Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-)

3 posters

Go down

விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-) Empty விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-)

Post  app_engine Mon Mar 13, 2023 6:32 am

ராசா யானையைப்போல என்பது நாமெல்லாரும் அறிந்ததே - பல கோணங்களிலும் அவரை அலசி ஆராய்வது பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோம்!

என்றாலும், இந்த இழை புதிது!

கண் பார்வை இல்லாதவர்கள் யானையைத் தடவிப் பல விதங்களில் புரிந்து கொண்ட கதை கேட்டிருக்கிறோம்.

அதே போன்ற நிலையில் நின்று கொண்டு ராசாவிடம் நமக்குத் தோன்றிய "ஆகச்சிறந்த" சிறப்பு என்ன என்று ஒன்றே ஒன்று குறித்து மட்டும் இந்த இழையில் "கண்மூடித்தனமாகப்" பேசுவோம்.

(வேறு யார் பேசாவிட்டாலும் நான் வளவளவென்று பேசப்போகிறேன் - காசா பணமா?)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-) Empty Re: விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-)

Post  Kr Mon Mar 13, 2023 8:17 pm

Very interesting topic... however quite difficult to limit to just one and am struggling to limit to just one thing about IR...

But since you had asked for only one, from my perspective the true differentiator is the orchestration in his compositions.  His ability to conceive, visualize and execute them is pure genius.

Right from Annakili to the recent Viduthalai and Rangamarthanda films, the orchestration in his compositions are unique and unmatched.  Its a big part of what I look for in IR's songs.

Shri T V Gopalakrishnan, IR's Guru, once said how IR knows where the 'jeevan' is in each one of the instruments and brings it to fore in his songs.

Two recent examples...maybe a 10 second flute section in the second interlude of "onnoda nadandha' song from Viduthalai and the cello and solo violin piece in 1st (only) interlude of "Penche Badhalanni" song from Rangamarthanda

Kr

Posts : 79
Reputation : 0
Join date : 2013-08-26

app_engine likes this post

Back to top Go down

விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-) Empty Re: விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-)

Post  jaiganesh Wed Mar 29, 2023 4:02 pm

இளையராஜா - ஒரு முழுமையான இசை மாணவன்.

இசை ஞானியிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் - அவறது "கற்றல்".
இளையராஜா போன்று இசையைக்கற்றுக்கொண்டவர்கள் யாரும் இல்லை. அவர் இசையை ஒரு தொழில் நுட்பமாகக்கற்றுக்கொள்ளவில்லை (வயித்துப்பாட்டுக்கு).
அவர் இசையை முதலில் காதலைப்போலக்கற்றுக்கொள்கிறார். கள்ளத்தனமாக ஆர்மோனியப்பெட்டியைத்தொட்டுப்பார்க்கிறார்.
மாமனிதர் அம்பேத்கர் சொல்வது போல அவர் தன் முன்னோடிகளிடமிருந்து இசையை "போலச்செய்து" கற்றுக்கொள்கிறார்..
பிறகு இசையின் விதிகளை முறைப்படி கற்றுக்கொள்கிறார். தன் முன்னோடி குருமார்களின் வரிசையைக்காலதேச வர்த்தமானங்களின் எல்லைகளுக்குள் சுருக்காமல் அனைத்து நாட்டு அனைத்துக்காலத்தின்
 இசைப்பிதாமகர்களை அவர்களின் இசையின் சாரத்தை நுட்பமாக உணர்ந்து தேறுகிறார்.
அத்துணை முன்னோடிகளின் அறிவிக்கப்படாத வாரிசாக உணர்ந்து, அதே சமயம் தன் வேர்களின் வாசத்திலிருந்து இன்று வரை விடுபடாமல் அனைத்து கலை பிரயோக முறைகளுக்கும் உண்மையானவராக நடந்து கொள்கிறார்.
புதிய கலைவடிவங்களையும் தினமும் கற்றுக்கொள்கிறார் (இந்த வயதிலும்), அவற்றின் இலக்கணம் மீறாமல் படைப்புகளை உருவாக்கி அவற்றில் இழையோடும் முன்னோடிகளின் சிந்தனைத்தொடரை அறுபடாமல் காக்கிறார், உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.

இசைச்சிந்தனை ஓர் ஊற்றாக பல்வேறு வழிகளிலும் அவருக்குத்தோன்றினாலும், அதை ஓர் நேர்த்தியுடனும் பக்தியுடனும் ஓர் வழிபாடு போல உணர்வுறுதியுடன் செய்கிறார்.காட்டைக்கற்றுத்தெரிந்த யானை தன் காலடியில் ஓர் சிற்றுயிர் சாகா வண்ணம் பொதிந்து நடப்பதைப்போல..

இளையராஜா ஓர் இசை யானை
அவர் இசையில் மயங்குதல்
நம் உயிர் ஆணை.

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-) Empty Re: விழி இழந்தவராக ஆனையைத் தடவிப்பார்ப்போமே :-)

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum