Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

2 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue May 26, 2015 1:47 am

வேறு வழியில்லை - மாநகர் மெக்சிகோவில் மூன்று கிழமைகள் - அலுவலகம் உட்பட எங்கும் வேறு மொழி அபூர்வம். 
(நேரடியாக என்னோடு வேலை செய்வோர் மட்டும் ஆங்கிலம் கதைக்கிறார்கள் / முயலுகிறார்கள் - மற்றபடி அவர்களுக்குள்ளே தாய்மொழி தான்)

யாம் பெற்ற இன்பம் - அதாவது நான் படிக்கும் சொற்கள் / சொற்றொடர்கள் இங்கு அன்றாடம் பகிர்கிறேன். 

வேறு யாருக்கும் பயனளிக்குமோ இல்லையோ - எனக்கு நினைவில் வைக்க உதவும் அல்லவா?

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue May 26, 2015 2:14 am

தொடக்கத்தில் படிக்கும் வழக்கமான சில வாழ்த்துச்சொற்கள்!

ஓலா
Hola (Hello)  = வணக்கம்

கொமஸ்தாஸ்
como estas (How are you) = எப்படி இருக்கீங்க?

க்ராசியாஸ்
gracias (Thank you) =  நன்றி Smile

அடியோஸ்
adiós (bye) =  விடை பெறுகிறேன்

ஹஸ்டா லுயேகோ
hasta luego (see you again) =  மறுபடியும் பார்க்கலாம் / மீண்டும் சந்திப்போம்

சலூடோஸ்
saludos (Regards) = வாழ்த்துகள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue May 26, 2015 7:42 am

"ஹஸ்டா லுயேகோ" வை விட எல்லோருக்கும் ஹஸ்டா மன்யானா தான் பிடிக்கிறது.

மாலையில் வேலை முடிந்து கிளம்பும்போது நான் சொன்ன எல்லோரும் பதிலுக்கு மன்யானா சொல்லித் திருத்தினார்கள் Smile

ஹஸ்டா மன்யானா
Hasta mañana (see you tomorrow) = நாளை பார்க்கலாம்!

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா :-)

Hasta mañana என்று வரும் இனிமையான ABBA பாட்டும் நினைவுக்கு வருகிறது Smile

https://www.youtube.com/watch?v=tpedbPUzLvQ



Last edited by app_engine on Thu May 19, 2022 7:37 pm; edited 1 time in total

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue May 26, 2015 7:59 am

இன்று காலை ஸ்வீட்டுக்கு வந்து கூட்டிப்போனவர் சொல்லிக்கொடுத்த காலை வணக்கத்தை நாளை மறக்காமல் எல்லோருக்கும் சொல்ல வேண்டும்.

நினைவில் பதித்துக் கொண்டு படுக்கச்செல்கிறேன் Smile

வூனோஸ் தியாஸ்
Buenos días(Good morning) = காலை வணக்கம்!

கொசுறு :
அந்த மெக்சிகோகாரருக்கு இங்கு வந்த சென்னைப்பையன்கள் முன்னமேயே வணக்கம் சொல்லிக் கொடுத்திருந்ததால் எனக்கு அழகுத்தமிழில் வணக்கம் மற்றும் இந்தியில் நமஸ்தே எல்லாம் சொன்னார்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Wed May 27, 2015 1:02 am

மிச்சமிருக்கும் ரெண்டு நல்ல நேரத்தையும் படிச்சாச்சு, பாதி பயன்படுத்தியும் பாத்தாச்சு Smile

அதாகப்பட்டது,
buenas tardes (good afternoon)
வூனோஸ் தரதேஸ் 

இதை மீண்டும் மீண்டும் சொல்லி சிலரது புன்முறுவல்கள் பெற்றது இன்றைய வருமானம்! Smile

buenas noches (good evening / good night)
வூனோஸ் நாச்சேஸ்

மாலையில் தங்குமிடத்தில் இதைப் பயன்படுத்திப்பார்க்க முடிவு Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu May 28, 2015 12:13 am

"நன்றி" சொன்னால் "நல்வரவு" சொல்லும்  பழக்கம் அமெரிக்கர்களுக்கு உள்ளது தெரிந்ததே. ("அப்படிச் சொல்லாதே" என்று இந்தியாவில் முன்னமெல்லாம் சொல்லுவார்கள், இப்போது எப்படியோ தெரியாது).

மெக்சிகோவிலும் தற்போது "நல்வரவு" சொல்லும் பழக்கம் இருப்பது போல் தான் தெரிகிறது. (குறைந்த பட்சம் என்னிடம் பலரும், "க்ராசியாஸ்" சொல்லும்போது "பியன்வெநீடோ" என்கிறார்கள்.)

பியன்வெநீடோ
bienvenido (Welcome) = நல்வரவு / நல்லது

இதில் "பால்" இருக்கிறதாம்.

பியன்வெநீடோ = ஆண்பால் (bienvenido)
பியன்வெநீடா  = பெண்பால்  (bienvenida)

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Mex_im10

மேலேயுள்ள படத்திலும் இந்தச்சொல்லின் ஒரு வடிவம் இருக்கிறது :-)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu May 28, 2015 2:55 am

ஒரு வழியாகப் பத்து வரை மனப்பாடம் பண்ணியாச்சு...எண்ணும் எழுத்தும் கண்கள் அல்லவா?

எழுத்து ஓரளவுக்குப் பிடிபடுகிறது - ஆங்கில எழுத்துகள் + உச்சரிப்புக்காகக் குறியீடுகள்.

எண்கள்? நல்ல வேளை இந்தி / அரபி மாதிரி வேறு எண்கள் இல்லை Smile நம்ம இந்தோ-அரபி எண்கள் தான்! Laughing

இதோ முதல் பத்து :

1 - uno - ஊனோ
(யூனோ / ஊனோ  - அமெரிக்காவில் சிறுவர்களின் ஒரு சீட்டு விளையாட்டு)

2 - dos - தோஸ்
(அட, இந்தி மாதிரி இருக்கே)

3 - tres - த்ரேஸ்

4 - cuatro - க்வாத்ரோ
(குவார்ட்டர் அடிக்கற காலம் எல்லாம் போச்சு)

5 - cinco - சிங்கோ 
(சிங்கோ  டி மேயோ : மே ஐந்து - ஒரு மெக்சிகோ நாட்டு விடுமுறை நாள் என்பது பலருக்கும் தெரிந்ததே)

6 - seis - சேயிஸ்

7 - siete - சியேத்தே 
("சீ ! யாத்தே" அப்படீன்னு நினைவு வச்சுக்க வேண்டியது தான்)

8 - ocho - ஓச்சோ 
(என்ன, ஆச்சோ? என்று கேள்வி கேட்பது போல் நினைவு வச்சுக்க வேண்டியது தான்)

9 - nueve - நுயெவே
(நவ மணி / நவ் இவற்றுக்கு அருகான சொல் தான், கொஞ்சம் நாக்கு சுளுக்காமச் சொல்லணும்)

10 - diez - தியேஸ்
(இதுவும் இந்தி மாதிரித்தான் இருக்கு)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu May 28, 2015 5:57 am

ஆம் & இல்லை - இந்த இரண்டு சொற்களும் பொதுவாக எந்த மொழியிலும் முதன் முதலாகப் படிக்க வேண்டியவை.

இங்கும் விதிவிலக்கல்ல. (அவசரத்தேவையான சொற்களும் கூட).

ஆம் = ஸீ  /  sí (yes)

இல்லை = நோ / no (அதே ஆங்கில No தான் Laughing அமெரிக்காவில் குழந்தைகள்   வேறு எந்தச்சொல்லும் படிக்கும் முன்னமே நோ பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று சொல்லுவதுண்டு. பெரிய அளவில் அனுபவ உண்மை என்று நினைக்கிறேன்)

ரெண்டு சொற்களும் அடிக்கடி பயன்படுத்துகிறேன் Smile

இன்னொரு இன்றியமையாத சொல் "தயவு செய்து" (தமிழில் இது பயன்படுத்துவது அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால் ஆங்கிலத்தில் ப்ளீஸ் இல்லாமல் வாழ முடியாது.)

ஸ்பானியோலில் தமிழ் போலவே இரு சொற்கள் Smile
பொர் ஃபவோர் - Por favor (Please)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Fri May 29, 2015 12:57 am

நல்லது கேட்டது தெரிஞ்சிருக்கணும்.

அந்தச்சொற்கள் இன்று படிப்பு Smile

bueno (good)
வொய்னோ = நல்லது

(ஒயின் குடிப்பிரியர்கள் என்று நிரூபிக்கிறார்கள்)

malo (bad)
மாலோ = கெட்டது

(மால்வேர் / Malware என்ற சொல் தெரியாத கணிப்பொறியாளர் இருக்க முடியாது. அதன் முதல் பாகம் இங்கு வருவதை வைத்துத் தொடர்பு படுத்தி மனதில் வைக்க வேண்டியது தான்.)

கொசுறு : இன்று ட்விட்டரில் இட்ட படம். 
முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Balbue10

மெக்சிகோ மாநகரின் விமானத்தளத்தின் அருகே உள்ள "பால்புயேனா" என்னும் புறநகர்ப்பகுதியில் நடந்த போது 90-களில் பெங்களூரின் இந்திராநகரில் நடப்பது போன்ற உணர்வு Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  plum Fri May 29, 2015 4:54 am

app_engine wrote:ஒரு வழியாகப் பத்து வரை மனப்பாடம் பண்ணியாச்சு...எண்ணும் எழுத்தும் கண்கள் அல்லவா?

எழுத்து ஓரளவுக்குப் பிடிபடுகிறது - ஆங்கில எழுத்துகள் + உச்சரிப்புக்காகக் குறியீடுகள்.

எண்கள்? நல்ல வேளை இந்தி / அரபி மாதிரி வேறு எண்கள் இல்லை Smile நம்ம இந்தோ-அரபி எண்கள் தான்! Laughing

இதோ முதல் பத்து :

1 - uno - ஊனோ
(யூனோ / ஊனோ  - அமெரிக்காவில் சிறுவர்களின் ஒரு சீட்டு விளையாட்டு)

2 - dos - தோஸ்
(அட, இந்தி மாதிரி இருக்கே)

3 - tres - த்ரேஸ்

4 - cuatro - க்வாத்ரோ
(குவார்ட்டர் அடிக்கற காலம் எல்லாம் போச்சு)

5 - cinco - சிங்கோ 
(சிங்கோ  டி மேயோ : மே ஐந்து - ஒரு மெக்சிகோ நாட்டு விடுமுறை நாள் என்பது பலருக்கும் தெரிந்ததே)

6 - seis - சேயிஸ்

7 - siete - சியேத்தே 
("சீ ! யாத்தே" அப்படீன்னு நினைவு வச்சுக்க வேண்டியது தான்)

8 - ocho - ஓச்சோ 
(என்ன, ஆச்சோ? என்று கேள்வி கேட்பது போல் நினைவு வச்சுக்க வேண்டியது தான்)

9 - nueve - நுயெவே
(நவ மணி / நவ் இவற்றுக்கு அருகான சொல் தான், கொஞ்சம் நாக்கு சுளுக்காமச் சொல்லணும்)

10 - diez - தியேஸ்
(இதுவும் இந்தி மாதிரித்தான் இருக்கு)
nEraiya sanskrit connection irukku

unos -> close to our oNNu (not sanskrit but tamil which might be a coincidnce)
dos tres- close to dwitiya thrititya
ciatro quarter chatur 4
seis chE 6

siete saath
ocho aath
nueve nava

Indo-European language family nu summAvA pirichu vechAng

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sat May 30, 2015 1:03 am

app_engine wrote:
மெக்சிகோவிலும் தற்போது "நல்வரவு" சொல்லும் பழக்கம் இருப்பது போல் தான் தெரிகிறது. (குறைந்த பட்சம் என்னிடம் பலரும், "க்ராசியாஸ்" சொல்லும்போது "பியன்வெநீடோ" என்கிறார்கள்.)

ஒரு சின்னத்திருத்தம்.

நல்வரவு என்பதற்கு "பியன்வெநீடோ" சரியான சொல் தான். 

என்றாலும், நன்றி சொல்லும்போது பதிலுக்குப் பொதுவாக எல்லோரும் இவ்வளவு பெரிய சொல் சொல்வதில்லை என்று கவனித்து, பின்னர் கேட்டுக் கற்றுக்கொண்ட படி :

வியன்னாடா / தே னாடா என்று மட்டுமே சொன்னால் போதும்.

De nada - தே நாடா
(You're welcome) நல்வரவு

(தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு - "வேணான்டா" என்று சொல்வதாக நினைத்துக்கொள்ளலாம் Laughing )


Last edited by app_engine on Fri Jun 05, 2015 2:30 am; edited 1 time in total

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sun May 31, 2015 3:31 am

எல்லா இடங்களிலும் இருக்கும் அறிவிப்புகள் / படங்கள் எளிதில் மனதில் தங்குவது இயல்பே.

அப்படியாக, "உள்ளே-வெளியே" படிக்காமல் இந்த ஊருக்குள்ளே வரவோ வெளியே போகவோ மாட்டோம்.

அதுவும் தற்காலத்தில் இந்த இரண்டும் எங்கு போனாலும் தெரிந்தே ஆக வேண்டிய சொற்கள்!

எந்த்ராடா 
entrada (entry) உள்ளே (இந்தச்சொல் கிட்டத்தட்ட ஆங்கிலம் தான், எளிதில் புரியும். இது போல நிறைய வேறு சொற்கள் இருக்கின்றன.)

சலீதா
salida (exit) வெளியே

மிக நல்ல ஒரு அனுபவம் இன்று : 
வேண்டிய பஸ் வராத போது, பஸ் ஸ்டாப்பில் / பஸ்ஸில் அன்பு காண்பித்த, மொழி அறவே தெரியாவிட்டாலும் ரெண்டு பஸ் மாறிச் செல்ல உதவிய, ஒரு குடும்பத்திடம் இன்று "முச்சாஸ் க்ராசியாஸ்" சொன்னேன் Smile

முச்சாஸ் / நிறைய + க்ராசியாஸ் / நன்றிகள் = muchas gracias / Thank you very much!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sun May 31, 2015 6:53 pm

ஞாயிறு காலை, வெளியே செல்லுமுன் ஏதாவது படிக்கலாம் என்ற முடிவு. 

பதினொன்று முதல் இருபது வரை எண்கள் ஆங்கிலம் உட்படப் பல மொழிகளிலும் மற்றவற்றில் இருந்து வேறுபடும் (அதாவது 1-9 & 21-99'ல் இருந்து). 

இங்கே எப்படி என்று பார்க்கலாம் Smile

மீள்பார்வை : 1-10
ஊனோ , தோஸ், த்ரேஸ், க்வாத்ரோ, சின்கோ, சேயிஸ் , சியேத்தே , ஓச்சோ , நுயேவே , தியேஸ் 


11 - ஓன்ஸே / once
(ஓரளவுக்கு ஃபோனெடிக் மொழி, அதனால் "e = ஏ" என்றே பொதுவாக உச்சரிக்கிறார்கள். "o = ஓ" என்றும் Smile )

12 - தோஸே / doce
(பன்னிரண்டு தோசை எல்லாம் சாப்பிட முடியாதுப்பா)

13 - த்ரேஸே / trece
(அன்னை தெரசாவுக்கும் அம்மணி த்ரீஷாவுக்கும் பொது எண்) 

14 - கதோர்ஸே / catorce
(க்வாத்ரோ-வில் இருந்து வருது) 

15 - க்யின்ஸே / quince
(ராணிக்கும் அஞ்சுக்கும் என்னமோ சம்மந்தம் போல, சின்கோ எப்படி க்யின் ஆச்சுன்னு புரில)

"நல்லா தானே போயிக்கிட்டு இருந்துச்சு" என்று நினைக்க வைத்தது பதினாறு படித்தப்போ

திடீர்னு suffix-ல இருந்து prefix-க்கு மாறீட்டாங்க!

16 - டியஸி சேயிஸ் / dieciséis
(என்றாலும் நல்லதே, தமிழ் மாதிரி, பதின் - ஆறு)

17 - டியஸி சியேத்தே / diecisiete
(இதுவும் எளிதே, மட்டுமல்ல அடுத்த ரெண்டும் அதே மாதிரித்தான்)

18 - டியஸி ஓச்சோ / dieciocho

19 - டியஸி நுயேவே / diecinueve

20 - வெயின்டே / veinte
(வேறு வழியில்லை, புதுசாப் படிச்சுத்தான் ஆகணும்!  "ட்வென்டி" மாதிரித்தான் இருக்கு ஆனா)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jun 02, 2015 10:32 pm

இருபத்தொன்னு முதல் முப்பது வரை மிக எளிது (ஆங்கிலம் போலவே) Smile

21 - வெயின்டி யுனோ / veintiuno

22 - வெயின்டி தோஸ் / veintidós

23 - வெயின்டி த்ரேஸ் / veintitrés

24 - வெயின்டி க்வாத்ரோ / veinticuatro

25 - வெயின்டி சின்க்கோ / Veinticinco

26 - வெயின்டி சேயிஸ் / veintiseis

27 - வெயின்டி சியேத்தே / veintisiete

28 - வெயின்டி ஓச்சோ / veintiocho 

29 - வெயின்டி நுயேவே / veintinueve

30 - த்ரெயிந்த்தா / treinta

Smile

அம்புட்டுத்தேன், இன்னும் ரெண்டு நாளில் நூறு வரை போவது மிக எளிது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Wed Jun 03, 2015 8:30 am

31 முதல் 99 வரை படிக்க அதிகக்கடினமில்லை.

எல்லாமே ஆங்கிலம் / தமிழ் போலத்தான். அந்தந்தப் பத்து படித்தால் போதும் Smile

அப்படியாக, 

30 / முப்பது =  த்ரெய்ந்தா  / treinta

40 / நாற்பது = க்வாறேன்டா / cuarenta

50 / ஐம்பது = சின்குவேன்டா / cincuenta

60 / அறுபது = ஸெஸேன்டா / sesenta

70 / எழுபது = "செத்தேன்டா" / setenta Laughing

80 / எண்பது = ஒச்சேன்டா / ochenta

90 / தொண்ணூறு = "நோவேன்டா" / noventa Laughing

100 / நூறு  = சியென் / cien

மற்றபடி இவற்றோடு ஒன்னு முதல் ஒன்பது சேர்த்தால் எல்லா எண்களும் கிட்டி விடும்!

ஆச்சு, நூறு எண்கள் படிச்சாச்சு, இனி தினமும் பயன்பாடு தான்!

Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Fri Jun 05, 2015 1:45 am

தங்குமிடத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் பெரிய சான்டா ஃபே மால். 

திங்களன்று பால் & பழங்கள் வாங்கப்போய் வெளியே வரும் போது தூறல். சியர்ஸ் (Sears) உள் நுழைந்து குடை உடனே. 

அப்போது படித்த சொல் paraguas(umbrella) - பராகுவாஸ் (குடை) Smile

அங்கிருந்து இன்னொரு 1 கிலோமீட்டர் தாண்டினால் அலுவலகம். 

கிடைக்கும் டாக்சி எதுவோ அதன் அடிப்படையில் 20 முதல் 80 பெசோஸ் கொடுத்து மரியாதையாய்ப்போய் வந்து கொண்டிருந்தவனை இந்தக்குடை கெடுத்தது.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு பராகுவாஸ் உடன் (டாக்ஸியில் தான்) போனேன். குழப்பம் வந்தது மாலை 8 மணிக்குக் கிளம்பிய போது. 

சிறிய மழை. 

காவல்காரர் டாக்ஸி கம்பெனியைக்கூப்பிட, 90 நிமிடம் காக்கச்சொன்னார்கள். Shocked

"அடப்போங்கப்பா, எனக்கு நடக்க 20 நிமிடம் கூட ஆகாது" என்று பரபரப்பாகக் கிளம்பினேன். (வேகம் + நடைப்பிரியம் இரண்டும் பிறவிக்குணம்)

முதல் பத்து நிமிடம் சாறல் மட்டும். அருமையாக இருந்தது. 

மாலின் விளக்குகள் எல்லாம் அழகாக சிறு தூறலில் மிளிர, நடை இனிமை. 

மழை மெல்ல மெல்ல வலுத்தது. "எனக்குத்தான் குடை இருக்கே" என்று ஒதுங்குபவர்களை எல்லாம் பார்த்துக்கொண்டே வேக நடை.

இப்போது சரியான சடசட மழை. "அடடா, எவ்வளவு நாளாச்சு இப்படி மழையில் நடந்து" என்று அனுபவிக்க முயன்றேன். காலணிக்குள் புகுந்த அரை லிட்டர் நீர் அதற்குத் தடை போட்டது.

ஒலி மாறியதில் என்னவோ வேறுபாடு கண்டேன். 

அடடா, ஆலங்கட்டி மழை இப்போது! ஆஹா!

கடைசிக் கால் கிலோமீட்டர் நடக்கப் பட்டபாடு! 

அயிரமீன்கள் போலத்  தரை முழுக்க வழுவழுவென்று பனிக்கட்டிகள் நிறைய வழுக்க ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஐஸ் கட்டிகள், நிமிடத்தில்! 

தண்ணீர் சாலையில் வெள்ளம் போல வேறு. சுழற்றி அடித்த மழையில் சட்டை / கால்சட்டை தொப்பல். Embarassed

மெஹிக்கோ (இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்) மழையின் முழு அனுபவம்! 

ஒரு பத்து டாலர் குடையை நம்பிக்கிளம்புவது என்ன ஒரு முட்டாள் தனம்! Embarassed

என்றாலும், படித்த இரு சொற்கள் :

மழை (rain) = lluvia - யூவியா 

ஆலங்கட்டி (hail) = granizo - க்ரானிசோ

(தண்ணீர் = agua - அகுவா என்று முன்னமேயே தெரியும்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Sun Jun 07, 2015 2:31 am

இந்த மொழியிலும் இந்தி / அரபி போல பொருட்களுக்கெல்லாம் ஆண் / பெண் பால் இருப்பது அறிந்த போது "அடடா" என்று ஒரு சிறிய ஏமாற்றம் 
Sad

தமிழ் / ஆங்கிலப் பின்னணியில் இருப்போருக்கு அது கொஞ்சம் குழப்பம் தான்.

அதிலும் விதிவிலக்குகள் வரும் போது இன்னும் அதிகக்குழப்பம். 

அதாவது, பொதுவாக "ஆ" என்ற ஒலியில் முடியும் பெயர்ச்சொல் பெண் பால்.

அதன் படி , அகுவா (நீர்) பெண் பால் தான்.

ஆனால், பயன்பாட்டில் வரும் போது அதற்கு ஆண் பால் "உருக்கு" (article) , அதாவது "எல்" (el) வருமாம் Sad

அதாவது, எல் அகுவா (el agua - the water)

மற்றபடி, புத்தகம் ஆண் பால்  - எல் லிப்ரோ (el libro) , இதழ் (பத்திரிகை) பெண் பால் - லா ரெவிஸ்தா (la revista) 

சொல் கற்கும் போதே "எல்-லா" மும் சேர்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள்!

Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Mon Jun 08, 2015 8:42 pm

ஒரு நாள் முழுக்க ஐந்து மெஹிக்கன் இளைஞர்களுடன் "போபோகடேபெடல் எரிமலை"ப்பகுதியில் சுற்றல். 

வாசிப்பில் அதிக ஆர்வம் தூண்டிய நாள். அதிலும் குறிப்பாக ஒரு இளைஞி நான் என்ன வாசித்தாலும் சரி செய்வதில் குறியாக இருந்ததால் இன்னும் அதிக நன்மை Smile

ஆங்கில எழுத்துகள் வாசிப்பதை எளிதாக்குகிறது என்றாலும் ஆங்கிலம் போல வாசித்தால் தவறுகள் வரும். சொல்லப்போனால், இந்திக்காரங்க மாதிரி வாசித்தால் ரொம்பவே சரியா வருது Smile

எ-டு  : tu என்று எழுதுவதை "ட்யு" என்று ஸ்டைல் பண்ணப்டாது! 

"தூ" என்று,  நாக்கின் நுனி மேற்பல்லில் படுமாறு சொல்லணும் Smile

வேடிக்கை என்ன தெரியுமா, இந்தச்சொல்லின் பொருளும் ஓரளவு இந்தி மாதிரித்தான்.

அதாவது, tu / தூ = உன்னுடைய / உனது (your) Smile

தூ - ஆண் பால், சூ - பெண் பால் என்று மனதில் வையுங்கள்.

tu chico / தூ சீக்கோ - உன் பையன் (your boy)

su comida / சூ கோமீதா -  உன் உணவு (your food)

மற்றபடி, உயிர் எழுத்துகள் பெருமளவில் நேரடி உச்சரிப்பு என்பதால் ஆங்கிலத்தை விடப் பலமடங்கு எளிது!

de / தே  என்ற சொல் பெருமளவில் பயன்படுவதால், அதையும் சேர்த்துக்கொள்வோம். (உடைய / of)

ciudad de México / சியுதாத் தே மெஹிக்கோ = மெக்சிகோ (என்ற) மாநகர் / City Of Mexico 
(சுருக்கமாக எல்லா இடங்களிலும் CDMX என்று எழுதுகிறார்கள்) Smile


Last edited by app_engine on Wed Jun 10, 2015 12:41 am; edited 1 time in total

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jun 09, 2015 12:35 am

சில அடிப்படையான சொற்கள் இனி...

மறுபெயர் / சுட்டுப்பெயர் (பிரதிப்பெயர்) 
pronombre / ப்ரோநோம்ப்ரே / Pronoun

yo / யோ = நான் / I

nosotros / நோசோத்ரோஸ் = நாங்கள் / We
(பன்மை என்றால் "கள்" மாதிரி இங்கே "s/ஸ்" விகுதி கண்டிப்பாய் வரும் போல)

usted / உஸ்தேத் = நீ / you

él / எல்  = அவன் / he

ella / எய்யா  = அவள் / she 
(எங்கே "ll" வந்தாலும் உச்சரிப்பு "ய்ய" தான், ய்யூவியா  = மழை என்று பார்த்தோம்)

ella / எய்யா  = அது / it Shocked

ellos / எய்யோஸ் = அவர்கள் / அவைகள் / they 

Smile

 - இவன் இவள் இது இவர்கள் இவைகள் என்றும் கொள்ளலாம் என நினைக்கிறேன், உறுதிப்படுத்தவில்லை இன்னும்!
 - மற்றபடி, நோம்ப்ரே என்றால் பெயர் (name) என்று பொருள் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jun 09, 2015 10:54 pm

"தா(தோ?)ந்தே" donde (எங்கே / where) தெரியாமல் இவ்வளவு பெரிய மாநகரில் நடமாடுவது எளிதல்ல.

குறிப்பாக, நடை / பேருந்து / மெட்ரோ என்றெல்லாம் திரிய விரும்பினால் கட்டாயம் வேண்டும். (சில நேரங்களில், டாக்சியை விட இத்தகைய 
முறைகள் எளிதாகவும், மொழிக்குழப்ப நிலையில் கொஞ்சங்கூடப் பாதுகாப்பு உணர்வோடும் உள்ளன.)

அப்படியெல்லாம் சுற்றினால் ஒரு விடுதலை உணர்வும் கூட!

தெருமுனை உணவகத்தில் உயரமான ஸ்டூலில் உட்கார்ந்து வறுத்த "போய்யோ / செபோய்யா" சுடச்சுட - ஓரளவு உறைப்பாக - உண்ண அது 
தான் வழியும் Wink 

pollo / போய்யோ  - கோழி (chicken)
cebolla / செபோய்யா - வெங்காயம் (Onion)

நோ கேஸோ / நோ கேஸோ என்று சொல்லாவிடில் எல்லாத்திலும் பாலடை (சீஸ்) தூவி நம்மைக் கொன்று விடுவார்கள். 

queso / கேஸோ - பாலடை (cheese)

ஒரு முறை பசியோடு இருந்தபோது "சுடச்சுட ஆவி பறக்கும் சோளக்கதிரை" ஆவலுடன் கேட்டபோது அதன் மீது மயோன்னிஸ் தடவி சீஸ் தூவிச் செய்த கொடுமையை நினைத்தால் குமட்டுகிறது Embarassed  அதுக்கு மேலே சிவப்பு மிளகாப்பொடி எல்லாம் அந்தம்மா தூவினாங்க. முடிவென்னமொ தண்டனை தான்!

சரி, மிச்சமுள்ள வினாச் சொற்களையும் பார்த்து விடுவோம்:

என்ன (what)       =  qué / கே
ஏன் (why)          =  por qué / போர் கே
யார்  (who)         =  quien / கியன் (இந்தி'ல கோன் / கௌன் )   
எப்பொழுது (when)    = cuándo / குவாந்தோ
எவ்வாறு / எப்படி (How) = cómo / காமோ 
எத்தனை (How many)  = Cuántos / குவாந்தோஸ் 

Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Fri Jun 12, 2015 2:54 am

இன்னும் கொஞ்சம் அடிப்படையான சாப்பாட்டுச் சொற்கள் :

ரெண்டு பெண்பால் சொற்கள் முதலில் (ladies first) 

பால் (the milk) = la leche / லெச்சே

வெண்ணெய் (the butter) = la mantequilla / மான்டேகிய்யா


ரெண்டு ஆண்பால் சொற்கள் :

ரொட்டி (the bread)  = el pan / பான்

முட்டை (the egg) = el huevo / ஹுயேவோ

Smile

டாக்சி ஓட்டுனரிடம் சொல்லுவதற்கென்றே படிக்க வேண்டிய நான்கு சொற்கள் :

முன்னால் (forward) = adelante / அவிலாந்தே / அடிலாந்தே

பின்னால் (reverse) = marcha atrás / மார்ச்சா அத்ராஸ்

வலது (right) = derecho / திரேச்சோ

இடது (left) = izquierda / இஸ்கியர்தா

Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Tue Jun 16, 2015 1:11 am

திரும்பி ஊர் செல்லும் நேரம் - கடைகளில் ஓரிரு பொருட்கள் வாங்கி வர வீட்டில் இருந்து ஆணை. 

அவற்றில் ஒன்று மேசை விரிப்பு.

வேலை இடத்தில் விடை பெற்றுக்கிளம்ப நேரமாகியதால் பல கடைகளும் மூடிவிடக் கடைசியில் அறைக்கருகே உள்ள செலேக்டோ அங்காடியில் தேடல் - அதுவும் கிட்டத்தட்ட மூடும் நேரம். 

மேசை(table)க்கு "மேசா / mesa"  என்று ஏற்கனவே தெரியும். 

விரிப்புத்துணி? தெரியாது. 

பளபள மால், மிளிரும் பெரிய கடை என்றாலும் சிப்பந்திகள் யாருக்கும் ஆங்கிலம் வராது. "யாருக்காவது ஆங்கிலம்" என்று கேட்ட என்னிடம் "நோ" என்று சொன்ன பெண்மணியின் முகத்தில் கோபம் அப்பட்டம்.

அவசரம் மனதைக் குழப்பிவிடுவதால் அலைபேசியில் கூடப் பார்க்கத் தோன்றவில்லை Sad

"மேசா கிளாத் / க்ளோத் / கவர் " என்று என்னவெல்லாமோ சொல்லிப்பார்த்தேன்.  ஒன்றும் தேறவில்லை. நானாகத் தேடினாலும் அந்த இடம் மட்டும் அகப்படவில்லை Sad

கடைசியில், ஒரு பெண் எப்படியோ புரிந்து கொண்டு காட்டினார். 

பார்த்தவுடன் எனக்கு செந்திலும் கவுண்டரும் நினைவுக்கு வர வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரிக்க நேர்ந்தது Smile

காரணம், மேசை விரிப்பு / tablecloth = மான்டேல் தே  மேசா (mantel de mesa) 

(அண்ணே, இது தானண்ணெ மேண்டில்?) rotfl

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu Jun 18, 2015 11:58 pm

வேலை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தில் கிட்டத்தட்ட தமிழ்ச்சொல் Smile

90 ஆன்யோஸ் என் மெஹிக்கோ /  90 años en México
(மெக்சிகோவில் 90 ஆண்டுகள்)

ஆன்யோ = ஆண்டு (year)
என்  = இல் (in)

அப்படியாக மேஸா = மேசை மாதிரி ஆன்யோ = ஆண்டு Smile

ஊருக்குத்திரும்பி விட்டாலும் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க முடிவு Smile  

(வருங்காலத்தில் நம்ம டிபார்ட்மெண்ட் தலை அந்த ஊர்க்கார அம்மாவாம், எதுக்கும் உதவும்)

அப்படியாக, இன்று நிறங்கள் படித்தேன் Smile

Viloet / violeta / வியோலேட்டா
Indigo / añil  / அன்யீல்
Blue / azul  / அஸூல்
Green / verde / வெர்தே
Yellow / amarillo / அமரிய்யோ
Orange / naranja / நரான்ஹா
Red / rojo / ரோஹோ

Black / negro / நேக்ரோ
White / blanco / பிளாங்கோ (White)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Thu Jun 25, 2015 10:19 pm

ஆங்கிலம் போலவே இருக்கும் ஐந்து சொற்கள் - எளிதில் படிக்க Smile

delicioso - டெலிசியோசோ - சுவை மிக்க - delicious

excelente - எக்ஸெலெண்டே - சிறப்பு - excellent

teléfono - டெலிஃபோனோ - தொலைபேசி - telephone

emergencia - எமெர்ஜென்சியா - அவசர நிலை - emergency

evacuación - எவாகுவாசியோன் - வெளியேற்றுதல் - evacuation

இது போக எப்போதும் உதவும், மற்றும் தேவையான ஒரு சொல் கழிப்பிடம் Smile

அதாவது, அந்தக்கதவில் எழுதி இருக்கும் சொல் Smile

பொதுவாக, ஆண் / பெண் என்று எழுதுவது (மற்றும் படம் இடுவது) இந்தியாவிலும், யு.எஸ்.கனடாவிலும் நாம் காண்பது.

ஆனால், மெஹிக்கோவில் படம் மட்டுமே ஆண் / பெண் - எழுத்துகள் ஒன்றே. 
(அதிலும் படம் ஒழுங்காகப் பார்க்காமல் "இந்த அலுவலகத்தில் பெண்களும் முழுக்கால்சட்டை தானே போட்டிருக்காங்க" என்று நினைத்து உள்ளே போனால் என்ன ஆகுமோ தெரியாது.)

baño - பான்யோ (குளியல் / bath) என்று மட்டுமே இருக்கும். 

அதோடு உள்ள படத்தை ஒழுங்காகப் பார்த்து விட்டு உள்ளே போவது உடம்புக்கு நல்லது Smile

கொசுறு : 
hombre - ஓம்ப்ரே = மனிதன் / man / ஆண்
mujer - முஹேர்  /  மனுஷி / woman / பெண் 

masculino - மாஸ்குலீனோ / male / ஆண்
femenino - ஃபெமெநீனோ / female / பெண்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  app_engine Wed May 25, 2022 7:51 pm

நெருங்கிய உறவினர் மெஹிக்கோ வந்து குடியேற இருப்பதால் இந்தப்படிப்பை மீண்டும் தொடங்குகிறேன் (எப்படியும் சில மாதங்களுக்குள் ஒரு பயணம் இருக்க வாய்ப்பிருக்கிறது) Smile

முதலில் "அந்தக்காலத்தில்" எழுதியவற்றை & படித்தவற்றை மீள்பார்வை செய்து கொண்டிருக்கிறேன். அதற்குப்பின்னர் புதிய சொற்கள் / சொற்றொடர்கள் படிக்கத்தொடங்கலாம்!

அண்மையில் "வாய் விட்டுப் படிக்கும்" முயற்சியையும் தொடங்கியிருக்கிறேன். தற்போதுள்ள ஊரில் (மில்வாக்கி) ஸ்பானியோலைத் தாய்மொழியாகக் கொண்ட நிறைய  நண்பர்கள் கிடைத்திருப்பதால் அவர்களிடம் படித்துக்காட்டித் திருத்தங்கள் செய்து கொள்கிறேன் Smile

மட்டுமல்ல, மகளும் பள்ளியில் இம்மொழியைப் பாடமாகப் படிக்கிறாள் - அப்படியாக, வீட்டிலேயே ஒரு ஆசிரியரும் உண்டு!

இவ்வளவு இருந்தும் இன்னும் முன்னேறாமல் இருக்க என் சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் என்பதால் அதை ஒழித்துக்கட்ட முடிவு!  

இனிமேல் சுறுசுறுப்புத்தான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி! Empty Re: முடிந்த அளவு வேகமாக ஸ்பானியோல் கொஞ்சம் பேச முயற்சி!

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum