Mysskin's Onaayum aattukuttiyum
3 posters
Page 1 of 1
Mysskin's Onaayum aattukuttiyum
This film deserves a separate thread. Here is my view on this magnificient movie.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ஒரு பார்வை.
வெகு சில இயக்குனர்களே தேர்ந்தெடுத்த திரைக்கதை வடிவத்தை (ஜானர்) சரியாகக்கையாளக்கூடியவர்கள். அதிலும் மிகச்சிலரே அந்த வடிவத்தை ஆழப்படுத்தவோ மேம்படுத்தவோ கூடியவர்கள். உலகம் முழுவதும் அப்படி இருக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக மிஷ்கின் இந்தப்படத்தின் மூலம் இடம் பெற்றுவிட்டார். ஒரு இரவில் நடக்கும் ஓட்டம் என்னும் திரில்லர் திரைக்கதை வடிவத்தில் புனித விவிலியம் மற்றும் பெளத்த தத்துவங்களையும் படிமங்களையும் மிக நுணுக்கமாக சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ளார். உலக சினிமாக்களைப்புரிதலின்றி பார்த்துவிட்டு அது போலில்லை இதுபோலில்லை என்று பிதற்றல் விமரிசனங்கள் எழுதும் மொண்ணைகளுக்கு சற்றே எதிர்வினையாற்றவே இதை நான் எழுதுகின்றேன்.
இது அடிப்படையில் நம் உள்ளூர் உணர்வுகளை அடிநாதமாகக்கொண்டுள்ள ஒரு படம். இதில் ஒரு ஓநாயின் மீட்பு உள்ளது என்றாலும் கூர்ந்து நோக்கும் போது இது புனித யோவானின் வெளிப்பாடு சுவிசேஷத்தை ஒரு அடிதடி படமாக சொல்லியிருக்கிறது. அதை சொல்ல முற்படுகையில் அழகான குறியீடுகள் படமெங்கும் கதை சொல்கின்றன. சில உதாரணங்கள்:
வில்லன் தம்பா என்பவன் வெளிப்பாட்டில் சொல்லப்படும் 7 தலை மிருகம். அவனின் 7 தலைகளை 7 தனித்தனி கதாபாத்திரமாக உருவகப்படுத்தியுள்ளார் மிஷ்கின். காவலதிகாரி பிச்சை, மொட்டைத்தலை அடியாள் (அஞ்சாதே நினைவுக்கு வருகிறதா? ;-) ) சிப்ஸ் சாப்பிடும் அடியாள், 2 நிஞ்சாக்கள், 2 பைக் ரைடர்ஸ். கதையின் ஓநாய் உண்மையில் மைக்கேல்(மைக்கேல்) எனப்படும் ஆர்க்கேஞ்சல். போரிடும் இந்த தேவதையே திரும்பவரும் குழந்தை யேசுவைக்காக்கும் தேவதை. இந்த கதாபாத்திரம் நமக்கொன்றும் புதிதில்லை, 70களில் வந்த நான் வாழவைப்பேனில் வரும் ரஜினி பாத்திரம் (மைக்கேல்) போல திருந்தி நல்லவனாக வரும் பாத்திரம்.
இது தவிர்த்து இந்தப்படத்தில் விரவியுள்ள மற்ற புனித விவிலியக்குறியீடுகள். முதல் பாகமான சந்துரு ஓநாயைக்காப்பாற்றும் படலம் யேசுவின் மிகப்பிரபலமான கதையான குட் ஸமாரிட்டன் (வழிப்போக்கனின்) கதையே. அந்த வழிப்போக்கனின் கல் எனும் பாரம் இங்கு சந்துருவின் தோளில் பாரமாக அழுத்தும் ஓநாயின் உடல்.
இரண்டாம் படலமான ஓட்டத்தில் ஓநாய் தாயையும் மகளையும் தோளில் சுமந்து திரிகிறான் கிறிஸ்துவின் சிலுவை போல. அவன் வலிகளும் காயங்களும் கிரிஸ்து அனுபவித்த வதைகளைக்குறிக்கின்றன. இதை வலிய வரவைக்க அந்தத்தாயின் கால்களில் காயங்களை உருவாக்கிறார் திரைக்கதையாசிரியர். மிகவும் அழகான தருணங்கள் இந்தப்படத்தில் அந்த சுமந்து திரியும் காட்சிகள்.
வேறொரு தளத்தில் நின்று பார்க்கையில் இந்தப்படம் ஒரு அழகான கீழைத்தத்துவ தரிசனத்தைத்தருகிறது. இரவு நம் ஆழ்மனம் விழிப்புடன் இருக்கும் நேரம். இரவில் விழித்திருப்பது, பகலில் வெளி உலகாலும் நம்முடைய தர்க்கபூர்வ சிந்தனையும் அழுத்தி வைக்கப்படுகின்றது. இந்தப்படத்தில் சந்துரு என்பவன் மிகவும் சாதரணமான ஓர் மனிதன். அவன் முதன் முதலில் கருணைகொண்டு செய்யும் ஒரு காரியம், அவனை தன்னுள் இருக்கும் கிறிஸ்துவை, மீட்பரைக்கண்டுகொள்ள செய்கிறது, எந்த தியானத்திலும் அந்த கிறிஸ்து நிலையை அடைவதற்கு முன் நம் ஆழ்மனத்தில் அழுத்தி வைக்கப்பட்டுள்ள அடிப்படையான தமோகுண உணர்ச்சிகளை நாம் வென்றாக வேண்டும். இறுதியில் நம்முடைய தர்க்கபூர்வ சிந்தனைகளையும் நாம் கொன்று போதிஸத்துவனாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும். சந்துரு அந்த தமோகுணங்களையே முறையே தம்பாவின் அடியாட்களின் வெறியாட்டத்தில் காண்கிறான். ஆனால் படம் முழுவதும் அவன் அவற்றை எதிர்கொள்வதேஇல்லை. இன்னும் சொல்லப்போனால் கல்லறைக்காட்சிகளின் ஆரம்பத்தில் அதை அனுமதிக்கவும் செய்கிறான், பாரதியின் தியாகமும், ஒநாயின் கதையையும் கேட்கும் வரை. ஓநாயும் அது வரை அவனைக்கட்டிப்போட்டு கையறு நிலையிலேயெ வைத்திருக்கிறான். இறுதிக்கு முன் சி பி சி ஐ டி அதிகாரி லால் வந்து அவன் கட்டை அறுக்கிறார். அவனை விட்டுவிட்டு ஓடிவிடும் படி சொல்கிறார். ஆனால் அவன் இப்போது விழித்துக்கொண்டவன். தன் ஆன்மிகக்கடமைகளை உணர்ந்தவன். லாலை நிராயுதபாணியாக்கி விட்டு கடமையைச்செல்ல ஓடுகிறான் - இங்கு லால் தர்க்கபூர்வமான சிந்தனைகளின் உருவமாக வடிவமைக்கப்பட்டுள்ளார், அவரை நிராகரித்து சந்துரு ஆன்மிக முழுமை பெறுகிறான். இன்னொரு அற்புதமான் செய்தி, பகலில் நடக்கும் காட்சிகளில் லால் மற்றும் ஐசக் பலம் பொருந்தியவர்களாகத்தோன்றுகிறார்கள், இரவில் அவர்கள் தொடர்ந்து தோற்கிரார்கள். இதுவும் நம் மனதில் கனவிலும் உணர்ச்சிக்கொந்தளிப்பின் போதும் தோற்கும் நமது தர்க்கபூர்வ அறிவின் குறியீடே. அற்புதம்,
இறுதியில் ஒரு காட்சியில் அந்தப்பார்வைல்லாத குழந்தையைக்காக்கும் போது சந்துரு ஒரு சிலுவையின் வடிவில் தோன்றுகிறான்.
இப்படியாக காட்சிக்கு காட்சி பல நிலைகளில் மதம் மற்றும் ஆன்மிகத்தத்துவக்காட்சிகளாக நிரம்பியுள்ள படம் தமிழர்களுக்குப்பெருமை சேர்க்கும் ஒரு படம். அதை ஆதரித்து நாம் இன்னும் உரக்கப்பேசினால் தான் வெளிநாட்டுப்படங்களைக்கரைத்துக்குடித்துவிட்டதாக மெருமை பீற்றிக்கொள்ளும் உள்ளூர் இணைய மொண்ணைகளின் அறுவை விமரிசன வெறியாட்டத்தை அடக்க முடியும்.
மிஷ்கின் அவர்களுக்கு நான் வாழ்த்துக்கள் சொல்ல முடியாது - இது அவர் கடமை. நான் சொல்லக்கூடியது நன்றி மட்டுமே! நன்றி! நன்றி.

jaiganesh- Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25
Re: Mysskin's Onaayum aattukuttiyum
Movie was ok Jai ! Hero Mysskin was horrible and his acting less said the better. May be Cockman would have been better choice.
dilbert- Posts : 39
Reputation : 0
Join date : 2013-08-01
Re: Mysskin's Onaayum aattukuttiyum
That 51 mark review by vikatan
அட்டகாசம்’ மிஷ்கின்!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum