Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 23, 2014 9:21 pm

#225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்


ஆற்றல் என்ற இருபொருட்சொல் கொண்டு வள்ளுவர் ஆடும் சின்ன விளையாட்டு  (வலிமை / சக்தி மற்றும் ஆற்றுதல் / ஆற வைத்தல் / மாற்றுதல்) Smile

உணவு உட்கொள்ளாமலேயே பல நாட்கள் வாழும் ஆற்றல் / வலிமை / திறமை  ("காற்றைக் குடித்தே உயிர் வாழ்வார்") சில முனிவர்களுக்கு உண்டு என்று காட்டில் தவம் இருப்பவர்கள் குறித்து நாம் வாசிப்பதுண்டு.

அப்படிப்பட்டவர்களின் ஆற்றல் பெரிதென்றாலும், அது ஈகையாளர்களாகிய 'பசி ஆற்றுவோர்' தம் வலிமைக்குப் பின்னால் தான் - என்று சொல்லும் குறள்!

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்
ஆற்றல் மிகுந்தோரின் குறிப்பிடத்தக்க ஆற்றல் (அல்லது வலிமை) பசியைப் பொறுத்தல் (அதாவது உண்ணாதிருத்தல்)

அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்
(என்றாலும், அவர்களது ஆற்றலும்) பசிக்கு உணவு ஈந்து அதை மாற்றி விடும் கொடையாளர்களின் ஆற்றலுக்குப் பின்னால் தான்!

மணக்குடவர் சொல்வது போல, "தானம், தவத்துக்கும் மேல்" என்று எளிதில் விளங்கிக் கொள்ளலாம்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 24, 2014 3:58 pm

#226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி


"பசி கொல்லுது" என்று பிள்ளைகள் சொல்லும்போது துடிதுடித்து உணவு கொடுக்க முயலும் பெற்றோரை நாள்தோறும் பார்க்கிறோம்.

உண்மை தான், பசி கொல்ல வல்லது! Sad

"அழி பசி" என்று இந்தக்குறளில் வள்ளுவர் சொல்லுகிறார். நிலம் இவ்வளவு அதிகம் விளைவிக்கும் இந்நாளிலும் உலகில் 84 கோடிக்கும் அதிகமானோர் பசித்துயரில் உள்ளது கொடுமை Sad

பசி தீர்த்தல் என்றும், எங்கும் மிகவும் புகழப்படும் பண்பு / போற்றப்படும் ஈகை!

அதையே இந்தக்குறளிலும் படிக்கிறோம்:

அற்றார் அழிபசி தீர்த்தல்
இல்லாதவர்களின் கொடிய பசியைத் தீர்ப்பது

அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி
பொருள் பெற்றவன் அதைச் சேமித்து வைப்பதற்கான இடம் (அதாவது, வழிமுறை) ஆகும்!

"உங்கள் பொருளை வானுலகில் சேமியுங்கள்" - மலைச் சொற்பொழிவில் இயேசு.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 25, 2014 5:38 pm

#227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

பாத்தூண் = பகிர்ந்து உண்ணுதல்

முன்னமேயே 44ஆம் குறளிலும் 'பழிக்கு அஞ்சிப் பாத்தூண்' என்று பார்த்த சொல் தான் Smile

இங்கு மீண்டும் ஈகை அதிகாரத்தில் அந்தப்பண்பு அழுத்திச் சொல்லப்படுகிறது!

மரீஈ = மருவுதல், அதற்கு "பழக்கமாகச் செய்தல்" (வழக்கம்) என்ற பொருளும் உண்டு

தீப்பிணி = தீமையான நோய் (பசி என்பதால், தீ போன்ற நோய் என்றும் நாம் குறும்பாகச் சொல்லிக்கொள்ளலாம்)

பாத்தூண் மரீஇ யவனைப்
பகுத்து உண்ணுவதைப் பழக்கமாகக் கொண்டவனை

பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது
பசி எனும் தீமையான நோய் ஒருக்காலும் தீண்டாது!

"தானாத்தின்னா வீணாப்போகும், பங்கிட்டுத் தின்னாப்  பசியாறும்" என்ற நாட்டுப்புறத்தில் உள்ள சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 26, 2014 8:02 pm

#228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கணவர்


"சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற ஔவையார் பாடல் நாமெல்லாரும் படித்தது.

அதில் "இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்" என்று வரும்.

இடாதோர் குறித்த இந்தக்குறளில் அவர்களது இழப்பு முன்வைக்கப்படுகிறது.

"வன்கணவர்" - அருளற்ற கண்கள் உடையவர் 

தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர்
தமது உடைமையைப் பாதுகாத்து வைத்து (அதாவது, யாருக்கும் பயனின்றிப் பூட்டி வைத்து) இழந்து போகும் அருளற்ற கண்கள் உடையோர்

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்
மகிழ்வோடு ஈவதால் வரும் இன்பம் இன்னதென்று அறியாரோ?
("அறியாதிருக்கிறார்களே" என்று பொருள்!)

வாழ்வில் எல்லோரும் பெற விழைவது இன்பம்.

ஈகை எனும் பண்பற்றவர்கள் அதை இழக்கிறார்கள்!

அது மட்டும் அல்லாமல், கருமிகள் பல நேரங்களில் தாம் சேர்த்துப்பாதுகாத்து வைத்த பொருளையும் இழக்கத்தான் செய்கிறார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jun 27, 2014 7:44 pm

#229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்


தவறான செயல்கள் செய்வோரை "இதுக்கு நீ பிச்சை எடுக்கலாம்" என்று வசை பாடுவதைக் கண்டிருக்கிறோம்!

அதே வசை பாடல் தான் இந்தப்பாட்டில்.

அதாவது, "ஈகையற்ற செயல் செய்வது பிச்சை எடுப்பதை விடவும் கொடியது"  என்று எள்ளும் குறள்!

தமி என்பதற்குத் "தனி" என்று அகராதி பொருள் சொல்கிறது. (தாமே தமியர் உணல் = தானே தனியாக உணவு உட்கொள்ளல்)

மன்ற என்றால் "தெளிவு / தெளிவாக" என்று காண்கிறோம்.

நிரப்பிய தாமே தமியர் உணல்
பொருள் சேர்க்க நினைத்துத் தானே தனியாக உண்ணுதல்
("யாரும் பார்க்காமல் ஒளிந்து தின்னுதல்" என்றும் கொள்ளலாம்)

இரத்தலின் இன்னாது மன்ற
இரப்பதை (பிச்சை எடுப்பதை) விடவும் கொடுமையானது என்பது தெளிவு!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 30, 2014 6:33 pm

#230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை


நெருங்கிய ஒருவரின் இறப்பை விடத் துயரம் தரும் நிகழ்வு வேறொன்றுமில்லை.
 
அது போலவே, எல்லா மனிதரும் மிகவும் அச்சப்படும் - தவிர்க்க முயலும் - நிகழ்வு அவர்களது இறப்பு. (மனப்பிறழ்வு உள்ளவர்  தவிர்த்து வேறு யாரும் தன்னைத்தானே கொல்லவோ, தனக்குத்தானே ஒரு இறப்பு நாள் குறிக்கவோ விரும்ப மாட்டார்கள்).

இறப்பு அவ்வளவு துன்பம் தரும் ஒன்று என்பதால் தான் "இறப்புக்குப் பின்னான வாழ்வு / உலகம்" என்பது உலகில் உள்ள எல்லா நம்பிக்கை அமைப்புகள் (மதங்கள்) முன்னிலையில் வைத்திருக்கும் கோட்பாடுகளில் ஒன்றாக உள்ளது.

அப்படிப்பட்ட இறப்பையும் "இனிது" என்று ஒருவர் கருதத்தக்க, அதை விடவும் கொடிய ஒரு நிலை உள்ளது என்று சொல்லும் குறள்!

சாதலின் இன்னாத தில்லை
இறந்து போவதை விடக்கொடுமையானது ஒன்றுமில்லை

ஈதல் இயையாக் கடை இனிததூஉம்
பிறர்க்குக் கொடுக்க இயலாத நிலையில் அதுவே (அதாவது, இறப்பே) இனிதாக (மேலானதாகத்) தோன்றும்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 01, 2014 4:44 pm

#231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

(அறத்துப்பால், இல்லறவியல், புகழ் அதிகாரம்)

இல்லறவியலின் இறுதி அதிகாரம் இது.

இல்லற வாழ்வின் நோக்கம் புகழ் பெறுதல் என்று வள்ளுவர் சொல்லுகிறாரோ என்னமோ Smile

ஈகை எனும் பண்பு இந்த அதிகாரத்திலும் தொடருவதை இந்தக்குறளில் காண முடிகிறது.

பலருக்கும் நன்கு அறிமுகமான குறள், எளிதாகப் பொருள் காணவும் முடிகிறது!

ஈதல் இசைபட வாழ்தல்
பிறருக்குக் கொடுத்தல், அதனால் வரும் புகழுடன் வாழுதல்

அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு
அது இல்லாமல் உயிர் வாழுவதில் வேறொரு பலனும் இல்லை

ஊதியம் / பலன் இல்லாமல் ஏதாவது செய்தால் அதை "வீண்" என்று சொல்லலாம்.

ஈந்து புகழ் பெறாதவன் இல்வாழ்வு "வீணாப்போனது" என்று சொல்லுகிறார் வள்ளுவர் Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 02, 2014 6:11 pm

#232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

அதிகாரத்தின் இரண்டாம் குறளும் ஈவாரின் புகழ் பாடுகின்றது Smile

இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்
இரந்து வருவோருக்கு ஏதாவது கொடுப்பவர்கள் மேல் நிற்கும் புகழ் தான்

உரைப்பார் உரைப்பவை எல்லாம்
(புகழ்ந்து) பேசுவோரின் பேச்சு எல்லாமே!

"முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி"

"செத்தும் கொடுத்தான் சீதக்காதி"

"மயிலுக்குப் போர்வை தந்த பேகன்"

"தானதர்மங்களால் தான் ஈன்ற எல்லாவற்றின் பலனையும் மாறுவேடத்தில் வந்த கண்ணனுக்கு ஈந்து, அவ்விதத்தில் உயிரையே கொடுத்த கர்ணன்"

இப்படியெல்லாம் இலக்கியங்களிலும் புராணங்களிலும் உரைப்பார் உரைப்பவை எல்லாம் ஈவார் மேல் நிற்கும் புகழ் தானே Smile

எல்லாம் "ஈந்தவன்" இறைவன், அதனால் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று "உரைப்பதும்" நாம் அடிக்கடி கேட்கிறோம் தான் Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jul 03, 2014 10:32 pm

#233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்றில்


பொன்றுதல் = அழிதல், அப்படியாக "பொன்றாது நிற்பது" = அழியாமல் நிலைத்து நிற்பது!

அதனோடு ஒலியிசைவு உள்ள "ஒன்றா" என்றால் இணையற்ற என்று பொருளாம். (ஒன்றே ஒன்று, சரி நிகர் சமமில்லை).

'உயர்ந்த' என்று சொல்லி, 'ஒன்றா' என்றும் சொல்லுவதன் வழியாக எப்படிப்பட்ட புகழ் என்று புரிந்து கொள்ளுகிறோம்.

ஒன்றா உயர்ந்த புகழல்லால்
இணையற்ற விதத்தில் உயர்ந்த புகழ் அல்லாமல்

உலகத்து
உலகத்தில்

பொன்றாது நிற்பதொன்றில்
அழியாமல் நிலைத்து நிற்பது ஒன்றுமில்லை!

"பொருள் போலன்றி" என்று மணக்குடவர் சொல்லுவது இங்கே அழகு!

அழியாத புகழ் ஈட்டுவது அழியும் பொருள் ஈட்டுதலை விட மேன்மையானது!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 07, 2014 9:28 pm

#234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு


முன்னமேயே பார்த்திருக்கும் சொல் "புத்தேள்"  Smile
(இறைவன் என்றும் புதிய என்றும் இரு பொருள் தரும் சொல். இறைவன் வாழும் வானுலகு என்றோ புதிய உலகு என்றோ கொள்ளலாம்).

அந்த உலகில் யாரைக்கூடுதல் போற்றுவர் என்று விளக்கும் குறள்!

நிலவரை நீள்புகழ் ஆற்றின்
நிலவுலகின் எல்லைக்குள் இருக்கும்போதே நீண்டு நிற்கும் புகழ் பெற்றால்

புத்தேள் உலகு
புதிய / இனி வரும் / இறைவனின் உலகு

புலவரைப் போற்றாது
(அப்படிப்பட்டோரைப் போற்றுமேயொழிய) அவ்வுலகின் வரம்பில் உள்ளோரை (அல்லது, தேவர்களைப்) போற்றாது!

குழம்புகிறதா?

மண்ணுலகில் புகழ் பெற்றவன், விண்ணுலகில் உள்ள தேவர்களையும் விட உயரத்தில் மதிக்கப்படுவான் என்று சுருக்கம்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 08, 2014 7:19 pm

#235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது


நத்தம் என்ற சொல்லின் அருஞ்சொற்பொருள்(கள்) பார்த்தால் மலைப்பு வருகிறது!

இந்தப்பெயரில் ஒரு சிறு நகரம் என் அப்பா ஊருக்கருகே உண்டு. அதன் பொருள் என்ன என்று பலமுறை சிந்தித்ததுண்டு, கண்டு பிடித்ததில்லை.

இந்தக்குறளைப் பொருத்தவரை "ஆக்கம்" என்று வருகிறது (அகராதியில் குறள் 235 என்றே போட்டிருக்கிறார்கள்)!

வித்தகர் அல்லாதவருக்கு அரிதான (இயலாத) இரண்டை இங்கே வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆனால், அவற்றின் பொருள் புரிதல் அவ்வளவு எளிதல்ல Embarassed

1. ஆக்கம் போல் கேடு
2. உளதாகும் சாக்காடு

இவை இரண்டும் என்ன என்று கண்டுபிடிப்போம்!

அதற்கான திறவுகோல் "புகழ்" என்ற அதிகாரத்தலைப்பில் தான் இருக்கிறது.

(புகழ்) ஆக்கம் போல் கேடு - கேடுகள் வாழ்வில் வரும் போதும் புகழ் ஈட்டுவதில் சளைக்காமல் இருத்தல் என்று இதைப்புரிந்து கொள்ளலாம்.

அதே போல, (புகழ்) உளதாகும் சாக்காடு என்று சேர்த்தால், இறப்பிலும் புகழ் ஈட்டுதல் என்று புரிந்து கொள்ளலாம்!

நத்தம்போல் கேடும்
துன்பங்களுக்கு நடுவிலும் புகழ் சேர்த்தலும்

உளதாகும் சாக்காடும்
இறப்பிலும் புகழ் ஈட்டுதலும்

வித்தகர்க் கல்லால் அரிது
திறமைசாலிகள் அல்லாதவர்களுக்கு இயலாத ஒன்று!
('வித்தர்களுக்கு மட்டுமே முடியும்' என்று பொருள்!)

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 09, 2014 8:55 pm

#236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று


பலருக்கும் நன்கு அறிமுகமான குறள்!

உரை ஆசிரியர்கள் இரண்டு விதமான பொருள் சொல்லுவதைக் காண முடிகிறது. அதில் ஒன்றோடு மட்டும் தான் எனக்கு ஒப்புதல் Smile

அதாவது "துறையில் தோன்றுதல்". மிகப்பொருத்தம்.

மற்றது, 'மனிதப்பிறவியாக வராமல் விலங்காகப் பிறந்திருக்கலாம்' என்று விளக்குகிறது. (மக்கட்பேறு குறித்து எழுதிய வள்ளுவர் விவரமில்லாதவர் அல்லர்! தன் பிறப்பைத் தானே யாராவது முடிவு செய்ய முடியுமா என்ன?)

ஆக, நான் மு.வ. மற்றும் மு.க. உரைகளுடன் சேருகிறேன். (பரிமேலழகர் தனது நம்பிக்கைகளை இங்கே புகுத்துகிறார் என்று வைத்துக்கொள்ளலாம்).

தோன்றின் புகழொடு தோன்றுக
சிறப்பும் புகழும் பெறும் வண்ணம் ஒரு துறையில் தோன்றுங்கள் (அல்லது ஈடுபடுங்கள்)!

அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
அப்படிப் புகழ் பெற இயலாதவர், தோன்றாமல் (ஈடுபடாமல்) இருப்பது தான் நல்லது!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 11, 2014 1:56 am

#237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

புகழ் இல்லாவிட்டால் இகழ் வருமென்று சொல்லும் குறள் Smile

மட்டுமல்ல, அப்படி இகழ் வரும்போது அதற்காகப் பொருமித்தள்ளவும் செய்வார்கள் என்று நையாண்டி செய்யும் கவிதை!

புகழ்பட வாழாதார் தந்நோவார்
புகழ் கிட்டும் வாழ்க்கை வாழாதவர்கள், தம்மைத்தாம் நொந்து கொள்ளாமல்

தம்மை இகழ்வாரை நோவது எவன்
தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வதனால் என்ன பலன்?

மற்றோர் போற்றும்படி வாழ முயல வேண்டும்.

முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காவிட்டால், குறைந்தது "நொந்து கொண்டே இருப்பதையாவது" விட்டு விடலாம் Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 11, 2014 7:37 pm

#238
வசையென்ப வையத்தார்க்கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்


எச்சரிக்கைக் குறள்!

112, 114 குறள்களில் எச்சம் என்ற சொல் இறக்கும்போது எஞ்சி நிற்பது என்ற பொருளில் வந்தது கண்டிருக்கிறோம்.

அதாவது, விட்டுச்செல்லும் புகழ் அல்லது பழி, வழித்தோன்றல்கள் அல்லது  மிஞ்சி இருக்கும் இல்லறத்தார் என்றெல்லாம் பொருள்.

இங்கும் அதே போன்று "இறக்கும் போது விட்டுச்செல்வது" என்ற பொருளில் வருகிறது.

வையத்தார்க்கெல்லாம்
வையகத்தில் உள்ளோர் எல்லோருக்கும்

இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்
இறக்கும்போது புகழ் மிஞ்சி நிற்காவிட்டால்
(இசை = புகழ்; அது பெற்ற வாழ்வு வாழாமல் இறந்து போனால்)

வசையென்ப
பழி தான் எனலாம்!

இசையில்லை என்றால் கண்டிப்பாக வசை மிஞ்சும் என்கிறார்.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 14, 2014 7:27 pm

#239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்


சென்ற குறள் போலவே இதுவும் (இனி வரும் அடுத்ததும்) இசையோடு சேர்த்து வசை குறித்தும் பாடுகின்றன.

அப்படியாக, ஒரு விதத்தில், புகழ் அதிகாரத்தில் கடைசி மூன்று பாடல்களும் இகழ் (வசை / பழி) குறித்தும் சொல்லும் எதிர்மறையான பொருள் கொண்டுள்ளன.

யாக்கை என்ற அருஞ்சொல்லை மீண்டும் இங்கு காண்கிறோம்.

உடம்பு என்று பொருள்.

இசையிலா யாக்கை பொறுத்த நிலம்
புகழ் இல்லாத உடம்பைப் பொறுத்துத் தாங்கும் நிலம்
(உயிர் உள்ளதா இல்லாததா என்றில்லாமல், உடம்பு என்று இகழ்வதைக் காணலாம்)

வசையிலா வண்பயன் குன்றும்
பழி இல்லாத வளமான பயன் தராமல் (குறைந்து) போகும்!

மண்ணுக்குச் சுமை என்பதை விட, மண்ணுக்கு வசை என்று சொல்லுவது "உடம்பின்" புகழின்மையின் தரங்கெட்ட நிலையைச் சுட்டுகிறது என்றும் கொள்ளலாம்.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 15, 2014 11:06 pm

#240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழாதவர்


எளிமையான, எல்லோருக்கும் அறிமுகமான, இனிய குறள்!

முன்னமேயே பார்த்தது போல வசையும் இசையும் ஒப்பிடப்படும் செய்யுள்.

"முரண்-இரண்டடி" முறையில் உள்ள குறள் (எதிரும் புதிருமான இரண்டை ஒப்பிடல்!)

வசையொழிய வாழ்வாரே வாழ்வார்
பழி இல்லாத வாழ்வு வாழ்வோர் தான் (உண்மையிலேயே) வாழுபவர்கள்!

இசையொழிய வாழ்வாரே வாழாதவர்
புகழ் இல்லாத வாழ்வு வாழுவோர் வாழாதவர்களே (அல்லது பிணங்களே!)

"உண்மையிலேயே இது தான் வாழ்க்கை" - இது அடிக்கடி சொல்லப்படும் வழக்கு.
("வாழ்வைத்தொலைத்தவன்" / "வீணாப்போனவன்" / "வாழாவெட்டி" - என்று இதற்கு எதிரிடையான சொல்வழக்குகளும் நாம் அவ்வப்போது கேட்பது தான்!)

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 16, 2014 7:07 pm

#241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள
(அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை அதிகாரம்)

இல்லறவியல் கழிந்து துறவறவியல் தொடங்குகிறது.

பூரியார் - இன்று படித்த புதிய சொல் Smile

இதற்கு அகராதி இரண்டு பொருட்கள் சொல்கிறது : கீழ் மக்கள் & கொடியவர்கள்.

"கீழ்" என்பது "பணம் குன்றிய" என்ற பொருளில் வராது. (அவர்களிடத்திலும் பொருள் உண்டு என்பது தானே இந்தக்குறள்!) "பண்பில் கீழான" என்றே கொள்ள வேண்டும்!  அப்படிப்பார்த்தால், ஒரே பொருள் தான்!

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்
அருள் (கருணை / கிருபை) என்ற செல்வம் தான் செல்வங்களுள் எல்லாம் சிறந்தது!
(அது நல்லோரிடத்து மட்டுமே உண்டு என்ற பொருள் இதில் பொதிந்திருக்கிறது).

பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள
பொருட்செல்வமோ கொடியவர்களிடத்தும் உள்ளது!

துறவற ஒழுக்கம் விரும்புவோரிடத்து வேண்டிய முதல் பண்பு அருள் என்றும் கொள்ளலாம்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jul 17, 2014 10:11 pm

#242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை


ஆறு = வழி / நெறி
தேர் = ஆராய்தல்

இப்படியாகப் புரிந்து கொண்டால் பொருள் காண்பது கடினம் அல்ல Smile

நல்லாற்றாள் நாடி அருளாள்க
நல்ல நெறிப்படி நடந்து அருள் உடையவராக இருங்கள்!

பல்லாற்றால் தேரினும் அஃதே துணை
பல வழிகளில் தேடி ஆராய்ந்தாலும் அது தான் (அதாவது அருள்) நல்ல துணை (என்று காண்பீர்கள்)!

துறவறவியல் என்ற அடிப்படையில் இந்தக்குறளை இன்னும் கூட விளக்க முடியும்.

அன்றும், இன்றும் "துறவு" என்றால் "இப்படித்தான், அப்படித்தான்" என்று பல வழிகளிலும் வரையறுக்க முயலுவதை எல்லா மதங்களிலும் காண முடியும்.

"அப்படிப்பல வித வரையறைகளில் தேடி ஆராய்ந்தாலும்" என்று "பல்லாற்றால் தேரினும்" என்பதைப் புரிந்து கொள்ளலாம். (மழித்தல் / நீட்டல் ஒரு எடுத்துக்காட்டு)

எது எப்படியானாலும், "நல்ல வழியில் நடந்து, அருளுடைமையோடு இருப்பது தான் சரியான துணை" என்று வள்ளுவர் வழி காட்டுவதாகக் கொள்ளலாம்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 18, 2014 10:14 pm

#243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்


"இன்னா உலகம்" என்பது முதன்முதலாக இந்தக்குறளில் வருகிறதோ என்று ஒரு ஐயம்.

இதற்கு முன் இது குறித்துப்பேசிய நினைவில்லை. இருந்தால் திருத்துங்கள்!

மு.க. / மு.வ. இருவரும் "இருள்சேர்ந்த இன்னா உலகம்" என்பதை "அறியாமை எனும் இருள் நிறைந்த உலகம்" என்று விளக்குகிறார்கள்! என்றாலும், அது ஏற்புடையதாகத் தோன்றவில்லை.

அறியாமை என்பது அருளுடைமைக்கு என்ன விதத்தில் எதிரி? புரியவில்லை...

அதே நேரத்தில், முற்கால உரையாசிரியர்கள் (பரிமேலழகர் / மணக்குடவர்) அதைக் "கீழுலகம்" (மண்ணுக்கும் கீழே, நரகம்) என்று பெயர்ப்பதைக் காண முடியும்.

வள்ளுவருக்கு நரகத்தில் நம்பிக்கை இருந்ததாகவே தோன்றுகிறது.

அதுவும், "இன்னா" நிறைந்த ஒரு நரகத்தில்!

இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்
இருள் நிறைந்த துன்பமான உலகத்துக்குள் (நரகத்துக்குள்) செல்லுதல் (எனும் தண்டனை)

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை
அருள் நிறைந்த நெஞ்சம் உள்ளவர்க்கு இல்லை

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 21, 2014 7:26 pm

#234
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

மேலோட்டமாகப் பார்த்தால் எளிதான பொருள் என்றாலும், பல கேள்விகளை எழுப்பும் குறள் Smile

மன் என்பதற்கு "நிலை நிற்கும்" என்று ஒரு பொருள் இருக்கிறது. எல்லா உரையாசிரியர்களும் அதே பொருளில் பெயர்ப்பதைக்காணலாம்.

அதாவது நிலைத்து நிற்கும் உயிர் / உயிரிகள்.

உடனே வரும் கேள்வி - உயிரின் நிலையாமை (எந்த நொடியில் போகும் என்று தெரியாமை) குறித்தென்ன?

இன்னொரு கேள்வி - மன்னுயிர் (நிலையான உயிர்) என்றால், அதை "ஓம்ப" அதாவது போற்றிக்காக்க / அருள் செய்ய என்ன தேவை?

"மன்னுயிர்" என்பதற்கு "மானிட உயிர்" என்றும் அகராதி பொருள் சொல்லுகிறது.

அப்படி எடுத்தாலும், மற்ற உயிர்களையெல்லாம் காத்து அருள் செய்ய வேண்டாமா என்ற கேள்வி வருகிறது.
 
மன்னுயிர் எந்த உயிர் என்றாலும், அருளுடைமை உள்ளவர்கள் தங்கள் உயிர் குறித்த அச்சம் இன்றி வாழலாம் என்ற பொருள் எளிதாகத்தெரிகிறது.

ஆனால், அதிலும் உடன் வரும் கேள்வி : எப்படி / ஏன் உயிர் குறித்த அச்சம் இருக்காது?

-அருள் உள்ளோருக்கு இறப்பு இல்லை என்ற பொருளிலா?
-அல்லது அவர்கள் உயிருக்குத்துன்பம் வருத்தும் எதிரிகள் இல்லை என்ற பொருளிலா?
-அல்லது, இறந்தாலும் இறைவன் மறுவாழ்வு தருவான் என்ற விதத்திலா ? (இங்கோ, வேறு உலகிலோ)

தன்னுயிர் அஞ்சும் வினை
தன் உயிர் குறித்து அஞ்சி வாழும் வினை (செயல் / நிலைமை / தீமை)

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
நிலை நிற்கும் (மற்ற எல்லா) உயிர்களையும் காத்து, அருள் செய்து வாழுவோர்க்கு இல்லை!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 22, 2014 11:29 pm

#245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி

கரி என்ற சொல்லுக்கு எத்தனை வேறுபட்ட பொருட்கள், அதிலும் பெரும்பான்மை வழக்கில் உள்ளவை!
Shocked

எரிப்பது (வினை), எரிந்து போனது (பொருள்), திட்டுவது, சுவை (உப்புக் கரிக்குது), கருப்பு நிறம், யானை, பெட்டைக்கழுதை.

ஆனால், இந்தக்குறளில், அவையொன்றும் அல்ல பொருள். இவற்றோடெல்லாம் ஒட்டாத இன்னொன்று. சொல் வழக்கில் பொதுவே இல்லாதது!

சான்று (சாட்சி / சாட்சியம் / தெளிவு / நிரூபணம்). Smile

அருளாள்வார்க்கு அல்லல் இல்லை
அருள் நிறைந்தவர்களுக்குத் துன்பம் இல்லை
(துன்பம் வராது என்ற பொருள் இருக்க இயலாது - அத்தகையோர் "ஐயோ துன்பம்" என்று உணர அல்லது பெரிது படுத்த மாட்டார்கள் என்றே கொள்ள வேண்டும்.)

வளிவழங்கும் மல்லன் மாஞாலங் கரி
காற்று தரும் வலிமையில் செயல்படும் மாபெரும் உலகே அதற்குச் சான்று!

இங்கே ஞாலம் என்று நிலத்தையோ அல்லது ஆகு பெயராக இங்குள்ள உயிர்களையோ சான்றாகக் கொள்ளலாம்.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 23, 2014 6:48 pm

#246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகுவார்


பொச்சாத்தல் என்பதற்கு மறதி என்று பொருள்.

ஆகவே, "பொச்சாந்தார்" = மறந்து போனவர்கள்.

எதை மறந்து போனவர்கள் என்று வள்ளுவர் நேரடியாகச் சொல்லவில்லை.

"பொருள் நீங்கிப் பொச்சாந்தார்" - நேரடியாக எடுத்துகொண்டோம் என்றால், பொருளை இழந்தது மட்டுமின்றி, முன்னொரு காலத்தில் பொருள் வளம் இருந்ததே மறந்து போகும் அளவுக்கு வறுமையில் உழலுவோர் என்று சொல்லலாம்.

ஆனால் மணக்குடவர் தவிர மற்ற உரையாசிரியர்கள் யாரும் அப்படிக்கொள்ளவில்லை.

ஆளுக்கு ஒன்றை உள்ளே செருகிக் கொள்ளுகிறார்கள்.

மு.வ. : தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர்

மு.க. : கடமை மறந்தவர்

பரிமேலழகர் : தாம் துன்புறுகின்றமையை மறந்தவர்

மணக்குடவரும் முற்பிறவி, தற்பிறவி என்று நுழைப்பதைக் காண முடியும்.

அருள்நீங்கி அல்லவை செய்தொழுகுவார்
அருள் இல்லாமல் கொடுமையான செயல்களைத் தொடர்ந்து செய்பவர்கள்

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர்
பொருள் இல்லாமல் போய் மறவி உள்ளவர்கள் ஆவார்கள்!

கொஞ்சம் தட்டை மாற்றினால், "மறக்கப்படுவார்கள்" என்றும் சொல்லலாமோ? Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 25, 2014 12:16 am

#247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு


'பணம் இல்லாதவன் பிணம்' என்றெல்லாம் பழமொழி சொல்லும் பொருளியல் கூட்டத்தவர்க்கு மிகவும் பிடித்த குறள்.

அதாவது, இந்த "முரண் ஈரடி" வகைச்செய்யுளின் பிற்பகுதி அவர்களுக்கு ரொம்பப்பிடிக்கும்!

பொருள் இல்லாதவர்க்கு இந்த உலகு இல்லை. (அதாவது, இங்கே வாழ நல்ல தகுதி இல்லை என்று சுருக்கம்).  நடைமுறை உண்மை என்ற விதத்தில் வள்ளுவர் சொல்லியதை அப்படியே மறையாகக் கருதி அடிக்கடி சொல்லி இன்புறுவார்கள்.

குறளின் முற்பகுதியில் அவ்வகை ஆட்களுக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதும் ஒரு காரணம். ("அவ்வுலகு" எல்லாம் யார் பார்த்தது - என்பார்கள்).

பொருள் நேரடியானது தான் :

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு
எப்படிப் பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகம் இல்லையோ (இடமில்லை, தகுதி இல்லை) அப்படியே

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
அருள் இல்லாதவர்களுக்கு அந்த உலகம் இல்லை. (வானுலகில் இடமில்லை / அங்கே நுழைய முடியாது)!

Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 25, 2014 4:11 pm

#248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது


இந்தக்குறள் ஒரு எளிமையான வாழ்க்கைப்பாடம் !

கடந்த குறளைப் போன்றே இதுவும் "முரண் இரண்டடி" வகை தான் Smile

பொருள் புரிதலும் அது தரும் பாடம் விளங்கிக்கொள்ளுதலும் எளிதே!

"பூப்பர்" என்று மிக அழகான உவமையும் உள்ளே தூவப்பட்டிருக்கிறது!

பல மொழிகளிலும், இனங்களின் பண்பாடுகளிலும் வாழ்வில் நன்மை வருவதற்குப் பூ மலர்வதை ஒப்பிடுதல் நாம் காணும் ஒன்றே.

பொருளற்றார் ஒருகால் பூப்பர் ஒருகால்
பொருள் இழந்தவர்கள் இன்னொரு காலத்தில் மீண்டும் (பொருள் செல்வம் பெற்று) நல்ல நிலைக்கு வர முடியும்

அருளற்றார் அற்றார்
(ஆனால்,) அருள் இழந்தவர்கள் எல்லாம் இழந்தவர்களே

மற்றாதல் அரிது
மீண்டும் நல்ல நிலைக்கு வருதல் மிகக்கடினம் (அல்லது, இயலாது)!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 28, 2014 8:54 pm

#249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்


தெருளாதான் - முற்றிலும் புதிய சொல் எனக்கு.

"தெருள்ளுதல்" என்றால் உணர்வுறுதல், அறிவு பெறுதல், தெளிதல் என்றெல்லாம் அகராதி சொல்லுகிறது.

அப்படியாக, "அறிவுத்தெளிவற்றவன்"  என்பதற்கு இன்னொரு சொல் கிடைத்தாயிற்று Laughing

குறளின் பொருள் இனி எளிதாகப் பார்த்து விட முடியும்!

அருளாதான் செய்யும் அறம் தேரின்
அருள் அற்றவன் செய்யும் (அல்லது செய்வதாகச்சொல்லிக்கொள்ளும்) அறம் என்ன என்று ஆராய்ந்தால்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்
(அது), அறிவுத்தெளிவு இல்லாதவன் கண்ட மெய்ப்பொருள் போலிருக்கும்!

ஆக, அருளற்றவன் அறம்  செய்ய இயலாது என்று வேடிக்கையாகச் சொல்லுகிறார்!
(அதாவது, அறிவிலி மெய்ப்பொருள் கண்டு பிடிப்பதற்குச் சமம்).

இல்பொருள் உவமை அணி!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 11 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum