Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Mon May 05, 2014 5:56 am

நாளி கேரம் or நாரி(யல்) கேளம்? Spoonerism? Laughing

சேரளம் - கேரளம்? அல்லது கேரம் (தேங்காய்) - கேரளம்?

சே, 'கே'யாக ரசவாதம் செய்யுமா?

சேட்டன் எங்கிருந்து வந்தான்? ஜேஷ்ட(புத்திர)ன் என்பதில் இருந்தா கேட்டன் என்பதிலிருந்தா?

'அம்' விகுதி வடக்கில் இருந்து வந்ததா இல்லையா?

வாருங்கள், பேசலாம் :-)


Last edited by app_engine on Tue Aug 25, 2020 9:09 pm; edited 1 time in total

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Mon May 05, 2014 6:33 pm

மேற்கண்ட பதிவில் உள்ள சில ட்விட்டரில் பேசப்பட்டவை!

இப்படி ஒரு இழை தொடங்க ஊக்குவித்த சில கேள்விகள் அவையெல்லாம் Smile

பேசத்தொடங்குமுன், சில டிஸ்க்ளைமர்-கள் Smile

1. ட்விட்டரில் சொன்னது போல், நான் வெறும் மொழி / வரலாற்று ஆர்வலன், வல்லுனன் அல்ல. ஆதலால், விளக்கங்கள் ஏற்கவும், கருத்துகள் மாற்றவும் 'எப்போதும் தயார்' நிலையில் Smile

2. பல தலைமுறைகளாகத் தமிழ் மட்டுமே பேசிவரும் பெற்றோர் வழி. (உறவினர் பலரும் தமிழ் மட்டுமே அறிவர், படித்தவர்கள் மட்டும் ஓரளவு ஆங்கிலமும். வேறு மொழி உறவில்லை). பள்ளியிலும் 'கல்தோன்றி...' பயிற்றுவிக்கப்பட்டதால், பத்தாவது வரை தமிழ் வெறியன். (மேலும், 12ஆவது வரை தமிழ் வழிக்கல்வி).

3. விவரம் தெரிந்த பின் முதன் முறை தமிழ்நாட்டுக்கு வெளியிலான பயணம் 10ஆவது படிக்கும் போது (மும்பை). புத்தகங்களில் படிக்கும் வெளியுலகம் மற்றும் உண்மையான வெளியுலகம் தம்மிலுள்ள வேறுபாடு காண உதவியது. ("அவங்களும் நம்ம மாதிரி மனுஷங்க தான்!")

4. முனைவர் ரா.பி.சேதுப்பிள்ளையின் 'இலக்கிய இன்பம்' நூல், 12ஆம் வகுப்புக்காலத்தில் படித்தது, மேலும் கொஞ்சம் மாற்றுச்சிந்தனைகள் வரக்காரணமானது. (லக்ஷியம் தான் இலக்கியம் / லக்ஷணம் தான் இலக்கணம் இத்யாதி)

5. மண்டலப்பொறியியல் கல்லூரியில் வெளி மாநிலத்தவர் பழக்கம் மேலும் கொஞ்சம் விரிவான பார்வைக்கு வழிவகுத்தது (நாம் மட்டுமல்ல உலகம், நமது மட்டுமல்ல உன்னத மொழி).

6. பல வருடங்கள் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கை "முன் தோன்றி மூத்த குடிமக்கள்" போன்ற மிகைப்படுத்தல்களை அப்படியே நம்பாமல், சமநிலையான விதத்தில் காண / சிந்திக்க உதவியது / உதவுகிறது.

7. பெங்களூரில் வசிக்கும் இன்னொரு மறத்தமிழர் இவ்வித சமநிலைச்சிந்தனைக்குப் பெரிய அளவில் என்னை ஊக்குவித்தவர். ("பாருங்க, இந்த "ப்ரகாசம்" மாதிரி ஒற்றெழுத்தில் தொடங்கும் சொற்களெல்லாம் வேற்று மொழியில் இருந்து வந்திருக்க வாய்ப்புண்டு. தமிழில் இருந்து அங்கே போனது என்ற வறட்டுப்பிடிவாதம்  வேண்டியதில்லை")

இந்த அளவில் என்னைப்புரிந்து கொண்டு கருத்துகளை விலையிருத்தினால் மகிழ்வேன்.
 
மற்றபடி தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம் உட்பட எந்த மொழிக்கும் நான் எதிர்ப்பாளன் அல்லன் Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Mon May 05, 2014 7:01 pm

Another digression:

BTW, I do believe that "sol" came into existence BEFORE "kal" SmileWink

However, flesh & blood humans could come ONLY after "kal" (aka matter / material).

That is in line with my belief about how matter came into existence (reverse process of E=MC^2) Smile

Our point of discussion is only about which sol came first, Thamizhchchol or vadamozhichchol Wink

End digression Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Tue May 06, 2014 6:22 pm

சே எப்படி கே ஆகும்?

சேர நாடு தான் புவியியல் அடிப்படையில் இப்போதுள்ள மலை நாடு / மலையாள நாடு என்பது நாமெல்லாரும் பொதுவாக ஒத்துக்கொள்ளும் ஒன்று.

("அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று தர்க்கிப்பவர்கள் இருந்தாலும் நல்வரவு!)

அந்த நாட்டின் இன்றைய பேரோ கேரளம்.

மலைநாடு / சேர நாடு எப்படி ஐயா கேரளம் ஆனது என்ற கேள்விக்கு இரு விடைகள்.

ஒன்று -

சேரளம் (சேரர் இடம்) கேரளமாகத் திரிந்தது. ஷெட்யுல் / ஸ்கெட்யுல் ரெண்டும் schedule-லிருந்து வருவதில்லையா? அது மாதிரி. C-யும் K-யும் மாதிரி. ஏன் திரியக்கூடாது?

சேட்டன் கூடத்தான் கேட்டன் என்பதிலிருந்து வந்தது. (ஜேஷ்டன் எல்லாம் கிடையாது)

மௌரிய காலத்துக் கல்வெட்டு கி.மு.3 ஆம் நூற்றாண்டிலேயே கேரள புத்திரர் என்று சொல்லி இருப்பதால், அப்போதே அந்தப்பெயர் வந்தாகி விட்டது.

அது சேரம் = கேரம் என நிறுவுகிறது!
(அது எப்படின்னு கேள்வி கேக்காதீங்க - சமஸ்க்ருதம்னா கேள்வி கேப்பீங்களா? Smile
தமிழுக்கு மட்டும் என்ன கேள்வி வேண்டிக்கெடக்கு?)

மற்றது -

நாளிகேரம் என்பது தேங்காயைக் குறிக்க மலையாளத்தில் உள்ள சொல். கேரம் என்பது வடமொழியில் தேங்காய் என்ற பொருளில் உள்ளது.

வடமொழியை (மற்றும் தேங்காயை) நேசிக்கும் மலைநாட்டு மக்கள்  (சிலர் இவை இரண்டையும் தெய்வீகமாகவே ஆராதிப்பதும் உண்டு) தங்கள் நாட்டை அந்தப்பெயரில் (கேரம்+அளம்) என அழைக்கிறார்கள்.

இதற்கு எதிர்க்கேள்வி "நாரியல் / நாரி கேளம்" தானே தேங்காய்? அது எப்படி நாளி கேரம் ஆச்சு?
(ஏன், தேங்காயை நாரி, கேளம் , கேரம் என்றெல்லாம் பல பெயரில் சொல்லக்கூடாதா?)

ஆக மொத்தம், விஞ்சி நிற்கும் கேள்வி -

"கேரம்" தமிழா (சேரன் வழி)
அல்லது வடமொழியா (மனம், ஹ்ருதயம், சாந்தம் மாதிரி)?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Tue May 06, 2014 6:51 pm

From the Malayala wiki  :


പേരിനുപിന്നിൽ

കേരളം എന്ന പേരിന്റെ ഉത്ഭവത്തെപ്പറ്റി വിഭിന്ന അഭിപ്രായങ്ങൾ ഉണ്ട്.

കേരവൃക്ഷങ്ങൾ നിറഞ്ഞ സ്ഥലം എന്ന അർത്ഥത്തിൽ കേരളം എന്ന പേര് ഉണ്ടായി എന്ന അഭിപ്രായമാണ് ഏറ്റവും പ്രബലം.കേരം എന്ന പദവും സ്ഥലം എന്നർഥം വരുന്ന അളം എന്ന പദവും ചേർന്നാണ് കേരളം എന്ന പേര് ഉണ്ടായത് എന്ന് വിശ്വസിക്കപ്പെടുന്നു.

മറ്റൊരു അഭിപ്രായം അറബി സഞ്ചാരികളാണ് പേരിന്റെ ഉല്പത്തിക്കു പിന്നിൽ എന്നാണ്. കേരളത്തിന്റെ പ്രകൃതി സൗന്ദര്യവും സമ്പത്സമൃദ്ധിയും കണ്ട് അവർ അല്ലാഹു അനുഗ്രഹിച്ച നാട് എന്നർത്ഥത്തിൽ ഖൈറുള്ള എന്ന് വിളിച്ചിരുന്നത്രെ. അത് ലോപിച്ചാണ് കേരളം എന്ന പേര് ഉണ്ടായതെന്നാണ് മറ്റൊരു വിശ്വാസം. മലബാർ എന്ന പേർ നൽകിയത് അറബികൾ ആണെന്നതും ഇതിന് ശക്തി പകരാൻ ചൂണ്ടിക്കാണിക്കപ്പെടുന്നു.

‘ചേരളം’ എന്ന പദത്തിൽ നിന്ന് ഉത്ഭവിച്ചതാണെന്നാണ് മറ്റൊരു വാദം, ചേർ, അഥവാ ചേർന്ത എന്നതിന് ചേർന്ന എന്നാണ് അർത്ഥം. കടൽ മാറി കരകൾ കൂടിച്ചേർന്ന എന്ന അർത്ഥത്തിൽ ആണ് ഇത് ഉത്ഭവിച്ചത് എന്നാണാ വാദഗതിക്കാർ കരുതുന്നത്. സംഘകാലത്തിലെ നെയ്തൽ തിണൈ എന്ന ഭൂപ്രദേശത്തിൽ വരുന്ന ഇവിടം കടൽ ചേരുന്ന ഇടം എന്നർത്ഥത്തിൽ ചേർ എന്ന് വിളിച്ചിരുന്നു. ചേർ+അളം എന്നതിന് സമുദ്രം എന്ന അർത്ഥവുമുണ്ട്. കടലോരം എന്ന സൂചനയാണ് ചേരളം തരുന്നത്. ചേരലർ കടലോരത്തിന്റെ അധിപരുമായി.

ചേര രാജാക്കന്മാരിൽ നിന്നുമാകാം പേർ വന്നതെന്നാണ് മറ്റൊരു അഭിപ്രായം. ഇവരുടെ പേർ തന്നെ ഥേര എന്ന പാലി വാക്കിൽ നിന്നുത്ഭവിച്ചതാണ് എന്നാണ് മറ്റൊരു മതം. അതിന് ബുദ്ധമതവുമായി ബന്ധം കാണുന്നു. ഥേരൻ എന്ന വാക്കിന് വലിയേട്ടൻ എന്നാണ് വാച്യാർത്ഥം. ബുദ്ധമതത്തിലെ ഥേരവാദമതത്തിൽപെട്ടവരായിരുന്നു ചേര രാജാക്കന്മാർ എന്ന് കരുതുന്നു. ഥേര എന്ന വാക്ക് പാലിയിൽ നിന്ന് താലവ്യവത്കരണം എന്ന സ്വനനയം പ്രകാരം ചേരൻ എന്നായതാണെന്നും, സ്ഥലം എന്ന അർത്ഥത്തിലുള്ള പാലി പദമായ തളം, ആദിലോപം പ്രാപിച്ച് അളം ആയതാണെന്നും ഇക്കൂട്ടർ വിശ്വസിക്കുന്നു. കേരളം ഒരു കാലത്ത് ബുദ്ധമതക്കാരുടെ പ്രബലകേന്ദ്രമായിരുന്നു എന്ന വിശ്വാസം ബലപ്പെടുന്നതാണീ വാദം. ചേര എന്നതിന്റെ കന്നട ഉച്ചാരണം കേര എന്നാണ്. ഇതായിരിക്കാം കേരളം ആയതെന്നാണ് ഹെർമൻ ഗുണ്ടർട്ട് വാദിക്കുന്നത്.

വീരകേരളന്റെ നാടായതിനാൽ കേരളം എന്ന പേർ വന്നു എന്നും ഒരു വിശ്വാസം ഉണ്ട്.

മലഞ്ചെരിവ് എന്നർത്ഥമുള്ള ചാരൽ എന്ന തമിഴ് പദത്തിൽ നിന്നാണ് ചേരൽ ഉണ്ടായതെന്നും അതാണ് കേരളമായതെന്നും മറ്റൊരു വാദം നിലനിൽക്കുന്നു.

ചേരം (കേരളം) എന്ന വാക്ക് നാഗം (പാമ്പ്) എന്നതിന്റെ തൽസമമാണെന്ന് എൽ.എ. അനന്തകൃഷ്ണയ്യർ സൂചിപ്പിക്കുന്നു.[19] കേരളത്തിലെ ദ്രാവിഡരുടെ നാഗാരാധന കാരണമായിരിക്കണം ഒരു പക്ഷെ ഈ പേരു വരാനുള്ള കാരണം.

കേരം എന്നത് ചേരം എന്നതിന്റെ കർണ്ണാടകോച്ചാരണമാണെന്ന് ഡോക്ടർ ഗുണ്ടർട്ട് അഭിപ്രായപ്പെടുന്നു. ഗോകർണ്ണത്തിനും, കന്യാകുമാരിക്കും ഇടയിലുള്ള പ്രദേശത്തിന് ആദ്യകാലത്തുണ്ടായിരുന്ന ചേരം എന്ന പേർ കേരളം ആയി മാറിയതാണെന്ന് അദ്ദേഹം സമർത്ഥിക്കുന്നു.

From the Thamizh wiki :

பெயர் காரணம்

கேரளா என்ற வார்த்தை தமிழ் வார்த்தையான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று. இன்றைய கேரளா வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில் இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Wed May 07, 2014 8:11 pm

The original twitter thread that started off the discussion:
https://twitter.com/kryes/status/462296515072262144

Of course, there are a number of things one learns when such a discussion happens (though some misunderstandings - such as considering me as some kind of vadamozhi-promoter Laughing , ire etc happens) Smile

There are additional tweets in this thread wherein one can LEARN some info on vadamozhi :
https://twitter.com/kryes/status/463813855940845568

For e.g. it is 'nArikEl' (नारिकेल) for coconut in "spoken sanskrit" (as per a DE dictionary, I thought it's not spoken anywhere except temples anymore...and has been replaced by Hindi and a host of languages) :
http://m.spokensanskrit.de/index.php?tinput=coconut&trans=Translate

It was quite interesting for me to find out that the 7th century Thamizh litt. 'dEvAram' used the Keralite term 'nALi kEram' for coconut (ThirugnAna Sambandhar).
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1066
(Since this was primarily Saivite devotional litt, there are tons of vadamozhi words - albeit in their Thamizh form - used)

End of the day, though scientific analysis and such terms are being tossed about (and naturally the westerner references are being cited), due to the nature of time lag (we are at a point in history 100s of years later than the formation / transformation of these words), multiple theories are bound to be seen around.

Though some in twitter thought I was unnecessarily ridiculing Thamizh (for the 'kal thOnRi' reference above, which was not even making fun of the uyarvu naviRchi and definitely not the language itself) and got angry, throwing challenges at me to show Sanskrit references of lakshyam, lakshanam, kEram etc (for which I am not batting for, though biased in favor Laughing), I can only arrive at following conclusions that are reasonable IMHO:

1. Thamizh enthusiasts strongly believe chEraLam became kEraLam and this is supported by some western scholars as well. (Refer the Malayalam wiki above). Interestingly, "tea innum varalai" for how Ch became K. The Malayalam wiki states Karnataka pronunication as the link Smile

2.  Malayali popular opinion, OTOH, favours the name coming from kEram (whose origin cannot be google established, except that dEvAram ref.) That of (nAri)kELam becoming (nALi)kEram is as tenable as the claim of Ch-K, by "equal opportunity" Laughing

3. Malayalees themselves agree to the prevalence of multiple opinions on the origin of the name, including from chEraLam Smile

Yes, it was unfunny to get shouted at, esp. for errors uncommitted (use of ஏகதேசம், அறம் இல்லாமல் எள்ளல் etc which were not by me), it also underlined the sensitive nature of such topics and how some can be instantly triggered Smile

vAzhga!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Thu May 08, 2014 10:50 pm

Misdirected anger :
http://madhavipanthal.blogspot.com/2014/05/kalthondri.html?m=1

The blog post's anger is directed at me, claiming me supposedly doing the two following things :

a) எள்ளல் of தமிழ் (which is a serious charge - well, show me where I've done in this thread! That is not the same as எள்ளல் of false pride & stage mAr thattals - that I definitely did; even kids reading this thread can get it - I'm surprised such a scholarly person is blind to this and gets into battle mode with me Laughing )

b) Support for certain legends (The blogs says I'm one of "கப்சா"லயே ஊறினவங்க, quoting mahAbali kind of stories - for which I've never batted for Laughing  Show me where I've claimed such things actually happened - பச்சையாப்  பொய் சொல்லப்டாது! )

That way, it's a totally misdirected post Embarassed

Accordingly, I don't consider it is anything against me, in essence Smile

Also, I'm posting the link here, for the nice explanation of the original context of "கல் தோன்றி, மண் தோன்றா" phrase (i.e. as it occurs in the seyyuL) :


பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

கல் = மலை என்ற பொருளும் உண்டு!
மண் = வயல் என்ற பொருளும் உண்டு!

முல்லை/குறிஞ்சி தோன்றி,
மருதம் தோன்றாக் காலத்தே..
கையில் வேல்-வில்-வாளோடு, முன் இருந்த = ஆதி குடிகள்!

the clap

BTW, my "making-fun-of-fanatics-who-use-this-phrase-OUT-OF-CONTEXT" is still valid!

Since I'm not one of such mAr-thattal fellows, I don't feel shy reading this blog post at all! Laughing

Neither do I belong to the group that eulogizes the referred purANams!
(Once again, I CHALLENGE, SHOW ME WHERE I'VE EVER DONE THIS... என்னைப்பற்றியெல்லாம்  பொய் பரப்புமளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? Laughing  )

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Fri May 09, 2014 12:07 am

Another thing...

இது முந்தா நேத்து:
Look at what the same blogger posted a couple of days back:
https://twitter.com/kryes/status/463742836924751872

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Uyarvu10

இது இன்னிக்கு:
http://madhavipanthal.blogspot.com/2014/05/kalthondri.html?m=1

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Kurinj10

I'm glad that I had been a karuvi in making someone DO RESEARCH and do a nice blog post within a couple of days - even adjusting his viewpoint (from "uyarvu naviRchi" to "kuRinji-marudham") Wink

Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Fri May 09, 2014 4:20 pm

P_R's (@dagalti) research & informative twitlonger on the sE-K :
http://www.twitlonger.com/show/n_1s1mede


So one more thing to add to the list of plausible theories: it may have been sE, but misread as kE, because it was being interpreted in the 19th-20th century.

I tried looking for an image of the 2nd edict online but couldn’t find it.

For the sEraLam-kEraLam (or kEram / kELam to kEraLam Wink ), this Ashoka edict may be an interesting archeological input...

If anyone has access to the photograph of that (i.e. seen the original and taken a pic OR have access to a book that has the photo and can scan/ load OR knows a link that actually has the image), please post Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Sun May 11, 2014 7:48 am

P_R sir withdraws the "misreading" theory


@r_inba ok hereby withdrawing the 'misreading' theory. Here it is in brahmi pic.twitter.com/KEIR6Povla

So, the "chE / sE to kE" is still open to all theories Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Sun May 11, 2014 8:00 am

ThiruvALar "kryes" posts a twitlonger addressing me

Any kid who reads this forum (and the tfmpage / hub where I had >10000 posts) & this whole thread can understand the following:

1. This guy's anger at me is totally misguided / unnecessary & based on total ignorance about who I am and what I stand for.

2. Accordingly, this twitlonger doesn't need any more replying.

3. This forum (IR and BEYOND) is OPEN to discussions and anyone can post here after a free registration, though posts are moderated. In any case, I'm neither the owner nor the admin here!

4. It's not a great practice to do personal attacks when it is the "karuththu" that is to be really countered (regardless of whatever tone one reads it, eLLal kiLLal and otherwise). If someone resorts to name-calling and not addressing the main questions, regardless of their PhD knowledge, such behaviour only manifests childishness and immaturity. Definitely I don't need bonafide from such people about my love for Thamizh!

Adios!!

Let's focus further on mozhi discussions and enlightenment and not kuzhAyadi stuff!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Mon May 19, 2014 5:29 pm

"எரி" ஏரி - சூடான "சூடான்" - எரிந்து சிவந்த "எரித்ரியா" Smile
=============================================

I mentioned in my opening post of this thread, about a friend / former co-worker :

a_e wrote:
7. பெங்களூரில் வசிக்கும் இன்னொரு மறத்தமிழர் இவ்வித சமநிலைச்சிந்தனைக்குப் பெரிய அளவில் என்னை ஊக்குவித்தவர். ("பாருங்க, இந்த "ப்ரகாசம்" மாதிரி ஒற்றெழுத்தில் தொடங்கும் சொற்களெல்லாம் வேற்று மொழியில் இருந்து வந்திருக்க வாய்ப்புண்டு. தமிழில் இருந்து அங்கே போனது என்ற வறட்டுப்பிடிவாதம்  வேண்டியதில்லை")

He happened to visit the metro-Detroit area this week (his 8th grader child was part of a team that took part in an international "robotic design" competition in a MI university and the children won the top prize for best presentation while some Korean teams won for the actual design / model / demo etc).

I had the privilege of driving him & child to Niagara falls and the drive route is going around Lake Erie.

BTW, we're meeting after many years and this language thingy was far from my mind but somehow during the drive, the topic came up Smile

We casually talked about the pronunciation of the name "Erie" and I said the local pronunciation is எரி...and added எரி (Erie) ஏரி (Thamizh for Lake) Smile

That sparked off a many-minutes-long speech by him while I was driving, about a theory he happened to read on the net (with youtubes, demos etc and what not, he said he'll try to send me the links).

Theory is very simple - Thamizh was the ORIGINAL language of the earth, before others came into existence Smile

While he agreed that some of the claims by these people are far-fetched, like the "Eli Eli" cry of Jesus while dying on stake was Thamizh, he was seriously agreeing to a number of other examples given by the research team that conducted a lot of studies with natives in some east African countries.

He said many examples of conversations of villagers in African countries with a lot of EXACT Thamizh words for the same things...However, the two that were really interesting to me were the country names that I've kept on the title of this post...

சூடான் சூடாத்தானே இருக்கு?

எரித்ரியா (அதன் பொருள் சிவப்பு என்று விக்கிப்பீடியா சொல்கிறது), "எரியும்" நெருப்பின் நிறத்திலிருந்து வந்திருப்பது இயல்பு தானே Smile

If someone visiting this forum knew about this research, please post the links...otherwise, I'll wait for him to send me some Wink

(BTW, trivia - (எரி) ஏரி நிரம்பி வழியும் தண்ணீர் தான் நயாகரா நீர்வீழ்ச்சி...)

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Sun Oct 11, 2015 6:24 am

Some similarity between indhi "ka" (क) and Thamizh "ka" (க) Smile

I was teaching this letter to a couple of kids on black board and that's when this graphic similarity appeared to my eyes Wink

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Ka_ka10

Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Tue Aug 25, 2020 8:37 pm

ஞாயிறு போற்றுதும், திங்களைப்போற்றுதும், மாமழை போற்றுதும். இவையல்லாமல் "யானோ அரசன், யானே கள்வன்" - இவற்றுக்கு அப்பால் எனக்கு இளங்கோ அடிகள் தெரியாது. சிலம்பு கதை வடிவில் கேட்டது மட்டுமே.

அதனால் அறியாமையினால் தோன்றிய ஒரு சிறு கேள்வி.  விடை கிடைக்குமா என்று தமிழறிஞர்களைக் கேட்டுப்பார்ப்போம்.

- அபலைப்பெண் எளிதில் சென்று காணத்தக்கவன்
- குற்றம் உணர்த்தியவுடனே ஒத்துக்கொண்டு உயிர்விடும் அளவுக்கு நீதிமான் -

இப்படித்தோற்றமளிக்கும் (அல்லது கட்டியமைக்கப்பட்டிருக்கும்) பாண்டிய மன்னன், வெறும் ஒரே ஒரு களவுக்குற்றத்துக்காக ஒருவனைக் கொல்லும் அளவுக்குக் கொடுங்கோலனாகக் காட்டப்படுவது முரண் இல்லையா?

வேறு சொற்களில் கேட்டால், "சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் வெறும் களவுக்கெல்லாம் ஆட்களைக் கொன்றுபோடும் அளவுக்குக் கொடுங்கோல் தான் நடந்ததா? அங்கு ஆண்ட மன்னர்கள் அவ்வளவு கொடியவர்களா? இது தான் தமிழ் மரபா? இளங்கோவடிகள் இந்தக்கதை வழியாக என்ன அரசியல் செய்ய முயன்றார்?"

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Sat Aug 29, 2020 12:40 am

மேற்குறித்த என் கேள்வியை யாரும் (ட்விட்டர்லயும்) கண்டு கொள்ளவில்லை.

"சிலப்பதிகாரம் வெறும் ஒரு மசாலாப்படம் - அதில் லாஜிக் எல்லாம் பார்க்காதே" என்று பொருளா?  

நான் கூட அது அன்றைய நாளின் தமிழர் பண்பாடு பழக்கவழக்கங்கள் குறித்தெல்லாம் நிறைய விவரங்கள் கொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

அதை இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டுமா இல்லையான்னு தெரியலையே....ஒரே ஒரு திருட்டுக்கெல்லாம் (அதுவும் உறுதி செய்யப்படாத ஒன்று) ஆட்களைக் கொன்று போடும் காட்டுமிராண்டிகளாக மதுரையையும் பாண்டியர்களையும் காட்டுகின்ற மூன்றாந்தர அரசியல் நூல் தானா அது?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Wed Sep 02, 2020 6:29 pm

ட்விட்டரில் இந்தக்கேள்வியை இட்டதற்கு வலை நண்பர்கள் "அரசர்கள் அந்தக்காலத்தில் அப்படியெல்லாம் கொடுமையாகத்தான் - சொல்லப்போனால் இன்னமும் மோசமாகவே இருந்திருப்பார்கள்" என்றும், "அது ஒரு சாதாரணத்திருட்டு அல்ல, ராணியின் சிலம்பு அல்லவா?" என்றும் எதிர் கருத்துக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

முன்னமே சொன்னது போன்றே நான் சிலப்பதிகாரம் படித்ததில்லை. மற்றபடி அந்தக்கதை முழுதும் நன்றாகவே தெரியும்.

"அரசர்கள் அப்படித்தான் இருந்தார்கள்" என்று சொல்லி எளிதில் கடக்க முடிவதில்லை. ஏனென்றால், இதே மன்னன் கவரிமான் ஸ்டைலில் ஒரு கைம்பெண் தவறைச் சுட்டியவுடன் இறந்து போகும் நீதிமானாகவும் காட்டப்படுகிறான். இப்படி "இரு முரண்பட்ட பேர்வழிகளாக அவன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது எப்படி?" என்பது தான் என் முதல் கேள்வியே Smile Multiple personality / split personality syndrome? Wink

"ராணியின் சிலம்பு சாதாரணத்திருட்டு அல்ல" என்று பார்த்தாலும் குழப்பம் வருகிறது.

தென் தமிழ் நாட்டில் கொடுங்கோல் / காட்டுமிராண்டி அரசர்கள் தான் இருந்தார்கள் என்பது போன்ற ஒரு காட்சியை அது கொடுக்கிறது ("என் மனைவி சிலம்பை நீ திருடினாயா, உனக்கு மரண தண்டனை ") .

பொதுவாக கொலைத்தண்டனை என்பது கருவூலத் திருட்டுக்கெல்லாம் கொடுக்கப்பட்டதாக நாம் அடிக்கடி படிப்பதில்லை. (சிறையில் இடுவார்கள் / பலமடங்கு திருப்பித்தரச் சொல்லுவார்கள் - இப்படித்தான் உலகமுழுவதும் உள்ள கதைகளில் வருகின்றன.).

கொடுங்கோலர்கள் மட்டுமே தொட்டதுக்கும் தொடைச்சதுக்கும் கொல்லுவார்கள் - ஆனால் இங்கோ "மானம் வரின் உயிர் நீப்பான்" என்று தோன்றும் - மற்றபடி நீதியான - பாண்டிய மன்னன் அவ்வாறு கொல்வது முரணாகத் தோன்றுகிறது. 

சிறையில் இட்டிருப்பதாகச் சொல்லியிருந்தால் இவ்வளவு "dramatic effect " இருக்காது என்பதால் கதாசிரியர் அப்படி முடிவெடுத்திருக்கலாம்.

மட்டுமல்ல, "ஒரு உயிருக்கு ரெண்டு உயிர்" பதிலுக்கு பலியான பின்னரும் கண்ணகி சினம் தீராமல் நகரையே எரிப்பது என்பது அந்த நகரத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்று காட்டுவதற்கே என்றும் தோன்றுகிறது. More drama. 

கண்டிப்பாக காப்பியத்தின் இந்தப்பகுதி சேர - பாண்டியர் இடையில் இருந்த பகையின் வெளிக்காட்டாக இருக்கலாம். கண்ணகி கோயில் சேர நாட்டில் கட்டப்பட இது ஒரு காரணமாக இருக்கலாம். (இளங்கோ சேர மன்னனின் தம்பி தானே? )

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  app_engine Mon Oct 02, 2023 3:30 pm

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை F7bn_NfWIAAW38H?format=jpg&name=small

I've tweeted today the above picture and the following messages : 

ஆங்கில "L" மற்றும் 'N" எழுத்துக்களை ஒத்த ஒலிகளுக்கு இந்திய மொழிகளில் கூடுதல் எழுத்துக்கள் உள்ளது மொழிவேடிக்கை.

L - இது போல ஒலிக்கும் மூன்று எழுத்துக்கள் தமிழ் / மலையாளத்தில் உண்டு. (ல, ள , ழ / ല , ള , ഴ )

இந்தியில் ஒரு ल மட்டும் தான். மராத்தியில் ரெண்டு (ल , ळ ) உண்டு :-)N போல ஒலிக்கும் மூன்று எழுத்துக்கள் தமிழில் மட்டுமே. (ந, ன , ண).

பிற இந்திய மொழிகளில் எனக்குத்தெரிந்த வரை 2 தான் :-)

மலையாளத்தில் ന & ണ மட்டும் தான் (இந்தி / மராத்தியிலும் அப்படியே न & ण ).

தமிழ்நாடு என்பதை மலையாளத்தில் തമിഴ്‌നാട് (தமிழ்னாடு) என்றே எழுதுகிறார்கள்.

பாலக்காட்டுப் பகுதியில் பிறந்த மெல்லிசை மன்னர் பெயர் அதனால் தானோ என்னமோ "விஸ்வநாதன்" என்று மட்டுமல்ல "விஸ்வனாதன்" என்றும் சில நேரங்களில் எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி, இப்போ படம் என்ன என்று கண்டுபிடிங்க Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை Empty Re: தமிழ் மொழி / மரபு குறித்த ஐயங்கள் தீர்க்கும் இழை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum