Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Mon Aug 01, 2016 5:49 pm

இன்றும் வழக்கில் இருக்கும் பல தமிழ்ச்சொற்களை விட்டு விட்டு அவற்றின் இடங்களில் வேற்று மொழிச்சொற்களையே (பெரும்பாலும்) பயன்படுத்தும் பழக்கம் நம் எல்லோருக்கும் உண்டு.

எடுத்துக்காட்டு - மகிழ்ச்சி Wink 

முக்கால் பங்கு நேரமும் "ஹேப்பி", "குஷி", "சந்தோஷம்", "ஆனந்தம்" என்று வேற்று மொழியோ அல்லது தமிழ் என்று உறுதியாகச் சொல்ல முடியாதவற்றையோ எழுதியும் பேசியும் வந்துள்ளோம்.  

பா.ரஞ்சித் / ரஜனிகாந்த் உதவியால் உலகத்தமிழர்கள் கோடிக்கணக்கான முறை "மகிழ்ச்சி" என்ற இந்தச்சொல்லைக் கடந்த சில கிழமைகளாகப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!

சில நாட்களுக்கு முன் நியூஜெர்சி மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் பலரைச்சந்தித்த போது ஆறு வயதுச்சிறுவன் ஒருவன் "மகிழ்ச்சி" என்று சொல்லி என்னை மெய் சிலிர்க்க வைத்தான் Smile 

திரைப்பட உலகினரின் வலிமை இப்படிப்பட்ட தமிழ்ச்சேவைக்கு உதவும்போது புகழ்ந்து தள்ள வேண்டியது நம் கடமை! 
(இன்று ட்விட்டரில் அதைக்கொஞ்சம் செய்தேன்).

இந்த நேரத்தில், குறைந்தது இதே போன்ற நூறு சொற்களையாவது வலியுறுத்த இந்த இழை திறந்துள்ளேன். 

வழக்கில் இல்லாத ஆம்பல் மவ்வல் கிவ்வல் எல்லாம் இல்லை Wink 

வழக்கில் உள்ள ஆனால் கொஞ்சம் பின்தங்கி இருக்கும் சொற்களை முதன்மைப்படுத்துவதும், அவற்றையே எழுத்தில் / பேச்சில் பயன்படுத்துவதும்!

யாருக்கு வலியுறுத்த? 

வேறு யாருக்கும் அல்ல, எனக்குத்தான் Smile

வேறு சிலரும் அச்சொற்களைக் கண்டு கொண்டால் கூடுதல் மகிழ்ச்சி!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Mon Aug 01, 2016 9:42 pm

சொல் 1 : சொல் Smile

சொல், சொற்கள், சொற்றொடர் - இவையெல்லாம் நன்கு வழக்கில் உள்ளவை தான்.

என்றாலும், நாம் அன்றாடம் பயன்படுத்துவது "வார்த்தை" என்ற சொல் தானே?

அதுவும் ஒரு வேளை தமிழ்ச்சொல்லாகவே இருக்கலாம். என்றாலும், எனக்கு அதில் ஐயம் உண்டு. ஏன்?

மலையாளத்தில் "வார்த்த" என்றால் அதன்  பொருள் "செய்தி". அதனால், இது பழந்தமிழ் தானா அல்லது பிற்காலத்தில் வேற்று மொழியிலிருந்து வந்ததோ என்ற ஐயம்.

அழகான "சொல்" இருப்பதால் நான் எழுதும் போதும் பேசும் போதும் முடிந்தவரை இந்தச்சொல்லையே பயன்படுத்த விழைகிறேன் Smile

அதன் நீட்சி தான், "சொற்றொடர்". 

வாக்கியம் என்பதும் தமிழாகவே இருக்கலாம், என்றாலும் எனக்கு ஐயம் இருக்கிறது.  பொதுவாகவே இந்த "க்ய" , "ப்ர" போன்ற  பகுதிகள் சொற்களில் வந்தால் வடமொழிக்கலப்போ என்ற ஐயம் எனக்கு.

அப்படி ஒரு குழப்பமும் இல்லாமல் பயன்படுத்த, "சொல் / சொற்கள், சொற்றொடர்" Smile

(மலையாளத்தில் "சொல்" உண்டு, என்றாலும் அதிகம் பழக்கத்தில் இருப்பது "வாக்கு". 

கன்னடம் & தெலுங்கு மொழிகள் வடமொழியில் இருந்து பத் / பதம் என்று எடுத்துக்கொண்டு விட்டன. இந்தி "சப்த்"  இதோடு நெருங்கியது. 

இப்படிப்பட்ட கலப்பு வேண்டாமென்பதால், "பதம் / எதிர்ப்பதம்" போன்ற சொற்களையும் தமிழில் நான் பயன்படுத்துவதில்லை).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Tue Aug 02, 2016 4:32 pm

சொல் 2 : கிழமை 

என்ன தான் திங்கள் கிழமை, செவ்வாய்க்கிழமை என்று நாள் தோறும் சொன்னாலும், 7 நாட்கள் அடங்கிய தொகுப்பிற்கான சொல் என்று வரும் போது மட்டும் எங்கிருந்தோ "வாரம்" பொத்துக்கொண்டு வந்து விடுகிறது Sad

அதுவும் தமிழ்ச்சொல்லாக இருக்கலாம் - ஆனால் "தனித்தமிழ்ச்சொல்" என்று சொல்ல வழியில்லை. இந்தியில் சொல்லப்படும் "சனிவார்" (சனிக்கிழமை) என்ற சொல்லில் வரும் "வார்" தான் "வாரம்".

அது எதற்கு நமக்கு? அழகான "கிழமை" என்ற சொல் இருக்கும் பொழுது? "நாளும் கிழமையுமாய்" என்று வழக்கத்தில் இருந்தாலும், வாரக்கடைசி / அடுத்த வாரம் என்றெல்லாம் வரும்போது காணாமல் போய் விடுகிறதே?

மலையாளத்தில் அழகாக "ஆழ்ச"  என்ற சிறப்பு ழகரம் உள்ள சொல்லையே இந்த 7 நாள் கூட்டத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். வாரம் அல்ல Wink

அதனால், கிழமை என்று நான் எழுதத்தொடங்கிக் கொஞ்ச நாள் ஆகிவிட்டது, இனிமேல் பேச்சிலும் கிழமை தான் Wink

இந்தக்கூட்டத்தில் நாள், திங்கள், ஆண்டு என்பனவும் எழுத்தில் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன். (குறிப்பாகத் திருக்குறள் இன்பத்தில்). 

பேச்சு வழக்கிலும், தினம், மாசம், வருஷம் எல்லாம் களைந்து இவற்றையே பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை உண்டு Wink

ஆக, இந்தப்பதிப்பில் ஒரு சொல் அல்ல - உண்மையில் நான்கு சொற்கள் Smile

நாள், கிழமை, திங்கள், ஆண்டு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Wed Aug 03, 2016 6:02 pm

சொல் 3 : பயன் 

இதுவும் வழக்கில் உள்ள சொல் தான் - என்றாலும், பேச்சு வழக்கில் அவ்வளவாக இல்லை.

"யூஸ்" பண்ணுறது தான் கூடுதல் பயன்பாட்டில் இருக்கிறது. Embarassed

போதாத குறைக்கு, "உப்யோகம் / ப்ரயோஜனம்"  என்று வடமொழிச்சொற்கள் இதைப்பின்தள்ளி விட்டு முன்னணியில் உள்ளது தெரிந்ததே.  

சரி சரி, உபயோகம், பிரயோசனம் என்று தானே சொல்கிறோம் எனலாம்.  இப்படியெல்லாம் தமிழ்ப்படுத்தி இருந்தாலும் கலப்பு என்றே எனக்குப்படுகிறது. 

இந்தி மொழியில் இந்த உப்யோக் / ப்ரயோஜன்  உள்ளன. வேடிக்கை என்னவென்றால் அங்குள்ளவர்களுக்கு "இஸ்தேமால்" என்ற உருதுச்சொல் தான் கூடுதல் வழக்கில்.  உப்யோக் / ப்ரயோஜன் என்றால் சிலருக்கெல்லாம் புரிவதில்லை  Laughing

நமக்கு ஏன் அந்தக்கவலை? தனித்தமிழ்ச்சொல்லான பயன் (பயன்படுத்து / பயன்பாடு) இருக்கிறதே Smile

இவற்றையே தற்போது தமிழில் எழுதுகையில் பயன்படுத்துகிறேன். பேச்சிலும் பயன்படுத்த முடிவு. 

தொடக்கத்தில் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும்.  போகப்போகப் பழகி விடும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Thu Aug 04, 2016 6:10 pm

சொல் 4 : ஐயம் 

சந்தேகம்,  சந்தேகக்கண், சந்தேக நோய் என்றும் "டவுட்" என்றும் தனித்தமிழ் அல்லாத சொற்களையே நாம் கூடுதல் பயன்படுத்துகிறோம். 

எழுதுவதிலும் கூட, சந்தேகம் தான் முன்னிலையில் நிற்கிறது.

இந்தியில் "ஸந்தேஹ்" உள்ளது என்பதைக் கருத்தில் கொள்வோம். பெரிய அளவில் "ஷக்" என்ற சொல் தான் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், ஸந்தேஹ் தான் பழமையான சொல் என்று கூறுபவர்கள் உண்டு.  

சந்தேகம் இங்கிருந்து வடமொழிக்குச் சென்றிருக்கலாம். என்றாலும், நமக்கே நமக்காகத் தனித்தமிழில் "ஐயம்" என்ற சொல் உண்டல்லவா? தமிழா வடமொழியா / எங்கிருந்து எங்கு சென்றது என்ற ஐயத்தைக் கிளப்பும் சந்தேகம் என்ற சொல்லை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்? 
(கூகிள் மொழிபெயர்ப்பாளர்கள் கூட "டவுட்" என்பதற்கு "சந்தேகம்" தான் முதல் தேர்வாக அளிக்கிறார்கள் Sad ).

என்னைப்பொறுத்த வரை, தமிழில் எழுதும் போது இப்போதெல்லாம் "ஐயம்" தான் பயன்பாடு. 

பேச்சிலும் இதையே கொண்டு வரலாம் என்று முடிவு.

(கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும், பரவாயில்லை Laughing 

"ஒனக்கு ஏன் இப்டி ஐயம்?"

"எதுக்கெடுத்தாலும் ஐயம் - மனநோய் பிடிச்சிருக்கா?" 

"ஐயக்கண் கொண்டு பாக்காதே")

சந்தேகம் போன்ற ஒலியுள்ள "தேஹம்" "தேஹாப்யாஸம்" எல்லாம் பெரிய அளவில் "உடல்" "உடற்பயிற்சி" என்று தமிழ்ப்பொதுவெளியில் மாறிவிட்டன என்பதை இங்கே குறிப்பிட வேண்டி இருக்கிறது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Fri Aug 05, 2016 8:36 pm

சொல் 5 : நூல் 

புக் என்பதைப் "புத்தகம்" என்றும் டெக்ஸ்ட் புக் என்பதைப்  "பாடநூல்" என்றும் கூகிள் சொல்லுவது வேடிக்கை தான்.

நூல் - வழக்கில் உள்ள சொல் தான். ஆனால், அன்றாட வழக்கில் குறைவு. குறிப்பாகப் பேச்சில் இல்லவே இல்லை.
(தைக்க / பட்டம் விட உதவும் நூல் என்ற பயன்பாடு உள்ளது, படிக்க உதவும் நூல் என்ற வழக்கு இல்லை).

புத்தகம் புஸ்தக்-கில் இருந்து வந்ததா இங்கிருந்து போனதா என்பதல்ல இப்போது பேசிக்கொண்டிருப்பதன் நோக்கம். 

அப்படிப்பட்ட ஐயம் உள்ள சொற்களைத் தவிர்த்து விடுவோமே, தனித்தமிழில் அழகுற எழுதியும் / பேசியும் பழகுவோமே என்ற முயற்சி தான்.

கூடவே, தமிழில் எழுதும் போதும் பேசும் போதும் அடிக்கடி வந்துவிடும் ஆங்கிலச்சொற்களையும் குறைக்கும் / தவிர்க்கும் முயற்சி.

அந்த விதத்தில் "நூல்" இனிக்கூடுதல் பயன்படுத்தவும், புத்தகம் / புக் குறைக்கவும் முடிவு Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Mon Aug 08, 2016 4:35 pm

சொல் 6 : வியப்பு 

எழுத்தில் புழக்கத்தில் இந்தச்சொல் இருப்பது தெரிந்ததே. "வியப்பின் எல்லைக்கே சென்றான் - கண்டு வியந்தான்" என்பதெல்லாம் வரலாற்றுக்கதைகளில் மட்டுமல்ல, தற்காலச்செய்திகளில் கூட நாம் அவ்வப்போது படிப்பது தான்.

ஆனால், பேச்சில்?  "நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்" என்றோ, "எனக்கு ரொம்ப ஆச்சர்யம்" என்றோ வேற்று மொழிச்சொற்கள் மட்டுமே பயன்படுத்துவது தமிழர்களின் தனிச்சிறப்பு Smile 
(ஒவ்வொரு சொல்லுக்கும் "இது தமிழா வடமொழியா எது முதல் என்று தெரியாது" என்று சொல்லுவதை இந்தப்பதிவோடு நிறுத்திக்கொள்ள முடிவு - ஆஷ்ச்சர்யம் என்று மலையாளத்தில் கேட்ட நாள் முதல் இது கலப்பு என்று முடிவு செய்து விட்டேன்).

"எனக்கு ரொம்ப வியப்பு / வியப்பாயிருச்சு"

"உனக்கு ஒரு வியப்பு வச்சிருக்கேன் - வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்"

"நேத்து எங்க வீட்டுக்காரி ஒரு வியப்புப்பரிசு கொடுத்தா" Laughing 

சில இடங்களில், வியப்பு என்பதை விட ஒரு வேளை "திகைப்பு" பொருத்தமாக இருக்கலாம். 

ஆக, அந்தந்த சூழ்நிலைக்கேற்ப வியப்போ திகைப்போ அடைய முடிவு. 
(ஆஷ்ச்சர்யம் / சர்ப்ரைஸ் எல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கலாம் Smile )

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Mon Aug 15, 2016 9:26 pm

சொல் 7 : அச்சம்

எழுதும் போது பரவலாக இந்தச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது என்பது உண்மை தான். (அச்சமில்லை அச்சமில்லை / அச்சம் என்பது மடமை / அஞ்சி அஞ்சிச்சாவார் என்று திரைப்படங்கள் / பாடல்களிலும் காண முடியும்).

ஆனால், பேச்சில்? எப்போதும் பயன்படுத்துவது "பயம்" தானே?

பயம் / பயங்கரம் - இவையெல்லாம் இந்தி மொழியில் பரவலாகப் பயனில் இருப்பதால், "தனித்தமிழ்" என்று என்னால் மனதளவில் ஒத்துக்கொள்ள இயலவில்லை.

இதனாலேயே, எழுத்தில் "பயமில்லாமல்" எழுதப்பழகி விட்டேன். (அச்சம் / அஞ்சி என்பவையே அங்கு நிறைந்திருக்கும்).

பேச்சில் பயன்படுத்தினால் என்ன என்று ஒரு எண்ணம் Laughing

இதற்கு முன் நாம் கண்ட சொற்கள் போலவே இங்கும் தொடக்கத்தில் வேடிக்கையாக இருந்தாலும் "மகிழ்ச்சி" என்பது தற்போது பலருக்கும் பழகிவிட்டது போல அச்சமும் அன்றாடமாகிப்போக வழியுண்டு Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Thu Aug 25, 2016 8:01 pm

பயத்துக்கு அச்சம் சரி, பயந்தாங்குளிக்கு என்ன செய்வது?

"அஞ்சுபவன்" அவ்வளவு எளிதாக இல்லையே? குறிப்பாகப் பேச்சு வழக்கில் நல்ல மாற்றாக இல்லை என்று தோன்றுகிறது.

இன்று படித்த குறளில் உள்ளதும், மலையாளத்தில் அன்றாடம் வழங்குவதுமான சொல் மிகப்பொருத்தம் Smile

பேடி Smile

வேண்டுமானால், பேடிப்பயல் / பேடிப்புள்ள என்றெல்லாம் சேர்த்துக்கலாம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  app_engine Thu Aug 25, 2016 8:17 pm

முன்னமே "கிழமை" என்ற சொல்லில் "நாள்" என்பதையும் உள்ளடக்கி இருந்தோம்.

அதன் வேறு சில வடிவங்களையும் சரியாகப் பயன்படுத்தலாம்.

நாள் தோறும் (அல்லது அன்றாடம்)  என்பது தான் அழகு Smile

தினம் / தினமும் / தினந்தினம் என்ற பயன்பாடுகளை நான் கொஞ்ச நாளாகவே தவிர்த்து வருகிறேன். 

அதாவது, தமிழில் எழுதும் போதும் பேசும் போதும். மலையாளத்தில் வேறு வழியில்லை - தைனந்தினம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. 

வேடிக்கை என்னவென்றால், "தின்" பயன்படுத்தும் இந்தி மொழி, "ரோஜானா" என்று உருதுச்சொல்லையே இப்போது விரும்புகிறது.

தினகரன் / தினத்தந்தி / தினமலர் / தினமணி - எல்லாரையும் பேர் மாற்றச் சொல்வோமா? Smile

"டெய்லி" என்பதையும் தவிர்த்து விட்டு - எல்லா நாளும், ஒவ்வொரு நாளும், நாள்தோறும், அன்றாடம் என்றெல்லாம் சொன்னால் அழகு என்று கருதுகிறேன் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்  Empty Re: கலப்பில்லாமல் எழுதவும் பேசவும் சில தமிழ்ச்சொற்கள்

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum