Thalaimuraigal / தலைமுறைகள்

View previous topic View next topic Go down

Thalaimuraigal / தலைமுறைகள்

Post  Nerd on Wed Nov 13, 2013 11:39 pm

Such a beautiful piece. Delightful. Instant connect.


Nerd

Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23

View user profile

Back to top Go down

Re: Thalaimuraigal / தலைமுறைகள்

Post  app_engine on Fri Dec 06, 2013 5:43 pm

Blog post on the youtube above that Nerd posted


சில ஆத்மார்த்தமான உறவுகளுக்கு எக்ஸ்பயரி தேதியே கிடையாது. மிஸஸ் அகிலா எப்படியோ? அப்படிதான் பாலுமகேந்திராவுக்கு இளையராஜாவும். நான் என் முதல் படத்திலேயே இளையராஜாவைதான் இசையமைக்க வைக்கணும் என்று நினைத்தேன். ஆனால் அவரை நெருங்கவே முடியல. அவ்வளவு பரபரப்பா இருந்தார் அவர். என்னுடைய மூன்றாவது படமான மூடுபனி படத்தில்தான் அவரை சந்திக்க முடிந்தது. மூடுபனி எனக்கு மூன்றாவது படம். இளையராஜாவுக்கு 100 வது படம்.

நான் அப்போ அவரிடம் சொன்னது இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. என் மவுனங்களை உங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சுதுன்னாதான் என் சப்தங்களையும் உங்களால் புரிஞ்சுக்க முடியும்னு சொன்னேன். அவர் புரிஞ்சுகிட்டார். எந்த இடத்தில் ரீரெக்கார்டிங் வேணாம்னு நான் நினைச்சேனோ, அந்த இடத்தில் மவுனமாக விட்டுவிடுவார். இதை நான் சொல்லாமலே அவர் செஞ்சுருக்கார். இப்பவும் எப்பவும் என் படங்களுக்கு அவர்தான் இசையமைப்பார். உருக்கமாக பாலுமகேந்திரா சொல்லி முடித்தவுடன் மீண்டும் ஒரு முறை தலைமுறைகள் டீஸரை பார்க்க வேண்டும் போலிருக்கும். ஏனென்றால் அதில்தான் இந்த படத்திற்கான ரீரெக்கார்டிங் காட்சிகள் வருகிறது. இளையராஜா நெற்றி நரம்புகள் புடைக்க சவுண்ட் மிக்சரை கவனித்துக் கொண்டிருக்க, பக்கத்திலேயே அர்த்தபூர்வமான பார்வையுடன் பாலுமகேந்திரா நிற்பார்.

அது படத்தைவிட அழகான காட்சி!
Had this fellow seen the movie already?

He says "படத்தைவிட" Rolling Eyes

app_engine

Posts : 6894
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Thalaimuraigal / தலைமுறைகள்

Post  app_engine on Fri Dec 06, 2013 5:51 pm

என்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா பத்தி...



"அதிகம் பேச்சில்லாமலேயே வேலை நடக்கும்"

Smile

app_engine

Posts : 6894
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Thalaimuraigal / தலைமுறைகள்

Post  app_engine on Fri Dec 06, 2013 6:13 pm

"ராசாவின் மனசிலே"
(கற்பனை, ஜஸ்ட் ஃபார் ஃபன், அடிக்க வராதீங்க Embarassed )
=============================================

BM to rAsA : குறைந்த பட்ஜெட் படம், சம்பளம் குறைவாத்தான் தருவேன்!

rAsA to BM : நான் உங்க கிட்ட சம்பளம் பத்திப் பேசினேனா?

rAsA (மனசிலே) : இது காந்தி கணக்கு தான், வாத்தியக்காரர்கள் சம்பளம் எல்லாம் என் கைக்காசு தான்...நீண்ட காலப்பழக்கம், ஐயோ பாவம்...செய்து தான் ஆகணும்...

BM to rAsA : இந்தாங்க, சிறிய தொகை தான், கோவிச்சுக்காம எடுத்துக்கணும்
rAsA (happily) : கொடுங்க, ரொம்ப நன்றி!

BM in interview : அதை சந்தோஷமாக வாங்கிக்கொண்டார் என்பது தான் முக்கியம்!

rAsA (மனசிலே) : கெடச்ச வரைக்கும் லாபம்!

app_engine

Posts : 6894
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Trailer with visuals

Post  rajkumarc on Tue Dec 10, 2013 9:04 am


Visuals has BM's touch and looks lovely with the music. BM mentioned this movie was shot in Canon 5d DSLR.

rajkumarc

Posts : 206
Reputation : 0
Join date : 2013-01-03
Location : SF BayArea

View user profile

Back to top Go down

Re: Thalaimuraigal / தலைமுறைகள்

Post  Wizzy on Fri Dec 13, 2013 10:58 am

^ donno if its the movie font or actors but this seems straight out of BM's 'Kadhai Neram' staple.

Wizzy

Posts : 861
Reputation : 7
Join date : 2012-10-24

View user profile

Back to top Go down

Re: Thalaimuraigal / தலைமுறைகள்

Post  Nerd on Wed Dec 18, 2013 5:25 pm

Glowing review from thatstamil (of course!)

தலைமுறைகள்- விமர்சனம்

 Rating: 4.0/5
நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் ஸ்ரீகாந்த்,
இயக்குநர் எம் சசிகுமார்இசை:
இளையராஜா
தயாரிப்பு: எம் சசிகுமார்
எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா

இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் கொண்டிருக்கிறோம்.உண்மையில் நல்ல சினிமாவுக்கு இலக்கணம் ஏதும் தேவையில்லை. கதை என்ற சட்டகம் எதுவும் கூட வேண்டாம்.

நிகழ்வுகள்... அதைப் பதிவு செய்யும் விதம், அதற்குத் தேவையான அளவு குறைந்தபட்ச தொழில்நுட்பம் இருந்தால் கூடப் போதும் என இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட ட்யூஷன் எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான பாலுமகேந்திரா, தனது தலைமுறைகள் மூலம்.

தமிழ், தமிழ் கிராமங்கள், தமிழர் அடையாளங்கள், தமிழர் பழக்க வழக்கங்கள் எல்லாம் தொலைந்து தொலைந்து தொலைந்து... நன்கு தமிழ் தெரிந்த கணவனும் மனைவியும் முற்றாக ஆங்கிலத்திலேயே உரையாடி, அடுத்த தலைமுறை பிள்ளையின் தாய் மொழியையும் கொல்லும் அவலம் பார்த்து ஆதங்கப்படும் ஒரு ஓய்வு பெற்ற பள்ளிக்கூட வாத்தியாரின் கிழப் பருவத்து நாட்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் பாலுமகேந்திரா.இந்த வாழ்க்கைக்கு இனி திரும்பத்தான் முடியுமா என்ற மலைப்பான கேள்வியுடன் கனத்த மவுனத்தைச் சுமந்து வெளியேறுகிறோம்.உள்ளது உள்ளபடியான பதிவு இது. தாத்தாக்களின் கைகளைப் பிடித்து நடந்த நாட்கள், தாத்தாக்கள் செதுக்கிக் கொடுத்த பொம்மைகளுடன் பொழுது போக்கிய பால்யம், ஆறும் பசும் வயல்களும் சுத்தக் காற்றும் சுவாசித்த கிராமத்துத் தருணங்களை மனதில் தேக்கியிருக்கும் யாரையும் தலைமுறைகள் தளும்ப வைக்கும்.இயக்குநர் பாலு மகேந்திராதான் இந்தப் படத்தின் முதன்மை பாத்திரம். வாழ்ந்திருக்கிறார். அந்தக் கண்களும், ஏக்கம் சுமந்த பார்வைகளும், ஒரு கலாச்சார சீரழிவைப் பார்த்து நிற்கும் கையாலாகாத்தனமும்.. கண்களிலேயே இன்னும் நிற்கின்றன!அவரது மகனாக நடித்திருக்கும் சசிகுமார், மருமகளாக வரும் ரம்யா சங்கர், ஊர் மனிதர்களாக தோன்றும் லட்சுமணன், அந்த பாதிரியார்.. எந்தப் பாத்திரத்தையும் சினிமாவில் பார்க்கிற உணர்வே இல்லை.பேரனாக வரும் சிறுவன் ஸ்ரீகாந்த் அற்புதம். ஒரு காட்சியில் வந்தாலும் படத்தில் நிறைந்திருக்கிறார் இயக்குநர் எம் சசிகுமார்.படத்தில் இரண்டு காட்சிகளில் சசிகுமாரும் ரம்யாவும் முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள், அதுவும் குடும்ப விஷயங்களை. இத்தனைக்கும் கதைப்படி இருவருக்கும் தமிழ் நன்கு தெரியும். இந்தக் காட்சி மனதில் எரிச்சலைக் கிளப்புவது நிஜம். ஆனால், இதோ... பக்கத்து வீட்டில், மகன்- மகள் தமிழ் பேசிவிடக் கூடாது என்று தண்டனை முறையையே அறிவித்துள்ள பெற்றோரை நினைத்துப் பார்த்தால், பாலு மகேந்திரா சரியாகவே இந்த சமூக மாற்றங்களைக் கவனித்து வருகிறார் என்பது புரிந்தது.அதிகமில்லை, அளந்து அளந்து பேசும் பாலுமகேந்திராத்தனமான வசனங்கள்தான். ஆனால் அது போதுமானதாகவே இருக்கிறது இந்தப் படத்துக்கு.. வளவள என பேசாமல் காட்சிகளைப் பேச வைப்பதுதானே சினிமா மொழி!விறுவிறுப்பான திரைக்கதை இல்லை.. அதிரடியாக எந்தத் திருப்பமும் இல்லை. ஆனால் இவை ஏதுமில்லாமலேயே, தன் உணர்வுகளை ஒரு ரசிகனுக்குள் கடத்த முயலும் என்பதைக் காட்டியிருக்கிறார் பாலு.35 எம்எம்மில் மீண்டும் காட்சிகளைப் பார்ப்பது கொஞ்சம் புதுசாகத்தான் இருந்தது. அதுவே ஒரு எளிய கவிதைத்தனம் சேர்க்கிறது படத்துக்கு. இயற்கை தந்த ஒளியில், எந்த உறுத்தலான கூடுதல் நுட்பமும் சேர்க்காமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை இந்தப் படத்தில் நிஜமான ஒரு சோதனை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்.வசனங்கள் பேசும் இடங்களில் இசைக்கு வேலையில்லை. காற்றும், நதியும், பறவைகளும் சலசலத்து சங்கமிக்கும் காட்சிகளிலும் இசைக் கருவிகள் அமைதி காக்கின்றன. ஆனால் பாத்திரங்கள் பேசிக் கொள்ளாத காட்சிகளில் மட்டும் உறுத்தாமல் ஒரு தென்றலைப் போல வந்து போகிறது ராஜாவின் இசை... எது நிஜமான பின்னணி இசை என்பதற்கு இளம் தலைமுறையினருக்கு வகுப்பெடுத்திருக்கிறார் இசைஞானி!'

அய்யோ தமிழும் தமிழ் கிராமங்களும் கலாச்சாரமும் அழிகிறதே... வீறு கொண்டெழுங்கள்' என்ற பிரச்சார தொனி இல்லாமல், ஆனால் அந்த மாதிரி உணர்வை பார்க்கும் நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள்.வணிக ரீதியிலான பலன்களை இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டு, இந்தப் படத்துக்கு தயாரிப்பாளராக முன்வந்த சசிகுமார் பாராட்டுக்குரியவர்.

Read more at: http://tamil.oneindia.in/movies/review/thalaimuraigal-review-189827.html

Nerd

Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23

View user profile

Back to top Go down

Re: Thalaimuraigal / தலைமுறைகள்

Post  app_engine on Mon Dec 23, 2013 4:46 am

 P_R (@dagalti) thuppittAr...but why these reviews are like this?


Critics have appreciated the performances of the main actors as well as the child artiste. They have termed "Thalaimuraigal" as a touching, emotional film and one of Balu Mahendra's best creations. Composer Ilayaraja's music has also won accolades from the critics.
Here is the review roundup of "Thalaimuraigal"

That web page also lists some regular internet reviewers as indiaglitz / sify and such udhavAkkarai places...

app_engine

Posts : 6894
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Thalaimuraigal / தலைமுறைகள்

Post  app_engine on Mon Dec 23, 2013 4:50 am

indhu paper review

Malathi R wrote:
As in the past, the delectable combo of Ilaiyaraja and Balu Mahendra transport Thalaimuraigal to an aesthetic plane. If Raja’s background score adds life to the happenings so do his spells of silence.

app_engine

Posts : 6894
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum