தன்னுடல் தாக்குமை - உள்ளுடல் போர் - பெம்ஃபிகஸ் வல்காரிஸ் (Auto Immune / Pemphigus Vulgaris)

Go down

தன்னுடல் தாக்குமை - உள்ளுடல் போர் - பெம்ஃபிகஸ் வல்காரிஸ் (Auto Immune / Pemphigus Vulgaris) Empty தன்னுடல் தாக்குமை - உள்ளுடல் போர் - பெம்ஃபிகஸ் வல்காரிஸ் (Auto Immune / Pemphigus Vulgaris)

Post  app_engine on Fri May 15, 2015 9:52 pm

முதல் முறையாக மருத்துவம் பற்றி ஒரு இழையில், அதுவும் கண்டிப்பாகத் தமிழில் எழுதவேண்டும் என்று ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் முடிவெடுத்திருக்கிறேன்.

வாழ்வு - சாவுப்பிரச்னை என்பதால் இதைக்குறித்து ஏற்கனவே ஆயிரக்கணக்கில் இருக்கும் ஆங்கிலப்பக்கங்களோடு இன்னொன்று கூட்ட விரும்பாதது தான் காரணம்.  

அதாவது, யாருக்கேனும் ஒருத்தருக்காவது இது பற்றிய தகவல் தமிழில் வரும் நாட்களில் தேவைப்படலாம்.

மட்டுமல்ல, பேசப்படப்போகும் நோய் - பெம்ஃபிகஸ் வல்காரிஸ் - லட்சத்தில் ஒருத்தருக்கோ இருவருக்கோ என்ற கணக்கில் வரும் அபூர்வமான ஒன்று என்பதால் அது பற்றிய தமிழ்த்தகவல் வலையில் மிக மிக அரிது (கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்). தமிழில் எழுத அதுவும் ஒரு காரணம்.

மற்றபடி எழுதுவது என்பது, நேரம் மட்டும் தேவைப்படுத்தும் ஒன்று. 

தகவல்களுக்குப் பஞ்சமில்லை.  (ஏனென்றால் இரு மாதங்களாக நான் இந்த நோயாளி - முற்காலங்களில் இதன் மூலம் கிட்டத்தட்ட 50% உயிரிழக்க நேரிட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன.)  

பி.கு. 1
அதிவேகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, நல்ல சிகிச்சை இருப்பதால் குழப்பமொன்றும் இல்லை Smile எல்லா விதத்திலும், எப்போதும் போல் வாழ்க்கை!
கவலை / வருத்தம் போன்றவைக்கான அவசியம் இல்லை Smile

பி.கு. 2
தகவல்கள் நிறைய இருந்தாலும், கேள்விகளும் எக்கச்சக்கம் உள்ளன. தமிழ் மருத்துவ வல்லுநர்கள் இதைக்காணவும் அவர்களது அறிவைப்பகிரவும் செய்தால் மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும்! 

தயவு செய்து இந்த இழை வாசிப்பவர்கள் தெரிந்த எல்லா மருத்துவ வல்லுநர்களுக்கும் பகிருங்கள்!

கிழமை (வாரம்) தோறும் ஒரு பதிவு என்று எழுத முடிவு!

app_engine

Posts : 8823
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum