All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Re: All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Post  app_engine on Tue Mar 13, 2018 5:16 pm

#37 சொக்கனுக்கு ஆசப்பட்டு (அண்ணனுக்கு ஜே, சித்ராவுடன் டூயட்)

Reading the first line didn't automatically bring the melody in my mind Embarassed  

That means either I've not heard the song before or even if I'd heard it earlier, it didn't register enough.

I think the possibility of such a sweet themmAngu melody (especially saraNam is simply awesome) not registering in my mind is quite remote (unless it was while travelling with some other horrible thing preoccupied in the mind).

So, the more probable option is I've really never heard this one before Sad Well, better late than never - what a lovely song!

GA had penned the lines and I could locate the lyrics in that "gangaikkarai thOttam" blog and added the missing "vallina oRRezhuththukkaL" Wink

https://www.youtube.com/watch?v=9MfZM5y1XfA


பல்லவி :

சொக்கனுக்கு ஆசப்பட்டுச் சொக்கி நிக்கும் மீனாட்சி நான்
கந்தனுக்கு வாக்கப்படச் சொந்தமுள்ள தெய்வான நான்
எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்
எப்பத்தான் கை ஒன்னு சேரும்

சரணம் 1:

காத்திருந்தேன் பல கனவு கண்டேன் வழி
பாத்திருந்தேன் நானும் ரொம்ப நாளா
ஆசைப்படித் தேடி வந்தான் என் ராசா
வாழ ஒரு வாக்குத் தந்தான் என் ராசா
சொல்லாத ஆச ஒன்னு உள்ளுக்குள்ள பூட்டி வச்சேன்
கல்யாண மாலை ரெண்டு இப்பொழுதும் கட்டி வச்சேன்
ஒன்னோடொன்னு சேத்து வைக்கும் கன்னி பூஜ தான்
ஈடேறத்தான் வேணுமம்மா இந்த ஆசைதான்

சரணம் 2:

வாழ்ந்து வந்தேன் நான் அவனுடனே
இந்த மனசுக்குள்ள சேந்திருந்தேன் நானே
தனி மரமாய் வாழ்ந்திருந்தேன் நாந்தானே
துணையெனவே தேவியென்னைச் சேந்தானே
காதலுக்கு பேதமில்ல கற்பனைக்கு வேலியில்ல
கட்டழகு மாமா வந்து கட்டவேணும் தாலி ஒன்னு
ஒன்னாலதான் ஆகுமம்மா ஒன்னாச் சேக்கத்தான்
ஒன்னாகத்தான் வாழ்ந்திருப்போம் அம்மா பாக்கத்தான்

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Post  app_engine on Wed Mar 14, 2018 9:24 pm

#38 இனிமேல நல்ல நேரந்தான் (பொன்மனச்செல்வன், மலேசியா வாசுதேவனுடன் டூயட்)

Most of us regulars in this forum are aware of how IR's saraNams are often superior to the "catchy" pallavi melodies.  Also, we often appreciate his "connectors" - how he concludes an interlude with a terrific syllable to connect to saraNam melody or how he ends a saraNam (often in an unexpected fashion) and connect back to pallavi brilliantly.

This song's saraNam ending is a quintessential example of such brilliance in "ending saraNam and connecting back to pallavi".

I have no words to explain it but to simply ask people to "please listen with focus on that ending few seconds" Smile

Nice song, first-time-listen for me! GA pAdal varigaL.

https://www.youtube.com/watch?v=WpI9yIjdsC4


பல்லவி :

இனிமேல நல்ல நேரந்தான்
என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலந்தான் 
அள்ளித்தான் வாரிக்கட்டு முல்லப்பூ மால கட்டு

சரணம் 1:

பொன்வேலி போடு சிங்காரச்செல்லய்யா கல்யாணக்காலம் எப்போது சொல்லய்யா 
நாளென்ன பொழுதென்ன நான் சேரத்தான் தேனள்ளித் தொட்டுத்தொட்டு நான் கூடத்தான்
பூவொன்னு பட்டுக்கட்டி என் கூடத்தான் நீயள்ளித் தந்ததென்ன இப்போது தான்
பொண்ணுக்கு உன்மேலே ஆசை உண்டு பூலோகம் காணாத பாசம் உண்டு 
சொல்லித்தான் தேர்ந்தெடுத்தேன் சொர்க்கத்தில் பூட்டி வச்சேன்

சரணம் 2:

கண்ணால பாரு பொன்னாகக் குவிப்பேன் காதோட கேளு எல்லாமும் கொடுப்பேன் 
பூவோடு காத்தாக என்கூடத்தான் நீ வந்து சேர்ந்தாலே போதும் மச்சான் 
பாய்மேல பூப்போட்டுப் பாராட்டுத்தான் பாருங்க நாளொன்னு தாலாட்டத்தான் 
கண்ணுக்கு முன்னால காவேரி தான் ஒன்னுக்குள் ஒன்னாகும் இந்நேரம் தான் 
சொந்தம் தான் சேர்ந்ததய்யா சோகம் தான் போனதய்யா

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Post  app_engine on Thu Mar 15, 2018 6:46 pm

#39 நீ பாதி நான் பாதி கண்ணே (கேளடி கண்மணி, ஏசுதாசுடன் டூயட்)

வாலி எழுதிய அற்புதமான கவிதைகளில் ஒன்று இந்தத்திரைப்பாடல்!

பல்லவியின் முதல் வரியிலேயே சிக்சர் அடிக்கிறார் - ஈருடல் ஓருயிர் என்பதை மாற்றி ஒரே உடல் தான் என்று அழகாக 'நீ பாதி நான் பாதி' என்று சொல்லித்தொடங்குகிறார்.

பாடல் முழுக்க இப்படிப்பட்ட விளாசல்கள் தான் - மெய்யானது உயிர்மெய்யாக, வலது கண்ணும் கலங்கி விடுமே, இருட்டில் இருக்கும் நிழல் -இப்படி வரும் விளையாட்டில், எடை கூடிய உதிரிப்பூக்கள் அழகிய கண்ணே பேபி அஞ்சுவும் "சுமையானது" என்று அடி வாங்கும் வேடிக்கை!

அழகான மெட்டுக்கு இப்படியெல்லாம் அருமையான கவிதை கிடைப்பது அந்த வசந்த் செய்த பெரும்பேறு தான்.
(இப்படியெல்லாம் போட்டுக்கொடுத்தாலும் அந்த ஆள் அடுத்த படத்துக்கே ராசாவை விட்டுவிட்டு ஓடி விட்டார் - பாலச்சந்தர் சதி என்று நினைக்கிறேன்).

அருமையான குரலில் அழகாகப் பாடி இருக்கிறார்கள் என்றாலும் இரு பாடகர்களும் கொஞ்சங்கொஞ்சம் சொதப்பவும் செய்திருக்கும் பாடல்.

"வானப்பறவை" என்பதைக்கிட்டத்தட்ட "மானப்பறவை" என்று பாடுகிறார் உமா ரமணன். (கானகந்தர்வன் ப்ளாக் அவ்வாறே பதிவும் செய்திருக்கிறது rotfl ).

ஏசுதாசும் அவ்வண்ணமே - மலையாள வாடை தூக்கல்.

சொர்க்கத்தை ஸ்வர்க்கம் என்கிறார் (அதே ப்ளாக் "சோகம்" என்று இட்டிருக்கிறார்கள் Laughing )

மிகச்சிறப்பான பாடல்.

BTW, check out all the songs in that movie at #IR_Official_YT - what a tremendous album!

https://www.youtube.com/watch?v=CTvD1tfUnII


Video youtube:
https://www.youtube.com/watch?v=6gUCGu03Prk


பல்லவி:

நீ பாதி நான் பாதி கண்ணே (கண்ணா)
அருகில் நீயின்றித் தூங்காது கண்ணே
நீயில்லையேல் இனி நானில்லையே உயிர் நீயே

சரணம் 1:

வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே
மெல்லச்சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர்மெய்யாகவே தடையேது?

சரணம் 2:

இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Post  app_engine on Fri Mar 16, 2018 5:59 pm

#40 தண்ணியில நனஞ்சா (கேளடி கண்மணி, சோலோ)

UR got another song in that album (possibly not picturized in the movie, could not locate any video on youtube).  It's a terrific composition by IR and Mu.Mehta wrote excellent lines (almost Kannadasan standard for such songs, with neat flow with the melody) but UR executed it in a "பரிதாபமான" way Embarassed

Well, one won't expect SJ levels of execution of such sensuous numbers (or even the controlled ways of KSC) but at least some kind of delivery in line with the setting / situation / pAdal varigaL Sad

It would have been better if they had another version with a different singer...

Interestingly, even with this kind of singing, the song became quite popular (because of the melody / orch and also being part of a super hit album)...

https://www.youtube.com/watch?v=rSFTjqabPZU


பல்லவி:

தண்ணியில நனஞ்சா இது தங்கமென ஜொலிக்கும்
கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்
புத்தம்புதுசு வெள்ளிக்கொலுசு என்றும் இளசு இந்த மனசு
நான் கண்ணால பந்தாட, அட, நீ தன்னால திண்டாட

சரணம் 1:

மோகமெனும் தீயினிலே மூடிவைத்த மல்லிகைப்பூ
தேகமெனும் பாற்கடலில் புன்சிரிப்பு
வாசமுள்ள பூவிருக்கு பூவுக்குள்ளே தேனிருக்கு
தேன்குடிக்க வந்த பின்னும் யார் நினைப்பு
ஓரவிழிப்பார்வையிலே உள்ளதென்ன காணலியா
ஓடிவந்த வெள்ளிநிலா பார்ப்பதென்ன தோணலியா
கொள்ளையடித்தால் குறைந்திடுமா செல்வமிது தான்
தள்ளியிருந்தால் நடந்திடுமா இன்பக்கதை தான்

சரணம்  2:

நாலுபக்கம் சுவரு இல்லாக்கோவிலடி கோவிலிலே
ஜாதிமதபேதம் எதும் இல்லையடி
எட்டுத்திக்கும் ஏற்றுக்கொள்ளும் வேதமடி வேதத்திலே
இன்பம் மட்டும் தான் இதற்கு மூலமடி
தேசமெங்கும் பேரெடுத்த தீரர்களும் வீரர்களும்  
தேடிவந்து நாடிநிற்கும் தேவதையின் வாசலடி
புத்தகத்தில் பாடம் இல்லையடி இங்கே இருக்கு
பள்ளியறையின் புள்ளிமயிலே இன்பக்கணக்கு

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Post  mythila on Sat Mar 17, 2018 12:00 pm

app_engine wrote:#25 தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே (கெட்டி மேளம், ஏசுதாசுடன் டூயட்)

Very sweet song! This is from a movie 'ketti mELam' (directed by Visu, possibly the only Visu-directed movie that had IR as MD - rest all had MSV / S-G or someone else).

The pAdal varigaL are by one Idhayachandran and they're pretty good (especially the saraNam portions, that are written to a complicated melody). I'm not sure if he had penned any other song.

KJY is effortless while UR is a "முயற்சிப்பாடகி" in this song - she gets pass marks Laughing


As a first time listen, this song is Quite A Find for me Smile
Terrific interludes !!! Based on Gujari Thodi raagam. Thank you app sir.

mythila

Posts : 200
Reputation : 2
Join date : 2012-12-04

View user profile

Back to top Go down

Re: All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Post  app_engine on Mon Mar 19, 2018 6:01 pm

#41 பூத்துப் பூத்துக் குலுங்குதடி (கும்பக்கரை தங்கையா, எஸ்பிபியுடன் டூயட்)

This song is quite a celebration!

For some reason, this whole album was missed by me when it arrived Embarassed As per Anbu sir's spreadsheet, the music got released in 1990 and the movie came out in Jan 1991 - that could explain how it got missed by my 'TFM radar' which got switched off during my "engagement-accident-marriage-postponed" period Wink

That way, even though this song is quite familiar to me (possibly thanks to listening it on travels inside TN during 90's), never knew which movie the song was from. Interestingly, thru out my indulgence in tfmpage / mayyam hub, never got in touch with this album Embarassed (Yes, I've read many posts about the album by others but never had a personal connection).

That way, this song is NOT part of the IR-SPB thread where I posted personal recollections about all the hit songs of the combo!

Such a lovely and sweet song - like most IR songs, the melody gets sweeter when we enter the saraNam. Of course, the saraNam ends in a glorious fashion to return to the catchy pallavi! Per SPB standards, average singing but Per UR standards, one of her best Smile

GA penned the lines (and directed the movie too, after karagAttakkAran). My most fav. song of the album is, of course, thenRal kAtRE thenRal kAtRE - the sweet SJ with misra chApu!

https://www.youtube.com/watch?v=U6Cv92R9f4E


பல்லவி :

பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் கொட்டும் புதுக்குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ

சரணம் 1: 
வெக்காத செந்தூரம் தான் வச்சு வந்தேன் உன்னோடு நான்
இப்போது நீ தந்தா என்ன முத்தாரம் தான்
வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்
மொட்டானதே இளம் மேனி மேனி தொட்டாடவே வரும் மாமன் நீ
மேளம் ஒரு இடி இடிக்குது வானம் புதுக்குட பிடிக்குது வா வா வா மானே

சரணம் 2:

பட்டோட பொண்ணாடத்தான் பாத்த மனம் ஒன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே
தோளோடு தோளோகத்தான் மேலோடு மேலோகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்
செம்மேனியா செந்தாழம் பூவா அது உன்மேனியா பொன் மேனியா
பாத்தா உடல் சிலு சிலுக்குது பார்வை பட கிளுகிளுக்குது வா வா வா மாமா

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Post  app_engine Yesterday at 6:45 pm

#42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா (தந்துவிட்டேன் என்னை, அருண்மொழியுடன் டூயட்)

A sweet melody, with misra nadai to boast as well (the song got covered in the #IR_misrA thread earlier)!

The pAdal varigaL are by IR but the singers make them so unclear that one had to struggle to make sense and get the lyrics Embarassed

I even tried with a so-called hi-res audio version and still could not hear many syllables clear - atrocious singing I should say, about both the singers Sad

First of all, even in the pallavi, they kill the word "மொத்தமா" (meaning : totally) as "மொத்தம்மா" (meaning : mam, slap). Even a simple word such as "சொன்னாலே" is sung in a "food-in-the-mouth" fashion by UR that it sounds like "பொன்னாலே" Sad

I tried to make as much meaningful sentences as possible, out of such horror singing, in saraNam lines too Embarassed

If someone hears different words from what are given here, definitely not my fault! Blame it on Arunmozhi, Uma & IR (both lyricist & MD). கொடுமையப்பா!

Hi-Q audio:
https://www.youtube.com/watch?v=CTLt6FMNQxg

Video (Vikram's first Thamizh movie, directed by none other than Sridhar)

https://www.youtube.com/watch?v=IZfbShCpJmo


பல்லவி :

முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா
மொத்தமா அச்சம் வெட்கம் விட்டாளம்மா
கல்யாணத்தேதி எப்போது கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதுமிப்போது பெண்மானே ஏங்குது

சரணம் 1:

சோலைச்சொகுசு என்னை ஒரு பாடு படுத்த
காலைக்காற்று வந்து வந்து வாரித்துரத்த
ஏலங்கிளியே ஏரிக்கரையில் காக்க வைக்காதே
சில காலம் தனியே வாடி உனையெதிர் பார்க்க வைக்காதே
மீசை அரும்பிட வாலைக்குறும்புகள் வாலை ஆட்டி வந்து
ஆசை இதயத்தில் வேலை நடத்துது மாலை சாட்சி இன்று
கல்யாணத்தேதி எப்போது கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதுமிப்போது பெண்மானே ஏங்குது

சரணம் 2:

காலை எழுந்தால் கண்ணில் அந்த ராமன் வருவான்
காலில் விழுந்தால் விண்ணில் இந்த மாமன் வருவான்
பாயை எடுத்தால் நாளும் காதல் நோயில் நான் விழுவேன்
இந்தக்காயைக் கனிபோல் மாற்றும் மருந்தே உன்னைத்தான் தொழுதேன்
காத்துக்கிடக்குது காத்துக்கருப்புகள் பாத்துப்பழகம்மா
கைகோத்து நடந்திடக் காலம் இருக்குது காதல் அழகம்மா
கல்யாணத்தேதி எப்போது கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதுமிப்போது பெண்மானே ஏங்குது

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: All songs by Uma Ramanan under IR's baton - #42 முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum