கலைஞரும் ராசாவும்
2 posters
Page 1 of 1
கலைஞரும் ராசாவும்
மிகச்சிறந்த தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி இறப்புச்செய்தியின் இந்த நேரத்தில் அவருடைய கதை-வசனம்-பாடல்கள் இடம் பெற்ற படங்களில் ராசா இசையமைத்தவை குறித்து இந்த இழையில் பேசுவோம்.
தமிழுக்கான அவரது தலையாய பங்களிப்பை மதிக்கும் வண்ணமாக இந்த இழையில் தமிழில் மட்டுமே என் பதிவுகளைச் செய்யப்போகிறேன்.
ராசா திரைத்துறைக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே தமிழக முதல்வர் என்ற பெரும்பொறுப்புக்கு வந்துவிட்டதால் திரையுலகில் இருவரும் சேர்ந்து வேலை செய்யக்கிடைத்த வாய்ப்புகள் மிகமிகக் குறைவு தான் - என்றாலும் அந்தப்படங்களிலும் நிறைய மணிமணியான பாடல்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே தொகுத்து & சுவைத்து நினைவு படுத்திக்கொள்வோம்.

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: கலைஞரும் ராசாவும்
இன்று மேஸ்ட்ரோ ஆப்-இல் ஜெயச்சந்திரன் இதற்கான ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.
அதில் "காவலுக்குக்கெட்டிக்காரன்" (1990) என்ற படத்தில் டைட்டில் பாடலை ஒலிக்கச்செய்தார். ராசா குரலில் இருந்த அந்தப்பாட்டு ஒரு காக்கிச்சட்டைக்காரனைப் புகழ்ந்து பாடுகிறது. என்றாலும், கலைஞரைக் குறித்தது தானோ என்று தோன்றுகிறது என்று சொன்னார். (அந்தப்படத்துக்குக் கதை / உரையாடல் எழுதியவர் மு.க. தான்).
ஆனால், அன்பு சார் எக்செல்லில் நமக்கு ஒரு கூடுதல் தகவல் இருக்கிறது - இந்தப்பாடலை எழுதியதே கருணாநிதி அவர்கள் தான்
அதைக்கொண்டே நமது பட்டியலைத் தொடங்கி விடுவோம்!
ராசா குரலில் இனிமையான, நாடன் தன்மையுள்ள மெட்டு / பாட்டு.
தஞ்சாவூர் ஜில்லாக்காரன், அஞ்சா நெஞ்சன், சொன்னதைச்செய்வோம் செய்வதைச்சொல்வோம் என்றெல்லாம் தி.மு.க. பரப்பியல் பாடலில் நிறைந்திருக்கிறது.
திரைப்படத்துக்கும் தேவையான அளவுக்குப் பொருத்தம் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
(நான் இந்தப்படம் பார்த்ததில்லை).
https://www.youtube.com/watch?v=TePft4JQUdM
காவலுக்குக்கெட்டிக்காரன்
இந்தக் காக்கிச்சட்டக்காரன்
தஞ்சாவூரு ஜில்லாக்காரன்
அவன் அஞ்சா நெஞ்சம் படைச்ச வீரன்
சொன்னதைச் செய்வோமென்பான் அப்படிச் செய்வதையே சொல்வோம் என்பான்
நம்பிக்கையா நடந்துக்குவான் நம்ம நாட்டுக்காக உழைச்சிடுவான்
மாமூலு வாங்க மாட்டான் நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான்
மனச்சாட்சி கடவுளும்பான் நம்ம மக்களுக்குத் தொண்டு செய்வான்
வேலியே பயிர மேயும் அந்த வேதனையப் பொறுக்க மாட்டான்
வெள்ளாட்டு மேல பாயும் ஒரு வேங்கையாக இருக்க மாட்டான்
சாராயங் காச்சும் கூட்டம் இவன சப்போட்டுக் கேட்டதுன்னா
சத்தியமாப் புடிச்சுவான் சவுக்கால அடிச்சுடுவான்
பதுக்கலையும் கடத்தலையும் பஞ்சு பஞ்சாப்பிச்சுப்புடுவான்

மேலே சொல்லப்பட்ட "காவலுக்குக்கெட்டிக்காரன்" பாடல் மட்டுமல்ல, வேறொரு படத்தின் எல்லாப்பாடல்களையும் மு.க.வே எழுதியிருப்பதாக அன்பு சார் எக்செல் கோப்பு தெரிவிக்கிறது. (தென் பாண்டிச்சிங்கம் என்ற திரைப்படம், 1997).
அந்தப்பாடல்களை (அதாவது காணொளிகளை) யூட்யூபில் சட்டென்று தேடிக்கண்டு பிடிக்க முடியவில்லை. (வேறொரு கலைஞர் டீவி சீரியல் பாடல்கள் தான் தென்படுகின்றன). அதனால், தற்போதைக்கு அவற்றைத் தள்ளிப்போட்டு விட்டு, எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை இன்று பகிர விரும்புகிறேன்
முன்னமேயே கங்கை அமரன் இழையில் இது குறித்துப் புகழ்ந்திருக்கிறேன். (அதற்கு முன்னும் பழைய தளத்தில் இந்தப்பாடல் குறித்துப் புகழ்ந்து தள்ளிய நினைவிருக்கிறது).
பாசப்பறவைகளின் "தென்பாண்டித்தமிழே, என் சிங்காரக்குயிலே" என்ற மிகச்சிறப்பான பாடல்! (1988)
https://ilayaraja.forumms.net/t80p100-gangai-amaran#6275
தாசேட்டன் / சித்ரா சேச்சி இணைந்து பாடியவற்றுள் ஆகச்சிறந்தவை என்று பொறுக்கியெடுத்தால் இது முதல் சில இடங்களுக்குள் வந்து விடும் என் கணக்கில்!
மெட்டு, தொடக்க இசை, இடையிசைகள், கருவியிசைப்பின்னணி என்று என்ன கணக்கில் பார்த்தாலும் பத்துக்குப் பத்து மதிப்பெண் பெறத்தக்க அருமையான பாடல்.
கேட்டு மகிழ்வோம் - புகழ்வோம்!
https://www.youtube.com/watch?v=fsKk0g9P32Q
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனைப் பாட வேண்டும் ஆயிரம்
வாழ்த்தி உன்னைப்பாடவே வார்த்தை தோன்றவில்லையே
பார்த்துப்பார்த்துக் கண்ணிலே பாசம் மாறவில்லையே
அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னைப்போற்றுதே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாயைப் போலப்பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே, நீ என்றும் வாழ வேண்டுமே!
தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னைப்பாரம்மா
கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தேவனே
கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
வாழ்த்துவேன் உனைப்போற்றுவேன் வாழ்வெலாம் உனை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுவேன், நாம் சேர்ந்து வாழ வேண்டுவேன்!
ஆயிரக்கணக்கான முறை இந்தப்பாட்டைக்கேட்டிருந்தாலும் இன்று வரை இதற்கு ஒரு துன்பவடிவமும் இருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை
துன்பப்பாடல் உள்ளதாக இன்று யூட்யூப் என்னிடம் சொன்னபோது தான் தெரிந்தது!
முதன்முறையாக இந்தப்பாட்டை இன்று கேட்டேன், பாடல் வரிகள் காணொளிக்குக் கீழே தந்திருக்கிறேன் (இதுவும் கங்கை அமரன் தான்)
https://www.youtube.com/watch?v=qw6WgSBmre0
நல்ல ஒலித்தரத்தில் கேட்க இங்கே செல்லுங்கள்:

பாசம் என்னும் ஆலயம் இன்று பாடும் சோகம் ஆயிரம்
கோடு மீறிப்போனதே போட்டு வைத்த புள்ளிகள்
கோலம் மாறிப்போனதே வீட்டிலின்று நிலைமைகள்
அன்பு என்னும் கூண்டிலே வாடும் இந்தப்பூங்குயில்
சோகராகம் பாடுதே துன்பம் கண்டு வாடுதே
தாவிவந்த பிள்ளையும் தாயைப்பார்த்துத்தவிக்கிறேன்
தாயைப்போன்றே அண்ணனும் போன நாளை நினைக்குதே
சேர்ந்தபாதை பிரிந்ததே சென்ற காலம் மறந்ததே
நாளும் என்ன சோதனை இன்று இந்த வேதனை அட என்ன இந்த வேதனை
தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா
காலம் மாறிப்போகலாம் என் அன்பு ஒன்று தானம்மா
கன்று கண்ட தாய்ப்பசு துன்பம் கண்டு வாடுது
இன்று என்ன ஆனது ஏக்கம் கொண்டு வாழுது

சேர்ந்து வந்த உறவிலே இன்று என்ன பிரிவினை
அன்பு என்ற நினைவு தான் மறந்ததென்ன மனதினை
கண்ணில் வந்த காவிரி இன்று தீர்ந்து போனதே வழி பாதை மாறிப்போனதே

Thenpandi 4:20 Thenpandi Singam 0
Vella Vaikum 1:21 Thenpandi Singam 0
Konjam Thedum 4:25 Thenpandi Singam 0
Varthai Ondru 0:53 Thenpandi Singam 0
Vella Vaikum 1:21 Thenpandi Singam 0
Konjam Thedum 4:25 Thenpandi Singam 0
Varthai Ondru 0:53 Thenpandi Singam 0
ank- Posts : 67
Reputation : 0
Join date : 2015-06-11
Re: கலைஞரும் ராசாவும்
காலத்தை வென்ற ஒருவன் இவன் தன்னைக் கலைஞன் என்றான்
(உளியின் ஓசை, 2008)
என்ன ஒரு இனிமையான பாடல்!
பாடல் வரிகள் எளிதில் வலையில் கிட்டாததால் நானே கேட்டுக்கேட்டு எழுதி எடுத்தேன். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான் - பலமுறை கேட்க நேர்ந்தது! அந்தக்கணக்கில் நா.முத்துக்குமாரின் அழகிய கவித்துவம் நிறைந்த பாடலை ஆழ்ந்து சுவைக்கவும் முடிந்தது! (விண்மீன்களில் பூக்கொய்து, விழியெனும் உளியினிலே இளமையைச் செதுக்குகிறாய், கை பேசினால் மெய்யாகும் - இப்படி அழகோ அழகான வரிகள்!)
ரெண்டு பாடகர்களும் தெளிவாகப் பாடுவதில்லை என்பதால் சில சொற்களைக் கண்டுபிடிக்கக் கடினமுயற்சி தேவைப்பட்டது. இவ்வளவு அழகான கவிதையை வேறு யாராவது பாடி இருக்கலாம் - ஸ்ரீராமும் பவதாரிணியும் ரொம்பப் பாவமாக இருக்கிறார்கள்.
காட்சியமைப்போ அதையும் விடப்பாவம் இவ்வளவு சிறப்பான பாடலை இன்னும் பொருட்செலவுடன் மிளிர வைத்திருக்கலாம். நல்ல வாய்ப்பை நழுவவிட்ட இயக்குநர் இளவேனில்!
பல்லவியின் முதல் வரி கண்டிப்பாகக் கதை உரையாடல் எழுதியவர் குறித்தது என்பதில் ஐயமில்லை. மற்றபடி இது தி.மு.க. பாடல் அல்ல

என்னைக்களவு செய்தான்
காதலைத்தூண்டும் கவிஞன் இவன் மணி விளக்கு வைத்தான்
ஒளி சுடரவிட்டான்
நிலவொளி நெஞ்சிலே அலையலையாகிறதே
உலவிடும் தென்றல் காற்றில் எந்தன் கீதமே சென்று வா அவனைக்கொண்டு வா
(காலத்தை வெல்லும் கலைகளிலே உன்னைக்கண்டு கொண்டேன்
உண்மை அன்பு கொண்டேன்
காதலைக்கூறும் கவிக்குயிலே உன்னைத்தீண்டுகிறேன் எல்லை தாண்டுகிறேன்
நிலவொளி நெஞ்சிலே அலையலையாகிறதே
உலவிடும் தென்றல் காற்றில் எந்தன் கீதமே சென்று வா அவளைக்கொண்டு வா)
ஆகாயம் போலே விரிந்து நீயும் நின்றாய்
பொன் மேகம் போலே உலவ நானும் வந்தேன்
விண்மீன்களில் பூக்கொய்து உன் கூந்தலில் சூடிடவா?
விழியெனும் உளியினிலே இளமையைச் செதுக்குகிறாய்
இசை தரும் அபிநயத்தில் இதயத்தை உருக்குகிறாய்
பூக்கள் தழுவிடும் புதுக்காற்றே கொஞ்சம் நீ சென்று வா அவனைக்கொண்டு வா
நூறாண்டு சென்றும் வாழும் இந்தக்காதல்
காற்றோடு தங்கும் என்றும் இந்தப்பாடல்
வாய் பேசினால் பொய்யாகும் கை பேசினால் மெய்யாகும்
திருமண இசை ஒலி தான் தினம்தினம் ஒலிக்கிறதே
விடியலில் வந்த கனவும் விட்டுவிட்டுப் பலிக்கிறதே
கண்ணிலாடிடும் கனவுகளே உண்மையாய் மாறி நீ அவளைக்கொண்டு வா
https://www.youtube.com/watch?v=afh1B5d_vGY

"மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்" - இந்தத் திருக்குறளுக்கு மு.க. விளக்கம் எழுதி இருப்பது தமிழ் படிப்பவர்களுக்குத் தெரிந்த ஒன்று தான். (இதற்கு மட்டுமல்ல, எல்லாக்குறளுக்கும் உரை எழுதியிருக்கிறார். அதுவும் அல்லாமல், குறளோவியம் என்று கட்டுரைகளும் எழுதி மகிழ்ந்திருக்கிறார்).
இந்தக்குறளை அம்மா மகனுக்குச் சொல்லிக்கொடுப்பது போன்ற சூழலைத் திரைப்படத்தில் உரையாடல் சூழலில் கொண்டுவந்திருக்கிறார் என்று "ஆராரோ பாட வந்தேனே" பாடலுக்கான காணொளி தேடியபோது காண நேர்ந்தது.
இந்த அருமையான தாலாட்டை சுசீலாம்மா பாடியிருப்பது தான் எனக்கு முன்பு தெரியும். ராசா குரலிலும் இந்த இனிய பாடல் இருக்கிறது என்று இன்று கண்டேன், கேட்டு இன்பம் கொண்டேன்
https://www.youtube.com/watch?v=KXsdSP5CrgQ
https://www.youtube.com/watch?v=5zNB7jcNMcs
பாடல் மட்டும் இருக்கிற காணொளி யூட்யூபில் தேடியபோது கிடைக்கவில்லை.
சரி, படமே இருக்கிறதே அதில் கண்டுபிடிப்போமா - என்று தேட முனைந்த போது டைட்டில் இடுவதற்கு முன்பாகவே (2 நிமிடத்துக்குள்ளேயே) இந்தப்பாடல் வந்தது.
அப்போது தான் திருக்குறள் உரையாடலில் வருவதைக் காண நேர்ந்தது
https://www.youtube.com/watch?v=FiCzoiw3sZg&t=115s
பாடலின் நடுவிலும் இந்த மான் குறித்த கருத்து வருவதைக்காண முடியும்.
சூழலுக்காக எழுதும் பாடலில் படத்தோடு தொடர்புடையவர்களையும் வானளாவப் புகழ்வது வாலிக்குக் கைவந்த கலை. (எண்ணற்ற பாடல்கள் அப்படி எழுதியிருக்கிறார், எடுத்துக்காட்டு - சின்னத்தாயவள் தந்த ராசாவே)
இங்கே வரும் "தென்னாட்டின் மன்னன்" என்றெல்லாம் உள்ள புகழ்ச்சி விசயகாந்த்துக்காக இருக்கலாம். அல்லது கருணாநிதிக்காகவும் இருக்கலாம்
ஆராரோ பாட வந்தேனே
(பொறுத்தது போதும்)
ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால் மண் மீது சாயும்
பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்
தென்னாட்டின் மன்னன் தானே
நான் தாலாட்டும் கண்ணன் தானே
முன்னூறு நாள் சுமந்து மூச்சடக்கி ஈன்றெடுத்து
கண்ணாகத் தாய் (நான்) வளர்த்த தங்க மகனே
முன்னேறும் பாதையிலே முள்ளை வைக்கும் பூமியிலே
அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே
மானம் உயிரிலும் மேலாக வாழும் தமிழ் மகன் நீயாக
தென்னாடும் போற்ற உன்னை எந்நாடும் வாழ்த்த
கண்ணா என் சந்தோஷம் உன்னாலே தான்
பொல்லாத செயலைக்கண்டு பொறுத்தது போதும் என்று
பொங்கி எழும் வேளையுண்டு வா வா மகனே
நல்லோர்க்குச் சோதனையும் நாளுமொரு வேதனையும்
சொல்லாமல் வருவதுண்டு விதி தான் மகனே
நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின் கோலங்கள்
அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது

முற்காலங்களில் பலவிதமான திரைப்படங்களுக்குக் கதை / உரையாடல் எழுதி, தொடக்கத்தில் அவற்றில் பெரும் வெற்றிகள் பெற்றவர் கலைஞர் கருணாநிதி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
பல ஆண்டுகளுக்கு முன் (அதாவது 1981-ல்) சென்னைத்தொலைக்காட்சியில் மந்திரிகுமாரி படத்தின் தொடக்கத்தைப்பார்த்தது நினைவுக்கு வருகிறது. (இந்தப்படம் கருப்பு வெள்ளை, இந்தியத் தொலைக்காட்சியே அப்போது கருப்பு வெள்ளை தான், வண்ணப்படங்களும் வண்ணத்தில் தெரியாத காலம். தமிழ்நாட்டில் சென்னை தவிர வேறெங்கும் டீவியே கிடையாது அப்போது. கிண்டி அண்ணா தொழில்நுட்பக்கல்லூரிக்கான நேர்முகத்தேர்வுக்கு வந்த பட்டிக்காட்டானுக்கு அவனது பெரியம்மா வீட்டில் தொலைக்காட்சி காணக்கிடைத்ததே அரிதும் வியப்புமான ஒன்று).
அந்தப்படத்தின் டைட்டில்களில் கருணாதிக்கும் எம்ஜியாருக்கும் இருந்த வேறுபாட்டைக் கண்டு வியந்திருக்கிறேன். (அப்போது எம்ஜியார் முதல்வர், மு.க. எதிர்க்கட்சித்தலைவர்; திரைப்புகழ் மற்றும் வாக்கு அரசியலில் அந்த நேரத்தில் மு.க. எம்ஜியாரை விடப்பின்னால், எனவே தான் எனக்கு வியப்பு)
மந்திரிகுமாரி யூட்யூபில் இருக்கிறது, இவர்களது பேர் வரும் காட்சிகளை இங்கே தருகிறேன் - ஒப்பீட்டுக்காக.
https://www.youtube.com/watch?v=6MfSPsiL0nE
அதாவது, 1950-ல் எம்.ஜி.ராம்சந்தர் திரைப்புகழ் மு.க.வோடு ஒப்பிட மிக மிகக்குறைவு என்பதற்காக.
என்றாலும், 70-களிலெல்லாம் மு.க. கதை-உரையாடலில் வந்தவற்றுக்கு மிகச்சிறிய வணிகம் மட்டுமே இருந்ததாக நினைவு. (ஜெய்சங்கர் நாயகனாக வந்த சில திரைப்படங்கள், இன்று கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து விட்டவை).
இளையராசா 1976-ல் வந்து விட்டாலும் மு.க. எழுதிய படங்களுக்கு இசை அமைப்பது என்பது 1986-ல் தான் நிகழ்ந்தது.
வேடிக்கை என்னவென்றால் அது ஒரு வேற்றுமொழிக் "கலைச்செல்வம்". (மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன "வார்த்த" என்ற திரைப்படத்தைத் தமிழில் பாலைவன ரோஜாக்கள் என்று எடுத்தார்கள் - ஆக, இது மு.க எழுதிய ஒரிஜினல் கதை அல்ல - திரைக்கதை / உரையாடல் மட்டுமே).
அதில் வந்த ஒரு பாடல் - ராசாவின் குரலில் :
https://www.youtube.com/watch?v=vDZnOGBqNr0
காதல் என்பது பொது ஒடம, கஷ்டம் மட்டுந்தானே தனி ஒடம?
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா நீயுந்தான் பொறக்க முடியுமா?
இத எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா?
ஆச மட்டும் இல்லாத ஆளேது கூறு, அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு?
புத்தனும் போன பாத தான் பொம்பள என்னும் போத தான்
அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது?
இது நாளும் நாளும் தாகந்தான்
உண்மைய எண்ணிப் பாரடா, இது இல்லாட்டா உலகம் இங்க ஏதடா?
ஆச ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும், உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒன்னாகக் கலந்த ஒறவு தான், எந்நாளும் இன்பம் வரவு தான்
இது காதல் என்கிற கனவு, தினம் காண எண்ணுற மனசு
இத சேரத்துடிக்கும் வயசு தான்
வாழ்க்கையே கொஞ்சக் காலந்தான், இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரந்தான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum