தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Fri Jul 20, 2018 4:48 pm

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் - நிற்க, நாம் மழை குறித்து இந்த இழையில் பேச வரவில்லை. (அப்படித்தொடங்கினால் வேறு பாடல்கள் நூறு வரும், அவற்றில் சந்தூர் உண்டா இல்லையா என்று தேடத் தற்போதைக்கு மனமோ நேரமோ இல்லை).

நமக்கு இப்போதைக்கு ஆறும் ஓடையும் தான் நோக்கம்.

இந்தப்பாடலின் முகப்பிசையில் தூக்கலாக வரும் சந்தூர் ஒலி எனக்கு நினைவுக்கு வரவே இங்கே ஏதாவது ஆறு குறித்த தகவல் உண்டா என்று தேடினேன். (மழைத்தண்ணீர் எடுத்த எடுப்பிலேயே வருகிறது என்றாலும் அது "வேறு தண்ணீர்" என்பதால் தள்ளி வைத்து விடுவோம்).

நேரடியாக ஓடிச்செல்லும் ஓடை எதுவும் காட்சியிலோ பாடலிலோ இல்லையென்றாலும் நமக்கு வேண்டிய ஒரு சிறிய இணைப்புண்டு.

அதாவது, காவிரி குறித்துப்பேசும் போதெல்லாம் கூடவே சொல்லப்படும் இன்னொரு பெயர் - பாலாறு. காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி என்றல்லவா நாம் எப்போதும் தமிழகத்தின் ஆறுகள் குறித்துப்படிப்பது?

இந்தப்பாடலில் "கொதிக்குதே பாலாறு" Smile

அந்தக்கொதிப்பிற்காகத் தான் ராசா சந்தூரை இழுத்தார் என்று சொல்ல வரவில்லை. (அப்படிப்பட்ட தவறான புரிதல் கொடுப்பதல்ல நோக்கம். சொல்லப்போனால், இங்கே பாலாறு என்பது பெண் தானே?)

தண்ணீர்கள் ராசாவுக்கு சந்தூரை நினைவூட்டியிருக்க வழியுண்டு. நமது வசதிக்கு ஒரு பாலாறு இங்கே கொதிக்கிறது. ரெண்டையும் கோர்த்து விட்டு இந்த இழையில் சேர்த்து விட வேண்டியது தான் Wink

https://www.youtube.com/watch?v=bSSzWmlOsuw


http://mio.to/album/Indru+Nee+Naalai+Naan+%281983%29

பின்குறிப்பு - வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற பாடல் Laughing

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Mon Jul 23, 2018 8:13 am

நாளை பதிவு செய்யவிருக்கும் பாடல் - மகேந்திரன் இயக்கத்தில் வந்த முதல் படத்தில் ஒரு புகழ் பெற்ற பாடல்.

கவியரசரின் பாடல் வரிகள் - ஒளிப்படம் பாலு மகேந்திரா - காட்சியில் அவரது காதலி (சிறு வயதிலேயே இறந்து போன அரிய திறனுள்ள நடிகை).

சந்தூரும் தண்ணீர்களும்... விரிவாக நாளை எழுதுகிறேன் :-)

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Mon Jul 23, 2018 8:36 pm

மேலே சொன்ன தகவல் கண்ட ராசா விசிறிகள் அது எந்தப்பாடல் என்று எளிதில் கண்டுபிடித்திருப்பார்கள். அல்லாதவர்களுக்காக - செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் படத்தில் மகேந்திரன் / பாலு மகேந்திரா / சோபா / கவிஞர் கண்ணதாசன் / தாசேட்டன் என்ற குழுவோடு கைகோர்த்த ராசா)!

நேற்று வண்டியில் ஒலித்தபோது "அங்கங்கே சந்தூர் தூக்கலாக இருக்கிறதே, அதைக்கொண்டு சேர்ந்திசை எல்லாம் செய்து விளையாடி இருக்கிறாரே" என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே, மூன்றாவது சரணத்தின் இறுதியில் கவிஞரின் வரிகள் இப்படி வந்து விழுந்தன: 

ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக்கூட்டுது

"அதானே கேட்டேன்" என்று நினைத்துக்கொண்டேன் Smile

இயற்கையைப் போற்றும் பாடல் - காணொளியைப்பார்க்கவே வேண்டியதில்லை இந்தப்பாட்டுக்கு. இசையும் பாடல் வரிகளும் நம்மை உதகைக்கு அழைத்துச் சென்றுவிடும். 

என் பள்ளிக்காலத்தில் வந்த  இந்தப்படத்தையெல்லாம் நான் 40 வயதுக்குப்பின் தான் பார்த்தேன் - என்றாலும், அதற்கு முன்பே கால் நூற்றாண்டாக மலரின் மணத்துடன் வீசும் தென்றலை ஒவ்வொரு முறை இந்தப்பாடலைக் கேட்கும் போதும் உணர்ந்திருக்கிறேன்! 

இயற்கை அழகும் சோபாவும் பாடலின் காணொளியின் நன்மைகள். ஓடாமல் நிற்கின்ற வண்டியை "ஓட்டுவது" போல நடித்து - அவ்வழியே தானும் துன்புற்று நம்மையும் துன்புறுத்தும் சரத்பாபு மற்றும் மற்ற தொழில்நுட்பக்குழுவினர் இங்கே தொல்லைகள் Sad

பாடகரின் குரல், மெட்டின் இனிமை, கவிஞரின் கற்பனை சிறந்த வரிகள் - இவற்றையெல்லாம் சுவைக்க வைக்கும் வண்ணம் கூட்டிச்சேர்க்கப்பட்ட கருவி இசை (நமது சந்தூர் உட்பட) - மிகச்சிறந்த ராசா படைப்புகளில் ஒன்று இந்தப்பாடல்!

https://www.youtube.com/watch?v=8e17naoTrmE

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Mon Jul 23, 2018 9:09 pm

காவிரியில் வெள்ளம் வந்து மேட்டூர் அணை நிறைந்ததாகவும், தண்ணீர் வழிந்து ஓடும் நிலை வந்ததாகவும் இன்றைய செய்தி.

பல்வேறு துயரமான செய்திகளின் நடுவில் இந்தத் தண்ணீர்கள் தருவது நல்ல புத்துணர்வு என்பதில் ஐயமில்லை!

https://tamil.thehindu.com/tamilnadu/article24495064.ece


app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Thu Jul 26, 2018 3:06 am

காவிரியில் புது வெள்ளம் வந்த செய்தி இந்தக்கிழமையில் எல்லாருக்கும் மகிழ்ச்சி தந்த ஒன்று.

மழையின் சிறப்பை மக்கள் எல்லோரும் உணர வைத்தது மட்டுமல்ல - என்ன தான் "எனக்கு-உனக்கு" என்று அடித்துக்கொண்டாலும், இயற்கை கொட்டித்தள்ளும் போது இவையெல்லாம் அடித்துத்தள்ளப்படும் என்றும் உணரவைத்த நேரம்.

ஆக, இந்தப் "பூம்புனலை" (புதுப்புனல் / புது வெள்ளம்) இந்த இழையில் சந்தூர் கொண்டு கொண்டாட வேண்டாமா?

மலர்களிலே ஆராதனை - சந்தூரோடு வீணையும் இன்ன பிற கருவிகளும் உறவாடும் அருமையான முதல் இடையிசை, முகப்பிசையில் சந்தூரின் அழகு என்றெல்லாம் இனிமை சேர்த்த இந்த அழகான பாடலில் "பொங்கும்...பூம்புனல் வேகம்" என்று கவிஞர்  முதல் சரணத்தின் தொடக்கத்தில் சிறப்பிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=LaEjBolpWhY


பாடலின் காட்சிப்படுத்தலிலும் ஆறு உள்ளது என்பதைக் கருத்தில் கொள்க Smile
https://www.youtube.com/watch?v=2YE8aLgtSUU

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Thu Jul 26, 2018 10:44 pm

தமிழில் இது வரை வந்த பாடல்களிலேயே ஆகச்சிறந்தவை என்று தேர்ந்தெடுக்க முனைந்தால் இந்தப்பாட்டை யாராலும் விட்டுவிட முடியாது. (எப்படியும் ஓராயிரமாவது வந்து விடும் என் கணக்கில் - என்றாலும் அதிலும் அரித்தெடுத்து ஒரு நூறு மட்டும் தான் என்று நிறுத்தினாலும் இந்தப்பாட்டுக்கு இடமிருக்கும்).

பூங்கதவே தாழ் திறவாய்!

அப்பேர்ப்பட்ட இந்தப்பாடலின் இரண்டாம் சரணத்துக்கு முன்னான இடையிசையில் சந்தூர் தரும் இனிமை அளப்பரியது. (இதே இசைத்தொகுப்பில் வரும் இன்னொரு ஆகச்சிறந்த பொன்மாலைப்பொழுதிலும் சந்தூர் இனிமை பொங்கி வழியும் தான், ஆனால் அங்கே நீரோடைக்கு இடமில்லால் போய் விட்டது).

காட்சியில் ஆறு / குளம் வருவது நமக்கு இங்கே பெரிதல்ல. பாடல் வரிகளில் எங்காவது இருக்கிறதா என்று தேடினேன்.

ஆகா, முதல் சரணத்தில் அந்த அற்புதமான மெட்டின் நெளிவு சுளிவுகளோடு உமா பாடும் "நீரோட்டம் போலோடும்" என்ற வரி வருகிறது தானே? கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது தான் Smile

ஒலி மட்டும் வேண்டுவோர் இங்கு செல்க:
http://mio.to/album/Nizhalgal+%281980%29

காணொளி இங்கே:
https://www.youtube.com/watch?v=rWqWrC78QCM


(பின் குறிப்பு : திரையின் சூழமைவு அல்லது கதையின் பின்னணி பேரளவில் வேறுபடுகையில் சந்தூர் வராமல் ராசா விட்ட சில "நதிப்" பாடல்களும் இருக்கின்றன. "மடை திறந்து தாவும் நதியலை" / "நதி தீரத்தில் நான் கண்ட உன் முகம்" என்றெல்லாம் வரும் இதே படத்தின் மற்ற இரண்டு பாடல்களிலும் சந்தூரைக் காண முடியாது என்றாலும் அவையெல்லாம் சூழல்களால் ராசா தவிர்த்தவை என்று கொள்வோமாக)

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Mon Jul 30, 2018 11:50 pm

வைகையிலே வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன

அண்மையில் மேஸ்ட்ரோ ஆப்-பில் "கடசிங்காரி" என்னும் அருமையான தாளக்கருவி பயன்படுத்தப்பட்ட பாடல்கள் குறித்த நிகழ்ச்சி ஆப் ஜாக்கி ஜெயச்சந்திரன் நடத்தினார் - அதில் வந்த முதல் பாடல் 'ஆசையில பாத்தி கட்டி'!

ஏற்கனவே பலமுறை நமது தளத்தில் இந்தப்பாடல் குறித்துப் புகழ்ந்திருக்கிறேன். மட்டுமல்ல, இந்த இழையிலும் கூட இதே இசைத்தொகுப்பிலிருந்து வேறொரு பாடல் (தோப்போரம் தொட்டில் கட்டி) சில நாட்களுக்கு முன் இட்டிருந்தேன்.

அந்த நேரத்தில் அழகான இந்தப்பாட்டை உற்று நோக்கவில்லை.

மேஸ்ட்ரோ ஆப்-பில் கேட்டபோது தான் இந்த வரி பொட்டில் அடித்தது "வைகையிலே வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன" Smile

பிறகென்ன - முகப்பிசையிலும், பல்லவியின் "மறுமொழி"த்துணுக்குகளிலும், இடையிசைகளிலும் சந்தூரின் ஒலி கொட்டிக்கிடக்கும் இந்தப்பாடலை நமது தண்ணீர்கள் இழையில் இடாமல் விடுவதா? இதோ பதிஞ்சாச்சு!

https://www.youtube.com/watch?v=qjsiZjy1BBEஇப்போது எனக்குள்ள அடுத்த ஆவல், எப்போதைய்யா வைகையில் வெள்ளம் வரும்? Smile
(ஏற்கனவே வந்தாச்சா அல்லது விரைவில் மழை வருமா?)

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Tue Jul 31, 2018 11:51 pm

மேஸ்ட்ரோ ஆப் "வால்டர் வெற்றிவேல்" என்ற இசைத்தொகுப்பை இன்றைய ஆல்பம் என்று இட்டிருந்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த பாடலான "பூங்காற்றே இங்கு வந்து வாழ்த்து" இருக்குமே என்று தேடி உடனே பாட வைத்தேன்.

அருமையான ஒலித்தரத்தில் அந்தப்பாடலை வண்டியில் கேட்பது சுவையோ சுவை! பல்லவியின் வரிகள் முடியும் போது மிக இனிமையாக சந்தூர் மறுமொழி சொல்லும். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அதற்கு முன்னர் முகப்பிசையிலேயே செனாய் ஒலியோடு அக்கருவி செய்யும் உரையாடலும் தனிச்சுவை!

இப்படிப்பட்ட பாட்டில் ஆறு ஓடினால் நன்றாக இருக்குமே என்று எண்ணும் எனது உள்ளத்தைக் கவிஞர் வாலி  முன்னமேயே புரிந்து கொண்டுவிட்டார் போலும் Smile

"காவிரி போலே கங்கை போலே உன் பேரும் உன் சீரும் பொங்கிட வேண்டும் " என்று சரணத்தில் நுழைத்து சந்தூருக்கு வழிகாட்டி விட்டார் அவர் Smile

அதே நல்ல ஒலித்தரத்தில் இங்கே பாடலைக் கேட்கலாம்:

#IR_Official_YT

https://www.youtube.com/watch?v=4lhdiS6Z0oQ


காணொளி இங்கே:
https://www.youtube.com/watch?v=MkBGtUDh9wo


இன்றைய பாடல் என்று அவர்கள் இட்டிருந்ததும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தான் - வெள்ளை ரோஜாவின் "சோலைப்பூவில் மாலைத்தென்றல்".  

அந்தப்பாட்டில் சந்தூர் இருக்கிறதா என்ற ஆவலில் பாட வைத்தேன். எந்தக்கருவி என்று சற்றே குழப்பம் இருக்கத்தான் செய்கிறது (சந்தூரா, பியானோவா அல்லது இவை இரண்டும் போன்று ஒலிக்கின்ற மின்னணு இசைக்கருவிகளா என்று அடித்துச்சொல்ல முடியவில்லை. மட்டுமல்ல, ராசாவின் பயன்பாடு எப்போதும் எளிய இசையமைப்பாளர்கள் போல இருக்காது தானே? கிட்டாரை வீணை போல - இப்படிப்பல விதத்தில் ஒலிக்கவைத்து வேடிக்கை காட்டும் ஞானியாச்சே Smile )

எப்படியிருந்தாலும் சரி, இந்தப்பாடலின் முகப்பிசையில் வருவது சந்தூர் என்றே என் முடிவு. தொடர்ந்து முழு நீளம் வரும் டின்-டின் என்று ஒவ்வொரு தாளச் சுழற்சியின் முடிவிலும் வரும் தட்டல், முதல் இடையிசையின் முடிவில் மற்றும் முடிவிசையிலும் வரும் ஒலிகள் சந்தூர் தான் என்று சொல்லமுடியாவிட்டாலும் அது போன்ற ஒலியே Smile

பாடலின் முதல் / இரண்டாம் சரணத்தில் தண்ணீர்கள் குறித்து வருகின்றது என்றாலும் ஓடை - ஆறு என்று இல்லையே என்று எண்ணினேன்.

இரண்டாவது சரணத்தில் கொண்டு வந்து விட்டார்கள் - கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது என்று சொல்லி இந்த இழைக்கு அந்தப்பாட்டை இழுத்து வந்து விட்டார்கள்!

https://www.youtube.com/watch?v=xDs1aAlKPtI


https://www.youtube.com/watch?v=khUohdHlgAM

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Wed Aug 01, 2018 10:18 pm

"என் மன கங்கையில் சங்கமிக்க" மற்றும் "பொங்கிடும் பூம்புனலில்" என்றெல்லாம் (உவமை / உருவக வடிவில் என்றாலும்) ஆறு / வெள்ளம் வருகின்ற பாடல் என்பதால் மிகவும் புகழ் பெற்ற "என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்" பாடலைக் கேட்டுப்பார்த்தால் என்ன என்று தோன்றியது.

கங்கை அமரனின் இந்தப்பாடல் வரிகள் குறித்து அந்த இழையில் முன்னமேயே பதிந்திருக்கிறேன்.

இன்று பாடலைக்கேட்ட போது புரிந்தது ராசா முகப்பிசை மற்றும் இடையிசைகளிலெல்லாம் சந்தூரைக் கொண்டு பேசியிருக்கிறார் என்பது Smile

பாடலின் காட்சிப்படுத்தலில் இயக்குநர் ஆறு-ஓடை காட்டவெல்லாம் மெனக்கெடவில்லை என்றாலும் நமக்கு ஏதோ ஒரு ஆற்றங்கரையில் இந்தப்பாடல் பாடப்படுவதாகவே பொதுவாகத் தோன்றும் Wink

இந்தப்பாடல் குறித்த எனது மற்ற கருத்துக்கள் அமர்சிங் இழையில் இங்கே பார்க்கலாம்:
http://ilayaraja.forumms.net/t80p25-gangai-amaran#5164

காணொளி இங்கே (வ.வ.மட்டும்)
https://www.youtube.com/watch?v=5Zov7kuXILU


app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine on Mon Aug 06, 2018 8:36 pm

சற்றே வேறுபட்ட கற்பனை - "ஏப்பம் விடும் ஓடை" Smile

உண்மையிலேயே ஏப்பம் தானா இல்லை ஏற்றமா என்று உறுதிப்படுத்தப் பலமுறை கேட்டேன். ஏப்பம் தான்! இன்னொரு வலைத்தளமும் பாடல் வரிகளில் ஏப்பம் என்றே சொல்லுகிறது.

வைரமுத்து அவ்வப்போது வேறுபட்ட விதத்தில் ஆராய்வார், அவர் பார்த்த (கேட்ட) பொழுது ஏதோ ஒரு ஓடை அப்படிப்பட்ட ஓசையுடன் ஓடியிருக்கும் போல Smile

என்றாலும், ஓடை என்று வந்துவிட்டால் - அதுவும் இனிமையான / இன்பமான சூழல் என்றால் - ராசாவுக்கு அங்கே சந்தூர் ஒலியல்லவா தலைக்குள் கேட்கும்? இந்தப்பாடலோ "சின்னக்குயில் பாடும் பாட்டு" - இங்கே குயில்/குழலுக்குத்தானே முதலிடம் இரண்டாமிடம் என்று எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும்?

அப்படியெல்லாம் ராசா ஒன்றும் கவலைப்படவோ கடினமாக உணரவோ இல்லை என்பது முகப்பிசையிலேயே தெரிந்து விடுகிறது. தொடங்கும்போதே சந்தூர் ஒலிக்கிறதோ என்ற ஐயம் இருந்தாலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், சின்னக்குயில் சித்ரா பாடத் தொடங்குமுன், முகப்பிசையின் முடிவாக (மற்றும் பல்லவியை இணைக்கும் கருவியாக) சந்தூரை ஒலிக்கவிட்டு "ஆவன செய்து விடுகிறார்" இசைஞானி! Smile

http://mio.to/album/Poove+Poochoodava+%281985%29

https://www.youtube.com/watch?v=3fi-6yeRXro


பின்குறிப்பு - "கங்கை நதிக்கென்ன கட்டுத்தடையா" என்று இன்னொரு இடத்திலும் தண்ணீர் ஓடுகிறது என்று காண்க!


app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  app_engine Yesterday at 12:49 am

"அது நில்லாத புது ஆறு" என்று பல்லவியில் வரும் பாடல் இன்று நினைவுக்கு வந்தது. (இளமைக்கோலம் என்ற படத்தில் வாசுதேவனும் சுஜாதாவும் பாடிய நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் என்ற பாடலின் இரண்டாம் வரி).

சரி, இந்தப்பாடலுக்கு ராசா சந்தூர் பயன்படுத்தி இருக்கிறாரா என்று பார்ப்போம் என்று யூட்யூபில் தேடினேன். (இதன் முகப்பிசை இடையிசைகளை விட எனக்கு அருமையான பேஸ் கிடார் பின்னணி தான் மனதில் வந்து கொண்டிருந்தது - அவற்றை முழுமையாக நினைவு படுத்த முதலில் இயலவில்லை).

காணொளி கிடைத்தவுடன் கேட்கத்தொடங்கினால் முகப்பிசையிலேயே தூக்கலாக சந்தூர் ஒலி - எதிர்பார்த்தது போன்றே நமக்குத்தேவையானது கிடைத்து விட்டது. தொடர்ந்து பாடலைக்கேட்டால் இடையிசைகளிலும் சந்தூர் ஒலிக்கு வேண்டிய அளவுக்கு இடம் கொடுத்திருக்கிறார்.

அதற்கான இன்னொரு காரணம் காணொளியில் தெரிகிறது - அங்கும் ஓடை ஓடுகிறதல்லவா? ஒரு வேளை இயக்குனர் ராசாவிடம் "இப்படியெல்லாம் எடுக்கப்போகிறேன்" என்று சொல்லியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும், இனிமையான சூழலில் ஆறு வருகிறது, சந்தூரும் கூடவே Smile

https://www.youtube.com/watch?v=N7p2nHAhCJU


"ஒரே ஒரு வரிக்காகவா" என்று யாருக்காவது ஏமாற்றம் இருந்தால், இன்னொரு பாட்டும் இங்கே இடுகிறேன்.

அதிலும் சந்தூர் வருகிறது, ஒரே ஒரு வரியில் மட்டும் ஆறும் Smile

ஆகாய கங்கை (பூந்தேன் மலர் சூடி) - முகப்பிசையிலேயே சந்தூர் Laughing

(தர்மயுத்தம் - அரசியலில் இப்போது நிறைய நடப்பதாகச் சொல்கிறார்கள் rotfl )

https://www.youtube.com/watch?v=vSk5ztuB_i8

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: தண்ணீர்களின் சந்தூர் - santoor of waters

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum