட்டினரும், 'படித்தவர்களும்' இளையராஜாவின் சங்கீதத்தில் பொதிந்திருந்த ஒத்திசைவில் ஸ்தம்பித்து உறைந்தனர். இந்த ஒத்திசைவு நாட்டார் இசையை மேலை வாத்தியங்களின் கூட்டுறவோடு புதிய பரிமாணத்தை செவிகளுக்கு அறிமுகப்படுததுவதாக இருந்தது. அதற்குமுன் தமிழில் வெளிவந்த கிராமத்து இசை என்பது கே.வி.மகாதேவனின் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளும், எம்.எஸ்.வி.யின் பாடல்களில் மேலை இசைக்கருவிகளின் ஒலியைக் குறைத்து, உறுமி மேளத்தையும், சந்தூரையும் துணையாகக் கொண்டு அவர் வழக்கமாக உருவாக்கும் மெல்லிசை ராகங்களுமாகத்தான் இருந்திருக்கின்றன. இளையாராஜா அவர் பிறந்ததிலிருந்து கேட்டுப்பழகி, அவரிடம் ஊறியிருந்த நாட்டுப்பாடல்களின் உயிர்ப்பை சிதைக்காமல், துணைக்கு வரும் மேலை இசைக்கருவிகளின் ஒலிப்படிமங்களையும் இந்திய, கர்நாடக வாத்தியங்களின் இடைச் செருகல்களையும் ஒத்திசைவாக உருவாக்கிக் கொண்டிருந்தார். பாடும் குரல்களும் இசைக்கருவிகளும் ஒன்றோடொன்று பிரிக்கமுடியாமல் பிணைந்திருந்தன. தனது முன்னோர்களிடமிருந்து இளையராஜா வேறுபடும் புள்ளி இதுதான். இத்தகைய ஒத்திசைவான (harmonious) சங்கீதத்தினால் பாடல்களுக்கும், திரைக்காட்சிகளுக்கும் விழிநுகர் அனுபவம் கிடைத்துவிடுகிறது. காட்சிப்படிமங்கள் சங்கீதத்தைக் கேட்பவனின் கற்பனையில் மலரத் தொடங்கிவிடுகிறது. இளையராஜாவுக்கு தன் பாடலில் கவித்துவமான வரிகள் வேண்டியிருக்கவில்லை. அவர் உருவாக்கும் இசைமுறைக்கு தேவைப்படுவதெல்லாம் இசைவான ஒலிக்குறிப்புகள் மட்டுமே. பாடலாசிரியர்களை இளையராஜா மதிப்பில்லை என்ற குற்றச்சாட்டை அவர் உருவாக்கும் இசைத்தன்மையின் அடிப்படையில் வைத்தே அணுக வேண்டும். அவரைப்பொறுத்தவரை பாடலுக்கு இசையமைப்பதும், எடுக்கப்பட்ட திரைக்காட்சிகளுக்கு பின்னணி இசை கோர்ப்பதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
திரைக்காட்சியின் மனநிலைக்கான இசையை அந்தச் சட்டகத்தில் இணைப்பதுதான் அவர் இன்றுவரை ரசித்து செய்துவரும் காரியம். இது இயக்குநருக்கு இணையான ஒரு படைப்பாக்கம். இளையராஜாவின் வருகைக்கு முன் theme music என்பதை தமிழ்த்திரையில் நாம் கேட்டதில்லை. 'பதினாறு வயதினிலே' மயிலின் காதலை அந்தக் குழலோசையிலிருந்து பிரித்து நினைவு கூர்வதற்கு நம்மால் முடியாது. அந்த டாக்டர் ஊர்மக்களிடம் பேசும்போது தோழிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அந்த மருண்ட விழிகள் திரையை ஆக்கிரமிக்கும் காட்சி அந்த ஒற்றை வயலின் இசைக்கோர்வையின்றி முழுமையடையாது.
தமிழின் உன்னதமான திரைப்படங்களில் ஒன்றான 'உதிரிப்பூக்கள்' இளையராஜாவின் பின்னணி இசையால் மேலும் உன்னதப்பட்டது. 'முள்ளும் மலரும்' படத்தை நினைக்கும்போதே காளியோடு சேர்த்து அந்த மேளச் சத்தம் கேட்கிறது. 'ராமன் ஆண்டாலும்' பாடலில் இடையே வருகிற அந்த மேளம் காளி என்ற அந்த முரடனின் அடையாள முத்திரை. உச்சக்கட்டத்தில் தன் உயிருக்குயிரான தங்கை, அவன் நம்பிக்கையை தகர்த்துவிட்டு பிடியை விலக்கிக்கொண்டு அவனுக்குப் பிடிக்காதவனோடு செல்கையில் மகேந்திரனுக்கு இளையராஜா கைகொடுக்கிறார். மெதுவாக பதற்றத்துடன் அதிகரிக்கும் அந்த மேளச்சத்தம் உச்சத்தை எட்டும்போது அந்த வெடிப்பு நிகழ்கிறது. வள்ளியோடு பார்வையாளனும் பிய்த்துக்கொண்டு காளியிடம் திரும்பி ஓடிவருகிறான். ஒரு இசைக்கலைஞன் படைப்பாளியாக வெற்றிகொண்ட தருணம் அது.
பாரதிராஜாவின் ஆரம்பகால படங்களில் நிறைய பாத்திரங்களைக் கொண்டிருந்த படம் 'நிழல்கள்' படத்தின் முதிர்ச்சியின்மையை ஒதுக்கிவிட்டு, முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் அந்தப் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் இயல்புக்கேற்ப தனியான சங்கீதத் தடத்தை இளையராஜா உருவாக்கி வைத்திருந்ததை கவனிக்க வேண்டும். வீணை வித்வானின் மகளுக்கும், வயலின் கலைஞனுக்கும் வாத்திய ஒதுக்கீடு செய்ததில் வியப்பில்லை. அதீதக் கற்பனையில் மிதக்கும் கனவுலக வாசிக்கென்று ஒரு விநோத இசைக்குறிப்பை ஒதுக்கி வைத்திருந்தது அவரது ரசனைக்கொரு சான்று. அதிகம் கவனிப்புக்குள்ளாகாத 'பூட்டாத பூட்டுக்கள்' காலத்தை முந்திக்கொண்டு வந்த படம். வெளிவந்த இடமும் தப்பு. வங்கத்திலோ கேரளத்திலோ வெளியாகியிருக்கக்கூடிய படத்தை ரசனையில் மாற்றம் காணத் தொடங்கிவிட்டதாக நம்பப்பட்ட தமிழ் ரசிகர்களே நிராகரித்தனர். ஆனால் படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு அப்படத்தின் உன்னதம் புரிந்திருந்தமை அவர் அளித்த பின்னணி இசைக் கோர்வையில் புலப்படுகிறது. எவ்வளவுதான் திறமை வாய்ந்த இயக்குநராக மகேந்திரன் இருந்திருந்தாலும், இளையராஜாவின் பின்னணி இசையில்லாமல் இருந்திருந்தால் அந்தப் படம் மிக எளிதாக விரச எல்லையைத் தாண்டிய படம் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும்.
எழுபதுகளின் பின்பாதியில் வந்த நல்ல தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவற்றிற்கு (பதினாறு வயதினிலே, கிழக்கேபோகும் ரயில், புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, மூடுபனி) இளையராஜாவின் பின்னணி இசை துணையாக இருந்திருக்கிறது. 'வாய்ஸ் ஓவர்' உத்தியில்லாமலேயே அவரது பின்னணி இசை பல விஷயங்களை இயக்குநரின் சார்பில் சொல்லிவிடுகிறது. ஓர் உதாரணம் 'மூடுபனி'யில் பிரதாப், ஷோபாவின் முகத்தில் மயக்க மருந்துத் துணியைப் பொத்தி மயக்கமடைய வைக்கும் போது பின்னணி இசையோடு "ஈத்தர், ஈத்தர்" என்று ஒலிக்கும். இத்தகைய உத்திகள் இப்போதுவரை அடுத்த தலைமுறையினர் பயன்படுத்துவதாக மாறியிருக்கின்றன. ('உல்லாசம்' படத்தில் கார்த்திக் ராஜா 'யாரவள்? யாரவள்? யாரவள்?' என்பதை பின்னணியாக அமைத்திருப்பார்). அதுவரை திரைப்படங்களுக்கு துணைபொருளாக இருந்த இசையை ஆதாரப் பகுதியில் ஒன்றாக மாற்றியது இளையராஜாவே.
..................
இளையராஜா நாட்டார் இசைப் பாடல்கள் இந்த காலகட்டத்துக்குப் (75- 80) பிறகு சற்று நிறமிழந்து விட்டதாகவே எனக்குத் தோன்றும். 80-களில் கிராமத்துப் படங்கள் வருவது சற்று குறைந்திருந்தாலும் முதல் மரியாதை, மண்வாசனை தவிர்த்த கிராமத்துப்படங்களில் இளையராஜாவுக்கென்றே அதற்கு உருவாகிவிட்டிருந்த நாட்டார் - கர்நாடக - மேலை fusion இசைதான் தூக்கலாக இருந்தது.
ஆனால் இளையராஜாவின் இசைப்பயணத்தில் அவர் அடைந்த உச்சம் என்பது 81- 85 காலகட்டமே. இந்த வருடங்களில் அவரது கலை அடைந்த உச்சம் ஏறக்குறைய இறைத்தன்மையைக் கொண்டது.
நாம் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கும் அவரது ஆரம்பகாலப் பாடல்களில் தனித்துத் தெரியும் அம்சங்களைப் பட்டியலிட்டால் முதலில் இடம்பெறுவது அவர் கூட்டுக்குரல்களை (chours) பயன்படுத்தியது. இசைக்கருவிகளையும் பாடகர்களின் குரல்களையும் ஒத்திசைவாக்கியதன் நீட்சியே கூட்டுக்குரல்களை இடையிசையாகப் பயன்படுத்தியதும் எனலாம். ஏற்கனவே நாட்டுப்பாடல்களாகப் பிரபலம் அடைந்திருந்த 'சுத்தச் சம்பா பச்ச நெல்லு' அவரது முதல்படத்திலேயே புதுச்சட்டை அணிந்தபடி அரங்கேறுகிறது. எம்.பி.சீனிவாசன் மிகவும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனை புரிந்த கூட்டிசையை அடுத்த கட்டத்துக்கு உற்சாகமாக எடுத்துச் சென்ற முதல் தப்படி 'சுத்தச் சம்பா...'. 'பதினாறு வயதினிலே' வில் 'செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா'வை முதன்முதலாகக் கேட்டபோது பலரும் நம்பமுடியாத ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதற்கு முன்பு நையாண்டிப் பாடல்களில் மட்டுமே வந்திருக்கக்கூடியதைப்போல கூட்டுக்குரல்கள் ஒலித்தன. 'தந்தானே தானத்தன்னே தந்தானா' என ஒரு குழு பாடி நிறுத்த, எதிர்க்குழு 'ஹோய்' என்கிறது. இது இதே ரீதியில் பாடல் முழுக்கத் தொடரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்படித் தொடங்கி 'கோரஸ்' சோதனைகள் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு பல்வேறு வடிவ அமைப்புகளில் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே யிருந்தன. ஆனாலும் அவரது கூட்டுக்குரல் முயற்சிகளின் உச்சம் 'புதிய வார்ப்புக'ளில் நிகழ்ந்தது. ஜென்ஸியும் வசந்தாவும் 'தந்தன தந்த தாளம் வரும், புதுராகம் வரும்' என மாறி மாறி பாடிக்கொண்டு செல்ல, அவர்களுக்கு அடிக்கோடிட்டுக் கொண்டு குழுவினரின் குரலிணைவுகள் கேட்பவர்களை புவியீர்ப்பு விசையை எதிர்த்து தூக்கிச்செல்கின்றன. இந்தப் பாடலில் ஒளிந்திருக்கும் மற்றொரு தெய்வீக அம்சம், காயத்திரியின் விரல்கள் மீட்டும் வீணையின் நாதம். ஜென்ஸியின் குரலுக்கே ஒரு வித தியான நிலைக்கு நம்மை ஆழ்த்துகின்ற தன்மை உண்டு. ('உல்லாசப்பறவைகள்' படத்தின் 'தெய்வீக ராகம்' பாடலை யாரால் கண்களைத் திறந்துகொண்டு கேட்க முடியும்?) 'அந்திமழை பொழிகிறது' (ராஜபார்வை)யிலும் 'பூந்தளிராட' (பன்னீர் புஷ்பங்கள்) விலும் வருகின்ற கூட்டுக்குரல்கள் எப்படி அந்த மனிதனின் கற்பனையில் தோன்றியிருக்கும் என்று நம்மை வியக்க வைப்பவை. 'பூந்தளிராட' பாடலில் குழுவினர் இரண்டாகப் பிரிந்து ஒருவரின் வரிசையின் மீது மற்றவரின் வரிசையைப் பதியும்படியாக உருவாக்கப்பட்டவிதம் அந்தப் பாடலுக்கு காட்சிரீதியான பரிமாணத்தை உண்டாக்கிவிடுகிறது.
கோரஸ் பாடல்களில் அவர் ஆண்குரல்களைப் பெரும்பாலும் தவிர்த்தே வந்தது அவரது தனிப்பட்ட ரசனை சார்ந்ததாகவே இருக்கக்கூடும் (எண்பதுகளின் இறுதியில் 'சோலை இளங்குயிலே' என்ற பாடலில் ஆண்களின் கூட்டுக் குரலை நகைச்சுவைக்காகவே பயன்படுத்தியிருக்கிறார்).
பாடல்களுக்கு முற்றிலும் புதிய நிறத்தைக் கொண்டு வருவதற்காக தனது நான்காவது படத்திலிருந்தே பலவ்வேறு உத்திகளை முயன்றிருக்கிறார். அவையெல்லாமே செவிகளை உறுத்தாமல், இனிமையாகவே இருந்திருக்கின்றன. வெறுமனே இசையமைப்பதோடு நிறுத்திவிடாமல், இசைக்கருவிகளை ஒருங்கமைக்கவும் செய்து, ஆர்க்கெஸ்ட்ரேஷனையும் செய்து, 'கண்டக்ட்'டும் செய்து, ஒலிப்பதிவை மேற்பார்வையும் செய்கிற சிரத்தை அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. 'உறவாடும் நெஞ்சம்' படத்தின் 'ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்' பாடலில் கடிகாரத்தின் டிக் டிக் ஒலி, பாடலுக்கு தாளகதியாகவே நடந்து செல்கிறது.
'லூப்' என்றும் 'கவுன்டர் பாய்ன்ட்' என்றும் சொல்லப்படும் உத்தியை 'சிட்டுக்குருவி' படத்தில் முதல்முதலாக கையாள்கிறார். (இந்த உத்தி இதற்குப்பிறகு பல வருடங்களுக்கு வெவ்வேறு ரூபங்களில் அவரால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது). அது ஒரு சாதாரண டூயட் பாடல். அதனை அசாதாரணமாக்கியது அவரது கற்பனை. பாத்திரங்களோடு அவர்களுடைய மனசாட்சிகளும் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டதற்கு முதற்காரணம் இயக்குநரா, அல்லது சுசீலா, எஸ்.பி.பி குரல்களை இரண்டு தனித்தனித் தடங்களில் பதிவு செய்து, பின் ஒன்றன் மேல் ஒன்றை ஒட்டி ஒலிப்பதிவு செய்து புதுமையாகப் பாடலைத் தந்த பிறகு இயக்குநருக்குத் தோன்றிய யோசனையா என்று சந்தேகமாக இருக்கிறது. 'காற்றினிலே வரும் கீதம்' படத்தில் 'கண்டேன் எங்கும்' பாடல் இரண்டுமுறை வரும். ஒன்றை ஜானகியும் மற்றொன்றை வாணி ஜெயராமும் பாடியிருக்கும் இப்பாடலும் மேற்கண்ட உத்தியை பயன்படுத்தி பெரும் வெற்றிகண்ட ஒன்று. இப்பாடலை உருவாக்குவதற்காக அவர் பட்ட கஷ்டங்களை ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதத்தை அந்நாளில் 'இதயம் பேசுகிறது' இதழில் இளையராஜா எழுதியிருந்தார்.
ஏற்கனவே பழகிப்போன தடங்களை தொடர்ந்து மீறிக்கொண்டிருந்தவர் அவர். (நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்துக்குப் பிறகு 80களில் பல்வேறு கர்நாடக ராகங்களை ஒன்றிணைத்தும், பாதியில் மாற்றியும் இசையமைப்பில் சோதனை செய்தவற்றிற்காக பண்டிதர்களின் கடும் எதிர்ப்பை அவர் எதிர்கொண்டது தனிக்கதை), பல்லவியை அதுவரை பழகியிருந்த அளவைவிட நீளமாக நீட்டிச்செல்வது அவருக்குபிடித்தமாக இருந்த ஒரு பரிசோதனை முயற்சி. 'ஆறிலிருந்து அறுபவது வரை' படத்தில் மூச்சு எடுக்க வாய்ப்பு அளிக்காமல் 'கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் சொல்லுதம்மா' என்று நீள்கிறது. வழக்கமாக தொகையறாவாக இருக்கவேண்டிய பத்தியை 'மூன்றாம்பிறை'யின் பாடல் பல்லவியாகவே கொண்டு முந்தைய ரெகார்டை முறியடிக்கிறது 'வானெங்கும் தங்க விண்மீன்கள், விழியிமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்.'
இதன் நீட்சிதான் இளையராஜாவின் Signature tune என்று சொல்லத்தக்க ஏற்ற இறக்கமான இராக அமைப்புகள். அவருக்கு முன்னால் இருந்தவர்கள் தொகையறாவில் கார்வையை நீட்டி இழுப்பார்கள். இளையராஜா பல்லவியிலும் சரணங்களிலுமே கார்வையை இழுத்து இழுத்து, ஏற்ற இறக்கங்களோடு அலைபாய வைக்கிறார். இது 'எங்கெங்கோ செல்லும்' (பட்டாக்கத்தி பைரவன்) பாடலின் சரணத்தில்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். பிறகு 'ஆனந்த ராகம்' படத்தில் 'ஒரு ராகம், பா...டலோ...டு கா...தில் கே...ட்ட தோ' என்று மேலும் கீழும் மிதக்கிறது- (இதைச்சொல்லும் போது நமக்கு ஒதுக்கீடு செய்த காலத்தைத் தாண்டி, என் அபிமான உதாரணத்தைச் சொல்ல விருப்பமாக இருக்கிறது:
'என் மேனி... தேனரும்பு... என் பாட்டு...
பூங்கரும்பு... மச்சான் நா...ன் மெட்டெடுப்பேன்...
உன்னைத்தான்... கட்டி வெப்பேன்)
கார்வையை நீட்டியிழுத்துப் பாடுவதற்கு நேரெதிராக சின்னஞ்சிறு துண்டுகளைக் கோர்த்து வருகின்ற பாடல்களும் அதிகம். 'எண்ணத்தில் ஏதோ நில்லென்றது' (கல்லுக்குள் ஈரம்) பாடலில் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் அப்பாவிப் பெண்ணின் காதலில் ஊறிய தயக்கம்.
...............
இளையராஜாவைப் பொறுத்தவரை அவருக்கு சங்கீதம் என்பது ஓர் ஒட்டுமொத்த ஒலியனுபவம். அவருக்கு குரல்களும் கருவிகளும் ஒன்றேதான். அந்தக் குரல்கள் உச்சரிக்கும் சொற்கள் ஒலிக்குறிப்புகள் மட்டுமே. அந்தக் குரல்கள் கூட்டுக் குரலாக கோரஸில் இசையெழுப்பலாம், வாத்தியக் கருவிகள் போலவே ஒலியும் எழுப்பலாம். 1978ம் வருடத்தில் நாளிதழ் ஒன்றில் பாரதிராஜா 'வெள்ளை நிறத்தில் ஒரு பச்சைக்கிளி' என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றைத் துவக்குவதாகவும் இளையராஜாவின் இசையில் புதுமையான முறையில் பாடல் ஒன்று பதிவானதாகவும் செய்தி வந்தது. இப்பாடலில் இசைக்கருவிகள் ஒன்றுகூட பயன்படுத்தபடால் ஆண்,பெண் குரல்களில் வாத்தியக் கருவிகளின் ஒலிகளை எழுப்பி அந்தப்பாடல் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. அநதப்படம் வெளிவரவில்லை. பதிவான அந்தப்பாடல் ஏதோ ஒரு பாடல் பதிவரங்கின் வைப்பறையில் கிடக்கலாம்.
இந்த உத்தியை அவர் திரும்பவும் முழுப்பாடலுக்குமாக பயன்படுத்தாவிட்டாலும் 'ராசாவே உன்னை நான் எண்ணித்தான்' (தனிக்காட்டு ராஜா), இதய மழையில் நனைந்த கிளிகள் (ஆளுக்கொரு ஆசை), 'எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ' (இது எப்படி இருக்கு) போன்ற பாடல்களின் இடையிசையிலும் 'முதல் இரவு' படத்தில் இடம்பெற்ற 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்' பாடலில் கூடவே வரும் ரயிலோசையிலும் குரல்கள் கருவிகளின் ஒலிகளை எழுப்பின.
இந்த வகையிலான முயற்சிகளை அவர் தனது ஆரம்பகால படங்களின் 'டைட்டில் மியூசிக்'இல் அதிகமும் பயன்படுத்தியிருக்கிறார். உடனடியாக உதாரணம் காட்டுவதற்கு 'ரோசாப்பூ ரவிக்கைக் காரியின் தலைப் பிசையைச் சொல்ல வேண்டும். ஜென்ஸியும் கங்கை அமரனும் 'தன தனதத் தந்தானா...' என்று ஆரம்பிக்கும் தத்தகாரத்தில் குரல்களும் வாத்தியக் கருவிகளும் ஒன்று கலந்து மயக்கநிலைக்குக் கொண்டு செல்கின்றன.
இளையராஜாவின் வருகை பல முதிய பாடகர்களுக்கு விடை கொடுத்தது. சிவாஜியின் படங்களுக்கும், வேறு ஒன்றிரண்டு படங்களுக்கும் மட்டும் டி.எம்.எஸ் இருந்தார்.
'ஓடிவிளையாடு தாத்தா' மற்றும் இன்னும் இரண்டு படங்களில் மட்டும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் ஒலித்தது. சுசீலா இளையராஜாவின் பால்யகால நாயகி என்பதல் அவர் மட்டும் தொடர்ந்தார். மலேஷியா வாசுதேவனுக்கும் ஜானகிக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டது. வாணிஜெயராம் மிகக்குறைவாகவே பயன்படுத்தப்பட்டார். புதிய வரவுகளில் ஜென்ஸியும் ஷைலஜாவும் கொடி கட்டிப் பறந்தனர். இவர்களில் ஜென்ஸிக்கு அமைந்த வெற்றிச் சதவீதம் வேறெந்த பாடகருக்கும் வாய்க்காதது. அநேகமாக அவர் பாடிய எல்லா பாடல்களுமே பெரும் வெற்றியடைந்தன.
................
இளையராஜாவின் அளவுக்கு அதீதத் திறமை கொண்ட கலைஞர்கள் திரையுலகில் அற்பாயுசில் தன்னைத்தானே அழித்துக்கொண்டு மறைந்து போவதுதான் சாதாரணமாக நிகழ்ந்தவந்த வாடிக்கை. பெரும் திறமை வாய்க்கப்பெற்றவர்களுக்கு & அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் , அந்தத் திறமையே அவர்களுக்கு எமனாகிப் போய்விடும். மற்றவர்கள் கடுமையாக முயன்று செய்பவற்றை அலட்சியமாக அவர்களால் செய்து முடித்துவிடுவதைக்கண்டு அவர்களுக்கே உண்டாகிவிடும் சிரத்தையின்மை, அகங்காரம், சோம்பல், இதர இச்சைகளுக்கு ஆளாகிவிடுதல் போன்றவற்றால் சுய அழிப்பு செய்து கொண்டோரே அதிகம். ஆனால் ஏகாக்கிரக சிந்தனையோடு, மிக மிகக் கடுமையான உழைப்பில் தன்னைத்தானே வருத்திக்கொண்டு, தொழிலின் மீது அளப்பறிய பக்தியோடு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவகையில் இளையராஜா ஓர் அபூர்வத்திலும் அபூர்வமான கலைஞர்தான்.
இன்று வேறெந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத அளவுக்கு 'பக்தர்களை'ப் பெற்று ஆலமரமாக வேரூன்றி நிற்கும் இளையராஜா, திரைத்துறையில் நுழைந்த முதல் ஐந்தாண்டுகளில் சந்தித்த அவமானங்களையும், குற்றச்சாட்டுகளையும், விமரிசனங்களையும் இப்போது பட்டியலிட்டால் இன்றைய தலைமுறையினர் அவற்றை நம்பமாட்டார்கள். ஆரம்பகால கிராமப்படங்களின் பாடல்களால் அவருக்கு நாட்டுப்புறப்பாட்டும், அடித்தட்டு மக்களின் துள்ளிசையும் மட்டும் தெரியும் என்பது முதல் குற்றச்சாட்டாக வந்தது. 'புவனா ஒரு கேள்விக்குறி' 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' போன்ற படங்களின் மெல்லிசைப் பாடல்கள் இக்குற்றச்சாட்டை முறியடித்தன. அடுத்ததாக சாஸ்த்ரீய சங்கீதம் தெரியாது என்பது கவிக்குயிலில் பாலமுரளி கிருஷ்ணாவினால் (சின்னக் கண்ணன் அழைக்கிறான்) தீர்ந்தது. மேலை இசை இவருக்கு வருமா என்ற கேள்விக்கு 'இளமை ஊஞ்சலாடுகிறது' வின் என்னடி மீனாட்சியும், சிகப்பு ரோஜாக்களும், இந்தியாவில் முதல்முறையாக ஸ்டீரியோ ஃபோனிக்கில் பதிவு செய்யப்பட்ட 'ப்ரியா' பாடல்களும் பதில் அளித்தன. அடுத்ததாக பல வருடங்களுக்குத் தொடர்ந்து வந்த புகார், இவரது பாடல்களுக்கு நீண்ட ஆயுள் கிடையாது, ஓரிரு மாதங்களிலேயே காணாமற் போய்விடுகிறது என்பது. உண்மையில் இளையராஜா பணியாற்றிய வேகத்தில் மாதத்திற்கு மூன்று பாடல்கள் அபார வெற்றி பெற்று சில வாரங்களுக்கு தெருவெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும். அடுத்த மாதமே வேறு நான்கைந்து பாடல்கள் பேரலையாக வந்து இவற்றை மூழ்கடித்துவிடும். இந்தக் கணக்கைப் பார்க்கலாம்: அறிமுகமாகி மூன்றரை வருடங்களில் நூறு படங்கள்! ஏழு வருடங்களில் இருநூறு படங்கள்!
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் எவையுமே அவரது சமநிலையைக் குலைக்கவில்லை என்பதே ஆறுதல் அளிக்கும் விஷயம். இருந்தாலும் நாயக வழிபாட்டை மீறி இந்த அபூர்வக்கலைஞனை உணர்ச்சிவசப்படாமல் அளவீடு செய்யும் போதுதான் அவரது விஸ்வரூப உயரத்தை நம்மால் உணர முடியுமென்று தோன்றுகிறது.


(இந்து தமிழ் தீபாவளி மலர் 2015-ல் இளையராஜாவின் ஆரம்பகால இசை குறித்து வெளியான எனது கட்டுரை)

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Usha and BC like this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan Wed Jun 02, 2021 12:54 pm

கவிஞர் மகுடேஸ்வரன் எழுதியது:

இளையராஜா இசையமைத்த பாடல்களின் மிகச்சிறந்த தன்மைகள் எவை ? நாம் அவருடைய பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன் ?

1. ஒரு பாடலின் முதற்சொல் தொடங்குவதற்கு முன்பாக முதல் இருபது நொடிகள் அல்லது முப்பது நொடிகளுக்கு ஒரு முன்னிசை அமைத்திருப்பார். அந்த முன்னிசையின் இன்பத் திகைப்பிலிருந்து தப்பித்து நாம் நடுநிலைக்கு வருவதற்குள் அந்தப் பாடலின் முதல் வரி தொடங்கும். வேறு வழியின்றி அந்தப் பாடலுக்குள் நாம் நம்மையறியாமல் மூழ்கத் தொடங்குவோம். ’அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ முதல் ’ராக்கம்மா கையத் தட்டுவரை’ இத்தன்மையோடு அமைந்த எண்ணற்ற பாடல்களை எண்ணிப் பாருங்கள். இந்த நுண்முறையைத் தாம் இளையராஜாவிடமிருந்து கற்றுக்கொண்டு தம் பாடல்களில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் தேவா குறிப்பிடுகிறார். அவர் அதனைத் திறமையாகச் செயற்படுத்திய பாட்டு “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்.”

2. பல்லவியின் ஒவ்வொரு வரிக்கும் புதுப்புது மெட்டாக அமைத்துச் செல்வார். அது முன்பே அமைந்த வரியின் தொடர்ச்சியான மெட்டாக இருக்காது. மாறி மாறி மெட்டின் திசை செல்கிறதே என்பதற்காக எளிமையாகவும் இருக்காது. எடுத்துக்காட்டாக இந்தப் பழைய பாடலைப் பாருங்கள் – பாட்டு பாடவா, பார்த்துப் பேசவா, பாடம் சொல்லவா, பறந்து செல்லவா – இது தொடர்ச்சியான அமைப்பில் அமைந்த மெட்டு. “தூங்காதே தம்பி தூங்காதே, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே” – இது தொடர்ச்சியாகவும் எளிமையாகவும் அமைந்த மெட்டு. தொடக்கத்தில் திரைப்பாடல்களுக்கு இத்தகைய எளிமையும் மறுதோன்றலும் தேவைப்பட்டன. இளையராஜா இந்தப் போக்கினை முற்றாகக் கலைத்தார். இளையராஜாவின் முதல் பாடலையே பாருங்கள் – அன்னக்கிளி உன்னைத் தேடுதே. அடுத்த வரி இதே அமைப்பில் அமையலாம்தானே ? ’வண்ணக்கிளி நெஞ்சம் வாடுதே’ என்று அதே இசைக்கட்டமைப்பில் செல்லலாம். இளையராஜா பாட்டு அப்படிச் செல்லாது. அப்படியே மெட்டை வெற்றிலை பாக்குப்போல் மடிப்பார். ‘ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பூ மேனி வாடுதே’ என்று வெவ்வேறு இழுப்பில் அமைத்துச் செல்வார். ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’ பாடலில் இரண்டு முறை வந்தாலும் இரண்டும் வெவ்வேறு மெட்டு. “என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே” இரண்டு முறை இடம்பெற்றாலும் இரண்டுக்கும் வெவ்வேறு மெட்டு. இவ்வாறு பல்லவி தரும் இந்த இசைப்புதிருக்குள் நாம் நன்றாகச் சிக்கிக்கொள்கிறோம்.

3. பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் இடையே வேதிச்சேர்மங்களின் கட்டுமானங்களைப் போல் இறுக்கிக் கட்டிவிடுகிறார் இளையராஜா. அவற்றுக்கு நடுவில் எங்கே கோடு போடுவது என்று நாம் திகைக்க வேண்டி வருகிறது. ”பொன்மாலைப் பொழுது, வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள், இது ஒரு பொன்மாலைப் பொழுது” – அனுபல்லவி வைத்தாரா இல்லையா இனிமேல்தான் அனுபல்லவி வருமா என்று நாம் குழம்பும்படியான கட்டமைப்பு. அத்தகைய அமைப்பில் அனுபல்லவி பாடலிலிருந்து விலகிச் சென்று தனியே தெரியாது. ஒன்றுக்குள் ஒன்றாக முயங்கிக்கிடக்கும்போது பாடலின் மெட்டுக்கு வலிமை கூடுகிறது. ஒவ்வொரு பாடலையும் எடுத்துக்கொண்டு இதில் எது அனுபல்லவி என்று எண்ணிப் பாருங்கள்.

4. பல்லவியின் வரிகளை மட்டுமே ஒரே மெட்டுக்குள் அமைக்காமல் மாற்றி மாற்றி அமைக்கிறாரா ? இல்லை. ஒரு வரியின் நான்கு சொற்களுக்குள்ளேயும் வெவ்வேறு மெட்டுகளைத் தருவதும் இளையராஜாவின் பாடற்சிறப்பு. ”கண்ணே கனியே முத்தே மணியே” என்று ஒரே மெட்டமைப்பில் செல்லலாம். அப்படிச் செல்லாமல் ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு மெட்டு. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு – சிட்டுக்குருவி படத்தில் வரும் ‘என் கண்மணி’ என்ற பாடல். இன்னொன்று – எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன், அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம் குளிர் மேகங்கள் பனிக் காலங்கள் பெற வேண்டும் சுகங்களே – இந்தப் பாடலில் எந்தச் சொல்லும் ஒரே மெட்டுக்குள் தொடர்ந்திருக்காது. ஏறும் இறங்கும் மாறும் மீறும் எல்லாம் நடக்கும்.

5. கண்ணதாசனின் மிகச்சிறந்த பாடல்கள் யாருடைய இசையமைப்பில் எழுதப்பட்டவை ? விசுவநாதன்-ராமமூர்த்திக்கும் மகாதேவனுக்கும் எழுதப்பட்டவை என்று அடித்துச் சொல்லலாம். கண்ணதாசன் பாட்டெழுத வருகிறார் என்றால் அந்தப் பாடற்சிறப்புக்கான முதலிடத்தைப் பெரும்பாலும் கண்ணதாசனே பெறுவார். இளையராஜாவிற்குக் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அத்தகைய சிறப்பைப் பெற்றாரா ? துணிந்து சொல்ல முடியவில்லை. ஏனென்றால் இளையராஜா தந்த மெட்டுகள் ஒரே இயைபான தத்தகாரத்தில் அமையவில்லை. அதற்கு மேற்சொன்ன இரண்டு காரணங்கள்தாம் காரணம். “தான னன தனனா” என்று அடுத்தடுத்து நான்கு வரிகளுக்குக் கொடுத்தால் கண்ணதாசன் பின்னியெடுத்துவிடுவார். “பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா கோவில்கொண்ட சிலையா கொத்துமலர்க் கொடியா” என்று படியேறுவார். இளையராஜாவின் மெட்டுகள் அப்படி அமையவில்லை. மேற்சொன்னவாறு ஒற்றைச் சந்தத்திற்குள் அமையாத மெட்டுகள். கண்ணதாசன் வாலி போன்றவர்களைத் தம் மெட்டுகளால் இளையராஜா போட்டிக்கு அழைத்தார் எனலாம். என்னதான் மடித்து மடித்து மெட்டுகளைத் தந்தாலும் ”நேரமிது நேரமிது ! நெஞ்சில் ஒரு பாட்டெழுத ! இன்பம் என்னும் சொல் எழுத… நீ எழுத… நான் எழுத… பிறந்தது பேரெழுத” என்று கண்ணதாசன் புலமை காட்டினார். இவ்வாறு மூத்த பாடலாசிரியர்கள் இடம்பெற்றபோதும் பாடற்சிறப்புக்குத் தம்மை முதலிடத்திற்குக் கொணர்ந்தார் இசைஞானி.

6. பல்லவி முடிந்ததும் சரணம் தொடங்குவதற்கு முன்பாக அந்தப் பாடலின் முதல் பின்னணி இசைக்கோப்பு வருகிறது. பல்லவிக்குள் நம்மை இழுத்துத் தள்ள முன்னிசையைப் பயன்படுத்தியதைப்போல் சரணத்திற்குள் நம்மை இழுக்க முதல் பின்னணி இசையை அமைக்கிறார். ‘நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னால் தெரியுமா’ பாடலின் பல்லவி முடிந்ததும் ஒரு பின்னணி இசை வருகிறது. அது பல்லவியைப்போல அமையப் போகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க தாளக்கட்டுக்குள் நுழைகிறது பாட்டு. சரணத்தின் தாளக்கட்டு அந்த முதற்பின்னணி இசையில் கோத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாடலின் முழு உருவத்தையும் முதற்பின்னணி இசை முடிந்த பிறகுதான் நாம் கணிக்கவே முடியும். அதற்கும் முன்னால் அந்தப் பாடலைப் பற்றி ஏதேனும் முன்கணிப்பிற்கு வந்திருந்தால் நாம் தோற்பது கட்டாயம்.

7. பெரும்பாலான பாடல்களில் பாடகர்களின் குரல்கள் தவிர்த்து ஏதேனும் ஒரு புதுக்குரலைப் பயன்படுத்தி ஈர்த்தார். “செவ்வரளித் தோட்டத்திலே உன்ன நினைச்சேன்” என்ற பாடலில் “ஆடும் அலை ஓயாதம்மா… ஆசை அது தேயாதம்மா… வாடை பட்டு நின்னாளம்மா வாசம்பட்ட பூவாட்டம்… மனசுல கொண்டாட்டம்… மலருற செண்டாட்டம்” என்று ஒரு நாட்டுப்புறக் குரல் வருகையில் பாடல் தொடும் உயரம் முற்றிலும் வேறு. தாலாட்டுதே வானம் பாடலில் “ஏ ஹொய்யா ஹொய்யா ஹொய்யா…” என்னும் குரல் மீனவர் ஓடத்திற்கு எத்துணைப் பொருத்தம் ! ’அட மச்சமுள்ள மச்சான்’ பாடலின் ”நாதரதனா திரணனா”வை மறக்க முடியுமா ? ’பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா’ பாடலில் “மலைமேல மழையடிக்க… மாந்தோப்பில் குடைபிடிக்க… ஆவாரங் காட்டுக்குள்ள… ஆயிரம்பூ பூத்திருக்க… மங்காத்தா காத்திருந்தா… மாமனோட பூப்பறிக்க” என்ன ஒரு கற்பனை ! ’அந்தி மழை பொழிகிறது’ பாடலில் வரும் அந்த மூத்த குரல். ’காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ போன்ற சில பாடல்களின் இடையே தோன்றும் தாலாட்டு வரிகள். பாடலை நினைவூட்டுவதும் நீங்காமல் நிலைக்கச் செய்வதுமான அழகிய தனிச்சுவடுகள் இவை.

8. பேச்சுமொழியின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட வரிகளோடு இளையராஜாவின் பாடல்கள் அமைந்தன. புலமைத்திறத்தோடு ஏதேனும் பாடல்வரி எழுதப்படுவதை ஏற்றிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. “உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வெச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வெச்சேன் நெத்தியிலே நெத்தியிலே பொட்டு வெச்ச காரணத்தைப் புரிஞ்சுக்க ராசா விட்டுப் போனா உதிர்ந்துபோகும் வாசனை ரோசா” – இதுதான் பாட்டு வரி. பேச்சு மொழியை அப்படியே பாட்டு மொழியாக்கிய கலைத்திறம். “ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனைப்புத்தான்” – இதற்கும் மேல் எளிமைக்கு எங்கே செல்வது ? “ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது” - இதற்கும் மேல் கவிதைக்கு எங்கே செல்வது ? இளையராஜாவின் பாடல்களில் இலங்கிய பேச்சு மொழியும் எளிமையும் ‘டைட்டானிக்’ கப்பலை உள்ளூர்த் துறைமுகத்தில் கொண்டுவந்து நிறுத்திய வியப்பைத் தந்தன.

9. பாடல் வரிகளின் மொழியில்தான் எளிமையே தவிர இசைக்கருவிகளின் ஒலிக்கட்டுமானத்தில் எளிமையே இல்லை. ‘வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே’ என்னும் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். சரணத்தின் பின்னணி இசையை உங்களால் குறிப்பெடுக்க முடிகிறதா என்று பாருங்கள். “மன்னன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் பாவையல்ல பார்வை பேசும் ஓவியம்” என்று தொடங்கும் சரணத்தின் பின்னிசை ஒலிக்கோவையை நானும் பன்முறை கேட்டுவிட்டேன். தேர்ந்த கணக்காசிரியர் பெருங்கணக்கு ஒன்றை வழிவழியாக எழுதி விடையை நிறுவுவதுபோல் செல்கிறது அந்தப் பாட்டு. ஒவ்வொரு பாட்டிலும் எத்தனை தடவை கேட்டாலும் கண்டுபிடிக்க முடியாத நுண்கோவை ஒன்றைப் பொருத்திவிடுகிறார்.

10. பாடல் முடிந்ததும் அது நம் மனச்செவியில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. கேட்டவுடன் மறந்துவிடும் ஒன்றாக அவருடைய பாடல் இருப்பதில்லை. இசைக்கென்று விளங்கும் இலக்கணங்கள் யாவும் அவர்க்கு ஐயந்திரிபறத் தெரிகிறது. அந்தக் கோட்டுக்குள் நின்றவாறு தம் பாடலைக் கட்டுவதால் இயல்பாகவே ஒவ்வொரு பாடலும் செம்மைச் செதுக்கம்தான். ’இந்தப் பாடலை எங்கோ கேட்டிருக்கிறோமே’ என்று நாற்பது ஆண்டுகள் கழித்துக் கேட்டாலும் நினைவூறி நிற்கின்ற பாடல்களாக அவை இருக்கின்றன. அதனால்தான் இளையராஜா காலங்கடந்து வாழ்கிறார் ! இனி என்றும் வாழ்வார்.

- கவிஞர் மகுடேசுவரன்

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Usha and BC like this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Wed Jun 02, 2021 6:17 pm

isairasigan,

romba periya periya post.. padikamal dhan like solli iruken. padikanam. nammai polave dhan anaithu Raja fans irukirargal..... unmai.

Raja Sir,

Happy Birth Day..........

ungal paatal engalai vaazha vaikum Neengal VAZHGA PALLANDU.........




Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

IsaiRasigan likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Wed Jun 02, 2021 8:54 pm

Su ka interview.... Rajavai patri...... miga inimai

Rajavirku piditha charukesi.. Mayanginen solla thayanginen

https://www.youtube.com/watch?v=SEosiLtJgoc

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Thu Jun 03, 2021 7:16 pm

from Raaga Suresh tweet.... Rajavin pirandha nalukaga sila padalgal.

https://twitter.com/Raaga_Suresh/status/1400004687928070145

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 30 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 43 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36 ... 43  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum