பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Re: பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine on Tue Jan 09, 2018 12:52 am

#20 ilayaraja Sir Sudha dhanyasi ragam songs

- சுத்த தன்யாசி - அந்த சன்யாசியோட (ராசாவோட) சொத்து, காடும் காடு சார்ந்த இடங்களுக்கான ராகம் ; ஆம்பல் குழல் - புல்லாங்குழலை இந்த ராகத்தின் பாடல்களில் எல்லாம் வாரி இறைக்கிறார்!

- விழியில் விழுந்து இசையில் நுழைந்து கொண்டு தொடங்குகிறார் - புல்லாங்குழலின் மாயம் இங்கு

- ராஜாப்பொண்ணு ஆதி வாடியம்மா (ஒரே முத்தம்), காலை நேரக்காற்றே (பகவதிபுரம் ரயில்வே கேட்), தவிக்குது தயங்குது ஒரு மனது (நதியைத்தேடி வந்த கடல்) , நதியோரம் (அன்னை ஓர் ஆலயம்) , பூவரசம்பூ பூத்தாச்சு / மாஞ்சோசைக்கிளி தானே (கிழக்கே போகும் ரயில்) - இப்படி நிறைய 70'களின் சூப்பர் ஹிட் பாடல்கள்

- சிறுபொன்மணி அசையும் இது தெறிக்கும் புது இசையும் - அட இந்தப்பாடலும் சுத்த தன்யாசி தான், இடையிசையில் கிரகபேதம் செய்து மோகனம் தருவார் ; ஆகச்சிறந்த தமிழ்த்திரைப்பாடல்களில் ஒன்றான "பூந்தளிராட" இந்த ராகம் தான்

- ஏ உன்னைத்தானே - நிறைய அந்நிய சுரங்கள் இல்லாத பாடல் (இளமை இதோ இதோ, மேகம் கொட்டட்டும் போன்றவை போல இல்லாமல்), ஆடும் நேரம் இது தான் தான் என்ற பாட்டும் இதே ராகம்

- காதலுக்கு மரியாதையின் ஆனந்தக்குயிலின் பாட்டு, காலாபானியின் செம்பூவே பூவே, தர்மதுரையின் மாசி மாசம் ஆளான பொண்ணு - இப்படி 90-களிலும் ஹிட் பாடல்கள்

- இந்த விடியோவுக்கு ஒரு க்ளைமாக்ஸ் வைக்கிறார், புதிய பூவிது பூத்தது

He has more video(s) on this rAgam, will collect and feature in the thread as well Smile

https://www.youtube.com/watch?v=I2fMDttXcvY

app_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine on Wed Jan 10, 2018 12:16 am

#21 ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2

- பரிபாடலில் தமிழிசை குறித்து உள்ளதைச்சொல்லுகிறார். பாடுமிடத்தை அங்கே பண்ணை என்கிறார்கள், அதாவது இன்று பண்ணைப்புரம் Smile

- பூவேறு கோனும் (திருவாசகம்) - குரலிசையோடு சேர்ந்து வரும் ஒத்திசை குறித்துப்புகழ்கிறார்

- மெட்டைப்பெரும்பாலும் என்ன ராகத்தில் எடுத்துச்செல்கிறாரோ அதையே குறிப்பிடுகிறேன். (ஆரோசை / அமரோசை குறித்தெல்லாம் பேசுகிறார், ஆரோகணம் எல்லாம் விட்டுறலாம்) - ஆயிரம் மலர்களே மலருங்கள், பூமாலை ஒரு பாவை ஆனது

- மாலையில் யாரோ மனதோடு பேச - மெலோடியோ மெலடி - இளம் வயதில் தவறிப்போன ஸ்வர்ணலதாவுக்கு என்னென்ன முத்துக்கள் கொடுத்திருக்கிறார்

- கீர்த்தியைப் பாடுவதே கீர்த்தனம் என்கிறார், ஐம்பது வகைப்பாடல்கள் இப்படித் தமிழிசையில் இருக்கின்றன என்கிறார் - பூப்பூப்பூ புல்லாங்குழல் பூவின் மடல் - ஏழு என்ன ஏழு, ஐந்து சுரங்களுக்குள் எத்தனை பாடல் என்கிறார்

- பார்த்திபனுக்குக்கொடுத்த கொடை, வராது வந்த நாயகன் என்ற அழகான மெட்டு

-காலையில் கேட்டது கோவில் மணி - எமெஸ்வி தயாரிப்புக்காகக் கொடுத்த ஸ்பெஷல் ; ஒம்மனசுல பாட்டுத்தான் - சங்கிலி முருகனுக்கு, கல்லாயிருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய் என்று கலைஞரின் உளியின் ஓசைக்கு - இப்படி நிறைய

- மனசு மயங்கும் - வீணையின் உச்ச ஆக்டேவ் - மனதைச்சுண்டும் பயன்பாடு சிப்பிக்குள் முத்துக்காக

- இந்த ராகத்தில் இப்படி ஒரு பாட்டைப்போட முடியுமா என்று நினைக்கச்செய்யும் "ஒரு பூங்காவனம்" - ராசாவே ஒரு நிகழ்ச்சியில் சொல்லிக்காட்டிய பாடல், மணிரத்னத்துக்காக (எல்லாப்பாடலுமே அற்புதம், விதவிதமான ராகங்கள் இந்தப்படத்துக்கு)

சுத்த தன்யாசி இன்னும் இருக்கு என்கிறார், யூட்யூப் கண்டுபிடித்தால் இங்கே கண்டிப்பாக இடுவேன்

https://www.youtube.com/watch?v=KbMbnabVHJEapp_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine on Wed Jan 10, 2018 11:35 pm

#22 ilayaraja Sir songs in rare ragas - part-1 & part -2

- சபாக்களில் பயன்படுத்தாத, அபூர்வமாக மட்டுமே பயன்படுத்தும் ராகங்களையும் அவர் விட்டு வைக்கவில்லை என்று வெளிப்படுத்தும் இரண்டு காணொளிகள் - அதில் இது முதலாம் யூட்யூப்.

- அதற்கான பின்னணியை ராசா திரைக்கு வருமுன் பத்மா சுப்ரமணியத்துக்காக இசையமைத்த காலத்தோடு இணைத்துப்பார்க்கிறார். தவறான குற்றச்சாட்டுக்குப் பாட்டுக்கள் / சிறப்பு ராகங்கள் வழியே பதில் சொல்கிறார் என்று யூகிக்கிறார்.

- "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே பாடல் கொண்டு" தொடங்குகிறார். (திரை இலக்கியவாதி மகேந்திரனுக்கு என்கிறார்). அதைத்தொடர்ந்து ஸ்ரீதருக்கு சலநாட்டையில் "பனிவிழும் மலர்வனம்" கொடுத்தார்.

- கரையாத மனமும் உண்டோ, பாட வந்ததோ கானம், தேஷ் கண்ட நடையில் (விழியில் ஒரு கவிதை படித்தேன்) இப்படி பலப்பல அற்புதங்கள்

- எல்லாரும் போட்ட ஹரி காம்போதி - ஆனால் இவர் போடும் போது இரண்டு சரணங்களும், மேற்கத்திய இசை / கர்நாடக இசை என்று எல்லாம் கொண்டு விளையாடி மீறுகிறார், குறிப்பாக இடையிசைகளில், இரண்டாம் சரணத்தில் - இப்படியெல்லாம் (வருஷம் 16 - பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்)

- காபி ராகம் கொண்டு எளிய மெட்டு ஆனால் இடையிசைகளில் புகுந்து விளையாடி மும்பை இசைக்கலைஞர்களின் கைதட்டல் வாங்கினார் என்கிறார் (ஏ பாடல் ஒன்று - இது அங்கேயா பதிவு செய்தார்கள்? தரங்கிணி என்றும் சிங்கப்பூர் என்றும் இரண்டு கதைகள் கேட்டிருக்கிறேன். இப்போது மும்பை என்கிறார்)

- கரகரப்ரியா - பாரதிராஜாவுக்கென்று - பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே (மாதவிப்பொன்மயிலாள் பாட்டும் இதே ராகமாம், மாதவி கனெக்ஷன் தான் இன்பிரேஷனோ என்று எனக்குத்தோன்றுகிறது)

- கர்நாடகக்கமாஸ் - ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

- லதாங்கி கொண்டு சின்ன ராசாவே சித்தெறும்பு என்னக்கடிக்குது (இந்த ராகத்துல இப்படிப்பட்ட பாட்டுப் போடக்கூடாது என்று யாருய்யா சொன்னது என்கிறார், நவரசம் கொடுப்பதில் என்ன தப்புங்கிறார்)

- நளினகாந்தி - எந்தன் நெஞ்சில் நீங்காத - என்ன அழகான ட்யூன்!

- சாருலதா மணியையும் புகழ்கிறார் (ராகங்கள் குறித்து இவர் நிறையக்கட்டுரைகள் / நிகழ்ச்சிகள் / கச்சேரிகள் என்று திரையிசை குறித்துப்புகழ்பவர்)

- ராசாவை நேரில் கண்ட அனுபவத்தைச்சொல்லிப் "பார்த்த விழி பார்த்தபடி" குறித்துப்புகழ்கிறார்

- கண்ணா வருவாயா (பாட் தீப் என்ற இந்துஸ்தானி ராகம், இரண்டு சரணங்களும்  வேறு வேறு என்று இழைப்பது வேறு)

- ரமாப்ரியா - கமலம் பாதக்கமலம் - மோகமுள் (அபரிமிதமான செவ்வியல் மரபு ஞானம்)

- மீனவர்கள் பாடும் "சித்திரச்செவ்வானம்" (காற்றினிலே வரும் காதம்) - கம்பீரநாட்டை ராகம் பாடலில் வருகிறது, ஆனால் அமைப்பு நெய்தல் இசை வெளிப்பாடுகள் கொண்டு நெய்கிறார் என்பது இசைத்தமிழின் அற்புதம்.

https://www.youtube.com/watch?v=K2q5bi5mG3chttps://www.youtube.com/watch?v=2y-VgCRFGME


app_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine on Fri Jan 12, 2018 11:35 pm

#23 ilayaraja Sir pantuvarali ragam tracks and songs

- இளையராசாவைப் பகாசுரன் என்றும் பீமன் என்றும் புகழ்கிறார் - பல ராகங்களில் உள்ள மெட்டுக்களை / வடிவங்களை எல்லாம் விழுங்கி, யாருக்கும் மிச்சம் வைக்காமல் செய்தவர் என்பதற்கு உவமையாக!

- ராஜபார்வையின் வயலின் கச்சேரி பந்துவராளி குறித்துப் புகழாமல் இருக்க முடியுமா? செய்கிறார் - சேர்ந்திசை குறித்தும் பலபண்ணிசை குறித்தும் விளக்குகிறார்!

- இந்துஸ்தானி சுவையில் வந்த நினைவெல்லாம் நித்யா பந்துவராளி "ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்"

- ஃபியூஷன் என்ற சொல்லைத்தவிர்த்துப் "புதிய பரிமாண இசை" என்று சொல்ல விழைகிறார் (It is fixed என்ற HTNI டிராக்)

- ஒரு புத்தகமாக ஆவணப்படுத்த வேண்டும், தமிழ்ப்பண்ணிசையின் குரல் எப்படி ராசா வழியே ஓங்கி ஒலித்தது என்றெல்லாம் எழுத ஆவலை வெளிப்படுத்துகிறார்

- மெட்டுப்போடுவது ஒன்று, அதற்கு அழகைக்கொடுப்பது வேறொன்று - இளையராஜாவின் இந்த இசையியலின் தாக்கம் ரகுமானின் இந்திப்பாடல்களில் இருந்ததாகச் சொல்கிறார்

- பிறையே பிறையே - பிதாமகன் குறித்தும் சொல்கிறார்

- "சின்னப்பசங்களா - யாரோடு விளையாடுறீங்க" என்று நான் கடவுளின் ஓம் சிவோஹம் வழியாக வேட்டையாடு விளையாடு ராகவன் மாதிரி அடித்தார் என்கிறார்

https://www.youtube.com/watch?v=ORUVFRVwAxQapp_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum